Jump to content

20 ஆவது திருத்தம் சாத்தியமாகுமா?


Recommended Posts

20 ஆவது திருத்தம் சாத்தியமாகுமா?

 

18 ஆவது திருத்­த­மொன்றைக் கொண்­டு­வந்­ததன் மூலம் முன்னாள் ஜனா­தி­ப­தியும் அவ­ரது அர­சாங்­கமும் எத்­த­கைய சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யி­ருந்­தது. மஹிந்த ராஜபக் ஷ தனது மூன்­றா­வது பரு­வ­கால ஜனா­தி­பதித் தேர்­தலில் எத்­த­கைய வீழ்ச்­சியை சந்­தித்­தா­ரென்­பது உல­க­றிந்த விடயம்.

அதைப்­போன்­ற­தொரு அர­சியல் மற்றும் ஆட்சி நெருக்­க­டியை உரு­வாக்கும் விவ­கா­ர­மா­கவே 20 ஆவது திருத்­தத்தை கொண்­டு­வர நினைக்கும் நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பல நெருக்­க­டி­க­ளையும் சவால்­க­ளையும் சந்­திக்க நேரி­டு­மென்ற நிலையே இன்­றைய அர­சியல் கள­மாக மாறி­யுள்­ளது.

ஒன்­பது மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை ஒரே நாளில் நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்யும் 20 ஆவது சட்­ட ­வ­ரைபை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க முன்­வைக்க எடுத்­து­வரும் முயற்­சி­களை மிக கடு­மையாக எதிர்ப்­ப­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தீர்­மா­னித்­துள்­ள­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் தேர்தல் கண்­கா­ணிப்பு அமைப்­புகள், தேர்தல்கள் ஆணை­க்குழு, பொது எதி­ர­ணி­ என ஏகப்­பட்­ட­வர்கள் முன்­வைத்த கருத்துக்கள் இலங்கை அர­சி­யலில் மீண்­டு­மொரு குழப்ப நிலையை உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கி­றது.

கிழக்கு மாகாணம், வட­மத்­திய மாகாணம், சப்­ர­க­முவ மாகாணம் ஆகிய மூன்று மாகாண சபை­க­ளுக்­கான ஆட்­சிக்­காலம் எதிர்­வரும் செப்­டெம்பர் (2017) மாதத்­துடன் நிறை­வ­டை­கின்ற நிலையில் இந்த மாகாண சபை­களின் ஆட்­சிக்­கா­லத்தை நீடிப்­ப­துடன் சகல மாகாண சபை­க­ளுக்­கு­மான (9 மாகாண சபை) தேர்­தல்­க­ளையும் ஒரே­நாளில் 2019 ஆம் ஆண்டு நடத்­து­வ­தென திட்­ட­மிட்­ட­வ­கையில் 20 ஆவது திருத்தச் சட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­று­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­துடன், இதற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலும் அர­சாங்­கத்­தினால் அண்­மையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வர்த்­த­மானி அறி­வித்­தல்­மூலம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் விபரம் யாதெனில், 154 DD 13 ஆவது திருத்­தத்தில் புதி­தாக உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற இச்­ச­ரத்து மூன்று அம்சங்­களைக் கொண்­டி­ருக்­கி­றது.

1) சகல மாகா­ணங்­க­ளுக்கும் ஒரே ­தி­னத்தில் தேர்தல் நடத்­தப்­ப­ட ­வேண்டும்.

2) சகல மாகாண சபை­களும் கலைக்­கப்­படும் திகதி பாரா­ளு­மன்­றத்­தினால் தீர்­மா­னிக்­கப்­படும்.

3) அத்­தி­கதி இறு­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட மாகாண சபையின் பதவிக் கால முடிவுத் திக­திக்குப் பின்­ன­ராக, இருக்­கக்­கூ­டாது. (அதா­வது இறு­தி­யாக ஊவா மாகாண சபைத் தேர்தல் 2014 செப்­டெம்பர் 20 ஆம் திகதி நடை­பெற்­றது. எனவே அதன் பத­விக்­கா­லத்­துக்கு பிந்­தி­ய­தாக இருக்­கக்­கூ­டாது.

154 E தற்­போ­தைய இச்­ச­ரத்தின் படி மாகாண சபை­யொன்றின் ஐந்து ஆண்டு பத­விக்­காலம் முடி­வ­டைந்ததும் அது தாமாக, கலைந்­த­தாக கரு­தப்­படும். இது பாரா­ளு­மன்­றத்­தினால் குறித்­து­ரைக்­கப்­ப­டு­கின்ற திக­தியில் கலைந்­த­தாக கரு­தப்­ப­டு­மென திருத்­தப்­ப­டு­கி­றது.

154 A புதி­தாக உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற இப்­பி­ரிவு குறித்த திக­திக்கு முன்னால் முடி­வ­டை­கின்ற மாகா­ண­ ச­பை­களின் பத­விக்­காலம் பாரா­ளு­மன்­றத்­தினால் குறிப்­பி­டு­கின்ற அத்­தி­கதி வரை நீடிக்­கப்­பட்­ட­தாக கரு­தப்­படும் என்று கூறு­கி­றது. இதன் பிர­காரம் கிழக்கு மாகாண சபையின் பத­விக்­காலம் செப்­டெம்­ப­ருடன் முடி­வ­டை­கி­றது. ஊவா மாகா­ணத்தின் பதவிக் காலம் 2019 செப்­டெம்­ப­ருடன் முடி­வ­டை­கி­றது. பாரா­ளு­மன்றம் தீர்­மா­னிக்கும் திக­தி­வரை முத­ல­மைச்­சரும் ஏனைய அமைச்­சர்­களும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களும் பத­வியை தொடர்ந்து வகிப்­பார்கள் என்­பது இதன் அதி­கா­ர­பூர்­வ­மான அறி­வித்­த­லாகும்.

செப்­டெம்பர் மாதத்­துடன் முடி­வ­டையும் மூன்று மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை உடன் நடத்­தாது அவற்றின் ஆட்­சிக்­கா­லத்தை நீடித்து சகல மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை 2019 ஆம் ஆண்­டுக்­குப்பின் ஒரே­நாளில் நடத்­து­வ­தற்கு தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பிர­தான கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்சி தீர்­மானம் எடுத்­த­மைக்கு அமைய அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்கி மேலுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது. அமைச்­ச­ர­வையால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த தீர்­மா­னத்­துக்கு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னரும் ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தனர்.

இவ்­வாறு ஒத்­தி­வைப்­ப­தற்­கான கார­ணத்தை வெளி­யிட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மைப்­பீடம், மாகாண சபை­களின் தேர்­தல்­களை துண்­டு­துண்­டாக நடத்­து­வதில் பெரும் சிர­மங்கள் உள்­ளன. செல­வீ­னங்கள் அதி­க­மா­கின்­றன. அத்­துடன் பொது அமைப்­புகள் ஒரே­நாளில் நடாத்­தும்­படி ஆலோ­ச­னை­களை நல்­கி­யி­ருப்­ப­துடன், கோரிக்­கை­க­ளையும் முன்­வைத்­துள்­ளன.

இதன் கார­ண­மா­கவே தேர்­தல்­களை ஒத்­தி­வைத்து ஊவா மாகாண சபையின் முதிர்­வுக்­காலம் 2019 ஆம் ஆண்டு அக்­டோபர் 8 ஆம் திக­தி­யுடன் முடி­வுறும் நிலையில் 2019 ஆம் ஆண்டு அக்­டோ­ப­ருக்­குப்பின் ஒரே­நாளில் நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ளது. அதன் நிமித்தம் 20 ஆம் திருத்த சட்ட வரைபை கொண்­டு­வ­ரு­கி­றது என காரணம் கூறப்­பட்­டி­ருந்­தது.

பொது­வா­கவே நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பத­விக்கு வந்த காலத்­தி­லி­ருந்து தேர்­தல்­களை பிற்­போட எத்­த­னித்து வரு­வ­தா­கவும் எந்­த­வொரு தேர்­த­லையும் எதிர்­கொள்ளத் தயா­ராக இல்­லாத நிலையில் நடத்­தப்­பட வேண்­டிய உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களை நடத்­தாமல் பல்­வேறு சாக்­கு­போக்­கு­களைக் கூறிக் கொண்டு காலத்தை கடத்­து­வது மாத்­தி­ர­மல்ல ஜன­நா­யக உரி­மை­களை மீறிச் செயற்­ப­டு­கி­றது என்ற குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டு­வரும் நிலை­யி­லேயே மாகாண சபை­களின் தேர்­தல்­களை மிக நீண்­ட­கா­லத்­துக்கு ஒத்­தி­வைக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது என்­பது அர­சாங்­கத்தின் மீது வீசப்­ப­டு­கின்ற விமர்­ச­னங்­க­ளாகும்.

ஐ.தே.கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் இந்த திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும் இக்­கட்­சி­யுடன் இணைந்து தேர்­தலை சந்­தித்த தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொது எதி­ர­ணி­ இதனை ஆத­ரிக்­காமல் விலத்­தி­யுள்­ளன என்­ப­துடன் கூட்டு அர­சாங்­கத்­தி­லுள்ள பிர­தான கட்­சி­களில் ஒன்­றான ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி இதற்கு எதி­ரான நிலைப்­பாட்டை எடுத்­தி­ருப்­பது சங்­க­டத்தை உண்டு பண்­ணி­யுள் ­ளது.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அவர்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் 20 ஆவது சீர்­தி­ருத்தம் தொடர்­பான முன்­னெ­டுப்­புகள் ஏன் வந்­தது என்­பது பற்­றிய மக்­களின் கருத்துப் பதி­வு­க­ளையும் இவ்­வி­டத்தில் பதிவு செய்து கொள்­வது விவ­கா­ரங்­களை விளங்கிக் கொள்ள உத­வி­யாக இருக்கும்.

கிழக்கு மாகா­ணத்­துக்கு விஜயம் செய்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அவர்­க­ளுடன் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அஹமட் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சியல் பிர­மு­கர்கள் கிழக்கின் அபி­வி­ருத்தி தொடர்பில் அர்த்­த­புஷ்­டி­யான பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தார்கள். இப்­பேச்­சு­வார்த்­தைகள் ஊடு பொருள் கொண்­ட­தா­கவும் சில பகி­ரங்கத் தன்மை கொண்­ட­தா­கவும் இருந்­துள்­ள­தா­கவும் இந்த கிழக்கின் விஜ­யத்தின் பின்பே இத்­த­கை­ய­தொரு முடி­வுக்கு பிர­தமர் வந்­துள்ளார் என்ற கருத்து நிலை­களும் அபிப்­பி­ரா­யங்­களும் இருக்­கின்­றது. சில­வே­ளை­களில் இதில் உண்மைத் தன்­மை­யில்­லா­விட்­டாலும் பர­வ­லாக பேசப்­ப­டு­கின்ற விட­ய­மாக இருக்­கின்­றது.

மாகாண சபை­களின் கால ஒத்­தி­வைப்புத் தொடர்பில் கருத்துத் தெரி­வித்த முத­ல­மைச்­சர்­களின் கூட்­ட­மைப்புத் தலை­வரும் வடமேல் மாகாண முத­ல­மைச்­ச­ரு­மான தர்மசிறிதஸ நாயக்க கருத்துத் தெரி­விக்­கையில்;

சகல மாகாண சபைத் தேர்­தல்­க­ளையும் ஒரே­நாளில் நடத்­து­வ­தற்கு அமைச்­ச­ரவை மேற்­கொண்­டி­ருந்த தீர்­மானம் பற்றி முத­ல­மைச்­சர்கள் கருத்துப் பெறப்­பட்­டுள்­ள­தாக உத்­தி­யோக பூர்­வ­மாக அறி­வித்­துள்ளார்.

ஏற்­க­னவே, முதலமைச்­சர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்­புதான் அர­சாங்கம் குறிப்­பாக, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அவர்­களும் அவ­ரது தலை­மை­யி­லான ஐ.தே.கட்­சியும் இம்­மு­டி­வுக்கு வந்­ததா என்­பது தெளி­வாக்­கப்­ப­டாத விட­ய­மாகும்.

20 ஆவது திருத்­தத்தை கொண்­டு­வர நினைக்கும் தேசிய அர­சாங்­க­மா­னது அவ்­வாறு கொண்­டு­வர கடு­மை­யான பிர­யத்­த­னங்­களை மேற்­கொள்­ளு­மாயின், அது எதிர்­கொள்ள வேண்­டிய சவால்­களும் எதிர்ப்­பு­களும் முன்­னைய அர­சாங்கம் 18 ஆவது திருத்­தத்தைக் கொண்­டு­வந்த போது, உள்­நாட்­ட­ள­விலும் சர்­வ­தேச அள­விலும் எத்­த­கைய அவப் பெயர்­களை வேண்­டி­யதோ அதை­விட மோச­மான விமர்­ச­னங்­க­ளையும் கண்­ட­னங்­க­ளையும் எதிர்­கொள்­ள­வேண்­டி­வ­ரு­மென்­பது, சாதா­ரண ஒரு பாம­ர­னாலும் புரிந்­து­கொள்­ளக்­கூ­டிய விட­ய­மா கும்.

ஆட்­சி­யி­லுள்ள அர­சாங்கம் மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்­தலை ஒத்­திப்­போட விரும்­பு­வ­தற்கும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களை நடத்­தாமல் பல்­வேறு சாட்­டு­களைக் கூறிக் கொண்டு இழுத்­த­டிப்­ப­தற்­கு­ரிய கார­ணங்கள் தெரி­யப்­ப­டாத விவ­கா­ரங்­க­ளாக இருந்­தாலும் மக்கள் என்ன நினைக்­கின்­றார்கள். எதிர்த்­த­ரப்­பினர் எவ்­வகை விமர்­ச­னங்­களை முன்­வைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பது அர­சாங்கம் அறி­யாத ஒரு விட­ய­மல்ல.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடாத்­து­வ­த­னாலோ மாகா­ண­ சபைத் தேர்­தலை நடத்­து­வ­த­னாலோ நடை­பெ­ற­வுள்ள தேர்­தலில் பெருந்­தொ­கை­யான உள்­ளூ­ராட்சி மன்றங்கள் பொது எதி­ர­ணியின் கைக­ளுக்கு போய்­விடும் ஆபத்­துண்டு. அவ்­வாறு போய்­வி­டு­மானால் தேசிய அர­சாங்­கத்­துக்கு சவா­லாக அவை மாறி­வி­டு­வ­துடன் தேசிய அர­சாங்­கத்தை நடத்தி செல்­வதில் பல்­வேறு சவால்­க­ளையும் சங்­க­டங்­க­ளையும் சந்­திக்க நேரிடும் என்ற பயத்தின் கார­ண­மா­கவே நடத்­தப்­ப­ட­வேண்­டிய 335 உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களை நடத்­தாமல் அர­சாங்கம் காலத்தைக் கடத்திக் கொண்­டி­ருக்­கின்­ற­து ­என்ற குற்­றச்­சாட்­டுக்­களை, மஹிந்த அணி­யினர் தொடர்ந்தும் முன்­வைத்துக் கொண்­டி­ருப்­பது மாத்­தி­ர­மன்றி முடி­யு­மானால் நடத்திப் பாருங்கள். அனைத்து உள்­ளூ­ராட்சி மன்றங்­க­ளையும் நாம் கைப்­பற்­று­வோ­மென அவர்கள் சவால்­ விட்டுக் கொண்­டி­ருப்­பதைக் கேட்டுக் கொண்­டி­ருக்­கிறோம்.

இவ்­வகைப் பயத்தின் கார­ண­மாகவோ என்­னவோ இலங்கை அர­சாங்­க­மா­னது, உள்­ளூ­ராட்சி அமைப்­பு­க­ளுக்­கான தேர்­தலை நடத்­தாமல் பழைய விகி­தா­சார முறையில் நடத்­து­வதா புதிய வட்­டார முறையில் நடத்­து­வதா? அல்­லது இரண்டும் கலந்த கலப்பு முறையில் நடத்­தப்­ப­டு­மென்று நாளுக்கு நாள் புதிய தக­வல்­களைத் தெரி­வித்து திண்­டாடிக் கொண்­டி­ருக்­கி­றது என்­பது மக்­களின் அபிப்­பி­ரா­ய­மாக காணப்­ப­டு­கி­றது.

இதே­போன்­ற­தொரு சிக்கல் கொண்­ட­தா­கவே மாகா­ண­சபைத் தேர்தல் நிலை­மை­களும் காணப்­ப­டு­கி­றது. இவ்­வ­ருடம் செப்­டெம்பர் மாதத்­துடன் கிழக்கு மாகா­ண­சபை, வட­மத்­திய மாகாண சபை, சப்­ர­க­முவ மாகாண சபை ஆகிய மூன்று மாகாண சபை­களின் பரு­வ­கா­லங்­களும் முடி­வ­டையும் தறு­வாயில் இருக்­கின்ற நிலையில் இவற்­றுக்­கான தேர்­தலை நடாத்தி அது, மாற்றான் கைக்கு சென்­று­விட்டால் நல்­லாட்சி அர­சாங்கம் தனது செல்­வாக்கை இழந்து விட்­டது என்ற கெட்ட பெயரை எடுக்க வேண்­டி­வ­ரு­வ­துடன் மக்கள் செல்­வாக்கை இந்த அர­சாங்கம் இழந்து விட்­டது. இந்த அர­சாங்­கத்தை கலைக்க வேண்டும். வீட்­டுக்கு அனுப்ப வேண்­டு­மென்று கங்­கணம் கட்டிக் கொண்­டி­ருக்கும் பொது எதி­ர­ணிக்கு வாய்ப்­பாக போவது மாத்­தி­ர­மல்ல தேசிய அர­சாங்­கத்தின் ஆயுட்­காலம் ஆட்டம் கண்­டு­வி­டு­மென்­பது பொது­வாக புரிந்து கொள்­ளக்­கூ­டிய விடயம்.

தேசிய அர­சாங்கம் என்ற வெறும் கட்­ட­மைப்­புக்குள் இரு­கட்சி ஆட்சி இடம்­பெற்று வரு­கின்­ற­போதும், அண்­மைக்­கா­ல­மாக இரு­கட்­சி­க­ளுக்­கி­டையே இடம் பெற்று வரும் பனிப்போர் முரண்­பா­டுகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்­து­வ­ரு­வது தெளி­வாக தெரி­கின்ற விடயம். 20 ஆவது திருத்த விவ­கா­ரத்தில் கூட, இரு கட்­சி­க­ளுக்­கி­டையில் வெடித்­துள்ள கருத்து முரண்­பா­டுகள் உக்­கி­ர­நிலை பெற்றுக் கொண்­டி­ருப்­பதை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

கிழக்கு மாகாண சபையைப் பொறுத்­த­வரை நல்­லாட்­சிக்கு உதா­ரணம் என்று கூறப்­பட்­டாலும் இம்­மா­கா­ண­ சபை பற்­றிய விமர்­ச­னங்கள் கடு­மை­யா­கவே முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. ஐ.தே.க., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, சுதந்­திரக் கட்சி ஆகி­ய­வற்றின் கூட்­டாட்­சி­யாக இது பார்க்­கப்­ப­டு­கி­ற­போதும், அபி­வி­ருத்தி, வேலை­வாய்ப்பு , அதி­கார நடை­மு­றை­களில் முரண்­பா­டு­களில் உள்­ளது என்று பேசப்­ப­டு­கி­றது.

கிழக்கு மாகாண சபை பற்றி அண்­மையில் கருத்துத் தெரி­வித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்­புல்லா, கிழக்கு மாகாண சபை உள்­ளிட்ட மூன்று மாகாண சபை­களின் கால எல்­லையை நீடிக்கும் முயற்­சிக்கு எக்­கா­ரணம் கொண்டும் சுதந்­தி­ரக்­கட்சி ஆத­ரவு அளிப்­ப­தில்­லை­யென்று தெளி­வான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய செயற்­குழு எடுத்த இந்த தீர்­மானம் தொடர்பில் சக­ல­ருக்கும் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதி­கார துஷ்­பி­ர­யோகம் மேற்­கொள்­கின்ற ஊழல் நிறைந்த கிழக்கு மாகா­ண­ ச­பையை அதன் கால­எல்லை நிறை­வ­டையும் போது கலைத்து விடு­வ­தென்றும் எக்­கா­ரணம் கொண்டும் அதற்கு கால நீடிப்பு வழங்­கு­வ­தில்­லை­யென்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஹிஸ்­புல்லா சுட்டிக் காட்டியிருந்தார். இதுபோன்றே ஏனைய மாகாண சபைகளின் நிலைமைகளும் காணப்படுகிறது என்பது கூறாமலே விளங்கிக் கொள்ளக்கூடியது.

மாகாணசபைகளின் கால எல்லையை நீட்டுவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவானது சில வேளைகளில் வாபஸ் பெறப்படலாம் என்று இருந்தாலும் நீடிப்பதற்கு முயற்சி செய்வதற்கான இன்னொரு காரணமாக கூறப்படுவது புதிய அரசியல் சாசன நிறைவேற்றத்தில் பாராளுமன்றம், சர்வசன வாக்கெடுப்பு ஆகியன முக்கியம் பெற்றாலும் மாகாண சபைகளின் அங்கீகாரமென்பது அவசியமாக்கப்படலாம். இவ்வாறானதொரு சூழ்நிலையில் மூன்றில் ஏதாவதொரு மாகாணசபை அரசாங்கத்தின் கையைவிட்டுப் போனாலும் நிலைமை மோசமாகிவிடுமென்ற தூர விளைவு சிந்தனையின் அடிப்படையில் அரசாங்கம் மாகாண சபைகளின் தேர்தர்கால எல்லையை ஒத்திப்போட எத்தனிக்கின்றது என்ற கருத்தும் கசியத்தான் செய்கிறது.

எவ்வாறிருப்பினும் 20 ஆவது திருத்தமொன்றை கொண்டுவருவதையோ, மாகாண சபைகளின் கால எல்லையை நீடிப்பதையோ, வெகுசன அமைப்புகளோ, ஜனநாயக முறைசார் நிறுவனங்களோ ஏற்றுக்கொள்ளவில்லையென்பதை சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளான பவ்ரல், கபே, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம், தேசிய கண்காணிப்பு நிலையம் மற்றும் ட்ரான்ஸ் பெரன்ஸி, இன்டநெஷனல் ஆகியன தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ள நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதுபற்றிக் கருத்து தெரிவிக்கையில்;

"ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டுமென்றால் சகல மாகாண சபைகளையும் கலைக்க வேண்டும். கால எல்லையை நீடிக்க முடியாது. அரசியல்வாதிகளின் தேவைக்காக மக்கள் ஆணையை மீறுவது தேசத்துரோகமாகும் என்றும் கூறியுள்ளார். ஆனாலும் இந்த முயற்சியை அரசாங்கம் தொடருமா ? கைவிடுமா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

திரு­ம­லை­ நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-19#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.