Jump to content

உறவில் திருமணம்: எதிர்க்கும் தைரியம் பெண்களுக்கு இருக்கிறதா?


Recommended Posts

உறவில் திருமணம்: எதிர்க்கும் தைரியம் பெண்களுக்கு இருக்கிறதா?

உறவினர் திருமணம்படத்தின் காப்புரிமைBBC THREE/GETTY IMAGES

எனது தந்தையின் தலைமுறை மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையில் உறவினரை திருமணம் செய்து கொள்ளும் முறை எனது குடும்பத்திலும் நிலவியது.

தற்போது காலம் மாறிவிட்டாலும், பெரும்பாலான மக்கள் இதனால் உண்டாகும் சிக்கல்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டார்கள் என்று எனக்கு தோன்றவில்லை.

இப்போது எனக்கு 18 வயது ஆகிறது.

தற்போது, `நான் எனது உறவினரை திருமணம் செய்ய வெண்டுமா?` என்ற ஆவணப் படத்தை இயக்கி வருகிறேன்.

பாகிஸ்தானில் மிகவும் இளம் வயதில் திருமணம் செய்து கொள்வது விசித்திரமானதல்ல. பிரிட்டன் வாழ் பாகிஸ்தானியர்களில் இந்த வழக்கம் குறைவான ஒன்றுதான். இங்கு பெரும்பாலானோர் முதலில் வேலைவாய்ப்புகள் மற்றும் பட்டப்படிப்புகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு கலாசாரத்தில் இருந்து நீங்கள் வரவில்லை என்றால், உறவினரை ஏன் திருமணம் செய்கிறார்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது.

உறவினரை திருமணம் செய்வது கண்டிப்பாக மதம் சார்ந்த ஒன்றல்ல. இஸ்லாமிய மதத்தில் இருப்பதன் மூலம்தான் இதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இந்த திருமண முறை மிகவும் வெளிப்படையாக மற்றும் தெளிவற்ற முறையில் நடக்கிறது. பாகிஸ்தான் கலாசாரத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் கூட, அவர்களின் குடும்பம் மற்றும் வளரும் முறையை அடிப்படையாகக் கொண்டது.

உறவினர் திருமணம்படத்தின் காப்புரிமைBBC THREE

என்னுடைய தாத்தா அவர் வாழ்ந்த காலத்தில் கார் மற்றும் தொலைபேசிகளை கொண்டிருக்கவில்லை. ஃபேஸ்புக்கோ அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற புதிய நபர்களை சந்திக்கும் சமூக வலைதளங்களோ அப்போது இல்லை. நகரத்திற்கு சென்று இரவு நேரத்தில் ஊர் சுற்றவும் இல்லை.

பாகிஸ்தானின் ஒரு சிறிய கிராமத்தில் நீங்கள் இருந்தால், கண்டிப்பாக உங்கள் உறவினரை மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும், வேறு வாய்ப்புகள் இருக்காது.

அன்பை முன்னிறுத்தி திருமணம் செய்து கொள்ளும் உறவினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெரும்பாலும் பெற்றோர்களின் முடிவுகளுக்காக இதுபோன்ற திருமணங்கள் நடக்கும்.

நான் இங்கிலாந்தில் முற்றிலும் வேறுபட்ட குடும்ப பின்னணியில் வளர்ந்தவள். நான் யாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை எனது பெற்றோர்கள் முடிவு செய்ய மாட்டார்கள்.

உறவினர் திருமணம்படத்தின் காப்புரிமைBBC THREE

எனது பெற்றோர்களின் ஆலோசனைகள் எனக்கு தேவைப்படும். மேலும் எனது தேர்வு அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். ஆனால், எனது வாழ்க்கை குறித்து நான்தான் முடிவெடுக்க வேண்டும். எனது கணவருடன் நான்தான் வாழப்போகிறேன், எனது பெற்றோர் அல்ல.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த போது, உருவான சாதிய அமைப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். சமூக பின்புலம் மற்றும் பண மதிப்பை அடிப்படையாக வைத்து மக்கள் பிரிக்கப்பட்டனர்.

எனது ஆவணப்படத்தில் பேசிய ஒரு பெண், `எனது தாய் நான் சாதிய அமைப்பில் இருந்து வெளியேறக்கூடாது என்பதற்காக எனது உறவினரை திருமணம் செய்து வைத்தார்` என்று குறிப்பிட்டார்.

சில குடும்பங்கள், தங்களது மகள் ஆதிக்க சாதியினரால் குறைத்து மதிப்பிடப்படக்கூடாது என்ற காரணத்திற்காக சொந்த சாதியில் உள்ள உறவினருடன் திருமணம் செய்து வைக்கின்றனர்.

இதே போன்று, தங்களிடம் உள்ள செல்வம் வேறு குடும்பத்தினருக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக ஆதிக்க சாதியினரும் தங்களது மகளை சொந்த சாதியில் உள்ள உறவினருக்கே திருமணம் செய்து வைக்கின்றனர்.

சிலரோ குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படக்ககூடாது என்றும் விரும்புகின்றனர். தங்கள் சாதி மற்ற சாதிகளை விட உயர்ந்தது என்று கருதுவதன் காரணமாகவும் உறவினரை திருமணம் செய்துகொள்ளும் முறையும் நிலவுகிறது.

உறவினர் திருமணம்படத்தின் காப்புரிமைBBC THREE

ஆனால், இதை என்னால் ஏற்க முடியவில்லை. நாம் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் அனுமதி நமக்கு இருக்க வேண்டும்.

வெவ்வேறு சாதியை சேர்ந்த எனது பெற்றோர்கள் திருமணம் செய்த கொண்ட போது சர்ச்சை உண்டானது. ஆனால், சில நாட்களுக்கு பின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிட்டன.

பாகிஸ்தானை சேர்ந்த மற்றும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஒரு நபரைத்தான் நான் திருமணம் செய்ய வேண்டும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

உறவின் முறை திருமணம் குறித்து பேசும் போது, இதனால் ஏற்படும் மரபணு சார்ந்த சிக்கல்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உறவினர் திருமணம்படத்தின் காப்புரிமைBBC THREE

ஒரே மரபணு கொண்ட உறவினர்களை திருமணம் செய்வது நல்ல முடிவு அல்ல என்பதையும் நான் அறிந்து வைத்துள்ளேன். இது சிக்கலை உண்டாக்கும் என்பதும் எனக்கு தெரியும்.

தற்போது, நான் ஆவணப் படத்தை இயக்கியுள்ளதால், இதை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாக நான் கருதுகிறேன்.

நீங்கள் உங்களது நெருங்கிய உறவினரை திருமணம் செய்வதன் மூலம் பிறக்கும் குழந்தை 2% முதல் 5% வரை குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளை இவ்வாறு எண்களை வைத்து பேச நான் விரும்பவில்லை.

உறவினர் திருமணம்படத்தின் காப்புரிமைBBC THREE

எனது ஆவணப்படத்திற்காக ஒருவரை நான் சந்தித்த போது சிறிது அதிர்ச்சியடைந்தேன்.

கடுமையாக மனநிலை குறைபாடு கொண்ட இரண்டு குழந்தைகள் அவருக்கு உள்ளார்கள். அவரது மகள் என்னைவிட ஒரே ஒரு வயதுதான் மூத்தவர். நான் எனது கல்லூரி படிப்பு குறித்தும், வேலை குறித்தும் சிந்தனை செய்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் இதுகுறித்து சிந்திக்கக் கூட வாய்ப்பில்லாமல் அவருடைய மகள் இருக்கிறார்.

நேரடியாக இதுபோன்று பாதிக்கப்படும் வரை உறவினர்களை திருமணம் செய்து கொள்வதன் மூலம் உண்டாகும் சிக்கலை நாம் உணரப்போவதில்லை.

(பிரிட்டனில் வாழும் ஒரு பாகிஸ்தான் பெண், நிக் அர்னால்டிடம் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது).

http://www.bbc.com/tamil/global-41026953

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை ஊர்களிலையும் சொந்தத்துக்கை கலியாணம் முடிச்சு வைக்கிறது ஒரு தொடர்கதையாய்/வழக்கமாய் இருந்தது....காரணம் சொத்து வெளியிலை போகக்கூடாது எண்டு ஒரு நல்ல எண்ணம். அது இப்ப கொஞ்சம் குறைஞ்சிட்டுது எண்டு நினைக்கிறன்.அதாலை வலதுகுறைஞ்ச பிள்ளையள் பிறக்குது எண்டவுடனை சனம் பயந்து போச்சுது.....
எண்டாலும் உந்த மாற்றுச்சம்பந்தம் எண்டதை நிமித்தி எடுக்கேலாமல் கிடக்கு....

அதுசரி பாகிஸ்தானிலை  புருசனுக்கு வயது 60...13வயதிலை 15 பொண்டாட்டிகள் இதுதான் அந்தநாட்டு பண்பாடு பழக்கவழக்கமாம் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்குள்ளை கலியாணம் செய்தால்...கனக்கப் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும்!

தேவையான நேரம் கட்டிப் பிடிக்கவும் ஏலாது! தள்ளிப் படுக்கவும் ஏலாது!:mellow:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

உறவுகளுக்குள்ளை கலியாணம் செய்தால்...கனக்கப் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும்!

தேவையான நேரம் கட்டிப் பிடிக்கவும் ஏலாது! தள்ளிப் படுக்கவும் ஏலாது!:mellow:

அடி கொஞ்சம் பலமாய் இருந்திருக்கும் போலை கிடக்கு....:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

உறவுகளுக்குள்ளை கலியாணம் செய்தால்...கனக்கப் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும்!

தேவையான நேரம் கட்டிப் பிடிக்கவும் ஏலாது! தள்ளிப் படுக்கவும் ஏலாது!:mellow:

விசுகர்... சொந்த மச்சாளை  தான், கலியாணம் கட்டினவர். 
ஆள்.... "கம்பு"  மாதிரி திரியுறார் :grin:. அவருக்கு.. பிரச்சினை  இருக்கிற மாதிரி தெரியவில்லையே..... :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

விசுகர்... சொந்த மச்சாளை  தான், கலியாணம் கட்டினவர். 
ஆள்.... "கம்பு"  மாதிரி திரியுறார் :grin:. அவருக்கு.. பிரச்சினை  இருக்கிற மாதிரி தெரியவில்லையே..... :D:

அங்கால...இஞ்சால..ஆள் வளைய ஏலாத படியால தான்.....கம்பு மாதிரித் திரியிறார் எண்டு நான் நினைக்கிறன்!tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/08/2017 at 5:21 AM, தமிழ் சிறி said:

விசுகர்... சொந்த மச்சாளை  தான், கலியாணம் கட்டினவர். 
ஆள்.... "கம்பு"  மாதிரி திரியுறார் :grin:. அவருக்கு.. பிரச்சினை  இருக்கிற மாதிரி தெரியவில்லையே..... :D:

சொந்த  மச்சாள்  என்பதைவிட

நாம்  விரும்பவதைவிடுத்து

நம்மை விரும்பியவரை கலியாணம்  கட்டியதால்  ராசாக்கள்..:love:

On 25/08/2017 at 7:09 AM, புங்கையூரன் said:

அங்கால...இஞ்சால..ஆள் வளைய ஏலாத படியால தான்.....கம்பு மாதிரித் திரியிறார் எண்டு நான் நினைக்கிறன்!tw_cry:

அண்ணன் பாவம்

ஏரியா தெரியாமல்  தலையை  நீட்டினால்  இப்படித்தான்  அழணும்...:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.