Jump to content

விளையாட்டே வினையானால் விளைவுகள் விபரீதமாகலாம்


Recommended Posts

விளையாட்டே வினையானால் விளைவுகள் விபரீதமாகலாம்

 

இணைய வசதியுடன் கூடிய ஐபோன் போன்றவை மூலம் பிள்ளைகள் அவற்றில் எதையெல்லாம் பார்க்கிறார்கள் என்று பெற்றோர்கள் அவதானித்துப் பார்த்ததுண்டா?

 

உலகின் மொத்த மக்கள் தொகையான 750 கோடியில் 180 கோடி இளைஞர்கள் இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விபரம். பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு பொழுதுபோக்கு இருக்கும். பாடல் கேட்பது, புத்தகம் வாசிப்பது, கவிதை கிறுக்குவது, டி.வி. பார்ப்பது இப்படிப் பல பொழுதுபோக்குகள். ஆனால் இன்று இணைய வளர்ச்சியில் இந்த 180 கோடி பேருமே விரும்புவது செல்போனைத்தான். அதிலும் குறிப்பாக சீஓசி என்று சொல்லப்படும் கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் கேம்தான் பெரும்பான்மை இளைஞர்களின் பொழுதுபோக்காக மாறி வருகிறது. இந்த விளையாட்டுக்கு அடிமையானவர்கள் ஒருநாள் 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 25 தடவை இதைத் தொட்டு செல்கிறார்கள் என்கிறது சமீப ஆய்வு ஒன்று.

உலகம் முழுக்க மொபைல் கேம்களில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் அதிகமுறை டவுன்லோட் செய்யப்பட்ட கேம், கிளாஸ் ஆஃப் கிளான்ஸ்தான். ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பத்து நபர்களில் குறைந்தபட்சம் ஐந்து பேர் கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பள்ளி செல்லும் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் இந்த கேமிற்கு ரசிகர்களாக உள்ளனர் என்கிறது அந்த ஆய்வு முடிவுகள்.

அப்படி இந்த கேமில் என்னதான் உள்ளது?

பின்லாந்து நாட்டில் செயல்பட்டு வரும் கேம் வடிவமைப்பு நிறுவனமான சூப்பர் செல் நிறுவனம் கடந்த 2012 வாக்கில் கிளாஸ் ஆஃப் கிளான்ஸ் கேமை அறிமுகம் செய்தது. துவக்கத்தில் ஆப்பிள் ஐ போனில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த கேம் செல்போன் பயனாளர்களுக்கு மத்தியில் பிரபலமானதும், சூப்பர் செல் தலைமை செயல் அதிகாரி இல்லூக்கா பாணனன் இதை மேலும் பிரபலப்படுத்த 2013 இல் ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் கொண்ட போன்களிலும் பயன்படுத்தும் விதமாக மாற்றியமைத்தார். ஆன்லைனில் மட்டுமே இந்த கேமை விளையாட முடியும். ஆனாலும் இதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் விளையாட்டை நமது செல்போனில் இன்ஸ்டால் செய்தவுடன் அந்தகேமுக்குள் கிராமம் கிராமமாக பயணம் செய்து எதிரிகளை அடையாளம் கண்டு மோத வேண்டும். நம்மை சுற்றியுள்ள கிராமங்களில் வெவ்வேறு வகையான எதிரிகள் இருப்பர். அவர்கள் நம்மை தாக்க வரும்போது நம்மைத் தற்காத்துக் கொண்டு திருப்பித் தாக்க வேண்டும். இந்த விளையாட்டை தனியாகவும் குழுவாகவும் விளையாடலாம். ஒவ்வொரு கட்டமாக விளையாடி வெற்றி பெற்று அனைத்து ஸ்டேஜ்களைக் கடக்க வேண்டும்.

குழுவைக் கட்டமைப்பது, வழி நடத்திச் செல்வது என பல்வேறு திறன்களை மனோ ரீதியாக விளையாடுபவருக்குக் கொடுத்து நம்பிக்கையை உருவாக்கும் விளையாட்டாக இது உள்ளது என்கிறார்கள் இதன் ஆதரவாளர்கள். இந்த விளையாட்டை பல ஆண்டுகளாக விளையாடி வந்த கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த விளையாட்டின் மூலம் அவர் கற்ற பாடங்களை பின்பற்றி வெற்றிகரமாகத் தனது நிறுவனத்தை நடத்த முடிவதாக தெரிவித்துள்ளார். கடினமாக உழைக்கவும் சரியாக திட்டமிட்டு செயல்படவும் கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் விளையாட்டு தனக்கு உதவியது என்கிறார் அவர்.

அதே நேரம் விளையாட்டு வினையாகும் என்பதும் ஒரு வழக்கமான சொல்லாகும். ஆனால் இந்த சீ.ஓ.சி., விளையாட்டே வினையை உருவாக்கத்தான் என்கிறார்கள் எதிர்ப்பவர்கள். பொதுவாக மொபைல் போன்களில் அதிக நேரம் விளையாடிக் கொண்டே இருப்பதால் கண்ணின் பார்வை திறன் பாதிக்கப்பட்டுப் பார்வை குறைய வாய்ப்புள்ளது. அதிக நேரம் தொடர்ந்து செல்போன் ஸ்கிரீனை பார்த்துக் கொண்டே இருப்பதால் கண் சிவத்தல், கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல் போன்ற இன்னல்கள் வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்ந்து விளையாடுபவர்களுக்கு விளையாடும்போது கழுத்து கீழ் நோக்கியே இருப்பதால் கழுத்து, தோள்பட்டை, கை விரல்கள் மற்றும் முழங்கைகளில் வலி வர வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. இரண்டு கைகளையும் ஒரே சமமாக மடக்கி வைத்திருப்பதால் முழங்கை வலி வர வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. மேலும் மனதளவிலும் பாதிப்புகளை உருவாக்குகிறது இந்த கேம். குறிப்பாக எதிர் குரூப்பில் யாராவது நம்மை அட்டாக் செய்த பிறகு, அதிக மன அழுத்தத்தையும் அதிக கோபத்தையும் உண்டு பண்ணுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இளைஞர்கள் மட்டுமல்ல 6 முதல் 10 வயதுவரை உள்ள சிறுவர்களும் கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் விளையாட்டை அதிகளவில் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. காலையில் எழுந்து விளையாடத் தொடங்கி, இதில் ஒரு அட்டாக் பண்ணினால் மட்டுமே பள்ளிகளுக்கு செல்வேன் என்று அடம் செய்யும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

முழுவதும் ஒன்லைனில் இந்த கேம் செயல்படுவதால் அவுட்டாகிய பின்னரும் லைஃப் என்ற பெயரில் அலர்ட் மூலம் அலாரத்தைக் கொடுத்து விளையாடத் தூண்டுகிறது. இதனால் பெரும்பாலும் காலையில் கைப்பேசியுடன் இந்த கேமில் கைதியாகும் இளைஞர்கள் இரவில்தான் வேதனையுடன் விடுதலை ஆகிறார்கள். அதுவும் தூக்கம் துன்புறுத்துவதால் மட்டுமே. எனவே அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதான் என்பதை ஞாபகம் வைத்து குறைவாக விளையாடி மகிழ்வாக இருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை.

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு இணைய வசதியுடன் கூடிய டேப்லட், ஐபோன் போன்றவற்றைச் சாதாரணமாகக் பெற்றோர்கள் கொடுக்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் அவற்றில் எதையெல்லாம் பார்க்கிறார்கள் என்று என்றைக்காவது பார்த்ததுண்டா? குழந்தைகளுக்கு நிறையவே சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அந்த சுதந்திரத்தால் அவர்கள் கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் ஆட்டத்திற்கு அடிமையாகாமல் இருப்பது பெற்றோர்கள் கையில்தான் இருக்கிறது.

 தகவல்கள்: ஷண்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-02#page-6

Link to comment
Share on other sites

நம் பிள்ளைகளை ‘ப்ளூ வேல்’ விபரீதத்திலிருந்து பாதுகாப்பது எப்படி?

 

 
Untitled-1jpg

து, 80-களின் தொடக்கத்தில் ஏதோ ஒரு வருடம். காலையில் பள்ளிக்குச் சென்ற எங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தி - இன்று முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் கடற்கரையில் பணி. காரணம் - நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் கரைக்கு வந்து இறந்து கிடக்கின்றன. கொளுத்தும் வெயிலில் அவற்றின் சடலங்கள் கெட்டுப்போய் துர்நாற்றம் அடிப்பதைத் தவிர்க்க, அவற்றை மீண்டும் கடலுக்குள் தள்ளிவிட வேண்டும்; அல்லது புதைக்க வேண்டும். கடற்கரை சென்றவுடன் பார்த்த காட்சியின் அதிர்ச்சி ஆண்டுகள் கடந்தும் அப்படியே மனதில் இருக்கிறது. கண்ணுக்கெட்டிய தொலைவில் வரிசையாகக் கரையில் ஒதுங்கிய திமிங்கிலங்கள். ஊரின் பெரியவர்கள் கூகுளாகவும் விக்கிபீடியாவாகவும் இருந்த காலம் என்பதால் இது பற்றிய பல கதைகளை கேட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட அனைத்துமே அறிவியல் ஆதாரமற்றவை.

ஆண்டுகள் கழித்து இதைப் பற்றி தெரிந்துகொள்ள தலைப்பட்டேன். கருவிகள் உருவாக்கும் சமிக்ஞைகள், பருவநிலை மாற்றம், கடலில் கலக்கும் வேதிப் பொருட்கள் என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கூடவே, திமிங்கிலங்கள் குழுவாகத் தற்கொலை செய்துகொள்வதால்தான் இப்படி ஒரே நேரத்தில் கரையொதுங்குகின்றன என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தக் கூற்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆக, திமிங்கிலம் கம்பீரமான கடல்வாழ் பாலூட்டியாக மதிக்கப்பட்டாலும், மேற்படி நிகழ்வுகள் மூலம் சற்றே மர்மத்தையும் தன்னில் கொண்டிருக்கிறது.

 

தற்கொலைப் பாலம்

அது, 90-களின் பிற்பகுதி. சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வந்த புதிது. இங்கிருக்கும் கோல்டன் கேட் பாலம் பிரசித்தி பெற்றது. வருடத்தின் எந்த நாளில் சென்றாலும் மக்கள் அதில் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம். காரணம், மலைகளுக்குக் கீழாக சான் பிரான்சிஸ்கோ வளைகுடாவை ஆழ்ந்து ரசிக்கும் அனுபவம் பாலத்தில் நடந்தால் மட்டுமே கிடைக்கும். ஆனால், அந்த பாலம் தனக்கேயான கறுப்பு மர்மத்தை சுமக்கிறது. பாலத்தின் மேலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை உலகிலேயே இந்த கோல்டன் கேட் பாலத்துக்கு இரண்டாவது இடம். (முதலிடம் சீனாவில் இருக்கும் நான்சிங் ஆற்றுப் பாலத்துக்கு). பாலத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் மனநிலையை ஆராயும் ஆவணப் படமான ‘த பிரிட்ஜ்’, கோல்டன் கேட் பாலத்தைத் தொடர்ந்து ஒரு வருடம் படம்பிடித்த பின்னர் உருவாக்கப்பட்டது. பாலத்திலிருந்து 23 பேர் வளைகுடாவுக்குள் குதிப்பதை இந்தப் படத்தின் கேமரா பதிவுசெய்தது.

கோல்டன் கேட் பாலத்திலிருந்து குதித்துத் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 2,000 பேரில் வெகுசிலரே உயிர்தப்பியிருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்துப் பேசி ‘த நியூ யார்க்கர்’ இதழில் ‘குதிப்பவர்கள்’ என்ற தலைப்பில் டாட் ஃபிரண்டு எழுதிய கட்டுரை மிகவும் முக்கியமானது. (அந்தக் கட்டுரையை படிக்க: https://goo.gl/dHehLx). குதித்த கணத்தில் தாங்கள் செய்வது எவ்வளவு தவறானது என்பதை உணர்ந்ததாக, பிழைத்த அனைவருமே சொன்னதாகப் பதிவு செய்கிறது இந்தக் கட்டுரை. கோல்டன் கேட் பாலத்தில் தற்கொலை தவிர்ப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பலகைகளுடன் ஆங்காங்கே தொலைபேசிகளும் இருக்கின்றன. பொத்தானை அழுத்திப் பேசினால், உங்களுடன் ஆறுதலாகப் பேசத் தகுதியான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.

 

விபரீத விளையாட்டு

திமிங்கிலங்களின் தற்கொலையிலிருந்து மனிதர்களின் தற்கொலைக்கு இந்தக் கட்டுரை தாவியதை சமீப நாட்களில் செய்திகளில் பிரதான இடம் பிடித்துக்கொண்டிருக்கும் ‘ப்ளூ வேல்’ விளையாட்டுடன் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

‘ப்ளூ வேல்’-ஐ விளையாட்டு என்று சொல்வதைவிட விபரீதம் என்றுதான் சொல்ல வேண்டும். கணினிகளிலும் கைபேசிகளிலும் பரவலாகப் பதிவிறக்கம் செய்யும் விளையாட்டுகள்போல் எந்தப் புதுமையும் கொண்டதல்ல ‘ப்ளூ வேல்’. கிட்டத்தட்ட நாமெல்லாம் மறந்தே போன கூகுளின் ‘ஆர்குட்’ போன்ற ஒரு சமூக வலைதளம்தான் இது. பதிவு செய்தவர்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக 50 பணிகள் அளிக்கப்படும்.

கொடூரமான திகில் படம் ஒன்றைப் பார்ப்பது, வீட்டுக்கூரைமீது ஒற்றைக் காலில் நின்றபடி புகைப்படம் எடுப்பது என விபரீதமான பணிகளில் தொடங்கி, கையை ‘கத்தியால் கீறிக்கொண்டு திமிங்கில உருவத்தை வரைந்துகொள்ள வேண்டும்’ என்பதுவரை விபரீதத்தின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 50-வது பணியாக ‘உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும்’ என்பதில் முடிகிறது. விளையாட்டைத் தொடங்கியபின் இதன் பயங்கரத்தையோ அபத்தத்தையோ புரிந்துகொண்ட பலரும் சில பணிகளைச் செய்த பின்னர் விலகிவிட, சிலர் தொடர்ந்து தங்களுக்கு இடப்பட்ட 50-வது பணியையும் செய்து உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் தொடங்கப்பட்ட இந்த ‘ப்ளூவேல்’ வலைதளம் பல நாடுகளைச் சேர்ந்தவர்களையும் வலைவீசிப் பிடித்தபடி இருக்கிறது. ‘ப்ளூ வேல்’ விளையாட்டின் இறுதிப் பணிவரை நிறைவேற்றி ரஷ்யாவில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வருடத்தில் இந்தியாவில் நுழைந்திருக்கும் ‘ப்ளூ வேல்’ சமீபத்தில் கேரளத்திலும் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. இந்த விளையாட்டின் கோர நாக்குக்கு பலியானவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் பதின்ம வயதைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தடைசெய்ய முடியுமா?

இளைஞர்களை இந்த விபரீதப் பாதையில் இட்டுச்செல்லும் உந்துசக்தி என்ன என்பது பரவலாக விவாதிக்கப்படுகிறது. இப்படி விபரீதங்களைச் சமூகத்துக்குள் கொண்டுவரும் தொழில்நுட்பம் காரணமா? அரசு இதையெல்லாம் தடை செய்ய வேண்டாமா ? இந்த மனநிலையை எப்படித் தெரிந்துகொள்வது? எப்படிக் குணப்படுத்துவது?

முதலில், தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எல்லா முன்னேற்றங்களையும் போலவே நன்மையும் தீமையும் ஒருசேரக் கொண்டதே. நவீனத் தகவல் தொழில்நுட்பம் நமது வாழ்க்கை முறையைக் கடந்த பத்தாண்டுகளுக்குள் முழுவதும் புரட்டிப் போட்டுவிட்டது. அதை நமக்குப் பயனுள்ள வகையில் மாற்றிக்கொள்ள வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது. இணையம் என்பது அடிப்படையில் எவரது கட்டுப்பாட்டிலும் இல்லாத வினோத மிருகம் என்பதால் இதற்கு அரசு கட்டுப்பாடு விதிப்பது மிகவும் கடினம். அது மட்டுமல்ல, அத்தகைய கட்டுப்பாடுகளை மீறி இணைய சேவைகளைப் பயன்படுத்துவென்பது இன்று எளிதான ஒன்றாகிட்டது. இதுபோன்ற வலைதளங்கள் அரசு ஆணைப்படி தடை செய்யப்பட்டு, இந்த வலைதளத்துக்குள் நீங்கள் நுழைவதை இணைய சேவை கொடுக்கும் நிறுவனங்கள் தடை செய்தால், அந்தச் செய்தி மூலமாகவே அவற்றின் பிரபலம் அதிகரிப்பது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் ‘பதிலீட்டு மென்பொருட்கள்’ (proxy softwares) மூலம் இந்தத் தடையை எளிதாகக் தாண்டி, தளத்துக்குச் சென்றுவிடலாம். வணிக நோக்குடன் நடத்தப்படும் விபரீதத் தளங்களுக்குப் பணம் வந்துசேரும் வழிகளை அடைப்பதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த வாய்ப்புகள் உண்டு. உதாரணத்துக்கு, வலைதளம் மூலம் ‘குட்கா’ விற்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தத் தளத்துக்கான கடன் அட்டைப் பரிவர்த்தனைகளை மேலாண்மை செய்யும் நிறுவனத்தின் கணக்கை மூடுவதன் மூலம் வலைதளத்தைச் செயலிழக்க வைக்கலாம். ஆனால், பணப் பரிவர்த்தனைகள் இன்றி, விபரீதத்துக்கென்றே நடத்தப்படும் ‘ப்ளூ வேல்’ போன்றவற்றைத் தடைசெய்வது அவ்வளவு எளிதல்ல.

 

சரி, அப்படியானால் என்னதான் செய்ய வேண்டும் ?

1.இதைப் படிக்கும் நீங்கள் பெற்றோராக இருந்து, உங்களுக்குப் பதின்ம வயதில் குழந்தைகள் இருந்தால், அவர்களின் கைபேசிப் பயன்பாட்டை முடிந்தவரை கண்காணியுங்கள். ‘டீன் சேஃப்’ (Teen Safe) போன்ற சேவைகளை முடிந்தால் பயன்படுத்துங்கள்.

அவர்களின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் ஏற்படுகிறதா என்பதைக் கவனியுங்கள். அவர்களுக்கு திடீர் உற்சாகமோ திடீர் சோகமோ தோன்றினால் அதை அவசியம் கவனித்தாக வேண்டும். குறிப்பாக, நண்பர்களை விட்டுத் திடீரென தனித்திருக்கும் இயல்பு அவர்களுக்கு உருவானால், என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அலசிப்பார்த்தாக வேண்டும்.

‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இணைய வேண்டும் என்று அவர்களின் நண்பர்களோ சக வகுப்பு மாணவர்களோ அழுத்தம் கொடுப்பதற்கு முன்னே, அதன் கோரத்தைப் பற்றிப் பேசிவிடுங்கள். அதன் தேவை வரும் முன்னரே அதைப் புறக்கணிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திவிடுங்கள்.

2. இதைப் படிக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, சமூகத்தில் வேறு வகைகளில் அங்கம் வகிப்பவராகவோ இருந்தால் அவர்களுக்கு இது: ‘குழந்தை ஒன்றை வளர்க்க ஒரு கிராமமே தேவை’ என்று ஆங்கிலத்தில் பழமொழி ஒன்று உண்டு. குடும்பத்தைத் தாண்டி, சமூகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது அந்தப் பழமொழி. உங்களுக்குப் பதின்ம வயது குழந்தை இல்லை என்றாலும், வளர்ச்சிகள் அவ்வப்போது கொண்டுவரும் தீமைகளைக் களையும் பொறுப்பு உங்களுக்கும் இருக்கிறது என்பதை உணருங்கள். உங்கள் பள்ளியில்/ கல்லூரியில்/ ஊரில் இளைஞர் எவராவது மன அழுத்தத்துடன் தனித்திருந்து, எப்போதும் கைபேசியையே பார்த்தபடி இருந்தால், அவர்களின் பெற்றோருக்குத் தெரிவிக்க முயலுங்கள்.

3. நீங்கள் பதின்ம வயது இளைஞராக இருந்தால், பள்ளி/ கல்லூரி படிப்புக்கும் மேலே உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றில் ரசனையை உருவாக்கிக்கொள்ளுங்கள். அது இசை, பூச்செடி வளர்ப்பு, பிரெஞ்சு மொழியில் அடிப்படை உரையாடல் என ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்; அதில் மூழ்கி முத்தெடுக்க முனையுங்கள்.

‘ப்ளூ வேல்’ விளையாட்டை உருவாக்கிய பிலிப் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் சொன்னது இது, “சமூகத்தின் அழுக்கைக் களைந்தெடுக்கவே இதை நான் உருவாக்கினேன். இந்த விளையாட்டின் மூலம் தங்கள் உயிரை யாரேனும் மாய்த்துக்கொண்டால் அவர்கள் இந்த சமூகத்துக்குத் தேவையற்றவர்கள் என்றுதானே அர்த்தம்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நாம் அனைவரும் சமூகத்திலிருந்து களைந்தெறியப்பட வேண்டிய அழுக்கு அல்ல... நம் சிந்தனையும் செயலாற்றலும் நம் சமூகத்தைத் தொடர்ந்து செப்பனிடப் பயன்படும் ஆயுதங்கள் என்ற உண்மையை எல்லோரும் நினைவில் கொண்டால் எந்தத் திமிங்கிலமும் நம்மை அணுக முடியாது.

-அண்டன் பிரகாஷ், எழுத்தாளர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், தொடர்புக்கு: anton.prakash@gmail.com

http://tamil.thehindu.com/opinion/columns/article19614536.ece?homepage=true

Link to comment
Share on other sites

“ப்ளூ வேல்“ இற்கு மாற்றீடாக “பிங்க் வேல்“ உருவாக்கம்

 
“ப்ளூ வேல்“ இற்கு மாற்றீடாக “பிங்க் வேல்“ உருவாக்கம்
 

‘ப்ளூவேல்’ இன்று உல­கம் முழு­வ­தும் அறி­யப்­பட்ட பயங்­கர விளை­யாட்­டாக உள்­ளது. ரஷ்­யா­வின் உள­வி­யல் துறை மாண­வர் பிலிப் புடீக் என்­ப­வர் உரு­வாக்­கிய விளை­யாட்­டு­தான் ப்ளூ வேல்.

தினம் ஒரு சவால் என்று மெது­வாக ஆரம்­பித்து 50-ஆவது நாளில் தற்­கொலை செய்ய தூண்­டும் அல்­லது மிரட்­டும் விளை­யாட்­டுக்­குப் பெயர்­தான் ப்ளூ வேல். ரஷ்­யா­வில் மட்­டும் 130 பேர் இந்த விளை­யாட்­டின் முடி­வில் தற்­கொலை செய்து கொண்­ட­னர் எனத் தெரி­கி­றது.

அலைபேசியில் இந்த விளை­யாட்டை பதி­வி­றக்­கம் செய்­தால், உங்­கள் தக­வல்­கள் அனைத்­தும் ‘ஹேக்­கர்’­கள் மூலம் தானாக அவர்­கள் கைக­ளுக்குச் சென்று விடும்.

நீங்­கள் வீட்­டுக்குத் தெரி­யா­மல் எந்­தத் தவறு செய்­தி­ருந்­தா­லும் அதை வைத்­து­த்தான் மிரட்­டு­கின்­ற­னர். வீட்­டுக்­குத் தெரிந்­தால் பிரச்­சினை என்று நினைத்து, அவர்­கள் சொல்­வது போல் நடந்து கொள்ள நேரி­ட­லாம். இது­தான் சாவு வரை கொண்டு செல்­கி­றது.

இவ்­வ­ளவு அதிர்ச்­சி­யான விஷ­யங்­கள் நடந்து கொண்­டி­ருந்­தா­லும், ஆபத்­தில்­லாத, அன்பை வலி­யு­றுத்­தும் வகை­யில் ‘ப்ளூ வேல்’ விளை­யாட்­டுக்கு மாற்­றாக சத்­த­மில்­லா­மல் வந்­துள்­ளது ‘பிங்க் வேல்’.

பிரே­சில் நாட்­டைச் சேர்ந்த பனா­னா­தேவ் என்­ப­வர் இந்த ‘பிங்க் வேல்’ விளை­யாட்டை வடி­வ­மைத்­துள்­ளார். ‘பலீயா ரோசா’ என்று போர்த்துக்கேய மொழி­யில் இந்த விளை­யாட்டு அழைக்­கப்­ப­டு­கி­றது.

இந்த விளை­யாட்­டில் உங்­க­ளுக்கு உத்­த­ர­வி­டும் நபர் யாரும் கிடை­யாது. இணை­ய­த­ளத்­தில் யார் வேண்­டு­மா­னா­லும் விளை­யா­ட­லாம். ப்ளூ வேல் போலவே தின­மும் ஒரு சவால் கொடுக்­கப்­ப­டும். 50-ஆவது நாளில் ஒரு உயி­ரைக் காப்­பாற்ற அறி­வு­றுத்­தப்­ப­டும்.

‘ப்ளூ வேல்’ விளை­யாட்­டில் ஒவ்­வொரு நாளும் சவால்­களை செய்த பின் அதற்கு ஆதா­ரங்­களை அனுப்ப வேண்­டும். ‘பிங்க் வேல்’ விளை­யாட்­டில் அப்­படி இல்லை.

அதற்­குப் பதில், மார்க்­கர் பேனா மூலம் உங்­க­ளைப் பற்றி என்ன நினைக்­கி­றீர்­கள் என்­பதை நீங்­களே கையில் எழுத வேண்­டும், தாத்­தா­வி­டம் அலைபேசியில் பேச வேண்­டும், கண்­ணாடி முன் நின்று கொண்டு வாழ்க்­கை­யில் பெரிய ஆளாக வரு­வேன் என்று உற்­சா­க­மாக பேசு­வது போன்ற சவால்­கள்­தான் வழங்­கப்­ப­டு­கின்­றன.

பேஸ்­புக், ட்விட்­ட­ரில் ‘பிங்க் வேல்’ சவால் பக்­கங்­களை 3 லட்­சத்து 40 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் பின்­பற்­று­ கின்­ற­னர். ஏப்­ரல் மாதம்­தான் இந்த விளை­யாட்டு தொடங்­கப்­பட்­டுள்­ளது. அதற்­குள் இதற்கு நிறைய வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

இதவிளை­யாட்­டில் பங்­கேற்­ப­வர்­கள் மகிழ்ச்­சி­யாக இருக்க வேண்­டும். மற்­ற­வர்­க­ளை­யும் மகிழ்ச்­சிப்­ப­டுத்த வேண்­டும். நல்ல விஷ­யங்­கள், அன்பு ஆகி­யவை இந்த விளை­யாட்­டில் வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றன.

http://newuthayan.com/story/25871.html

Link to comment
Share on other sites

இணைய கொலைக்காரன் காவு கேட்கும் நீலத்திமிங்கிலம்

 

இரவில் தனி­யாகப் பேய்ப் படம் பார்ப்­பது, கையில் பிளேடால் வரை­வது, கண்ணை மூடிக்­கொண்டு மிக வேக­மாக சைக்­கிளில் பய­ணிப்­பது என்­ற­வாறு அமைந்­தி­ருக்கும். இறு­தி­யாக நீங்கள் வெற்றி பெறு­வ­தற்­கான கடைசி சவா­லுக்­காக காத்­தி­ருக்­கும்­போது, இறுதி சவால் உங்­களை தற்­கொலை செய்­து­கொள்ளச் சொல்லும்.நீங்கள் தற்­கொலை செய்­து ­கொள்ள முடி­யாது என மறுத்தால், ஆட்­டத்தில் இருந்து விலக முடி­யாது என்­ப­துதான் இதில் இருக்கும் பேரா­பத்து. 

2015 ஆம் ஆண்டு முதல் தற்­கொலை நிகழ்ந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இதனை தொடர்ந்து இன்று வரை உலகில் ஆயி­ரக்­க­ணக்­கான சிறு­வர்கள் மற்றும் இளை­ய­வர்­களின் உயிரை தற்­கொலை எனும் வடிவில் காவு கொண்­டுள்­ளது இந்த புளூவேல். இந்த பட்­டி­யலில் எமது அயல் நாடான  இந்­தி­யாவும் இணைந்­துள்­ளமை எம்மை கவ­லை­யும் பீதி­யும் அடை­யச்­செய்­துள்­ளது. 

 

விளை­யாட்டாக கூட விளை­யாடி பார்க்கக் கூடாத ஒரு விளை­யாட்டு ரஷ்­யாவில் பிறந்து அயல் நாடான இந்­தியா வரை பல உயிர்­களை தற்­கொலை எனும் போர்­வையில் காவு­கொண்­டுள்­ளது புளூவேல்.

பொது­வாக கணினி விளை­யாட்­டுக்கள் சிறு­வர்­களை முழு­மை­யாக தம் வசம் ஈர்த்து வசி­யப்­ப­டுத்தி விடு­கின்­றன. இதனால் சிறு­வர்கள் கணினி விளை­யாட்­டுக்கு அடி­மை­க­ளாகி கல்விச் செயற்­பாட்டில் இருந்து திசை மாறு­கின்­றனர். அவ்­வாறு இன்று உலகை அச்­சத்­திற்கு உள்­ளாக்கி உள்ள மற்­று­மொரு விளை­யாட்டு புளூவேல்.

நீலத் திமிங்­கிலம் என தமிழில் அர்த்­தப்­படும் இந்த புளூவேல் கேம், இன்று உலகில் பர­வ­லாக பேசப்­படும், பல­ரது சாபத்­திற்குள்­ளானதுமான ஒரு விளை­யாட்­டாக மாறி­யுள்­ளது. இந்த சாபத்­திற்கு காரணம் இதை விளை­யா­டு­பவர்­க­ளுக்கு போட்டி முடிவில் கிடைக்கும் பரி­சுதான்.

பரிசு என்­றதும் அது பணமோ பொருளோ அல்ல உயிர்...! பொது­வாக போட்டி ஒன்றில் வெற்றி பெறு­ப­வ­ருக்­குதான் பரிசு கிடைக்கும். ஆனால் இது விதி­வி­லக்­கா­னது. இந்த போட்­டியில் போட்­டி­யாளர் இறு­தியில் தன் உயிரை போட்டி ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு பரி­ச­ளிக்க வேண்டும். இதுதான் போட்­டியின் விதி.

பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முன்னாள் உள­வியல் மாண­வ­ரான ரஷ்யாவைச் சேர்ந்த பிலிப் புடகின் என்­பவர் இந்த விளை­யாட்டைக் கண்­டு­பி­டித்­துள்ளார். சமூ­கத்தில் எந்த மதிப்பும் இல்­லாமல் இருப்­ப­வர்­களை தற்­கொலை செய்­ய­வைத்து அதன் மூலம் சமூ­கத்தை "சுத்தம்" செய்­வ­தாக தன் தரப்பு நியாய வாதத்தை முன்­வைத்து பிலிப் இந்த விளை­யாட்டை அறி­முகம் செய்­துள்ளார்.

இந்த விளை­யாட்டால் 2015 ஆம் ஆண்டு முதல் தற்­கொலை நிகழ்ந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இதனை தொடர்ந்து இன்று வரை உலகில் ஆயி­ரக்­க­ணக்­கான சிறு­வர்கள் மற்றும் இளை­ய­வர்­களின் உயிரை தற்­கொலை எனும் வடிவில் காவு கொண்­டுள்­ளது இந்த புளூவேல். இந்த பட்­டி­யலில் எமது அயல் நாடான இந்­தி­யாவும் இணைந்­துள்­ளமை எம்மை கவ­லை­யும் பீதி­யும் அடை­யச்­செய்­துள்­ளது.

போட்­டி­யிட்டால் நாம் ஏன் தற்­கொலை செய்­துகொள்ள வேண்டும் என்ற கேள்வி உங்­க­ளுக்குள் எழு­கின்­ற­தல்­லவா? அது தான் புளூவேல் போட்­டியில் உள்ள மாயை.

50 சவால்­களை கொண்­டுள்ள இப் போட்­டியில் சில தம்மைத்தாமே துன்­பு­றுத்­திக்­கொள்ளும் வகை சவால்களையும் உள்­ள­டக்­கி­யது. இறுதி சவால் தற்­கொலை. இவ்­வாறு அபா­ய­க­ர­மான சவால்­களை கொண்ட புளூவேல் என்­பது இணை­யத்தில் குழு­வாக ஆடப்­படும் ஒரு விளை­யாட்டு. இந்த விளை­யாட்டை நாமாக தேடிப் போய் விளை­யாட வேண்­டிய அவ­சியம் இல்லை. உங்கள் உயிரை பறிக்க இது­வா­கவே இணைய வழியில் வந்து உங்கள் வாசல் கதவை தட்டும்.

அதன் படி இந்த விளை­யாட்டில் உங்­களை இணைத்­துக்­கொள்­வ­தற்­காக முதலில் மின்­னஞ்சல் மூலம் உங்­க­ளுக்கு ஓர் அழைப்பு வரும். அந்த மின்னஞ்சல் அழைப்பில் ‘புளூவேல் சேலஞ்சை எதிர்­கொள்ளத் தயாரா?’ என உங்­களை அழைக்கும். ‘ஆம்’ என்று நீங்கள் பதில் அனுப்­பினால், விளை­யாட்டின் விதி­மு­றை­களை உங்­க­ளுக்கு அனுப்­பு­வார்கள். முதலில் பார்ப்­ப­தற்கு மிக எளி­தான விதி­மு­றை­யா­கவே தோன்றும். இவை எம்மை இந்த விளை­யாட்­டுக்கு உள்­ளீர்க்க விரிக்­கப்­படும் மாய­வலை. அறி­யாமலேனும் இம் மாய வலையில் நீங்கள் சிக்­கி­விட்­டீர்­க­ளாயின் இந்த போட்­டியில் உள்ள 50 சாவால்­களை எதிர்­கொண்டு நீங்கள் செய்து காட்ட வேண்டும்.

சவாலை நீங்கள் செய்து முடிப்­பதை காணொளி­களாகவோ அல்­லது புகைப்­ப­ட­மா­கவோ எடுத்து அந்தக் குழு­வுக்கு அனுப்ப வேண்டும்.

 இறு­தி­யான சவாலை நீங்கள் எதிர் கொண்டு செய்­து­விட்டால் நீங்கள் வெற்­றி­யாளர். ஆனால் போட்­டியின் இறுதி 50 ஆவது சவாலை செய்த பின்னர் போட்­டியின் வெற்­றி­யா­ள­ராக பெரு­மிதம் அடைய நீங்கள் இவ்­வுலகில் இருக்க மாட்­டீர்கள். காரணம் அதி­ப­யங்­க­ர­மான அந்த இறுதி சவால் தற்­கொலை செய்­து ­கொள்ள வேண்டும் என்­ப­துதான். இறுதி சவாலில் நீங்கள் ஓடவும் முடி­யா­து, ­ஒ­ளி­யவும் முடி­யாது.

முதல் கட்ட சவால்கள் மிக எளி­தா­கவே இருக்கும். ஒரு நீலத் திமிங்­கி­லத்தை வரைய வேண்டும், தனி­யாக இரவு பன்­னி­ரெண்டு மணிக்கு மயா­னத்­திற்கு செல்ல வேண்டும், இனிப்­பு­களை அள்ளி வாய் நிறைய சாப்­பிட வேண்டும். இவற்றில் ஒவ்­வொன்­றையும் நீங்கள் செய்து முடிக்க முடிக்க, உங்­க­ளுக்கு பாராட்­டுகள் கிடைக்கும். மெல்ல படி­நி­லைகள் உயர உயர சவால்கள் கடி­ன­மா­கிக்­கொண்டே போகும். அடுத்து வரும் சவால்கள் எம்மை நாமே வதைத்­துக்­கொள்­வது.

இதன்படி இரவில் தனி­யாகப் பேய்ப் படம் பார்ப்­பது, கையில் பிளேடால் வரை­வது, கண்ணை மூடிக்­கொண்டு மிக வேக­மாக சைக்­கிளில் பய­ணிப்­பது என்­ற­வாறு அமைந்­தி­ருக்கும். இறு­தி­யாக நீங்கள் வெற்றி பெறு­வ­தற்­கான கடைசி சவா­லுக்­காக காத்­தி­ருக்­கும்­போது, இறுதி சவால் உங்­களை தற்­கொலை செய்­து­கொள்ளச் சொல்லும்.

நீங்கள் தற்­கொலை செய்­து ­கொள்ள முடி­யாது என மறுத்தால், ஆட்­டத்தில் இருந்து விலக முடி­யாது என்­ப­துதான் இதில் இருக்கும் பேரா­பத்து.

இப்­போ­துதான் நாம் அவர்­களின் வலையில் முழு­மை­யாக சிக்­கிக்­கொண்­டுள்­ளதை உணர்வோம். காரணம் ஆரம்ப நாளில் இருந்து நடந்த மின்­னஞ்சல் தொடர்­பா­டல்­களின் ஊடாக உங்­க­ளுக்கே தெரி­யாமல் உங்கள் கணி­னி­யிலோ அல்லது கைய­டக்க தொலை­பே­சி­யிலோ ‘ட்ரோஜன் வைரஸ்’ எனப்­படும் வைரஸ் அனுப்­பப்­பட்டு, உங்கள் இர­க­சிய தக­வல்கள் அக்­கு­ழுவின் கையில் சிக்கி இருக்கும்.

இனி நீங்கள் சவாலை ஏற்­க­வில்லை என்றால், உங்கள் இர­க­சிய தக­வல்கள் கசி­ய­வி­டப்­படும் என மிரட்­டு­வார்கள். பெரும்­பா­லான சிறு­வர்கள், இளம் வய­தி­னரை அந்தக் கும்பல் குறி­வைக்­கி­றது. சிறு­வர்கள் விப­ரீதம் தெரி­யாமல் பயந்­துபோய் தற்­கொலை செய்­து­கொள்­கி­றார்கள்.

ரஷ்­யாவை மைய­மா­கக்­கொண்டு ஆரம்­பித்த இந்த விளை­யாட்டு, இணையம் மூலம் உலகம் முழு­வ­து­மாக சிறு­வர்கள் உட்­பட சுமார் 3000 க்கும் அதி­க­மா­ன­வர்­களை தற்­கொ­லைக்குத் தூண்­டி­யுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த சில மாதங்­க­ளாக உலகம் முழு­வதும் இந்த விளை­யாட்டு பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் ரஷ்ய அர­சாங்கம் நேர­டி­யாகத் தலை­யிட்டு விசா­ரணை மேற்­கொண்­டது. உலகம் முழு­வதும் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு இந்த விளை­யாட்டை பற்­றிய விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது.

விளை­யாட்டின் முக்­கிய சூத்தி­ர­தா­ரி­யான இலியா சிட்ரோவ் எனும் 26 வய­து­டைய இளைஞர் கைது செய்­யப்­பட்டார்.

இதனால் இந்த விளை­யாட்டு குறித்து பெற்­றோரும் ஆசி­ரி­யர்­களும் நிம்­மதி பெரு மூச்­சு­விட்­டனர். இருந்த போதிலும் மும்­பையைச் சேர்ந்த சிறுவன் மன்­பிரீத் சிங்கின் தற்­கொலை, அவன் நண்­பர்­களின் வாக்­கு­மூலம் போன்­றவை மூலம் புளூவேல் விளை­யாட்டு தொடர்­பான பீதி மீண்டும் உலகம் முழு­வதும் பரவ ஆரம்­பித்­துள்­ளது.

புளூவேல் என்றால் நீல நிறத் திமிங்­கிலம் என்று அர்த்தம். அமெ­ரிக்­காவில் உள்ள ஒரு கடற்­க­ரையில் திமிங்­கி­லங்கள் திடீ­ரென தண்­ணீரை விட்டு வெளியே தாமாக வந்து இறந்­தன.

அதைப் பார்க்க திமிங்­கிலங்கள் தாமாகத் தற்­கொலை செய்­து­கொண்­டதைப் போலி­ருந்­தது. இதை அடிப்­ப­டை­யாக வைத்துத் தான் இந்த விப­ரீத விளை­யாட்­டுக்கு புளூவேல் சேலஞ்ச் எனப் பெய­ரிட்­டுள்­ளனர்.

தற்­கொ­லையைத் தூண்டும் குழுக்கள், தங்கள் உறுப்­பி­னர்­களை தற்­கொ­லைக்குத் தூண்டி, அவர்கள் தற்­கொலை செய்­து­கொள்­வதை நேர­லையில் ஒளி­ப­ரப்பி ரசிப்­ப­வர்கள் என இணை­யத்தில் ஆபத்தை விளை­விக்­கக்­கூ­டிய குழுக்கள் அதி­க­மாக உள்­ளன. ஒரு ஆய்­வின்­படி உலகம் முழு­வதும் தற்­கொ­லையைத் தூண்டும் இணை­ய­த்த­ளங்­களின் எண்­ணிக்கை அதி­க­மாகி இருப்­பதும், அதனால் சுமார் 51 சத­வீதம் சிறு­வர்­களின் மரணம் அதி­க­மாகி இருப்­ப­தையும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

தொழில்­நுட்ப வளர்ச்சி அதி­க­ரித்துச் செல்ல செல்ல சிறு­வர்கள் உட்­பட எம்­ம­வர்­க­ளுக்கு இணைய பாவ­னை­யா­னது இல­குவில் கிடைக்கும் ஒன்­றாக மாறி­விட்­டது.

ஒரு கால­கட்­டத்தில் நகர்­ப்பு­றங்­களில் செல்வம் படைத்­த­வர்­க­ளுக்கு மாத்­திரம் என வரை­ய­றைக்குள் இருந்த இணை­யப்­பா­வ­னை­யா­னது இன்று கிரா­மப்­பு­றங்­களில் வாழ்­ப­வர்­க­ளுக்கும் இல­குவில் கிடைக்கும் நிலைக்கு விருத்­தி­ய­டைந்­துள்­ளது.

இதுவரை­ கா­லமும் நாம் சிறு­வர்­களை இணைய பாவ­னையில் இருந்து கட்­டுப்­ப­டுத்தி வைத்­தது இணைய பாவ­னையால் தீய வழிக்கு சென்று விடு­வார்கள் என்ற அச்­சத்­தி­னா­லேயே. ஆனால் தற்­போது சிறு­வர்­களின் உயிரை காப்­பாற்ற அவர்­களை இணையம் பாவிப்­பதை கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய நிலைக்கு இன்­றைய தொழில்­நுட்ப வளர்ச்சி எம்மை ஆட்­டிப்­ப­டைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

எனவே பெற்றோர் தம் பிள்­ளைகள் இணை­யத்தை பயன்­ப­டுத்தும் போது அது குறித்து மிகவும் விழிப்­பு­ணர்­வுடன் இருக்க வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும்.

இன்­றைய சிறு­வர்கள் தொழில்­நுட்ப அறிவை மித­மாக கொண்­ட­வர்­க­ளாக உள்­ளனர். இதனால் அவர்­க­ளுக்கு இணைய பாவனை குறித்து நாம் புதி­தாக ஒன்றும் கற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. பல இணைய விளை­யாட்­டுக்கள் பிள்­ளை­களின் பொழு­துப்­போக்­கிற்கு துணை புரிந்­தாலும் உயிர் பறிக்கும் விளை­யாட்­டுக்கள் குறித்து அவர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை வழங்க வேண்­டி­யது பெற்­றோரின் முக்­கிய கட­மை­யாகும்.

அண்­மையில் மது­ரையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் புளூவேல் விளை­யாட்­டிற்கு அடிமை­யாகி தன் உயிரை மாய்த்­துக்­கொண்­டுள்ள நிலையில் இவ்­வி­ளை­யாட்டின் ஆதிக்கம் எமது நாட்­டையும் நெருங்கி விட்­டதை எமக்கு பறை­சாற்றுகின்­றது. எனவே நாம் இது குறித்து மேலும் அவ­தா­ன­மாக இருந்து எமது பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும்.

இணை­யத்தால் இன்று நமக்குப் பல நன்­மைகள் இருந்­தாலும் மெய் உலகைப் பிர­தி­ப­லிக்கும் மெய்­நிகர் உல­கான இணை­யத்­துக்கும் கறுப்பு பக்­கங்கள் உள்­ளன. துடிப்பு,வேகம், கோபம், ஆர்வம், சோகம், தனிமை, மனக் குழப்பம், ஏக்கம் நிறைந்த இளம் ரத்­தங்­களை விப­ரீ­தங்­களை நோக்கி இணை­யமும் அழைத்துச் சென்­று­வி­டு­கி­றது. பெற்­றோரின் கவ­னமும். ஆசி­ரி­யர்­களின் பொறுப்பும், நண்­பர்­களின் அக்­க­றை­யும்தான் இளைய சமு­தா­யத்தை காக்கும். இந்த கறுப்புத் தளங்­களை ஒழிக்க எமது சமூகம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

சிறு­வர்­க­ளுக்கு ஏற்­படும் மன அழுத்தம், மன உளைச்­சலைப் போக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை பெற்­றோரும் ஆசி­ரி­யர்­களும் இணைந்து முன்­னெ­டுப்­பதன் மூலம் சிறு­வர்கள் இவ்­வா­றான விளை­யாட்­டுக்­க­ளுக்கு இரை­யா­காமல் பாது­காத்­துக்­கொள்ள முடியும்.

– எஸ். வினோத் –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-09#page-8

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.