Jump to content

ராஜ ராஜ சோழன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மோகனா said:

ராஜராஜ சோழன் நாடுகளைப் பிடித்து வரும் போது பிடித்த இடங்களில் பெரும்படுகொலைகளில் ஈடுபட்டதாகவும் குறிப்பாக தாய்லாந்தில் ராஜராஜசோழன் பற்றி மோசமான பதிவுகள் உள்ளதாக நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். இன்றைய தமிழின் அழிவும் அந்தப்படுகொலைகளின் சாபம் தான் என்று அவர் உறுதியாக நிற்கின்றார்.

அப்படி சாப வரலாறுகளை பார்க்கப்போனால் இன்றைய  பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அரைப்பங்கு அழிந்திருக்க வேண்டுமே?????

Link to comment
Share on other sites

மோகனா ....உங்கள் நண்பரின் கூற்றில் தவறில்லை!

ராஜ ராஜனின் வரலாறு முதலில் பார்ப்பனர்களாலும், பின்னர் இலங்கையிலிருந்து சென்ற புத்த பிக்குகளாலும் கொச்சைப் படுத்தப் பட்டுள்ளது!

பார்ப்பனர்கள் ...ராஜ ராஜனை ஒரு ஏணியாக உபயோகித்து...உயரத்தில் ஏறிய பின்னர்....ஏணியை உதைத்துத் தள்ளி விடடார்கள்!

கலிங்கத்துப் போரில்...நடக்காத படுகொலைகளா....தாய்லாந்தில்  நடந்து விட்டது?

இருந்தும் அசோகச் சக்கரத்தை....தேசியக்கொடியில் ஏந்தும்...பார்ப்பனர்களுக்கு ...ராஜாராஜனை விமர்சிக்க என்ன அருக்கதை உண்டு!

நம்பிக் கெடடவன் ராஜ ராஜன் என்பது தான் உண்மை!

உங்கள் நண்பர் கூறுவதில்....உண்மை இருந்தால்....ஏன் ..அரச பட்டாபிஷேஷங்களின் போது...இன்றும் சிவபுராணம் பாடப்படுகின்றது?  

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

அப்படி சாப வரலாறுகளை பார்க்கப்போனால் இன்றைய  பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அரைப்பங்கு அழிந்திருக்க வேண்டுமே?????

அதுவும் சரி தான்

6 hours ago, புங்கையூரன் said:

மோகனா ....உங்கள் நண்பரின் கூற்றில் தவறில்லை!

ராஜ ராஜனின் வரலாறு முதலில் பார்ப்பனர்களாலும், பின்னர் இலங்கையிலிருந்து சென்ற புத்த பிக்குகளாலும் கொச்சைப் படுத்தப் பட்டுள்ளது!

பார்ப்பனர்கள் ...ராஜ ராஜனை ஒரு ஏணியாக உபயோகித்து...உயரத்தில் ஏறிய பின்னர்....ஏணியை உதைத்துத் தள்ளி விடடார்கள்!

கலிங்கத்துப் போரில்...நடக்காத படுகொலைகளா....தாய்லாந்தில்  நடந்து விட்டது?

இருந்தும் அசோகச் சக்கரத்தை....தேசியக்கொடியில் ஏந்தும்...பார்ப்பனர்களுக்கு ...ராஜாராஜனை விமர்சிக்க என்ன அருக்கதை உண்டு!

நம்பிக் கெடடவன் ராஜ ராஜன் என்பது தான் உண்மை!

உங்கள் நண்பர் கூறுவதில்....உண்மை இருந்தால்....ஏன் ..அரச பட்டாபிஷேஷங்களின் போது...இன்றும் சிவபுராணம் பாடப்படுகின்றது?  

ராஜராஜ சோழன் ஒரு பெரும் தமிழ் வீரன் அரசன் நாடுகளைப் பிடித்தான் என்று தான் எனக்கு இதுவரை தெரிந்தது. நாடுகளைப்பிடித்த பின்னர் என்ன நடைபெற்றது என அறிந்திருக்கவில்லை. ஆனால் நண்பர் கூறியதன் பின்னரே அப்படி ஒரு மோசமான பக்கமும் உள்ளது எனத் தெரிந்தது. புங்கை குறிப்பிட்ட விடயங்கள் சிலதே எனக்குப் புதிதுதான்.

Link to comment
Share on other sites

போர் என்றுமே இனிப்பாக இருந்ததில்லை. கொலை, களவு, பாலியல் வல்லுறவு இவை யாவும் போரின் அங்கமே. 
இச்செயல்கள் உலகம் முழுமைக்கும் நடந்தவையே. சோழர்கள் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. மற்றபடி தமிழர்களின் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், அவர்கள் வென்ற இடங்களில் தமிழர்களை குடியேற்றம் செய்வதில்லை.

கள்வர் என்ற குழு தமிழத்தில் இருந்தது. பாலை நிலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் உணவுத் தேவைக்காக வழிப்போக்கர்களிடம் கவர்ந்து உண்ணும் பழக்கம் இருந்தது. இது சங்க இலக்கியம் முழுமைக்கும் பதியப்பட்டு இருக்கிறது. தோழி தனது தலைவன் ஆரலைக் கள்வர்களிடம் அகப்படாமல் வரவேண்டும் என்று உருகி வேண்டிய பாடல்கள் ஏராளம். இப்பாலை நில மக்களின் கடவுளே கொற்றவை. போர்க் காலங்களில் இவர்களை மன்னன் படைகளில் சேர்த்துக் கொள்வதுண்டு. இவர்களே படைகளின் முன்னணியில் இருப்பார்கள். கோட்டைச்  சுவர்களில் ஏறி படைகளுக்கு பாதைகளை ஏற்படுத்துவது இவர்களது முக்கியப் பணி. அதற்குப் பிரதிபலனாக போர்களில் கவர்ந்த செல்வங்களை அவர்களே எடுத்துச் செல்ல அனுமதிக்கப் படுவர். பின்னர் இவர்களது குலம் பெருகி, அவர்களுக்கு அரசன் படை, கொடி என்பன பல உண்டாகிற்று.

அகநானூற்றுப் பாடல் ஒன்றில் "கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்" கள்வர்களுக்கு அரசன் என்ற செய்தியைக் காணலாம். சங்க காலத்தில் ஆநிரைக் கவர்தல் என்ற போர் மரபே இருந்தது. இக்கள்வர் இனத்தவர் அண்டை நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று, ஆங்குள்ள ஆநிரைகளைக் கவர்ந்து வரும் களவுத் தொழிலை மேற்கொண்டு வந்தவர்கள் ஆவர்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்! சோழர் காலக் கண்டுபிடிப்பு !

KGF-Home.jpg

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் மன்னர்கள் காலத்தில் கண்டறியப்பட்டிருந்தாலும், ஆங்கிலேயர் காலத்தில்தான் தங்க மண் தோண்டியெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

பல லட்சம் டன் தங்க மண் எடுக்கப்பட்டு, தாது பிரிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டுள்ள மண்குவியலை இன்றளவிலும் பார்க்கமுடியும். இந்த தங்க மண் மலைகளில்தான் திருடா திருடி படத்தின் ‘மன்மத ராசா’ பாடல் படமாக்கப்பட்டது.

கோலார் தங்க வயலான கே.ஜி.எஃப். பற்றி சமீபத்தில் படம்கூட வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்த கே.ஜி.எஃபில் வேலைபார்த்தவர்களில் சுமார் 80% தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் இங்கு பணிபுரிந்த தமிழர்கள், தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பிறகு பல்வேறு இடங்களுக்கு வேலைதேடி இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து, கடந்த 15 – 20 ஆண்டுகளாக கே.ஜி.எஃபிற்கு அருகிலுள்ள பெத்தபள்ளி என்ற இடத்தில் மத்திய கனிமவளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வினை கடந்த ஆறு மாதங்களாக தீவிரப் படுத்தியிருக்கிறது கர்நாடக அரசு.

பெத்தபள்ளி கிராம சர்வே எண் 15 – 17ல் விலைமதிப்பற்ற ஹிரினியம், வைரம் மற்றும் தங்கம் உள்ளிட்ட ஏழுவகை கனிமங்கள் அதிகளவு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின்போது மத்திய, மாநில அரசுகளை ஆச்சர்யப்பட வைத்தது எது தெரியுமா? இந்தக் கிராம சர்வே எண்களில் உள்ள சுமார் 15 - 20 ஏக்கர் பகுதியில் அதிகளவு கனிமங்கள் இருக்கின்றன.

அதேபோல், அங்குள்ள பாறைப் பகுதியில் சோழர்கால ஆட்சியின் குறியீடும், உரல்போன்ற குழிவான பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுதான். இந்தக் குறியீடுகளின் கீழ்ப்பகுதியில்தான் அதிகளவு ஹிரினியம் வைரம் குவிந்து கிடப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

நீண்டகாலமாக தரிசாகக் கிடந்த இந்த நிலத்தை விவசாயி ஒருவர் லே-அவுட் போட முயற்சி செய்தபோது, மத்திய, மாநில கனிமவளத் துறையினர் தடுத்து நிறுத்தி இந்த நிலத்தைக் கையகப்படுத்த உள்ளதாகக் கூறியபோதுதான் இந்த வைர வயல் பற்றிய செய்திகளே வெளியில் கசியத் தொடங்கின.

தற்போது, இந்தப் பகுதியில் ஏழுவகையான கனிம வளங்கள் பூமிக்கடியில் இருப்பதாக அறிவிப்புப் பலகையும் அரசு சார்பில் நிறுத்தப்பட்டுவிட்டது.

சோழர் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட புதையல் நிலத்தை, நவீன காலமான இன்று இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே வைத்திருக்கிறது அரசு.

ஒருவேளை இதற்கான திட்டப்பணிகளைத் தொடங்கினால், கே.ஜி.எஃப் என்ற கோலார் தங்க வயல் இனி கே.டி.எஃப் என்ற கோலார் வைர வயல் என பெயர் மாற்றப்படலாம். அதனால், தமிழர்களுக்கு அங்கு வேலை கிடைக்குமா என்பதுதான் தெரியவில்லை.

-ஜெ.கிஷோர்குமார்

https://www.nakkheeran.in/special-articles/special-article/kgf-will-transform-kolar-diamond-form-chozha-mystery-breaks

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/26/2018 at 8:39 AM, ஆதித்ய இளம்பிறையன் said:

மன்னார் குடி கோஸ்ட்டிகள் எல்லாம் இந்த இனத்தவர்களே.

ஆகவே உங்கள் விளக்கம் இந்த காலத்துக்கும் பொருந்துகிறது. :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இது எங்கே இருக்கிறது? தமிழ் நாடா?

கர்நாடகம் என்றால், கிந்தியா வேண்டுமே என்றே இதை கர்நாடகத்து எல்லையை நிர்ணயம் செய்தது.

தமிழ் நாடு அரசு இப்போதே ஓர் வழக்கு தொடர வேண்டும்.

தமிழ் நாடு அரசு இப்போதே ஓர் வழக்கு தொடர வேண்டும். கனிம வளத்தை கிந்தியாவும் கர்நாடகமும் சூறையாடல் முட்டுக்கட்டை போடுவததற்கு.

சீமானோ ஆழ்ந்து அப்படி சிந்தனை கொண்டவர்களா ஆட்சிக்கு வரும் பொது பிரித்தெடுப்பதி பற்றி பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

கலியேழு வள்ளல் காமராசர் கருநாடகத்திற்கு தானமாக கொடுத்தது .. 😢

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

எது அதிசயம்.

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உலக அளவில் தமிழரை தலை நிமிர்ந்து நிற்க செய்த... இராஜராஜ சோழன்.

Link to comment
Share on other sites

  • 6 months later...

இதுல் என‍க்கு இருக்கும் கேள்வி என்னவென்றால் அடி (Feet)  என்ற அளவு முறையை இந்தியாவுற்கு அறிமுகபடுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்.  ஆங்கிலேயர்களின் இந்திய வருகை 16 ம் நூற்றாண்டிற்கு பின்னர் இருக்க கி.பி 1000 ம் ஆண்டில் கட்டிய இந்த கோவிலுக்கு எப்படி அந்த அளவு முறைப்படி கட்டினார்கள்?   

Link to comment
Share on other sites

21 minutes ago, tulpen said:

இதுல் என‍க்கு இருக்கும் கேள்வி என்னவென்றால் அடி (Feet)  என்ற அளவு முறையை இந்தியாவுற்கு அறிமுகபடுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்.  ஆங்கிலேயர்களின் இந்திய வருகை 16 ம் நூற்றாண்டிற்கு பின்னர் இருக்க கி.பி 1000 ம் ஆண்டில் கட்டிய இந்த கோவிலுக்கு எப்படி அந்த அளவு முறைப்படி கட்டினார்கள்?   

இன்னுமொரு கேள்வி. 1000 வருடங்களுக்கு முன்னர் தற்போதுள்ள எண்ணிக்கையான தமிழ் எழுத்துக்கள் இருந்ததா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, இணையவன் said:

இன்னுமொரு கேள்வி. 1000 வருடங்களுக்கு முன்னர் தற்போதுள்ள எண்ணிக்கையான தமிழ் எழுத்துக்கள் இருந்ததா ?

திருக்குறள் 2000 ஆண்டுக்கு முந்தையது.....!

தொல்காப்பியம் அதற்கும் முன் ......! இதில் தமிழ் இலக்கண, இலக்கியம் சிறப்பாக உள்ளது.மேலும் அகத்தியத்தை சுலபமாக புரியும்படி எளிமையாக்கிய நூல் தொல்காப்பியம்......!

அகத்தியம் அதற்கும் முன் என்று நினைக்கின்றேன்.....!

Link to comment
Share on other sites

45 minutes ago, suvy said:

திருக்குறள் 2000 ஆண்டுக்கு முந்தையது.....!

தொல்காப்பியம் அதற்கும் முன் ......! இதில் தமிழ் இலக்கண, இலக்கியம் சிறப்பாக உள்ளது.மேலும் அகத்தியத்தை சுலபமாக புரியும்படி எளிமையாக்கிய நூல் தொல்காப்பியம்......!

அகத்தியம் அதற்கும் முன் என்று நினைக்கின்றேன்.....!

திருக்குறள், தொல்காப்பியம் போன்றவை வாய்வழிப் பாடமாகவே வல நூற்றாண்டுகள் பாதுகாக்கப்பட்டன. தமிழ் எழுத்துக்கள் தமிழில் உருவாவதற்கு முன்னர் தமிழ் மொழி பிராமி, கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்டது.

கி.பி. 8ஆம் நூற்றாண்டுவரை இன்றுள்ள சில எழுத்துக்கள் தமிழில் இல்லை.

https://en.wikipedia.org/wiki/Tamil_script#/media/File:History_of_Tamil_script.jpg

மீரமாமுனிவர் 19ஆம் நூற்றாண்டில் செய்த மாற்றங்களுக்கமையவே தற்போதுள்ள தமிழ் எழுத்துக்கள் உள்ளன என்று கேள்விப்பட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, இணையவன் said:

விளக்கத்திற்கு நன்றி இணையவன் .......!  👍

Link to comment
Share on other sites

On ‎12‎/‎10‎/‎2018 at 4:38 AM, Kadancha said:

அறிந்த வரையில், சரி என்றே நினைக்கிறன்.

ஆபத்துதாவிகள் படை,  போர்க்களத்தில் மன்னருக்கும் மற்றும் களத்தில் ஏற்படும் இக்கட்டான, ஆபத்து நிலைமைகளை தாண்டுவதற்கு என்றே அறிந்ததாக நினைவு உண்டு.

ஆனாலும், சரியானா புரிதலை தேடுகிறேன்.  

  ‘முனை எதிர் மோகர்’, ‘தென்னவன் ஆபத்துதவிகள்’,
‘பெரும்படையினர்’ என்ற சிறப்புப் பாதுகாப்புக் குழுவினர்
பாண்டியர்களுக்குத்     துணையாய் விளங்கினர் என்பதைக்
கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன

http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314446.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தஞ்சை பெரிய கோவில் வரலாறு

#கதையல்லவரலாறு | News18Tamil.com | #Tanjore #Bigtemple

Voir moins

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2020 at 6:16 AM, இணையவன் said:

இன்னுமொரு கேள்வி. 1000 வருடங்களுக்கு முன்னர் தற்போதுள்ள எண்ணிக்கையான தமிழ் எழுத்துக்கள் இருந்ததா ?

எந்த ஆதாரமும் இல்லாமல் முக நூல்களில் எழுதப்படும் விடயங்களை இங்கே இணைக்காமல் விட்டால் இதுபோன்ற கேள்விகள் எழுவதை  இலகுவாகத் தவிர்க்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.