Jump to content

கந்தரோடை காட்டுகின்ற வரலாற்று பின்னணி -நேர்காணல்


Athavan CH

Recommended Posts

கந்தரோடை காட்டுகின்ற வரலாற்று பின்னணி என்ற தலைப்பின் இச் சிறு நேர்காணல் ஆனது யாழ்ப்பாணத் தீபகற்பத்தினுள் மிகவும் பழமை வாய்ந்த மையமாக விளங்கும் கந்தரோடையின் தொன்மை வரலாற்றை மீள நினைவுபடுத்தும் வகையில் அமைகின்றது.
 
 

1. கந்தரோடையின் வரலாற்றுப் பின்னணி பற்றிய உங்களது கருத்து?

 இலங்கையில் உள்ள 2வது பெரிய புராதன குடியிருப்பு மையம் ஆகும். 2½மைல் நீள அகலம் உடையது. ஆதி இரும்புக்கால பெருங்கற்கால சின்னங்கள் 1970ல் விமலாபேக்லேயால் மேற்கொண்ட ஆய்வில் கிடைக்கப்பட்டது.

 யாழ்ப்பாணத்தில் தொடக்ககால குடியிருப்பு. கந்தரோடையில் கிடைத்த ஆதி இரும்புக்கால பண்பாட்டு சின்னங்களை ஊ14 காலக் கணிப்பிற்கு உட்படுத்தியதில் கி.மு 700க்கு முன்னர் குடியிருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பட்டன.

 இவ் ஆய்வில் விமலாபேக்லே தமிழ்நாட்டில் அல்லது இங்கு வாழ்ந்தவர்கள் தமிழகத்தோடு நெருங்கிய ஒற்றுமை கொண்டனர் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

 இத்தகைய குடியிருப்பு கந்தரோடைஇ மாதோட்டம்இ பொம்பரிப்பு வரை பரந்திருந்தததை பிற்கால ஆய்வு உறுதி செய்கிறது.

 இப் பண்பாட்டு மையங்களில் தொடர்ச்சியான ஒரு நகரமயமாக்கல் செறிவான குடியிருப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள தமிழகம்இ தென்னிந்தியாஇ வடஇந்தியாஇ உரோமஇ கிரேக்கஇ சீனஉறவு இருந்ததற்கான சான்றுகள் தொல்லியல் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

 பௌத்தமதம் பரவியது அதன் தாக்கம் கந்தரோடையில் ஏற்பட்டது. பொதுவாக பௌத்த எச்சம் வழிபாட்டுதலம் இருக்கும். அதைச் சுற்றி பல வழிபாட்டு கட்டிடம் காணப்படும். கந்தரோடை ஸ்தூபிக்கு பக்கத்தில் பலநூற்றுக்கணக்கான ஸ்தூபிகள் காணப்பட்டது.

 கந்தரோடை முக்கிய வணிகதளம.; தமிழக வடஇலங்கை உறவின் தொடர்பு காணப்படுகிறது. இங்கு பல்வேறுபட்ட பண்பாட்டு மக்கள் குடியேறினர். அதை தொடர்ந்து பௌத்ததுறவிகள் தங்கி குடியேறினர்.

 3வது கலாச்சாரபடையாக பௌத்த எச்சம் காணப்படுகிறது. பௌத்தசின்னங்கள் மூலம் குறிப்பிட்ட இனப்பண்பாடு இருக்கவில்லை. இங்குபல இன மக்களது பண்பாடு ஏற்பட்டதற்கு மட்பாண்டம் முதலான சான்றுகள் கிடைத்துள்ளன.

 ஆதி இரும்புக் காலபண்பாடு தமிழக பிராகிருதம் சான்றுகள் பௌத்தம் ஆதியில் இருந்ததை நிராகரிக்க முடியாது.

 தமிழகத்திலும் கி.பி 7 முதல் தமிழ் பௌத்தம் மேலோங்கி காணப்பட்டது. தமிழக யாழ்ப்பாண உறவின் தொடக்ககால மையமாக கந்தரோடை காணப்படுகிறது.

 பின் கந்தரோடை மையம் பாண்டிய சோழ பொலநறுவை யாழ்ப்பாணஅரசு சமகால சீனாவின் பொருளாதார ஆட்சியில் நெருங்கிய தொடர்பு கொண்டது.

 கந்தரோடை நகரமயமாக்கம் சிறுநகரமாக இருந்தது. யாழ் அரசு தொடர்பாக தமிழ் இலக்கியங்களில் இலங்கையில் இருந்த தமிழ் அரசு கதிரமலை தலைநகராக உக்கிரசிங்கன் மாருதப்புரவிகவள்ளிகால அரசு தோன்றியது.

 8ம் 9ம் நூற்றாண்டில்     நூல்களினதும் போல்பீரிஸ் அநுராதபுரத்தை அடுத்து இலங்கையில் தோன்றிய இன்னொருநகர் கந்தரோடையென கூறினார். ஏனெனில் பல இனம் இருந்ததற்கான ஆதாரம் காணப்படுகிறது.

 2011ல் தொல்லியல் திணைக்களமும் வரலாற்றுத்துறையின் அகழ்வாரட்சியில் 54 கலாச்சாரமண்படை அடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டுவரை கற்கால மக்களது பண்பாட்டை பிரதிபலிக்கின்றது. அப் பண்பாட்டு மரபு மக்கள் இன்றும் வாழ்கின்றனர் என்பதை நிராகரிக்கமுடியாது.

 இத்தகைய நீண்ட தொடர்ச்சியான சான்றுகள் இதுவரை வேறு எந்த இடத்திலும் கண்டுபிடிக்கவில்லை

 

2. இப்பிரதேசம் எந்த பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றது?

 கந்தரோடையில் தற்போது வாழுகின்ற மக்களது வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் கால அடிப்படையில் இது தொடக்க கால பாரம்பரியம். ஆதி இரும்புக்கால வழிவந்த பாரம்பரியத்தைக் பண்பாட்டை கொண்டது.

 கந்தரோடையில் வாழுகின்ற தமிழ் இந்து மக்களின் பாரம்பரிய  தொடக்கமாகவே கந்தரோடையின் தொடக்க கால பாரம்பரியம் காணப்படுகிறது. திராவிட பாரம்பரியம் தமிழ்பாரம்பரியம் அமைவிடம் பல நாட்டு வணிகர் சந்திக்க வைக்கின்ற மையமாக காணப்படுகிறது. ஆதலால் நாட்டில் பிறநாட்டவரது பண்பாடு இணைந்தது. ஆனால் பெரும்பாலும் தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றது.


3. 2011ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் ஆய்வறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்?

 2011ம் ஆண்டு ஆய்வு தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஆய்வறிக்கை வெளியிடப்படாவிட்டாலும் சில முடிவுகள் எடுக்கப்பட்டது.

 1970 விமலாபேக்லி; மேற்கொண்ட ஆய்வு ஆதி இரும்புக்கால பண்பாட்டு சின்னங்கள் கண்டறியப்பட்டதோடு அத்தகைய பண்பாடு கந்தரோடை ஆரம்பகால பண்பாடு என்பர்.

 அதில் பங்கெடுத்த தொல்லியல் திணைக்கள பணிப்பாளார் கலாநிதி.சிரான் தெரணியகலஇதொல்லியல் திணைக்கள பிரதிபணிப்பாளார் னுச.நிமல்பெரோ பேராசிரியர் புஸ்பரட்ணம் போன்றவர்களது ஆய்வு ஆதி இரும்புக்கால பண்பாடே முன்னிலை வகிக்கிறது.

 நவீனகால காலக்கணிப்பிற்கு உட்படுத்திய போது தொடக்ககால பண்பாடு 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. விஞ்ஞானபுர்வமாக நிறுவப்பட்டது. இதன் ஆய்வறிக்கை எதிர்காலத்தில் வெளியிடப்படலாம்.

4. ஏன் மீண்டும் இப்பிரதேசத்தில் ஒரு ஆய்வு செய்யப்படவில்லை?

 தொல்லியல் திணைக்களம் திட்டமிட்டபடி இயற்கைமண் வரை 2 இடத்தில் ஆய்வு செய்வது என்றது முக்கியமானது. ஆனால் ஆய்வு முழுமை பெற்றதால் மீண்டும் ஆய்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

 ஏனைய இடங்களை தெரிவுசெய்து அகழ்வாய்வதற்கான திட்டம் உண்டு.

5. கந்தரோடையும் ஏனைய மரபுரிமைசின்னங்கள் போல முக்கியத்துவம் பெறுமா?

 வட இலங்கையில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் தொடக்ககால மரபுரிமைசின்னங்கள் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்டது.

 வட இலங்கையில் யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்ட மரபுரிமைச்சின்னங்கள் அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது.

 

 

6. இனிவரும் காலத்தில் வடபகுதியில் காணப்படும் மரபுரிமைசின்னங்கள் பாதுகாக்கப்படுமா?

 2010க்கு பின்னர் வட இலங்கையில் மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்க தொல்லியல் திணைக்களம் உருவாக்கப்பட்டது.

 180க்கு மேற்பட்ட தொல்பொருட் சின்னங்கள் பிரகடணப்படுத்தப்பட்ட அதேநேரம் அதைக் கண்டறிந்து பாதுகாத்து வருவதற்கு மாகாண சபை தொல்லியல் திணைக்களத்தை ஏற்படுத்தியது.

 இன்னும் தொடக்க மாகாண சபை பிராந்திய தொல்லியல் திணைக்களத்தை உருவாக்கி அதன் மூலம் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.


7. இவ் மரபுரிமைச் சின்னத்தைப் பாதுகாப்பதனால் இனிவரும் காலத்தில் தொல்லியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா?

 தொல்லியல் பட்டதாரிகளுக்கு இவ் இடங்களிலிருந்து வேலை கிடைக்கும்.

 தொல்லியல் திணைக்களம் சமகால கலாச்சார சுற்றுலாவில் பங்களிப்பு செலுத்துகின்றது. இதனால் பெரும்பாலன வேலைவாய்ப்பு கிடைக்கும்.

 மத்திய கலாச்சார நிதியம் வெளிநாட்டு நிதி உதவியோடு வடபகுதி மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதற்கான திட்டம்.

 வடமாகாணசபை மரபுரிமைச் சின்னங்களை பாதுகாப்பதற்கான பிராந்திய தொல்லியல் திணைக்களத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கிறது

prof+pushparatnam.jpg

p.pushparatnam
[pro.head of department of history]

http://santhu11.blogspot.ch/2014/12/blog-post_5.html#more

download.jpg

S.krishnarajah
                           (lec.of history department)

1. கந்தரோடையின் வரலாற்றுப் பின்னணி பற்றிய உங்களது கருத்து?
 
இது வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்துக்குரியது.
  2011ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
பெருங்கற்கால மண்படைக்கு அப்பால் மேலும் பல மண்படைகள் அடையாளம் காணப்பட்டது. அகழ்வாய்வுக் கிடங்கின் 30ம் 31ம் மண்படைகள் பெருங்கற்காலத்திற்கு முற்பட்டவை. எனவே  இது குறுணிக்கற்காலப் பண்பாட்டில் இருந்து வளர்ச்சி பெற்று பெருங்கற்காலத்தில் பௌத்தத்துடன் இணைந்து நிலையான வணிக சமய பண்பாட்டுடன் முக்கியம் பெற்று நகரமயமாக்கப்பட்டது.
 
 
2. இப்பிரதேசம் எந்த பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றது?
 
இது தனியான ஒரு குறிப்பிட்ட இன ஒரு குறிப்பிட்ட மத பண்பாட்டுக்குரியது என கூறமுடியாது. ஏனெனில் இங்கு இடம் பெற்ற அகழ்வாய்வின் படி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கும் கி.பி12ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட கால எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  
3. 2011ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் ஆய்வறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்?
 
தொல்லியல் திணைக்களம் எதிர்பார்த்த முடிவுகள் அவ் ஆய்வில் பெறப்படவில்லை. ஆகையால் ஆய்வறிக்கை வெளியிடுவது தொடர்பான  ஆர்வம் இல்லை.
 
4.கந்தரோடையும் ஏனைய மரபுரிமைசின்னங்கள் போல முக்கியத்துவம் பெறுமா?
 
கந்தரோடையை தற்போது பராமரிப்பவர்கள் இராணுவத்தினர். இனிவரும் காலத்தில் பல்கலைக்கழகம் போன்ற படித்தவர்களிடம் அப்பொறுப்பை வழங்குவார்கள் எனில் இக் கந்தரோடை பாதுகாக்கப்படும்
 
5.இவ் மரபுரிமைச் சின்னத்தைப் பாதுகாப்பதனால் இனிவரும் காலத்தில் தொல்லியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா?
 
 
மாகாண அரசாங்கத்திற்கு தொல்லியல் சம்பந்தமான உரிமம் கொடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக யாழ்பல்கலைக்கழக தொல்லியல் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கப்படும்
 
 
 
 

M.Sritharan (supervisor in kantharodai)

 

 
 

கந்தரோடையின் வரலாற்றுப் பின்னணி பற்றிய உங்கள் கருத்து?
இவருடைய கருத்துப்படி கந்தரோடை ஆனது இந்தியாவில் இருந்து இலங்கை வந்த சங்கமித்தை குழுவினர் யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதிக்கு வந்தனர் என்றும் அக்குழுவினரின் சமாதிதான் கந்தரோடை ஸ்தூபி என்று கூறினார்.

இங்கு பளிங்கு நாணயங்கள்இபுத்தர்;சிலைஇகல்வெட்டுக்கள் மணிகள் இமட்பாண்டங்கள் என்பன கிடைத்துள்ளன.

தற்போது தனியாருக்கு மையத்திற்குள் பிரவேசிக்க அனுமதி இல்லை.
A9பாதை திறந்ததும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்தது.
 

 
 

K.H.L. Kanakarathina (Army Commander)

 

கந்தரோடையின் வரலாற்றுப் பின்னணி பற்றிய உங்கள் கருத்து?

இவருடைய கருத்துப்படி கந்தரோடை ஆனது 2500 வருடம் பழமையானது.

2வது தடவையாக நாகதீபத்திற்கு புத்தர் வந்த போது இங்கு ஒர் நாள் ஓய்வெடுத்து சென்றதாக கூறினார்

சங்கமித்தை குழுவினர் யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதிக்கு வந்தனர் என்றும் அக்குழுவினரின் சமாதிதான் கந்தரோடை ஸ்தூபி என்று கூறினார்.

இங்கு உரோமநாணயத்தில் ஜோச் அரசன் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட நாணயம் கிடைக்கப்பெற்றது.

33 மட்பாண்டம் கிடைத்துள்ளது. இத்தூபி ஆனது முருகற்பாறைக்கல் கருங்கற்களினால் செய்யப்பட்டது.


சுற்றுலாபயணிகள்

கந்தரோடையின் வரலாற்றுப் பின்னணி பற்றிய உங்கள் கருத்து?

 
           K.Thanavatthy  (Colombo)
 
  இது புராதன பௌத்த இடம். 60 தேரர்கள் இறந்த இடம்.

இது தற்போது சுற்றுலாத் தளம்

    
K.Shena   (Anurathapura)
 


இது புராதன பழமை வாய்ந்த இடம். 1000 ஆண்டு பழமை வாய்ந்தது.

 

தொகுப்பு

     கந்தரோடை காட்டுகின்ற வரலாற்று பின்னணி என்ற தலைப்பின் இச் சிறு நேர்காணலை அம் மையத்தில் பணிபுரியும் அலுவலகர்கள் சுற்றுலாப்பயணிகள் அயலவர்கள் மற்றும் இத் துறைசார்ந்த தொல்லியல் திணைக்களபணிப்பாளர் தொல்லியல் பேராசியர்கள் தந்தருளிய கருத்துப்படி அவர்களுடைய பார்வையில் சிறுசிறு முரணான கருத்துக்களை காணக்கூடியதாக உள்ளது. அந்தவகையில் கந்தரோடை மையத்தின் தொன்மை வரலாறானது சுற்றுலாப்பயணிகள் பார்வையில் இது ஓர் பௌத்த புராதன மையம் எனவும் இது ஓர் பௌத்த புனித பிரதேசம் எனவும் அவர்களுடைய கருத்து காணப்பட்டது.
      அதேவகையில் அத் துறை சார்ந்த தொல்லியல் பேராசியர்களை நேர்காணல் செய்த போது அவர்களுடைய கருத்து இக் கந்தரோடையானது வரலாற்றுக்கு முற்பட்டகால வரலாற்றுகால நீண்ட பாரம்பரியத்தில் பெரும்பங்கினை இப் பிராந்தியப் பண்பாட்டில் வகித்து வந்துள்ளது. இது இந்து பௌத்த பாரம்பரியங்கள் வர்த்தக நடவடிக்கைகளுடே சந்தித்த மையம் என்;ற வகையில் கந்தரோடை முக்கியத்துவம் பெறுகிறது. கந்தரோடை வரலாறானது திராவிடர் பண்பாட்டிலும் முக்கியத்துவம் பெறுகிறது. இத் தொல்லியல் மையம் ஆரம்பத் தமிழர் பண்பாட்டையே பிரதிபலிக்கினறது என்பது இவர்களுடைய கருத்தாக காணப்படுகிறது.
        இவர்களுடைய கருத்தை ஆராய்ந்து நோக்கும் போது எது எவ்வாறாயினும் கந்தரோடையின் வரலாற்று பின்னணியில் கந்தரோடை நல்லூரைப் போன்று சிறு தலைநகரமாக விளங்கியுள்ளமை தெரியவருகிறது. ஆனாலும் இத் தொல்லியல் மையம் அரைகுறை அகழ்வாய்விற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருப்பது என்பது இலங்கை திராவிடர் பண்பாடு பற்றிய அக்கறையுடையோர்க்கு கவலையளிக்கும் விடயமாகவுள்ளது. எதிர்காலத்திலாவது தொல்லியல் திணைக்களம் இதனைக் கருத்தில் கொண்டு முற்றுமுழுதாக இதனை அரசியல் நோக்கோடு பார்க்காமல் பக்கச்சார்பின்றி நடுநிலையாக வரலாற்று மரபுரிமை சின்னங்களின் உண்மையை வெளிப்படுத்த வேண்டும். அத்தோடு மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கைகளை வெகுவிரைவில் வெளியிடவேண்டும்; அத்தோடு எதிர்காலத்தில் இத் தொல்லியல் மையம் இன்னும் சிறந்த முறையில் பாதுகாக்கப்படும் என நம்புகிறோம்.

 
10748838_584255071676129_370731221_n.jpg

 

 
10751873_584255015009468_189490155_n.jpg

 

 
10751933_584255025009467_1216397737_n.jpg

 

 
 
download.jpg

 

 
 
download%2B%281%29.jpg

http://santhu11.blogspot.ch/2014/12/s.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.