Jump to content

''100 பெண்கள்''


Recommended Posts

100 பெண்கள்: உலகத்தை ஒரே வாரத்தில் பெண்களால் மாற்ற முடியுமா?

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உலகெங்கிலும் உள்ள செல்வாக்கான மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடிய ''100 பெண்கள்'' தொடரை ஆண்டுதோறும் பிபிசி வெளியிடுகிறது.

உலகம் முழுதும் பெண்களை பாதிக்கும் பிரச்சனைகளை பற்றி விவாதிக்கப்படும் ''100 பெண்கள்'' இந்த ஆண்டு தொடரில், மாற்றம் ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்படும்.

துன்புறுத்தல், ஏற்றத்தாழ்வு மற்றும் சமுதாயத்தின் பல துறைகளில் பெண்களின் குறைவான பங்களிப்பு என முடிவில்லாதவை போல தோன்றும் பல்வேறு கதைகள், மனச்சோர்வையும் துயரத்தையும் கொடுப்பவை.

எனவே இந்த ஆண்டின் பெண்களுக்கான இந்த சிறப்புத் தொடரில் இந்த ஏற்றத்தாழ்வுகளை, சமத்துவமின்மையை சமாளிக்க புதுமையான மாற்றங்களை, யோசனைகளை பெண்களிடம் கேட்கிறோம்.

''100 பெண்கள்'' சிறப்புத் தொடரின் ஐந்தாவது ஆண்டான இந்த ஆண்டு, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தி இருக்கிறோம். அவை: கண்ணுக்கு தெரியாத தடைகள் (glass ceiling), பெண்களுக்கு கல்வியின்மை (female illiteracy), பொது இடங்களில் துன்புறுத்தல் (street harassment), விளையாட்டுத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம் (sexism in sport).

பெண்

இதுபோன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு நிபுணத்துவம் அல்லது அனுபவம் கொண்ட பெண்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள். அவர்கள் அக்டோபர் மாதத்தில் நான்கு வாரங்களுக்கு, நான்கு வெவ்வேறு நகரங்களில் இந்தத் திட்டத்தில் இணைந்து ஈடுபடுவார்கள்.

100 பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெண்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணம் என்ன, அவை எப்படி ஏற்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள பெண்கள் உதவுவார்கள். அவர்களின் உதவியால் இந்த சவாலில் 100 பெண்கள் வெற்றிபெறுவார்கள்.

ஏனெனில், அவர்கள் எதிர்கொண்ட சிறப்பான அனுபவங்களை, யோசனைகளை பகிர்ந்துக் கொள்வார்கள் அல்லது அவர்கள் எதாவது ஒருவிதத்தில் இதில் பங்களிப்பார்கள்.

இவை வெறும் யோசனைகள், பரிந்துரைகள் மட்டுமல்ல. வானொலி, ஆன்லைன், சமூக ஊடகங்களில் 100 பெண்கள் உரையாடுவார்கள்.

'கண்ணுக்கு தெரியாத தடைகள்' சவால், சான் பிரான்சிஸ்கோவிலும், 'பெண்களுக்கு கல்வியின்மை' என்ற சவால், டெல்லியிலும், நைரோபியை சேர்ந்த ஒரு குழுவின் உதவியுடன் லண்டனில் 'பொது இடங்களில் துன்புறுத்தல்' என்ற சவாலும், 'விளையாட்டுத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம்' என்ற சவால், ரியோவிலும் மேற்கொள்ளப்படும்.

நான்கு நகரங்களில் இந்த சவால்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இது தொடர்பான உரையாடல்கள் உலகளாவியதாக இருக்க வேண்டும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பெண்களிடம் இருந்து கருத்துகளை கேட்டறிய வேண்டும்.

100 பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உலகை மாற்ற வித்தியாசமான முயற்சிகளை செய்திருக்கும் பெண்களின் பெயர் இல்லாமல் 100 பெண்கள் பட்டியல் முழுமையடையாது.

இந்த ஆண்டு இந்தத் தொடரை வெளியிடும் பருவத்தை புதுப்பித்துள்ளோம், அதேபோல 100 பெண்கள் கொண்ட பட்டியலையும் புதுப்பிக்கவேண்டும் என்று நினைத்தோம்.

எனவே, இந்த மாத பிற்பகுதியில் பட்டியல் அறிவிக்கப்படும்போது, அதில் 60 பெண்களின் பெயர் மட்டுமே இடம்பெறும். மீதமுள்ள 40 இடங்கள் காலியாகவே இருக்கும். சந்தர்ப்பங்களில் சவாலை எதிர்கொண்ட பெண்களின் பெயர்கள் இந்த தொடரின்போது பட்டியலில் சேர்க்கப்படும்.

100 பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"2015 ஆம் ஆண்டில், 30 நாடுகளில், 10 மொழிகளில், 150 விவாதங்கள் நடத்தப்பட்டன. 2016 இல், தகுதியுடைய ஆனால் வெளியில் அறியப்படாத 450 பெண்கள் கண்டறியப்பட்டு விக்கிபீடியாவில் இடம்பெற்றனர். தற்போது 2017 ஆம் ஆண்டில் பெண்களில் பங்களிப்பை ஒரு முழுமையான புதிய நிலைக்கு எடுத்துச் செல்கிறோம்" என்கிறார் 100 பெண்கள் தொடரின் ஆசிரியர் ஃபியோனா கிராக்.

"அற்புதமான விஷயங்கள் நடக்கவிருக்கிறது. ஆனால், திறமையான 100 பெண்கள் வெளிவருவார்களா? அதுவும் ஒரு மாதத்திற்குள் இது நடைபெறுமா என்று கவலையாக இருக்கிறது."

100 பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதைத் தொடங்குவதற்கு எங்களுக்கு சில உத்வேகம் கிடைத்திருக்கிறது, பெண் கண்டுபிடிப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது கண்டுபிடிப்புகள் கொண்ட கட்டுரையுடன் இந்தத் தொடரை தொடங்குகிறோம்.

பேஸ்புக், இன்ஸ்ட்ராகாம் மற்றும் டிவிட்டரில் எங்களை தொடரலாம். # 100 Women என்ற டேகை பயன்படுத்துங்கள்.

http://www.bbc.com/tamil/global-41313759

தொடரும்

Link to comment
Share on other sites

இந்த ஒன்பது பொருட்களை கண்டுபிடித்தவர்கள் பெண்கள் என்பது தெரியுமா?

 
Illustration of Grace Hopper and a computerபடத்தின் காப்புரிமைHANNAH EACHUS

முக்கியமான கண்டுபிடிப்பாளர்களைப் பற்றிக் கேட்டால் தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் அல்லது லியோனார்டோ டா வின்சி என்ற பெயர்களை நீங்கள் பட்டியலிடலாம்.

ஆனால் மேரி ஆண்டர்சன் அல்லது ஆன் சுகுமோடோ பற்றி உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் அவர்களின் பெயர்களை அறிந்திருக்க மாட்டீர்கள், ஆனால் நமது தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் இருக்கும் பல பெண் கண்டுபிடிப்பாளர்களில் இவர்கள் இருவரும் உண்டு.

100 பெண்கள்: உலகத்தை ஒரே வாரத்தில் பெண்களால் மாற்ற முடியுமா?

உலகெங்கிலும் உள்ள செல்வாக்கான மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடிய சாவல்களை எதிர்கொண்ட பெண்களைப் பற்றி ''பிபிசி 100 பெண்கள்'' தொடரில் வெளிக்கொண்டு வருகிறோம்.

இந்த ஆண்டு, உலகெங்கிலும் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் சிலவற்றை சமாளிக்க புதுமையான யோசனைகளை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். அதற்கு முன்னதாக, பெண்களின் மிகச்சிறந்த, அதி முக்கியமான ஒன்பது கண்டுபிடிப்புகளைத் தெரிந்து கொள்வோம்.

1. கணினி மென்பொருள் - கிரேஸ் ஹாப்பர்

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க கடற்படையில் பணியமர்த்தப்பட்ட அட்மிரல் கிரேஸ் ஹாப்பர் ஒரு புதிய கணினியை வடிவமைக்குமாறு பணிக்கப்பட்டார். அவர் வடிவமைத்த கணினி மார்க் 1 என்று அழைக்கப்பட்டது.

1950 களில் கணினி நிரலாக்கத்தில் முன்னணியில் இருந்தவர் கிரேஸ் ஹாப்பர். கணினிகளில் புரட்சியை ஏற்படுத்திய நிரல்மொழி தொகுப்பியை (compiler) கண்டுபிடித்தவரும் இவரே. நாம் உள்ளிடும் குறிப்புகளை கணினிகள் புரிந்துக்கொள்ளும் குறியீடுகளாக மாற்றுவது 'கம்பைலர்'. இதன் உதவியால்தான் கணினிகள் நாம் இடும் குறிப்புகளை புரிந்து கொண்டு விரைவாக நிரலாக்கம் செய்து வேலை செய்கின்றன.

பிழை நீக்கம் என்ற பொருள்தரும் "டி-பக்கிங்" என்ற சொல்லைப் பரவலாக்கியவர் ஹாப்பர். தனது கணினியிலிருந்து வைரஸ் ஊடுருவியதைக் கண்ட கிரேஸ், அவை நீக்கப்படுவதற்கு இன்று பரவலாக பயன்படுத்தப்படும் டிபக்கிங் என்ற சொல்லை உருவாக்கினார். இது இன்றும் கணினி நிரலர்களால் பயன்படுத்தப்படுகிறது.

"அற்புதமான கிரேஸ்" என்று அறியப்படும் கிரேஸ் ஹாப்பர், அமெரிக்கக் கடற்படையில் அதிக வயதுவரை பணியாற்றியவர் என்ற பெருமை பெற்றவர். 79-ஆவது வயதில் பணி ஓய்வு பெறும்வரை, கடற்படைக் கணினிகளில் பணிபுரிந்த பெருமை பெற்ற ஒரே பெண் கிரேஸ் ஹாப்பர்.

Illustration of Dr Shirley Jackson and a mobile phoneபடத்தின் காப்புரிமைHANNAH EACHUS

2. காலர் ஐடி மற்றும் கால் வெய்டிங்- டாக்டர் ஷெர்லி ஆன் ஜாக்சன்

அமெரிக்க தத்துவார்த்த இயற்பியலாளரான டாக்டர் ஷெர்லி ஆன் ஜாக்சன் 1970 களில் இருந்து காலர் ஐடி மற்றும் கால் வெய்டிங்' தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

தொலை தொடர்புத் துறையில் ஷெர்லியின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், கையடக்க தொலைநகல், ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள், சூரிய மின்கலங்கள் போன்ற புத்தாக்கங்களை பிறர் கண்டுபிடித்தார்கள்.

மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆஃப்ரிக்க அமெரிக்க பெண்மணி ஷெர்லி ஆன் ஜாக்சன் என்பதும், உயர்-தரமுள்ள ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒன்றிற்கு தலைமை தாங்கிய முதல் ஆஃப்ரிக்க அமெரிக்கப் பெண்மணி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Illustration of Mary Anderson and some windscreen wipersபடத்தின் காப்புரிமைHANNAH EACHUS

3. வாகனத்தின் கண்ணாடி துடைப்பான் (Windscreen wiper)- மேரி ஆண்டர்சன்

1903 ஆம் ஆண்டு, குளிர்காலத்தில் நியூயார்க் சென்ற மேரி ஆண்டர்சன், தனது வாகனத்தின் ஓட்டுநர், வாகனத்தின் முன்புறத்தில் படிந்த பனியை துடைப்பதற்காக ஜன்னலை திறக்க வேண்டியிருப்பதை கண்டார்.

ஒவ்வொரு முறை வாகனத்தின் கதவு திறக்கப்படும்போது, உள்ளே இருப்பவர்கள் குளிரால் அவதிப்பட்டார்கள்.

மேரியின் கவனம் இதனால் ஈர்க்கப்பட்டது, இதுபற்றி சிந்தித்த அவர் உடனே வேலையில் இறங்கினார். வாகனத்தின் உட்புறமிருந்தே ரப்பர் பிளேடை பயன்படுத்தி பனியை விலக்கமுடியுமா என்று சிந்தித்து செயலாற்றினார், வெற்றியும் பெற்றார். 1903 ஆம் ஆண்டில் அவருடைய சாதனத்திற்கு காப்புரிமை கிடைத்தது.

ஆனால் இந்த கண்டுபிடிப்பு, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்புவதாக கருதியதால் கார் நிறுவனங்கள் இந்தக் கருவியைப் பயன்படுத்தவில்லை.

ஆனால் பின்னர் வாகனங்களில் வைப்பர் பொருத்துவது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. மேரி தனது கண்டுபிடிப்பினால் எந்தவிதமான லாபத்தையும் பெறவில்லை.

4. விண்வெளி நிலைய பேட்டரிகள் - ஓல்கா டி கோன்சலஸ்-சனப்ரியா

இது இந்த பட்டியலுக்கு இவரது பெயர் பொருத்தமானதா என்ற கேள்வி எழலாம். ஆனால் நீண்ட சுழற்சி ஆயுள் கொண்ட நிக்கல்-ஹைட்ரஜன் பேட்டரி, சர்வதேச விண்வெளி நிலையத்தின் மின்சார தேவைகளுக்கு உதவியதால் ஒல்கா டி கோன்சலஸ் சனப்ரியாவின் பெயரும் இடம்பெறுவது முக்கியமானது.

பியூர்டோ ரிகோவைச் சேர்ந்த ஓல்கா டி கோன்சலஸ்-சனப்ரியா, 1980களில் நிக்கல்-ஹைட்ரஜன் பேட்டரி உருவாக்க உதவிய தொழில்நுட்பத்தை உருவாக்கியவர். தற்போது நாஸாவின் க்ளென் ஆராய்ச்சி மையத்தில் பொறியியலாளர் பிரிவின் இயக்குநராக பணிபுரிகிறார்.

line 100 Women Challenge logo

5. டிஷ்வாஷர் - ஜோசபின் கொச்ரானே

விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த ஜோசபின், தனது பணியாளர்களை விட பாத்திரங்களை விரைவாக கழுவவும், குறைவான சேதத்தை ஏற்படுத்தும் ஒரு சாதனத்தை உருவாக்கவும் விரும்பினார்.

ஒரு செப்பு கொதிகலனில் சக்கரத்தை திருப்பும் மோட்டா ர் ஒன்றை பொருத்தி பாத்திரம் கழுவும் டிஷ் வாஷர் சாதனத்தை அவர் வடிவமைத்தார். தண்ணீர் அழுத்தத்தை பயன்படுத்திய முதல் தானியங்கி சாதனம் இது.

குடிகார கணவரின் மரணத்திற்கு பிறகு, அவர் விட்டுச் சென்ற கடன்களை அடைக்கவேண்டும் என்பதால் கடுமையாக உழைத்தார் ஜோசபின். அயராத முயற்சியினால், தனது கண்டுபிடிப்புக்கு 1886 ஆம் ஆண்டில் காப்புரிமை பெற்ற அவர், சொந்தமாக டிஷ்வாஷர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை உருவாக்கினார்.

Illustration of Marie Van Brittan Brown and CCTV camerasபடத்தின் காப்புரிமைHANNAH EACHUS

6. வீட்டு பாதுகாப்பு அமைப்பு - மேரி வான் பிரைட்டன் பிரவுன்

செவிலியராக பணிபுரிந்த மேரி வான் பிரைட்டன் பிரவுன், வீட்டில் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்தது. பாதுகாப்பாக உணர்வதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக கண்டுபிடிக்கப்பட்டது வீட்டு பாதுகாப்பு அமைப்பு (Home security system).

1960களில் அவர் வசித்த பகுதியில் குற்றச் செயல்கள் அதிகமாக இருந்த நிலையில், போலிசாரின் நடவடிக்கை மெத்தனமாக இருந்தது. அந்த சூழ்நிலையில், தனது கணவர் அல்பெர்ட்டுடன் இணைந்து மேரி வான் பிரைட்டன் பிரவுன் இந்த பாதுகாப்பு அமைப்பை வடிவமைத்தார்.

சற்று சிக்கலான இந்த சாதனம், ஒரு மோட்டார் மூலம் இயக்கப்படுவது. கதவில் இருக்கும் பாதுகாப்பு துளை மூலம் வீட்டிற்கு வெளியே ஆட்கள் நடமாட்டம் இருப்பதை ஒரு கேமரா மூலம் பார்க்கமுடியும்.

அவரது படுக்கையறையில் இருந்த ஒரு மானிட்டரில் எச்சரிக்கை பொத்தான் ஒன்றும் பொருத்தப்பட்டிருந்தது.

Illustration of Ann Tsukamoto and a petri dishபடத்தின் காப்புரிமைHANNAH EACHUS

7. ஸ்டெம் செல் பிரித்தெடுத்தல் - ஆன் சுகுமோடோ

1991 ஆம் ஆண்டில் ஸ்டெம் செல் பிரித்தெடுப்பதற்காக காப்புரிமை பெற்ற ஆன் சுமுமோடோவின் கண்டுபிடிப்பு, புற்றுநோயாளிகளின் இரத்த அமைப்புகளை புரிந்து கொள்வதற்கான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது, இதனால் நோய்க்கான சிகிச்சையும் எளிதானது.

ஸ்டெம் செல் வளர்ச்சி தொடர்பான ஆராய்ச்சிகளில் தற்போது ஈடுபட்டிருக்கும் ஆன் சுமுமோடோ, இதைத்தவிர, ஏழுக்கும் அதிகமான கண்டுபிடிப்புகளுக்கு இணை காப்புரிமை பெற்றிருக்கிறார்.

8. கெவலர் - ஸ்டெபானி குவ்லக்

துப்பாக்கி குண்டு துளைக்காதவாறு தயாரிக்கப்படும் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் உடல் கவசங்களில் பயன்படுத்தப்படும் லேசான ஃபைபரை கண்டுபிடித்த வேதியியலாளர் ஸ்டெபானி குவ்லக்.

எஃகை விட ஐந்து மடங்கு வலிமையானதாக இருக்கும் லேசான ஃபைபர் 1965ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, எண்ணிலடங்கா உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்களால் ஸ்டெபானியின் கண்டுபிடிப்பு பயன்படுத்தப்படுகிறது.

வீட்டில் பயன்படுத்தப்படும் கையுறைகள், சஸ்பென்ஷன் பாலங்கள் மற்றும் மொபைலில் இருந்து விமானங்கள் வரை ஸ்டெபானியின் கண்டுபிடிப்பு பயன்படுத்தப்படுகிறது.

9. மோனோபோலி (விளையாட்டு சாதனம்)- எலிசபெத் மேகி

சார்லஸ் டாரோ என்பவரே வரலாற்றில் மிகவும் பிரபலமான பலகை விளையாட்டை உருவாக்கியவர் என்று அறியப்படுகிறார். ஆனால் எலிசபெத் மேகியே இந்த விளையாட்டிற்கான விதிகளை உருவாக்கியவர்.

முதலாளித்துவத்துவ பிரச்சனைகளை வெளிப்படுத்த விரும்பிய மேகி, போலி பணம் மற்றும் சொத்துக்களை வர்த்தகம் செய்யும் புதுமையான விளையாட்டை உருவாக்க விரும்பினர்.

1904-இல் அவர் உருவாக்கிய விளையாட்டு 'லேண்ட்லார்ட்'ஸ் கேம்' என்ற பெயரில் காப்புரிமை பெற்றது.

இன்று நாம் அறிந்த மோனோபலி விளையாட்டு 1935-ஆம் ஆண்டில் பிரேக்கர் சகோதரர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது, டாரோ மட்டுமே இதற்கு ஒரே படைப்பாளி இல்லை. மேகியின் காப்புரிமையை வெறும் 500 டாலர்களுக்கு வாங்கி, மோனோபலி விளையாட்டை ஏகபோகமாக்கிக் கொண்டார்.

இதுபோன்று பல பெண் கண்டுபிடிப்பாளர்கள் இருந்தபோதிலும், அவர்கள் பிரபலமாக பேசப்படவில்லை.

பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் ட்விட்டரில் எங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு பிடித்தமானவற்றை #100Women என்ற ஹேஷ்டாகை பயன்படுத்தி தெரியப்படுத்துங்கள்.

http://www.bbc.com/tamil/global-41340261

Link to comment
Share on other sites

100 பெண்கள்: 'வேலையில் தீவிரமாக ஈடுபட தலைமுடியை பழுப்பு நிறமாக மாற்றினேன்'

எலென் கார்விபடத்தின் காப்புரிமைEILEEN CAREY

உலகின் மிகப்பெரிய உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் பெண், தனது கூந்தலுக்கு பழுப்பு வண்ண சாயம் ஏற்றினார். அணிந்திருந்த உயர்ந்த குதிகால் கொண்ட காலணிகளையும், கண்ணில் அணிந்திருந்த காண்டெக்ட் லென்சையும் புறம்தள்ளி, வணிகத்தில் முன்னேறிய ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

வெற்றிகரமான தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிவரும் எய்லீன் கேரே முப்பதுக்கும் சற்று கூடுதலான வயது கொண்டவர்.

கண்களில் கண்ணாடியும், அடர் பழுப்பு வண்ண கூந்தலுடன் காணப்படும் அவர் எப்போதும் இதே தோற்றத்தில் இருப்பதில்லை.

"மூலதன ஆலோசகரான ஒரு பெண்ணின் ஆலோசனையின்படியே முதல் முறையாக எனது முடிக்கு சாயம் பூசினேன்" என்று கூறுகிறார் எய்லீன் கேரே.

கேரே, தனது தோற்றத்தை இன்னும் வசதியாக கையாள்வதற்கு பொன்னிறத்தை விட அடர் பழுப்பு நிற கூந்தல் உகந்ததாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் கூறினார்கள்.

"நிதி திரட்டுவதில் இது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் என்னிடம் இந்த அறிவுரை கூறப்பட்டது. ஏனென்றால் அடர் பழுப்பு நிற கூந்தல் கொண்ட பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் வலுவானவர்களாக அங்கீகரிக்கப்படுவது இங்கு ஒரு முறைமையாக இருக்கிறது" என்று அவர் விளக்குகிறார்.

அங்கீகார முறைமை (Pattern recognition) என்பது மக்களுக்கு பழக்கமான அனுபவங்கள் அல்லது நன்கு அறியப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் பரிந்துரைக்கும் ஒரு கோட்பாடு. உணரப்பட்ட அபாயங்களை கருத்தில் கொண்டு, அவர்களை வசதியாக உணர வைக்கும் கோட்பாடு இது.

பொன்னிற கூந்தலைக் கொண்டிருந்தபோது, சர்ச்சைக்குரிய தெரோனெஸ் நிறுவனத்தின் எலிசெபத் ஹோம்ஸுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டதாக எய்லீன் கேரே கூறுகிறார்.

"பழுப்பு வண்ண கூந்தலை கொண்டிருப்பதால் நான் சற்று முதிர்ந்த தோற்றத்துடன் காட்சியளிப்பது எனக்கு வசதியாக இருக்கிறது, அதுதான் எனக்கு தேவையானதும்கூட. இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நான் உணர்ந்தேன்" என்று சொல்கிறார் கேரே.

எய்லீன் கேரே பொன்னிற கூந்தல் மற்றும் காண்டெக்ட் லென்சுடன்படத்தின் காப்புரிமைEILEEN CAREY Image captionஎய்லீன் கேரே பொன்னிற கூந்தல் மற்றும் காண்டெக்ட் லென்சுடன்

பன்முகத்தன்மையுடன் மேம்படுத்தப்பட்ட கணினி மென்பொருட்களை பிற நிறுவனங்களுக்கு வழங்கும் 'கிளாஸ்ப்ரேக்கர்ஸ்' (Glassbreaker s) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் எய்லீன் கேரே. தனது நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணலின்போது, தங்களது பொன்நிற கூந்தலை அடர் பழுப்பு வண்ணமாக சாயமேற்றியிருந்த பல பெண்களை அவர் சந்தித்தார்.

"பொன்னிற கூந்தலால் அசெளகரியங்கள் ஏற்படுவது பற்றி நாங்கள் விவாதித்தோம்" என்கிறார் கேரே.

"மது அருந்தகத்திற்கு செல்லும்போது பொன்னிறமானவர்கள் தாக்கப்படுவது சகஜமாக இருக்கிறது. இது பொதுவான பிரச்சனை."

"இந்த தொழில்நுட்பத் துறையில் நான் வெற்றிகரமாக இயங்க வேண்டுமானால், பிறரின் கவனத்தை அதிகமாக ஈர்க்கக்கூடாது அதிலும் குறிப்பாக பாலியல்ரீதியாக எந்தவிதத்திலும் பிறரை ஈர்க்ககூடாது."

அவர் சொல்வது கூந்தலின் நிறத்தை பற்றி மட்டும் அல்ல. காண்டாக்ட் லென்சை பயன்படுத்தி கொண்டிருந்த கேரே, இப்போது வழக்கமான கண்ணாடிகளை பயன்படுத்துகிறார். ஆண் பெண் என்று அடையாளப்படுத்த முடியாத வகையிலான (androgynous) ஆடைகளையும், தளர்வான ஆடைகளையும் உடுத்துகிறார்.

ஆண்களின் மேலாதிக்கம் கொண்ட பணிச்சூழலில், சற்று வயதான தோற்றமளிக்க முயற்சிப்பது தனக்கு வசதியாக இருப்பதாக கேரே கருதுகிறார்.

100 பெண்கள்

100 பெண்கள் தொடரின் நோக்கம் என்ன?

உலகெங்கிலும் உள்ள செல்வாக்கான மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடிய பெண்களை பற்றிய தொடர் பிபிசி 100 பெண்கள். 2017ஆம் ஆண்டில், இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளான கண்ணுக்கு தெரியாத தடைகள், பெண்களுக்கு கல்வியின்மை, பொது இடங்களில் துன்புறுத்தல், விளையாட்டுத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றை சமாளிக்க 100 பெண்களுக்கு சவால் விடுகிறோம்.

உங்கள் உதவியுடன், இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளுடன் அவர்கள் வெற்றிபெறுவார்கள், உங்கள் கருத்துகளுடன் நீங்களும் இதில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறோம். பேஸ்புக், இன்ஸ்ட்ராகாம் மற்றும் டிவிட்டரில் எங்களை தொடரலாம். # 100 Women (#100 பெண்கள்) என்ற டேகை பயன்படுத்துங்கள்.

line break

"வணிகத்தில் ஒரு தலைவராக பார்க்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன், பாலியல் பொருளாக அல்ல. இந்தத் துறையில் இதை நான் அடிக்கடி சந்திக்க, கடக்க வேண்டியிருக்கிறது" என்று அவர் விளக்குகிறார்.

இருந்தபோதிலும், வேலை அல்லது பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மிகவும் பொதுவானதாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார் அவர்.

"எங்கள் தொழிலில், இந்த காலத்தில் பாலியல் துன்புறுத்தல் என்ற பிரச்சனை இருக்கிறது," என்று அவர் விளக்குகிறார்.

மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுக்கான ஒரு சமீபத்திய நிகழ்வில், தேவதைகள் போல் அலங்கரிக்கப்பட்ட பெண் மாடல்கள் மது வகைகளை பரிமாறினார்கள்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒருசில பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளில் தானும் ஒருவராக இருந்ததை குறிப்பிடும் கேரே, அந்த சூழ்நிலை பொருத்தமற்றதாகவும், நேர்மையற்றதாகவும் தோன்றியது என்கிறார்.

Image 4 பன்முகத்திறமை கொண்ட தொழிலாளர்களை வழங்கும் மென்பொருளை வழங்கும் கிளாஸ்ப்ரேக்கர்ஸ் நிறுவனம்

ஆண்மையையும் பெண்மையையும், பாலின சிக்கல்களையும் பொதுவாக அணுகும் முறையில் தனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தனது தாயார் எய்லீன் சீனியர் என்று கூறுகிறார் எய்லீன் கேரே.

கேரேயின் தாயும் அத்தையும் 1980களிலேயே பெண்ணியவாத சிந்தனைகளை கொண்டவர்கள்.

"ஓட்ட வெட்டிய முடியுடன் இருக்கும் என் அம்மா ஒப்பனை செய்யமாட்டார், உயர் குதிகால் கொண்ட காலணிகளையோ, ஈர்க்கக்கூடிய ஆடைகளையே அணிய மாட்டார்" என்று சொல்கிறார் கேரே.

கடந்த காலத்தில் தலைமுடி வெட்டப்பட்டு, நகங்களை அழகுபடுத்தியிருந்தார் கேரே.

"இப்போதுதான் என் அம்மாவுக்கு ஏற்ற பெண்ணாக இருக்கிறேன், ஒப்பனை செய்துகொள்ள விரும்பவில்லை, அதிக உயரமான குதிகால் உள்ள காலணிகளை அணிய விரும்பவில்லை, வேலையில் இருக்கும்போது வசதியாக உணர்கிறேன்" என்று சொல்கிறார் எய்லீன் கேரே.

 

 

பொன்னிற கூந்தலில் எய்லீன் கேரேபடத்தின் காப்புரிமைLAUREN HEPLER Image captionபொன்னிற கூந்தலில் எய்லீன் கேரே

கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பின்னணியை கொண்ட குடும்பங்களில் வளர்க்கப்பட்ட பெண்களுக்கு உள்ள அழுத்தம் தனக்கு இருப்பதாக கேரே உணரவில்லை. "மிக இளம் வயதில் வழக்கமான பாலின நடத்தைகளை பின்பற்ற வேண்டும் என்ற அழுத்தம் இல்லாதது அதிர்ஷ்டம் என்றே சொல்வேன்."

தொழில்நுட்ப துறையில் பாலியல் மற்றும் பாலினம் பற்றிய புதிய செய்திகளே அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றன, அது ஊபெராக இருந்தாலும் சரி, கூகுளாக இருந்தாலும் சரி. எங்கு வேலை செய்வது என்ற தெரிவு பணியாளர்களிடம்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் எய்லீன் கேரே.

ஒரு நிறுவனத்திற்குள் தனியாக ஒரு கலாச்சாரத்தை மாற்ற முயற்சிப்பது கடினம் என்று கூறும் கேரே, மேலும் அங்கே பணிபுரியும் காயமடைவதாக உணர வழிவகுக்கும் என்று சொல்கிறார். இது, "ஒரு மில்லியன் காகிதத்துண்டுகள், நுண்ணிய ஆக்கிரமிப்புகள், சிறிய விஷயங்கள்" நோக்கிச் செல்லும் என்றும் கூறுகிறார்.

நீங்கள் ஒரு நிறுவனத்தை மாற்ற விரும்பினால், "அது உலகில் நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருக்கட்டும், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை. பாரபட்சம் காட்டுவதற்கான வழக்குக்காக தியாகம் செய்யலாம். துரதிருஷ்டவசமாக, நீங்கள் தொழில்களை மாற்ற வேண்டியிருக்கும்."

இல்லையெனில், "எங்கே வெற்றியடைய முடியுமோ அங்கே செல்லுங்கள்."

  • சிலிக்கன் பள்ளத்தக்கில் 2016இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, தொழில்நுட்ப துறையில் 60 சதவிகித பெண்கள் ஏதாவது ஒருவிதத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
  • அதே ஆண்டில் பணியிடங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 91,503 வழக்குகளில் 30% பாலியல் தாக்குதல் தொடர்பானவை.
  • 2013 இன் ஒரு கணக்கெடுப்பின்படி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் 75 சதவிகிதத்தினர் இதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை என்பதால் உண்மையான பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.

அனைவருடன் இணைந்து செல்லாத, பெண்களின் தலைமைத்துவத்திற்கு இடமளிக்காத, பெண்களுக்கு சிக்கலான சூழலை உருவாக்கும் நிறுவனங்கள் நீண்டகாலத்திற்கு நிலைக்காது என்று சொல்கிறார் எய்லீன் கேரே.

"நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள், தலைமைப் பண்பை கவனியுங்கள், அங்கு வேலை செய்யும் பெண்களிடம் பேசுங்கள், உங்கள் திறனை பயன்படுத்த அவர்களால் முடியாது என்று நினைத்தால், அங்கே வேலை செய்யாதீர்கள்" என்று கேரே அறிவுரை கூறுகிறார்.

http://www.bbc.com/tamil/global-41327537

Link to comment
Share on other sites

சிறையை கல்விக்கூடமாக மாற்றிய பெண்ணின் வெற்றிக்கதை

 
கைதுபடத்தின் காப்புரிமைADVOCAID

சியோரா லியோனில் பிறந்து வளர்ந்த "மிரியம்" பள்ளிக்கு சென்றதில்லை. வளர்ந்த பிறகு எழுத படிக்கத் தெரியாமல் சிரமப்பட்டார். அந்த இடத்தில் காரணமில்லாமல் இருந்ததற்காக தான் கைது செய்யப்பட்டதை, வேறு குற்றம் என்று தவறாக புரிந்தார் மிரியம்.

ஆனால், சிறைதான் அவரது முதல் வகுப்பறையாக மாறியது. தான் படிக்கக் கற்றுக் கொண்ட கதையை சிலரின் உதவியுடன் எழுதியிருக்கிறார் மிரியம்.

"நீங்கள் செய்த குற்றம் என்ன? குற்றவாளியா இல்லையா? "

"என்ன? எனக்கு புரியவில்லை."

"நீ குற்றவாளியா? பதில் சொல்லுங்கள்."

"ஆமாம் ஐயா."

ஒரு வருடம் கழித்து, நான் சியரா லியோனில் உள்ள ஃப்ரீடவுன் பெண்கள் சீர்திருத்த மையத்தில் (Freetown Female Correction Centre) இருந்து விடுவிக்கப்பட்டேன். நான் ஏன் அங்கு இருந்தேன்? குற்றவாளி என்ற வார்த்தை என்னவென்று எனக்குத் தெரியாது என்பதால்! எனக்கு புரியும்படி மொழிபெயர்த்து சொல்ல யாரும் இல்லை.

என்னுடைய கல்வி அறிவு குறைவானதால் தவறான வேண்டுகோளை வைத்தேன்" 'மரியம்', முன்னாள் சிறை கைதி

35 வயதான நான் ஐந்து குழந்தைகளின் தாய். ஒரு பெரிய திருட்டு சம்பவம் தொடர்பாக எனது சுற்றுவட்டாரப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டேன். நாங்கள் அனைவரும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, கல்வியறிவு இல்லாத நான் தவறான வேண்டுகோளை முன்வைத்தேன்.

எனது தண்டனைக் காலம் தொடங்கியபோது, பெண் கைதிகளுக்கு வாரம் இருமுறை வழங்கப்பட்ட வகுப்புகளில் கலந்து கொண்டு எழுதப் படிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தேன்.

என்னைப்போலவே, சக சிறைவாசிகள் பலர் கல்வியறிவு இல்லாதவர்களாகவும், பள்ளிக்கூடத்திற்கே செல்லாதவர்களாகவும் இருந்தார்கள்.

சில மாதங்களுக்குப் பிறகு, நான் கைநாட்டு வைப்பதில் இருந்து கையெழுத்து போடத் தெரிந்தவளாக மாறிவிட்டேன். எனது சொந்த பெயரை எழுதுவதற்கு கற்றுக்கொண்டேன்.

வகுப்புகளையும், படிப்பையும் மிகவும் நேசித்த எனக்கு, பிற பெண்கள் வைத்த செல்லப்பெயர் "பள்ளிப் பெண்".

இந்த காகிதத்தில் எழுதப்பட்டுள்ளது என்ன என்பதை படிக்கும் அளவுக்கு எனக்குத் தெரியும் என்பதையே சொல்ல விரும்புகிறேன் ‘மரியம்‘, முன்னாள் சிறை கைதி

சீர்திருத்த மையத்திலிருந்து நான் வெளிவந்த பிறகு, குடும்ப வருவாய்க்காக சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறேன்.

புதிதாக கற்றுக்கொண்ட திறமைகள், என்னை உள்ளூர் சந்தையில் பெண்களின் தலைவியாக உயர்த்தியிருக்கிறது. நிதி தொடர்பான அனைத்து பதிவுகளையும் சரியாக பராமரிக்க கல்வி எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

சந்தை வேலையில் இருந்து வீடு திரும்பியதும், சிறையில் எனக்கு கற்றுக் கொடுத்ததை அவர்களை போலவே எளிமையாக என் அண்டை வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு வாசிக்கவும் எழுதவும் கற்பிக்கிறேன்.

100 பெண்கள் தொடர்

படிக்க, எழுத, கணக்குபோட தெரிந்தவள் நான் என்று கூறும் என் கல்வி சான்றிதழ் எனக்கு பெருமையளிக்கிறது.

எழுதப் படிக்க தெரிந்தாலும், இந்த கதையை எழுதுவதற்கு எனக்கு பிறரின் உதவி தேவைப்படுகிறது. ஆனால் இந்த காகிதத்தில் எழுதப்பட்டுள்ளது என்ன என்பதை படிக்கும் அளவுக்கு எனக்குத் தெரியும் என்பதையே சொல்ல விரும்புகிறேன். இது எனக்கு கொடுத்திருக்கும் உறுதியும், நம்பிக்கையும் இதற்கு முன் எப்போதும் என்னிடம் இருந்ததில்லை.

வகுப்பறையில் ஆசிரியர்களும், கைதிகளும்படத்தின் காப்புரிமைADVOCAID Image captionவகுப்பறையில் ஆசிரியர்களும், கைதிகளும்

சிறையில் ஆசிரியராக பணிபுரியும் ஹஜா க்ப்லா, EducAid மற்றும் AdvocAid போன்ற அறக்கட்டளைகள் மூலம் பெண்களுக்கு எழுத படிக்க கற்றுக் கொடுக்கிறார். சிறு வயதில் பள்ளிக்கு செல்லாத மிரியம் போன்றவர்களுக்கு கல்வி கண்ணை திறக்கிறார்.

கல்வியறிவு இல்லாத காரணத்தால் மட்டுமே நீதியை கைநழுவவிட்ட அசாதாரண கதைகள் கொண்ட பல பெண்களை சீர்திருத்த மையங்களில் சந்தித்திருக்கிறேன். ஆவணங்களில் எழுதியிருப்பதை புரிந்து கொள்ளாமல் கைரேகை வைத்தோ, கையெழுத்திட்ட அவர்கள், குற்றவாளிகள் எனக் தண்டனை பெற்றிருக்கிறார்கள். சிறு தொகையை கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்காதது, முற்றிலும் நியாயமற்ற ஒப்பந்தங்களை மீறியது போன்ற அற்ப காரணங்களுக்காக சிறைதண்டனை பெற்றவர்களை பார்த்திருக்கிறேன்.

கல்விக்கான வாய்ப்பு இல்லாத காரணத்தால் அநீதிக்கு உள்ளான அசாதாரண கதைகள் கொண்ட பல பெண்களை சந்தித்திருக்கிறேன் ஹஜா க்ப்லா, ஆசிரியர்

கல்வி கற்பதற்கான வாய்ப்பு கிடைத்தவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பதை, சிறையில் எழுத்தறிவு வகுப்புகளை நடத்தும்போது தெரிந்து கொண்டேன். அதேபோல், பள்ளிக்கல்வியை அணுக முடியாதவர்கள் எப்படி உரிமையற்று இருக்கிறார்கள் என்பதையும், முற்றிலும் தகுதியற்றவர்களாக இருப்பதையும் உணர்ந்தேன்.

பேனாவை கையாள முடியும், பட்டியலில் இருக்கும் தங்கள் பெயரை கண்டுபிடிக்க, தங்களுடைய தொழிலின் லாபங்கள் அல்லது செலவுகளை கணக்கிட, புத்தகம் படிப்பவர்களாக மாறுவதை பெண்கள் பெருமையுடன் உணர்வதை காணும் பல தருணங்கள் எனக்கு வாய்த்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு செல்லும் பெண்கள், சான்றிதழ்கள் மற்றும் விருதுகளைப் பெறும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சியை பார்ப்பது மிகுந்த உற்சாகத்தை கொடுக்கும்.

சிறையில் இருக்கும் பெண்கள் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்கு போகும்போது சான்றிதழ்கள் வழங்கப்படுகிறதுபடத்தின் காப்புரிமைADVOCAID Image captionசிறையில் இருக்கும் பெண்கள் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்கு போகும்போது சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது

பெண்கள் தங்கள் முழு திறனை உணர வழிவகுக்கும் ஒரு வினையூக்கியாக நான் இருப்பதை, சீர்திருத்த மையத்திற்குள்ளும், வெளியுலகில் வேலை செய்யும்போதும் உணர்ந்திருக்கிறேன்.

கல்வி என்பது ஜன்னல்கள் மற்றும் வாய்ப்புகளைத் திறப்பதற்கான ஓர் அற்புதமான கருவி என்பதோடு, ஒரு பெண்ணின் சொந்த வாழ்க்கையை கட்டுப்படுத்தும் வாய்ப்புகளிலும் மாறுதல்களை ஏற்படுத்துகிறது.

EducAid மூலம் எனக்கு கல்வி சாத்தியமானதால், வாழ்வை நேர்மறையாக அணுகுகிறேன். கல்வியை எந்த வயதிலும் கற்கலாம் என்பதற்கும், மாற்றத்திற்கான முகவராகவும் இருக்கிறேன்.

சியாரோ லியோன் மற்றும் வேறு எந்த இடத்திலும் நீதி மற்றும் சமத்துவத்தை பார்க்க வேண்டுமானால், உதவி தேவைப்படும் பல இளம் பெண்களுக்கு உதவி செய்து, அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.

துரதிர்ஷ்டவசமாக, அண்மையில் எபோலா தொற்றுநோய்க்குப்பின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் மனித உரிமை அமைப்புக்களுக்கு கிடைக்கும் நிதி மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டது.

இதனால், 10 ஆண்டுகளில் முதன்முறையாக கல்வியறிவு வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வகுப்புகள் மீண்டும் தொடங்க வேண்டும் என சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருக்கும் பெண்கள் விரும்புகிறார்கள். சிறையில் இருந்து வெளியேறும்போது பிரகாசமான எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்த கல்வியறிவு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

சீர்திருத்த மையங்களில் இருக்கும் பெண்களுக்கு படிக்க புத்தகங்களை அறக்கட்டளைகள் கொடுக்கின்றனபடத்தின் காப்புரிமைADVOCAID Image captionசீர்திருத்த மையங்களில் இருக்கும் பெண்களுக்கு படிக்க புத்தகங்களை அறக்கட்டளைகள் கொடுக்கின்றன

மிரியம் என்பது புனைப்பெயர்.

http://www.bbc.com/tamil/global-41372360

தொடரும்

Link to comment
Share on other sites

100 பெண்கள்: உலகத்தை ஒரு வாரத்தில் பெண்களால் மாற்ற முடியுமா?

பெக்கி விட்சன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிபிசியின் பிரபலமான, விருது பெற்ற ''100 பெண்கள்'' தொடர் 2017ஆம் ஆண்டில் மீண்டும் புதிய தளத்தில்.

ஆண்டுதோறும் வெளியிடப்படும் உத்வேகம் அளிக்கக்கூடிய 100 பெண்கள் பட்டியலில் இப்போது 60 பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாசா விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன், லைபீரியா அதிபர் எலென் ஜான்சன் சிர்லெஃப் மற்றும் இங்கிலாந்து கால்பந்து வீராங்கனை ஸ்டெஃப் ஹக்டன் உட்பட 60 பெண்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 40 பெண்களின் பெயர்கள் அக்டோபர் மாதத்தில் சேர்க்கப்படும்.

உலகம் முழுதும் பெண்களை பாதிக்கும் பிரச்சனைகளை பற்றி விவாதிக்கப்படும் ''100 பெண்கள்'' தொடரில், மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பெண்களை ஊக்குவிப்பதற்கான ஒரு வாய்ப்பு இந்த ஆண்டு வழங்கப்படுகிறது.

இந்த வரிசையில் கவிதாயினி ருபி கெளர், அமிலத் தாக்குதலுக்கு ஆளான ரேஷம் கான் மற்றும் நடனமணியும், தொலைகாட்சி நட்சத்திரமுமான ஜின் ஜிங் ஆகியோரும் இடம்பெறுகிறார்கள்.

ஜின் ஜிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

துன்புறுத்தல், ஏற்றத்தாழ்வு மற்றும் சமுதாயத்தின் பல துறைகளில் பெண்களின் குறைவான பங்களிப்பு என முடிவில்லாதவை போல தோன்றும் பல்வேறு கதைகள், மனச்சோர்வையும் துயரத்தையும் கொடுப்பவை.

எனவே இந்த ஆண்டின் பெண்களுக்கான இந்த சிறப்புத் தொடரில் இந்த ஏற்றத்தாழ்வுகளை, சமத்துவமின்மையை சமாளிக்க புதுமையான மாற்றங்களை, யோசனைகளை பெண்களிடமே கேட்கிறோம்.

''100 பெண்கள்'' சிறப்புத் தொடரின் ஐந்தாவது ஆண்டான இந்த ஆண்டு, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தி இருக்கிறோம். அவை:

1. கண்ணுக்கு தெரியாத தடைகள் (glass ceiling),

2. பெண்களுக்கு கல்வியின்மை (female illiteracy),

3. பொது இடங்களில் துன்புறுத்தல் (street harassment),

4. விளையாட்டுத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம் (sexism in sport).

100 பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

100 பெண்கள் பட்டியலில் உள்ள சிலர், இதுபோன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள். அவர்கள் அக்டோபர் மாதத்தில் நான்கு வாரங்களுக்கு, நான்கு வெவ்வேறு நகரங்களில் இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்படுவார்கள்.

மற்றவர்கள், உலகம் முழுவதும் தங்கள் இடங்களில் இருந்து கொண்டே இவர்களுக்கு ஆதரவும் உத்வேகமும் வழங்குவார்கள்.

ஈடுபாட்டுடன், தங்கள் சொந்த கருத்துக்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளும் பெண்களில் இருந்து 40 பேரின் பெயர்கள் பிறகு பட்டியலில் சேர்க்கப்படும்.

உறுதியான பாலம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த சவாலில் 100 பெண்கள் வெற்றி பெற்றால், அதற்கு காரணம் உலகம் முழுவதும் உள்ள பெண்களே. பெண்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணம் என்ன, அவை எப்படி ஏற்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள அவர்கள் உதவுவார்கள்.

ஏனெனில், அவர்கள் பார்த்த சிறப்பான யோசனைகளை பகிர்ந்துக் கொள்வார்கள், அல்லது அவர்கள் இதை எதாவது ஒருவிதத்தில் எதிர்கொண்டிருப்பார்கள்.

இவை வெறும் யோசனைகள், பரிந்துரைகள் மட்டுமல்ல. வானொலி, ஆன்லைன், சமூக ஊடகங்களில் 100 பெண்கள் உரையாடுவார்கள்.

சுதந்திர பறவைகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

'கண்ணுக்கு தெரியாத தடைகள்' சவால், சான் பிரான்சிஸ்கோவிலும், 'பெண்களுக்கு கல்வியின்மை' என்ற சவால், டெல்லியிலும், நைரோபியை சேர்ந்த ஒரு குழுவின் உதவியுடன் லண்டனில் 'பொது இடங்களில் துன்புறுத்தல்' என்ற சவாலும், 'விளையாட்டுத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம்' என்ற சவால், ரியோவிலும் மேற்கொள்ளப்படும்.

நான்கு நகரங்களில் இந்த சவால்கள் மேற்கொள்ளப்பட்டாலும் உலகம் முழுவதும் உள்ள பெண்களிடமிருந்து நாங்கள் கருத்துகளை தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம். உரையாடல்களும், உலகளாவியதாக இருக்க வேண்டும்.

"2015 ஆம் ஆண்டில், 30 நாடுகளில், 10 மொழிகளில், 150 விவாதங்கள் நடத்தப்பட்டன. 2016 இல், தகுதியுடைய ஆனால் வெளியில் அறியப்படாத 450 பெண்கள் கண்டறியப்பட்டு விக்கிபீடியாவில் இடம்பெற்றனர். தற்போது 2017 ஆம் ஆண்டில் பெண்களில் பங்களிப்பை ஒரு முழுமையான புதிய நிலைக்கு எடுத்துச் செல்கிறோம்" என்கிறார் 100 பெண்கள் தொடரின் ஆசிரியர் ஃபியோனா கிராக்.

"திறமையான 100 பெண்கள் ஒரு மாதத்திற்குள் தங்களை வெளிப்படுத்துவார்கள் என்பது அற்புதமான ஒன்றாக இருந்தாலும், பரபரப்பானதாகவும் இருக்கும். அவர்கள் ஒரு மாதத்திற்குள் இதை நடத்திக் காட்டுவார்களா?"

"அற்புதமான விஷயங்கள் நடக்கவிருக்கிறது. ஆனால், திறமையான 100 பெண்கள் வெளிவருவார்களா? அதுவும் ஒரு மாதத்திற்குள் இது நடைபெறுமா என்று கவலையாக இருக்கிறது."

பிரெசில்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

Image 6

பெண் கண்டுபிடிப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது கண்டுபிடிப்புகள் கொண்ட உத்வேகம் அளிக்கும் கட்டுரையுடன் இந்தத் தொடரை தொடங்கினோம்.

http://www.bbc.com/tamil/global-41424518

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

100 பெண்கள் : கருத்தடைகள் மீதான தடையை உடைக்கும் நிர்மா !

 
நிர்மா தேவிபடத்தின் காப்புரிமைPFI Image caption200க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தடைகளைப்பற்றி பேசவும், பயன்படுத்தவும் ஊக்கமளித்துள்ளார் நிர்மா தேவி

இந்தியாவில் கருத்தடை என்பது வெளிப்படையாக விவாதிக்க தயக்கம் காட்டப்படும் தலைப்பாக உள்ளது. இதுவே அதிக குழந்தை பிறப்புக்கும் காரணமாகிறது.

இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான, பீகாரில், பெண்களுக்கு சராசரியாக மூன்றுக்கு மேற்பட்ட மேல் குழந்தைகள் உள்ளன. ஆனால், அங்குள்ள ஒரு குக்கிராமத்தில், ஒரு பெண் இதை மாற்ற முயலுகிறார்.

"ஆமாம், நான் கருத்தடைகளை பயன்படுத்துகிறேன்" என்று கூறுகிறார், இரண்டு குழந்தைகளுக்கு தாயான, 29 வயதாகும் நிர்மா தேவி. "என் மாதவிடாய் காலங்களில், சிவப்பு மாத்திரையையும், பிற நாட்களில் கறுப்பு நிற மாத்திரையையும் பயன்படுத்துகிறேன். அதில் பக்கவிளைவுகள் இல்லை என்று எனக்கு தெரியும்."

பீகாரின், கயா மாவட்டத்தில் உள்ள பாராசட்டி கிராமத்து பெண்ணிடம் இருந்து வரும் இந்த வார்த்தைகள் வருவது உணர்ச்சிமயமானது.

11 ஆண்டுகளுக்கு முன்பு, நிர்மாவிற்கு திருமணம் ஆன சமயத்தில் திருமணமான பெண்களுடனோ, கணவர் வீட்டாருடனோ கருத்தடை பற்றிப் பேச முயன்றால் அது கண்டிக்கப்படும்.

ஆண், பெண் இடையே கருத்தடை குறித்த திறந்த விவாதம் என்பது இங்கு ஏற்புடையதல்ல. பெண்கள் கூட, இதை மூடிய கதவுகளுக்கு பின்னால் தான் பேச முடியும்.

இதனால் தான், பீகார் மாநிலத்தில் கருவுறுதல் விகிதம் மிக அதிகமாக உள்ளது.

இந்தியாவின் தேசிய குடும்பநல ஆய்வின் சமீபத்திய முடிவின்படி, பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளின் சராசரியான எண்ணிக்கை, தேசிய அளவில் இரண்டாகவும், பீகாரில் மூன்றாகவும் உள்ளது.

கருத்தடைகள் குறைவாகப் பயன்படுத்தப்படும் நாடுகளில், கருவுறுதல் விகிதம் அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

கிராம பெண்களுடன் நிர்மா தேவிபடத்தின் காப்புரிமைPFI Image captionஆணுறைகளை பயன்படுத்துவது என்பது இந்திய கிராமங்களில் பிரபலம் இல்லாத ஒன்று.

ஒரு தேனீர் சந்திப்பில் உட்கார்ந்து பேசுவதற்கு தடையான தலைப்பாக மட்டுமில்லாமல், தனிப்பட்ட முறையில் கூட பீகார் தம்பதிகள் கருத்தடைப்பற்றி பேச தயங்குகின்றனர்.

ஆனால், நிர்மா தேவி ஒரு விதிவிலக்கு.

அவர், தனது குடும்பத்தை திட்டமிட, தற்காலிக கருத்தடை முறையை தாமே பயன்படுத்தியது மட்டுமில்லாமல், அவரின் கிராமத்தில் உள்ள கிட்டத்தட்ட 200 பெண்களையும் இதை செய்ய ஊக்குவித்துள்ளார்.

`மேன் குச் பீ கர் சக்தி ஹூன்` ( பெண்ணாக என்னால் எதையும் சாதிக்க முடியும்) என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரின் மூலம் தாம் ஊக்குவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இத தொடரில், மும்பையை சேர்ந்த பெண் மருத்துவர் ஸ்நேகா, பாலியல் சுகாதாரம், கருத்தடை போன்ற வெளிப்படையாக விவாதிப்பதில் தயக்கம் காட்டப்படும் தலைப்புகள் குறித்து கிராமப்புற பெண்களுக்கு அறிவூட்ட விரும்புபவராக, கதை வருகிறது.

அந்த நிகழ்ச்சியை பார்த்து ஊக்கம் பெற்ற நிர்மா, நிஜ வாழ்க்கையில், ஸ்நேகாவை போல இருக்க விரும்பினார்.

நாடகத்தின் படம்படத்தின் காப்புரிமைYOUTUBE

"அத் தொடரின் ஒரு பாகத்தில், ஒரு பெண் தனது நான்காவது குழந்தையை பெற்றெடுக்கும் போது, மருத்துவமனை கட்டிலிலேயே இறந்து போவதை பார்த்தேன்.

அவள் மூன்று ஆண்டுகளில் , மூன்று குழந்தையை பெற்றிருந்தாள். நிச்சயமாக அவளின் உடல் நான்காவது குழந்தைக்கு தயாராக இல்லை."

இந்த பாகம், நிர்மாவை தனது சொந்த இயக்கத்தைத் துவங்க ஊக்கமளித்தது. அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று கருத்தடை பிரசாரம் செய்வதற்கு, தனது கிராமத்தை சேர்ந்த 20 பெண்களை கொண்டு, ஓர் அமைப்பை உருவாக்கினார்.

கடந்த ஆண்டு வெளியான உலக சுகாதார அமைப்பின் அறிக்கை, இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு ஐந்து பெண்கள் பிரசவத்தின் போது இறப்பதாக தெரிவிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு. தான் கருவுறும் காலத்தை முடிவு செய்துகொள்ள முடியாத, குழந்தைகளுக்கு இடையே இடைவேளை உருவாக்கி கொள்ள முடியாத நிலையில் பெண்கள் இருக்கும் ஒரு சமூகத்தில், இத்தகைய சிக்கல்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் கருத்தடைகளின் பயன்பாடு விகிதம் குறித்த படம்

இந்தியாவில், பொதுவான கருத்தடை முறை என்றாலே, பெண்களுக்கான குடும்ப கட்டுபாடு தான்.

குடும்பக் கட்டுபாடு என்பதில் பெண்களே முழுப் பொறுப்பையும் எடுத்துகொள்ள வேண்டும் என கருதப்படுகிறது, ஆண்கள் மிக அரிதாகவே பங்களிக்கின்றனர்.

தற்காலிக முறைகளான மாத்திரைகள் மற்றும் ஆணுறைகள் பிரபலம் இல்லாமல் இருப்பதால், கிராமப்புற பெண்களுக்கு இரு குழந்தைகளுக்கு இடையேயான வயது இடைவேளை என்பது மிகவும் கடினமாகிறது.

நிர்மாவிற்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மூன்று ஆண்டுகள் வயது வித்தியாசத்துடன். இதற்கு காரணம், உள்ளூர் சுகாதாரத்துறை பணியாளர் பூணமின் அறிவுரையே என்கிறார் அவர்.

இந்திய அரசின், தேசிய கிராமபுற சுகாதார திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும், சமூக சுகாதார செயல்பாட்டாளர் குழுவில் ஒருவர் தான் பூணம்.

நிர்மாவிடம் கருத்தடைகளின் பயன்பாடு குறித்து முதன்முதலில் இவரே பேசினார்.

அவரின் உதவி இருந்த போதிலும், கருத்தடையைப் பயன்படுத்துவது நிர்மாவிற்கு சுலபமானதாக இல்லை.

குடும்பத்தினருடன் நிர்மா தேவிபடத்தின் காப்புரிமைPFI Image captionகுடும்பத்தினருடன் நிர்மா தேவி

"நான் என் கணவரிடம், கருத்தடை மாத்திரைகளை வாங்கித்தாருங்கள் என்றவுடன், அவர் அப்பட்டமாக மறுத்தார். பின்பு, நான் எப்படி வாங்குவது? கிராமத்தில் உள்ள மற்ற ஆண்கள் என்ன சொல்லுவார்கள்?" என்றார்.

பலமுறை தொடர் விளக்கங்களுக்கு பிறகே, அவரின் கணவர் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு நிர்மாவை அழைத்து சென்றார். அங்கு அவரால், கருத்தடை மாத்திரைகளை இலவசமாக பெற முடியும்.

அதேபோல, அவரால் தனது கிராமத்தில் உள்ள பிற பெண்களையும் இதற்காக சமாதானப்படுத்த முடிந்தது.

இது மலையின் முகட்டை நோக்கிய ஒரு போராட்டம், ஆனால், நிர்மா மிகவும் உறுதியான ஒரு ஆரம்பத்தை செய்துள்ளார்.

தனது குழந்தைகளுக்கு இது குறித்த கல்வியை அளிப்பதன் மூலம், அடுத்த தலைமுறையினரிடையே, கருத்தடை குறித்த திறந்த பேச்சுவார்த்தை இருக்கும் என நிர்மா நம்புகிறார்.

மேலும், அவர், ஆண்களும் தங்களுக்கான பொறுப்பை பகிர்ந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்.

http://www.bbc.com/tamil/india-41585453

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

''100 பெண்கள்'' பட்டியலில் இடம்பெற்ற பத்து இந்தியப் பெண்கள்

100 பெண்கள்

பிபிசியின் பிரபலமான, விருது பெற்ற ''100 பெண்கள்'' தொடரின் இந்த ஆண்டு பட்டியலில் இந்திய பெண்கள் பத்து பேர் இடம்பெற்றுள்ளனர்.

100 பெண்கள் இடம் பெறும் இப்பட்டியலில் இதுவரை 60 பெண்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள 40 பெண்களின் பெயர்கள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியிடப்படும்.

இந்த வருடாந்திர தொடர், உலகம் முழுவதும் உள்ள பெண்களை பாதிக்கும் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துவதுடன், மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என பெண்களை ஊக்குவிக்கிறது.

கவிதாயினி ரூபி கெளர், எழுத்தாளர் இரா திரிவேதி, பெண்ணுரிமை ஆர்வலர் மற்றும் கல்வியாளரான ஊர்வசி சாஹ்னி ஆகியோரும் ''100 பெண்கள்'' தொடரில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ள பத்து இந்திய பெண்கள் யார் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1. ஊர்வசி சாஹ்னி

ஊர்வசி சாஹ்னி Image captionஊர்வசி சாஹ்னி

62 வயதான டாக்டர் ஊர்வசி சாஹ்னி 'ஸ்டடி ஹால் கல்வி அறக்கட்டளை' (Study Hall Educational Foundation) என்ற கல்வி அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.

பெண்ணுரிமை ஆர்வலரும், கல்வியாளருமான ஊர்வசி, 34 ஆண்டுகளாக சமூக சேவைகளிலும், பெண்களின் உரிமைக்காகவும் பணியாற்றிவருகிறார்.

"கல்வி என்பது மாற்றத்தை கொண்டு வருவதற்கான சக்திவாய்ந்த ஆயுதம், ஆனால் மாற்றத்தை கொண்டுவரக்கூடிய கல்வியிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்" என்கிறார் ஊர்வசி சாஹ்னி.

2. மெஹ்ரூனிசா சித்திகி

பாலிவுட் நடிகர் நவாஜுதீன் சித்திகியின் தாய் மெஹ்ரூனிசா சித்திகியும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

'கற்றலுக்கு வயது தடையில்லை' என்கிறார் 65 வயதான குடும்பத்தலைவி மெஹ்ரூனிசா சித்திகி.

3. இரா திரிவேதி

இரா திரிவேதி Image captionஇரா திரிவேதி

32 வயதான இரா திரிவேதி, எழுத்தாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர்.

தன்னுடைய எழுத்தின் மூலம், கல்வியின் முக்கியத்துவத்தை புரியவைக்க முடியும், லாப நோக்கற்ற நடவடிக்கைகள் மூலம் மக்களின் மனதையும் எண்ணங்களையும் மேம்படுத்த முடியும் என்று நம்புகிறார்.

இரா திரிவேதி கூறுகிறார், "நம்மைப் பற்றிய சுய மதிப்பீட்டைவிட பல மடங்கு அதிக சக்தி வாய்ந்தவர்கள் நாம். நமக்குள் உள்ள சக்தி அபரிதமானது. வெளியுலகத்திற்காக நம்மை நாமே சுருக்கிக்கொண்டால், நமது எல்லையற்ற திறமைகள் முடங்கிவிடும். நம்முடைய வரம்பற்ற திறன்களைப் பயன்படுத்த முடியாவிட்டால், உலகத்தில் இருந்து தனிமைப்பட்டுவிடுவோம்."

4. அதிதி அஸ்வதி

அதிதி அஸ்வதி Image captionஅதிதி அஸ்வதி

தொழிலதிபர் மற்றும் 'இம்பைப்' நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான 35 வயதான அதிதி கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி, கல்வியில் புரட்சிகரமான மாற்றங்களை செய்ய விரும்புகிறார்.

"உலகில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரவேண்டும். அதற்காக, நேர்மறையான புரட்சியை உருவாக்குவோம்" என்று அவர் கூறுகிறார்

5. பிரியங்கா ராய்

16 வயதான பிரியங்கா ராய் 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மாணவி.

மேற்கு வங்க மாநிலம் ராணாகாடில் இருந்து ஒரு வருடம் முன்பு டெல்லிக்கு வந்த பிரியங்கா, இப்போது கோவிந்த்புரியில் உள்ள டி.ஏ. காலனியில் தனது தாயுடன் வசிக்கிறார்.

"மற்றவர்களுக்கு எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். என் சொந்த கால்களில் நிற்க விரும்புகிறேன்" என்பது பிரியங்காவின் விருப்பம்.

6. நித்யா தும்மல்ஷெட்டி

நித்யா தும்மல்ஷெட்டி Image captionநித்யா தும்மல்ஷெட்டி

31 வயதான நித்யா தும்மஷெட்டி ஃபார்சுன்பிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்.

சுகாதார சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் அதிபரான நித்யா, தொழில்நுட்ப படைப்பாற்றலின் மூலமாக கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாட்டை அழித்துவிடலாம் என்று கூறுகிறார்.

"தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்கவேண்டும், பதில் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தொடர்ந்து கேள்வி கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டால், அநீதியும் பாகுபாடும் இயல்பானவை அல்ல என்பது புரிந்துவிடும்" என்று அவர் கூறுகிறார்.

7. தூலிகா கிரண்

ஆசிரியராக பணிபுரியும் 47 வயதான தூலிகா கிரண், சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

கடந்த எட்டாண்டுகளாக டெல்லி திஹார் ஜெயிலில் குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் அவர் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்தவர்.

"உங்களை நேசிப்பவர்களை வெறுக்காதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஏமாற்றாதீர்கள்" என்கிறார் தூலிகா கிரண்.

8. ரூபி கெளர்

ரூபி கெளர் Image captionரூபி கெளர்

கவிதாயினியும் எழுத்தாளருமான ரூபி கெளர், வாழ்வியல் தொடர்பான கருத்துகளை தனது எழுத்தில் பிரதிபலிக்கிறார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கனடா நாட்டை சேர்ந்த ரூபி கெளர், ஒரு ஓவியரும் கூட.

அன்பு, உடலுறவு, அதிர்ச்சி, சிகிச்சைமுறை, பெண்களின் பிரச்சினைகள் போன்ற பல விடயங்களை தனது படைப்புகள் மூலம் முன்வைக்கிறார்.

9. விராலி மோதி

25 வயதான விராலி மோதி, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளுக்காக போராடுபவர் மற்றும் இளைஞர்களுக்கான தூதராகவும் செயல்படுகிறார்.

ஊக்கமூட்டும் பேச்சாளராக திகழும் அவர் நடிகையாகவும், மாடலாகவும் பணிபுரிகிறார்.

இந்திய ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு போதுமான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.

10. மிதாலி ராஜ்

மிதாலி ராஜ்படத்தின் காப்புரிமைMITHALI RAJ FB PAGE Image captionமிதாலி ராஜ்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணித் தலைவியான 34 வயது மிதாலி ராஜ், இந்த ஆண்டு 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய விளையாட்டு வீராங்கனை.

"நான் கனவு காண்பேன், கடுமையாக உழைப்பேன். எனக்கு திருப்தி ஏற்படும்வரையில் உழைத்துக் கொண்டேயிருப்பேன்" என்கிறார் மிதால் ராஜ்.

''100 பெண்கள்'' தொடர் எதைப் பற்றியது?

உலகம் முழுதும் பெண்களை பாதிக்கும் பிரச்சனைகளை பற்றி விவாதிக்கும் ''100 பெண்கள்'' இந்த ஆண்டு தொடரில், மாற்றம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் பெண்களுக்கான இச்சிறப்புத் தொடரில் இந்த ஏற்றத்தாழ்வுகளை, சமத்துவமின்மையை சமாளிக்க புதுமையான மாற்றங்களை, யோசனைகளை பெண்களிடம் கேட்கிறோம்.

''100 பெண்கள்'' சிறப்புத் தொடரின் ஐந்தாவது ஆண்டான இந்த ஆண்டு, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தி இருக்கிறோம்.

அவை:

1. கண்ணுக்கு தெரியாத தடைகள் (glass ceiling),

2. பெண்களுக்கு கல்வியின்மை (female illiteracy),

3. பொது இடங்களில் துன்புறுத்தல் (street harassment),

4. விளையாட்டுத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம் (sexism in sport).

http://www.bbc.com/tamil/india-41709509

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7தூலிகா கிரண்

ஆசிரியராக பணிபுரியும் 47 வயதான தூலிகா கிரண், சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

கடந்த எட்டாண்டுகளாக டெல்லி திஹார் ஜெயிலில் குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் அவர் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்தவர்.

"உங்களை நேசிப்பவர்களை வெறுக்காதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஏமாற்றாதீர்கள்" என்கிறார் தூலிகா கிரண்.

 

உங்களை நேசிப்பவர்களை வெறுக்காதீர்கள்.உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை ஏமாற்றாதிர்கள்.  தூலிகா கிரணை கண்டுபிடித்துக் கொடுங்கள்....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

ஆணாதிக்க ஆடுகளத்தில் சாதிக்க முயலும் பெண்கள்

பிரேசிலில் பெண்கள் கால்பந்து விளையாட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்றும்கூட ஆடுகளத்தில் சிறுமிகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பிபிசியின் நூறு பெண்கள் தொடரின் ஒருபகுதியாக, கால்பந்தாட்டத்தை காதலிக்கும் இரு இளம்பெண்களிடம் பேசியது பிபிசி.

Link to comment
Share on other sites

100 பெண்கள்: அறிவியல் உலகின் தலைசிறந்த ஏழு பெண் கண்டுபிடிப்பாளர்கள்

தலைசிறந்த ஏழு பெண் கண்டுபிடிப்பாளர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரிட்டனில் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு பிரபலமான பெண் விஞ்ஞானிகள் பற்றி தெரியாது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. பிபிசி 100 பெண்கள் தொடர், பெண் விஞ்ஞானிகள் பற்றி மக்களுக்கு தெரிய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு யூகோவ் (YouGov) என்ற ஆய்வில் சுமார் 3,000 பேர் கலந்து கொண்டார்கள். பிரிட்டனை சேர்ந்த ‘சையின்ஸ்கிர்ல்‘ ('ScienceGrrl') என்ற அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது.

வெறும் 47% மக்கள் மட்டுமே (அதிலும் ஒரேயொரு) பெண் விஞ்ஞானியின் பெயரை தெரிந்து வைத்திருந்ததாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

அதிலும் பெரும்பான்மையினருக்கு மேரி கியூரியை மட்டுமே தெரிந்திருந்தது. அனைவரும் ஆண் விஞ்ஞானிகளின் பெயர்களை தெரிந்து வைத்திருந்தனர்.

நவம்பர் ஏழாம் தேதி மேரி கியூரியின் 150வது பிறந்தநாள். அப்படியென்றால், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக விஞ்ஞானத்தில் மிகவும் பிரபலமான பெண் என்ற பெருமைக்கு மேரி கியூரி மட்டும்தான் உரியவரா என்ன?

அறிவியல் துறையில் பெண்களின் பங்கு அதிகம் இல்லையா? இந்த கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் நிதர்சனம் அப்படியல்ல.

பல பெண் விஞ்ஞானிகள் அறிவியல் துறைக்கு தங்கள் பங்களிப்பை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். உலகில் பல அதிசயங்கள் இருந்தாலும், ஏழு அதிசயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது போன்று முக்கியமான ஏழு பெண் விஞ்ஞானிகளை பற்றித் தெரிந்துக்கொள்வோம்.

மேரி கியூரி: நோபல் பரிசு பெற்ற முதல் அறிவியல் மங்கை

கதிரியக்கம் தொடர்பான மேரி கியூரியின் கண்டுபிடிப்புகள் அவரை சர்வதேச அளவில் பிரபலமாக்கியது. இயற்பியல் மற்றும் வேதியியல் என இருவேறு துறைகளுக்காக நோபல் பரிசை பெற்ற முதல் விஞ்ஞானி மேரி கியூரி.

1898 ஜூலை மாதத்தில் மேரியும் அவரது கணவர் பியரி கியூரியும் புதிய தனிமம் ஒன்றை கண்டுபிடித்தார்கள். தாய்நாடு போலந்தை பெருமைப்படுத்தும் விதமாக அந்த தனிமத்திற்கு 'பொலோனியம்' என்று பெயரிட்டார் மேரி. அதே ஆண்டில் இன்னொரு தனிமத்தை கண்டுபிடித்த கியூரி தம்பதிகள் அதற்கு ரேடியம் என பெயரிட்டனர்.

1903ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு, மேரி கியூரி, பியரி கியூரி, ஹென்றி பெக்குரேல் என மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. எட்டாண்டுகளுக்கு பிறகு மேரி கியூரிக்கு வேதியியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தலைசிறந்த ஏழு பெண் கண்டுபிடிப்பாளர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரோநிஸ்லாவா - வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி தம்பதிகளின் கடைசி மகளாக 1867ஆம் ஆண்டு மேரி பிறந்தார். போலந்தில் பிரபலமான ஆசிரியர்களாக திகழ்ந்த பெற்றோரின் ஐந்து குழந்தைகளில் கடைக்குட்டியான மேரி, முறையான கல்வி கற்பதற்காக சிறு வயதிலேயே பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டவர்!

இயற்பியலிலும், கணிதத்திலும் முதுநிலை பட்டங்களை பெற்றவர் மேரி. 1906ஆம் ஆண்டு மேரியின் கணவர் பியரி கியூரி ஒரு விபத்தில் இறந்தார்.

சோர்போன் பல்கலைகழகத்தில் பேராசியராக பணிபுரிந்த கணவரின் வேலையை மேரி கியூரி தொடர்ந்தார். அந்த பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியர் என்ற பெருமையையும் பெற்றார் அவர்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக கதிரியக்க ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த மேரி கியூரி, கதிரியக்க வெளிப்பாடுகளின் பாதிப்புகளுக்கு உள்ளானார். அதனால் லுகோமியாவால் (இரத்தப் புற்றுநோய்) பாதிக்கப்பட்ட மேரி கியூரி 1934 ஜூலை நான்காம் தேதியன்று காலமானார்.

பெக்கி விட்சன்: சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் பெண் அறிவியல் அதிகாரிபடத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTNASA Image captionபெக்கி விட்சன்: சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் பெண் அறிவியல் அதிகாரி

பெக்கி விட்சன்: சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் அதிகாரி

பெக்கி விட்சன் உயர்நிலைப் பள்ளியின் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தபோது, நாசா அதன் முதல் பெண் விண்வெளி வீராங்கனைகளை தேர்ந்தெடுத்தது. நிலவில் தரையிறங்கும் அவருடைய கனவு நனவானது. பெக்கி விட்சனும் ஒரு விண்வெளி வீராங்கனை!

லோவாவில் ஒரு கிராமப்புற விவசாய குடும்பத்தை சேர்ந்த பெக்கிக்கு விண்வெளி வீராங்கனையாக என்ன செய்யவேண்டும் என்ற விவரம்கூட தெரியாது. ஆனால், உயிரியல் மற்றும் வேதியியல் துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தால் பி.எச்.டி படித்தார்.

விஞ்ஞானிகளில் சிலர் மட்டுமே விண்வெளி வீரர்களாக ஆகமுடிகிறது. அதிலும் பலர் ராணுவப் பின்னணியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த சூழ்நிலையில் 1996 ஆம் ஆண்டில் பெக்கி விண்வெளி வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2002 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேற்கொண்ட பெக்கிதான் ISS இன் (சர்வதேச விண்வெளி நிலையம்) முதல் அறிவியல் அதிகாரி என்று அறியப்படுகிறார். ஸ்டார் ட்ரெக்கின், ஸ்போக்குடன் இந்த பெருமையை பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறார் பெக்கி.

ஒரு விஞ்ஞானியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் வேறு எங்கும் இல்லாத அளவு தனிப்பட்ட சிறந்த ஆராய்ச்சி சூழல் கிடைப்பதாக கூறுகிறார் பெக்கி.

விண்வெளி நிலையத்தில் பயிர்களை வளர்க்கும் பரிசோதனை முயற்சிகளிலும், திரவ இயக்கவியல் மூலம் புற்றுநோய்க்கு சாத்தியமான சிகிச்சைகள் பற்றிய ஆய்வுகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

"விண்வெளியில் நாங்கள் மேற்கொள்ளும் பன்முகத்தன்மை கொண்ட ஆராய்ச்சிகள் எனக்கு மிகவும் பிடித்தமானது. தொலைதூர இடங்களுக்கு செல்லும் நமது முயற்சியில், எதிர்காலத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்"

"நமது சூரிய மண்டலத்திலும், அதற்கும் அப்பாலும்..." என்று 100 பெண்கள் தொடருக்காக பிபிசியிடம் பேசிய பெக்கி விட்சன் கூறுகிறார்.

மேரி தர்ப்: கடல் தளத்திற்கு வரைபடம் உருவாக்கியவர்

1953 இல் அட்லாண்டிக் கடலின் அடித்தளத்தின் வரைபடத்தை உருவாக்கிய முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமையை பெற்றவர் மேரி தர்ப்.

புவியியலாளரும், கடலியல் வரைபடக் கலைஞருமான மேரி தர்ப், கண்டத்தட்டு இயக்கவியலில் (plate tectonics) சர்ச்சைக்குரிய கோட்பாட்டை வெற்றிகரமாக நிரூபித்தார். தொடக்கத்தில், அவரது கண்டுபிடிப்பை ஒரு "பெண்ணின் பேச்சு" என்று நிராகரித்தார் அவருடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட புரூஸ் ஹீஸென்.

ஆராய்ச்சிக் கப்பல்களில் பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால் வேறுவழியில்லாமல், தனது இணை ஆராய்ச்சியாளர் ஹீஸென் அளித்த தரவுகளின் அடிப்படையில்தான் தனது முதல் வரைபடத்தை உருவாக்கினார் தர்ப்.

இந்தத் துறையில் அற்புதமான, முன்மாதிரியான பங்களிப்பை தர்ப் வழங்கியிருந்தாலும், அவரது பெயர் பிரபலமடையவில்லை. தர்ப்புக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும், மேரியுடன் இணைந்து ஆராய்ச்சி செய்த ஹீஸெனுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது.

இதுபோன்ற பாகுபாடான சூழ்நிலையில்தான் மேரி தர்ப் பணியாற்றினாலும், அதற்காக வருத்தமோ சீற்றமோ கொள்ளவில்லை அவர். அதற்கு காரணம் தனது பணியின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்த்திருந்தார்.

"எதையும் ஒருமுறை மட்டுமே செய்ய முடியும். அதைத்தவிர வேறு எதையுமே நீங்கள் கண்டுபிடித்துவிட முடியாது, குறைந்தபட்சம் இந்த கிரகத்தில் மட்டுமாவது."

வாண்டா டயஸ்-மெர்சிட்: வானியலை அணுகக்கூடியதாக்கியவர்

பியூரெடோ ரிகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவியாக இருந்த வானவியல் ஆராய்ச்சியாளர் வாண்டா டயஸ்-மெர்சிட்டின் கண்களில் புள்ளிகள் தோன்றத் தொடங்கியது.

நீரிழிவு ரெட்டினோபதி நோயினால், தான் பார்வையை விரைவிலேயே இழக்க நேரிடும் என்று தெரிந்துகொண்ட வாண்டா, தான் தேர்ந்தெடுத்த பணியை, விட்டுவிடக்கூடாது என்று தீர்மானித்தார்.

தரவு புலனுணர்வு (Data sonification) பற்றிய நாசாவின் ஒரு பயிற்சியில் கலந்துக் கொண்ட வாண்டாவுக்கு அதுவொரு அரிய வாய்ப்பாக இருந்தது. இந்த தரவு புலனுணர்வு, நட்சத்திரங்களில் இருந்து வரும் செயற்கைக்கோள் தகவலை மொழிபெயர்த்தது.

இது, காட்சியை வரைபடங்களுக்கு பதிலாக, ஒலி அலைகளாகப் உருவாக்கும். இது வானியலாளர்களால் பெரிதும் நம்பப்படுவது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மென்பொருளை மேலும் மேம்படுத்தும் முயற்சிகளில் வாண்டா டயஸ்-மெர்சிட் ஈடுபட்டார். இதனால் வானியல் அறிஞர்களுக்கு மிகவும் துல்லியமான தரவுகள் கிடைத்தன. இதனால் முன்னர் வரம்புக்கு உட்பட்டிருந்த இந்த துறையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு பல ஆராய்ச்சியாளர்களுக்கு உத்வேகம் கிடைத்தது.

தற்போது, தென்னாப்பிரிக்க வானவியல் அபிவிருத்தி அலுவலகத்தில் (South African Office of Astronomy for Development) பணிபுரியும் வாண்டே, பார்வையற்ற மாணவர்களுக்கு, வானியல் உலகத்திற்கான புதிய பாதையை காட்டுகிறார்.

"நான் மிகவும் விரும்பும் வானியல் துறையில் எந்தவொரு பாகுபாடும் இருக்க்க்கூடாது என்று விரும்புகிறேன்" என்று சொல்கிறார் வாண்டா டயஸ்-மெர்சிட்டின்.

பிபிசியின் 100 பெண்கள் தொடருக்காக பேசிய அவர், "தங்கள் திறமைகளை வெளிப்படுத்த மக்களுக்கு சம வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று சொல்கிறார்.

குவாரிஷா அப்துல் கரீம்: எச்.ஐ.வி / எயிட்ஸ் தடுப்பில் திருப்புமுனை ஏற்படுத்தியவர்

தென்னாப்ரிகாவில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் எப்படி பரவுகிறது மற்றும் பெண்கள் மீது அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்று 25 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் தொற்றுநோய் மற்றும் நோய் தடுப்பு நிபுணரான குவாரிஷா அப்துல் கரீம்.

2013ஆம் ஆண்டில், குவாரிஷாவின் மகத்தான பங்களிப்புக்காக நாட்டின் உயரிய விருதான 'Order of Mapungubwe' விருது வழங்கி சிறப்பித்தது தென்னாப்ரிக்க அரசு.

எச்.ஐ.வி தடுப்பு சோதனைகளில், தென்னாப்ரிகாவின் அனைத்து சமூகத்தை சேர்ந்த பெண்களுடன் இணைந்து மிகவும் கடுமையான பங்கு பணியாற்றியிருக்கிறார் குவாரிஷா.

தற்போது தென்னாப்ரிக்க எய்ட்ஸ் ஆராய்ச்சி திட்டத்தின் மையமான கேப்ரிசாவில் (CAPRISA, Centre for the Aids Programme of Research in South Africa)வில் அறிவியல் துறையில் இணை இயக்குனராக பணிபுரியும் குவாரிஷா அப்துல் கரீம், ஐ.நா. முகமைகளுக்கு எச்.ஐ.வி. ஆலோசகராகவும் பங்களித்து வருகிறார்.

சோயோன் யீ: தென் கொரியாவின் முதல் விண்வெளி வீராங்கனைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசோயோன் யீ: தென் கொரியாவின் முதல் விண்வெளி வீராங்கனை

சோயோன் யீ: தென் கொரியாவின் முதல் விண்வெளி வீராங்கனை

சோயோன் யீ, 2008ஆம் ஆண்டில் தென் கொரியாவின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர். இதற்கான கடுமையான போட்டியில் சோயோன் யீ 36,000 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட துறையில் முதல் பெண் என்ற இடத்தை பெறுவது கடினமானதே" என்கிறார் யீ. தனது வெற்றி, மேலும் பல பெண்கள் அறிவியல் துறையில் நுழைவதற்கான ஊக்கத்தையும், உத்வேகத்தையும் தரும் என்று அவர் நம்புகிறார்.

விண்வெளியில் இருந்து பூமியைப் பார்த்த யீ, வாழ்க்கையில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளையும், நமது கிரகத்தின் "அற்புதமான பரிசையும்" நினைத்து பரவசப்பட்டார்.

ரஜா செர்காவ் எல் மோர்ஸ்லி: ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பில் முக்கியபங்களித்தவர்

மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதில் விருப்பம் கொண்ட ரஜா செர்காவ் எல் மோர்ஸ்லி, மேரி கியூரின் சாதனைகளால் கவரப்பட்டு அணு இயற்பியலை ஆர்வத்துடன் பயின்றார்.

விஞ்ஞானத்தை தனது வாழ்க்கையில் முதன்மையானதாக மாற்ற அவர் பல தடைகளை கடக்க வேண்டியிருந்தது.

"பிரான்சிற்கு, கிரேனொபில்லுக்கு சென்று பட்டப்படிப்பு பயில்வதற்கு, என் தந்தையிடம் அனுமதி பெறுவது முதல் சவாலாக இருந்தது" என்று ரஜா கூறுகிறார்.

"அந்த காலகட்டத்தில், மொராக்கோ சமுதாயம் பழமைவாதத்தில் ஊறிப்போயிருந்தது, பெரும்பாலான பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்வரை வீட்டிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை."

ஹிக்ஸ் போஸன் (Higgs Boson) என்பது நிறையுடைய ஓர் அணுத் துகள் ஆகும். இதை கடவுளின் துகள் (God Particle) என்றும் குறிப்பிடுகின்றனர். அணுவின் கட்டமைப்புக்கு அடிநிலைத் தோற்றுப்பொருளாக ஹிக்ஸ் போஸன் இருக்கக்கூடும் என்பது விஞ்ஞானிகளின் ஆழமான நம்பிக்கை.

இந்த கண்டுப்பிடிப்பில் பங்களித்ததற்காக ரஜாவுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன.

மொராக்கோவில் மருத்துவ இயற்பியலில் முதுகலை பட்டப் படிப்பை உருவாக்கியதில் ரஜா செர்காவ் எல் மோர்ஸ்லியின் பங்கு மகத்தானது.

http://www.bbc.com/tamil/global-41943209

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.