Sign in to follow this  
nedukkalapoovan

என்ர பிரின்டர்.. சொறி சொல்ல வைச்சிட்டுது.

Recommended Posts

மாட்டன்.. மாட்டன்.. பிரின்ட்.. அடிக்கமாட்டன்.. என்று அடம்பிடிக்கிறான்..

என்னடா இவனுக்கு பிரச்சனை. ஒருவேளை 8 வருசப் பழசாகிட்டான்..  எறிய வேண்டிய கேஸ் ஆகிட்டானோ.. மனசுக்குள் ஒரு எண்ணம்.

ச்சா.. இவ்வளவு காலம்.. எத்தனையோ வின்டோஸ்களை கண்டு கடந்தும் வேலை செய்யுறவனுக்கு என்னாச்சு....

பிடிச்சு பிடரியில் தட்டினன்.. 

அஃறிணையாயினும்.. அவன் செய்த சேவைக்கு.. அவனை பிடரியில் தட்டினது.. மனதுக்கு கொஞ்சம் கஸ்டமாகத்தான் இருந்தது.

திரும்ப திரும்ப.. பிழை உன்னிலை தான்.. பரிசோதித்துத் துலையடா.. என்ற கணக்கா அவனும்.. எரர் சம்கிக்கை காட்டுக் கொண்டே இருந்தான்..

சரிதான் என்ன தான் நடந்து என்று.. உள்ள திறந்து பார்த்தால்.. உள்ளுறுப்புகள் எல்லாம் நல்லாக் கிடக்கு..

என்ன கரைச்சல்..

எது என்றாலும்.. உடன பழுதாகாதே... இவ்வளவு நாளும்.. நல்லாத்தானே இருந்தான்...

சரியென்று.. தூக்கி சரிச்சுப் பார்த்தால்..

உள்ள காகிதம் போடும் பகுதியில் இருந்து ஒரு பேனை உருண்டு வெளிய வருகிறது..

அதை தூக்கிட்டு..

பிரின்ட் கொடுத்தால்.. கப்பியா அவன் பிரின்ட் போட்டான்.

பிரின்டரை பார்த்து.. ஒரு சொறி சொல்ல வேண்டியதாப் போச்சு. (அஃறிணை என்றாலும்)

(இதனால்.. தெரியவருவது என்ன என்றால்.. எந்த அஃறிணைப் பொருளும் திடீர் என்று பழுதாகிறது என்றால்.. அதற்கு அப்பொருள் மட்டும்.. 100% காரணமல்ல. எமது கவனக்குறைவும் தான். ) எனவே.. நாம் கவனமாக அவற்றை கவனித்தால்..  அவதானித்தால்.. அவையும் நமக்கு காலம் கடந்தும் சேவை செய்யலாம். tw_blush:

 

 

இது உயர்திணைகளுக்கும் பொருந்தும். tw_blush:

Share this post


Link to post
Share on other sites

உங்க பிரிண்டர் பொடியன் தண்ணிக்காரனோ (ink) அல்லது தூள் (torner) ஏதும் பாவிக்கிறவரே?
ஒம் ஒருக்கா பொடியனுக்கு நாவுறு படாமலுக்கு சுத்திப் போடுங்கோ 
மறக்காமை கோவில்லை ஒரு அரிச்சனையையும் செய்துபோடுங்கோ. 

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, vanangaamudi said:

உங்க பிரிண்டர் பொடியன் தண்ணிக்காரனோ (ink) அல்லது தூள் (torner) ஏதும் பாவிக்கிறவரே?
ஒம் ஒருக்கா பொடியனுக்கு நாவுறு படாமலுக்கு சுத்திப் போடுங்கோ 
மறக்காமை கோவில்லை ஒரு அரிச்சனையையும் செய்துபோடுங்கோ. 

தண்ணிப்பார்ட்டி. 

நாவூறு கழிக்கத் தேவையில்லை.. சுத்தப்படுத்தி வைக்கச் சொன்னான். 

அவனுக்கு.. கோவில் அர்ச்சனை எல்லாம் வியாபாரமாகிவிட்ட உண்மை தெரியும்... போல. tw_blush:

Share this post


Link to post
Share on other sites

எட்டு வருசமா.... ஒரு பிரின்டர்!

நெடுக்கர் நீங்கள் நிச்சயமாய் ஒரு ஏக பத்தினி விரதன் தான்...!

 

அது சரி....அந்தப் பேனா....'மிஸ்' பண்ணியது...எப்படி உங்களுக்குத் தெரியாமல் போனது..???

அண்மையில் தாயகம் போயிருந்த போது...ஒரு ரலி சைக்கிளைப் பார்த்தேன்!

நிறம் மங்கி...துருப்பிடித்து....சில்லுக்குப் போடப்படும் அலங்கார வளையங்களின் மயிரெல்லாம் கொட்டி....ஒரு மதிலில் சாய்த்து வைக்கப் பட்டிருந்தது!

அது ஒரு உறவினரின் சைக்கிள் என்ற படியால்...ஓடிப் பார்க்கலாமா என்று அவரிடம் கேட்டேன்!

தம்பி....வெளி நாடு..உங்களைப் பழுதாக்கிப் போட்டுது..!

நீங்கள் என்னிட்டை அனுமதி கேட்டா...சைக்கிளை எடுக்க வேண்டும் என்று கோபித்துக் கொண்டார்!

ம்ம்ம்... எங்களை அறியாமலே..நாம் மாறி விட்டோம் போல...என நினைத்த படி....சைக்கிளை எடுத்து ஓட....வெளிநாட்டில் நான் வைத்திருக்கும் சைக்கிள் ...ரலி சைக்கிளிடம் பிச்சை வாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்!

அதன் செயல் திறன்....இன்னும்....ஒரிஜினல் சைக்கிள் மாதிரியே இருந்தது!

Edited by புங்கையூரன்
  • Like 2

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, புங்கையூரன் said:

அது சரி....அந்தப் பேனா....'மிஸ்' பண்ணியது...எப்படி உங்களுக்குத் தெரியாமல் போனது..???

புலம்பெயர் நாடுகளில் பேனைக்கு குறைச்சலில்லாத படியால்.. தேடுவதில்லை. ஊரில் என்றால்.. ஒவ்வொரு நாளும் எவ்வளவு மை இறங்குது என்று பார்த்திட்டு தான் எழுதவே ஆரம்பிப்பம். இப்ப அந்த நிலை அங்க இருக்கோ தெரியவில்லை. குறிப்பாக போர் காலத்தில்.. கொழும்பில் இருந்து பொருட்கள் கொண்டு வர சொறீலங்கா அரச .. இராணுவ தடைகள்.. தடுப்புகள் இருந்த  காலத்தில்.. பேனை என்பது ஒரு அரிய பொக்கிசமாக விளங்கியதுண்டு. tw_blush:

4 hours ago, ராசவன்னியன் said:

 

vil2_gratte.gif    ஒருவேளை 'கணேசரின் தோழர்' இப்படி செய்திருப்பாரோ..?

 

e7x8d3.jpg

 

அதெப்படி.. எங்க பிரன்ட்.. கணேசர் என்று தெரிஞ்சு கொண்டிங்க. இவ்வளவு காலம் பாவிப்பதால் ஆக இருக்கலாம்.

எங்க வீட்டில்.. உந்த றியல் மவுஸ் தொல்லை இல்லை.

பிரிட்டரின் மேல் வைக்கப்பட்ட பேனை உருண்டோடி விழுந்திருக்கிறது. tw_blush:

Share this post


Link to post
Share on other sites

 

1 hour ago, nedukkalapoovan said:

 

பிரிட்டரின் மேல் வைக்கப்பட்ட பேனை உருண்டோடி விழுந்திருக்கிறது. tw_blush:

கண்டதையும் கண்ட இடத்தில் வைக்ககூடாது என்று சொல்லுறது:10_wink:

Edited by putthan

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, putthan said:

 

கண்டதையும் கண்ட இடத்தில் வைக்ககூடாது என்று சொல்லுறது:10_wink:

 

உண்மை தான். tw_blush:

Share this post


Link to post
Share on other sites

அந்த பெரிய பேனை உள்ள போனது தெரியாமல் ஒராள் சாமான் பாவிக்கிறாம்   கழட்டிப்பார்க்காமல் ஏன் பின் மட்டையில் தட்டுவான்  முதலில் கழட்டி பார்க்கவேணும் ஏதேனும் உள்ள பொறுத்துகிறுத்து கிடக்கா என்று  நான் பிறிண்டரை மட்டுமே சொன்னேன் என்று கூறி க்கொண்டு போறன் :10_wink:

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this