Jump to content

திருமலையில் திருடப்படும் தமிழரின் நில ஆட்சி


Recommended Posts

-ஜி.முத்துக்குமார்-

திருகோணமலை மாவட்டம் தமிழர்களை இனரீதியாக பெரும்பான்மையாகக் கொண்டிருந்தும் நிருவாக பரவலாக்கல் அலகுகள் அவர்களை திட்டமிட்டு புறம்தள்ளியிருப்பதை 11 பிரதேச செயலாளர் பிரிவுகளாக மாவட்டம் பிரிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

தற்போது திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகங்களும் 11 பிரதேச சபைகளும் இரண்டு நகரசபைகளும் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் சிங்களவர்களுக்கு ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் ஐந்து பிரதேச சபை பிரிவுகளும் தனிச் சிங்கள பெரும்பான்மை கொண்டதாக எல்லைகள் வகுக்கப்பட்டு தேவைக்கேற்ப நிலங்களும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குள் வரும் நீலாப்பளை என்ற கிராமம் கங்குவேலி தமிழ்கிராமத்திற்கு வடக்கே மல்லிகைத்தீவு கிராமத்திற்கு மேல் அமைந்துள்ளது. ஆனால், கங்குவேலிக் கிராமத்திற்கு தெற்காக வரைபடத்தில் காட்டி நீலாப்பனை கிராம உத்தியோகத்தர்களவை சேருவில பிரதேச செயலகத்திற்குள் கொண்டு வந்துள்ளார்கள். இது ஒரு எடுத்துக் காட்டு மட்டுமே.

இதேபோல், முஸ்லிம்களுக்காக கிண்ணியா, மூதூர், தம்பலகமம், குச்சவெளி நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளும், நான்கு பிரதேச சபையும், ஒரு நகரையும் நிருவகிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களுக்கு இரண்டு பிரதேச சபையும், ஒரு நகரையும், இரண்டு பிரதேச செயலகங்கள் மட்டுமே நிருவாக அலகுகள் என்று கூறக்கூடிய வகையடுத்துள்ளது. தம்பலகமம், மூதூர், குச்சவெளி, திருகோணமலை பட்டினமம் சூழலும் ஆகிய பிரதேச செயலகங்களில் இருந்து தமிழ் மக்களுக்கு (சனத்தொகை, நிலப்பரப்பு, நிருவாகம் மக்களை இலகுவாகச் சென்றடைத்தல் என்ற வரையறைக்குள் வைத்து) ஐந்து புதிய பிரதேச செயலகங்களும் ஐந்து பிரதேச சபைகளும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால், காலம் காலமாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் நிலையே தொடர்ந்து சிங்கள அரசாங்கத்தாலும் உள்ளூர் அரசியல் தலைமைகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் ஆரம்ப காலத்தை எடுத்துக் கொண்டால் மாவட்டத்தில் கொட்டியாபுரபற்று, தம்பலமப்பற்று, கட்டுக்குளம்பற்று, திருகோணமலை என நான்கு காரியதிகாரி பிரிவுகளே இயங்கி வந்தன.

கொட்டியாபுரபற்று காரியதிகாரி பிரிவின்கீழ் Bரம்பகாலத்தில் தோப்பூர், கிண்ணியா, சம்பூர், கூனித்தீவு, கட்டைபறிச்சான், பள்ளிக்குடியிருப்பு, ஈச்சிலம்பற்று என முஸ்லிம்களுக்கு மூன்று விதானைமார் பிரிவுகளும் தமிழர்களுக்கு ஐந்து விதானைமார் பிரிவுகளும் ஆரம்பத்தில் இருந்தே இயங்கின. 1962 ஆம் ஆண்டு விதானைமார் கிராமசேவையாளராக பதிவிமாற்றம் செய்யப்பட்டபோது சேருவல கிராம அதிகாரி பிரிவும் இணைத்துக் கொள்ளப்பட்டது. அதன் பிற்பாடு உதவி அரசாங்க அதிபர் பிரிவு என்ற நிருவாக முறைமை கொண்டு வரப்பட்டது.

கொட்டியாப்புரபற்று பிரிவுக்குள் இயங்கிய 8 பிரிவுகளில் கிண்ணியா ஈச்சிலம்பற்று தவிர்ந்த பிரிவுகள் மூதூர் உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதில் ஆரம்பத்தில் இருந்த 2 முஸ்லிம் பிரிவுகளையும் சனத்தொகைக்கு ஏற்ப 20 பிரிவுகளாகவும் தமிழரின் சனத்தொகைக்கு ஏற்ப 22 பிரிவுகளாகவும் ஜனசக்தி அவிபிருத்திக்காக பிரிவுகள் பிரித்து இலகுவாக்கப்பட்டன. முஸ்லிம் பிரிவுகளில் மூதூர் நகரை அண்டிய 13 பிரிவுகள் 20.2 ஹெக்ரயர் பரப்பளவில் 6005 குடும்பங்களில் 25142 அங்கத்தவர்களைக் கொண்டு இன்று வரையும் இயங்குகின்றன. மூதூர் நகரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ள தோப்பூர் பிரதேசமானது 7 கிராம அதிகாரி பிரிவுகளைக் கொணடு 39.9 ஹெக்ரயர் பரப்பளவில் 2726 குடும்பங்களில் 10165 அங்கத்தவரையும் கொண்டு இன்று வரையும் இயங்குகின்றன.

கொட்டியாப்புரபற்றில் இயங்கிய 4 தமிழ் கிராம சேவையாளர் பிரிவுகளையும் சனத்தொகை நிலப்பரப்பிற்கு ஏற்ப 22 ஆகப் பிரித்து செய்யப்பட்டு வருகிறது. மூதூர் கிழக்கில் 11 பிரிவுகளில் 53.9 ஹெக்ரயர் பரப்பளவில் 4058 குடும்பங்களில் 14996 அங்கத்தவரையும் கொண்டு மூதூர் தெற்கு 9 கிராம அதிகாரி பிரிவுகளைக் கொண்ட 55.6 ச.கி.மீ. பரப்பளவில் 2614 குடும்பங்களில் 14065 அங்கத்தவரையும் கொண்டு இன்று வரையும் இயங்குகிறது. இறால்குழி மூதூர் மத்தி ஆகிய தமிழ் கிராமசேவையாளர் பிரிவுகளுடன் சேர்க்க முடியாமையால் நிர்வாக இலகுகருதி மூதூரில் இயங்கும் 13 முஸ்லிம் பிரிவுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும். மேற்படி விபரங்களைக் கொண்டு ஆராயப்படும் விடயங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொண்டுச் செல்ல அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் முன்வரவேண்டும்.

மாவட்டத்தில் திட்டமிடப்பட்ட குடியேற்றங்களின் பின்பு சேருவெல, கந்தளாய், பதவிசிறிபுர, கோமரங்கடவல, மொறவெவ என 5 தனிச் சிங்களப் பிரதேச செயலகப் பிரிவுகளும் கிண்ணியா, தம்பலகமம், மூதூர், குச்சவெளி என்பன பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்ட பிரதேச செயலகங்களும் திருகோணமலையும் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட வெருகல் உதவி அரசாங்க அதிபர் காரியாலயமும் தமிழர்களுக்கான பிரதேச செயலகங்களாக இன்றும் இயங்கிவருகின்றன. வெருகல் உதவி அரசாங்க அதிபர் காரியாலயம் 1990 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டாலும் அதைப் பிரதேச செயலகமாக தரமுயர்த்த அரசாங்கம் விரும்பவில்லை. சேருவல பிரதேச செயலக நிருவாகத்தின் கீழ் ஓர் உப அலுவலகமாகவே கடந்த 15 வருடங்கள் செயற்பட்டு வந்தது. 2005 க்குப் பிற்பாடு பிரதேச சபை தேர்தலில் சேருவெல பிரதேசத்தில் தமிழர்கள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என அஞ்சிய சிங்களத் தலைவர்களின் வற்புறுத்தலால் அரச உயர் மட்டங்கள் வெருகல் உதவி அரசாங்க அதிபர் பிரிவு சுயமாக இயங்கும் நிர்வாகத்தை நடத்த அனுமதித்துள்ளது.

இதேபோன்றே தமிழர்களின் சனத்தொகையை கணிசமாகக் கொண்டிருக்கும் தம்பலகமம். மூதூர் குச்சவெளி போன்ற பிரதேச செயலகங்களும் தமிழர்களுக்காக பிரித்து வழங்கப்பட வேண்டிய பிரதேச செயலகங்களாகும். மூதூர் பிரதேச செயலகம் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை நிர்வகித்து வருகிறது. இவற்றில் 22 தமிழ் பிரிவுகளும் 20 முஸ்லிம் பிரிவுகளும் அடங்கும். 1983 க்குப் பின் அடிக்கடி ஏற்படும் வன்செயல் இடம்பெயர்வுகளால், தமிழர்களின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால், பிரதேச செயலகப் புள்ளிவிபரங்களின்படி ஏறத்தாழ 7000 முஸ்லிம்கள் அதிகமாக உள்ளதை ஏற்றுக் கொள்ளமுடியாதுள்ளது.

இந்த நிலையில், மூதூர் பிரதேச செயலகத்தை 3 பிரதேச செயலகங்களாகப் பிரித்து மூதூரை முஸ்லிம்களுக்காகவும் மூதூர் கிழக்கை தமிழர்களுக்கும் மூதூர் தெற்கை தமிழ், முஸ்லிம்களுக்காகவும் நிர்வாகத்தை இலகுபடுத்தித் தரும்படி எல்லைகள் மீள்நிர்ணய ஆணைக்குழுவிற்கு முன்னாள் மூதூர் பிரதேச சபை உறுப்பினரான மு.சௌந்தரராஜனால் 1996.06.07 இல் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இப்படியான கோரிக்கைகள் எதுவும் ஆணைக்குழுவிற்கு முன் வைக்கப்படவில்லை.

இக்கோரிக்கை மூலம் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுகளில் யுத்த நடவடிக்கையினால் பாதிப்பு ஏற்படாமலும் அவரவர் பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டங்களை வகுத்து மூதூர் கிழக்கில் 11 தமிழ் கி.உ.பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேச செயலக அலகொன்றை சம்பூரில் நிறுவுவதென்றும் அவை நல்லூர், பாட்டாளிபுரம், பள்ளிக்குடிருப்பு, கட்டைபறிச்சான், வடக்கு கட்டைபறிச்சான் தெற்கு கடக்கரைச்சேனை, சேனையூர், சம்பூர், மேற்கு சம்பூர் கிழக்கு, கூனித்தீவு, நவரத்தினபுரம் ஆகிய கிராம சேவை உத்தியோகஸ்தர் பிரிவுகளை ஒரு பிரிவாகவும் உள்ளடக்கியிருக்கும். அடுத்து மூதூர் தெற்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் கலந்துவாழும் எல்லைக் கிராமமான பாலத்தடிச்சேனையில் பிரதேச செயலகம் அமைப்பதென்றும் பரிந்துரைக்கப்பட்டது.

இப்பிரிவில் 9 தமிழ்ப் பிரிவுகளும் அவை மல்லிகைத்தீவு, கிளிவெட்டி, பட்டித்திடல், பெருவெளி, இருதயபுரம், பாலத்தடிச்சேனை, மேன்காமம், கங்குவேலி, பாரதிபுரம் என்பனவையும் ஏழு முஸ்லிம் பிரிவுகளான தோப்பூர், பாலத்தோப்பூர், ஜின்னாநகர், ஆஸாத்நகர், அல்லைநகர் கிழக்கு அல்லைநகர் மேற்கு, இக்பால்நகர் என்பன அடங்கும் என்றும் மல்லிகைத் தீவு, கிளிவெட்டி, தோப்பூர் உபபிரதேச சபைகளுக்கு மத்திய இடமாக இருக்கும் பாலத்தடிச்சேனையே பொருத்தமான இடமாக இருக்கும் என்று எல்லைகள் மீள் நிர்ணயம் ஆணைக்குழுவிற்கு தமிழர்தரப்பால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 42 கிராமசேவையாளர் பிரிவுகள்

தமிழ்ப் பிரிவுகள்

பிரிவு, பிரிவுஇல., பரப்பளவு(ச.கி.மீ. )

218, மல்லிகைத்தீவு, 8.4

218,ஏ, கிளிவெட்டி, 4.8

218 பி, பட்டித்திடல், 3.4

218 சீ, கங்கவேலி, 9.4

218 டீ, பெருவெளி, 4.2

218 ஈ, இருதயபுரம், 3.0

218 எப், பாலத்தடிச்சேனை , 9.6

218 ஜி , பாரதிபுரம் , 8.6

218 ஐ , மேங்காமம், 4.2

219, பள்ளிக்குடியிருப்பு, 3.9

219 ஏ, நல்லூர் , 6.4

219 பி பாட்டாளிபுரம், 3.4

220, சம்பூர் கிழக்கு, 3.2

220 ஏ, சம்பூர் மேற்கு, 2.4

221, உனித்தபவு ,4.0

221 ஏ, தவரட்ணபுரம்,8.6

222 , கட்டைப்பறிச்சான் தெற்கு , 4.0

222 ஏ ,சேனையூர், 3.2

222 பி , கட்டைப்பறிச்சான் வடக்கு, 4.6

222 சி , கடற்கரைச்சேனை , 4.0

224 டி ,இறால்குழி ,2.0

223 எப்,மூதூர் மத்தி, 0.4

முஸ்லிம் பிரிவுகள் பிரிவு , பிரிவு இல., பரப்பளவு (ச.கி.மீ. )

216 , தோப்பூர், 4.0

216 ஏ, அல்லைநகர் கிழக்கு, 3.2

216 பி, எக்பாநகர் , 10.3

216 சி, பாலத்தோப்பூர், 9.6

216 டி, ஜின்னா நகர், 4.8

216 ஈ , அல்லைநகர் மேற்கு, 3.2

223 எச், ஆஷாத்நகர் , 4.8

223 ஏ, மூதூர் கிழக்கு , 2.4

223 பி, ஆனைச்சேனை, 0.4

223 சி, தக்வாநகர், 3.2

223 டி, நெய்தல்நகர், 1.6

223 ஈ, நடுத்தீவு, 0.8

223 ஜி, பாலநகர் ,0.8

224, மூதூர்மேற்கு , 1.2

224 ஏ, பெரியபாலம், 2.4

224 பி, ஆலீம்நகர், 4.0

224 சி, தாகர்நகர் , 2.8

224 ஈ , ஜின்னாநகர் , 0.8

224 எப் , சாபிநகர் , 4.0

244ஜி, ஜாயாநகர், 3.2

தொடரும்

http://www.thinakkural.com/news/2007/3/4/a...s_page22622.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.