Jump to content

20 ஆவது திருத்தமும் கிழக்கு மாகாண சபையும்


Recommended Posts

20 ஆவது திருத்தமும் கிழக்கு மாகாண சபையும்

 

வாக்­கெ­டுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் 10 பேர் முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் 7 பேர் ஐக்­கிய தேசியக் கட்சி 3 உறுப்­பினர்கள், ஐ.ம.சு.கூ (01), சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி (02), எதிர்க்­கட்சி உறுப்­பினர் (01) ஆக 24 பேர் ஆத­ர­வா­கவும் எதிர் தரப்பைச் சேர்ந்­த­வர்கள் எண்மர் பிரே­ர­ணைக்கு எதிர்த்து வாக்­க­ளித்­தனர். 37 பேர் கொண்ட சபையில் தவி­சாளர், தவிர ஏனைய நால்வர் சபைக்கு வருகை தர­வில்லை.

சட்­டமா அதி­ப­ரினால் உயர் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் திருத்­த­மா­னது ஏற்­றுக்­கொள்­ளப்­படும் பட்­சத்தில் மாகாண சபைக்­கு­ரிய அதி­கா­ரங்­களை பறிக்­காத வகையில், 20 ஆவது சட்டத் திருத்தம் அமை­யு­மாக இருந்தால் கிழக்கு மாகாண சபை அத்­தி­ருத்­தத்­துக்கு ஆத­ரவு நல்­கு­கின்றோம் என்ற அடிப்­ப­டையில் கிழக்கு மாகாண சபையில் 20 ஆவது திருத்­த­மா­னது கடந்த திங்­கட்­கி­ழமை 16 மேல­திக வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­டது.

கிழக்கு மாகா­ண ­ச­பையின் 84 ஆவது விசேட அமர்வு கடந்த திங்­கட்­கி­ழமை 20 ஆவது திருத்தம் தொடர்­பாக அங்­கீ­கா­ரத்தை பெறும் வகை­யி­லேயே கூட்­டப்­பட்­டி­ருந்­தது. 83 ஆவது அமர்வில் (07.09.2017) பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்­க­ளுக்கு மத்­தியில் 20 ஆவது திருத்த பிரே­ர­ணையை முத­ல­மைச்சர் நஸீர் அஹமட் சமர்ப்பிப் பார் என எதிர்­பார்க்­கப்­பட்­ட­போதும் அன்­றைய தினம் காலையில் இத்­தி­ருத்தம் தொட ர்­பான சர்ச்­சைகள் நீடித்­தி­ருந்த போதிலும் மாலையில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­மென எதிர்­பா ர்க்­கப்­பட்­ட­போதும் சபை இது தொடர்பில் 11.09.2017 திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.  

20 ஆவது திருத்த பிரே­ரணை தொடர்பில் அன்­றைய தினம் ஆளும் தரப்­பி­ன­ரி­டையே ஒரு ஒரு­மித்த உடன்­பாட்­டுக்கு வர­மு­டி­யாத நிலை­யி­லேயே சபை ஒத்­தி­வைக்­கப் பட்­டது என்­பது தெளி­வா­கவே தெரிந்தது. உதா­ர­ண­மாக கிழக்கு மாகா­ணத்தின் ஆளும் தரப்­பி­ன­ரான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய கட்­சி க­ளுக்­கி­டையே நேரொத்த உடன்­பாடு இருக் க­வில்­லை­யென்ற செய்தி சிறி­ய­ளவு கசி­ய ­தொ­டங்­கி­யது என்­பது ஓர­ளவு உண்­மையே.  இன்­றைய விசேட அமர்வில் பிரதி தவி­சா­ள­ரான நி.இந்­தி­ர­குமார் உத்­தேச அர­சியல் அமைப்பு 20 ஆவது திருத்­தத்தை கைவிட மத்­திய அரசை கோரல், என்ற தனி­நபர் பிரே­ர­ணை­யையும் சபையில் கொண்­டு­வர முன்­மொ­ழிந்­தி­ருந்த போதும் அது விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வில்லை.  

இந்­நி­லை­யி­லேயே சபை 11.09.2017 ஆம் திக­திக்கு தவி­சா­ளரால் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. இன்­றைய சபையில் 20 ஆவது திருத்தப் பிரே­ர­ணை­யா­னது சபையில் விவா­தத்­துக்கு விடப்­பட்டு, வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­ட­போது ஆத­ர­வாக 24 வாக்­கு­களும் எதி­ராக 8, வாக்­கு­களும் அளிக்­கப்­பட்டு, சட்­டமா அதி­பரின் திருத்தம் மேல்­நீ­தி­மன்றில் நிறை­வேற்­றப்­படும் பட்­சத்தில் திருத்­தத்­துக்கு உள்­ளாகும் பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கு­கி­றது என்ற வகையில், மாகாண சபையில் திருத்தம் நிறை­வேற்­றப்­பட்­டது.

இதன் மறு­பொருள் என்­ன­வாயின் சட்­டமா அதி­ப­ரினால் சமர்ப்­பிக்­கப்­படும் திருத்­த­மா­னது, மேல் நீதி­மன்­றினால் அங்­கீ­க­ரிக்­கப்­படும் என்ற உத்­த­ர­வா­தத்தின் அடிப்­ப­டை­யிலும் மாகாண சபையின் அதி­கா­ரங்­களை பாரா­ளு­மன்றம் பறித்­தெ­டுக்­காத வகையில் 20 ஆவது திருத்தம் கொண்­டு­வ­ரப்­ப­டு­மென்ற உத்­த­ர­வா­தத்தின் அடிப்­ப­டை­யிலும் மேற்­படி திருத்­தத்­துக்கு ஆத­ரவு அளிக்­கின்றோம் என்ற வகை­யி­லேயே கிழக்கு மாகாண சபையில் நம்­பிக்கை அடிப் ப­டை­யி­லான நிறை­வேற்றம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. 

கிழக்கு மாகாண சபையில் 20 ஆவது திருத்­த­மா­னது நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு முன்­ னுள்ள இழு­பறி நிலை­க­ளையும் சது­ராட் டங்­க­ளையும் தெரிந்து கொள்­வது நன்று. கடந்த 11 ஆம் திகதி (11.09.2017) இரண்டாம் முறையும் முத­ல­மைச்சர் அவர்­களால் பிரே­ரணைசமர்ப்­பிக்­கப்­பட தயார் நிலை­ பெற்­ற­ போது பெரும் வாக்­கு­வா­தங் கள் மற்றும் எதிர்க்­கட்­சி­யி­னரின் கூச்சல் குழப் பத்­துக்கு மத்­தியில் இதற்­கான வாக்­கெடுப்பு நடத்­தப்­பட்­டது.  

கிழக்கு மாகாண சபையில் 83 ஆவது அமர்வு (07.09.2017) இடம்­பெற்ற நாளில் இருந்த சூழ்­நி­லையே இன்றும் காணப்­பட்­டது. காலை 9.30 க்கு சபை கூடி­ய­போது, ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் பிர­சன்­ன­மா­கி யி­ருக்­க­வில்லை. கோர­மின்றி சபை ஒத்­தி­ வைக்­கப்­பட்­டது. அதேபோல் 11.30 மணிக்கு சபை கூடி­ய­போது, கோர­மி­ருக்­கவில்லை. மீண்டும் சபை ஒத்­தி­வைக்­கப்­ பட்டு பிற்­பகல் 1 மணிக்கு மூன்­றாவது தடவை கூடியே ஆளும் கட்­சியின் சபை பிர­சன்­னத்­துடன் 20 ஆவது சட்­ட ­தி­ருத் தத்­துக்­கான திட்ட வரைபு சமர்ப்­பிக்­கப்பட்டு வாக்­கெ­டுப்பு நடாத்­தப்­பட்­டது.  

வாக்­கெ­டுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் 10 பேர் முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் 7 பேர் ஐக்­கிய தேசியக் கட்சி 3 உறுப்­பினர் ஐ.ம.சு.கூ (01), சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி (02), எதிர்க்­கட்சி உறுப்­பினர் (01) ஆக 24 பேர் ஆத­ர­வா­கவும் எதிர் தரப்பைச் சேர்ந்­த­வர்கள் எண்மர் பிரே­ர­ணைக்கு எதிர்த்து வாக்­க­ளித்­தனர். 37 பேர் கொண்ட சபையில் தவி­சாளர், தவிர ஏனைய நால்வர் சபைக்கு வருகை தர­வில்லை.

இப்­பி­ரே­ரணை தொடர்பில் த.தே.கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­க­ளுக்­கிடையில் கருத்து முரண்­பாடு காணப்­பட்­டதாக பேசப்­ப­டு­கி­றது. அதன் கார­ண மா­கவே இறுதி வாக்­கெ­டுப்பில் பிரதிதவிசாளர் நி.இந்­தி­ர­குமார் கலந்து கொள்­ள­வில்­லை யென்று தெரிய வரு­கி­றது. 17.09.2017 நடை­பெற்ற த.தே.கூ. அமைப்பின் கட்சிக் கூட்­டத்தில் கல்வி அமைச்சர் சி.தண்­டா­யு­த­பாணி அவர்­களும் ஏனைய இரண்­டொரு உறுப்­பி­னர்­களும் இப்­பி­ரே­ரணை தொடர்பில் தங்கள் அதி­ருப்­தியை தெரி­வித்­துள்­ளனர்.  

இந்த அதி­ருப்­தியின் வெளிப்­பா­டா­கவே அவர் கருத்துத் தெரி­விக்­கையில்; இந்த 20 ஆவது திருத்தம் எமக்கு திருப்­தி­ய­ளிக்­க­வில்லை. ஏனெனில் இதி­லுள்ள அதி­கா­ரங்கள் மாகாண சபை­களில் உள்ள அதி­கா­ரங்கள் மீது ஆதிக்கம் செலுத்­து­வ­தா­கவே இருக்­கி­றன. குறிப்­பாக மாகாண சபை­களைக் கலைக்­கக்­கூ­டிய அதி­காரம் சகல மாகாண சபை­க­ளுக்கும் ஒரே நாளில் தேர் தல் நடத்­து­வ­தற்­கான தேர்­த­லுக்­கான திக­தியை நிர்­ண­யிக்கும் அதி­காரம் என்­ப­ன­வற்றை உள்­ள­டக்­கி­ய­தாக இத்­தி­ருத்தம் அமைந்­தி­ருக்­கி­றது. எனவே மாகாண சபை ­மீது பாரா­ளு­மன்றம் ஆதிக்கம் செலுத்தும் இச்­சட்­டத்தை நாங்கள் முதலில் ஆத­ரிக்­க­வில்லை. எம்மால் முன்­வைக்­கப்­பட்ட திருத்தங்கள் ஏற்­றுக்­கொள்­ள ப்­பட்டு, பாரா­ளு­மன்றம் மாகாண சபை அதி­காரத்தை கட்­டுப்­ப­டுத்­தாது என்று வெளி வந்­துள்­ளது. இந்த அடிப்­ப­டை­யிலே திருத்­தப்­பட்ட 20 ஆவது அர­சியல் யாப்­பினை அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்பில் நாம் சாத­க­மாக, வாக்­க­ளித்­தோ­மென்று தெரி­வித்­தி­ருந்தார்.

எனவே 20 ஆவது திருத்தம் தொடர்பில் த.தே.கூ அமைப்பின் அமைச்­சர்­க­ளுக்­கி­டை­யிலும் உறுப்­பி­னர்­க­ளுக்­கு­மி­டை­யிலும் ஆத­ரிப்­பது தொடர்பில் கருத்து முரண்­பா­டுகள், வாக்­கு ­வா­தங்கள் கடுந்­தன்மை, விமர்­சிப்­புகள் இருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இருந்த போதிலும் திருத்தச் சட்­ட­வாக்­கெ­டுப்பின் போது, 11 உறுப்­பி­னர்­களில் 10 பேர் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளனர்.

இதில் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டிய விடயம் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனின் அணியை சேர்ந்த உறுப்­பினர், துரை­ரெட் ணம் ரெலோ கட்­சியை சேர்ந்த, கோவிந்தம் கரு­ணா­கரம் (ஜனா) ஆகிய இரு­வரும் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தனர்.  வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்­ளாத த.தே.கூ அமைப்பின் உறுப்­பினர் நி.இந்­தி­ர­குமார் இவர் போரா­ளி­யாக இருந்து ஜன­நா­யக வழிக்குத் திரும்­பி­யவர், இருநாள் அமர்­வு­க ளுக்கு வருகை தந்­தி­ருந்த போதிலும் விவாதம் மற்றும் குறித்த பிரே­ரணை வாக் கெ­டுப்­புக்கு விடப்­பட்­ட­போது இவர் மாகாண சபை­யி­லுள்ள தனது அலு­வ­ல­கத் தில் அமர்ந்­தி­ருந்­த­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.  

இவ­ரிடம் நாங்கள் ஏன் வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­ள­வில்­லை­யென ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் வின­வி­ய­போது, அவர் அளித்த பதில் 20 ஆவது திருத்தம் திருத்­தப்­பட்­டமை தொடர்­பான அதி­கார பூர்­வ­மான அறிக்கை கிடைக்­கப்­பெ­றா­மலே அத்­தி­ ருத்தம் மேற்­கொள்­ளப்­பட்­டது எனக்­கூறி சபையில் திருத்­தத்தை முன்­வைத்­துள்­ளனர். அது­வு­மன்றி வட­மா­காண சபையின் தீர்­மா­னத்­துக்கு அமைய கிழக்கு மாகாண சபையைச் சேர்ந்த கூட்­ட­மைப்­பினர் ஒத்துப் போக வேண்­டு­மென்­பது எனது நிலைப்­பாடு, கிழக்கு மாகாண சபையில் இப்­ பி­ரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தற்கு அவ­சரம் காட்­டப்­பட்­டுள்­ளது. அது­வு­மன்றி மாகாண சபை­களின் அதி­கா­ரங்­களை பாரா­ ளு­மன்றம் கப­ளீ­கரம் செய்யும் மேற்­படி திருத்­தத்­துக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தென்­பது மக் கள் எமக்­க­ளித்த ஆணையை மீறும் செய­லாகும். 

அது­மட்­டு­மன்றி கிழக்கு மாகாண சபை உட்­பட்ட மூன்று மாகாண சபை­களின் ஆயுட்­காலம் இம்­மா­தத்­துடன் முடிவு பெறும் நிலையில் அதன் காலத்தை நீடித்து ஒரே­நாளில் நடாத்­து­வது என்­பது ஜன­நா­யக விரோத செய­லாகும். மக்­களே எங்கள் எஜ­மா­னார்கள், அற்ப சொற்ப நல­னுக்­காக மக்­களின் ஆணையை மீறிக் கொண்டு மீண்டும் அவர்­க­ளிடம் செல்­வது என்­பது மக்­க­ளுக்கு நாம் செய்யும் துரோகம் என்­ப­த­னா­லேயே எதிர்த்தும் வாக்­க­ளிக்­கா­மலும் கட்­சியின் கொள்­கைக்கும் ஊறு நினைக்­காமல் வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்­ளா மல் ஒதுங்கி கொண்டேன்" என அவர் தனது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தினார்.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஈபி. ஆர்.எல்.எப் தலை­வ­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் இப்­பி­ரே­ரணை தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்;20 ஆவது திருத்தம் திருத்­தத்தின் பின் ஏற்­றுக்­கொள்­வதும் ஆபத்­தா­னது என கூறியி­ருந்தார். அவரின் கருத்­துப்­படி ஏதா­வது ஒரு மாகா­ண­சபை உரிய காலத்­துக்கு முன்னர் கலைக்­கப்­பட்டால் மீதிக்­காலம் 18 மாதத்­துக்கு அதி­க­மாக இருந்தால் இடைத் தேர்தல் நடாத்­தப்­ப­டு­மென்று திருத்தம் கூறு­கி­றது. அவ்­வா­றா­ன­தொரு மீதிக்­கா­லத்­துக்கு எந்தக் கட்சி போட்­டி­யிட விரும்பும், எந்த நபர் போட்­டி­யிட முன்­வ­ருவார். இதன் செல­வு­களை யார் பொறுப்­பேற்­பார்கள். அது­வு­மன்றி 18 மாதத்­திற்கு குறை­வான கால­மாக இருந்தால் அம்­மா­கா­ண­சபை ஆளுநர் நிர்­வா­கத்தின் கீழ் கொண்­டு­வ­ரப்­படும். அவ்­வா­றா­ன­தொரு நிலைமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைக்கு ஏற்­பட்டால் ஆளுநர் ஆட்­சியின் கீழ் வட­கி­ழக்கு நிர்­வாக மற்றும் ஆட்சி முறைகள் முழு­வதும் சிங்­க­ள­ம­ய­மா­கி­விடும். இது ஆபத்­தான அறி­கு­றி­யென்­பதை தமிழ் தரப்­பினர் உணர்ந்து கொள்ள வேண்­டு­மென சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

இதே போன்றே கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் சிவ­நே­சத்­துரை சந்­தி­ ர­காந்தன் கிழக்கு மாகா­ண­ச­பையில் 20 ஆவது பிரே­ரணை நிறை­வேற்றம் தொடர்­பாக கருத்துத் தெரி­விக்­கையில் கிழக்கு மாகா­ ண­ச­பையின் முத­ல­மைச்­சரின் ஆசை வார்த்­தைக்கு அடி­ப­ணிந்து அவ­ச­ரப்­பட்டு கூட்­ட­மைப்­பினர் 20 ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ரவு நல்­கி­யுள்­ளனர் என விமர்­சித்­துள்ளார்.  

இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையைச் சேர்ந்த அனைத்து ஆத­ரவு உறுப்­பி­னர்­களும் திருத்­தத்தின் திருத்­தத்­திற்கு விருப்பம் தெரி­வித்தோம் என்ற கருத்­தையே கூறி­வ­ரு­கிறோம். இதன் மறு­த­லை­யான கருத்து என்­ன­வெனில், 20 ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ரவு தெரி­விக்­க­வில்லை. சட்­டமா அதி­ப­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட திருத்தம் உயர் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

சட்­டமா அதி­பரின் திருத்தம் நீதி­மன்­றினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு அது அமு­லுக்கு வரும் பட்­சத்­தி­லேயே மேற்­படி திருத்­தத்­திற்கு நாம் ஆத­ர­வ­ளிப்போம் என்­பது அவர்­களின் கருத்­தாக உள்­ளது. குறிப்­பிட்டு சொல்லப் போனால் உறுப்­பி­னர்­களின் கருத் தின் படி திருத்தம் வரும் என்ற நம்­பிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே அங்­கீ­க­ரித்­துள் ளோம் என்­பது அவர்கள் வாத­மாகும்.  

மேற்­படி திருத்தம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு முன்பு கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் பிர­தம மந்­தி­ரியின் காரி­யா­ல­யத்­தி­லி­ருந்து திருத்­தப்­பி­ரதி அனுப்பி வைக்­கப்­ப­ட்­டுள்­ளது. மாகாண சபை­களின் அதி­கா­ரங்­களை பாரா­ளு­மன்­றத்­தினால் கப­ளீ­கரம் செய்­யப்­ப­டாத வகையில் திருத்தம் கொண்­டுவ­ரப்­ப­ட­வுள்­ளது. உயர் நீதி­மன்றம் சட்­டமா அதி­பரின் திருத்­தத்தை ஏற்றுக் கொள்ளும் என்ற உத்­த­ர­வா­தத்தின் அடிப்­ப­டை­யி­லேயே சட­்ட­தி­ருத்­த­மா­னது கிழக்கு மாகாண சபையில் உத்­தே­ச­மாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது எனக் கூறப்­ப­டு­கின்­றது.

20 ஆவது சட்­டத்­தி­ருத்­த­மா­னது, அனை த்து மாகாண சபை­களின் தேர்­தல்­க­ளையும் ஒரே நாளில் நடத்­து­வ­தற்கான ஏற்­பா­டாக அமைந்­துள்­ளது என்பது யாவரும் அறிந்து கொண்டவிடயம் பிரே­ரணை பார­ளு­மன்றில் அங்­கீ­க­ரிக் ­கப்­ப­டு­மாயின் இந்த நிகழ்வு நடை­பெ­றலாம்.  இதே­வேளை திருத்­தத்தின் திருத்தம் என்ன கூறு­கின்­றது என்­பதை சுருக்­க­மாக பார்ப்­போ­மாயின், சில மாகாண சபை­க ளின் காலம் நீடிக்­கப்­படும். சில­மாகாண சபை­களில் காலம் சுருக்­கப்பட்டு 2018 ஆம் ஆண்டு அனைத்து மாகாண சபை க­ளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தும் ஏற்­பாட்டை இத்­தி­ருத்தம் கொண்­டி­ருக்­கி­றது. 

புதிய திருத்­தத்தின் படி அனைத்து மாகாண சபை­க­ளையும் கலைப்­ப­தற்­கு­ரிய திக­தியை தீர்­மா­னிக்கும் அதிகாரம் பாராளுமன்றுக்கு வழங்கப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கிறதே தவிர சாதாரண சட்டமொன்றை பாராளுமன்றில் கொண் டுவந்து கலைக்கும் அதிகாரம் பாராளு மன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே மாகாண சபைகளின் மூங்கணாங்கயிறு மத்திய அரசிடமே இருக்கப் போகிறது என் பதே புதிய திருத்தத்தின் தாற் பரிய மாகும்.  

எவ்வாறு இருந்த போதிலும் அரசா ங்கத்திற்கு ஆதரவு தரும் வகையில், மாகாண சபைகளில் 20 ஆவது திருத் தத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது என் பதற்கு உதாரணமாக மேல் மாகாண சபை யில் 45 வாக்குகளைப் பெற்று நிறைவேற் றப்பட்டுள்ளது. எதிராக 22 வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க் கிழமை (12.09.2017) சப்ரகமுவ மாகாண சபையில் பிரேரணைக்கு ஆதரவாக 29 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளி க்கப்பட்டுள்ளன. எது எவ்வாறு இருந்த போதிலும் பிரே ரணை தொடர்பில் வடகிழக்கு மாகாண சபைகளின் நிலைப்பாடு சாதகமாகவா அல்லது பாதகமாகவா எதிர்காலத்தி லிருக்கப் போகிறது என்பதே தொங்கி நிற்கும் கேள்வியாகும்.  கிழக்கு மாகாண சபையில் திருத்த பிரே ரணை தொடர்பில் உள் தன்மை முரண்பா டுகளும் அபிப்பிராய பேதங்களும் இருந்து ள்ளன என்பது மறுக்கப்பட முடியாதவை.  

சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் ரெலோ கட்சியினர் சட்ட மூலத்துக்கான திருத்தங்கள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டி யவை என கூறிவருகின்ற போதும் அவர் களின் கட்சிசார்ந்த உறுப்பினர்கள் ஒத்து ஊதியுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாக அமைந்துள்ளது.

திருமலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-16#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.