• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவாரா மகிந்த?

Recommended Posts

சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவாரா மகிந்த?

எம்.ஐ.முபா­றக்

 

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 66ஆவது ஆண்டு நிறைவு மாநாடு கடந்த 3ஆம் திகதி இடம்­பெற்­ற­தி­லி­ருந்து அந் தக் கட்­சி­யைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன. கட்­சி­யின் ஆட்­சி­யும், அர­சுத் தலை­வர் பத­வி­யும் சுதந்திரக் கட்சிக்கு இருந்­தா­லும்­கூட,அதைப் பலம்­வாய்ந்த கட்சி என்று சொல்ல முடி­யாது.தற்போதுள்ள அர­சி­யல் நில­வ­ரத்­தின்­படி,இனி வரும் தேர்­தல்­க­ளில் அந்­தக் கட்சி தனித்­துப் போட்­டி­யிட்­டால் வெற்­றி­பெ­றுவது சந்­தே­கமே.அதற்­குக் கார­ணம் மகிந்த தரப்­பின் செயற்­பா­டு­கள்­தான்.

மகிந்த என்ற பாத்­தி­ரம் மைத்­திரி எதிர்­பார்க்­கா­மல் தோன்­றிய சவா­லா­கும். அரச தலை­வர் தேர்­த­லில் தோல்­வி­ய­டைந்­த­தும் எல்­லோ­ரை­யும்­போல் மகிந்­த­வும் ஒதுங்­கிப் போயி­ருந்­தால், இன்று மைத்­தி­ரிக்­குப் போட்­டி­யாக இருந்­தி­ருக்­கக் கூடி­ய­வர் தலைமை அமைச்­சர் ரணில் மட்­டுமே. ஆனால்,தனது மகன் நாம­லின் அர­சி­யல் எதிர்­கா­லத்­துக்­கா­க­வும், தனது குடும்­பம் மீதும் தனது சகாக்­கள்­மீ­தும் சுமத்­தப்­பட்­டுள்ள ஊழல்,மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­க­ளில் இருந்து அவர்­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்­கா­க­வும் மீண்­டும் அர­சி­ய­லில் குதித்த மகிந்­த­வால் மைத்­திரி இன்று பெரும் தலை­யி­டியை எதிர்­நோக்கி வரு­கின்­றார்.

சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைத்­து­வப் பத­வியை மகிந்த அன்று வேறு வழி­யின்றி மைத்­தி­ரி­யி­டம் ஒப்­ப­டைத்­த­போ­தி­லும்,மீண்­டும் அந்­தப் பத­வி­யைக் கைப்­பற்­று­வ­து­தான் மகிந்­த­வின் இப்­போ­தைய ஒரே திட்­ட­மா­கும்.
தனித் தரப்­பாக தேர்­த­லில் குதித்து வெற்றி பெறு­வ­தன் மூலம், சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைத்­து­வப் பத­வியை மீண்­டும் கைப்­பற்ற முடி­யும் என்று மகிந்த நம்­பு­கி­றார்.இனி­வ­ரும் தேர்­தல்­க­ளில் ஐக்­கிய தேசிய கட்­சியை வெற்­றி­கொள்ள முடி­யா­விட்­டா­லும் பர­வா­யில்லை, சுதந்­தி­ரக் கட்­சியை வீழ்த்­தி­ னாலே போதும் என்ற நிலைப்­பாட்­டில் மகிந்த இருக்­கின்­றார்.

அவ்­வாறு சுதந்­தி­ரக் கட்­சியை வீழ்த்­தும்­பட்­சத்­தில், கட்சி ஊடா­க­வும், மக்­கள் ஊடா­க­வும் அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து கட்­சி­யின் தலை­மைத்­து­வப் பத­வி­யைப் பிடிப்­பதே மகிந்­த­வின் திட்­டம்.

மகிந்­த­வின் உரிமைக்
கோரல் சரி­யா­னதா?

மைத்­தி­ரி­யி­டம் மகிந்த கட்­சி­யின் தலை­மைத்­து­வப் பத­வியை ஒப்­ப­டைத்­த­போ­தி­லும்,அதை அவர் முழு விருப்­பத்தோடு செய்­ய­வில்லை.கட்­சிக்­குள் அப்­போ­தி­ருந்த அழுத்­தம் கார­ண­மா­கவே அதை விட்­டுக் கொடுத்­தார்.
ஆட்சி மாற்­றத்­தோடு மைத்­திரி பக்­கம் அடித்த வெற்றி அலையை மீறி, எதை­யும் செய்ய முடி­யாது என்­பதை உணர்ந்த மகிந்த, கட்­சிக்­குள் அப்­போது எழுந்த அழுத்­தத்­துக்­குக் கட்­டுப்­பட்டு கட்­சி­யின் தலை­மைத்­து­வப் பத­வியை மைத்திரியிடம் ஒப்­ப­டைத்­தார்.

ஆனால் மகிந்தவின் பின்­னால் ஒரு கூட்­டம் தொடர்ந்து இருப்­ப­தற்கு முடி­வெ­டுத்­த­தால், அந்­தப் பத­வியை மீண்­டும் பிடிக்க முடி­யும் என்ற நம்­பிக்கை மகிந்­த­வுக்கு முன்னரேயே இருந்தது. அத­னால்­தான் எந்­த­வித ஆர்ப்­பாட்­ட­மு­மின்றி அந்­தப் பதவி மைத்­தி­ரி­யின் கைக­ளுக்கு மிக இல­கு­வாக மாறி­யது.

ஆனால், நான் இன்­ன­மும் சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைத்­து­வப் பத­வி­யில் இருந்து வில­க­வு­மில்லை; விலக்­கப்­ப­ட­ வு­மில்லை என்று மகிந்த அண்­மை­யில் கூறி­யமை பொய் என்­ப­தற்­கான ஆதா­ரம் ஒரு­பு­றம் இருக்­கின்­ற­போ­தி­லும்,அவர் மீண்­டும் அந்­தப் பத­வியை கைப்­பற்­று­வ­தற்கு முய­லு­கின் றார் என்ற உண்­மையை விளங்­கிக் கொள்ள முடி­கின்­றது.

மகிந்த இப்­போ­தும் சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வரா என்­பதை முத­லில் பார்ப்­போம்.அவர் 2015ஆம் ஆண்­டின் அரச தலை­வர் தேர்­த­லில் தோல்­வி­ய­டைந்து அலரி மாளி­கை­யில் இருந்து வெளி­யே­றி­ய­தும், மகிந்­த­வின் வெற்­றிக்­காக உழைத்­த­வர்­கள் அவர்­க­ளின் அர­சி­யல் எதிர்­கா­லம் குறித்­துச் சிந்­திக்­கத் தொடங்­கி­னர்.

மைத்­தி­ரியை கட்­சி­யின் தலை­வ­ராக ஆக்கி, அவர் பின்­னால் அணி­தி­ரள்­வ­தன் மூலமே தமது அர­சி­யல் எதிர்­கா­லத்­தைப் பாது­காக்க முடி­யும் என்­பதை உணர்ந்த அவர்­கள் உட­ன­டி­யாக அவ­ரைத் தலை­வ­ராக்­கும் முயற்­சி­யில் இறங்­கி­னர்.
தற்­போ­தைய அமைச்­சர்­கள் மகிந்த அம­ர­வீர மற்­றும் விஜி­த­முனி சொய்சா போன்­ற­வர்­கள் அந்த முயற்­சி­யில் மிகத் தீவி­ர­மாக இறங்­கி­னர். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால, அம­ர­வீ­ர­வின் வீட்­டுக்கு அழைக்­கப்­பட்டு, மகிந்­த­வின் ஆட்­கள் 28பேர் அவ­ரு­டன் குறித்த விட­யம் தொடர்­பில் பேச்சு நடத்­தி­னர்.தலை­மைத்­து­வப் பத­வியை ஏற்­ப­தற்கு மைத்­திரி அந்­தக் கூட்­டத்­தில் இணக்­கம் தெரி­வித்­தார். இத­னைத் தொடர்ந்து மகிந்­த­வி­ட­மும் பேசப்­பட்­டது.

சுதந் திரக் கட்­சி­யின் தலை­மைத்­து­வப் பத­வியை மைத்­தி­ரி­யி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும், கட்­டா­யத்­தை­யும் அவர்­கள் மகிந்­த­வி­டம் விளக்­கிக் கூறி­னர்.ஒப்­ப­டைத்தே ஆக வேண்­டும் என்­றோர் அழுத்­தம் இருப்­பதை உணர்ந்த மகிந்த, அரை­குறை மன­து­டன் அதற்­குச் சம்­ம­தித்­தார்.

இதன்­பின்­னர் மகிந்­த­வும் மைத்­தி­ரி­யும், சமல் ராஜ­பக்­ச­வின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தில் சந்­தித்­துப் பேசு­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.சமல் முன்­னி­லை­யில் இரு­வ­ரும் பேசி­னர்.அப்­போது மைத்­திரி மற்­றும் மகிந்த தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் முடிவை எதிர்­பார்த்து அந்த இல்­லத்­துக்கு வெளியே ஆவ­லு­டன் காத்­துக்­கொண்டு நின்­ற­னர்.

சுதந்­தி­ரக் கட்­சியை
மைத்­தி­ரி­யி­டம்
ஒப்­ப­டைத்­து­விட்டேன்
என மகிந்த தெரி­விப்பு

சந்­திப்பு முடி­வ­டைந்து வெளியே வந்த மகிந்த, சுதந்­தி­ரக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைப் பார்த்து ‘’நான் சுதந்­தி­ரக் கட்­சியை மைத்­தி­ரி­யி­டம் ஒப்­ப­டைத்­து­விட்­டேன்.நீங்­கள் அவ­ரு­டன் இணைந்து செயற்­ப­டுங்­கள்’’.என்­றார்.
அந்­தச் சந்­தர்ப்­பத்­தில் மைத்­திரி,துமிந்த திஸா­நா­யக்க மற்­றும் கே.டி.எஸ்.குண­வர்­தன ஆகி­யோ­ரின் கட்சி உறுப்­பு­ரிமை பறிக்­கப்­பட்­டி­ருந்­தது.
அங்­கி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அது­பற்றி மகிந்­த­வி­டம் கூறி­ய­போது, உறுப்­பு­ரி­மையை மீள­வ­ழங்கி ஆக வேண்­டி­ய­தைப் பாருங்­கள் என்று மகிந்த பதி­ல­ளித்­தார்.

ஓரிரு நாள்­க­ளுக்­குள் அடுத்த கூட்­டம் சமல் ராஜ­பக்­ச­வின் வீட்­டில் இடம்­பெற்­றது.சுதந்­தி­ரக் கட்­சி­யின் மத்­திய குழுக் கூட்­டத்­தைக் கூட்­டு­வ­தற்­கான திகதி அந்­தக் கூட்­டத்­தில் தீர்­மா­ னிக்­கப்­பட்­டது.பிறகு மத்­திய குழுக் கூட்­டம் கூட்­டப்­பட்டு மேற்குறிப்பிட்டவர்களி டமிருந்து பறிக்­கப்­பட்ட உறுப்­பு­ரிமை மீள வழங்­கப்­பட்­டது.

இத­னைத் தொடர்ந்து பொதுக்குழுக் கூட்­டம் கூட்­டப்­பட்­டது.அந்­தக் கூட்­டத்­தி­லேயே மைத்­தி­ரி­யி­டம் சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வர் பதவி ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.மேலும் அனுர பிரி­ய­தர்­சன யாப்பா கட்­சி­யின் செய­லா­ள­ரா­க­வும், சுசில் பிரே­ம­ஜ­யந்த தேசிய அமைப்­பா­ள­ரா­க­வும், மகிந்த அம­ர­வீர பிர­திச் செய­லா­ள­ரா­க­வும் நிய­மிக்­கப்­பட்­ட­ னர்.

அந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ளு­மாறு மகிந்­த­வுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­ட­போ­தி­லும்,அவர் அதில் கலந்­து­கொள்­ள­வில்லை.ஆனால்,மைத்­தி­ரிக்கு வாழ்த்­துச் செய்­தியை மாத் தி­ரம் அனுப்பி வைத்­தி­ருந்­தார்.

அதன்­பின்­னர் இடம்­பெற்ற மத்­திய குழுக் கூட்டங்­கள் பல­வற்­றில் மகிந்த கலந்­து­கொண்­டார்.மைத்­தி­ரிக்கு ஆத­ர­வா­க­வும் உரை­யாற்­றி­னார்.
கட்­சி­யின் 64ஆவது மாநாடு பொலன்­ன­று­வை­யில் இடம்­பெற்­ற­போது அதில் மகிந்த கலந்­து­கொண்­டார்.‘‘நான் கட்­சியை மைத்­தி­ரி­யி­டம் ஒப்­ப­டைத்­து­விட்­டேன்’’ என்று அந்­தக் கூட்­டத்­தில் உரை­யாற்­றும்­போது கூறி­னார்.

மைத்­தி­ரிக்கு ஆத­ர­வா­கப் பேசி­னார். மைத்­தி­ரி­யி­டம் மகிந்த தலை­மைத்­து­வப் பத­வியை ஒப்­ப­டைத்­தமை உண்மை என்­ப­தற்கு மேற்­கு­றிப்­பி­டப்­பட்­டுள்ள சம்பவங்­கள் சாட்­சி­யா­கும்.தான் கட்­சி­யின் தலை­மைத்­து­வப் பத­வி­யில் இருந்து வில­க­வுமில்லை; விலக்­கப்­ப­ட­வு­ மில்லை என்று மகிந்த இப்­போது கூறு ­கின்­றமை சுத்­தப் பொய் என்­ப­தை­யும், அவர் அர­சி­யல் தேவை ஒன்­றுக்­காக இந்­தப் பொய்­யைக் கூறு­கின்­றார் என்­ப­தை­யும் எம்­மால் விளங்­கிக் கொள்ள முடி­கி­றது.

அப்­ப­டி­யென்­றால் தன்­னி­ட­மி­ருந்து தலை­மைத்­து­வப் பதவி பல­வந்­த­மாக பறிக்­கப்­பட்­டுள்­ளது என்­றொரு வதந்­தி­யைப் பரப்பி மக்­க­ளி­டம் அனு­தா­பத்­தைப் பெறு­வ­தற்கு மகிந்த முயற்­சிக்­கின்­றார் என்று தெளி­வா­கச் சொல்ல முடி­யும்.அப்­போதே இதைக் கூறா­மல் இரண்டு வரு­டங்­கள் கழித்து இவ்­வாறு கூறு­கி­றார் என்­றால் அதற்கு இது­தான் கார­ண­மாக இருக்­கும்.

மைத்­திரி – மகிந்த
முறு­கல் ஆரம்­பம்

கட்­சி­யின் தலை­மைத்­து­வப் பத­வியை ஒப்­ப­டைத்த மகிந்த அர­சி­ய­லில் இருந்து ஒதுங்­கிப் போய்­வி­டு­வார் என்றே மைத்­திரி நினைத்­தார்.ஆனால்,விமல் வீர­வன்ச, உத­ய­கம்­மன்­பில மற்­றும் நாமல் ராஜ­பக்ச உள்­ளிட்ட பலர் அவர்­க­ளின் அர­ சி­யல் இருப்­புக்­காக மகிந்­தவை மீண்­டும் அர­சி­ய­லுக்கு இழுத்து வந்­த­னர்.

நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் சார்­பில் போட்­டி­யி­டு­வ­தற்கு மகிந்­த­வுக்கு அனு­மதி வழங்க வேண் டும் என்­றும், தேர்­த­லின் பின்னர் அவரைத் தலைமை அமைச்­ச­ராக்க வேண்­டும் என்­றும் அவர்­கள் மைத்­தி­ரி­யி­டம் கோரிக்கை விடுத்­த­னர்.இந் தக் கோரிக்­கையை மைத்­திரி நிரா­க­ரித்­தார்.மகிந்­த­வுக்கு எதி­ராக ஊழல், மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் இருப்­ப­தால், மகிந்­த­வைத் தேர்­த­லில் நிறுத்­து­வது சரி­யல்ல என்று மைத்­திரி கூறினார்.

மகிந்த அணி­யி­னர் அதற்கு இணங்­க­வில்லை.நாங்­கள் கஞ்சா இலைச் சின்­னத்­தி­லா­வது போட்­டி­யி­டு­கி­றோம்.மைத்­தி­ரி­யின் ஆத­ரவு தமக்­குத் தேவை இல்லை.மைத்­திரி எங்­கள் மேடை­யில் ஏறத் தேவை­யு­மில்லை.அவர் ஐக்­கிய தேசி­யக் கட்சி மேடை­க­ளில் ஏறட்­டும் என்று மகிந்த அணி­யி­னர் முழங்­கி­னர்.

இத­னால் சுதந்­தி­ரக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மைத்­தி­ரி­யைச் சந்­தித்து நிலை­மையை விளக்­கி­னர். மகிந்­த­வுக்கு வேட்­பா­ளர் நிய­ம­னம் வழங்­கா­விட்­டால், கட்சி இரண்­டாக உடைந்­து­வி­டும் என்று கூறி­னர்.கட்­சியை இரண்­டாக உடைத்­து­விட்­டார் என்ற அவப் பெயரை ஏற்க விரும்­பாத மைத்­திரி, போனால் போகட்­டும் என்று மகிந்­த­வுக்­கும் அவ­ரது கூட்­டத்­துக்­கும் வேட்­பா­ளர்­கள் நிய­ம­னம் வழங்­கி­னார்.

மகிந்த அணிக்கு வேட்­பா­ளர் நிய­ம­னம் வழங்­கி­யது மாத்­தி­ர­மன்றி தேர்­தல் பரப்­புரை நட­வ­டிக்­கைக்கு தலைமை தாங்­கு­வ­தற்­கும் மைத்­திரி, மகிந்­த­வுக்கு இடங்­கொ­டுத்­தார்.ஆனால்,மகிந்த தரப்போ மைத்­திரி தரப்பை தோற்­க­டித்து தாம் வெற்றி பெறு­வ­தற்கே முயற்சி செய்­த­னர்.

அந்த வெற்­றி­யைக் கொண்டு மைத் தி­ரி­யி­டம் பேரம் பேசி மகிந்­த­வுக்கு தலைமை அமைச்­சர் பத­வி­யைப் பெற்­றுக்­கொ­டுப்­பதே மகிந்த அணி­யின் திட்­ட­மாக இருந்­தது.சுதந்­தி­ரக் கட்சி வென்­றா­லும் தோற்­றா­லும் ஐக்­கிய தேசிய கட்­சி­யு­டன் இணைந்து தேசிய அரசை அமைப்­ப­தும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தலைமை அமைச் சராக்குவதுமே மைத்­தி­ரி­யின் திட்­ட­மாக இருக்­கின்­றது என்­பதைத் தெரிந்­தும்­கூட மகிந்த அணி­யி­னர், வீம்­புக்கு தலைமை அமைச்சர் பத­வி­யைக் கேட்­டுப் போரா­டி­னர். தேர்­தல் பரப்புரை யின்போது மைத்­திரி தரப்பு உறுப்­பி­னர்­கள் பல­ரின் பெயர்­க­ளைச் சுட்­டிக்­காட்டி அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்­டாம் என்று வெளிப்­ப­டை­யா­கவே கூறி வந்­த­னர் மகிந்த தரப்­பி­னர்.

அமைச்­சர் சாந்த பண்­டா­ர­வுக்கு வாக்­க­ளிக்க வேண்­டா­மென அவ­ரது மனை­வி­யி­டமே மகிந்த தரப்பு பரப்­புரை

குரு­நா­கல் மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும் அமைச்­ச­ரா­க­வும் இருந்த சாந்த பண்­டா­ரவை தோற்­க­டிப்­ப­தற்­காக, அவ­ருக்கு வாக்­க­ளிக்க வேண்­டாம் என்று அவ­ரது மனை­வி­யி­டமே பரப்­புரை செய்­யும் அள­வுக்கு மகிந்த அணி­யி­னர் தள்­ளப்­பட்­ட­னர்.

மகிந்த அணி­யின் இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளால் ஆத்­தி­ர­ம­டைந்த அரச தலை­வர் மைத்­தி­ரி­பால தொலைக்­காட்­சி­யில் தோன்றி மþகிந்த வென்­றா­லும் அவ­ருக்குத் தலைமை அமைச்சர் பதவி வழங்­கப்­ப­ட­மாட்­டாது என்று வெளிப்­ப­டை­யா­கக் கூறி­னார். ஆனால், ¶«Ä அரச தலை­வர் மாளி­கை­யின் கதவை உடைத்­துக்­கொண்டு போயா­வது நாம் தலைமை அமைச்­சர் பத­வி­யைப் பெறு­வோம் என்று மகிந்­த­வின் ஆட்­கள் வீராப்புப் பேசி­னர்.

தேர்­தல் முடிந்­த­தும் கண்டி மற்­றும் நுகே­கொடை போன்ற இடங்­க­ளில் மைத்­தி­ரிக்கு எதி­ரா­கக் கூட்­டங்­களை நடத்தி மைத்­தி­ரியை மேலும் சீண்­டி­னர். அவர்­கள் புதிய கட்சி ஒன்றை உரு­வாக்கி சுதந்­தி­ரக் கட்­சியை மேலும் பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு முயற்சி செய்­த­னர்.மே தினக் கூட்­டத்­தைத் தனி­யாக நடத்தி பிளவை மேலும் விசா­ல­மாக்­கி ­னர்.

இப்­ப­டி விரி­சல் அதி­க­ரித்­துக்­கொண்டே சென்­றது.இந்த விரி­ச­லின் உச்­சக்­கட்­டம்­தான் மைத்­திரி தரப்­பில் இருந்து 18 பேரைக் கழற்றி எடுப்­ப­தற்கு மகிந்த அணி முயற்சி செய்­கின்­றமை.

உண்­மை­யில்,அந்த 18 பேரும் மகிந்த பக்­கம் தாவு­வார்­க­ளே­யா­னால் மைத்­திரி அணி பல­வீ­னம் அடைந்­து­வி­டும்.மகிந்­த­வின் இலக்­கான கட்­சித் தலை­மைத்­து­வத்­தை­யும் ஆட்­சி­யை­யும் கைப்­பற்­றும் செயற்­பாடு அடுத்த தேர்­த­லில் சாத்­தி­ய­மா­கி­வி­டும் என்று மைத்­திரி நம்­பு­கி­றார்.

இத­னால் கட்­சி­யைப் பலப்­ப­டுத்­தும் செயற்­பா­டு­களைத் துரி­தப்­ப­டுத்த வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை மைத்­திரி உணர்ந்­துள்­ளார்.மகிந்த அணி­யைப் பல­வீ­னப்­ப­டுத்தி சுதந்­தி­ரக் கட்­சி­யைப் பலப்­ப­டுத்­தும் சில அதி­ர­டி­மு­டி­வு­களை மைத்­திரி விரை­வில் எடுக்­க­வுள்­ளார் என்று சுதந்­தி­ரக் கட்சி வட்­டா­ரம் தெரி­விக்­கின்­றது.

இனி­வ­ரும் தேர்­தல்­க­ளில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் இலக்கு மகிந்த அணியை வீழ்த்­து­வதே தவிர, ஐக்­கிய தேசிய கட் சியை அல்ல.சுதந்­தி­ரக் கட்சி தோல்­வி­ய­டைந்­தா­லும், தேவை ஏற்­பட்­டால், ஐக்­கிய தேசிய கட்­சி­யும் சுதந்­தி­ரக் கட்­சி ­யும் ஒன்­றி­ணைந்து மீண்­டும் தேசிய அரசை அமைப்­ப­தற்­கான புரிந்­து­ ணர்வு, ரணில் மற்­றும் மைத்­திரி இடையே உண்டு.

ஆகவே,இந்த இரண்டு கட்­சி­க­ளை­யும் வீழ்த்­தி­னால்­தான் மகிந்­த­வின் இலக்கை அடை­ய­மு­டி­யும் என்ற நிலை­தான் தற்­போது உள்­ளது.மகிந்­த­ வின் திட்­டப்­படி அவர் சுதந்­தி­ரக் கட்­சி யின் தலைமைத்துவத்தைக் கைப்­பற்­று ­வாரா; ஆட்­சி­யைப் பிடிப்­பாரா என்ப தைப் பொறுத்­தி­ருந்து பார்ப்­போம்.

http://newuthayan.com/story/28353.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this