Sign in to follow this  
நவீனன்

இரட்டை வேடம் எப்போதும் பலன் தருமா?

Recommended Posts

இரட்டை வேடம் எப்போதும் பலன் தருமா?

 
 
  •  

பிரே­சில் நாட்டுக்கான இலங்­கைத்­தூ­து­வர் ஜகத் ஜய­சூ­ரிய தமக்கு எதி­ரா­கப் போர்க் குற்­றச்­சாட்­டுச் சுமத்­தப்பட்­டுள்­ள­தா­கக் கூறிக் கொண்டு படுத்த பாய்க்­குக் கூடத் தெரி­யா­மல் திடு­திப்­பென்று இலங்­கைக்­குத் திரும்­பி­யி­ ருந்­தார்.

அவ­ரது அந்­தத் தக­வ­லைக் கேட்டு நாடே குழப்­ப­ முற்­றது. இன்­றைய கூட்டு அர­சைத் தேசத் துரோக அரசு என்று கூற வைக்­கும் அள­வுக்கு குறிப்­பிட்ட அந்­தச் செய்தி பார­தூ­ர­மான ஒன்­றாக அமைந்­தது.

‘‘உல­கையே வென்று விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. பன்­னாட்­டுச் சமூ­கம் தற்­போது இலங்­கையை நேசிப்­ப­தா­கக் கூறப்­பட்­டது. ஆனால் போர் வீரர்­களை பன்­னாட்டு நீதி­மன்­றத்­தில் நிறுத்த ஆயத்­த­மா­கி­யுள்­ள­னர்.

அந்த வகை­யில் போர் வீரர்­க­ளைப் பாது­காக்க இய­லாத இந்த அரசு துரோக அரசு’’ ஜகத் ஜய­சூ­ரி­யா­வின் கதை­யைப் பற்­றிப் பிடித்த மகிந்த தரப்­பி­னர்­கள் இவ்­வாறு விமர்ச்­சிக்­கத் தலைப்­பட்­ட­னர்.

போர்க்­குற்­றம் தொடர்­பாக முன்­னாள் இரா­ணு­வத்­த­ள­பதி ஜெய­ன­ரல் ஜகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக ஐந்து லத்­தீன் அமெ­ரிக்க நாடு­க­ளது நீதி­மன்­றங்­க­ளில் வழக்­குத் தொடுக்­கப்­ப­ட­வி­ருப்ப­தா­க­வும் அந்த வழக்­கு­க­ளில் முன்னிலையாக தாமும் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்த பா­ய­ ரா­ஜ­பக்­ச­வும் அழைக்­கப்­பட இட­முண்டு என­வும் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

அந்த வகை­யில் நாட்­டைக் காக்­கும் சிப்பாய்களுக்கு இன்­றைய கூட்டு அரசு துரோ­கத்­த­னம் இழைக்­கி­றது. நாட்­டின் முப்­ப­டை­யி­ன­ரை­ யும் காட்­டிக் கொடுக்­கும் தரப்பு இன்­றைய அர­சைப் போன்று வேறு எது­வும் கிடை­யாது. மேற்­கண்ட கருத்­துக்­க­ளைக் கேட்­கும் போது பொங்கி வரும் சிரிப்­பைக் கட்­டுப்­ப­டுத்த இய­லா­துள்­ளது.

மகிந்­த­வைத்  தோற்­க­டிக்க சிப்பாய்களும் முன்­னின்­ற­னர்

இன்­றைய கூட்டு அரசு உரு­வாக அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­பட்ட அரச ஊழி­யர்­கள் மத்­தி­யில் முன்­னிலை வகித்­த­வர்­கள் முப்­ப­டை­க­ளைச் சேர்ந்­த­வர்­களே.

முற்று முழு­தாக படைத்­த­ரப் பி­னர்­கள் மகிந்­த­வைத் தோற்­க­டித்து மைத்­தி­ரி­பா­லவை வெற்­றி­பெற வைக்க ஒன்­றி­ணைந்­தமை தபால் மூலம் வாக்­க­ளிப்பு முடி­வு­கள் வெளியானபோது உறு­தி­யா­கி­யி­ருந்­தது.

போரை முடி­வுக்­குக் கொண்டு வந்த தீர­மிக்க இரா­ணு­வத் த­ரப்பை காய்­க­றி­கள் பயி­ரிட்டு விற்­பனை செய்­ய­வும் குப்பை கூளங்­க­ளைக் கூட்­டிச் சேர்க்­க­வும் புல்லு வெட்­ட­வும் பயன்­ப­டுத்­தி­யது இன்­றைய கூட்டு அர­சல்ல.

கார்ப்­பந்­த­யத்­தில் ஈடு­படுவதற்காக அதற்­குப் பொருத்­த­மான வீதி­களை உரு­வாக்க மண் பர­வித்­த­யார் செய்­வ­தற்கு இரா­ணு­வத்­தி­ன­ரைப் பயன்­ப­டுத்­தி­யது இன்­றைய கூட்டு அர­சல்ல. பல ஆண்­டு­கள் கால­மாக சம்­பள ஏற்­றங்­கள் எத­னை­யும் வழங்­காது இரா­ணு­வத்­தி­னர் சிர­ம­மான வாழ்க்கை வாழ வைத்­தது இன்­றைய கூட்டு அர­சல்ல.

விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் கிழக்கு மாகா­ணத் தள­பதி கரு­ணாவை அழைத்து வந்து அமைச்­சுப் பதவி வழங்கி வைத்­தது இன்­றைய கூட்டு அர­சல்ல. அந்­தக் கருணா செய்த குற்­றங்­க­ளுக்­காக அவ­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­கள் எங்கு நடத்­தப்­பட்­டன என்­பதை எவ­ரு­ம­றி­யார்.

அத்­தோடு நிறுத்­திக் கொள்­ளா­மல் கரு­ணாவை சுதந்­தி­ரக் கட்­சி­யின் உப தலை­வ­ராக்கி வைத்­தது இன்­றைய கூட்டு அரசோ அல்­லது அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ அல்ல. சுதந்­தி­ரக் கட்­சிக்­காக கடு­மை­யாக உழைத்­த­வர்­களை மூத்த அமைச்­சர்­கள் என்ற பிரி­வுக்­குள் அடக்கி அர­சி­ய­லில் இருந்து ஓய்வு பெற்று ஒதுங்க வைத்­த­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அல்­லர்.

அவ்­வி­தம் செயற்­பட்ட அதே­வேளை விடு­த­லைப் பு­லி­கள் அமைப்­பி­லி­ருந்து வில­கிய பிள்­ளை­யா­னுக்க கிழக்கு மாகாண முத­ல­மைச்­சர் பதவி வழங்­கி­ய­வர்­கள் மகிந்த தரப்­பி­ன­ரே­யன்றி மைத்­தி­ரி­பால சிறி­சேன அல்­லர்.

தலை­யில் தூக்கி வைத்த  சரத் பொன்­சேகா  துரோகி ஆக்­கப்­பட்­டார்

போர் முடி­வுக்கு வந்து மகிந்த தரப்­பி­னர் போர் வெற்­றி­யைக் கொண்­டா­டிய வேளை முத­லா­வது கேக் துண்டு வழங்­கப்­பட்­டது அவ்­வே­ளைய இரா­ணு­வத்­த­ள­பதி சரத் பொன்­சே­கா­வுக்கே.

ஆனால் அதே வேகத்­தில் அவர்­கள் நடத்திய போர் வெற்றிக் கண்­காட்­சி­யின் போது எந்­த­வொரு இடத்­தி­லும் சரத் பொன்­சே­கா­வின் புகைப்­பட ‘கட்­அ­வுட்­’ டைக் காண முடி­ய­ வில்லை. கண்­காட்­சிக்கு கருணா அம்­மா­னும் சென்­றி­ருந்­தார்.

சரத்­பொன்­சே­கா­வால் செல்ல இய­லாது போயிற்று மகிந்­த­வுக்கு எதி­ராக அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட்­ட­மையே சரத் பொன்­சேகா தமது பத­வியை இழக்­கக் கார­ண­மா­யிற்று. அந்த வகை­யில் போரை வென்­றெ­டுத்­துக் கொடுத்த சரத்­பொன்­சேகா சிறை­வா­சம் அனு­ப­விக்க அரச பிர­தா­னி­கள் வெறி­வி­ழாக் கொண்­டா­டி­னர்.

இது இந்த நாடு நன்­க­றிந்த விட­யம், தமக்கு வாய்ப்பை ஏற்­ப­டுத்­திக் கொள்­ளத்­தக்க எந்­த­வொரு விட­யத்­தை­யும் தமக்­குச் சாத­க­மான விதத்­தில் ஆக்­கிக் கொள்­வ­தில் மகிந்த தரப்­பி­னர்­கள் பலே கில்­லா­டி­கள்.

ஆனால் தற்­போது ஜகத் ஜய­சூ­ரிய தொடர்­பான பிரச்­சினை வேறொரு ரூபம் எடுத்­துள்­ளது. இரா­ணு­வச் சீருடை அணிந்­த­வர்­கள் இரா­ணு­வத்­தில் சேவை ஆற்­றி­ய­வர்­கள் என்­ப­தற்­காக தவறு செய்­ப­வ­ரைத் தண்­டனை பெறுவதிலிருந்து காப்­பாற்­று­வது நியா­ய­மா­ன­தல்ல. சகல அர­சி­யல்­வா­தி­க­ளும் சகல அர­ச தலை­வர்­க­ளும் இத­னைப் புரிந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம்.

முன்­னைய கால­கட்­டத்­தில் பாலி­யல் வன்­முறை கொலை என்­ப­வற்றை மேற்­கொண்ட இரா­ணு­வத்­தி­னர் தண்­டிக்­கப்­பட்­ட­னர். முன்­னைய அரச தலை­வர்­கள் பொது மக்­கள் தரப்­பாக நின்று தவ­றி­ழைத்­தோ­ருக்­குத் தண்­டனை வழங்­கி­னர்.

சரத் பொன்­சே­கா­வும் அத­னைத்­தான் கூறி­னார். அவர் ஜகத் ஜய­சூ­ரி­யா­வுக்கு எதி­ரா­கச் காட்­சி­ய­ம­ளிக்க பன்­னாட்டு நீதி­மன்­றுக்­குச் செல்­வா­ரா­னால் அது அவ­ரது வைராக்­கிய செயற்­பாடே.

ஜகத் ஆனா­லென்ன வேறு எந்த அதி­கா­ரி­யா­னா­லென்ன தவ­றி­ழைத்­த­தாக உறு­தி­யா­கத் தெரி­யு­மா­னால் அதனை வெளிப்­ப­டுத்­து­வது எந்­த­வ­கை­யில் தவ­றா­கும்?

புலம் பெயர் அமைப்­புக்­களை நலிவு படுத்­திய கூட்டு அரசு

இலங்­கைக்கு எதி­ராக உலக­ளா­விய ரீதி­யில் செயற்­ப­டும் புலம்­பெ­யர் அமைப்­புக்­க­ளது பலத்தை நலி­வு­ப­டுத்­தி­யது இன்­றைய அரசே. முன்­னெல் லாம் பௌத்த பிக்­கு­மா­ரால் வட பகு­திக்­குச் சுதந்­தி­ர­மா­கச் செல்ல முடிந்­த­ தில்லை.

ஒரு சம­யம் சரத்­பொன்­சேகா அமெ­ரிக்­கா­வுக்­குச் சென்­றி­ருந்த போது அங்கு வைத்து அவ­ரைக் கைது செய்ய முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. மகிந்­த­வால் எந்­த­வொரு வெளி­நாட்­டுக்­கும் செல்ல இய­லா­த­நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

உலக நாடு­கள் பல­வற்­றி­லும் இலங்­கைக்கு எதி­ரான நிலைப்­பாடு உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. ஒரு சில வெளி­நா­டு­கள் இலங்­கைக்கு எதி­ரா­கப் பொரு­ளா­தா­ரத் தடை­வி­திப்­பது குறித்­தும் பரி­சீ­லித்­தி­ருந்­தன. மொத்­தத்­தில் உலக நாடு­க­ளால் இலங்கை புற­மொ­துக்­கப்­ப­டும் சூழல் உரு­வாக்­கப்­பட் டி­ருந்­தது.

இலங்­கை­யில் நடத்­தப்­பட்ட சோகம் பன்­னாட்டு ரீதி­யி­லான மாநாட்­டுக்கு வந்த வெளி­நா­டு­க­ளின் அரச தலை­வர்­கள் இலங்­கை­யின் அர­சி­யல் போக்­குக்­கு­றித்து வெளிப்­ப­டை­யாக விமர்­சித்­து­ விட்­டுச் சென்­ற­னர்.

பிரிட்­டன் தலைமை அமைச்சர் கம­ரூன் இலங்கை அர­சைக் கடு­மை­யாக விமர்­சித்­துச் சென் றி­ருந்­தார். இந்­தியத் தலைமை அமைச்சர் தமது இலங்­கைக்­கான பய­ணத்­தின் போது­இ­லங்­கைக்கு இந்­தியா உத­வத் தயா­ரா­க­வுள்­ள­தா­கக் கூறி­ய­போது மகிந்த தரப்­பி­னர் அத­னைத் திரித்­துக் கூறி இந்­தியா இலங்­கை­யைத் தனது கொல­னி­யாக மாற்ற முனை­வ­தாக விமர்­சித்­தி­ருந்­த­னர்.

சுதந்­தி­ரக் கட்சி தனது வரு­டாந்த சம்­மே­ளன விழா­வைக் கொண்­டா­டத் தயா­ரான வேளை­யி­லேயே ஜகத்­ஜ­ய­சூ­ரிய விட­ய­மும் அரங்­குக்கு வந்­துள்­ளது. என்னை பன்­னாட்டு நீதி­மன்­றில் நிறுத்­தத் தயா­ராகி வரு­கின்­ற­னர். இது அர­சின் தவ­றா­லேயே ஏற்­பட்டது எனக் கூறிக் கொண்டு ஜகத் ஜய­சூ­ரிய இலங்­கை­யில் கால்­ப­தித்­தி­ருந்­தார்.

இந்­தச் சம்­ப­வத்­தை­ய­டுத்து முழு நாடுமே குழப் பத்­தில் அமிழ்ந்து போயிற்று.
கட­வுளே! இந்த அரசு கவி­ழப் போகி­றதே என ஒரு தரப்­பி­னர் அச்­சத்­தில் ஆழ்ந்­த­னர். உரு­வாக்­கி­ய­வர்­கள் கூட ஓர­ளவு குழப்­ப­முற்­ற­னர். ஆனால் நினைத்த அள­வுக்­குப் பூதம் கறுப்­பாக இல்லை.

இதற்­கான பதில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் வரு­டாந்த மாநாட்­டில் அரச தலை­
வ­ரால் தெரி­விக்­கப்­பட்­டது.

முன்­னாள் இரா­ணு­வத்­த­ள­பதி ஜகத் ஜ­ய­சூ­ரிய மீதோ இந்த நாட்­டின் வேறெந்த படைத்­த­ரப்­பி­னர் மீதோ கைவைக்க நான் வெளி­நா­டு­கள் மற்­றும் உள்­நாட்­டைச் சேர்ந்த எவ­ரொ­ரு­வ­ருக்­கும் இட­ம­ளிக்­கப் போவ­தில்லை.

சில அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளது விருப்­புக்கு ஏற்­ற­வாறு நட­ன­மாட நான் தயா­ரில்லை. என அவர் ஆக்­ரோ­ச­மா­கத் தெரி­வித்­துள்­ளார். இந்த அர­சின் நிலைப்­பாடு அது.

அதற்கு மேல­தி­க­மாக கேள்வி கேட்க எது­வு­மில்லை. அதனை உறுதி செய்­யும் விதத்­தில் நாட்­டின் தற்­போ­தைய இரா­ணு­வத்­த­ள­ப­தி­யும் கருத்­துத் தெரி­வித்­துள்­ளார்.

தனிப்­பட்ட விருப்பு  வெறுப்­புக்­க­ளுக்­க­மைய  செயற்­ப­டு­தல் நியா­ய­மல்ல

‘‘முன்­பொரு சம­யம் நான் அடித்து விரட்­டப்­பட்ட வேளை­யில் கூட நான் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக எது­வித கருத்­தும் வெளி­யிட்­ட­தில்லை. தனிப்­பட்ட விருப்பு வெறுப்­புக்­க­ளு­டன் இரா­ணு­வத்­தைத் தொடர்பு படுத்த வேண்­டா­மென நான் மீண்­டும் மீண்­டும் வேண்­டிக் கொள்­கி­றேன்.

பிரேசில் நாட்­டுக்­கான இலங்­கைத் தூது­வ­ராக ஜென­ரல் ஜெய­சூ­ரிய கட­மை­யாற்­றித் தனது சேவைக்­கா­லத்­தைப் பூர்த்தி செய்த வேளை­யில் போர்க்­குற்­றச்­சாட்டு அவ­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அது­வரை அத்­த­கைய குற்­றச் சாட்­டொன்று முன்­வைக்­கப்­பட்­ட­தில்லை.

எனவே தனிப்­பட்ட நபர்­க­ளது பிரச் சி­னை­க­ளு­டன் மதிப்பு மிக்க இரா­ணு­வத்­தைத் தொடர்­பு­ப­டுத்த வேண்­டாம் என வேண்­டிக் கொள்­கி­றேன். ஜகத் ஜய­சூ­ரிய இரா­ணு­வத்­த­ள­ப­தி­யாக இருந்த வேளை­யில் எனக்­குச் செய்த தீங்­கு­க­ளுக்­காக நான் அவ­ரைக் குறை கூறி­ய­தில்லை.

பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா இரா­ணு­வம் தொடர்­பாக வெளி­யிட்ட கருத்­துக்கு இரா­ணு­வத்­த­ள­பதி என்ற ரீதி­யில் கண்­ட­னம் தெரி­விக்­கி­றேன். பயங்­க­ர­வா­தி­க­ளு­டன் மேற்­கொண்ட போரில் 28 ஆயி­ரம் இரா­ணு­வத்­தி­னர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

அதற்கு இரு­ம­டங்­கான தொகை­யி­னர் காய­முற்­றும் ஊன­முற்­று­முள்­ள­னர். இவ்­வி­தம் கெட்­ட­பெ­யர் சம்­பா­தித்­துக் கொள்­ளவா இரா­ணு­வத்­தி­னர் இந்த அளவுக்கு உயிர்த்­தி­யா­கம் செய்­த­னர்? இரா­ணு­வத்­தி­னர் எவ­ரும் தமது கட­மை­யின் போது மனித உரி­மை­களை மீறி­ய­தில்லை” என அவர் கருத்து வெளி­யிட் டி­ருந்­தார்.

ஜகத் ஜய­சூ­ரிய குற்­ற­மி­ழைத்­தாரா இல்­லையா என்­பதை உறு­தி­யா­கக் கூற இய­ல­வில்லை. நாட்­டுக்­கா­கப் போரா­டிய இரா­ணு­வத்­தி­னர் எவ­ரை­யும் சிறைக்கு அனுப்ப எவர் முயன்­றா­லும் அரச தலை­வர் அதற்கு இட­ம­ளிக்­கப் போவ­தில்லை என்­பது மட்­டும் நிச்­ச­யம்.

ஜேர்­ம­னிய சர்­வா­தி­காரி அடல்ப் ஹிட்­லர் சிறு­வர்­களை நேசித்­த­வர், மிரு­கங்­களை நேசித்­த­வர், புகைத்­தல் பழக்­க­மற்­ற­வர், புலால் உண்­ணா­த­வர் ஆனா­லும் அவர் குற்­ற­மி­ழைத்­த­வர்.

யூத இனத்­த­வர்­களை அழித்­தொ­ழிக்­கக் கனவு கண்­ட­வர். ஆத­லால் தவ­றி­ழைத்த மனி­த­ரொ­ரு­வர் ஆயி­ரம் ஒளி­வி­ளக்­கு­களை ஏற்றி ஆண்­ட­வ­னைத் தொழு­தா­லும் தண்­டனை பெற்­றால் மட்­டுமே விடு­தலை அடைய இய­லும்.

அந்த வகை­யில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள முன்­னாள் இரா­ணு­வத்­த­ள­பதி ஜகத்­ஜ­ய­சூ­ரிய தரப்­பி­னர் குற்­ற­ மி­ழைக்­கா­த­வர்­க­ளாக இருக்­கட்­டும் என்று விரும்புவோம்.

http://newuthayan.com/story/27681.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this