Jump to content

மீண்டும் ரிசார்ட்டுக்கு படையெடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்!


Recommended Posts

மீண்டும் ரிசார்ட்டுக்கு படையெடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்!

 
 

புதுச்சேரி நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் அதே ரிசார்ட்டுக்கு கூடாரத்தை மாற்றியிருக்கின்றனர்.

புதுச்சேரி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரையும் எதிரணியினர் வளைத்துவிடக் கூடாது என்பதற்காக கூவத்தூர் பாணியில் புதுச்சேரியில் தனியார் ”பீச் ரிசார்ட்டில்” தங்க வைக்கப்பட்டனர். அங்கு ஆன்லைன் மூலம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள ‘தி சன் வே மேனர்’ தனியார் விடுதிக்கு 18 எம்.எல்.ஏக்களும் தங்கள் முகாமை மாற்றியிருந்தனர். அந்த விடுதி நகரத்தின் மையப் பகுதியில் இருந்ததால் எம்.எ.ஏக்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. அதனால் மீண்டும் ஏற்கனவே தங்கியிருந்த ’விண்ட் ஃப்ளவர்’ ரிசார்ட்டுக்கு எம்.எல்.ஏக்கள் தங்கள் கூடாரத்தை மாற்றியிருக்கின்றனர்.

தினகரன்

’சன் வே’ நட்சத்திர விடுதியில் இருந்து ரிசார்ட்டுக்கு கிளம்பும்போது பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “”டிடிவி தினகரனை திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ் சந்தித்து மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். அவரைப் போல் இன்னும் பல எம்.எல்.ஏக்கள் விரைவில் வருவார்கள். வெற்றியை நோக்கியே எங்கள் பயணம் செல்கின்றது.  எத்தனை நாட்கள் நாங்கள் தங்குவோம் என்பது பற்றி தொடர்ந்து கேட்கிறீர்கள். எங்களின் துணைப் பொதுச்செயலளர் டிடிவியின் வழிக்காட்டுதல்படி அவர் என்ன கருத்தைத் தெரிவிக்கிறாரோ அதன்படி செயல்படுவோம். பொதுக்குழுவை கூட்டுவது பற்றி சசிகலாவும், டிடிவியும் முடிவு எடுப்பார்கள். ஆளுநர் அழைக்காவிட்டால் ஜனாதிபதியை சந்திப்பது தொடர்பான கருத்து தங்க தமிழ்செல்வன் தெரிவித்திருந்த கருத்துதான். ஜனாதிபதியை சந்திப்பது பற்றி டிடிவிதான்  முடிவு எடுப்பார்.

 

இலக்கை நோக்கி பயணிக்கிறோம். அதை எட்டும் வரை டிடிவி வழிகாட்டுதல் படி எங்கள் பயணம் தொடரும். வெறும் பத்து எம்எல்ஏக்களை மட்டுமே வைத்திருந்த பன்னீர்செல்வம், இந்த அரசை ஊழல் அரசு என்று விமர்சித்தார். ஆனால் அவருக்குத் துணை முதல்வர் பதவியை கொடுத்துள்ளார்கள். தற்போது சசிகலா மற்றும் டிடிவி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். கட்சியின் பொதுக்குழுவை கூட்ட சசிகலாவுக்கு அதிகாரம் உள்ளது. எடப்பாடி-பன்னீர்செல்வம் இணைப்பு தொண்டர்களின் இணைப்பு அல்ல. அது பதவிக்காக இணைப்பு. பொதுச்செயலராக சசிகலா பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டவர். அதை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குதான்  உள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் பன்னீர் செல்வம். தற்போது இபிஎஸ் அவரை பொருளாளர் என்று கூறுகிறார். நீக்கப்பட்டதை மறந்துவிட்டு மாற்றுக் கருத்துக்களை வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்று தெரிவித்தார். மேலும் சின்ன வீராம்பட்டினம் ரிசார்ட்டில் இவர்களுக்காக 5 நாட்களுக்கு மொத்தம் 20 அறைகள் புக் செய்யப்பட்டிருக்கின்றது.

http://www.vikatan.com/news/tamilnadu/100466-dinakaran-support-mlas-invade-back-to-resort.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.