Jump to content

குளங்களில் மீன்களை அள்ளிச்செல்லும் தென்பகுதி வாசிகள்

Recommended Posts

குளங்களில் மீன்களை அள்ளிச்செல்லும் தென்பகுதி வாசிகள்

கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளில் நீர் வற்­றிய நிலை­யில் உள்ள குளங்­க­ளில் காணப்­ப­டும் மீன்­களை தென்­ப­குதியிலி­ருந்து வரு­வோர் அத்­து­மீறி பிடித்­துச் செல்­கின்­ற­னர் என அப் பகு­தி­க­ளைச் சேர்ந்த மக்­கள் தெரி­வித்­த­னர்.

மாவட்­டங்­களில் மழை வீழ்ச்சி குறை­வாக காணப்­பட்­ட­தால் குளங்­க­ளில் நீர்­மட்­டம் வெகு­வா­கக் குறை­வ­டைந்­துள்­ளன.
கால்­ந­டை­க­ளுக்­காக விடப்­பட்ட தண்ணீரில் காணப்­ப­டும் மீன்­களை தென்­ப­கு­தி­க­ளில் இருந்து வாக­னங்­க­ளில் வரு­வோர் பிடித்­துச் செல்­கின்­ற­னர். இத­னால் குளங்­க­ளில் மீன்­வ­ளம் இல்­லா­மல் போகும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

சில குளங்­க­ளில் நன்­னீர் மீன் வளர்ப்­புத் திட்­டத்­தின் கீழ் இனப் பெருக்­கத்துக்காக விடப்­பட்ட மீன் குஞ்­சு­கள் வளர்ந்­துள்­ளன. அவற்­றை­யும் வலை­போட்­டுப் பிடித்து கூலர் வாக­னத்­தில் ஏற்­றிச் செல்­கின்­ற­னர்.

இது தொடர்­பாக உரிய அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்தபோதி­லும் பயன் கிடைக்­க­வில்லை. தின­மும் வாக­னங்­க­ளில் வரு­வோர் மீன்­குஞ்­சு­ க­ளை­யும் விட்­டு­வைக்­கா­மல் அவற்­றை­யும் பிடித்­துச் செல்­கின்­ற­னர்.

இத­னால் உள்­ளுர் மக்­கள் பாதிப்­ப­டை­கின்­ற­னர்.
எனவே, இது­தொ­டர்­பில் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் எனக் கோரிக்கை விடுக்­கப்­ப­டு­கின்­றது.

http://newuthayan.com/story/21913.html

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆதிக்கம்  இருக்கும்வரை இந்தநிலை மாறப்போவதில்லை. வெற்றி மமதை ஊக்குவிக்க படைகளின் பாதுகாப்புடன் ஆக்கரமிப்புத் தொடர்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nochchi said:

சிங்கள ஆதிக்கம்  இருக்கும்வரை இந்தநிலை மாறப்போவதில்லை. வெற்றி மமதை ஊக்குவிக்க படைகளின் பாதுகாப்புடன் ஆக்கரமிப்புத் தொடர்கிறது.

எங்கடை சனம்....நாங்கள் குளத்துமீன் சாப்புடுறேல்லை எண்டு சொன்னாலும் சொல்லியிருக்குங்கள்.

ஏனெண்டால் ஊர் மகிமை தெரிஞ்சவன் எண்ட முறையிலை சொல்லுறன் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இயற்கை தந்த மிகவும் இலகுவாகப் பெறக்கூடிய எத்தனையோ வளங்களை ஏறெடுத்துப்  பார்ப்பதும் இல்லை, அவற்றை உபயோகிப்பவரை பரிகசிப்பதே பெரும்பாலோரின் வழக்கம்.

இதில் நன்னீர் உணவு முழுவதும் உள்ளடக்கம்.

ஆனால் அதே வகையான நன்னீர் மீன்களை (Bream, Carp, Trout, Salmon etc.)  மேற்கத்திய நாடுகளில் ஏறத்தாழ அனைவரும் ஓர் பிடி பிடிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

எங்கடை சனம்....நாங்கள் குளத்துமீன் சாப்புடுறேல்லை எண்டு சொன்னாலும் சொல்லியிருக்குங்கள்.

ஏனெண்டால் ஊர் மகிமை தெரிஞ்சவன் எண்ட முறையிலை சொல்லுறன் :cool:

நான் இதைக்கேடகலாம் என்று நினைத்திருந்தன் ஆனால் கேட்கல  என்ன காரணம் கு. சாமி அண்ணை சொல்லுங்களன்:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனி ஒருவன் said:

நான் இதைக்கேடகலாம் என்று நினைத்திருந்தன் ஆனால் கேட்கல  என்ன காரணம் கு. சாமி அண்ணை சொல்லுங்களன்:unsure:

குளத்துமீன் பஞ்சப்பரதேசியள் சாப்பிடுறது. கடல்மீன் நாற்பது நாள் கிடந்து நாறினாலும் ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவம்.......மற்றது குளத்துமீன் சாப்பிடுற விசயத்திலை சாதி எண்ட பொக்கிசமும் யாழ்ப்பாண பக்கத்திலை புதைஞ்சுபோய் கிடக்கு....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

குளத்துமீன் பஞ்சப்பரதேசியள் சாப்பிடுறது. கடல்மீன் நாற்பது நாள் கிடந்து நாறினாலும் ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவம்.......மற்றது குளத்துமீன் சாப்பிடுற விசயத்திலை சாதி எண்ட பொக்கிசமும் யாழ்ப்பாண பக்கத்திலை புதைஞ்சுபோய் கிடக்கு....:cool:

குளத்து மீனில் 

மீனின் மணம்  அதிகமாக வீசும் என்பதால் இருக்காதா??:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

குளத்து மீனில் 

மீனின் மணம்  அதிகமாக வீசும் என்பதால் இருக்காதா??:rolleyes:

ஊரிலை குளத்துமீன் வெடுக்கு எண்டுதான் சொல்லுவினம். ஆனால் அதைவிட வெடுக்கான கடல்மீன்கள் எக்கச்சக்கம் விசுகர்! உங்களுக்கு தெரியாததா என்ன?
வெடுக்கில்லாத நன்னீர் மீன் விரால் இருக்கின்றதே அதை ஏன் வெள்ளாளர் சாப்பிடுவதில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

ஊரிலை குளத்துமீன் வெடுக்கு எண்டுதான் சொல்லுவினம். ஆனால் அதைவிட வெடுக்கான கடல்மீன்கள் எக்கச்சக்கம் விசுகர்! உங்களுக்கு தெரியாததா என்ன?
வெடுக்கில்லாத நன்னீர் மீன் விரால் இருக்கின்றதே அதை ஏன் வெள்ளாளர் சாப்பிடுவதில்லை?

அதிலும் நாட்டாமை இருக்கோ....?tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

குளத்துமீன் பஞ்சப்பரதேசியள் சாப்பிடுறது. கடல்மீன் நாற்பது நாள் கிடந்து நாறினாலும் ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவம்.......மற்றது குளத்துமீன் சாப்பிடுற விசயத்திலை சாதி எண்ட பொக்கிசமும் யாழ்ப்பாண பக்கத்திலை புதைஞ்சுபோய் கிடக்கு....:cool:

இதை விட  அகண்ட ஏதுகள் இருக்க வேண்டும்.

2 minutes ago, குமாரசாமி said:

ஊரிலை குளத்துமீன் வெடுக்கு எண்டுதான் சொல்லுவினம். ஆனால் அதைவிட வெடுக்கான கடல்மீன்கள் எக்கச்சக்கம் விசுகர்! உங்களுக்கு தெரியாததா என்ன?
வெடுக்கில்லாத நன்னீர் மீன் விரால் இருக்கின்றதே அதை ஏன் வெள்ளாளர் சாப்பிடுவதில்லை?

இதை விட  அகண்ட ஏதுகள் இருக்க வேண்டும்.

அது சந்தைப்படுத்தலிலும் வழங்கல் சங்கிலியில் உள்ள அறுந்த தன்மையே  முக்கியமான காரணமாக இருக்கவேண்டும்.

மேலும் உணவையம் உண்பதையும்  ஓர் பசியைப் போக்கும் பொருளாகவே பார்க்கிறோம்  அன்றி ஓர் இன்பகரமான பொழுதாக களிப்பதாக அனுபவிக்க எண்ணுவதில்லை.  எனது அனுபவதில் இதில் புலம் பெயர்ந்த பெரும்பாலானோரும் உள்ளடக்கம்.

அதில் வெவ்வேறு உணவு வகைகளை முயன்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லை.

கீழே இருக்கும் செய்தியை  பாருங்கள். மேட்ற்கு நாடுகளின் சிந்தனை எங்கே இருக்கிறது என்பது புரியும்.

நாம் (புலம் பெயர்ந்து கூட) உணவைப் பொறுத்தவரையில் எங்கே இருக்கிறோம் என்பதும் புரியும்.

http://metro.co.uk/2017/08/23/supermarket-removes-all-foreign-groceries-from-shelves-to-make-point-about-racism-6872026/

http://www.independent.co.uk/news/world/europe/edeka-german-supermarket-empty-shelves-racism-diversity-largest-chain-a7908551.html

Link to comment
Share on other sites

வெளி நாடுகளில் நன்னீரில் வளர்க்கப்படும் மீன்களை / இறால்களை வாங்கி சமைப்பதை முற்றாக தவிர்த்து வருகின்றேன். முக்கியமான சமன் மீன் மற்றும் இறால் போன்றவை Farmed  என அதன் லேபலில் ஒட்டி இருந்தால் வாங்குவதே இல்லை. இதன் காரணம் இவை துரிதமாக வளர்ந்து அளவில் பெரிசாக வர வேண்டும் என்பதற்காக செயற்கை ஹோர்மோன்களும், steroids களும் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுவன. அத்துடன் saturated fat (கூடாத கொழுப்பு) டும் அதிகம்.

பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் இறால்கள் வாங்குகின்றவர்களாயின் அது எங்கிருந்து வருகின்றது என கண்டிப்பாக பார்க்கவும். அது சீனா. வியட்னாம், தாய்லாந்து என்றால் தவிர்க்கவும். இது தொடர்பாக பல இணையத்தளங்கள் உள்ளன.
உ+ம்

https://www.drweil.com/diet-nutrition/food-safety/is-it-safe-to-eat-shrimp/

எங்கள் ஊர்களில் இருக்கும் குளங்களின் மீன்களின் ஆரோக்கியம் தொடர்பாக நான் இதுவரைக்கும் அறியவில்லை. ஆனால் கழிவுகளை கொட்டும் இடமாக நாம் குளங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றோம். காலத்துக்கு காலம் தூர் வாருவதும் இல்லை (இதையும் அரசு தான் செய்ய வேண்டும் என்று இல்லை.. தமிழகத்தில் தன்னார்வ அமைப்புகள் கூட செய்கின்றன). உடுப்பு தோய்ப்பதில் இருந்து கக்கா கழுவுவது வரைக்கும் நாம் நன்னீர் நிலைகளை பாவிக்கின்றோம். இப்படியான சூழலில் வளரும் மீன்களை உண்ணுவது எந்தளவுக்கு நல்லது என தெரியவில்லை.

எம் கக்கா கழிவுகளை சிங்கள மக்கள் உண்ணுகின்றார்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

இதுவும் ஓர் முக்கியமான காரணம். ஆனாலும் நன்னீர் மீன்களை மிகவும் கட்டுப்பாட்டுடன் உற்பத்தி செய்யதாலும் எமது உணவு கலாசாரம் அதட்கு இடம் கொடுக்குமா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

வெளி நாடுகளில் நன்னீரில் வளர்க்கப்படும் மீன்களை / இறால்களை வாங்கி சமைப்பதை முற்றாக தவிர்த்து வருகின்றேன். முக்கியமான சமன் மீன் மற்றும் இறால் போன்றவை Farmed  என அதன் லேபலில் ஒட்டி இருந்தால் வாங்குவதே இல்லை. இதன் காரணம் இவை துரிதமாக வளர்ந்து அளவில் பெரிசாக வர வேண்டும் என்பதற்காக செயற்கை ஹோர்மோன்களும், steroids களும் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுவன. அத்துடன் saturated fat (கூடாத கொழுப்பு) டும் அதிகம்.

பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் இறால்கள் வாங்குகின்றவர்களாயின் அது எங்கிருந்து வருகின்றது என கண்டிப்பாக பார்க்கவும். அது சீனா. வியட்னாம், தாய்லாந்து என்றால் தவிர்க்கவும். இது தொடர்பாக பல இணையத்தளங்கள் உள்ளன.
உ+ம்

https://www.drweil.com/diet-nutrition/food-safety/is-it-safe-to-eat-shrimp/

எங்கள் ஊர்களில் இருக்கும் குளங்களின் மீன்களின் ஆரோக்கியம் தொடர்பாக நான் இதுவரைக்கும் அறியவில்லை. ஆனால் கழிவுகளை கொட்டும் இடமாக நாம் குளங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றோம். காலத்துக்கு காலம் தூர் வாருவதும் இல்லை (இதையும் அரசு தான் செய்ய வேண்டும் என்று இல்லை.. தமிழகத்தில் தன்னார்வ அமைப்புகள் கூட செய்கின்றன). உடுப்பு தோய்ப்பதில் இருந்து கக்கா கழுவுவது வரைக்கும் நாம் நன்னீர் நிலைகளை பாவிக்கின்றோம். இப்படியான சூழலில் வளரும் மீன்களை உண்ணுவது எந்தளவுக்கு நல்லது என தெரியவில்லை.

எம் கக்கா கழிவுகளை சிங்கள மக்கள் உண்ணுகின்றார்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்

இப்போதெல்லாம் அதிகமாக மரக்கறி,காய்கனிகளுக்குத்தான்  பக்கவிளைவுள்ள தடுப்பு மருந்துகளை உபயோகப்படுத்துகின்றனர்.
ஹோர்மோன் பிரச்சனைகளை சிந்திப்பவர்களாயின் கோழி சம்பந்தப்பட்ட உணவுகளை எட்டியும் பார்கக்கூடாது. பிரச்சனை வேறை லெவல்லை சமூகநலன் விரும்பிகளை சிப்பிலியாட்டுதாம்
ஊரில் எங்கு எத்தனை குளங்களில் குப்பைகளை கொட்டுகின்றார்கள்?
நகரங்களை விட்டு யாழ்மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமம் கிராமமாக சென்று வாருங்கள்.சொர்க்கம் ஒவ்வொரு குளத்திலும் தெரியும்.  தூர்வாராத குளமென்றாலும் நிலம் தெரியும் தெளிவான தண்ணீர் நிறைந்த குளங்கள் எங்கள் நாட்டில்..... :)
கக்கா போய் கழுவுவதற்கு ஒரு குளம்....tw_thumbsup:
குளிப்பதற்கு ஒரு குளம்....tw_thumbsup:
குடிக்கும் தண்ணீருக்கு ஒரு குளம்....tw_thumbsup:
வயல் வாய்க்காலுக்கு ஒரு குளம்...tw_thumbsup:
என்று இருந்தபடியால் தான்.....
இவ்வளவு போர் அவலங்களையும் சந்தித்தும்......

தமிழ்பிரதேசங்கள் நிமிர்ந்து நிற்கின்றது.tw_heart:

தன்னார்வ செயல்கள்????? வயிறு தானாக நிறையாது ராசா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

இதை விட  அகண்ட ஏதுகள் இருக்க வேண்டும்.

அது சந்தைப்படுத்தலிலும் வழங்கல் சங்கிலியில் உள்ள அறுந்த தன்மையே  முக்கியமான காரணமாக இருக்கவேண்டும்.

மேலும் உணவையம் உண்பதையும்  ஓர் பசியைப் போக்கும் பொருளாகவே பார்க்கிறோம்  அன்றி ஓர் இன்பகரமான பொழுதாக களிப்பதாக அனுபவிக்க எண்ணுவதில்லை.  எனது அனுபவதில் இதில் புலம் பெயர்ந்த பெரும்பாலானோரும் உள்ளடக்கம்.

அதில் வெவ்வேறு உணவு வகைகளை முயன்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லை.

கீழே இருக்கும் செய்தியை  பாருங்கள். மேட்ற்கு நாடுகளின் சிந்தனை எங்கே இருக்கிறது என்பது புரியும்.

நாம் (புலம் பெயர்ந்து கூட) உணவைப் பொறுத்தவரையில் எங்கே இருக்கிறோம் என்பதும் புரியும்.

வீட்டு வேலியில் தானாக படர்ந்த செடியின் கொடியின் அருமை தெரியாமல்...

பீற்றூட் கரட் மோகத்தில் அலைந்தவன்...

புலம் பெயர்ந்தபின்.....

அதே செடிகொடிக்கு...

காசென்றும் பாராமல் காற்றாய் பறக்கின்றான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம்....இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி...!

இடம்....யாழ்ப்பாணம் சின்னக்கடைச் சந்தை.

நேரம்....மத்தியானம் பன்னிரெண்டு மணி...

திறேசாக்கா கடையைப் பரப்பி வைத்திருக்கிறார்! மீன்கள் அவவின் முன்னே இருக்கிற சீமந்துக் கட்டில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கின்றன! மத்தியான வெய்யிலில் அவை பழுதுபடாதிருக்க...ஒரு வாளியில் இருந்து..தண்ணீரைத் தடவித் தடவி...அவற்றைப் பளபளப்பாக வைத்திருக்க முயன்று கொண்டிருக்கிறார்! அவரது கழுத்தில் ஒரு தடித்த சங்கிலி..தொங்கிக்கொண்டிருக்க..அவரது வாயில் ஒரு அரைவாசி எரிந்த நிலையில் ஒரு சுருட்டு குந்திக் கொண்டிருக்கின்றது! அது உயிருடன் இருக்கின்றதா....அல்லது சும்மா குந்திக்கொண்டிருக்கின்றதா என்று ஆராய்ந்து கொண்டிருந்த போது...அதிலிருந்து மெல்லிய புகை மண்டலம் கிளம்பி.....அது உயிருடன் இருப்பதை உறுதி செய்து கொண்டது!

அப்போது நிழலி வருகின்றார்! அவர் அதிக காலம் சவுதிப் பக்கம் இருந்ததால்....அப்போதைய யாழ்ப்பாணத்து மீன் விலை நிலவரத்தை..அறிந்திருக்கவில்லை!

ஆச்சி கொஞ்சம் றால் வேணும்!

திறேசக்காவின் முகம் கொஞ்சம் மாறியது! அவரது வயது கொஞ்சம் போயிருந்தாலும்...அவரை நன்றாக அறிந்தவர்கள்..அக்கா என்று தான் அழைப்பார்கள்!

திறேசக்கா கொஞ்ச றால்களை எடுத்து....ஒரு பக்கம் வைத்தார்! வைத்த படியே...தம்பி...காணுமே..என்ற கேள்வியையும் கேட்டார்!

நிழலி..அப்போது..வேறு உலகத்தில் ...றால்களைப்  பொரிக்கலாமா..அல்லது 'டெவில்' பண்ணலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்!

திறேசக்கா கேட்டதை அவர் கவனிக்காமல் இருக்கவும்....திறேசக்கா மேலும் சில றால்களை எடுத்து வைத்தார்!

பின்னர் திறேசக்கா...தம்பி....காணுமோ..என்று கேட்டார்!

நிழலியும் ..பழைய நினைவில்...நீங்கள் வையுங்கோ ஆச்சி.....பதினைஞ்சு ரூபா அளவில வரச் சொல்லுவான் தானே எண்டு சொல்ல...திறேசக்காவின் கோபம் உச்சத்துக்க்ப் போனது!

தம்பி....என்ன இவ்வளவு நாளும்... உள்ளுக்கே இருந்தனீர்?  ஆளைப் பார்த்தால்..காச்சட்டையும்...சேட்டும்...கன்னாடியுமாப் படிச்ச பெடியன் மாதிரிக்கிடக்குது....பேச்சுத் தொடர்ந்து கொண்டேயிருக்க நிழலி...பின்னர் யாராவது நிற்கிறார்களா என்று பார்த்தார்!

ஒருவரும் இல்லாதிருக்கவே..தனக்குத்தான் அர்ச்சனை நடக்கிறது என்று உணர்ந்து கொண்டு...மெதுவாகப் பின்னோக்கி நடந்தது சென்றார்!

இனி...இந்தச் சின்னக்கடைப் பக்கமே வரக்கூடாது..என்று அவரது உள் மனம் ..தீர்க்கமாக...முடிவெடுத்துக் கொண்டது!

00000000000000                                     000000000000000000                         0000000000000                                     000000000000000                            00000000000

அடுத்ததாக....ராசவன்னியன்   கடைப்பக்கம் வந்தார்!

அடுக்கியிருந்த மீன்களைக்....கண்களால் அளவெடுத்த விதமே...அவர் ஒரு பொறியியளாராக இருக்க வேண்டும் என்று திறேசக்காவை எண்ண வைத்தது!

ஆளும்..கடைக்குப் புதுசாயிருக்கவே.. .....இண்டைக்கு முழுவியளம் சரியா அமையாவிட்டாலும்...வியாபாரம் நல்லாயிருக்கும் போல...என்று நினைத்துக்கொண்டார்!

திடீரென ஏதோ நினைத்துக்கொண்டவர் போல ....ராசவன்னியன்...அன்னியோன்னியமாக..ஒரு மீனை எடுத்து...அதன் நாட்டைத் திறக்கவே....திறேசக்காவுக்குச் சுருக்கென்றது! அவவின்ர மீன்களைத் தொட்டுப் பார்க்கிற தையிரியம் இது வரை எவருக்குமே வந்தது கிடையாது!

ஐயா.....என்னைப் பார்க்க நாறல் மீன்....விக்கிற ..ஆள்...மாதிரியாக் கிடக்குது!

பதினைஞ்சு வருஷம்... இந்தச் சந்தையில மீன் விக்கிறன்...ஒருத்தர் கூட...என்ர மீனில் கை வைச்சது கிடையாது!

ஐயா...வேணுமெண்டால் என்னிட்டைக் கேட்டிருந்தால்...திறந்து.. காட்டியிருப்பனே..எண்டு சொல்லவும்....ராசவன்னியன் ஏறத்தாள நடுங்கியே போனார்!

இல்லையம்மா.....மீன் நாறியிருந்தால்...வீட்டில ..வீட்டுக்காரி...சத்தம் போடுவா..அது தான்..என இழுத்தார்!

ஐயா....நீங்க  ஆம்பிளை தானே......? எதுக்கு அந்த அம்மாவை இதுக்குள்ளை இழுக்கிறீங்கள்!

மீனின்ர  கண்ணைப் பார்க்க நாறல் மீன் மாதிரியா கிடக்குது? ...திறேசக்காவின் பேச்சுத் தொடரவே....ஆளை விடு தாயே...என்ற படியே..வன்னியனும்..நடையக் கட்டினார்!

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                               ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                                           ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                                              ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                    ௦௦௦௦௦௦௦௦

அப்போது...தமிழ் சிறி....நல்லூரிலிருந்து...சைக்கிள் உழக்கிய களைப்பில்....சைக்கிளை மதிலில் சாத்தி விட்டு...சின்னக் கடைக்குள் வந்து கொண்டிருந்தார்!

அவரது...நெற்றியில்....மெல்லிய திருநீற்றுக் கீற்றுப் படிந்திருந்தது!

அருகிலிருந்த வாய்க்காலுக்குள்...ஒரு மாட்டின் முழங்காலுடன் ....இரண்டு நாய்கள் போராடிக் கொண்டிருந்தன!

அடச் சீ.....என அலுத்துக் கொண்ட படி.....திறேசம்மாவின் கடையை நோக்கி நடந்தார்!

காலம் ...யாரைத் தான் விட்டு வைத்தது?

திறேசக்காவின் முன்னாள்....ஒரு பால் சுறா....நன்றாக நீட்டி ..நிமிர்ந்து படுத்திருந்தது! 

அதைக் கண்டதும்.....கொஞ்சம் தேங்காய்ப் பூவும்.. போட்டும்...வறுத்துப் புட்டோட சாப்பிட...அந்த மாதிரி இருக்கும் என அவர் நினைத்துக் கொண்டார்!

அக்கா....இந்தச் சுறா...எவ்வளவு வரும்..?

அக்கா..என்ற அழைப்பைக் கேட்டதும்...கொஞ்சம் அகம் மகிழ்ந்த திறேசக்கா....தம்பி..எவ்வளவு மதிக்கிறீங்கள் எண்டு கேட்கத் தானாச் சீனாவும்..அக்கா...இந்தச் சுறா...ஆம்பிளையா அல்லது பொம்பிளையா என்று கேட்க....திறேசக்காவும்...சுராவைப் பிரட்டிப் பார்த்து விட்டு....ஆம்பிளை தான் எண்டு சொல்லவும்...தானாச் சீனா...அது எப்படித் தெரியும் என்று கேட்டார்!

இண்டைக்கு நமக்கு விடிஞ்ச பொழுது சரியில்லைப் போல என நினைத்த திறேசக்காவும்...சிரித்த படியே...சுறா..காச்சட்டை போடேல்லை என்று பதில் கூறத் தானாச் சீனாவும்... இருபது ரூபாய்க்கு சுறாவைக் கேட்க....அக்காவின் கண்கள் கோபத்தால் சிவந்தன!

தம்பி....இஞ்சை பாரும்....காக்கை தீவில..வலையில இருந்து புடுங்கி எரியிற குஞ்சு குருமான்களைப் பொறுக்கிப் பெட்டிக்குள்ள போட்ட படி...வாரவனிட்டை மீன் வாங்கிற ஆக்கள் நீங்கள்...! உங்களுக்கெப்படி...மீனைப் பற்றித் தெரியும்? இந்தச் சுறாவுக்கு...இருபது ரூபாய் விலை கேக்கிற அளவுக்குத் தான்.....உங்கட...மீன் அறிவு...இருக்குது!

அக்கா....நீங்க தானே விலை சொல்லச் சொன்னீங்கள் என்ற படி....தானாகச் சீனா வழிய...சரி ...சரி...முப்ப்த்தஞ்சைத்  தந்து போட்டுக் கொண்டு போங்கோ..எண்டு திறேசக்கா சொல்லவும்...இஞ்சை இருந்து வெளிய போனால் சரி என்று நினைத்த தானாச் சீனாவும்...சுறாவுடன்..சைக்கிளை நோக்கி நடந்தது கொண்டிருந்தார்!

மனுசிக்கு...என்ன விலை சொல்லலாம்  என்று அவரது மனம்....கணக்குப் போட்ட படி இருந்தது!

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                         ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                   ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦              ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                         ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

அன்றைய சம்பவங்களால் அலுத்துப் போயிருந்த திறேசக்காவிடம்....றோசக்கா வந்தார்!

அக்கா இண்டைக்கு வீட்டில கொஞ்சம் விருந்து வரும்போல கிடக்குது...கொஞ்சம் நல்ல மீனாய்ப் பாத்துத் தாவன் என்று கேட்கக்....கொஞ்சம் கும்பிளா வைச்சிருககிறன்...தரட்டா எனக் கேட்டார்!

சரியக்கா...தாவன்...., ஆனால் காசு நாளைக்குத் தான் தருவன் எண்டு சொல்லவும்.....என்னடி..ராத்திரியும் சோடா மூடி தான் போல  என்று திறேசக்கா அலுத்துகொண்டார்! 

அதையேன் கேக்கிற அக்கா....இந்த ஆமிக்காற மூதேசியளால..கொஞ்ச நாளாய்ச் சோடா மூடி தான்...என...இழுத்த படியே...மீனை வாங்கிக்கொண்டு நடையைக் கட்டினார்!

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦            ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                 ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                   ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦               ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

பி.கு:

குளத்து மீன் ...சில பழைய நினைவுகளைக் கிளறி விட்டது! எனவே...ஏதோ எழுதினேன்! திறந்த மனம் கொண்ட...யாழ்கள உறவுகள்...மன்னிப்பார்கள் எனும் நம்பிக்கையுண்டு.....எவரையும் புண் படுத்தும் எண்ணம்...என்னிடம் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்போதெல்லாம் அதிகமாக மரக்கறி,காய்கனிகளுக்குத்தான்  பக்கவிளைவுள்ள தடுப்பு மருந்துகளை உபயோகப்படுத்துகின்றனர்.
ஹோர்மோன் பிரச்சனைகளை சிந்திப்பவர்களாயின் கோழி சம்பந்தப்பட்ட உணவுகளை எட்டியும் பார்கக்கூடாது. பிரச்சனை வேறை லெவல்லை சமூகநலன் விரும்பிகளை சிப்பிலியாட்டுதாம்
ஊரில் எங்கு எத்தனை குளங்களில் குப்பைகளை கொட்டுகின்றார்கள்?
நகரங்களை விட்டு யாழ்மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமம் கிராமமாக சென்று வாருங்கள்.சொர்க்கம் ஒவ்வொரு குளத்திலும் தெரியும்.  தூர்வாராத குளமென்றாலும் நிலம் தெரியும் தெளிவான தண்ணீர் நிறைந்த குளங்கள் எங்கள் நாட்டில்..... :)
கக்கா போய் கழுவுவதற்கு ஒரு குளம்....tw_thumbsup:
குளிப்பதற்கு ஒரு குளம்....tw_thumbsup:
குடிக்கும் தண்ணீருக்கு ஒரு குளம்....tw_thumbsup:
வயல் வாய்க்காலுக்கு ஒரு குளம்...tw_thumbsup:
என்று இருந்தபடியால் தான்.....
இவ்வளவு போர் அவலங்களையும் சந்தித்தும்......

தமிழ்பிரதேசங்கள் நிமிர்ந்து நிற்கின்றது.tw_heart:

தன்னார்வ செயல்கள்????? வயிறு தானாக நிறையாது ராசா.

கிழக்கில் குளங்களும் களப்புகளும் அதிகம் ஆனால் இந்த கக்கா விஷயங்கள் குறைவும் குப்பை போடுவதும் குறையும் ஏனென்றால் அந்த குளம் இருந்த பகுதிகள் அனைத்தும் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த படியால பச்சை அடி  பின் பக்கத்தை பதம் பார்க்கும் என்ற படியாலும் இதுவரைக்கும் ஓரளவு தூய்மையாக இருக்கிறது ஆனால் இப்ப உள்ள சந்ததி குப்பை போட்டு நிறைக்க முற்படுது ஆனால் அது தவிர்க்க்ப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

...இல்லையம்மா.....மீன் நாறியிருந்தால்...வீட்டில ..வீட்டுக்காரி...சத்தம் போடுவா..அது தான்..என இழுத்தார்!

இதுக்குத்தான் இந்த மாதிரி (மளிகை, காய்கறி, மீன் வாங்கி திட்டு வாங்கும்) விடயங்களில் தலையிடுவதே இல்லை..!  vil-roulelangue.gif

4 hours ago, புங்கையூரன் said:

மனுசிக்கு...என்ன விலை சொல்லலாம்  என்று அவரது மனம்....கணக்குப் போட்ட படி இருந்தது!

எமக்கு பிடித்த எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளை வீட்டிற்கும், பேரனுக்கு பொம்மைகளையும் வாங்கி வரும்போது விலையை குறைத்து சொல்லி மாட்டுப்பட்டு சமாளித்தது உண்டு.. vil-content.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியக்கா...தாவன்...., ஆனால் காசு நாளைக்குத் தான் தருவன் எண்டு சொல்லவும்.....என்னடி..ராத்திரியும் சோடா மூடி தான் போல  என்று திறேசக்கா அலுத்துகொண்டார்! 

அதையேன் கேக்கிற அக்கா....இந்த ஆமிக்காற மூதேசியளால..கொஞ்ச நாளாய்ச் சோடா மூடி தான்...என...இழுத்த படியே...மீனை வாங்கிக்கொண்டு நடையைக் கட்டினார்!

புங்கை அண்ணர் ,
வாசிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
 இந்த "சோடா மூடி" குறிப்பு  தான் சுத்தமாக புறியவில்லை.
மேலதிக விளக்கம் தருவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Sasi_varnam said:

அதே டவுட்டு தான் எனக்கும்  ஏதோ குடி வாசனை தொக்கி நிற்கிறாப்போல சந்தேகம் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

கக்கா போய் கழுவுவதற்கு ஒரு குளம்....tw_thumbsup:
குளிப்பதற்கு ஒரு குளம்....tw_thumbsup:
குடிக்கும் தண்ணீருக்கு ஒரு குளம்....tw_thumbsup:
வயல் வாய்க்காலுக்கு ஒரு குளம்...tw_thumbsup:
என்று இருந்தபடியால் தான்.....
இவ்வளவு போர் அவலங்களையும் சந்தித்தும்......

தமிழ்பிரதேசங்கள் நிமிர்ந்து நிற்கின்றது.tw_heart:

குமாரசாமி அண்ணா..... நீங்கள் ஊரில் உள்ள குளங்களை, வகைப் படுத்திய விதம் அருமை. 
ஆனால்.... ஓரளவாவது அந்தக் குளங்களின் பெயர்களை சொன்னால் தான்....  
உங்கள் பதிவை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியும். :)

கக்கா போய் கழுவுவதற்கு ஒரு குளம்:  
யாழ்ப்பாண நாக விகாரைக்கு பக்கத்தில் உள்ள  ஆரிய குளம். 
அதில் ஒரு பக்கம், சிலர்.... "கக்கா" இருந்து கொண்டிருக்க.. மற்றப்  பக்கம் ஒரு சிலர் வலைவீசி... மீன்களை பிடித்து, "சன்லைற்" சவர்க்கார   பெட்டியில்  வைத்து விற்பனைக்கு கொண்டு செல்வதை, எனது சிறிய வயதில்... அந்த மீன் பிடிக்கும் அழகை பார்த்து வந்துள்ளேன். அந்த மீனின் பெயர் தெரியவில்லை.  கறுப்பு  நிறத்தில், ஒரு கையின் அளவில் பெரிதாக இருக்கும்.

குளிப்பதற்கு ஒரு குளம்:  ஊரில் உள்ள,  கோயில் குளம் எல்லாவற்றிலும் குளிக்கலாம். 

குடிக்கும் தண்ணீருக்கு ஒரு குளம்: இரணைமடு குளத்தை குறிப்பிடுகின்றீ ர்கள் என நினைக்கின்றேன்.

வயல் வாய்க்காலுக்கு ஒரு குளம்:  இரணைமடு குளம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

சரியக்கா...தாவன்...., ஆனால் காசு நாளைக்குத் தான் தருவன் எண்டு சொல்லவும்.....என்னடி..ராத்திரியும் சோடா மூடி தான் போல  என்று திறேசக்கா அலுத்துகொண்டார்! 

அதையேன் கேக்கிற அக்கா....இந்த ஆமிக்காற மூதேசியளால..கொஞ்ச நாளாய்ச் சோடா மூடி தான்...என...இழுத்த படியே...மீனை வாங்கிக்கொண்டு நடையைக் கட்டினார்!

புங்கை அண்ணர் ,
வாசிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
 இந்த "சோடா மூடி" குறிப்பு  தான் சுத்தமாக புறியவில்லை.
மேலதிக விளக்கம் தருவீர்களா?

1 hour ago, தனி ஒருவன் said:

அதே டவுட்டு தான் எனக்கும்  ஏதோ குடி வாசனை தொக்கி நிற்கிறாப்போல சந்தேகம் :unsure:

சசிவர்ணம், தனி ஒருவன்... 
உங்கள் சந்தேகத்திற்கு, பதில் எழுத... எமக்கு, கை....  குறு குறுத்தாலும், 
புங்கையூரானின், பதிலுக்காக.... காத்துக் கொண்டு இருக்கின்றோம்.  :grin:  tw_smiley:  :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புங்கையூரன் said:

காலம்....இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி...!

இடம்....யாழ்ப்பாணம் சின்னக்கடைச் சந்தை.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦            ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                 ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                   ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦               ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

பி.கு:

குளத்து மீன் ...சில பழைய நினைவுகளைக் கிளறி விட்டது! எனவே...ஏதோ எழுதினேன்! திறந்த மனம் கொண்ட...யாழ்கள உறவுகள்...மன்னிப்பார்கள் எனும் நம்பிக்கையுண்டு.....எவரையும் புண் படுத்தும் எண்ணம்...என்னிடம் இல்லை!

நமக்கு குளத்து மீன்  பழய நினைவை கிளறாவிட்டாலும், றோசக்கா, சோடா மூடி பழைய நினைவுகளைக் கிளறி விட்டது!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரேசக்காவை ரொம்ப கவுரமாக கதைக்க வைத்துள்ளார் புங்கையர்.

இப்படியே திட்டு விழும் ?

"வந்திட்டார் கழுசானையும் போட்டுக்கொண்டு.... மீன் வாங்க...."

"இல்லை கேக்கிறேன்..... உந்த விலைக்கு, மீன் வாங்கலாம் எண்டே வந்தனீர்".....

"மனிசீட்ட, மீனோட வாறன், வெங்காயத்தை வெட்டெண்டு சொல்லீட்டே வந்தனீர்"

போன்ற தூசண வார்தைகள் இல்லா... வசனங்கள் மிஸ்ஸிங்....

சோடா மூடி.... அதுக்குப் பின்னாலே புங்கையரின் பெரும் சோகம்.... :grin:

சொல்லுவார்.... பொறுங்கோ.. :223_speak_no_evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

 இந்த "சோடா மூடி" குறிப்பு  தான் சுத்தமாக புறியவில்லை.
மேலதிக விளக்கம் தருவீர்களா?

2 hours ago, தனி ஒருவன் said:

அதே டவுட்டு தான் எனக்கும்  ஏதோ குடி வாசனை தொக்கி நிற்கிறாப்போல சந்தேகம் :unsure:

இப்பத்தய பண வீக்கத்திற்க்கு சோடா முடி எல்லாம் சரி வராது.அம்புட்டு தான் நான் செப்பலாம்.மிகுதி புங்கை வந்து சொன்னால் தான் ஒரு கிக் இருக்கும்.:rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

காலம்....இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி...!

இடம்....யாழ்ப்பாணம் சின்னக்கடைச் சந்தை.

நேரம்....மத்தியானம் பன்னிரெண்டு மணி...

திறேசாக்கா கடையைப் பரப்பி வைத்திருக்கிறார்! மீன்கள் அவவின் முன்னே இருக்கிற சீமந்துக் கட்டில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கின்றன! மத்தியான வெய்யிலில் அவை பழுதுபடாதிருக்க...ஒரு வாளியில் இருந்து..தண்ணீரைத் தடவித் தடவி...அவற்றைப் பளபளப்பாக வைத்திருக்க முயன்று கொண்டிருக்கிறார்! அவரது கழுத்தில் ஒரு தடித்த சங்கிலி..தொங்கிக்கொண்டிருக்க..அவரது வாயில் ஒரு அரைவாசி எரிந்த நிலை யில் ஒரு சுருட்டு குந்திக் கொண்டிருக்கின்றது! அது உயிருடன் இருக்கின்றதா....அல்லது சும்மா குந்திக்கொண்டிருக்கின்றதா என்று ஆராய்ந்து கொண்டிருந்த போது...அதிலிருந்து மெல்லிய புகை மண்டலம் கிளம்பி.....அது உயிருடன் இருப்பதை உறுதி செய்து கொண்டது!

######         ######      ######

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                               ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                                           ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                                              ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                    ௦௦௦௦௦௦௦௦

அப்போது...தமிழ் சிறி....நல்லூரிலிருந்து...சைக்கிள் உழக்கிய களைப்பில்....சைக்கிளை மதிலில் சாத்தி விட்டு...சின்னக் கடைக்குள் வந்து கொண்டிருந்தார்!

அவரது...நெற்றியில்....மெல்லிய திருநீற்றுக் கீற்றுப் படிந்திருந்தது!

அருகிலிருந்த வாய்க்காலுக்குள்...ஒரு மாட்டின் முழங்காலுடன் ....இரண்டு நாய்கள் போராடிக் கொண்டிருந்தன!

அடச் சீ.....என அலுத்துக் கொண்ட படி.....திறேசம்மாவின் கடையை நோக்கி நடந்தார்!

காலம் ...யாரைத் தான் விட்டு வைத்தது?

திறேசக்காவின் முன்னாள்....ஒரு பால் சுறா....நன்றாக நீட்டி ..நிமிர்ந்து படுத்திருந்தது! 

அதைக் கண்டதும்.....கொஞ்சம் தேங்காய்ப் பூவும்.. போட்டும்...வறுத்துப் புட்டோட சாப்பிட...அந்த மாதிரி இருக்கும் என அவர் நினைத்துக் கொண்டார்!

அக்கா....இந்தச் சுறா...எவ்வளவு வரும்..?

அக்கா..என்ற அழைப்பைக் கேட்டதும்...கொஞ்சம் அகம் மகிழ்ந்த திறேசக்கா....தம்பி..எவ்வளவு மதிக்கிறீங்கள் எண்டு கேட்கத் தானாச் சீனாவும்..அக்கா...இந்தச் சுறா...ஆம்பிளையா அல்லது பொம்பிளையா என்று கேட்க....திறேசக்காவும்...சுராவைப் பிரட்டிப் பார்த்து விட்டு....ஆம்பிளை தான் எண்டு சொல்லவும்...தானாச் சீனா...அது எப்படித் தெரியும் என்று கேட்டார்!

இண்டைக்கு நமக்கு விடிஞ்ச பொழுது சரியில்லைப் போல என நினைத்த திறேசக்காவும்...சிரித்த படியே...சுறா..காச்சட்டை போடேல்லை என்று பதில் கூறத் தானாச் சீனாவும்... இருபது ரூபாய்க்கு சுறாவைக் கேட்க....அக்காவின் கண்கள் கோபத்தால் சிவந்தன!

தம்பி....இஞ்சை பாரும்....காக்கை தீவில..வலையில இருந்து புடுங்கி எரியிற குஞ்சு குருமான்களைப் பொறுக்கிப் பெட்டிக்குள்ள போட்ட படி...வாரவனிட்டை மீன் வாங்கிற ஆக்கள் நீங்கள்...! உங்களுக்கெப்படி...மீனைப் பற்றித் தெரியும்? இந்தச் சுறாவுக்கு...இருபது ரூபாய் விலை கேக்கிற அளவுக்குத் தான்.....உங்கட...மீன் அறிவு...இருக்குது!

அக்கா....நீங்க தானே விலை சொல்லச் சொன்னீங்கள் என்ற படி....தானாகச் சீனா வழிய...சரி ...சரி...முப்ப்த்தஞ்சைத்  தந்து போட்டுக் கொண்டு போங்கோ..எண்டு திறேசக்கா சொல்லவும்...இஞ்சை இருந்து வெளிய போனால் சரி என்று நினைத்த தானாச் சீனாவும்...சுறாவுடன்..சைக்கிளை நோக்கி நடந்தது கொண்டிருந்தார்! 

மனுசிக்கு...என்ன விலை சொல்லலாம்  என்று அவரது மனம்....கணக்குப் போட்ட படி இருந்தது!

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                         ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                   ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦              ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦                         ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

குளத்து மீன் ...சில பழைய நினைவுகளைக் கிளறி விட்டது! எனவே...ஏதோ எழுதினேன்! திறந்த மனம் கொண்ட...யாழ்கள உறவுகள்...மன்னிப்பார்கள் எனும் நம்பிக்கையுண்டு.....எவரையும் புண் படுத்தும் எண்ணம்...என்னிடம் இல்லை!

புங்கையூரான்..... நீங்கள், "குடத்துக்குள் இருக்கும்,  (குத்து) விளக்குப் போல்"  :grin:
உங்களிடம்....  எழுத்து, கவிதை,  நகைச்சுவை, ஆன்மீகம், சரித்திரம் என்று...
எல்லாப் பகுதிகளிலும், அசத்தும் திறமையானவர் என்பதை,
மீண்டும்..... நிரூபித்து  விட்டீர்கள்.    :)

அண்மைக்காலமாக... உங்களிடம் இருந்து, மீண்டும் வாசிக்கத்  தோன்றும் பதிவுகள் வரவில்லை என்று ஏங்கினேன். :love:
ஆனால்... அதிரடி... "அற்றாக்",   "ஊர் புதின" செய்தியில் வரும் என்று, நான் எதிர் பார்க்கவில்லை. 
இதனை... தனித்  திரியில்,  நீங்கள்.... ஆரம்பித்து, இருந்தால், ஓஹோ... என்று பட்டையை கிளப்பி இருக்கும் என்பது, எனது அனுமானம்.

புங்கை... என்னை புரிந்து கொண்ட விதம் அவ்வளவும்... உண்மை. 
அதிலும்.... ரசித்த வசனங்கள், மேலே... தடித்த எழுத்தில், நிறம் அடித்து காட்டப்  பட்டுள்ளது. ( அதில்.. "டபிள் மீனிங்கு"  இல்லை என்றே நினைக்கின்றேன்.) :D:

நல்லதொரு  நீண்ட பதிவிற்கு  நன்றி, இன்று... முழுக்க... ரசித்து, சிரித்தேன். :grin: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.