Jump to content

தியாக தீபத்­தின் நினைவு நாள் இன்று ஆரம்­பம்


Recommended Posts

1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 23ஆம் திகதி – இது திலீபனுடன் 9ஆவது நாள்

 
 
1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 23ஆம் திகதி – இது திலீபனுடன் 9ஆவது நாள்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  
(கவிஞர் மு.வே.யோ இன் உரையில் இருந்து)

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…… கூ… குக்… கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான் திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.

ஆனால் இந்தக் குயில்…?

எம்மை எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே… இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…?

திலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன்.

அவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன.

உதடுகள் அசைகின்றன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை.

உதடுகள் பாளம், பாளமாக வெடித்து வெளிறிவிட்டிருந்தன.

கண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன.

இன்று காலை எட்டரை மணியில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு பாடசாலைகளிலிருந்து சுமார் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்துக் கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை 9 மணியளவில் யாழ். கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்து, இந்தியப் படையினர் வெளியே வராதவாறு மறியல் செய்யத் தொடங்கினர்.

பொதுவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வந்த அதே வேளை பொது மக்களின் குமுறலும் அதிகரிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

இன்று காலையில் இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் ஹெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ். கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேச்சில் ஈடுபட்டனர். ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான்!

கோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக் கணக்கான பொது மக்களின் எழுச்சியைக் கண்ட பின்னர் தான் தளபதி தலைவர் பிரபாகனைக் காணப் பறந்து வந்திருக்க வேண்டும்.

இன்று காலை 10 மணியளவில் திலீபனின் மேடைக்கு அருகேயுள்ள மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.

இந்திய வம்சாவழியினர் சார்பில் பேசிய திரு.கணேசராசா என்பவர் ‘பாரத அரசு விடுதலைப் புலிகளின் ஐந்து அம்சக் கோரிக்கையை ஏற்று திலீபனின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டுமென்றும் இல்லையேல் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப் பேற்க வேண்டும்’ என்றும் பேசினார்.

திலீபனை பார்வையிட வருவோர் தங்கள் கருத்துக்களை சில நாள்களாக எழுத்து மூலம் வழங்கி வருகின்றனர். இதற்காக நான்கு போராளிகள் கை ஓயாமல் ஓர் மூலையில் அமர்ந்திருந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் தமது கருத்துக்களை மிக உருக்கமாக எழுதியிருந்தனர்.

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சகல அரச அலுவலகங்களிலும் வேலைகள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்.

சங்கானை உதவி அரச அதிபர் பிரிவிலும் புங்குடுதீவு அரச அதிபர் பிரிவிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திலீபனுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மறியலும் இருந்தனர். அதைப் போல் பல கிராமங்களில் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து மக்கள் உண்ணா நோன்பு அனுஷ்டித்தன்.

எங்கும் எதிலும் திலீபன் என்ற கோபுரம் மக்கள் சக்தியால் உயர்ந்து விட்டதைக் காண முடிந்தது. ஆம்! மக்கள் புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது.

திலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள், இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கு மனுக்களை இன்று அனுப்பி வைத்துள்ளன என்று சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

1. யாழ் பிரஜைகள் குழுக்களின் இணைப்புக்குழு. (இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது)

2. வட பிராந்திய மினி பஸ் சேவைச் சங்கம். (பிரதி தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டது)

3. வட மாகாணம் பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஐம்

4. தொண்டைமானாறு கிராம மட்ட கடற் தொழில் சமூக அபிவிருத்திச் சங்கம்

5. வட பிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன அவற்றில் சிலவாகும்.

இன்று மன்னாரிலுள்ள இந்திய அமைதிப்படை முகாமுக்கு முன், திலீபனுக்கு ஆதரவாக மனு ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்ற போது ஆத்திரமடைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது ஒருவர் அதில் இறந்து விட்டனர் என்றும், 18 பேர் படுகாயமடைந்தனர் என்றும் எமது தகவல் தொடர்புச் சாதனச் செய்திகள் கூறுகின்றன.

theleepan.jpg

இன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்தியத் தூதுவர் டிக்சிற், தலைவர் பிரபாவைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பது தான் அது! ஆம் பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 6-30 மணிவரை, இரு குழுக்களும் அமைதியாகப் பேச்சு நடத்தின. இந்தியத் தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள்:-

தூதுவர் திரு. ஜெ. ஏன். டிக்சிற்

இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்

அமைதி காக்கும் படைத் தளபதி மேஐர் ஜெனரல் ஹர்கீத் சிங்

பிரிகேடியர் பெர்னான்டஸ்

இந்தியத் தூதரகப் பாதுகாப்பு அதிகாரி, கப்டன் குப்தா ஆகியோரும்,

விடுதலைப் புலிகளின் தரப்பில்:-

தலைவர். திரு. வே. பிரபாகரன்

பிரதித் தலைவர். திரு. கோ. மகேந்திரராசா (மாத்தயா).

திரு. அன்ரன் பாலசிங்கம் (அரசியல் ஆலோசகர்)

திரு. செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்)

திரு. சிவானந்தசுந்தரம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பேச்சு நடந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்ததும், என்னை அறியாமலே என் மனம் துள்ளிக் குதித்தது. ஒன்பதாம் நாளான இன்று ஒரு நல்ல முடிவு எப்படியும் ஏற்படும். அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட சிகிச்சைகள் அளித்தால் 24 மணித்தியாலங்களில் அவர் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்.

எமக்காக இத்தனை நாள்களாகத் துன்பப்பட்டு அணு, அணுவாகத் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம், நிச்சயம் பூத்துக் குலுங்கத்தான் போகிறது என்ற கற்பனைக் கடலில் இரவு 7-30 மணிவரை நானும், என் நண்பர்களும், மிதந்து கொண்டிருந்தோம்.

இரவு 7.30 மணிக்கு அந்தச் செய்தி என் காதில் விழந்தபோது இந்த உலகமே தலை கீழாக சுற்றத் தொடங்கியது. அந்தக் கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்த்து தவிடு பொடியாகியது.

ஆம் ! பேச்சில் போது இந்தியத் தூதுவரால் வெறும் உறுதி மொழிகளைத்தான் தர முடிந்தது. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. எழுத்தில் எந்தவித ஊறுதி மொழிகளையும் தர இந்தியத் தரப்பு விரும்பவில்லை என்பதை அவர்களின் நடத்தை உறுதி செய்தது. திலீபனின் மரணப் பயணம் இறுதியானது என்பதையும் அது உணர்த்தியது.

http://newuthayan.com/story/31135.html

Link to comment
Share on other sites

பசித் தீ கொண்டு மக்களுக்காகப் போராடிய விடுதலைப்போராளி

அன்புமாறன்

 
பசித் தீ கொண்டு மக்களுக்காகப் போராடிய விடுதலைப்போராளி
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

இலங்­கை­யின் வடக்­காக ஒரு தேசம் பொலி­வாக இருந்­தது.அது தமிழ்த் தாய் குடி­கொண்­டிருந்த பூர்­வீ­க பூமி. கலை, கலாசா­ரம்,பண்­பாட்டு விழு­மி­யங்கள், பொருண்­மி­யத்­தின் மேம்­பா­டு­கள் என அனைத்­தை­யும் அர­வ­ணைத்­துக் கொண்ட அழ­கிய தாய்த் தேசம்.நேசம் கொண்டு, ஈழம் என்ற நாமம் கொண்டு தமி­ழர்­கள் போற்றி வணங் கிய, வணங்­கி­வ­ரு­கின்ற, ஒரு போ­தும் அழித்­திட முடி­யாத வரை­பு அது.வீரத்­தின் பிறப்பு அது.உல­கம் வியந்து பார்த்த சிறப்பு அது.

இத்­த­கைய ஓர் தேசத்­தின் விடு­தலை வேண்­டிய பய­ணத்­தின் தடங்­கள் முப்­பது ஆண்­டு­கள் உரி­மைக்­கான ஆயு­தம் ஏந்­திய அவ­தா­ர­மாக உருப்­பெற்று, தமி­ழி­னத்­தின் இனத்­துவ சார்­பினை, அதன் நிலைத்­தி­ருப்­பினை உல­குக்கு எடுத்­துக் கூறி­யது.இதற்கு முந்­தைய முப்­பது ஆண்­டு­கள் உரி­மைக்­கான அகிம்சை ஆயு­தம் ஏந்­தி­யது.

இந்த ஏந்­தல்­கள் தாக்­க­மு­றா­த­தால் தேங்கித் தட­த­டத்­தன.தரப்­ப­டுத்­த­லோடு உடைப்­பெ­டுத்து மேற்­சொன்ன அவ­தா­ரங்­க­ளுக்கு அடி­யெ­டுத்­துக் கொடுத்­தது.அகிம்­சைக்­கும், அவ­தா­ரங்­க­ளுக்­கும் இடைப்­பட்ட விகி­தா­சா­ரங்­க­ளில் மேன்­மை­ பெற்­றது, தமி­ழி­னத்­தின் அவ­தா­ர­மான, ஆதா­ர­மான வீரங்­கள்தான்.எப்­போ­தும் விலை போகாத அதன் மூலா­தா­ரங்­கள் தாம்.

விடு­த­லைப்­போ­ராளி

இத­ன­டிப்­ப­டை­யிலே, தோற்­றம் பெற்ற அந்த தமி­ழி­னப் பற்­று­கள், மக்­க­ளுக்­காகப் போரா­டும் ஒரு விடு­த­லைப் போராளி என்ற குறிக்­கோள்­கள் அதி உத்­த­ம­மா­னவை.விடு­தலை வேண்­டு­கின்ற ஓர் இனம் இப்­ப­டித்­தான் இருக்க வேண்­டும் என்­ப­தனை எடுத்துக் காட்­டிய தியா­கங்­கள்.

உரித்­தா­னதைத் தர மறுக்­கும்போது, சோத­னை­களை தியா­கங்­க­ளூடு செய்து, சாத­னை­கள் பலதைச் செய்து காட்­டிய தீரங்­கள்.உரி­மைக்­கான அர்த்­தங்­களை ஓர் அர­சாக்கி, தரை, வான்,கடல் எல்­லை­களைக் காவ­லிட்டு.நீதி,நிர்­வா­கம்,சட்­டம்,காவல் என நிமிர்ந்து பொருண்­மி­யங்­களை வளப்­ப­டுத்தி.சமூக விரோ­தங்­களைக் கட்­டுப்­ப­டுத்தி, விழு­மி ­யங்­களைச் சீர்ப்­ப­டுத்தி, கல்­வியை பூர்­வீ­கச் சொத்­தாக்கி நல் மாணவ சமூ­கத்தை கட்­டிக் காத்த, தட்­டிக் கொடுத்த இலட்­சி­யங்­கள் அவை.

போரும் கல்­வி­யும் இணைந்த ஓர் சமூ­கம் நிலைத்­தி­ருக்கப் போரா­டு­கி­றது என்­ப­த­னை­யும், சுதந்­தி­ரத் துக்கான போராட்­ட­மா­கவே தமிழ்ச் சமூ­கம் நகர்­கி­றது என்­ப­த­னை­யும் எடுத்­தி­யம்­பின. விடு­தலை என்­பது ஒரு தேசி­யக் கடமை. இதில் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் பங்­க­ளிப்பு உண்டு. இதனை ஒரு தேசிய இனம் பகிர்ந்து கொள்­ள­வேண்­டும். இந்­தத் தேசி­யச் சுமையை சமூ­கத்­தின் அடி­மட்­டத்­தி­லுள்ள ஏழை­கள் மட்­டும் தாங்­கிக்­கொள்ள அனு­மதிப்பது என்­பது நாம் எமது தேசத்­திற்­குச் செய்யும் துரோ­கம் என்­பதை உல­குக்கு எடுத்­துக்­காட்­டி­யவை.

ஆச்­ச­ரி­யக்­குறி

இத்­த­கைய சிறப்­புக்­க­ளோடு இருந்த ஓர் சமூ­கம், அதே பண்­பு­
க­ளோடு நிலைத்­தி­ருக்­கி­றதா என்­றால் பெரி­ய­தொரு ஆச்­ச­ரி­யக் குறி­யும், கேள்­விக் குறி­யும் தற்­போ­தைய சமூக வெளி­யி­டையே தோற்­றம் கொள்­கி­றது.கடந்து வந்த பாதை­களைத் திரும்­பிப் பார்க்­கச் செய்­கி­றது.ஏனெ­னில், கட்­டுக்­கோப்­பான சமூ­கம் திட்­ட­மிட்ட மாற்­றங்­க­ளால் இடை­வி­ல­கத் தொடங்­கி­விட்­டது.

விடு­த­லைக்­கான நோக்­கங்­க­ளும் குறிக்­கோள்­க­ ளும் மழுங்­க­டிக்­கப்­பட்டு தட்­டிக்­கேட்க ஆட்­க­ளின்றி ஆட்­டம் காணத் தொடங்­கி­விட்­டது.இதற்­கான அடித்­த­ளங்­கள் 2009களில் மிகப்­பெ­ரிய மனி­ தப் பேர­வ­லத்­தோடு கட்­ட­மைக்­கப்­பட்டு விட்­டன.

தியாக நாதம்

ஆம்,மூபத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­பாய், தியாக வேள்வி புரிந்­த­வ­னின் நினை­வ­லை­கள் ஞாபகங்­க­ளிடை ஒளி தரு­கின்­றன. ஆங்­கோர் காட்சி விரி­கி­றது, பாருங்­கள்.உமை ஒற்­று­மை­யோடு சிந்­திக்­கப் பணிக்­கின்­றன. “தமி­ழீழ தாயின் எதிர்­பா­ராத ஆசி­யைத் திலீ­பன் பெறு­கின்­றார். எதிர்­பா­ராத வித­மாக அந்த நிகழ்ச்சி நடந்­தது. வய­தான ஓர் அம்மா; தள்­ளாத சிவந்தநிற மேனி; பழுத்த தலை.

ஆனால் ஒளி ­த­வ­ளும் கண்­க­ளில் கண்­ணீர் மல்க, திலீ­பனை மறித்து தன் கையில் சுமந்து வந்த அர்ச்­ச­னைச் சரை­யில் இருந்து நடுங்­கும் விரல்­க­ளால் திருநீற்றை எடுத்து திலீ­ப­னின் நெற்­றி­யில் பூசு­கி­றார். சுற்­றி­யி­ருந்த புகைப் படக் கருவிகள் எல்­லாம் அந்தக் காட்­சியைப் பதிவு செய்­தன. வீரத்­தி­ல­க­மி­டு­கி­றார் அந்­தத் தாய். தன்னைப் பெற்ற தாயை இழந்திருந்த திலீ­பன் அந்­தத் தாயின் பாச உணர்­வில் மூழ்­கிப் போ­னான்.பன்­னி­ரண்டு தினங்­கள் ஊனினை உருக்கி விடு­த­லை­யின் உள்­ளொ­ளியை இலட்­சி­ய­மா­கப் பெருக்­கிக் கொண்­டான்.

http://newuthayan.com/story/31286.html

Link to comment
Share on other sites

1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 24 ஆம் திகதி – இது திலீபனுடன் 10 ஆவது நாள்

 
 
1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 24 ஆம் திகதி – இது திலீபனுடன் 10 ஆவது நாள்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  
(கவிஞர் மு.வே.யோ இன் உரையில் இருந்து)

பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால் அவர்களின் ஒருவர் அணுஅணுவாக இறந்து கொண்டிருபதைப் பார்க்கும்போது…… துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப் போய்விடும். கண்களில் அழுவதற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது.

அர்களில் ஒருவர் ஒருசொட்டு நீர் கூடஅருந்தாமல் 10 நாட்களாக எம் கண் முன்னால் அணு அணுவாகச் சாவின் விளிம்பில் நின்று தத்தளிப்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏற்படும் மன வேதனை இருக்கிறதே- அப்பப்பா! அதை வாய்விட்டுச் சொல்ல முடியாது. அத்துனை கொடுமை அது. அனுபவித்தவர்களுக்கு மட்டும் புரியும்.

அதை நான் என் வாழ்நாளில் முதல்முறையாக அனுபவிக்கிறேன். இதையெல்லாம் என் கண்களால் பார்க்கவேண்டும். என்று முன்பே தெரிந்திருருமால், நான் திலீபன் இருந்த பக்கமே தலைவைத்துப் படுத்திருக்கமாட்டேன்.

நான் முற்றுமுழுதாக நினைத்திருந்ததெல்லாம் இதுதான். இந்தியா ஒரு பழம்பெருமைமிக்க ஜனநாயக நாடு. காந்தி பிறந்த பொன்னான பூமி. அகிம்சையைப் பற்றியும் உண்ணாவிரதத்தைப் பற்றியும் உலகில் பெருமைப்படக்கூடிய அளவுக்கு காந்தியடிகள் மூலம் புகழ்பெற்ற நாடு. அப்படிப்பட்ட ஓரு நாட்டிடம் நீதிகேட்டு அமிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், உண்மையிலேயே பாக்கியசாலிதான்.

ஏனெனில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நாடு நிச்சயமாக திலீபனுக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டத்தான் செய்யும். அதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவாது இந்திய அரசு நிறைவேற்றத்தான் போகிறது என்ற எண்ணத்தில் தான் இந்தத் தியாக வேள்வியில் என்னால் முடிந்த பங்கைச் செலுத்துவதற்குத் தயாரானேன். நான் நினைத்ததெல்லாம் இவ்வளவு விரைவில் மாயமான் ஆகிவிடும் என்று நான் கனவுகூடக் கண்டிருக்கவில்லை. எத்தனை பெரிய ஏமாற்றம் எத்தனை பெரிய தவிப்பு?

இன்றைய நிலையில் திலீபன் இருந்த நிலையைப் பார்த்தபோது நம்பிக்கையே அற்றுவிட்டது. இனி ஓரு நல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் பிறகு திலீபனை மருத்துவமனையில் சேர்த்தாலும் காப்பாற்ற முடியுமா என்பது என்னைப் பொறுத்த அளவில் கேள்விக்குறிதான்.

Thileepan.png

கடவுளே! மனித தர்மத்துக்கு கிடைக்கப் போகும் பரிசு இதுதானா? திலீபனைக் கொல்வதற்கு அவர்கள் திடமனம் பூண்டுவிட்டனர் என்பது புரிந்துவிட்டது.

அதோ வானத்தில் ஓர் வயோதிப உருவம் முகில்களைக் கிழித்துக்கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவ்வுருவத்தின் கண்களிலே வெள்ளை கண்ணாடி …… அந்தக் கண்களில் அருவியாக வழிந்து கொண்டிருக்கிறது…அது என்ன?

இரத்தமா?
அந்த “மனிதன்” இரத்தக் கண்ணீர் சொரிகிறாரே…… ஏன்?
ஏன்?
ஏன்?

அடுத்து வேறு ஓரு உருவம்!
வானத்தின் நடுவலே வெள்ளரசு மரத்தின் அடியிலே அமர்ந்திருக்கும் அந்த உருவம் எம்மை, இல்லை திலீபனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பௌர்ணமி நிலவில் அந்தக் கருணை முகத்திலே…கருணையைத் தேடுகின்றேன்… ஆனால் காணமுடியவில்லை…

ஏன்……?
ஏன்…?

இந்திய மண்ணில் என்றோ தோன்றி மறைந்துவிட்ட அந்த இரு சோதிகளும் அல்ல, உருவங்களும் வெகுநேரம் திலீபனைப்பார்க்க முடியாமல் வெட்கித் தலை குனிந்தவாறு சிறிது சிறிதாக என் கண்களை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றன.

நேற்று சிறிதளவாவது அசைந்து கொண்டிருந்த திலீபனின் கை, கால்கள் இன்று அசைவற்று சோர்ந்து விட்டன. உள்மூச்சு மட்டும் பலமாக இழுத்துக்கொண்டிருக்கின்றது. கண்கள் உச்சியிலே குத்திவிட்டு நிற்கின்றன. உடலின் நிறம் சிறிது நீலமாக மாறத்தொடங்கி விட்டது.

நாடித்துடிப்பைப் பரிசோதிக்கின்றேன் 52.
இரத்த அழுத்தம் -80/50.

சராசரி மனிதனின் அளவுகளைவிட எல்லாமே மிகவும் குறைந்துள்ளன. இனித் திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம். ஐயோ அதைநினைத்துப்பார்க்கவே நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கின்றது. நெஞ்சே இந்தக் கணமே நீ வெடித்துவிடக்கூடாதா?

அன்று திலீபன் கிட்டுஅண்ணாவைப் பார்க்கவேண்டும் என்றாரே?. இதற்காகத்தானா?. இந்திய அரசு தன் கோரிக்கைகளை நிறைவேற்றாது என்பதை அவர் உள்ளூர அறிந்தவர் போல் அன்று உண்ணாவிரத மேடையிலிருந்து எவ்வளவு தீர்க்கதரிசியாக இதைக் கூறினார்.

நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலர்வதைப் பார்ப்பேன்…”

இந்த வார்த்தைகளை இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

திலீபன், கிட்டு அண்ணா மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதைப் போல் அவரும் திலீபன் மீது உயிரையே வைத்திருப்பது எனக்குத் தெரியும்.

கிட்டு அண்ணா யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணக் குடா நாட்டை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரும் பாடுபட்டு உழைத்தவர். திட்டமிடும் சாதுர்யம் அதை நிறைவேற்றுவதில் மிகச் சாதுர்யம். எதிரியைப் பந்தாடுவதில் ராஜதந்திரம். இவற்றுடன் குறி தவறாமல் சுடுவதிலும் தன்னிகரற்றவரான தளபதி கிட்டுவும் , யாழ் மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவன் திலீபனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிசம் என்று தான் கூறவேண்டும். இவர்களை உறுப்பினர்களாகப் பெற்ற உறுதி மிக்க தலைவனை நாம் பெற்றுள்ளோம்.

கிட்டு அண்ணாவைப் பார்க்கவேண்டும் என்று திலீபன் அன்று மேடையிலிருந்து கூறிய போது அதை நான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் இன்று? இந்த நிலையில் அவரது அந்த ஆசை நிறைவேறாமலேயே என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

இதை என்றோ ஒரு நாள் கிட்டு அண்ணாவிடம் கூறும் போது அவர் மனம் எவ்வளவு வேதனையடையும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க எனக்கு இந்த உலகத்தின் மீது வெறுப்பு வருகின்றது. இந்த மண்ணிற்காக நாம் எத்தனை அரும்பெரும் உயிர்களையெல்லாம் இழந்திருக்கின்றோம்.

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தமது துப்பாக்கிகளைச் சிங்கள இராணுவத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக காயப்பட்டு நடக்க முடியாத நிலையில் தம்மைச் சுட்டுவிட்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடும் படி கட்டளையிட்ட சீலன், ஆனந்தன்……

இயக்க இரகசியங்கள் அடங்கிய முக்கிய விடயங்களையும் கோப்புக்கனையும் காப்பாற்றுவதற்காக கடைசிவரையும் தாக்குப் பிடித்து அவகளை மற்றவர்களிடம் எடுத்து அனுப்பிவிட்டு தன் உயிரைத் தியாகம் செய்த ‘பண்டிதர்…

இயக்கப் போராளிகள் குடியிருந்த இடமொன்றில் வெடிகுண்டின் கிளிப் எதிர்பாராமல் விலகிவிட மற்றவர்களை அந்த அழியிலிருந்து காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தன் வயிற்றுக்குள் அமுக்கிக் கொண்டு குப்புறப்படுத்து தன் உடலையே சிதறப்பண்ணி மற்றவர்களை அழிவினின்றும் காப்பாற்றிய தியாக வீரன் அன்பு”

இவர்களைவிட அவ்வப்போது சிங்கள இராணுவத்திடம் பிடிபடும் நிலையில் இயக்க ரகசியங்களை காப்பாற்றுவதற்காக சயனைட்டைத் தின்று தியாக மரணமடைந்தவர்கள் உலக வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத்தான் ஏராளம் ஏராளம்….

இந்த வழிகளையெல்லாம் விட தன் வழி மிகவும் வேறுபட்டதாக இருக்கட்டும் என்பதற்காக திலீபன் இந்த முடிவுக்கு வந்தார்?
இன்று மாலை வசாவிளான் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு ஆதரவாளர் அங்கிருந்து உண்ணாவிரத மேடை வரை தூக்குக் காவடியுடன் அழுதழுது வந்தது எல்லோரையும் கவர்ந்த ஒன்றாகும்.

வட்டுக்கோட்டை சிவன் கோவிலடி, அச்சுவேலி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக, மற்றும் சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள் போன்ற இடங்களிலெல்லாம் அடையாள உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் பரந்தளவில் நடைபெற்றது.

பளையிலிருந்து நாவற்குழி வரையுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லுர் மைதானத்தை நிறைத்தனர். அவர்களின் ஊர்வலத்தில் பார்க்குமிடமெல்லாம் புலிக்கொடிதான் பறந்துகொண்டிருந்தன.

நாவந்துறையைச் சேர்ந்த மக்களின் உணர்ச்சி வெள்ளத்தை இன்று வந்த அவர்களின் ஊர்வலத்தின் மூலம் தான் அறியமுடிந்தது. முல்லைத்தீவு மாவட்டமெங்கும் எங்கும் உண்ணாவிரதமும் மறியலும் நடக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம்.

திலீபன்’ என்ற இந்தச் சிறிய கூட்டிற்குள் இருக்கும் இதயத்தை எத்தனை இலட்சம் மக்கள் தான் நேசிக்கிறார்கள்.”மன்னிக்கவும் இலட்சமல்ல கோடி! தமிழ் நாட்டிலும் ஏன்? ஏனைய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோருமே திலீபனுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றார்கள்.

http://newuthayan.com/story/31484.html

Link to comment
Share on other sites

தியாக தீபம் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு மன்னாரில்

 

தியாக தீபம் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் வடக்கு கிழக்கு தமிழர் தயாகப்பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது.

தியாக தீபம் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு மன்னாரில்

இந்த நிலையில் மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி அடம்பனில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

தியாக தீபம் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு மன்னாரில்

ஆட்காட்டிவெளி அடம்பனில் அமைந்துள்ள ஜனநாயகப்போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

தியாக தீபம் திலீபனின் திருவருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞசலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/-30th-anniversary-Solidarity-Deepam-

Link to comment
Share on other sites

தியாக தீபம் திலீ­ப­னின் இறு­தி­நாள் நினை­வேந்­தல் : நல்­லூ­ரில் நாளை

 
 
தியாக தீபம்  திலீ­ப­னின் இறு­தி­நாள் நினை­வேந்­தல் :  நல்­லூ­ரில் நாளை
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

அமை­திப் படை­யா­கக் காலடி எடுத்து வைத்து ஆக்­கி­ர­மிப்­புப் படை­யாக மாறி ஈழத் தமி­ழர்­களை வேட்­டை­யாடி – சூறை­யாடி அழித்­தொ­ழித்த இந்திய இரா­ணு­வத்­துக்கு எதி­ராக அகிம்சை வழி­யில் – 12 நாள்­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்தி வீரச்­சா­வ­டைந்த லெப். கேணல் தியாக தீபம் திலீ­ப­னின் 30ஆம் ஆண்டு நினை­வேந்­த­லின் இறுதி நாள் நிகழ்­வு­கள் நாளை செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெ­று­கின்­றன.

நல்­லூர் ஆலய பின்­வீ­தி­யில் அமைந்­துள்ள நினை­வி­டத்­தில் அஞ்­சலி நிகழ்­வு­கள் முற்­ப­கல் 10.30 மணி­ய­ள­வில் ஆரம்­ப­மா­கும். பொது மக்­கள், அரச அரச சார்­பற்ற மற்­றும் தனி­யார் துறை சார்ந்­த­வர்­கள் மற்­றும் பொது அமைப்­புக்­க­ளை­யும் கலந்து கொள்­ளு­மாறு தியாகி திலீ­பன் நினை­வேந்­தல் ஏற்­பாட்­டுக் குழு அழைப்­பு­வி­டுத்­துள்­ளது.

http://newuthayan.com/story/31702.html

Link to comment
Share on other sites

அகிம்சையின் உன்னத வடிவம் தியாக தீபம்

இதயச்சந்திரன்

 

செப்­ரெம்­பர் 26 ஆம் திகதி தமிழ் தேசிய விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் பெரும் மாறு­தல் க­ளுக்கு வழி ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தன.அந்த மாற்­றங்­க­ளுக்­கான முயற்­சி­யாண்­மை­யா­க திகழ்ந்த இரு பெரும் போரா­ளி­கள் சாவடைந்த தின­மாக அவை முதன்மை பெறு­கின்­றன.

இரு­பெ­ருங் கரங்­கள்

கேணல் சங்­கர், லெப் கேணல் திலீ­பன் ஆகி­யோர் தமி­ழர்­க­ளின் உரிமை மீட்­புக்­கான போராட்­டப் பாதை­க­ளில் ஏற்­ப­டுத்­திய அர­சி­யல்,இரா­ணுவ ரீதி­யான பரி­ணா­மக் கட்­ட­மைப்­பு­கள் விடு­த­லையை முன்­னோக்­கிக் கொண்டு சென்­றன.போராட்­டத்தை தாங்­கும் இரு­பெ­ரும் கரங்­க­ளாக திகழ்ந்­த­னர்.

ஐந்து கோரிக்­கை­களை இந்­திய வல்­லா­திக்க அர­சி­டம் முன்­வைத்து சாகும்­வரை உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை மேற் கெண்ட திலீ­பன் தியா­கச் செம்­ம­லாய்,தற்­கொ­டை­யின் தனித்­து­வ­மாய் மிளர்­கி­றான்.

ஐந்து அம்­சக் கோரிக்கை

• தமிழ் மண்­ணில் இருந்து இலங்கை இரா­ணு­வம் வில­கிக் கொள்ள வேண்­டும்.

• மண­லாற்­றில் முடுக்கி விடப்­பட்­டுள்ள சிங்­க­ளக் குடி­யேற்­றம் தடுத்து நிறுத்­தப்­பட வேண்­டும்.
• வட, கிழக்­கில் இடைக்­கால ஆட்சி அமை­யும்­வரை சகல மீள­மைப்பு வேலை­க­ளும் நிறுத்­தப்­பட வேண்­டும்.
• தமிழ்ப் பிர­தே­சத்­தில் சிங்­க­ள­வர்­க­ளைக் கொண்ட பொலிஸ் நிலை­யங்­கள் திறக்­கப்­ப­டு­தல் நிறுத்­தப்­பட வேண்­டும்.
• அர­சி­யல் கைதி­களை உட­ன­டி­யாக விடு­தலை செய்ய வேண்­டும்.

ஆதிக்­கச் சுய­ந­லம்

பண நோட்­டு­க­ளில் காந்­தியை அமர்த்­தி­யி­ருக்­கும் பாரத தேசம், திலீ­ப­னின் காந்­திய வழிப் போராட்­டத்­தைப் புரிந்து கொள்­ள­வில்லை.இந்­தி­யா­வின் பிராந்­திய ஆதிக்­கச் சுய­ந­லம், திலீ­பன் கொண்ட அகிம்­சைப் போராட்­டத்­தின் உள்­ளார்ந்த ஆத்ம வலி­மையை உணர்ந்­து­கொள்­ளும் பக்­கு­வத்­தைக் கொண்­டி­ருக்­க­வில்லை.

அலட்­சி­யம் செய்து தமி­ழர் வேண்­டிய உரி­மை­யின் உண்­மை­யான நியா­ய­ பூர்வ  உயில் வடி­வங்­களை கிழித்­தெ­றிந்­தது.தன் கோர முகத்தை வெளிக்­காட்­டிக்­கொண்­டது.

வர­லாற்­றின் தொடக்­கம்

திலீ­ப­னின் நினைவை நெஞ்­சில் இருத்தி தாய­கக் கவி­ஞன் புதுவை எழு­திய கவிதை மொழி­வின் நுட்­பங்­கள் உயி­ரோடு உரி­மை­யின் தகிப்பை விடு­த­லை­யு­றச் செய்­கி­றது.

“மர­ணம் வாழ்­வின் முடிவு  உனக்கு மர­ணமே வர­லாற்­றின் தொடக்­கம்நீ ஒரு வர­லாறுசரித்­தி­ரமே உன் சாவு”

நசுக்­கப்­ப­டும் இனக் குழு­மத்­தி­லி­ருந்து ஆயு­த­மேந்­தி­ய­படி விடு­த­லைப் பணி­யைத் தொடங்­கிய திலீ­பன், பாரத தேசத்­துக்­குப் புரி­யும் வகை­யில் முன்­னெ­டுத்த அகிம்சை வழி­யான தற்­கொ­டைப் போராட்­டத்தை பல­வீ­னத்­தின் வெளிப்­பா­டா­கவே அது கரு­தி­யது.

தியா­கத்­தின் அதி உன்­னத மானு­டம்

அகிம்­சை­யின் அதி உச்ச,அதி உன்­ன­தப் போராட்ட வடி­வத்தை ஏள­னம் செய்த இந்­தி­யத் தூதர் ஜே.என். டிக்­சிட் பின்­னா­ளில் சுருட்­டுக் கதை சொல்லி தமி­ழர்­க­ளின் விடு­த­லைப் போராட்­டத்­தைக் கொச்­சைப்­ப­டுத்­தி­னார் என்­பதை தற்­போது நாம் நினைவு கூர வேண்­டும்.

திலீ­பன் தனது சாவை தானே நிர்­ண­யித்­தான்.அதற்கு முன்­பாக,  “நான் என் உயி­ரி­லும் மேலாக நேசிக்­கும் மக்­களே..! உங்­க­ளி­டம் ஒரு பெரும் பொறுப்பை விட்­டுச் செல்­கி­றேன். நீங்­கள் அனை­வ­ரும் பரி­பூ­ர­ண­மா­கக் கிளர்ந்­தெழ வேண்­டும்.

இங்கு ஒரு மாபெ­ரும் புரட்சி வெடிக்­கட்­டும். அனை­வ­ரும் எழுச்சி அடை­வார்­க­ளா­யின் தமி­ழீ­ழம் உரு­வா­வதை எவ­ரா­லும் தடுக்க இய­லாது. எமது உரி­மை­களை நாமே வென்­றெ­டுக்க வேண்­டும். இதற்கு வேறு யாரு­டைய தய­வை­யும் எதிர்­பார்க்­கக் கூடாது.” என்று அவன் கூறிய செய்தி இக்­கா­ல­கட்­டத்­திற்­கும் சரி­வ­ரப் பொருத்­த­மு­று­வதை அவ­தா­னிக்­க­லாம்.இது சாவு வாக்குமூல­மல்ல.

போராட்­டப் பாதையை அழித்­திட, அமை­திப் படை கொண்டு இந்­தியா விதித்த தந்­தி­ரோ­பா­யப் பொறி வலையை அறுத்­தெ­றிய தனது உயி­ரையே அகிம்­சை­யின் ஆயு­த­மாக்­கிய போராட்­டச் சித்­த­னின் மக்­கள் புரட்­சிக்­கான அறை கூவலே.ஆனா­லும் நவீன உல­கின் அகிம்­சைப் போராட்ட பரி­மா­ணத்­துக்­குச் சாவு மணி அடித்த பெருமை பாரத தேசத்­தையே சாரும்.இது மிகச் சோக­மான விட­யம்.காந்­தி­யின் போத­னை­கள் மட்­டு­மல்ல அவர் வாழ்ந்த குடி­லும் போத­னை­க­ளின்றி இந்­திய நூத­ன­சா­லை­ க­ளில் சமா­தி­யாகி விட்­டன.

ஆக,எவ­ரு­டைய தய­வை­யும் நாம் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கக் கூடா­தென்­கிற திலீ­ப­னின் கூற்று ஆத்­மார்த்­த­மான தீர்க்க தரி­ச­னம். தமி­ழர்­கள் அதனை ஏற்­றுக் கொள்­வும்,இலட்­சி­ய­மாய் சிந்­தனை கொள்­வும் வேண்­டும்.அதுவே சரி­யான நிலைப்­பா­டாக அமை­யும்.விடு­தலை தரும்.

http://newuthayan.com/story/31768.html

Link to comment
Share on other sites

  1987 செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி – இது திலீபனுடன் 11ஆம் நாள்

 
1987 செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதி – இது திலீபனுடன் 11ஆம் நாள்
 3
  •  
  •  
  •  
  •  
  •  
(கவிஞர் மு.வே.யோ இன் உரையில் இருந்து)

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்றன. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது.

கோமாவுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில். தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம்.

அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது. மாறன், நவீனன், தேவர் ஆகியோர் மிகக் கஷ்டப்பட்டு அவரது ஆடைகளை மாற்றி, புத்தாடை அணிவித்தனர். அவர் சுயநினைவோடு இருக்கும்போது புது ஆடைகளை அணியும்படி பலமுறை நான் கேட்டபோது, பிடிவாதமாக மறுத்து விட்டார்.

சாகப் போகிறவனுக்கு எதுக்கு வாஞ்சி அண்ணை புது உடுப்பு? என்று தனக்கேயுரிய சிரிப்புடன் கேட்டார். அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

பிற்பகல் 4 மணியளவில் திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு வந்தது. ஆம், அவர் முழுமையான கோமா நிலைக்கு வந்துவிட்டார். மைதானத்தில் கூடியிருந்த சனக் கூட்டத்தினர் திலீபனின் நிலை கண்டு மிகவும் வருந்தினர். ஒவ்வொருவர் முகத்திலும் சோகத்திரை படர்ந்திருந்தது.

இன்று காலையிலிருந்து, இலட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து குவிந்து கொண்டிருந்தனர். லொறிகள், பஸ்கள், வான்கள், கார்கள், ஏன்? மாட்டு வண்டிகளிற் கூட அவர்கள் சாரி, சாரியாக வந்து நிறையத் தொடங்கினர். யாழ்ப்பாணத்திலோ, அல்லது இலங்கையின் எந்தப் பகுதியிலோ இதுவரை எந்த நிகழ்சிக்கும் இப்படி மக்கள் வெள்ளம்போல் நிறைந்ததாகச் சரித்திரமே இல்லை.

வட்டுக்கோட்டையில் இருந்து மட்டும் 50 மாட்டு வண்டிகள் புலிக்கொடிகளை ஏந்தியவாறு, மக்களை நிறைத்துக் கொண்டு வரிசையாக வந்து சேர்ந்தன.

இன்று பிற்பகல் 1.30 மணியுடன் முல்லைத்தீவில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திருச்செல்வம் என்ற விடுதலைப் புலி உறுப்பினர், 60 மணித்தியாலங்களை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டார்.

மட்டுநகரில் மதன் என்ற விடுதலைப் புலி இன்று காலை 10.40 மணிக்கு, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் திலீபனுக்கு ஆதரவாக ஆரம்பித்தார்.

அதேபோல் திருக்கோணமலையிலும் ‘கிருபா’ என்ற போராளி இன்று மாலை ஆரம்பித்துவிட்டார். திருக்கோணமலை. முல்லைத்தீவு, மட்டுநகர் ஆகிய மாவட்டங்களில்தான் கடந்;;த 10 ஆண்டுகளாக, சிறீலங்கா அரசு திட்டமிட்டவாறு சிங்கள மக்களைக் குடியேற்றி வருகின்றது.

1983 ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையிலே படுகொலை செய்யப்பட்ட தமிழர்களில் தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மிக முக்கியமானவர்கள். சிறையிலிருந்த சிங்களக் கைதிகளைத் தூண்டிவிட்டு 52 பேர்களைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்துக் கொடுத்தது வேறு யாருமல்ல கனம் ஜே. ஆர். ஜெயவர்த்தனாதான்.

52 பேர்களைத் திட்டமிட்டபடி கொலைசெய்த நூற்றுக்கணக்கான சிங்கள ஆயுள் தண்டனைக் கைதிகளும் என்ன பரிசு அளிப்பதென்று ஜே. ஆர். ஒரு வருடமாக மண்டையைப் போட்டு உடைத்தார். கடைசியில் அனைவரையும் அவர்களின் குடும்பங்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ‘டொலர் பாம், கென்ற் பாம்’ ஆகிய இடங்களில் நவீன வீடுகளைக் கட்டிக் கொடுத்து குடி அமர்த்தினார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 ஆயிரம் ரூபா பணமும், 2 ஏக்கர் நிலமும், குடியிருக்க வீடும் வழங்கப்பட்டன. இது மட்டுமா? கொலைகாரர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. இது வெறும் பொய்யல்ல, நடந்த உண்மை. என்ன ஆச்சரியம்? உலக வரலாற்றில் எந்த நாட்டிலாவது இப்படி நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அப்படிப்பட்ட ஜே. ஆர். என்ன சொல்கிறார் தெரியுமா?. தான் உண்மையான ‘காந்தியவாதி’ என்று கூறுகிறார். என்ன கேலிக்கூத்து இது! காந்தீயம் அத்தனை மலிவானதா?

இத்தனை இனத்துவேசியான ஜே. ஆருடன் ‘தமிழர் நலம் காப்பது என்ற பெயரில் ஓர் ஒப்பந்தம் செய்வதென்றால், அது நடைபெறக்கூடிய காரியமா? அல்லது நடக்கத்தான் விடுவாரா அந்தக் குள்ளநரி?

ஒப்பந்தம் சரிவர நடைமுறையாக வேண்டும் என்பற்காகத்தான் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் “தமிழீழத்தைப் பிரித்துத் தா”என்று கேட்டு உண்ணாவிரதமிருந்தால் அதை எதிர்ப்பதில் நியாயம் உண்டு. இதை ஏன் எதிர்க்கிறார்கள்? புரியவேயில்லை!

நீங்கள் இருவரும் கையெழுத்துப் போட்ட ஒப்பந்தத்தை ஒரு திலீபன் சரிவர நிறைவேற்றும்படி கேட்கிறான். இது நியாயமான கோரிக்கையா இல்லையா?. இதைத் தமிழ் மக்களே முடிவு செய்யட்டும்.

இன்று (25.09.87) இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சியின் வடபிராந்தியக் குழு “இந்திய இராணுவத்தின் அத்துமீறலைக் கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு வெளியிட்டிருந்தது. வடக்கும், கிழக்கும் இணைந்த பிரதேச சுயாட்சியையும், நியாயபூர்வமான சகல உரிமைகளையும் வழங்க முன்வர வேண்டு மென்று அது தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

இன்று திருகோணமலையில் விறகு ஏற்றிச் சென்ற எட்டு அப்பாவித் தமிழர்கள் சிங்களக் குடியேற்றவாசிகளால் வெட்டிக் கொல்லப்பட்டனர் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.

நாளைமுதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும், போக்குவரத்துச் சேவை ஊழியர்களும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும் மறியலும் செய்து, தமது வேலைகளைப் புறக்கணிக்கப் போகின்றன என்று சகல பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள் ‘நிதர்சனம் தொலைக்காட்சிச் சேவை கடந்த 10 நாள்களாக தினமும் இரவு 7 மணிமுதல் விசேட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது.

இன்றிரவு திலீபனின் உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. அவர் சுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

திலீபன் சுயநினைவுடன் இருந்தபோது அவரால் விரும்பிக் கேட்கப்படும் பாடல் ஒன்றை இன்றிரவு மேடையில் ஒலிபரப்பினார்கள்.

அந்தப் பாடல் எனக்கு மட்டுமன்றி, திலீபன் இருந்த அந்த நிலையில் அனைவரினது கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்துவிட்டது.

“ஒ… மரணித்த வீரனே!
உன்
ஆயுதங்களை எனக்குத் தா ………
உன்
சீருடைகளை எனக்குத் தா ………
உன்
பாதணிகளை எனக்குத் தா!
(ஓ… மரணித்த)

கூட்டத்திலே சில பெண்கள் இந்தப் பாடலைக் கேட்டதும் விம்மி விம்மி அழத் தொடங்கினர்.

அந்த வேதனைமிக்க இரவு சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது. இரவே! நீ ஏன் இரக்கமில்லாமல் எமைவிட்டு மறைந்து கொண்டிருக்கிறாய்?

http://newuthayan.com/story/31836.html

Link to comment
Share on other sites

திலீ­ப­னின் இறு­தி­நாள் நினை­வேந்­தல் நல்­லூ­ரில் இன்று

 
 
திலீ­ப­னின் இறு­தி­நாள் நினை­வேந்­தல் நல்­லூ­ரில் இன்று
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

அமை­திப் படை­யா­கக் காலடி எடுத்து வைத்து ஆக்­கி­ர­மிப்­புப் படை­யாக மாறி ஈழத் தமி­ழர்­களை வேட்­டை­யாடி – சூறை­யாடி அழித்­தொ­ழித்த இந்­திய இரா­ணு­வத்­துக்கு எதி­ராக அகிம்சை வழி­யில் – 12 நாள்­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்தி வீரச்­சா­வ­டைந்த லெப். கேணல் தியாக தீபம் திலீ­ப­னின் 30ஆம் ஆண்டு நினை­வேந்­த­லின் இறுதி நாள் நிகழ்­வு­கள் இன்று இடம்­பெற உள்­ளன.

நல்­லூர் ஆலய பின்­வீ­தி­யில் அமைந்­துள்ள நினை­வி­டத்­தில் அஞ்­சலி நிகழ்­வு­கள் முற்­ப­கல் 10.15 மணி­ய­ள­வில் ஆரம்­ப­மா­கும்.

பொது மக்­கள், அரச, அரச சார்­பற்ற மற்­றும் தனி­யார் துறை சார்ந்­த­வர்­கள் மற்­றும் பொது அமைப்­புக்­க­ளை­யும் கலந்து கொள்­ளு­மாறு தியாகி திலீ­பன் நினை­வேந்­தல் ஏற்­பாட்­டுக் குழு அழைப்பு­ விடுத்­துள்­ளது.

http://newuthayan.com/story/31998.html

Link to comment
Share on other sites

தியாகதீபம் திலீபனுக்கு முல்லைத்தீவில் நினைவேந்தல்

 
தியாகதீபம் திலீபனுக்கு முல்லைத்தீவில் நினைவேந்தல்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

தியாக தீபம் திலீபனுடைய நினைவேந்தல் இன்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தொடர்பகத்தில் நடைபெற்றது.

கடந்த 11 நாள்களாக நினைவேந்தல் நடைபெற்றுவந்த நிலையில் இறுதி நாளான இன்று நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

6-2-750x400.jpg7-2-750x400.jpg

http://newuthayan.com/story/32066.html

Link to comment
Share on other sites

திலீபனுக்காக கைதடியிலிருந்து காவடி

 
 
திலீபனுக்காக கைதடியிலிருந்து காவடி
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

தியாக தீபம் திலீபனின் நினைவாக இன்று கைதடி பிள்ளையார் கோவிலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்துக்கு பக்தர் ஒருவர் காவடி எடுத்துவரும் காட்சி மக்களின் கண்களிலே கண்ணீரை வரவைத்துள்ளது.

தமிழர் தாயகத்தின் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அவர் தியாக வரலாறு படைத்த நினைவிடமருகே சிறப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இந் நிலையிலேயே தமிழரின் பண்பாட்டுப் பெறுமானIMG_6816.jpgIMG_6879.jpgIMG_6881.jpgIMG_6886-1.jpgIMG_6889.jpgIMG_6891.jpgIMG_6886.jpg59c9e83334087-IBCTAMIL.jpgங்களில் ஒன்றான காவடி எடுத்தல் நிகழ்வை தாயகப் பற்றாளர் ஒருவர் தற்பொழுது மேற்கொண்டுள்ளார்!

http://newuthayan.com/story/32090.html

Link to comment
Share on other sites

தியாக தீபம் திலிபனுக்கு மன்னாரில் நினைவேந்தல்

 
 
தியாக தீபம் திலிபனுக்கு மன்னாரில் நினைவேந்தல்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று இடம் பெற்றுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் மாட்டீன் டயேஸ்,மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், நானாட்டான் பிரதேச சபையின் உப தலைவர் எம்.றீகன்,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

DSC_0089.jpgDSC_0066.jpgDSC_0061.jpgDSC_0057.jpgDSC_0056.jpgDSC_0055.jpgDSC_0048-1.jpgDSC_0044-2.jpgDSC_0041.jpgDSC_0039-1.jpgDSC_0031.jpgDSC_0037.jpg

http://newuthayan.com/story/32194.html

Link to comment
Share on other sites

தியாக தீபம் திலீபனுக்கு கிளிநொச்சியில் நினைவேந்தல்

 
 
தியாக தீபம் திலீபனுக்கு கிளிநொச்சியில் நினைவேந்தல்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

தியாகத் தீபம் லெப். தீலிபனின் 30 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சி தமிழ்தேசியகூட்டமைப்பு அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாணசபை உறுப்பினர்களான குருகுலராஜா, பசுபதிப்பிள்ளை மற்றும் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

IMG_20170926_113040.pngIMG_20170926_113013.pngIMG_20170926_112917.pngIMG_20170926_112948.png

 

http://newuthayan.com/story/32134.html

Link to comment
Share on other sites

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திலீபனுக்கு அஞ்சலி

 
 
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திலீபனுக்கு அஞ்சலி
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இடம்பெறும் மண்டபத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திலீபன் அகிம்சையாக போராடியிருந்தார். அதே போன்று நாமும் எமது பிள்ளைகளை மீட்டு தருமாறு கோரி அகிம்சை வழியில் போராடி வருகின்றோம் என இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

http://newuthayan.com/story/32140.html

 

Thileepan-10.pngThileepan-9.pngThileepan-8.pngThileepan-7.pngThileepan-6.pngThileepan-1.pngThileepan-2.pngThileepan-3.pngThileepan-5.pngThileepan-4.pngThileepan-11.png

Link to comment
Share on other sites

தியாக தீபத்தின் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நல்லூரில்

 
 
தியாக தீபத்தின் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நல்லூரில்
 61
  •  
  •  
  •  
  •  
  •  

உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்தி வீரச்­சா­வ­டைந்த லெப். கேணல் தியாக தீபம் திலீ­ப­னின் 30ஆம் ஆண்டு நினை­வேந்­த­லின் இறுதி நாள் நிகழ்­வு­கள் இன்று நல்­லூர் ஆலய பின்­வீ­தி­யில் அமைந்­துள்ள நினை­வி­டத்­தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், மாவை சேனாதிராஜா, உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்­கள், அரச, அரச சார்­பற்ற மற்­றும் தனி­யார் துறை சார்ந்­த­வர்­களு்ம்  கலந்துகொண்டு  திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலிசெலுத்திவருகின்றனர்.

gdhh.png

huyuu.pnggyyyy.pngghhjuyu.pngfffgggg.pngCapture-5.pngeerr.png

 

 

 
Link to comment
Share on other sites

தியாக தீபம் தீலிபனுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல்

 
தியாக தீபம் தீலிபனுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்தி வீரச்­சா­வ­டைந்த லெப். கேணல் தியாக தீபம் திலீ­ப­னின் 30ஆம் ஆண்டு நினை­வேந்­த­லின் இறுதி நாள் நிகழ்­வு­கள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

22046175_934035996745800_58450194048803622008102_934036023412464_29321104826844922046664_934036020079131_360879007265975

http://newuthayan.com/story/32175.html

Link to comment
Share on other sites

விடுதலையின் உறுதி பார்த்தீபம்

 
 
விடுதலையின் உறுதி பார்த்தீபம்
 2
  •  
  •  
  •  
  •  
  •  

“எமது மண்­ணின் விடு­த­லைக்­காக யார் போரா­டு­கி­றார்­களோ அவர்­களே இந்த மண்­ணின் மைந்­தர்­கள்.எமது உரி­மை­களை நாமே வென்­றெ­டுக்­க­வேண்­டும். இதற்கு வேறு எவரு­டைய தய­வை­யும் எதிர்­பார்க்­கக்­கூ­டாது.நான் ஆத்­ம­ரீ­தி­யாக உணர்­கி­றேன். இன்­றில்­லா­விட்­டா­லும் என்றோ ஒரு நாள் எனது மக்­கள் நிச்­ச­ய­மாக விடு­த­லை­ய­டை­வர்.” 
– திலீ­பன்

thileepan-1.png

அழ­கான மழை­யு­திர்­கா­லம் கார்த்­திகை மாதம்.அழ­கான, உவ­மான உவ­மே­யங்­கள் அற்ற தியா­கக் கோலம் பார்த்­தீ­பன் முகம்.எங்­கும் மஞ்­சள் சிவப்­பாய் அன்­பின் வண்­ணங்­களைச் சூடியபடி காந்­தள் மலர்­க­ளின் ஒத்­திகை.நீள் துயில்­வின் விழிப்­பாய் சுடர்­வி­டும் ஒளி­யின் மிளிர்கை.

தென்­ற­லோடு ஆர்ப்­ப­ரிக்­கும் பாக்­க­ளின் இடை­வி­டாத இசை­வின் அளிக்கை.நெஞ்­சங்­கள் பட­ப­டக்க ஆன்­மங்­கள் எழுந்­த­ரு­ளும் கோல­மாய் ஒப்­பில்­லாத கண்­ணீர் மழை­யின் பொழிகை.தேசம் எங்­கு­மாய் உற­வு­க­ளின் கூடுகை.

இத்­த­னை­யும் விடு­த­லை­யின் வர­லாற்­றுப் படி­க­ளாய் எம்­மோடு.எம்­மூடு பய­ணப்­ப­டு­கின்­றன.வீர தீரங்­க­ளாய்,பசித் தீயின் சுட­ராய் அழி­வு­களை சுட்­டெ­ரித்த தீயி­ட­லாய் தியாக தீபம் எப்­போ­து­மாய் பொருள் கூறப்­பட்­டுக் கொண்­டே­யி­ருக்­கி­றது.
தமிழ்ச் சமூக விடு­த­லை­யின் இலக்­க­ண­உச்­ச­மாக.சிந்­த­னை­யின் எச்­ச­மாக உயர்வு பெற்­றி­ருக்­கின்­றது.

தியா­கத்­தின் தரு

sd.jpg

இத­னி­டை­யாய் காலங்­கள் கரைந்து கொள்­கி­றது.நீண்ட வழித்­த­டங்­க­ளின் போக்­கினை ஞாப­கங்­க­ளின் உள்­ளாய் நிஜத்­தின் வெளி­யாய் திரை­யிட்­டுச் செல்­கி­றது.அந்­த­வ­கை­யிலே தமி­ழி­னத்­தின் உரிமை விடி­யல் என்ற உன்­னத இலக்­கின் அடை­த­லுக்­கான உறு­தி­யின் பற்­று­தல் நகர்­வு­கள், என்­றும் மறந்து போகவோ மரித்­துப்­போ­கவோ முடி­யா­தவை.

கலை, கலா­சா­ரம்,ஒழுக்க விழு­மி­யங்­கள், தனித்­து­வ­மான தமிழ்த் தாய் மொழி­யின் சிறப்பு, பொருண்­மிய மேம்­பாட்­டின் குறி­காட்டி­ கள்,நீதி செய்­த­லின் காப்­ப­கங்­கள்,காவல் பணி­யின் தீட்­சி­தங்­கள் இவை அத்­த­னை­யை­யும் கடந்­து­மாய் தாய் மண் பற்று­று­தி­யின் மைய­மாய் காத்து, இரட்­சித்து நின்ற முப்­ப­டை­க­ளின் பரி­மா­ணம்.

அதன் மொத்த உரு­வ­மாய் வானு­யர்ந்து நின்ற கரி­கா­லத் தம்பி என்ற தலை­ம­க­னின் திரு­வு­ரு­வம்,அவ­னோடு அசைந்த திலீ­பம் எனும் தியா­கத்­தின் தரு என்­றென்­றும் விழித்­தி­ரை­ய­கன்று போகா­தவை.எதி­ரி­யின் விழி பிதுங்க தலை­சாய்ந்­தி­டாத செய­லு­ரு­வா­னவை….!

செய­லூட்­ட­மற்ற வறட்சி

இந்த சந்­தர்ப்­பத்­திலே போர் முடி­வுற்­ற­தன் பின்­பான ஆறாண்டு ஒழி­வி­னுள் அரசு என்று வரை­யறை கொள்­ளப்­ப­டு­கின்ற பொறி­மு­றை­கள் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் தமி­ழர்­க­ளுக்­கான தீர்­வினை நாட முன்­வ­ர­வில்லை.மூன்று தசாப்­த­கா­லங்­கள் சுமந்­தி­ருந்த மாட்­சிமை பொருந்­திய வேட்கை என்­பது சிறைப்­பட்­டி­ருக்­கின்­றது.

இழைக்­கப்­பட்­ட­ குற்­றங்க­ளுக்கு நியா­யம் வழங்­கப்­ப­ட­வில்லை.வெறு­மனே காலத்துக்குக் காலம், ஆட்­சி­யில் அமர்ந்து கொள்­ளு­கின்ற பெரும்­பான்­மை­யி­னத்தின் முக­மாற்­றங்­க­ளின் சுழற்சி என்­பது செய­லூட்­ட­மற்ற வறட்­சி­யாக தமிழ் மக்­க­ளோடு தொடர்­பு­று­கி­றது.

இலங்­கைத் திரு­நாட்­டின் வடக்­கா­ யும் கிழக்­கா­யும் பூர்­வீ­கம் கொண்­டுள்ள ஓர் தனித்­துவ இன­மான தமிழ்க் கு­டி­க­ளுக்கு நல் விடி­ய­லின் மொழி­வு­த­ரல் என்­பது வேறு­பட்ட திசை காட்­டி­களை நம்­பி­யி­ருக்­கி­றது.

அவை அகிம்சை,ஆயு­தம் என்ற பரி­ணா­மங்­கள் தாண்டி தற்­போது வாக்­கு­ரி­மை­யின் நடை­மு­றைத் தொனிப்­பாக ஜன­நா­ய­கப் பண்­பின் வேக­மற்ற தொனிப்­பாக அசைந்­தி­ருக்­கி­றது.அமைந்­தி­ருக்­கி­றது.இந்த அசை­வு­க­ளுக்கு உற்­சா­க­மான திட்­ட­மி­ட­லும் செயல் முனை­வான கூட்­டி­ணை­வும் தேவைப்­ப­டு­கின்­றது.

விறு­வி­றுப்­பான வார்த்­தை­கள் களைந்த, சுறு­சு­றுப்­பான இலக்கு நிர்­ண­யப் பாய்ச்­ச­லின் இடை­வி­ல­க­லற்ற பங்­காற்­றல் வேண்­டப்­ப­டு­கி­றது.உரிமை என்ற உயர்­வினை அடைய வேண்­டு­மெ­னில் நடந்து வந்த பாதை­க­ளின் மீள்­பார்வை­ யும் அவற்­றின் உள்­ளாய் கருத்­துக்­களை எடுத்­தி­யம்­பு­கின்ற பக்­கங்­க­ளின் வாசிப்­பி­னை­யும் மிகைப் படுத்­திக் கொள்ள வேண்­டும்…!

சிந்­தித்துச் செய­லாற்­றுங்­கள்

ஆக,ஒரு புரட்­சி­யின் வித்­த­க­மான தானைத் தமி­ழ­னின் நாமங்­க­ளும்,மீளாத நினை­வும்,அவன் ஆயு­ளின் அதிகப்­ப­டுத்­த­லும் உச்­ச­ரிக்­கப்­பட்­டும் ஞாப­கம் கொள்­ளப்­பட்­டும் விட்­டன.

ஆயி­ரம் ஆயி­ரம் உயிர்த் தியா­கங்­க­ளின் ஓவி­யம் மனத் திரை­க­ளிடை வரைந்­து­கொள்­ளப்­பட்ட நிகழ்­வு­க­ளின் தரு­ணங்­க­ளும் அவ­னோடு நகர்ந்து ­விட்­டன.இருந்தபோதும் தமி­ழி­னம் எதிர்­கொண்ட,எதிர்­வு­கூ­று­கின்ற துன்­பங்­கள் அழிந்­து­போ­க­வில்லை.

வெற்றி என்ற இலக்குக் கான செயல் உறு­தி­யோடு நகர்­வுற வேண்­டிய கணப்­பொ­ழு­து­களை உச்­ச­ரித்து ஓய்­கி­றது…! மூ பத்து ஆண்­டு­க­ளின் தியாக வேட்­கையை, தமி­ழர் எதிர்­கா­லத்­தின் நிலைத்­தி­ருப்­பினை ஜன­நா­யகப் பண்­பின் செயல்­வ­டி­வங்­க­ளி­டம் விடு­த­லை­யின் உறு­தி­யாய் நம்­பிக்­கை­யோடு ஒப்­பு­விக்­கி­றது. சிந்­தித்­த­ படி நித்­த­மும் செய­லாற்­றுங்­கள்.

ஆம், இளை­ஞர்­க­ளாக,ஒற்­று­மை­யின் பல­வான்­க­ளாக,இலட்­சி­யத்­தின் போரா­ளி­க­ளாக இனி­யா­வது இந்த நிலை­யி­லி­ருந்து மீள்­வோமா…? அதற்­காக ஒரு­மு­கப்­பட்டுச் சிந்­திப்­போமா…? சிந்­திக்க வேண்­டும்….!

வாழ்க்­கை­யின் நியதி

அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்­றும் இருந்­தால் போதும், வேறு எது­வும் தேவை­யில்லை. அன்­பு­தான் வாழ்க்­கை­யின் ஒரே நியதி. எல்­லா­வி­த­மான சுய­ந­ல­ மும் சாவு தான். மற்­ற­வர்­க­ளுக்கு நன்மை செய்­வ­து­தான் வாழ்க்கை.

மற்­ற­வர்­க­ளுக்கு நன்மை செய்­யா­மல் இருப்­ப­து­தான் மர­ணம். என் இளை­ஞர்­களே, அன்­பு­டை­ய­வர்­க­ளைத் தவிர மற்­ற­வர்­கள் வாழ்­ப­வர்­கள் அல்­லர். என் குழந்­தை­களே…! மற்­ற­வர்­க­ளுக்­காக உங்­கள் மனம் உருக வேண்­டும்.

ஏழை எளி­ய­வர்­கள், பாம­ரர்­கள், ஒடுக்­கப்­பட்­ட­வர்­கள் ஆகி­ய­வர்­க­ளுக்­காக உங்­கள் மனம் உருக வேண்­டும்.

மற்­ற­வர்­க­ளின் நன்­மை­யின் பொருட்டு உங்­கள் இத­யமே நின்று, மூளை குழம்பி, உங்­க­ளுக்­குப் பைத்­தி­யம் பிடிக்­கும் என்ற நிலை வரும் வரை­யில், மற்­ற­வர்­க­ளுக்­காக நீங்­கள் மனம் உரு­குங்­கள்.

பிறகு இறை­வ­னின் திரு­வ­டி­க­ளில் உங்­கள் ஆன்­மா­வைச் சமர்ப்­பி­யுங்­கள். அப்­போது உங்­க­ளுக்கு ஆற்­றல் வரும், உதவி வரும், குறை­யாத ஊக்­கம் வரும்.

சுதந்­தி­ரம் இன்றி வளர்ச்சி இல்லை

என்­னைச் சுற்­றி­லும் இருள் சூழ்ந் தி­ருந்­த­போ­தும், முயற்சி செய்­யுங்­கள்..! பயப்­ப­டா­தீர்­கள்! பணத்­தால் பய­னில்லை. ஒழுக்­கம் ஒன்­று­தான் துளைக்க முடி­யாத சுவர்­க­ளை­ யெல்­லாம் துளைத்து எம்மை முன்­னே­றச் செய்­கி­றது. சுதந்­தி­ரம் இல்­லா­மல் எந்த வளர்ச்­சி­யும் அடைய முடி­யாது.

வளர்ச்­சிக்கு முதல் நிபந்­தனை சுதந்­தி­ரம்.சமு­தா­யத்­தில் கொடு­மை­களை அகற்ற வேண்­டும். சமு­தா­யத்­தில் கொடு­மை­கள் வேண்­டாம்;. மற்­ற­வர்­க­ளுக்­குச் சுதந்­தி­ரம் அளிக்­கத் தயா­ராக இல்­லா­த­வ­னுக்கு, சுதந்­தி­ரம் பெறு­வ­தற்­குத் தகுதி கிடை­யாது.

நற் சமு­தா­யத்தை உங்­க­ளால் உரு­வாக்க முடி­யுமா…? முடி­யும்…! முடிய வேண்­டும் என்­ப­து­தான் எனது நம்­பிக்கை. நல் வழி­யில் சமு­தா­யத்­தைப் புதுப்­பிப்­ப­தற்கு முயற்சி செய்­யுங்­கள்.

உங்­க­ளி­டம் ஊக்­கம் என்ற நெருப்பு பற்றி எரிய வேண்­டும். பிறகு அதை எல்லா இடங்­க­ளி­லும் பரப்­புங்­கள். வேலை செய்­யுங்­கள்.சுய­ந­லம் இல்­லா­த­வ­னாக இரு.எல்­லை­யற்ற பொறு­மை­யு­டன் இரு. அவ் வி­தம் நீ செய்­தால் உனக்கு வெற்றி நிச்­ச­யம்.

மற்­ற­வர்­க­ளின் நன்­மைக்­காக வேலை செய்­வ­து­தான், வாழ்க்­கை­யின் இலட்­சி­யம். போலித்­த­னம் என்­பது இருக்­கக் கூடாது, பொய் கூடாது, போக்­கி­ரித்­த­னம் கூடாது – இதைத்­தான் நான் விரும்­பு­கி­றேன்.

ஒழுக்­கக்­கேடு என்ற மூச்­சுக்­காற்­று­கூட வீசக் கூடாது; செயல்­மு­றை­யில் குற்­றத் தின் நிழல்­கூ­டப் படி­யக் கூடாது.

எல்­லா­வற்­றி­லும் எச்­ச­ரிக்­கை­யாக இருங்­கள்

சல­ன­புத்தி வேண்­டாம், இர­க­சிய வித்தை என்ற அயோக்­கி­யத்­த­னம் வேண்­டாம், இருட்­டில் செய்­யும் எது­வும் வேண்­டாம். என் வீரக் குழந்­தை­களே..! முன்­னேறுங் கள்.

பணம் இருந்­தா­லும் சரி, இல்­லா­மல் போனா­லும் சரி,உங்­க­ளு­டன் மனி­தர்­கள் இருந்­தா­லும் சரி, இல்­லா­மல் போனா­லும் சரி முன்­னே­றிச் செல்­லுங்­கள்; கவ­ன­மாக இருங்­கள்.

உண்­மைக்­குப் புறம்­பான எல்­லா­வற்­றி­லும் எச்­ச­ரிக்­கை­யாக இருங்­கள். உண்­மை­யை­வி­டா­மல் பிடித்­துக்­கொள்­ளுங் கள் !

http://newuthayan.com/story/32006.html

Link to comment
Share on other sites

 

திருகோணமலையில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு

 
 
திருகோணமலையில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

தியாகி திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையிலும் இன்று காலை இடம்பெற்றது.

திருகோணமலையில் சாத்வீக போராட்டத்தில் ஈடுபடும் உறவுகளான கடத்தப்ட்டு கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

திலீபனின் உருவப் படத்திற்கு மலர் மலை அணிவித்து சுடர் ஏற்றி தமது நினைவேந்தலை மேற்கொண்டனர்.

gdf.jpg

hf.jpg

jgh.jpg

http://newuthayan.com/story/32265.html

Link to comment
Share on other sites

நல்லூரில் அணைந்தது தீபம் – 1987 செப்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி

 
நல்லூரில் அணைந்தது தீபம் – 1987 செப்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி
 7
  •  
  •  
  •  
  •  
  •  
(கவிஞர் மு.வே.யோ இன் உரையில் இருந்து)

1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள்.

தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உணவு ஒறுப்பு மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ். பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி 12 நாள்களாகத் தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக் கொண்டு 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணுக்குத் தன் உயிரை ஈந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினான்.

 

உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உணவு ஒறுப்பை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனிஇடம் பெற்று விட்டான்.

உயிர் துறந்த பின்னும் கூட மக்களுக்கு பயன்பட எண்ணியதால் தான் இறந்ததும் தனது உடலை யாழ். மருத்துவ பீடத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அவனது இறுதி விருப்பத்தின் பேரில் வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் கோவில் முன்றிலில் திரண்டிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் செப்ரெம்பர் மாதம் 28ஆம் திகதி விடுதலைப் புலிகளால் யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி சிவராஜாவிடம் திலீபனது உடல் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

தமது இறுதி அஞ்சலியை செலுத்தக் கூடியிருந்த மக்களில் பலர் துன்பம் தாழாது மயங்கி விழுந்தனர். சோக ஒலி தமிழீழம் எங்கும் எதிரொலித்தது.

இந்தப் 12 நாள்களில் மூன்று முறை திலீபன் மக்களிடம் பேசினார்.

“நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன்.” என்றார்.

இதையேதான் அவர் மூன்று முறை பேசியபோதும் சொன்னார்.

ஆம், பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.

26a-thileepan-resized-1.jpgcnv00000037-750x400.jpgDJvuY8mWsAAYZ9Z-702x400.jpg

http://newuthayan.com/story/32165.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரனுக்கு வீர வணக்கம் tw_cold_sweat:

Link to comment
Share on other sites

தியாகி தீலிபன் உயிர்தியாகத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அனுஸ்டிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.