Jump to content

இந்தியா எதிர் அவுஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

இந்தியா உடனான கிரிக்கெட் தொடர்: சென்னை வந்தடைந்தது ஆஸ்திரேலிய அணி

இந்தியா உடனான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தது.

 
இந்தியா உடனான கிரிக்கெட் தொடர்: சென்னை வந்தடைந்தது ஆஸ்திரேலிய அணி
 
சென்னை:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.

இதற்கான டிக்கெட் விற்பனை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி நேற்றிரவு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. பின்னர், அவர்கள் பேருந்து மூலம் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/09041043/1107045/Australian-cricket-team-arrives-for-five-match-ODI.vpf

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

ஆஸ்திரேலிய தொடரிலும் அஷ்வின், ஜடேஜா இல்லாத இந்திய அணி!

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Team_India_13523.jpg


இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்றுவருகிறது. 
இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், மனீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அஜிங்கியா ரஹானே, மகேந்திரசிங் தோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களின் ஓய்வுகொடுக்கப்பட்ட முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இந்த தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

 

முதல் ஒருநாள் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 1996-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. கடந்த 1996-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டி சென்னையில் நடந்தது. நியூசிலாந்துக்கு எதிரான அந்த போட்டியில் மார்க் வாக் சதத்தின் உதவியால் ஆஸ்திரேலிய அணி வெற்றி வாகை சூடியிருந்தது. 

http://www.vikatan.com/news/sports/101825-india-team-for-first-3-odis-against-australia-announced.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

ஆஸ்திரேலிய தொடரிலும் அஷ்வின், ஜடேஜா இல்லாத இந்திய அணி!

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Team_India_13523.jpg

 

அஷ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு ஓய்வா அல்லது வேறு ஏதுமா:unsure:

Link to comment
Share on other sites

 

டார்கெட் கோலி: மாஸ்டர் பிளான் போடும் ஸ்மித்!

 

ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும், ஐந்து ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ளன. முதல் ஒரு நாள் போட்டி, வரும் 17-ம் தேதி சென்னையில் நடக்கிறது. டெஸ்ட், ஒரு நாள், டி-20 என்று அனைத்திலும் இலங்கையை வீழ்த்தி, இந்தியா கெத்தாக இந்தத் தொடரில் களமிறங்குகிறது. அதேநேரத்தில், வங்கதேசத்துடன் ஒரு டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியால் சற்று அப்செட்டுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இதையடுத்து, அந்த அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.

ஸ்மித்

இந்நிலையில், இந்தியத் தொடர்குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்மித் கூறுகையில், "சொந்த மண்ணில் இந்திய அணியை எதிர்கொள்வது எப்போதுமே சவாலான ஒன்றுதான்.  அதுவும், அந்த அணி தற்போது இலங்கையை வொய்ட் வாஷ் செய்துள்ளது. இதனால், அதிக நம்பிக்கையுடன் களமிறங்கும்

 

அஸ்வின், ஜடேஜா இல்லாததால், அந்த அணி பலம் குறைந்ததாகக் கூறமுடியாது. அக்ஸர் பட்டேல், சஹால், குல்தீவ் யாதவ் ஆகிய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள். இதனால் அந்த அணியின் சுழற்பந்துத்துறை வலுவாக உள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை கோலிதான் முக்கியம். அவரை அமைதிப்படுத்தினாலே வெற்றிபெற முடியும்" என்றார்.

http://www.vikatan.com/news/sports/101859-steve-smith-speaks-about-india-tour.html

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு; அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு

 

 
11CHRELJAMESFAULKNER1

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று வலைப் பயிற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பாக்னர்.   -  படம்: க.ஸ்ரீபரத்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னையில் நடக்கவுள்ளது. இந்நிலையில் முதல் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் 16 வீரர்களைக் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றதால் அதில் ஆடிய இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஷர்துல் தாக்குர் மட்டும் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதில் கடந்த ஒருநாள் போட்டித் தொடரில் ஆடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர்களான மொகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். மேலும் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் அஸ்வின் தற்போது கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார்.

 

சுழற்சி முறை

அணியின் தேர்வு குறித்து நிருபர்களிடம் பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், “இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இளம் வீரர்களான அக்சர் படேல், யுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பான முறையில் பந்துவீசினர். அதனால் அவர் களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவெடுத்தோம். மேலும் தற்போது கடைபிடித்து வரும் சுழற்சி முறையின் அடிப் படையில் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு கொடுத்துள்ளோம்” என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 போட்டிகளில் ஆடும் இந்திய அணி வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவண், லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அஜிங்க்ய ரஹானே, மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், மொகமது ஷமி.

 

ஸ்டீவன் ஸ்மித் கருத்து

முதல் ஒருநாள் போட்டியில் ஆடும் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிக்கு பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய அணி சமீபகாலமாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறது. சுழற்பந்து வீச்சில் அது வலுவாக உள்ளது. சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அவர்களுக்கு எதிரான வியூகங்களை வகுத்து வருகிறோம். அதே நேரத்தில் ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எங்கள் பந்துவீச்சாளர்கள் அவரைக் கட்டுப்படுத்தி வைப்பதைப் பொறுத்துதான் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி இருக்கிறது.

http://tamil.thehindu.com/sports/article19659399.ece

15 hours ago, சுவைப்பிரியன் said:

அஷ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு ஓய்வா அல்லது வேறு ஏதுமா:unsure:

சுழற்சி முறை

அணியின் தேர்வு குறித்து நிருபர்களிடம் பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், “இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இளம் வீரர்களான அக்சர் படேல், யுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பான முறையில் பந்துவீசினர். அதனால் அவர் களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவெடுத்தோம். மேலும் தற்போது கடைபிடித்து வரும் சுழற்சி முறையின் அடிப் படையில் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு கொடுத்துள்ளோம்” என்றார்.

 

 

 

அஷ்வின் தற்சமயம் இங்கிலாந்து கவுன்டரி அணியான Worcestershire க்கு விளையாடுகிறார்.

Ravichandran Ashwin Begins County Stint With Three-Wicket Haul

Ashwin bowled a lengthy spell of 29 overs and ended with the figures of three for 94.

15 hours ago, சுவைப்பிரியன் said:

அஷ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு ஓய்வா அல்லது வேறு ஏதுமா:unsure:

 

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியா தொடரில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுத்தது ஏன்?: அசாருதீன் கேள்வி

 

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின், ஜடேஜா இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது சரியான முடிவு அல்ல என்று அசாருதீன் கூறினார்.

 
 
ஆஸ்திரேலியா தொடரில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுத்தது ஏன்?: அசாருதீன் கேள்வி
 

புதுடெல்லி:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. முன்னணி சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. உள்ளூர் தொடரில் முக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இருவரும் இடம் பெறாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

201709121346363888_1_ashwin._L_styvpf.jp

ஏற்கனவே இருவருக்கும் இலங்கை தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்த இருவரையும் தேர்வு குழு ஒருநாள் போட்டியில் இருந்து ஒரம்கட்ட முயற்சி செய்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஆஸ்தி ரேலியா தொடரில் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் கேப்டன் அசாருதீன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இலங்கை தொடரில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆஸ்தி ரேலியா போன்ற சிறந்த அணிக்கு எதிரான போட்டியில் இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது சரியான முடிவு அல்ல. இருவரும் தலைசிறந்த சுழற்பந்து வீரர்கள் உள்ளூர் மைதானத்தில் அவர்களது பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் விளையாட வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும்.

நான் கேப்டனாக இருந்தால் உள்ளூரில் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின், ஜடேஜாவை தேர்வு செய்ய வைத்து இருப்பேன்.

வீராட்கேலி தலைமையிலான இந்திய அணி தற்போது மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டியில் ரெய்னா மீண்டும் தேர்வு ஆவார். அனுபவம் வாய்ந்த அவர் மிகவும் தொடரில் சிறப்பாக செயல்படக்கூடியவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/12134632/1107628/Australia-series-Ashwin-Jadeja-and-gave-the-rest-why.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

ஆஸ்திரேலியா தொடரில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுத்தது ஏன்?: அசாருதீன் கேள்வி

 

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின், ஜடேஜா இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது சரியான முடிவு அல்ல என்று அசாருதீன் கூறினார்.

 
 
ஆஸ்திரேலியா தொடரில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுத்தது ஏன்?: அசாருதீன் கேள்வி
 

புதுடெல்லி:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. முன்னணி சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. உள்ளூர் தொடரில் முக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இருவரும் இடம் பெறாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

 

ஏற்கனவே இருவருக்கும் இலங்கை தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்த இருவரையும் தேர்வு குழு ஒருநாள் போட்டியில் இருந்து ஒரம்கட்ட முயற்சி செய்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஆஸ்தி ரேலியா தொடரில் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் கேப்டன் அசாருதீன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இலங்கை தொடரில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆஸ்தி ரேலியா போன்ற சிறந்த அணிக்கு எதிரான போட்டியில் இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது சரியான முடிவு அல்ல. இருவரும் தலைசிறந்த சுழற்பந்து வீரர்கள் உள்ளூர் மைதானத்தில் அவர்களது பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் விளையாட வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும்.

நான் கேப்டனாக இருந்தால் உள்ளூரில் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின், ஜடேஜாவை தேர்வு செய்ய வைத்து இருப்பேன்.

வீராட்கேலி தலைமையிலான இந்திய அணி தற்போது மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டியில் ரெய்னா மீண்டும் தேர்வு ஆவார். அனுபவம் வாய்ந்த அவர் மிகவும் தொடரில் சிறப்பாக செயல்படக்கூடியவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/12134632/1107628/Australia-series-Ashwin-Jadeja-and-gave-the-rest-why.vpf

அட எனக்கு ஏற்பட்ட சந்தேகம் அசாருக்கும் வந்திருக்கு.

Link to comment
Share on other sites

ஐ.சி.சி-யின் புதிய விதிகள்... இந்தியா - ஆஸ்திரேலியா தொடருக்குப் பொருந்தாது!

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய விதிகள், இந்த மாதம் 28-ம் தேதியிலிருந்து அமலுக்குவருகிறது. இருப்பினும், வரும் 17-ம் தேதி தொடங்கி அக்டோபர் 13-ம் தேதி வரை நடக்க இருக்கும் இந்தியா- ஆஸ்திரேலியா தொடரில், தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளே கடைபிடிக்கப்படும் என்றும் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தில் புதிய விதிகள் கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி-யின் புதிய விதிகள் சரியாக வங்கதேசம் - தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை-பாகிஸ்தான் தொடர்கள் தொடங்கும்போது நடைமுறைக்கு வந்துவிடும்.

இந்தியா

வீரர்களின் நடத்தை விதிகள், அம்பயர் முடிவு மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்) மற்றும் வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்களின் அளவுகள் மீதான புதிய விதிகள், அக்டோபர் 1-ம் தேதியில் இருந்துதான் நடைமுறைக்கு வருவதாக இருந்தது.  ஆனால், செப்டம்பர் 27-ம் தேதி வங்கதேசம் - தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் தொடங்குவதால், அந்த நாளிலிருந்தே விதிமுறைகளை நடைமுறைப்படுத்தலாம் என ஐ.சி.சி முடிவெடுத்துள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா அணி,  ஐந்து ஆட்டங்கள்கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள்கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கின்றன. செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் இந்த சுற்றுப் பயணம், அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரம் வரை நீடிக்கும். எனவே, புதிய விதிகளைத் தொடரின் இடையில் நடைமுறைப்படுத்தினால், குழப்பம் வரும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கருதுகிறது. எனவே, குழப்பத்தைத் தவிர்க்க ஆஸ்திரேலியாவுடனான தொடர் முழுவதும் இந்திய அணி தற்போது உள்ள நடைமுறைப்படியே விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது..

”செப்டம்பர் 28-ம் தேதி தொடங்க உள்ள இலங்கை - பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா - வங்கதேச டெஸ்ட் தொடரின்போதே, புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளன. செப்டம்பர் 17-ல் இந்தியா - ஆஸ்திரேலியா, இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடுகின்றன. இந்த இரு லிமிடெட் ஓவர் தொடர்களும் அக்டோபர் மாதம் வரை நீடிப்பதால், ஒரே தொடரில் இரு விதிமுறைகளைப் பின்பற்றுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என,  பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

விதிமுறை மாற்றத்தின் முக்கிய அம்சம் என்னவெனில், டி.ஆர்.எஸ் முறையைப் பயன்படுத்தி எல்.பி.டபுள்யூவுக்கு கேட்கப்படும் அப்பீல், இனி கணக்கில் வராது. அதாவது, எல்.பி.ட.பிள்யு மீதான  அப்பீல் தோல்வியடைந்தாலும், ரிவ்யூக்களின் எண்ணிக்கை குறையாது. அதேபோல, டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில், அதாவது 80 ஓவர்களுக்கு மேல் கேட்கப்படும் ரிவ்யூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட மாட்டாது.  

 

புதிய விதிகளின்படி தவறான நடத்தை, வன்முறை போன்றவற்றுக்காக வீரர்களை மைதானத்தை விட்டு வெளியே அனுப்ப நடுவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அனைத்துவிதமான விதிமீறல்களும் குற்றங்களும் ஐ.சி.சி-யின் புதிய நடத்தை விதிகளின் கீழேயே முடிவெடுக்கப்படும்.

http://www.vikatan.com/news/sports/101565-india-and-australia-escapes-from-icc-news-rules.htmlhttp://www.vikatan.com/news/sports/101651-india--australia-odi-at-chennai.html

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய -– இந்திய தொடர் ; ஆரம்பித்தது வார்த்தை மோதல்

 

இந்­தியா – ஆஸ்­தி­ரே­லியா அணி­க­ளுக்கு இடை­யி­லான ஒரு­நாள் தொடரை யார் கைப்­பற்­று­வது என்­பது தொடர்­பில் இரு நாடு­க­ளின் முன்­னாள் வீரர்­க­ளுக்­கும் இடை­யில் வார்த்தை மோதல்­கள் ஆரம்­பித்­துள்­ளன.

ஆஸ்­தி­ரே­லிய அணி இந்­தி­யா­வுக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளது. ஐந்து ஆட்­டங்­கள் கொண்ட ஒரு­நாள் தொட­ரும், மூன்று ஆட்­டங்­கள் கொண்ட ரி-–20 தொட­ரும் நடை­பெ­ற­வுள்­ளன. முத­ லா­வது ஒரு­நாள் ஆட்­டம் எதிர்­வ­ரும் 17ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­தத் தொடர் தொடர்­பாக இந்­திய அணி­யின் முன்­னாள் வீரர் லக் ஷ் மன் கருத்­துத் தெரி­விக்­கை­யில், ‘‘இந்­தத் தொடரை இந்­திய அணி 4:1 என்ற அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றும். ஆஸ்­தி­ரே­லியா – இந்­திய அணி­கள் முதல்­த­ரப் பகை­யா­ளி­கள் என்­ப­தில் சந்­தே­க­மில்லை.

எனி­னும் ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் பந்­து­வீச்சு வரிசை சிறிது பல­வீ­ன­மா­ன­தாக இருக்­கி­றது. இத­னால் இந்­திய அணி­யின் துடுப்­பாட்ட வரி­சை­யின் ஆதிக்­கம் மிகைந்­தி­ருக்­கும். சிமித்தை விட கோக்லி சிறந்த தலை­வர், வீரர்’’ என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

லக் ஷ்மணின் இந்­தக் கருத்­துக்கு ஆஸ்­திரே­லிய அணி­யின் முன் னாள் தலை­வர் கிளார்க் தற்­போது பதி­லடி கொடுத்­துள்­ளார். ‘‘இந்­திய அணியை விட ஆஸ்­தி­ரே­லிய அணி எந்த விதத்­தி­லும் பலம் குன்­றி­ய­தாக இல்லை. 3:2 என்ற அடிப்­ப­டை­யில் ஆஸ்­தி­ரே­லிய அணி கிண்­ணத்­தைக் கைப்­பற்­றும். கோக்­லியை விட சிமித் ஒன்­றும் குறைந்த வீரர் இல்லை. அவ­ரும் சிறந்த வீரர், தலை­வர்’’ என கிளார்க் கருத்­துத் தெரி­வித்­துள்­ளார்.

http://newuthayan.com/story/28438.html

Link to comment
Share on other sites

ஆரோன் பின்ச் காயமடைந்துள்ளதால் ஆஸ்திரேலிய அணியில் ஹேண்ட்ஸ்கம்ப் சேர்ப்பு

 

 
kipng

கோப்புப் படம்: பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி வீரரான ஆரோன் பின்ச் காயமடைந்துள்ளதால் மாற்று வீரராக பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அதிரடி வீரரான ஆரோன் பின்ச் -க்கு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரின் ஆரம்ப கட்ட ஆட்டங்களில் ஆரோன் SmallCode.png பின்ச் - க்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவரது இடத்தை நிரப்பும் வகையில் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் தாயகம் திரும்பிய ஹேண்ட்ஸ்கம்ப் உடடினயாக ஆஸ்திரேலிய அணியினருடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article19696856.ece?homepage=true

Link to comment
Share on other sites

இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்: சேப்பாக்கத்தில் நாளை கிரிக்கெட் கோலாகலம்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

 
இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்: சேப்பாக்கத்தில் நாளை கிரிக்கெட் கோலாகலம்
 

சென்னை:

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுதவற்காக இந்தியா வந்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இறுதிகட்ட பயிற்சியில் இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்திய அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் அனைத்து ஆட்டத்திலும் வென்று முழுமையாக தொடரை கைப்பற்றி இருந்தது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்றது.

இதேபோல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி மிகவும் பலம் பொருந்தியவை என்பதால் இந்திய வீரர்கள் மிகவும் கடுமையாக போராட வேண்டும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கும் இந்திய அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.

தவான் விளையாட வில்லை என்பதால் அவருக்கு பதிலாக ரோகித்சர்மாவுடன் தொடக்க வீரராக யார் ஆடுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ரகானே, ராகுல் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் ரகானேக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான கடைசி 2 போட்டியில் வாய்ப்பை பெற்ற மனிஷ் பாண்டே தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனால் அவர் மிடில் ஆர்டரில் இடம் பெறுவார்.

பேட்டிங்கில் கேப்டன் வீராட்கோலி, முன்னாள் கேப்டன் டோனி, ரோகித் சர்மா மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இலங்கை தொடரில் கோலியும், ரோகித் சர்மாவும் இரண்டு சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தனர்.

இதேபோல டோனியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு ஆஸ்திரேலியா தொடரிலும் இருக்கிறது.

அஸ்வின், ஜடேஜா இல்லாமல் 2-வது முறையாக இந்திய அணி புதுமுக சுழற்பந்து வீரர்களுடன் ஆடுகிறது. அக்‌ஷர் பட்டேல், யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ் இலங்கை தொடரில் நேர்த்தியாக பந்துவீசினார். இதில் இருவர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவர்.

வேகப்பந்து வீரர்களான உமேஷ்யாதவ், முகமது ‌ஷமி ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். ஏற்கனவே பும்ராவும், புவனேஸ்வர்குமாரும் நல்ல நிலையில் உள்ளனர். இலங்கை தொடரில் பும்ரா 15 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவருடன் மூவரில் ஒருவர் இணைந்து இடம் பெறுவர்.

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் சுமித், வார்னர், மேக்ஸ்வெல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் கும்மின்ஸ், நாதன் கோல்டர், பலக்னெர் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

காயத்தால் தொடக்க வீரர் ஆரோன்பிஞ்ச் ஆட முடியாமல் போனது. அந்த அணிக்கு பாதகமே. இதனால் அவருக்கு பதிலாக ஹார்னருடன் தொடக்க வீரராக டிரெவிஸ்ஹெட் அல்லது ஹேன்ட்ஸ் ஹோம் இடம் பெறலாம்.

நாளைய ஆட்டம் பகல்-இரவில் நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன், தூர்தர்‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ராகுல், கேதர்ஜாதவ், ரகானே, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ்பாண்டே, அக்‌ஷர்பட்டேல், யசுவேந்திர சஹால், பும்ரா, முகமது ‌ஷமி, உமேஷ்யாதவ், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார்.

ஆஸ்திரேலியா: ஸ்டீவன் சுமித் (கேப்டன்), வார்னர், ஆரோன்பிஞ்ச், மேக்ஸ்வெல், டிரெவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்சும் மேத்யூ வாடே, கும்மின்ஸ், நாதன் கோல்ட்டர் நைல், பல்க்னெர், ஸ்டோனிஸ், கானே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஆஸ்டன் அகர், ஹில்டன் கார்ட் ரைட்.

 

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/16125408/1108278/India-Australia-play-Tomorrow-s-cricket-match-in-Chepauk.vpf

Link to comment
Share on other sites

செஞ்சுரி சீக்ரெட் சொல்லும் கோலி... குல்தீப் மீது குறி வைக்கும் ஸ்மித்! #IndiaVsAustralia

 
 

‛நான் சதம் அடிப்பதைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அதனால்தான் என்னவோ என்னால் இவ்வளவு சதம் அடிக்க முடிகிறது. விளையாடும் வரை அணியின் வெற்றிக்காக உழைப்பதே என் விருப்பம்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

கோலி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய அணி நேற்றிலிருந்து பயிற்சியைத் தொடங்கியது. இன்று மதியம் இரண்டு மணியளவில் இந்திய வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கேப்டன் கோலி, "யாரை எதிர்த்து விளையாடுகிறோம் என்பதை விட, நாம் எப்படி போட்டிக்குத் தயாராகிறோம் என்பதுதான் முக்கியம். ஒவ்வொரு அணியின் பலம், பலவீனத்தை ஆராய்வது அவசியம்தான். ஆனால், அதற்காக அணியின் பலத்தைப் பொறுத்து நம் செயல்பாட்டின் தன்மையை மாற்றிக்கொள்வது சரியல்ல. அது எங்களின் நோக்கமும் அல்ல" என்று தீர்க்கமாகப் பதிலளித்தார்.

அணியில் கே.எல்.ராகுல் இடம் பற்றிக் கேட்டதற்கு ‛வீரர்கள் அனைத்து இடங்களிலும் விளையாடத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று கோலி அறிவுறித்தினார். "ஒரு வீரர் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் குறிப்பிட்ட ஒரு பொசிஷனில் ஆடிப் பழகிவிட்டால், வேறொரு இடத்தில் அவரைக் களமிறக்க நினைக்கும்போது அது அவருக்கும், அணிக்கும் மிகவும் கடினமாக இருக்கும். எனவே அணியின் தேவைக்கு ஏற்ற இடத்தில் விளையாடுமளவிற்கு வீரர்கள் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் அது எளிதல்ல. ரஹானே கூட அப்படித்தான். டெஸ்டில் மிடில் ஆர்டரில் ஆடுகிறார். டி-20ல் ஓப்பனிங் ஆடினார். ஒருநாள் போட்டிகளில் இப்போது மீண்டும் ஓப்பனிங் இறங்கப் போகிறார். ராகுல் அனைத்துப் போட்டிகளிலும் தன்னை நிரூபித்த மிகச்சிறந்த வீரர். அவருக்கும் அவகாசம் கொடுத்து ஆதரவளிப்பது அவசியம்" என்றார்.

கோலி அண்ட் கோ


டெஸ்ட் போட்டிகளில் எப்போதும் 5 பவுலர்களுடன் களமிறங்க விரும்பும் கோலி, ஒருநாள் போட்டிகளில் 3 பவுலர், 2 ஆல்-ரவுண்டர் கூட்டணியோடு களமிறங்க வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்டார். பாண்டியா, அக்சர், ஜடேஜா போன்ற ஆல்ரவுண்டர்களால் அணிக்குத் தேவையான 'பேலன்ஸ்' கிடைப்பாதாகவும், குறைந்தபட்சம் 2 ஆல்ரவுண்டர்களாவது கொண்டிருப்பது அணியின் பேட்டிங், பவுலிங்கை பலப்படுத்தும் என்பது கோலியின் கருத்து.  அனைத்து அணிகளும் அதையே விரும்புவதாகக் கூறிய இந்தியக் கேப்டன், ‛ஆல்ரவுண்டர் என்பவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மட்டும் ஜொலிப்பவராக இல்லாமல், நல்ல ஃபீல்டராகவும் இருக்க வேண்டும்’ என்றார்.  

சர்வதேச அரங்கில் இதுவரை 47 சதங்கள் அடித்து அசத்தியிருக்கும் கோலியின் சத வேட்டைக்குக்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. "நான் எப்போதுமே மூன்று இலக்க ஸ்கோர் எடுக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. அதனால்தான் அதை அடித்துவிடுகிறேனோ என்னவோ!  சொந்த சாதனைகளைப் பற்றியும் நான் சிந்திப்பதில்லை. அது அழுத்தம் ஏற்படுத்தும். அப்படியான அழுத்தங்கள் இல்லாமல் தான் விளையாடுவேன். அணியின் வெற்றி மட்டுமே என் இலக்கு. 98 ரன்களிலோ, 99 ரன்களிலோ இருக்கும்போது ஆட்டம் முடிந்தால் கவலைப்பட மாட்டேன். அணி வெற்றி பெற்றால் மட்டுமே எனக்கு மகிழ்ச்சி. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன். அதன் பலனாக இப்படியான சாதனைகள் ஏற்படுகிறது. இன்னும் 10 வருடங்களோ, 12 வருடங்களோ... எத்தனை வருடம் ஆனாலும் தனிப்பட்ட சாதனைகளைப் பற்றி நினைத்துப் பார்க்க மாட்டேன். அணியின் வெற்றிக்கு 120 சதவிகித உழைப்பைத் தருவதைப் பற்றி மட்டுமே சிந்திப்பேன்’’ என்று தன் 'ஃப்ரீ மைண்ட்செட்' பற்றிக் குறிப்பிட்டார் கோலி.

கோலி


இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்களில் இருக்கும் வார்த்தை மோதல்கள் இந்த முறையும் ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று கேட்டதற்கு, "என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் சிறப்பாக செயல்படவிட்டால் எதற்குமே அர்த்தம் இல்லை. காரசாரமாக  பேசிக்கொள்வது ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும். வீரர்களுக்கு ஒரு வகையில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையை அது தூண்டும். ஆனால் மனதளவிலோ, உடலளவிலோ அது தாக்கம் ஏற்படுத்தாது என்றே கருதுகிறேன். பல முக்கியமான, கடினமான தொடர்களை விளையாடியுள்ளோம். எங்கு எப்போது அமைதி காக்க வேண்டுமென்பதை அறிவோம். சீண்டல்களால் ஆட்டத்தின் போக்கு மாறாது என்றே நினைக்கிறேன்" என மெச்சூரிட்டியாக பதிலளித்தார். 

ஐ.சி.சி-யின் 2 புதிய பந்துகள் விதிகளால் வேகப்பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ்-ஸ்விங் செய்ய கஷ்டப்படுகிறார்கள். டி-20 கிரிக்கெட்டின் தாக்கத்தால் பேட்ஸ்மேன்களின் கை சற்றே ஓங்கியே இருக்கிறது. அது அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் வெளிப்படுகிறது என்று கருத்து தெரிவித்த கோலி,  2 'wrist spinner'களைக் கொண்டிருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம் என்றார். மிடில் ஓவர்களில் அவர்கள் விக்கெட்டுகள் எடுக்க உதவுவார்கள் என்றும், அவர்களால் ஒரு கேப்டனாக தனக்கு சாதகமே என்றும் கோலி தெரிவித்தார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய வீரர்கள் சுமார் 2 மணி நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் முடிவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆஸி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இத்தொடரை தங்கள் வீரர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளப்போவதாகக் குறிப்பிட்டார். முன்னதாக நடந்த டெஸ்ட் தொடரில் தங்கள் அணியை நிலைகுலையவைத்த குல்தீப் யாதவை கவனமாகக் கையாள வேண்டுமென்றும் என்றார்.

ஸ்மித்

"மிகவும் திறமையான இளம் வீரர். அவரை கணிப்பது சற்று கடினமானது. அவரை எங்கள் வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் எதிர்கொண்டுள்ளனர். அந்த அனுபவம் சற்று உதவியாக இருக்கும்" என்று குல்தீப்பின் திறமையை வெகுவாகப் பாராட்டினார். ஒருநாள் போட்டிகளில் கோலி தன்னை விட ஒரு படி மேலே இருப்பதையும், தொடர்ந்து சதங்கள் விளாசுவதைப் பற்றியும் அவ்வளவாக சிந்திக்கவில்லை என்றார். "கடந்த 2013 தொடரில் அனைத்து போட்டிகளிலுமே ரன்மழை பொழிந்தது.  350 ரன்கள் மிக எளிதாக எடுக்கப்பட்டது. எனவே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது முக்கியம்" என்று பேட்ஸ்மேன்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

 

ஆஸ்திரேலிய அணியின் ஓபனர் ஆரோன் ஃபின்ச், இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் இருவரும் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. இதுகுறித்த கேள்விக்கு ‛ராகுல், ரஹானே போன்ற அனுபவ வீரர்கள் இருப்பது இந்திய அணிக்கு மிகவும் சாதகம்’ என்ற ஸ்மித், இந்தத் தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்ற கேள்விக்கு, ‛மைதானகளின் தன்மை, அதற்கேற்ப தயார்படுத்திக்கொள்ளுதலுமே வெற்றியைத் தீர்மானிக்கும்’ என்றார்.  தங்கள் அணியில் ஆல்-ரவுண்டர்கள் அதிகமாக இருப்பது சாதகம் என்று தெரிவித்த ஸ்மித் ‛2019 உலகக்கோப்பைக்கு முன் சுமார் 30 ஒருநாள் போட்டிகள் இருப்பதால், அணி தேர்வைப் பற்றி இப்போதே கவலைப்படத்தேவையில்லை’ என்றார் ஸ்மித். 

http://www.vikatan.com/news/sports/102453-virat-kohli-shares-about-his-century-secret.html

Link to comment
Share on other sites

அக்சார் பட்டேலுக்கு காயம்: இந்திய அணியில் ஜடேஜா சேர்ப்பு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அக்சார் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 
அக்சார் பட்டேலுக்கு காயம்: இந்திய அணியில் ஜடேஜா சேர்ப்பு
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

இதற்கான இந்திய அணியில் அக்சார் பட்டேல் இடம்பிடித்திருந்தார். சென்னை மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அக்சார் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

201709162048209841_1_jadeja002-s._L_styv

இதனால் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். நாளைய போட்டியில் ஜடேஜா ஆடும் லெவனில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/16204820/1108348/Ravindra-Jadeja-to-replace-injured-Axar-Patel-for.vpf

Link to comment
Share on other sites

சேப்பாக் சேலஞ்ச்... விராட் படையை சமாளிக்குமா ஆஸி அணி! #IndVsAus

 

இதோ... நம் தலைநகரில் இன்று மதியம் தொடங்குகிறது இந்தியா - ஆஸ்திரேலியா (IndVsAus) யுத்தம். இலங்கையை வேட்டையாடிவிட்டு கெத்தாக தமிழ் மண்ணில் கால் பதித்திருக்கிறது கோலி அண்ட் கோ. சாம்பியன்ஸ் டிராபியில் முதல் சுற்றோடு வெளியேறிய ஆஸ்திரேலிய அணி அதன்பின் விளையாடும் முதல் ஒருநாள் தொடர் இதுதான். டெஸ்ட் தொடரில் ரசிகர்களுக்கு உச்சபட்ச ட்ரீட் அளித்த இந்த இரு அணிகளின் மோதல், முன்பை விடப் பல மடங்கு எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இந்தியா தன் ஆதிக்கத்தை தொடருமா? ஒருநாள் போட்டிகளில் மீண்டும் ஆஸி வெற்றிப்பாதைக்குத் திரும்புமா? அலசுவோம்...

IndVsAus

 

தொலைநோக்குப் பார்வை

இந்த  ஜூலை மாதம் முடிவடைந்த இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர், இந்திய அணியின் 'ஓல்ட்-அப்ரோச்'சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. முன்னாள் மேலாளர் ரவி சாஸ்திரி பயிற்சியாளராகி கோலியுடன் கைகோத்ததும் தொடங்கிவிட்டது 'ஆப்ரஷேன் 2019'. அதிரடி முடிவுகள், எதிர்காலத் திட்டங்கள் சத்தமின்றி கதவுகளின் பின்னே எடுக்கப்பட்டன. ஃபார்மை விட ஃபிட்னசிற்கு முன்னுரிமை தரபட்டது - யுவி, ரெய்னா அவுட். அடுத்து அனுபவத்தை விட ஃபார்முக்கு முன்னுரிமை தரப்பட்டது - ஓய்வு என்ற பெயரில் அஷ்வின், ஜடேஜா அவுட் (ஒருநாள் போட்டிகளில் ஃபார்ம் சிறப்பாக இல்லை). ஒவ்வொரு வீரருக்கும் அணியில் என்ன பங்கு என்ற திட்டம் தீட்டப்படுகிறது - சிறந்த பிளேயிங் லெவனில் இடம் இல்லாத ரஹானேவின் துணைக்கேப்டன் பதவி ரோஹித் வசம் செல்கிறது. ஆனால் இவையெல்லாம் ஏதோ அவசர முடிவுகள் இல்லை. இதுவரை இல்லாத வகையில் பக்காவாக பிளான் செய்து அதை எக்சிக்யூட் செய்துகொண்டிருக்கிறது இந்திய அணி. 

இதனால் இந்திய அணிக்கு 100 சதவிகிதம் நன்மையே. ஆஸ்திரேலிய தொடரில் உடனடிப் பலன்கள் கிடைக்கிறதோ இல்லையோ, இதே பாதையில், இதே பிளானிங்கோடு பயணிக்குமாயின் 2019ல் மிகப்பலமான ஒருநாள் போட்டி அணியாக இந்திய இங்கிலாந்து மண்ணில் களமிறங்கும். அதற்காக ஆஸி தொடரில் நாம் பின் தங்குவோம் என்று அர்த்தமில்லை. எந்த வகையில் பார்த்தாலும் ஆஸி அணியை விட இந்திய அணியின் கையே ஓங்கி இருக்கிறது. இலங்கைத் தொடரில் அவ்வப்போது பேட்டிங்கில் சற்று சறுக்கினாலும், மொத்த அணியின் செயல்பாடும் திருப்திகரமாகவே இருந்தது. அனைத்து வீரர்களும் தங்களின் வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர். மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற வீரர்கள் அணியில் தங்களின் ரோலை மிகச்சிறப்பாக உணர்ந்துகொண்டுள்ளனர். 

IndVsAus


ஆல் யூனிட்ஸ் ரெடி!
இந்திய அணியைப் பொறுத்தவரை முன்புபோல் பேட்டிங்கை நம்பி மட்டும் களமிறங்காது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தொடர்களில் ஒரு செஷனில் கோட்டை விட்டாலும், மீண்டு வந்து பிரேக்-த்ரூ கொடுத்தனர் நமது வீரர்கள். நமது பவுலிங் யூனிட் நீண்ட நாட்களுக்குப் பிறகு 'கன்சிஸ்டென்டாக' செயல்பட்டு வருகிறது.  ஷமி, பூம்ரா ஆகியோரோடு 'சிக்கன' புவியும் இப்போது விக்கெட் டேகிங் பவுலராக உருவெடுத்துள்ளார். சாஹல், குல்தீப் என வெரைட்டியான ஸ்பின் அட்டாக் ஆஸி வீரர்களுக்குக் கடும் சவாலாக இருக்கும். "ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை விட இந்திய அணியின் பவுலிங்கே பலமாக இருக்கிறது" என்று ஆஸி முன்னாள் வீரர் கில்லெஸ்பி சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பவுலிங் யூனிட் நாலடி பாய்ந்தால், பெயர்போன நமது பேட்ஸ்மேன்கள் நாற்பதடி பாய்வார்களே..! பாரபட்சமின்றி அட்ராசிட்டி செய்து வருகின்றனர் நமது பேட்ஸ்மேன்கள். "என்னப்பா டீம்ல 7 பேட்ஸ்மேன் தானா? இன்னும் ஒரு ரெண்டு மூணு பேர சேத்துக்கங்கப்பா" என்று சொல்லுமளவு நிரம்பி வழிகிறது. தவான் ஒரு ஆள் விலகினால் அந்த இடத்திற்கு இருமுனைப் போட்டி. அந்த இருவருமே டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்கள் என்பதுதான் இந்திய அணியின் பலம். சற்று அடிவாங்கிய மிடில் ஆர்டரை மனீஷ், ஜாதவ் பலப்படுத்தியிருக்கின்றனர். தொடர்ச்சியாக அதிக ஓவர்கள் அவர்கள் விளையாடும்பட்சத்தில் மிடில் ஆர்டர் மீது இன்னும் நம்பிக்கை ஏற்படும். சிக்சர் அடித்து ஃபினிஷ் செய்தால் தான் அது ஃபினிஷிங் என்று அர்த்தமல்ல, புவனேஷ்வர் குமாரை அரைசதம் எடுக்கவிட்டு ஆட்டத்தை முடித்துவைத்தாலும் அது ஃபினிஷிங் தான் என்று நிரூபித்துவிட்டார் தோனி. 2019 வரை பேக்-அப் கீப்பர்கள் ரஞ்சியிலும் ஐ.பி.எல்-லில் மட்டும் கவனம் செலுத்தலாம்.


சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து இந்தியாவின் டாப் -3 பேட்ஸ்மேன்களின் புள்ளிவிவரத்தைப் பார்த்தால் பிரமிப்பு! 5 போட்டிகளில் 1 சதம், 2 அரைசதம் உட்பட 279 ரன்கள் அடித்துள்ளார் ரஹானே. கேப்டன் கோலி 14 போட்டிகளில் 800 ரன்கள் விளாசியுள்ளார். 3 சதமும், 5 அரைசதங்களும் அதில் அடக்கம். ரோஹித் இருவருக்கும் ஒரு படி மேல். தனது கடைசிப் பத்து போட்டிகளில் 3 அரைசதம், 3 சதம் உட்பட 606 ரன்கள் அடித்து நொறுக்கியுள்ளார். மரண ஃபார்மில் இருந்த தவான் முதல் 3 போட்டிகளுக்கு இல்லை. இருந்திருந்தால் டரியல் தான்!
பேட்டிங், பவுலிங்கை விட கோலி ஃபீல்டுங்குக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார். அதிரடி காட்டியும் ஆர்.சி.பி-யின் சர்ஃபராசை வெளியில் உட்கார வைத்தபோதே கோலி ஃபீல்டிங் மீது செலுத்தும் அக்கறை வெளிப்பட்டது. நேற்று நடந்த பிரெஸ் மீட்டில் கூட, ஆல்ரவுண்டர் என்பவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மட்டும் ஜொலிப்பவராக இல்லாமல், நல்ல ஃபீல்டராகவும் இருக்க வேண்டுமென்று தெரிவித்தார். ஆக, இந்திய அணியின் அனைத்து யூனிட்டும் இந்த யுத்ததுக்கு தயார். மைனஸ் என்றால், தவானின் ஸ்டிரைக் ரேட்டை விடக் மிகக்குறைவாய் இருக்கும் ரஹானேவின் வேகம் மட்டுமே.

மீண்டு எழுமா ஆஸி?

IndVsAus

ஆஸி வீரர்கள் அனுபவசாலிகள். ஆனால் இந்தியாவில் ஒருநாள் போட்டியில் விளையாடிய அனுபவம் அவர்களுக்கு மிகக்குறைவு. ஐ.பி.எல் அனுபவம் சிலருக்குக் கைகொடுத்தாலும், ஆகர், கார்ட்ரைட், மேத்யூ வேட், ஹாண்ட்ஸ்கோம்ப் போன்றவர்களுக்கு அந்த அனுபவமும் சொற்பமே. இந்தியா வந்திறங்கிய ஆஸி அணியில், 2013 தொடரில் விளையாடிய வீரர்கள் 4 பேர் மட்டுமே. அதில் கூல்டர்நைல் ஒரு ஒருநாள் போட்டியில் கூட விளையாடவில்லை. ஃபின்ச், காயத்தால் இன்று ஆடப்போவதில்லை. கேப்டன் ஸ்மித், வார்னர் கூட அத்தொடரில் இல்லை. அன்று பேட்டிங்கில் பொளந்துகட்டிய பெய்லியோ இப்போது பாகிஸ்தானில் ஆடிய உலக லெவனில். இந்திய பருவநிலையும், மாநிலத்துக்கு மாநிலம் மாறும் தட்பவெப்ப நிலையும் அவர்களுக்குக் கைகொடுக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெறவில்லை. அவர்கள் கடைசியாக ஆடிய 6 போட்டிகளில், 1 போட்டி நடக்கவே இல்லை, 2 போட்டிகளுக்கு முடிவு இல்லை, 3-ல் தோல்விகள். சாம்பியன்ஸ் டிராபியில் 2 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட, வங்கதேசத்திடம் அரையிறுதி வாய்ப்பை இழந்து விசும்பிக்கொண்டிருக்கையில், அதே வங்கதேசத்திடம் முதல் டெஸ்ட்டில் தோல்வி. விரைவில் ஆஸஷ் தொடர் வேறு. போதாக்குறைக்கு ஸ்டார்க் காயத்தால் விலக, இந்திய மண்ணில் ஆடிய அனுபவத்திற்காக ஃபால்க்னரையும் ஃப்ளைட்டில் ஏற்றி வந்துவிட்டனர் ஆஸி அணியினர். 

டிராவிஸ் ஹெட், ஸ்டாய்னிஸ் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், ஃபின்ச்சின் இழப்பு, வேட், மேக்ஸ்வெல், ஹாண்ட்ஸ்கோம்ப் ஆகியோரின் ஃபார்ம் சற்றுப் பின்னடைவே. ஆஸி அணியைப் பொறுத்தவரையில் வார்னர், ஸ்மித், சாம்பா, கம்மின்ஸ் ஆகியோரையே நம்பியுள்ளது. ஐ.பி.எல் தொடரில் அசத்திய சாம்பா, இந்திய மிடில்-ஆர்டருக்கு மிகப்பெரிய சவாலாய் விளங்குவார். கம்மின்ஸ் காயத்திலிருந்து இப்போதுதான் மீண்டுள்ளதால் அனைத்துப் போட்டிகளிலும் ஆடுவதே சந்தேகமே.  


முக்கிய யுக்தங்கள்


ரோஹித் VS கம்மின்ஸ்
கம்மின்ஸின் வேகம் இந்திய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். மணிக்கு 150 கி.மீ  வேகத்தில் தொடர்ச்சியாகப் பந்துவீசுவதில் கில்லாடி. ஓபனிங் ஓவர்களில் பந்தை பறக்கவிடும் கம்மின்ஸை சமாளித்து ஆடுவது ரோஹித்துக்கு பெரிய சவால். நல்ல டச்சில் இருக்கும் ரோஹித், எந்த சூழ்நிலையிலும் அவசரம் காட்டாமல் வழக்கம் போல் பொறுமையாக இன்னிங்சை  'பில்ட்' செய்தால் கம்மின்ஸின் அச்சுறுத்தலை ஆஃப் செய்யலாம்.


கோலி VS சாம்பா
புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் அணிக்காக சூப்பராய் பெர்ஃபார்ம் செய்த சாம்பா தான் ஆஸி அணியின் துருப்புச்சீட்டு. ஷேன் வார்னைப் போலவே ஸ்டைல் உடைய சாம்பா, தனது லெக்-பிரேக்குகளால் பேட்ஸ்மேன்களைத் தினற வைப்பதில் கில்லாடி. இலங்கை தொடரில் தஞ்செயாவிடம் ஏற்பட்டதைப் போல் ஒரு சரிவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கோலியின் மிகப்பெரிய பொறுப்பு. தனஞ்செயாவைப் போல் ஆஃப் ஸ்பின்னராக இல்லாவிடிலும் அவ்வப்போது ஆஃப்-பிரேக் போட்டு அலற விடுவார். எனவே அவரைக் கேப்டன் கோலி தனது கூல் ஸ்டைலில் ஹேண்டில் செய்ய வேண்டும்.

IndVsAus


வார்னர் VS பூம்ரா
வங்கதேசத்துடனான டெஸ்டில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்ப 2 சதங்கள் அடித்து அசத்தினார் வார்னர். வார்னரை தொடக்கத்திலேயே காலி செய்யாவிட்டால் மனிதன் நம்மை காலி செய்துவிடுவார். புவி ஒருபுறம் ரன்களைக் கட்டுப்படுத்தினாலும், வார்னரின் விக்கெட் மிக முக்கியம். 30 ஓவர்கள் வரை அவர் களத்தில் நின்றுவிட்டால் ரன்-ரேட் எகிறிவிடும். . ஓபனிங் ஸ்பெல்களில் எப்போதும் பிரேக்-த்ரூ கொடுக்கும் பூம்ரா, வார்னரை டார்கெட் செய்து சாய்க்க வேண்டும்.


தொடர் முழுதாய் நடக்குமா?
இதுவரை ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் 7 ஒருநாள் தொடர்களில் பங்கேற்றுள்ளது. 2000-01ம் ஆண்டு நடந்த தொடரில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 5 போட்டிகளும் முழுதாய் நடந்துள்ளன. மற்ற 6 தொடர்களிலும், குறைந்தபட்சம் 1 ஆட்டமாவது தடைபட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


உத்தேச அணி:
இந்தியா : ரோஹித் ஷர்மா, ரஹானே, கோலி (கேப்டன்), மனீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தோனி, ஹர்டிக் பாண்டியா, குல்தீப், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ரா.


ஆஸ்திரேலியா : வார்னர், ஹெட், ஸ்மித் (கேப்டன்), ஹேண்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், வேட், ஸ்டோய்னிஸ், ஆடம் சாம்பா, கூல்டர்நைல், கம்மின்ஸ், ஹேசில்வுட்.

http://www.vikatan.com/news/sports/102495-india-vs-australia-first-one-day-match-preview.html

Link to comment
Share on other sites

’தோனி, தோனி’ - ரசிகர்களின் கரவொலியால் அதிர்ந்த சேப்பாக்கம் மைதானம்! #IndvAus #LiveUpdate

 

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.

*லேசான தூறல் விழுந்ததால் சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம் மூடப்பட்டது.

*புவனேஷ்வர் குமாரின் அசத்தல் ஆட்டமும் கைகொடுக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. புவனேஷ்வர் குமார் 30 பந்துகளில் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

*கடைசி ஓவரின் 4ஆவது பந்தில் தோனி ஆட்டமிழந்தார். அவர் 88 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து வெளியேறிய தோனியை, ரசிகர்கள் எழுந்துநின்று ’தோனி,தோனி’ கோஷத்துடன் வழியனுப்பினர். மேலும், சிஎஸ்கே, சிஎஸ்கே என்ற கோஷமும் மைதானத்தில் எதிரொலித்தது.

*ஃபால்கனர் வீசிய கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார் தோனி. மைதானத்தின் கேலரியில் சென்ற பந்தை, திருப்பி அளிக்க ரசிகர்கள் மறுத்தனர். சிறிதுநேரத்துக்குப் பின்னரே பந்தை மீண்டும் அவர்கள் அளித்தனர்.

*கடைசி ஓவருக்காக மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

*ரசிகர்களின் பலத்த கரவொலிக்கிடையே 75 பந்துகளில் தோனி அரை சதமடித்தார். மேலும், சிஎஸ்கே, சிஎஸ்கே என்ற கோஷமும் ரசிகர்களிடையே எழுந்தது.

*தோனி 49 ரன்களில் இருந்த போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்துநின்று ’தோனி, தோனி’ கோஷமிட்டனர்.

*67 பந்துகளைச் சந்தித்த பிறகே தோனி, தனது முதல் பவுண்டரியை அடித்தார்.

*ஆட்டத்தின் 35ஆவது ஓவர் வரை அமைதியாக இருந்த ரசிகர்கள், ஹர்திக் பாண்ட்யாவின் ஹாட்ரிக் சிக்ஸரைத் தொடர்ந்து குஷியாகினர். பாண்ட்யாவின் ஷாட்களை கரகோஷத்துடன் கொண்டாடிய ரசிகர்கள், அவர் அவுட் ஆகி வெளியேறும் போது ஸ்டேண்டிங் ஓவியேஷனுடன் வழியனுப்பி வைத்தனர்.  

* ஜாம்பா பந்துவீச்சில் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் விளாசிக் கொண்டிருந்த பாண்ட்யா, அவரது பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார். அவர் 66 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

* தோனி - பாண்ட்யா ஜோடியின் பாட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்தது. ஜாம்பா பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய பாண்ட்யா, நடப்பு ஆண்டில் மட்டும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சிக்ஸர்களை 3 முறை அடித்துள்ளார்.

dhoni_pandya_17390.jpg

* கம்மின்ஸின் ஓவர் முடிந்தவுடன் மீண்டும் ஜாம்பாவைப் பந்துவீச வேண்டும் என்று கோரி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் We want Zamba, We want Zamba’ என்று கோஷமிட்டனர்.  

* ஜாம்பா வீசிய அந்த ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் கிடைத்தது.

*நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி-பாண்ட்யா ஜோடி 6ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ரன்குவிப்பு வேகத்தை டாப் கியருக்கு மாற்றிய பாண்ட்யா, சுழற்பந்துவீச்சாளர் ஜாம்பா பந்துவீச்சில் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, அரைசதம் அடித்தார்.  

Pandya_17457.jpg

* ஷார்ட் பிச் கண்டம் இந்திய வீரர்களை மீண்டும் துரத்தத் தொடங்கிவிட்டது. ரோகித் ஷர்மா, கேதர் ஜாதவ் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவும் ஷார்ட் பிச் பந்தை தூக்கியடித்தார். நல்லவேளையாக வீரர்கள் யாரும் இல்லாத இடத்தில் பந்து விழுந்தது. கோல்டர் நைல் வீசிய 30ஆவது ஒவரில் இது நடந்தது.   

* தோனி-பாண்ட்யா இணையைப் பிரிக்க 3 விக்கெட் வீழ்த்தியிருந்த கோல்டர் நைலை மீண்டும் பந்துவீச அழைத்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். 28ஆவது ஓவரில், தனது இரண்டாவது ஸ்பெல்லை கோல்டர் நைல் வீசத் தொடங்கினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே பலன் கிடைத்தது. பாண்ட்யா கொடுத்த சற்று கடினமான வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற ஸ்மித் வீணடித்தார்.

* 87 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் தோனி மற்றும் பாண்ட்யா ஈடுபட்டனர். மிதமான வேகத்தில் இந்த ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

* சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கேதர் ஜாதவ், மார்க் ஸ்டோனிக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 54 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கேதர் ஜாதவுக்குப் பின்னர் ஹர்திக் பாண்ட்யா தோனியுடன் களத்தில் இணைந்தார்.

* தோனி அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

2_15309.jpg

*வானத்தை நோக்கி பிரார்த்தனை செய்தவாறே மைதானத்தில் நுழைந்த தோனிக்கு ஒட்டுமொத்த ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்களும் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர்.

*16 ஆவது ஓவரில் ரோகித் ஷர்மா ஆட்டமிழக்க, 6ஆவது பேட்ஸ்மேனாக தோனி களமிறங்கினார். கடந்த 2015-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் போட்டிக்குப் பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கிய தோனிக்கு சென்னை ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

3_15500.jpg

 

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக இல்லை. 11 ரன்கள் சேர்ப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ரஹானே 5 ரன்களிலும், விராட் கோலி மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் ரன் கணக்கை துவங்காமலும் ஆட்டமிழந்தனர். இந்தநிலையில், 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் ஷர்மா – கேதர் ஜாதவ் இணை 53 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

http://www.vikatan.com/news/sports/102518-chennai-odi-live-updates-fans-welcome-dhoni-in-style.html

Link to comment
Share on other sites

மழை குறுக்கீட்டால் ஓவர்கள் குறைப்பு! ஆஸி. அணிக்கு 43 ஓவர்களில் 260 ரன்கள் இலக்கு!

Link to comment
Share on other sites

முதல் ஒருநாள் கிரிக்கெட்: 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி

சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

 
முதல் ஒருநாள் கிரிக்கெட்: 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி
 
சென்னை:

இந்திய அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் அனைத்து ஆட்டத்திலும் வென்று முழுமையாக தொடரை கைப்பற்றி இருந்தது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்றது.

இதைதொடர்ந்து, ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது.

201709172248374754_1_india._L_styvpf.jpg

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா 83 ரன்களும், முன்னாள் கேப்டன் டோனி 79 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் கோல்டர் 3 விக்கெட்டும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும், சம்பா, பக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு 282 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. இருப்பினும் மழையின் காரணமாக ஆட்டம் தடைபட்டது. மழை நின்றபின்னர் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. இதனால் ஆட்டம் 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், ஹில்டன் கார்ட்ரைட்டும் களமிறங்கினர். தனது முதல் போட்டியில் களமிறங்கிய ஹில்டன் 1 ரன்களில் பும்ரா வேகத்தில் போல்டாகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் 1 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அடுத்து டேவிட் வார்னருடன், கிலென் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். டேவிட் வார்னர், 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கியவர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் நிலைத்துநின்று ஆடிய ஜேம்ஸ் பாக்னர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 21 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி பந்துவீச்சில் சஹால் 3 விக்கெட்களும், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்களும் விழ்த்தினர். இதன்மூலம், 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 83 ரன்கள் அடித்து, 2 விக்கெட் வீழ்த்திய இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையேயான இரண்டாம் ஒருநாள் போட்டி வருகிற 21ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/17224837/1108473/india-won-first-odi-against-australia-by-26-runs.vpf

Link to comment
Share on other sites

’எங்களுக்கு கேப்டன் ’தல தோனி’ தான்....’ சென்னை ரசிகர்களின் வெற்றி கொண்டாட்ட புகைப்படங்கள் #IndvAus

 
 

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இன்று சென்னையில் தொடங்கிய தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையாத போதும் தோனி, ஹர்திக் பாண்டியா, மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோரின் பங்களிப்புடன் 281 ரன்கள் எடுத்தது. 

msd_03463.jpg

மழையால் தாமதமாக, போட்டி 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது. வெற்றியின் இலக்கும் 164 ஆனது. இந்திய பந்துவீச்சாளர்களின் நேர்த்தியான செயல்பாடு காரணமாக ஆஸ்திரேலிய அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ASC_3481_03589.jpg

இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய சென்னை கிரிக்கெட் ரசிகர்களின் ‘தல’ தோனி,  தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 100 -வது அரைசதத்தை எட்டினார். சென்னையில் இந்திய அணி நீண்ட இடைவேளைக்குப் பிறகு சர்வதேச ஒருநாள்  போட்டியில் விளையாடியது. இதனால் தோனியை மைதானத்தில் கண்டதும் ரசிகர்கள் எழுந்து நின்று வரவேற்றனர். இத்தகைய வரவேற்பு தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் கிடைக்குமா எனக் கூட தெரியாது.

ASC_3492_03452.jpg

மைதானத்துக்கு வெளியே வந்த ரசிகர்களும் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடிய படியே வந்தனர். போட்டி முடிந்து வெளியே வந்தவர்கள் தோனி... தோனி.... என கோஷமிட்டு வந்தனர். எங்களுக்கு எப்போதும் தல தோனி தான் கேப்டன் என ரசிகர்கள் உணர்ச்சிகரமாக தெரிவித்தனர்.  

ASC_3495_03045.jpg

ASC_3515_03371.jpg

ASC_3528_03234.jpg

 

http://www.vikatan.com/news/sports/102546-for-us-ms-dhoni-is-captain-forever.html

Link to comment
Share on other sites

சொதப்பல் ஸ்மித், ‛குன்ஃபு’ பாண்டியா, மெர்சல் தோனி, சபாஷ் சாஹல்... இந்தியா வென்றது எப்படி? #MatchAnalysis #IndVsAus

 
 

“வெஸ்ட் இண்டீஸ், இலங்கை கூட ஜெயிக்கிறதெல்லாம் பெரிய விஷயமில்ல. ஆஸ்திரேலியா கூட ஜெயிக்கணும். அதான் வெற்றி” என்று குமுறிய ஆன்லைன் கிரிக்கெட் ஜீனியஸ்களுக்கு சேப்பாக்கத்தில் நேற்று பதில் சொல்லி விட்டது கோலி அண்ட் கோ. தோனி, பாண்டியாவின் அசத்தல் ஆட்டமும், ஸ்பின் மேஜிக்கும் கைகொடுக்க, மழையின் இடையூறை மீறி தொடருக்கு வெற்றித் தொடக்கம் தந்துள்ளனர் இந்திய வீரர்கள். போட்டியின் தொடக்கத்திலேயே கவிழ்ந்த இந்தியாவின் இன்னிங்ஸ் தலைநிமிர்ந்தது எப்படி?  கையிலிருந்த மேட்ச்சை ஆஸி கோட்டை விட்டது எப்படி? ஒரு பார்வை...

தோனி

 பார்ட்னர்ஷிப் பக்கா

இந்திய பேட்ஸ்மேன்கள் முக்கியமான நேரத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்ததும், ஆஸி வீரர்கள் அதைச் செய்யத் தவறியதுமே இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம். 6 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகள் இழந்த நிலையில் கேதர் ஜாதவ், ரோஹித் இருவரும் கவனமாக ஆஸி பவுலர்களை எதிர்கொண்டனர். 10.3 ஓவர்களே அந்த பார்ட்னர்ஷிப் நீடித்தாலும், அதுவே அடுத்த வந்த வீரர்களுக்கான ஊட்டச்சத்தாக அமைந்தது. விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்ததோடு சீராக ரன்களும் எடுத்தனர். 63 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டனர். ரன் எடுக்காமல் தடுப்பாட்டம் மட்டும் ஆடிக்கொண்டு இருந்திருந்தால் ஆஸி பவுலர்களுக்கு அது இன்னும் அதிக நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம்!

அடுத்து, தோனி - பாண்டியா பார்ட்னர்ஷிப். அதைப்பற்றி தனியாகப் பார்ப்போம். புவனேஷ்வர் குமார், கூடிய விரைவில் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இடம் பிடிக்கப் போகிறார். அடித்த 5 பவுண்டரிகளில் 3 தாறுமாறு. இலங்கையுடன் அரைசதம் அடித்து அணியைக் கரை சேர்த்தவர், நேற்றும் தோனியுடன் இணைந்து நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். இருவரும் இணைந்து 54 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்ததே அணி நல்ல ஸ்கோரை எட்ட வழிசெய்தது. தான், சந்தித்த முதல் 5 பந்துகளில் சற்று தடுமாறினாலும், அதன்பின்னர் நேர்த்தியாக ஆடினார். தோனி அடிக்கத்தொடங்கியதும், சிங்கிள் எடுத்துக்கொடுப்பதில் முனைப்புக் காட்டியது, அதற்கு முன்பு நல்ல பந்துகளை பவுண்டரிக்கு விளாசுவது என 'டெயிலி'ன் நம்பிக்கையான பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார் புவி. அவருக்கும் தோனிக்குமான கெமிஸ்ட்ரி சூப்பர்!

ஆஸி கோட்டை விட்ட ஏரியா இதுதான். 21 ஓவர் போட்டியில் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாதுதான். ஆனால் 3 ஓவர்கள் கூடவா தாக்குப்பிடிக்க முடியாது? ஸ்டாய்னிஸ் - மேக்ஸ்வெல் கூட்டணி மட்டுமே 24 (44 ரன்கள்) பந்துகள் தாக்குபிடித்தது. மற்ற எந்த இணையும் 3 ஓவர்கள் தாண்டவில்லை. 9-வது விக்கெட்டுக்கு இணைந்த ஃபால்க்னர் - கோல்டர்நைல் அடித்த 18 ரன்கள்தான் அவர்களின் இரண்டாவது சிறந்த பார்ட்னர்ஷிப். மற்ற எந்த பார்ட்னர்ஷிப்பும் ஒரு புரிதலோடு ஆடவில்லை. அதுவே அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிட்டது.

ஹர்-மஹி!

தோனி

பாண்டியா, தோனி இருவரிடமும் எந்தச் சலனமும் இல்லை. யார் பந்து வீசுகிறார்கள் என்று கவலைப்படவும் இல்லை. ‛பார்ட்னர்ஷிப் பில்ட் பன்னணும்’ என்பது மட்டுமே அவர்கள் பிளான். பொறுமையாகத் தொடங்கிய அவர்களது பார்ட்னர்ஷிப் மெதுவாக ரன்சேர்க்கத் தொடங்கியது. பந்துவீச்சாளர்களை இருவரும் தேர்ந்தெடுத்து ஆடினர். முதல் ஸ்பெல்லில் அச்சுறுத்திய கோல்டர் நைல் மற்றும் ஃபால்க்னரின் ஓவர்களை எச்சரிக்கையாகக் கையாண்டனர். கோல்டர்நைலின் 2 ஓவர்களில் பாண்டியா 2 முறை கண்டம் தப்பினார். அதன் விளைவாக எப்படியோ 11 ரன்கள் கிடைத்தது. ஃபால்க்னர் இவர்களுக்கு வீசிய 4 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதேசமயம் ஜாம்பா, ஸ்டாய்னிஸ் ஆகியோரின் பந்துகளில் சீராக ரன் சேர்த்தனர். அவர்களின் பந்துவீச்சில் 9.3 ஓவர்களில் இந்த இணை 65 ரன்கள் சேர்த்தது.

இவர்கள் எந்த இடத்திலும் அவசரப்படவில்லை. ஜாம்பா 24 ரன்கள் விட்டுக்கொடுத்த அந்த ஓவருக்கு முன்புவரை சிங்கிள்ஸ் மற்றும் 2 ரன்கள் எடுப்பதில்தான் அக்கறை செலுத்தினர். கேதர் ஜாதவ் தோனிக்கு நிகராக ரன் ஓடவில்லை. பாண்டியா களமியங்கியதும் ஓடி ரன் சேர்ப்பதில் இருவரும் குறியாக இருந்தனர். 2 ரன்கள் எடுக்க முடியாத இடத்தில் சிங்கிள்ஸ் சேர்த்தனர். சிங்கிள் வரவேண்டிய இடத்தில் இரண்டாம் ரன்னுக்கு ஓடினர். இருவரும் ஓடி எடுத்தது 62 ரன்கள். இதுவே  இந்தியா மீண்டு வரக் காரணம். பாண்டியா ஒருபுறம் அடித்து ஆடத்தொடங்கியதும், தோனி ஸ்ட்ரைக் ரொடேட் செய்தார். பவுண்டரி, சிக்சர்கள் அடிப்பதில் கவனம் செலுத்தவில்லை. அடிக்கவும் இல்லை. ஜாம்பாவின் அந்த ஓவருக்குப் பிறகு வேகமாக ரன்சேர்க்கத் தொடங்கினர். ஆனால் துரதிர்ஷ்டமாக பாண்டியா வெளியேறிவிட்டார். 116 பந்துகளின் 118 ரன்கள் குவித்த இந்தக் கூட்டணியைப் பிரிக்க ஸ்மித் எடுத்த முயற்சிகள் பெரிதாகப் பலன் தரவில்லை. அவர்கள் நன்றாக 'செட்' ஆன பின்பு 13 ஓவர்கள் வரை கம்மின்ஸுக்கு அவர் ஓவர் தரவில்லை. அதே கட்டத்தில் பகுதி நேர பவுலர்களைப் பயன்படுத்தவும் ஸ்மித் தயங்கினார். முன்னர் ரோஹித் கேட்சை தவறவிட்டவர். பாண்டியாவை 13 ரன்னிலேயே அவுட் ஆக்கியிருக்கலாம். ஸ்லிப்பில் உஷாராக இல்லாமல் அந்த வாய்ப்பையும் வீணடித்தார். இப்படி ஸ்மித்தின் அஜாக்கரதையும், தவறான முடிவுகளும் ஆஸி அணிக்கு சற்றுப் பின்னடைவாக அமைந்தது.

அசத்தல் பாண்டியா...அட்டாக் பாண்டியா...!

தோனி - ஹர்டிக்

“நான் சென்ற வருடம் இருந்த அதே பாண்டியாதான்” என்றார் ஆட்ட நாயகன் பாண்டியா. ஆனால் அப்படித் தெரியவில்லை. அவர் ஒவ்வொரு போட்டியிலும் வேறொரு ஆளாகத் தெரிகிறார். ஒவ்வொரு போட்டிக்கும் பல மடங்கு முன்னேற்றம். சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலில் என்ன ஆட்டம் காட்டினாரோ அதே ஆட்டம் - 'பாண்டிய'தாண்டவம். ஆனால் 'எக்ஸ்பீரியன்ஸ்' லெவல் பல மடங்கு கூடியிருக்கிறது. வெறுமனே வாணவேடிக்கை காட்டாமல் எந்தப் பந்தை தடுத்தாடுவது, எந்த பந்தில் சிங்கிள் எடுப்பது, எந்த பந்தை 'பறக்காஸ்' செய்வது என தேர்ந்தெடுத்து ஆடினார். தேர்ந்த பேட்ஸ்மேன் போல ஆடினார். தொடக்கத்தில் ஒருசில ஷாட்கள் எட்ஜானது. அதைத் திருத்திக்கொண்டு பின்னர் பட்டையைக் கிளப்பினார். அவர் 5 பவுண்டரியும், 5 சிக்ஸர்களும் அடித்தது அவரின் பலத்தைக் காட்டுகிறது. ஆனால் அந்த சூழ்நிலையில் அவர் எடுத்த 25 சிங்கிள்கள்தான் ஒரு பேட்ஸ்மேனாக பாண்டியா எவ்வளவு தேறியிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

பாண்டியாவிடம் பிரமித்த இன்னொரு விஷயம் - ஹாட்ரிக் சிக்சர்கள். இந்த ஆண்டு மட்டும் சர்வதேசப் போட்டிகளில் நான்காவது முறையாக (ஒருநாள் - 3, டெஸ்ட் -1) ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்துள்ளார். இதில் என்ன ஸ்பெஷல் எனில், அனைத்துமே லெக்-ஸ்பின்னர்களுக்கு எதிராக அடிக்கப்பட்டவை. வலது கை பேட்ஸ்மேன்கள் பொதுவாக  லெக் - ஸ்பின்னில் சற்று திணறுவார்கள். பாண்டியா அதில் விதிவிலக்கு. இனி பாண்டியா என்றாலே லெக் ஸ்பின்னர்களுக்குக் கிலி ஏற்படும்.

பவுலிங்கிலும் பாண்டியா பன்மடங்கு தேறிவிட்டார்.  4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரவு நேரம் பிட்ச் பவுன்சுக்கு சாதகமாக இல்லாத நிலையிலும், பவுன்சர்களை அழகாக எழச் செய்தார். ஷார்ட் பால்கள்தான் தன் ஸ்டைல் என்று 'ஃபிக்ஸ்' செய்துவிட்டார் போலும்! அநேக பந்துகள் ஷார்ட் லெந்த்தில்தான் வீசப்பட்டது. அவ்வப்போது சில மோசமான பந்துகளும் வரத்தான் செய்கின்றன. அதன்விளைவு இவர் வீசிய 3-வது ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகள் அடித்தார் மேக்ஸ்வெல். பந்துவீச்சில் முன்னேற்றம் கண்டால் இன்னும் பட்டையைக் கிளப்பலாம்.


“3 துறைகளிலுமே பாண்டியா மிகச்சிறப்பாக இருக்கிறார். அவரைப் போன்ற ஒரு ஆல்ரவுண்டர் இருப்பது எந்த அணிக்குமே மிகப்பெரிய பலம்” - கோலியின் இந்த வார்த்தையை எந்த அணிக் கேப்டனும் ஒப்புக்கொள்வார்கள்! அணியில் இருந்த ஒரே ஆல்ரவுண்டரை முழுமையாகப் பயன்படுத்தினார் கோலி. ஆனால் ஆஸி ஆல்ரவுண்டர்கள் கைவிரித்தனர். தொடக்கத்தில் நன்றாகப் பந்துவீசிய ஸ்டாய்னிஸ், ஃபால்க்னர் இருவரும் கடைசி கட்டத்தில் சொதப்பினர். ஸ்டாய்னிஸ் பேட்டிங்கிலும் காலை வாரினார். ஃபால்க்னரின் பேட்டிங் சற்று ஆறுதல். பயிற்சிப் போட்டியில் பட்டையைக் கிளப்பிய டிராவிஸ் ஹெட் வந்ததும் நடையைக் கட்டினார். மேக்ஸ்வெல் இந்திய அணிக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருந்தார். ஆனால் பந்துவீச்சின்போது அவர் பயன்படுத்தப்படவே இல்லை. ஹெட்டையும் ஸ்மித் சரியாகப் பயன்படுத்தவில்லை. தோனி - பாண்டியா இணையை உடைக்க யாரையேனும் பயன்படுத்தியிருக்கலாம். 

தோனி

சுழலில் சிக்கிய ஆஸி

பாண்டியாவின் வாணவேடிக்கையால் ஜாம்பா  நிற்கதியற்று நிற்க, மேக்ஸ்வெல், ஹெட் இருவரையும் ஸ்மித் நிராகரிக்க, இந்தியாவுக்கு ஆஸியின் ஸ்பின் அட்டாக் ஒரு பொருட்டாகவே அமையவில்லை. ஆனால் மழைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியதும் ஆட்டம் காட்டியது இந்திய சுழல் கூட்டணி. சாஹல், குல்தீப் என இரு 'ரிஸ்ட்' ஸ்பின்னர்களையும் சமாளிக்க ஆஸி தடுமாறியது. குல்தீப்பின் ஒரு மோசமான ஓவர் 22 ரன்கள் போனாலும், மற்ற 3 ஓவர்கள் அவர் சிறப்பாகவே பந்துவீசினார். அதில் 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். நிலைத்து நின்று ஆடிய வார்னர், குல்தீப்பின் சுழலில் சற்று தடுமாறவே செய்தார். குல்தீப் வீசிய ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் முதலிரண்டு பந்துகளில் தலா 2 ரன்கள் எடுத்தார். அதற்கடுத்த 3 பந்துகளையும் அவரால் சந்திக்கவே முடியவில்லை. சைனாமேன் ஆக்ஷனில் அவரை நிலைகுலையவைத்த குல்தீப், கடைசிப் பந்தில் பெவிலியனுக்கும் அனுப்பிவைத்தார்.

ஓவர் குறைக்கப்பட்டதும் டி-20 ஸ்பெஷலிஸ்ட் சாஹல் உற்சாகமாகிவிட்டார். 5 ஓவர், 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய பவுலர்களுக்கு அல்லு கிளப்பிய மேக்ஸ்வெல்லை சுருட்டி வீசிய சாஹல் விட்டுக்கொடுத்தது 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி. ஆனால் இவரது ஓவரின் சிறப்பம்சம் 16 டாட் பால்கள். அது ஆஸி பேட்ஸ்மேன்களின் பிரஷரை பன்மடங்கு அதிகரித்து, பந்தை தூக்கி அடிக்கத் தூண்டியது. அதன் விளைவே சீட்டுக்கட்டாய் சரிந்தன விக்கெட்டுகள். 


தீர்க்கமான திட்டங்கள்

இந்தியாவின் வெற்றிக்கு அணி நிர்வாகம் தங்கள் திட்டத்திலும், முடிவுகளிலும் தீர்க்கமாக இருப்பதும் ஒரு காரணம். “2019 உலகக்கோப்பையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு தயாராகும் வகையில்தான் அணித் தேர்வு நடக்கிறது" என்று இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் M.S.K.பிரசாத் கூறியிருந்தார். ஸ்பின்னர்கள் தேர்வு, சீனியர்கள் ஓய்வு என இத்தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோதே இந்திய அணியின் திட்டமிடல் தெளிவானது. நேற்றைய போட்டியில் அது இன்னும் தீர்க்கமாக வெளிப்பட்டது. தொடக்கம் தடுமாறிய நிலையில், 'அணியை நிலைநிறுத்த தோனி களமிறங்கலாம்' என்ற எண்ணம் எழுந்தது. இறக்கியிருக்கலாம். ஆனால் ஜாதவே களம் கண்டார்.


இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் ரஹானே, ரோஹித், தவான், கோலியே பெரும்பாலான போட்டிகளுக்கு 'எண்ட்-கார்டு' போட்டனர். ஒருசில போட்டிகளில் மட்டும் மனீஷ் பாண்டே, ராகுல், ஜாதவ் களம் கண்டனர். அணியைப் பொறுத்தவரையில் மிடில்-ஆர்டர் பலமாக வேண்டும். அவர்கள் இன்னும் அனுபவம் பெற வேண்டும். அவ்வளவே. மனீஷ் நேற்றைய போட்டியில் சோபிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் ஜாதவுக்கு நேற்றைய போட்டி மிகச்சிறந்த வாய்ப்பு. டாப் ஆர்டர் சொதப்பும் பட்சத்தில் தன்னால் ஒரு பார்ட்னர்ஷிப் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அளித்துள்ளார்.

இந்திய அணியின் மைனஸ்கள்

இந்தப் போட்டியில் இந்திய அணியின் சில பலவீனங்கள் அப்பட்டமாகத் தெரிந்தது. ரஹானே - ரோஹித் ஓபனிங் இணை செட் ஆகாது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் 'காம்ப்ளிமென்ட்' செய்து ஆட வேண்டும். இருவரும் ஒரே மாதிரி ஆடினால், நல்ல தொடக்கம் அமையாது. ரோஹித் எப்போதுமே செட்டில் ஆக 20 முதல் 25 பந்துகள் எடுத்துக்கொள்வார். அதேசமயம் தவான் 2-3 ஓவர்களுக்குள் செட்டிலாகி தன் பாணி ஆட்டத்தைத் தொடங்கிவிடுவார். அது ரோஹித் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால் ரஹானேவும் ரோஹித்தின் மைண்ட்-செட்டிலேயே ஆடக்கூடியவர். இருவரும் ஒரே பாணியில் ஆடும்போது இருவருக்கும் அழுத்தம் அதிகமாகும். அப்போது அவர்களின் இயல்பான ஆட்டத்தை ஆட முடியாது. நேற்றைய போட்டியில் ரஹானே அந்த அழுத்தத்தை நன்றாகவே உணர்ந்தார்.

இந்திய அணியின் ஃபீல்டிங் சற்று சுமார்தான். சாஹல் தன் பந்துவீச்சில் இரண்டு கேட்ச்களை தவறவிட்டார். முதல் கேட்ச் மிகவும் கடினமானது என்றாலும், இரண்டாவது கேட்சைப் பிடித்திருக்கலாம். ஸ்மித்தின் கஷ்டமான கேட்சைப் பிடித்து பிரமிக்க வைத்த பும்ரா, பாயின்ட் திசையில் ஒரு மிஸ்ஃபீல்டு செய்தார். மணீஷ் பாண்டே, குல்தீப், பாண்டியாவும் ஒரு சில மிஸ்ஃபீல்டு செய்தனர். ரஹானே கேட்ச் மிஸ் செய்தது மற்றுமொரு ஆச்சர்யம்!

 

இந்திய அணியின் வெற்றி எளிதாகக் கிடைக்கவில்லை. மிடில் ஆர்டரின் போராட்டத்தாலும், மழையின் உதவியாலும் கிடைத்த ஒன்று. பேட்ஸ்மேன்களின் மோசமான ஷாட்கள், ஃபீல்டிங் என பல விஷயங்களில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். அடிபட்ட கங்காருகள் இனி உக்கிரமாகத் தாக்கத்துடிக்கும். கவனம் புலிகளே!

http://www.vikatan.com/news/sports/102594-hardik-pandya-wrist-spinners-beat-australia.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த தொடரில் எதிர் பாத்த விடையம் மிக திருப்த்தியாக அமைந்தது.அதுதான் பான்டியாவும் தோனியின் ஆட்டமும்:).என்றூலும் மண்ணின் மைந்தன் அஷ்வன் விளையாடாதது மிகுந்த ஏமாற்றமே.tw_anguished:

Link to comment
Share on other sites

ஜேம்ஸ் பாக்னர் ஓவரில் தோனி நன்றாக அடித்து ஆடினார்; திட்டமிடுதலில் மேம்படுவோம்: ஸ்டீவ் ஸ்மித்

 

 
smith

முதல் தோல்வியில் ஏமாற்றமடைந்த ஸ்மித்.   -  படம். | பிடிஐ.

சென்னை ஒருநாள் போட்டியில், மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில், 164 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்ததற்கு திட்டமிடுதல் சரியில்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.

அதாவது இந்திய அணி 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பிறகு ஓரளவுக்கு மீண்டு 100 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் மீதான தன் பிடியை தளரவிட்டது.

ஸ்மித் கூறியதாவது:

போட்டியை வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் 5 போட்டிகள் கொண்ட தொடர், இன்னும் 4 போட்டிகள் உள்ளன. கொல்கத்தாவில் பதிலடி கொடுப்போம். நாங்கள் விரும்பிய அளவில் திட்டமிடுதலும் செயல்படுத்தலும் நடக்கவில்லை.

மழை வந்தது, இதனால் 160 ரன்கள் இலக்கு நிச்சயம் எளிதானதல்ல. அதுவும் 2 பக்கமும் புதிய பந்துகளில் வீசும்போது கடினமே. வித்தியாசமாக ஆடியிருக்க வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் நிதானமாக ஆடி, திட்டமிடுதலை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.

பாண்டிய, தோனி 118 ரன்களைச் சேர்த்தனர். 87-லிருந்து 206 ரன்களுக்கு எடுத்துச் சென்றனர். கடைசியில் இதுதான் மேட்ச் வின்னிங் கூட்டணியாகி விட்டது. புதிய பந்தில் அருமையாகத் தொடங்கினோம் ஆனால் தோனி, பாண்டியாவும் அருமையாக ஆடினர்.

கேட்ச்களை விடுவது சரியல்ல, நானே ஒரு கேட்சை விட்டேன், பந்து எனக்கு யார்க்கர் ஆனது. அதனால் கேட்சை விட்டேன்.

நல்ல பந்து வீச்சுத் தொடக்கத்தை வெற்றியாக மாற்றாதது நல்ல அறிகுறியல்ல. நான் கூல்ட்டர்-நைல் உடன் தொடங்கி பாட் கமின்ஸ் உடன் இறுதி ஓவர்களை வீசத் திட்டமிட்டேன்.

ஆனால் தோனி, எதிர்பார்த்ததைப் போலவே ஜேம்ஸ் பாக்னரை நன்றாகவே அடித்து ஆடினார்., அவரை அங்கு பந்து வீச அழைத்தது பொருத்தமானதல்ல, ஆனால் இதுதான் கிரிக்கெட், தோனி ஒரு தரமான வீரர், இறுதி ஓவர்களில் அபாயகரமானவர்.

விரட்டலில் 21 ஓவர்களில் 164 ரன்கள் என்பது ஒரேயொரு புதிய பந்தை எதிர்கொள்ளுமாறு இருந்திருந்தால் எளிதில் வெற்றி பெற்றிருக்க முடியும். இரண்டு பக்கமும் புதிய பந்துகள் எங்களுக்குக் கடினமாக்கியது.

ஆரம்பத்தில் கொஞ்சம் நிதானித்து பிறகு அடித்து ஆடியிருக்கலாம், ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மீது எந்த ஒரு தனிக்கவனமும் இல்லை. நல்ல வேகப்பந்து வீச்சாளர்களும் இந்திய அணியில் உள்ளனர், எனவே ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மீது எங்கள் கவனம் துளிக்கூட இல்லை என்பதையும் கூறிவிடுகிறேன்.

விக்கெட்டுகளை இழந்து கொண்டிருக்கும் போது 20 ஓவர்கள் ஆடுவது என்பது கடினம்தான்.

இவ்வாறு கூறினார் ஸ்மித்.

http://tamil.thehindu.com/sports/article19708979.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.