Jump to content

கேரளா உணவு வகைகள்


Recommended Posts

இது கேரள ஸ்பெஷல். நம் ஊரில் வாழைக்காய் பஜ்ஜி போல கேரளாவில் வாழைப்பழத்தில் போடப்படும் பஜ்ஜிதான் பழம்பொரி. இதை ஏத்தங்காய்ப் பணியாரம் என்றும் சொல்வார்கள்.

1. பழம் பொரி
1480157795-0624.jpg
தேவையான பொருட்கள்:

மைதா – 1/2 கிலோ
நடுத்தரமான நேந்திரம் பழம் – 5
சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டுவதைப் போல நேந்திரம் பழத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.

மைதா, அரிசிமாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள். பஜ்ஜி மாவுப் பதம் இருக்க வேண்டும். பழத்துண்டை மாவில் நனைத்துத் தேங்காய் எண்ணெயில் சிவக்கப் பொரித்தெடுங்கள். சுவையான பழம்பொரி தயார்.

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

 

கேரளா ஸ்பெஷல் : புட்டு, கடலை கறி மற்றும் ஓலன்

புட்டு கடலை கறி
15883
புட்டு – தேவையான பொருட்கள்
புட்டு மாவு (அரிசி மாவு) – 2 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்
தேங்காய் துருவியது – தேவையான அளவு

புட்டு செய்முறை:

அரிசி மாவோடு போதுமான உப்பு சூடான தண்ணீர் சேர்த்து கைவிரல்களால் நன்கு பிசைய வேண்டும். இந்தப் புட்டு செய்வதற்கு நீங்கள் பாரம்பரிய புட்டுக்குடத்தைப் பயன்படுத்த வேண்டும். அந்த உருளை வடிவமான குழலில் முதலாவது ஒரு கரண்டி துருவிய தேங்காய் போட்டு அதன் மீது பிசைந்த அரிசி மாவினைப் போட வேண்டும்.

ஒரு கையளவு போட்டதும் மறுபடியும் தேங்காய் துருவல் பின்னர் பிசைந்த அரிசி மாவு என புட்டுக் குழல் நிரப்பும் வரை மாறி மாறி போட வேண்டும். பின்னர் புட்டுக் குடத்தின் மீது புட்டுக் குழலை நன்கு மூடி வைத்து அவிக்க வேண்டும். நீராவி வெளிவரும் வரை நன்கு கவனமாக அவிக்க வேண்டும். மூன்று நிமிடங்களில் புட்டு தயார். புட்டுடன் சாப்பிட கடலை கறி மிகவும் பொருத்தமாக இருக்கும்.

2. புட்டு கடலை கறி

கடலை கறி செய்ய தேவையான பொருட்கள்:

கருப்பு கொண்டை கடலை – 1கப் (ஊற வைத்து அதோடு உப்பு சேர்த்து வேக வைத்தது)
சின்ன வெங்காயம் (நறுக்கியது) – 1 கப்
தேங்காய் (துருவியது) – 1 கப்
தனியாத் தூள் – 2 தேக்கரண்டி
வற்றல் பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
தேங்காய் (துண்டுகள்) – ¼ கப்
தக்காளி (நறுக்கியது) – ¼ கப்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய்
கடுகு
மிளகாய் வற்றல்
இஞ்சி-பூண்டு (விழுது)

1480157848-4088.jpg

கடலை கறி செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தேங்காய் துருவலைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி எடுக்கவும், அதோடு கொத்தமல்லி இலை, மிளகாய் தூள், கரம் மசாலா போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். அவற்றை விழுதாக அரைக்கவும்

ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும், பின்னர் கடுகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு அது பொரியத் தொடங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அதன் பின்னர் வெங்காயம் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சிறிது கறிவேப்பிலை, அவித்து வைத்த கொண்டைக் கடலையை அத்தோடு சேர்த்து போதுமான நீர் உப்பு சேர்த்து நன்கு கிளறி வேக விடவும்.

பின்னர் அரைத்து வைத்த தேங்காய் விழுதை அவித்து வைத்த கொண்டை கடலையோடு சேர்த்து மேலும் நன்கு வேக விடவும். நன்கு வெந்ததும் நீங்கள் இப்போது நறுக்கிய கொத்தமல்லி தூவி இதனை அலங்கரித்து புட்டுவோடு சேர்த்து பரிமாறலாம். இந்த புட்டுடன் கடலை கறி சேர்த்து சாப்பிடுவது மிகவும் சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Bild könnte enthalten: Essen
 

கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார்

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)

வெண்டைக்காய் - 4 (நறுக்கியது)

கேரட் - 2 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

வெங்காயம் - 2 (நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

புளி

துருவிய தேங்காய்

சிறிது உப்பு

தேவையான அளவு கொத்தமல்லி

சிறிது பருப்பு வேக வைப்பதற்கு... துவரம் பருப்பு - 1 கப்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

தண்ணீர் - 3 கப்

 

வறுத்து அரைப்பதற்கு...

மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் - 4

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

 

தாளிப்பதற்கு...

கடுகு - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 2-3

கறிவேப்பிலை - சிறிது

தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்


செய்முறை:


முதலில் துவரம் பருப்பை நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் 3 கப் தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, 3-4 விசில் விட்டு இறக்கி, குக்கரை திறந்து பருப்பை மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் புளியை ஒரு கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கவும்.

பிறகு அதில் காய்கறிகளை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

காய்கறியானது நன்கு வெந்ததும், அதில் மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் துருவிய தேங்காய் சிறிது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவி மூடினால், கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார் ரெடி!!!

Link to comment
Share on other sites

மலபார் மட்டன் பிரியாணி

spacer.png
 
 
மசாலாவிற்குத் தேவையான பொருட்கள்
  • மட்டன் - ½ கி.கி (நடுத்தரமாக நறுக்கியது)
  • கொத்தமல்லி இலை – 25 கிராம்
  • புதினா இலை – 25 கிராம்
  • கறிவேப்பிலை – 10 கி
  • பச்சை மிளகாய் – 5
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • பூண்டு(நறுக்கியது) – 2 தேக்கரண்டி
  • இஞ்சி – 2 தேக்கரண்டி (நறுக்கியது)
  • மஞ்சள் பொடி - ½ தேக்கரண்டி
  • எலுமிச்சைச் சாறு – 1 தேக்கரண்டி
  • கசகசா விழுது – 1 தேக்கரண்டி
  • தயிர் - ½ கப்
  • கொத்தமல்லித் தூள் – 2 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகத்தூள் - ½ தேக்கரண்டி

பிரியாணி சாதம் செய்ய தேவையான பொருட்கள்
  • நெய் – 3 கப்
  • இலவங்கப்பட்டை – 5-6 (கம்பு)
  • பிரியாணி இலை – 1
  • ஏலம் – 4-5
  • கறிவேப்பிலை
  • வெங்காயம் (நறுக்கியது) - 1 கப்
  • பிரியாணி அரிசி – 250 கி
  • தண்ணீர் -½ லி

மசாலாவிற்குத் தேவையான பொருட்கள்
  • நெய் – 2 கப்
  • இலவங்கப்பட்டை – 5
  • பிரியாணி இலை – 1
  • கிராம்பு – 4
  • ஏலம் – 4
  • ஜாதிக்காய் – 100 கிராம்
  • தக்காளி – 1

அலங்காரத்திற்கு தேவையான பொருட்கள் 
  • வெங்காயம் (மெலிதாக) – 1 கப்
  • முந்திரிப் பருப்பு - ¼ கப்
  • உலர்ந்த திராட்சை - ¼ கப்

செய்முறை
நீங்கள் இப்போது மட்டனை செய்ய தயாராகலாம். மட்டனை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதோடு இஞ்சி, கிராம்பு, ஏலம், பெருஞ்சீரகம், கசகசா விழுது, நறுக்கிய இஞ்சி, ஜாதிக்காய், பிரியாணி இலை, புதினா இலை, சீரகம், இலவங்கப்பட்டை, கொத்தமல்லித்தூள், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, தயிர் மற்றும் உப்பு நன்கு கலந்து தனியாக வைக்கவும்.

இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும். அதே மாதிரி நெய்யில் உலர்ந்த திராட்சையையும் வறுத்து எடுக்கவும். அதன் பின்னர் வெங்காயம், உப்பு போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். இப்போது நறுக்கிய வெங்காயத்தை போட்டு கிளறவும். அத்தோடு தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும். இப்போது ஊற வைத்த மட்டனை அத்தோடு சேர்க்கவும். போதுமான அளவு நீர் ஊற்றி நன்கு கலக்கவும். பாத்திரத்தை மூடி வைத்து வேக வைக்கவும்.  

மற்றொரு பாத்திரத்தை எடுத்து நான்கு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதனுள் கிராம்பு, பெருஞ்சீரகம், ஏலம், சீரகத்தூள் மற்றும் கறிவேப்பிலை போடவும். பின்னர் இலவங்கப்பட்டை மற்றும் வெங்காயம் போட்டு நன்கு கிளறவும். அதோடு சாதத்தை சேர்த்து திரும்பவும் நன்கு கிளறவும்.  தேவையான அதாவது அரிசி அளவு நீர் மூழ்கும் அளவு நீர் ஊற்றவும். பின்னர் உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி அடுப்பில் வைத்து வேக விடவும்.

மட்டன் வெந்ததும் பாத்திரத்தின் மூடியை திறந்து மறுபடியுமாக சிறிது கிளற வேண்டும்.

சாதம் செய்த பாத்திரத்திலிருந்து ஒரு பகுதி சாதத்தை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சில துண்டு மட்டனை எடுத்து மீதம் இருக்கும் சாதத்தின் மீது வைக்கவும் இப்போது தனியாக எடுத்து வைத்த சாதத்தை மட்டன் மீது பரப்பவும். திரும்பவும் மட்டன் துண்டுகள் பரப்பி அதன் மீது சாதத்தை பரப்பவும். இப்படியாக மொத்த சாதமும் மட்டனும் சமமாக அடுக்குகளாக பரப்பப்பட்ட பின்னர் இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை வெங்காயத்தை சேர்க்கவும். சிறிது கொத்தமல்லி இலை தூவி சிறிது அடுப்பில் வைத்து வேக விடவும்.

இப்போது ருசியான கமகமக்கும் கேரள மலபார் பகுதி பிரசித்திப்பெற்ற  பிரியாணி ரெடி.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மலபார் இறால் புரியாணி

 
 
2015-10-16%2B15.38.29.jpg
 
தேவையான பொருட்கள்;
சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசி - அரைக்கிலோ
இறால் உறித்தது  - 500 கிராம்
வெங்காயம் - 4 மீடியம் சைஸ்(200 கிராம்) 
தக்காளி - 2 (100 கிராம்)
நறுக்கிய மல்லி,புதினா - தலா அரை கப்
ப்ரெஷ் கெட்டி தயிர் - அரை கப் 
எலுமிச்சை ஜூஸ் - ஒரு பழம் ( மீடியம் சைஸ்)
இஞ்சி பூண்டு  பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
ஏலம்,பட்டை, கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை - 1
காஷ்மீரி சில்லி பவுடர் - அரைடீஸ்பூன் (காரம் அவரவர் விருப்பம்)
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 4 + 2  டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
பைனாப்பிள் எசன்ஸ் - விரும்பினால் - 1 டீஸ்பூன் ( நான் சேர்க்கவில்லை)
உப்பு - தேவைக்கு.
 
அலங்கரிக்க:
பெரிய வெங்காயம் - 1 
முந்திரி - 10 -15
 
 
செய்முறை:-
முதலில் சுத்தம் செய்த இறாலை 1/2  டீஸ்பூன் மிளகாய்த்தூள் ,கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சுவைக்கு உப்பு, சிறிது எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கலந்து  வைக்கவும். 
தேவையான பொருட்களை நறுக்கி தயார் செய்து வைக்கவும்.
 
2013-12-15%2B11.46.16.jpg
ஒரு கடாயில் 2 -3  டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு முந்திரி  பக்குவமாக வறுத்து எடுக்கவும்.அதே எண்ணெயில் சிம்மில் வைத்து வெங்காயம் பொன்னிறமாக வறுத்து எண்ணெய் வடித்து தனியாக வைக்கவும்.
 
 
முந்திரி  வெங்காயம் வறுத்த எண்ணெயில் இறாலை ரோஸ்ட் செய்து எடுக்கவும்.
spp-2.JPG

இனி பிரியாணி ரைஸ் செய்ய:
2 டேபிள்ஸ்பூன் நெய் அடிகனமான பாத்திரத்தில் விடவும், ஏலம்,பட்டை கிராம்பு,பிரியாணி இலை போட்டு சிம்மில் வைத்து வெடிக்க விட்டு ஊறிய அரிசியை சேர்த்து மெதுவாக வதக்கவும்.அரிசியின் அளவிற்கு ஒன்றுக்கு ஒன்னரை அளவு கொதி நீரை விடவும் .தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து மூடவும். தண்ணீர் வற்றி ரைஸ் பொல பொல வென்று வரும். அடுப்பை அணைக்கவும். ரைஸ் முக்கால் பதம் தான் வெந்திருக்கும்.
mb-4.jpg
இனி பிரியாணிக்கு கிரேவி செய்ய:-
பிரியாணிக்கு கிரேவி செய்ய அடிகனமான பாத்திரம் எடுத்துக் கொள்ளவும்.
 
4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்து வரவும் .
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.நன்கு பொன்னிறமாக வரவேண்டும்.இஞ்சி பூண்டு பேஸ்ட்  சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளி, மல்லி, புதினா சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.தக்காளி நன்கு மசிந்து வர வேண்டும்.
16317fb3-c32f-4a9d-ac2e-cfc1932f57a8.jpg
.மிளகாய்த்தூள், மல்லித்தூள்,மிளகுத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்க்கவும்.பிரட்டி விடவும். தயிர் எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது.நன்கு பிரட்டி விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.ரோஸ்ட் செய்த இறாலைச் சேர்க்கவும்  கிரேவியில் உப்பு சரிபார்க்கவும். சிறிது எலுமிச்சை பிழிந்து விடவும்.

இனி பிரியாணிக்கு தம் செய்ய வேண்டும்.
இறால் ரெடி செய்ததில் பாதி கிரேவியோடு தனியாக எடுத்து வைக்கவும்.
மீதியுள்ள கிரேவி மீது ரெடி செய்த கீ ரைஸ் பாதி சேர்க்கவும்.விரும்பினால் அரை டீஸ்பூன் பைனாப்பிள்  எசன்ஸ் சேர்க்கவும்.அதன் மீது பாதி எடுத்து வைத்த இறால் கிரேவி சேர்க்கவும்.மீண்டும் ரைஸ் சேர்க்கவும்.வறுத்து வைத்த வெங்காயம்,முந்திரி திராட்சை சேர்க்கவும். எசன்ஸை பரவலாக விடவும். அலுமினியம் ஃபாயில் அல்லது மெல்லிய துணி கொண்டு மூடவும். தம் செய்ய ஒரு பழைய தோசைக்கலம் அல்லது தவாவை வைக்கவும். மேலே ரெடி செய்த பிரியாணி  பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் மிகச் சிறிய தீயில் தம் செய்யவும்.அடுப்பை அணைக்கவும்.10 நிமிடம் கழித்து திறக்கவும்.
கலந்து பரிமாறவும்.
2015-10-16%2B15.54.41.jpg

சுவையான மலபார் இறால் பிரியாணி தயார். ரைத்தா, பப்படம்,  ஃபிஷ் ஃப்ரையுடன் பரிமாறலாம்.
2015-10-16%2B15.38.29.jpg
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கேரளா ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்

 

p115.jpg

.

பாலக்காடு சாம்பார்

தேவையானவை:
 துவரம் பருப்பு -  கால் கப்
 பெரிய வெங்காயம் - 1
(நீளமாக நறுக்கவும்)
 தக்காளி - 2
(மீடியம் சைஸில் நறுக்கவும்)
 வெண்டைக்காய் - 2
 முருங்கைக்காய் - 2
(விருப்பமான வடிவில் நறுக்கவும்)
 கல்யாணபூசணிக்காய் - 50 கிராம்
 சேனைக்கிழங்கு - 1 கப்
 உருளைக்கிழங்கு - 1
 புளி - சின்ன எலுமிச்சை அளவு (ஊற வைத்து வடிகட்டவும்)
 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 பெருங்காயம் - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - 5 இலைகள்
 மல்லி (தனியா) - 3 டேபிள்ஸ்பூன்
 கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 வெந்தயம் - 1 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 6
 கறிவேப்பிலை - 5 இலைகள்
 துருவிய தேங்காய் - 1 கப்
 தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
 கடுகு - 1 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 வெந்தயம் - அரை டீஸ்பூன்
 தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

p115a.jpg

செய்முறை
காய்கறிகளை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும். துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து புளிக்கரைசல், மூன்று கப் தண்ணீர், காய்கறிகள், தக்காளி, வெங்காயம், மஞ்சள்தூள் மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து குறைவான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும்.

 அடுப்பில் வாணலியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து மல்லி (தனியா), கறிவேப்பிலை, வெந்தயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இறுதியாக தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு  விழுதாக அரைத்து வைக்கவும். காய்கறிகள் வெந்ததும், வெந்த பருப்பை மசித்து காய்கறிகளோடு சேர்த்துத் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். அரைத்த விழுதை சாம்பாரில் சேர்த்து பத்து நிமிடம் குறைந்த தீயில் வேக வைத்து, தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துத் தாளித்துப் பரிமாறவும்.


காளன்

தேவையானவை:
 நேந்திரங்காய் - 2
 சேனைக்கிழங்கு - 250 கிராம்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 தயிர் - கால் கப்
 உப்பு - தேவையான அளவு

அரைக்க:
 துருவிய தேங்காய் - முக்கால் கப்
 சீரகம் - 1 டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
 கடுகு - 1 டீஸ்பூன்
 வெந்தயம் - அரை டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 1
 கறிவேப்பிலை - 5 இலைகள்

p115b.jpg

செய்முறை:
நேந்திரங்காய் மற்றும் சேனைக்கிழங்கை, மீடியம் சைஸ் துண்டுகளாகத் தோல் நீக்கி கழுவி பிரஷர் குக்கரில் மிளகுத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மிக குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் வரும் வரை வேக விடவும். தண்ணீர் இருந்தால், அடுப்பில் மீண்டும் வைத்து, தண்ணீரை வற்ற விடவும். அடுப்பை அணைத்து காய்கறிகளை லேசாக மசித்துக் கொள்ளவும். மீண்டும் குக்கரை அடுப்பில் ஏற்றி சிம்மில் வைத்து தயிரைச் சேர்த்துக் கலக்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். இதை காய்கறிக் கலவையில் சேர்த்துக் கலக்கி, சில நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றை, தாளித்து கலவையில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.


மீன் மொய்லி

தேவையானவை:
 மீன் - 500 கிராம்
(சின்ன கியூப்களாக  நறுக்கவும்)
 பெரிய வெங்காயம் - 2
(மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
 பச்சை மிளகாய் - 10 (இரண்டாக நறுக்கி கொள்ளவும். காரத்துக்கேற்ப கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்)
 முதல் தேங்காய்ப்பால் - அரை கப்
 இரண்டாம் தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்
 பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
 மிள‌காய்த்தூள் - 1 டீஸ்பூன்
 வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 பட்டை - 2
 கிராம்பு - 4
 மைதா மாவு - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - 5
 உப்பு - தேவையான அளவு
 தேங்காய் எண்ணெய்
- தேவையான அளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 நீளமான தக்காளி ஸ்லைஸ்கள்
- அலங்கரிக்க

p11c.jpg

செய்முறை:
மீனைக் கழுவி சிறிது மஞ்சள்தூள், உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகத் தேய்த்து, அரை மணி நேரம் தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு கப் எண்ணெய் ஊற்றி, மீனை பாதி வேக்காட்டில் பொரித்து எடுத்து எண்ணெயை வடித்து தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் மைதா மாவு, மீதமிருக்கும் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை போட்டு சில நிமிடம் வதக்கவும். இதில் இரண்டாம் தேங்காய்ப்பாலைச் சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், வினிகர், கிராம்பு, பட்டை, உப்பு சேர்த்து குறைந்த தீயில் பதினைந்து நிமிடம் வேக விடவும். கலவை ஒன்று சேர்ந்து வரும் போது பொரித்த மீனை சேர்த்து, அது கொதிக்க ஆரம்பித்ததும் முதல் தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கலக்கி அடுப்பை அணைக்கவும். எக்காரணம் கொண்டும் கொதிக்க விடக்கூடாது. இறுதியாக தக்காளி ஸ்லைஸ் கொண்டு அலங்கரிக்கவும்.


கறிமீன் பொலிச்சது

தேவையானவை:
 கறிமீன் - 2
 சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி - 2
(பொடியாக நறுக்கவும்)
 இஞ்சி-பூண்டு விழுது
- 1 டேபிள்ஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2
 கறிவேப்பிலை
- 5 இலைகள்
 மிளகாய்த்தூள்
- அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்)
- அரை டீஸ்பூன்
 மஞ்சள்தூள்
- கால் டீஸ்பூன்
 உப்பு
- தேவையான அளவு
 வாழை இலை - சிறியது
 தேங்காய்ப்பால் - 1 டேபிள்ஸ்பூன் (தண்ணீருக்கு பதிலாக)
 எண்ணெய்
- 1 டேபிள்ஸ்பூன்

ஊற வைக்க:
 மிளகுத்தூள்
- அரை டீஸ்பூன்
 உப்பு
- தேவையான அளவு

p115d.jpg

செய்முறை:
மீனை நன்கு கழுவி மேலும் கீழும் கத்தியால் கீறி விட்டுக் கொள்ளவும். மிளகுத்தூளை உப்புடன் கலந்து, மீனில் தடவி அரை மணி நேரம் தனியாக வைக்கவும். அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து ஒரு டிஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் மீனை இருபுறமும் வேக விட்டு எடுத்து வைக்கவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கியதும், தக்காளியைச் சேர்த்துக் கரைய வதக்கவும். உப்பு போட்டுக் கிளறவும். ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர்/தேங்காய்ப்பால் விட்டு கிளறி இறக்கவும். அடுப்பை அணைத்து கிளறியதை நான்கு பாகமாகப் பிரிக்கவும். வாழை இலையை தீயில் இரண்டு புறமும் லேசாக வாட்டி எடுக்கவும். இதில் ஒரு பாக கலவையை வைத்து, அதன் மேல் மீனை வைக்கவும். இதன் மேல் மற்றொரு கலவை பாகத்தை எடுத்துப் பரப்பவும். இலையால் மீனை மூடி வாழை நாரால் கட்டி விடவும்.

இதே போல மீதம் இருக்கும் மற்றொரு மீனிலும் கலவையைத் தடவி வாழை இலையில் வைத்து மூடவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் வாழை இலை மீனை வைத்து மூடியால் மூடி சிம்மில் வைக்கவும். பத்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து மீனைத் திருப்பிப் போட்டு மீண்டும் பத்து நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும். அடுப்பை அணைத்து சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.


செம்மீன் மசாலா ஃப்ரை

தேவையானவை:
 செம்மீன் (இறால்) - 250 கிராம்
 இஞ்சி-பூண்டு விழுது
- தலா 1 டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள்
- 1 டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்)
- அரை டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
 கரம் மசாலாத்தூள்
- 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
 குடம் புளி - நெல்லிக்காய் அளவு (ஊற வைக்கவும்)
 மெல்லியதாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள்
- கால் கப்
 பெரிய வெங்காயம் - 2 (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
 சின்ன வெங்காயம் - 5 (மெல்லிய வட்டமாக நறுக்கவும்)
 உப்பு - தேவையான அளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 தேங்காய் எண்ணெய்
- தேவையான அளவு

p123.jpg

செய்முறை:
இறாலைச் சுத்தம் செய்து பாதியளவு இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், குடம் புளி, தேங்காய்த் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கைகளால் நன்கு பிசிறவும். சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பில் வைத்து இறால் அதிகமாக வெந்துவிடாமல், எடுத்து அதிகப்படியான தண்ணீரை இறுத்து விடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும், மீதம் இருக்கும் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் வெந்த இறால், உப்பு சேர்த்து 3 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு வேக விடவும். தண்ணீர் வற்றி மசாலாவுடன் இறால் கலந்து வரும் வேளையில், தீயை முற்றிலும் குறைத்துக் கிளறவும். அடுப்பை அணைத்து ரொட்டி மற்றும் சாதத்துடன் பரிமாறவும்.


ப்ராம்ஃபெட் தவா ஃப்ரை

தேவையானவை:
 வவ்வால் மீன் - 1
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
 மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டேபிள்ஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 ரவை - 2 டேபிள்ஸ்பூன்
 அரிசி மாவு - 1 டீஸ்பூன்

p124.jpg

செய்முறை:
வவ்வால் மீனின் சிறகை நறுக்கி கழுவி மென்மையான துணியால் துடைத்து வைக்கவும். ஒரு பவுலில் இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச் சாறு, மஞ்சள்தூள் கலந்து மீனின் மீது தடவி பத்து நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சிறிது தண்ணீர் தெளித்து கலந்து மீனின் மீது இருபுறமும் தடவி வைக்கவும். ஒரு பவுலில் ரவை, அரிசி மாவை தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும். ஊறிய மீனை அரிசிக் கலவையில் முக்கியெடுத்து நான்-ஸ்டிக் தவாவில் இருபுறமும் நான்கு நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.


p125.jpgசிறுகீரை கட்லெட்

தேவையானவை:
 சின்னதாக நறுக்கிய
சிறுகீரை - 100 கிராம்
 சின்னதாக நறுக்கிய வெங்காயம் - 50 கிராம்
 நறுக்கிய
பச்சை மிளகாய் - 2
 மெல்லியதாக
நறுக்கிய இஞ்சி
- அரை அங்குலம் அளவு
 வேகவைத்த உருளைக்கிழங்கு - 25 கிராம்
 தண்ணீரில் நனைத்து
மசித்த பிரெட் - 25 கிராம்
 மல்லித்தூள் (தனியாத்தூள்)
- முக்கால் டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள்
- முக்கால் டீஸ்பூன்
 ரஸ்க் பவுடர் - 50 கிராம்
 மைதா - ஒரு டேபிள்ஸ்பூன்
 கறிவேப்பில்லை - சிறிதளவு
 உப்பு- தேவையான அளவு

செய்முறை :
கீரையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும்.  பிறகு, இத்துடன் உருளைக்கிழங்கு, பிரெட், உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி சின்னச் சின்ன கட்லெட் மசாலா துண்டுகளாகச் செய்யவும்.

மைதாவை 50 மில்லி தண்ணீர் சேர்த்து கட்லெட் மேல் தெளிக்கவும். அதன் மேல் ரஸ்க் பவுடரை தூவவும். பேனில் எண்ணெயைத் தடவி, கட்லெட்டை ஃபிரை செய்யவும்.

கடலைக் கறி

தேவையானவை:
 சின்ன கொண்டைக்கடலை - 2 கப் (வேக வைத்தது)
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
 மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் -  2 (பொடியாக நறுக்கியது)
 பச்சை மிளகாய்
- 1 (உடைத்துக் கொள்ளவும்)
 தக்காளி - 1
 துருவிய தேங்காய் - முக்கால் கப்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 4 டீஸ்பூன்
 கேரளா கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 கடுகு - 1 டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
 எண்ணெய் - 1 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 கறிவேப்பிலை - 8 இலைகள்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

p126.jpg

செய்முறை:
கொண்டைக்கடலையை தண்ணீர் ஊற்றி, ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்துவிட்டு, குக்கரில் உப்பு சேர்த்து மூன்று விசில் வரை வேக விடவும். அடுப்பில் வாணலியை வைத்து, அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தேங்காயைச் சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்து ஆற விட்டு, மிக்ஸியில் விழுதாக தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.

தக்காளியை மீடியம் சைஸில் நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, பெருங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றி வேக விடவும். இதில் வேக வைத்த கடலையை தண்ணீரோடு சேர்த்து, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து சில நிமிடம் வேக விடவும். இதில் இருந்து சிறிதளவு கொண்டைக்கடலையை எடுத்து, மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் சேர்த்துக் கிளறவும். இத்துடன் கரம் மசாலாத் தூளைச் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை வேக விடவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து கிரேவியில் சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துத் தூவி இறக்கவும். புட்டு, ஆப்பம், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் பரிமாறவும்.


காலிகட் சிக்கன் பிரியாணி

தேவையானவை:
 சிக்கன் (கோழிக்கறி) - அரை கிலோ
 தயிர் - 50 கிராம்
 கொத்தமல்லித்தழை - 25 கிராம்
 புதினா - 25 கிராம்
 கறிவேப்பிலை - 10 கிராம்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
 சோம்பு - அரை டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 25 கிராம்
 பூண்டு - 20 கிராம்
 இஞ்சி - 2 டீஸ்பூன்
 மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
 எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்
 கசகசா பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்

சாதத்துக்கு:
 வெண்ணெய்/ நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பட்டை  - 5
 பிரிஞ்சி இலை - 1
 ஏலக்காய் - 4
 கறிவேப்பிலை - 4
 பெரிய வெங்காயம் - 1
 கிராம்பு - 4
 சீரகச்  சம்பா அரிசி - 250 கிராம்
 தண்ணீர் - அரை லிட்டர்
 உப்பு - தேவையான அளவு

பிரியாணி மசாலா:
 வெண்ணெய்/ நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய் - 5
 பிரிஞ்சி இலை - 1
 ஏலக்காய் - 4
 பட்டை - 5
 ஜாதிக்காய் - 1
 வெங்காயம் - 100 கிராம்
 தக்காளி- 1

p128.jpg

செய்முறை:
சிக்கனை (கோழிக்கறி) கழுவி விருப்பமான வடிவில் நறுக்கி வைக்கவும். தேவையானவற்றில் உள்ள மற்ற அனைத்தையும் சிக்கனுடன் கலந்து அரை மணி நேரம் தனியாக ஊற வைக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சேர்த்து சூடாக்கி, அதில் பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கறிவேப்பிலை, கிராம்பு, வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் அரிசியைக் கழுவி சேர்த்து உப்பு போட்டுக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் குறைவான தீயில் 15 நிமிடம் அரிசியை வேக விட்டு எடுக்கவும்.

வாணலியில் வெண்ணெய் / நெய்யை சூடாக்கி, மாசாலாவுக்குத் தேவையானவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். இத்துடன் ஊற வைத்திருக்கும் சிக்கனையும் சேர்த்துக் கிளறி, மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். பிறகு, மூடியைத் திறந்து தீயை முற்றிலும் குறைத்து 10 நிமிடம்  கிரேவி திக்காக மாறும் வரை, வேக விடவும். ஒரு ப்ளேட்டில் ஒரு லேயர் சாதம், இதன் மேல் சிக்கன் கிரேவி, இதன் மேல் ஒரு லேயர் சாதம் என்கிற ரீதியில், பரப்பி ரைத்தாவோடு பரிமாறவும்.


கோழி சுட்டது

தேவையானவை:
 சதைப்பகுதியுடன் கூடிய கோழி கால் - 4
 தேங்காய் எண்ணெய் - 50 மில்லி
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
 சோம்புத்தூள் - ஒரு சிட்டிகை
 மஞ்சள்தூள் - 5 கிராம்
 இஞ்சி  - 50 கிராம்
 பூண்டு - 50 கிராம்
 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

p129.jpg

செய்முறை:
 இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல் நீக்கி கழுவி பேஸ்ட்டாக அரைக்கவும். தேவையானவற்றில் எண்ணெய், கோழி நீங்கலாக உள்ள மற்ற பொருட்களுடன் இஞ்சி பேஸ்ட்டை கலந்து கோழி கால்கள் மீது நன்கு தடவவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, சிறிது எண்ணெய் தெளித்து, கோழிக்கால்களை அதில் வைத்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். பின்னர் நேரடியாக தீயில் இருபுறமும் சில நிமிடம் காட்டி எடுத்துப் பரிமாறவும்.
‘மைக்ரோ-அவன்’ வைத்திருப்பவர்கள் கோழிக் காலை அவனின் உள்ளே இருபது நிமிடம் வைத்து வேக விட்டு எடுக்கவும்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

வெள்ளை பூசணி கறி/ தோரன்

 
 
2015-08-03%2B13.31.36.jpg
 தேவையான பொருட்கள்;
சிறிதாக நறுக்கிய வெள்ளைப் பூசணி - 2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
தேங்காய்த்துருவல் - 3 அல்லது 4 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன் (விரும்பினால்)
மிளகாய் வற்றல் - 2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
பூசணியின் தோல் நீக்கி, நடுவில் உள்ள விதைகளையும் எடுத்து விடவும்.நன்கு அலசிக்கொள்ளவும்.
2015-08-03%2B13.11.19.jpg
 பொடியாக நறுக்கி வைக்கவும்.
2015-08-03%2B13.10.59.jpg
 ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விடவும். சூடானவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு,வற்றல் போடவும்.கடுகு வெடிக்கும் பொழுது நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.வதக்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும்.
2015-08-03%2B13.20.48.jpg
 கருவேப்பிலை சேர்க்கவும். நறுக்கிய பூசணி சேர்க்கவும். மிளகாய்த்தூள் சேர்க்கவும். தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்.மூடி போட்டு வேக விடவும்.தண்ணீர் வற்றும் வரை வேக வேண்டும்.
2015-08-03%2B13.21.54.jpg
 நன்கு வெந்த பின்பு தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
2015-08-03%2B13.26.50.jpg
 ஒரு சேர பிரட்டி விட்டு அடுப்பை அணைக்கவும்.
2015-08-03%2B13.31.44.jpg

சுவையான பூசணிப் பொரியல் அல்லது  பூசணி தோரன் ரெடி.
சப்பாத்தி அல்லது சாதத்திற்கு பக்க உணவாகப் பரிமாறலாம்.

http://asiyaomar.blogspot.de/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம பூசணிப்பிரட்டல் , அவங்க பாஷையில தோரன் என்று சொல்கிறார்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இடிசக்கை துவரன்

 
IMG_20160420_103332.jpg
 
IMAG0110.jpg
குற்றாலம் சென்ற பொழுது அங்கு பறித்து வந்த பலாப் பிஞ்சு வைத்து செய்து பார்த்தது.
தேவையான  பொருட்கள்:-
பலாபிஞ்சுக்காய் - நறுக்கியது 2 கப் அளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
அரைக்க:-
தேங்காய்த் துருவல் 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் -3 - 4
சீரகம், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்
தாளிக்க:-
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
 
கடுகு,உ.பருப்பு - தலா 1டீஸ்பூன்
பெரிய வெங்காயம் நறுக்கியது 2
கருவேப்பிலை
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது.

செய்முறை:-
 
IMG_20160418_083638.jpg
 பலாக்காயை வெளித்தோல் எடுத்து துண்டாக நறுக்கி நடுப்பகுதியை கழித்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
 
IMG_20160420_090836.jpg
 
IMG_20160420_091950.jpg
 நறுக்கியவற்றை மஞ்சள் தூள் உப்பு போட்டு வேக வைக்கவும்.
IMG_20160420_102115.jpg
 வெந்ததை தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு பரபரபவென்று சுற்றி எடுக்கவும்.
IMG_20160420_102431.jpg
 மேலே அரைக்க சொன்னபடிபொருட்கள் சேர்த்து தேங்காய் பரபரவென்று அரைத்து வைக்கவும்.
IMG_20160420_102639.jpg
 கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு கருவேப்பிலை, பெருங்காயம், வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து தாளிக்கவும்.
IMG_20160420_102711.jpg
 வெங்காயம் வதங்கியதும் வேகவைத்து உதிர்த்த பலாக் காயை சேர்க்கவும்.
IMG_20160420_102805.jpg
 நன்கு சிம்மில் வைத்து வதக்கவும்.
IMG_20160420_153818.JPG
 அரைத்த தேங்காயை சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
IMG_20160420_103332.jpg
அடுப்பை சிம்மில் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போடவும்.
பிரட்டி விட்டு விரும்பினால் நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
சுவையான இடிசக்கை துவரன் தயார்.

http://asiyaomar.blogspot.de

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கப்ப மற்றும் மீன் குழம்பு

spacer.png
 
 
கப்ப - தேவையான பொருட்கள்
  • மரச்சீனிக்கிழங்கு – 1கி.கி
  • சின்ன வெங்காயம் – 5
  • தேங்காய் (துருவியது)
  • மஞ்சள் பொடி - ½ தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 5
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

கப்ப – செய்முறை
மரச்சீனிக்கிழங்கைத் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் அந்தத் துண்டுகளை ஒரு குக்கரில் போட்டு தேவையான அளவு நீர் ஊற்றி வேக வைக்கவும். பின்னர் அதிகப் படியான நீரை வடிகட்டி எடுத்து விட்டு, பின்னர் உப்பு கறிவேப்பிலை சேர்க்கவும். அதோடு தேங்காய், மஞ்சள், சீரகம், யாவற்ரையும் சேர்த்து அரைத்து வைத்த விழுதினைச் சேர்க்கவும். நன்கு கலக்கி, சிறிது எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும். பின்னர் எல்லாவற்றையும் நன்கு கலந்து இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.

இந்த மரச்சீனிக்கிழங்கோடு மீன் குழம்பு வைத்து சாப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

மீன் கறி தேவையான பொருட்கள்
  • மீன் – சுத்தம் செய்து நறுக்கியது.
  • சின்ன வெங்காயம் 8 (நீளவாக்கில் நறுக்கியது)
  • தக்காளி – 1 (நீளவாக்கில் நறுக்கியது)
  • இஞ்சி (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
  • தேங்காய் பால் - ½ தேக்கரண்டி
  • காம்போஜ்(குடம்புளி) – 4 துண்டுகள்
  • பச்சை மிளகாய் – 8 (நீளவாக்கில் நறுக்கியது)
  • கறிவேப்பிலை
  • பூண்டு (நறுக்கியது) – 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி பொடி – 1 தேக்கரண்டி
  • வற்றல் பொடி – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி - ½ தேக்கரண்டி
  • வெந்தயத்தூள் - ½ தேக்கரண்டி
  • உப்பு
  • எண்னெய்

மீன் கறி – செய்முறை
ஒரு மண் பாத்திரத்தில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் இஞ்சி பூண்டு போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின்னர் அதோடு கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். சிறிது கிளறி விட்டு பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து மறுபடியும் கிளறி விடவும். அதோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் வெந்தய தூள் சேர்த்து நன்கு கிளறவும்.   

இப்போது மூன்று கப் நீர் ஊற்றி அதோடு காப்போஜ்களை (குடம்புளி) துண்டுகளைச் சேர்க்கவும். இப்போது உப்பும், மீன் துண்டுகளையும் சேர்த்து மெதுவாக கிளறிவிட்டு கொதிக்க விடவும். பாதியளவு வற்றி கெட்டியானதும் அதில் தக்காளி துண்டுகளைப் போட்டுமேலும் சிறிது நேரம் வேக விடவும். அதன் பின்னர் தேங்காய் பால் ஊற்றி மெதுவாக கிளறவும். பின்னர் கறிவேப்பிலை போட்டு மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.

இப்போது சுவையான மீன்கறி பரிமாற தயாராக உள்ளது. நீங்கள் அதனை கப்பவோடு சேர்த்து உண்ணலாம். 

https://www.keralatourism.org/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 4 weeks later...
கேரளா மட்டன் ரோஸ்ட் : செய்முறைகளுடன்...!

 

mutoooonnnnn.jpg

தேவையான பொருட்கள்:

மட்டன் – அரை கிலோ
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பொட்டுக்கடலை பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு...

சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 5
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1 பெரிய துண்டு
பூண்டு – 6 பெரிய பற்கள்.

செய்முறை :

மட்டனை நீரில் நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

சுத்தம் செய்த மட்டனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரில் அரைத்த விழுதினை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி, மிக்ஸியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதனையும் மட்டனுடன் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

பின்னர் குக்கரை மூடி அடுப்பில் வைத்து 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.

மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த, பின் மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி, பின் அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி இறக்கினால், கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் ரெடி!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா முட்டை  மோலி  சூப்பர் ..... காரமும் குறைவாத்தான் இருக்கும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மீன் பொளிச்சது / Meen Polichathu (steamed)

 
 
IMG-20160112-WA0073.jpg
 
 
தேவையான பொருட்கள்;
முதலில் செய்யவேண்டியது:
பிடித்த மீன் மீடியம் சைஸ் - 2 ( ஐவாவல், கறிமீன், பாரை.சீலாமீன் துண்டு என்றுஏதாவது )
சிறிது மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,மிளகுத்தூள்,உப்பு,லெமன் ஜூஸ் சேர்த்து விரவி ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்து விரவிய மீனை தவாவில் சிறிது எண்ணெய் விட்டு லேசாக பொரித்து எடுக்கவும்.முறுக பொரிக்க வேண்டாம்.
இனி மசாலா செய்ய:
கடாயில்  மீன் பொரித்த எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,சோம்பு, கருவேப்பிலை சேர்க்கவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சிவந்து வரும் பொழுது நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.நன்கு மசியட்டும்.அத்துடன் சிறிது மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,சிறிது கரம் மசாலா, மிளகுத்தூள்,உப்பு சேர்த்து கலந்து சிறிது பிரட்டவும்.
அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் சிறிது சேர்க்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.எண்ணெய் வெளியே வரும் வரை சிம்மில் வைக்கவும்.
தயார் ஆனவுடன் அடுப்பை  அணைத்து மசாலாவை ஆற விடவும்.
 
IMG-20160112-WA0071.jpg
வாழையிலையை நன்கு அலசி துடைத்து வைக்கவும்.
வாழையிலையில் தயார் செய்த மசாலா வைத்து அதன் மேல் மீன் வைத்து மீண்டும் மீன் மேல் சிறிது மசாலா வைத்து வாழையிலை யை மடித்து டூத் பிக் வைத்து பிரிந்து விடாதபடி செய்யவும்.
இதனை இப்படியே தவாவில் வைத்து சுட்டும் எடுக்கலாம்.
 
 
IMG-20160112-WA0072.jpg
அல்லது தயார் செய்த வாழையிலை மடிப்பை அலுமினிய ஃபாயில் கொண்டு கவர் செய்யவும். கவர் செய்ததை மீண்டும் இட்லி பாத்திரத்தில் வைத்தோ அல்லது ஸ்டீமரில் வைத்தோ ஆவியில்  வேக விட்டு எடுக்கவும்.
IMG-20160112-WA0073.jpg

வெந்த பின்பு கவனமாக பிரித்தால்
கேரளாவின் மீன் பொளிச்சது தயார்.
சூப்பராக வாழையிலை மணத்துடன் இருக்கும். ருசியும் அசத்தலாக இருக்கும்.
 

 

Link to comment
Share on other sites

e2d3fdc8fa045c3dc9ed41f67fccdaf4--mutton-korma-kerala-food
 

கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா

தேவையான பொருட்கள்:

  • மட்டன் – -1/2 கிலோ (பொடியாக நறுக்கியது)
  • வெங்காயம் – -2 (நறுக்கியது)
  • இஞ்சி – -1 இன்ச் (நறுக்கியது)
  • பூண்டு – -5 பல் (நறுக்கியது)
  • தேங்காய்ப் பால் – -1/2 கப்
  • பட்டை – -1
  • ஏலக்காய் – -3
  • கிராம்பு – -3
  • சோம்பு – -1 டீஸ்பூன்
  • கசகசா – -1 டீஸ்பூன்
  • மல்லித் தூள் – -1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – -2 டீஸ்பூன்
  • முந்திரி – -11 (நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்தது)
  • மிளகுத் தூள் – -1 டீஸ்பூன்
  • வினிகர் – -1 டீஸ்பூன்
  • எண்ணெய் – -தேவையான அளவு
  • கொத்துமல்லி – -சிறிது (நறுக்கியது)
  • உப்பு – -தேவையான அளவு

செய்முறை:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கசகசா சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி இறக்கி விட வேண்டும்.
  2. பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மட்டனை நன்கு கழுவி, அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
  3. இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், தேங்காய்ப் பால், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
  4. பின் குக்கரில் உள்ள மட்டனை நீருடன் வாணலியில் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அத்துடன் வினிகர், முந்திரி பேஸ்ட் சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
  5. இப்போது சுவையான கேரளா ஸ்டைல் மட்டன் குருமா ரெடி! இந்த குருமா சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய புளிக்குழம்பு

அ-அ+

இன்று கேரளாவில் மிகவும் பிரபலமான உளி தீயல் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காய புளிக்குழம்பை எப்படி செய்வதென்று விரிவாக பார்க்கலாம்.

 
 
 
 
கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய புளிக்குழம்பு
 
தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் - 1/2 கப் (தோலுரித்தது)
புளிச்சாறு - 1/4 கப்
 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
 சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


வறுத்து அரைப்பதற்கு:

துருவிய தேங்காய் - 1/2 கப்
மல்லி - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 3
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு :

தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 2

201802271506200451_1_smallonionpulikulambu._L_styvpf.jpg

செய்முறை :

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு, குறைவான தீயில் வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் மஞ்சள் தூள்,  மிளகாய் தூள் மற்றும்  சீரகப் பொடி சேர்த்து வதக்கி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதப்பி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் புளிச்சாறு ஊற்றி, குழம்பு சற்று கெட்டியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது கெட்டியாகி, குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் போது, அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறினால், கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய புளிக்குழம்பு ரெடி!!!

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்திர அவசரத்துக்கு காய்கறி இல்லையென்றால் வெங்காய குழம்பும், வெந்தய குழம்பும்தான் கை கொடுக்கும்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டம் செய்த காலங்களில் வெண்காய அறுவடை முடிந்தால் வீட்டில் வெண்காய குழம்பு பொரியல் என்று ஒரே வெண்காய அயிட்டம் தான்.அந்தக் காலங்களில் வியர்வை கூட வெண்காய மணமாகத் தான் இருக்கும்.

இணைப்புக்கு நன்றி நவீனன்.

Link to comment
Share on other sites

சூப்பரான மலபார் இறால் கறி

 
அ-அ+

ஆப்பம், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மலபார் இறால் கறி சூப்பராக இருக்கும். இன்று மலபார் இறால் கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான மலபார் இறால் கறி
 
தேவையான பொருள்கள் :

இறால் - 300 கிராம்
மாங்காய் - 1
இஞ்சி - 1
பச்சை மிளகாய் - 5
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

கிரேவி செய்ய :

தேங்காய் - 1
] மிளகாய்தூள் - தேவையான அளவு
மஞ்சள்தூள் -1 தே
க்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயத்தூள் - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

201803051208009421_1_malabarcurry._L_styvpf.jpg

செய்முறை  :

இறாலை சுத்தம் செய்து வைக்கவும்.

மாங்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

தேங்காயை துருவிக்கொள்ளவும்.

இஞ்சி ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கிரேவிக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

ஒரு மண் பாத்திரத்தில் இறாலை போட்டு அதனுடன் மாங்காய், இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து கிளறி அடுப்பில் வைத்து மூடிவைத்து சிறிது வேக விடவும்.

இறால் வெந்ததும் அதோடு அரைத்து வைத்த மசாலாவைத் சேர்த்து அரை கப் நீர் சேர்த்து நன்கு வேக விடவும். கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

பின்னர் மிதமான தீயில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து அதோடு சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி வேக விடவும்.

இப்போது சுவையான இறால் கறி பரிமாறத் தயாராகிவிடும்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

தெருக்கடை உணவுகள் - கேரளா ஸ்பெஷல்

 
 

 

தெருக்கடை உணவுகளுக்கே என  பிரத்யேக சுவையுண்டு. அதனால்தான்,   நட்சத்திர ஓட்டல்களில்கூட ‘தெருக்கடை உணவுத் திருவிழா’, `தட்டுக்கடை ஃபெஸ்டிவல்’  போன்ற பெயர்களில் உணவுத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல; உலக நாடுகள் பலவற்றில் தெருக்கடை உணவுகளைத் தேடித் திரிந்து சுவைக்கும் உணவு ரசிகர்கள் உண்டு. பயணிகளைக் கேட்டாலே போதும்...  இதுபோன்ற சிறப்பு உணவுகளைப் பற்றி நாவினிக்கப் பட்டியலிடுவார்கள்.  

p7a_1519829776.jpg

அந்த வகையில் கேரளாவில் பிரபலமாக விளங்கும் தெருக்கடை உணவுகளை வீட்டிலேயே தயார் செய்யும் விதத்தில் படங்கள், வீடியோக்களுடன் அளிக்கிறார்  ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ்.  

 

கொழிக்கால்

தேவையானவை:

மரவள்ளிக்கிழங்கு -  அரை கிலோ (தோல் சீவி, நீளவாக்கில் ஃபிங்கர் சிப்ஸ் போல மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்)
கடலை மாவு -  கால் கப்
அரிசி மாவு - அரை கப்
பச்சை மிளகாய் -  2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

p7c_1519829830.jpg

செய்முறை:

கடலை மாவுடன் அரிசி மாவு,  பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, கறிவேப்பிலை,  மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு  சேர்த்துக் கலக்கவும். அதனுடன் மரவள்ளிக்கிழங்குத் துண்டுகள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து பக்கோடா மாவுப் பதத்துக்குப் பிசிறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவைப் பக்கோடாக்கள் போல பிடித்துப்போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சுவையான கொழிக்கால் ரெடி.

p7d_1519829865.jpg

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.


p7e_1519829891.jpg

பழம் பொரி

தேவையானவை:

நடுத்தரமான நேந்திரம்பழம்  -  5
மைதா மாவு - ஒரு கப்
சர்க்கரை - 1/3 கப்
அரிசி மாவு - கால் கப்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
சமையல் சோடா (ஆப்ப சோடா)  -  கால் டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நேந்திரம்பழத்தைத் தோல் நீக்கி, பஜ்ஜிக்கு நறுக்குவது போல நீளவாக்கில் நறுக்கவும். மைதா மாவுடன் அரிசி மாவு, மஞ்சள்தூள், ஏலக்காய்த்தூள், சர்க்கரை, உப்பு, சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அல்லது `விஸ்க்’கால் சற்றுக் கெட்டியாக இட்லி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பழத்துண்டுகளை மாவில் முக்கி எடுத்துப்போட்டுப் பொரித்தெடுக்கவும். 

p7f_1519829913.jpg

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.


p7g_1519829944.jpg

புட்டு கடலைக்கறி

தேவையானவை:

புட்டு செய்ய:

புட்டு மாவு (அரிசி மாவு அல்லது கோதுமை மாவு) - 2 கப்
உப்பு - தேவையான அளவு
வெதுவெதுப்பான நீர் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - தேவையான அளவு

கடலைக் கறி செய்ய:

கறுப்புக் கொண்டக்கடலை - ஒரு கப் (ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவைக்கவும்)
நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2  டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி - கால் கப்
கறிவேப்பிலை - கால் கப்
கொத்தமல்லித்தழை - கால் கப்
கடுகு – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

புட்டு மாவுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெதுவெதுப்பான நீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, கைவிரல்களால் பிசிறவும். உருளை வடிவ புட்டுக் குழலில்  சிறிதளவு மாவு, தேங்காய்த் துருவல் என மாற்றி மாற்றி வைத்து நிரப்பவும். இதை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். புட்டு தயார். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.  அதனுடன் கறிவேப்பிலை,  வேகவைத்த கடலை, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் புட்டுடன் பரிமாறவும். 

p7h_1519830001.jpg

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.


p7i_1519830034.jpg

உன்னக்காய்

தேவையானவை:

நேந்திரம்பழம் - 3 (முழுவதும் பழுக்காதது)
முந்திரி - 6 (உடைக்கவும்)
திராட்சை - 5
நெய் - ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - கால் கப்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

நேந்திரம்பழத்தைத் தோலுடன் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சிறிது ஆறியதும் தோலை நீக்கி விட்டு, நன்கு கட்டியில்லாமல் சப்பாத்தி மாவு பதத்துக்கு மசிக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி திராட்சை, முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இதுவே பூரணம். கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு மசித்த பழக் கலவையைச் சிறிய உருண்டைகளாக்கவும். கையில் நெய் தொட்டுக்கொண்டு பழ உருண்டைகளைக் கிண்ணம் போல செய்து, நடுவே அரை டீஸ்பூன் பூரணம் வைத்துக் கையால் அழுத்தி முட்டை வடிவில் மூடவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துப் பழ உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதைச் சூடாகப் பரிமாறவும். 

p7j_1519830063.jpg

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.


p7k_1519830090.jpg

உன்னியப்பம்

தேவையானவை

பச்சரிசி - ஒரு கப்
ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன்
நன்கு பழுத்த வாழைப்பழம் - ஒன்று
தேங்காய்த் துருவல் - அரை கப்
வெல்லம் - ஒரு கப்
ஏலக்காய் - 4
நெய் - அரை கப்

செய்முறை

அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, கெட்டியாக அரைத்தெடுக்கவும் (அரைக்கும்போது வாழைப்பழம் சேர்த்துக்கொள்ளவும்). வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலைக் கெட்டியாகக் காய்ச்சி இறக்கவும். அதனுடன் அரைத்த அரிசி கலவை சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கலக்கவும். இதை அப்படியே இரண்டு மணி நேரம் வைக்கவும். பிறகு இதனுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பணியாரக்கல்லைக் காயவைத்து, குழிகளில் சிறிதளவு நெய்விட்டு உருக்கி, பாதி குழி அளவுக்கு மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு, மறுபுறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.  

p7l_1519830112.jpg

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.


p7m_1519830137.jpg

குலுக்கி சர்பத்

தேவையானவை:

சப்ஜா விதை - 2 டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - 2 (சாறு பிழியவும்)
தோல் சீவி துருவிய
இஞ்சி - ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய் - கால் டீஸ்பூன்
புதினா இலைகள் - 3
சர்க்கரை - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - சிறிதளவு

செய்முறை:

சப்ஜா விதையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பதினைந்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு, சப்ஜா விதைகளைத் தனியாக எடுத்து வைக்கவும். இஞ்சியுடன் பச்சை மிளகாய், புதினா இலைகள் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். பாட்டில் அல்லது ஷேக்கரில் ஊறவைத்த சப்ஜா விதைகள், எலுமிச்சைச் சாறு, இஞ்சி  - பச்சை மிளகாய் விழுது, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு குலுக்கவும். அதனுடன் பைனாப்பிள் துண்டுகள் சேர்த்து மீண்டும் குலுக்கி, சர்பத்தைப் பரிமாறவும்.

p7n_1519830163.jpg

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம். 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 3 weeks later...

கேரளா ஸ்பெஷல் சக்கர உப்பேறி

கேரளா மாநிலத்தில் சக்கர உப்பேறி மிகவுல் பிரபலம். இன்று இந்த சக்கர உப்பேறியை வீட்டிலேயே எளியமுறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
கேரளா ஸ்பெஷல் சக்கர உப்பேறி
 
தேவையான பொருட்கள் :

நேந்திரங்காய் - 3,
வெல்லம் பொடித்தது - 2 கப்,
சுக்குப்பொடி - அரை டீஸ்பூன்,
ஏலக்காய்ப்பொடி - அரை டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,
நெய் - கால் கப்.

201805091211012493_1_Sarkara-Varatti._L_styvpf.jpg

செய்முறை :

நேந்திரங்காய்களை நீளவாக்கில் சற்று கனமான துண்டுகளாக நறுக்குங்கள்.

எண்ணெயைக் காயவைத்து அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, நறுக்கிய துண்டுகளை பொரித்தெடுங்கள்.

வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கரையவிட்டு, வடிகட்டிக்கொள்ளவும்.

வடிகட்டிய வெல்ல கரைசலை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, கெட்டிப் பாகு ஆனதும் (பாகு பூத்து வரும்போது), பொரித்து வைத்த நேந்திரங்காய் துண்டுகள், ஏலக்காய்க்காய், சுக்குதூள், நெய் ஆகியவற்றை பாகில் கொட்டி, நன்கு கிளறி இறக்குங்கள்.

வத்தல் உதிர், உதிராக வந்துவிடும். (நேந்திரங்காயை வேகவைத்தும் இதை செய்வார்கள். இதன் செய்முறை கேரளாவில் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுகிறது).

சூப்பரான கேரளா ஸ்பெஷல் சக்கர உப்பேறி ரெடி.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

வெள்ளரி மோர் கறி

 
 
கோடைக்காலத்திற்கேற்ற சமையல். அடிக்கடி மோரு கறி செய்வதுண்டு, இங்கே பகிர இன்று தான் முடிந்தது.இது போல் வெண்பூசணியில் செய்யலாம்.
IMAG2307.jpg
 
 தேவையான பொருட்கள் ;-
வேக வைக்க:-
வெள்ளரி - 300 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கீறிய பச்சை மிளகாய் - 1
தண்ணீர் - 1 கப்
உப்பு தேவைக்கு.
அரைக்க :-
தேங்காய் - அரை கப்
சீரகம் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
தாளிக்க:-
தேங்காய்  எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
நறுக்கிய சின்ன வெங்காயம்  -  5
கிள்ளிய மிளகாய் வற்றல் - 1
கருவேப்பிலை - 2 இணுக்கு.

செய்முறை:-
IMAG2275.jpg
 காய் வெட்டாக உள்ள வெள்ளரியை தோல் சீவிக் கொள்ளவும்.
IMAG2276.jpg
 நன்கு அலசி எடுக்கவும்.
IMAG2278.jpg
 நான்காக வெட்டி விதை நீக்கிக் கொள்ளவும்.
IMAG2281.jpg
 
IMAG2283.jpg
 சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
IMAG2284.jpg
 
 
 மஞ்சள் தூள், கீறிய மிளகாய் 1  ,தேவைக்கு உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
 
IMAG2288.jpg

அரை கப்   தேங்காய்த்துருவல் ,1/2 தேக்கரண்டி சீரகம்,1 பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
 
IMAG2287.jpg
 
IMAG2289.jpg
அரைத்து தயாராய் இருக்கட்டும்.
IMAG2293.jpg
 வெள்ளரி நன்கு வெந்து வரும்.
IMAG2295.jpg
 அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைக்கவும்.
IMAG2297.jpg
 
IMAG2298.jpg
 நன்கு கொதித்து பச்சை வாடை அடங்கட்டும்.
IMAG2299.jpg
 அடுப்பை அணைக்கவும்.
IMAG2301.jpg
 கெட்டி தயிர் ஒரு கப் சேர்க்கவும்.
IMAG2304.jpg
 கலந்து விடவும்.உப்பு சரிபார்க்கவும்.
IMAG2305.jpg
 ஒரு கடாயில் தேங்காய்  எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,வெந்தயம், கருவேப்பிலை,கிள்ளிய வற்றல்,நறுக்கிய சின்ன வெங்காயம்   சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
 
 தயார் ஆன  வெள்ளரி மோர் கறியில் கொட்டவும்.
IMAG2307.jpg
 சுவையான சத்தான ஆரோக்கியமான வெள்ளரி மோர் கறி தயார்.
சூடான சோறு பக்க உணவுகளுடன் பரிமாறவும்.
IMAG2308_1.jpg

http://asiyaomar.blogspot.de

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல்

அ-அ+

புலாவ், சப்பாத்தி, நாண், சாத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் சூப்பராக இருக்கும். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல்
 
தேவையான பொருள்கள்

சிக்கன் - அரை கிலோ
சோம்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 7
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்

201806021507473714_1_kerala-style-chicken-fry._L_styvpf.jpg

செய்முறை

சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்து கொள்ளவும்.

மிக்ஸியில் காய்ந்த மிளகாய், சோம்பு, பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

கழுவி வைத்துள்ள சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அடுப்பை மிதமான தீயில் மூடிவைத்து வேக விடவும்.

தண்ணீர் முற்றிலும் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் ரெடி

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.