Jump to content

அப்பள அளவில் மொபைல்


Recommended Posts

அப்பள அளவில் மொபைல்

pix0565-52d067734cc2c4c041b83a502ba665d66a45a666.jpg

 

டிஜிட்டல் உல­கத்தைப் பொறுத்­த­வரை, எந்­த­வொரு பொருளும் அது கண்­டு­ பி­டிக்­கப்­பட்­ட­போது இருந்­த­தை­விட, அளவு மற்றும் வச­தி­களில் அதன்பின் பல்­வேறு மாற்­றங்கள் ஏற்­ப­டு­வது வழக்கம். மொபைல் போன், தொலைக்­காட்சி உள்­ளிட்ட பல பொருட்­களை இதற்கு உதா­ர­ண­மாகச் சொல்­லலாம். முன்­னொரு காலத்தில் டேபிள் முழு­வ­தையும் அடைத்­துக்­கொண்­டி­ருந்த தொலைக்­காட்­சியின் அளவு, தற்­போது சில அங்குல தடிமன் கொண்­ட­தாக மாறி­யி­ருக்­கி­றது.

 காலப்­போக்கில் வோல்­பேப்­ப­ரைப்­போல சுவரில் ஒட்­டிக்­கொள்ளும் வகையில் தொலைக்­காட்­சியின் அளவு மாறி­னாலும் ஆச்­சர்­யப்­ப­டு­வ­தற்­கில்லை. அளவில் சிறி­ய­தா­கவும், பயன்கள் அதி­க­மா­ன­தா­கவும் கொண்­ட­தாக ஒரு பொருளை மாற்­று­வதில் நானோ டெக்­ேனா­ல­ஜியின் பங்கு மிக முக்­கி­ய­மா­னது. நானோ டெக்.ே­னா­ல­ஜியின் வளர்ச்சி கார­ண­மா­கத்தான் இன்று நாம் பல்­வேறு பலன்­களை அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்­கிறோம். தொலைக்­காட்­சி­களில் பயன்­ப­டுத்­தப்­பட்­டு­வந்த எல்.சி.டி திரையை விட அதிகச் சிறப்­புத்­தன்மை கொண்ட, அதே நேரத்தில் தடிமன் குறை­வான எல்.இ.டி திரை தயா­ரிக்­கப்­பட்­டது. அதன்பின் அதை­வி­டவும் மேம்­பட்ட ஓ.எல்.இ.டி திரை தற்­போது பெரு­ம­ளவில் பயன்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­கி­றது. தொலைக்­காட்­சியில் மட்­டு­மில்­லாமல் ஸ்மார்ட்போன் திரை­யிலும் இந்த மாற்­றங்கள் தொடர்ந்து நிகழ்ந்­து­வ­ரு­கின்­றன.

இதனால் தொடக்க காலத்தில் இருந்­த­தை­வி­டவும் தற்­போது தொலைக்­காட்­சியின் தடி­ம­னா­னது குறைந்­து­கொண்டே வரு­கி­றது. மொபைல் போன்­க­ளுக்கும் இது பொருந்தும்.

தடிமன் குறை­வான ஸ்மார்ட்­போன்கள் சந்­தையில் விற்­கப்­பட்டு வந்­தா­லும்­கூட, அவற்றின் தடி­மனை மேலும் குறைக்கும் ஆராய்ச்­சி­களும் தொடர்ந்து நடை­பெற்று வரு­கின்­றன. அந்த வகையில், கேம­ராவின் தடி­மனைக் குறைத்தால் ஸ்மார்ட்­போனின் தடி­ம­னையும் கணி­ச­மாகக் குறைக்­க­மு­டியும் என்­பதை மன­தில்­வைத்து, கலி­போர்­னியா இன்ஸ்­டிட்யூட் ஆஃப் டெக்.ே­னா­ல­ஜியைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் புதி­தாக ஆய்வு மேற்­கொண்­டனர்.

இந்த ஆய்வின் முடிவில், அதி­கத் ­த­டிமன் கொண்ட கேமரா லென்­ஸிற்­குப்­ப­தி­லாக, குறைந்த தடிமன் கொண்ட சிலிக்கான் ஃபோட்­டோனிக்ஸ் ஷீட்டைப் பயன்­ப­டுத்தி புகைப்­படம் எடுக்க முடியும் என நிரூ­பித்­துள்­ளனர். தற்­போது ரேடார் உள்­ளிட்ட பல பயன்­பா­டு­க­ளுக்கு இந்த சிலிக்கான் ஃபோட்­டோனிக்ஸ் ஷீட் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

இந்­தத்­தொ­ழில்­நுட்­பத்தால் வரும்­கா­லத்தில் டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் ஆகி­ய­வற்றின் தடி­மனும், பொருள்­செ­லவும் பெரி­த­ளவில் குறைய வாய்ப்­புள்­ளது.

லென்ஸ் செய்யும் அனைத்து வேலை­க­ளையும் இந்த ஷீட் மூலம் செய்ய முடியும். இந்த ஷீட்­டிற்குள் நுழையும் ஒளிக்­கற்­றையை, சின்­னஞ்­சி­றிய Optical Phased Array (OPA) சிப், ஒளி­ய­ணு­வியல் முறையில் புகைப்­ப­ட­மாகப் பதிவு செய்­கி­றது. இந்த முறையில் எடுக்­கப்­படும் புகைப்­ப­டத்தின் ரெசொல்­யூசன் தற்­போது மிகக்­கு­றை­வா­கவே இருக்­கி­றது.

வரும்­கா­லத்தில் இதன் திறன் மேம்­ப­டுத்­தப்­பட்டு, அதி­கத்­தரம் கொண்ட புகைப்­ப­டங்­களை இந்தத் தொழில்­நுட்பம் மூலம் பிடிக்க முடியும்.

வெளி­யி­லி­ருந்து வரும் ஒளியைக் குவித்து பின்­பு­ற­மி­ருக்கும் ஃபிலிம் அல்­லது இமேஜ் சென்­சாரில் பதிவு செய்யும் வேலை­யைத்தான், லென்ஸ் செய்­கி­றது. இதே வேலையைச் சிலிக்கான் ஃபோட்­டோனிக்ஸ் ஷீட் இனி செய்­வ­தாக வைத்­துக்­கொள்வோம். லென்ஸை விட குறைந்த பொருள்­செ­லவு மற்றும் இடத்தை மட்­டுமே சிலிக்கான் ஃபோட்­டோனிக்ஸ் ஷீட் எடுத்­துக்­கொள்ளும். இதனால் கேம­ராவின் விலையும் பெரி­த­ளவில் குறைய வாய்ப்­பி­ருக்­கி­றது. மொபைல் போன் மேலும் மெல்லியதாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.

Optical Phased Array சிப் தொழில்நுட்பம் பலன் கொடுத்தால், லென்ஸ் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் இந்த மாற்றம் எதிரொலிக்கும். டிஜிட்டல் கேமரா, மொபைல் போன், தொலைநோக்கி போன்ற பொருட்களின் தடிமன், அளவு, பொருள்செலவு, எடை போன்ற அத்தனை விஷயங்களிலும் மாற்றங்கள் ஏற்படும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/maharantham/2017-08-27#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.