Jump to content

2017 ஐபோன்: வெளியீட்டு தேதி அறிவித்த ஆப்பிள்


Recommended Posts

2017 ஐபோன்: வெளியீட்டு தேதி அறிவித்த ஆப்பிள்

 

 

ஆப்பிள் நிறுவனம் தனது 2017 மாடல் ஐபோனினை வெளியிட இருக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஐபோன்களின் வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

 
 
 
 
2017 ஐபோன்: வெளியீட்டு தேதி அறிவித்த ஆப்பிள்
 
சான்பிரான்சிஸ்கோ:
 
சர்வதேச சந்தையில் மிக ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் பத்தாவது ஆண்டுவிழா எடிஷன் ஐபோன் 8 செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆப்பிள் கடந்த சில ஆண்டுகளாக கட்டமைத்து வரும் புதிய வளாகத்தில் வெளியீட்டு நிகழ்வு நடைபெறுகிறது. 
 
ஐபோன் 8 மட்டுமின்றி மேம்படுத்தப்பட்ட ஐபோன் 7S மற்றும் ஐபோன் 7S பிளஸ் மாடல்களையும் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் செல்லுலார் கனெக்டிவிட்டி கொண்ட புதிய ஆப்பிள் வாட்ச் சாதனமும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.  
 
முந்தைய ஆண்டுகளை போன்று இல்லாமல் ஆப்பிள் வெளியிட இருக்கும் சாதனங்களின் டீசர் குறிப்புகளை விழா அழைப்பிதழ்களில் குறிப்பிட்டுள்ளது. 
 
வண்ணமயமான ஆப்பிள் லோகோ, ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறும் முதல் விழாவில் சந்திப்போம். அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். என்ற தகவலுடன், விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் உள்ளிட்டவை ஆப்பிள் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
201709011057184696_1_Apple-Invite._L_sty
 
வண்ணமயமான ஆப்பிள் லோகோ புதிய ஐபோன் பல்வேறு நிறங்களில் இருக்கும் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனினும் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் விழாவில் ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் புதிய ஐபோனின் விலை முந்தைய மாடல்களை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஐபோனில் 5.8 இன்ச் OLED பேனல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதேபோன்ற திரை சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டது. அந்த வகையில் புதிய ஐபோன் திரை அளவு தெளிவாக அறியப்படாத நிலையில், இவை திரையை சுற்றி நிச்சயம் மெல்லிய பெசல் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
 
ஐபோன் 8-இல் வழக்கமான ஹோம் பட்டன் நீக்கப்படும் என்றும், டச் ஐடி சார்ந்து இருவித தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒன்றில் புதிய டச் ஐடி ஐபோனின் பின்புறம் இருக்கும் ஆப்பிள் லோகோவில் வழங்கப்படலாம் என்றும், மற்றொரு தகவலில் முன்பக்கம் இருக்கும் கிளாஸ்-இன் கீழ் பொறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/01105712/1105625/Apple-confirms-iPhone-8-launch-on-September-12.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நவீனன் said:

2017 ஐபோன்: வெளியீட்டு தேதி அறிவித்த ஆப்பிள்

......
 
வண்ணமயமான ஆப்பிள் லோகோ புதிய ஐபோன் பல்வேறு நிறங்களில் இருக்கும் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனினும் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் விழாவில் ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் புதிய ஐபோனின் விலை முந்தைய மாடல்களை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது....
 
.....

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/01105712/1105625/Apple-confirms-iPhone-8-launch-on-September-12.vpf

ஐபோன் இதுவரை பயன்படுத்தியதில்லை..

என்னுடைய விருப்பு, இயக்குவதற்கு எளிதான சாம்சுங் ஆன்ட்ராய்ட் வகைகள்தான்..! பழுதை நீக்குவதும் எளிது மட்டுமில்லாமல் பராமரிப்பு செலவும் குறைவு. vil-appdent.gif

இந்த ராயல்(?) போன் ஆட்கள், தங்களின் புது மாடல்களை வெளியிடும்போது முந்தைய மாடல்களின் விலைகளையும் சொற்ப அளவிற்குமேல் குறைப்பதில்லை..!  கேட்டால் 'விற்பனை ராசதந்திரமாம்'..!!  Sick fellows.. va-taper.gif 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

ஐபோன் இதுவரை பயன்படுத்தியதில்லை..

என்னுடைய விருப்பு, இயக்குவதற்கு எளிதான சாம்சுங் ஆன்ட்ராய்ட் வகைகள்தான்..! பழுதை நீக்குவதும் எளிது மட்டுமில்லாமல் பராமரிப்பு செலவும் குறைவு. vil-appdent.gif

இந்த ராயல்(?) போன் ஆட்கள், தங்களின் புது மாடல்களை வெளியிடும்போது முந்தைய மாடல்களின் விலைகளையும் சொற்ப அளவிற்குமேல் குறைப்பதில்லை..!  கேட்டால் 'விற்பனை ராசதந்திரமாம்'..!!  Sick fellows.. va-taper.gif 

சாம்சுங் 8 நோட் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது ....

சில பாதுகாப்பு எச்சரிக்கைகளுக்காக மட்டுமே நான் ஐ போன் 
பாவிக்கிறேன்.

எதை பாவித்தாலும் அரசிடமும் கூகிளிடமும் அணு அளவும் அசைய முடியாது 
சில வைரஸ் மூன்றாம் நபர் ஊடறுப்பு போன்றவற்றுக்கு 
ஐபோன் பாதுகாப்பானது. 

இங்கு விலை $100 -150 தான் வித்தியாசம் 
புதிது எப்படியோ தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

..

எதை பாவித்தாலும் அரசிடமும் கூகிளிடமும் அணு அளவும் அசைய முடியாது 

சில வைரஸ் மூன்றாம் நபர் ஊடறுப்பு போன்றவற்றுக்கு 
ஐபோன் பாதுகாப்பானது. 

..

கைப்பேசியை பேசுவதற்கும், குறுஞ்செய்தி (வாட்ஸ்அப்) அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்துவதால் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதை தவிர்க்கலாம் தானே?

மேலும் 'ஆன்டி வைரஸ்,ஃப்யர்வால்' மென்பொருளை நிறுவதாலும் இப்படியான ஊடறுப்புகளை அதிகபட்சம் தடுக்கமுடியுமென நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

கைப்பேசியை பேசுவதற்கும், குறுஞ்செய்தி (வாட்ஸ்அப்) அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்துவதால் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதை தவிர்க்கலாம் தானே?

மேலும் 'ஆன்டி வைரஸ்,ஃப்யர்வால்' மென்பொருளை நிறுவதாலும் இப்படியான ஊடறுப்புகளை அதிகபட்சம் தடுக்கமுடியுமென நினைக்கிறேன்.

நான் எப்போதும் வங்கி கணக்குகளை திறந்தே வைத்திருக்கிறேன் 
போனில்தான் நிறைய வேலைகள் செய்வதுண்டு 

ஆன்ராய்ட் டில் நிறைய பின்வாசல்கள் உண்டு.


ஓ ஸ் ஸ் சிஸ்ட்டத்தில் உள்நுளைவது ரொம்ப கடினம். 

யாராவது எடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபோன் இதுவரை பயன்படுத்தியதில்லை.  வாங்கும் எண்ணமும் இல்லை.

தற்போதைக்கு  Huawei Mate 9 நல்ல வசதிகளோடு தெரியுது.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்?

ஆப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் அறிமுக விழாவில் ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஆப்பிள் வாட்ச் எல்டிஇ, புதிய ஏர்பாட்ஸ் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்?
 
கலிபோர்னியா:

அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்பேஸ்ஷிப் வளாகத்தில் நடைபெற இருக்கும் முதல் விழாவில் இந்த ஆண்டின் ஐபோன் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. செப்டம்பர் 12-ம் தேதி காலை துவங்க இருக்கும் விழாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் X, ஆப்பிள் வாட்ச் எல்டிஇ, புதிய ஏர்பாட்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகியிள்ளது.

ஐபோன்களின் பத்தாவது ஆண்டு பதிப்பு ஐபோன் X என அழைக்கப்படும் என டெவலப்பரான ஸ்டீவன் டிரஃப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார். முன்னதாக புதிய ஐஓஎஸ் சார்ந்த தகவல்களையும் இவர் வெளியிட்டிருந்தார். புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனுடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் இம்முறை S ரக மாடல்களை வெளியிடாது என்றும் கூறப்படுகிறது.

புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனில் OLED ஸ்கிரீன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஐபோன்களில் LCD  ஸ்கிரீன்களே வழங்கப்படுகின்றன. புதிய OLED ரக ஸ்கிரீன்கள் வெவ்வேறு நிறங்களையும் துல்லியமாக பிரதிபலிப்பதோடு, மின்சக்தியை குறைவாக பயன்படுத்தும். ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் LCD ரக ஸ்கிரீன்களே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

201709101522534014_1_iPhone%208%20pic._L

இம்முறை வெளியாக இருக்கும் ஐபோன்களில் ஒரு மாடலில் நிச்சயம் முக அங்கீகாரம் (facial recognition) எனப்படும் 'ஃபேஸ் ஐடி' தொழில்நுட்பம் கொண்டிருக்கும். புதிய தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போன் திரையில் முகத்தை காண்பித்து அன்லாக் செய்ய முடியும்.

ஐபோன் X ஸ்மார்ட்போனில் பெசல்-லெஸ் பேனல், ஹோம் பட்டன் நீக்கப்பட்டு, டூயல் பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம், 3D சென்சிங் வசதி கொண்ட கேமராக்கள், ஃபேஷியல் ரெக்கஃனீஷன், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் சிறப்பான வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஆப்பிள் புதிய வளாகத்தில் நடைபெற இருக்கும் ஆப்பிள் கீநோட் நிகழ்ச்சி அமெரிக்க நேரப்படி காலை 10.00 (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்க இருக்கிறது. புதிய ஆப்பிள் வளாகம் கலிபோர்னியாவில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஐபோன்களின் விலை 1000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.63,690 முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/10152252/1107295/Apples-2017-iPhone-lineup-details-leaks-online.vpf

Link to comment
Share on other sites

ஆப்பிள் ஐபோன் 8 அறிமுகம்: ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் வெளியாகும் முதல் ஐபோன் Live Updates #AppleEvent

 

 

10:45 PM:

apple iphone 8

ஐபோன் அறிமுகம் செய்யும் மேடைக்கு வந்தார் ஆப்பிள் சிஇஓ. ஸ்டீவ் ஜாப்ஸுக்கு மரியாதை செலுத்தும் விதமான அவரது புகைப்படம் ஸ்க்ரீனிங் செய்யப்படுகிறது.

10:30 PM

apple iphone

ஐபோன் அறிமுக நிகழ்ச்சிக்கு தயாராகும் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர்

 

iphone 8

ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஐபோன் மாடலை இன்றைய ஆப்பிள் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்கிறது. இந்த ஐபோன் அறிமுக நிகழ்ச்சி ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடக்கிறது. இந்த அரங்கில் அறிமுகம் செய்யப்படும் முதல் ஐபோன் இது தான். ஐபோன் அறிமுகம் செய்யும் 10வது வருட நிகழ்ச்சியில் இன்று புதிய மாடல் ஐபோனை ஆப்பிள் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்வார். அரங்கினுள் அனைவரும் அமர வைக்கப்பட்டுள்ளனர். இந்த அரங்கினில் அமைக்கப்பட்டுள்ள லெதர் நாற்காலிகளின் விலை மட்டும் 14000 அமெரிக்க டாலராம். 

வழக்கமாக எண்களால் பெயரிடப்படும் ஐபோன் மாடல்களில் இருந்து மாறுபட்டு இந்த முறை ஐபோன் எக்ஸ் என்று பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. ஐபோன் 8-ல் என்ன வசதிகளெல்லாம் இருக்கும் என்ற கணிப்புகள் ஏற்கெனவே வெளியாகி இருந்தன. 

http://www.vikatan.com/news/information-technology/102061-apple-event-iphone-8-launch-live-updates.html

10:50 PM

iphone 8
ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 50 % அதிகம். ஆப்பிள் வாட்ச் ஒருவருக்கு சிறந்த நாளை தரும் என நம்புகிறோம் டிம் குக். ஆப்பிள் வாட்ச்கள் தான் தற்போது உலகின் நம்பர் 1 வாட்ச்...ரோலக்ஸை பின்னுக்கு தள்ளியது. வாடிக்கையாளர்களுக்கு 97 % திருப்தியை இந்த தயாரிப்புகள் தருகின்றன.

 

Link to comment
Share on other sites

11:00 PM

iphone 8

 

ஆப்பிள் வாட்ச்சின் விலை:

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 : 16000 ரூபாய்
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 : 21000 ரூபாய்
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 செல்லூலாருடன் : 25000 ரூபாய்

iphone 8

ஆப்பிள் வாட்ச் உலகின் இதய துடிப்பை அளக்கும் நம்பர் 1 வாட்ச். ஆப்பிள் வாட்ச் இயங்கு தளம் 4 செப்டம்பர் 19 வெளியாக உள்ளது. இனி ஆப்பிள் வாட்ச் ட்ரம்ப் போடும் ட்விட்டையும் காட்டும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3-ல் 40 மில்லியன் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்

Link to comment
Share on other sites

11:30 PM

iphone 8

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸ்

apple-iphone-2017-20170912-11173_23275.j

வெளியானது ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸ்

ஐபோன் 7-ஐ போன்ற தோற்றத்தில் வெளியானது ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸ். எதிர் பார்த்தது போலவே டூயல் கேமராவுடன் வெளியாகியுள்ளது. 8 அடுக்கு கலர் ப்ராசஸுடன் வெளிவந்துள்ளது . இது தண்ணீர் மற்றும் தூசுலிருந்து பாதுகாப்பாக இருக்கும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச். 

11:15  PM

ஆப்பிள்  டிவி 4K அறிமுகம்

apple-iphone-2017-20170912-10965_23103.j

இதுவரை ஆப்பிள் டிவிக்களில் இல்லாத சிறப்பம்சம் வாய்ந்த 4K மற்றும் HDR வசதியுடன் வெளியாகியுள்ளது. A10X பிராஸசர் மூலம் இரண்டு மடங்கு அதிகதிறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பைடர் மேன் படத்தை 4K-ல் கண்டு மகிழலாம். 4K  தொழில்நுட்பத்தில் திரைப்படங்கள் பழைய விலையிலேயே கிடைக்கும்.

Link to comment
Share on other sites

11:45 PM

செப்டம்பர் 15 முதல் இந்த ஐபோன்களை ப்ரி ஆர்டர் செய்ய முடியும். செப்டம்பர் 22 முதல் இந்த ஐபோன்கள் விற்பனைக்கு வருகின்றன..

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸின் விலை!

ஐபோன் 8 - 699$ - இந்திய மதிப்பில் சுமார் 44500 ரூபாய்

iphone 8

 

ஐபோன் 8 ப்ளஸ்- 799$ - இந்திய மதிப்பில் சுமார் 51100 ரூபாய்

apple-iphone-2017-20170912-11569_23486.j

iphone 8

இது தான் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸின் சிறப்பம்சங்கள்

Link to comment
Share on other sites

00:10 AM:

ஐபோன் X:

iphone X

ஐபோன் வரிசை போன்களில் மிகவும் சிறந்த வெளியீடு இது தான். விளிம்புகளற்ற டிஸ்ப்ளேயுடன் வெளிவந்துள்ளது ஐபோன் X. தண்ணீர் மற்றும் தூசுகளால் பாதிக்கப்படாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 8-ல் உள்ளது போலவே கண்ணாடியை போன்ற வெளிப்புற அமைப்பு. சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளேயுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 458 ppi ஐபோன்களில் அதிகபட்ச பிக்சலை கொண்ட போன் இது.  ஹோம் பட்டன் இல்லாமல் இந்த ஐபோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. திரை தட்டினாலே ஐபோன் ஆன் ஆகும். பாதுகாப்பு காரணிகளாக டச் ஐடி மற்றும் ஃபேஸ் ஐடி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை முறையே 50 ஆயிரம் மற்றும் 10 லட்சத்தில் ஒரு முறை தான் தவறாக அன்லாக் செய்யும். ஃபேஸ் ஐடி முக மாறுதல்கள் என்ன நடந்தாலும் அன்லாக் செய்யும். ஆனால் புகைப்படத்தை காட்டினால் அன்லாக் செய்யாது. ஒருவர் தூங்கும் போது முகத்துக்கு நேராக காட்டினால் ஐபோன் ஓப்பன் ஆகாது. கண்கள் திறந்த நிலையில் தான் அன்லாக் ஆகும். ஒருவேளை நீங்கள் அச்சுஅசல் தோற்றமுடைய இரட்டையராக இருந்தால் மட்டும் பாஸ்கோட் வைத்துக் கொள்வது நல்லது. A11 ப்ராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஐபோன் 7ல் பயன்படுத்தப்பட்டுள்ள ப்ராசஸரை விட 25% அதிக திறன் கொண்டது. 

 

அனிமேட்டட் எமோஜிக்கள் மூலம் இனி சாட் செய்யும் விதத்தில் அனிமோஜிக்களை வழங்கியுள்ளது. நமது முகபாவனைக்களுக்கு ஏற்றவாறு விலங்குகளில் முக பாவனைகளை மாற்ற முடியும். 

Link to comment
Share on other sites

00:25 AM:

iphone X

வொயர்லெஸ் சார்ஜர் மூலம் ஐபோனை சார்ஜ் ஏற்ற முடியும். ஐபோன் X-ன் விலை 64000 ரூபாயாக இருக்கும். அக்டோபர் 27 முதல் ப்ரி ஆர்டர் செய்யலாம். நவம்பர் 3ம் தேதி ஐபோன் X விற்பனைக்கு வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபோன் 6,6s,plus6,7.....ஐபோன் 8....எத்தனை வந்தாலும் பிட்டு படம் பாக்குறவனுக்கு எல்லாமே ஒன்னுதான்....:grin:

DJj9LdoVwAIDWAK.jpg

Link to comment
Share on other sites

முக அடையாளம் மற்றும் ஓஎல்இடி திரை வசதிகளுடன் வெளியாகியுள்ள ஐஃபோன் X

'எட்ஜ் டூ எட்ஜ்' திரைவசதி மற்றும் ஹோம் (முகப்பு) பட்டனே இல்லாத தனது உயர்ரக ஸ்மார்ட்ஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஐஃபோன் X

ஐபோன் X - என்பது இங்கு எண் பத்தை குறிக்கிறது. மேலும், இது தனது உரிமையாளரை கண்டறியும் வகையிலான பழைய கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை விடுத்து தற்போது முக அடையாள அமைப்பை முறையை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு FaceID என்று பெயரிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், இம்முறையானது வெளிச்சம் இல்லாத இருட்டு பகுதியிலும், 30,000 இன்ஃப்ரா ரெட் புள்ளிகளை உருவாக்கி அதன் மூலம் பயனரை சரிபார்ப்பதால், இது பழைய TouchID தொழில்நுட்பத்தைவிட பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளது.

இதுவரை ஆப்பிள் வெளியிட்டுள்ள செல்பேசிகளிலேயே இதுதான் விலை உயர்ந்ததாகும்.

 

நவம்பர் 3-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் 64 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்ஃபோன் 999 அமெரிக்க டாலராகவும், 256 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்ஃபோன் $1,149 அமெரிக்க டாலராகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 64 ஜிபி நினைவகம் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் நோட் 8 திறன்பேசி 930 அமெரிக்க டாலராக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக அடையாள அமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஐஃபோன் Xபடத்தின் காப்புரிமைAPPLE

"ஐபோன் X ஸ்மார்ட்ஃபோனானது அடுத்த தலைமுறைக்கான ஐபோன்களின் வன்பொருள் தொழில்நுட்பத்தின் மாதிரியை உருவாக்கும் ஒரு நீண்டகால முதலீடு" என்று சிசிஎஸ் இன்சைட் என்னும் திறன்பேசி ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஜியோப் பிளாபர் கூறியுள்ளார்.

"ஓஎல்இடி திரை மற்றும் புதிய வடிவமைப்பானது வருங்கால ஐபோன்களின் மாதிரியாக இருக்கும் என்னு கருதப்படும் அதே வேளையில், ஆப்பிள் முதலில் போதுமான பொருட்களைப் பெறுவதற்கான சவாலை சமாளிக்க வேண்டும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய ஓஎல்இடி திரையுடன் வெளியிடப்பட்டிருக்கும் ஐபோனுக்கு மாறுவதன் மூலம் மிக துல்லியமான கருப்பு மற்றும் சரியான நிறங்களை முன்பிருந்ததைவிட காணவியலும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற முன்னணி திறன்பேசி தயாரிப்பாளர்களான LG மற்றும் சாம்சங் ஆகியவை இதுபோன்ற தொழில்நுட்பத்தை தங்கள் திறன்பேசிகளில் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன.

ஆப்பிளின் விலை மதிப்புமிக்க ஸ்மார்ட்ஃபோன்

இத்திறன்பேசி வெளியிடப்படும் வரை ஆப்பிளின் விலை மதிப்புமிக்க திறன்பேசியாக 969 அமெரிக்க டாலர்கள் விலையுள்ள ஐபோன் 7 இருந்தது.

தனது மற்ற போட்டியாளர்களைவிட பயன்பாட்டாளர்களை திறன்பேசியில் அதிகளவு செலவிட வைக்கும் ஆப்பிளின் இந்த திறனை "புத்திசாலித்தனமானது" என்று வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக அடையாளம் மற்றும் ஓஎல்இடி திரை வசதிகளுடன் வெளியாகியுள்ள ஐஃபோன் Xபடத்தின் காப்புரிமைREUTERS

"தேவையை கட்டுப்படுத்துவது மற்றும் தயாரிக்கப்படும் எண்ணிக்கையை சமன் செய்வதற்காகவே அதன் விலையை அதிகமாக நிர்ணயிப்பதன் ஒரு காரணியாக இருக்கும்" என்று Strategy Analytics என்னும் நிறுவனத்தை சேர்ந்த நீல் மவ்ஸ்டோன் கூறுகிறார்.

"ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை அடைய வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தும் பங்குதாரர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திறன்பேசிகளின் விலையை அந்நிறுவனம் கூட்டிகொண்டே வந்திருக்கிறது. குறிப்பாக $1000 மதிப்புள்ள ஒரு திறன்பேசியை உருவாக்குவதற்கான எண்ணத்தில் ஆப்பிள் நிறுவனம் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது."

"தங்களது முதன்மையான தயாரிப்பின் விலையை கூட்டுவது என்பது அந்த இலக்கை அடைவதற்கான ஒரு வழியாகும்" என்று அவர் கூறினார்.

தானியங்கி முக அடையாளம் :

FaceID என்னும் தானியங்கி முக அடையாள முறையை பயன்படுத்தி ஆப்பிள் பே'யில் பணம் செலுத்தவோ அல்லது ஸ்மார்ட் ஃபோனை இயக்க பயன்படுத்தவோ இருப்பதில் உள்ள பயன்பாட்டாளர்களின் முன்தயக்கங்களுக்கு ஆப்பிள் பதிலளித்துள்ளது.

ஆனால், முந்தைய தொழில்நுட்பமான டச் ஐடியில் 50,000த்தில் ஒரு தடவை உரிமையாளர் அல்லாத எவரோ ஒருவர் திறன்பேசியை திறக்கவியலும் என்றிருந்த நிலையில், இப்புதிய FaceID தொழில்நுட்பத்தில் அவ்வாய்ப்பு 10 இலட்சத்தில் ஒன்று என்ற பாதுகாப்பான நிலையை எட்டியுள்ளது.

ஐஃபோன் X வெளியீடு

இருந்தபோதிலும், ஐபோன் X திறன்பேசியில் FaceIDக்கு மாற்றாக TouchID அளிக்கப்படாதது பயன்பாட்டாளர்களிடையே சலலப்பை உண்டாக்கியுள்ளது என்று வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"இது பயன்பாட்டாளர்களுக்கு மிகக் கடுமையான தடை" என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கிரியேட்டிவ் ஸ்ட்ரடஜீஸ் நிறுவனத்தை சேர்ந்த கரோலினா மிலனேசி கூறியுள்ளார்.

"ஆப்பிள் நிறுவனம் தானியங்கி முக அங்கீகார அமைப்பு முறையை பாதுகாப்பானது மற்றும் எல்லா நேரங்களிலும் உபயோகிக்க இயலும் என்று உறுதிப்படுத்தும் வரை பயனாளர்கள் ஒருவித தயக்கத்துடனே இருப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்

"பயன்பாட்டாளர்களை பொறுத்தவரை டச்ஐடி முறையானது முடிந்த ஒன்றாக கருதப்படாத நிலையில், அதை மேலும் மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் ஏன் முயற்சிக்கவில்லை என்று அவர்கள் கேட்கலாம்." என்று அவர் தெரிவித்தார்.

Apple TVபடத்தின் காப்புரிமைAPPLE

ஐபோன் X ஸ்மார்ட் ஃபோனின் சிறப்பம்சங்கள்:

•5.8 (14.7) அங்குல திரையுடைய இது ஒரு அங்குலத்திற்கு 458 பிக்சல்களை கொண்டுள்ளது. இதன்மூலம் ஆப்பிளின் மிகவும் தெளிவான அதிக பிக்சல்களை கொண்ட திறன்பேசியாக இது உருவெடுத்துள்ளது. மேலும், இதற்கு "சூப்பர் ரெட்டினா" என்னும் புதிய பெயரும் அளிக்கப்பட்டுள்ளது.

•ஹோம் பட்டன் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ள நிலையில் திறன்பேசியில் திரையின் கீழ் பகுதியில் தேய்ப்பதன் மூலம் செயலிகளை இயக்கும் அமைப்பும், மற்றும் பக்க பட்டன் ஒன்றை அழுத்துவதன் மூலம் மெய்நிகர் உதவியாளரான சிரியை இயக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

•போர்ட்ரைட் நிலையை பயன்படுத்தும்போது எடுக்கும் புகைப்படத்தின் பின்புறத்தை மங்க வைக்கும் மற்றும் முன்புற/பின்புற கேமராக்களை பயன்படுத்தும்போது ஒளியளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

•இது முந்தைய ஐபோன் 7 திறன்பேசியைவிட இரண்டு மணிநேரம் கூடுதல் பேட்டரி ஆயுளை அளிக்கும்.

http://www.bbc.com/tamil/global-41250264

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தைவான், ஜப்பானை தொடர்ந்து சீனாவிலும் ஐபோன் 8 பிளஸ் பாதியாக பிளந்தது

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களில் உள்ள பேட்டரி வெடித்து ஐபோன் பாதியாக பிளந்து கொள்ளும் சம்பவங்கல் சீனாவில் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தைவான், ஜப்பானை தொடர்ந்து சீனாவிலும் ஐபோன் 8 பிளஸ் பாதியாக பிளந்தது
 
பீஜிங்:

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களில் பேட்டரியில் ஏற்பட்ட பிழை போனினை பாதியாக பிளக்க வைத்த சம்பவங்கள் தாய்வான் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அரங்கேறி வந்தது. இந்நிலையில் புதிய ஐபோன்களில் இதே பிரச்சனை சீனாவிலும் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக தாய்வான் மற்றும் ஜப்பான் நாடுகளில் ஐபோன் 8 பிளஸ் மாடல்களில் பிழை ஏற்பட்ட சம்பவம் குறித்து முறையான ஆப்பிள் நிறுவனம் விசாரணையை துநங்கியுள்ளதாக தெரிவித்திருந்தது.

சீனாவை சேர்ந்த வலைத்தளத்தில் லியூ என்ற வாடிக்கையாளர் தனது ஐபோன் 8 பிளஸ் பாதியாக பிளந்து கொண்டதாக அக்டோபர் 5-ம் தேதி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபோன் வெடித்ததற்கு எவ்வித அறிகுறிகளும் இல்லாத நிலையில் தனது ஐபோனினை உரிமையாளர் தான் வாங்கிய இடத்திலேயே திரும்ப வழங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 8 பிளஸ் பாதியாக பிளந்து கொள்ளும் சம்பவங்களை விசாரணை செய்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட போதும், இது குறித்து மற்ற தகவல்களை வழங்வில்லை. தற்சமயம் வரை ஐபோன் 8 சீரிஸ் முன்பதிவுகள் முந்தைய ஐபோன்களை விட குறைவாகவே காணப்படுகிறது.

எனினும் பெரும்பாலான ஐபோன் வாடிக்கையாளர்கள் பத்தாவது ஆண்டு ஐபோன் பதிப்பாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் X வாங்க காத்திருப்பதாக கூறப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் X விற்பனை நவம்பர் முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது. இந்தியாவில் 64 ஜிபி ஐபோன் X விலை ரூ.89,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/07154357/1121859/Apple-iPhone-8-battery-bloating-swelling-issue-now.vpf

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

எதிர் பார்த்த அடி முக அடையாளம் டம்மியாக போனது மிச்ச த்துக்கு அதுக்கு ஏனையையா 1௦௦௦பவுண்டு ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.