நவீனன்

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டடம்

Recommended Posts

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டடம்

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டடம்

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்பொழுது சுமார் 200 மாணவர்கள் NVQ 4, 5 மற்றும் 6 ஆம் தரத்திலான பயிற்சி கற்கைநெறிகளை கற்று வருகின்றனர்.

இவர்களில் 57 சதவீதமானோர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அப்பால் இருந்து வருகை தருகின்ற நிலையில், தற்பொழுது 144 மாணவர்கள் தங்கக்கூடிய விடுதி வசதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

திறன்முறை ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் பயிற்சி நிலையம் 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இவ்வருடத்தில் மேலும் 400 மாணவர்கள் இங்கு கற்கை நெறிக்காக இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் தங்குமிட வசதிகளை விரிவுபடுத்தவேண்டியுள்ளது.

மேலதிகமாக 400 மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை விரிவுபடுத்தும் பொருட்டு, இந்தப் பயிற்சி நிறுவனத்தில் புதிய தங்குமிட கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக திறன் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/new-building-for-the-German-Training-Center

Share this post

Link to post
Share on other sites

யாழ்மாவட்டத்தை 20 வருடத்திற்கு ஜேர்மனிக்கு குத்தகைக்கு கொடுத்தாலே போதும். ஒரு குட்டி ஜேர்மனி ஆக்கிவிடுவார்கள். போரின் உண்மையான வலி தெரிந்தவர்கள். பெரிதாக வியாபாரம் பண்ணமாட்டார்கள்.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
8 minutes ago, குமாரசாமி said:

யாழ்மாவட்டத்தை 20 வருடத்திற்கு ஜேர்மனிக்கு குத்தகைக்கு கொடுத்தாலே போதும். ஒரு குட்டி ஜேர்மனி ஆக்கிவிடுவார்கள். போரின் உண்மையான வலி தெரிந்தவர்கள். பெரிதாக வியாபாரம் பண்ணமாட்டார்கள்.

நீங்கள் சொல்வது சரி.ஆனாலும் ஒரு சின்ன திருத்தம் வடகிழக்கு மாகாணத்தை யேர்மனியிடம் கொடுத்தால் என்டு வர வேணும்.:)

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் சொல்வது சரி.ஆனாலும் ஒரு சின்ன திருத்தம் வடகிழக்கு மாகாணத்தை யேர்மனியிடம் கொடுத்தால் என்டு வர வேணும்.:)

நீங்கள் சொல்வது சரிதான்.

விருப்பமும் அதுதான்.

நாங்கள் வடகிழக்கு என்கிறோம்.....தம்பி...சகோதரம் என்கிறோம்...ஆனால் தம்பியோ யாழ்ப்பாணி என்னு புறந்தள்ளுறானுங்க....இதை எப்பிடி கணிக்கிறீங்க?

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

யாழ்மாவட்டத்தை 20 வருடத்திற்கு ஜேர்மனிக்கு குத்தகைக்கு கொடுத்தாலே போதும். ஒரு குட்டி ஜேர்மனி ஆக்கிவிடுவார்கள். போரின் உண்மையான வலி தெரிந்தவர்கள். பெரிதாக வியாபாரம் பண்ணமாட்டார்கள்.

ஒரு வேளை மேர்க்கல் அம்மையார் யாழ் விஜயம் செய்தால் வட மாகாண சபை உறுப்பினர்கள் அம்மையார் காலில் விழ வேண்டி வருமா ????😀😀😀😀

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது சரிதான்.

விருப்பமும் அதுதான்.

நாங்கள் வடகிழக்கு என்கிறோம்.....தம்பி...சகோதரம் என்கிறோம்...ஆனால் தம்பியோ யாழ்ப்பாணி என்னு புறந்தள்ளுறானுங்க....இதை எப்பிடி கணிக்கிறீங்க?

கிழக்கில் முந்திவந்து குந்திவிட்ட யாழ்ப்பாணிகள்தான் பிந்தி வரும் யாழ்ப்பாணிகளை புறந்தள்ளுறானுங்க... சாமி அவர்களே!

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now