Jump to content

ஈழத்துச் சினிமாவும் பசுமையான நினைவுகளும்: மறக்கமுடிமா?


Recommended Posts

ஈழத்துச் சினிமாவும் பசுமையான நினைவுகளும்: மறக்கமுடிமா?

 

ஈழத்துச் சினிமாவும் பசுமையான நினைவுகளும்: மறக்கமுடிமா?

வாடைக்காற்று 1978 இல் வெளிவந்த ஈழத்துத்தமிழ்த் திரைப்படமாகும். கமலாலயம் மூவிஸ் இன் தயாரிப்பில் வெளியான இப்படத்தை பிறெம்நாத் மொறாயஸ் அவர்கள் இயக்கியிருந்தார். உண்மையிலேயே இத்திரைப்படத்தின் பிரம்மா என்று சொல்லக்கூடியவர் ஈழத்தின் புகழ்பூத்த எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களே.

எழுபதுகளின் ஆரம்பத்தில் செங்கை ஆழியான் அவர்கள் வாடைக்காற்று எனும் அதிசிறந்த சமூகநாவலை எழுதியிருந்தார். "வாடைக்காற்று நவீன நாவல் உலகில் ஒரு மைல்கல்" என்று இரசிகமணி கனகசெந்திநாதன் அவர்கள் வியந்து பேசினார். இக்கதையின் களமானது யாழ்ப்பாணத்தின் தீவுகளில் ஒன்றான நெடுந்தீவுப் பிரதேசமாகும். வடகீழ்பருவக்காற்றுக் காலங்களில் வாடைக்காற்று வீசத்தொடங்கியதும் பெலிகன் எனும் கூழக்கடாப் பறவைகள் வடபுலத்துக்கடற்கரைகளை நாடிவரும். அவ்வேளையில் அதனைவேட்டையாடவும் வாடியமைத்து மீன்பிடிக்கவுமென வெளியூர்மீனவர்கள் நெடுந்தீவை நாடுவர். குறிப்பாக மன்னார் பேசாலைக்கிராமத்திலிருந்து அதிகமான மீனவர்கள் நெடுந்தீவில் வாடியமைக்கவென வந்து செல்வார்களாம். இவர்கள் நெடுந்தீவில் வாடியமைக்க வந்துதங்கும்போது உள்ளூர்மீனவர்களுடனான உறவு பகை மனக்கசப்பு போன்றவற்றை அற்புதமான முறையில் சித்தரித்திருந்தார் கதாசிரியர்.

தயாரிப்பாளர் ஏ.சிவதாசன் அவர்களும் பா.சிவசுப்பிரமணியம் அவர்களும் தமது நெருங்கிய நண்பரான இயக்குனர் பாலுமகேந்திராவிடம் செங்கை ஆழியானின் வாடைக்காற்றையும் அண்ணாமலை பாலமனோகரனின் நிலக்கிளி நாவலையும் கொடுத்து எதைப்படமாக்கலாமெனக் கேட்டிருந்தனராம். இரண்டு நாவல்களையும் வாசித்து பிரமித்துப்போன பாலுமகேந்திரா அவர்கள் நிலக்கிளி நாவலில்வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிப்பதற்குரிய திறமையான நடிகைகளை தமிழ்நாட்டிலும் தேடமுடியாது. ஆனால் ஈழத்தின் நிலச்சூழல் அடிப்படையில் வாடைக்காற்றை திரைப்படமாக்கலாம் எனக்கூறினாராம்.

அந்தவகையில் வாடைக்காற்றின் நடிகர்களாக ஈழத்தின் புகழ்பெற்ற பொப்பிசைப்பாடகர் ஏ.ஈ.மனோகரன்(செமியோன்), டாக்டர் இந்திரகுமார்(மரியதாஸ்), சந்திரகலா(பிலோமினா), ஆனந்தராணி(நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம், ஜவகர் பிரான்சிஸ், கே.எஸ்.பாலச்சந்திரன், கந்தசாமி ஆகியோருடன் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை ஏ.வி.எம் வாசகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். திரைக்கதை வசனத்தை ஈழத்தின் செம்பியன் செல்வன் மற்றும் செங்கை ஆழியான் போன்றோர் எழுதியிருந்தனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது 10.02.1977இல் ஆரம்பமானதாக அறியப்படுகிறது. கதையின் களமானது நெடுந்தீவை மையப்படுத்தியதாக இருந்தாலும் பெரும்பாலான காட்சிகள் பேசாலைக்கிராமத்திலேயே ஒளிப்பதிவாகியிருந்தன. மேலும் யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் போன்ற இடங்களிலும் இப்படம் ஒளிப்பதிவாகியது.

உண்மையிலேயே இத்திரைப்படத்தில் நாயகன் நாயகி என ஒருவரை மட்டும் சுட்டாமல் எல்லாப்பாத்திரங்களையும் நடிக்கவிட்டிருக்கின்றார்கள். கதையின் முடிவு கண்ணீரையே வரவழைக்கும். அதாவது இரண்டு காதல்கள் கண்ணீரில் முடிவடைகின்றன.

வாடைக்காற்று திரைப்படத்தில்வரும் “வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே” பாடல் ஈழத்து சினிமாப் பாடல்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழக சினிமாப் பாடல்களுக்கு நிகரான மிக யதார்த்தமான பாடலாகும். பாடலை எமது வாசகர்களுக்காக இங்கே இணைக்கிறோம்.

ஈழத்து சினிமாவின் பசுமையான நினைவுகள் பற்றி  தொடர்ந்தும் எதிர்பாருங்கள்...

 

 

 

https://news.ibctamil.com

Link to comment
Share on other sites

ஈழம் என்ற சொல்லுக்காக அன்று தடைசெய்யப்பட்ட பழம்பெரும் ஈழத்திரைப்படம்!

 

குத்துவிளக்கு 1972ஆம் ஆண்டு திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படங்களில் முக்கியமானதாகும். இதன் பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் யாழ்ப்பாணம், வடமராட்சிப்பகுதியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன.

பிரபல கட்டிடக்கலை நிபுணரான வி. எஸ். துரைராஜா தயாரித்த இத்திரைப்படத்தில் இரு நாட்டியக் கலைஞர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். ஆனந்தன், லீலா நாராயணன் ஆகிய இவர்களுடன், ஜெயகாந்த், பேரம்பலம், எம். எஸ். ரத்தினம், எஸ். ராமதாஸ். சிங்கள நடிகை சாந்திலேகா முதலானோர் நடித்தார்கள்.

ஈழம் என்ற சொல்லுக்காக அன்று தடைசெய்யப்பட்ட பழம்பெரும் ஈழத்திரைப்படம்!

டபிள்யூ. எஸ். மகேந்திரன் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றினார். கவிஞர் ஈழத்து இரத்தினம் திரைக்கதை, வசனங்களை எழுதியதோடு இடம் பெற்ற சகல பாடல்களையும் எழுதினார்.

அக்காலத்தின் பிரபலமான இசையமைப்பாளரான ஆர். முத்துசாமி இசையமைத்தார். சங்கீத பூஷணம் எம். ஏ. குலசீலநாதன், மீனா மகாதேவன், ஆர். முத்துசாமி ஆகியோர் இப்பாடல்களைப் பாடினார்கள்.

ஈழம் என்ற சொல்லுக்காக அன்று தடைசெய்யப்பட்ட பழம்பெரும் ஈழத்திரைப்படம்!

குத்துவிளக்கு திரைப்படத்தின் கதையானது, ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தின் கதையாக அமைந்துள்ளது. ஏழை விவசாயியான வேலுப்பிள்ளைக்கும் (பேரம்பலம்), மனைவி லட்சுமிக்கும் (சாந்திலேகா) மூன்று பிள்ளைகள். தகப்பனுக்கு துணையாக குடும்பப்பொறுப்பை சுமக்கும் மூத்த மகன் சோமு (ஜெயகாந்த்), அவனது ஆசைத்தங்கைமார் மல்லிகா (லீலா நாராயணன்), ஜானகி (பேபி பத்மா) ஆகியோர் அடங்கிய அக்குடும்பத்தின் வாழ்க்கை துன்பங்களுடன் நகர்கிறது.

அடுத்த வீட்டில் பணக்காரர் குமாரசாமி (திருநாவுக்கரசு), பணத்தையே பிரதானமாகக் கருதும் அவரது மனைவி நாகம்மா (இந்திராதேவி) - இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மகன் செல்வராஜா (ஆனந்தன்), நாகரீகச் சின்னமான மகள் ஜெயா.

ஈழம் என்ற சொல்லுக்காக அன்று தடைசெய்யப்பட்ட பழம்பெரும் ஈழத்திரைப்படம்!

மல்லிகாவுக்கும், செல்வராஜாவுக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் இவர்கள் விருப்பத்துக்கு தடை போடுகிறாள், செல்வராஜாவின் தாய் நாகம்மா. கஷ்டப்பட்டு படித்து பல்கலைக்கழகம் சென்ற சோமு தன் தங்கைக்கு சீதனம் தேடுவதற்காக தன் படிப்பையும் இடையில் கைவிட்டு, தன்னையொத்த இளைஞர்களுடன் சேர்ந்து கூட்டுறவுப்பண்ணை விவசாயம் செய்து பணம் கொண்டு வருகிறான்.

ஆனால் இதற்கிடையில் செல்வராஜாவிற்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்க, சோமுவின் தங்கை மல்லிகா தற்கொலை செய்து கொள்கிறாள். இதன் பின்னர் என்ன நடந்தது என்பதை திரைப்படத்தில்தான் காணவேண்டும்.

ஈழம் என்ற சொல்லுக்காக அன்று தடைசெய்யப்பட்ட பழம்பெரும் ஈழத்திரைப்படம்!

குத்துவிளக்கு திரைப்படத்துக்கு பாடல் எழுதியவர் கவிஞர் ஈழத்து இரத்தினம். இவர் தமிழ்நாட்டில் வெளிவந்த எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற படத்தில் 'ஒன்றாகவே விழா கொண்டாடுவோம்' என்ற பாடலை எழுதிப் புகழ் பெற்றவராவார்.

குத்து விளக்கு படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியினரால் தடை செய்யப்பட்டது என்பதும் இங்கே சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும்.

 

https://news.ibctamil.com/

Link to comment
Share on other sites

ஈழத்தில் வெளிவந்த பழம்பெரும் திரைப்படங்களில் தென்றலும் புயலும் என்ற திரைப்படமும் ஒன்றாகும். இதில் அமைந்த அருமையான பாடல் ஒன்று இதோ!
#மறக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி!

அனுராகம்
தென்றலும் புயலும்
சுமதி
மாமியார்வீடு
போன்றஈழத்துத் தமிழ்த்திரைப்படங்கள் சில அழுத்தமான கதையமைப்பைக் கொண்டவை. வாடைக்காற்றை நான்பார்க்கவில்லை. 

இந்தப்படைப்புகளை  பாதுகாக்கவேண்டும். நான் சிலபாடல்களை பதிந்து வைத்துள்ளேன். இடைக்கிடை கேட்பேன். வாடைக்காற்று வீசுகின்ற ... ஒரு சிறந்தபாடல்.  
இந்த ஊருக்க ஒரு நாள் திரும்பிவருவேன்... 
உனைவரைந்தேனே ..... போன்ற பாடல்குளும்  கேட்கக்கூடியவை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.