Jump to content

“எனது தந்தை தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவார்“ சதுரிக்கா சிறிசேன

Recommended Posts

“எனது தந்தை தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவார்“ சதுரிக்கா சிறிசேன

“எனது தந்தை தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவார்“ சதுரிக்கா சிறிசேன

தனது தந்தையும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பார் என சதுரிக்கா சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்துகொண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த சதுரிக்கா சிறிசேன ஊடகவியலாளர்களுக்கு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்,

இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் யுத்தத்தால் நிறைய பெண்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். உங்கள் தந்தை 2015ஆம் ஆண்டு முழு நாட்டிற்கும் ஜனாதிபதியானார், பெண் செயற்பாட்டாளர் என்ற வகையில், உங்கள் தந்தை அந்த பெண்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பார் என நம்புகின்றீர்களா? என எமது ஐ.பி.சி தமிழ் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலிளிக்கையில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

சதுரிக்கா சிறிசேன “அவர் அந்த மக்களுக்கு நியாயத்தை வழங்குவார் என நான் நினைக்கின்றேன். எனது தந்தை யாழ். மாவட்டத்திற்கே விஜயம் மேற்கொள்கின்றார். அந்த மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்றார். அவர்கள் இழப்புகள், பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினை வழங்குவார் என்பது எனது நம்பிக்கை. போதைப்பொருள் தொடர்பில் பேசுகின்றார். அது தொடர்பில் தெளிவுபடுத்தல்களை முன்னெடுக்கின்றார். ஆகவே தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம்கள் என இனம், நிறம் பாராது அவர் பணியாற்றுவார் என்பது எனது நம்பிக்கை“

https://news.ibctamil.com/ta/internal-affairs/My-father-will-give-justice-to-the-Tamil-people

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி அப்பாவிடம் ஞாபகப்படுத்தி விடுங்கள் சதுரிக்கா  எங்களின்ற ஆட்களை நம்பி பலன் இல்லை எங்களுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அடிக்கடி அப்பாவிடம் ஞாபகப்படுத்தி விடுங்கள் சதுரிக்கா  எங்களின்ற ஆட்களை நம்பி பலன் இல்லை எங்களுக்கு 

அப்பான்ற கஸ்டம் மகளுக்கு விளங்குமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியாயத்தை வழங்கக் கூடிய தந்தையாக இருந்திருந்தால் வந்து 100 நாட்களுக்குள்ளாகவே தமிழர் பிரச்சனையை கையில் எடுத்திருக்க வேண்டும்.

சாதாரண காணாமல் போனவர்களின் பிரச்சனையையே தீர்க்க முடியாதவர் எப்படி தமிழர் பிரச்சனையை தீர்க்க போகின்றார்?

Link to comment
Share on other sites

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அடிக்கடி அப்பாவிடம் ஞாபகப்படுத்தி விடுங்கள் சதுரிக்கா  எங்களின்ற ஆட்களை நம்பி பலன் இல்லை எங்களுக்கு 

நல்லாட்சியில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்: சம்பந்தன் நம்பிக்கை.

சதுரிக்காவும்.... 'நான் நினைக்கிறேன்,' 'நம்பிக்கை' என்றுதானே கூறுகிறார். அப்பா செய்வார் என்று உறுதியாகக் கூறவில்லையே...!:(

எங்கடை ஆட்களும் நம்பிக்கை என்றுதானே கூறுகிறார்கள். அதெப்படி  எங்கடை ஆட்கள்மேல் இல்லாத நம்பிக்கை சதுரிக்காமேல் வந்தது....!!:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியாயம் பிளக்கிறதை பொறவு பார்ப்போம்...

அய்யோ, அய்யோ.... எங்கப்பா நம்ம முனிவர்.....

கையும் ஓடேல்ல, காலும் ஓடேல்ல....

இது கலியாணம் கட்டாத இரண்டாவது மகளாமே.... அப்படியே ?

image_1505419601-a7d839599e.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

நியாயம் பிளக்கிறதை பொறவு பார்ப்போம்...

அய்யோ, அய்யோ.... எங்கப்பா நம்ம முனிவர்.....

கையும் ஓடேல்ல, காலும் ஓடேல்ல....

இது கலியாணம் கட்டாத இரண்டாவது மகளாமே.... அப்படியே ?

image_1505419601-a7d839599e.jpg

குப்பிற விழுந்த தனி இன்னும் எழும்ப வில்லையாம்:unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அப்பா....
ஜானதிபதி,   மைத்திரிபால சிறிசேன    யாழ்ப்பாணத்துக்கு அடிக்கடி வந்தாலும்,
கூத்தமைப்பு... பாராளுமன்ற உறுப்பினர்களின்,
26 வயது நிரம்பிய... பால்  குடி, பேபிகளின்  பிறந்தநாளுக்கு ....  "கேக்"  வெட்டவும்,
அங்கையன்...  வீடு  குடி புகுதலுக்கு போகவும் நேரம் காணாதே...... :unsure:

அடுத்த... தலை முறை அரசியலுக்கு tw_warning:, தயாராகி விட்டான் சிங்களவன். 
எங்கடை.... இளிச்ச வாய் கூட்டம்  தான்,  இணக்க அரசியல், இணைந்த அரசியல் என்று.....
எங்களுக்கு... காதிலை, பூ  சுத்திக் கொண்டு இருக்கிறாங்கள்.   tw_fearful: tw_cry:

Link to comment
Share on other sites

உங்கட அம்மே (அம்மா) தமிழாமே உங்க தாய் மொழி தமிழா அல்லது சிங்களமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

அடுத்த... தலை முறை அரசியலுக்கு tw_warning:, தயாராகி விட்டான் சிங்களவன். 
எங்கடை.... இளிச்ச வாய் கூட்டம்  தான்,  இணக்க அரசியல், இணைந்த அரசியல் என்று.....
எங்களுக்கு... காதிலை, பூ  சுத்திக் கொண்டு இருக்கிறாங்கள்.   tw_fearful: tw_cry:

இதென்ன புதுசே சிறியர்....

டிஎஸ் மகன் டட்லி

பண்டா, மனைவி சிறிமா, மகள் சந்திரிகா, மகன் அனுர....

பிரேமர் மகன் சஜித்...

காமினி மகன் நவீன்...

மகிந்த மகன் நாமல்....
 
8 minutes ago, அலைஅரசி said:

உங்கட அம்மே (அம்மா) தமிழாமே உங்க தாய் மொழி தமிழா அல்லது சிங்களமா

எங்கண்ட ஜெயந்தி அக்கா...

பஸ்ல போகேக்க, சைட் அடிச்சு இறக்கினவராம், தேப்பன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

இதென்ன புதுசே சிறியர்....

டிஎஸ் மகன் டட்லி

பண்டா, மனைவி சிறிமா, மகள் சந்திரிகா, மகன் அனுர....

பிரேமர் மகன் சஜித்...

காமினி மகன் நவீன்...

மகிந்த மகன் நாமல்....
 
Bild könnte enthalten: 2 Personen, Text

நாதமுனியர்..... தமிழர் செய்த  என்ன பாவமோ... தெரியாது, 
தந்தை செல்வநாயகம், தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு...
பிறகு... வந்ததுகள் எல்லாம், பேர் சொல்லக் கூடிய உருப்படியான காரியத்தை பார்க்காமல்,
சிங்களவன்  பெய்யும்.... ****++ ********
.... வாயை  பிளந்து கொண்டு இருக்கின்றார்கள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நவீனன் said:

“எனது தந்தை தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவார்“ சதுரிக்கா சிறிசேன

“எனது தந்தை தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவார்“ சதுரிக்கா சிறிசேன

கொப்பர்!

சனாதிபதியாய் வந்ததே வேறை ஆரோ போட்ட பிளானிலை....

இதுக்கை  உ*** கொப்பர் என்ன தன்ரை சண்டிக்கட்டுக்கை இருந்தே தமிழருக்கு நியாயத்தை எடுத்து குடுக்கப்போறார்?????

கொப்பர் தமிழருக்கு நியாயத்தை குடுக்க ஆர் ஓமெண்டதாம்?

ஆனாலும் சிங்கள இளம் சமுதாயத்திடம் இப்படியான நல்லெண்ணங்கள் .முளைத்து தளிர்விடுவது மிகவும் வரவேற்கத்தக்கது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஆனாலும் சிங்கள இளம் சமுதாயத்திடம் இப்படியான நல்லெண்ணங்கள் .முளைத்து தளிர்விடுவது மிகவும் வரவேற்கத்தக்கது. 

ய,ய ,எங்களை போல இளம் இரத்தங்களும் அவவிற்கு தோள் கொடுக்க வேணும்....அவர் தனது இலட்சியத்தை அடைவதற்கு

Link to comment
Share on other sites

14 hours ago, Nathamuni said:

நியாயம் பிளக்கிறதை பொறவு பார்ப்போம்...

அய்யோ, அய்யோ.... எங்கப்பா நம்ம முனிவர்.....

கையும் ஓடேல்ல, காலும் ஓடேல்ல....

இது கலியாணம் கட்டாத இரண்டாவது மகளாமே.... அப்படியே ?

image_1505419601-a7d839599e.jpg

நியாயம் பிளக்கிறதை பொறவு பார்ப்போம்...! :unsure:

நாதமுனி வாயைப் பிளக்கிறாரே....! tw_love:

முனிவரை அழைப்பது புரோகிதம் செய்யவா...?? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

நியாயம் பிளக்கிறதை பொறவு பார்ப்போம்...! :unsure:

நாதமுனி வாயைப் பிளக்கிறாரே....! tw_love:

முனிவரை அழைப்பது புரோகிதம் செய்யவா...?? :grin:

பாஞ்சர்... நீங்கள் சின்னப் பொடியள்...

விளங்காது.

அது ஒரு .... இது...

நம்ம முனிவர், வெட்டு எண்டால், கட்டிக் கொண்டு வருற ஆள்...

பக்கம் தானே பொலநறுவை... போய் இருக்கிறார்..

.தகவல் வந்தோன்ன சொல்லுறம். தொடர்பில் இருக்கவும்  :grin: 

Link to comment
Share on other sites

25 minutes ago, Nathamuni said:

பாஞ்சர்... நீங்கள் சின்னப் பொடியள்...

விளங்காது.

அது ஒரு .... இது...

நம்ம முனிவர், வெட்டு எண்டால், கட்டிக் கொண்டு வருற ஆள்...

பக்கம் தானே பொலநறுவை... போய் இருக்கிறார்..

.தகவல் வந்தோன்ன சொல்லுறம். தொடர்பில் இருக்கவும்  :grin: 

சின்னப் பொடியளுக்கு விளங்காது என்பது அந்தக்காலம் நாதமுனி அவர்களே! நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்...? Bildergebnis für சிறுவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Nathamuni said:

அப்பான்ற கஸ்டம் மகளுக்கு விளங்குமே?

மகளுக்கு விளங்கும்  என நினைக்கிறன் தீர் வு வழங்கினால் அப்பா ஜனாதிபதி இல்லை வழங்காவிட்டால் ஏதாவது சாட்டு சொல்லி  இருக்கலாம் தானே நாம் இலவு காத்த கிளி போல் காத்துக்கொண்டிருக்க வேண்டியது தான் :unsure:

21 hours ago, Paanch said:

நல்லாட்சியில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்: சம்பந்தன் நம்பிக்கை.

சதுரிக்காவும்.... 'நான் நினைக்கிறேன்,' 'நம்பிக்கை' என்றுதானே கூறுகிறார். அப்பா செய்வார் என்று உறுதியாகக் கூறவில்லையே...!:(

எங்கடை ஆட்களும் நம்பிக்கை என்றுதானே கூறுகிறார்கள். அதெப்படி  எங்கடை ஆட்கள்மேல் இல்லாத நம்பிக்கை சதுரிக்காமேல் வந்தது....!!:grin:

எல்லாம் ஓர் ஈர்ப்புத்தான் அண்ண சந்திரிக்கா தேர்தலில் வென்று வந்தவுடனேயே தமிழ் மக்கள் நினைத்தது தீர்வு தந்துடுவா என்று என்று ஆனால் நமக்கு பாரிய ஆப்பு வரலையா  ஆனால் சதுரிக்காவ  நான் நம்புறன்  :10_wink:

20 hours ago, சுவைப்பிரியன் said:

குப்பிற விழுந்த தனி இன்னும் எழும்ப வில்லையாம்:unsure::)

ஹாஹா அண்ண இதுக்கெல்லாம் குப்புற விழ முடியாது  இந்த பழம் புளிக்கும் என்று கடந்து போக வேண்டியதுதான் 

6 hours ago, Paanch said:

நியாயம் பிளக்கிறதை பொறவு பார்ப்போம்...! :unsure:

நாதமுனி வாயைப் பிளக்கிறாரே....! tw_love:

முனிவரை அழைப்பது புரோகிதம் செய்யவா...?? :grin:

ம்கும் புரோகிதமா ?? ஆலை விடுங்க சாமி அடுத்து என்ன சொல்லுவியள் என்று எனக்கு தெரியும் தானே நாத முனியாரே சந்தோஷமா??

4 hours ago, Nathamuni said:

பாஞ்சர்... நீங்கள் சின்னப் பொடியள்...

விளங்காது.

அது ஒரு .... இது...

நம்ம முனிவர், வெட்டு எண்டால், கட்டிக் கொண்டு வருற ஆள்...

பக்கம் தானே பொலநறுவை... போய் இருக்கிறார்..

.தகவல் வந்தோன்ன சொல்லுறம். தொடர்பில் இருக்கவும்  :grin: 

ம் பொலநறுவை ம் மகிந்த அம்பாந்தோட்டையை எப்படி அபிவிருத்தி செய்தாரோ அதே போல் நடந்து வருகிறது கிழக்கு தமிழர்சுக்கட்சி  முஸ்லீம் காங்கிரசுக்கு கொடுத்து விட்டு தமிழர்கள் அபிவிருத்தியை தங்கள் பிரதேசங்களில்  எதிர்பார்த்த வண்ணமுள்ளார்கள் நடக்கிறது  நமக்கு நாமம் என்று மட்டுமே விளங்குது  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.