Jump to content

விவேகம் திரை விமர்சனம்


Recommended Posts

 
card-bg-img
 
 

Vivegam

அஜித் தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். வேதாளம் என்ற மெகா ஹிட் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவாவுடன் ஹாட்ரிக் அடிக்க விவேகத்தில் கைக்கோர்த்து 2 வருட கடின உழைப்பிற்கு பிறகு இன்று உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளுக்கு மேல் வந்துள்ள படம் தான் விவேகம்.

வீரம், வேதாளத்தில் பிரமாண்ட வெற்றியை தொட்ட இந்த கூட்டணி விவேகத்தில் மீண்டும் அந்த வெற்றியை தக்க வைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

அஜித் ஒரு இண்டர்நேஷ்னல் ஸ்பை, ஜேம்ஸ் பாண்ட் போல் முடிக்க முடியாத பல விஷயங்களை அஜித் மிக சாதாரணமாக முடிக்கும் அளவிற்கு திறமை கொண்டவர்.

அவருடைய டீம் 5 பேர், இதில் விவேக் ஓபராயும் ஒருவர், இவர்களுக்கு ஒரு மிஷின் வருகின்றது. அதில், உலகத்திற்கு தெரியாமல் மூன்று நியூக்ளியர் (Nuclear) வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளனர்.

அது தவறான நபர்கள் கையில் கிடைத்தால் உலகமே பெரும் ஆபத்தை சந்திக்கும், அதே நேரத்தில் இந்த பொறுப்பு அஜித் கையில் வர, நியூக்ளியர் வெடிகுண்டுகளை அகற்றும் பாஸ்வேர்ட் அக்‌ஷரா ஹாசனுக்கு தான் தெரியும்.

அவரை அஜித் கண்டுபிடித்து, அந்த வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் நேரத்தில் பல அசம்பாவிதங்கள் நடந்து, அவருடைய வாழ்வே திசை மாறுகின்றது. பின் தன் சூழ்ச்சிகளை அஜித் எப்படி முறியடித்தார் என்பதே இரண்டாம் பாதி.

படத்தை பற்றிய அலசல்

அஜித், அஜித், அஜித் என்று ஒன் மேன் ஆர்மியாக படம் முழுவதையும் தாங்கி செல்கின்றார். அதிலும் தனக்கு கொடுக்கும் மிஷின்களை அவர் கையாளும் விதம், அவரின் மேனரிசம் என ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக மிரட்டுகின்றார். அதிலும், தனக்கான துரோகம் தெரிந்து அவர் தன்னை தயார் படுத்தும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு செம்ம விருந்து.

காஜலுக்கு மிகவும் அழுத்தமான கதாபாத்திரம், படம் முழுவதும் கதையின் ஓட்டத்திலேயே அவருடைய கதாபாத்திரம் பயணிக்கின்றது. அதிலும் தன்னை கொலை செய்ய வருபவர்களை அஜித் தூரத்தில் இருந்து சுடும் காட்சி, அதற்கு காஜல் கொடுக்கும் ரியாக்‌ஷன் சூப்பர்.

ஆனால், அக்‌ஷரா இரண்டே காட்சிகளில் தான் வருகின்றார், அது கொஞ்சம் ஏமாற்றம். மேலும், படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை பரபரப்பாக இருக்கின்றது. ஆனால், பல விஷயங்கள் ஏ செண்டர் ஆடியன்ஸுகளுக்கே புரிய வாய்ப்பில்லை. மிகவும் படம் அந்நியப்பட்ட உணர்வு.

படத்தின் மிகப்பெரிய பலமே ஸ்டெண்ட் தான், ஒவ்வொரு காட்சியிலும் அனல் பறக்கின்றது. அதிலும் அந்த மோட்டர் பைக் சேஸிங் காட்சி விசில் விண்ணை பிளக்கின்றது. கிளைமேக்ஸ் 6 பேக் காட்சி நீங்களே திரையில் பார்த்து கொண்டாடுங்கள்.

வீரம், வேதாளத்தில் ஒரு சில மாஸ் காட்சிகளுக்காகவே படத்தை பார்க்கலாம், அப்படி இதில் குறிப்பிடும்படி பெரிதும் இல்லை. மேலும், கிளைமேக்ஸில் காஜலை வைத்து அஜித் மோதும் காட்சி சிவா ஹாலிவுட் மேக்கிங். நம்மூர் மக்களுக்கு ஏற்ற மசாலா வைப்பதில் தடுமாறிவிட்டார்.

க்ளாப்ஸ்

அஜித் ஒன் மேன் ஆர்மி.

வெற்றியின் ஒளிப்பதிவு, இதுவரை தமிழ் சினிமா பார்க்காத தளத்தை காட்டி அசத்தியுள்ளார். சண்டைக்காட்சியில் வெற்றிக்கு தனி அப்ளாஸ் கொடுக்கலாம்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றது.

சண்டைக்காட்சிகள் குறிப்பாக கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி பெரும் பலம்.

நிறைய காட்சிகளை மக்களுக்கு புரியும் அளவிற்கு சரியாக கட் செய்திருக்கிறார் எடிட்டர் ரூபன்.

பல்ப்ஸ்

அனைத்து தரப்பினருக்கும் கதை புரியுமா? என்றால் கேள்விக்குறி தான்.

அக்‌ஷராவை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் படத்தின் வேகம் அதிகம், எதிர்ப்பார்த்த விவேகம் கொஞ்சம் குறைவு.

http://www.cineulagam.com/films/05/100857?ref=home

Link to comment
Share on other sites

அஜித்துக்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்!

 

நடிகர் அஜித் உள்ளிட்ட விவேகம் படக்குழுவினருக்கு கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ajith_09086.jpg


’சிறுத்தை’ சிவா - அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் விவேகம் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் சண்டைக் காட்சிகளுடன் வெளியாகியிருக்கும் விவேகம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விவேகம் படத்தில் அஜித்துடன், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட முன்னணி கலைஞர்கள் நடித்துள்ளனர். வேதாளம் படத்தைத் தொடர்ந்து அஜித் நடித்துள்ள விவேகம் படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து நடித்த ஷமிதாப் படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள முதல் தமிழ் திரைப்படம் விவேகம் ஆகும். 

Kamal_Tweet_09078.jpg

 

இந்த நிலையில், அஜித் உள்ளிட்ட விவேகம் படக்குழுவினருக்கு ட்விட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'படம் குறித்து நல்ல சேதிகளே கேள்விப்படுவதாகப்' பதிவிட்டுள்ள கமல், அக்‌ஷராவுடன் இணைந்து விவேகம் படத்தைப் பார்த்து வருவதாகவும் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/cinema/100194-kamal-wishes-ajith-for-vivegam-release.html

Link to comment
Share on other sites

விவேகம்

 
விவேகம்
நடிகர் அஜித்குமார்
நடிகை காஜல் அகர்வால்
இயக்குனர் சிவா
இசை அனிருத் ரவிச்சந்தர்
ஓளிப்பதிவு வெற்றி
79
100
 
 
 
 
இராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அஜித், தனக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு வேலையையும் தனி ஆளாக சென்று சமாளிக்கும் வல்லமை படைத்தவர். அஜித், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட 4 பேர் ஒரு குழுவாக இருக்கின்றனர். இந்நிலையில் அஜித், காஜல் அகர்வால் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இராணுவத்தில் ரகசிய பொறுப்பில் இருக்கும் அஜித்தின் குழுவுக்கு ஒரு வேலை வருகிறது.

அதிநவீன ஆயுதம் ஒன்று பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதேபோன்ற இரு ஆயுதங்கள் இந்தியாவில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் வர, அதனை கண்டுபிடிக்க ராணுவத்தின் சார்பாக அஜித்தின் குழு செல்கிறது. அவர்களது வேட்டையில் அந்த ஆயுதத்தை ஹேக் செய்து வெடிக்கச் செய்தது அக்‌ஷரா ஹாசன் என்பதும் தெரிய வருகிறது.

201708240838558742_1_Vivegam-Review3._L_

அக்‌ஷராவை கண்டுபிடித்தால் தான் அந்த கருவியை செயலிழக்கச் செய்ய முடியும். இந்நிலையில் கருணாகரன் உதவியோடு அஜித் மற்றும் அவரது குழு அக்‌ஷராவை கண்டுபிடிக்கிறது. மேலும் அக்‌ஷராவிடம் அஜித் ரகசிய விசாரணை ஒன்றை நடத்துகிறார். அதில் அக்‌ஷரா அந்த ஆயுதத்தை வெடிக்க வைக்கவில்லை என்பதும், அக்‌ஷரா ஒரு ஹேக்கர் மட்டுமே என்பதும் தெரிய வருகிறது. சிலரின் தூண்டுதலால், தான் அக்‌ஷரா அந்த ஆயுதத்தை ஹேக் செய்து கொடுத்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் தனக்கு பின்னால் தான் தெரிய வந்தது என்றும் அக்‌ஷரா கூறுகிறார்.

இந்நிலையில், அக்‌ஷராவை கொல்ல வேண்டும் என்றும், அந்த ஆயுதங்களை கைப்பற்ற வேண்டும் என்றும் விவேக் ஓபராய் கூற, அவரது யோசனைக்கு அஜித் மறுப்பு தெரிவித்து அவளை பாதுகாப்பாக அழைத்து செல்லும் போது, விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட அஜித்தின் மற்ற நண்பர்கள் அக்‌ஷராவை கொன்றுவிடுகின்றனர். மேலும் அஜித்தையும் சுட்டுவிட்டு அந்த ஆயுதங்களை கைப்பற்றி பல ஆயிரம் கோடிக்கு அதனை விற்க முடிவு செய்கின்றனர்.

201708240838558742_2_Vivegam-Review6._L_

அதேநேரத்தில் அந்த ஆயுதங்களை அஜித் கடத்திவிட்டதாக பழி சுமத்திவிடுகின்றனர். ஒரு மலைப்பகுதியில் நடக்கும் இந்த சண்டையில் குண்டு காயம் பட்ட அஜித் மரம் ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். இந்நிலயில் உயிருடன் திரும்ப வரும் அஜித் விவேக் ஓபராய் மற்றும் அவரது நண்பர்களை எப்படி பழிவாங்குகிறார்? தன் மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க என்ன செய்தார்? உயிருடன் வரும் அஜித்துக்கு விவேக் ஓபராய் மற்றும் அவரது ழுகுவினர் என்னென்ன இடைஞ்சல் கொடுக்கின்றனர்? அவர்களால் வரும் பிரச்சனைகளை அஜித் எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

தனது 25-வது வருடத்தில் அடி எடுத்து வைத்துள்ள அஜித்தின் ஸ்டைலுக்கும், மாஸுக்கும் தீனி போடும் படமாக இது அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இராணுவ அதிகாரிக்கு உரிய தோரணையிலும், அதற்குண்டான தனித்தன்மையை வெளிப்படுத்துவதிலும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. படத்தில் அஜித்தின் மாஸ் காட்சிகள் ஏராளம். காட்சிக்கு காட்சி வியக்க வைக்குப்படி நடித்திருக்கிறார். படத்திற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல் அஜித் பேசும் வசனங்கள் அனைத்திற்கும் விசில் பறக்கிறது. ஒரு ஹாலிவுட் ஹீரோவுக்குண்டான ஸ்டைலில் அஜித் ராணுவ உடை, சாதாரண உடை, மண், புழுதி என அழுக்குப் படிந்திருந்தாலும் அது அவருக்கு அழகாகவே இருக்கிறது.

201708240838558742_3_Vivegam-Review4._L_

காஜல் அகர்வால் இதுவரை ஏற்று நடிக்காத புதுமையான கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அஜித்துடன் மனைவியாக வரும் காட்சியிலும், அவர் மீது அக்கறை கொள்ளும் காட்சியிலும் அவரது நடிப்பு சிலிர்க்க வைக்கும்படியாக இருக்கிறது. படம் முடியும் தருணத்தில் காஜல் அகர்வாலின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

விவேக் ஓபராய் ஒரு பாதியில் ஹீரோவாகவும், மறு பாதியில் வில்லனாகவும் மாறி ரசிக்க வைக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பாகுபலி படத்தில் பிரபாசுக்கு குரல் கொடுத்தவரே இந்த படத்தில் விவேக் ஓபராய்க்கும் குரல் கொடுத்திருக்கிறார். அந்த கனீர் குரலில் அவர் பேசும் வசனங்கள் கேட்பதற்கு ரசிக்கும்படி இருக்கிறது.

201708240838558742_4_Vivegam-Review5._L_

ஒரு ஹேக்கராக அக்‌ஷரா ஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அக்‌ஷராவின் முதல் காட்சி ரசிக்கும்படி இருந்தது. அதேபோல் கருணாகரன் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார். செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக், ஆரவ் சவுத்ரி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என்ற இரு படங்களை கொடுத்த சிவா, முற்றிலும் மாறுபட்டு ஒரு ஹாலிவுட் ஸ்டைலில் அஜித்தை மாஸாக காட்டியிருக்கிறார். முதல் பாகத்தில் பட்டாசு சத்தம் போல துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்க, அடுத்த பாதியில் அஜித்தின் மாஸ் காட்சிகள் அதிகளவில் காட்டப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக அஜித்தை எல்லா லுக்கிலும் அழகாக காட்டியிருப்பது சிறப்பு. வெற்றி, தோல்வி குறித்து அஜித் பேசும் வசனங்கள் உட்பட படத்தில் வரும் வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. இது அஜித்தின் லுக்காக பார்க்க வேண்டிய படம். அதேபோல் விவேக் ஓபராய், அக்‌ஷரா கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஒரு முழு அதிரடி படத்திலும் தனக்கே உரிய ஸ்டைலில் செண்டிமென்ட் காட்சிகளையும் வைத்திருப்பது சிவாவின் சிறப்பு. விவேகம் என்ற தலைப்புக்கு ஏற்ப படம் அதிவேகமாக இருக்கிறது.

அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது. வெற்றியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதும் படத்திற்கு பலம்.

மொத்தத்தில் `விவேகம்' அதிவேகம்.
 
 
 

http://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/08/24074955/1104138/Vivegam-Movie-Review.vpf

Link to comment
Share on other sites

திரைப்பட விமர்சனம்: விவேகம்

அஜித் மற்றும் காஜல் அகர்வால்
 
திரைப்படம் விவேகம்
   
நடிகர்கள் அஜீத் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஸராஹாசன், கருணாகரன்
   
ஒளிப்பதிவு வெற்றி
   
இசை அனிருத்
   
இயக்கம் சிவா

அஜீத்தும் இயக்குநர் சிவாவும் தொடர்ச்சியாக இணைந்து உருவாக்கியிருக்கும் மூன்றாவது படம், அஜீத்குமார் நடிக்க வந்து 25வது வருடத்தில் வந்திருக்கும் படம், முழுக்க முழுக்க ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட படம் என "விவேகம்" அஜீத்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் அணுகுண்டுகளை வெடிக்கச்செய்து ஒரு நிலநடுக்கத்தை உருவாக்கும் கும்பல், மேலும் இரண்டு அணுகுண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிடுகிறது. அதனைத் தடுக்க செர்பியாவில் உள்ள ஒரு பயங்கரவாத எதிர்ப்புப் படை (உளவுப் படை?) ஒன்று களமிறங்குகிறது.

திரைப்பட விமர்சனம்: விவேகம்

அதன் சார்பில் செயலில் இறங்குகிறார் அஜய்குமார். நடாஷா என்ற ஹேக்கரால்தான் அதனை தடுக்க முடியும் என அவளைத் தேட, அவள் கொல்லப்படுகிறாள்.

இந்தக் கட்டத்தில் ஆர்யன் உள்ளிட்ட நண்பர்கள்தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. அவர்களை முறியடித்து எப்படி அணுகுண்டை அஜய்குமார் செயலிழக்கச் செய்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நாயகன் அறிமுகமாவதைப் போல ஒரு பெரிய ஆக்ஷன் காட்சியில் அறிமுகமாகிறார் அஜீத்குமார். ஒரே ஒரு வித்தியாசம். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அந்த சண்டை எதற்காக, யாருடன் நடக்கிறது, எப்படி நடக்கிறது என்பது தெளிவாகப் புரியும். விவேகத்தில் கண்ணைக் கட்டி பனிக் காட்டிற்குள் விட்டதைப் போல இருக்கிறது.

திரைப்பட விமர்சனம்: விவேகம்

சரி, துவக்கம்தான் இப்படி, படம் வேறு மாதிரி இருக்கும் என்று காத்திருந்தால் அதிலும் ஏமாற்றம். படம் துவங்கியதிலிருந்து முடிவதுவரை தொடர்ந்து யாராவது யாரையாவது சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.

எந்த நாட்டின் உளவு முறியடிப்பு அல்லது பயங்கரவாத முறியடிப்புப் படை அணுகுண்டை செயலிழக்கச்செய்யும் பணியில் இறங்குகிறது? அந்த நாட்டில் அரசு என்ற ஒன்றே இருக்காதா?

20, 30 பேர் சேர்ந்து எந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். அஜீத் மேல் ஒரு குண்டுகூட படுவதில்லை. மிகப் பெரிய அணைக்கட்டிலிருந்து கீழே குதிக்கும் அஜீத், கீழே விழுந்துகொண்டிருக்கும்போது துப்பாக்கியை எடுத்துச் சுட்டு நான்கைந்து பேரைக் கொன்றுவிடுகிறார்.

திரைப்பட விமர்சனம்: விவேகம்

வில்லனாக வரும் விவேக் ஓபராய் ரொம்பவும் பாவம். படம் முழுக்க, அஜீத்தைப் பற்றி பஞ்ச் வசனங்களைப் பேசிக்கொண்டேயிருக்க வேண்டிய வேலை.

"ஒரு வழி இருந்தாலே அவன் ஆடுவான். அறுபது வழி இருக்கு அடங்கவே மாட்டான்", "அஜய்குமார் உங்க பார்வையில் படக்கூடாது என்று முடிவுபண்ணீட்டா, அவன் நிழலைக்கூட உங்களால நெருங்க முடியாது", "போராடாம அவன் போகவும் மாட்டான், சாகவும் மாட்டான்" - இதெல்லாம் வில்லன் அஜீத்திற்காக சொல்லும் பஞ்ச் வசனங்கள். இது தவிர, அஜீத் கேமராவைப் பார்த்து பேசும் பஞ்ச் வசனங்கள் தனி.

திரைப்பட விமர்சனம்: விவேகம்

ஒரு படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளாலும் ஆக்ஷன் காட்சிகளாலும் நிறைந்திருப்பது பிரச்சனையில்லை. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வகை திரைப்படங்கள் அப்படித்தான் இருக்கின்றன. ஆனால், அந்த சண்டையும் ஆக்ஷனும் யார் - யாருக்கிடையில், எதற்காக நடக்கின்றன என்பதில் ஒரு தெளிவு இருக்கும். இந்தப் படத்தில் அந்தத் தெளிவு இல்லை.

 

படம் நெடுக, இடத்தின் பெயர், நேரம் போன்றவற்றை எழுத்தில் காண்பிக்கிறார்கள். ஆங்கிலத்தில் வரும் அந்த வார்த்தைகளைப் படிப்பதற்கு முன்பாக அவை நீங்கிவிடுகின்றன. படம் பார்ப்பவர்கள் படித்துவிடக்கூடாது என்றால் அதை எதற்காக காண்பிக்க வேண்டும்?

திரைப்பட விமர்சனம்: விவேகம்

ஆக்ஷன் படம் என்பதால், அஜீத்திற்கு நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பேயில்லை. அஜீத்தின் மனைவியாக வரும் காஜல் அகர்வாலின் நடிப்பில் சொல்வதற்கு ஏதும் இல்லை. இரண்டு மூன்று காட்சிகளில் வந்துவிட்டுச் செத்துப் போகிறார் அக்ஸரா ஹாசன். மொழிபெயர்ப்பாளராக வரும் கருணாகரன், சில காட்சிகளுக்குப் பிறகு காணாமல்போய்விடுகிறார்.

திரைப்பட விமர்சனம்: விவேகம்

இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காகவும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் அஜீத் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது மட்டுமே படத்தின் நினைவாக எஞ்சக்கூடும்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-41036621

Link to comment
Share on other sites

"விவேகமா வீடியோகேமா?" - விவேகம் திரைப்படம் குறித்து சமூக வலைதளத்தில் மக்கள் கருத்து

vivegam

அஜீத் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த விவேகம் திரைப்படம் குறித்தான பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. முக்கியமாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

vivegam

ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட படம் என்று கூறப்பட்ட நிலையில், விவேகம் வீடியோகேம் போன்று உள்ளதென்றும், எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்றும் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.

vivegamபடத்தின் காப்புரிமைTWITTER vivegamபடத்தின் காப்புரிமைTWITTER vivegamபடத்தின் காப்புரிமைTWITTER

விவேகம் படத்திற்காக கடுமையாக உழைத்துள்ள நடிகர் அஜீத் குமாருக்காக வேண்டுமென்றால் இந்த படத்தை பார்க்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

vivegamபடத்தின் காப்புரிமைTWITTER vivegamபடத்தின் காப்புரிமைTWITTER

மேலும், கமல் ஹாசன் மற்றும் சிவகார்த்தியேன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் விவேகம் படம் குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

vivegamபடத்தின் காப்புரிமைTWITTER vivegamபடத்தின் காப்புரிமைTWITTER

இது ஒருபுறமிருக்க விவேகம் படத்திற்கு ஆதரவாகவும் சில கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.

vivegamபடத்தின் காப்புரிமைTWITTER vivegamபடத்தின் காப்புரிமைTWITTER

பிற செய்திகள் :

http://www.bbc.com/tamil/arts-and-culture-41042165

Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: 'விவேகம்'- பிரியாணியா, பழைய தக்காளி சோறா?

 

 
vivegam

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விவேகம்'. இப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படம் குறித்த நெட்டிசன்களின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Srinivasan J

'விவேகம்' படம் மொக்கையானதுக்கு டைரக்டர் சிவாவை அஜித் ரசிகர்கள் திட்டுவதில் அர்த்தமேதுமில்லை. திருப்பாச்சி, சிவகாசி என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை எடுத்த பேரரசுதான் திருப்பதி என்ற படத்தை எடுத்தார். புட்டுக்கிச்சி!

காரணம் யாரென்று நான் சொல்லியா தெரிய வேண்டும்!

Suresh Eav

விக்ரம் நடிச்ச 'தாண்டவம்' படத்த டிங்கரிங் பண்ணி ரொம்ப ஸ்டைலிஷா, பக்காவா எடுத்துருக்காங்க #விவேகம்

Vivika Suresh

'விவேகம்'னு பேர் வச்சு படத்த மாசக்கடைசில ரிலீஸ் பண்றாய்ங்க...

Boopathy Murugesh

'விவேகம்' டிக்கெட்ட பார்த்துட்டு வீட்ல டிக்கெட் எவ்வளவுன்னு கேட்டாங்க..

250 ரூபாய்ன்னு சொன்னேன்.. இவ்வளவு விலையா விக்குதுன்னு அதிர்ச்சியாகுறாங்க..

உண்மையான விலைய சொன்னா சோத்துல விஷம் வைப்பாங்க போல..

Mubashir

ஒரு தியேட்டர் போய் என்னென்ன படம் ஓடுதுன்னு போஸ்டர் தேடுறதுதானே வழக்கம். ஆனா இந்த அஜித் ரசிகர்கள் வச்சுருக்க ப்ளெக்ஸ், பேனர், கட் அவுட்ல தியேட்டர் எங்கன்னு தேட வேண்டி இருக்கு.. #விவேகம்

Vinayaga Murugan

விவேகம் படத்துல அஜீத் இண்டர்போல் ஆபீசர். சைபீரிய காட்டுல இருந்து நடந்தே இந்தியாவுக்கு வந்துடறார் என்று ஒரு பதிவு பார்த்தேன்.

இது உண்மையா? வெறும் கலாயா? ஆனால் பூகோள ரீதியாக இது சாத்தியம்தான். ஐரோப்பிய கண்டத்திலிருந்து ஆசிய கண்டத்துக்கு நடந்து வரலாம்.

Divya Bharathi

"விவேகம்" படத்திற்காக இன்று தன்னிச்சையாக திரண்டுள்ள இளைஞர் கூட்டத்தில் ஒரு பாதி கூட, நீட் தேர்வுக்கு எதிராக திரளவில்லை எனில் கண்டிப்பாக பிரச்சனை நம்மிடம்தான் உள்ளது.

C P Senthil Kumar

விவேகம் இடைவேளை. இது வரை வேகம் #VivegamFDFS

Srinivasan

'விவேகம்' - ஒரு வரி விமர்சனம்!

பிரியாணி சாப்பிடலாம்ன்னு வெறித்தனமா போனவர்களுக்கு பழைய தக்காளி சோறுதான் கிடைச்சதாம்!

சித்தன் ஆனந்த்குமார்

அஜித் ரசிகன் அல்லாத ஒரு இயக்குனர் மட்டுமே அஜித்தை வைத்து நல்ல படத்தை தர முடியும்..

ஒரு கெட்டப் நல்லா இருக்குனு அதையே திரும்ப திரும்ப போட்டா போஸ்டர் கூட வித்தியாசம் தெரியாது, படம் பார்க்கவும் தோணாது. மாஸ்னு சொன்னா பாட்ஷா, மாணிக்கம், அண்ணாமலை, அருணாசலம், சந்திரமுகி, குசேலன், சிவாஜி, எந்திரன் வரைக்கும் கெட்டப் மாத்தி மாத்தி நடிக்கிறவன்தான் மாஸ் நடிகன்.. சால்ட் பெப்பர் உள்ளே உட்கார்ந்து அதையே 12 வருசமா ஓட்டிட்டு இருக்கிற ஆளு இல்லை..

பரிமேலழகன் பரி

தமிழ் சினிமாவில் ஹீரோ ஒர்ஷிப்க்கு முடிவே இல்லை போல்தான் தெரிகிறது.

Ranjith Kannan

உன்கூட இருக்குறது சந்தோசங்கிறதவிட, நீதான் என் சந்தோசம்... #விவேகம்

hbd anjana‏ @iRaVuSu

இதுக்கு வேதாளமே தேவலாம்னு சொல்லாம்... ஆனா இவங்க வேதாளம் நல்ல படம்னு நினைச்சிப்பாங்ளோனு பயமாருக்கு... #விவேகம்

K N A‏ @AlwaysKNA

கேரளா விநியோகஸ்தர் நிலைமைய நினைச்சாதான் கொஞ்சம்... #விவேகம்

அருள் ரொம்பகெட்டவன்‏ @arulmsr

'விவேகம்' ஒரு வரி விமர்சனம்- தமிழில் ஒரு ஹாலிவுட் திரைப்படம். நன்றி சிவா அண்ணா

Ajith R Rajesh‏ @anchor_rajesh

'விவேகம்' டேம் ஜம்ப் ஃபைட்ட கலாய்க்குறது யாருனு பார்த்தா, சைக்கிள் ஓட்டுறதுக்கே க்ரீன் மேட் போட்டவரோட ரசிகமணிகளாம்..

வளருங்கப்பா.. #Vivegam

Vibinesh‏ @VibineshC

சில இந்திய மசாலாக்களை தூவாமல் இருந்திருந்தால் அஜித்திற்கு 'விவேகம்' ஒரு 'துப்பாக்கி' #Vivegamreview

தளபதி‏ @6p8yCFafyGlvLl7

#விவேகம் விமர்சனம் கேட்கும் போது ஒரு விதத்துல மனசு கஷ்டமா இருக்கு. எங்க தல ஹாலிவுட் பக்கம் போயிடுவாரோன்னு..

Sutherson Tamizh

'விவேகம்' படம் மொக்கை எனவும் அஜித்தையும், ரசிகர்களையும் ஓட்டுறவங்க யாரும் இதுவரை படம் பார்க்கவில்லை. கழுவி ஊத்தறதுக்கு மொதல்ல படம் பாத்திருக்கணும் மக்கா.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19552871.ece

Link to comment
Share on other sites

நண்பன் அஜித்துக்கு ஒரு வேண்டுகோள்! - 'விவேகம்' விமர்சனம்

தமிழ்நாடு, இந்தியா இப்போது இண்டெர்நேஷனல் என கதைக்களத்தில் அடுத்தடுத்த நகர்ந்த் அஜித் - சிவா டீம், அவுட்புட்டில் அதை சாதித்திருக்கிறதா?  

அஜித்

 


பல்கேரியாவில் கவுன்டர் டெரரிஸ்ட் ஸ்குவாட் ஏஜென்ட் ஏ கே (அஜய் குமார்). தேட முடியாதவர்களைக் கண்டுபிடிப்பது, கொல்ல முடியாதவர்களை தேடிக் கொல்வதில் ஸ்பெஷலிஸ்ட் (280 மிஷன் அதில் 279 ஆன் டார்கெட்). அஜித்தின் உயிர் நண்பன் மற்றும் டீம் மேட்  ஆர்யன் (விவேக் ஓபராய்). உலகின் மூன்று இடங்களில் செயற்கை நிலநடுக்கத்தை உண்டாக்கி அழிக்கக்கூடிய ஆயுதத்தை செயலிழக்கச் செய்யும் அசைன்மென்ட் அஜித் டீமிடம் வருகிறது. அதற்காக நடாஷா என்கிற பெண்ணைக் கண்டுபிடிக்க கிளம்புகிறார். ஆயுதத்தை செயழிக்கச் செய்யும் டீக்ரிப்ஷன் ட்ரைவையும் கைப்பற்றுகிறார். ஆனால், நம்பிய ஒருவர் முதுகில் குத்தி துரோகம் செய்ய.... அடுத்து என்ன?  பழிவாங்கல்... தலை விடுதலை... சர்வைவாதான். 

அஜித் தன் மீதான எதிர்பார்ப்பை எந்த விதத்திலும் குறைவில்லாமல் வழங்கி இருக்கிறார். கவுன்டர் டெரரிஸ்ட் ஸ்குவாடைச் சேர்ந்தவர் என்பதை நம்பும் அளவுக்கான உடலமைப்பைக் கொண்டு வந்தது, ஆக்‌ஷன், பைக் சேஸ், பனிக் காட்டில் ரிவென்ஜுக்கு தயாராவது என படத்திற்காக அஜித் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார் (படம் முடிந்த பின் மேக்கிங் காட்சிகளைப் பார்க்கவும்). சில நிமிடங்களே வந்து போனாலும் அக்‌ஷரா ஹாசன் கதாபாத்திரம் கவனிக்க வைக்கிறது. பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் அக்‌ஷராவுக்கு தமிழில் இது ஒரு நல்ல அறிமுகம். அவருக்கான ஓப்பனிங் சீனும் சூப்பர். காஜல் அகர்வாலுக்கு குடும்பப் பாங்கான, உணவகம் நடத்தும், பாட்டு க்ளாஸ் எடுக்கும் வேடம். எந்த குறையும் இல்லாமல் அதை முடித்திருக்கிறார் காஜல். ஆனால், அக்‌ஷரா காஜலுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் கூட விவேக் ஓபராய்க்கு இல்லை.காஜலை விடவும் அஜித்தை அதிகமாக லவ்வுகிறார் விவேக் ஓபராய். வருகிறார், அஜித் எப்படியாப்பட்டவர் தெரியுமா எனப் பேசுகிறார். மறுபடி வருகிறார் அஜித் அப்படியாப்பட்டவர் என சொல்கிறார். படம் முழுக்க இது மட்டும்தான் அவருக்கான வேலை. 
 

Akshara Hassan

படத்தின் தரத்தை கூட்டும் அளவு அனிருத்தின் பின்னணி இசை ஒலிக்கிறது.ஆனால் பாடல்கள் ஏனோ காதைப் பதம் பார்க்கின்றன. படத்திற்கு ஓரளவு வேகம் சேர்த்து பரபரப்பாக்குகிறது ரூபனின் படத்தொகுப்பு. விதவிதமான லொக்கேஷன்கள், பெரும்பாலும் லைவ் லொகேஷன்களில் காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் வெற்றியின் உழைப்பு குறிப்பிடத்தக்கது. காலோயன் வொடெனிசரோவ் மற்றும் கணேஷ் வடிவமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் நேர்த்தியாக இருந்தது. குறிப்பாக பைக் சேசிங், இருபுறமும் ரயில் ஓடிக் கொண்டிருக்க நடுவில் நடக்கும் சண்டைக்காட்சி போன்றவை சிறப்பு. ஹைடெக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் அலுவலகம், பயன்படுத்தும் ஆயுதங்கள் முதற்கொண்டு எல்லாமும் நம்பும்படியான தோற்றத்தில் தந்திருக்கும் மிலனின் கலை இயக்கமும் குறிப்பிட வேண்டியது. 
 


பல நூறு கோடிகள் கொட்டி படங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், 100 கோடிக்குள் ஒரு மாஸ் ஹீரோ படத்தை தரமானதாகக் கொடுக்க முடியும், அதன் அவுட் புட் சர்வதேச தரத்திலும் தர முடியும் என நிரூபித்த விதத்தில் தமிழ் சினிமாவின் மார்கெட்டை அடுத்த தளத்துக்கு எடுத்து செல்லும் முயற்சியாகப் பார்க்கலாம். அதே வேளையில் இந்தப் படத்தை வெளிநாட்டில் எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதும் தோன்றாமல் இல்லை. ஹாலிவுட் படம் போல் அதிரடியாய் இருக்கும் ஒரு படம், குடும்பக் காட்சிகளில் சிக்கி , பின் மீளமுடியாத நிலைக்கு செல்கிறது. 
 

Ajith


 "எண்ணம் போல் வாழ்க்கை நண்பா", "நட்ப சந்தேகப்படக்கூடாது, சந்தேகப்பட்டா அது நட்பே கிடையாது", "அவர்கூட உழைச்ச உனக்கே இவ்வளவு இருக்குன்னா... அவர்கூட பொழைச்ச எனக்கு எவ்வளவு இருக்கும்" என பிலோ ஆவரேஜ் வசனங்கள் ஸ்பீட் பிரேக். பன்ச் வசங்கள் பேசினால் பரவாயில்லை பேசும் எல்லாமே பன்ச்சாக மட்டுமே இருந்தால் எப்படி? அதற்காக காதல் வசனங்களில் கூடவா, "உன்னோட இருக்கறது சந்தோஷம்ங்கறத விட, நீதான் என் சந்தோஷமாவே இருக்க" என்ற மாதிரி ரொமான்டிக் வசனங்கள் எல்லாம்...ஹ்ம்ம்.   ஹீரோயின், வில்லன் சமயத்தில் ஹீரோவைப்பற்றி ஹீரோவே புகழ்ச்சியாக சொல்லிக் கொள்ளும் வசனங்கள்... ஒரு கட்டத்துக்கு மேல் தாங்கமுடியவில்லை  நண்பா. வெறும் சண்டைக் காட்சிகள், ஹீரோவைப் புகழும் வசனங்கள் மட்டுமே இருந்தால் போரடிக்கும் என்று இடையிடையே கொஞ்சம் கதையும் என்ற சிவாவின் அதே டெம்ப்ளேட்டில் இந்தப் படமும். அதிலும் வழக்கம் போல் "நாஆஆஆஆன்... யாஆஆஆர்னு" என இழுத்து இழுத்துப் பேசும் மாஸ் வசனங்கள் எல்லாம் சோதிக்கிறது. ஒரு கட்டத்தில் அஜித் வாய்ஸும், வில்லன் வாய்ஸும் ஒரே மாதிரி ஒலிக்க ஆரம்பிக்கிறது. அந்த அளவுக்கு நண்ண்ண்ண்ண்பா... நண்ண்ண்ண்பா... என பேஸ் வாய்ஸில் பேசி அல்லு கிளப்புகிறார்கள். 
 

AK57


படத்தில் பல்கேரிய மொழி பேசும் காட்சிகளுக்கு ஸ்டைலிஷ் தமிழில் டப்பிங் கொடுக்கப்பட்டிருக்கும். அதுவே அல்பேனிய மொழிப் பெயர்ப்புக்கு மட்டும் அருமைப் பிரகாசம் (கருணாகரன்) இருப்பார். அதற்கும் அதே தமிழ் டப்பிங் ஐடியாவைப் பயன்படுத்தியிருந்தால் காமெடி என்கிற பெயரில் ஆடியன்ஸ் அவஸ்தை பட தேவையிருந்திருக்காது. படம் முழுக்க டைமிங்குடன் தொடர்புடையது என்றிருந்தார் இயக்குநர். ஆம், வாட்ச் டைமிங் வைத்து ஓப்பனிங் சீனில் அணையிலிருந்து குதிக்கிறார், போனை வைத்து ட்ராக் செய்து விடுவார்கள் என 29 செக்கண்டில் கட் செய்கிறார், மூணு மணிநேரத்தில் திரும்பிவிடுவேன் எனச் சொல்லி க்ளைமாக்ஸ் ஃபைட்டுக்குக் கிளம்புகிறார். என்ன டைமிங்...!
 

Vivegam


க்ளைமாக்ஸுக்கு முன் வில்லனுக்கும் அஜித்துக்குமான அந்த உரையாடல், அஜித்தின் அடுத்த மூவை வில்லன் கணிப்பது, வில்லனின் மூவை அஜித் கணிப்பது என அந்த விறுவிறு ஆட்டம் சுவாரஸ்யமான ஒன்று. கூடவே, அல்பேனியன் கேங் உடன் மோதும் அந்த காட்சி மாஸ் ஏற்றுகிறது. ரிவர்ஸ் ஹேக்கிங், மோர்ஸ் கோட், அல்ட்ரா வைலட் ஜாமர், அக்‌ஷராவின் ஹேக்கிங் டிவைஸ் எனப் பல டெக்னிகல் விஷயங்கள் படத்தில் மிரட்டுகிறது. ஜேம்ஸ்பாண்டு கதையில் செண்டிமெண்ட்டை அனபாண்டு கொண்டு ஒட்டும் முயற்சி சரிதான். ஆனால், ஒட்டுதலில்தான் பிரச்னை. யோசிக்க கூடாத விறுவிறுப்பு ஒரு கட்டத்தில் சுமையாகி போகிறது. அந்த புள்ளியை கணித்து இலக்கை மாற்றியிருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும். ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால் முகம் மாறும் ஓகே... உயரம் கூடவா மாறும், அத்தனை மிஷன்களை முடிக்கும் ஏ கே பற்றி அதே துறை சேர்ந்த உயர் அதிகாரிக்குத் தெரியாமல் இருக்குமா என சில குறைகள் கூட ரசிகர்களுக்கான படம் என்பது மறக்க வைக்கிறது. ஆனால், அஜித் ரசிகர்கள் மட்டும் கைதட்டி, விசில் அடித்தால் போதுமா?!

 

அஜித் எப்படிப்பட்ட படத்தில் நடித்தாலும் அவருடைய ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது ஓ.கேதான். அதற்காக உங்களுடைய  ரசிகர்களுக்காக மட்டுமே நடித்துக் கொண்டிருப்பது சரிதானா நண்பா அஜித்?!

http://www.vikatan.com/cinema/movie-review/100289-vivegam-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.