Jump to content

தியாக தீபத்­தின் நினைவு நாள் இன்று ஆரம்­பம்


Recommended Posts

தியாக தீபத்­தின் நினைவு நாள் இன்று ஆரம்­பம்

தியாகதீபம் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள்

அமை­திப் படை­யா­கக் காலடி எடுத்­து­வைத்து ஆக்­கி­ர­மிப்­புப் படை­யாக மாறி ஈழத் தமி­ழர்­களை வேட்­டை­யாடி சூறை­யாடி – அழித்­தொ­ழித்த இந்­திய இரா­ணு­வத்­துக்கு எதி­ராக அகிம்சை வழி­யில் – 12 நாள்­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்தி வீரச்­சா­வ­டைந்த லெப். கேணல் தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வு­நாள் தாயக மண்­ணி­லும் – புலம் பெயர் தேசத்­தி­லும் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

மக்­கள் மத்­தி­யில் விடு­த­லைத் தீயை விதைத்த திலீ­பன், உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை இதே­போன்­ற­தொரு நாளில் 30ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக – 1987ஆம் ஆண்டு ஆரம்­பித்­தார்.

ஈழத் தமி­ழ­ரின் தாயக தேசம் எங்­கும் நிலை கொண்­டி­ருந்த இந்­திய இரா­ணு­வம் மற்­றும் இலங்கை அர­சுக்கு எதி­ராக 5 அம்­சக் கோரிக்­கையை முன்­வைத்து அகிம்­சைத் தீயை நல்­லூ­ரில் திலீ­பன் பற்ற வைத்­தார்.

12 நாள்­கள் நீரா­கா­ர­மும் இன்றி உணவு ஒறுப்பை முன்­னெ­டுத்த தியாக தீபம் திலீ­பன், 1987ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 26ஆம் திகதி வீரச்­சா­வைத் தழு­விக் கொண்­டார்.

அகிம்­சை­யைப் போதித்த – காந்­திய தேசம் என்று சொல்­லப்­பட்ட இந்­தியா, தியாக தீபம் திலீ­ப­னின் அகிம்­சைப் போராட்­டத்­தின் முன் தோற்­றுப் போனது. திலீ­ப­னின் சாவை வேடிக்கை பார்த்­தது இந்­தியா.

இதுவே பின்­னா­ளில் விடு­த­லைப் புலி­கள் இந்­தி­யாவை ஈழ­மண்­ணி­லி­ருந்து அடித்து – விரட்டி – துரத்­தும் அள­வுக்கு மாற்­றம் கண்­டது.

‘மக்­கள் புரட்சி வெடிக்­கட்­டும்! சுதந்­திர தமி­ழீ­ழம் மல­ரட்­டும்!!’ என்று முழக்­க­மிட்டு தாயக மண்ணை முத்­த­மிட்டு வீர­கா­வி­யம் படைத்த தியாக தீபம் திலீ­ப­னின் நினைவு நாள், தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் ஆளு­கைப் பிர­தே­சங்­க­ளில் மிக உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடந்த காலங்­க­ளில் நினை­வு­கூ­ரப்­பட்­டது.

சிவப்பு – மஞ்­சள் கொடி­க­ளால் தமி­ழர் தாயக மண் அலங்­க­ரிக்­கப்­பட்டு, முக்­கிய சந்­தி­க­ளில் திலீ­ப­னின் உரு­வப்­ப­டம் வைக்­கப்­பட்டு அஞ்­சலி நிகழ்­வு­கள் நடத்­தப்­பட்­டன.

தாயக தேசத்­தில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மௌனிக்­கப்­பட்ட பின்­னர், பகி­ரங்­க­மாக – பொது­வெ­ளி­யில் நினை­வு­நாள் நினை­வு­கூ­ரப்­ப­ட­வில்லை.

புலம் பெயர் தேசங்­க­ளில் மாத்­தி­ரம் பேரெ­ழுச்­சி­யு­டன் நினை­வு­கூ­ரப்­பட்டு வந்­தது.

2016ஆம் ஆண்டு, நல்­லூ­ரில் உள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி­யில் – 10ஆண்­டு­க­ளின் பின்­னர் பகி­ரங்­க­மாக நினை­வு­நாள் நிகழ்­வு­கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன.

http://newuthayan.com/story/28750.html

Link to comment
Share on other sites

மிழ் மக்களுக்கு உரிமை வேண்டி தன்னுயிரை ஆகுதி ஆக்கிய திலீபன்

Bildergebnis für திலீபன்

தியா­கம் என்­றால் திலீ­பன்; திலீ­பன் என்­றால் தியா­கம் என்று கூறு­ம் அள­வுக்­குத் தமிழ் மக்­க­ளின் நெஞ்­சங்­க­ளில் என்­றும் நிறைந்து நிற்­கும் திலீ­ப­னது ‘தியாக தீபம்’ என்ற கார­ணப்­பெ­யர் பெரு­ம­திப்­புக்­கு­ரி­யது மட்­டு­மன்றி, போற்­று­தற்­கு­ரி­ய­தொன்­று­மா­கும்.

அத­னால் தான் தியாகி திலீ­ப­னின் தியா­கத்­தை­ யும் ஈகத்­தை­யும் தமிழ் மக்­கள் ஒவ் வொ­ரு­வ­ரும் வரு­டா­வ­ரு­டம் பன்­னிரு நாள்­கள்­வரை தொடர்ச்­சி ­யாக நினைவு கூரு­கின்­ற­னர்.

1987 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 15 ஆம் நாள் தொடங்கி, பன்­னி­ரண்டு நாள்­கள் வரை, ஒரு துளி நீர் கூட அருந்­தாது உணவு ஒறுப்­புப் போராட்­டம் மேற்­கொண்டு செப்­ரெம்­பர் 26 ஆம் திகதி வீர­சு­வர்க்­க­ம­டைந்த அந்த தியா­கச் செம்­ம­லின் நினைவு நாள்­களை தமி­ழி­னம் வழமை போன்று இன்று செப்­ரெம்­பர் 15 ஆம் நாள்­மு­தல் கடைக் கொள்­கி­றது.

ஈழத்­த­மி­ழர் அடங்­க­லாக புலம்­பெ­யர் தமிழ் உற­வு­க­ளும் திலீ­ப­னது 30ஆம் ஆண்டு நினைவு நாள்களாக அமை­யும் இந்த ஆண்­டின் செப்­ரெம்­பர் 15ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை­யான பன்­னி­ரு­நாள்­க­ளை­யும் தியாகி திலீ­ப­னின் உயிர்த்­தி­யா­கத்தை நினைவு கூர்ந்து அஞ்­ச­லிக்­கின்­ற­னர்.

இந்­திய அர­சி­டம் ஐந்து அம்­சக் கோரிக்­கை­களை முன்­வைத்­துத் தனது சாகும் வ­ரை­யான உணவு ஒறுப்புப் போராட்டத்தை நல்­லூர்க் கந்­த­சு­வாமி ஆலய வீதி­யிலே காலை வேளை­யில் தியா­ கச் சுடர் திலீ­பன் ஆரம்­பித்­தான்.

தமி­ழீழ விடு­த­லையை உயிர்­மூச்­சா­கக் கொண்­டி­ருந்த திலீ­பன், தமி­ழீ­ழத்தை அங்­கீ­க­ரிக்­கக் கோரி இந்­திய அர­சி­டம் மடிப்­பிச்சை கேட்­க­வு­மில்லை. கையேந்தி நின்று இரந்து கேட்­க­வு­மில்லை. திலீ­ப­னின் உணவு ஒறுப்புப் போராட்டம் இவற்­றுக்­கெல்­லாம் அப்­பாற்­பட்­ட­தா­க­வே­ அமைந்திருந்தது.

விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின் தலை­வ­ரான பிர­பா­க­ரன் 04.08.1987 அன்று சுது­ம­லை­ யில் நடை­பெற்ற கூட்­டத்­தில் ‘‘எமது போராட்ட வடி­வம் மாற­லாம். ஆனால் எங்­கள் குறிக்­கோள் என்­றுமே மாறாது’’ என்று சூளு­ரைத்­தி­ருந்­தார்.

போராட்­டத்­தின் மற்­றொரு வடி­வ­மாக அகிம்­சைப் போராட்­டத்தை விடு­த­லைப் புலி­கள் தேர்ந்­தெ­டுத்­தி­ருந்­த­னர். அதற்­க­மை­யவே திலீ­ப­னின் அகிம்­சைப் போராட்­டம் நீர் கூட அருந்­தாத உணவு ஒறுப்­புப் போராட்­ட­மாக அமைந்­தது.

1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி ஈழத் தமி­ழி­னத்­தின் நலன்­க­ளைப் பாது­காப்­ப­தா­கக் காட்­டிக் கொண்டு இந்­திய அரசு, அப்­போ­தைய இலங்கை அரச தலை­வ­ரான ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­னா­வு­டன் தமி­ழி­னத்­த­லை­வர்­க­ளை­யும் விடு­த­லைப்­பு­லி­க­ளை­ யும் புற­மொ­துக்கி வைத்­து­விட்­டுத் தனது விருப்­பப்­படி இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தை மேற்­கொண்­டது. தமி­ழர்­க­ளின் நலன் கருதி இரு­நாட்­டுத்­த­லை­வர்­க­ளா­லும் கைச்­சாத்­தி­டப்­பட்ட இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்­தில் தமி­ழர்­க­ளுக்­குச் சாத­க­மான அம்­சங்­கள் எது­வும் இருக்க வில்லை.

வடக்கு, கிழக்­கில் இந்­திய அமை­திப்­படை

அந்த ஒப்­பந்­தத்­தின் மூலம் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் இந்­திய அமை­திப்­ப­டை­யி­னர் நிறுத்­தப்­பட்­டி­ருந்­த­னர். கைச்­சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்­தத்­தில் விடு­த­லை­ப் புலிக­ளி­ட­மி ­ருந்து ஆயு­தங்­க­ளைக் களை­தல் என்­பதே முக்­கி­ய­மா­ன­தா­க­ வும், மாகா­ண­சபை உரு­வாக்­கப்­பட்டு அதன் மூலம் தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரத்­தைப் பகிர்ந்­த­ளிப்­பது என்ற விட­ய­மும் அடங்­கி­யி­ருந்­தது.

இந்­திய அரசு ஒப்­பந்­தம் கைச்­சாத்­தாகி குறு­கிய கால இடை­வெ­ளிக்­குள் தமி­ழி­னத்­திற்­கெ­தி­ரான போக்­கைப் படிப்­ப­டி­யா­கக் கடைப்­பி­டிக்­கத் தொடங்­கி­யது. அப்­போ­தைய இந்­தி­யத் தலைமை அமைச்­ச­ரான ராஜீவ் காந்தி சில உறுதி மொழி­களை விடு­த­லைப் புலி­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்­தார்.

அந்த உறு­தி­மொ­ழி­கள் எத­னை­யும் ராஜீவ் காந்தி நிறை­வேற்­றாத கார­ணத்­தி­னால் விடு­த­லைப் புலி­கள் அவற்றை நிறை­ வேற்­றும்­படி கேட்­டுக் கொண்­ட­போது, அதனை தலைமை அமைச்­சர் ராஜீவ் காந்தி நிரா­க­ரித்­து­விட்­டார்.

அந்­தக் கோரிக்­கை­களை நிறை­ வேற்­றுங்­கள் என்று வேண்­டியே தியாகி திலீ­பன் சாகும் வரை­யி­லான உணவு ஒறுப்புப் போராட்டத்தைத் தொடங்க வேண்­டிய நிலை­யேற்­பட்­டது.

விடு­த­லைப் புலி­கள், ஈழத் த­மிழ்­மக்­கள் சார்­பி­லான கோரிக்­கை­களை 13.09.1987 அன்று இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரான யோகேந்­தி­ர­நாத் டிக்­ஸிற்­றின் கைக­ளில் கிடைக்­கக் கூடி­ய­வாறு கடி­த­மூ­லம் அனுப்­பி­வைத்து அதற்­குப் பதி­ல­ளிக்க 24 மணித்­தி­யால அவ­கா­ச­மும் கொடுத்­தி­ருந்­த­னர்.

ஆனால் 15.09.1987 வரை எது­வி­த­மான பதில்­க­ளும் விடு­த­லைப் புலி­க­ளுக்கு இந்­தி­யத்­தூ­து­வ­ரி­ட­மி­ருந்து கிடைக்­க­வில்லை.

உணவு ஒறுப்புப் போராட்டமும் மறி­யல் போராட்­ட­மும் நடத்­து­வ­தென தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் பிர­தே­சப் பொறுப்­பா­ளர்­க­ளின் கூட் டத்­தில் 13.09.1987 அன்று தீர்­மா­ னிக்­கப்பட்­டது.

அதற்­க­மை­வா­கவே அகிம்­சைப் போராட்­ட­மும் ஆரம்­ப­மா­கி­யது. தானே சாகும்வரை உண்ணா நோன்­புப் போராட்­டத்­தில் குதிப்­ப­தாக திலீ­பன், தலை­வ­ரான பிர­பா­க­ர­னி­டம் வேண்­டிக் கொண்­டார். அதன்­படி திலீ­ப­னின் தியா­கப் பய­ணம் ஆரம்பமானது.

திலீ­பன் முன்­வைத்த ஐந்து அம்­சக் கோரிக்­கை­கள்

Bildergebnis für திலீபன்

இந்­திய அர­சி­டம் 5 அம்சக் கோரிக்­கையை­ முன்­வைத்தே திலீ­ப­னது அகிம்­சைப் போராட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டத்­தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­கள் உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­பட வேண்­டும்;

வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்­தல் நடை­பெற்­றுப் புதிய நிர்­வாகம் பொறுப்­பேற்­கும் வரை வடக்கு கிழக்கு நிர்­வா­கத்தை மேற்­கொள்­வ­தற்­காக வாக்­கு­றுதி அளித்­த­வாறு இடைக்­கால நிர்­வாக சபையை நிறுவ வேண்­டும்;

மீள்­கு­டி­ய­மர்­தல் என்ற பெய­ரில் வடக்­கி­லும் கிழக்­கி­ லும் சிங்­க­ள­வர்­கள் குடி­ய­மர்த்தப்­ப­டு­வது உடன் நிறுத்­தப்­பட வேண்­டும்; அவ­ச­ர­கா­லச் சட்­ட­மும் முழு­மை­யாக நீக்­கப்­பட வேண்­டும்; வடக்­குக் கிழக்­கில் பொலிஸ் நிலை­யங்­கள் இரா­ணுவ முகாம்­கள் புதி­தா­கத் திறக்­கப்­ப­டக் கூடாது என்­ப­வையே அந்த ஐந்து முக்­கிய கோரிக்­கை­க­ளா­கும்.

இந்­திய ஆதிக்க அரசு, பசுத்­தோ­லா­கப் போர்த்­தியி­ருந்த அமை­திப்­படை என்ற போலி­யான முகத்­தி­ரையை கிழித்­தெ­றிந்து, அது அக்­கி­ரம ஆக்­கி­ர­மிப்­புப் படை­யாக மாறி­விட்­டது என்­ப­தைத் தியாகி திலீ­பன் தன்­னு­டைய அகிம் சைப் போரின் மூலம் இந்­தி­ய­வல்­ல­ர­சுக்கு போதித்­துக் கொண்­டி­ருந்­தான்.

யாழ்ப்்­பா­ணத்­தி­லுள்ள ஊரெழு என்ற கிரா­மத்­தில் 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம்­தி­க­தி­யன்று ஆசி­ரி­ய­ரான இரா­சையா தம்­ப­தி­யி­ன­ருக்கு கடை­சிப்­பிள்­ளை­யா­கப் பிறந்த திலீ­ப­னது இயற்­பெ­யர் பார்த்­தீ­பன் என்­ப­தா­கும்.

தாயை இழந்த திலீ­பன் தந்­தை­யின் அர­வ­ணைப்­பிலே வளர்ந்து ஊர்ப்­பள்­ளி­யில் கல்வி கற்ற பின்­னர் உயர்­த­ரக் கல்­வியை யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள பிர­பல கல்­லூ­ரி­யில் தொட­ரு­கின்­றான்.

சிறு­வ­யது முதற் கொண்டே படிப்­பி­லும் விளை­யாட்­டி­ லும் கெட்­டிக்­கா­ர­னா­கத் திகழ்ந்­தான் திலீ­பன். எல்­லோ­ரி­ட­மும் அன்­பும், பாச­மு­மா­கப் பழ­கும் குணம் அவ­னி­டம் சிறு­வ­ய­தி ­லி­ருந்தே ஊறி­யி­ருந்­தது. உயர்­த­ரப்­ப­ரீட்­சையை முடித்­துப் பல் க­லைக்­க­ழக அனு­ம­திக்­கா­கக் காத்­தி­ருந்­தான்.

1979 ஆம் ஆண்டு அப்­போ­தைய அரச தலை­வ­ரான ஜே.ஆர்.ஜெய­வர்த்­தனவின் அரசு, தமி­ழர் பிர­தே­சத்­தில் தமிழ் இளை­ஞர்­களை வேட்­டை­யாட ஆரம்­பித்­தது.

பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டத்தை நாடா­ளுமன்­றத்­தில் விசே­ட­மாக இயற்றி அந்­தச் சட்­டத்­தின் பலத்­து­டன் தமிழ் இளை­ஞர்­க­ளைத் தேடி அழிக்­கின்ற நட­வ­டிக்­கை­க­ளில் இரா­ணு­வத்­தி­னர் அந்­தக் காலப்­ப­கு­தி­யில் மூர்க்­கத்­த­ன­மாக ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்­த­னர்.

குடா­நாட் டுக்­குள் பல இளை­ஞர்­கள் வீடு­க­ளி­லி­ ருந்து பல­வந்­த­மாக இழுத்­து­வ­ரப்­பட்டு சுட்­டுக் கொல்­லப்­பட்­டுச் சட­லங்­க­ளாக வீதி­யோ­ரங்­க ளில் வீசப்­பட்­ட ­னர்.

இலங்­கைப் படை­யி­ன­ரின்  அட்­டூ­ழி­யங்­க­ளால் மன­வை­ராக்­கி­ய­முற்ற திலீ­பன்

மாண­வ­னாக இருந்த போது படை­யி­ன­ரின் இத்­த­கைய கொடூ­ரங்­கள் திலீ­ப­னின் மன­தில் ஆழப்­ப­திந்­தி­ருந்­தன. தமிழ் மாண­வர்­கள் மீது சிறிமாவோ அரசு கொண்டு வந்த தரப்­ப­டுத்­தல் திட்­ட­மும் திலீ­பனை வாட்­டி­யி­ருந்­தது.

அதற்­கும் மேலாக, 1983ஆம் ஆண்டு இலங்­கை­யில் இடம்­பெற்ற தமிழ் மக்­கள் மீதான அடக்­கு­மு­றை­யும் இனக் க­ல­வ­ர­மும் அவனது 20 ஆவது வய­தில் அவ­னது இத­யத்­தில் சிங்­க­ளப்­ப­டை ­கள் மீதான வைராக்­கி­யத்தை ஏற்­ப­டுத்தி வைத்­தி­ருந்­தது மட்­டு­மல்­லா­மல் கடும் பகை உணர்­வை­யும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

திலீ­பன் மருத்­து­வ­பீ­டத்­துக்­குத் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றான். எதிர்­கா­லத்­தில் மருத்துவராகி வச­தி­யான வாழ்க்­கைக்­குள் சென்­று­விட வேண்­டும் என்ற கன­லைத் தூக்­கி­யெ­றிந்­து­விட்டு தமி­ழி­னத்­தின் விடு­த­லைக்­காக புலி­கள் அமைப்­பில் இணைந்து கொள்­கின்­றான். ஆயு­தப் போரா­ளி­யாக மாறிய திலீ­பன் தன்­னு­டைய திற­மை­யா­லும் பேச்­சாற்­ற­லா­லும் படிப்­ப­டி­யாக உய­ரு­கின்­றான்.

இடைக்­கா­டுப்­ப­கு­தி­யில் இலங்கை இரா­ணு­வத்­துக்­கும் விடு­த­லைப்­பு­லி­ க­ளுக்­கு­மி­டை­யில் நடை­பெற்ற மோத­லொன்­றின்­போது திலீ­பன் படு­கா­ய­ம­டைந்து ஒரு சில மாதங்­கள் வரை­யில் சிகிச்­சை­பெற்ற பின்­னர் அர­சி­யல் பணியைப் பொறுப்பேற்று யாழ்.மாவட்ட அர­சி­ய­ற்றுறைப் பொறுப்­பா­ள­ரா­கின்­றான். பேச்­சு­வன்மை கொண்ட திலீ­பன் மக்­க­ளின் மனங்­க­ளைக் கவர்ந்த போரா­ளி­யா­கின்­றான்.

நான் ஐந்து அம்­சக் கோரிக்­கை­களை முன்­வைத்து உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபடுகிறேன் என்று தலை­வ­ரி­டம் கேட்­டுக் கொண்டு அனு­மதி பெற்ற பின்­னர், செப்­ரெம்­பர் மாதம் 15 ஆம் திகதி திலீ­பன் காலை ஒன்­பது மணி­ய­ள­வில் நல்­லூர் வீதி­யில் திரண்­டி­ருந்த மாணவ மாண­வி­யர்­கள், பொது­மக்­கள் மத்­தி­யில் புன்­சி­ரிப்பை உதிர்த்­துக் கொண்டு அவர்­க­ளி­ட­மி­ருந்து கைய­சைத்து விடை­பெற்று உண்­ணா­வி­ரத மேடையை நோக்கி நடந்து சென்று மேடை­யில் அம­ரு­கின்­றான்.

அம­ரு­வ­தற்கு முன் எதிர்­பா­ராத வித­மாக வய­தான தாயொ­ரு­வர் கண்­க­ளில் நீர்­மல்க திலீ­பனை மறித்­துத் தன்­கை­யில் வைத்­தி­ருந்த விபூ­தி­ யைத் தனது கைக­ளால் எடுத்து திலீ­ப­னது நெற்­றி­யில் பூசு­கின்­றார். அந்­தத் தாயின் செய்­கை­யால் நெகிழ்ந்து போன திலீ­பன் 9.45 மணி­ய­ள­வில் தனது அறப் போராட்­டத்தை ஆரம்­பிக்­கின்­றான்.

கவி­ஞர் காசி ஆனந்­தன், பா.நடே­சன் ராஜன், அன்­ரன் மாஸ்­ரர், சொர்­ணம் உட்­பட்ட பல முக்­கிய போரா­ளி­கள் அமர்ந்­தி­ருக்க கவி­ஞர்­காசி ஆனந்­தன் திலீ­ப­னின் உண்­ணா­வி­ர­தம் ஏன் ஆரம்­பிக்­கப்­டு­கின்­றது என்­ப­தைப்­பற்றி விளக்­க­ம­ளிக்­கின்­றார்.

ஆரம்­பித்த நாளி­லி­ருந்து இறு­தி­நாள் வரை நல்­லூர் வீதி­யில் குடா­நா­டு­ க­ளி­லி­ருந்து மாணவ மாண­வி­யர்­கள் பொது­மக்கள் திரள்­தி­ர­ளாக வந்து கலந்து கொண்டார்கள். திலீ­ப­னின் தியா­கப் பய­ணத்தை, அறப் போராட்­டத்தை எடுத்­து­ரைத்தார்கள்; கவிதை மழை பொழி­ந்தார்கள்.

திலீ­ப­னது அகிம்­சைப்  போராட்­டத்தை எள்ளி  நகை­யா­டியது காந்தி தேசம்

அகிம்­சைப் போராட்­டத்­திற்கே ஆணி வேரா­கத் திகழ்ந்த அண்­ணல் காந்­தி­ய­டி­கள் தன்­னு­டைய உணவு ஒறுப்புப் போராட்­டங்­களை நீரா­கா­ரம் அருந்­தியே நடத்­தி­யி­ருந்­தார்.

ஐரிஸ் போராட்ட வீரர் பொபி சான்ட்ஷ் சிறைக்­குள் நீரா­கா­ரம் அருந்­தித்­தான் உணவு ஒறுப்புப் போராட்­டத்தை ஆரம்­பித்து உயிர்த்­து­றந்­தார்.

உணவு ஒறுப்பு அற­வ­ழிப் போராட்­டத்தை தாங்­களே உல­குக்கு அளித்­த­தா­கப் பீற்­றிக் கொள்­ளும் இந்­திய தேசம், திலீ­ப­னது அறப்­போ­ராட்­டத்­தைக் கடை­சி­வரை கண்­டு­கொள்­ள­வே­யில்லை. காந்தி தேசத்­தின் புக­ழை­யும் பெரு­மை­யை­யும் தின­மும் பேசி வரு­கின்­ற­வர்­கள், திலீ­ப­னின் போராட்­டம் தவ­றா­னது என்று நிறுவ முயன்­ற­னர்.

தொடர்ந்து பன்­னி­ரு­நாள்­கள் வரை­யில் அறப்­போர் நிக­ழும் இட­மாக நல்­லூர் வீதி மாறி­யது. தன் தேகத்தை ஆகு­தி­யாக்கி எரிந்து கொண்­டி­ருந்­தான் திலீ­பன். அறப்­போர் மேடை­யில் புத்­த­கங்­கள், பத்­தி­ரி­கை­கள் வாசிப்­பதற்கு திலீ­பன் தவ­ற­வில்லை.

அவ்­வே­ளைய இந்­திய தலை­மை அ­மைச்­ச­ரான ராஜீவ்­காந்தி, திலீ­ப­னின் அறப் போராட்­டத்­துக்கு முக்­கி­யத்­து­வம் வழங்க முன்­வ­ர­வில்லை. திலீ­பனோ தன்னை உருக்கி மற்­ற­வர்­கட்கு ஒளி கொடுக்­கும் மெழு­கு­வர்த்­தி­யாக ஒவ்­வொரு கணத்­தி­லும் உரு­கிக் கொண்­டி­ருந்­தான்.

ஊரெழு மைந்­த­னின் நிலையை நினைத்­துக் கண்­ணீர் விட்­ட­னர் கூடி­யி­ருந்த மக்­கள். திலீபா, எங்­களை விட்­டுப் போகாதே; இந்­திய தேசமே, எங்­க­ளுக்­காக உயிர்க்­கொடை செய்ய முன்­நிற்­கும் எங்­கள் பிள்­ளை­யைக் காப்­பாற்று; என்­றெல்­லாம் கூறிக் கண்­ணீர் உகுத்­த­னர். கூடி­யி­ருந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­க­ளின் வேண்டு கோள்­களை இந்­திய அரசு தூக்­கி­யெ ­றிந்­தது.

‘‘யாழ்.கோட்­டை­யில் என்று புலிக்­கொடி பறக்­கின்­றதோ, அன்­று­தான் சுதந்­திர தமி­ழீ­ழத்­தின் ஆரம்­பம். மக்­கள் புரட்சி வெடிக்­கட்­டும். சுதந்­தி­ரத் த­மி­ ழீ­ழம் மல­ரட்­டும்; இந்த வெற்றி நான் என் உயி­ருக்கு மேலாக நேசிக்­கும் என்­மக்­க­ளுக்­கு­கி­டைக்­கட்­டும்.

எமது சந்­ததி வாழ ஒரு நாடு தேவை. இல்­லா­விட்­டால் நாளை எங்­க­ளைப் போன்­று­தான் எமது எதிர்­காலச் சந்­த­தி­யும் துன்­பப்­ப­டும்,’’ எனத் தனது இறுதி உரை­யில் தியாகி திலீ­பன் கூறு­கி­றான்.

‘‘என்­னால் பேச­மு­டி­ய­வில்லை. எனது மனம் மகிழ்ச்­சி­யில் மிதக்­கின்­றது’’ என்று பெரு­மி­தப்­ப­டு­கி­றான் அந்­தத் தியா­கச் செம்­மல். 265 மணி நேர
மா கதான் தமிழ் மக்­க­ளுக்­காக இயற்­றிய தனது உணவு ஒறுப்புப் போராட் டத்தை முடி­வுக்­குக் கொண்­டு­வந்து 26.9.1987 அன்று காலை 10.58 மணிக்கு வீர­சு­வர்க்­கம் எய்­து­கி­றான் தியா­கச்­சு­டர் திலீ­பன்.’’ ஓ மர­ணித்த வீரனே, உன் ஆயு­தங்­களை எனக்­குத்தா…’’ உன் சீரு­டை­களை எனக்­குத்தா என்ற பாட­லோடு திலீ­பன் வர­லா­றா­கி­னான்.

தியாகி திலீ­ப­னால் அன்று ஆரம்­பிக்­கப்­பட்ட அகிம்­சைப் போராட்­டம் பல ஆழ­மான விட­யங்­களை இன்­றைய கால­கட்­டத்­தில் தமி­ழி­னத்­துக்கு நினை­வு­றுத்தி நிற்­கி­றது. ஒப்­பற்ற வீர­னின் கன­வு­க­ளைச் சுமந்து நிற்­கின்ற ஒவ்­வொரு தமி­ழர்­க­ளும் அந்­தத் தியா­கச் செம்­மல் திலீ­பனை பன்­னி­ரு­நாள் வரை­யி­லும் நினைவு கூர்ந்து அஞ்­ச­லித்து நிற்­போம். அது ஒவ்­வொ­ரு­வ­ரி­ன­தும் வர­லாற்­றுக்­க­ட­மை­யா­கும்.

http://newuthayan.com/story/28755.html

 

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் - நல்லூரில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி

 
 
59bb63cf51c83-IBCTAMIL.jpg
59bb63cf7a126-IBCTAMIL.jpg
 
 
 
 
59bb63cf1fc97-IBCTAMIL.jpg
59bb63cf51c83-IBCTAMIL.jpg
59bb63cf7a126-IBCTAMIL.jpg
59bb63cf9a0e5-IBCTAMIL.jpg

தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்பாணத்தில் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியின் முன்கு அஞ்சலி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/rememberance-in-jaffna

நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு

 

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை நல்லூரில் இடம்பெற்றது.

ஐனநாயக போராளிகள் கட்சியினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு நல்லூரலுள்ள திலீபனின் நினைவு தூபியில் இடம்பெற்றது.

நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஐந்திரகுமார், ஐனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

http://newuthayan.com/story/28769.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்திக்கும்....இந்திய அரசியல் வாதிகளுக்கும்...இடையில் விழுந்த நிரந்தரமான கோடு தான்....தியாகி திலீபனின் மரணம்!

அந்தக் கோட்டுக்கு.....அழியாத வரம்  கொடுத்தது...அன்னை பூபதியின் மரணம்!

Link to comment
Share on other sites

யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி

 
 
59bb67069ec01-IBCTAMIL.jpg
59bb6706ec326-IBCTAMIL.jpg
59bb670711f0f-IBCTAMIL.jpg

தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுட்டிக்கப்பட்டுள்ளது. 

https://news.ibctamil.com/ta/internal-affairs/thileepans-rememberance-in-jaffna-university

Link to comment
Share on other sites

தியாக தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

IMG_3971-1024x768.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தியாக தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.  யாழ்.பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைகழக வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டது.

அதேவேளை நல்லூர் ஆலய பின் வீதியில் உள்ள திலீபனின் நினைவுத்தூபியிலும் நினைவேந்தல் நிகழவுகள் நடைபெற்றது.

IMG_3866.jpgIMG_3869.jpgIMG_3872.jpgIMG_3875.jpgIMG_3887.jpgIMG_3898.jpgIMG_3910.jpgIMG_3964.jpgIMG_3969.jpg

http://globaltamilnews.net/archives/41187

Link to comment
Share on other sites

தமிழன் என்றால் யாரென்று உலகத்துக்கும் அறியத்தந்த ஏந்தல் தியாகி திலீபனுக்கு அஞ்சலிகள்!!

Bildergebnis für வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழியாத சுடர் திலிபன் அண்ணை அஞ்சலிக்கிறேன் அஞ்சலிகள் 

Link to comment
Share on other sites

திலீபனின் நினைவேந்தலில் பார்த்தீபனின் தாயாரால் ஈகச்சுடரேற்றல்

 

 

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின்  30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூர் தெற்கு வீதியில் உள்ள திலீபனின்  நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில்  இன்று காலை 10.10 மணியளவில் ஆரம்பமானது.

Thiyagi-Thileepan.jpg

நினைவேந்தல் நிகழ்வின் முதல் கட்டமாக கடந்த 23 ஆண்டுகளாக அரசியல் கைதியாக சிறையில் வாடும் பார்த்தீபனின் தாயாரினால் தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு ஈகச் சுடரேற்றப்பட்டு அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

திலீபனின் உருவப்படத்திற்கு படத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து பொது மக்கள் கட்சிகளின் அங்கத்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். 

http://www.virakesari.lk/article/24501

Link to comment
Share on other sites

அகிம்சையின் ஒரே வடிவம் திலீபன்

 

தமி­ழீழ விடு­த­லைப் போராட்ட வர­லாறு மகத்­தா­னது.உரிமை வேண்­டிய இலட்­சி­யத்­தின் அணை­யாத நெருப்­பா­னது.வீர­மும்,விவே­க­மும்,வழி­ந­டத்­த­லும், தியாக ஆன்­மங்­க­ளின் ஆயு­தம் கொண்­டும் நீள நடந்த பய­ண­மது.விடு­தலை..! விடு­தலை…!

என தாய­கத்­தின் அழகு பேண மன இறுக்­க­மும் கண்­ணீர் சிந்­திய பற்­று­று­தி­யின் தார்ப்­ப­ரி­ய­மும் ஒன்று கூடிய தீராத தாகம் அது.தாய்மை கொண்ட தமி­ழன் வர­லாற்­றுப் பெறு­மா­னம் சூடிய சுடர் விளக்­கான பொறு­மை­யின் கன­தி­யா­னது.முடி­வி­லி­யா­னது.

உரி­மைப் பய­ணம்

அந்­த­வ­கை­யிலே அகிம்­சைப் போராட்ட வடி­வ­மான உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முதன் முத­லில் ஆன்ம உருக்­க­மாய் உரு­வ­கித்த தியாகி திலீ­ப­னின் போராட்­டம் சுடர் கொண்டு மூன்று தசாப்த காலங்­கள் கடந்­து­விட்­டன.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் அப்­போ­தைய யாழ். மாவட்ட அர­சி­யல் து­றைப் பொறுப்­பா­ள­ராக இருந்த இரா­சையா பார்த்­தீ­பன் என்­னும் இயற்­பெ­ய­ரு­டைய திலீ­பன் 1987 ஆம் ஆண்டு நல்­லூர் வீதி­யில் தொடர்ச்­சி­யாக 12 நாள்­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை மேற்­கொண்­டார்.

குறிப்­பாக தமி­ழீழ தேச­மெங்­கும் இந்­திய இரா­ணு­வம் அமை­திப்­படை என்­னும் பெய­ரில் நிலை கொண்­டி­ருந்த காலத்­தி­லேயே இந்­தத் தியா­கப் போராட்­டம் நிகழ்ந்­தது. முன்­ன­தாக தமிழ் மக்­கள் தமக்­கு­ரித்­தான தாய­கப் பிர­தே­சத்­தில் சுய கௌர­வத்­தோடு வாழ்­வ­தற்­கான உரிமை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தப்­ப­டும் என்று வழங்­கிய உறு­தி­மொ­ழி­க­ளின் அடி­நா­தம் பற்றி புலி­கள் தம்­வ­சம் இருந்த பெரு­ம­ளவு ஆயு­தங்­களை கைய­ளித்­த­னர்.

இருந்­தும் இதற்­குப் பின்­பான காலப்­ப­கு­தி­யில் இலங்கை அரசு திரு­கோ­ண­ ம­லை­யில் மிக வேக­மான சிங்­க­ளக் குடி­யேற்­றங் களை நிறு­விக்­கொண்­டது.

இந்­தச் செயல்­நி­லை­க­ளுக்­குச் சமாந்­த­ர­மாக இதே காலப்­ப­கு­தி­யில் ‘ஈ.என்.டி.எல்.எவ்’ என்ற அமைப்பை உரு­வாக்கி புலி­க­ளின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளை­யும் சுட்­டுக் கொன்­றது.

புலி­களை மாற்­றுச் சிந்­த­னை­யின் பால் பய­ணிக்­கச் செய்ய உந்­து­தல்­களை ஏற்­ப­டுத்­தி­யது.இதன் விளை­வாக புலி­கள் யாரை நம்பி ஆயு­தங்­களை ஒப்­ப­டைத்­த­னரோ அவர்­க­ளி­டமே நீதி கேட்க விளைந்­த­னர்.

தியா­கம் உருப்­பெ­றல்

1987 ஆம் ஆண்டு திலீ­பன் தங்­கி­யி­ருந்த கொக்­கு­வில் பொற்­பதி வீதி­யில் அமைந்­தி­ருந்த இல்­லத்­தில் ஓர் இரவு புலி­க­ளின் உறுப்­பி­னர்­க­ளுக்கு அவ­ச­ரக் கூட்­டம் ஒன்று நடத்­தப்­பட்­டது.

அந்­தக் கூட்­டத்­தில் புலி­க­ளின் அப்­போ­தைய உறுப்­பி­னர்­க­ளான றூட் சிறி, ரமேஸ் மாஸ்­ரர், ராஜன், நவீன், மாறன், பிர­சாத் உள்­ளிட்ட பலர் அப்­போ­தைய நில­மை­கள் தொடர்­பில் கூடி ஆராய்ந்­த­னர்.

இருப்­பி­னும் உறு­தி­யான முடி­வு­கள் எவை­யும் அந்­தக் கூட்­டத்­தில் எட்­டப்­ப­ட­வில்லை. அதி­கா­லைப் பொழு­தில் திலீ­பன், போராளி ராஜனை (தவ்­வல்) அழைத்­துக்­கொண்டு மூத்த எழுத்­தா­ள­ரும் தமிழ் உணர்­வா­ள­ரு­மான மு.திரு­நா­வுக்­க­ர­சு­வி­டம் சென்­றார்.

அங்கு சென்று தனது சிந்­த­னையை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டார்.அந்­தச் சிந்­தனை செயல் வ­டி­வம் பெறு­வ­தற்­கான ஆலோ­ச­னை­க­ளைப் பெற்­றுக்­கொண்­டார். இந்த உரை­யா­டல் பொழு­தில் திலீ­ப­னி­டம் ஒரு­வி­ட­யத்தை திரு­நா­வுக்­க­ரசு விழித்­துக்­கொண்டார்.

முக்­கி­ய­மாக திலீ­பன் மேற்­கொள்­ளத் தீர்­மா­னித்த உணவு ஒறுப்புப் போராட்­டம் தொடர்­பில் இந்­தியா சாத­க­மான பதிலை வழங்­குமா என்­பது சந்­தே­கம் என்­பதை தெளி­வு­றுத்­தி­னார்.

குறிப்பாக ‘டிக்­சிற்’ (இலங்­கைக்­கான இந்­தி­யா­வின் அப்­போ­தைய தூது­வர்) இந்தப் போராட்ட முயற்­சி­யைக் கண்டு கொள்­ள­மாட்­டார். தேவை­யற்று உயிரை மாய்த்­துக்­கொள்ள வேண் டிய சந்­தர்ப்­பங்­களே ஏற்­ப­டும் என்ற விட­யங்­க­ளைத் தெரி­வித்­தி­ருந்­தார். ஆனா­லும் திலீ­பன் மனம் தள­ர வில்லை.

ஆன்­மம் உருக தியா­கம் புகு­தல்

மோட்­டார் சைக்­கி­ளில் அங்­கி­ருந்து ராஜ­னை­யும் அழைத்­துக் கொண்டு புறப்­பட்ட திலீ­பன் முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில் கந்­தர்­ம­டம் சென்­றார். கந்­தர்­ம­டம் பேபி ஸ்ரூடி­யோ­வுக்கு அரு­கா­மை­யில் உள்ள வீதி­யில் அமைந்­துள்ள மன்­ம­தன் வீட்­டுக்­குச் சென்­றார். அங்கு இரு மணி­நே­ரம் பேச்­சுக்­கள் இடம்­பெற்­றன.

அந்த வீட்­டின் அறை­யில் பேச்­சுக்­கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்­தில் அங்­கி­ருந்த ஓர் தட்­டச்சு இயந்­தி­ரம் சட­ச­டக்­கின்­றது.அதனை இயக்கி கொண்­டி­ருந்­த­வர் தேவர்.

இந்­தச் சட­ச­டப்பு அகிம்சை எனும் போராட்­டத்­தின் புதிய பரி­ணா­மத்தை வெளிக்­காட்­டும் கட்­டி­யங்­கூ­ற­லாக அமைந்­தி­ருந்­தது.இரு மணி­நே­ரச் சந்­திப்­பின் நிறை­வில் வெளியே வந்த திலீ­பன் ராஜனை அழைத்து மோட்­டார் சைக்­கி­ளில் அமர்ந்­து­கொள்­ளும் கணங்­கள் புன்­ன­கைத்­தன.வீரத்தை தியா­க­மாக விதைத்­தன.

உணவு ஒறுப்­புப் போராட்­டத்­துக்­குத் தலை­வர் அனு­மதி வழங்­கி­விட்­டார் என்ற மொழி­வா­டைச் சந்­தங்­கள் திலீ­ப­னின் முக­பா­வ­னை­யில் உரி­மை­யைச் செந்­த­ளித்­தன.
இவ்­வா­று­தான் திலீ­ப­னின் உணவு ஒறுப்­புப் போராட்­டம் கருக்­கட்­டி­யது.

இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்று ஓரிரு தினங்­க­ளின் பின்­னர் திலீ­பன் நல்­லூர் வீதி­யில் உரி­மைப் பசி கொண்டு ஆகா­ரம் ஏது­மின்றி ஆன்­மம் உருக தியா­கம் புகுந்­தான்.

கணங்­க­ளில் திலீ­பன்

என்­னால் பேச முடி­ய­வில்லை. ஆயி­னும் என் மனம் மகிழ்ச்­சி­யில் மிதக்­கின் றது.நீங்­கள் பல்­லா­யி­ரக்­க­ணக்­கில் இந்­தப் புரட்­சிக்­குத் தயார்­பட்­டு­விட்­டதை என் கண்­கள் பார்க்­கின்­றன.நான் திருப்தி அடை­கி­றேன்.

இன்று பேச முடி­யாத நிலை இருக்­கும்­என நினைத்­தேன்.ஆனால் நீங்­கள் தந்த உற்­சா­கம்­தான் என்னை இப்­போ­தும் வாழ­வைத்­துக் கொண்­டுள்­ளது.நான் நேசித்த தமி­ழீழ மண்­ணில் வாழ்­கின்ற ஒவ்­வொரு மக்­க­ளும் இந்­தப் பெரும் புரட்­சிக்­குத் தயா­ராக வேண்­டும்.நான் நேற்­றும் கூறி­விட்­டேன் எனது இறுதி ஆசை இது­தான்.

எமது எதிர்­கால சந்­ததி வாழ ஒரு நாடு தேவை. அல்­லா­விட்­டால் நாளை எங்­க­ளைப் போல்­தான் எமது எதிர்­கால சந்­த­தி­யும் துன்­பப்­ப­டும், வருத்­தப்­ப­டும்.எனது மூளை இப்­போது எத­னை­யும் நன்­றாக கிர­கிக்­க­வில்லை என்­பது எனக்கு விளங்­கு­கி­றது.

இதில் பிழை­கள் இருக்­க­லாம்.இதை நீங்­கள் பொறுத்­துக்­கொள்­ளுங்­கள். நான் மீட்­கப்­பட முடி­யாத நிலைக்­குச் சென்­று­விட்­டதை உணர்­கி­றேன்.ஆனால் இலட்­சி­யம் என்ற பெரும்­ப­ணியை உங்­க­ளி­டம் விட்­டுச் செல்­கி­றேன்.

நான் மிக­வும் நேசித்த என் தோழர்­கள்,என் சகோ­த­ரி­கள் எல்­லா­வற்­றி­லும் மேலாக என் தலை­வன் பிர­பா­க­ரன் அவர்­கள் உங்­க­ளு­டன் இருக்­கி­றார். நீங்­கள் பரி­பூ­ர­ண­மா­கக் கிளர்ந்­தெ­ழ­வேண்­டும்.

மாபெ­ரும் மக்­கள் புரட்சி வெடிக்­கட்­டும்..! இப் புரட்சி நாள் என்­னு­யி­ருக்கு மேலாக நேசிக்­கும் என் மக்­க­ளுக்­குக் கிடைக் கட்­டும்…!

http://newuthayan.com/story/29057.html

Link to comment
Share on other sites

1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16ஆம் திகதி – இது திலீபனுடன் 2ஆம் நாள்

 
(கவிஞர் மு.வே.யோ இன் உரையில் இருந்து)
அதிகாலை விழிப்பு

அன்று அதிகாலை 5 மணிக்கே திலீபன் உறக்கத்தைவிட்டு எழுந்து விட்டார். முகம் கழுவி தலை வாரிக்கொண்டார். சிறுநீர் கழித்தார். ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோகமாக காணப்பட்டாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்.

நிகழ்வுகள் ஆரம்பம்

சகல தினசரி பத்திரிகைகளையும் ஒன்று விடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவிலே பக்கத்து மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. நிகழ்ச்சிகளுக்கு தேவர் தலைமை தாங்கிக்கொண்டிருந்தார். கவிதைகளை படிப்பதற்காக இளம் சந்ததியினர் முண்டியடித்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். நிதர்சனம் ஒளிபரப்பாளர்களின் வீடியோ கமராக்கள் நாலா பக்கமும் சுழன்று படம்பிடித்துக் கொண்டிருந்தன.

இரண்டு நிமிடம்

மேடைகளில் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்போது திலீபன் என் காதுக்குள் குசுகுசுத்தார். “நான் பேசப்போகிறேன் மைக்கை வேண்டி தாங்கோ வாஞ்சி அண்ண.”- என்றார். “சாப்பிடாமல் குடிக்காமல் இருக்கிறிங்கள் களைத்து விடுவீர்கள்..என்று அவரை தடுக்க முயன்றேன். ”. “இரண்டு நிமிடம் மட்டும்.. நிப்பாட்டி விடுவன். ப்ளீஸ் மைக்கை வாங்கித்தாங்கோ ” என்று குரல் தளதளக்க கூறினார். அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. கண்கள் குழி விழுந்து, முகம் சோர்ந்து காணப்பட்டாலும் அந்த பசுமையான சிரிப்பு மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே இருந்தது.

இரண்டு நிமிடத்திற்கு மேல் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் மேடையில் நின்ற தேவரிடம் மைக்கை பெற்றுக் கொடுத்தேன். திலீபன் பேசப்போவதை தேவர் ஒலிபெருக்கியில் அறிவித்ததும் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. திலீபன் பேசுகிறார்.

 

“எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம். நின்று கொண்டு பேச முடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனோ என்று தெரியாது. அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நான் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். 650 பேர் வரையில் இன்று வரை மரணித்துள்ளோம்.

மில்லர் இறுதியாகப்போகும் போது என்னிடம் ஒரு வரி கூறினான். நான் அவனுடன் இறுதி வரை இருந்தேன். “நான் எனது தாய் நாட்டுக்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்களால் காண முடியாது என்பதே ஒரே ஏக்கம் ” என்று கூறிவிட்டு வெடி மருந்து நிரப்பிய லொறியை எடுத்துச்சென்றான். இறந்த 650 பேரும் அனேகமாக எனக்கு தெரிந்துதான் மரணித்தார்கள். அதை நான் மறக்க மாட்டேன். உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தலைவரின் அனுமதியை கேட்டபோது அவர் கூறிய வரிகள் என் நினைவில் உள்ளன.

திலீபா நீ முன்னால் போ..நான் பின்னால் வருகிறேன் என்று அவர் கூறினார். இத்தகைய ஒரு தெளிவான தலைவனை தனது உயிரை சிறிதும் மதிக்காத தலைவனை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தரும். இதனை வானத்தில் இருந்து இறந்த மற்ற போராளிகளுடன் சேர்ந்திருந்து நானும் பார்த்து மகிழ்வேன்.

நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். விடுதலைப்புலிகள் உயிரினும் மேலான சிறுவர்களை, சகோதரிகளை, தாய்மார்களை, தந்தையர்களை நினைக்கிறார்கள். உண்மையான உறுதியான இலட்சியம். அந்த இலட்சியத்தை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள். எனது இறுதி விருப்பமும் இதுதான்.”

சோர்வடைந்தும் திடம்

மிகவும் ஆறுதலாக சோர்வுடன் ஆனால் திடமுடன் பேசிய அவரின் பேச்சைக்கேட்டு மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்றிரவு தலைவர் வந்து திலீபனை பார்த்தார். சோர்வுடன் படுத்திருந்த திலீபனின் தலையை தனது கரங்களால் வருடினார். ஒரு தகப்பனின் அன்பையும், தாயின் பாசத்தையும் ஒன்றாக குழைத்தது போலிருந்தது அந்த வருடல். இரண்டு இமய மலைகளையும் என் கண்கள் விழுங்கிக்கொண்டிருந்தன. இரவு பனிரெண்டு மணிக்கு திலீபன் உறங்கத்தொடங்கினார். நானும் அவர் அருகிலேயே படுத்து விட்டேன்.

http://newuthayan.com/story/29138.html

 

Link to comment
Share on other sites

தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 2 ஆம் நாள் நினைவு – யாழ் பல்கலையில்

 

தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 30 ஆண்டு நினைவு தினத்தின் இரண்டாம் நாள் நினைவு கூரல் நிகழ்வு இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது .

தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 2 ஆம் நாள் நினைவு – யாழ் பல்கலையில்

தமிழர் மீதான அடக்கு முறைக்கு எதிராக 5 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 தொடக்கம் செப்டம்பர் 26 வரை அகிம்சை வழியில் உண்ணவாவிரதம் இருந்து தனது உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபனின் 30 ஆண்டு நினைவு தினம் உலகெங்கிலும் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இரண்டாம் நாள் நிகழ்வு இடம்பெற்றன.

https://news.ibctamil.com/ta/internal-affairs/thileepan-30-memory-in-jaffna-university

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

திலீ­ப­னின் தூபிக்கு முன்­பாக ரயர் எரிப்பு

 

நல்­லூர் பின்­வீ­தி­யில் அமைந்­துள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபிக்கு முன்­பாக இனந்­தெ­ரி­யாத ஒரு­வ­ரால் நேற்­றி­ரவு ரயர் போட்டு கொளுத்­தப்­பட்­டது. திலீ­ப­னின் நினை­வேந்­தல் கடைப்­பி­டிக்­கப்­ப­டும் இந்த விச­மச் செயல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வுக்கு எதி­ராக அகிம்சை ரீதி­யில் போராடி வீரச்­சா­வ­டைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீ­ப­னின் 30ஆவது ஆண்டு நினை­வு­நாள் தமி­ழர் தாயக மண்­ணில் நேற்­று­முன்­தி­னம் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் ஆரம்­ப­மா­னது. நல்­லூ­ரில் திலீ­ப­னின் நினை­வுத் தூபி அமைந்­துள்ள இடத்­தி­லும் நினைவு நாள் நிகழ்வு நடை­பெற்று வரு­கி­றது.

இந்த நிலை­யில் நேற்­றி­ரவு 10 மணி­ய­ள­வில் நினை­வுத் தூபிக்கு முன்­பாக ரயர் போட்­டுக் கொழுத்­தப்­பட்­டது.

இச்­சம்­ப­வம் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த திலீ­பன் நினை­வேந்­தல் ஏற்­பாட்­டுக் குழு அங்­கத்­த­வர் திரு சு.சுதா­க­ரன், இச் சம்­ப­வத்தை மிக­வும் வன்­மை­யா­கக் கண்­டிப்­ப­தா­க­வும். எத்­த­கைய அச்­சு­றுத்­தல்­கள் வந்­தா­லும் எமது இலட்­சி­யப் பய­ணம் தொட­ரும் என்­றும் தெரி­வித்­துள்­ளார்

http://newuthayan.com/story/29362.html

Link to comment
Share on other sites

3ஆம் நாள் நிகழ்வுகள்
 

image_d5f04a7294.jpg

-சண்முகம் தவசீலன்

தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டின் 3ஆம் நாள் நிகழ்வுகள், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்வில் நினைவுரையை, புதுக்குடியிருப்பு வணிகர் சங்கதலைவர் செல்வச்சந்திரன் ஆற்ற, சிறப்புரையை ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இளஞ்கதிர் நிகழ்த்தினார்.

image_018d316bfe.jpgimage_8719360cd8.jpgimage_e5cfd8d8b5.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/3ஆம்-நாள்-நிகழ்வுகள்/46-203941

Link to comment
Share on other sites

1987ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 18ஆம் திகதி – இது திலீபனுடன் 4ஆம் நாள்

 

அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி சிறுநீர் கழிக்கப் போகின்றேன் என்று கூறினார். அவர் இருக்கும் நிலையில் படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.

ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சிகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.

நாலைந்து நாள்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இருப்பதாலும் அவரது சலப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம். இதை அவரிடம் எப்படிக் கூறுவது?. தூண் மறைவிடம் சென்று சிறுநீர் கழிக்கப் போவதாகக் கூறினார். அவரின் விருப்பத்துடன், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கி மேடையின் பின்பக்கம் கொண்டு சென்றோம். பதினைந்து நிமிடங்களாக வயிற்றைப் பொத்திக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார்.

 

அதன்பின் ஆச்சரியப்படுமளவுக்கு சுமார் அரை லீற்றர் அளவு சலம் போனது. எனக்கு அது மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. ஐந்து நாள்களாக எதுவும் குடிக்காமல் இருக்கும் ஒருவரால் இது எப்படிச் சாத்தியமாக முடியும்?. அன்று வைத்திய நிபுணர் சிவகுமாரிடம் இதுபற்றி மறக்காமல் கேட்டேன். அவர் எந்தப் பதிலுமே கூறாமல் மௌனமாக சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றார்.

அன்று மத்தியானம் இதயத்துக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒர் இனிய செய்தி எனது செவிகளில் விழுந்தது. இனந்தெரியாத நிம்மதி என்னிடம் குடி வந்தது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரகத்திலிருந்து ஓர் முக்கிய நபர் இன்று வரப்போகிறாராம். அவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்.

என் பிரார்த்தனை வீண் போகாது, திலீபனின் உயிர் காப்பாற்றப்படப்போகின்றது. இந்தியத் தூதுவரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஐPவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள். அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா?

திலீபனை எண்ணித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மனங்களுக்கு அந்த ஆறுதல் செய்தி நிச்சயம் சாந்தியளிக்கத்தான் செய்யும்.

திலீபா! நீ ஆரம்பித்து வைத்த அகிம்சைப் போர் எங்களது ஆயுதங்களுக்கு மதிப்பில்லாமல் செய்யப்போகிறது. உன் அகிம்சைப் போரால் அப்படி ஒரு நிலை எமக்கு வருமானால் அதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

எமக்கு மட்டும் ஆயுதங்களை தூக்கி கண்டபடி சுட்டுத்தள்ள வேண்டும் என்று ஆசையா என்ன?. முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை “செல்வா” தலைமையில் முயன்று முடியாத நிலையில் எமது தமிழ்ச் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினோம்.

நாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் நம் எதிரி அகிம்சையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன். அவனுக்கு அது புரியாதது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும், துப்பாக்கியும்தான்.

ஒருவன் கத்தியையும், துப்பாக்கியையும் தன் பலமாக எண்ணும்போது அவனெதிரில் நிற்பவனால் என்ன செய்ய முடியும். நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும்? தங்கத் தமிழர்கள் வாழ்வில் பொங்கும் மகிழ்வும் – பூரிப்பும் எப்பொழுது மலரும்?

அண்ணல் காந்தி அகிம்சைப் போரிலே வெற்றி கண்டார் என்றால் அதற்கு அவர் கையாண்ட அகிம்சைப் போராட்டங்கள் மட்டும் காரணமல்ல. காந்தியின் போராட்டத் தளம் இந்திய மண்ணிலே இருந்தது. காந்தியின் போராட்டத் தளத்திலே மனிதநேயம் மிக்க ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். ஆகவே அகிம்சையைப் புரிந்து கொள்வதற்கு அந்த வெள்ளைக்காரர்களால் முடிந்தது.

ஆனால் நமது மண்ணில் அப்படியா?

எத்தனை சந்தர்ப்பங்களில் நமது தலைவர்கள் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டிருப்பார்கள்?. எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தார்ப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும்?. எத்தனை பெண்கள் தம் உயிரினும் மேலான கற்பை இழந்திருப்பர்?

அப்போதெல்லாம் நாம் ஆயுதங்களையா தூக்கினோம்?

அகிம்சை ! அகிம்சை ! அகிம்சை !

இந்த வார்த்தைகள் தான் எங்கள் தாரக மந்திரமாக இருந்தது. இந்தக் தாரக மந்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டு எமது கைகளிலே ஆயுதங்களைத் தந்தவர்கள் யார்?. நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களாகத்தான் தந்தார்கள். மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் தந்தன. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணி திரண்டு நிற்பதற்குக் காரணம் யார்? சிங்களப் பேரினவாதம்தான் !

இன்று காலையிலிருந்து நல்லூர்க் கந்தசாமி கோவிலில் திலீபன் பெயரில் நூற்றுக் கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்த வண்ணமிருந்தன. பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத் தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் அலைகள் தான் !

தளபதி கிட்டு அண்ணாவின் தாய், திலீபனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து அழுத காட்சி என் நெஞ்சை தொட்டது. துரோகிகளால் வீசப்பட்ட வெடிகுண்டால் தன் மகன் ஒரு காலை இழந்த போது அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

“ஒரு கால் போனால் என்ன? இன்னும் ஒரு கால் இருக்கு, இரண்டு கையிருக்கு, அவன் கடைசி வரையும் போராடுவான்…”

போர் முனையில் தன் மகனின் மார்பில் வேல் பாய்ந்திருப்பதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட வீரத் தமிழ்த்தாயின் கதையை இது எனக்கு நினைவூட்டியது.

உதவி இந்தியத் தூதுவர் திரு.கென் அவர்கள் விமான மூலம் பலாலிக்கு வந்து விட்டாராம். அவருடன் பேச்சு நடத்துவதற்காக திரு அன்ரன் பாலசிங்கமும், மாத்தயாவும் போயிருக்கின்றனர் என்ற செய்தியை ‘சிறி’ வந்து சொன்னபோது மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தேன். திலீபனுக்கும் அதைத் தெரிவித்தேன்.

காலையில் சிறுநீர் கழித்ததால் திலீபன் சற்றுத் தெம்பாக இருந்தார். பேச்சு முடிந்து அதில் சாதகமாக முடிவு கிடைக்குமானால் உண்ணாவிரதத்தை நிறுத்தி விட்டு திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும். அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குவேண்டிய சிகிச்சைகளை உடனடியாக அளிக்கத் தொடங்கினால் இரண்டு மூன்று நாள்களில் திலீபன் வழக்கம்போல் எழும்பி நடக்கத் தொடங்கிவிடுவார்.

இப்படி எனக்குள்ளேயே கணக்குப் போட்டுக்கொண்டேன்.

இயக்க உறுப்பினர்கள் திலீபனுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவரை சந்திக்க வந்த மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், தம்மைக் கட்டுப்படுத்த முடியாமால் விம்மி விம்மி அழுத என் நெஞ்சைத் தொட்டது.

தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜொனி போன்றோர் கண்கலங்கி திலீபனின் தலையை வருடி பேசி விட்டுச் சென்றனர்.

அவர்கள் போனதும் திலீபன் என்னை அழைத்தார்.

“கிட்டண்ணையைப் பார்க்க வேணும்போல இருக்கு” என்று மெதுவாகக் கூறும்போது அவர் முகத்திலே ஏக்கம் படர்திருந்தது. ஓரு கணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கிட்டண்ணா, குட்டிசிறி ஜயர், இவர்கள் எல்லோரும் இந்தியாவில் இருக்கின்றனர்.

திலீபனுக்கு என்ன பதில் சொல்லதென்று தெரியாமால் தவித்தேன். கிட்டு அண்ணர் இந்தியாவில் தெரியும். ஆனால் இந்த நிலையில், அவர் கிட்டு அண்ணாவைக் காண விரும்பியது நியாயம்தான்.

இரவு வெகுநேரம்வரை பேச்சின் முடிவு வரும் வருமென்று பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால், அது வரவேயில்லை

இன்று மாலை சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் திரு. வாசுதேவ நாணயக்கார, மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து திலீபனைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.

இரவு வெகுநேரம் வரை எனக்குத் தூக்கமே வரவில்லை. ஆனால், திலீபன் தன்னை மறந்து நன்றாக உறங்கினார்.

அவரின் இரத்த அழுத்தம் 85 . 60

நாடித்துடிப்பு- 120

சுவாசம் -22

http://newuthayan.com/story/29726.html

Link to comment
Share on other sites

1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி – இது திலீபனுடன் ஜந்தாம் நாள்

 
(கவிஞர் மு.வே.யோ இன் உரையில் இருந்து)

வழக்கம்போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை. யாழ்ப்பாணக் குடா நாடு முழுவதும் இருந்து தனியார் பஸ் வண்டிகளில் மக்கள் வெள்ளம் போல் வந்து நிறையதொடங்கி விட்டனர்.

இன்னும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறான். அவனால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்து கொட்டியது. மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாக சுழன்று கொண்டிருந்தது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச் சக்தியையும் பிரயோகித்து இயங்கி்க் கொண்டிருக்கிறது.

அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனை பற்றிய செய்திகளே இடம்பெற்றிருந்தன. திலீபன் சோர்ந்து வருகிறார். மெழுவர்த்தியைப்போல அவர் சிறிது சிறிதாக உருகிக்கொண்டிருக்கிறார். அவரது சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலமை மேலும் மோசமாகி எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம்.

பத்திரிகைகளைப் படிக்கும்போது என் கைகளுடன் உள்ளமும் சேர்ந்து நடுங்கியது. திலீபன் என்ற ஒரு இனிய காவியத்தின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்டதுபோல் பிரமை எனக்கு ஏற்பட்டது.

அதற்கிடையில் ஓர் செய்தி காற்றோடு காற்றாக கலந்து வந்து என் செவியில் விழுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவைச்சேர்ந்த திலகர் அவர்கள் இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார் என்பதுதான் அது. புலிகளின் சார்பாக திம்பு பேச்சில் கலந்து கொண்டவர்களில் திலகரும் ஒருவர். அப்படியானால் பிரதமர் ராஜீவ்காந்தியிடமிருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்குமா என்ற நப்பாசை என் மனதில். விசாரித்தபோது எந்த விதமான அழைப்பும் வரவில்லை வழமைபோல சாதாரண விசயங்களை கவனிப்பதற்காகத்தான் திலகர் போய் இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ஏன் கேட்டோம் என்றிருந்தது.

 

திலகரின் இந்தியப்பயணம் பற்றி கேட்டு அறியாமல் விட்டிருந்தால் ஓரளவு மன நிம்மதியாவது கிடைத்திருக்கும். ஆனால் விதியே உன் கரங்கள் இத்தனை கொடியதா?. பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளையுள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக்கொண்டு எம்மையே சுற்றி வரும் திலீபனை சித்திரவதை பள்ளத்தில் தள்ளுவதுதான் உன் கோர முடிவா?. அப்படி அவர் என்ன குற்றம் செய்து விட்டார். தமிழினத்துக்காக தனது தந்தை சகோதரங்களை பிரிந்து வந்தாரே அது குற்றமா?. தமிழினத்துக்காக தன் வைத்திய படிப்பையே உதறி எறிந்தாரே அது குற்றமா?. தமிழினத்துக்காக இரவும் பகலும் மாடாக உழைத்தாரே அது குற்றமா?. தமிழினத்துக்காக தனது வயிற்றிலுள்ள குடலின் 14 அங்கலத்தை வெட்டி எறிந்தாரே அது குற்றமா?. தமிழினத்துக்காக இன்று தன்னையே சிறிது சிறிதாக அழித்துக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறாரே அது குற்றமா? எது குற்றம்?.

வானத்தைப் பார்த்து வாய்விட்டு கத்த வேண்டும் போல் இருக்கிறது. கதறித்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது. இலட்சக்கணக்கான மக்கள் கடந்த ஜந்து நாள்களாக கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கிறார்களே. யாருக்காக? திலீபனுக்காக,தமிழினத்துக்காக அப்படி இருக்க அந்த கண்ணீரை ஏக்கத்தை இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லையே. ஏன்? உலகில் மனித தர்மமே செத்துவிட்டதா? காந்தி இறந்ததற்காக கண்ணீர் வடிக்கும் உலகம் காந்தியத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்னும் மெழுகுவர்த்தியைக் காணவில்லையா? அல்லது கண்டும் காணாது போய்விட்டதா?.

எத்தனையோ முறை திலீபன் சாவின் விளிம்பில் இருந்து தப்பியிருக்கிறார். 83ஆம் ஆண்டு அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் நவாலிப் பிரதேச பொறுப்பாளராக இருந்தபோது ஓர் நாள் நவாலி கத்தோலிக்க தேவாலயத்தின் அருகே நின்று பொது மக்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று இரண்டு ஜீப் வண்டிகள் அவரருகே முன்னும் பின்னுமாக வந்து நின்றன. சிறிலங்கா இராணுவத்தினர் கண்சிமிட்டும் நேரத்தில் சுற்றி வளைத்துவிட்டதை உணர்நத திலீபன் எதுவித பதற்றமும் அடையாமல் நிதானமாக நின்றார். அவரின் மதி நுட்பம் மிகவும் தீவிரமாக வேலை செய்யத் தொடங்கியது. யாரோ ஒரு தமிழ்த் துரோகியால் வழங்கப்பட்ட தகவலை வைத்துக்கொண்டு திலீபனை அடையாளம் கண்டு கொண்ட இராணுவத்தினர் ஜீப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர். அவரது கையிலே ஆயதம் அடங்கிய சிறிய சூட்கேஸ் ஒன்று இருந்தது. அவரருகே இரு இராணுவத்தினர் சேர்ந்து வந்தனர்.

ஜுப் வண்டியில் ஏறும்போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து சூட்கேஸால் மின்னல் வேகத்தில் தாக்கிவிட்டு பக்கத்திலிருந்த பனந் தோப்பை நோக்கி ஓடத் தொடங்கினார் திலீபன். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து விட்ட இராணுவத்தினர் என்ன செய்வது என்று திகைத்து நின்றனர். மறுகணம் அவர்களின் கைகளிலிருந்த துப்பாக்கிகள் பயங்கரமாக திலீபனை நோக்கி உறுமத்தொடங்கின.

அவரது கை ஒன்றை துளைத்துக்கொண்டு சென்றது துப்பாக்கிகுண்டு. இரத்தம் சிந்த மனதை திடமாக்கிக்கொண்டு வெகுநேரமாக ஓடிக்கொண்டிருந்தார் திலீபன். இராணுவததினரால் அவரை பிடிக்கமுடியவில்லை. இந்த ஏமாற்றத்தால் பல பொதுமக்களை அவர்கள் அன்று கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளிவிட்டுச்சென்றனர். யாழ். பெரியாஸ்பத்திரியில் 1986ஆம் ஆண்டின் இறுதியில் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற இராணுவத்தினருடனான மோதலில் திலீபன் தன் துப்பாக்கியால் பலரை சுட்டுத் தள்ளினார்.

ஆனால் எதிரிகளின் ஓர் குண்டு அவர் குடலை சிதைத்துவிட்டிருந்தது. யாழ். பெரியாஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டபோது அவர் குடலின் 14 அங்குலத்துண்டை சத்திரசிகிச்சை நிபுணர்கள் அகற்றிவிட்டனர். சுமார் மூன்று மாதங்களாக வைத்தியசாலையிலேயே வாழ்ந்தபின்தான் அவர் பூரண குணமடைந்தார். இப்படி எத்தனையோ துன்பங்களை தமிழினத்துக்காக அனுபவித்தவர்தான் திலீபன். ஆயுதப்போராட்டத்தால் மாத்திரமன்றி அகிம்சையாலும் தன்னால் சாதனை புரிய முடியும் என திலீபனுக்கு அசையாத ந்ம்பிக்கை இருந்தது.

அதனால் இந்தப்போராட்டத்தில் அவர் தானாகவே முன்வந்த எத்தனையோ பேர் தடுத்தும் கேளாமல் குதித்தார். இன்று மாலை இந்திய சமாதானப் படையினரின் யாழ். கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் தரார் அவர்கள் திலீபனை பார்க்க வந்தார். அவர் சனங்களிடையே நடந்து வரும்போது பலதாய்மார்கள் அவர் மீது கல்களை வீச தயாராகிக்கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து அவருக்கு தகுந்த பாதுகாப்புக்கொடுத்து மேடைக்கு அருகே அழைத்துச் சென்றனர் விடுதலைப்புலிகள். திலீபனின் உடல் மோசமாகி வருவதால் பொதுமக்களும், இயக்க உறுப்பினர்களும் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை யோகியும் வேறு சிலரும் எடுத்துக் கூறினர்.

தான் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறிவிட்டுச் சென்றார்.அவர் மூலமாவது திலீபனின் உயிர் காப்பாற்றப்படாதா என்று எங்களில் சிலர் நிம்மதியாக இருந்தோம். களைப்புடன் திலீபன் உறங்கிவிட்டார்.

http://newuthayan.com/story/30060.html

Link to comment
Share on other sites

தமிழ் அன்னையின் ஆத்மா இடையே ஒளிரும் இலட்சியம்

செ.யாழிசை

 

ஈழத் தமி­ழ­ரின் வாழ்­வுக்­கா­க­வும், சிங்­கள அர­சின் அடக்கு முறை­க­ளில் இருந்து தமி­ழி­னத்தைக் காக்­கும் நோக்­கு­ட­னும் இந்­திய அர­சி­டம் ஐந்து அம்­சக் கோரிக்­கை­களை முன்­நி­றுத்தி நீரும் அருந்­தாது அகிம்சை முறை­யில் போராடி திலீ­பன் தியா­கச் சாவ­டைந்த நாள்­கள் இவை. ஈழத் தமி­ழர்­க­ளின் மன­தில் இந்­தியா மீதான நம்­பிக்­கை­யின் பற்­று­தல் தளர்ந்த நாள்­கள் இவை.

பார்த்­தீ­ப­னாய் தாயன்பு பேணல்

சரா­சரி உய­ர­மும், பொது­நி­ற­மும், மிக மெல்­லிய தோற்­ற­மும் கொண்ட இளை­ஞன்தான் இரா­சையா பார்த்­தீ­பன் என்­னும் திலீ­பன். யாழ் மாவட்­டம்,வலி­கா­மம் பிர­தே­சத்­தில் உள்ள ஊரெழு என்­னும் கிரா­மத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட திலீ­பன், இரா­சையா ஆசி­ரி­ய­ரின் கடைசி மக­னாக 1963 ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்­தான்.அவ­னுக்கு இரு அண்­ணன்மார் உடன்­பி­றப்புக்களாக பாசம் தந்­த­னர்.

அவர்­க­ளின் பாசப் பிணைப்­போடு சிறு வயது முதலே அதீத புத்­திக் கூர்­மை­யும், திற­மை­ யும் கொண்டு வளர்ந்­தான் பார்த்­தீ­பன்.அண்­ணன்மார் இரு­வ­ருமே படிப்­ப­றி­வும்,அடக்­க­மும்,உயர்ந்த பண்­பி­யல்பும் கொண்­ட­ வர்­க­ளாகத் திகழ்ந்­த­னர்.அவனை வழி­ந­டத்­தி­னர்.தந்­தை­யும் அப்­ப­டியே.அந்த ஊரில் மிக­வும் மதிப்­பும் செல்­வாக்­கும் மிக்கதொரு குடும்­ப­மாக ஆசி­ரி­யர் இரா­சை­யா­வி­னு­டைய குடும்­பம் திகழ்ந்­தது என்­றால் மிகை­யில்லை.

சிறு­வ­ய­தி­லேயே திலீ­பன் தாயைப் பறி கொடுத்­த­வன்.தாயன்பு என்­றால் என்­ன­வென்றே தெரி­யா­மல் வளர்ந்த அவன் மீது, தந்­தை­யும் அண்­ணன்­கள் இரு­வ­ரும் தாயன்­பின் மகத்­து­வத்தை வெளிக்­காட்­டி­னர்.அதன் ஆத்­மார்த்­த­மான ஒப்­புமை இலக்­க­ணங்­களை அவ­னி­டத்­தில் ஊட்­டம் செய்து வளர்த்­த­னர். தன் பிள்ளை பிற் காலத்­தில் மண்­ணின் விடு­த­லைக்­கா­க­வும், மக்­க­ளின் உரிமை மீட்­புக்­கா­க­வும் தன்­னையே தியா­கம் செய்­வான் என்­பதை உணர்ந்த தன்­மை ­யால் போலும், தந்­தை­யும் தன் மக­னுக்­காக தனது இன்ப வாழ்வைத் தியா­கம் செய்து கொண்­டார். என்னே அந்த தியா­கக் குடும்­பத்­தின் பாரம்­ப­ரி­யம்.ஈழத்­தின் தனித்­து­வத் தார்ப்­ப­ரி­யம் அது.

கல்வி ஒளி காணல்

இயல்­பி­லேயே திலீ­பன் படிப்­பில் ஆர்­வம் உள்­ள­வ­னாக விளங்­கி­னான்.சிறு­வ­ய­துக் கல்­வியை தனது சொந்த ஊரான ஊரெ­ழு­வி­லும், மேற்­ப­டிப்பை யாழ்.இந்­துக் கல்­லூ­ரி­யி­லும் பயின்­றான்.அவ­னது அறி­வுத் திற­னுக்கு எல்­லையே இல்லை எனும் காலம் ஒன்று ஒரு காலத்­தில் இந்­துக் கல்­லூ­ரி­யில் இருந்­தது என்­பது மறுக்க முடி­யாத உண்மை.வகுப்­பில் எப்­போ­தும் முத­லா­வ­தாக வந்து தனது அறி­வுத் திற­மையை நிரூ­பித்து வந்­தான் அவன்.

எழு­ப­து­க­ளில் சிங்­கள அரசு தமிழ் மாண­வர்­க­ளின் பட்­டப் படிப்பை,மருத்­துவ கல்­வியை பாழ­டிக்க கொண்­டு­வந்த தரப்­ப­டுத்­தல் என்­னும் திட்­ட­மிட்ட சதி­யி­னால் எண்­ணி­றைந்த தமிழ் மாண­வர்­கள் தமது உயர் கல்­வியை இடை நிறுத்­தி­னர்.

வெளி­நா­டு­க­ளுக்கு ஓடத் தொடங்­கிய கால­மாக அது அமைந்­தி­ருந்­தது.எண்­ப­து­க­ளின் ஆரம்­பத்­தில் பார்த்­தீ­பன் க.பொ.த. உயர்­தர வகுப்­பில் மிகத் திற­மை­யாக சித்தி பெற்று இலங்கை அர­சின் தரப்­ப­டுத்­தல் அள­வை­யும் தாண்டி மருத்­து­வப் படிப்­புக்­குத் தெரி­வா­னான்.யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மருத்துவக் கல்­வி­யைத் தொடர்ந்­தான்.

விடு­த­லைப் பய­ணம் போதல்

அக்­கா­லப்­ப­குதி, தமிழ் இனத்­துக்கு ஒளி மழுங்­கிய இருள் சூழ்ந்த கால­மாக அமைந்­தி­ருந்­தது. உண்­மை­யில் இனக்­க­ல­வ­ரத்­தின் கோரப்­பி­டி­யில் சிக்கி தமிழ் இனம் கொஞ்­சம் கொஞ்­ச­மாக அழிந்து கொண்­டி­ருந்த காலம் அது.சிறி­லங்­காப் படை­க­ளின் அட்­டூ­ழி­யம் எல்லை தாண்டிச் சென்று கொண்­டி­ருந்­தது.

சிறை­யில் குட்­டி­மணி தங்­கத்­துரை போன்­ற­வர்­கள் சிங்­க­ளக் கொடு­ம் வெ­றி­யர்­க­ளால் ஈவி­ரக்­க­மின்றிக் கொல்­லப் பட்­ட­தும்,இலங்கை முழு­வ­தும் பெரிய இனக் கல­வ­ரத்தை திட்­ட­மிட்டு ஏற்­ப­டுத்தி தமி­ழர்­களை சிங்­க­ள­வர்­கள் கொன்று குவித்­த­தும்,தமிழ்ப் பெண்­கள் வகை தொகை­யின்றி சிங்­க­ளப் பகு­தி­க­ளில் சிங்­க­ளக் காடை­யர்­க­ளால் பாலி­யல் வதைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தும் இதே காலப்­ப­கு­தி­யில் தான்.

இந்த சந்­தர்ப்­பத்­திலே விஸ்­வ­ரூ­பம் எடுத்து தாண்­ட­வம் ஆடிய இனப்­பி­ரச்­ச­னை­யும்,தமி­ழர்­க­ளின் அழி­வும் பார்த்­தீ­ப­னின் மருத்­து­வக் கல்­விக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தன.ஆம்,ஊரெ­ழு­வில் பிறந்த அந்த உரிமைத் தாகம் மிக்க விடு­த­லைப் பறவை புலி­க­ளின் கூட்டை நோக்கிப் பறந்­தது.

தியா­கம் கொள்­ளல்

ஆம், திலீ­பன் என்­னும் பெய­ரில் ஆயுதமேந்தித் தனது இன விடி­ய­லுக்­காக சுதந்­திர கீதம் பாட ஆரம் பித்­தது. இறு­தி­யில் தாகம் கொண்டு தியாக நாத சங்­க­மத்­தை­யும், ஆன்ம உருக்­க­மாக மீட்­டி­ யது.1987 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 15ஆம் திகதி ஐந்து அம்­சக் கோரிக்­கையை முன்­வைத்து உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பித்­தான் திலீ­பன்.

1987 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 26ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 10.48 மணிக்கு தியா­கச் சாவ­டைந்­தான். விடு­த­லை­யின் பொருள் தனை, ஆத்ம பல­மாக இன்­றும் உரைக்­கின்­றான்.

http://newuthayan.com/story/30319.html

Link to comment
Share on other sites

1987 செப்ரெம்பர் மாதம் 20 ஆம் திகதி – இது திலீபனுடன் 6 ஆம் நாள்

 

இன்று காலையிலிருந்து நல்லூர் கந்தசாமி கோவிலில் திலீபனின் பெயரில் நூற்றுக்கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொது மக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணம் இருந்தன. பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத்தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளம். இறைவா திலீபனைக் காப்பாற்றிவிடு கூடியிருந்த மக்கள் நல்லூர்க் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள்.

பழந்தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரசதானியிலே அதுவும் தமிழ்க்கடவுளாகிய குமரன் சந்நிதியிலே இளம் புலி உண்ணாமல் துவண்டு கிடக்கிறது. ஒரு நல்லமுடிவு கிடைக்க வேண்டும் இல்லையேல் உலகிலே நீதி செத்துவிடும் எனக்குள் இப்படி எண்ணிக்கொண்டேன். மற்றவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் இரவு பகலாக உறங்காது வேளாவேளைக்கு உணவு உணவின்றி அயராது உழைப்பதில் திலீபனுக்கு நிகர் திலீபன்தான். அவர் சுயமாக எப்போதாவது மினுக்காத மடிப்புக்கலையாத ஆடைகள் அணிந்ததையும் நான் பார்க்கவில்லை அவரிடம் இருப்பதெல்லாம் ஒரே ஒரு நீளக்காற்சட்டை ஒரே ஒரு சேட்தான் .

அரசியல் விசயமாக ஊரெல்லாம் சுற்றி பல பிரச்சினைகளை தீர்த்து விட்டு காய்ந்த வயிற்றுடன் இரவு பன்னிரண்டு ஒரு மணிக்கு தலைமை அலுவலகத்துக்கு வருவார். அந்த நள்ளிரவில் அழுக்கேறிய தன் உடைகளை களைந்து தோய்த்துக் காயப் போட்டுவிட்டே படு்க்க செல்வார். பின்பு அந்த இயந்திரம் அதிகாலையிலேயே தன் இயக்கத்தை மீண்டும் ஆரம்பித்துவிடும். இப்படிப்பட்ட திலீபன் இன்று வாடிவதங்கி தமிழினத்துக்காக தன்னையே அழித்து கொண்டிருக்கிறானே? எத்தனையோ பேரின் பிரச்சினைகளை தீர்த்து வைத்த இவரின் பிரச்சினையை – தமிழினத்தின் பிரச்சனையை யார் தீர்க்கப் போகிறார்?.

சீலமுறு தமிழன் சிறப்பை இழப்பதோ சிங்கள இனத்தவர் நம்மை மிதிப்பதோ! கோலமிறு தமிழ்நாடினை கொள்ளையர் விரித்த வலையில் வீழ்ந்து அழிவதோ காலன் என்னும் கொடும் கயவனின் கையினால் கண்ணை இழந்து நாம் கவலையில் நலிவதோ நீலமணிக்கடல் நித்தமும் அழுவதோ நாடு பெறும் வரை நம்மினம் தூங்குமோ ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்த இந்தக் கவிதையை ஒருநாள் திலீபன் வாசித்துவிட்டு என் தோள்களைத் தட்டிப்பாராட்டியதையும் எண்ணிப்பார்க்கிறேன்.

வாராவாரம் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் எனது கவிதைகளை ஒரு தொகுப்பாக்கி வெளியிட வேண்டும் என்ற திலீபனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்ற வாரம் தான் அவைகளை ஒன்று சேர்த்து பிரதிகள் எடுத்து ஒரு பிரதி ராஜனிடமும் மறுபிரதியை யோகியிடமும் கொடுத்திருந்தேன். தலைவர் பிரபாகரன் முன்னுரை எழுத வேண்டும் என்ற என் விருப்பத்தை திலீபனிடம் வெளியிட்ட போது அவரும் அதற்கு சம்மதித்தார். உண்ணாவிரதம் முடிந்த பின் முதல் வேலையாக தலைவரிடம் சகல கவிதைகளையும் கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

இன்று முழுவதும் சிறுநீர் கழிக்கமுடியாமல் கஸ்டப்படத் தொடங்கி விட்டார். இன்னும் ஓரிரு நாள்களுக்கு என்ன நடக்குமோ என்ற எண்ணம் என்னை வாட்டிக்கொண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிக்கூடி திலீபனின் நிலைகண்டு சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். இது எதுவும் தெரியாமல் திலீபன் தூங்கிக்கொண்டிருந்தான்.

http://newuthayan.com/story/30324.html

Link to comment
Share on other sites

1987ஆம் ஆண்டு செம்ரெம்பர் 21ஆம் திகதி – இது திலீபனுடன் 7ஆம் நாள்

 
(கவிஞர் மு.வே.யோ இன் உரையில் இருந்து)

இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின. நேற்றைய பேச்சின் முடிவு என்னவாக இருக்கும்? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது. காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை. திடீரென்று “இந்தியா ருடே” பத்திரிகை நிருபரும் இந்திய துரதஷனின் (இந்தியத் தொலைக்காட்சி ஸ்தாபனம்) வீடியோப் படப்பிடிப்பாளரும், யோகியுடன் வந்து திலீபனைப் படம் பிடிக்கத் தொடங்கினர்.

“இந்தியா ருடே” நிருவர் என்னிடம் திலீபனின் உடல் நிலையைப்பற்றித் துருவித் துருவித் கேட்டுத் தெரிந்துகொண்டார். என்னால் முடிந்தவரை முதல் நாள் உண்ணாவிரத்திலிருந்து இன்றுவரை அவரின் உடலின் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தையும் விரிவாக எடுத்துக் கூறினேன்.

அவர்கள் சென்ற பின் யோகியை அழைத்து, என் மனதுக்குள் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டேன். அதற்கு யோகி கூறிய பதில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.

இந்திய அமைதி காக்கும் படையின் மூத்த தளபதி ஒருவரும் பிரிகேடியர் ராகவன், எயர் கொமாண்டர்ஜெயக்ககுமார், கடற்படைத் தளபதி அபயசுந்தர் ஆகியோர் வந்து பேசினர் என்றும், உதவித்தூதுவர் வரவில்லை என்றும், திலீபனின் பிரச்சினையில் அவர்கள் ஓரு தீர்க்கமான முடிவை இதுவரை எடுக்கவில்லை என்றும் யோகி கூறினார்.

அந்தப் பதிலைக் கேட்டால் அதை ஜீரணிக்க என் மனத்துக்கு வெகுநேரம் பிடித்தது. அந்தப் பேச்சு பற்றிய முழு விவரத்தைம் யோகி திலீபனிடம் விளக்கிக் கூறி, என்ன செய்யலாம்? என்று கேட்டார்.

பேசச் சத்தியற்று, நடக்கச் சத்தியற்று துவண்டு கிடந்த அந்தக் கொடி, தன் விழிகளைத் திறந்து பார்த்துவிட்டு வழக்கம் போன்றுதன் புன்னகையை உதிர்த்தது.

“எந்த முடிவும்…. நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும்…. இல்லையெண்டால்…. நான் உண்ணாவிரதத்தைக் கடைசி வரைக்கும் … கைவிடமாட்டன்.”

ஒவ்வொரு வார்தையாக கரகரத்த குரலில் வெளிவந்தது திலீபனின் பதில்.

படபடவென்று நடுங்கிய நடுங்கிய குரலில் மெதுவாகத் திடமாகத் திலீபன் கூறிமுடித்த போது யோகி மேடையில் இருக்கவில்லை.

யாழ்ப்பாணக் குடாநாடு விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் 1985 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வந்த பின்னர் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக திலீபன் இருந்து மிகச் சிக்கலான பிரச்சினைகளையெல்லாம் பொதுமக்கள் மத்தியில் தீர்த்து வைத்திருக்கின்றார்.

1986 ஆம் ஆண்டு அச்சுவேலியில் ஏற்பட்ட ஒருசிறு பூசல் காரணமாக மினிபஸ்களின் சொந்தக்காரர்கள் ஒருவாரகாலமாக பஸ்களை ஓடவிடாமல் வழிமறிப்புப் போராட்டம் நடத்தியதால் மக்கள் மிகுந்ந துன்பப்பட்டனர்.

திலீபன் தனக்கேயுரிய புன்முறுவலுடன் அவர்களை அணுகி மிகவும் எளிமையாக அவர்களுடன் பேசி இரண்டு மணித்தியாலத்தில் பஸ்களை ஓடச் செய்தார்.யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுக்கு இடையே நடைபெறும் பூசல்கள் கடல் எல்லையிலே ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்படும் சில சிக்கலான பிரச்சினைகள் பல்கலைக்கழகத்தில் ஏற்படும் சிக்களான பிரச்சினைகள், கடை முதலாளிகள் – தொழிலாளர்களின் பிரச்சினைகள், மூட்டை தூக்குவோர், வண்டி ஓட்டுவோர் – ரச்சிக்கரர்கள், மாநகரசபை ஊழியர்கள், ஆசிரியர்கள், எழுதுவினைஞர்கள், டாக்ரர்கள், தாதிமார், வைத்தியசாலை சிற்றூழியர்கள், வழக்கறிஞர்கள், லொறிச் சொந்தக்காரர்கள் இப்படிப் பலரகமானவர்களின் பிரச்சினைகளையெல்லாம் உடனுக்குடன் பேசிச் சமரசமாகத் தீர்த்து வைத்தவர் திலீபன்.

யாழ்ப்பாணக் கரையோரக் கிராமமான நாவாந்துறையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பலமான இனக்கலவரம் ஏற்பட்டது. கத்தகள், பொல்லுகள் கைக்குண்டுகள், துப்பாக்கிகள் எல்லாம் தாராளமாகப் பாவிக்கப்பட்டன. ஒரே நாளில் பலர் இருபக்கத்திலும் மாண்டனர். பலர் படுகாயமுற்றனர்.

திலீபன் தன்னந்தனியாக இரு சமூகத்தவர்களையும் இரவிரவாகச் சென்று சந்தித்தார். முடிவு? அடுத்த நாள் பெருமழை பெய்து ஓய்ந்தது போல் கலவரம் நின்றுவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமிழீழ மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு இருப்பதற்குக் காரணம் இவர்கள் சிங்கள இராணுவத்தின் அட்டூலியங்களிலிருந்து தம் உயிரையே அர்ப்பணித்து மக்களைக் காப்பாற்றுவது மட்டுமல்ல எந்தச் சிக்கலான சமூகப் பொருளாதாரப் பிரச்சினையானாலும் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திலீபனால் அவை நிச்சியமாகத் தீர்க்கப்படும் என்ற உயர்ந்த நம்பிக்கையாலும் ஏற்பட்ட செல்வாக்குத்தான் அது.

மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இரவு பகலாக உறங்காது வேளா வேளைக்கு உணவின்றி அயராது உழைப்பதில் திலீபனுக்கு நிகர் திலீபன் தான். ஆவர் சுயமாக எப்போதாவது மினுக்கிய மடிப்புக் கலையாத ஆடைகள் அணிந்ததையும் நான் பார்த்ததில்லை.

தியாகப் பயணம் தொடர்கின்றது.

http://newuthayan.com/story/30532.html

Link to comment
Share on other sites

எங்கள் முற்றத்தி(ன்)ல் விடுதலைச் சிட்டென தியாக தீபம் நாதமுறுகிறது

 

 

இன­வி­டு­த­லைப் போராட்­டம்” என்­பது அது எவ்­வ­கை­யில் அமைந்­தா­லும், குறித்த அந்த இன மக்­க­ளின் பூரண ஆத­ரவு இல்­லா­மல் மேற்­கொள்ள முடி­யாத ஒன்று. ஒட்­டு­மொத்த மக்­க­ளும் விடு­த­லை­யென்ற ஒரே இலட்­சி­யத்துக்காகத் தமது பங்­க­ளிப்பைச் செய்ய முன்­வர வேண்­டும். அவ்­வாறு முன்­வ­ரும் போ­து­ தான், விடு­த­லைக்­கான மக்­கள் புரட்­சி­யும், அதன்­மூ­ல­மான விடு­த­லை­யும் சாத்­தி­யப்­ப­டும்.

ஈழ விடு­த­லைப் போராட்­ட­ம் தியா­கங்­க­ளின் சிக­ரங்­க­ளைத் தொட்ட சந்­தர்ப்­பங்­க­ளில், அவற்றில் தியா­கச் செம்­மல் லெப்.கேணல் திலீ­ப­னின் தியா­கம் மிக முக்­கி­ய­மா­ன­தா­கும். தமி­ழர்­க­ளின் விடு­த­லைப் போராட்­டம், பல சந்­தர்ப்­பங்­க­ளில் ஆயுத ரீதி­யி­லான வன்­முறை வழி­யைத் தவிர்த்து அகிம்சை வழி யைக் கடைப்­பி­டிக்க முனைந்த போதெல்­லாம், எதிர்­ம­றை­யான விளை­வு­க­ளும் ஏமாற்­றங்­க­ளுமே பரி­சா­கக் கிடைத்தன.

அகிம்­சை­யின் பின்­னான கோர­மு­கம்

அகிம்­சைக்கே அடை­யா­ள­மெனக் கரு­தப்­பட்ட பாரத தேசம், தமி­ழர்­க­ளின் அகிம்­சைப் போராட்­டத்தைக் கால­டி­யில் போட்டு மிதித்­தது. ஒரு துளி நீர் கூட அருந்­தா­மல் உணவு முழுவதுமாக ஒறுத்த திலீ­ப­னின் உடல் வாடி வதங்கி, மெலிந்து சுருண்டு, நிலை­ குலைந்து நினை­வி­ழந்­து­போய் அந்த உன்­னத ஆத்மா, அவனது உட­லை­விட்டுப் பிரிந்த போதும் மௌன­மாய் இருந்து ஒட்­டு­மொத்­தத் தமி­ழி­னத்­திற்கே துரோ­கம் செய்­த­தன் மூலம் ‘காந்­தி­யம்’ என்ற திரைக்­குப் பின்­னா­லி­ருந்த தனது உண்­மை­யான கோர­மு­கத்தை வெளிக்­காட்­டி­யது காந்­தி­தே­சம்.

அன்று வெளிக்­காட்­டத் தொடங்­கிய காந்­தி­தே­சத்­தின் துரோக நாட­கம், இன்­று­வரை தொடர்­க­தை­யா­கத் தொடர்­கின்­றது. ஈழத்­தின் மேல் இந்­தி­யா­வுக்கு அப்­படி என்­ன­தான் கோபம்…? கார­ணம் கேட்­டால், ராஜீவ்­காந்தி படு­கொ­லை, இந்­தி­யத் தேசி­யம்,பிராந்­திய நலன் என கார­ண­மில்­லாத தோர­ணங்­களை, வார்த்தை அலங்­க­ரிப்­பாய், வாய் வீரத்­தில் தொங்­க­வி­டு­வார்­கள் இந்­தக் காந்­தி­ய­வா­தி­கள்.

இந்­தப் போலிக் காந்­தி­ய­வா­தி­க­ளுக்­குப் புரி­யுமா எம் வலி­க­ளும் வேத­னை­க­ளும்…? இவர்­க­ளுக்­குத் தெரி­யுமா, நாம் முகம் கொடுத்த இழப்­புக்­க­ளும் அவ­லங்­க­ளும்…? என்ன சொல்ல…! அகிம்சை எனும் உய­ரிய ஒழுக்­கத்­தின்­பால் இயங்­கு­வ­தாக காட்­டிக்­கொண்­டி­ருந்த இந்­தியா, தனது கோர­மு­கத்­தைக் காட்­டி­யது.

திலீ­பன் கொண்ட தியாக வேள்வி

நல்­லூ­ரில் 1985 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 15 ஆம் திகதி அன்று ஐந்து அம்சக் கோரிக்­கை­களை முன்­வைத்து திலீ­பன் சாகும்­வரை உணவு ஒறுப்புப் போராட்­டத்தை ஆரம்­பித்­தான். ஒரு துளி நீர் கூட அருந்­தாது பன்­னி­ரண்டு நாள்­கள் அந்­தத் தியாக வேள்­வி­யில் மெழு­காய் உரு­கி­னான். அவன் நேசித்த மக்­கள் அலை­ய­லை­யாய் அவன் முன் திரண்­டார்­கள். அவன் மெல்ல மெல்ல உருகி அணைந்து கொண்டு போவ­தைக்­கண்டு துடித்­தார்­கள்.

அந்த மக்­க­ளின் துடிப்­பைக் கண்டு அவ­னால் பேச முடி­யாத நிலை­யி­லும் பேச­வேண்­டும் என்­கிற உத்­வே­கத்­தோடு அவன் வார்த்­தை­களை மெல்லு கின்றான், “நான் இறந்து விண்­ணி­லி­ருந்து அங்கே உள்ள என் நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து தமி­ழீ­ழம் மல­ரப்­போ­கும் அந்த நாளை எதிர் பார்த்­துக்­கொண்­டே­யி­ருப்­பேன்.ஒரு புனித இலட்­சி­யம் நிறை­வே­ற­ வே­ண்டும் என்பதற்­கா­கத் தான் எங்­களை நாங்­கள் வருத்­திக்­கொண்டு உணவு ஒறுப்புப் போராட்டத்தை மேற்கொள்கி றோம்.” என்று திலீ­பன் கூறிய அந்­தத் தரு­ணங்­கள் ஆத்­மங்­களை ஊடா­டிக் கல­க­லத்­தன.

தென்­றல், விடு­த­லை­யின் நறு­ம­ணம் சூடி கண்­ணீர்த் துளி­களை உப்­பா­றாய்க் கொட்­டி­யது.நெஞ்­சு­ரம் அயர்­வின்றி உய்­வு­கொண்டு செந்­த­ளித்­தது. வீரத்­தைப் பரி­ச­ளித்­தது. ஆம்,இத்­த­கைய நம்­பிக்­கை­யோடு பய­ணித்­து­விட்ட அந்த வீரர்­க­ளின் நம்­பிக்கை ஒரு­பொ­ழு­தும் தோற்­று­வி­டாது. பரி­பூ­ரண சுதந்­தி­ரத்தை எமது மக்­கள் அடைந்தே தீரு­வார்­கள். திலீ­பன் போன்­ற­வர்­கள் மிக அரு­மை­யா­ன­வர்­களே.

உரி­மை­யின் வழி
விசை­யுற்று அசை­வோம்

எமது விடு­த­லைப் பய­ணம் அப்­ப­டிப்­பட்­ட­து­தான். எம்மை மிகக் கடு­மை­யாக வருத்­தித்­தான் அந்த உய­ரிய விடு­த­லையை வென்­றெ­டுக்க முடி­யும். அதுவே பெறு­மதி மிக்­க­தா­யி­ருக்­கும் என்­பதை அவ­னது வாழ்க்கை எமக்கு உணர்த்­து­கி­றது.
எந்த நேர­மும் இயங்­கிக்­கொண்­டி­ருக்­கும் அவ­னது இயல்பு பார­தி­யார் கண்ட சிட்­டுக் கு­ரு­வியை எண்­ண­வைக்­கும். அத்­துணை துடிப்பு, அத்­துணை வேகத்­து­டன் விசை­யு­றத்­தி­ரிந்­தான் திலீ­பன். இந்த வேக­மும் துடிப்­பும் எம் ஒவ்­வொ­ரு­வ­ரையும் ஆள­வேண்­டும். அத்­த­கைய வீர­னின் நினை­வில் நனை­ வோம்

http://newuthayan.com/story/30891.html

Link to comment
Share on other sites

1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி – இது திலீபனுடன் 8 ஆம் நாள்

 
 
1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி – இது திலீபனுடன் 8 ஆம் நாள்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  
(கவிஞர் மு.வே.யோ இன் உரையில் இருந்து)

இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்க வேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள்.

உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென் யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்களில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிக்கின்றனர் என்று பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள்.

தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர்.

thileepan-1-750x400.jpg

மட்டக்களப்பு மாநகரில் ‘மதன் என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தைத் திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாள்களில் ஆரம்பிக்கவுள்ளார் என்று என்னிடம் மாத்தா கூறினார். இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985ஆம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களைத் தன் இளம் வயதில் சந்தித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தைத் தகர்த்தவர்களுள் இந்த மதனும் ஒருவர். இதே குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமன்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாரமல்ல. லெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான்.

தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் திருச் செல்வம் என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை தொடங்கவுள்ளனர் என்ற செய்திகள் வெளிவந்தன.

தமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது.

திலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லையென்றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா?

வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத், தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள்.

ஈழமுரசு” பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன.

இந்த எழுச்சியை மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.

புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல, அகிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.

திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாள்களை வெற்றிகரமாக முடித்தவர் என்ற பெருமையுடன் அதோ கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன்.

அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன. வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை.

பேச முடியவில்லை……

சிரிக்க முடியவில்லை………

ஆம் ! தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது?

முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள்.

சிந்திய குருதியால்
சிவந்த தமிழ் மண்ணில்
சந்ததி ஒன்று
சரித்திரம் படைக்க

முந்திடும் என்பதால்
முளையிலே கிள்ளிட
சிந்தனை செய்தவர்
சிறுநரிக் கூட்டமாய்

இந்தியப்படையெனும்’
பெயருடன் வந்தெம்
சந்திரன் போன்ற
திலீபனின் உயிரைப்
பறித்திட எண்ணினால்

பாரிலே புரட்சி
வெடித்திடும் என்று
வெறியுடன் அவர்களை
எச்சரிக்கின்றேன் !”

மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

இரத்த அழுத்தம் -80/50

நாடித் துடிப்பு -140

சுவாசம்-24

http://newuthayan.com/story/31047.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.