Jump to content

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 9 இலங்கை வீரர்கள்


Recommended Posts

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 9 இலங்கை வீரர்கள்
cr1.jpg

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 9 இலங்கை வீரர்கள்

TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

ஐந்தாவது தடவையாக நடைபெறவிருக்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில், இலங்கையிலிருந்து 9 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குமார் சங்கக்கார, சீக்குகே பிரசன்ன, ஷெஹான் ஜயசூரிய, திஸர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, சதுரங்க டி சில்வா, வனிந்து ஹசரங்க டி சில்வா, தசுன் சானக்க மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் இம்முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ளனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் நடத்தப்படுகின்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரை மிர்பூர் மற்றும் சிட்டகொங் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில் டாக்கா டைனமைட்ஸ், ராங்பூர் ரைடர்ஸ், கொமிலா விக்டோரியன்ஸ், சிட்டகொங் வைகிங்ஸ், சில்லெட் சிக்ஸ்செர்ஸ், ராஜ்ஷாஹி கிங்ஸ், குல்னா டைடன்ஸ் ஆகிய 7 அணிகள் பங்குபற்றவுள்ளன.

இதில் டாக்கா டைனமைட்ஸ் அணி 3 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதுடன், டாக்கா கிளெடியேட்டர்ஸ் 2 தடவைகளும், கொமிலா விக்டோரியன்ஸ் ஒரு தடவையும் இத்தொடரில் சம்பியனாகத் தெரிவாகியது.

இந்நிலையில், A முதல் F வரையிலான குழுக்களாகப் பிரிக்கப்பட்ட வீரர்களுக்கான ஏலம் 70 ஆயிரம் அமெரிக்க டொலரிலிருந்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரை இடம்பெற்றது.

112 உள்ளூர் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் பங்கெடுத்திருந்த வீரர்கள் ஏலம் இன்று (16) டாக்காவில் இடம்பெற்றது. இம்முறை ஏலத்தில் இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் சார்பாக வீரர்கள் இடம்பெற்றிருந்த போதிலும், இங்கிலாந்திலிருந்து அதிகளவான வீரர்கள் (62 வீரர்கள்) ஏலத்தில் போட்டியிட்டதுடன், இலங்கையிலிருந்து 28 வீரர்களும், பாகிஸ்தானிலிருந்து 46 வீரர்களும் ஏலத்தில் இடம்பெற்றனர்.

இதன் முதல் சுற்றில் ஒவ்வொரு அணிகளுக்கும் 7 உள்ளூர் வீரர்களையும் 2 வெளிநாட்டு வீரர்களையும் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி A பிரிவில் இடம்பெற்றிருந்த ஒரேயொரு வீரரான முஷ்தபிசூர் ரஹ்மானை 60 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு ராஜ்ஷாஹி கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.

சங்காவின் அணியிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்

sangakkara

குமார் சங்கக்கார அங்கம் வகிக்கும் நடப்புச் சம்பியனான டாக்கா டைனமைட்ஸ் அணியில் விளையாடுவதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான, நிரோஷன் திக்வெல்ல மற்றும் சகலதுறை ஆட்டக்காரரான அசேல குணரத்ன ஆகியோர் இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர். நிரோஷன் திக்வெல்ல தனிப்பட்ட காரணங்களுக்காகவும், அசேல குணரத்ன உபாதை காரணமாகவும் விலகியுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும், சகீப் அல் ஹசன் தலைமையிலான டாக்கா டைனமைட்ஸ் அணியில் சங்கக்காரவுடன், சஹீட் அப்ரிடி, ஷேன் வொட்சன், சுனீல் நரேன், மொஹமட் அமீர், எவின் லுவிஸ் மற்றும் ரோவ்மன் பவல் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹேலவின் அணியில் இரு இலங்கை வீரர்கள்

Shehan Jayasuriya

2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு சர்வதேச அரங்கிலிருந்து விடைபெற்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ள குல்னா டைடன்ஸ் அணியில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களான சீக்குகே பிரசன்ன மற்றும் ஷெஹான் ஜயசூரிய ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.seekuge prasanna

27 வயதான சீக்குகே பிரசன்ன, முன்னதாக நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர்களில் பரிசால் புல்ஸ் மற்றும் டாக்கா டைனமைட்ஸ் ஆகிய அணிகளில் விளையாடியிருந்ததுடன், இம்முறை மஹேலவின் அணியில் விளையாடவுள்ளார். அத்துடன் இலங்கை அணியின் மற்றுமொரு சகலதுறை வீரரான 26 வயதுடைய ஷெஹான் ஜயசூரிய, கடந்த வருடம் சிட்டகொங் வைகிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்த நிலையில், தற்போது குல்னா டைடன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

மஹ்முதுல்லாவின் தலைமையிலான இவ்வணியில் பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட், மேற்கிந்திய தீவுகள் அணியின் டி20 அணித் தலைவர் சார்லஸ் பரத்வெய்ட், ஜுனைத் கான், சதாப் கான், டேவிட் மாலன் மற்றும் கைல் அபோட் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராங்பூர் அணியில் குசல் மற்றும் திசர

kusal janith

மஷ்ரபி முர்தசா தலைமையிலான ராங்பூர் ரைடர்ஸ் அணியில் இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா மற்றும் சகலதுறை வீரரான திசர பெரேரா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் நிறைவடைந்த சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின்போது தசைப்பிடிப்புக்கு உள்ளாகி குறித்த போட்டித் தொடரிலிருந்து வெளியேறி தற்போது ஓய்விலிருக்கும் குசல் பெரேரா, இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என்றாலும், அவ்வணியுடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக ஐ.பி.எல் தொடரில் ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட குசல் பெரேரா, தற்போது BPL தொடரில் முதற்தடவையாக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.thisara

இதேவேளை, உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெறுகின்ற டி20 போட்டிகளில் விளையாடி வருகின்ற திஸர பெரேரா, முதற் தடவையாக பங்களாதேஷ் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடவுள்ளார்.

இதேவேளை, கடந்த வருடத்தைப் போல இவ்வருடமும் ராங்பூர் ரைடர்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், சாமுவேல் பத்ரி, ஜொன்சன் சார்லஸ் மற்றும் இங்கிலாந்தின் ரவி போபரா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிட்டகொங் அணிக்கு ஜீவன் மெண்டிஸ் ஒப்பந்தம்

இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான ஜீவன் மெண்டிஸ், சிட்டகொங் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Jeevan Mendis

இப்பருவகாலத்துக்காக இங்கிலாந்தின் டேர்பிஷயார் அணிக்காக தற்போது விளையாடி வருகின்ற 34 வயதாக ஜீவன் மெண்டிஸ், உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற டி20 லீக் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். இதில் டெல்லி டெயார்டெவில்ஸ், பார்படோஸ் ட்ரினிடாட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் ஆகிய அணிக்களுக்காக விளையாடியுள்ள இலங்கை அணியின் அனுபவமிக்க வீரர்களில் ஒருவராகவும் அவர் விளங்குகிறார்.

எனினும், எதிர்வரும் நவம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் முதற் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இடம்பெற்றுள்ள ஸ்டெலன்போஸ்ச் மொனாச் அணிக்கு ஜீவன் மெண்டிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அவர் பங்களாதேஷ் பிரிமீயர் லீக் தொடரில் பங்கேற்பாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

சில்லெட் சிக்ஸர்ஸ் அணியில் இடம்பெற்ற டி சில்வா சகோதரர்கள்

wanidhu hasaranga

இலங்கை அணியில் அண்மைக்காலமாக சகலதுறை வீரர்களாக சிறப்பாக விளையாடி வருகின்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதுரங்க டி சில்வா மற்றும் வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகியோர் இவ்வருடம் முதல் புதிதாக இணைந்துகொண்டுள்ள சில்லெட் சிக்ஸர்ஸ் அணிக்காக முதற் தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

27 வயதான சதுரங்க டி சில்வா, கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் பிரிமீயர் லீக் தொடரில் குல்னா டைடன்ஸ் அணிக்காக விளையாடியிருந்த போதிலும், இம்முறை சிட்டகொங் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

chathuranga de silvaஅத்துடன் அவரது சகோதரரான 20 வயதுடைய வனிந்து ஹசரங்க, கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியிருந்தார். எனினும் இதுவரை எந்தவொரு டி20 போட்டியிலும் விளையாடாத அவர், முதற் தடவையாக வெளிநாட்டு அணியொன்றுக்காக விளையாடவுள்ளார்.

dasun chanaka

இந்நிலையில், இலங்கை அணியின் மற்றுமொரு அதிரடி ஆட்டக்காரராக அண்மைக்காலமாக ஜொலித்துக் கொண்டிருக்கின்ற 26 வயதான தசுன் சானக்கவும் சில்லெட் சிக்ஸர்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், இதுவரை 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பாதிக்கபட்ட அடக்கி ஒடுக்கபட்ட முஸ்லிம் மதத்தை சேர்ந்த நல்ல உள்ளம் கொண்டோரும் இருக்கின்றனர். இஸ்ரேலின் மீதான முல்லாக்களின் தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் வெளிநாட்டில் இருக்கின்றனர் அவர்களை விடுவோம் ஈரானிலும் எல்லோ இந்த தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் இருக்கின்றனர் .ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இலங்கை  தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு முல்லாக்களின் இந்த தாக்குதல் இஸ்ரேலின் அழிவு ஆரம்பம் முஸ்லிம்களின் வெற்றி  என்று கற்பனை செய்து வெற்றி கொண்டாட்டம் தானே
    • தாய்வானில் கூட நான் சீனாவை குறை சொல்ல மாட்டேன். நாடு முழுவதும் மாவோவின் கீழ் வீழ - எஞ்சிய முதாளிதுவ தீவு அது. அதை கேட்பது ஒரு வகையில் நியாயமே. திபெத், உகிர் அட்டூழியங்கள் மிக மோசமனாவை. ஆனால் உலக அளவில் ? ஆதிக்க விரிப்பு, வர்த்த ஆளுமை - எல்லாரும் செய்ய முனைவதுதானே? அது பொருட்டே இல்லை. விலை ஒன்றே கருதுபொருள்.
    • அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.