Jump to content

இந்தியா எதிர் அவுஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

புல் தரை கொல்கத்தா ஆடுகளத்தில் மீண்டெழுமா ஆஸி.? வியாழன் 2-வது போட்டி

smith

கொல்கத்தா பிட்சைப் பார்வையிடும் ஸ்மித்.   -  படம். | ஏ.எஃப்.பி.

dhoni2

கால்பந்து ஆடும் தோனி.   -  படம். | கே.ஆர்.தீபக்.

smith

கொல்கத்தா பிட்சைப் பார்வையிடும் ஸ்மித்.   -  படம். | ஏ.எஃப்.பி.

dhoni2

கால்பந்து ஆடும் தோனி.   -  படம். | கே.ஆர்.தீபக்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (வியாழன்), தொடர் ஒருநாள் தோல்விகளைச் சந்தித்து வரும் ஆஸ்திரேலிய அணி ஓரளவுக்கு புற்கள் காணப்படும் ஆடுகளத்தில் மீண்டெழ வாய்ப்புள்ளது என்று ஆஸி. கேப்டன் நம்புகிறார்.

ஸ்மித் கேப்டன்சி மீதும் சில கேள்விகள் எழுந்துள்ள நிலையில் நாளை இந்திய-ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி கூடுதல் விறுவிறுப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் பிரச்சினைகள்:

சென்னையில் இந்திய அணி 11/3 என்று இருந்த நிலையிலும் பிறகு 87/5 என்ற நிலையிலும் ஆஸ்திரேலியா பந்து வீச்சு குறிப்பிடும்படியாக இல்லை. தோனி, ஹர்திக் பாண்டியா களத்தில் நிற்கும்போது தோனிக்கும் அவருக்கும் அதிக நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். தோனிக்கு எளிதான சிங்கிள்களைக் கொடுக்காமல் நிறுத்தியிருந்தால், எதிர்முனையில் பாண்டியாவுக்கு நெருக்கடி கூடியிருக்கும். மேலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஒவ்வொரு 6 பந்துகளுக்கு ஒருமுறையும் பாண்டியா சிக்ஸ் அடித்திருப்பது தெரிந்திருந்தால் ஸாம்ப்பாவை அன்று ஸ்மித் கொண்டு வந்திருக்க மாட்டார். அவர் அடித்த 19 சிக்சர்களில் 14 சிக்சர்கள் நேராக அடிக்கப்பட்டது. எனவே அதற்கு களவியூகம் அமைக்க முடியாது, வேகப்பந்து வீச்சு வியூகம்தான் வகுக்க முடியும்.

ஆனால் ஆஸ்திரேலிய நடு ஓவர்கள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஸ்லாக் ஓவரில் மிடில் ஸ்டம்பில் பேட்ஸ்மென்களின் தொண்டைக்குழிக்கு வீசும் பவுலர்களை ஸ்மித் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

மேலும் பேட்டிங்கில் வெறும் ஆக்ரோஷம் மட்டுமே குறிக்கோளாக இருப்பதால் ஷார்ட் தேர்வில் கவனம் இருப்பதில்லை, சாஹல், குல்தீப் யாதவ் போன்றவர்களை எதிர்கொள்ள போதிய உத்திகள் ஆஸி. பேட்ஸ்மென்களிடம் இல்லை.

ஸ்மித் போன்று அனுபவமிக்க வீரரே பாண்டியாவின் விரல் மூலம் வீசப்பட்ட பந்தில் ஆட்டமிழக்க நேரிட்டது. தொடர்ந்து இருதரப்பு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வீரர்களை சுழற்சி முறையில் களமிறக்கியதால் செட்டில் ஆன அணியாக அது இல்லாமல் போனது, மாறாக இந்திய அணி இருதரப்பு ஒருநாள் தொடர்களில் நிறைய ஆடி வெற்றிகளைக் குவித்த்தோடு, ஒரு 12-15 வீரர்களை எப்போதும் எந்தப் போட்டிக்கும் தயார் நிலையில் வைத்துள்ளது.

இந்திய அணியில் பலவீனம் இல்லாமலில்லை, அன்று கூல்டர்-நைல் அதை நிரூபித்தார். கோலி, பாண்டேயை அடுத்தடுத்து வீழ்த்தி சிக்கல் ஏற்படுத்தினார், அவரது பந்துகள் நல்ல ஸ்விங் ஆவதோடு, வேகமும் கொண்டது. அன்றே பாண்டியாவை அடிக்காமல் செய்திருந்தால் தோனியின் இன்னிங்ஸ் பெரிய இன்னிங்ஸாக தெரிந்திருக்காது. மேலும் 50 ஓவர்கள் நடைபெற்றிருந்தாலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பிருந்திருக்கும், அப்படி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தால் தோனியின் இன்னிங்ஸ் மெதுவானதாகவே பலராலும் விமர்சிக்கப்பட்டிருக்கும். அதாவது இன்னும் 20-25 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்திருக்கலாம் என்று அனைவரும் பேசியிருப்பார்கள், ஆனால் கிரிக்கெட்டில் ‘செய்திருக்கலாம்’ ‘இப்படியாகியிருந்தால்’ ஆகியவற்றுக்கெல்லாம் இடமில்லை, கடைசியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே ரெக்கார்டில் நிற்கப் போகிறது. ஆகவே அன்று தோனி-பாண்டியா கூட்டணி ஆஸ்திரேலியாவிடமிருந்து வெற்றியைப் பறித்தது என்பதுதான் சரியாக இருக்க முடியும். மேலும் சாஹல், குல்தீப் ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டரை சென்னையில் வீழ்த்தினர்.

கடந்த முறை இங்கிலாந்து கொல்கத்தாவில் ஆடியபோது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பவுலர்கள் கொஞ்சம் இந்திய பேட்ஸ்மென்களைப் படுத்தினார்கள். ஆஸ்திரேலியாவின் கூல்ட்டர்-நைல் ஐபிஎல் கிரிக்கெட்டில் இதே மைதானத்தில் கொல்கத்தா அணிக்காக 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதே போன்ற பிட்சில்தான் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சித் தோல்வி கண்டது. விராட் கோலிக்கு அந்த நினைவு வராமல் இருக்க வேண்டும்.

பிட்ச் நிலவரம்:

கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தாவில் வேகப்பந்து வீச்சாளர்கள் 61 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்பின்னர்கள் 24 விக்கெட்டுகளையே கைப்பற்றினர்.

எனவே அங்கு ஓரளவுக்கு வேகப்பந்து வீச்சு ஆதிக்கம் இருக்கவே செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனாலும் கடைசி நேரத்தில் பிட்ச் மழிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த முறையும் ஓரளவுக்கு புற்கள் ஆடுகளத்தில் இருப்பதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் அநேகமாக மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/article19721782.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

ட்விட்டரில் தெறிக்கவிடும் சி.எஸ்.கே #IndvAus #LiveUpdate

 
 

*இந்தியா-ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் போட்டி பற்றி சி.எஸ்.கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெறியான ட்வீட்களை அப்லோட் செய்துகொண்டிருக்கிறது. "ரஹானேவை இன்று ரன்-அவுட் மட்டுமே செய்ய முடியும் என்று தெரிந்து ஆஸி அணி அதைச் செய்துள்ளது" என்று ட்வீட் செய்திருக்கும் சி.எஸ்.கே, ரஹானேவின் பேட்டுக்கும், கிரீசுக்குமான நெருக்கம் கார்ட்டூன் கேரக்டர்களான டிமோன்-பும்பாவின் நெருக்கத்தைவிட அதிகமாக இருப்பதாகவும் ட்வீட்டியுள்ளது.

0_15040.png

1_15258.jpg

*மனீஷ் பாண்டே 3 ரன்களில் அகரின் பந்துவீச்சில் போல்டானார். முதல் போட்டியில் அவர் டக் அவுட் ஆகியிருந்தார்.

*ரஹானே 55 ரன்களில் ரன்-அவுட் ஆனார். தேவையில்லாமல் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.

cricket1_15531.jpg

*விராட்-ரஹானே பார்ட்னர்ஷிப் 100 ரன்கள் அடித்துள்ளது. 110 பந்துகளில் இந்த இணை சதம் அடித்துள்ளது.

*கோலியைத் தொடர்ந்து ஓபனிங் பேட்ஸ்மேன் ரஹானேவும் அரைசதம் கடந்தார். 62 பந்துகளைச் சந்தித்த அவர் 6 பவுண்டரிகள் அடித்துள்ளார். இது அவருக்கு 20-வது அரைசதம்

*இந்திய கேப்டன் கோலி 60 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இது அவருக்கு 45-வது அரைசதமாகும்.

*இந்திய அணி 100 ரன்களைக் கடந்துள்ளது. சென்னையில் 24-வது ஓவரில் 100 ரன்னைத் தொட்ட இந்திய அணி, இப்போட்டியில் 20-வது ஓவரிலேயே 100 ரன்களைத் தொட்டது.

IndVAus

* சென்னை போட்டியில் சொதப்பிய இந்திய கேப்டன் கோலி, இன்றைய ஆட்டத்தில் நல்ல டச்சில் இருக்கிறார். 44 பந்துகளில், 3 பவுண்டரியுடன் 31 ரன் எடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.

BB_14242.jpg

 

*சென்னை ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டரை ஆட்டம் காண வைத்த நாதன் கோல்டர் நைல், இந்த போட்டியின் 6ஆவது ஓவரில் ரோகித் ஷர்மாவை வெளியேற்றினார். ரோகித் ஷர்மா 14 பந்துகளில் 7 ரன்களுடன் வெளியேறினார்.

* ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியை, இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் மற்றும் மகளிர் அணியின் ஆல்ரவுண்டர் ஜுலன் கோஸ்வாமி ஆகியோர் மணி அடித்துத் தொடங்கிவைத்தனர். 

* சமீபத்தில் உயிரிழந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பாப் ஹாலண்ட்டுக்கு மரியாதைசெலுத்தும் வகையில், ஆஸ்திரேலிய வீரர்கள், கையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுகின்றனர். 

 

Eden_TOss_13256.jpg

Photo Credit: Cricket.com.au


* போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். 

* ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பங்கேற்கும் 100-வது சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும். 

 

* சென்னை ஒருநாள் போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதேநேரம், ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றமாக, சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பாவுக்குப் பதிலாக ஆஸ்டின் அகர் சேர்க்கப்பட்டுள்ளார்.  

http://www.vikatan.com/news/sports/102905-india-have-won-the-toss-and-they-will-bat-first-in-kolkatta-odi.html

Link to comment
Share on other sites

தனது 31-வது சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த கேப்டன் கோலி 92 ரன்களில் போல்டானார். 107 பந்துகளைச் சந்தித்த அவர் 8 பவுண்டரிகளை அடித்தார். கோலி சதத்தை மிஸ் செய்ததில் ஈடன் கார்டன் மைதானம் அதிர்ந்து போனது.

*சென்னை போட்டியில் 67-வது பந்தில் தனது முதல் பவுண்டரியை அடித்த தோனி, இன்று இரண்டாவது பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார்.

*கேதார் ஜாதவ் அதிரடியில் இறங்கியுள்ளார். அகர் ஓவரில் அடுத்தடுத்த 2 பவுண்டரிகள் விளாசியவர், ஸ்டோய்னிஸ் ஓவரில், தான் சந்தித்த அடுத்த பந்தில் சிக்ஸ் விளாசினார்.

*கேதார் ஜாதவ் 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து கோல்டர்நைல் பந்தில் மேக்ஸ்வெல் வசம் பிடிபட்டார். அதைத்தொடர்ந்து தோனி களமிறங்கியுள்ளார்.

*அகர் ஓவரில் கோலி அடித்த பவுண்டரியை அம்பயர் நிராகரித்து விட்டார். அகரின் கிளாத் கீழே விழுந்ததனால் அகர் பாலை ரிலீஸ் செய்யும் முன்பே அம்பயர் பந்தை 'டெட்' ஆக அறிவித்துவிட்டார். அதை கவனிக்காத கோலி அதை பவுண்டரிக்கு விளாசினார். ஆனால் அந்த 4 ரன்கள் வீனானது.

*இந்தியா-ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் போட்டி பற்றி சி.எஸ்.கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெறியான ட்வீட்களை அப்லோட் செய்துகொண்டிருக்கிறது. "ரஹானேவை இன்று ரன்-அவுட் மட்டுமே செய்ய முடியும் என்று தெரிந்து ஆஸி அணி அதைச் செய்துள்ளது" என்று ட்வீட் செய்திருக்கும் சி.எஸ்.கே, ரஹானேவின் பேட்டுக்கும், கிரீசுக்குமான நெருக்கம் கார்ட்டூன் கேரக்டர்களான டிமோன்-பும்பாவின் நெருக்கத்தைவிட அதிகமாக இருப்பதாகவும் ட்வீட்டியுள்ளது.

http://www.vikatan.com/news/sports/102905-india-have-won-the-toss-and-they-will-bat-first-in-kolkatta-odi.html

Link to comment
Share on other sites

*முதல் போட்டியைப் போலவே இரண்டாவது போட்டியிலும் மழை குறுக்கிட்டுள்ளது. இவ்வளவு நேரம் வெயில் வாட்டிய நிலையில் திடீரென மழை வந்து போட்டியை நிறுத்திவிட்டது.

*கோலடர்நைல் ஓவரில், புவனேஷ்வர் குமார் அடித்த பந்து பாண்டியாவைத் தாக்கியது. ஹெல்மட்டில் பந்து பட்டதும், அவர் நிலைகுலைய உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் விழுந்தது, ஆஸி வீரர்களும் அவருக்கு என்ன ஆயிற்று என்று ஓடிவந்து பார்த்தனர். அதன் பின்னர் அவர் தொடர்ந்து விளையாடுகிறார், 

YYY_16486.jpg

*பெரிதும் நம்பியிருந்த தோனி 10 பந்துகளில் 5 ரன் எடுத்து வெளியேறினார். ரிச்சர்ட்ஸன் ஓவரில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார்.

*கோலி வெளியேறியதைத் தொடர்ந்து கடந்த போட்டியின் ஆட்ட நாயகன் பாண்டியா களம் கண்டார். தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார்.

Link to comment
Share on other sites

கடைசி ஓவர். பெளலர் ரிச்சர்ட்சன். ஸ்ட்ரைக்கர் எண்டில் பாண்டியா. எப்படியும் ரெண்டு மூனு சிக்ஸர் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஃபுல்டாசாக வீசிய முதல் பந்தை லாங் ஆஃபில் தூக்கி அடித்தார் பாண்டியா. அதை அங்கிருந்த டேவிட் வார்னர் சிரமமின்றி கேட்ச் பிடித்தார். பாண்டியா 20 ரன்களில் வெளியேறினார்.

பும்ரா தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்தார்.  இந்தியா 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. 

மழைக்குப் பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. பாண்டியா அவுட் இல்லை. ரிச்சர்ட்சன் பந்தில் புவனேஸ்வர் குமார் தூக்கி அடித்தார். அந்த கேட்ச்சை கவர் திசயைில் இருந்து வந்த ஸ்மித் மிஸ் செய்தார். கஷ்டமான கேட்ச். அடுத்த பந்து. அதேபோல தூக்கி அடித்தார். இந்த முறை லாங் ஆனில் இருந்த மேக்ஸ்வெல் கேட்ச் பிடித்தார். கிட்டத்தட்ட சூசைட் ஷாட்.புவனேஷ்வர் குமார் 33 பந்துகளில் 20 ரன்களில் அவுட்.

குல்தீப் யாதவ் வந்த வேகத்தில் டக் அவுட்டில் வெளியேறினார். 

Virat bowled

மழையை விட, தற்போது ரன் அவுட் குறித்த சந்தேகமே வலுவாக உள்ளது. ஐ.சி.சி- 29.7 விதியின்படி, ஒரு பேட்ஸ்மேன் தான் அவுட் என்று தவறாக நினைத்துக்கொண்டு வெளியேறும்பட்சத்தில் அவரை அம்பயர் மீண்டும் பேட் செய்ய அழைக்க முடியும். அப்படி அவர் அழைக்கும்போது ஃபீல்டிங் அணி எந்த அப்பீலும் செய்ய முடியாது. அந்தப் பந்தின் கணக்கு அதோடு முடிந்தது. ஆக, பாண்டியா விஷயத்தில், ஆஸ்திரேலிய அணி ரன் அவுட் அப்பீல் செய்ய முடியாது. 

Link to comment
Share on other sites

YY_20323.jpg

*இரண்டு பந்துகளில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் ஹாட்-ட்ரிக் பாலை எதிர்கொள்ள வந்த கம்மின்ஸ் தோனியிடம் பிடிகொடுத்து குல்தீப்பின் ஹாட்-ட்ரிக்காக பலியானார்.

*ஆஸி கீப்பர் மேத்யூவேட், 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். குல்தீப் யாதவின பந்தை அடிக்க முற்பட, பந்து இன்சைடு-எட்ஜாகி போல்டானார். அதற்கடுத்த பந்திலேயே அகர் கோல்டன் டக் ஆனார். சைனா-மேன் பந்தைக் கணிக்க முடியாமல் LBW ஆனார். ஆஸி அணி 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.

33_20175.jpg

*சப்ஸ்டிட்யூட் பிளேயராக வந்த ரவீந்திர ஜடேஜா, அசத்தலாக் கேட்ச் பிடித்து பிரமிக்க வைத்தார். சிறப்பாக விளையாடி வந்த ஆஸி கேப்டன் ஸ்மித் பாண்டியாவின் பந்தை தூக்கியடிக்க, டீப் ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த ஜட்டூ அதை டைவ் அடித்துப் பிடித்தார். ஸ்மித் 76 பந்துகள் 59 ரன்கள் எடுத்தார்.

*தனது 100-வது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார் ஆஸி கேப்டன் ஸ்மித். 65 பந்துகளில் அவர் தனது அரைசதத்தைக் கடந்தார். ஆஸ்திரேலிய அணி 26 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.

22_20365.jpg

*தோனியின் அசத்தல் ஸ்டம்பிங்கில் மேக்ஸ்வெல் வெளியேறினார். குல்தீப் ஓவரில் 2 சிக்சர்கள் அடித்த அவர் சஹாலின் ஓவரில் வீழ்ந்தார். தோனியின் அந்த அசத்தல் ஸ்டம்பிங் அனைவரையும் மெர்சல் ஆக்கியது.

*ஆஸி அணி 19.4 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. 3 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் கேப்டன் ஸ்மித் 39 ரன்களுடன் ஆடி வருகிறார்.

 

11_19041.jpg

*சிறப்பாக் ஆடிவந்த டிராவிஸ் ஹெட், 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஹால் பந்துவீச்சில் மனீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்மித் - ஹெட் இணை 76 ரன்கள் சேர்த்தது.அடுத்ததாக மேக்ஸ்வெல் களம் புகுந்தார்.

*கோட்டை விட்ட ரோஹித்: புவனேஷ் ஓவரில் ஹெட் கொடுத்த கேட்சை முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் பிடிக்கத் தவறினார். ஆஸி அணி 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.

*புவியின் ஸ்விங்கில் வார்னரும் இரண்டாவது ஸ்லிப்பில் நின்றிருந்த ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அதிரடி மன்னனான வார்னர் கூட 9 பந்துகளில் 1 ரன் தான் எடுக்க முடிந்தது.

*இந்திய பௌலர்களின் பந்துவீச்சில் ஆஸி வீரர்கள் வார்னரும், ஸ்மித்தும் கூடப் பயங்கரமாகத் தினறினார். புவியின் ஸ்விங்குகள் வேறு லெவல்! 

*253 ரன்கள் என்ற இலக்கோடு ஆஸ்திரேலிய அணி தனது இன்னிங்சைத் தொடங்கியது. புவியும், பூம்ராவும் மிகவும் சிறப்பாக் அபந்து வீசினர். பந்து நன்றாக ஸ்விங் ஆனது. புவனேஷின் ஸ்விங் பாலில், கார்ட்ரைட் போல்டானார். அவர் 15 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தார். ஆஸி அணி 1 விக்கெட் இழப்புக்கு 2 ரன்கள் எடுத்துள்ளது.

Link to comment
Share on other sites

*ஆஸி அணிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஸ்டாய்னிஸ் 58 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

*ஆஸ்திரேலிய அணியின் கோல்டர்நைல், பாண்டியாவின் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆஸி அணி 9 விக்கெட்டு 182 ரன்கள் எடுத்துள்ளது

 

*இதன்மூலம் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்திக் வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

*கடைசி விக்கெட்டாக ரிச்சர்ட்சனை LBW முறையில் புவி வெளியேற்றினார். ஆஸி அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது

Link to comment
Share on other sites

புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் பந்து வீச்சால் இந்தியா 50 ரன்னில் அசத்தல் வெற்றி

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டால் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் பந்து வீச்சால் இந்தியா 50 ரன்னில் அசத்தல் வெற்றி
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

ரகானே (55), விராட் கோலி (92) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 50 ஓவரில் 252 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கவுல்டர்-நைல், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

201709212200082236_1_8smith001-s._L_styv
அரைசதம் அடித்த ஸ்மித்

பின்னர் 253 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு அதிக அளவு ஒத்துழைத்ததை பயன்படுத்தி புவனேஸ்வர் குமார் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். யார்க்கர் மன்னன் பும்ரா சரியாக பந்து வீசவில்லை. இதை புவனேஸ்வர் குமார் சமாளித்துக் கொண்டார்.

201709212200082236_2_8jadeja-s._L_styvpf
ஸ்மித் அடித்த பந்தை கேட்ச் பிடித்த ஜடேஜா

ஆட்டத்தின் 3-வது ஓவரின் கடைசி பந்தில் கார்ட்ரைட்டை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றிய புவனேஸ்வர் குமார், 5-வது ஓவரின் 5-வது பந்தில் வார்னரை அவுட்டாக்கினார். இருவரையும் தலா 1 ரன்னில் பெவிலியன் திருப்பினார்.


201709212200082236_3_8dhoni-s._L_styvpf.
மேக்ஸ்வெல்-ஐ ஸ்டம்பிங் செய்யும் டோனி

அடுத்து ஸ்மித் உடன் ட்ராவிட் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. ஹெட் 39 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 14 ரன்னில் ஸ்டம்பிங் மூலம் ஆட்டம் இழந்தார்.

201709212200082236_4_8Stoinis001-s._L_st
அரைசதம் அடித்த ஸ்டாய்னிஸ் பந்தை சிக்சருக்கு தூக்கும் காட்சி

கேப்டன் ஸ்மித் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியாவின் தோல்வி உறுதியானது. குல்தீப் யாதவ் வடே (2), ஆஷ்டோன் அகர் (0), கம்மின்ஸ் (0) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

201709212200082236_5_8viratkohli-s._L_st
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் விராட் கோலி, டோனி

ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா 43.1 ஓவரில் 202 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிக்ள கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/21220002/1109252/Kuldeep-Yadav-Bhuvaneshwar-kumar-bowling-india-won.vpf

Link to comment
Share on other sites

அசாத்திய ஓவரில் குல்தீப் ஹாட்ரிக் சாதனை; ஆவேசப் பந்து வீச்சில் இந்தியா அபார வெற்றி

kuldeep%20yadav

கொல்கத்தாவில் ஹாட்ரிக் சாதனை புரிந்த குல்தீப் யாதவ்.   -  படம். | ஏ.எஃப்.பி.

கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்த ஆஸ்திரேலிய அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றது.

ஸ்டாய்னிஸ் அபாரமான ஒரு தனிமனிதப் போராட்ட இன்னின்ங்சில் 65 பந்துகளில் 3 சக்திவாய்ந்த சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஒரு புறம் நிற்க அவருக்கு உறுதுணையாக ஒருவரும் நிற்காமல் ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

252 ரன்கள் என்பது டீசண்ட் என்றார் ரஹானே. ஆனால் இது நிச்சயம் பேட்டிங் சாதக ஆட்டக்களம் இல்லை என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி புவனேஷ் குமார், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீச்சில் சுருண்டது. மேலும் திருப்பு முனையாக ஸ்டீவ் ஸ்மித் அபாரமக ஆடிவந்த நிலையில் கோலியின் அருமையான களவியூகத்தில் மீண்டும் பாண்டியா ஷார்ட் பிட்ச் பவுன்சரில் ஸ்மித்தை வீழ்த்தினார். அதன் பிறகு ஆஸ்திரேலியா 148/8 என்று மீள முடியா சரிவுக்குச் சென்றது.

அசாத்தியமான அந்த 33-வது ஓவர்: குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை!

இந்த 33-வது ஓவர் வரை குல்தீப் யாதவ் 7 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் எதையும் வீழ்த்தவில்லை. இந்நிலையில் அருமையான ஒரு களவியூகத்தில் கோலி மீண்டும் குல்தீப் யாதவ்வை 33வது ஓவரை வீச அழைத்தார்.

மேத்யூ வேட் ஓவரை எதிர்கொண்டார். முதல்பந்தை வேட் தடுத்தாடினார். 2-வது பந்தில் குல்தீப் யாதவ் பந்தை இடது கை லெக் ஸ்பின் வீச பந்து கொஞ்சம் நன்றாகவே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்றது, நல்ல பார்மில் இல்லாத வேட் அதனை ஒரு கோணமாக பேட்டைக் கொண்டு சென்று கட் ஆட முயன்றார் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது. வேட் 2 ரன்களில் வெளியேறினார்.

3-வது பந்து ஆஸ்டன் ஆகர் எதிர்கொண்டார். இது ஒரு அருமையான லூப் மிகுந்த புல்டாஸ், அதாவது ஆகரின் கண் பார்வை வட்டத்துக்குள் சிக்காமல் வந்த ஒரு மேலிருந்து வீழும் புல்டாஸ். அவர் பந்தை மிஸ் செய்த பிறகு பந்து கால்காப்பருகே பிட்ச் ஆகி தாக்கியது, நடுவர் கையை உயர்த்தினார். ஸ்டாய்னிஸைப் பார்த்தார் ஆகர், அவர் முகத்தில் ஒரு ரிவியூ ஆசை தெரிந்தது, ஆனால் ஸ்டாய்னிஸ் மறுக்க ஆகர் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

4-வது பந்தை புதிய பேட்ஸ்மென் பாட் கமின்ஸ் எதிர்கொண்டார். அதே ஆக்‌ஷனில் பந்தை ஸ்பின் செய்தார் குல்தீப், பந்து இம்முறை வலது கைபேட்ஸ்மெனுக்கு லெக் ஸ்பின் ஆனது, ஆனால் குல்தீப் வீசியது இடது கை கூக்ளி. பந்து மட்டையின் விளிம்பில் பட்டது தோனி விடுவாரா என்ன? மைதானம் அலறியது குல்தீப் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் இந்தியா 3-வது ஹாட்ரிக்.

புவனேஷ் குமார் அபார ஸ்விங் பவுலிங்: கார்ட்ரைட் வார்னர் காலி!

253 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆஸ்திரேலியா தன்னம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கலாம். ஆனால் புவனேஷ் பந்து வீச்சும், அவர்களது பதற்றமும் ஆச்சரியமேற்படுத்தியது.

முதல் 18 பந்துகளில் 15 பந்துகளைச் சந்தித்த கார்ட்ரைட் 1 ரன்னை மட்டும் எடுத்து அதிக அழுத்தத்தை ஏற்றிக் கொண்ட நிலையில் 3-வது ஓவர் கடைசி பந்தில் புவனேஷிடம் பவுல்டு ஆனார். குட் லெந்த் பந்து உள்ளே வருமா, வெளியே செல்லுமா என்ற சந்தேகத்தில் கார்ட்ரைட் மட்டையைக் கொண்டு வர இன்ஸ்விங் ஆகி பவுல்டு ஆனார். ஏரோன் பிஞ்ச் இல்லாததை ஆஸி. உணர்ந்திருக்கும்.

ஸ்மித் இறங்கி பும்ரா பந்தில் பீட்டன் ஆனார். பிறகு ஒரு எட்ஜ் பவுண்டரி அடித்தார். டேவிட் வார்னர் நீண்ட நேரம் ஸ்ட்ரைக் கிடைக்காமல் கடைசியில் 9 பந்துகளில் 1 ரன் எடுத்த நிலையில் புவனேஷ்குமாரின் அவுட்ஸ்விங்கருக்கு மட்டையை பந்தின் திசையில் கொண்டு போய் எட்ஜ் செய்தார், ரஹானே கேட்ச் பிடித்தார். இவ்வகை பந்துகளை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வலைப்பயிற்சியில் வார்னர் நிறைய முறை எதிர்கொண்டிருக்கலாம், ஆனால் இன்று அவுட்.

டிராவிஸ் ஹெட் இறங்கி பும்ரா பந்தில் மட்டையின் உள்விளிம்பில் ஸ்டம்புக்கு அருகில் பந்து செல்ல ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் அடுத்த பந்தே ஷார்ட்டாக அமைய பாயிண்டில் பவுண்டரி பறந்தது. பும்ரா முதல் 3 ஓவர்களில் 19 ரன்கள், அவருக்கு இன்று ஒருநாள் லீவ் விட்டு விட வேண்டியதுதான்.

புவனேஷ் குமார் தனது ஸ்விங் மூலம் கடும் பிரச்சினைகளைத் தொடர்ந்து கொடுத்து கொண்டிருந்தார். டிராவிஸ் ஹெட்டிற்கும் ஒரு பந்து எட்ஜ் ஆக முதல் ஸ்லிப்பில் ரோஹித் சர்மா கேட்சைக் கோட்டை விட்டார்.

ஸ்மித்தும் தனது பேட்டிங்கை அபாரமாக ஆடத் தொடங்க கேட்ச் விடப்பட்ட ஹெட்டுடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 12 ஓவர்களில் 76 ரன்கள் சேர்க்கப்பட்டன. 39 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அபாயகரமாக ஆடிவந்த டிராவிஸ் ஹெட், ரிஸ்ட் ஸ்பின் பந்து வீச்சாளரான சாஹல் வீசிய புல்டாஸை எங்கு வேண்டுமானாலும் அடித்திருக்கலாம் ஆனால் பாண்டேயிடம் நேராக மிட்விக்கெடில் கேட்ச் கொடுத்தார். அடுத்த 6 ஓவர்களில் 21 ரன்களே வந்தன.

கிளென் மேக்ஸ்வெல் இதில் 2 சிக்சர்களுடன் 14 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார் மேக்ஸ்வெல். ஒன்று டீப் மிட்விக்கெட்டுக்கு ஸ்வீப்-ஸ்வீட் சிக்ஸ். அடுத்த பந்தையும் முட்டிக்கால் போட்டு ஸ்கொயர்லெக்கில் இன்னொரு சிக்ஸ் விளாசினார் மேக்ஸ்வெல்.

குஷியான தோனி...

ஆட்டத்தின் 23-வது ஓவரை சாஹல் வீச வந்தார். பந்துகள் நன்றாகத் திரும்பத் தொடங்கிய கட்டம் அது. 3 பந்துகளில் ரன் இல்லை. ஆனால் தோனி ஏதாவது ஆலோசனை வழங்கினாரா என்று தெரியவில்லை.

மேக்ஸ்வெல் மேலேறி வருவதைப் பார்த்து விட்ட சாஹல் பந்தை மெதுவாக பிளைட் செய்தார், மேலும் மிடில் அண்ட் லெக்கில் வீசினார். பிட்ச் ஆகும் இடத்துக்கு தன்னால் மட்டையைக் கொண்டு செல்ல முடியாது என்று உணர்ந்த மேக்ஸ்வெல் லெக் திசையில் திருப்பி விட நினைத்தார். ஆனால் பந்து வலது கால்காப்பில் பட்டு தோனியிடம் செல்ல அருமையான ஒரு ஸ்டம்பிங்கை நிகழ்த்தியதோடு, இந்த விக்கெட்டை அப்படிக் கொண்டாடினார் தோனி, அவர் இதுவரை இப்படி ஒரு விக்கெட்டைக் கொண்டாடிப் பார்த்ததில்லை. இது மேஜிக் பந்து என்பதாலா அல்லது தனது ஆலோசனை எதுவும் பயனளித்து விட்டது என்பதாலா தெரியவில்லை, உண்மையில் தோனி மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

பிறகு ஸ்மித் தனது 65-வது பந்தில் அரைசதம் கண்டார், ஆஸ்திரேலிய அணி வீரர் ஒருவர் இந்தத் தொடரில் அடிக்கும் முதல் அரைசதமாகும் இது.

இந்நிலையில் முதல் 5 ஓவர்களில் 32 ரன்கள் என்று சுமாராக வீசிய பாண்டியா 30வது ஓவரை மீண்டு வீச வர ஒரு பவுண்டரி கொடுத்தார். ஆனால் ஸ்மித்துக்கு ஏற்கெனவே மிட்விக்கெட், ஸ்கொயர் லெக் என்று களவியூக பொறி வைக்கப்பட்டது தெரியவில்லை, பாண்டியா ஒரு பவுன்சரை வீச அதன் வேகம் உயரம் ஆகியவற்றைத் தவறாகப் புரிந்து கொண்ட ஸ்மித் புல்ஷாட் ஆட அது ஜடேஜாவின் ஒரு நல்ல கேட்ச் ஆனது 76 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்த ஸ்மித் ஆட்டமிழந்தார், இதுதான் இன்றைய வெற்றியின் திருப்பு முனையாகும்.

இதன் பிறகுதான் வேட், ஆகர், கமின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் குல்தீப் யாதவ் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு சீல் வைத்தார்.

சாஹல் தொடர்ந்து அருமையாக வீசி ஒருகட்டத்தில் 8 ஓவர்கள் 1 மெய்டன் 20 ரன்கள் 2 விக்கெட் என்று அசத்தினார்.

ஸ்டாய்னிஸ் ஒருமுனையில் தனிநபராகப் போராடினார். முதலில் குல்தீப் யாதவ்வை 2 பவுண்டரிகள் விளாசினார். கூல்ட்டர் நைல் பாண்டியா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார், இதுவும் பவுன்சர்தான்.

இனி சரிப்பட்டு வராது என்று நினைத்த ஸ்டாய்னிஸ், சாஹலை நேராக ஒரு அரக்க சிக்ஸ் அடித்தார். மட்டையிலிருந்து புறப்பட்ட உயரத்திலேயே நேர் சிக்ஸ். பிறகு பாண்டியாவை ஒரு நேர் சிக்ஸ் அடித்து அரைசதம் பூர்த்தி செய்தார். பிறகு பும்ராவின் தாழ்வான புல்டாஸ் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் ஆனது.

ஸ்டாய்னிஸ் 65 பந்துகளில் 62 ரன்களுடன் ஒரு முனையில் தேங்க, புவனேஷ் குமார், ரிச்சர்ட்சனை எல்.பி.யில் வீழ்த்தினார். இந்தியா 2-0 முன்னிலை.

ஆட்ட நாயகனாக அலட்டிக்கொள்ளாமல் 92 ரன்களை அற்புதமாக எடுத்த விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

புவனேஷ் குமார் 6.1 ஓவர்கள் 2 மெய்டன் 9 ரன்கள் 3 விக்கெட். குல்தீப் யாதவ் 54 ரன்கள் ஹாட்ரிக், சாஹல் 34 ரன்களுக்கு 2 விக்கெட்.

ஆஸ்திரேலியா மீண்டும் ரிஸ்ட் ஸ்பின்னில் வீழ்ந்தது. இடது கை பேட்ஸ்மெனுக்கு ஒரு ஆப் ஸ்பின்னர், வலது கைபேட்ஸ்மெனுக்கு இடது கை ஸ்பின்னர் அல்லது லெக் ஸ்பின்னர் என்ற சேர்க்கையைவிட சாஹல் ரிஸ்ட் லெக் ஸ்பின்னர், குல்தீப் இடது கை ரிஸ்ட் ஸ்பின் ஒரு ‘டெட்லி காம்பினேஷன்’ ஆகி வருகிறது.

http://tamil.thehindu.com/sports/article19729797.ece?homepage=true

Link to comment
Share on other sites

பாண்டியா சம்பவம்: கேட்ச், நோ-பால், ரன் அவுட் ஆனால் நாட் அவுட்

 
warner%20smith

பாண்டியா ரன் அவுட் என்று கைகாட்டிய படியே செல்லும் வார்னர், ஸ்மித்.   -  படம். | பிடிஐ.

கொல்கத்தா ஒருநாள் போட்டியில் இந்திய இன்னிங்ஸ் முடியும் தறுவாயில் பாண்டியா பேட் செய்த போது நிகழ்ந்த சம்பவம் சில சர்ச்சைகளைக் கிளப்பி பிறகு அடங்கியது.

ஆட்டத்தின் 48-வது ஓவரில் பாண்டியா ஹை புல்டாஸில் கேட்ச் ஆனார். இதனையடுத்து தான் அவுட் என்று அவர் கிரீஸை விட்டு பெவிலியனுக்கு நடைபோட்டார்.

ஆனால் சாதுரிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இந்தப் பந்து இடுப்புக்கு மேல் வந்த புல்டாஸ் என்பதால் நோ-பால் மற்றும் நாட் அவுட்டாக இருக்கக் கூடுமென்று பவுலரான கேன் ரிச்சர்ட்சனை அழைத்து ரன்னர் முனையில் ஸ்டம்பைப் பெயர்த்து ரன் அவுட் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இது நடந்து கொண்டிருக்கும் போது சிறு மழையும் பெய்து, வீரர்கள் பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ஸ்மித் இது ரன் அவுட்தான் என்று நடுவர்களான அனில் சவுத்ரி மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் காரணம் பந்து டெட் பால் ஆகவில்லை என்பதே ஸ்மித்தின் தர்க்கம்.

ஆனால் இது நாட் அவுட் என்ற முடிவே அளிக்கப்பட்டது. ஏனெனில் தான் அவுட் என்று நினைத்தே பாண்டியா கிரீசை விட்டு நகர்ந்தார். ரன்னுக்காக அவர் முயற்சி செய்யவில்லை. இதுதான் விதிமுறை 27.7-ம் பிரிவு கூறுகிறது.

நடுவர்கள் மூன்றாவது நடுவரிடம் முறையீடு செய்த போது இடுப்புக்கு மேல் சென்ற புல்டாஸ் என்று தெரியவந்ததையடுத்து நோ-பால் ஆனது, நோ-பாலாக இருந்தாலும் பந்து டெட் ஆகவில்லை என்பதால் ரன் அவுட் விதிமுறைக்கிணங்கியதுதான் என்பது ஸ்மித் வாதம்.

ஆனால் தான் அவுட் என்றுதான் கிரீசை விட்டு பாண்டியா நகர்ந்தார். இதனால் அவர் கிரீசை மீண்டும் எட்ட முயற்சி செய்யவில்லை. இந்த இடத்தில், பேட்ஸ்மெனுக்கு அவுட் கொடுக்காதபோது நடுவர் தலையிட்டு குறிப்பிட்ட பேட்ஸ்மென் அவுட் என்று நினைத்துதான் வெளியேறினார் என்று முடிவெடுத்து டெட் பால் என்று அறிவிக்க முடியும், ஆகவே பாண்டியா நாட் அவுட்.

http://tamil.thehindu.com/sports/article19729204.ece

Link to comment
Share on other sites

சிங்கிள் ‘பை’ ஓடியதற்காக விராட் கோலி மீது பாய்ந்த மேத்யூ வேட்

Capture

எதையும் சுலபத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மறக்க மாட்டார்கள். குறிப்பாக மேத்யூ வேட். விராட் கோலி டெஸ்ட் தொடரின் போது காயமடைந்து வெளியேறியதைக் கேலி செய்யும் விதமாக நேற்று மேத்யூ வேட் கோலியிடம் சில வார்த்தைகளைப் பரிமாறி கொண்டார்.

ஆஸ்திரேலிய பேட்டிங்கில் 33-வது ஓவரில்தான் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் எடுத்து அந்த அணியை மூழ்கடித்தார், ஆனால் இந்தியா பேட் செய்த போது இதே 33-வது ஓவரில் சம்பவம் ஒன்று நடந்தது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏதோ விதத்தில் 33-வது ஓவர் நேற்று ஆஸ்திரேலிய அணியை பாதித்துள்ளது.

மார்கஸ் ஸ்டாய்னிஸ் வீசிய பந்து ஒன்று எழும்பாமல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தாழ்வாகச் சென்றது. அதை விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் சேகரிக்க முற்பட்டபோது அவர் கையில் காயம் ஏற்பட்டது. பந்தும் அவர் கையில் பட்டு சற்று தூரம் சென்றது. இதனையடுத்து ஒரு சிங்கிளுக்கான வாய்ப்பைப் பயன்படுத்தி கோலியும், ஜாதவ்வும் ஓடினர்.

ஏற்கெனவே வெயில் தாங்க முடியாமல் தத்தளித்த மேட் வேட் இந்த சிங்கிளைக் காண பொறுக்க முடியாமல் விராட் கோலியிடம் சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார், அது டெஸ்ட் தொடரில் விராட் கோலி காயமடைந்து வெளியேறியதை கேலி செய்யுமாறு அமைந்ததோடு கோலியின் ஆட்ட உணர்வையும் சாடினார் மேத்யூ வேட்.

ஸ்டம்ப் மைக்கில் அவர் கூறியதாக வெளியானது என்னவெனில், “நானும் உன்னைப்போல் அழுதிருப்பேன், ஓய்வறைக்குச் சென்று நல்ல அழுகையைப் போட்டிருப்பேன். உங்களுக்காக எல்லோரும் வருந்த வேண்டும்” என்று அவர் ஓவர் முடிந்து முனை மாறும்போது கோலியிடம் கூறியதாக ஆஸ்திரேலிய, இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதற்கு கோலியும் தன் பாணியில் மிகவும் ஆக்ரோஷமாக கையை ஆட்டி ஏதோ பதில் அளித்தார். ஆனால் அவரது வார்த்தைகள் ஸ்டம்பில் மைக்கில் சரியாக கேட்கவில்லை. ஸ்டாய்னிஸும் சில வார்த்தைகளைக் கோலியிடம் கூறினார்.

ஆனால் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் கிளார்க் மேத்யூ வேடின் செய்கையை ரசிக்கவில்லை. மாறாக அவர் சாடிய போது, “ஒரு ரன், இது பெரிய விஷயமா? அவர் மிஸ்பீல்ட் செய்தார், அப்போது அவர் காயமடைந்தாரா இல்லையா என்பது 2ம் பட்சம்தான். நானாக இருந்தால் என் ஆட்டம் பற்றிதான் கவலைப்படுவேனே தவிர இப்படி எதிரணி மீது பாய மாட்டேன். கோலி அனைவரிடமும் சண்டையிட விரும்புவது போல் தெரிகிறார், ஆனால் அவர் மற்றவர்களுடன் என்ன செய்கிறார் என்பதை விட மற்றவர்களை விட 10 மடங்கு சிறப்பாக விளையாடுகிறார்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article19736895.ece

 

 

 

’தோனி கொடுத்த நம்பிக்கை’ - குல்தீப் யாதவின் ஹாட்ரிக் ரகசியம்

 

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2 வது ஒருநாள் போட்டியில், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதித்துள்ளார், இந்தியாவின் குல்தீப் யாதவ். 

Kuldeep_Main_15311.jpg


உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த குல்தீப்புக்கு கிரிக்கெட் அறிமுகமான விதம் வித்தியாசமானது. செங்கற்சூளை வைத்து நடத்திவரும் அவரின் தந்தை, மகன் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிரிக்கெட் பயிற்சியில் சேர்த்துவிட்டிருக்கிறார். வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்று பயிற்சியைத் தொடங்கிய அவரை, சுழற்பந்து வீசுமாறு பயிற்சியாளர் கபில் பாண்டே அறிவுறுத்தியிருக்கிறார்.

இதையடுத்து, அவர் வீசிய முதல் பந்து சைனாமேன் எனப்படும் முறையில் இருந்தது. முதல் பந்தை வீசும்போது குல்தீப் யாதவுக்கு சைனா-மேன் பந்துவீச்சு முறை குறித்து தெரிந்திருக்கவில்லை. ஆனால், இயல்பாகவே அவரது பந்துவீச்சு சைனா-மேன் முறையில் அமைந்துவிட்டது. வார்னே உள்ளிட்ட வலது கை சுழற்பந்துவீச்சாளர்கள் லெக் ஸ்பின் வீசுவது எளிது, ஆனால், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் லெக் ஸ்பின் வீசுவது கிரிக்கெட் உலகில் மிகவும் அரிதான நிகழ்வு. அந்த வகையில் சைனா-மேன் முறையில் பந்துவீசுபவர்கள் மிகவும் குறைவு. தென்னாப்பிரிக்காவின் பால் ஆடம்ஸ், ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக் ஆகியோர் இந்த வகையில் பந்துவீசுபவர்களே.

சர்வதேச கிரிக்கெட்டில் குல்தீப் அறிமுகமான விதம் சற்று சுவாரஸ்யமானது. இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராகக் கடந்த மார்ச்சில் நடந்த டெஸ்ட் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் குல்தீப் யாதவ் அறிமுகமானார். தொடரை வெல்ல அந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழலில் கேப்டன் விராட் கோலிக்கு, மாற்று வீரராக குல்தீப் களமிறங்கினார். அப்போதைய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இதுகுறித்து, தனக்கு எந்தவொரு தகவலும் அளிக்கவில்லை என்று கோலி கூறியதாகப் பின்னாள்களில் செய்திகள் வெளியாகின. அறிமுகமான முதல் இன்னிங்ஸிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி, தனது தேர்வை நியாயப்படுத்தினார் குல்தீப் யாதவ். ரஹானே தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, அந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் அறிமுகமாகிய அவருக்கு பந்துவீச வாய்ப்புக் கிடைக்கவில்லை. மழையால் அந்தப் போட்டி கைவிடப்பட, இரண்டாவது போட்டியிலேயே பந்துவீச வாய்ப்புக் கிடைத்தது. அந்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட குல்தீப் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

சமீபத்தில் முடிந்த இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடர், நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதனால், இளம் சுழற் கூட்டணியான சஹால் மற்றும் குல்தீப் யாதவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. இருப்பினும், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த அக்‌ஷர் படேல் காயம் காரணமாக விலகவே, கடைசி நேரத்தில் அவருக்கு மாற்று வீரராக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்ற முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் ஜடேஜாவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 

சென்னை ஒருநாள் போட்டி மழை காரணமாக ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் 21 ஓவர்கள் கொண்டதாகக் குறைக்கப்பட்டது. அந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ், மேக்ஸ்வெல் அடித்த 3 சிக்ஸர்கள் உள்பட 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் தொடக்கமும், குல்தீப் யாதவுக்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்கவில்லை. அவர் வீசிய முதல் 7 ஓவர்களில் 39 ரன்களை ஆஸ்திரேலிய வீரர்கள் எடுத்தனர். முதல் போட்டியில் குல்தீப் பந்துவீச்சில் 3 சிக்ஸர்கள் அடித்த மேக்ஸ்வெல், இந்தப் போட்டியில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். மேக்ஸ்வெல் ஆட்டமிழந்த பின்னர், குல்தீப்பை மீண்டும் பந்துவீச கேப்டன் கோலி அழைத்தார். ஸ்மித் மற்றும் ஸ்டோனிக்ஸ் ஆகியோர் குல்தீப்பின் பந்துவீச்சை எளிதில் சமாளித்து ஆடவே, அவருக்கு மீண்டும் ஓர் இடைவேளை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தில் 33 வது ஓவரை குல்தீப் வீச அழைக்கப்பட்டார். 253 ரன்கள் இலக்குடன் விளையாடி வந்த ஆஸ்திரேலிய அணி, 32 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. 

Kuldeep_edited_15543.jpg

33 வது ஓவரின் இரண்டாவது பந்தில் விக்கெட் கீப்பர் மேத்யு வேட் வெளியேற, அடுத்த பந்தில் ஆஸ்டன் அகர் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஸ்லிப் மற்றும் லெக் ஸ்லிப் என டெஸ்ட் போட்டிக்கான ஃபீல்டிங் செட்டப்புடன் ஹாட்ரிக் பந்தை குல்தீப் யாதவ் வீசினார். மிடில் ஸ்டம்பை நோக்கி வீசப்பட்ட பந்து, பேட் கம்மின்ஸின் பேட்டில் எட்ஜாகி கீப்பர் தோனியின் கையில் சென்று தஞ்சமடைந்தது. இதன் மூலம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ், சேத்தன் ஷர்மா மற்றும் கபில் தேவ் ஆகியோருக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும், கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பின்னர், சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியர் ஒருவர் எடுத்த ஹாட்ரிக்காக அது அமைந்தது. 

 

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த குல்தீப் யாதவ், ‘போட்டியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட பகுதியில் பந்துவீச சற்று சிரமப்பட்டேன். கிரிக்கெட் போட்டியின் எந்த நிமிடத்தில், எதுவேண்டுமானாலும் நடக்கலாம். சென்னையில் நடந்த ஒருநாள் போட்டியில் எனது ஓவரில் 3 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. அது நல்ல பாடமாக அமைந்தது. இந்தப் போட்டியில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர், 3 வது பந்தை வீசுவதற்கு முன்பாக தோனியிடம் ஆலோசனை கேட்டேன். நீ எப்படி பந்துவீச நினைக்கிறாயோ அப்படியே பந்துவீசு என்று தோனி எனக்கு ஊக்கம் கொடுத்தார். இந்த ஹாட்ரிக் எனக்கு சிறப்பு வாய்ந்தது. போட்டியை இந்திய அணிக்கு சாதகமாகத் திருப்பியது. அது பெருமைமிகு தருணம்’ என்றார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஸ்காட்லாந்து அணிக்கெதிரான 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை போட்டியிலும் குல்தீப், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/sports/103015-kuldeep-thanks-dhoni-for-pepping-him-up-before-the-hat-trick-ball.html

 

 

 

சைனாமேன் குல்தீப் ஹாட்ரிக்... 26 ஆண்டுகளுக்குப் பின் ஒரு சாதனை! #MatchAnalysis #IndVsAus

 

கொல்கத்தா ஈடன் கார்டன் ரோஹித் சர்மாவுக்கு ராசியான மைதானம். நேற்று அப்படி இல்லை. விராட் கோலிக்கு ராசியாக இருந்தது போலத் தெரிந்தது. அவரும் 92 ரன்களில் அவுட். தாதாவின் கோட்டையில் சதம் அடிக்கும் வாய்ப்பு நழுவியது. ஸ்மித் பக்கம் அதிர்ஷ்டம் அடித்ததுபோலத் தெரிந்தது. ம்ஹூம். அவருக்கும் ராசியில்லை. ஆஸ்திரேலிய பேட்டிங்கின்போது 33 வது ஓவரை வீச வருகிறார் குல்தீப் யாதவ். வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ‛இன்றைய நாள் குல்தீப் நாள்போலத் தெரிகிறது’ எனக் கணித்தார். அவர் கணிப்புத் தப்பவில்லை. ஆம், ஓர் ஓவரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். மூன்று பந்துகளில் ஆஸ்திரேலியாவின் கனவைத் தகர்த்துவிட்டார். அதோடு ஒரு சாதனையும் படைத்துவிட்டார்.

குல்தீப்

சைனாமேன் குல்தீப் வீசிய 7 ஓவர்களில் 39 ரன்கள். விக்கெட் ஏதும் இல்லை. மேக்ஸ்வெல் பளிச் பளிச்சென அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசியிருந்தார். சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும், குல்தீப் பந்தில் மேக்ஸ்வெல் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்திருந்தார். ஆனால், நேற்று அவர் வீசிய எட்டாவது ஓவரில் நடந்தது அதிசயம். அதிசயம் மட்டுமல்ல சாதனை. 26 ஆண்டுகளுக்குப் பின் ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனை. இதற்கு முன், 1987 உலகக் கோப்பையில் சேதன் ஷர்மா நியூஸிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் வீழ்த்தியிருந்தார். 1991-ல் இதே ஈடன் கார்டனில் ஆசியக் கோப்பையில் இலங்கையிடம் ஹாட்ரிக் எடுத்தார் கபில்தேவ். அந்த வரிசையில் மூன்றாவதாக இணைந்துள்ளார் குல்தீப். (டெஸ்ட் போட்டியில் இதே மைதானத்தில் இதே ஆஸிக்கு எதிராக ஹர்பஜன் ஹாட்ரிக் எடுத்தது தனிக்கதை. 

33 வது ஓவரை வீச வருகிறார் குல்தீப். முதல் பந்தை டிஃபண்ட் செய்தார் மேத்யூ வேட். இரண்டாவது பந்து லெக் பிரேக், ஸ்லோ பால், அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப்... டிஃபண்ட் செய்தார் வேட். இன்சைட் எட்ஜ், பந்து ஸ்டம்பை நோக்கி விரைகிறது. அதைத் தடுக்க முனைகிறார் பேட்ஸ்மேன். முடியவில்லை. பந்து ஸ்டம்பை பதம் பார்த்துவிட்டது. லைட் எரிந்துவிட்டது. இந்திய வீரர்கள் உற்சாகமாகிவிட்டனர். அதற்குள் மைதானம் ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிட்டது. மேத்யூ வேட் அவுட். அடுத்த பந்தைச் சந்திக்க வந்தது ஆஷ்டன் அகர். ஒரு மாதிரியான ‛லூப்பி லெக்’ பிரேக். பறந்து சென்ற பந்து ஆஷ்டன் அகரின் முன் காலில், Pad-ல் படுகிறது. Howzat... எஸ்... அவுட். Finger went up. ரிவ்யூ கேட்கலாமா? யோசிக்கிறார் அகர். வேண்டாம் என எதிர்முனையில் இருந்து சிக்னல் கொடுக்கிறார் ஸ்டாய்னிஸ். அடுத்த பந்து. குல்தீப் ஹாட்ரிக் எடுக்க வாய்ப்பு... அதைத் தடுக்க பேட் கம்மின்ஸுக்கு வாய்ப்பு. யார் ஜெயிப்பது? ஹாட்ரிக் எடுக்கவிடக் கூடாது என டிஃபண்ட் செய்கிறார் கம்மின்ஸ். அவுட் சைட் எட்ஜ். பந்து விக்கெட் கீப்பரின் கைகளில்... கம்மின்ஸ் அவுட்... யாராலும் நம்பமுடியவில்லை. குல்தீப் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துவிட்டார். துள்ளிக் குதிக்கிறார். அவர் மட்டுமல்ல, கோலியும்... கோலி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அணியும்... இந்திய அணி மட்டுமல்ல ஒட்டுமொத்த ஈடன் கார்டன் ரசிகர்களும்...

குல்தீப்

‛‛முதல் ஐந்து ஓவர்களில் சரியான இடத்தில் பந்துவீசத் தடுமாறிக் கொண்டிருந்தேன். கடந்த போட்டியில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்கள் விட்டுக் கொடுத்தேன். கிரிக்கெட்டில் இது சகஜம். ஆனால், இங்கே மூன்று பந்துகளில் மூன்று விக்கெட். இது கண்டிப்பாக ஸ்பெஷல் தருணம்’’ எனப் போட்டி முடிந்தபின் பேட்டியளித்தார் குல்தீப். மீண்டும் ஒருமுறை ரிஸ்ட் ஸ்பின்னர்களிடம் ஆஸி பணிந்து விட்டது. யுஸ்வேந்திர சஹால் 10 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் எடுத்திருந்தார்.

India_Australia_Crick_velu_%282%29_14490

அந்நிய மண்ணில் இது ஆஸ்திரேலியாவுக்குத் தொடர்ந்து பத்தாவது தோல்வி. ஸ்மித் இதை விரும்பவில்லை. கொல்கத்தா வரும் முன்பே இதைத் தவிர்க்க திட்டமிட்டிருந்தார். ஈடன் கார்டன் மைதானம் பெரிது. அங்கு தன் 100-வது ஒருநாள் போட்டி என்பது அதனினும் பெரிது. இங்கு கேப்டன் இன்னிங்ஸ் ஆடினால் காலத்துக்கும் பெருமை. இந்தியக் கேப்டன் விராட் கோலி தனக்கு முன் 92 ரன்கள் விளாசி இருக்கிறார். அதை மிஞ்ச வேண்டும். அல்லது தனி ஆளாகப் போராடி அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். பல விதங்களில் ஸ்மித் ஸ்மார்ட். நேர்த்தியான ஆட்டம். சேஸிங்கில் பதறாத ஆட்டம். ஃபுல் லெந்த் பந்துகளில் பளிச்சென ஓர் அறை, அட்டகாச ட்ரைவ், பக்கா ஃப்ளிக் என ஷாட்கள் அனைத்தும் கச்சிதம். இத்தனை வெரைட்டி ஷாட்கள் எனில் அரைசதம் அடிக்காமலா? 70 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். சேஸிங்கில் நிதானம் தேவை. ஸ்மித்திடம் அது ரொம்பவே இருந்தது. ஆனால், ஹர்டிக் பாண்டியாவின் ஒரு ஷார்ட் பந்தில் ஏமாந்தார். அவர் அடித்த புல் ஷாட், மிட் விக்கெட் திசையில் இருந்த ரவீந்திர ஜடேஜாவின் கைகளில் சிக்கியது. ஸ்மித் நடையைக் கட்டியபின் ஸ்டாய்னிஸ் மட்டுமே ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை. அவரும் விட்டு விளாசி அரைசதம் கடந்தார். அவரால் அரைசதம் மட்டுமே கடக்க முடிந்தது. தோல்வியின் வீரியத்தை மட்டுமே தவிர்க்க முடிந்தது. தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

India_Australia_Crick_velu_%283%29_14549

கொல்கத்தாவில் கிடைத்த வெற்றி பெளலர்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. 252 ரன்களை டிஃபண்ட் செய்வது என்பது கடினம். ஆனால், புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஸ்பெல் அட்டகாசம். சாஹல் தன் பங்குக்கு 3 விக்கெட் எடுத்தார் எனில், பும்ரா, பாண்டியாவின் முயற்சி பாராட்டுக்குரியது. அதைவிட, விராட் கோலி பாராட்டுக்குரியவர். சென்னையில்  டக் அவுட்டானவர், அடுத்த போட்டியிலேயே சதம் அடிக்க முயன்றார். அடித்திருந்தால் 31-வது சதம். எட்டு ரன்களில் மிஸ். எடுத்த எடுப்பிலேயே அடிக்காமல் செட்டில் ஆன பின் அடிப்பது கோலி ஸ்டைல். நேற்றும் அப்படியே. முதல் 9 பந்துகளில் 1 ரன். கனே ரிச்சர்ட்சன், ஜேம்ஸ் ஃபாக்னர் பந்துவீச வந்ததும் ஆட்டத்தைத் தொடர்ந்தார் விராட். கோலிக்கு கவர் ட்ரைவ் அடிப்பது தண்ணி பட்ட பாடு. ரிச்சர்ட்சன் பந்தில் அடித்த ட்ரைவ் அட்டகாசம் எனில், ஸ்டாய்னிஸ் பந்தில் விரட்டியது கண்ணுக்குக் குளிர்ச்சி. இரண்டு புல் ஷாட்டும் பக்கா. அதுவும் மிட் விக்கெட் திசை ஓபனாக இருப்பதைப் புரிந்து அங்கு பந்தை விரட்டுவது தேர்ந்த பேட்ஸ்மேனுக்கு அழகு. கோலி அதைச் செய்யாமல் போனால்தான் ஆச்சர்யம். கடைசியில் அவர் சதம் அடிக்காமல் கோல்டர் நைல் பந்தில் இன்சைட் எட்ஜாகி போல்டானதும் ஆச்சர்யம்.

India_Australia_Crick_velu_%284%29_14149

கோலிக்கு அடுத்து பேட்டிங்கில் ரசிக்க வைத்தது ரகானே. அடுத்தடுத்த சொதப்பல்களுக்குப் பின் தன்னை நிரூபித்தார் அவர். இரு ஃபீல்டர்களுக்கு இடையில் பவுண்டரி அடிக்கும்போதெல்லாம் ‛He finds the gap’ - என வர்ணனையாளர்கள் சொல்வது வழக்கம். கோல்டர் நைல் பந்தில் கவர் ஏரியாவில் ரகானே அடித்த பவுண்டரி, அந்த வர்ணனைக்கு நல் உதாரணம். ரகானே ஆஃப் சைடில் ஸ்ட்ராங். அவர் முதலில் அடித்த 31 ரன்களில் 1 ரன் மட்டுமே லெக் சைடில் அடிக்கப்பட்டது. அதுவும் தப்பித்தவறி வந்தது. இன் சைட் எட்ஜ். மற்றவை எல்லாமே ஆஃப் சைடில் அடிக்கப்பட்டவை. Classical Shots. அரைசதம் அடித்து முன்னேறிக் கொண்டிருந்தவரை, இரண்டாவது ரன்னுக்கு அழைத்தார் விராட். தயக்கத்துடன் ஓடியதால் என்னவோ ரன் அவுட். ஏமாற்றமே என்றாலும் இந்த இன்னிங்ஸ் ரகானேவுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கும்.

 

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளில் இந்திய அணி எந்த மாற்றமும் செய்யவில்லை. மனீஷ் பாண்டே, ரோகித் சர்மா மட்டுமே இன்னும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ரோகித் ஓபனர். வசமாக ஒரு மேட்ச் சிக்கினால், வெளுத்து விடுவார். ஆனால், மனீஷ் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதை விட, ஆஸ்திரேலியா இந்தூரில் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையெனில், இந்தத் தொடர் சப்பென முடிந்து விடும். ஸ்மித் அதை விரும்ப மாட்டார். போட்டி முடிந்தபின் நடந்த பிரஸ் மீட்டில், தங்கள் பேட்ஸ்மேன்கள்மீது பொறிந்து தள்ளிவிட்டார். இந்தூரில் கங்காருகள் இன்னும் உக்கிரமாக இருக்கும்!

http://www.vikatan.com/news/sports/103013-india-vs-australia-second-odi-match-analysis.html

Link to comment
Share on other sites

எப்படியாவது மளமள விக்கெட்டுகள் சரிவை தடுத்து நிறுத்த வேண்டும்: ஸ்மித் புலம்பல்

 

 
smith

தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் விக்கெட்டுகள் மளமளவென சரிவடையும் போக்குகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 253 ரன்கள் இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.இதன் மூலம் வெளிநாட்டு மைதானங்களில் கடைசியாக விளையாடிய 10 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியை பதிவு செய்துள்ளது. அந்த அணி கடைசி 8 விக்கெட்களை 112 ரன்களுக்கு தாரை வார்த்தது. 7 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அடிக்கடி இதுபோன்று சரிவை சந்திக்கிறோம் என்பதை நேர்மையாக ஏற்றுக்கொள்கிறேன். அதிக அளவிலான சரிவை கண்டுள்ளோம். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அழுத்தமான சூழ்நிலைகளில் இருக்கும்போது சிறந்த முடிவை எடுக்க வேண்டும். இது மாற்றப்பட வேண்டும். ஒழுங்காக விளையாடத் தொடங்க வேண்டும். தற்போதைய செயல் திறன் போதுமானதாக இல்லை.

வீரர்கள் சிறப்பாக பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அழுத்தமான சூழ்நிலையில் களத்தில் எப்படி திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். இந்த ஆட்டத்தில் சிறந்த பார்ட்னர்ஷிப்பை நாங்கள் பெறவில்லை. வேடிக்கையான பிழைகளை செய்கிறோம். இந்தியா போன்ற தரம் வாய்ந்த அணிக்கு எதிராக இதுபோன்ற தவறுகளை செய்ய வீரர்களுக்கு அனுமதியில்லை.

மைதானத்துக்கு வெளியே அமர்ந்து கொண்டு, இது நிறுத்தப்பட வேண்டும் என்று எளிதில் கூறிவிடலாம். ஆனால் களத்தில் நாம் என்ன செய்துவருகிறோமோ அதனை மாற்றிக் கொள்ள வேண்டும். பந்துகளை நெருக்கமாகப் பார்த்து ஆட வேண்டும் என்கிறார்கள், ஒருவேளை ரொம்பவும் நெருக்கமாகப் பார்த்து ஆட்டத்தை ஆட மறந்து விடுகின்றனர் போலும். அதிகமாக சரிவுகள் காண்பது நிச்சயம் நல்லதுக்கல்ல.

இந்தப் பிட்சில் 253 ரன்களை எடுத்திருக்க வேண்டும். மீண்டும் நிறைய தவறுகளைச் செய்தோம், நெருக்கடியில் எங்கள் திறமைகளை செவ்வனே செயல்படுத்துவதில்லை. கொத்தாக விக்கெட்டுகளை விடுகிறோம், இப்படி ஆடக்கூடாது

ஸ்டாய்னிஸ் கடைசி வரை சிறப்பாக விளையாடினார். ஆனால் முதல் 4 இடங்களில் களமிறங்கும் வீரர்களில் நானோ அல்லது டிரெவிஸ் ஹெட் ஆகியோரில் யாராவது ஒருவர் கடைசி வரை களத்தில் நிலைத்து நின்று விளையாடியிருக்க வேண்டும். நாங்கள், எங்களது திறன்களை மிகுந்த அழுத்தத்தில் போதுமான அளவுக்கு செயல்படுத்தவில்லை. இந்தியா போன்ற அணிக்கு எதிராக தேவையான அளவு ரன்களை நாம் எடுக்காவிட்டால், பல ஆட்டங்களில் வெற்றி பெற முடியாது.

புதிய பந்தில் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் இரு முனைகளிலும் பந்துகளை ஸ்விங் செய்து எங்களது தடுப்பாட்டத்துக்கு கடும் சவால் கொடுத்தார்கள். சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் ஆடுகளத்துக்கு தகுந்தவாறு வேகத்தை குறைந்து வீசி பந்துகளை நன்கு சுழலச் செய்தனர்.

இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் கூறினார்

http://tamil.thehindu.com/sports/article19737117.ece

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?: நாளை 3-வது ஒரு நாள் போட்டி

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் நாளை நடக்கிறது. இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெரும் ஆர்வத்தில் உள்ளது.

 
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?: நாளை 3-வது ஒரு நாள் போட்டி
 
இந்தூர்:

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது . சென்னையில் நடந்த முதல் போட்டியில் 26 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது போட்டியில் 50 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை நடக்கிறது.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நாளைய ஆட்டத்திலும் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனையுடன் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி இந்த தொடரில் மிகவும் நம்பிக்கையுடன் ஆடி வருகிறது.

இலங்கை தொடரில் 9 ஆட்டத்தில் தொடர்ச்சியாக வென்றது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டியில் வென்று இருந்தது. இந்த வெற்றியை நீட்டிக்கும் வகையில் இந்திய வீரர்கள் அனைவரும் திறமையுடன் விளையாடுவார்கள். அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என்று தெரிகிறது. ஒரு வேளை மனிஷ் பாண்டே நீக்கப்பட்டால் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது. கேப்டன் சுமித், மேக்ஸ்வெல், பல்க்னெர், ஸ்டோனிஸ் ஆகியோர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். இந்தியாவின் சுழற்பந்து வீச்சு ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சவாலாக இருக்கிறது. அதே நேரத்தில் அந்த அணியிலும் சிறந்த சுழற்பந்து வீரர்கள் இல்லை.

ஆஸ்திரேலிய வீரர்கள் நாளைய ஆட்டத்தில் ஆக்ரோ‌ஷத்தை வெளிப்படுத்துவர்கள். அதேநேரத்தில் இந்திய வீரர்கள் தொடரை வெல்ல போராடுவார்கள். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தூரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் போட்டி பாதிக்கப்படுமா? என்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளும் நாளை மோதுவது 126-வது போட்டியாகும். இதுவரை நடந்த 125 ஆட்டத்தில் இந்தியா 43-ல் ஆஸ்திரேலியா 72-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டி முடிவு இல்லை.

பகல்-இரவாக நடைபெறும் நாளைய போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ராகுல், கேதர்ஜாதவ், ரகானே, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ்பாண்டே, அக்‌ஷர்பட்டேல், யசுவேந்திர சஹால், பும்ரா, முகமது ‌ஷமி, உமேஷ்யாதவ், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார்.

ஆஸ்திரேலியா: ஸ்டீவன் சுமித் (கேப்டன்), வார்னர், ஆரோன்பிஞ்ச், மேக்ஸ்வெல், டிரெவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கம் மேத்யூ வாடே, கும்மின்ஸ், நாதன் கோல்ட்டர் நைல், பல்க்னெர், ஸ்டோனிஸ், கானே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஆஸ்டன் அகர், ஹில்டன் கார்ட் ரைட்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/23141657/1109525/India-vs-Australia-3rd-ODI-match-on-tomorrow.vpf

Link to comment
Share on other sites

மீண்டும் தோனியிடம் ஸ்டம்பிங் ஆன மேக்ஸ்வெல்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி #IndvsAus #LiveUpdate

 
 

* மேக்ஸ்வெல் இரண்டாவது ஒருநாள் போட்டியைப் போலவே, இந்தப் போட்டியிலும் தோனியிடம் ஸ்டம்பிங் ஆகி வெளியேறியுள்ளார். இந்த முறை சாஹல் விக்கெட் எடுத்துள்ளார்.

* ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் அவுட் ஆகியுள்ளார். அவர் 63 எடுத்து பெவிலியன் திரும்பியுள்ளார். குல்தீப் யாதவே ஸ்மித்தின் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

* அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஃபின்ச் 124 ரன்களில் அவுட் ஆகியுள்ளார். குல்தீவ் யாதவ், ஃபின்ச்சின் விக்கெட்டை கைப்பற்றி மெகா பார்ட்னர்ஷிப்பை உடைத்துள்ளார்.

ஃபின்ச்

* ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் அரைசதம் அடித்துள்ளார். இந்தத் தொடரில் மட்டும் அவர் அடிக்கும் இரண்டாவது அரைசதம் இது. 

ஸ்மித்

* ஆஸ்திரேலிய அணி 200 ரன்களைக் கடந்துள்ளது. ஃபின்ச்சும், ஸ்மித்தும் ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளனர். சற்று முன்வரை அந்த அணி 37 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் எடுத்துள்ளது.

* அதிரடியாக ஆடிய ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின்ச் சதம் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவருக்கு 8-வது சதம். சதம் அடித்த அடுத்த பந்தை, சிக்ஸருக்கு அனுப்பினார்.

* ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து வெளியேறி, பழைய பன்னீர்செல்வமாக விளையாடி வருகிறது. ஃபின்ச் - ஸ்மித் ஜோடியின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்துள்ளது. அந்த அணி 30 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் எடுத்துள்ளது 

* ஆஸ்திரேலிய அணி 100 ரன்களைக் கடந்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின்ச் அரைசதம் எடுத்துள்ளார். 21.2 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவருக்கு 17-வது அரைசதம்.

ஃபின்ச்

* ஆஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டை இழந்துள்ளது. பாண்டியாவின் பந்தில், வார்னர் போல்ட் ஆகினார். வார்னர் 42 ரன்கள் எடுத்து வெளியேறியுள்ளார். ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. 

வார்னர்

* ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபின்ச், வார்னர் நிதானமாக விளையாடி வருகின்றனர். 12 ஓவர்கள் முடிவில் அந்த அணி 55 ரன்கள் எடுத்துள்ளது. ஃபின்ச் 23, வார்னர் 28 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

* இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த அணியின் ஆஸ்தான தொடக்க ஆட்டக்காரர் ஃபின்ச் களமிறங்கியுள்ளார். இது அந்த அணிக்கு சற்று பலமாக இருக்கும். அதேபோல, விக்கெட் கீப்பர் மேத்தீவ் வேடுக்கு பதிலாக ஹேண்ட்ஸ் கோம் களமிறங்கியுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி சற்றுமுன் இந்தோரில் தொடங்கியது.

india vs australia
 

முதல்  இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று  ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில்  2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற  ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். எனவே, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்க உள்ளது. இந்தியா பந்துவீச உள்ளது.  இப்போட்டியில் இந்தியா வென்றால் ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதால், இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. 

 

http://www.vikatan.com/news/sports/103160-india-vs-australia-3rd-odi-live-update.html

Link to comment
Share on other sites

* 50 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய அந்த அணியின் ரன்ரேட், இந்திய பௌலர்களின் சிறப்பான பந்து வீச்சால் கட்டுப்படுத்தப்பட்டது. இந்திய அணியில் பும்ரா, குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். சாஹல் மற்றும் பாண்டியா தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து, 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது.

* பும்ராவின் பந்து வீச்சில் அடுத்த விக்கெட். இம்முறை பவுண்ட்ரி லைனில் மணிஷ் பாண்டேவின் அசத்தலான கேட்ச்சால், ஹேண்ட் கோம் பெவிலியன் திரும்பினார்.

* ஆஸி அணியின் டி.எம்.ஹெட், பும்ராவின் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

Link to comment
Share on other sites

இந்திய அணிக்கு அடுத்த விக்கெட்... ரஹானேவும் அவுட் #IndvsAus #LiveUpdate

 
 
 

* ரஹானேவும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியுள்ளார். கமின்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி 70 ரன்களில் வெளியேறினார்.

* சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் ஷர்மா 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.

* மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரஹானேவும் அரைசதம் அடித்துள்ளார்.

ரஹானே

 

* இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் - ரஹானே பார்ட்னர்ஷிப் 100 ரன்களை எட்டியுள்ளது.

* ரோஹித் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். 42 பந்துகளில் அவர் அரைசதம் விளாசியுள்ளார். அதில் நான்கு சிக்ஸர்கள் அடக்கம்.

* ஆஸ்திரேலிய அணியைப் போலவே இந்திய அணிக்கும், சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் ரஹானே ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ரோஹித் ஷர்மா அதிராடியாக ஆடி வருகிறார். 11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா மூன்று சிக்ஸர்களுடன், 36 பந்துகளில் 43 ரன்கள் குவித்துள்ளார். ரஹானே 28 ரன்கள் எடுத்துள்ளார்.

ரோஹித் ஷர்மா

Link to comment
Share on other sites

கேதர் ஜாதவ் 2 ரன்களில் அவுட் ஆனார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

* கோலி அவுட். அகர் பந்தில் ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்து அவர், 28 ரன்களில் வெளியேறினார். 

* இந்திய அணி 200 ரன்களைக் கடந்துள்ளது.  கோலி மற்றும் பாண்டியா நிதானமாக விளையாடி வருகின்றனர்.

Link to comment
Share on other sites

* ஸ்டோனிஸ் வீசிய 45-வது ஓவர் இந்தியாவுக்கு பம்பர் பரிசாக கிடைத்துள்ளது. பாண்டியா, பாண்டே இருவரும் தலா இரண்டு ஃபோர்களை விரட்டினர்.

* விக்கெட்டுகள் ஒருபக்கம் சீரான இடைவெளியில் விழுந்தாலும், சிறப்பாக ஆடி அரைசதம் அடித்துள்ளார் பாண்டியா. 45 பந்துகளில் அவர் அரைசதம் அடித்துள்ளார்.

சிறப்பான விளையாடிய பாண்டியா 78 ரன்களில் வெளியேறினார்.

மேட்ச்சை ஃபினிஷ் செய்தார் பாண்டே... இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. தொடரையும் கைப்பற்றியது இந்தியா.

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி... தொடரையும் கைப்பற்றியது!

Link to comment
Share on other sites

3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை 3-0 எனக் கைப்பற்றியது

 

இந்தூரில் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 47.5 ஓவரில் 294 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை 3-0 எனக் கைப்பற்றியது
 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் சேர்த்தது. ஆரோன் பிஞ்ச் 124 ரன்னும், ஸ்மித் 63 ரன்னும், வார்னர் 42 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் 8.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 15 ஓவரில் 100 ரன்னை எட்டியது.

ரோகித் சர்மா 42 பந்திலும், ரகானே 50 பந்திலும் அரைசதம் அடித்தனர். இந்தியாவின் ஸ்கோர் 21.4 ஓவரில் 139 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 62 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். சிறிது நேரத்தில் ரகானே 76 பந்தில் 9 பவுண்டரியுடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டோன் அகர் பந்து வீச வந்தபோதெல்லாம் பாண்டியா பந்தை சிக்சருக்கு தூக்கினார்.

201709242133184168_1_9rahane-s._L_styvpf

விராட் கோலி 28 ரன்னிலும், கேதர் ஜாதவ் 2 ரன்னிலும் வெளியேறினார்கள். ஆனால் ஹர்திக் பாண்டியா உடன் மணீஷ் பாண்டே இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா, 72 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

201709242133184168_2_9pandya001-s._L_sty

இந்திய அணிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் டோனி களம் இறங்கினார். இந்தியா 47.5 ஓவரில் 294 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மணீஷ் பாண்டே 36 ரன்னுடனும், டோனி 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

201709242133184168_3_9manish-s._L_styvpf

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/24213316/1109718/India-beats-australia-by-5-wickets-and-series-won.vpf

Link to comment
Share on other sites

பாண்டியா மிகப்பெரிய சொத்தாம் : கோலி

Published by Priyatharshan on 2017-09-25 19:16:52

 

இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து ஹர்த்திக் பாண்டியா  என இந்திய அணித் தலைவர் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

pandya.jpg

ஹர்த்திக் பாண்டியாவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 3 முறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார். சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக திகழ்கின்றார். அவர் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்தாகும். விலை மதிப்புமிக்க வீரராக இருக்கிறார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இத் தொடரில் 2 ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார். இந்நிலையிலேயே இந்திய அணித் தலைவர் கோலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆவது போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி பெங்களூரில் இடம்பெறவுள்ளது.

http://www.virakesari.lk/article/24910

Link to comment
Share on other sites

பெங்களூருவில் இன்று 4-வது ஒருநாள் போட்டி: சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய அணி - தொடர்ச்சியான தோல்விகளை தடுத்து நிறுத்துமா ஆஸ்திரேலியா

 
28CHPMUVIRATKOHLI

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.   -  படம்: பிடிஐ

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று 4-வது ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ள இந்திய அணி, ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று 4-வது ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. தொடரை ஏற்கெனவே தன்வசப்படுத்திக் கொண்டாலும் இந்திய அணி வீரர்கள் நேற்று சின்னசாமி மைதானத்தில் வழக்கம் போல தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதனால் வெற்றியின் தருணத்தை இந்திய அணி நீட்டிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரை வென்றுவிட்டதால் அடுத்த இலக்காக ஒயிட்வாஷ் முனைப்பில் இந்திய அணியினர் செயல்படக்கூடும். கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோர் தொடர்ச்சியாக சீரான பங்களிப்பை வழங்கி வரும் நிலையில் இளம் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் வளர்ச்சி அணிக்கு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அவர், தாக்குதல் ஆட்டம் தொடுத்து 66 பந்துகளில் விளாசிய 83 ரன்களும், இந்தூரில் 294 ரன்கள் இலக்கை விரட்டிய போது சரளமாக சேர்த்த 78 ரன்களும் இந்திய அணி தொடரை 3-0 என கைப்பற்ற பெரிதும் உதவியாக இருந்தது. 3-வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே ஆகியோரும் அரை சதம் அடித்து தங்களது பங்களிப்பை சரியான முறையில் வழங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து பலம் சேர்த்திருந்தது.

கே.எல்.ராகுலுக்கு 3 ஆட்டங்களிலும் வாய்ப்பு வழங்கப்படாததால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு வழிவிடும் வகையில் கேதார் ஜாதவ் அல்லது மணீஷ் பாண்டே வெளியே அமர வைக்கக்படுவார்கள் எனத் தெரிகிறது. பேட்டிங்கில் எப்போதும் வலுவாக காணப்படும் இந்திய அணி தற்போது பந்து வீச்சிலும் அசுர பலம் கண்டுள்ளது. புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா வேகக்கூட்டணி ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களுக்கு தொல்லை கொடுப்பதோடு மட்டும் இல்லாமல் கடைசி கட்ட ஓவர்களில் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதிலும் அசாத்திய திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இளம் ரிஸ்ட் ஸ்பின்னர்களான யுவேந்திரா சாஹல், குல்தீவ் யாதவ் ஆகியோர் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்டுத்தி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை படைத்த நிலையில், யுவேந்திரா சாஹல் ஆட்டத்தின் நடு ஓவர்களில் விக்கெட்கள் வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியவராக திகழ்கிறார். இந்திய அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சும் ஆஸ்திரேலிய அணியை மீண்டும் மிரட்ட தயாராக உள்ளது.

ஏற்கெனவே தொடரை இழந்துவிட்டதால் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்து ஓயிட்வாஷ் பெற்றுவிடக்கூடாது என்பதில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கூடுதல் கவனம் செலுத்த முயற்சிக்கும். கடினமான சூழ்நிலை தற்போது நிலவினாலும் நவம்பர் மாத இறுதியில் ஆஷஸ் டெஸ்ட் தொடரை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி அதற்கு முன்னதாக வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

கடைசியாக வெளிநாடுகளில் விளையாடிய 13 ஒருநாள் போட்டிகளில் 11-ல் தோல்வியும், 2 ஆட்டங்களை முடிவு தெரியாமலும் நிறைவு செய்துள்ள ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் கடும் விமர்சனங்களை சந்திக்க நேரிடும். இந்திய அணியை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை ஆஸ்திரேலிய அணி தேடிவரும் நிலையில், அந்த அணியின் மிகப்பெரிய அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல், இந்தத் தொடரில் சோடை போனதும் கடும் பின்னடைவை கொடுத்துள்ளது.

இந்தூரில் ஆரோன் பின்ச் 124 ரன்கள் விளாசி சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். 40 ஓவர்களில் 232 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலிய அணியால் கடைசி கட்டத்தில் 300 ரன்களைக் கூட கடக்க முடியாமல் போனது.

கடைசி 10 ஓவர்களில் அந்த அணியால் வெறும் 59 ரன்களே சேர்க்க முடிந்தது. அதிலும் 4 விக்கெட்களை பறிகொடுத்தனர். ஆறுதல் வெற்றிகளை பெற வேண்டுமானால் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்பட்டால் மட்டுமே சாத்தியம்.

காயம் காரணமாக ஆஷ்டன் அகர் விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக ஆடம் ஸம்பா இன்றைய ஆட்டத்தில் களமிறக்கப்படக்கூடும். அதேவேளையில் விக்கெட் கீப்பராக மீண்டும் மேத்யூ வேட் இடம் பெறுவார் என தெரிகிறது. கடந்த ஆட்டத்தில் அவருக்கு பதிலாக விளையாடிய பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பணியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கிடையே இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 9 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை தேடிக் கொடுத்த கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். இதற்கு முன்னர் கடந்த 2008 நவம்பர் 14 முதல் 2009-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற 9 ஒருநாள் போட்டிகளை தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி தொடர்ச்ச்சியாக வென்றிருந்தது.

 

அணிகள் விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ்.

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஹில்டன் கார்ட் ரைட், ஆரோன் பின்ச், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், டிரெவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட், ஆடம் ஸம்பா, பேட் கம்மின்ஸ், நாதன் கோல்டர் நைல், கேன் ரிச்சர்ட்சன், ஜேம்ஸ் பாக்னர்.

- நன்றி ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’- தமிழ்

நேரம்: பிற்பகல் 1.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

http://tamil.thehindu.com/sports/article19767203.ece

Link to comment
Share on other sites

#IndvsAus: ஆஸ்திரேலியா வலுவான தொடக்கம்... வார்னர் சதம்!

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சதம் விளாசியுள்ளார். 

வார்னர்

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று  நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஐந்து போட்டிகள்கொண்ட இத்தொடரில், மூன்று போட்டிகளில் வென்றதன் மூலம் தொடரில் வெற்றியை உறுதிசெய்த இந்திய அணி, இன்று எவ்வித பதற்றமும் இன்றியே விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்ததால், கடைசி இரண்டு போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது.

இன்றைய போட்டிக்கான டாஸை வென்று பேட்டிங் ஆட தீர்மானித்தது ஆஸ்திரேலியா. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக வார்னர் இந்திய அணியின் பௌர்களில் பந்துகளை மைதானத்தின் நாலா புறமும் சிதறடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய வார்னர், சதம் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான ஃபின்ச்சும் சதத்தை நெருக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் 35 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. வார்னர் 124 ரன்களில் ஆட்டமிழந்தார். ஃபின்ச் 94 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

http://www.vikatan.com/news/sports/103561-warner-scores-a-ton-in-4th-odi-between-india-and-australia.html

236/3 (37.1/50 ov)
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.