Sign in to follow this  
நவீனன்

எண்பது வயது தமிழ் மூதாட்டி நிகழ்த்திய சாதனை: தாயகம் கண்ட பெருமை!

Recommended Posts

எண்பது வயது தமிழ் மூதாட்டி நிகழ்த்திய சாதனை: தாயகம் கண்ட பெருமை!

 

எண்பது வயதான தமிழ் ஆசிரியை ஒருவர் முதுகலைமானி பட்டம் பெற்ற பெருமைமிகு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எண்பது வயது நிரம்பிய குறித்த ஆசிரியை தனது விடாமுயற்சியின் பயனால் மூத்த வயதிலும் முதுகலைமானி பட்டப்படிப்பை நிறைவு செய்து தாயகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டம் தென்மராட்சியின் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த, திருமதி யோகரட்ணம் செல்லையா எனும் பெயர்கொண்ட குறித்த ஆசிரியை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார்.

கடந்த வாரம் இறுதிப் பகுதியில், அண்ணாமலை பல்கலைக்கழக கனடா வளாகத்தினரின் பட்டமளிப்பு விழா யோர்க்வூட் நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்படி, ரொறன்ரோ, 1785 பின்ச் அவெனியூவில் உள்ள யோர்க்வூட் நூல் நிலையத்தில் நடைபெற்ற குறித்த பட்டமளிப்பு விழாவில் திருமதி யோகரட்ணம் ஆசிரியை பட்டம் பெற்றார்.

மூத்த வயதிலும் முதுமானி பட்டம்பெற்ற யோகரட்ணம் ஆசிரியை, திருக்குறளிற்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் விளக்கவுரை தந்த ஒருவராவார். அத்துடன் பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம் - 4 (மீசாலை) நூலை வெளியிட்டதோடு, மறைந்த முத்தமிழ் வித்தகர் திரு. அ.பொ. செல்லையா அவர்களின் மனைவி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எண்பது வயது தமிழ் மூதாட்டி நிகழ்த்திய சாதனை: தாயகம் கண்ட பெருமை!

எண்பது வயது தமிழ் மூதாட்டி நிகழ்த்திய சாதனை: தாயகம் கண்ட பெருமை!

https://news.ibctamil.com/ta/internal-affairs/The-achievement-of-a-senior-Tamil-teacher

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்தும் வயதில்லை வணங்குகின்றேன் தாயே. 

Share this post


Link to post
Share on other sites

வணங்குகின்றேன் தாயே.....அசாத்தியமான செயல் ....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

40 வயசாகிட்டுது இனி Masters செய்வது சரிவராது என்று சோம்பல் பட்டுக் கொண்டு இருந்த எனக்கு இவர் செயல் உற்சாகமூட்டுகின்றது. வாழும் உதாரணம் இவர்

வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் அம்மணி..!

416304_rozy_krasnye_buket_cvety_lentochk

 

12 minutes ago, நிழலி said:

40 வயசாகிட்டுது இனி Masters செய்வது சரிவராது என்று சோம்பல் பட்டுக் கொண்டு இருந்த எனக்கு இவர் செயல் உற்சாகமூட்டுகின்றது..

நான் முதுநிலை பட்டம் பெற்றபோது என் வயது 39. குடும்பப் பொறுப்புகளில் கவனம் சிதறினாலும், மனதை ஒருநிலைப்படுத்தி முயன்றால் வெற்றி சாத்தியமே..!  lirebougie.gif

மனமிருந்தால் மார்க்கமுண்டு..! Good luck..news1.gif

Share this post


Link to post
Share on other sites

பட்டம் என்றாலே எனக்கு பிடிக்காது ஆனால் படிப்பு ஒரு மனிதனை பூரணப்படுத்துகிறதா படிக்காத மேதைகள் என்று எழுத்தில் மட்டும் ஏன் சொல்லுகிறார்கள் அப்போ பட்டம் பெற்றவர்கள் மட்டும் தானா மேதைகள் அறிஞர்கள் எல்லாம் சின்ன டவுட்டு  

வாழ்த்துக்கள் பாட்டி 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஏட்டுச்சுரக்காய் எம் மக்கள் மத்தியில் நன்றாக ஊறிவிட்டது.என்டாலும் வாழ்த்துக்கள் அம்மனி.

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்க ...வாழ்த்துக்கள் ...அம்மா...உண்மையான பட்டம் பெற்றவர்களின் மதிப்பையும் கனடிய இந்திய கல்வி முறை மதிபிழக்க வைக்கிறதோ என்றூ சிந்திக்க வைக்கிறது பட்டமளீப்பு முறை...ஊரிலை ஓ.எல் தாண்டாதவனும் M.A  பட்டமெடுக்கிறார்...college students..பேராதனை,மொரட்டுவை என்கினம்.....எதையப்பா நம்புறது...

Edited by alvayan
  • Like 1
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

எண்பதிலை நான் உங்களை மாதிரி எழுந்துநிக்கவே திராணியிருக்குமோ தெரியலை
நீடுழி வாழ்க என வாழ்த்துகிறேன் தாயே- உங்களின் இந்த முயற்சி அதி உச்ச அர்ப்பணிப்பு.
மகிழ்ச்சி.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this