Jump to content

பெடரருக்கு அதிர்ச்சியளித்த டெல் போட்ரோ: அரையிறுதியில் நடாலைச் சந்திக்கிறார்


Recommended Posts

பெடரருக்கு அதிர்ச்சியளித்த டெல் போட்ரோ: அரையிறுதியில் நடாலைச் சந்திக்கிறார்

 

 
federer

யு.எஸ். ஓபன் காலிறுதியில் டெல் போட்ரோவிடம் தோல்வியடைந்த பெடரர்.   -  படம்.| ஏ.பி.

யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் அரையிறுதிக்கு அர்ஜெண்டினா வீரர் யுவான் மார்டின் டெல் போட்ரோ தகுதி பெற்றார், இன்று நடந்த காலிறுதியில் ரோஜர் பெடரரை 7-5, 3-6, 7-6, 6-4 என்ற செட்கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார்.

ரபேல் நடால் தான் பெடரருக்காகக் காத்திருப்பதாக பேட்டி அளித்திருக்கும் சமயத்தில் யுவான் டெல் போட்ரோ அபாரமான ஆட்டத்தில் பெடரரை வெளியேற்றி நடாலைச் சந்திக்க தயாராகியுள்ளார்.

யுவான் டெல் போட்ரோ 2009-ல் நடால், பெடரர் இருவரையும் வீழ்த்தி யு.எஸ். ஓபன் சாம்பியன் ஆனது தற்போது ரசிகர்களுக்கு நினைவுக்கு வந்துள்ளது.

டோமினிக் தியமுக்கு எதிராக 5 செட்களில் போராடி வென்று அடுத்ததாக பெடரர் போன்ற ஜீனியஸை எதிர்கொள்வது சாதாரண காரியமல்ல, ஆனால் பெடரர் இன்று தானாக இல்லை, அவரே கூறுவது என்னவெனில், “பாதுகாப்பான இடத்தில் நான் இல்லை என்பதை நான் போட்டிக்கு முன்னரே அறிந்திருந்தேன், இந்த உணர்வை நான் விம்பிள்டனிலோ, ஆஸ்திரேலிய ஓபனிலோ நான் வந்தடையவில்லை. அதனால்தான் மிகச்சரியாக நான் இந்தத் தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறேன்.” என்று தனது மன, உடல் நிலை பற்றி சரியாகக் கணித்துள்ளார் பெடரர்.

டெல் போட்ரோவின் சர்வ்கள் இடிபோல் இறங்கியது. இருவரும் தலா ஒரு செட்டை வென்ற பிறகு 3-வது செட் டைபிரேக்கருக்குச் சென்றது. இதில் பெடரர் 4 செட் பாயிண்ட்களை நழுவ விட்டார். 9-8-ல் ஒரெ செட் பாயிண்ட் வாய்ப்பைப் பெற்ற டெல் போட்ரோ பெடரர் பேக் ஹேண்ட் ஷாட்டை வெளியே அடித்தார்.

4-வது செட்டில் 2-2 என்று இருந்த போது பெடரர் ஒரு பிரேக் பாயிண்டைக் கோட்டை விட்டார். இதனைப் பயன்படுத்திய டெல் போட்ரோ அதிரடி பேக் ஹேண்ட் மூலம் முடித்து வைத்தார். பெடரர் 5-வது செட்டில் இரண்டு பிரேக் பாயிண்ட்களை காப்பாற்றினார். ஆனால் டெல் போட்ரோ இரண்டு அபாரமான ஃபோர்ஹேண்ட் ஷாட்களை டவுன் த லைனில் அடிக்க பெடரர் தோல்வி தழுவினார்.

மாறாக இன்னொரு காலிறுதியில் நடால் 6-1, 6-2, 6-2 என்று ஆந்த்ரே ருபலேவை முறியடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்று டெல் போட்ரோவின் சக்தி வாய்ந்த சர்வ்களை எதிர்கொள்ளவிருக்கிறார்.

http://tamil.thehindu.com/sports/article19637935.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.