Sign in to follow this  
நவீனன்

நடுவூர் மீன் புட்டு!

Recommended Posts

மருமகளை மயக்கும் நடுவூர் மீன் புட்டு!

 

கட்டுரை, படங்கள்: கே.குணசீலன்

 

ன்று பலரும் தங்கள் சமையலறையை மாடுலர் கிச்சன் என்ற பெயரில் பிரமாண்டமாக வடிவமைக்கிறார்கள். ஆனாலும்கூட, மண்பாண்டங்களில் சமைக்கப்படும் உணவுகளுக்கு மவுசு கூடிக்கொண்டுதான் இருக்கிறது. காரணம், விறகு அடுப்பில் மண்பானை, மண்சட்டி வைத்துச் சமைக்கப்படும் உணவுகள் எல்லையற்ற  சுவையுடன் இருப்பதுடன், ஆரோக்கியத் தையும் அள்ளிக்கொடுப்பது தான்.

தஞ்சாவூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நடுவூர் கிராமம். விவசாயம்தான் முக்கியத் தொழில். ‘`வாங்க வாங்க...’’ என்று கிராமத்து நேசத்துடன் வாய்நிறைய வரவேற்கிறார் அறுபது வயதாகும் மலர்க்கொடி.

p122b.jpg

‘`எங்க காலத்துல சமைக்கிறதுக்கு ஸ்டவ், காஸ் சிலிண்டரெல்லாம் இல்ல. இருபது வருஷத்துக்கு முன்னாடி மண் அடுப்புல விறகு எரிச்சு மண் சட்டியிலதான் சமைப்போம். உடம்புக்கும் அது ரொம்ப நல்லது. அதனாலதான் ஸ்டவ், சிலிண்டர் வசதியெல்லாம் வந்த பின்னாடியும், வீட்டுக்குப் பின்னால இப்பவும் மண் அடுப்பும் வெச்சிருக்கேன்.

என் ரெண்டு மகன்களுக்கும் கல்யாணமாகி மருமகள்கள் வந்துட்டாங்க. நாலு பேரப் புள்ளைங்க இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் பிடிச்ச நெத்திலி கருவாடு தொக்கு, கெழங்கா மீன் புட்டு ரெண்டையும் இன்னிக்கு சமைச்சிருவோமா?’’ என்ற மலர்க்கொடி, பேசிக்கொண்டே மீன் அலச, வெங்காயம் நறுக்க என வேலைகளில் இறங்கினார்.

p122a.jpg

‘`குழந்தைங்க மீன் சாப்பிடும்போது தொண்டையில முள் மாட்டிக்குமோனு ஒரு தவிப்பு இருந்துக்கிட்டே இருக்கும். ஆனா, மீனைப் புட்டா செஞ்சு கொடுக்கும்போது இந்தப் பிரச்னை இருக்காது. எங்க வீட்டுல குழந்தைகளும் பெரியவங்களும் கெழங்கா மீன் புட்டை விரும்பிச் சாப்பிடுவாங்க. நடுவில் ஒரே ஒரு முள் மட்டும் ஓடுற எல்லா வகை மீனிலும் புட்டு செய்யலாம். சாதாரணமாகவே இந்த மீன் புட்டு ருசியா இருக்கும்.

மண்பானையில செய்யும்போது இன்னும் சுண்டியிழுக்கும். மீனை வேகவைத்து செய்றதால எண்ணெயை விட்டு ஒதுங்கி இருக்கிறவங்களும் அளவில்லாமச் சாப்பிடலாம். ஒரு ரகசியம் சொல்லவா... இதை அப்பப்போ செய்துகொடுத்துதான் என் மருமக ரெண்டு பேரும் எங்கூட சண்டை போடாம ராசியா வெச்சிருக்கேன்’’ என்கிற அவரின் குறும்புப் பேச்சை ரசித்துச் சிரிக்கிறார்கள் அவர் மருமகள்கள்.
‘`என் மகன்களுக்கு கருவாடுன்னா உசுரு. அதுவும் நெத்திலி கருவாடுல செய்த தொக்கு இருந்தா போதும்... சட்டி சோறும் காலியாகிடும். மோர் சோறுக்குக் கருவாட்டுத் தொக்கு தொட்டுச் சாப்பிடும்போது ருசி ரெண்டு மடங்காகிடும்.

எங்க வீட்டுக்கு யாராச்சும் விருந்தாளி வந்தா, மீன் புட்டும் கருவாட்டுத் தொக்கும்தான் செய்வேன். தாளிக்கிற வாசத்தை வெச்சே, ‘என்ன... வீட்டுக்கு ஆளு வந்திருக்கு போல’னு அக்கம்பக்கத்துல கேட்டிருவாங்க’’ என்ற மலர்க்கொடி, மண்சட்டியை அடுப்பில் வைத்து சமைக்கத் தயாரானார்.

கெழங்கா மீன் புட்டு

தேவையானவை:

கெழங்கா மீன் - ஒரு கிலோ
தேங்காய் - ஒன்று
தக்காளி - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 250 கிராம்
சீரகம் - 25 கிராம்
மிளகு - 25 கிராம்
பூண்டு - 50 கிராம்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவைக்கேற்ப
நல்லெண்ணய் - 100 மில்லி
உப்பு - தேவைக்கேற்ப

p122c.jpg

செய்முறை:

கெழங்கா மீனைச் சுத்தம்செய்து, வேகவைத்து, முள் நீக்கி உதிர்த்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவி வெறும் சட்டியில் லேசாக வறுத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தைத் தோல் உரித்து நறுக்கவும். தக்காளியை நறுக்கவும். சீரகம், மிளகுடன் பூண்டு சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.

அடுப்பில் மண்சட்டியை வைத்துச் சூடானதும் நல்லெண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பொடித்த சீரகம் - மிளகு - பூண்டு சேர்த்து, பின்னர் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறவும். உதிர்த்த மீன், உப்பை அதில் சேர்த்துக் கிளறி, துருவி வறுத்த தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும். நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

நெத்திலி கருவாடு தொக்கு

தேவையானவை:

நெத்திலி கருவாடு - 250 கிராம்
தக்காளி - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 300 கிராம்
பூண்டு - 50 கிராம்
சோம்பு - சிறிதளவு
மஞ்சள்தூள், மிளகுத்தூள்,
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு.
எண்ணெய் (கருவாடு பொரிக்க) - 250 மில்லி
நல்லெண்ணெய் - 200 மில்லி
உப்பு - தேவையான அளவு

p122d.jpg

செய்முறை:

அடுப்பில் மண்சட்டியை வைத்து எண்ணெய் சேர்த்து நெத்திலி கருவாட்டைப் பொரித்து எடுத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு (இரண்டையும் தோல் உரிக்கவும்) மற்றும் தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் மற்றொரு மண்சட்டி வைத்து காய்ந்த பிறகு நல்லெண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு சோம்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துக் கிளறி, உப்பு சேர்க்கவும். இந்தக் கலவையில் பொரித்த நெத்திலி கருவாட்டைச் சேர்த்து நன்கு கிளறவும். சிறிது நேரம் கழித்து நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

http://www.vikatan.com

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this