Jump to content

இந்தியா - பாகிஸ்தான் போர்; 52 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தகவல்கள்!


Recommended Posts

இந்தியா - பாகிஸ்தான் போர்; 52 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தகவல்கள்!

 

1965-இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 1962-இல் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற போரோ, 1971-இல் நடைபெற்ற வங்கதேச யுத்தமோ மக்களின் மனதில் அந்த அளவு இடம்பெறவில்லை.

1965 युद्धபடத்தின் காப்புரிமைBHARATRAKSHAK.COM

1965 செப்டம்பர் ஆறாம் தேதியன்று, இந்தியாவின் மேற்கு பகுதியில் சர்வதேச எல்லையை அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்ட இந்திய ராணுவம், யுத்தத்திற்கு தயாரானது.

இந்த நாளை பாகிஸ்தான், 'பாகிஸ்தான் பாதுகாப்பு தினம்' என்று கொண்டாடுகிறது. அன்று வெற்றி ஊர்வலமும் நடத்தப்படுகிறது. ஆனால் இந்தப் போரில் வெற்றி பெற்றது இந்தியாவே என்று இந்தியா நம்புகிறது.

  •  

போர் முடிந்து 52 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அதன் நினைவுகளும், புகைப்படங்களும் மங்கிவிட்டன. ஆனால் மங்கிய நினைவுகளை, கடந்துபோன காலங்களை, மங்கலான புகைப்படங்கள் சிறப்பாகவே காட்டிவிடும்.

மக்களுக்கு இந்த போர் தொடர்பான பல விஷயங்கள் தெரிந்திருக்காது, அதிலும் இளம் தலைமுறையினருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், 22 நாட்கள் நடந்த போர் தொடர்பாக 22 கட்டுரைகள் எழுதலாம் என்று முடிவுசெய்தோம்.

1965 युद्धபடத்தின் காப்புரிமைWWW.ADITYAARYAARCHIVE.COM

ஆனால், இது மிகவும் சுலபமான வேலை இல்லை. போர் நடந்த காலகட்டத்தில் இணையதள வசதி கிடையாது. எந்தத் தகவல் தேவையென்றாலும் கூகுளில் சில நொடிப் பொழுதில் தேடி எடுத்துக் கொள்வதைப் போல 50 ஆண்டுகள் பழைய விஷயங்களை சேகரிப்பது எளிதானதல்ல.

ஆனால் வேலையைத் தொடங்கிவிட்டோம். நூலகங்களில் இருந்து தேர்ந்தெடுத்த நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்து, எழுத்தாளர்களைச் சந்தித்து, ஆவணங்களைச் சேகரித்து (சில நேரங்களில் ரகசிய ஆவணங்களையும்) இலக்கை அடையக் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டோம்.

முயற்சிகளை மேலும் விரிவுபடுத்தி, ராணுவ மையங்களுக்குச் சென்று, இந்தக் குறிப்பிட்ட போர் தொடர்பான பழைய டயரி குறிப்புகளைத் தலைகீழாகப் புரட்டினோம்.

47 பேருடன் உரையாடல்

போரில் ஈடுபட்டவர்களில் பலர் இறந்துவிட்ட நிலையில், எஞ்சியவர்களைத் தேடுவதும், கண்டறிந்தவர்களில் மிகவும் வயதான நிலையில் இருந்த அவர்கள் பேசும்நிலையில் இல்லை என்பதுடன், முதுமையின் காரணமாக ஏற்பட்ட ஞாபக மறதியும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டன.

இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்து, எண்ணிலடங்காத் தொலைபேசி அழைப்புகளை விடுத்து, 47 பேரை நேரடியாகச் சந்தித்தோம். அதற்காக நாட்டின் பல இடங்களுக்கும் பயணங்கள் மேற்கொண்டோம்.

பாகிஸ்தானின் சேபர் ஜெட் விமானங்கள் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.படத்தின் காப்புரிமைDEFENCE.PK Image captionபாகிஸ்தானின் சேபர் ஜெட் விமானங்கள் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்தியத் தரப்பு மட்டுமல்ல, பாகிஸ்தான் தரப்பையும் தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டோம். அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களில் இருந்தும் பயனுள்ள பல தகவல்கள் கிடைத்தன.

பாகிஸ்தான் விமானப்படை கமாண்டர் சஜ்ஜாத் ஹைதரின் அனுபவம் இது. பதான்கோட்டில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர், அவர் ஒரு வாளி நீரில், முழு குப்பி வாசனை திரவியத்தை கலந்து எட்டு துண்டுகளில் நனைத்து எட்டு விமான ஓட்டிகளிடம் பாகிஸ்தான் கமாண்டர் ஹைதர் கொடுத்தார். போருக்குப் போகும்போது நறுமணத்தால் தோய்க்கப்பட்ட துண்டு எதற்கு?

போரில் எதுவேண்டுமானாலும் நடைபெறலாம், அல்லாவிடம் செல்லவேண்டிய நிலையும் ஏற்படலாம். எனவே துண்டுகளால் முகத்தை துடைத்து நறுமணம் கமழ இருங்கள் என்று அறிவுறுத்தினாராம் ஹைதர்!

புகைப்படத்தில் நடுவில் இருக்கும் சஜ்ஜாத் ஹைதர் பாகிஸ்தான் தரப்பில் முக்கிய பங்காற்றினார்.படத்தின் காப்புரிமைSAJAD HAIDER Image captionபுகைப்படத்தில் நடுவில் இருக்கும் சஜ்ஜாத் ஹைதர் பாகிஸ்தான் தரப்பில் முக்கிய பங்காற்றினார்.

தாராபோரின் கடைசி ஆசை

'யுத்தத்தில் இறந்துபோனால், யுத்த பூமியிலேயே தனது இறுதி சடங்குகள் நடைபெறவேண்டும்' என்று சவிண்டாவில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கர்னல் தாராபோர், தனது சகாக்களிடம் இறுதி ஆசையை தெரிவித்திருந்தார்.

'என்னுடைய பிரார்த்தனை புத்தகத்தை அம்மாவிடம் ஒப்படைக்கவும், மோதிரத்தை எனது மனைவியிடமும், ஃபவுண்டைன் பேனாவை எனது மகன் ஜர்ஜிஸிடம் கொடுக்கவும்' என்பதையும் இறுதி விருப்பமாக தெரிவித்திருந்தார் தாராபோர்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் டாங்கியின் குண்டுக்கு பலியான தாராபோர் வீரமரணத்தைத் தழுவினார். மரணத்திற்கு பின்பு வழங்கப்படும் வீரத்திற்கான உயரிய விருதான பரம்வீர் சக்ர விருது கொடுத்து அவர் சிறப்பிக்கப்பட்டார்

கர்னல் தாராபோரின் அஸ்தி கலசத்தை எடுத்துச் செல்லும் மனைவியும் மகளும்படத்தின் காப்புரிமைZARIN BOYCE Image captionகர்னல் தாராபோரின் அஸ்தி கலசத்தை எடுத்துச் செல்லும் மனைவியும் மகளும்

'கர்னல் தாராபோரின் விருப்பப்படி அவரது இறுதி சடங்குகள் யுத்த பூமியில் நடத்தப்பட்டால், அங்கிருந்து எழும் புகையை அடையாளம் கண்டு பாகிஸ்தான் டாங்கிகள் தாக்குதல் நடத்தினால் போரின் போக்கே மாறலாம் என்பதால் இறுதிச்சடங்கை யுத்த பூமியில் செய்ய வேண்டாம்' என்று சிலர் கருதினார்கள்' என்று சொல்கிறார் அந்தப் போரில் இந்திய தரப்பில் இருந்து பங்கேற்ற கேரளாவைச் சேர்ந்த அஜய் சிங் என்ற வீரர்.

ஆனால், என்ன நடந்தாலும் பாரவாயில்லை, கர்னலின் இறுதி ஆசையை நிறைவேற்றும் முடிவை ராணுவம் எடுத்தது. கர்னல் தாராபோரின் இறுதிச் சடங்குகள், பாகிஸ்தானின் குண்டுகளின் முழக்கத்துடன், மீதமிருந்த வீர்ர்களின் உயிரை பயணம் வைத்து, யுத்த பூமியிலேயே நடத்தப்பட்டது.

போர் தொடர்பான தகவல்களும், புள்ளிவிவரங்களும் சற்று இட்டுக்கட்டியே கூறப்படுகிறது. ஆனால் அதை தவிர்க்க வேண்டும் என்று இந்தத் தொடரை தொடங்குவதற்கு முன்பே நாங்கள் தெளிவுபடுத்திக் கொண்டோம். போரில் தவறுகளும் நேரிடலாம். 1965 போரிலும், இரு தரப்பினரும் தவறுகள் செய்தனர்.

இந்திய பாகிஸ்தான் போர் நடந்த 22 நாட்கள்

அவற்றை மறைக்கவும் நாங்கள் முயற்சிக்கவில்லை. ஒரு தரப்பினர் எதிர் தரப்பினரை பாராட்டியதையும் கேட்டோம், பதிவும் செய்திருக்கிறோம். ஆச்சரியமாக இருந்தாலும், 'பகைவர்களாக இருந்தாலும், வீரத்தை பாராட்டுவதற்கு யாரும் தயங்குவதில்லை' என்பதை இதில் இருந்து புரிந்து கொண்டோம்.

இந்த சிறப்புத் தொடரில், 52 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய-பாகிஸ்தான் போர் பற்றிய தகவல்களை கூறுகிறோம். யுத்தத்தில் வெற்றிவாகை சூடியவர்கள் மட்டுமல்ல, தாய்நாட்டுக்காக யுத்த வேள்வியில் உயிரை ஆகுதியாக்கியவர்கள், வெற்றியோ தோல்வியோ வாழ்க்கைப் பாடங்களை கற்றுத் திரும்பியவர்கள் என பலரின் பல்வேறு பரிணாமங்களை கொண்ட தொடர் இது.

இந்திய பாகிஸ்தான் போர் நடந்த 22 நாட்கள்படத்தின் காப்புரிமைBHARATRAKSHAK.COM

யாரையும் பாராட்டுவதோ, சரி-தவறு என்று விமர்சிப்பதோ எங்கள் நோக்கம் அல்ல. யுத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை, சம்பவங்களை, படிப்பினைகளை, உண்மைகளை உங்கள் முன்வைப்பதே எங்கள் தலையாய நோக்கம். எங்கள் முயற்சி வெற்றியடைந்ததா என்பதை சொல்ல வேண்டியது நீங்களே!

யுத்தம்

'டாங்கிகள் முன்னால் சென்றாலும் சரி,

பின்னால் சென்றாலும் சரி,

அவை விட்டுச் செல்வது தரிசு நிலத்தையே

வெற்றியோ தோல்வியோ அது போரின் முடிவு.

ஆனால் எப்போதும் தோற்பது பூமியே

அழுகுரல் ஒன்றே போரின் எச்சம்

யுத்தமில்லா உலகம் நன்றே

யுத்த பூமியில் சிதைகள் எரிவதைவிட

வீட்டில் அடுப்புகள் எரிவதே

இரு தரப்புக்கும் நன்று'

http://www.bbc.com/tamil/global-41180744

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படையினர் சிக்கிக் கொண்டது எப்படி: 1965 போர்

 

1965 செப்டம்பர் 6-ஆம் தேதி இரவு முதல் 7-ஆம் தேதி காலை வேளைக்குள் பாகிஸ்தானின் பி-57 விமானங்கள் இந்திய நிலைகளில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. அவற்றைத் தொடர்ந்து வந்த சி-130 ஹெர்குலஸ் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன.

1965: இந்தியப் பகுதிகளில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்படத்தின் காப்புரிமைDEFENCE.PK Image caption1965: இந்தியப் பகுதிகளில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்

ஒவ்வொரு விமானத்திலும் எலைட் சிறப்பு சேவைகள் குழுவின் அறுபது கமாண்டோக்கள் இருந்தனர்.

இந்தியாவின் அல்வரா, ஆதம்பூர், பதான்கோட் ஆகிய நகரங்களின் விமான நிலையங்களில் நள்ளிரவில் பாராசூட் மூலம் இறங்குவது அவர்கள் திட்டம்.

விமான நிலையங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, அங்குள்ள இந்திய விமானங்களை அழிக்கவேண்டும் என்பது அவர்கள் இலக்கு.

இரவு இரண்டு மணிக்கு 'மேஜர் காலித் பட்' தலைமையில் 60 பாகிஸ்தானிய கமாண்டோக்கள் பதான்கோட் விமானத் தளத்திற்கு அருகில் இறங்கினார்கள். இறங்கியவர்களை ஒன்றன்பின் மற்றொன்றாக பல சிக்கல்கள் சூழ்ந்தன.

விமான நிலையத்தைச் சுற்றி கால்வாய்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் சேறு நிறைந்த வயல்கள் அவர்களுடைய வேகத்தைத் தடுத்தன.

மூன்று மணி நேரத்திற்குள் அவர்கள் சூழப்பட்டனர். எதிரிகளின் ஊடுருவலை பார்த்த கிராமவாசி ஒருவர் பதான்கோட் ராணுவ தலைமையகத்திற்குத் தகவல் கொடுத்துவிட்டார்.

தப்பித்து சென்ற கமாண்டோக்கள்

அக்கம்பக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 200 பேர் கூடிவிட்டனர். உடனே பல கமாண்டோக்கள் காவலில் எடுக்கப்பட்டனர். இரண்டு நாட்களில் 'மேஜர் காலித் பட்' பிடிபட்டார். அல்வாராவில் இரவின் இருள் சூழ்ந்திருந்தபோதிலும், அங்கு தரையிறங்கிய ராணுவ வீரர்களை நன்றாகவே பார்க்க முடிந்தது.

1965: இந்தியப் பகுதிகளில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்படத்தின் காப்புரிமைDEFENCE.PK

விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தார். இந்திய விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவருக்கும் துப்பாக்கிகளையும், கைத்துப்பாக்கிகளையும் விநியோகித்தார்.

விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் புல்வெளிகள், மைதானங்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து சந்தேகத்திற்கு இடமான யாராவது தென்பட்டாலோ நடமாடினாலோ தயங்காமல் துப்பாக்கியைப் பிரயோக்கிக்க அனுமதி கொடுத்தார்.

p05cg7xg.jpg
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பிரிவினை ஒரு இளஞ்ஜோடிகளின் காதலையும் பிரித்தது.

விமானத் தளத்தின் வளாகத்திற்குள் சில பாகிஸ்தானிய கமாண்டோக்கள் இறங்கியிருந்தாலும், அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரே பிடிக்கப்பட்டு போர்க் கைதிகளாக்கப்பட்டனர்.

'பாகிஸ்தானுக்கான போர்' (Battle for Pakistan) என்ற புத்தகத்தில் ஜான் ஃபிரிக்கர் எழுதியிருக்கும் தகவல் சற்று வேறுபட்டிருக்கிறது.

'பாகிஸ்தான் கமாண்டோ மேஜர் ஹஜூர் ஹசைனென், ஒரு இந்திய ஜீப்பை கடத்தி, தனது சகா ஒருவருடன் பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்வதில் வெற்றிபெற்றார்' என்று ஜான் ஃபிரிக்கர் குறிப்பிடுகிறார்.

1965: இந்தியப் பகுதிகளில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்

அல்வாரா தளத்தின் அதிகாரியும் நிதித்துறையின் பிரபலமான ஸ்காவர்டன் தலைவர் கிருஷ்ணா சிங், பாகிஸ்தானின் கமாண்டர்களின் தலைவரை தானே நேரடியாகக் கைது செய்தார். இவர் ஒருவர் மட்டுமே 1965, 1971 ஆகிய இரு போர்களிலும் வீரதீர செயல்கள் புரிந்ததற்காக 'வீர் சக்ர' விருது பெற்ற பெருமைக்குரியவர்.

காட்டிக்கொடுத்த நாய்களின் குரைப்பு

ஆதம்பூரிலும் பாகிஸ்தானி வீரர்கள் இதே நிலைமையைச் சந்தித்தார்கள். விமானதளத்தில் இருந்து மிகத் தொலைவில் தரையிறங்கிய அவர்களால் ஒன்றிணைய முடியவில்லை. இரவு நேரத்தில் ஓசையில்லாமல் அவர்கள் தரையிறங்கினாலும், நாய்களின் குரைப்பு அவர்களை காட்டிக் கொடுத்துவிட்டது.

சூரிய உதயத்தின்போது பாகிஸ்தான் வீரர்கள் சோளக்காட்டிற்குள் அடைக்கலம் புகுந்துவிட்டனர். லூதியானாவில் இருந்து வந்த தேசிய மாணவர் படை (NCC) இளைஞர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சீற்றமுற்றிருந்த கிராமவாசிகள் சில பாகிஸ்தானி வீர்ர்களை கொன்றுவிட்டனர்.

விமானம் மூலம் தரையிறங்கிய மொத்தம் 180 பேரில் 138 பேர் கைது செய்யப்பட்டனர். 22 பேர் ராணுவம், போலிஸ் அல்லது கிராமமக்களுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டனர், மீதமிருந்த 20 பேர் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுவிட்டனர்.

தப்பித்தவர்களில் பெரும்பான்மையோர் பதான்கோட் விமானதளத்தின் அருகே தரை இறங்கியவர்கள். அங்கிருந்து பாகிஸ்தான் எல்லை வெறும் பத்து மைல் தொலைவில் இருந்ததே அதற்கு காரணம்.

1965 இந்திய-பாகிஸ்தான் போரின்போது பதான்கோட் விமானதளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்படத்தின் காப்புரிமைPIUSHPINDER SINGH Image caption1965 இந்திய-பாகிஸ்தான் போரின்போது பதான்கோட் விமானதளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்

பி.வி.எஸ் ஜகன்மோஹன் மற்றும் சமீர் சோப்ரா எழுதிய 'இந்தியா-பாகிஸ்தான் விமானப் போர்' (The India Pakistan Air War) புத்தகத்தில், "60 கமாண்டோக்களின் குழு பெரிதாக இருந்ததால் அது வெற்றி பெற்றிருக்கமுடியும். ஆனால், பெரிய குழுவாக இருந்ததால் பிறரின் கவனத்தை ஈர்க்காமல் செயல்பட முடியவில்லை. அதேபோல், இந்த எண்ணிக்கையானது தங்களைப் பாதுகாக்கும் திறனற்ற சிறிய குழுவாக இருந்தது" எனக் கூறப்பட்டுள்ளது.

இதைத்தவிர, கெளஹாத்தி மற்றும் ஷிலாங்கிலும் சில பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தரையிறங்கினார்கள். ஆனால் அவர்கள் எதிர் தரப்புக்கு சேதம் எதுவும் ஏற்படுத்தும் முன்பே கைது செய்யப்பட்டனர்.

அச்சத்தில் டெல்லிக்கு விரைந்த துணை ராணுவப்படை

இரு நாடுகளிலும் இந்த சம்பவங்கள் அனைத்தும் பல மோசமான நிலைமைகளை உருவாக்கின. ஓர் அதிகாரியின் கனவிலும் எதிர் தரப்பின் சிப்பாய்களே தொடர்ந்து வந்தார்கள்.

பிபிசி ஸ்டுடியோவில் ஏர் மார்ஷல் பூப் பிஷ்னோயியுடன் ரெஹான் ஃபஜல் Image captionபிபிசி ஸ்டுடியோவில் ஏர் மார்ஷல் பூப் பிஷ்னோயியுடன் ரெஹான் ஃபஜல்

"எதிரி, எதிரி வந்துவிட்டான், சுடுங்கள், ஃபயர்" என்று அவர் உறக்கத்திலும் உத்தரவிட்டாராம்.

காரிருள் சூழ்ந்த இரவு வேளையில் அருகில் இருப்பவர்களைக்கூட பார்க்கமுடியாது. எனவே இது கனவில் இட்ட கட்டளை என்று தெரியாமல் திடீரென்று எழுந்த பிற வீர்ர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு எதிரியை தாக்க தயாராகிவிட்டார்கள். நல்லவேளை, துப்பாக்கியை பயன்படுத்துவதற்குள் சுதாரித்துக்கொண்ட கமாண்டிங் அதிகாரி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார்.

போர் சில நாட்களில், சில சமயங்களில் சில மணி நேரத்திலும்கூட முடிவடையலாம். ஆனால் அதில் பங்குபெற்றவர்களின் வாழ்நாள் முழுவதிலும் போரின் நினைவுகளும், பாதிப்புகளும், தாக்கங்களும் தொடர்வது மட்டும் முடிவடையாது.

1965: இந்தியப் பகுதிகளில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் Image caption1965: இந்தியப் பகுதிகளில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்

ஏர் மார்ஷல் பூப் பிஷ்னோயி தன்னுடைய நினைவுகளை பிபிசியுடன் பகிர்ந்துக்கொள்கிறார், "அல்வாராவில் பாராசூட் மூலம் பாகிஸ்தானி வீர்ர்கள் இறங்கியதும், டெல்லிக்கு அருகில் உள்ள ஹிண்டன் விமானத்தளத்திலும் எதிரிகள் புகுந்துவிடலாம் என்று ஊகங்கள் பரவின. ஹிண்டனில் வீரர்களின் குடும்பத்தினரும் தங்கியிருந்தனர். எனவே, தங்கள் குடும்பத்தினரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிடலாம் என்று அங்கிருந்த தலைமை அதிகாரி அறிவுறுத்தினார். எனவே, அந்த நேரத்தில் உடனே கிடைத்த வாகன்ங்களை பிடித்துக் கொண்டு அங்கிருந்தவர்கள் டெல்லிக்கு விரைந்தார்கள்."

தங்களுக்குள்ளே தவறுதலாக நடைபெற்ற துப்பாக்கிச்சூடு

மற்றொரு சுவாரஸ்யமான சம்பவம் பாகிஸ்தானில் நடந்தது. சர்கோதா விமான நிலையத்தில் இந்திய பாராசூட் வீரர்கள் இறங்கப்போகிறார்கள் என்ற செய்தி கிடைத்தது. உடனே பாகிஸ்தானின் விமானத் தலைமையகம், கமாண்டோக்களுடன் C-130 விமானத்தை சர்கோதாவுக்கு அனுப்பி வைத்தது.

வெளிச்சம் இல்லாத இரவு நேரத்தில் பாகிஸ்தான் வீர்ர்கள் தரையிறங்க முற்பட்டப்போது, அது தவறாக புரிந்துகொள்ளப்பட்ட்து.

தளத்தில் இருந்த மற்றும் தரையில் இறங்கிய பாகிஸ்தானி வீரர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த தவறான புரிதலால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. (ஏர் கமாண்டர் மன்சூர் ஷா, த கோல்ட் வர்ட்: பாகிஸ்தான் அண்ட் இட்ஸ் ஏர்ஃபோர்ஸ்)

லெஃப்டினெண்ட் பதானியாபடத்தின் காப்புரிமைPUSHPINDER SINGH Image captionலெஃப்டினெண்ட் பதானியா

அதேபோல், பதான்கோட்டில் குண்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் விதமாக அங்கிருந்த அனைத்து ஊழியர்களுக்கும் 9 மி.மீ ஸ்டென் கார்பைன் துப்பாக்கி வழங்கப்பட்டது. விமான ஓட்டி லெப்டினெண்ட் பதானியாவுக்கும் ஸ்டென் கார்பைன் துப்பாக்கி ஒன்று கிடைத்தது.

பதானியாவுக்கு துப்பாக்கியை இயக்கவே தெரியாது. எனவே லெப்டினன்ட் துஷார் சென் துப்பாக்கியை இயக்க அவருக்கு கற்றுக்கொடுத்தார்.

அப்போது துப்பாக்கியில் விரல் தவறாகப்பட்டு, இலக்கு மாறி சீறிப்பாய்ந்த 9 மி.மீ குண்டுகள், அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சக விமானிகளின் தலைக்கு மேல் பாய்ந்தது. தலைக்கு மேல் சில அங்குல தொலைவில் சீறிப் பாய்ந்த குண்டுகளைக் கண்டு அவர்கள் வெலவெலத்துப் போனார்களாம்.

அதற்கு பின் லெப்டினெண்ட் பதானியாவின் துப்பாக்கியால் சுடும் திறமைக்கு, சக ஊழியர்களின் சன்மானம் என்னவாக இருந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளலாம்.

http://www.bbc.com/tamil/global-41205962

தொடரும்

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் போரில் இந்தியா பின்னடைவை சந்தித்த தருணங்கள்: யார் காரணம்?

ஜீப்படத்தின் காப்புரிமைDEFENCE.PK

1965-இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் மூன்றாம் பாகம்.

லாகூர் பகுதியில் இந்திய வீரர்கள் ஆரம்பத்தில் வெற்றி பெற்றாலும், தொடர்ந்த போரில் நிலைமை பாதகமானது. தரைப்படை பிரிவில் மேஜர் ஜெனரல் நிரஞ்சன் பிரசாதின் 15 படைப்பிரிவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

பாகிஸ்தானின் இரண்டு படைப்பிரிவுகள், தனது படைப்பிரிவை தாக்குவதாக, இந்திய தரப்பின் மேற்கத்திய கமாண்ட் ஜெனரல் ஹர்பக்‌ஷ் சிங்கிற்கு வயர்லஸ் செய்தியை அனுப்பினார் ஜெனரல் நிரஞ்சன் பிரசாத்.

தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் 'இச்சோஹில் கணவாய்' பகுதியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கி 'கோசல்காயல்' வரை வந்துவிட்டதாகவும் வயர்லஸ் செய்தி ஜெனரல் ஹர்பக்‌ஷ் சிங்கிற்கு வியப்பளித்தது.

"என்ன நடந்தாலும் சரி, இப்போது இருக்கும் இடத்தில் இருந்து ஓர் அங்குலம்கூட பின்வாங்கக்க்கூடாது. நானும் மத்திய கமாண்டரும் அங்கு வருகிறோம்" என்று உடனே அவர் ஜெனரல் நிரஞ்சன் பிரசாத்திற்கு செய்தி அனுப்பினார்.

குண்டுமழை பொழிந்த விமானங்கள்

தனது ஜோங்கா ஜீப்பில் ஏறிய ஜெனரல் ஹர்பக்‌ஷ் சிங் தனது ஓட்டுநரை பின்பக்கத்தில் உட்கார சொல்லிவிட்டு, தானே வாகனத்தை ஓட்டிச்சென்றார். ஜி.டி சாலைக்கு வந்ததும், அங்கிருந்த நிலைமையை கண்ட அவர் நிலைகுலைந்து போனார். ஆங்காங்கே இந்திய வாகனங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தன.

பாகிஸ்தான் விமானங்கள் குண்டுவீசி நடத்திய தாக்குதலால், சாலையில் பெரிய அளவிலான பல குழிகள் ஏற்பட்டிருந்தன. பாகிஸ்தானின் விமானங்கள் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

1965 போரில் மோசமாக செயல்பட்டதாக விமர்சிக்கப்படும் மேஜர் ஜெனரல் நிரஞ்சன் பிரசாத்படத்தின் காப்புரிமைBHARAT RAKSHAK Image caption1965 போரில் மோசமாக செயல்பட்டதாக விமர்சிக்கப்படும் மேஜர் ஜெனரல் நிரஞ்சன் பிரசாத்

ஜெனரல் ஹர்பக்‌ஷ் சிங் தனது சுயசரிதை புத்தகமான 'த லைன் ஆஃப் டியூட்டி' (In the Line of Duty) இல் இவ்வாறு எழுதியுள்ளார், "இந்திய ராணுவத்தின் 15ஆம் படைப்பிரிவின் வாகனங்கள் அங்கும் இங்கும் நின்றுகொண்டிருந்தன. அவற்றின் ஓட்டுநர்கள் அப்படியே விட்டுவிட்டு தப்பித்து ஓடியிருந்தார்கள்".

"சில வாகனங்களில் எஞ்சின்கூட நிறுத்தப்படவில்லை. சாலையின் நடுவில் அனாதரவாக நின்றுகொண்டிருந்த ஆயுத கவச வாகனத்தில் சாவி தொங்கிக் கொண்டிருந்தது. நான் அதை சாலையின் நடுவில் இருந்து அப்புறப்படுத்தி, ஒரு ஓரத்தில் நிறுத்தினேன்".

கரும்புக்காட்டில் ஜெனரல்

பிராந்தியத்தின் ராணுவ போலிஸ் வாகனம் ஜெனரல் ஹர்பக்‌ஷ் சிங்கை கரும்புத் தோட்டத்திற்கு அருகில் அழைத்துச் சென்றது. 15ஆம் படைப்பிரிவின் மத்திய கமாண்டர் ஜெனரல் மேஜர் நிரஞ்சன் சிங், பாகிஸ்தானின் குண்டுவீச்சுத் தாக்குதலில் இருந்து தப்பித்து அங்குதான் ஒளிந்திருந்தார்.

ராணுவ வீரர்

ஹர்பக்‌ஷ் எழுதுகிறார், "நிரஞ்சன் பிரசாத் என்னை பார்க்க வந்தபோது, அவருடைய காலில் இருந்த ஷூ முழுக்க சேறு அப்பியிருந்தது. அவர் தலையில் தொப்பி இல்லை, முகச்சவரமும் செய்திருக்கவில்லை, சீருடையில் அவரது பெயர் பட்டையை காணவில்லை".

"அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, நீங்கள் ராணுவ படையணியின் ஜெனரல் கமாண்டிங் அதிகாரியா அல்லது கூலியா? ஏன் முகச்சவரம் செய்யவில்லை? உங்கள் ரேங்கை தெரிவிக்கும் பேட்ஜ் எங்கே?

கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும்போதே, தாழ்வாக பறந்துவந்த விமானத்தில் இருந்து பாகிஸ்தானி வீரர்கள் இருவர் தரையில் குதிக்க முற்பட்டதை கவனித்த ஜெனரல் நிரஞ்சன் பிரசாத், ஜெனரல் ஹர்பக்‌ஷ் சிங்கை அருகில் இருந்த புதருக்குள் மறைவாக இழுக்க முயன்றார்.

போர் விமானம்படத்தின் காப்புரிமைDEFENCE.PK

ஹர்பக்‌ஷ் சிங், நிரஞ்சன் பிரசாதை பார்த்து கத்தினார், "எதிரிகளுக்கு நம் மீது ஆர்வம் இல்லை, நம்மை பார்க்கவும் இல்லை, நீங்கள் சாலைகளில் அநாதரவாக விட்டு வந்த வாகனங்களைத்தான் அவர்கள் குறிவைக்கிறார்கள்".

"உங்கள் பிரிகேடின் காமாண்டர் எங்கே?" என்று ஹர்பக்‌ஷ் சிங் கேட்டதும், "பாதக், பாதக்" என்று குரல் கொடுத்தார் நிரஞ்சன். அங்கு வந்த பாதக்கின் முகமெல்லாம் வெளுத்துக்கிடந்தது.

"மற்ற வீரர்கள் எங்கே என்று பாதக்கிடம் கேட்டதற்கு, "அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள், பலர் இறந்துபோனதால் அவர்கள் செயலற்று போய்விட்டார்கள்" என்று பதிலளித்தார்.

"சரி, இறந்தவர்கள் எத்தனை பேர்?" என்று ஹர்பக்‌ஷ் கேட்டதற்கு, "30 பேர் காயமடைந்தார்கள்" என்றார் பாதக்.

"4000 வீரர்களில் 30 பேர் காயமடைந்ததால், முழு படைப்பிரிவும் செயலற்று போய்விட்டதா?" என்று அதிர்ச்சியடைந்தார் ஹர்பக்‌ஷ் சிங்.

வயலில் விடப்பட்ட ஜோங்கா ஜீப்

ஜெனரல் ஹர்பக்‌ஷ் சிங் முன்னேறும்படி புதிய ஆணையிட்டார். படைப்பிரிவின் செயல்பாடு, முன்னேற்றம் பற்றி கவனிக்குமாறும், மேலதிகாரியிடம் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் ஜெனரல் நிரஞ்சன் பிரசாத்துக்கு அவர் ஆணையிட்டார்.

போர் களத்தில்படத்தின் காப்புரிமைBHARATRAKSHAK.COM

ஏழாம் தேதி காலை, ஜெனரல் நிரஞ்சன் தனது படைப்பிரிவினரின் நிலைமையை தெரிந்துக் கொள்வதற்காக ஜோங்கா ஜீப்பில் சென்றார். இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் அவரை பின்தொடர்ந்தன.

அவர்கள் சிறிது தொலைவு செல்வதற்குள், பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூட்டை தொடங்கியது. நிரஞ்சன் பிரசாதும் அவருடைய ஏ.டி.சியும் அருகில் இருந்த வயல்களில் மறைந்துகொண்டார்கள்.

திரும்பிச் சென்றுவிடலாம் என்று சிறிது நேரத்தில் முடிவெடுத்த அவர்கள், தாங்கள் பாதுகாப்பு வாகனங்களில் செல்வதாக கூறிவிட்டு, அவற்றில் வந்தவர்களை நடந்துவரச் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

வயல்வெளிகளில் அப்படியே விடப்பட்ட ஜோங்கா ஜீப்பில் ராணுவக் கொடி இருந்தது, நட்சத்திர சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. ராணுவத்தின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஜெனரல் நிரஞ்சன் பிரசாதின் ப்ரீப்கேஸ். அந்த ஜீப்பில் இருந்தது. அதை அவர் எடுக்கவில்லை.

பாகிஸ்தான் வானொலியில் ரகசிய ஆவணங்கள் பரப்புரை

தனியாக நின்றுகொண்டிருந்த ஜீப்பில் இருந்த ஆவணங்களை பாகிஸ்தான் வீரர்கள் கைப்பற்றினார்கள். அதில் இருந்த ஆவணங்களில், ஜென்ரல் ஹர்பக்‌ஷ் சிங்கின் தலைமைக்கு எதிரான புகாரின் நகலும் இருந்தது. இந்தியாவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் அந்த ஆவணங்களில் இருந்த தகவல்கள் பாகிஸ்தான் வானொலியில் பிரசாரம் செய்யப்பட்டது.

டாங்கிபடத்தின் காப்புரிமைBHARATRAKSHAK.COM

நிரஞ்சன் பிரசாதின் தவறான செயல்பாடுகளுக்காக அவரை ராணுவ சட்டத்தின்படி 'கோர்ட் மார்ஷல்' செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஜெனரல் செளத்ரி, நிரஞ்சன் பிரசாத்தை பதவியில் இருந்து விலகச் சொல்லி உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக, 15-ஆவது படைப்பிரிவின் புதிய கமாண்டராக மொஹிந்தர் சிங் நியமிக்கப்பட்டார்.

பிறகு ஜென்ரல் ஜோகிந்தர் சிங்கிடம் பேசியபோது, தான் எந்தவொரு ஆவணத்தையும் டோங்கா ஜீப்பில் வைத்திருக்கவில்லை என்று நிரஞ்சன் பிரசாத் கூறினார்.

"ஜோங்காவில் எழுத பயன்படுத்தும் 'நோட் பேட்' மட்டுமே வைத்திருந்தேன். இந்த அற்ப விஷயத்தை வைத்து அதிகாரிகள் என்னை அச்சுறுத்த முயன்றார்கள். பிறகு, ரகசிய அறிக்கையில் யாருக்கு எதிராக நான் எழுதியிருந்தேனோ, அவரிடமே எனக்கு எதிரான விசாரணையை ஒப்படைத்தார்கள்".

இந்தியாவிற்கு சங்கடம்

திரைக்கு பின்னால்

"ஜெனரல் நிரஞ்சன் சிங் கடமையை சரியாக செய்யாததற்காக பணியிலிருந்து நீக்கப்படவில்லை, அவர் 'அடிபணியாத சகாவாக இருந்தார்' என்பதால் நீக்கப்பட்டார்" என்று 'behind the scene' என்ற புத்தகத்தில் ஜொஹிந்தர் சிங், நிரஞ்சன் பிரசாதுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

ஜோஹிந்தர் சிங் மற்றும் ஹர்பக்‌ஷ் சிங்கிற்கு ஒத்துப்போகாது என்பதால் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால் மேஜர் கே.சி.ப்ரவல் மற்றும் மேஜர் ஆகா ஹுமான்யூ அமீன் ஆகியோரின் கருத்துப்படி, மேஜர் ஜெனரல் நிரஞ்சன் சிங் ஒரு நல்ல சந்தர்ப்பதை கை நழுவவிட்டதால், இந்திய தரப்புக்கு பின்னடைவும், பல சங்கடங்களும் நேர்ந்தன.

யார் சரி-யார் தவறு, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட்டார்களா இல்லையா, வெற்றி தோல்விக்கான காரணங்கள் என்ன என்பதைவிட, தனி மனிதர்களின் தனிப்பட்ட கருத்துகளும், நடவடிக்கைகளும் போரின் போக்கையே மாற்றும் தன்மை படைத்தது என்பதற்கு உதாரணம் இது.

http://www.bbc.com/tamil/global-41213513

தொடரும்

Link to comment
Share on other sites

1965 போர்: பாகிஸ்தானின் நோக்கம் நிறைவேறாத காரணம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965-இல் நடைபெற்ற யுத்தம் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட பிபிசி தொடரின் நான்காம் பாகம்.

அல்வாரா விமானதளத்தில் தீர சாகசங்கள் புரிந்த வினோத் நைவ், விமானப்படை தலைவர் அர்ஜுன் சிங்குடன் ராத்தோர்படத்தின் காப்புரிமைPUSHPINDAR SINGH Image captionஅல்வாரா விமானதளத்தில் தீர சாகசங்கள் புரிந்த வினோத் நைவ், விமானப்படை தலைவர் அர்ஜுன் சிங்குடன் ராத்தோர்

1965 செப்டம்பர் 6-ஆம் தேதி இரவு நேரத்தில் பாகிஸ்தானின் விமானங்கள் இந்தியாவின் மூன்று விமானத் தளங்களில் தாக்குதல் நடத்தின. அல்வாராவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பொறுப்பேற்றார் பாகிஸ்தானின் தலைசிறந்த பைலட் ரஃபீகி.

பதான்கோட்டிற்கு சென்ற படைப்பிரிவுக்கு பாகிஸ்தானின் ஸ்காவண்ரன் தலைவர் சஜ்ஜாத் ஹைதரும், ஆதம்புருக்கு சென்ற படைப்பிரிவுக்கு ஸ்காவண்ரன் எம்.எம் ஆலமும் தலைமையேற்றார்கள்.

பதான்கோட் விமானத் தளத்தைத் தாக்குவதில் பாகிஸ்தான் படையினர் வெற்றி பெற்றனர்.

சஜ்ஜாத் ஹைதரின் குழு தளத்தில் இருந்த இந்தியாவின் பத்து விமானங்களை அழித்தது.

ஆதம்புரில் ஆலமின் தாக்குதலை ஜகாரியா சமாளித்தார். சஜ்ஜாத் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்த முடியாமல் திரும்பினார்.

  •  

ஆலம் திரும்பிவரும்போது ரஃபீகியின் குழுவினர் அவரை சந்திக்க நேர்ந்தது. இந்தியாவின் ஏழு விமானங்கள் அந்தத் தளத்தில் தயாராக இருப்பதாக ரஃபீகிக்கு சஜ்ஜத் ஹைதர் எச்சரிக்கை விடுத்தார்.

ரஃபீகி இதற்கு முன் நடைபெற்ற யுத்தத்தில் இந்தியாவின் இரண்டு விமானங்களை வீழ்த்தியிருந்தார். எனவே ஆலமின் எச்சரிக்கைக்குப் பின்னரும் ரஃபீகி முன்னேறிச் சென்றார்.

இது எந்த விமானம்?

அதே சமயத்தில் அல்வாரா விமான தளத்தில், அப்போதுதான் பைலட் பயிற்சி எடுத்திருந்த, இதுவரை அனுபவம் இல்லாத வினோத் நேப், தனக்கும் ஏதாவது பணி வழங்குமாறு, தன்னுடைய மூத்த அதிகாரியும் குழுவின் தலைவருமான ஜானிடம் முறையிட்டார். விமான ரோந்துப்பணியில் வினோத்தை ஈடுபடச்சொன்னார் ஜான்.

1965 போர்: பாகிஸ்தானின் நோக்கம் நிறைவேறாத காரணம்படத்தின் காப்புரிமைDEFENCE.PK

வினோத் நேப் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்கிறார், "நான் அப்போது வேலைக்குப் புதியவன். எனக்கு தன்னம்பிக்கை குறைவாக இருந்ததால், விரைவாக ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஓடிச்சென்று சுவிட்சுகளை ஆன் செய்துவிட்டு விமானத்தின் இருக்கையில் அமர்ந்தேன். அப்போது ராத்தோர் ஓடிவருவதைப் பார்த்தேன். அவர் விமானத்தை உடனடியாகக் கிளப்புமாறு சைகை காட்டினார்."

நான் விமானத்தைக் கிளப்பி வானில் சென்றபோது, ராத்தோரின் விமானத்திற்கும் என்னுடைய விமானத்திற்கும் இடையே 250 மீட்டர் தூரம் இருந்தது."

"திடீரென்று மூன்று விமானங்கள் பறந்து வந்ததை பார்த்தேன். அதை நான் போகி ரக விமானம் என்று சொன்னேன். அது சேபரா அல்லது வேறு எதாவது ஒரு விமானமா என்றுகூட தெரியாது. சொல்லப்போனால் அவையும் எங்களின் விமானங்கள் என்றே முதலில் நினைத்தேன்."

"ராத்தோரின் பின்புறம் சென்று கொண்டிருந்த நான், அவர் துப்பாக்கியால் சுடுவதை அப்போதுதான் பார்த்தேன். புகை எழும்பியது. இது சேபர், ஓ மை காட், என் முன்னே இன்னொரு விமானம் வந்தது."

பிங்லே மற்றும் காந்தியின் விமானங்கள் வீழ்ந்தன

பாகிஸ்தானின் விமானங்கள் அல்வாரா விமான தளத்திற்கு அருகில் வந்தன. சைரன்கள் ஒலித்தன. விமானத் தாக்குதல்கள் தொடங்கின. தளத்தில் இருந்த படையினர் விமானத் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பதுங்கு குழிக்குள் தஞ்சம் புகுந்தனர்.

1965 போர்: பாகிஸ்தானின் நோக்கம் நிறைவேறாத காரணம்படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE

அவர்கள் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில், விமானிகள் பி.என் பிங்லே மற்றும் அதி காந்தி ஆகியோர் இயக்கிய விமானங்கள் ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

பி.வி.எஸ் ஜகன்மோஹன் மற்றும் சமீர் சோப்ரா எழுதியுள்ள 'இந்தியா பாகிஸ்தான் விமானப்போர் 1965' புத்தகத்தில், 'ரஃபீகியின் விமானம் பிங்லே மற்றும் காந்தியின் விமானங்களுக்கு இடையில் வந்தது, ஆறு ப்ரவுனிங் துப்பாக்கிகளில் இருந்து பொழிந்த குண்டு மழை பிங்லே இயக்கிய விமானத்தைத் தாக்கியதில், அதன் காக்பிட்டில் புகை நிரம்பியது. எனவே அல்வாரா விமானத் தளத்திலேயே அது கீழே விழுந்தது."

"காந்தியின் விமானத்தை ரஃபீகின் மூன்றாம் எண் செயில் செளத்ரி விமானம் தாக்கியது. 150 அடி உயரத்தில் இருந்து அல்வாரா விமானதளத்தின் வெளிப்புறத்தில் விழுந்த விமானம் நொருங்கிப்போனது."

ரஃபீகியின் விமானத்தை வீழ்த்தினார் ராத்தோர்

Image 4 1965 போரில் வீர சாகசம் புரிந்த ரஃபீகிக்கு பாகிஸ்தானின் உயரிய வீர விருது கிடைத்ததுபடத்தின் காப்புரிமைKAISER TUFAIL Image caption1965 போரில் வீர சாகசம் புரிந்த ரஃபீகிக்கு பாகிஸ்தானின் உயரிய வீர விருது கிடைத்தது

வான்வழி கண்காணிப்பை மேற்கொண்டிருந்த விமானப்படைத் தளபதி டி.என் ராத்தோரும் வினோத் நேபும், ரஃபீகியின் குழுவினரை எதிர்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது. ரத்தோர், 500 கெஜ தூரத்தில் இருந்து குறிவைத்து ரஃபீகியின் விமானத்தின்மீது சுட்டதில் விமானம் இடதுப்புறமாக கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

வினோத் நேப் பாகிஸ்தானின் மற்றொரு சேபர் விமானத்தைப் பின்தொடர்ந்தார். "நான் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தேன், ஆனால் அது கீழே சென்றுகொண்டிருந்தது. அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது, நான் எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன், முதலில் புவியீர்ப்பை சரிசெய், அப்போதுதான் குண்டு சரியாகச் செல்லும். பிறகுதான் அதை சரிசெய்தேன்."

வினோத் நேவால் சுட்டு வீழ்த்தப்பட்டு கீழே விழும் விமானம்படத்தின் காப்புரிமைPUSHPINDER SINGH Image captionவினோத் நேவால் சுட்டு வீழ்த்தப்பட்டு கீழே விழும் விமானம்

வினோத் சொல்கிறார், "என்னுடைய முதல் குண்டு, விமானத்தின் வால்பகுதியை தாக்கியது. ஆனால், ஏன் அந்த விமானத்தின் வேகத்தை அதிகரிக்கவில்லை என்று வியப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் நான் என்னுடைய விமானத்தின் வேகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது, இல்லாவிட்டால் நான் அதற்கு முன்னே சென்றிருப்பேன்."

"எந்தவொரு விமானத்தையும் வீழ்த்த 20 முதல் 50 குண்டுகள் போதுமானது என்று பயிற்சியில் கற்றுக்கொடுத்திருந்தார்கள். போரின்போது என்னிடம் 30 எம்.எம் அளவுகொண்ட நான்கு துப்பாக்கிகள் இருந்தன. ஆனால், விமானம் எனது குண்டுகளில் இருந்து தப்பிக் கொண்டேயிருந்தது.

பிபிசி ஸ்டுடியோவில் ரெஹான் ஃபஜலுடன் வினோத் நேவ் Image captionபிபிசி ஸ்டுடியோவில் ரெஹான் ஃபஜலுடன் வினோத் நேவ்

இறுதியில் வினோத்தின் முயற்சி வெற்றிபெற்றது. குண்டு எதிரியின் மீது பட்டதா இல்லையா என்று தெரியவில்லை என்றாலும், தொடர்ந்து சுட்டுக் கொண்டேயிருந்தேன். விமானத்தின் ஒரு இறக்கை உடைந்து விழுவதைப் பார்த்தேன். அப்போது விமானம் இடப்புறமாக திரும்பியது."

"பிறகு எதிரி விமானத்தின் இடப்புற இறக்கையும் உடைந்து, விமானம் எரியத் தொடங்கியது. சிதறும் விமானத்திற்கும் என்னுடைய விமானத்திற்குமான இடைவெளி ஐம்பது மீட்டரைவிட குறைவாகவே இருந்தது. சிதறும் பாகங்கள் என் பக்கம் தெறிக்கத் தொடங்கியது. நான் பிரேக் போடாமல் இருந்திருந்தால் என் கதி அதோகதிதான்."

எதிரி விமானத்தை சுட்டி வீழ்த்திய பிறகு தரையிறங்கிய வினோத்துக்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது.

வினோத் நேவால் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானம்படத்தின் காப்புரிமைUSI Image captionவினோத் நேவால் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானம்

ரஃபீகியின் அடையாள அட்டை

அல்வாராவுக்கு அருகில் சேவர் ஜெட்டின் சிதைந்த பாகங்கள் கிடைத்தன. அதன் அருகில் ஸ்காவண்ட்ரன் தலைவர ரஃபீகியின் சடலமும் கிடந்தது. அதைப் பார்த்தால், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின் அவர் இறந்திருப்பார் என தோன்றவில்லை.

ரஃபீகின் அடையாள அட்டை கிடைத்தது. அவரது உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. யுத்தம் முடிந்த பிறகு ஏர் மார்ஷல் அர்ஜுன் சிங் பாகிஸ்தான் சென்றபோது, அவர் ரஃபீகின் அடையாள அட்டையை எடுத்துச் சென்று, ரஃபீகியின் மனைவியிடம் ஒப்படைத்தார்.

அமர்ந்திருப்பவர்களில் மத்தியில் இருப்பவர் பாகிஸ்தான் விமானப்படையின் ஸ்காவண்ட்ரன் தலைவர் ரஃபீகிபடத்தின் காப்புரிமைKAISER TUFAIL Image captionஅமர்ந்திருப்பவர்களில் மத்தியில் இருப்பவர் பாகிஸ்தான் விமானப்படையின் ஸ்காவண்ட்ரன் தலைவர் ரஃபீகி

துப்பாக்கியால் சுடும்போது, குண்டுகளில் இருந்து பிரிந்து வெளியேறிய `ஷெல்கள்` (உறைகள்) அதற்குரிய பகுதிக்குள் குவிந்துக் கொண்டிருந்தன. நான் கீழே இறங்கியதும் விமானத்தில் இருந்து அதை எடுத்தபோது அவை கீழே கொட்டின. அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்த்து.

அந்த துப்பாக்கிகளை விமானத்தில் பொருத்திய பணியாளர், அந்த ஷெல்களை வாரி எடுத்து தனக்குத்தானே அபிஷேகம் செய்வதுபோல தலையில் கொட்டிக்கொண்ட காட்சி அப்படியே எனக்கு நினைவிருக்கிறது."

தான் பொருத்திய துப்பாக்கி எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்தியதை நினைத்து அவர் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தையால் விவரிக்கமுடியாது. நன் ஓடிச் சென்று அவரை கட்டிப்பிடித்து எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டேன். எனது செயலுக்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதல் மனிதர் அவர்தான்.

 

பாகிஸ்தானின் உயரிய வீர விருதுகளில் ஒன்றான 'ஹிலால்-ஏ-ஜுர்ரத்' ரஃபீகிக்கு வழங்கப்பட்டது. பாகிஸ்தானின் ராணுவ வரலாற்றாசிரியர் கைஸர் துஃபைல் கூறுகிறார், "உண்மையில், பதான்கோட்டில் இந்திய தரப்பினர் எச்சரிக்கை அடைந்துவிட்டனர். அல்வாராவின் வான்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தவர்கள், பாகிஸ்தானின் ரஃபீகி, யூனுஸ் மற்றும் செசில் சௌத்ரி தாக்குதல் நடத்த முயன்றபோது, எதிர்தாக்குதல் நடத்திவிட்டார்கள்."

துஃபைல் சொல்கிறார், "ரஃபீகி ஒரு விமானத்தை வீழ்த்திவிட்டார். மற்றொரு விமானத்தை குறிவைத்தபோது, அவருடைய துப்பாக்கி 'ஜாம்' ஆகிவிட்டது. அங்கிருந்து கிளம்புவதே சிறந்தது என்று நினைத்து அவர் கிளம்புவதற்குள், பின் தொடர்ந்து வந்த இந்திய விமானத்தில் இருந்த ராத்தோர் தாக்குதல் நடத்தினார். ரஃபீகியின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது."

நேபுக்கு பயிற்சி அவசியம் இல்லை

பிற்காலத்தில் ராத்தோர் இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் பதவிவரை உயர்ந்தார். இப்போது சண்டிகரில் வசிக்கும் அவரின் உடல்நிலை குன்றியிருக்கிறது. ரஃபீகியின் விமானத்தை வீழ்த்திய நினைவுகூட அவருக்கு தற்போது இல்லை.

ராத்தோருக்கும், வினோத் நேபுக்கும் அவர்களது செயலுக்காக வீர சக்ர விருது வழங்கப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு விமானப்படைத் தளபதி தனது கான்பெரா விமானத்தில் அல்வாரா விமான தளத்திற்கு வந்ததாக சொல்கிறார் வினோத் நேப்.

1965 போரில் வீரச் செயல் புரிந்த வினோத் நேப் வீர் சக்ர விருதுபெறுகிறார்படத்தின் காப்புரிமைVINOD NAIB Image caption1965 போரில் வீரச் செயல் புரிந்த வினோத் நேப் வீர் சக்ர விருதுபெறுகிறார்

பதக்கம் பெற்ற பைலட்டுகளை சந்தித்தார் அர்ஜுன் சிங். 'தற்போது பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாயா?' என்று வினோத்திடம் கேட்டிருக்கிறார் விமானப்படைத் தளபதி.

ஆமாம் என்ற பதில் கிடைத்ததும், வினோதின் மேலதிகாரியை அழைத்து, 'விமானங்களை சுட்டு வீழ்த்தும் பயிற்சியை பைலட்டுகளுக்கு தருகிறோம், இவர் ஏற்கனவே அதை வெற்றிகரமாக செய்துவிட்டார், பிறகு எதற்கு இவருக்கு பயிற்சி?, தேவையில்லை' என்று சொன்னார்.

அதாவது, செப்டம்பர் ஆறாம் தேதியன்று, முழு பயிற்சி வகுப்புகளும், பாடத்திட்டங்களும் முடிவடையாதபோதே வினோத் யுத்தத்தில் பங்கேற்றார், எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்தி, வெற்றிவாகை சூடி, பதக்கமும் பெற்றுவிட்டார், எனவே இனிமேல் எதற்கு பயிற்சி என்பதே விமானப்படை தளபதி அர்ஜீன் சிங்கின் கேள்வியின் நோக்கம்.

http://www.bbc.com/tamil/global-41229054

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் படையினரின் ரத்தத்தால் நிறம் மாறிய ஏரி நீர்

1965 - இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே 22 நாட்கள் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் ஐந்தாம் பகுதி.

வீரர்களின் குருதியால் செந்நிறமான ஏறிபடத்தின் காப்புரிமைBRIG KANWALJIT SINGH

"பர்க்கி, 1965, செப்டம்பர் 10", இது ஃபிரோஜ்புர் ராணுவ முகாமில் சிவப்பு கல்லால் உருவாக்கப்பட்ட நினைவிடத்தில் எழுதப்பட்டுள்ள வாசகம். அதன் அருகில் பாகிஸ்தானின் ஒரு டாங்கி நிறுத்தப்பட்டுள்ளது. அருகில் உள்ள மைல் கல்லில், "லாகூர் 15 மைல்" என்று எழுதப்பட்டுள்ளது.

1965 செப்டம்பர் ஆறாம் தேதியன்று, பாகிஸ்தான் எல்லையை நோக்கி முன்னேறுமாறு சீக்கிய ரெஜிமெண்டின் நான்காவது பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது. இருள் சூழும் நேரத்தில் அவை 'கால்டா' சென்றடைந்தன.

கால்டா மற்றும் 'பர்க்கி'க்கு இடையில், 'ஹுடியாரா' என்ற கிராமம் இருந்தது, ஹுடியாரா என்ற பெயரில் ஒரு கால்வாயும் அங்கு இருந்தது.

காலாட்படையின் 48வது பிரிவும் அன்றே ஹுடியாரா சென்றடைந்தாலும், பாகிஸ்தானின் கடுமையான துப்பாக்கிச் சூட்டினால் கால்வாயை கடப்பது அசாத்தியமானது.

இரவில் இருளின் துணைகொண்டு தாக்கலாம் என்று போட்ட திட்டம், கால்வாயை கடக்கும் பாலத்தை பாகிஸ்தான் வீரர்கள் கைப்பற்றியதால் தடைபட்டுப்போனது.

குண்டு மழைக்கிடையே தயாரான பாலம்

"பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, இந்திய ராணுவத்தின் டாங்கிகளை முன்னேற முடியாமல் தடுத்துவிட்டது. பார்க்கப்போனால் அந்த கால்வாய் ஒன்றரை அடி ஆழம் கொண்டதுதான். ஆனால் அகலம் ஐம்பது அடியாக இருந்ததால், டாங்கிகளை இறக்கமுடியாத சூழ்நிலை உருவானது" என்கிறார் கர்னல் மன்மோஹன் சிங்.

வீரர்களின் குருதியால் செந்நிறமான ஏறிபடத்தின் காப்புரிமைDEFENCE.PK

பாகிஸ்தானின் குண்டு மழைக்கு இடையே, சீக்கிய ரெஜிமென்டின் இரண்டு பிரிவுகள் பாலத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்கள். மாலைக்குள் பாலம் தயாராகிவிட்டாலும், அது டாங்கிகள் செல்வதற்குப் போதுமான அளவில் இல்லை.

மத்திய இண்டியா ஹார்ஸின் கர்னல் ஜோஷி, ஆபத்தை எதிர்கொள்ளத் தயாரானார். புதிதாக உருவாக்கப்பட்ட பாலத்தில் தனது டாங்கியை முதலில் செலுத்த முடிவெடுத்தார்.

அவரை பின்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக பிற டாங்கிகள் அணிவகுத்துச் சென்றன. அடுத்த நாள் காலை, செப்டம்பர் மாதம் எட்டாம் தேதியன்று, அவர்கள் ஹுடியாரா கால்வாயை கடந்திருந்தார்கள்.

விமான எதிர்ப்பு துப்பாக்கிகள்

பாகிஸ்தான் ராணுவம் கடுமையான குண்டுவீச்சை நடத்தியது. "ராணுவத்தினரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் அதை 'கார்பெட் பாமிங்' என்று சொல்வோம். அந்தப் பகுதியின் ஒவ்வொரு அங்குலத்திலும் குண்டுகள் விழுந்தன" என்கிறார் கர்னல் மன்மோஹன் சிங்.

"சமயோஜிதமாக நாங்கள் இரவு நேரத்திலேயே பதுங்கு குழிகளை தோண்டியிருந்தோம் என்பதே எங்களுக்கு சாதகமாக இருந்தது. பதுங்கு குழிகளில் இருந்த எங்கள் தலைகளுக்கு மேல் குண்டுகள் பறந்தன" என்று நினைவுகூர்கிறார் கர்னல் மன்மோகன் சிங்.

வீரர்களின் குருதியால் செந்நிறமான ஏறிபடத்தின் காப்புரிமைUSI Image captionநான்காம் சீக்கிய ரெஜிமெண்ட் அதிகாரிகளிடம் கைகுலுக்கும் இந்திய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன்

குண்டுமழை பொழிந்துகொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், நடுவில், விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை கீழே திருப்பி,பர்க்கியை நோக்கிச் சென்ற இந்திய ராணுவத்தினரின் பக்கம் திருப்பிவிட்டனர்.

பிரிகேடியர் கன்வல்ஜீத் சிங் தனது நினைவுகளை கூறுகிறார், "வானத்தில் சூரியனின் வெப்பம் தகித்த அந்த பகல்பொழுதில், பதுங்கு குழிகள் மேலும் அதிக வெப்பமாக இருந்தது, எங்களுக்கு மூச்சு முட்டியது. தாகம் தொண்டையை அடைத்தது. ஒரு துளி தண்ணீருக்காக தவித்தோம். ஆனால், யாரும் இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றோம்"

வீரர்களின் குருதியால் செந்நிறமான ஏறிபடத்தின் காப்புரிமைBRIG KANWALJIT SINGH Image captionபர்க்கியில் இந்தியா வெற்றி பெற முக்கியமான கர்னல் கன்வல்ஜித் சிங்

இந்திய வீரர்கள் இரவு நேரத்தில் பர்க்கியில் தாக்குதல் நடத்தலாம் என்பது திட்டம். செண்ட்ரல் இண்டியா ஹார்ஸின் ஷர்மன் டாங்கி, விளக்குகளை எரியவிட்டுக் கொண்டு, குண்டு தாக்குதல் நடத்திக் கொண்டே முன்னேறும். அவரை பின் தொடர்ந்து நான்காவது சீக்கிய ரெஜிமெண்ட் வீரர்கள் செல்வார்கள் என்ற திட்டம் தெளிவாக இருந்தது.

தாக்குதல் தொடங்குவதற்கு முன்னர், லெஃப்டிணெண்ட் கர்னல் அனந்த் சிங் இந்திய வீரர்களிடையே ஆற்றிய உரை எழுச்சிமிக்கதாக இருந்தது. சீக்கிய மொழியில் அவர் வழங்கிய உரையின் தமிழாக்கம்:

"நமது விதி நமக்கு முன் நிற்கிறது, வீட்டிற்கு திரும்பி செல்வதா வேண்டாமா என்ற கேள்வி நமக்கு முன்னே நிற்கிறது".

"நமது திருமண ஊர்வலத்தை முன்னெடுத்து செல்கிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நமது குண்டுகளின் ஓசை, மாப்பிள்ளை ஊர்வலத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகள். இது, தீபாவளியன்று எழுப்பப்படும் பட்டாசுகளின் ஒலியை விட அதிகமாக இருக்கவேண்டும்".

"பர்கியே மணப்பெண். மணப்பெண்ணை அடையப்போகும் மணமகனைப் போன்று உத்வேகத்துடன் முன்னேறுங்கள்"

தெறிக்கும் நெருப்பு

ஆனால் பாகிஸ்தான் தரப்பினர், இந்தியர்களின் தாக்குதலுக்கு முன்னரே தாக்கத் தொடங்கிவிட்டனர். தொடர்ந்து தீவிரமான தாக்குதல்களை முன்னெடுத்தனர்.

கன்வல்ஜீத் சிங் கூறுகிறார், "அவர்களின் தீவிரத் தாக்குதல் தாக்குப்பிடிக்க முடியாத அளவு இருந்தது. முக்கால் மணி நேரத்தில் எங்கள் மீது 3000 குண்டுகளை கொண்டு தாக்கினார்கள்".

வீரர்களின் குருதியால் செந்நிறமான ஏறிபடத்தின் காப்புரிமைBRIG KANWALJIT SINGH

பாகிஸ்தானியர்கள், துப்பாக்கியை செருகுமாறு ஓட்டைகள் விடப்பட்டு, கான்கிரீட்டால் கட்டப்பட்ட 11 பாதுகாப்பு சாவடிகளை (Pillbox) கிராமம் முழுவதும் அமைத்திருந்தார்கள். அவை ஒவ்வொன்றிலும் குறைந்தது மூன்று வீரர்களும், இலகு ரக மற்றும் நடுத்தர ரக இயந்திர துப்பாக்கிகளும், ஸ்டென் ரக துப்பாக்கிகளும் இருந்தன.

கர்னல் மன்மோகன் சிங் சொல்கிறார், "எங்களது 25 பவுண்ட் துப்பாக்கிகளால் அவர்களின் பாதுகாப்பு சாவடிகளுக்கு சாதாரண சேதத்தைக் கூட ஏற்படுத்தமுடியவில்லை. அவர்களை தடுக்க ஒரே வழியாக, உயிரை பணயம் வைத்து, ஓடிச்சென்று அவர்களுடைய பில் பாதுகாப்பு சாவடிகளுக்குள் நுழைந்துவிட்டோம். கையெறி குண்டுகளை அவர்கள் மீது வீசியெறிந்து அவர்களை கொன்றோம்".

சகாக்களையே தாக்கிய டாங்கிகள்

பர்க்கிக்கு 250 மீட்டர் தொலைவில் இருந்த சீக்கிய ரெஜிமெண்ட் வீரர்களுக்கும் பாகிஸ்தான் வீர்ர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்திய வீரர்கள் பாதுகாப்பு சாவடிகளை நோக்கி ஊர்ந்து சென்று, கையெறி குண்டுகளை வீசியெறிந்து துப்பாக்கிச் சூட்டை நிறுத்தினார்கள்.

16-ஆவது மைல்கல்லுக்கு அருகே நின்று, அங்கு வந்து கொண்டிருக்கும் டாங்கிகளுக்காக காத்துக் கொண்டிருக்குமாறு கர்னல் லெஃப்டினெண்ட் கன்வல்ஜீத் சிங்குக்கு உத்தரவு வந்தது.

எட்டு மணி வரை டாங்கிகள் வரவில்லை. எனவே, அவர் ரேடியோவில் கர்னல் அனந்த் சிங்கிடம் உரத்த குரலில் சப்தமிட்டார், "முன்னேற உத்தரவிடுங்கள்". பாயிபண்ட் என்று குறிப்பிட்டு அவரை அழைத்தார்.

வீரர்களின் குருதியால் செந்நிறமான ஏறிபடத்தின் காப்புரிமைBRIG KANWALJIT SINGH Image caption1965 போரில் லெஃப்டிணெண்டாக இருந்த பிரிகேடியர் கன்வல்சிங் மற்றும் கர்னல் பி.பி.எஸ் விர்க்

'பாயிபண்ட்' என்பது ரகசிய குறியீடு என்று கன்வல்ஜீத் சிங்குக்கு தெரியும். அதன் அர்த்தம் டாங்கி. 20 நிமிடத்தில் அங்கு வந்த டாங்கி, கண் முன்னால் என்ன இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ளாமல் உடனடியாக குண்டு தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டார்கள்.

இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இந்திய வீர்ர்கள் ஏற்கனவெ பர்க்கிக்கு வந்துவிட்டது அவர்களுக்கு தெரியவில்லை. அந்த டாங்கியில் இருந்தவர்கள் தனது சகாக்களின் மீதே தாக்குதல் நடத்திவிட்டார்கள்!

கன்வல்ஜீத் சிங் உடனே டாங்கியை நோக்கி கத்திக் கொண்டே ஓடினார். டாங்கியை ஓட்டியவருக்கு கன்வல்ஜித்தின் கூக்குரல் கேட்கவில்லை. எனவே அவர் டாங்கியின் மீது ஏறி, தனது ஸ்டென் துப்பாக்கியால் ஓசை எழுப்பினர். வெளியே தலைகாட்டியவரிடம், தாக்குதலை நிறுத்திவிட்டு, இடப்புறமாக தாக்குங்கள் என்று சொன்னபிறகே நிலைமை மாறியது.

முதலுதவி

காயமடைந்த இந்திய வீரர்களுக்கு முதலுதவிகூட வழங்க முடியவில்லை. அவர்களை தொட்டு பார்க்கக்கூடவில்லை, ஏனெனில் யுத்தக்களத்தில் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பர்க்கியை அடைவதற்கான கடைசி 90 மீட்டர் மிகவும் கடினமானதாக இருந்தது. ஆனால் சீக்கிய ரெஜிமெண்டின் வீர்ர்கள், "போலோ ஸோ நிஹால் சத் ஸ்ரீ அகால்" என்று முழக்கமிட்டுக் கொண்டே தீரத்துடன் முன்னேறினார்கள்.

வீரர்களின் குருதியால் செந்நிறமான ஏறிபடத்தின் காப்புரிமைBRIG KANWALJIT SINGH

அதுவரை யுத்தகளத்தில் வீரத்துடன் சாகசம் செய்துக் கொண்டிருந்த பாகிஸ்தானி வீர்ர்கள் சோர்வடைய தொடங்கினார்கள். அவர்களின் உற்சாகம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

அப்போது வானத்தில் வீசப்பட்ட இரண்டு தீப்பந்தங்கள் இந்திய தரப்புக்கு உற்சாகமளித்தது. வெற்றி பெற்று பர்க்கியை கைப்பற்றியதற்கான சங்கேத குறியீடான அது, இந்திய வீரர்களை நடனமாட வைத்த்து.

செந்நிறமாக மாறிய ஏரி நீர்

பிரிகேடியர் கன்வல்ஜீத் சிங் நினைவுகூர்கிறார், "அடுத்த நாள் தன்னுடைய சகா, லெஃப்டினெண்ட் பி.எஸ் சஹலுடன் நான் ஒரு பதுங்க குழியில் இருந்தேன். தாகத்தால் தவித்த நான் தண்ணீர் வேண்டும் என்று ஒரு சிப்பாயிடம் கேட்டேன். அவர் ஒரு குவளை நீர் கொண்டுவந்தார்…

அதை ஒரு மிடறு அருந்திவிட்டேன், ஆனால் சுவை வித்தியாசமாக இருந்த்தால், தண்ணீரை பார்த்தேன், அது செந்நிறமாக இருந்தது.

வீரர்களின் குருதியால் செந்நிறமான ஏறி Image captionபிபிசி ஸ்டுடியோவில் ரெஹான் ஃபைஜலுடன் பிரிகேடியர் கன்வல்சிங்

கன்வல்ஜீத் சிங் தன்ணீர் ஏன் இப்படி இருக்கிறது, எங்கிருந்து கொண்டு வந்தாய் என்று கேட்டார். அவர் அருகிலிருந்த ஒரு ஏரியை சுட்டிக்காட்டினார். அங்கு சென்று பார்த்தால் ஏரி முழுவதும் செந்நிறமாக இருந்தது.

ஏரியில் பாகிஸ்தான் படையினரின் சடலங்கள் மிதந்து கொண்டிருந்தது. அவர்கள் உடலில் இருந்து வெளியேறிய ரத்தம், ஏரி நீரை செந்நிறமாக்கியிருந்தது. எனக்கு இருந்த தாகமோ தொண்டையை அடைத்தது.

வேறுவழியில்லாமல், உப்பு கலந்த நீர் கண்ணில் இருந்து வழிய, ரத்தம் கலந்த நீரில் ஒரு மிடறை விழுங்கினேன். ஆனால் அடுத்த நிமிடமே வாந்தியெடுத்து விட்டேன்."

பாகிஸ்தான் கதாநாயகர் அஜீஜ் பட்டி

பாகிஸ்தான் தரப்பில் பர்க்கியை பாதுகாத்தவர் பஞ்சாபின் 17ஆம் படைப்பிரிவின் தலைவர் மேஜர் ராஜா அஜீஜ் பட்டி. மிகுந்த வீரத்துடன் அவர் யுத்தத்தை எதிர்கொண்டார். இந்திய தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டினால் யுத்தத்தின் இரண்டாவது நாளில் அவர் வீரமரணம் எய்தினார்.

வீரர்களின் குருதியால் செந்நிறமான ஏறிபடத்தின் காப்புரிமைDEFENCE.PK Image caption1965 போரில் வீரதீர செயல்களை புரிந்த மேஜர் அஜீவ் பட்டிக்கு மரணத்திற்கு பிந்தைய விருதாக நிஷான் ஏ ஹைதர் விருது வழங்கப்பட்டது

அவரை வீழச்செய்த குண்டு அவரை தாக்கியபோது, அவர் ஒரு மரத்தின் உச்சியில் நின்றுக் கொண்டு இந்திய தரப்பினர் மீது குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தார்.

பிரிகேடியர் கன்வல்ஜீத் சிங் சொல்கிறார், "எங்கள் மீது பாகிஸ்தானி தரப்பினரின் கடுமையான தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. அவர்களை வழிநடத்துபவர்களின் தலைமைப் பண்பே அதற்கு காரணம் என்பது எங்களுக்கு தெரிந்தது. நீண்ட நேரம் எங்கள் தாக்குதலை சமாளித்த அவர், சிறந்த வழிகாட்டி, மாவீரர்.

1965 போரில் பாகிஸ்தானுக்காக உயிர் தியாகம் செய்த மேஜர் ராஜா அஜீவ் பட்டிக்கு, மரணத்திற்கு பிந்தைய விருதாக நிஷான் ஏ ஹைதர் விருது வழங்கப்பட்டது

http://www.bbc.com/tamil/global-41232333?ocid=socialflow_facebook

Link to comment
Share on other sites

இந்திய-பாகிஸ்தான் போர்: முதல் நாள் வெற்றி, அடுத்த நாள் போர்க் கைதி

 
படைவீரர்கள்படத்தின் காப்புரிமைBRIG KANWALJIT SINGH Image captionபோர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பாகிஸ்தானிலிருந்து திரும்பிய பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இடது பக்கத்தில் முதலில் இருப்பவர் அனந்த் சிங், நடுவில் இருப்பவர் கன்வல்ஜித் சிங்.

1965 இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே 22 நாட்கள் நடைபெற்ற போரில், சீக்கிய ரெஜிமெண்டின் நான்காவது பிரிவு பர்க்கியில் நடைபெற்ற மோதலில் சிறப்பாக செயல்பட்டு ஆனந்தக் கூத்தாடியது. ஆனால் யுத்தத்தின் போக்கு எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.

1965, செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி காலை ஒன்பதரை மணிக்கு படைப்பிரிவின் கமாண்டிங் அதிகாரி கர்னல் அனந்த் சிங், காலாட்படையின் ஏழாவது பிரிவின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார்.

மேற்கு கமாண்டின் தளபதியும், சீக்கிய ரெஜிமெண்டின் கர்னலுமான லெப்டினென்ட் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங், அனந்த் சிங்கிற்கு சிறப்பு பொறுப்பு ஒன்றை ஒப்புவித்தார்.

வல்தோஹா வரை லாரியில் சென்று, பிறகு அங்கிருந்து 19 கி.மீ. தொலைவு நடை பயணமாக பாகிஸ்தான் பிரதேசத்திற்குள் நுழைந்து, கேம்கரன்-கசூர் சாலையில் சாலைத் தடுப்பு அமைக்க வேண்டும் என்பதே, அனந்த் சிங்கிற்கு வழங்கப்பட்ட பொறுப்பு.

இந்தப் பணி அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி காலை ஐந்தரை மணிக்குள் முடிவடையவேண்டும். அப்போது, கேம்கரணில் போரில் ஈடுபட்டிருக்கும் இந்தியப் படையின் நான்காம் மவுண்டன் பிரிவினர் காலை எட்டு மணியளவில் அனந்த் சிங்கை சந்திப்பார்கள் என்பது வகுக்கப்பட்ட திட்டம்.

சாராகரி போர்

சீக்கிய ரெஜிமெண்டின் நான்காம் படைப்பிரிவின் 'சிறந்த போர் பிரிவுக்கான விருது' நாள், செப்டம்பர் 12.

68 ஆண்டுகளுக்கு முன், 1897 செப்டம்பர் 12ஆம் நாளன்று, சீக்கிய ரெஜிமெண்டின் நான்காவது படைப்பிரிவின் 22 வீரர்கள் ஆயிரக்கணக்கான அஃப்ரீதி மற்றும் ஓர்கஜாயி பழங்குடியினருடம் சண்டையிட்டனர். இறுதிவரை அவர்களை எதிர்கொண்ட சீக்கிய ரெஜிமெண்டின் வீரர்கள், தங்கள் உயிரைவிட்டாலும், ஆயுதங்களை துறக்கவில்லை.

டாங்கி படைபடத்தின் காப்புரிமைWWW.BHARATRAKSHAK.COM

காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய சாராகரி போர், மாலை நான்கு மணி வரை தொடர்ந்தது. அந்த போரில் ஈடுபட்ட 22 வீரர்களுக்கும் 'Indian Order of Merit' என்ற பிரிட்டிஷ் காலத்து மிக உயரிய விருது வழங்கப்பட்டது. IOM என்று அறியப்படும் அந்த விருது, இன்றைய பரம்வீர் சக்ரா விருதுக்கு இணையானது.

இந்த யுத்தம், சாராகரி போர் என்றும் அழைக்கப்படுகிறது. சாகசங்கள் நிறைந்த இந்த யுத்தமானது, உலக அளவில் சிறப்பாக குறிப்பிடப்படும் எட்டு யுத்தங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த 'சிறந்த போர் பிரிவுக்கான விருது' நாளை (Battle honour day), சீக்கிய ரெஜிமெண்ட் வீர்ரகள் தற்போதைய போரில் வெற்றிபெற்று திரும்பிய பிறகு கொண்டாடவேண்டும் என்று ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் விரும்பினார்.

பர்க்கியில் இருந்து கேம்கரணை நோக்கி முன்னேறிய படை

இருந்தபோதிலும், அனந்த் சிங்கின் படையணியினருக்கு முதல் நாள் போரில் ஏற்பட்ட காயங்கள் பலமாக இருந்தது. தொடர்ந்து ஏழு நாட்களாக ஓய்வின்றி போரில் ஈடுபட்டிருந்த அவர்கள் தளர்வுற்று இருந்தாலும், மேலதிகாரியின் உத்தரவை சிரமேற்கொண்டு, சவாலை எதிர்கொண்டு களத்தில் இறங்கினார்கள்.

செப்டம்பர் 11ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு உற்சாகத்துடன் குண்டுகள் முழக்கத்துடன் பர்க்கியில் இருந்து கிளம்பி, கால்ரா வரை வீறுநடையிட்டுச் சென்ற அவர்கள், அங்கிருந்து லாரிகளில் வல்தோஹா சென்றடைந்தனர்.

பிபிசி ஸ்டுடியோவில் ரெஹான் ஃபஜல் மற்றும் பிரிகேடியர் கன்வல்ஜீத் சிங் Image captionபிபிசி ஸ்டுடியோவில் ரெஹான் ஃபஜல் மற்றும் பிரிகேடியர் கன்வல்ஜீத் சிங்

அந்தப் போரில் பங்கேற்ற பிரிகேடியர் கன்வல்ஜீத் சிங் தனது நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார், ''மிகவும் மோசமாக சோர்வுற்றிருந்தோம். பல நாட்களாக ஆடைகளைக் கூட மாற்றவில்லை. கிணற்றில் இருந்த ரத்த சகதி கலந்த நீரை பருகியதில் வயிறு கெட்டுப்போயிருந்தது. ஆனால், தலைமை இட்ட உத்தரவை நிறைவேற்ற சித்தமாயிருந்தோம். பல நாட்களாக போரில் ஈடுபட்டு தளர்ந்திருந்த எங்களுக்கு லெஃப்டினெண்ட் விர்க் சூடான உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.''

ரயில்வே பாதையை ஒட்டி அணிவகுப்பு

படையினரிடையே பேசிய லெஃப்டினெண்ட் கர்னல் அனந்த் சிங், ''கடவுள் நமக்கு மேலும் சிறப்பு சேர்க்க விரும்புகிறார். சாராகரி தியாக தினத்தை மேலும் ஒரு வெற்றியோடு சேர்த்து கொண்டாடுவோம். சாராகரி போரில் ஈடுபட்ட மாவீர்ர்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். மற்றுமொரு முறை வீரத்தின் பெயரை நமது படைப்பிரிவு நிலைநிறுத்தட்டும்'' என்று வீர உரையாற்றினார்.

சீக்கிய ரெஜிமெண்டின் 300 வீர்ர்களின் அணிவகுப்பு, செப்டம்பர் 12ஆம் தேதியன்று இரவு ஒரு மணிக்கு வல்தோஹாவில் தொடங்கியது. அந்தப் பகுதியை நன்கு அறிந்திருந்த இரண்டு வீரர்கள், ரயில்வே பாதையை ஒட்டி அணிவகுத்துச் சென்ற வீரர்களுக்கு வழிகாட்டியவாறு முன்சென்றனர்.

டாங்கி படைபடத்தின் காப்புரிமைBHARAT RAKSHAK

பாகிஸ்தான் டாங்கிகளை எதிர்கொண்டால் பயன்படுத்த வசதியாக தோள்களில் துப்பாக்கிகளை சுமந்து சென்ற அணிவகுப்பு மெதுவாகவே சென்றது.

அந்தப் பகுதியில் பாகிஸ்தானின் டாங்கிகள் இல்லை என்று தகவல் கிடைத்தது, எனவே ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்காது என்று நினைத்த அனந்த் சிங், வீரர்கள் வேகமாக செல்வதற்காக கனமான துப்பாக்கிகளை அங்கேயே விட்டு செல்லலாம் என்று முடிவெடுத்தார்.

பிறகு தொடர்ந்து சென்றபோது, சிக்னல் கிடைப்பதும் நின்றுபோனது, வெளியுலகத்தை தொடர்பு கொள்ள படைப்பிரிவிடம் வேறு எந்த சாதனமும் இல்லை.

கன்வல்ஜீத் சிங் சொல்கிறார், ''காலை ஐந்து மணிக்குள் இலக்கை சென்றடையவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. எனவே, நாங்கள் நடந்தோம் என்று சொல்வதைவிட ஓடினோம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். செல்லும் வழியில் எதிர்பட்ட ஒரு பாகிஸ்தானிய படைப்பிரிவை விரட்டிவிட்டு நாங்கள் முன்னேறினோம்.''

பாகிஸ்தானி வீரர்கள் சுற்றி வளைத்தனர்

அதிகாலை நான்கு மணி சுமாருக்கு சீக்கிய ரெஜிமெண்டின் இரண்டாம் பிரிவின் வீரர்கள், கேம்கரண் கிராமத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் வந்துவிட்டனர். அங்கு நாற்புறமும் டாங்கிகள் சூழ பாகிஸ்தான் படை வீரர்களை பார்த்து இந்திய வீரர்கள் திகைத்து நின்றார்கள்.

பாகிஸ்தான் வீரர்களும், டாங்கிகளும் வயல்வெளிகளில் மறைவாக இருந்தது பிறகுதான் தெரியவந்தது. எதிரி தரப்பினரை கண்ட பாகிஸ்தானிய ராணுவத்தினர் டாங்கிகளில் ஏறி, துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே சுற்றிவளைத்தனர்.

1965 போருக்கு பின் வீரர்களுடன் கைகுலுக்கும் மேஜர் ஜெனரலுடன் நிற்கும் கன்வல்ஜீத் சிங்படத்தின் காப்புரிமைKANWALJIT SINGH Image caption1965 போருக்கு பின் வீரர்களுடன் கைகுலுக்கும் மேஜர் ஜெனரலுடன் நிற்கும் கன்வல்ஜீத் சிங்

பாகிஸ்தான் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்திய தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டு, கன்வல்ஜீத் சிங் உட்பட 121 பேர் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

பிரிகேடியர் கன்வல்ஜீத் சிங் கூறுகிறார், ''அனந்த் சிங்கிற்கு அருகில் நான் சென்று கொண்டிருந்தேன். பாகிஸ்தானின் டாங்கிகளை பார்த்ததும், அனைவரும் ஒரே நேரத்தில் செல்லவேண்டாம் என்று அவர் சொன்னார். எனவே நாங்கள் நாலா புறங்களிலும் பிரிந்தோம். இல்லாவிட்டால் சேதத்தின் அளவு அதிகரித்திருக்கும். 40-50 கஜ தொலைவு சென்றதும், பாகிஸ்தானி டாங்கிகளின் ஓசை கேட்டது. எங்களை நிற்குமாறு சொல்லிவிட்டு, அனந்த் சிங் மட்டும் முன்னேறிச் சென்றார். என்னிடம் இருந்த டாங்கிகளை எதிர்த்து சுட பயன்படுத்தும் துப்பாக்கியை கொண்டு சுட முயற்சித்தேன், ஆனால் அது வேலை செய்யவில்லை.''

கைகளை மேலே தூக்கினோம்

கன்வல்ஜீத் சிங் மேலும் சொல்கிறார், ''என்னுடைய கையில் இருந்த துப்பாக்கியை கீழே வீசிவிட்டு, முதலில் தண்ணீர் குடிக்கலாம் என்று நினைத்தேன், அந்த சமயத்தில் ஒரு குண்டு எனது தோளை தாக்கியதில் குருதி பெருகியது. அந்த நிலையிலும் நான் கையை உயர்த்தினேன். அவர்கள் எங்கள் கண்களை கட்டியதோடு, கைகளை லாரிகளில் பக்கவாட்டில் கட்டினார்கள்.''

பாதுகாப்பு அமைச்சர் யஷ்வந்த் ராவ் சவானுடன் ஹர்பக்‌ஷ் சிங்படத்தின் காப்புரிமைHARMALA GUPTA Image captionபாதுகாப்பு அமைச்சர் யஷ்வந்த் ராவ் சவானுடன் ஹர்பக்‌ஷ் சிங்

அந்தப் போரில் பங்கேற்ற கர்னல் சஹலின் அனுபவம் இது, ''நான் திரும்பி ஓட முயற்சித்தேன். 50 கஜத் தொலைவில் நின்றிருந்த டாங்கியில் இருந்த எதிர் தரப்பினர் என்னை பார்த்து சுடத் தொடங்கியதுடன், ஆயுதத்தை கீழே போடு, இல்லாவிட்டால் கொன்றுவிடுவேன் என்றும் கத்தினார்கள். சரணடைவதைத் தவிர வேறு வழி?''

'முட்டாள்தனம்'

இந்த சம்பவங்களை அடுத்த நாள் தெரிந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சர் சவான், 'முட்டாள்தனமான சம்பவம்' என்று தன்னுடைய நாட்குறிப்பில் குறிப்பிட்டார்.

'இன் த லைன் ஆஃப் டியூட்டி (In the line of duty) என்ற தனது சுயசரிதையில் இந்த சம்பவத்தை பற்றி குறிப்பிடும் ஹர்பக்‌ஷ் சிங், ''பர்க்கியை கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சீக்கிய ரெஜிமெண்டின் நான்காவது படைபிரிவு வீரர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக ஒரு நொடி கூட கண் அயரவில்லை என்பதுகூட எங்களுக்கு தோன்றவில்லை. சக வீரர்களில் பலர் உயிரிழந்தனர். அந்த படையின் கமாண்டிங் அதிகாரி அனந்த் சிங் மிகச் சிறந்த வீரர், தன்னுடைய படைப்பிரிவினர் மிகவும் மோசமாக சோர்வுற்றிருப்பதாகவோ, தளர்ந்திருப்பதாகவோ அவர் சொல்லவேயில்லை.''

ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்கிடம் பர்க்கி போரை பற்றி பேசச் சென்ற லெப்டினெண்ட் ஜெனரல் கன்வல்ஜித் சிங் (வலப்புறம்)படத்தின் காப்புரிமைKANWALJIT SINGH Image captionஜெனரல் ஹர்பக்ஷ் சிங்கிடம் பர்க்கி போரை பற்றி பேசச் சென்ற லெப்டினெண்ட் ஜெனரல் கன்வல்ஜித் சிங் (வலப்புறம்)

அவர் சொல்கிறார், ''உங்கள் அணியினரை இப்படி நகர்த்தியிருக்க்க்கூடாது. மிகச் சிறந்த வெற்றியை பர்க்கியில் பெற்ற அந்த வீரர்கள் சரியாக உணவு உண்ணவில்லை. 39 பேர் உயிரிழந்து, 125 பேர் மோசமாக காயமடைந்திருந்தார்கள். அந்த சூழ்நிலையில் முற்றிலும் புதிய இடத்திற்கு அவர்களை அனுப்பியது, ஒரு சூதாட்டம். வெற்றி பெற்றால் கொண்டாட்டம், தோற்றுப்போனால் என்ன ஆகும் என்பது நிதர்சனமாக உங்கள் கண் முன்னே இருக்கிறது.''

இந்த சம்பவம் பற்றிய செய்திகள் அப்போது ஊடகங்களிடம் இருந்து ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/india-41247966

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்து வெடிபொருள் ரயில், கவச வாகனங்கள் மீது ராக்கெட் தாக்குதல்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1965- இல் 22 நாட்கள் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் ஏழாவது பகுதி.

விமானப்படைபடத்தின் காப்புரிமைPUSHPINDAR SINGH

நான்கு இந்திய விமானங்கள் 100 அடி உயரத்தில், 580 நாட் என்ற வேகத்தில் பறந்து இந்திய எல்லையைக் கடந்தன. பர்க்கியில் இச்சாஹில் கால்வாயை கடந்த பிறகு 30 டிகிரி இடப்புறமாக திரும்பி சென்ற சில நிமிடங்களில் ராய்விண்ட் ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியை அடைந்தன.

ரயில் நிலையத்திற்குள் கனரக வாகனங்கள் மற்றும் கவச வாகனங்கள், வெடிபொருட்கள் கொண்ட சரக்கு ரயில் ஒன்று இருப்பதை விமானி லெப்டினன்ட் சி.கே.கே.மேனன் கவனித்துவிட்டார். ரயிலை குறிவைக்கலாம் என்று சக விமானிகளான குல்லார், நேகி மற்றும் பூப் பிஷ்னோய் ஆகியோருக்கு சமிக்ஞை அனுப்பினார் மேனன்.

விமானங்களை தாக்கக்கூடிய துப்பாக்கிகளில் இருந்து தப்பிப்பதற்காக, வேண்டுமென்றே ரயில் நிலையத்தை தாண்டி பறந்தனர். எனவே, ஆயுதங்களையோ, சரக்கு ரயிலையோ இந்திய விமானங்கள் பார்த்திருக்க முடியாது என்று கீழே இருந்த பாகிஸ்தான் தரப்பினர் கருதிவிட்டார்கள்.

ரயில் பெட்டிகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன

போர் விமானம்படத்தின் காப்புரிமைPUSHPINDAR SINGH Image captionதாக்குதலுக்கு தயாரான இந்திய விமானங்கள்

விமானங்கள் ரயில் நிலையத்தை தாண்டி பறந்து சென்றன. ஆனால் தாக்குதலுக்கு தயாராக மீண்டும் திரும்பின. மேனன், துரிதகதியில் டைவ் அடித்து, துப்பாக்கிகளின் தாக்குதலுக்கு இடையில் சரக்கு ரயிலின் எஞ்சினை குறிவைத்தார்.

தாக்க வேண்டிய இலக்கை உறுதிபடுத்திக் கொள்வதற்காக முதலில் துப்பாக்கியால் சுட்ட அவர், பிறகு 100 அடி உயரத்தில் இருந்து பத்து ராக்கெட்டுகள் கொண்டு இலக்கை தாக்கிவிட்டு, விரைந்து வெளியேறினார். எனவே ராக்கெட்டுகள் இலக்கை தாக்கியதா இல்லையா என்று அவருக்கு தெரியாது.

போர் விமானம்படத்தின் காப்புரிமைPUSHPINDER SINGH

மேனனை பின்தொடந்த குல்லர், சரக்கு ரயிலின் எஞ்சின் மற்றும் மூன்று ரயில் பெட்டிகள் தூக்கி விசப்பட்டதை பார்த்தார். ரயிலின் பிற பெட்டிகளை இலக்கு வைத்து குல்லர் தாக்கியதும், ஆயுதங்களும், வெடிபொருட்களும் நிரம்பிய ரயில் பெட்டிகள் வெடித்துச் சிதறின.

குல்லரைத் தொடர்ந்த நேகியும், பிஷ்னோயியும் ரயிலின் பின்புற பெட்டிகளை குறிவைத்து தாக்கினார்கள். ரயிலின் பெட்டிகள் ஒன்றொன்றாக வெடித்துச் சிதறின. சில நிமிடங்களில் ரயிலும், தண்டவாளங்களும் முற்றிலுமாக சேதமடைந்தன.

டாங்கிகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல்

பாகிஸ்தான் ரயில் நிலையத்தை இந்திய ராணுவம் தாக்கியதுபடத்தின் காப்புரிமைUSI Image captionபாகிஸ்தான் ரயில் நிலையத்தை இந்திய ராணுவம் தாக்கியது

ரயிலையும், அதிலிருந்த பொருட்களையும் தகர்த்தெறிந்துவிட்டு வெற்றியுடன் திரும்பிய இந்திய விமான ஓட்டிகள், கசூருக்கு அருகே ஆயுதங்கள் கொண்ட வாகன அணியை பார்த்துவிட்டார்கள். மேனனும், குல்லரும் வாகன அணி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் சில டாங்கிகள் சேதமடைந்தன.

பிஷ்னோயி மற்றும் நேகியிடம் ராக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. எனவே கீழே இருந்த வாகனங்களை தாக்க கேனான் துப்பாக்கிகளை பயன்படுத்தினார்கள். குறைந்தது 30 இலகு ரக வாகனங்களை அவர்கள் சேதப்படுத்தினார்கள்.

இதன்பிறகு ரேடியோ மூலம் தகவல்களை இடைமறித்து கேட்டபோது, இந்திய விமானங்களின் தாக்குதல் பாகிஸ்தானுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

பாகிஸ்தானின் டாங்கிகளிடம் தாக்குதல் நடத்துவதற்கு தேவையான பீரங்கி குண்டுகள் குறைந்து போனதில் தலா ஒரு டாங்கிக்கு 30 பீரங்கி குண்டுகள் மட்டுமே எஞ்சியதாக தெரிந்தது.

விமானங்களில் குண்டு தாக்குதலின் அடையாளம்

பிபிசி அலுவலகத்தில் ஏர் மார்ஷல் பூப் பிஷ்னோயி மற்றும் ரெஹான் ஃபஜல் Image captionபிபிசி அலுவலகத்தில் ஏர் மார்ஷல் பூப் பிஷ்னோயி மற்றும் ரெஹான் ஃபஜல்

தங்கள் இடத்திற்கு திரும்பிய விமானிகள், விமானத்தின் கீழ்ப்பகுதியில் குண்டுகள் துளைத்த பல ஓட்டைகள் இருந்ததை பார்த்தார்கள்.

"என்னுடைய விமானத்தில் ஐந்து ஓட்டைகள் இருந்தன. அதில் மிகப் பெரிதாக இருந்த ஒன்றில் கையே உள்ளே சென்றுவிடும்" என்று பூப் பிஷ்னோயி பிபிசியிடம் தெரிவித்தார்.

மேனின் விமானத்தின் 'ஸ்பீட் இண்டிகேட்டர்' முழுமையாக தகர்ந்துபோய்விட்டது. விமானங்கள் சேதமடைந்திருந்தாலும், நான்கு விமானிகளும் பத்திரமாக தங்கள் நிலைக்கு திரும்பிவிட்டனர்.

ராக்கெட் மற்றும் வெடிமருந்துகள் இருப்பு தீர்ந்தது

இந்தியாவை நோக்கி முன்னேறி வரும் பாகிஸ்தானிய டாங்கிகளை அழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனவே செப்டம்பர் ஒன்பதாம் தேதியன்று 7 மற்றும் 27-ஆவது படைப்பிரிவுகள் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.

இந்தமுறை குழுவின் தலைவராக இருந்தவர் பூப் பிஷ்னோயி. அவர் அந்த நாள் நினைவுகளை மீட்டெடுத்து பகிர்ந்துக் கொள்கிறார்: "அல்வாராவில் இருந்து கிளம்பினோம். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சென்றடைந்ததும், டாங்கிகள் இருந்த இடத்தை குறிவைத்து 300 மீட்டர் உயரத்தில் இருந்து மூன்று டாங்கிகள் கொண்ட குழுவை ஏழு ராக்கெட்டுகளால் தாக்கியதில் அவை எரிந்ததையும் பார்த்தேன்."

1965 யுத்தத்தில் இந்திய விமானப்படை தொடர்பான பல அத்தியாயங்கள் ஜகன் மோகன் மற்றும் சமீர் சோப்ராவின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image caption1965 யுத்தத்தில் இந்திய விமானப்படை தொடர்பான பல அத்தியாயங்கள் ஜகன் மோகன் மற்றும் சமீர் சோப்ராவின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அஹூஜாவும் ஷர்மாவும் ராக்கெட்டால் டாங்கிகளை தாக்கினார்கள். ராக்கெட்'gகளும், குண்டுகளும் தீரும்வரை இலக்கிற்கு மேலே பறந்து பறந்து தாக்கினார்கள்.

பாரூல்கரின் தோளில் பாய்ந்த குண்டு

தாக்குதலின் இறுதிக்கட்டத்தில் டைவ் அடித்தபோது நான்காம் எண் விமானி டி.கே.பாரூல்கர், விமான எதிர்ப்பு துப்பாக்கியின் குண்டுக்கு இலக்கானார். மற்றொரு குண்டு அவருடைய காக்பிட்டை துளைத்தது.

1965 ம் ஆண்டு போரில் சிறப்பான பங்களித்த திலீப் பாரூல்கரை சிறப்பிக்கும் விமானப்படை தளபதி அர்ஜன் சிங்படத்தின் காப்புரிமைDHIRENDRA S JAFA Image caption1965 ம் ஆண்டு போரில் சிறப்பான பங்களித்த திலீப் பாரூல்கரை சிறப்பிக்கும் விமானப்படை தளபதி அர்ஜன் சிங்

விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைவதை அவர் கவனித்தார். அவரது தோளை ஒரு குண்டு துளைத்தது. மற்றொரு குண்டு அவரது இருக்கையின் தலைப்பகுதியை உரசிக் கொண்டு விமானத்தின் மேற்கூரையை துளைத்தது.

சீறிவந்த குண்டைக் கண்ட பாரூல்கர் தலையை கீழே தாழ்த்தியதால் அவரின் தலையும், உயிரும் தப்பியது. அவர் அதிர்ஷ்டசாலி. விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைந்ததால், காக்பிட்டின் கண்ணாடித்திரை மங்கலானது. வெளியே வான் வழி தெரியவில்லை.

அந்த கணத்தை தற்போதும் பாரூல்கர் மங்காமல் நினைவுகூர்கிறார், "திடீரென்று, வலது கையில் வலியை உணர்ந்தேன், ஆடையில் ரத்தம் வழிந்தது. கையில் ஏற்பட்ட காயத்தைப் பற்றி பிஷ்னோயியிடம் சொன்னால், அவர் என்னை திரும்பிப்போகச் சொல்வார் என்பதால் அப்போது சொல்லவில்லை."

வெளியேறு! வெளியேறு!

தாக்குதல் முடிவடைந்த பின்னர், காயம் ஏற்பட்டதைப் பற்றி பிஷ்னோயி இடம் பாரூல்கர் தெரிவித்தார். இந்திய எல்லைக்கு சென்றதுமே, உடனே துரிதமாக விமானத்திலிருந்து வெளியேறுமாறு பிஷ்னோய் அறிவுறுத்தினார்.

போர் விமானங்கள்படத்தின் காப்புரிமைPUSHPINDER SINGH

ஆனால் அந்த ஆலோசனையை ஏற்காத பாரூல்கர், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடியும் என்று உறுதிபட கூறினார்.

ஒரு கையால் விமானத்தை இயக்க முடியும் என்றாலும், விமானத்தை தரையிறக்கும்போது இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். எனவே, அனைத்து விமானங்களும் தரையிறங்கிய பிறகு இறுதியாக பாரூல்கர் தரையிறங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஏனெனில், விமானத்தை சரியாக தரையிறக்குவதில் பாரூல்கர் தோல்வியடைந்து, விமான ஓடுபாதை சேதமடைந்தாலும், மற்ற விமானங்களை இறக்குவதில் சிக்கல் ஏற்படாது என்பதே பாரூல்கர் இறுதியாக தரையிறங்க முடிவு செய்யப்பட்டதற்கு காரணம்.

மோதிய விமானங்கள்

யுத்தத்தில் எந்த நேரத்தில் என்ன நேரிடும் என்பதை யாராலும் கணிக்கமுடியாது. காயமடைந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்த பாரூல்கர் விமானத்தை சரியாக தரையிறக்கமுடியுமா என்ற கேள்வி எழுந்திருந்த நேரத்தில் எதிர்பாராமல் ஒரு விபத்து நேரிட்டது.

ஷர்மா விமானத்தை தரையிறக்க முற்பட்டபோது, அஹூஜாவின் விமானத்தின் இறக்கையில் மோதிவிட்டார். இறுதியாக விமானத்தை தரையிறக்கிக் கொண்டிருந்த பாரூல்கர் இதனைப் பார்த்து திகைத்துப் போனார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்து வெடிபொருள் ரயில், கவச வாகனங்கள் மீது ராக்கெட் தாக்குதல்படத்தின் காப்புரிமைDEFENCE.PK

மோதப்பட்ட அஹூஜாவின் விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான தளத்தின் சுற்றுச்சுவருக்கு அருகே தரையில் மோதி, நெருப்புடன் கூடிய புகையை எழுப்பியது. அஹூஜாவுக்கு விமானத்தில் இருந்து வெளியேற சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

முதலில் பிஷ்னோயியின் விமானம், இரண்டாவதாக மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்த ஷர்மாவின் விமானம், மூன்றாவதாக பாரூல்கரின் விமானம் தரையிறங்கியது.

அரை மயக்கம்

"அதற்குள் நிறைய ரத்தம் வெளியேறிவிட்டது. விமானத்தை தரையில் இறக்குவதற்கு முன்பே மயங்கிவிடுவேனோ என்று அச்சப்பட்டேன். ஆனால், பாதி மயக்கத்தில் இருந்தாலும், கடும் முயற்சியுடன் விமானத்தை தரையிறக்கினேன். ஆடை முழுவதும் ரத்தத்தால் நனைந்துவிட்டது. தயாராக நின்ற ஆம்புலன்சில் ஏற்றி, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள், ஸ்குவார்டன் தலைவர் ப்ருத்வி எனக்கு சிகிச்சையளித்து, தையல்களை போட்டார்."

1965 ஆம் ஆண்டு போரில் பங்கேற்ற திலீப் பாரூல்கர் தற்போது புனேயில் வசித்துவருகிறார். அவர் மேலும் ஒரு சுவராஸ்யமான தகவலை பகிர்ந்துக் கொள்கிறார், "விமானத்தில் இருந்த பாராசூட் குண்டுகளால் துளைக்கப்பட்டு சேதமாகியிருந்தது பிறகுதான் தெரியவந்தது".

"அதாவது, மோசமாக காயமடைந்திருந்த நான் இந்திய எல்லைக்குள் வந்த பிறகு பாராசூட் உதவியால் தரையிறங்க முடிவு செய்து 'எஜெக்ட்' பட்டனை அழுத்தியிருந்தால், பாதுகாப்பாக இறங்குவதற்கு பதிலாக வேகமாக தரையை நோக்கி வரும் கனமான கல்லைப் போன்று தரையில் வந்து மோதியிருப்பேன். இப்போது இங்கு உங்களிடம் பேசிக்கொண்டிருக்கமாட்டேன்".

பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் பாராசூட்டே அவரின் உயிருக்கான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருக்கும்!

திலிப் பாருல்கார்படத்தின் காப்புரிமைDILIP PARULKAR Image captionதிலிப் பாருல்கார்

 

http://www.bbc.com/tamil/india-41259609

Link to comment
Share on other sites

`பாகிஸ்தானில் தவறுதலாக தரையிறங்கிய இந்திய போர் விமானம்': 1965 போர் நினைவுகள்

 

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965- இல் 22 நாட்கள் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் எட்டாவது பகுதி.

இந்திய போர் விமானம்படத்தின் காப்புரிமைKAISER TUFAIL Image captionபாகிஸ்தானில் தரையிறங்கிய பி.எஸ் சிகந்த்தின் நேட் விமானம்

போரில் வெற்றிகரமாக செயல்பட்ட இந்திய விமானப்படையின் ஓர் அணியின் தலைவர் ஸ்குவாட்ரன் விலியம் கிரீன், பதான்கோட் விமானதளத்திற்கு மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தார். ஆனால், தன்னுடைய சகா ப்ரஜ்பால் சிங் சிகந்த் திரும்பி வரவில்லை என்று அறிந்ததும் அவரது மகிழ்ச்சி வருத்தமாக மாறியது.

அந்த கால விமானங்களில் ஜி.பி.எஸ் அமைப்போ, ரேடாரோ இருக்காது. விமானிகள் செல்லும் இடத்தை அறிந்து கொள்ள வரைபடங்கள் மற்றும் திசைகாட்டிகளையே பயன்படுத்தினார்கள். சிகந்த் வழிதவறிவிட்டார். அவரின் விமானத்தில் எரிபொருளும் குறைவாகவே இருந்தது. வானில் இருந்து பார்க்கும்போது, விமான ஓடுபாதை தெரிந்தது. அது இந்தியாவின் பயன்படுத்தப்படாத ஒரு விமானதளம் என நினைத்த சிகந்த் அங்கே தரையிறங்கிவிட்டார்.

தரையிறங்கிய பிறகுதான், தான் இறங்கியது பாகிஸ்தானின் பஸ்ரூர் பகுதி என்பதை தெரிந்துக் கொண்ட சிகந்த் சிக்கிக்கொண்டதை உணர்ந்தார். அங்கிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் போர்க் கைதியானர் சிகந்த்.

பதான்கோட் விமானதளத்திற்கு சிகந்த் வந்து சேராததால், அவரைத் தேடி இரண்டு வேம்பயர் விமானங்கள் அனுப்பப்பட்டன. சிகந்தின் விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கிப் போயிருக்கும் என்ற கோணத்திலேயே விமானத்தின் இடிபாடுகள் விமானங்கள் மூலமாக தேடப்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் சிகந்த் சிக்கிக் கொண்டிருப்பார் என்பதை யாரும் யூகிக்கவேயில்லை.

பாகிஸ்தானில் போர்கைதியாக இருந்த ப்ரஜ்பால் சிங் சிகந்த்படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image captionபாகிஸ்தானில் போர்கைதியாக இருந்த ப்ரஜ்பால் சிங் சிகந்த்

தரையிறங்க வேண்டிய கட்டாயம்

பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் அயூப்பின் மகன் கெளஹர் அயூப் கான் பிபிசியிடம் கூறுகிறார், "சிகந்த் தவறுதலாக பஸ்ரூரில் தரையிறங்கவில்லை. பாகிஸ்தானின் ஸ்டார் ஃபைட்டர் விமானம் சிகந்த் பஸ்ரூரில் தரையிறங்க கட்டாயப்படுத்தியது".

"அந்த ஸ்டார் ஃபைட்டர் விமானத்தை ஓட்டிய ஹகீமுல்லா, நான் விமான பயிற்சி பெற்றபோது, என்னுடைய சகாவாக இருந்தவர். பிறகு ஹகீமுல்லா பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியாகவும் பணிபுரிந்தார். பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்துக் கொண்டிருந்த சிக்கந்தின் நேட் (Gnats) விமானத்தை பார்த்த அவர், அருகில் இருக்கும் பஸ்ரூர் விமான ஓடுதளத்தில் விமானத்தை இறக்காவிட்டால், சுட்டு வீழ்த்துவேன் என்று எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பினார்" என்று சொல்கிறார் கெளஹர் அயூப்.

அயூப் கானும், அவரது இரு மகன்களும். வலப்புறம் இருப்பவர் கெளஹர் அயூப்படத்தின் காப்புரிமைGAUHAR AYUB KHAN Image captionஅயூப் கானும், அவரது இரு மகன்களும். வலப்புறம் இருப்பவர் கெளஹர் அயூப்

மீண்டும் கிளம்ப முயற்சி

சிகந்த் போர்க் கைதியாக சிறைபிடிக்கப்பட்ட பிறகு, நாட் விமானத்தை பெஷாவர் விமானதளத்திற்கு ஓட்டிச் சென்றார் விமானி லெஃப்டினெண்ட் சாத் ஹாத்மி. பிரிட்டனில் விமான ஓட்டுனர் பயிற்சி எடுத்துக்கொண்ட ஹாத்மிக்கு, நேட் (Gnats) விமானத்தை இயக்கும் அனுபவமும் இருந்தது.

பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் நிபுணத்துவம் பெற்ற கைசர் துஃபைல் சுட்டிக்காட்டுகிறார்: "போர்க்கைதியாக இருந்த சிகந்த்திடம் விசாரணை மேற்கொண்டபோது, அவரது விமானத்தில் ஒரே நேரத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டதாக சொன்னார். போர் விமானங்களை நானும் இயக்கியிருக்கிறேன், ஒரே நேரத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்களே இல்லை என்று உறுதியாக சொல்வேன்."

இந்த விமர்சனம் பற்றி சிகந்திடம் விளக்கம் கோர விரும்பி, பிபிசி அவரை தொடர்புகொண்டது. ஆனால் அவர் இதுகுறித்து பேச மறுத்துவிட்டார். வயது மூப்பின் காரணமாக பழைய நினைவுகளை நினைவுகூர்வது அவரால் முடியாமல் போயிருக்கலாம்.

"நான் தவறுதலாக பஸ்ரூரில் இறங்கிவிட்டேன். அதை தெரிந்துக் கொண்டதும் உடனே மீண்டும் விமானத்தை கிளப்ப முயற்சித்தேன்", என்று சில பத்திரிகைகளில் சிகந்த் எழுதியிருக்கிறார் என்பதை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

கைசர் துஃபைல்படத்தின் காப்புரிமைKAISER TUFAIL Image captionகைசர் துஃபைல்

சிகந்தின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் கைசர் துஃபைல், "ஒரு ஜெட் ஃபைட்டர் இறங்கிய பிறகு உடனடியாக மீண்டும் கிளம்ப முடியாது, அவர் விமானத்தின் எஞ்சின் சுவிட்சை நிறுத்திவிட்டார். ஓடுதளத்தின் இறுதிப் பகுதிக்கு சென்றுவிட்டதால், உடனே அங்கிருந்து விமானத்தை கிளப்ப முயற்சி செய்வதற்கு சாத்தியம் இல்லை."

ஆனால் சிகந்தின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் பி.வி.எஸ். ஜகன் மோகன் மற்றும் சமீர் சோப்ரா இருவரும் 'The India Pakistan Air War 1965' என்ற தங்களது புத்தகத்தில் அதுபற்றி எழுதியுள்ளனர். "1965இல் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டபோது, ஹகீமுல்லா பறந்து கொண்டிருந்த இடத்திலே, சிகந்தும் தரையிறக்கியிருக்கலாம். ஆனால் பாகிஸ்தானிய தரப்பு, அவரை கட்டாயப்படுத்தி தரையிறங்கச் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை".

தன்னுடைய மற்றொரு கட்டுரையில் கைசர் துஃபைல் இவ்வாறு கூறியிருக்கிறார், 'பஸ்ரூர் ஓடுதளத்தில் தன்னுடைய ப்ரேக் ஷுட்டுடன் சிகந்த் நின்றிருப்பதை பார்க்கும்வரை, நேட் விமானத்தை நான் பார்க்கவில்லை".

போர்க்கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, இந்திய விமானப்படை தளபதி அர்ஜுன் சிங்குடன் ப்ர்ஜ்பால் சிகந்த்படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image captionபோர்க்கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, இந்திய விமானப்படை தளபதி அர்ஜுன் சிங்குடன் ப்ரஜ்பால் சிகந்த்

இந்த முழு சம்பவத்திற்கும் மற்றொரு சாட்சியாக இருப்பவர் அமிர்தசரஸ் ரேடார் நிலைய பிரிவு கமாண்டர் தண்டபாணி. "விமான அணியில் இருந்து சிகந்த் பிரிந்து தடம் மாறியதுமே அதை கவனித்துவிட்டேன், ஆனால் அதன்பிறகு ரேடார் எல்லையின் வரம்பில் சிகந்த் வரவில்லை" என்று ஜகன்மோஹனிடம் தண்டபாணி கூறினார்.

"அந்த சமயத்தில் எந்தவொரு பாகிஸ்தானிய விமானமும் ரேடாரில் தென்படவில்லை" என்று தண்டபாணி உறுதிபட கூறுகிறார்.

"பாகிஸ்தானில் சிகந்தின் நேட் விமானம் முழுமையாக தரையிறங்கிவிட்டது என்று தெரியவந்ததும், இந்தியாவின் நேட் விமானங்கள் அனைத்தும் பதான்கோட் விமானதளத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவற்றில் இருந்த 'ரேடியோ கிறிஸ்டல்' மாற்றப்பட்டது. சிகந்தின் விமானத்தில் உள்ள கருவிகளின் மூலம் பாகிஸ்தான், இந்திய விமானப்படையின் தகவல்களை ஒட்டு கேட்பதற்கான சாத்தியங்களை அகற்றிவிடவே இந்த மாற்றம் செய்யப்பட்டது.

பறவை மோதி பாதிப்படைந்த விமானம்

தவறாக தரையிறங்கிய இந்தியாவின் இந்த நேட் விமானம், பாகிஸ்தானிய விமானப்படைக்கு பயிற்சியளிப்பதற்கு பின்னர் பயன்படுத்தப்பட்டது என்ற சுவாரஸ்யமான உண்மையை கௌஹர் அய்யூப் கான் தெரிவித்தார்.

இந்த விமானத்தின் இறக்கையில் ஒரு பறவை மோதியதால் விமானத்தின் விதானத்தில் (Canopy) கணிசமான சேதம் ஏற்பட்டது.

"அந்த நேரத்தில் யூகோஸ்லாவிய விமானப்படையில் நேட் விமானங்கள் அதிகமாக இருந்தன. அங்கிருந்து உதிரி பாகங்களை வாங்கி சேதமடைந்த பாகத்தை மாற்றிவிடலாம் என்று முயற்சி செய்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. இங்கிலாந்தில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் பாகிஸ்தானிய விமானப்படையை சேர்ந்தவர் ஒரு ஆங்கிலேயரை சந்தித்தது எங்களுக்கு அதிர்ஷ்டத்தை தந்தது' என்கிறார் கௌஹர் அய்யூப் கான்.

பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் நேட் விமானம்படத்தின் காப்புரிமைKAISER TUFAIL Image captionபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் நேட் விமானம்

"அந்த ஆங்கிலேயர் இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரிபவர். நேட் விமானத்தின் விதானம் பற்றி அவரிடம் பேசியபோது, அது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று ஆங்கிலேய நண்பர் சொன்னார்" என்கிறார் கெளஹர் அயூப்.

பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் தொழிற்சாலையில் இருந்து குறிப்பிட்ட அந்த பாகத்தை ரகசியமாக கொண்டு வந்த அந்த ஆங்கிலேயர், அதை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார். இன்றும் அந்த நேட் விமானம் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/global-41273495

Link to comment
Share on other sites

இந்தியா-பாகிஸ்தான் போர்: ராணுவ தளபதியின் ஆணையை ஏற்காத ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்

 
லால் பகதூர் சாஸ்திரியோடுபடத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965- இல் 22 நாட்கள் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் ஒன்பதாவது பகுதி இது .

சம்ப் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியபோது, இந்திய படைகள் அக்னூரில் இருந்து முன்னேறி பாகிஸ்தானை எதிர்க்கவேண்டும் என்று ஜெனரல் செளத்ரி விரும்பினார்.

ஆனால், சர்வதேச எல்லையை கடந்து லாகூரை நோக்கி முன்னேற அரசிடம் அனுமதி பெற்றுத் தாருங்கள் என்ற கோரிக்கையை செளத்ரியிடம் வைத்தார் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்.

இந்த கோரிக்கையை ஏற்க செளத்ரி தயங்கினார். ஆனால், இந்த விஷயத்தில் திடமாக இருந்த ஜென்ரல் ஹர்பக்ஷ் சிங், அரசிடம் பேச தயக்கமாக இருந்தால் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை சந்திக்க தனக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என செளத்ரியிடம் வலியுறுத்தினார்.

ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image captionஜெனரல் ஹர்பக்ஷ் சிங்

இறுதியாக, செப்டம்பர் மூன்றாம் தேதியன்று பஞ்சாபிற்கு முன்னேற ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் அனுமதி கிடைத்தது.

'In the Line of Duty' என்ற தனது சுயசரிதையில் ஹர்பக்ஷ் சிங் எழுதுகிறார்: "இதற்கிடையில், அக்னூர் தாக்குதலுக்கு இந்தியா பதில் தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தானை நினைக்க வைத்து திசை திருப்ப விரும்பினோம். எனவே, பதான்கோட்-அக்னூர் சாலையை சீரமைக்கவும், ஜம்மு-தாவியில் உள்ள பாலத்தை வலுப்படுத்தவும் எங்கள் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டேன்" என்று தெரிவித்தார்.

"இது பாகிஸ்தான் தரப்புக்கு எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தியது என்று எனக்குத் தெரியாது, ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு நாங்கள் லாகூரை நோக்கி அணிவகுத்து சென்றபோது அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள் என்பதை உறுதியாக சொல்லமுடியும்" என்று தெரிவித்தார்.

ஜெர்மன் மீசலில் இருந்து தப்பினேன்

மனைவியுடன் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image captionமனைவியுடன் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்

ஹர்பக்ஷ் சிங் மேலும் கூறுகிறார், "யுத்தத்திற்கு ஒரு நாள் முன்பு ஷிம்லாவில் இருந்த என் வீட்டில் நானும் என் மனைவியும் உறங்கிக் கொண்டிருந்தோம்".

"தொலைபேசி ஒலித்தபோது அதை எடுக்கச் சென்றபோது, என் மனைவி இரண்டு முறை தும்மினார்".

"உடனே அந்த நள்ளிரவு வேளையிலும் தனது கட்டிலை அடுத்த அறைக்கு மாற்றிவிட்டேன். மனைவிக்கு ஜெர்மன் மீசல் எனப்படும் ருபேலா தாக்கியிருந்தது பிறகுதான் தெரியவந்தது. இது ஒரு தொற்று நோய்". என்று கூறினார்.

"போர் நடந்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில் எனக்கு நோய் ஏற்பட்டிருந்தால் பல்வேறுவிதமான விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். பலவிதமான யூகங்களும் வதந்திகளும் பரப்பப்பட்டிருக்கும். நள்ளிரவு நேரமாக இருந்தாலும், அறையை மாற்றிய முடிவு, மிகவும் சரியானது என்று எனக்கு பிறகு தோன்றியது. இல்லாவிட்டால், மிகப் பெரிய அவமானத்தை சந்தித்திருப்பேன்" என மேலும் தெரிவித்தார்.

ஜெனரல் செளத்ரியுடன் மோதல்

ஹர்பக்ஷ் சிங் "ஆர்ம்சேர் ஜெனரல்" (Armchair general) இல்லை என்று கூறுகிறார் அவரது மகள் ஹர்மாலா குப்தா. ராணுவத்தில் உண்மையான அனுபவம் இல்லாதபோதிலும், ராணுவ விஷயங்களில் ஒரு நிபுணராக தன்னை கூறிக்கொள்பவர்களை குறிப்பிடும் ஒரு தரக்கூரைவான வார்த்தை ஆர்ம்சேர் ஜெனரல்.

அவர் கூறுகிறார், "அவர் போர்க்களத்தில் நேரடியாக இறங்கி செயல்படும் அதிகாரியாக இருந்தார். களத்திற்கு செல்லாமல் பின்புறம் அமர்ந்து கட்டளையிடுவதிலோ, அறிக்கைகள் வெளியிடுவதிலோ நிதர்சனம் தெரியவராது. கமாண்டர் முன் வரிசையில் இருந்தால்தான், படையில் இருப்பவர்களும் உத்வேகத்துடன் போரில் ஈடுபடுவார்கள், வெற்றி பெறுவார்கள்."

1965 போரில் ராணுவத் தளபதி ஜென்ரல் செளத்ரியுடன் அவருக்கு பல்முறை கருத்து வேறுபாடுகள் எழுந்தது.

இந்தியத் துருப்புகளுடன் உரையாடும் ராணுவத் தளபதி ஜெனரல் சௌத்ரிபடத்தின் காப்புரிமைBHARAT RAKSHAK.COM Image captionஇந்தியத் துருப்புகளுடன் உரையாடும் ராணுவத் தளபதி ஜெனரல் சௌத்ரி

'In the Line of Duty' என்ற தனது சுயசரிதையில் ஹர்பக்ஷ் சிங் கூறுகிறார்: "செப்டம்பர் ஒன்பதாம் தேதி இரவு இரண்டரை மணிக்கு என்னை தொலைபேசியில் அழைத்த ராணுவத் தளபதி, பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து இந்திய படைகள் சேதமடையாமல் தவிர்க்க வேண்டுமானால், பியாஸ் நதிக்கு பின்னே இந்திய ராணுவத்தை பின்வாங்கச் சொன்னார்."

" பஞ்சாபின் அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் மாவட்டங்கள் உட்பட மிகப் பெரிய பகுதியை விட்டு விலகவேண்டும் என்பதே அதன் அர்த்தம். அது மட்டும் நடந்திருந்தால், 1962 ம் ஆண்டு சீனா தாக்குதலின்போது இந்தியாவுக்கு ஏற்பட்ட சேதத்தை விட இது மிகவும் மோசமாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன்."

ஜென்ரல் ஹர்பக்ஷ் சிங் ராணுவத் தளபதியின் ஆணையை ஏற்க மறுத்துவிட்டார்.

தனது சுயசரிதையில் ஹர்பக்ஷ் சிங் இவ்வாறு எழுதுகிறார்: "இது முக்கியத்துவம் வாய்ந்த கட்டளையாக இருப்பதால், அதை யுத்த களத்திற்கே நேரடியாக வந்து கொடுக்க வேண்டும், இல்லையென்றால், எழுத்துபூர்வமான கட்டளை தேவை என்று நான் ஜென்ரல் செளத்ரியிடம் சொன்னேன். அவர் என்னை அம்பலாவில் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய அவருடன் பாதுகாப்பு விமானங்களும் வந்ததை பார்த்து வியப்படைந்தேன்."

"எல்லையில் போரிடும் நமது வீரர்கள் அனைவருக்கும் இதுபோன்ற விமானங்கள் தேவைப்படும் என்று நான் அங்கிருந்த கள அதிகாரியிடம் கூறினேன். நானும், ராணுவத் தளபதியும் அறைக்குள் சென்று பேசினோம். பேசினோம் என்று சொல்வதை விட கடுமையாக விவாதித்தோம், தர்க்கம் செய்தோம் என்றே சொல்லலாம்."

விளையாட்டில் விருப்பம் கொண்ட ஜென்ரல் ஹர்பக்ஷ் சிங், கிரிக்கெட் மற்றும் ஹாக்கியில் சிறந்த வீரராகவும் இருந்தார்படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image captionவிளையாட்டில் விருப்பம் கொண்ட ஜென்ரல் ஹர்பக்ஷ் சிங், கிரிக்கெட் மற்றும் ஹாக்கியில் சிறந்த வீரராகவும் இருந்தார்

"எங்களுக்கு இடையில் நடைபெற்ற விவாதத்தின்போது, மெஸ்ஸிலிருந்து பியர் வரவழைக்கட்டுமா என்று செளத்ரி கேட்டார். அவர் எதாவது ஆணையிட விரும்பினால், அவர் யுத்தக் களத்திற்கு நேரடியாக வந்து அங்கு வழங்கவேண்டும். அப்போதும், அவருடைய உத்தரவை செயல்படுத்துவது பற்றிய முடிவை நான்தான் எடுப்பேன் என்று உறுதியாக கூறிவிட்டேன்".

மேஜர் ஜென்ரல் பலித் எழுதுகிறார், "இந்த குறிப்பிடத்தக்க விஷயத்தில் செளத்ரியின் வாய்மொழி உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது, எழுத்துப்பூர்வமான உத்தரவு கொடுக்குமாறு என்று ஜென்ரல் ஹர்பக்ஷ் சிங் கேட்டார். ஆனால் எழுத்துப்பூர்வ ஆணை வரவேயில்லை. சில மணி நேரத்தில் நிலைமை மாறிவிட்டது. அதற்கு காரணம், பாகிஸ்தானின் மிகச் சிறந்த படான் டாங்கிகளை, இந்தியாவின் செஞ்சூரியன் டாங்கிகள் தாக்கி சிதறடித்துவிட்டன."

மூலோபாய விவகாரங்களில் நிபுணரான சுப்பிரமணியத்தின் கருத்து இது- "பியாஸ் நதியில் இருந்து பின்வாங்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு ஜெனரல் சௌத்ரி, பிரதமர் சாஸ்திரியிடம் கேட்டதை சாஸ்திரி நிராகரித்துவிட்டார்".

ஜென்ரல் செளத்ரியின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், இந்தியா, அதிகமான பகுதியை விட்டுக் கொடுத்திருக்கவேண்டும் என்று எழுத்தாளர்கள் இந்தர் மல்ஹோத்ராவும், குல்தீப் நாயரும் பிபிசியிடம் கூறினார்கள்.

தளபதிகளை பதவிநீக்கம் செய்ய தயங்கவில்லை

மேஜர் ஜெனரல்படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE

தனது நினைவுகளை பகிர்ந்துக் கொள்ளும் ஹர்பக்ஷ் சிங்கின் மகள் ஹர்மாலா குப்தா சொல்கிறார், "போர்க் காலங்களில், அப்பா வீட்டிற்கு வருவதே அரிது. அப்படியே வந்தாலும், தனியறையில் தொலைபேசியில் கமாண்டர்களுடன் பேசி, யுத்தகளத்தில் நடைபெறும் விஷயங்களை கேட்டறிவார்".

"அறையில் இருந்து வெளியே வந்தாலும், எந்த தகவலையும் சொல்லமாட்டார். போரின் போக்கு, யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பதுகூட எங்களுக்கு தெரியாது. ஆனால் அவரை பார்த்தே நிலைமையை யூகித்துக் கொள்வோம்".

துணிச்சல் மிக்கவர் ஹர்பக்ஷ் சிங் என்று கூறுகிறார், அவரிடம் ஏ.டி.சியாக பணியாற்றிய கேப்டன் அமீர்ந்தர் சிங். ஆனால் பணியில் தவறு செய்தால் அதை அவர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார் என்றும் சொல்கிறார்.

1965 ம் ஆண்டு போரில் எதிர்பார்த்தபடி வேலை செய்யத் தவறிய மேஜர் ஜெனரல் நிரஞ்சன் பிரசாத்தை நீக்க தயங்காத ஹர்பக்ஷ் சிங், அக்னூர் போர்க்களத்தில் முன்னணியில் இருந்த ஜென்ரல் சோப்டா திறமையாக செயல்படாததால் அவரை அங்கிருந்து பின்வாங்கச் சொல்லவும் தயங்கவில்லை.

மரியாதைக்குரிய அதிகாரி

முன்னாள் ராணுவ தளபதி வி.என். ஷர்மா Image captionமுன்னாள் ராணுவ தளபதி வி.என். ஷர்மா

அந்த நேரத்தில் ஜெனரல் சௌத்ரியிடன் விசேஷ உதவியாளராக இருந்து பிறகு ராணுவத் தளபதியான வி.என். ஷர்மா, கூறுகிறார்,

"ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் மரியாதைக்குரிய அதிகாரி. யுத்தத்தின்போது, ஒரு அதிகாரியை வெளியேற்றுவது, அதிகாரியின் ஆணையை நிறைவேற்றுவது என அனைத்தையும் தனது விருப்பத்திற்கு ஏற்பவே செய்தார். மற்றொரு நாட்டுடன் போரிடும்போது, தேவைப்பட்டால் தனது வீரர்களை சண்டையில் இருந்து பின்வாங்கச் செய்யலாம் என்று அவர் நினைத்தார்" என மேலும் தெரிவித்தார்.

உணவை வீணாக்குவதை விரும்பமாட்டார்

பிபிசி ஸ்டூடியோவில் ரெஹான் ஃபஜலுடன் ஹர்மாலா குப்தா Image captionபிபிசி ஸ்டூடியோவில் ரெஹான் ஃபஜலுடன் ஹர்மாலா குப்தா

ராணுவமே தனது தந்தையின் முதல் குடும்பம் என்கிறார் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்கின் மகள் ஹர்மாலா குப்தா. நாங்கள் அனைவரும் அவருக்கு இரண்டாம்பட்சம் என்று ஹர்மாலா குப்தா கூறுகிறார்.

இசை ரசிகரான ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் பழைய பாடல்களை விரும்பிக் கேட்பதுடன் பாடவும் முயற்சிப்பாராம்.

'சாந்த்வி கா சாந்த்' மற்றும் 'ப்யாசா' ஆகிய பாடல்கள் தனது தந்தைக்கு மிகவும் பிடித்தமானவை என்று சொல்லும் ஹர்மாலா குப்தா, 'அன்பைக் கோரினால் கிடைத்ததோ முள் மாலை' என்ற பொருளுடைய 'ப்யார் மாங்கா லேகின் காண்ட்டோ கா ஹார் மிலா' என்ற இந்தி மொழிப் பாடலை அடிக்கடி முனுமுனுப்பாராம்.

வாகனம் ஓட்டுவதில் விருப்பம் கொண்ட ஜென்ரல் ஹர்பக்ஷ் சிங், வண்டியை மிகவும் வேகமாக ஓட்டுவார். தந்தையுடன் பைலட் ஜீப்பை ஓட்டுவதில் போட்டிபோட்ட ஹர்மாலா ஒருமுறைகூட தந்தையை வென்றதில்லையாம்.

குடும்பத்துடன் ஹர்பக்ஷ் சிங் (வலமிருந்து இரண்டாவது)படத்தின் காப்புரிமைHARMALA GUPTA Image captionகுடும்பத்துடன் ஹர்பக்ஷ் சிங் (வலமிருந்து இரண்டாவது)

"கட்டுப்பாடும், ஒழுக்கமும் எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான அங்கங்கள். காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையில் தின்பண்டங்கள் சாப்பிடக்கூடாது என்பது ஒரு சட்டமாகவே இருந்தது" என்று சொல்கிறார் ஹர்மாலா.

"உணவு கிடைக்காமல் இரண்டு வருடங்கள் அவதிப்பட்டிருந்த அனுபவத்தால், உணவின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார். உணவை வீணடிக்கக்கூடாது என்று வலியுறுத்துவார். சில உணவுகளை பிடிக்கவில்லை என்று சொன்னால் அதற்காக வருத்தப்படுவார்."

பாகிஸ்தான் வீரர்களுக்கும் மரியாதை

ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் பாகிஸ்தான் ஜென்ரல் பாக்தியார் ராணாவுடன்படத்தின் காப்புரிமைHARMALA GUPTA Image captionஜெனரல் ஹர்பக்ஷ் சிங் பாகிஸ்தான் ஜென்ரல் பாக்தியார் ராணாவுடன்

ஹர்மாலா சொல்கிறார், "பாகிஸ்தானில் யுத்தத்தில் வெற்றி பெற்ற பகுதிகளில் இருந்த மசூதிகளை பழுதுபார்த்தார். அதுமட்டுமல்ல, போரில் உயிரிழந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் சடலங்களை, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்தார்."

"பாகிஸ்தான் ராணுவத்தில், ஹர்பக்ஷ் சிங்க்கு சமமான பதவி ஜென்ரல் பாக்தியார் ராணா, அவரது நண்பர் மற்றும் சக மாணவர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இருவரும் லாகூர் அரசு கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது, ஐ.நா சார்பில் சிலியின் ஜென்ரல் மரம்பியோ கலந்துக் கொண்டார்" என மேலும் தெரிவித்தார்.

"பேச்சுவார்த்தைக்கு சென்ற என் தந்தை, ஜென்ரல் ராணா எங்கே? அவரை பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னதுடன், ராணாவை பார்த்ததும், பல ஆண்டு பிரிந்திருந்த நண்பரை ஆரத் தழுவிக்கொண்டார். இந்த காட்சியைக் கண்டு திகைப்படைந்த ஜென்ரல் மரம்பியோ, நீங்களா எதிரெதிர் தரப்பில் இருந்து யுத்தம் செய்தீர்கள், என்று கேட்டார்" என்று குறிப்பிட்டார்.

வாளை பரிசாக கொடுக்கும் சாஸ்திரி

ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்குக்கு வாள் வழங்கும் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிபடத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image captionஜெனரல் ஹர்பக்ஷ் சிங்குக்கு வாள் வழங்கும் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி

1965 ஆம் ஆண்டின் போருக்குப் பிறகு, டெல்லியில் இருக்கும் சீக்கிய சமூகத்தினரின் 'பங்களா சாஹிப் குருத்வாரா', பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி மற்றும் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்குக்கு தலைப்பாகை வழங்கி பெருமைப்படுத்தியது.

பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு பரிசாக வீரவாள் ஒன்று வழங்கப்பட்டது. சாஸ்திரியின் உயரத்தைவிட பெரியதாக இருந்த அந்த வாளை பெற்ற அவர், தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்கின் கையை பிடித்து எழுப்பி, அவருக்கு பரிசாக வழங்கினார்.

அப்போது, சாஸ்திரி சொன்ன வார்த்தைகள் மிகவும் பிரபலமானவை. நான் வேட்டி கட்டும் பிரசாத், ஆனால் என்னுடைய ஜென்ரல் வேட்டிக்கட்டும் சாதாரணர் அல்ல, யுத்தகளத்தில் போரிடும் வீரர் என்ற பொருள்படும், "மை தோ தோத்தி பிரசாத் ஹூ, பர் மேரே ஜென்ரல் தோத்தி பிரசாத் நஹி".

இன்றும் பிரதமர் சாஸ்திரி வழங்கிய வாளை ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்கின் குடும்பத்தினர் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.

http://www.bbc.com/tamil/global-41296130

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் போரில் விமானம் வெடித்து எதிரி மண்ணில் விழுந்த இந்திய விமானப்படை அதிகாரி

போர்க்கைதியாக திரும்பிவந்த இந்திய விமானப் படைத் தளபதி நந்தா கரியப்பா (இடப்புறம் இருந்து இரண்டாவது)படத்தின் காப்புரிமைNANDA CARIAPPA Image captionபோர்க்கைதியாக திரும்பிவந்த இந்திய விமானப் படையின் லெப்டினென்ட் நந்தா கரியப்பா (இடப்புறம் இருந்து இரண்டாவது)

1965 இந்திய-பாகிஸ்தான் போரின் இறுதி நாளன்று, கசூர் பகுதியில் பாகிஸ்தான் நிலைகளின் மீது விமான தாக்குதல் நடத்தும் பொறுப்பு விமானப்படையின் லெஃப்டினென்ட் நந்தா கரியப்பா, குக்கே சுரேஷ் மற்றும் ஏ.எஸ். செஹல் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மூன்று பேரும் முதல் சுற்று தாக்குதலை நடத்தியபோது, விமான எதிர்ப்பு பீரங்கியால் தாக்கப்பட்ட செஹல், தொடர்ந்து தாக்குதல் நடத்த முடியாமல் போனது. கரியப்பாவும், குக்கேயும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். இலக்கின் மேலிருந்து தாக்குதல் நடத்திய கரியப்பாவின் ஹண்ட்டர் விமானம் தாக்குதலுக்கு இலக்கானது.

நந்தா கரியப்பாவின் விமானத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழுந்ததை சுரேஷ் பார்த்துவிட்டார். விமானத்தின் மேலே எழும்பும் தீயை கட்டுப்படுத்த நந்தா கரியப்பா செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. விமானத்தில் இருந்து வெளியேறுமாறு இரண்டு முறை அறிவுறுத்தினார் சுரேஷ், ஆனால் அவற்றை நந்தா புறக்கணித்துவிட்டார்.

வெளியேறச் சொல்லி மூன்றாவது முறையாக சுரேஷ் கத்திய பிறகு, நந்தா கரியப்பா வெளியேறுவதற்கான பொத்தானை அழுத்தி அவர் பாராசூட் மூலம் வெளியேறிய அடுத்த கணம், அவருடைய ஹண்டர் விமானம் தீப்பிழம்பை கக்கிக்கொண்டு இந்திய எல்லைக்குள் விழுந்தது.

ஆனால், நந்தா கரியப்பா விழுந்த பகுதி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது. சரியாக 9 மணி 4 நிமிடத்தில் கரியப்பா தரையில் மோதியபோது அவரது கரத்தில் கட்டியிருந்த கைக்கடிகாரமும் அந்த நொடியே நின்றுபோனது.

முதுகெலும்பு பாதிப்பு

அதிபர் அயூப் கானும் அவரது இரு மகன்களும்படத்தின் காப்புரிமைGAUHAR AYUB KHAN Image captionஅதிபர் அயூப் கானும் அவரது இரு மகன்களும்

கரியப்பாவின் உடலின் பின்பகுதி தரையில் மோதியதால், அவரது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரை சுற்றிவளைத்து, கரங்களை உயர்த்தச் சொன்னபோது, நந்தா கரியாப்பாவால் கைகளையே தூக்க முடியவில்லை. முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டதால் அசையக்கூட முடியாமல் முடங்கிப்போனார்.

இதை நினைவுகூர்கிறார் நந்தா கரியப்பா, "ஏறக்குறைய மயக்க நிலையில் இருந்த நான் என்னைச் சூழ்ந்திருப்பது இந்திய வீரர்கள் என்றே நினைத்தேன். தொலைவில் குண்டு வெடிக்கும் சப்தமும் கேட்டது. உன்னைச் சேர்ந்தவர்கள் எங்களை தாக்குகிறார்கள் என்று அவர்கள் சொன்னபோதுதான் நான் எதிர்தரப்பிடம் சிக்கிவிட்டதை உணர்ந்தேன்'' என்கிறார்.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏழாவது கைதியாக பாகிஸ்தானால் பிடிக்கப்பட்ட அவர்தான் அந்த கடைசி போர்க்கைதியும் ஆவார். விசாரணையின்போது, அவர்களின் கேள்விக்கு கிளிப்பிள்ளை போல தனது பெயர், பதவி, எண் போன்ற தகவல்களை சொல்லிவிட்டார். நந்தா கரியப்பா என்ற பெயரை கேட்ட ஒரு பாகிஸ்தானிய அதிகாரி, ஃபீல்ட் மார்ஷல் கரியப்பா உனக்கு உறவா என்று கேட்டிருக்கிறார்.

கரியப்பாவுக்கு செய்தி அனுப்பிய அயூப் கான்

பாகிஸ்தானில் இருந்து திரும்பிய பிறகு நந்தா கரியப்பா (புகைப்படத்தில் பின்புறம் நிற்பவர்), விமானப்படை தளபதி அர்ஜுன் சிங்குடன்படத்தின் காப்புரிமைUSI Image captionபாகிஸ்தானில் இருந்து திரும்பிய பிறகு நந்தா கரியப்பா (புகைப்படத்தில் பின்புறம் நிற்பவர்), விமானப்படை தளபதி அர்ஜுன் சிங்குடன்

நந்தா கரியப்பா, இந்தியாவின் முன்னாள் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் கரியப்பாவின் மகன். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவதற்கு முன்பு கரியப்பாவின் கீழ் பணிபுரிந்த அயூப் கான், கரியப்பாவின் மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர். நந்தா கரியப்பா பிடிபட்ட அன்றே, அவர் தனது காவலில் பாதுகாப்பாக இருப்பதாக ரேடியோ பாகிஸ்தானில் அயூப் கான் அறிவித்தார்.

இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் ஹை கமிஷனர் மூலம் கரியப்பாவைத் தொடர்பு கொண்ட ஆயூப் கான், நந்தா பாதுகாப்பாக இருப்பதாக செய்தி அனுப்பினார். கரியப்பா விரும்பினால், அவரது மகனை விடுவிப்பதாகவும் தெரிவித்தார்,

பிரிட்டிஷ் ஜெனரலுடன் கைகுலுக்கும் ஃபீல்டு மார்ஷல் காரியப்பாபடத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image captionபிரிட்டிஷ் ஜெனரலுடன் கைகுலுக்கும் ஃபீல்டு மார்ஷல் காரியப்பா

அயூப் கானின் செய்தியை பணிவுடன் நிராகரித்தார் கரியப்பா. பாகிஸ்தான் ஹை கமிஷனரிடம் பதிலுரைத்த கரியப்பா, "நந்தா என்னுடைய மகன் மட்டுமல்ல, இந்த தாய்த் திருநாட்டின் புதல்வன். இந்தியத் தாயின் பிற போர்க்கைதிகளை போன்றவரே அவரும். அவரை வெளியே அனுப்ப விரும்பினால், போர்க்கைதிகள் அனைவரையும் விடுதலை செய்துவிடுங்கள்" என்று சொன்னார்.

ஸ்டேட் எக்ஸ்பிரஸ் சிகரெட்

தான் உயிர் பிழைத்திருக்கும் செய்தி இந்தியாவிற்கு சொல்லப்பட்ட தகவல் நந்தாவுக்கு தெரியாது. அவர் தனது நினைவுகளை புரட்டிப்பார்க்கிறார், "நாட்டுக்கு திருப்பி அனுப்புகிறோம் என்று ஆசைகாட்டிய பாகிஸ்தானிய அதிகாரிகள், இந்திய ராணுவத்தை பற்றிய தகவல்களை என்னிடம் இருந்து தெரிந்துக் கொள்ளும் முயற்சிகளை தொடர்ந்தார்கள். அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை.

எனவே, சிகிச்சைக்காக லுய்யானிக்கு அழைத்துச் சென்றார்கள். சித்ரவதை செய்யப்போவதாக அவர்கள் அச்சுறுத்தினாலும், அப்படி எதையும் செய்யவில்லை. பத்து நாட்கள் தனிமையில் வைத்திருந்தார்கள்" என்கிறார்.

அப்போதைய ராணுவத் தலைவர் ஜென்ரல் மூஸாபடத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image captionஅப்போதைய ராணுவத் தலைவர் ஜென்ரல் மூஸா

இதனிடையே, நந்தா கரியப்பாவை பார்க்க மருத்துவமனைக்கு வந்த பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜென்ரல் மூஸா, உதவி எதாவது தேவையா என்று கேட்டார்.

இந்தியாவின் பிற போர்க்கைதிகளுடன் தன்னை வைக்கவேண்டும் என்று நந்தா விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மூஸா, 57 போர்க்கைதிகள் இருந்த ராவல்பிண்டிக்கு அவரை மாற்றினார்.

ராவல்பிண்டியின் சி.எம்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்தாவை பார்க்க அயூப் கானின் மனைவியும், அவரது மூத்த மகன் அக்தர் அயூபும் வந்தார்கள். "ஸ்டேட் எக்ஸ்பிரஸ் சிகரெட்களைக் கொண்ட அட்டைப்பெட்டி மற்றும் வோட் ஹவுசின் (Wodehouse) ஒரு புத்தகத்தையும் எனக்கு கொடுத்த அவர்கள், எனது உடல்நிலையை விசாரித்துவிட்டு, விரைவில் விடுவிப்பதாக ஆறுதலளித்தார்கள்" என்று ஏர் மார்ஷல் நந்தா கரியப்பா கூறுகிறார்.

இதற்கிடையில், பாகிஸ்தானின் ஜே.சி.ஓ, நந்தா கரியப்பாவிடம் வந்து சொன்னார், "நாளை இரவு விருந்துக்கு அதிபர் அயூப் உங்களை அழைத்திருக்கிறார்" விருந்து அழைப்பை புன்னகையுடன் மறுத்துவிட்டார் நந்தா கரியப்பா.

ஆஷா பாரேக்கின் பரிசு

இதனிடையே, இந்திய போர்க்கைதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தில் இருந்து பல உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டன. நடிகை ஆஷா பரேக்கிடமிருந்து வந்த, பல்வேறு வகை உலர் பழங்கள் கொண்ட ஒரு பொட்டலம் கரியப்பாவுக்கு கிடைத்தது. 1966 புத்தாண்டு தினத்தன்று சிறை அதிகாரி அவருக்கு சுவையான கோழிக்கறி உணவை கொடுத்தார்.

மனைவியுடன் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான்படத்தின் காப்புரிமைGAUHAR AYUB KHAN Image captionமனைவியுடன் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான்

ஆடைகளுக்கு அளவெடுக்க தையற்காரர் வரவிருப்பதாக சிறையில் பணிபுரிந்த இந்து மத துப்புரவு பணியாளர் நந்தா கரியப்பாவிடம் ரகசியத் தகவலை சொன்னார். நந்தா கரியப்பாவுக்கான ஆடைகள் தைக்கப்பட்டன. அவரை இந்தியா திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் அவை.

திடீரென்று ஒரு நாள் நந்தா கரியப்பாவின் கண்கள் கட்டப்பட்டு பெஷாவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஃபோகர் எஃப் 27 விமானம் மூலம், பாகிஸ்தானில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டார் நந்தா.

சரியாக 9 மணி 4 நிமிடத்தில் அவர்கள் இந்திய எல்லையை தாண்டினார்கள். அதாவது நான்கு மாதங்களுக்கு முன்பு இதே நேரத்தில் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தானில் விழுந்தார் நந்தா கரியப்பா.

முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தினால், நந்தா கரியப்பா அதன்பிறகு போர் விமானங்களில் பணிபுரிய முடியவில்லை. ஆனால் ஹெலிகாப்டர்களை இயக்குவார். 1971ஆம் ஆண்டு போரில், ஹாஸிமாராவில் ஹெலிகாப்டர் பிரிவின் 111வது பிரிவுக்கு தலைமை தாங்கி வழிநடத்திய நந்தா கரியப்பா, இந்திய ராணுவத்தின் ஏர் மார்ஷலாக பதவி உயர்வுபெற்று ஓய்வு பெற்றார்.

http://www.bbc.com/tamil/global-41311593

Link to comment
Share on other sites

இந்தியா-பாகிஸ்தான் போர்: பல ஆண்டுகளுக்கு பிறகு வருத்தம் தெரிவித்த பாகிஸ்தானி விமானி

 

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965-இல் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் 11-ஆவது பாகம் இது.

தனது சேபர் விமானத்தில் பாகிஸ்தான் விமானி கைஸ் ஹுசைன்படத்தின் காப்புரிமைQUAIS HUSSAIN Image captionதனது சேபர் விமானத்தில் பாகிஸ்தான் விமானி கைஸ் ஹுசைன்

1965, செப்டம்பர் 19, குஜராத் மாநில முதலமைச்சர் பல்வந்த்ராவ் மெஹ்தா அதிகாலையிலேயே தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டார்.

காலை பத்து மணிக்கு என்.சி.சி பேரணியில் உரையாற்றிய முதலமைச்சர் பல்வந்த்ராவ், உணவருந்திவிட்டு வீட்டுக்கு திரும்பினார். மதியம் ஒன்றரை மணி சுமாருக்கு அஹமதாபாத் விமானநிலையத்திற்கு கிளம்பினார்.

மனைவி சரோஜ்பென், சக ஊழியர்கள் மூன்று பேர் மற்றும் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் ஒரு நிருபர் ஆகியோர் முதலமைச்சருடன் இருந்தார்கள்.

விமானநிலையத்திற்கு வந்த அவருக்கு இந்திய விமானப்படையின் முன்னாள் விமானி, ஜஹாங்கீர் ஜுங்கூ எஞ்சினியர் சல்யூட் வைத்தார்.

400 கி.மீ. தொலைவு பயணித்து துவாரகாவிற்கு அருகில் உள்ள மீடாபுரில் நடைபெறும் பேரணியில் உரையாற்ற இருந்தார் பல்வந்த்ராய் மெஹ்தா.

விமானத்தை சுட்டு வீழ்த்த கட்டளை

கைஸ் ஹுசைன்படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE

மூன்றரை மணி சுமாருக்கு பாகிஸ்தானின் மெளரிபுர் விமானதளத்தில் புஜ் பகுதிக்கு அருகே உள்ள ரேடாரில் இந்திய விமானம் ஒன்று புலப்பட்டது. அதை கண்காணிக்குமாறு லெஃப்டினென்ட் புகாரி மற்றும் விமான அதிகாரி கைஸ் ஹுசைனுக்கு உத்தரவிடப்பட்டது.

அமெரிக்காவில் எஃப் 86 செபர் விமானம் பற்றிய பயிற்சியை முடித்துக்கொண்டு நான்கு மாதங்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் திரும்பியிருந்தார் கைஸ்.

கைஸ் கூறுகிறார், "எச்சரிக்கை ஒலி ஒலித்த மூன்று நிமிடங்களில் நான் விமானத்தை ஸ்டார்ட் செய்துவிட்டேன். 20 ஆயிரம் அடி உயரத்தில் பறக்குமாறு கூறிய ரேடார் நிலைய அறிவுறுத்தலை பின்பற்றி இந்திய எல்லைக்குள் சென்றேன்".

"சில நிமிடங்களிலேயே கீழே வருமாறு பணிக்கப்பட்டேன். மூன்றாயிரம் அடி உயரத்தில் புஜ்ஜை நோக்கி பறந்து கொண்டிருந்த இந்திய விமானத்தை பார்த்தேன். அது சிவிலியன் விமானம் என்று தெரிந்ததும் உடனே விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துவிட்டேன்," என்று பிபிசி நிருபரிடம் கைஸ் தெரிவித்தார்.

"அந்த விமானத்தின் மேற்புரத்தில் எழுதியிருக்கும் எண்ணை படிக்கும் அளவு நெருக்கமாக சென்றேன். அதில் விக்டர் டேங்கோ என்று எழுதியிருக்கிறது, எட்டு இருக்கைகள் கொண்ட விமானம் இது, இப்போது என்ன செய்வது என்று ரேடாரில் அதிகாரிகளிடம் கேட்டேன்".

மறுஉத்தரவு வரும்வரை காத்திருக்கவும் என்று பதில் வந்த்து. மிகவும் தாழ்வாக விமானத்தை செலுத்திக் கொண்டிருந்தேன், அதிக நேரம் காத்திருந்தால் விமானத்தின் எரிபொருள் தீர்ந்துவிடலாம் என்ற அச்சமும் இருந்தது. ஆனால் விமானத்தை சுட்டு வீழ்த்து என்ற உத்தரவு மூன்று அல்லது நான்கு நிமிடங்களிலேயே கிடைத்துவிட்டது.

அனைவரும் கொல்லப்பட்டனர்

அப்போதைய குஜராத் முதலமைச்சர் பல்வந்த்ராய் மெஹ்தா

ஆனால் உத்தரவு கிடைத்த உடனே கைஸ் இந்திய விமானத்தை சுடவில்லை. சிவிலியன் விமானத்தை சுடவேண்டுமா என்று மீண்டும் ஒருமுறை கேட்டார். உத்தரவு மீண்டும் உறுதி செய்யப்பட்ட பிறகே செயலில் இறங்கினார் கைஸ்.

ஹூசைன் நினைவுகூர்கிறார், "சுடுமாறு உத்தரவு கிடைத்த உடனே, நூறு அடி தூரத்தில் இருந்து விமானத்தை நோக்கி சுட்டேன். விமானத்தின் இடப்புற இறக்கையில் இருந்து எதோ ஒரு பாகம் கழன்று விழுவதைப் பார்த்தேன். பிறகு என்னுடைய விமானத்தின் வேகத்தை குறைத்துக்கொண்டு மீண்டும் சுட்டேன். அப்போது வலப்புற எஞ்சினில் இருந்து தீ கிளம்பியதைப் பார்த்தேன்."

அசைக்கப்பட்ட விமானத்தின் இறக்கைகள்

"இது ராணுவ விமானம் அல்ல" என்று இந்திய விமானத்தில் இருந்து மீண்டும் மீண்டும் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டதை கைஸ் நினைவுகூர்கிறார்.

"இந்திய விமானத்தை தாக்கியபோது, அதன் விமானி, இறக்கைகளை அசைத்து சமிக்ஞை அனுப்பினார். அதன் அர்த்தம், 'எங்கள் மீது கருணைக்காட்டுங்கள்' (Have mercy on me). ஆனால் எல்லைக்கு அருகே பயணிக்கும் இந்த விமானம், எங்கள் நாட்டை புகைப்படம் எடுக்கிறதோ என்ற சந்தேகமும் எழுந்தது. யுத்தகாலத்தில் இதுபோன்ற சந்தேகங்கள் எழாமல் இருப்பதுதான் தவறு".

மனைவியுடன் ஜஹாங்கீர்படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image captionமனைவியுடன் ஜஹாங்கீர்

"அந்த விமானத்தில் முதலமைச்சர் பல்வந்த்ராய் இருப்பார் என்று யாருக்குமே தோன்றவில்லை. மனைவி மற்றும் ஆறு அல்லது ஏழு நபர்களுடன் குஜராத் முதலமைச்சர் விமானத்தில் இருப்பார் என்று எப்படி நினைக்கமுடியும்? விமானத்திற்குள் யார் இருக்கிறார்கள் என்பதை கேட்டறியும் ரேடியோ வசதிகள் ஏதும் இல்லை".

ராணுவ நடவடிக்கைகளுக்கு சிவிலியன் விமானத்தை பயன்படுத்துவது

பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் நிபுணத்துவம் பெற்ற கைசர் துஃபைல் எழுதுகிறார், "இந்தியாவும் பாகிஸ்தானும் 1965 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் ராணுவ சேவைக்கு சிவிலியன் விமானங்களையும் பயன்படுத்தின. எனவே எந்த விமானமாக இருந்தாலும், அது ராணுவ கண்ணோட்டத்துடனே பார்க்கப்படும்."

"ஐக்கிய நாடுகள் மற்றும் செஞ்சிலுவை அமைப்பின் விமானங்கள் மட்டுமே வெளிப்படையாக தெரியும். அந்த சமயத்தில் இருந்த சர்வதேச விமான பறப்பு சட்டங்களின்படி சிவிலியன் விமானங்களை தாக்கக்கூடாது என்று எந்த சட்டப்பிரிவும் இல்லை. பிறகு 1977 ஆம் ஆண்டில் அது ஜெனீவா உடன்படிக்கையின் ஒரு பகுதியாக மாறியது".

விடை தெரியா வினாக்கள்

ஜஹாங்கீரின் இறுதிச்சடங்குகளின் புகைப்படம்படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image captionஜஹாங்கீரின் இறுதிச்சடங்குகளின் புகைப்படம்

'குஜராத் முதலமைச்சர் பல்வந்த்ராய் மெஹ்தா பயணித்த சிவிலியன் விமானத்தை பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது' என்று அன்று மாலை ஏழு மணிக்கு ஒலிபரப்பான ஆகாசவாணி செய்திகளில் அறிவிக்கப்பட்டது.

பி.வி.எஸ். ஜகன் மோகன் மற்றும் சமீர் சோப்ரா எழுதிய 'இந்தியா பாகிஸ்தான் வான் சண்டை 1965' (The India Pakistan Air war of 1965) புத்தகத்தில், "விபத்துக்குள்ளான இடத்திற்கு நலியாவின் தாசில்தார் அனுப்பப்பட்டுள்ளார், அங்கு அவர் குஜராத் சமாச்சர் பத்திரிகை நிருபரின் எரிந்துகிடந்த அடையாள அட்டையை கண்டெடுத்தார்."

"விடை தெரியா பல வினாக்கள் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. போர் நடந்துக் கொண்டிருந்த சூழலில், இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்பு விமானத்தின் துணை இல்லாமல் ஒரு முதலமைச்சரின் விமானம் சென்றது ஏன்? முதலமைச்சரின் விமானப் பயணம் பற்றி இந்திய விமானப்படைக்கு தகவல் அனுப்பப்பட்டதா இல்லையா? என்பவை அவற்றில் தலையாய கேள்விகள்."

 

நான்கு மாதங்களுக்கு பிறகு கிடைத்த விசாரணை அறிக்கையின்படி, "முதலமைச்சரின் விமானம் பயணிக்க மும்பை விமானப்படை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஆனால் குஜராத் மாநில அரசு அனுமதி கோரி வற்புறுத்தியபோது, எங்கள் எச்சரிக்கையை மீறி செல்வதானால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று விமானப்படை நிர்வாகம் கைவிரித்துவிட்டது."

இந்திய பாகிஸ்தான் யுத்தத்தில் ராணுவத்திற்கு சொந்தமில்லாத சிவிலியன் விமானம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டது இதுவே முதல்முறை.

எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட இந்தியாவின் முதல் அரசியல்வாதி பல்வந்த்ராய் மெஹ்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதலை தவிர்க்க 45 நிமிடங்கள் வரை வானிலேயே சுற்றிய விமானம்

பிபிசி ஸ்டூடியோவில் ஜஹாங்கீர் எஞ்சினியரின் மகள் ஃபரீதா சிங்குடன் ரெஹான் ஃபஜல் Image captionபிபிசி ஸ்டூடியோவில் ஜஹாங்கீர் எஞ்சினியரின் மகள் ஃபரீதா சிங்குடன் ரெஹான் ஃபஜல்

விமானி ஜஹாங்கீர் எஞ்சினியரின் விமானம் விபத்துக்கு உள்ளான தகவல் டெல்லியில் இருந்த குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. சித்தப்பாவான ஏர் மார்ஷல் எஞ்சினியர், ஜஹாங்கீர் எஞ்சினியரின் மகள் ஃபரீதா சிங்கிடம் இந்த தகவலை தெரிவித்தார்.

ஃபரீதா சிங் பிபிசியிடம் கூறுகிறார், 'தகவல் அறிந்த்தும் ஏற்பட்ட துக்கம், முழு விவரங்களை கேட்டதும் பன்மடங்காக அதிகரித்தது. தனது விமானத்தை தாக்க வந்த பாகிஸ்தான் விமானத்திலிருந்து தப்பிப்பதற்காக 45 நிமிடங்கள் வரை அங்குமிங்குமாக விமானத்தை ஓட்டியிருக்கிறார். செபர் விமானத்துடன் ஒப்பிடும்போது, சிறிய ரக விமானத்திற்கு எரிபொருள் குறைவாகவே செலவாகும் என்பதால் அவர் இந்த யுக்தியை கையாண்டிருக்கிறார்."

"விமானத்தை மேலும் கீழுமாக அசைத்து, எதிர் தரப்பினரை அலைகழித்திருக்கிறார். கைஸ் ஹுஸைனின் விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போகும் நிலையில் இருந்தபோதுதான் அவர் அப்பாவின் விமானத்தை சுட்டிருக்கிறார். தாக்குதல் நடத்திய பிறகு அவர் தனது விமானத்தை மோரிபுர் விமானதளத்தில் இறக்கியபோது எரிபொருள் முற்றிலுமாக தீர்ந்துவிட்டதால், எஞ்சின் செயல்பாட்டை நிறுத்திவிட்டது. அதன்பிறகு, அந்த விமானத்தை இழுத்துச் செல்ல வேண்டியிருந்த்து. தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் அப்பா செய்தார் என்று உறுதியாக சொல்லமுடியும்."

மின்னஞ்சலில் வருத்தம் தெரிவித்த கைஸ் ஹுஸைன்

பாகிஸ்தான் விமானப்படை விமானி கைஸ் ஹுஸைன்படத்தின் காப்புரிமைQUAIS HUSSAIN Image captionபாகிஸ்தான் விமானப்படை விமானி கைஸ் ஹுஸைன்

இந்த சம்பவம் பற்றிய பெரிய அளவிலான விவாதம் ஏதும் எழவில்லை. ஆனால் மனதில் தனது சோகத்தை வைத்து அமைதிகாத்தார் கைஸ் ஹூஸைன்.

46 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானின் ஒரு பத்திரிகையில் வெளியிடப்பட்ட கைஸர் துஃபைலின் ஒரு கட்டுரையில், ஜஹாங்கீர் எஞ்சினியரின் விமானம் யுத்த அபாயம் சூழ்ந்த பகுதியில் பறக்க அனுமதி கொடுத்த இந்திய போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளே அந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த்து.

அப்போது, கைஸ் ஹுஸைன், ஜஹாங்கீரின் மகள் ஃபரீதாவிடம் தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரவேண்டும் என்று முடிவுசெய்தார்.

கைஸ் ஹூஸைன் நினைவுகூர்கிறார், "இந்த சம்பவம் பற்றி நேரில் கண்ட சாட்சி உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறிய நண்பர் கைஸர் துஃபைல், 'டிஃபென்ஸ் ஜர்னல் பாகிஸ்தான்' இல் வெளியிட்டார். அதற்கு பிறகு இந்திய விசாரணைக் குழு இந்த சம்பவம் குறித்து நடத்திய அறிக்கை என்னிடம் கொடுக்கப்பட்டது. அதில், தரையிறங்கிய ஜஹாங்கீர் எஞ்சினியரின் விமானத்தை பாகிஸ்தானிய விமானங்கள் இரண்டு தாக்கி அழித்ததாக கூறப்பட்டிருந்தது."

குடும்பத்துடன் ஜஹாங்கீர் எஞ்சினியர்படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image captionகுடும்பத்துடன் ஜஹாங்கீர் எஞ்சினியர்

"எந்த சூழ்நிலையில் ஜஹாங்கீரின் விமானம் தாக்கப்பட்டது என்ற விவரங்களை அவரது குடும்பத்தினரே அறிந்திருக்கமாட்டார்கள், எனவே அவர்களை தேடி, உண்மையான விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்று தோன்றியது. இதுபற்றி என் நண்பன் நவீத் ரியாஜிடம் பேசினேன்" என்கிறார் கைஸ் ஹூஸைன்.

"அவர் மூலமாக ஜஹாங்கீர் எஞ்சினியரின் மகள் ஃபரீதா சிங்கின் மின்னஞ்சல் முகவரி கிடைத்த்து. 2011 ஆகஸ்ட் ஆறாம் தேதியன்று, நான் அவருக்கு எழுதிய மின்ன்ஞ்சலில் சம்பவம் பற்றிய அனைத்து விவரங்களையும் விரிவாக குறிப்பிட்டேன். மனித வாழ்க்கையின் முடிவு சோகமானது, நானும் அதற்கு விதிவிலக்கல்ல என்று அதில் குறிப்பிடிருந்தேன். உங்கள் தந்தையின் மரணத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன். வாய்ப்பு கிடைத்தால், நான் தனிப்பட்ட முறையில் உங்களை சந்தித்து, எனது வருத்த்த்தை வெளிப்படுத்துவேன்."

"நான் மன்னிப்பு கேட்கவில்லை, ஒரு ராணுவ போர் விமானியாக எனது கடமையையே செய்தேன். உத்தரவை நிறைவேற்றாவிட்டால், விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சரியான காரணம் இல்லாமல் வேண்டுமென்றே தாக்கவில்லை என்று தெரியவந்தால் கோர்ட் மார்ஷல் செய்யப்படலாம்.

"என் கடமையில் இருந்து தவறவோ, எந்தவொரு நடவடிக்கையை எதிர்கொள்ளவோ நான் விரும்பவில்லை என்று சொல்கிறார் கைஸ் ஹூஸைன்."

ஃபரீதாவின் பதில்

மனைவி மற்றும் மகள்களுடன் ஜஹாங்கீர் எஞ்சினியர்படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image captionமனைவி மற்றும் மகள்களுடன் ஜஹாங்கீர் எஞ்சினியர்

கைஸ் ஹூஸைன் அனுப்பிய மின்னஞ்சலை ஃபரீதா கவனிக்கவில்லை.

அவர் பிபிசியிடம் கூறுகிறார், "என் அப்பா ஓட்டிச் சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்தியவர் என்னை தேடிக் கொண்டிருந்த தகவல் எனக்கு தெரியாது. இந்த விஷயம் தெரியவந்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதற்கு காரணம், அப்பாவின் மரணம் பற்றி மீண்டும் வேறு எதையும் கேட்க விரும்பவில்லை".

"மின்னஞ்சலை தினமும் பார்க்கும் பழக்கம் இல்லாத என்னிடம் நண்பர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியான தகவலை தொலைபேசியில் கூறினார். உடனே மின்னஞ்சலை பார்த்தேன். தாமதிக்காமல் அடுத்த கணமே பதில் மின்னஞ்சலை அனுப்பிவிட்டேன். அந்த கடிதம் வெறும் பதிவாக இல்லை, இதயத்தில் இருந்து எழுதப்பட்டிருந்தது."

"இந்த விஷயம் பற்றி அவருக்கு மிகுந்த வருத்தம் இருந்தது. அந்தத் தாக்குதலை நட்த்த அவருக்கு விருப்பமே இல்லை. தனிப்பட்ட முறையில் அவருக்கும் என் தந்தைக்கும் தனிப்பட்ட விரோதமும் இல்லை. அவரது கடமையையே செய்திருக்கிறார்."

கைஸ் கூறுகிறார், "அவரது மின்னஞ்சல் மிகவும் நன்றாக இருந்தது. நான் ஓரடிதான் எடுத்துவைத்தேன். ஆனால் அவர் பல அடிகளை முன்னெடுத்துவைத்தார்…"

'யுத்தத்தில் நாம் அனைவரும் சிப்பாய்களே'

மனைவி மற்றும் மகளுடன் ஜஹாங்கீர் எஞ்சினியர்படத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE Image captionமனைவி மற்றும் மகளுடன் ஜஹாங்கீர் எஞ்சினியர்

46 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்கிறார் ஃபரீதா. "ஆனால் ஒரு விஷயம் என் மனதில் தோன்றியது. இரண்டு நாடுகளுக்கு இடையே விரோதப்போக்கினால் காயம் ஏற்பட்டால் அதற்கு யாராவது ஒருவர் மருந்திட வேண்டும். அதில் அவர் முதல் அடி எடுத்துவைத்தார்."

"அவர் மனதிற்கு வருத்தம் ஏற்படுத்தும் எதையும் பதில் மின்னஞ்சலில் எழுத விரும்பவில்லை... அது விமானியின் தவறு என்று நான் நினைக்கவில்லை, தங்களுக்கு பிடிக்காத விஷயங்களையும் போரில் ஈடுபடுபவர்கள் செய்ய வேண்டியிருக்கும் என்பதையும் அறிவேன்."

"யுத்தக்களத்தில் அனைவரும் சிப்பாய்களே… எனவே கவலைப்பட வேண்டாம் என்று அவருக்கு பதில் எழுதினேன். எனது வார்த்தைகள் அவரது மனக்காயத்திற்கு களிம்பு இட்டிருக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் ஜஹாங்கீர் எஞ்சினியரின் மகள் ஃபரீதா.

http://www.bbc.com/tamil/global-41325848

Link to comment
Share on other sites

பெரும் உயிர் தியாகத்துடன் வரலாற்று சிறப்புமிக்க டோக்ரை போரை வென்றது இந்தியா

 

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965-இல் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் 12-ஆவது பாகம் இது.

பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உடன் டோக்ரி போரில் பங்கேற்ற வீரர்கள். சாஸ்திரிக்கு நேர் பின்னே நிற்பவர் கர்னல் ஹெட்படத்தின் காப்புரிமைUSI Image captionபிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உடன் டோக்ரி போரில் பங்கேற்ற வீரர்கள். சாஸ்திரிக்கு நேர் பின்னே நிற்பவர் கர்னல் ஹெட்

1965 செப்டம்பர் ஆறாம் தேதியன்று காலை ஒன்பது மணிக்கு ஜாட் ரெஜிமெண்டின் மூன்றாவது பிரிவினர் இச்சாஹில் கால்வாயை நோக்கி முன்னேறத் தொடங்கினார்கள்.

கால்வாயின் கரைப்பகுதியில் நடைபெற்ற யுத்தத்தில் பாகிஸ்தான் விமானப்படை, இந்திய தரப்பின் கனரக ஆயுதங்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் 11 மணிக்குள் கால்வாயின் மேற்குப் பகுதியில் பாடாநகரையும் பிறகு டோக்ரையையும் இந்திய வீர்ர்கள் கைப்பற்றினார்கள்.

ஆனால், இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு வெற்றி பெற்ற தகவல் சென்றடையவில்லை. ராணுவப் பிரிவு தலைமையகத்திற்கு சில தவறான தகவல்கள் கிடைத்ததால், டோக்ரையில் இருந்து 9 கிலோமீட்டர் பின்வாங்கி சந்த்புராவில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டது.

பாகிஸ்தானிய படையினர் கடுமையான தாக்குதல் அழுத்தத்தை கொடுத்தபோதிலும், இந்திய வீரர்கள் பதுங்கு குழிகளை அமைத்து அங்கேயே இருந்தார்கள்.

டோக்ரை மீது மீண்டும் தாக்குதல்

கைப்பற்றப்பட்ட டோக்ரை Image captionகைப்பற்றப்பட்ட டோக்ரை

செப்டம்பர் 21ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு மீண்டும் டோக்ரை தாக்கப்பட்டு மீண்டும் கைப்பற்றப்பட்டாலும், பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது.

உலகின் சிறந்த போர்களில் ஒன்றாக இந்தப் போர் கருதப்படுகிறது என்பதோடு, பல ராணுவ பள்ளிகளின் பாடத்திட்டங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் இந்தப் போர் குறித்த பல நாட்டுப்புறப் பாடல்கள் வழக்கில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குண்டுகளுக்கு மத்தியில் வீறுநடை

பிபிசி ஸ்டூடியோவில் ஜென்ரல் வர்மா மற்றும் ரெஹான் Image captionபிபிசி ஸ்டூடியோவில் ஜென்ரல் வர்மா மற்றும் ரெஹான்

மேஜர் ஜெனரல் வர்மா நினைவுகூர்கிறார்: "செப்டம்பர் 21 மற்றும் 22 இரவு, நாங்கள் அனைவரும் எங்கள் பதுங்கு குழிகளில் உட்கார்ந்திருந்தோம், தலைமை அதிகாரி லெஃப்டினெண்ட் கர்னல் ஹெட், பதுங்குக் குழியின் மீது கால் வைத்திருந்தார். பாகிஸ்தானியர்களின் துப்பாக்கி சூடு தொடங்கியவுடன், தலைக்கவசத்தை அணிந்துகொண்டு, குண்டுகளுக்கு மத்தியில் வீறுநடை பயின்றார்."

"யாரைப் பார்த்தும் பயம் இல்லை என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்காகவே அவர் இவ்வாறு நடந்தார். 'என்னை கொல்வதற்காக படைக்கப்பட்டிருக்கும் குண்டில் இருந்து நான் தப்பிக்கமுடியாது என்பது எப்படி உண்மையானதோ, அதேபோல் அதைத்தவிர பிற குண்டுகளால் என்னை ஒன்றும் செய்யமுடியாது' என்று அவர் அடிக்கடி சொல்வார்."

1965 ஆம் ஆண்டு போர் குறித்த புத்தகம் எழுதிய ரச்னா விஷ்ட் ராவத் கூறுகிறார், "செப்டம்பர் 21 அன்று, தனது படையினரிடம் உரையாற்றிய அவர், வீரர்களிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். ஒருவரும் பின்வாங்கக்கூடாது என்பது முதல் கோரிக்கை. டோக்ரையில் உடலாகவோ அல்லது சடலமாகவோ சந்திக்கவேண்டும் என்பது அவரது இரண்டாவது கோரிக்கை."

"நீங்கள் அனைவரும் ஓடிவிட்டால்கூட நான் தனியாக நின்று போரிடுவேன் என்று சொன்ன அவர், புறமுதுகிட்டு உங்கள் கிராமத்திற்குச் சென்றால், தலைமை அதிகாரியை போர்க்களத்தில் தனியாக விட்டு வந்ததற்காக கிராம மக்கள் உங்கள் முகத்தில் உமிழ்வார்கள்" என்று கூறினார்.

தலைமை அதிகாரி இறந்துவிட்டால் என்ன செய்வது?

அதன் பின்னர் உணவருந்திய பிறகு, வீரர்களின் கூடாரத்திற்கு சென்ற மேஜர் ஷெகாவத், "நாம் போரில் உயிர் துறந்தால் அது நல்ல மரணம். பிறப்பும், இறப்பும் ஒருமுறைதான். நமது படாலியன் உங்கள் குடும்பங்களை கவனித்துக் கொள்ளும், எனவே கவலைப்படாமல் கடமையாற்றுங்கள்" என்று சொன்னார்.

இச்சாஹில் கால்வாயின் கரையில் ராணுவத் தளபதி செளத்ரியுடன் கர்னல் ஹெட் Image captionஇச்சாஹில் கால்வாயின் கரையில் ராணுவத் தளபதி செளத்ரியுடன் கர்னல் ஹெட்

போர் நினைவுகளை பற்றி கூறுகிறார் கர்னல் ஷெகாவத், "ஹெட்டின் வார்த்தைகளில் உத்வேகம் அடைந்த வீரர்களில் ஒருவர், நாளை எங்கு சந்திக்கவேண்டும் என்று கேட்டார். டோக்ரையில் என்று பதில் கிடைத்தது".

"அந்த சமயத்தில் ஜாட் மக்கள் பேசும் மொழியை ஹெட் ஓரளவு கற்றுக் கொண்டிருந்தார். தலைமை அதிகாரி காயமடைந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று அவர் புன்னகையுடன் கேட்க, அவரை தூக்கிக்கொண்டு செல்வோம்" என்று ஒருவர் பதிலளித்தார்.

"அதாவது, உயிருடனோ, சடலமாகவோ டோக்ரை செல்லவேண்டும் என்ற உத்தரவை வீரர்கள் சரியாக புரிந்து கொண்டார்களா என்பதற்கான தேர்வுக் கேள்வி அது."

தாக்குதல் தொடங்கிவிட்டது

கர்னல் ஹெட்மண்ட் ஹெட் Image captionகர்னல் ஹெட்மண்ட் ஹெட்

காலாட்படையின் 54வது பிரிவினர் இரண்டு கட்டங்களாக தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். முதலில் பஞ்சாப் ரெஜிமெண்டின் 13வது பிரிவு, 13வது மைல்கல்லில் பாதுகாப்பாக இருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை முறியடிக்க வேண்டும். பின்னர் ஜாட் ரெஜிமெண்டின் மூன்றாவது பிரிவு டோக்ரையை கைப்பற்றவேண்டும்.

ஆனால் ஹெட் முதலிலேயே பிரிகேட் கமாண்டிடம் சொன்னது என்ன தெரியுமா? பஞ்சாப் ரெஜிமெண்டின் 13வது பிரிவு தாக்குதலில் வெற்றியடையாவிட்டாலும், ஜாட் பிரிவினர் இரண்டாம் கட்ட தாக்குதலில் ஈடுபடுவார்கள்.

அவர் சொன்னதுபோலவே, பஞ்சாப் ரெஜிமெண்டின் தாக்குதல் தோல்வியடைந்த்து. அன்று இரவு தாக்குதலை நடத்த வேண்டாம் என்று பிரிகேடியர் வயர்லெஸ் மூலம் ஹெட்டுக்கு உத்தரவிட்டார்.

உத்தரவை ஏற்க மறுத்த ஹெட், தாங்கள் தாக்கப்போவதாக சொன்னார். ஆனால் உண்மையில் தாக்குதல் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

உயிர் பிழைத்தது 27 பேர் மட்டுமே

சரியாக ஒரு மணி நாற்பது நிமிடங்களுக்கு தாக்குதல் தொடங்கியது. டோக்ரைக்கு வெளியே, சிமெண்டால் உருவாக்கபட்ட பாதுகாப்பு சாவடிகளில் (Pillbox) இருந்து பாகிஸ்தானியர்கள் தீவிரமான தாக்குதல் நடத்தினார்கள்.

சுபேதார் பாலே ராம் கத்தினார், 'அனைவரும் வலப்புறத்தில் என்னுடன் சேர்ந்து தாக்குங்கள்'. கேப்டன் கபில் சிங் தாபாவும் அதே நேரத்தில் தாக்கினார்.

குண்டடிபட்டு வீழ்ந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு மற்றவர்கள் தொடர்ந்து சண்டையிட்டனர். பாலே ராமின் மார்பிலும், வயிற்றிலும் ஆறு குண்டுகள் துளையிட்டபோதும் அவர் தன்னுடைய வீரர்களுக்கு வழிகாட்டுவதை, கட்டளையிடுவதை நிறுத்தவில்லை.

போர் தொடங்குவதற்கு முன் 108 ஆக இருந்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை 27 ஆக குறைந்துவிட்டது. கர்னல் ஹெட் தனது புத்தகத்தில் இந்த போரை பற்றி குறிப்பிட்டிருக்கிறார், "அது நம்பமுடியாத தாக்குதலாக இருந்தது. அந்த சண்டையில் நான் பங்கு பெற்றதும், அதை மிகவும் நெருக்கத்தில் இருந்து பார்த்ததும் எனக்கு கிடைத்த வரம் என்றே கருதுகிறேன்."

ஆசாராம் தியாகியின் வீரம்

தலைமை அதிகாரிக்கு பின்னால் 18 கெஜ தொலைவில் நடந்து வந்த கேப்டன் பி.ஆர்.வர்மாவின் வலப்புறத்தில் இருந்து திடீரென பல தோட்டாக்கள் தாக்கியதில் அவர் தரையில் வீழ்ந்தார்.

கம்பனி கமாண்டர் மேஜர் ஆசாராம் தியாகியையும் இரண்டு தோட்டாக்கள் தாக்கின. ஆனால் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்ட அவர், பாகிஸ்தான் மேஜர் ஒருவரை தாக்கினார்.

ரச்னா பிஷ்ட், ரெஹான் ஃபஜலுடன் Image captionரச்னா பிஷ்ட், ரெஹான் ஃபஜலுடன்

'ஆசாராம் தியாகியை மேலும் இரண்டு தோட்டாக்கள் தாக்கின, பாகிஸ்தானி வீரர் ஒருவர் அவரது வயிற்றில் தாக்கினார்' என்று சொல்கிறார் ரச்னா பிஷ்ட்.

தோட்டாக்களால் துளைக்கப்பட்டு, ஏறக்குறைய திறந்திருந்த வயிற்றோடு, கீழே விழுந்த ராம் சிங், ஒரு பெரிய கல்லை எடுத்து, வயிற்றில் தாக்கிய பாகிஸ்தான் வீரரின் தலையை பதம்பார்த்தார்.

மேஜர் வர்மா கூறுகிறார், "தியாகிக்கு அவ்வப்போது நினைவு வந்தது, நானும் தீவிரமாக காயமடைந்திருந்தேன். காயமடைந்தவர்களை அங்கிருந்து அகற்றி சிகிச்சைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் தொடங்கியபோது, மேலதிகாரியான நீங்கள்தான் முதலில் செல்லவேண்டும் என்றார் தியாகி. அவரை பேசாமல் இருக்கச் சொல்லிவிட்டு, முதலில் அவரை அங்கிருந்து வெளியேற்றினேன்."

மேஜர் ஷெகாவத் கூறுகிறார், "தியாகிக்கு தீவிரமான காயம் ஏற்பட்டிருந்தது. 'உயிர் பிழைக்கமாட்டேன், என்னை சுட்டுவிடுங்கள், உங்கள் கையால் உயிர் துறக்க விரும்புகிறேன்' என்று சொன்னார், ஆனால் அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்பினோம்."

அவரை காப்பாற்றும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. செப்டம்பர் 25ஆம் தேதியன்று தன் உயிரை தியாகம் செய்தார் தியாகி.

பாகிஸ்தான் கமாண்டிங் அதிகாரி பிடிப்பட்டார்

காலை 3 மணியளவில் இந்திய வீரர்கள் டோக்ரையை கைப்பற்றினார்கள். காலை 6 மணி 15 நிமிடங்களுக்கு இந்திய டாங்கிகள் அங்கு சென்றடைந்தன. இச்சாஹில் கால்வாயின் மற்றொரு கரையில் குண்டு தாக்குதல் தொடங்கியது. அங்கிருந்து இந்திய தரப்பினர் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டனர்.

குடிசைகளில் பதுங்கியிருந்த பாகிஸ்தானி வீரர்களை ஜாட் ரெஜிமெண்ட் வீரர்கள் கைது செய்தனர். அதில் பாகிஸ்தானின் பஞ்சாப் (படான்) ரெஜிமெண்டின் 16வது பிரிவின் தலைமை அதிகாரி லெஃப்டினெண்ட் கர்னல் ஜே.எஃப் கோல்பாலாவும் அடங்குவார்.

இச்சாஹில் கால்வாயில் லான்ஸ் நாயக் ஓம்பிரகாஷ் இந்தியக் கொடியை ஏற்றினார். அங்கிருந்த வீரர்களின் வாழ்க்கையில் அது பெருமைமிகு தினமாக சரித்திரத்தில் பதிவானது.

குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனிடம் இருந்து மஹாவீர் சக்ர விருதை பெறும் கர்னல் ஹெட்படத்தின் காப்புரிமைMOD Image captionகுடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனிடம் இருந்து மஹாவீர் சக்ர விருதை பெறும் கர்னல் ஹெட்

டோக்ரை போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைத்தால் கண்கள் கலங்குகின்றன.

இந்தப் போரில் பங்கேற்ற லெஃப்டினெண்ட் கர்னல் டி.எஃப் ஹெட், மேஜர் ஆசாராம் தியாகி, கேப்டன் கே.எஸ் தாபா ஆகியோர் மஹாவீர் சக்ர விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்கள்.

ஹுஸைன் உருவாக்கிய சித்திரம்

எம்.எஃப் ஹுசைனின் கைவண்ணத்தில் கர்னல் ஹெட் Image captionஎம்.எஃப் ஹுசைனின் கைவண்ணத்தில் கர்னல் ஹெட்

2013இல் கர்னல் ஹெட் மறைந்தார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த அவரை ரச்னா பிஷ்ட் சந்தித்தார்.

அந்த நினைவை பகிர்ந்து கொள்கிறார் ரச்னா, "ஜான் க்ரீஷ்மின் புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் கொண்டவர் கர்னல் ஹெட். பிராணிகள் மீது அன்பு கொண்ட அவர் 45 நாய்களை வளர்த்துவந்தார். கோட்த்வாருக்கு அருகில் இருக்கும் அவருடைய கிராமத்தின் அருகே ஓடும் கால்வாய் நீரில் தனது செல்லப் பிராணிகளை குளிக்க வைப்பார். தனது வாழ்வின் இறுதி கணம் வரை அவர் கம்ப்யூட்டரையோ, மொபைல் போனையோ பயன்படுத்தியதே இல்லை."

"புகழ்பெற்ற ஓவியர் எம்.எஃப் ஹுசைன் யுத்தகளத்திற்கு சென்று வரைந்த ஒரே ஓவியம் கர்னல் ஹெட்டுடையது. அந்த ஓவியம் இப்போதும் பரேலி ரெஜிமெண்டல் மையத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது"

http://www.bbc.com/tamil/global-41336662

Link to comment
Share on other sites

இந்தியா - பாகிஸ்தான் போரின்போது சீனத் தலையீட்டிற்கு அஞ்சிய இந்தியா

 
1965 இந்திய - பாகிஸ்தான் போரின்போது சீனா தலையீட்டிற்கு அஞ்சிய இந்தியாபடத்தின் காப்புரிமைSHASTRI MEMORIAL

1965 செப்டம்பர் 26, டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் உரையாற்றிய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தார்.

சாஸ்திரி கூறினார், "சர்தார் அயூப் வீறுநடை போட்டு டெல்லிக்கு வருவதாக அறிவித்திருந்தார். அவர் ஒரு பெரிய மனிதர், போற்றப்படக்கூடியவர், அவர் டெல்லிவரை நடந்து வரவேண்டாம் என்பதற்காக நமது வீரர்களை லாகூருக்கு அனுப்பி மரியாதை செய்தோம்."

சாஸ்திரி கிண்டல்

1965 யுத்தத்திற்கு பிறகு இந்தியத் தலைமையின் தன்னம்பிக்கையே சாஸ்திரியை இப்படி பேச வைத்தது. இப்படி கிண்டலாக பேசிய சாஸ்திரியின் குள்ளமான உருவத்தையும், குரலையும் அயூப் கான் ஏற்கனவே பரிகாசித்திருந்தார். மனிதர்களின் வெளித்தோற்றத்தை வைத்து அவர்களை மதிப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தார் அயூப் கான்.

1965 இந்திய - பாகிஸ்தான் போரின்போது சீனா தலையீட்டிற்கு அஞ்சிய இந்தியாபடத்தின் காப்புரிமைUSI

பாகிஸ்தானில் பணிபுரிந்த இந்திய தூதரக ஹை கமிஷனர் ஷங்கர் பாஜ்பாய் நினைவுகூர்கிறார்: "இந்தியா பலவீனமாக இருப்பதாக அயூப் கான் நினைத்தார். இந்தியர்கள் போரிடுவதை அறியாதவர்கள் என்பதோடு அரசியல் தலைமையும் பலவீனமாக உள்ளது என்று அவர் கருதினார். டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த அயூப் கான், நேருவின் மரணத்திற்கு பிறகு, அதனை ரத்து செய்துவிட்டார். அங்குபோய் யாரைப் பார்த்து பேசுவது என்று அவர் கிண்டல் செய்தார்."

"நீங்கள் வரவேண்டாம், நாங்களே வருகிறோம் என்று சாஸ்திரி சொன்னார்.

காஹிரா சென்றிருந்த சாஸ்திரி திரும்பி வரும் வழியில் கராச்சியில் ஒரு நாள் தங்கினார். சாஸ்திரியை விமான நிலையத்தில் வழியனுப்ப வந்த அயூப் கான், 'இவருடன் பேசுவதில் எந்தவித பயனுமில்லை' என்று சைகை மூலம் தனது சகாக்களிடம் சொன்னதை நான் நேரிடையாக பார்த்தேன்."

யுத்தத்தின் சூத்திரதாரி பூட்டோ

இதைத்தவிர மற்றொரு மாபெரும் தவறையும் ஆயூப் கான் செய்தார். காஷ்மீரில் தாக்குதல் நடத்தினால், இந்தியா சர்வதேச எல்லைக் கோட்டை தாண்டிவராது என்று அவரது அனுமானம் பொய்யானது.

கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஸ்ரீநாத் ராகவன் கூறுகிறார், "தங்கள் பலத்தின்மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்கள் பாகிஸ்தான் தரப்பினர் என்பதும் அயூப் கான் ராணுவ ஜென்ரல் என்பதும் இதற்கு காரணம். நேருவின் மரணத்திற்கு பிறகு புதிய பிரதமர் வந்துள்ளார், அவருக்கு போரிடும் திறனும் தைரியமும் இருக்காது, அதிலும் குறிப்பாக, 1962 பின்னடைவுக்குப் பிறகு என்று அவர் நினைத்தார்.''

1965 இந்திய - பாகிஸ்தான் போரின்போது சீனா தலையீட்டிற்கு அஞ்சிய இந்தியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஸ்ரீநாத் ராகவன் மேலும் கூறுகிறார், "அயூப் கானின் வெளியுறவு கொள்கைகளுக்கான தலைமை ஆலோசகராக இருந்த ஜூல்ஃபிகார் அலி பூட்டோ வழங்கிய ஆலோசனை இது - இந்த நேரத்தில் இந்தியாவின்மீது அழுத்தம் கொடுத்தால், காஷ்மீர் பிரச்சினை நமக்கு சாதகமாக முடியும்."

பிரிகேடியர் ஏ.ஏ.கே செளத்ரி '1965 செப்டம்பர்' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார், "போருக்கு முன்னதாக போரின் சாதக பாதகங்கள் பற்றி ஆலோசனை நடத்தவில்லையா என்று போர் நடந்து பல ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் அயூப் கானிடம் கேட்டார்.

அதற்கு, 'என்னுடைய பலவீனமான பக்கத்தை மீண்டும் நினைவுபடுத்தவேண்டாம்' என்று பெருமூச்சுடன், குரல் மங்கிய நிலையில் அவர் பதிலளித்தாக கூறப்படுகிறது."

பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நைய்யார் 1965 போருக்கு பிறகு பாகிஸ்தான் சென்றிருந்தார். அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார், "இந்த போரில் இறுதியில் வெற்றியடைய முடியாது என்பது நன்றாக தெரிந்த நிலையில் நீங்கள் ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள் என்று நான் அயூப் கானிடம் கேட்டேன். அதற்கு அவர், இந்த கேள்வியை என்னிடம் கேட்காதே, பூட்டோவை சந்திக்கும்போது அவரிடமே கேள் என்று சொன்னார்".

மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நையாருடன் பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபஜல் Image captionமூத்த பத்திரிகையாளர் குல்தீப் நையாருடன் பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபஜல்

பூட்டோவின் உரை

பிறகு பூட்டோவுடனான சந்திப்பு குறித்தும் சொல்கிறார் குல்தீப் நைய்யார், "இந்தியாவுடனான போரை நடத்தியது பூட்டோ என்று அனைவரும் சொல்கிறார்களே என்று கேட்டதற்கு, அது குறித்து கவலையில்லை என்று பூட்டோ பதிலளித்தார்.

இந்தியாவை வெற்றிக் கொள்வது என்றால் இதைவிட சிறந்த சந்தர்ப்பம் வேறு ஏதும் இல்லை. இன்னும் சிறிது காலத்தில் இந்தியாவில் ஆயுத தொழிற்சாலைகள் அதிகமாக உருவாகும் சூழல் உள்ள நிலையில் இதற்கு பிறகு உங்களை எதிர்ப்பது சாத்தியமற்றதாகிவிடும்.

இந்த காரணங்களைத்தவிர, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு பாகிஸ்தான் படையினர் சென்றால், அங்குள்ள மக்கள் ஆதரவளிப்பார்கள் என்று நினைத்தேன், ஆனால் என் கணக்கு தப்புக்கணக்காகிவிட்டது என்றார் பூட்டோ."

இந்தியாவுக்கு எதிராக போர் நடத்தவேண்டும் என்று அயூப் கானை வலியுறுத்திய பூட்டோவுக்கு, பிறகு ஐக்கிய நாடுகள் முன்வைத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது பெரும் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அவருடைய பேச்சு நடுநிலை நாடுகளை ஏமாற்றமடைய செய்தது.

ஆனால், பூட்டோவின் அகங்காரம் மற்றும் அலட்சியத்தை அவரது பேச்சு வெளிப்படுத்துவதாக பாகிஸ்தானின் மக்கள் கருதினார்கள்.

பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுடன் அல்தாஃப் கெளஹர்படத்தின் காப்புரிமைGOHAR AYUB KHAN Image captionபாகிஸ்தான் அதிபர் அயூப் கானுடன் அல்தாஃப் கெளஹர்

புறக்கணிக்கப்பட்ட சங்கேத குறியீடு

அயூப் கான் பற்றிய புத்தகம் எழுதிய அல்தாஃப் கெளஹர் கூறுகிறார், "டெல்லியில் பாகிஸ்தான் உயர் ஆணையர் மீயா அர்ஷத் ஹுஸைன், துருக்கி தூதரகம் வாயிலாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்திற்கு சங்கேத குறியீடு மூலம் 'செப்டம்பர் ஆறாம் தேதி பாகிஸ்தானை இந்தியா தாக்கப்போகிறது' என்ற ரகசிய செய்தியை அனுப்பினார். விதிகள்படி, வெளிநாட்டு தூதர்களிடம் இருந்து வரும் சங்கேத குறியீட்டு செய்திகள் அனைத்தையும் அதிபரிடம் காண்பிக்க வேண்டியது கட்டாயம்.

ஆனால், விரைவில் உணர்ச்சி வசப்படும் அர்ஷத் ஹூஸைன் காரணமில்லாமல் அச்சப்பட்டிருக்கலாம் என்று கருதிய பாகிஸ்தான் வெளியுறவு செயலர் அஜீஜ் அஹ்மத், இந்த செய்தி அயூப் கானின் காதுக்கு செல்லாமல் தடுத்துவிட்டார்."

"செப்டம்பர் 6 ம் தேதி 4 மணி அளவில் இந்திய தாக்குதல் பற்றிய செய்தி பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுக்கு கிடைத்தது. அதிபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாகிஸ்தானிய விமானப்படை அதிகாரி ஒருவர், இந்திய வீரர்கள் லாகூர் நோக்கி நகர ஆரம்பித்துவிட்டதாக கூறினார்.

போரின் போது உபவாசம்

போருக்கு பின்னர் பாகிஸ்தானின் நிலைமை இப்படியிருக்க இந்தியாவிலோ பிரதமர் சாஸ்திரி மீது நேர்மறையான கருத்து தோன்றியது. நாடு, நேருவின் மரணத்தில் இருந்து மீண்டு வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த வேளையில், கட்சியில் சாஸ்திரியின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக பார்க்கப்பட்டது.

1965 இந்திய - பாகிஸ்தான் போரின்போது சீனா தலையீட்டிற்கு அஞ்சிய இந்தியாபடத்தின் காப்புரிமைBHARATRAKSHAK.COM

இந்திய ராணுவத்தின் மேற்கத்திய கமாண்ட் தலைவர் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் கூறுகிறார், "சிறிய உயரத்தை கொண்ட மனிதர் எடுத்த மிகப்பெரிய போர் முடிவு லாகூர் நோக்கி செல்வது". இந்தப் போரில், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்து மக்களையும் ஒத்த கருத்துடன் இணைத்து செல்வதற்கான முயற்சிகளை பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி எடுத்தார்.

லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி நினைவுகூர்கிறார், "1965ஆம் ஆண்டு யுத்தத்தின் போது, அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், பிரதமர் சாஸ்திரிக்கு அச்சுறுத்தல் விடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக போரிட்டால், பி.எல்.480 கீழ் இந்தியாவிற்கு கொடுக்கப்படும் சிவப்பு கோதுமையை நிறுத்தி விடப்போவதாக கூறினார்.

நம் நாட்டில் கோதுமை இருப்பு அதிகமாக இல்லாத நேரம் அது. சுயமரியாதை உணர்வு கொண்ட சாஸ்திரி இந்த அச்சுறுத்தலை கேட்டு மிகவும் வருத்தமடைந்தார்."

1965 இந்திய - பாகிஸ்தான் போரின்போது சீனா தலையீட்டிற்கு அஞ்சிய இந்தியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க அதிபரின் இந்த அச்சுறுத்தலுக்கு பிறகு சஸ்திரி இந்திய மக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார்.

'ஒரு வாரத்திற்கு தினசரி ஒரு வேளை உணவை துறந்து உபவாசம் இருப்போம். அமெரிக்காவில் இருந்து வரும் கோதுமை வரத்து இல்லையென்றாலும் பற்றாக்குறை ஏற்படாமல் உறுதியாக நிற்போம்'.

அனில் சாஸ்திரி மேலும் கூறுகிறார், "ஆனால் நாட்டு மக்களிடையே இந்த கோரிக்கையை வைப்பதற்கு முன்னதாக என் அம்மா லலிதா சாஸ்திரியிடம் ஒரு வேண்டுதலை வைத்தார் அப்பா.

'இன்று இரவு உணவை நீ தயாரிக்காதே, நாளை காலை நம் நாட்டு மக்களிடம் இதே கோரிக்கையை நான் வைக்கப்போகிறேன். அதற்கு முன்னால், நம் வீட்டு குழந்தைகள் ஒருவேளை உணவு இல்லாமல் பசியுடன் இருக்க முடியுமா இல்லையா என்று தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்'.

அப்பாவின் வார்த்தையை அம்மா ஏற்றுக் கொண்டார். நாங்கள் ஒருவேளை பசியை தாங்கிக் கொள்ளமுடியும் என்பதை பார்த்த அப்பா, அதன்பிறகே, ஒருவேளை உபவாச கோரிக்கையை மக்களின் முன்வைத்தார்."

1965 இந்திய - பாகிஸ்தான் போரின்போது சீனா தலையீட்டிற்கு அஞ்சிய இந்தியாபடத்தின் காப்புரிமைSHASTRI MEMORIAL

தவறான ஆலோசனை

'கட்ச்-டூ-டாஷ்கண்ட்' என்ற புத்தகத்தை எழுதிய பாரூக் பாஜ்வாவின் கருத்தின்படி, இந்திய அரசின் சில துறைகள் சிறப்பாக செயல்பட்டால் வேறு சில சுமாராகவே செயல்பட்டன. பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், இரண்டும் மிச சிறப்பாக வேலை செய்தன என்று கூறினால் அது தவறு என்கிறார் அவர்.

இந்தப் போரில், உலக நாடுகளில் பல இந்தியாவுக்கு ஆதரவு அளித்ததால், வெளியுறவு அமைச்சகத்தின் பங்கும் முக்கியமானதாக இருந்தது.

இந்தியாவின் செயல்பாடுகள் கட்டுக்குள் இருந்ததாகவே கருதுகின்றனர் ராணுவ பார்வையாளர்கள். இந்தியா, கிழக்கு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்திருக்கமுடியும் என்பது அவர்களின் கோணம்.

பிபிசி ஸ்டூடியோவில் ராணுவ வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் மற்றும் ரெஹான் ஃபஜல் Image captionபிபிசி ஸ்டூடியோவில் ராணுவ வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் மற்றும் ரெஹான் ஃபஜல்

ஆனால் யுத்தத்தில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கலாம் என்ற அச்சமே கிழக்கு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதில் இருந்து இந்தியாவை தடுத்தது.

போரின் இறுதிக் கட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

அப்போது, இந்த கட்டத்தில் போரை தொடர்ந்து நடத்துவதில் இந்தியாவிற்கு அனுகூலம் இருக்கிறதா என்று ராணுவத் தளபதி ஜெனரல் செளத்ரியிடம் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆலோசித்தார்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்றே ஜெனரல் செளத்ரி கூறினார். ஆயுத இருப்பு குறைவதாக செளத்ரி கருதினார். ஆனால், 1965 போரில் இந்தியாவின் 14% ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

http://www.bbc.com/tamil/india-41366391

Link to comment
Share on other sites

1965: ஒரு 'பயனற்ற' போரால் கிடைத்தது என்ன?

 
SHASTRI MEMORIALபடத்தின் காப்புரிமைSHASTRI MEMORIAL

1966 ஜனவரி மூன்றாம் தேதி, இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிரதிநிதிக் குழுவினர் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே பாகிஸ்தான் அதிபர் அயூப் கானின் பிரதிநிதிக் குழு தாஷ்கண்ட் சென்றடைந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்று சோவியத் யூனியன் கடுமையான முயற்சிகளை எடுத்தது.

இரு தரப்பினரும் ஏறக்குறைய ஒரே மாதிரியான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தாஷ்கண்டில் சோவியத் யூனியனின் பிரதமர் அலெக்சி கோசிகன் பல நாட்கள் தங்கியிருந்தார். ஏற்பாடுகள் அனைத்தையும் அவரே பார்த்துக் கொண்டார். அடுத்த நாள் இந்தியப் பிரதமரை சந்திக்கும்போது கைகுலுக்கமுடியாது என்று பாகிஸ்தான் அதிபர் தெரிவித்ததும் கோசிகினின் முதல் கவலை தொடங்கியது.

லால் பகதூர் சாஸ்திரியுடன் கைகுலுக்கும் புகைப்படம் பாகிஸ்தான் செய்தித்தாள்களில் வெளியானால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அயூப் கான் அச்சப்பட்டார்.

கட்சில் இருந்து தாஷ்கண்ட் வரை (From kutch to Tashkant) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஃபாரூக் பாஜ்வா பிபிசியிடம் கூறுகிறார், "அயூப் கானின் இந்த கருத்து கோசிகினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்திய அரசை வழிநடத்தும் தலைமை பொறுப்பில் இருப்பவர் என்ற முறையில் சாஸ்திரிக்கும் முறையான மரியாதை வழங்கவேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.

கோசிகினுடைய கோபத்தை பார்த்த அயூப் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.

கைதட்டாத பூட்டோ

ஜனவரி நான்காம் தேதியன்று சாஸ்திரியும் அயூப்கானும் சந்தித்தனர். அன்று, இவர்கள் இருவருடன் கோசிகினும் உரையாற்றினார். இந்திய பிரதமர் உரையாற்றிய பிறகு கைத்தட்டல் பலமாக இருந்தபோதிலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜுல்ஃபிகார் அலி பூட்டோ மட்டும் கைகளைத் தட்டாமல், கட்டிக் கொண்டிருந்தார்.

SHASTRI MEMORIALபடத்தின் காப்புரிமைSHASTRI MEMORIAL

லால் பகதூர் சாஸ்திரி குறித்து புத்தகம் எழுதிய சி.பி ஸ்ரீவாஸ்தவ் சொல்கிறார், "தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் இருந்து விலகியிருக்க விரும்பிய பூட்டோவின் வெளிப்படையான செயல்பாடு இது.

கைதட்டச் சொல்லி அயூப் தனது முழங்கையால் பூட்டோவை இடித்து சமிக்ஞை செய்தார். ஜனவரி ஐந்தாம் தேதி பூட்டோவின் பிறந்தநாள் என்பதும் அந்த சூழ்நிலையில் தெரியவந்தது".

 

பாகிஸ்தானின் தகவல் தொடர்பு செயலாளர் அல்தாஃப் கெளஹர் அங்கு சிறிய அளவிலான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் பூட்டோவின் கவனம் தாஷ்கண்டில் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தைகளில் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது.

L B MEMORIALபடத்தின் காப்புரிமைL B MEMORIAL

முழு கூட்டத்திலும் அயூப் கான் மேலோட்டமாகவே பேசினார். விரிவான பேச்சுவார்த்தைக்கான பொறுப்பு பூட்டோவுக்கு வழங்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து இருவேறு குரல்கள் எழும்பியதால் கோசிகினின் வேலை கடினமானது.

பூட்டோவின் கருத்துக்கள் பேச்சுவார்த்தையை சிக்கலாக்கும் போக்கிலேயே இருந்ததாக தனிப்பட்ட முறையில் பேசும்போது சோவியத் தலைவர் தெரிவித்தார். சி.பி ஸ்ரீவாஸ்தவ் தனது புத்தகத்தில் கூறுகிறார், "ஆங்கில மொழிப்புலமை கொண்ட பூட்டோ ஒப்பந்தத்தில் காமா போடுவதற்கும், சில இடங்களில் காமா இருக்கக்கூடாது என்பதற்கும் அதிக கவனம் கொடுத்தார். இதனால் சொல்லவந்த விஷயத்தின் பொருள் மாறிவிடும் சாத்தியங்கள் இருந்தது. பூட்டோவிடம் மிகவும் கவனமாக இருக்கவெண்டும் என்று கோசிகின் கருதினார்."

ஹாஜிபீர் குறித்து கோசினின் வாதம்

போரின்போது கைப்பற்றிய நிலப்பரப்பை திருப்பி ஒப்படைப்பது பற்றிய விவகாரம் பேச்சுவார்த்தையின் முதல் கட்டத்திலேயே எடுத்துக் கொள்ளப்பட்டது. சாஸ்திரி கோஸ்கினிடம் கூறினார், "பாகிஸ்தான் படையினர் எங்கள் நாட்டில் ஊடுருவதை தடுப்பதற்கான தற்காப்பு முயற்சியாக ஹாஜிபீரை நாங்கள் கைப்பற்ற வேண்டியது அவசியமானது. அங்கிருந்து நாங்கள் பின்வாங்கி சென்றுவிட்டால், எதிர்காலத்தில் பாகிஸ்தான் அந்த பகுதி வழியாக ஊடுருவல் நடவடிக்கைகளில் ஈடுபடாது என்பதற்கு என்ன உத்தரவாதம் கொடுக்கப்படும்? ஹாஜிபீரில் இருந்து நாங்கள் விலகுவதில் இருக்கும் சிக்கல்கள் பற்றி யோசிக்கவேண்டும். வேறு இடங்களில் இருந்து வெளியேறுவது குறித்து பேசலாம்."

1965: ஒரு 'பயனற்ற' போரால் கிடைத்தது என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதற்கு பதிலளித்த கோசிகின், "ஹாஜிபீர் பற்றிய உங்கள் கவலைகளை புரிந்துக்கொள்கிறோம். ஆனால், அங்கிருந்து நீங்கள் விலகாவிட்டால், சம்ப் மற்றும் பிற பகுதிகளை கைப்பற்றியிருக்கும் பாகிஸ்தான் அங்கிருந்து வெளியேறாது. பிறகு நீங்கள் லாகூர் மற்றும் சியால்கோட் பகுதிகளில் இருந்து வெளியேறமாட்டீர்கள். அப்படியென்றால் எந்தவொரு உடன்பாட்டிற்கும் நாம் வரமுடியாது. நீங்களும் வெறும்கையுடனே திரும்பிப்போக நேரிடும். ஹாஜிபீரில் இருந்து விலகாவிட்டால் போருக்கான வாய்ப்புகள் நீடிக்கும். இந்த விலை கொடுத்தாவது இந்தியப் படையினர் அங்கு இருக்கவேண்டும் என்று விரும்புகிறீகளா?"

ஹாஜிபீர் விவகாரம் பற்றி சாஸ்திரி, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் யஷ்வந்த் ராவ் செளஹானிடம் பேசினார். ஹாஜிபூரில் இருந்து விலகுவது பாதுகாப்பானது அல்ல என்றே அவரும் கருதினார். ஜனவரி ஏழாம் தேதியன்று சாஸ்திரிக்கும் அயூப் கானுக்கும் இடையே இருமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

ஆனால், குறுகிய நேரம் நடந்த அந்த சந்திப்புகளில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. அயூப் கானின் இலக்கு காஷ்மீராக இருந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம் பற்றி விவாதிக்க இந்திய பிரதமர் சாஸ்திரி விரும்பவில்லை.

திடீரென சாஸ்திரியிடம் உருதுவில் பேசிய அயூப் கான், " நாட்டு மக்களிடம் நான் முகத்தை காண்பிக்கும் வகையில் காஷ்மீர் விவகாரத்தில் ஏதாவது செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அயூபின் கோரிக்கைக்கு மிகுந்த பணிவுடன் ஆனால் உறுதியாக பதிலளித்த சாஸ்திரி, "மன்னிக்க வேண்டுகிறேன் அயூப் ஜி, இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவமுடியாது" என்று கூறினார்.

கையால் எழுதப்பட்ட குறிப்பு

கையால் எழுதப்பட்ட குறிப்புபடத்தின் காப்புரிமைL B MEMORIAL

காஷ்மீர் தொடர்பாக சில சலுகைகளை வழங்கவேண்டும் என்று கோசிகின் விடுத்த கோரிக்கையை சாஸ்திரி ஏற்றுக் கொள்ளவில்லை. காஷ்மீர் பற்றி பேசுவதற்கு தாம் அயூபை மீண்டும் சந்திப்பதாக அவர் கூறிவிட்டார்.

சாஸ்திரியின் திடமான மறுப்பைப் பார்த்த கோசினின், அயூப்பிற்கு அழுத்தம் கொடுத்தார். இறுதியாக காஷ்மீர் பற்றிய விவாதத்தை அப்போதைக்கு விட்டுவிட அயூப் ஒப்புக் கொண்டு, இறுதியில் சாஸ்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாகிஸ்தான் தரப்பினரால் ஒப்பந்தத்தின் வரைவு எழுதப்பட்டது, "ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் (Charter of the United Nations) கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் சமாதானமாக தீர்க்கப்படும்." தட்டச்சு செய்யப்பட்ட இந்த வரைவு ஒப்பந்தத்தில் "ஆயுதங்களின் உதவியின்றி" என்பதை அயூப் கான் தனது கைப்பட எழுதவேண்டும் என்று சாஸ்திரி வலியுறுத்தினார்.

அயூப் கான் சாஸ்திரி கூறியவாறே செய்தார். "சாஸ்திரியின் அழுத்தத்திற்கு அயூப் அடிபணிந்தார் என்பதை சுட்டிக்காட்டவே அவரின் கைப்பட இந்த வார்த்தைகளை எழுத வைத்திருக்கலாம்" என்று பின்னர், தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின் ரகசிய குறிப்புகளை தனது உரையில் குறிப்பிடுகையில் பூட்டோ கூறினார்.

க்ரோமிகோவின் சீற்றம்

க்ரோமிகோவின் சீற்றம்படத்தின் காப்புரிமைAFP

சோவியத் வெளியுறவு அமைச்சர் க்ராமிகோவிடம் பூட்டோ தொலைபேசியில் பேச விரும்புவதாக ஜனவரி 9 அன்று செய்திவந்தது.

இது பற்றி சி.பி ஸ்ரீவாத்சவ் புத்தகத்தில் எழுதியிருக்கிறார், "க்ரோமிகாவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பூட்டோ, இந்த ஒப்பந்தத்தில் இருந்து ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்ற வரிகளை நீக்கிவிட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்."

"இதைக் கேட்டு கோபத்தால் முகம் சிவந்த க்ரோமிகா, இது பற்றிய தனது ஒப்புதலை சற்று நேரம் முன்புதான் அயூப் கான் கூறினார், இப்போது பின்வாங்குவதற்கான நேரம் கடந்துவிட்டது, மீறி நீங்கள் அதை வலியுறுத்தினால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று அவர் எச்சரித்தார். க்ரோமிகாவின் கடுமையான நிலைப்பாட்டை பார்த்த பூட்டோ தனது கருத்தை மேலும் வலியுறுத்தவில்லை."

BBC WORLD SERVICEபடத்தின் காப்புரிமைBBC WORLD SERVICE

இந்த ஒப்பந்தத்தை அரசியல்ரீதியாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த பூட்டோ, அதை தாஷ்கண்ட்டிலேயே தொடங்கிவிட்டார். ஒப்பந்தம் இறுதியானபோது அனைவரும் கைதட்டியபோது, கைதட்டாமல் அமர்ந்திருந்தார் பூட்டோ. அயூப் கான் உரையாற்றியபோதும் தனது தலையை அசைத்து, தனக்கு அந்த ஒப்பந்தத்தில் விருப்பமில்லை என்பதை வெளிப்படுத்தினார் பூட்டோ.

இதன்பிறகு சில மணி நேரங்களுக்குள்ளேயே இந்திய பிரதமர் சாஸ்திரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் இயற்கை எய்தினார்.

அன்று இரவு 9.45 மணிக்கு அயூப் கானை சாஸ்திரியை சந்தித்தபோது, "கடவுளே உன்னுடைய பாதுகாவலனாக இருக்கட்டும்" என்ற பொருள் கொண்ட 'குதா ஹாஃபிஸ்' என்று முகமன் கூறினார். சாஸ்திரியும் 'குதா ஹாஃபிஸ்' என்று மறுமொழி அளித்ததோடு, 'நல்லதே நடந்தது" என்று கூறினார். அதற்கு அயூப், "கடவுள் நன்மையையே செய்வார்" என்று பதிலளித்தார்.

டெல்லி கொண்டுவருவதற்காக சாஸ்திரியின் உடல், தாஷ்கண்ட் விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது வழி நெடுகிலும் இருந்த சோவியத், இந்தியா மற்றும் பாகிஸ்தான் கொடிகள் அரைக் கம்பத்திற்கு இறக்கப்பட்டிருந்தன.

சாஸ்திரியின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு விமானத்தில் ஏற்றப்படும்போது ஒருபுறம் சோவியத் பிரதமர் கோசிகின் கைகொடுத்தார். சாஸ்திரியின் பூதவுடலை சுமந்த பெட்டியின் மறுபுறத்தை சுமந்தார் அயூப் கான்.

பயனற்ற போர்

சாஸ்திரியின் உடல் இருந்த சவப்பெட்டியை தூக்கிச்செல்லும் கோசிகின் மற்றும் அயூப் கான்படத்தின் காப்புரிமைSHASTRI MEMORIAL Image captionசாஸ்திரியின் உடல் இருந்த சவப்பெட்டியை தூக்கிச்செல்லும் கோசிகின் மற்றும் அயூப் கான்

ஒருவர் மீது மற்றொருவர் தீவிரமான எதிர்ப்பு நிலையை கொண்டிருந்த இருவர் பிறகு நண்பர்களாவதும், பிறகு விரைவிலேயே ஒருவர் இறந்துபோக, மற்றொருவரோ நண்பனாக மாறிய எதிரியின் மரணத்திற்கு சோகத்தை வெளிப்படுத்தி அவருடைய சவப்பெட்டியை சுமந்து செல்வதுமான உதாரணங்கள் மனித சரித்திரத்தில் காண்பதற்கு அரிது.

சாஸ்திரியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சி.வி. ஸ்ரீவாஸ்தவ் எழுதுகிறார், சாஸ்திரின் மரணம் அயூப் கானுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியதை நான் நேரடியாக பார்த்தேன்.

சாஸ்திரின் சவப்பெட்டியை தூக்கிச் செல்லும் அயூப்கானின் படம் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. இதைப் பார்த்த பாகிஸ்தான் மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

தாஷ்கண்ட் பிரகடனம் பாகிஸ்தானுக்கு அரசியல் ரீதியான தோல்வியே என்பதை காலப்போக்கில்தான் அயூப் கான் உணர்ந்தார். பாகிஸ்தான் காஷ்மீருக்காவே இந்தப் போரை தூண்டியது, நடத்தியது. ஆனால் தாஷ்கண்ட் பிரகடனத்தில் காஷ்மீர் பற்றி எதுவுமே இடம்பெறவில்லை என்பது பாகிஸ்தானுக்கு தோல்வி தானே? எனவே 1965 போர் பாகிஸ்தானுக்கு பயனற்று போய்விட்டது.

http://www.bbc.com/tamil/global-41377429

Link to comment
Share on other sites

இந்தியா - பாகிஸ்தான்: 22 நாள் போரில் வென்றது யார்?

 
இந்தியா - பாகிஸ்தான்: 22 நாள் போரில் வென்றது யார்?படத்தின் காப்புரிமைWWW.BHARATRAKSHAK.COM

1965 செப்டம்பர் முதல் தேதியன்று மதியம் நான்கு மணிக்கு டெல்லி செளத் பிளாக்கில் இருந்த பாதுகாப்பு அமைச்சகத்தின் அறை எண் 108 இல் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அன்று அதிகாலையில் சம்ப் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புக்களை திகைப்பில் ஆழ்த்தும் வகையில் பாகிஸ்தான் தரப்பு டாங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் மூலம் பெரும் தாக்குதலைத் தொடங்கியிருந்தன.

காஷ்மீர் நிலைமையைத் தெரிந்துக் கொள்வதற்காக காஷ்மீர் சென்றிருந்த ராணுவத் தளபதி ஜெனரல் ஜே.என். சௌத்ரி அன்றுதான் திரும்பி வருவதாக இருந்த்து. கூட்டம் தொடங்கிய அரை மணி நேரத்தில் செளத்ரி உள்ளே வந்தார்.

 

இந்தியா - பாகிஸ்தான்: 22 நாள் போரில் வென்றது யார்?படத்தின் காப்புரிமைWWW.BHARATRAKSHAK.COM

போரில் இணைந்த விமானப்படை

விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அர்ஜுன் சிங் உடன் சிறிது நேரம் பேசிய அவர், சம்ப் பகுதியில் விமானப் படைகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் சவாணிடம் கோரிக்கை விடுத்தார். மேலும், எதிர் தாக்குதல் நடத்தும்போது, தேவைப்பட்டால் எல்லை தாண்டும் அனுமதியும் வேண்டும் என்று செளத்ரி கோரினார்.

அங்கு குழுமியிருந்த அனைவரின் கவனமும் சிந்தனையில் ஆழ்ந்திருந்த பாதுகாப்பு அமைச்சர் சவாணை நோக்கியே குவிந்திருந்தது. சில நிமிட சிந்தனைக்கு பிறகு மெளனத்தை கலைத்துப் பேசிய பாதுகாப்பு அமைச்சர், மென்மையாக ஆனால் திடமாக கூறினார், "சம்ப் பகுதியில் விமானப்படையை பயன்படுத்த இந்திய அரசு உங்களுக்கு அனுமதியளிக்கிறது. எல்லை தாண்டும் அனுமதியும் ராணுவத்திற்கு வழங்கப்படுகிறது."

பாதுகாப்பு அமைச்சர் அளித்த வாய்மொழி உத்தரவுகளை பாதுகாப்பு அமைச்சக செயலாளர் பி.வி.ஆர் ராவ் பதிவு செய்தார். அப்போது நேரம் சரியாக 4.45 நிமிடங்கள். இந்தியாவின் வேம்பாயர் விமானங்கள் ஐந்து மணி 19 நிமிடத்தில் சம்ப் பகுதியில் குண்டுமழை பொழிய தயாராகிவிட்டன.

போரில் ராணுவத் தளபதி ஜே.என் செளத்ரி மற்றும் விமானப்படை தளபதி அர்ஜுன் சிங்படத்தின் காப்புரிமைWWW.BHARATRAKSHAK.COM Image captionபோரில் ராணுவத் தளபதி ஜே.என் செளத்ரி மற்றும் விமானப்படை தளபதி அர்ஜுன் சிங்

எதாவது செய்யவேண்டும்

டெல்லியில் 10, ஜன்பத் சாலையில் அமைந்திருந்த பிரதமர் அலுவலகத்தில் இரவு 11 மணி 45 நிமிடங்களுக்கு திடீரென்று தனது இருக்கையில் இருந்து எழுந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அறைக்குள்ளேயே நடைபயின்றார்.

இந்த சம்பவம் பற்றி சாஸ்திரியின் செயலர் சி.பி ஸ்ரீவாத்சவ், 'எ லைப் ஆஃப் ட்ரூத் இன் பாலிடிக்ஸ்' ( A Life of Truth in Politics) என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார், 'பெரிய முடிவை எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் சாஸ்திரி இப்படித்தான் சிந்தனையுடன் நடை பயில்வார். எதாவது செய்யவேண்டும் என்று அவர் முணுமுணுத்ததை என் காதால் கேட்டேன். நள்ளிரவிற்கு பிறகு அலுவலகத்திற்கு அருகே இருந்த வீட்டிற்கு சென்ற அவர், சில மணி நேரம் உறங்கினார்."

"சிந்தனைவசப்பட்டிருந்த அவர் முகத்தில் அதீத கவலையை பார்க்க முடிந்தது. ஏதோ பெரிய முடிவை அவர் எடுத்துவிட்டார் என்பதை புரிந்துக் கொண்டேன்".

"காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் லாகூரை நோக்கிச் செல்லும் என்பதே அந்த முக்கியமான முடிவு என்பதை சில நாட்களிலேயே தெரிந்துக் கொண்டோம். ஆனால் அதற்கு முன்பு வேறு யாரிடமும் தனது முடிவை அவர் கூறவேயில்லை.

இந்தியா - பாகிஸ்தான்: 22 நாள் போரில் வென்றது யார்?

பிடிபட்ட 'டெஸ்பாட்ச் ரைடர்'

செப்டம்பர் மூன்றாம் தேதி மீண்டும் அமைச்சரவை கூட்டத்தை கூட்டிய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, பாகிஸ்தான்மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை அறிவித்தார்.

மூன்று மற்றும் நான்காம் தேதிகளுக்கு இடையில் இரவு நேரத்தில் பாகிஸ்தான் டிவிஷனின் தலைமையகத்தில் இருந்து கர்னல் எஸ்.ஜி.மெஹந்தி, ராணுவ புலனாய்வுத் தலைமையகத்தில் இருந்த லெஃப்டினெண்ட் கர்னல் ஷேர் ஜமாவுக்கு தொலைபேசியில் அனுப்பிய தகவல் இது.

"இந்தியாவின் கவச பிரிவிற்கு கடிதத்தை கொண்டு சென்ற 'டெஸ்பாட்ச் ரைடர்' ஒருவர் பிடிபட்டுள்ளார். இந்தியா, லாகூரை தாக்க திட்டமிட்டுள்ளதாக அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஆபரேசன் நேபாள் என்று பெயரிடப்பட்டிருக்கிறது".

இந்தத் தகவலை பாகிஸ்தான் ராணுவம் முக்கியமானதாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்களை திசைதிருப்ப 'டெஸ்பாட்ச் ரைடர் கடிதம்' என்ற நாடகத்தை இந்தியா நடத்துவதாக அவர்கள் நினைத்துவிட்டார்கள்.

இந்தியா - பாகிஸ்தான்: 22 நாள் போரில் வென்றது யார்?படத்தின் காப்புரிமைWWW.BHARATRAKSHAK.COM

தற்காப்பு நிலை

இந்தப் போரின்போது பாகிஸ்தான் ராணுவ செயல்பாட்டுத் தலைவராக இருந்த லெஃப்டினெண்ட் ஜென்ரல் குல் ஹசன் கான் தன்னுடைய சுயசரிதையில் எழுதுகிறார், "இந்தத் தகவலை லெஃப்டினெண்ட் ஜெனரல் ஷேர் பகதூரிடம் தெரிவித்து, எல்லையில் படையினரை அனுப்பி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சொன்னேன்".

"எந்தவொரு நிலையிலும் இந்தியாவின் ஊடுருவலை அனுமதிக்கக்கூடாது என்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்திருந்ததாலும் ஷேர் பகதூர் செயல்படுவதற்கு தயங்கினார். மேலும், அன்று சம்ப் பகுதிக்கு சென்றிருந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் மூஸா இரவு வெகுநேரமாகியும் வரவில்லை".

செப்டம்பர் நான்காம் தேதியன்று மாலை ராணுவ பொது தலைமையகத்தின் அமலாக்க அறையில் இருந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் மூஸா, இந்திய வானொலியின் 'ஆகாசவாணி'யின் செய்திகளை கேட்கிறார். அதில், "முக்கியமான செய்தியை கேட்க தயாராக இருங்கள்" என்று அறிவிப்பாளர் மெல்வில் டி மெல்லோ நேயர்களிடம் கூறினார்.

 

இந்தியா - பாகிஸ்தான்: 22 நாள் போரில் வென்றது யார்?படத்தின் காப்புரிமைWWW.BHARATRAKSHAK.COM

மூசாவும் டி மெல்லோவும்

பாகிஸ்தான் ராணுவத்தினர் சியால்கோட் பகுதியில் இருந்து ஜம்முவை நோக்கி முன்னேறுவதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்ததாக டி மெல்லோ அறிவித்தார். ஜென்ரல் மூசாவும், மெல்வில் டி மெல்லோவும் டேராடூனில் இந்திய ராணுவ அகாடமியில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். பிறகு ராணுவத்தில் இருந்து விலகிய மெல்வில் டி மெல்லோ ஆகாசவாணியில் சேர்ந்தார்.

பாகிஸ்தான் ராணுவம் முன்னேறுவதாக கூறப்பட்ட செய்தி முற்றிலும் தவறானது. வெளிக்காற்றை சுவாசிப்பதற்காக அறையில் இருந்து வெளியே வந்த மூஸாவின் மனதில், இந்தியா ஏன் பொய்யான தகவலை பரப்புகிறது என்ற சிந்தனையே வியாபித்திருந்தது. இந்தியா பெரிய அளவிலான திட்டம் எதையோ தீட்டியிருப்பதை அவர் புரிந்து கொண்டார்.

செப்டம்பர் ஏழாம் தேதியன்று தாக்குதல் நடத்த தீட்டப்பட்ட திட்டத்தை 24 மணி நேரம் முன்னதாக செயல்படுத்த விரும்பினார் மேற்கு பிராந்திய காமாண்டர் தலைவர் ஜென்ரல் ஹர்பக்ஷ் சிங். இந்த ராணுவ நடவடிக்கையின் ரகசிய குறியீட்டுப் பெயர் 'பைகில்'. ராணுவத் தலைமையகத்தில் இருந்து நடவடிக்கைக்கு அனுப்பப்பட்ட மற்றொரு சங்கேத குறியீடு 'பைனர்'. இதன் பொருள் குறிப்பிட்ட சமயத்தில் நடவடிக்கையை தொடங்கவும்.

 

பாகிஸ்தான் லெஃப்டினெண்ட் ஜென்ரல் பக்தியர் ராணாவுடன் ஹர்பக்ஷ் சிங் Image captionபாகிஸ்தான் லெஃப்டினெண்ட் ஜென்ரல் பக்தியர் ராணாவுடன் ஹர்பக்ஷ் சிங்

ஆபரேஷன் பைங்கில்

இந்தத் தாக்குதல் பற்றிய சந்தேகம் பாகிஸ்தானுக்கு ஒரு துளிகூட ஏற்படக்கூடாது என்று கருதிய ஜென்ரல் ஹர்பக்ஷ் சிங், ஷிம்லாவில் தான் கலந்து கொள்வதாக முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த ஒரு மதிய விருந்தில் கலந்துகொண்டார். விருந்துக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் அமிர்தசரசுக்கு சென்ற அவர், நகரில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இந்தியப் படைகள் நான்கு தடங்கள் வழியாக எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்தன. சில மணி நேரங்களிலேயே டோக்ரையின் வட பகுதியில் இருந்த பசீன், தோஹாயிச் மற்றும் வாஹ்க்ரியானை இந்தியா கைப்பற்றியது.

மேஜர் ஜென்ரல் நிரஞ்சன் பிரசாதின் 15வது படைப்பிரிவு இச்சாஹில் கால்வாயை கடந்து சென்றது. அவருடைய படைப்பிரிவின் சில வீரர்கள், காலணி தயாரிக்கும் பிரபலமான பாட்டா நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலை அமைந்திருக்கும் பாட்டாபுர் சென்றார்கள். அங்கிருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில் இந்திய ராணுவம் லாகூருக்குள் நுழைந்துவிட்டது என்று கொடுக்கப்பட்ட தவறான தகவலை பிபிசியும் வெளியிட நேர்ந்தது. போர் நடக்கும் வேலையில் ராணுவம் கொடுக்கும் தகவல்களையும் புகைப்படங்களையுமே அனைவரும் பயன்படுத்தவேண்டிய சூழ்நிலை. உண்மையான தகவல் பிறகே தெரியவந்தது.

இந்தியா - பாகிஸ்தான்: 22 நாள் போரில் வென்றது யார்?படத்தின் காப்புரிமைWWW.BHARATRAKSHAK.COM

வசை பாடிய அயூப்

ராவல்பிண்டி விமானப்படைத் தலைமையகத்தில் இருந்த பாகிஸ்தானின் விமானப்படை கமாண்டர் அக்தர், பாகிஸ்தான் அதிபர் ஃபீல்டு மார்ஷல் அயூப் கானுக்கு இந்திய ஊடுருவல் பற்றி தகவல் கொடுத்தார். இப்படி நடக்கும் என்று கனவில்கூட நினைக்காத அயூப் கானும் அதிர்ச்சியடைந்தார். பாகிஸ்தான் உளவுத்துறை பிரிவின் தலைவர் பிரிகேடியர் ரியாஜ் ஹுசைனுக்கு தொலைபேசியில் அழைத்து இந்த தகவல் பற்றி கேட்டார். இந்திய ஊடுருவல் பற்றிய தகவல் ரியாஜ் ஹுசைனுக்கு அதுவரை தெரியவில்லை.

அவரிடம் சினத்துடன் சீறிய அயூப் கான், "இந்தியாவின் ஆயுதப் படைப்பிரிவு பாகிஸ்தானுக்குள் நுழைந்தது வைக்கோலுக்குள் ஊசி நுழைத்தது போல் கண்ணுக்கு தெரியாத செயல்பாடா என்ன? இப்போது எங்கு இருக்கிறீர்கள்?" என்று சரவெடியாக வெடித்தார்.

நடுங்கும் குரலில் பதிலளித்த பிரிகேடியர் ரியாஸ், "சார் எங்களை குற்றம் சாட்டாதீர்கள். 1964 ஜூன் முதல் ராணுவ புலனாய்வு பிரிவுக்கு மட்டுமே ராணுவப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன". பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் புட்டோவும், வெளியுறவுச் செயலர் அஜீஜ் அஹ்மதும் முதல் நாள்தான் இந்தியா பஞ்சாபில் தாக்குதல் நடத்தாது என்று உறுதியாக தெரிவித்திருந்த நிலையில் இந்தியா தாக்குதல் நடத்தும் செய்தி அயூப் கானுக்கு பேரிடியாக இருந்தது.

மகத்தான வீரத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் மேஜர் அஜீஜ் பட்டி Image captionமகத்தான வீரத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் மேஜர் அஜீஜ் பட்டி

மேஜர் அஜீஜ் பட்டியின் வீரதீர சாகசம்

லாகூர் மற்றும் சியால்கோட் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட செய்தி பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஒன்பது மணிக்கு தெரிந்தது. "நம்மிடம் என்ன இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரியும், இருக்கும் வளங்களைக் கொண்டு முடிந்தவரை போராடுங்கள், குட் லக்" என்று பாகிஸ்தான் ராணுவத்தளபதி கூறினார்.

இந்த வார்த்தைகள், பாகிஸ்தானின் உண்மையான ராணுவ நிலைப்பாட்டையும், பலத்தையும் வரையறுப்பதாக சொல்லலாம். பாகிஸ்தான் ராணுவத் தலைமையின் முடிவெடுக்கும் திறன் குறித்த பல கேள்விகளையும் இது எழுப்பியது.

அடுத்த 22 நாட்களுக்கு இரு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் இருதரப்பின் கீழ்நிலை அதிகாரிகளும், படைவீரர்களும் வீர தீர சாகசங்களை அற்புதமாக நிகழ்த்திக் காட்டினார்கள்.

ஆனால், கட்டளையிடும் பொறுப்பில் இருந்த உயர்நிலை அதிகாரிகளும், தலைவர்களும் பெரிய அளவிலான பல தவறுகளை செய்தனர். பாகிஸ்தான் மேஜர் அஜீஸ் பட்டி, பர்க்கியில் நடைபெற்ற சண்டையில் முன்னணியில் நின்று ஐந்து நாட்கள்வரை இந்திய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

1965 போரில் வீர சாகசம் புரிந்ததற்கான மரணத்திற்கு பிந்தைய விருதை அதிபர் அயூப் கானிடம் இருந்து பெறுகிறார் பாகிஸ்தான் மேஜர் அஜீஜ் பட்டியின் மனைவிபடத்தின் காப்புரிமைDEFENCE.PK Image caption1965 போரில் வீர சாகசம் புரிந்ததற்கான மரணத்திற்கு பிந்தைய விருதை அதிபர் அயூப் கானிடம் இருந்து பெறுகிறார் பாகிஸ்தான் மேஜர் அஜீஜ் பட்டியின் மனைவி

ஃபிலெளரா சண்டை

போரில் எப்போதும் முன்னணியில் இருந்து தீரத்துடன் போரிட்ட அஜீஜ் பட்டி, இறுதியில் இந்திய டாங்கியின் தோட்டாவுக்கு பலியானார். மேஜர் அஜீஜ் பட்டிக்கு பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான்-ஏ ஹைதர், மரணத்திற்கு பிந்தைய விருதாக வழங்கப்பட்டது.

இந்தியா சார்பில் போரில் பங்கேற்ற பிரிகேடியர் கன்வல்ஜீத் சிங் கூறுகிறார்: "பாகிஸ்தானின் சிப்பாய்கள் எங்களைப் போன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள், அதிலிருந்து அவர்களது அதிகாரியின் திறமையையும் உத்வேகத்தையும் தெளிவாகத் தெரிந்துக் கொண்டோம். அதற்காக பட்டியை பாராட்டவேண்டும். அவர் நீண்ட நேரம் களத்தில் இருந்து சிறப்பாக படையை வழிநடத்தினார்."

அதேபோல, இந்தியாவில் இருந்து ஹார்ஸ் ரெஜிமெண்டின் நான்காவது பிரிவைச் சேர்ந்த மேஜர் பூபேந்தர் சிங், ஃபிலெளரா சண்டையில் தனது துணிச்சலான நடவடிக்கைகளால் அனைவராலும் அறியப்பட்டார்.

அவர்கள் பாகிஸ்தான் டாங்கிகள் பலவற்றை அழித்தனர். கோபரா ஏவுகணை மூலம் பாகிஸ்தானியர்கள் அவரது டாங்கியை தாக்கியதில் அளவுக்கதிகமான வெப்பம் வெளிப்பட்டது. அதிக வெப்பத்தினால் நின்று கொண்டிருந்த நிலையிலேயே பூபேந்தர் சிங்கின் தோல்கள் கண நேரத்தில் கருகிவிட்டன.

காயமடைந்த ராணுவ வீரர்களிடம் மருத்துவமனையில் நலம் விசாரிக்கும் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிபடத்தின் காப்புரிமைWWW.BHARATRAKSHAK.COM Image captionகாயமடைந்த ராணுவ வீரர்களிடம் மருத்துவமனையில் நலம் விசாரிக்கும் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி

கண்ணீரால் வணக்கம் செலுத்திய ராணுவ வீரர்

அணிந்திருந்த ஆடைகள் அனைத்தும் எரிந்துபோய் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைக்காக டெல்லி ராணுவ மருத்துமனைக்கு கொண்டு வரப்பட்டார் பூபேந்தர் சிங். அவரது உடலில் கட்டுகூட போட முடியவில்லை. ராணுவ மருத்துவமனைக்கு வந்து காயமடைந்த வீரர்களை நலம் விசாரித்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பூபேந்தர் சிங்கிடம் வந்தபோது கண்களில் நீருடன் அவர் பிரதமரை வரவேற்றார்.

அவரை அன்புடன் கடிந்துகொண்ட சாஸ்திரி "ராணுவ வீரரான நீங்கள் செய்த வீர சாகசங்களை கேள்விப்பட்டேன். உங்கள் கண்களுக்கு கண்ணீர் பொருத்தமாக இல்லை, அழக்கூடாது" என்று கூறினார். "உடல் வலிக்காக என் கண் நீரை வெளியேற்றவில்லை, பிரதமர் எதிரே நிற்கும்போது ராணுவவீரரான என்னால் சல்யூட் வைக்க முடியவில்லையே என்ற வருத்தத்தையே என் கண்கள் வெளிப்படுத்துகின்றன" என்று பதிலுரைத்ததும் சாஸ்திரி பேசாமடந்தையாகிவிட்டார்.

மேஜர் பூபேந்தர் சிங்கை காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு மரணத்திற்கு பிந்தைய விருதாக வீர் சக்ர விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

சீனாவுக்கு கிளம்பிய அயூப் மீது இந்திய விமானங்கள் தாக்குதல்

"10 ஜன்பத் என்ற முகவரியில் இருந்த பிரதமரின் இல்லத்தில், பிரதமரின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக பதுங்கு குழி ஒன்று அமைக்கப்பட்டது. நாள்தோறும் ஒருமுறையாவது சாஸ்திரியின் குடும்பத்தினர் அங்கு செல்வார்கள்" என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனிஸ் சாஸ்திரி தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக சாஸ்திரியின் குடும்பத்தினர் குடியரசுத் தலைவர் மாளிகையில்தான் உறங்குவார்கள். இந்த ஏற்பாடு அப்போதைய குடியரசுத் தலைவர் எஸ் ராதாகிருஷ்ணனின் சிறப்பு வேண்டுகோளின்படி செய்யப்பட்டிருந்தது. ஏனெனில் வேறு எந்த இடத்தையும்விட குடியரசுத் தலைவர் மாளிகையின் சுவர்கள் மிகவும் வலுவானவை என்று ராதாகிருஷ்ணன் நம்பினார்.

இந்திய போர் விமானங்கள்

சீன நாட்டுத் தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக செப்டம்பர் 19 ம் தேதி வெளியுறவு அமைச்சர் பூட்டோவும், அயூப்கானும் சீனா செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் ராவல்பிண்டியில் இருப்பதாக உலகம் நம்பவேண்டும் என்பதனால் அயூப் கானின் படுக்கையறைக்கு வெளியே பச்சை விளக்கு எரியும். எனவே அவரது ஊழியர்களும் அவர் அங்கே இருப்பதாக நினைத்துக் கொண்டு வழக்கம்போல் படுக்கையறைக்கு சென்று காலையில் தேநீர் வைத்துவிட்டு வந்தார்கள்.

சீனப் பயணத்தை ரகசியமாக வைக்க விரும்பிய அயூப் கான், ராவல்பிண்டியில் இருந்து பீஜிங்குக்கு செல்லாமல், பெஷாவரில் இருந்து கிளம்ப முடிவு செய்திருந்தார். அவரின் விமானம் கிளம்பும் நேரத்தில் இந்திய போர் விமானங்கள் பெஷாவர் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியதால் விமானம் நிறுத்தப்பட்டது. ஆனால் விமானத்தின் எஞ்சின் நிறுத்தப்படவில்லை.

இந்திய விமானங்கள் தாக்குதலை முடித்துக் கொண்டு திரும்பிய பிறகு, அயூப் கானின் விமானம் பீஜிங்கை நோக்கி கிளம்பியது.

சண்டையை தொடர தயக்கம்

22 நாட்களாக நீடித்த இந்த போரினால் இந்திய தரப்பில் சுமார் 3,000 பேரும், பாகிஸ்தான் தரப்பில் 3,800 பேரும் கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தில், பாகிஸ்தானின் 1840 சதுர கிலோமீட்டர் பரப்பளவை இந்தியா கைப்பற்றியது. இந்தியாவின் 540 சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்துவிட்டதாக பாகிஸ்தான் கூறியது.

இரு நாடுகளுமே வெற்றி பெற்றதாக அறிவித்தபோதிலும், இரு நாடுகளின் ராணுவ நோக்கமும் நிறைவேறவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் செளத்ரியிடம் பேசிய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி "போரை மேலும் தொடர்ந்தால் வெற்றி வாய்ப்பு நமக்கு இருக்கிறதா?" என்று கேட்டார்.

பிரதமரின் கேள்விக்கு பதிலுரைத்த செளத்ரி, "முக்கியமான ஆயுதங்கள் அனைத்தையும் பயன்படுத்திவிட்டோம். டாங்கிகள் பல சேதமடைந்துவிட்டன" என்று கூறினார். ஆனால் உண்மையில் செப்டம்பர் 22-ஆம் தேதிவரை இந்தப் போரில் இந்திய ராணுவத்தின் 14% ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டிருந்தன.

ஜெனரல் மூஸா மற்றும் ஏர் மார்ஷல் நூர் கான் ஆகிய இருவரிடமும் அயூப் கான் போரை தொடர்வதைப் பற்றி கேட்டபோது, அவர்களும் தேவையில்லை என்றே மறுமொழி கூறினார்கள்.

இந்த யுத்தத்தால் மிகவும் சோர்வடைந்த அயூப் கான், தனது அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்: "50 லட்சம் காஷ்மீர் மக்களுக்காக 10 கோடி பாகிஸ்தானியர்களின் வாழ்க்கைக்கு ஒருபோதும் ஆபத்து ஏற்படுத்தக்கூடாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இனி ஒருபோதும் மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடாது."

http://www.bbc.com/tamil/india-41397157

Link to comment
Share on other sites

பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இந்திய ஜெனரல்

 

1971 டிசம்பர் மாதம் 16ஆம் தேதி, பாகிஸ்தான் ஜெனரல் ஏ.ஏ.கே. நியாஜி டாக்காவில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சரணடைந்தவுடன் இந்திய வீரர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.

தனது படைப்பிரிவினருடன் ஜென்ரல் சகத் சிங்படத்தின் காப்புரிமைGEN SAGAT SINGH FAMILY Image captionதனது படைப்பிரிவினருடன் ஜென்ரல் சகத் சிங்

அப்போது கூட்டத்தில் இருந்து வீசப்பட்ட கல் ஒன்றால் ஜெனரல் நியாஸி காயமடைந்தார். மிகுந்த பிரயாசையுடன் நியாஸி காருக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஜெனரல் சகத் சிங்கின் ஏ.சி.சியாக இருந்தவரும் பின்னர் லெப்டினென்ட் ஜெனரலாக பதவி வகித்தவருமான ஜென்ரல் ரண்தீர் சிங் நினைவுகூர்கிறார், "நாங்கள் டாக்காவிற்கு வந்தபோது, நகர மக்கள் அனைவரும் தெருக்களில் இருந்தார்கள். சாலையின் இருபுறங்களில் எங்கள் வீரர்கள் நின்றிருந்தாலும், மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை."

1971 போரில் நியாஸி சரணடைந்தபோது அவருக்கு பின்னால் நிற்கும் ஜென்ரல் சகத் சிங்படத்தின் காப்புரிமைGEN JS ARORA FAMILY Image caption1971 போரில் நியாஸி சரணடைந்தபோது அவருக்கு பின்னால் நிற்கும் ஜென்ரல் சகத் சிங்

பதவி உயர்வு

ரண்தீர் சிங்கின் கூற்றுப்படி, "அவருடைய ஆயுதங்களுக்கு பெண்கள் பூத்தூவி வரவேற்றார்கள். வீடுகளை இந்திய வீரர்களுக்காக திறந்துவிட்டார்கள். சரணடையும் நிகழ்வு தொடங்கியதும், ஆகாசவாணியின் செய்தியாளர் சுர்ஜீத் சென், கையில் ஒரு மைக்ரோபோனுடன் மேஜைக்கு கீழே அமர்ந்துவிட்டார்."

ஆவணங்களில் கையெழுத்திடும் வேளையில் தன்னிடம் பேனா இல்லை என்று நியாஸி கூறினார். அதைக் கேட்டவுடன் சுர்ஜீத் சென் தனது பேனாவை அவருக்கு கொடுத்தார்

1961 ல் பிரிகேடியர் பதவி வழங்கப்பட்டபோது ஜெனரல் சகத் சிங்கின் ராணுவ வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஆக்ராவில் இருந்த 50 பாராசூட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகித்தார். ஆனால் அவர் பாரசூட் வீரர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் சகத் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மேஜர் ஜெனரல் வி.கே.சிங் கூறுகிறார் "நாற்பது வயதுக்கும் அதிகமாக இருந்த அவருக்கு பாரா பிரிகேடியின் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. பாரா பிரிகேடியர் என்ற பொறுப்பு அதுவரை பாரசூட் வீரர்களுக்கே வழங்கப்பட்டது, காலாட்படைக்கு வீரருக்கு வழங்கப்பட்டதில்லை."

தனது வாழ்க்கை வரலாற்றை எழுதிய மேஜர் ஜென்ரல் பி.கே. சிங்குடன் ஜென்ரல் சகத் சிங் Image captionதனது வாழ்க்கை வரலாற்றை எழுதிய மேஜர் ஜென்ரல் பி.கே. சிங்குடன் ஜென்ரல் சகத் சிங்

கோவா விடுதலை

"பிரிகேடியராக இருந்தாலும் அவர் தகுதிகாண் தேர்வுகளை நிறைவு செய்தார். பாராவின் செயல்முறை முடிந்த பிறகே அதற்கான அடையாளம் வழங்கப்படும். அப்போதுதான் பாராசூட் வீரராக அடையாளம் காண்பது சாத்தியமாகும். அவருக்கு அடையாளச் சின்னம் கிடைக்கும்வரை, படைப்பிரிவினர் தன்னை மதிக்க மாட்டார்கள் என்பதையும் சகத் சிங் அறிந்திருந்தார். விரைவில் பயிற்சியை நிறைவு செய்த அவர், நாளொன்றுக்கு இரண்டு முறை பாராசூட்டில் இருந்து குதிப்பார்."

1961 கோவா நடவடிக்கையின்போது, ஜென்ரல் சகத் சிங் 50 பாரா அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் தனக்கு வழங்கப்பட்டதைவிட பலமடங்கு அதிகமாக அவர் பணியாற்றினார். துரிதகதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, எதிர்பார்த்ததைவிட விரைவில் கோவாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்ததை பார்த்து அனைவரும் அதிசயத்தார்கள்.

மேஜர் ஜெனரல் வி.கே. சிங் கூறுகிறார்: "டிசம்பர் 18 ம் தேதி நடவடிக்கை தொடங்கியது. 19ஆம் தேதியன்று அவருடைய படைப்பிரிவு பனாஜியை அடைந்தது பனாஜி மக்கள் நெரிசலாக வசிக்கும் பகுதி. இரவுநேரத்தில் நடவடிக்கை எடுத்தால் உயிரிழப்பு அதிகமாகும் என்பதால் சகத் சிங் தனது படைப்பிரிவை இரவு நேரத்தில் பணியில் ஈடுபடுத்தவில்லை."

"காலையில் நதியை கடந்தார்கள். கோவா அரசு பாலங்களை எல்லாம் தகர்த்தெறிந்திருந்தது. படைவீரர்கள் நதியை நீந்திக் கடந்தனர். உள்ளூர்வாசிகளும் ராணுவத்திற்கு ஆதரவு கொடுத்தனர். 36 மணி நேரத்தில் அவர்கள் பனாஜியை கைப்பற்றினார்கள்."

ஜென்ரல் சகத் சிங்படத்தின் காப்புரிமைGENERAL VK SINGH Image captionஜென்ரல் சகத் சிங்

போர்ச்சுக்கலில் சுவரொட்டிகள்

1962 ஜூன் மாதத்தில் 50 பாரா படைப்பிரிவினர் கோவாவில் தங்களது நடவடிக்கையை முடித்துவிட்டு ஆக்ராவுக்கு திரும்பிவிட்டார்கள். அப்போது ஆக்ராவில் இருக்கும் பிரபல ஹோட்டல் கிளார்க்ஸில் ஒரு சுவையான சம்பவம் நடைபெற்றது.

ஜெனரல் வி.கே. சிங் கூறுகிறார், "ஜெனரல் சகத் சிங் ராணுவ உடையணியாமல், சாதாரண உடையில் அங்கு சென்றிருந்தார். அங்கே சில அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருந்தனர், அவர்கள் சகத் சிங்கை உன்னிப்பாக கவனித்தார்கள். இதை ஜென்ரலும் கவனித்தார். அதில் இருந்த ஒருவர் சகத் சிங்கிடம் வந்து கேட்டார், நீங்கள் பிரிகேடியர் சகத் சிங் தானே?"

"ஆம் நான்தான் சகத் சிங். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர்கள் அளித்த பதில் ஆச்சரியம் அளித்தது. 'நாங்கள் போர்த்துகலில் இருந்துவருகிறோம். அங்கு பல இடங்களில் உங்கள் புகைப்படம் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. உங்களை பிடித்துக்கொடுத்தால் பத்தாயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று வெளிநாட்டவர் பதிலளித்தார்.

"சரி நீங்கள் விரும்பினால் நான் உங்களுடன் வருகிறேன் என்றார் ஜென்ரல் சகத் சிங். அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த அமெரிக்கப் பயணி, நாங்கள் மீண்டும் போர்த்துகல் செல்லவில்லை என்றார்."

ஜெனரல் சகத் சிங் மவுண்டன் பிரிவின் 17ஆம் படைப்பிரிவுக்கு கட்டளை பொது அதிகாரி (GOC) ஆனார். அவர் இந்த பதவியில் இருந்தபோது, நாதுலாவில் சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே ஒரு பெரிய மோதல் ஏற்பட்டது.

சீனாவுடன் போர்

1962க்கு பிறகு முதல்முறையாக சீனாவுக்கு சமமாக சண்டையிடுவதோடு, அவர்கள் மீது கடுமையான தாக்குதலையும் நடத்தலாம் என்பதை ஜெனரல் சகத் சிங் நிரூபித்துக் காட்டினார்.

ஜெனரல் வி.கே.சிங் கூறுகிறார், "அந்த சமயத்தில் அவர் அங்கு பணியில் இருந்தது எதிர்பாராத ஆச்சரியம். இந்தியா மற்றும் சீனாவுக்கான எல்லைப்பகுதி குறிக்கப்படவேண்டும் என்று ஜெனரல் அரோராவிடம் ஜெனரல் சகத் சிங் தெரிவித்தார். மேலும், எல்லைப் பகுதிக்கு நேரடியாக செல்லப்போவதாக சொன்ன அவர், சீனா எதிர்க்காவிட்டால் அதையே எல்லை என்று என்றும் சொன்னார்."

"எல்லையில் அவர் பணியை தொடங்கியதும் சீன தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. சீன வீரர்கள் முன்னேறினார்கள். கர்னல் ராய் சிங், கிரேனடியர்களின் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தார். அவர் பதுங்குகுழிக்கு வெளியே வந்து சீன தளபதியிடம் பேச ஆரம்பித்த சமயத்தில் சீன வீரர்கள் துப்பாக்கி சூட்டை தொடங்கினார்கள். கர்னல் ராய் சிங் மீது தோட்டாக்கள் பாய அவர் அங்கேயே வீழ்ந்தார்."

பங்களாதேஷுக்கான போருக்கு பிறகு வீரர்களுடன் சகத் சிங்படத்தின் காப்புரிமைGEN RANDHIR SINH Image captionபங்களாதேஷுக்கான போருக்கு பிறகு வீரர்களுடன் சகத் சிங்

"கோபமடைந்த இந்திய வீரர்கள் தங்கள் பதுங்குகுழிகளிலிருந்து வெளியே வந்து சீன வீரர்களைத் தாக்கினார்கள். நடுத்தரமான பீரங்கியை கொண்டு ஜெனரல் சகத் சிங் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பல சீன வீரர்கள் இறந்தனர்."

"போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபோது, நீங்கள் எங்களைத் தாக்கினீர்கள் என்று சீனர்கள் சொன்னார்கள். ஒருவித்ததில் அவர்கள் சொன்னது சரிதான். இந்திய வீரர்களின் சடலங்கள் அனைத்தும் சீன எல்லைக்குள் இருந்தது. தேவையிலாமல் சண்டையை உருவாக்கிவிட்டீர்கள் என்று பிறகு சகத் சிங்கின் அதிகாரி அவரை கடிந்துக்கொண்டார்."

"கிட்டத்தட்ட 200 பேர் காயமடைந்தனர், 65 பேர் உயிரிழந்தனர், சீனத் தரப்பில் கிட்டத்தட்ட 300 பேர் பாதிப்படைந்தார்கள். 1962 போருக்கு பிறகு சீன வீரர்கள் பற்றி இந்திய வீரர்களிடம் நிலவிய அச்ச உணர்வை போக்கினார் ஜெனரல் சகத் சிங் என்பதே இதில் முக்கிய அம்சம். சீன வீரர்களை எதிர்க்கமுடியும் என்ற நம்பிக்கை இந்திய இளைஞர்களுக்கு ஏற்பட்டது. முதல் முறையாக எங்களால் சீனர்கள் குருதி சிந்தியதை பார்த்தோம்."

1970 நவம்பரில், பிராதானப் படைகளின் நான்காவது பிரிவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றது, ஜென்ரல் சகத் சிங்கின் ராணுவ வாழ்க்கையின் பொன்னான தருணம். அதனாலேயே அவர் 1971 பங்களாதேஷ் போரில் குறிப்ப்பிடத்தக்க பங்காற்றமுடிந்தது.

ஜெனரல் ரண்தீர் சிங் சொல்கிறார்: "அகர்தலா வந்த சகத் சிங் அங்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதை தெரிந்துக் கொண்டார். 1400 கிலோமீட்டர் தொலைவுக்கு அகன்ற பாதை இருந்தது. அனைத்தையும் சரிசெய்ய அவர் தேவையான முயற்சிகளை எடுத்தார்".

"பல பொறியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலமும் எங்களுக்கு சாதகமாக இருந்தது அதிர்ஷ்டம்தான். மார்ச் மாதம் முதல் பாகிஸ்தானிய ராணுவம் தனது சொந்த மக்களையே சித்திரவதையை செய்யத் தொடங்கியதால், திரிபுராவிற்கு அகதிகளாக பெருமளவிலான மக்கள் வந்தார்கள்."

மனைவி மற்றும் மகன் ரண்விஜய் சிங்குடன் ஜென்ரல் சகத் சிங்படத்தின் காப்புரிமைGEN SAGAT SINGH FAMILY Image captionமனைவி மற்றும் மகன் ரண்விஜய் சிங்குடன் ஜென்ரல் சகத் சிங்

"அகதிகளின் உதவியுடன், பொறியாளர்கள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினார்கள். ஏறக்குறைய ஒரு லட்சம் வீரர்கள் அங்கு வரவிருந்தார்கள் என்பதையும், சுமார் 30 ஆயிரம் டன் ராணுவ உபகரணங்களும், தளவாடங்களும் அங்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த்தையும் நினைவில் கொள்ள வேண்டும். அதற்காக 5000 வாகனங்கள் மற்றும் 400 கழுதைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அங்கு ஒற்றை சாலை மட்டுமே இருந்த்து, பாலம் மிகவும் பலவீனமாக இருந்தது."

பறக்கும் ஜென்ரல்

போர் நடைபெற்ற சமயத்தில் ஜெனரல் சகத் சிங், விமானத்தில் பறக்கும் ஜென்ரல் (Flying General) என்ற செல்லப் பெயரால் அறியப்பட்டார். காலை ஆறு மணிக்கெல்லாம் ஹெலிகாப்டரில் கிளம்பிவிடுவார் சகத் சிங் என்று சொல்கிறார் அவரது ஏ.டி.சி லெப்டினென்ட் ஜெனரல் ரண்தீர் சிங்.

அவருக்கு தேவையான கோல்ட் காபியையும் சாண்ட்விச்சையும் நான் ஒரு பையில் கொண்டு செல்வேன். சண்டை நடந்துக் கொண்டிருக்கும் இட்த்திற்கு மேல் ஹெலிகாப்டரில் செல்வார். சில சமயங்களில் சண்டை நடக்கும் இடத்திலேயே இறங்கிவிடுவார். மாலையில் இருள் கவிந்த பிறகே அவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி 'ஆபரேஷன்' அறைக்கு சென்றுவிடுவார்."

ஒருமுறை அவர் ஹெலிகாப்டரில் சென்றுக் கொண்டிருந்தபோது பாகிஸ்தான் வீரர்கள் ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஜென்ரல் சகத் சிங்கின் ஹெலிகாப்டரை தாக்கிய தோட்டாக்கள்படத்தின் காப்புரிமைRANDHIR SINH Image captionஜென்ரல் சகத் சிங்கின் ஹெலிகாப்டரை தாக்கிய தோட்டாக்கள்

ஜெனரல் ரண்தீர் சிங் கூறுகிறார்: "தரையிறங்க சாத்தியமான இடத்தை ஆய்வு செய்ய என்பதைப் பார்க்க விரும்பினார் ஜென்ரல் சகத் சிங். நாங்கள் மேகனா ஆற்றையொட்டியே சென்று கொண்டிருந்தோம், ஆஷுகஞ்ச் பாலம் அருகே ஹெலிகாப்டரை தாக்கிய தோட்டாவால் விமானஓட்டி காயமடைந்தார்.

எனக்கு பின்னால் அமர்ந்திருந்தவர் மீது தாக்கிய தோட்டா ரத்தத்தையும், சதைத் துண்டுகளும் தெறித்தது, ஜெனரல் சகத் சிங்கின் நெற்றியிலும் காயம் ஏற்பட்டது."

"உடனே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்த துணை விமானஓட்டி விமானத்தை அகர்தலாவுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தார். ஹெலிகாப்டரில் 64 ஓட்டைகள் இருந்தன. அந்த ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய சகத் சிங் வேறொரு ஹெலிகாப்டரில் ஏறி ஆய்வுகளை மேற்கொள்ள சென்றுவிட்டார்."

ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மேகனா ஆற்றில் நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட பாலம் ஒன்றை உருவாக்கியதற்காக ஜெனரல் சாகத் சிங் அனைவராலும் பாராட்டப்பட்டார். இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷ் போரில் ஜென்ரல் சகத் சிங்கின் தலைமையில் பணிபுரிந்த லெஃப்டினெண்ட் ஜென்ரல் ஓ.பி.கெளஷிக் கூறுகிறார், "அப்போது எம்.ஐ 4 ரக ஹெலிகாப்டர்கள் இருந்தன. இரவு நேரத்தில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வசதிகள் கிடையாது. ஆனால் அதிகளவிலான வீரர்கள் மேக்னா நதியை கடக்கவேண்டும் என்பதற்காக, இரவிலும் தரையிறங்குவதற்கு ஏற்ற ஒளிபொருந்திய ஹெலிபேட்களை அமைக்க சகத் சிங் உத்தரவிட்டார்.

காலியான பால் புட்டிகளில் மண்ணெய் ஊற்றி விளக்காக பயன்படுத்தினோம். மண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் ஹெலிகாப்டர்களை தரையிறக்கும் அசாத்தியமான விஷயத்தை நாங்கள் சாத்தியமாக்கினோம். இது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

எம்.ஐ 4 ஹெலிகாப்டரில் எட்டு சிப்பாய்கள் அமரலாம். நாங்கள் தொடர்ந்து நூற்றுக்கணக்கான முறை ஹெலிக்காப்டரை பயன்படுத்தி முழு படைப்பிரிவையும் மேக்னா நதியை கடக்கச் செய்தோம்.

இதில் குறிப்பிடத்தக்க சுவையான ஒரு பின்னணியும் இருக்கிறது. மேற்கு படைப்பிரிவின் தலைவர் ஜென்ரல் ஜக்கி அரோரா, மேக்னா நதியை தாண்டவேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார். படை முழுவதும் நதியைத் தாண்டியபிறகு அரோராவின் போன் வந்தது. விஷயத்தை தெரிந்துக் கொண்ட அவர், சகத் சிங்குடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

படையணியினரின் நலம் விசாரிக்கும் ஜென்ரல் சகத் சிங்படத்தின் காப்புரிமைGEN SAGAT SINGH FAMILY Image captionபடையணியினரின் நலம் விசாரிக்கும் ஜென்ரல் சகத் சிங்

தகுதிக்கேற்ற முழு மரியாதை கிடைக்கவில்லை

ஜெனரல் கெளஷிக் கூறுகிறார், "நான் அந்த நேரத்தில் ஜெனரல் சகத் சிங்கிற்கு அருகில் அமர்ந்திருந்தேன், கொல்கத்தாவில் இருந்து தொலைபேசியில் அழைத்த ராணுவ தளபதி அரோரா, ஏன் மேக்னா நதியை தாண்டி சென்றீர்கள் என்று கேட்டார். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பைவிட மேலும் அதிகமாக செய்திருக்கிறேன் என்று பதிலுரைத்தார் ஜென்ரல் சகத் சிங்."

"இந்த பதில் அரோராவை திருப்திபடுத்தவில்லை, நாட்டின் நன்மையை கருத்தில் கொண்டே நான் செயல்படுகிறேன். நம் வீரர்கள் மேக்னா ஆற்றை மட்டும் கடக்கவில்லை, டாக்காவின் புறநகர்ப்பகுதிக்கும் சென்றுவிட்டார்கள் என்றார் சகத் சிங்."

'நீங்கள் மேலும் முன்னேறவேண்டாம், வீரர்களை திரும்பச் சொல்லுங்கள் என்று ஜெனரல் அரோரா உத்தரவிட்டார்".

"என் படைவீரர்களில் யாரும் திரும்பி வரமாட்டார்கள் என்று துணிச்சலும் பதிலளித்தார் ஜென்ரல் சகத் சிங். நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், டெல்லிக்கு இந்த விஷயத்தை கொண்டு செல்லுங்கள் என்று உரத்த குரலில் பதிலளித்த சகத் சிங் தொலைபேசியை வைத்துவிட்டார்".

"நமது ராணுவ வீரர்களை திரும்ப அழைத்துச் செல்லும்படி என்னிடம் கூறினார். அது என் சடலத்தின் மீதுதான் அது நடக்கும் என்று கோபத்துடன் வெடித்தார்."

இப்படி வேறு யாரும் செய்யாத பல சாகசங்களை துணிச்சலுடன் செய்த ஜென்ரல் சகத் சிங்கிற்கு வீரத்திற்கான எந்த விருதும் வழங்கப்படவில்லை. இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

மேஜர் ஜென்ரல் வி.கே.சிங் சொல்கிறார், "1971ஆம் ஆண்டு போரில் மிக சிறப்பாக செயல்பட்டவருக்கு வீர விருது எதுவும் வழங்காதது வருத்தத்திற்குரியது. பலருக்கு வீர் சக்ர விருது, மஹாவீர் சக்ர விருது வழங்கப்பட்டது. ஆனால் மிகப்பெரிய வீர சாகசங்களை துணிச்சலுடன் செய்த ஜென்ரல் சகத் சிங்கிற்கு வீர விருது எதுவும் வழங்கப்படவில்லை."

"அதுமட்டுமா? அவருக்கு பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. ராணுவத் தளபதியாக இல்லாவிட்டாலும், ராணுவ கமாண்டராகவாவது அவருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். அவர் தனது மேலதிகாரிகளிடம் மோதல் போக்கை கொண்டிருந்ததே விருதும், பதவி உயர்வும் கிடைக்காததற்கு காரணம் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது."

பேத்தி மேக்னா சிங்குடன் ஜென்ரல் சகத் சிங்படத்தின் காப்புரிமைMEGHNA SINGH Image captionபேத்தி மேக்னா சிங்குடன் ஜென்ரல் சகத் சிங்

கூட்டத்திற்குள் புகுந்துவிடும் ஜெனரல்

பணிஓய்வுக்கு பிறகு ஜென்ரல் சகத் சிங் ஜெய்பூரில் வசித்தார்.

அவருடைய பேத்தி மேக்னா சிங் கூறுகிறார், "கூட்டத்திலும் கண்டுப்பிடித்துவிடக்கூடியவர் என் தாத்தா. ஆறடி மூன்று அங்குல உயரமும், வெண்கல குரலை கொண்ட கம்பீரமான அவர் அனைவருடனும் எளிமையாக பழகக்கூடியவர். விடுதியில் தங்கி படித்துவந்த நாங்கள் விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போது, எங்கள் பண்ணைத்தோட்டத்தில் இருந்த பறித்த பழங்களை அவரே வெட்டி, தட்டில் வைத்து கொண்டுவந்து தருவார். ஜெய்பூரில் பிட்ஸா ஹட் திறந்தபோது எங்களை அங்கே கூட்டிச் சென்றார்."

இந்தியாவின் துணிச்சலான ஜென்ரல் என்று ஜெனரல் சாகத் சிங் கருதப்படுகிறார். அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பல ராணுவ நடவடிக்கைகளில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், வழக்கமாக ஒரு ராணுவ அதிகாரி செய்யும் கடமைகளைவிட மிக அதிக வேலை செய்தார்.

அமெரிக்க ராணுவத்தில் ஜென்ரல் பைடனுக்கும், ஜெர்மன் ராணுவத்தில் ரோமெலுக்கும் புகழப்பட்ட அளவு இந்திய ராணுவத்தில் புகழ் பெற்றவர் ஜென்ரல் சகத் சிங்.

இந்திய பாகிக்ஸ்தான் போர், 1971படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்திய பாகிக்ஸ்தான் போர், 1971

ஜென்ரல் சகத் சிங்குடன் பணியாற்றிய ஓ.பி கெளஷிக் கூறுகிறார், "நான் பல போர்களில் பங்கெடுத்திருக்கிறேன். 1962இல் இந்திய-சீன யுத்தத்தில் கேப்டனாக பங்கேற்றேன். அதன்பிறகு 1965 மற்றும் 1971 போரிலும் பங்களித்தேன். சியாச்சின் மற்றும் காஷ்மீரிலும் பணிபுரிந்திருக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் இந்திய ராணுவத்தின் சிறந்த கள அதிகாரியாக ஜென்ரல் சகத் சிங் பணியாற்றினார் என்பதை உறுதியாக சொல்வேன்".

"திறமையறிந்து வேலைகளை பிரித்துக் கொடுப்பதில் வல்லவரான ஜென்ரல் சகத் சிங், பணிகளை மையப்படுத்தாமல் அனைவருக்கும் பிரித்துக்கொடுப்பார். அனைவரையும் அரவணைத்து செல்லும் சகத் சிங், தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் மீது அதீத நம்பிக்கை வைப்பார். ஏதாவது தவறு செய்துவிட்டால் அதற்கு பிறரை பொறுப்பாக்காமல் தன்னையே காரணமாக சொல்வார்."

http://www.bbc.com/tamil/global-41421160

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

1962 இந்திய-சீன போர்: நம்பிக்கை துரோகமா? கோழைத்தனமா?

இமய மலையில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் நடைபெற்ற குறுகியகால, கசப்பான போர் முடிந்து அரை நூற்றாண்டுக்கு அதிகமானபோதும், அந்த அதிர்ச்சி மறக்க முடியாதது. இந்த யுத்தத்தில், இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட தோல்வி அரசியல் தோல்வியாகவும் கருதப்படுகிறது.

1962 இந்திய-சீன யுத்தம்: நம்பிக்கை துரோகமா அல்லது கோழைத்தனமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த யுத்தம் பற்றிய வரலாறு ஏற்கனவே மிகவும் விரிவாக எழுதப்பட்டது, எனவே அதைப் பற்றி மீண்டும் எழுத வேண்டிய அவசியமில்லை.

இந்தப் போர் பற்றி ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ வரலாற்றை எழுதிய எஸ்.கோபால் இவ்வாறு குறிப்பிடுகிறார், "நடந்தவை அனைத்தும் மிக மோசமானவையாக இருந்தன, அவை உண்மையில் நடக்காமல் இருந்திருந்தால், நம்பவே முடிந்திருக்காது".

ஆனால் நடைபெற்ற தவறுகள், அப்போதைய இந்தியக் குடியரசுத்தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன், மத்திய அரசை கடுமையாக சாடும் அளவில் இருந்தது. சீனாவை சுலபமாக நம்பியதற்கும், உண்மைகளை புறக்கணித்ததற்காவும் அவர் அரசைக் கண்டித்தார்.

எல்லை மோதல்கள்

தங்கள் தவறை ஒப்புக்கொண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறினார்: "நாங்கள் நவீன உலகின் உண்மையில் இருந்து விலகி இருந்தோம், நாங்களே உருவாக்கிய ஒரு செயற்கையான சூழலில் இருந்தோம்."

சீன எல்லையில், எல்லை மோதல்கள், ரோந்துக் குழுக்களின் நிலையில் சிறிய அளவிலான மோதல்கள் மற்றும் யார் பெரியவர் என்ற பலப்பரிட்சை என்பதைவிட பெரிய அளவில் எதுவும் இல்லை என்று சொன்னதை நம்பியதால் பெரிய அளவிலான தவறு நேரிட்டதை நேரு ஏற்றுக்கொண்டார்.

 

துணிச்சலற்ற அதிகாரிகள்

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தொடர்ந்து சிறிய அளவிலான தொடர் மோதல்கள் இருந்தாலும், 1959 நவம்பர் தொடக்கத்தில் லடாக்கில் நிகழ்ந்த மோதல்களை அடுத்து, பிரச்சனைகள் பெரிதாகின, கருத்து வேறுபாடுகளும் வலுத்தன.

அதன்பிறகு பல தவறுகள் நடந்தன. அதற்கு பொறுப்பேற்க வேண்டியது அப்போதைய பிரதமரே.

அவர் மட்டுமல்ல, அவரது ஆலோசகர்கள், அதிகாரிகள், ராணுவம் என அனைவரும் தவறுகளுக்கு பொறுப்பாவார்கள். ஏனெனில் நேரு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் தைரியம் அவர்கள் யாருக்கும் இல்லை.

1962 இந்திய-சீன யுத்தம்: நம்பிக்கை துரோகமா அல்லது கோழைத்தனமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜவஹர்லால் நேரு

"நேரு மற்ற அனைவரையும்விட விடயங்களை நன்றாக அறிந்தவர்," என்று தவறுகளுக்கு அவர்கள் சொன்ன விளக்கம் மிகவும் பழையது.

சீனாவின் ஒருதலைபட்ச போர்நிறுத்தத்திற்குப் பின்னர் ராணுவத் தளபதி ஜெனரல் ஜே.என். சௌத்ரி என்ன கூறினார் தெரியுமா? "நாங்கள் சீனவுடன் சதுரங்கம் விளையாடுகிறோம் என்று நினைத்தோம், ஆனால் உண்மையில் ரஷ்யா சாமர்த்தியமாக காய் நகர்த்திவிட்டது."

பொறுப்பு யாருக்கு?

யுத்தத்திற்கு பொறுப்பானவர்கள் என்று பட்டியலிட்டால் அது மிக நீண்டதாக இருக்கும். ஆனால் அந்த பட்டியலில் முதல் இடம்பிடிப்பவர் 1957ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியில் இருந்த கிருஷ்ண மேனன்.

அடுத்த பெயர் லெஃப்டிணெண்ட் ஜென்ரல் பி.எம் கெளல். இவர், நேருவுக்கும், கிருஷ்ண மேனனுக்கும் நெருக்கமானவர். லெஃப்டிணெண்ட் ஜென்ரல் பி.எம் கெளல், வடகிழக்கு பிராந்தியத்திற்கான காமாண்டராக இருந்தார். அந்த காலத்தில் வடகிழக்கு ஃப்ரண்டியர் என்று அழைக்கப்பட்ட அந்த பகுதி, தற்போது அருணாச்சல் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது.

 

ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரியான பி.எம். கெளல், அதிகாரத்தை விரும்புபவர். போரில் ஈடுபட உற்சாகம் கொண்ட அவரின் ஆர்வம் சூழ்நிலையால் பேராக மாறியது. ஆனால் அவருக்கு போர் அனுபவம் கிடையாது.

இத்தகைய தவறான நியமனத்திற்கு காரணம் கிருஷ்ண மேனன். பிரதமர் அவர் மேல் வைத்திருந்த கண்மூடித்தனமான நம்பிக்கை காரணமாக, தான் செய்ய விரும்பியதை செய்யும் சுதந்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

அவமதித்து ஆனந்தம் அடைந்த கிருஷ்ண மேனன்

உயரதிகாரியாக தனது அதிகாரத்தையும், அறிவாற்றலையும் பிறருக்கு காட்டும்விதமாக அவர் ராணுவ உயரதிகாரிகளின் கீழ் பணிபுரிபவர்களின் முன்னிலையே அவமதித்து ஆனந்தமடைவார். ராணுவ நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளில் நண்பர்களின் கருத்துகளின்படி நடந்துக்கொள்வார் மேனன்.

இந்திய ராணுவத்தின் உயர் பதவி ஒன்றிற்கு தேர்வுக்குழுவினால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை கிருஷ்ண மேனன் நியமித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்த ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் கே.எஸ்.திம்மையா பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.

பிறகு பிரதமர் நேருவின் அறிவுறுத்தலினால் திம்மையா ராஜினாமா கடிதத்தைத் திரும்பப்பெற்றார்.

ஆனால் அதன்பிறகு ராணுவம் கிருஷ்ண மேனனின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் நடக்கத் தொடங்கியது. கெளலை போர்த் தளபதியாக நியமித்த மேனன், நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட்டார்.

1962 இந்திய-சீன யுத்தம்: நம்பிக்கை துரோகமா அல்லது கோழைத்தனமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகிருஷ்ண மேனன்

மோதல் பற்றிய அச்சம்

இமயமலையின் உச்சியில் இருந்தபோது கெளலின் உடல்நிலை மோசமடைந்து, சிகிச்சைக்காக அவர் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டார். இந்த நிலையில், பொறுப்பை வேறு யாருக்கும் மாற்றியளிக்காத கிருஷ்ண மேனன், டெல்லியின் மோதிலால் நேரு மார்க்கில் தன்னுடைய வீட்டிலிருந்து கொண்டே கெளல் போரை வழிநடத்தலாம் என்று உத்தரவிட்டார்.

ராணுவத் தளபதி ஜெனரல் பி.என்.தாபர் இதை முற்றிலும் எதிர்த்தாலும், மேன்னுடன் மோதுவதற்கு பயந்தார். பல சந்தர்ப்பங்களில் கெளல் தவறாக செயல்படுவதை தாபர் அறிந்திருந்தாலும், அதைப்பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்கினார்.

நவம்பர் 19ம் தேதி அமெரிக்க அதிபர் கென்னடிக்கு நேரு கடிதம் எழுதுவதற்கு முன்பே, நாட்டு மக்களின் வெறுப்புக்கு இலக்காகிவிட்டார்கள் மேனனும் கெளலும்.

இதன் விளைவும் வெளிப்படையாகவே இருந்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களும், நாடாளுமன்றமும் சீன ஆக்கிரமிப்பாளர்களை விரட்டவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக, கிருஷ்ண மேனன் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

1962 இந்திய-சீன யுத்தம்: நம்பிக்கை துரோகமா அல்லது கோழைத்தனமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நேருவிற்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது, நவம்பர் ஏழாம் தேதியன்று மேனன் பதவியில் இருந்து விலகினார், அதேபோல் குடியரசுத் தலைவர் ராதகிருஷ்ணனின் அறிவுறுத்தலின்படி கெளல் ராஜினாமா செய்தார்.

நவம்பர் 19 ம் தேதி டெல்லி வந்த அமெரிக்க செனட்டர்களின் பிரதிநிதிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தபோது அவர்களில் ஒருவர் குடியரசுத்தலைவரிடம் கேட்டார், 'ஜெனரல் கெளல் சிறைப்பிடிக்கப்பட்டாரா? அதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன் துரதிருஷ்டவசமாக, இந்த செய்தி உண்மையில்லை என்று சொன்னார்.

நாட்டின் பாதுகாப்புக்கான முடிவுகள் எடுப்பது எந்த அளவு சீர்குலைந்து போயிருந்தது என்பதற்கான உதாரணம் இது.

அமைச்சர் மேனன் மற்றும் கெளலைத்தவிர, வெளியுறவுத்துறை செயலார் எம்.ஜே. தேசாய், உளவுத்துறையின் பி.என். மாலிக், பாதுகாப்பு அமைச்சக இணைச் செயலர் எஸ்.சி. சரீன் ஆகிய மூவரும் பாதுகாப்பு கொள்கை தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள்.

உளவுத்துறை தலைவரின் தோல்வி

இவர்கள் அனைவரும் மேனனுக்கு நெருக்கமானவர்கள். பாதுகாப்பு கொள்கைகளை வகுப்பதில் உளவுத்துறை தலைவருக்கு எந்த பங்கு இல்லை என்றபோதிலும், மாலிக் அதில் அதிக அதிகாரம் செலுத்தி நிலைமையை சீர்குலைத்தார்.

தனது வேலையில் மட்டும் மாலிக் ஒழுங்காக கவனம் செலுத்தியிருந்தால், சீனா என்ன செய்கிறது என்ற தகவல்களை உளவுத்துறை சரியாக கொடுத்திருக்கமுடியும். இந்தியா அவமானகரமான முறையில் தோல்வியடைந்திருக்காது.

ஆனால் சீனா இந்தியா மீது போர் தொடுக்காது என்று இந்தியா முழுமையாக நம்பியது. ஆனால் மாவோவும், சீனாவின் உயர்நிலை ராணுவ மற்றும் அரசியல் ஆலோசகர்களும், இந்தியாவை எதிர்த்துப் போரிடத் திட்டமிட்டு அதனை நிறைவேற்றினார்கள்.

1962 இந்திய-சீன யுத்தம்: நம்பிக்கை துரோகமா அல்லது கோழைத்தனமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சீன-இந்தியா மோதலைவிட, சீன-சோவியத் பிரச்சனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், சீனா இந்தியாவுடன் போரில் இறங்காது என்று நேரு நம்பினார்.

கோழைத்தனமா அல்லது நம்பிக்கைதுரோகமா?

ஆனால் கியூபா ஏவுகணை நெருக்கடி பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி, நேருவுக்கு சாமர்த்தியமாக பாடம் கற்றுக்கொடுத்தார் மாவோ. இது நிகிடோ குருசேவுக்கும் விடுக்கப்பட்ட செய்தி என்பதால்தான் சோவியத் தலைவர் குருசேவ், இந்திய-சீன போரில் கட்டுப்பாட்டுடன் அடக்கிவாசித்தார்.

இந்தியாவிற்கு இது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. அக்டோபர் 25ஆம் தேதியன்று ரஷ்ய நாளிதழ் ப்ரவாதாவில் சீனா நமது சகோதரர், இந்தியா நமது நண்பர் என்று சொன்னதற்கு பிறகுதான் நிலைமையின் தீவிரம் இந்தியாவிற்கு புரிந்தது.

சீனாவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை மேற்கொள்ளவேண்டும் என்றும் ரஷ்ய நாளிதழ் கூறியது. ஆனால், க்யூபா பிரச்சனை சரியானவுடன் தனது பழைய கொள்கைக்கே ரஷ்யா திரும்பிவிட்டது என்பது வேறு கதை.

ஆனால் இந்தியப் பகுதிகளை ஆக்ரமிக்கும் தனது எண்ணத்தை மாவோ நிறைவேற்றிக்கொண்டார். 1962 நவம்பர் 21ஆம் நாளன்று சீனா போர் நிறுத்தத்தை அறிவித்து எல்லைப் பகுதியிலிருந்து (Line of Actual Control) 20 கி.மீ தூரத்திற்குப் படைகளைத் திரும்பப் பெற்றது.

கரீபியன் பகுதியில் நிகிடோ குருசேவ் காட்டியது கோழைத்தனமா அல்லது இமாலயப் பகுதியில் அவர் செய்தது நம்பிக்கைதுரோகமா என்பதை யார் அறுதியிட்டுச் சொல்வது?

(பிபிசிக்காக இந்த கட்டுரையை சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய மூத்த பத்திரிகையாளர் மல்ஹோத்ரா 2016 ஜூன் 11ஆம் தேதியன்று இயற்கை எய்தினார்.)

http://www.bbc.com/tamil/global-41701178

Link to comment
Share on other sites

1962 இந்திய-சீன போர்: எனது தோட்டா சீன சிப்பாயின் கண்ணை உரசிச் சென்றது

அக்டோபர் 19ஆம் தேதி இரவு, அன்று கோர்க்கா படைப் பிரிவினருடன் இருந்தேன். அடுத்த நாள் காலை ராஜ்புத் படைப் பிரிவினரிடம் செல்லவேண்டும் என்பது திட்டம். ஆனால் அடுத்தநாள், சீனர்களின் விருப்பப்படியே நடந்து கொள்ள வேண்டியதாயிற்று.

மேஜர் ஜெனரல் கே.கே.திவாரியுடன் பிபிசியின் ரெஹான் ஃபஜல் Image captionமேஜர் ஜெனரல் கே.கே.திவாரியுடன் பிபிசியின் ரெஹான் ஃபஜல்

அடுத்த நாள் காலை ராஜ்புத் படையினரிடம் நான் சென்றேன் ஆனால் ஜெனரலாக அல்ல, யுத்தக் கைதியாக! அக்டோபர் 20ஆம் தேதியன்று காலை துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தைக் கேட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தேன்.

எனது பதுங்குக் குழியில் இருந்து வெளியே வந்தேன், அந்த உயரமான பகுதியில் சிக்னல் கிடைப்பதே கடினமாக இருக்கும் நிலையில், எப்படியோ சிரமப்பட்டு, தலைமைக்கு தகவல் கொடுக்க முயற்சித்தோம்.

தொலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் ரேடியோ சிக்னலின் மூலம் கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெறும் தகவலை பிரிகேட் தலைமையகத்திற்கு தெரிவித்துவிட்டேன்.

அசாதாரண அமைதிக்குப்பின் துப்பாக்கிச் சூடு

சிறிது நேரத்தில் துப்பாக்கி சூடு நின்று அசாதரண அமைதி நிலவியது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மலைப்பகுதியின் உயரத்தில் இருந்து சிறிய ரக துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திக்கொண்டே எங்கள் பதுங்குக்குழிகளை நோக்கி சீன வீரர்கள் வந்தார்கள்.

भारत-चीन युद्ध

பட்டாலியனைச் சேர்ந்த அனைவரும் என்னையும் அங்கே விருந்தினர்களாக வந்திருந்த இரண்டு சிக்னல் ஆட்களையும் விட்டுவிட்டு பின்னடைந்துவிட்டார்கள் என்பதும் அப்போதுதான் தெரியவந்தது.

எந்தவொரு சீன சிப்பாயையும் நான் அவ்வளவு அருகில் பார்த்தது கிடையாது. சூழ்நிலையின் தீவிரத்தால் இதயத்துடிப்பு எகிறியது. சீன சிப்பாய்களின் ஒரு குழு எங்களைத் தாண்டி இந்திய எல்லைக்குள் முன்னேறிச் சென்றது.

பிரிகேட் தலைமையகத்தை நோக்கிச் செல்லலாம் என்று பதுங்குக்குழியில் இருந்து வெளியேறும்போது, சீனத் தரப்பின் அடுத்த குழு மலையில் இருந்து இறங்குவதைக் கண்டு மீண்டும் உள்ளே சென்றோம்.

அவர்களும் முதல் குழுவினரைப் போன்றே இடைவெளிகள் விட்டு துப்பாக்கிச் சூட்டை நடத்திக் கொண்டே முன்னேறினார்கள். ஒவ்வொரு பதுங்குக்குழியையும் சோதனையிட்டுக் கொண்டே வந்த இரண்டாவது குழு, இந்திய வீரர்கள் யாரும் அங்கு பதுங்கி இருக்கக்கூடாது என்பதற்காக அவற்றின் மீது கிரானைட் குண்டுகளை வீசிக் கொண்டே சென்றது.

भारत-चीन युद्ध

ஆறாக் காயங்கள், மாறா வடுக்கள்

அந்த காலகட்டத்தில், என்னிடம் 9 எம்.எம் பிரவுனிங் தானியங்கி கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. எனது சடலத்தை இந்திய வீரர்கள் கண்டெடுக்கும்போது, அந்த துப்பாக்கியில் ஒரு தோட்டாக் கூட இருக்கக்கூடாது என்று முடிவு செய்துக்கொண்டேன்.

சூழ்நிலை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் சீனர்களை எதிர்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

நாங்கள் இருந்த பதுங்குக்குழியை நோக்கி இரண்டு சீன சிப்பாய்கள் வந்தபோது, அவர்களை சரமாரியாக சுட்டேன். முதலில் இருந்தவனின் இடது கண்ணுக்கு மேற்புறமாக உரசிக் கொண்டு ஒரு தோட்டா சென்றது. அவன் அப்படியே சுருண்டு விழுந்துவிட்டான்.

அவன் கண்டிப்பாக இறந்திருப்பான். ஏனெனில் அவனிடமிருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை, அசைவும் இல்லை. இரண்டாவது சிப்பாயின் தோளில் குண்டு துளைத்து அவனும் கீழே விழுந்தான்.

சில நொடிகளில் அடுத்த ஆபத்தை எதிர்கொண்டேன். கூக்குரலுடன் பல சீன வீரர்கள் எங்கள் பதுங்குகுழியை நோக்கி சுட்டுக்கொண்டே வந்தார்கள். என்னுடன் இருந்த சிக்னல்மேன் படுகாயமடைந்து வீழ்ந்தார்.

அவரின் உடலில் இருந்து மிகுந்த அழுத்தத்துடன் தண்ணீரைப் போல ரத்தம் வெளியேறியதை பார்த்த காட்சியை என்னால் மறக்கவே முடியவில்லை.

எங்கள் பதுங்குக்குழியில் குதித்த இரண்டு சீன வீரர்கள் துப்பாக்கியால் தாக்கி என்னை வெளியில் இழுத்துச் சென்றார்கள். சிறிது தூரம் நடத்தி செல்லப்பட்ட பிறகு உட்காரச் சொல்லி உத்தரவிட்டார்கள்.

இதயத்தை துடிக்க வைத்த காட்சி

சிறிது நேரத்தில் அங்கு வந்த சீன ராணுவ அதிகாரி ஒருவர் சுமாரான ஆங்கிலத்தில் பேசினார். என்னுடைய தோள்பட்டையில் பொறிக்கப்பட்டிருந்த பதவியை குறிக்கும் அடையாள சின்னத்தைப் பார்த்த அவர், என்னை மிகவும் அவமரியாதையாக நடத்தினார்.

என் அருகிலேயே மயக்கமடைந்த நிலையில் ஒரு கோர்க்கா படைப்பிரிவின் சிப்பாய் இருந்தார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சிப்பாய், என்னை அடையாளம் கண்டுகொண்டு தண்ணீர் கோரினார்.

அவருக்கு உதவி செய்ய எழுந்த என்னை சீன அதிகாரி அடித்தான். முட்டாள் கர்னல், நீ கைதி, உட்கார், என்னுடைய உத்தரவில்லாமல் நீ நகர்ந்தாலும் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று உரக்கச் சத்தமிட்டான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு 'நாம்கா ச்சூ' நதியின் அருகே ஒரு குறுகிய பாதையில் அணிவகுத்து நடத்திச் செல்லப்பட்டோம். முதல் மூன்று நாட்களுக்கு எங்களுக்கு உணவு கொடுக்கப்படவில்லை, பிறகு முதல் முறையாக வேகவைத்த அரிசி சாதமும், வறுத்த முள்ளங்கியும் உணவாக வழங்கப்பட்டது.

भारत-चीन युद्ध

தனிமைச் சிறை, இருண்ட அறை

சென்யேவில் இருந்த போர்க் கைதி முகாமிற்கு அக்டோபர் 26ம் தேதி அழைத்து வரப்பட்டோம். முதல் இரண்டு நாட்கள் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தேன். அதன்பிறகு மிகவும் மோசமாக காயமடைந்திருந்த கர்னல் ரிக், நான் இருந்த இருண்ட அறைக்கு கொண்டுவரப்பட்டார். மோசமாக காயமடைந்த அவரைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருந்தது.

முகாமில் நாங்கள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு, அதிகாரிகளும், சிப்பாய்களும் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டோம். அங்கிருந்த வெவ்வேறு சமையலறைகளில் சீனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இந்திய வீரர்கள் கைதிகளுக்காக சமைக்க அனுமதிக்கப்பட்டனர்.

காலை உணவு ஏழு முதல் ஏழரை மணிக்குள் கொடுக்கப்படும். மதிய உணவு காலை பத்தரை முதல் பதினொன்றரை மணிக்குள்ளும், இரவு உணவு மாலை மூன்றரை மணிக்கும் கொடுக்கப்படும்.

நாங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கு கதவுகளோ, ஜன்னல்களோ கிடையாது. அவற்றை எரிப்பதற்காக சீனர்கள் பயன்படுத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். நேரத்தை போக்குவதற்காக சிறை வைக்கப்பட்ட இடத்திற்குள்ளேயே நடந்துக் கொண்டிருந்தேன்.

भारत-चीन युद्ध

நடுங்க வைக்கும் குளிர்

அங்கு கொண்டு செல்லப்பட்ட முதல் இரண்டு நாட்களும் இரவு நேரத்தில் கடுமையான குளிரால் உறைந்துபோனோம். அந்த இடத்தில் வைக்கோல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பயன்படுத்திக் கொள்ள சீனர்களிடம் அனுமதி கோரினோம். அதிர்ஷ்டவசமாக, எங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு வைக்கோலை படுப்பதற்கான மெத்தையாகவும் போர்வையாகவும் பயன்படுத்தினோம்.

தவாங்கை கைப்பற்றிவிட்டதாக நவம்பர் 8 ம் தேதி சீனர்கள் சொன்னபோது, எங்கள் கவலை அதிகமானது. சண்டை நடப்பதே அதுவரை எங்களுக்கு தெரியாது!

1942 நவம்பர் நான்காம் தேதி ராணுவப் பணியில் சேர்ந்தவன் நான் என்பதை அவர்கள் எப்படியோ கண்டறிந்துவிட்டார்கள். எனவே 1962, நவம்பர் நான்காம் தேதியன்று பணியில் நான் சேர்ந்த இருபதாவது ஆண்டு நாளை கொண்டாடுவதற்காக ஒரு ஒயின் பாட்டிலுடன் ஒரு சீன அதிகாரி என்னிடம் வந்தார்.

இந்திய வீரர்களின் உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்விதமாக, சிறப்பான நாட்களில் சிறப்பு உணவு வழங்கினார்கள், இந்திய திரைப்படங்களை திரையிடுவார்கள்.

எங்கள் முகாமில் மிகவும் அழகான ஒரு சீன பெண்மணி மருத்துவராக பணிபுரிந்தார். அவ்வப்போது எங்களை பரிசோதிக்க வந்த அந்த மருத்துவரின் அழகில் இந்திய போர்க் கைதிகள் அனைவருமே மயங்கினோம் என்றே சொல்லலாம்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொடி Image captionசர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொடி

செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து பொருட்கள்

டிசம்பர் மாத இறுதியில், செஞ்சிலுவை சங்கம் இந்திய போர் கைதிகளுக்கு இரண்டு பொட்டலங்களை அனுப்பியது. ஒன்றில், ஆடைகள், குளிருக்கு பயன்படுத்த கம்பளி ஆடைகள், மஃப்ளர், தொப்பி, காலணிகள் மற்றும் துண்டுகள் இருந்தன.

இரண்டாவது பொட்டலத்தில் உணவு பொருட்கள், இனிப்புகள், பால் டின்கள், ஜாம், வெண்ணெய், மீன், சர்க்கரை பாக்கெட்டுகள், மாவு, பயறுகள், உலர் பட்டாணி, உப்பு, தேநீர், பிஸ்கட், சிகரெட், விட்டமின் மாத்திரைகள் ஆகியவை இருந்தன.

நவம்பர் 16 அன்று குடும்பத்தினருக்கு கடிதம் எழுத அனுமதி கிடைத்தது. நான்கு லெப்டினன்ட் ஜென்ரல்களுக்கு மட்டும் தந்தி அனுப்ப அனுமதி கிடைத்தது. எங்கள் கடிதங்கள் தணிக்கை செய்தபிறகே அனுப்பப்படும் என்பதால் நாங்கள் விவரமாக எதையும் எழுத முடியவில்லை.

செஞ்சிலுவை சங்கம் மூலமாக எனக்கு சில கம்பளி ஆடைகளையும், உணவு பொருட்களையும் அனுப்புமாறு ஒரு கடிதத்தில் நான் எழுதியிருந்தேன். அந்த கடிதத்தில் நான் எழுதியிருந்ததை தெரிந்துக் கொண்ட என் நான்கு வயது மகள் ஆபா, அப்பா குளிரில் தவிக்கிறார், பசியுடன் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டாளாம்!

இந்திய பாடல்களை சீனர்கள் தொடர்ந்து ஒலிபரப்புவார்கள். அவர்கள் தொடர்ந்து ஒலிக்கவிட்ட ஒரு பாடல் லதா மங்கேஷ்கர் பாடியது. 'எத்தனை நாள் இந்த புறத்தில் இருப்பேன்' என்ற பொருள் கொண்ட அந்த இந்தி மொழிப் பாடல் எனது குடும்பத்தினரின் நினைவையும், ஏக்கத்தையும் அதிகரித்தது.

கே.கே. திவாரி சீன சிப்பாய்களின் பெயரை இந்தியில் எழுதியிருக்கிறார் Image captionகே.கே. திவாரி சீன சிப்பாய்களின் பெயரை இந்தியில் எழுதியிருக்கிறார்

பகதூர் ஷா ஜஃபரின் கஜல் பாடல்கள்

ஒரு நாள் எங்கள் முகாமுக்கு வந்த சீன பெண்மணி ஒருவர் பகதூர் ஷா ஜஃபரின் கஜல் பாடல்களை பாடியது எங்களது வியப்பளித்தது. எங்கள் சகா ரதனும், அந்த பெண்ணுடன் இணைந்து ஜஃபரின் பாடல்களை பாடினார்.

அந்த பாடல்கள், டெல்லியில் இருந்து ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்ட (இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர்) பிறகு ஜஃபர் எழுதிய பாடல்கள். உருது தெரிந்த அந்த பெண், லக்னெளவில் சிறிது காலம் வசித்திருக்கலாம் என்று கருதினேன்.

சீனர்கள் ஊசிகளை கொண்டு (அக்குபஞ்சர்) சிகிச்சை செய்வதை நாங்கள் பார்த்தோம். நண்பர் ரிக்குக்கு கடுமையான தலைவலி என்னும் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருந்தது, அதற்கு சிகிச்சையும் தொடர்ந்தது. அவரின் தலைவலிக்கு காரணம் சிகிச்சையளித்தது நான் முன்னரே குறிப்பிட்ட அழகான பெண் டாக்டரா என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

இந்திய போர்க்கைதிகளை திருப்பி அனுப்புவதற்கு முன்பு சீனாவை சுற்றி காட்டவேண்டும் என்று சீனர்கள் முடிவு செய்தார்கள். போர்க்கைதிகளாக இருந்த மேலும் பத்து இந்திய ராணுவ அதிகாரிகளும் அழைத்து வரப்பட்டனர். அதில் மேஜர் தன்சிங் தாபாவும் அடங்குவார். வீரதீர செயல்களுக்காக பரம்வீர் சக்ர விருது பெற்றவர் தாபா.

முதன்முறையாக சீனாவில் சுதந்திரமாக ரேடியோ கேட்க அனுமதிக்கப்பட்டது. அங்கிருந்து கொண்டே நீண்ட நாட்களுக்கு பிறகு ஆல் இண்டிய ரேடியோ மற்றும் பிபிசி செய்திகளை கேட்டோம்.

சீனாவை சுற்றி பார்க்க அழைத்து செல்லப்பட்டபோது, சாதாரண உடை அணிந்த சீன ராணுவத்தை சேர்ந்த ஒருவர் எங்களுடன் இருந்தார். அவர்களை ஜெனரல் என்று அழைத்தோம்.

அவரை பின்தொடர்ந்து செல்லும் சிப்பாய் ஒருவர் அவருக்கு உட்கார நாற்காலி எடுத்துப்போடுவது, தேநீர் தயாரிப்பது போன்ற எடுபிடி வேலைகளை செய்வார். அவரை ஜெனரலின் ஆடர்லி என்று அழைத்தோம்.

எங்களை இந்தியா அனுப்புவதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டபோது, விடுவிப்பு ஆவணங்களில் கையெழுத்திட்டது 'ஆடர்லி'. அப்போது அவர் கையெழுத்திடுவதற்கான பேனாவை எடுத்துக் கொடுத்தது, 'ஜெனரல்'.

காலை ஒன்பது மணிக்கு குன்மிங்கில் இருந்து கிளம்பிய எங்கள் விமானம் மதியம் ஒரு மணி 20 நிமிடங்களுக்கு கல்கத்தாவை வந்தடைந்தது. ஆனால் தரையிறங்காமல் நீண்ட நேரமாக விமானம் வானிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

விமானத்தின் சக்கரங்கள் திறக்கவில்லை என்று சொன்ன விமான ஓட்டி, அதிரடியாக விமானத்தை தரையிறக்க வேண்டியிருக்கும் என்று சொன்னார்.

இறுதியாக இரண்டு மணி முப்பது நிமிடத்தில் தம்தம் விமான நிலையத்தில் இறங்கினோம். எந்தவொரு நிலைமையும் சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நின்றிருந்தன.

விமானம் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு தோன்றியது என்ன தெரியுமா? "இத்தனை நாள் போர்க்கைதிகளாக அந்நிய நாட்டில் இருந்த நாங்கள், பல பிரச்சனைகளுக்கு பிறகும் அங்கு மரணிக்காமல், நமது தாய் மண்ணில் அதிரடியாக தரையிறங்கும்போது மரணிப்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்".

(சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் கே.கே.திவாரியுடன் பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபஜல் உரையாடியதன் அடிப்படையில் எழுதப்பட்டது இந்த கட்டுரை. இப்போது கே.கே திவாரி உயிருடன் இல்லை. அவர் 2016 ஆம் ஆண்டு புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.)

http://www.bbc.com/tamil/global-41708922

Link to comment
Share on other sites

1962 போர்: சீன ஆக்ரமிப்பு அச்சத்தால் எரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள்

1962 போர்: சீன ஆக்ரமிப்பின் அச்சத்தால் எரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள்படத்தின் காப்புரிமைEXPRESS

1962 இந்திய-சீன யுத்தத்தின்போது, பனி மூடியிருந்த நவம்பர் 18 ம் தேதிவாக்கில் அருணாச்சல பிரதேசத்தில் தவாங்கிற்கு அருகில் உள்ள எல்லைப்பகுதி 'லா' எதிர்ப்பின்றி சீனாவின் வசப்பட்டது என்ற செய்தி 'தி எகனாமிஸ்ட்' பத்திரிகையின் தலைப்புகளில் இடம்பெற்றது.

ராணுவத்தின் நான்காவது பிரிவுக்கு அசாமின் குவாஹாத்திக்கு செல்ல உத்தரவிடப்பட்டதாகவும், படைகள் மேற்கு நோக்கி நகர்வதாகவும் வதந்திகள் பரவின. அதுமட்டுமல்லாது, தேஜ்பூரில் உள்ளவர்கள் இடங்களை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுத்தப்பட்டதாகவும், நூன்மதி எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை தகர்க்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாகவும் வெளியான செய்திகள் மக்களை அச்சுறுத்தின.

பயத்தில் அங்கிருந்து தப்பியோடிய தேஜ்பூர் மாவட்ட ஆட்சியர் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை, சீர்குலைந்திருந்த அரசு நிர்வாகத்தை சரிசெய்யுமாறு ராணா கே.டி.என். சிங்கை அரசு கேட்டுக்கொண்டது.

தேஜ்பூரின் பொதுமக்கள் படகில் பயணித்து மேற்கு கரைக்கு செல்லத் தொடங்கினார்கள். பிரம்மபுத்திரா ஆற்றை கடந்து, தெற்கு அசாம் நோக்கி செல்வதற்காக, சூட்கேஸ்கள் மற்றும் சிறிய டிரங்க்குகளில் முக்கியமான பொருட்களை எடுத்துக் கொண்டு போமாராகுடி படகுத்துறையை நோக்கி மக்கள் செல்லத்தொடங்கினார்கள்.

அடுத்த நாள் காலையில் படகு பயணத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படகுத்துறையில் வரிசையில் காத்திருந்த மக்கள் பனி விழும் குளிர்கால இரவு வேளையின் நடுக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளியில் காத்திருந்தனர்.

1962 போர்: சீன ஆக்ரமிப்பின் அச்சத்தால் எரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள்

சுட்டுக் கொல்லப்பட்ட கால்நடைகள்

பிரம்மபுத்திரா நதியின் வடக்கு கரையில் வசிக்கும் பெரும்பாலான தேயிலை தோட்டங்களின் ஆங்கிலேய உரிமையாளர்கள், தங்களுடைய கால்நடைகளை விலங்குகளையும், தங்களின் கீழ்நிலை பணியாளர்கள் மற்றும் எழுத்தர்களுக்கு கொடுத்தனர், சிலர் அவற்றை ஓட்டிவிட்டார்கள். எஞ்சியவற்றை சுட்டுக் கொன்றார்கள்.

எப்படியேனும் கல்கத்தா சென்றடைவது ஒன்றே அனைவரின் ஒரே குறிக்கோளாக இருந்தது. படகுகள், கார்கள், பேருந்துகள், மிதிவண்டி மற்றும் எருதுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மக்கள் இடம்பெயர்ந்தனர். வீடுகளில் இருந்து வெளியேறிவிட்டாலும், வாகனங்கள் எதுவும் இல்லாமல் மக்கள் சாரிசாரியாக நடைபயணத்தையும் மேற்கொண்டனர்.

தெற்கு கரையோரப் பகுதியிலிருந்து கடைசி படகு மாலை ஆறு மணியளவில் புறப்படும் என்று ஒலிபெருக்கி மூலம் ராணா அறிவித்தார்; இது அங்கிருப்பவர்களுக்கு ஆற்றை கடக்க கிடைக்கும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

தேஜ்பூரே பாழடைந்த நகரமாக மாறிவிட்டது. ஸ்டேட் பாங்க், தன்னிடமிருந்த ரூபாய் நோட்டுகளுக்கு தீவைத்தது. பாதி எரிந்த ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்தன. இந்திய நாணயங்கள் அருகிலுள்ள குளத்தில் கொட்டப்பட்டன.

1962 போர்: சீன ஆக்ரமிப்பின் அச்சத்தால் எரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் Image captionஅப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு

மன நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்

மனநல மருத்துவமனையின் நிர்வாகம் அங்கு சிகிச்சை பெற்றுவந்த மனநலன் பாதிக்கப்பட்ட 20-30 பேரை வெளியேற்றியது. அங்கிருந்து வெளியேறிய அவர்கள் நகரத்திற்குள் சுற்றிக்கொண்டிருந்தனர்.

அரசு ஆவணங்கள் எவையும் சீனாவின் கைவசம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக தீயிலிடப்பட்டன.

வானொலியில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அசாம் மக்களுக்கு இரங்கலை தெரிவித்தார். தற்போதுகூட வடகிழக்கில் வசிக்கும் மக்கள், நேருவின் உரையைப் பற்றிக் குறிப்பிட்டு, இந்திய அரசு தங்களை அப்போதே வழியனுப்பி வைத்துவிட்டதாக கூறுவது வழக்கம்.

நவம்பர் 19ஆம் தேதி, தேஜ்பூரில் ஒருவர் கூட எஞ்சியிருக்கவில்லை... அனைத்தும் அப்படியே ஸ்தம்பித்துவிட்டதாக தோன்றியது! ஆனால் திடீர் திருப்பமாக, அதை அதிர்ஷ்டவசம் என்றே கூறலாம். சீன ராணுவம் தேஜ்பூருக்கு 50 கிலோமீட்டர் முன்னரே நிறுத்தப்பட்டது.

1962 போர்: சீன ஆக்ரமிப்பின் அச்சத்தால் எரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் Image captionஇந்திய-சீன போரின்போது உள்துறை அமைச்சராக பதவி வகித்தார் லால் பகதூர் சாஸ்திரி

போர்நிறுத்தம்

நவம்பர் 19ஆம் தேதி நள்ளிரவில் சீன வானொலி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. உடனடியாக போரை தானாகவே நிறுத்துவதாக ஒருதலைப்பட்சமாக அறிவித்தது, இந்த போர்நிறுத்தத்தை இந்திய ராணுவமும் நிபந்தனைகளற்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சீன வானொலியில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஆல் இண்டிய ரேடியோவில் நவம்பர் 20ஆம் தேதியன்று காலை வெளியான செய்தியறிக்கையில், "இந்திய வீரர்கள் எல்லைப்பகுதியில் வீரத்துடன் போராடுகின்றனர்" என்ற செய்தி ஒலிபரப்பானது.

அதற்கு காரணம் என்ன தெரியுமா? இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் பிரதமரை எழுப்பி, சீனாவின் போர்நிறுத்த அறிவிப்பைப் பற்றி அவரிடம் சொல்வது அவசியம் என்று யாரும் கருதாததுதான்!

போர்க்களத்தில் உண்மையாக நடைபெறும் செய்திகளை தெரிந்துக் கொள்ள இந்திய ராணுவத்தின் சிப்பாய் முதல் ஜெனரல்வரை, பெய்ஜிங் வானொலியை பயன்படுத்தியது நகைமுரண்!

நவம்பர் 21ஆம் தேதியன்று, தேஜ்பூரில் இயல்புவாழ்க்கை படிப்படியாக திரும்பியது. மக்களை ஆசுவாசப்படுத்தி, நம்பிக்கையூட்டுவதற்காக உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அங்கு சென்றார். மாவட்ட நிர்வாகத்தினரும் தேஜ்பூருக்கு திரும்பிச்சென்றனர். இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்திரா காந்தி அங்கு சென்று பார்வையிட்டார்.

http://www.bbc.com/tamil/global-41716043

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.