Jump to content

கேரளா உணவு வகைகள்


Recommended Posts

கேரளா உணவு வகைகள்

கேரளா சமையற் கலை வரலாறு, புவியியல் மற்றும் இந்த மண்ணின் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்பு உண்டு. இதனை இரண்டு தரமான தலைப்புகளின் கீழ் அதாவது சைவம் மற்றும் அசைவ உணவுகள் என வகைப்படுத்தலாம். அசைவ உணவுகளில் அதிப்படியான நறுமணப்பொருட்கள் போடப்பட்டிருக்கும் அதே வேளையில் சைவ உணவு வகைகளுக்கு சிறிதளவு நறுமணப் பொருட்கள் இடப்பட்டிருக்கும் அவற்றை பிற இடங்களில் உள்ளவர்களும் எளிதாக சுவைக்கமுடியும்.

 

Bildergebnis für கேரள பெண்கள் படங்கள்

 

Bildergebnis für கேரள பெண்கள் படங்கள்

கூட்டுக் கறி

spacer.png
 
 
கூட்டுக் கறி தயாரிப்பின் வீடியோ காட்சி.

தேவையான பொருட்கள்
  • வேக வைத்த உருளைக் கிழங்கு -2 (சதுரமாக வெட்டப்பட்டது)
  • சின்ன வெங்காயம் (நறுக்கியது) -10
  • இஞ்சி – 1’’ அளவு
  • பூண்டு
  • ஊற வைத்த கடலை பருப்பு (வடை செய்வதற்கு) - ½ கப்
  • பச்சை மிளகாய் – 3
  • மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லித்தூள் – 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - ½ தேக்கரண்டி
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • தேங்காய் பால் - ½ கப்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்
  • உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை
ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடலை பருப்பு விழுது, உப்பு சேர்த்து வடை தயாரிப்பதற்காக அரைத்தது போல (தண்ணீர் ஊற்றாமல் அரைத்து வைக்கப்பட்டது) அரைத்து போட்டு புரட்டவும். பின்னர் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். நன்கு வெந்ததும் அதை எடுத்து பக்கத்தில் உள்ள கிண்ணத்தில் வைக்கவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலையைப் போடவும். அது பொரியும் சத்தம் வந்ததும் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளறிவிடவும் இப்போது உருளைக் கிழங்கு போட்டு சிறிது நேரம் வேக விடவும். இப்போது மல்லித்தூள், மிளகாய் பொடி, கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறி விடவும்.

இப்போது ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதோடு உப்பு போட்டு கிளறி விடவும். பாத்திரத்தை மூடி நன்கு வேகவிடவும். நீரில் நன்கு வெந்து, நீர் முற்றிலும் வற்றிய பின்னர் தேங்காய் பாலை ஊற்றவும். சற்று நேரம் வேக விடவும். பின்னர் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறவும்.

கூட்டுக்கறியை சூடாகப் பரிமாற வேண்டும். இது சாதத்தோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

https://www.keralatourism.org

 

தொடரும்....

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
சிக்கன் தோரன்

spacer.png
 
 
தேவையான பொருட்கள்
  • சிக்கன் துண்டுகள் (சிறியதாக நறுக்கியது)
  • வெங்காயம் (நறுக்கியது) – 2 கப்
  • பூண்டு (நறுக்கியது) – 2 தேக்கரண்டி
  • இஞ்சி( நறுக்கியது) – 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் (நறுக்கியது) -8
  • சிக்கன் மசாலா பொடி – 2 தேக்கரண்டி
  • நல்ல மிளகு (பொடி செய்தது) -1கப்
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • தேங்காயம் ( துருவியது) – 1 கப்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை - ½ கப்
  • உப்பு
  • எண்ணெய்
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  • பிரியாணி  இலை

செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் எடுத்து சூடு பண்ணவும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். இப்போது நறுக்கி வைத்த பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் (நறுக்கியது) ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்கு வதங்கும் வரை கிளறி விடவும். பின்னர் சிக்கன் துண்டுகளை அதனோடு சேர்த்து மெதுவாக கிளறிவிடவும். இப்போது சிக்கன் மசாலா, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். பின்னர் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது 2 கப் நீர் சேர்க்க வேண்டும். அதோடு பிரியாணி இலை சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து வேக வைக்கவும். நீர் முற்றிலும் வற்றிய பின்னர் துருவி வைத்த தேங்காய் சேர்க்கவும். நன்கு கிளறி சிறிது நேரம் வேக விடவும். பின்னர் நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

இப்போது உங்களுக்கு சுவையான கமகம சிக்கன் தோரன் ரெடி.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites

கேரளா ஃபிஷ் கறி

spacer.png
 
 
இந்த வீடியோ கேரள மீன்(ஃபிஷ்) கறி செய்யும் முறையைக் காட்டுகிறது

ஏதாவது ஒரு மீன் அல்லது இறால் மீன் 500 கிராம் எடுத்து நறுக்கி சுத்தம் செய்து அருகில் வைத்து கொள்ளவும்.

ஒரு அகன்ற அடிப்பகுதி தடிமனான பாத்திரத்தை (மண் பாண்டம் அல்லது நான்-ஸ்டிக்) எடுத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
 இப்போது கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றை வதக்குவதற்குத் தயாராக வைக்கவும்.
  • இஞ்சி – 2’’ (பொடிதாக நறுக்கியது)
  • பூண்டு – 10 – 12 பல் ( பொடியாக நறுக்கியது)
  • பெரிய வெங்காயம் 5  லிருந்து 6
  • கறிவேப்பிலை – சிறிது

இப்போது எண்ணெயில் கடுகு சேர்த்து பொரிந்ததும் மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

பின்னர் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்து பசையாக அரைத்துக் கொள்ளவும்.

 
  • காஷ்மீரி மிளகாய் வற்றல் தூள் – 4-6 தேக்கரண்டி
  • வெந்தய தூள் - ½ தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி 

இந்த மூன்று தூள்களையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி விழுதுவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அதனை வதக்கவும் எண்ணெய் பிரிந்து வரும் பதம் வரும் வரை கிளறவும். சிறிது உப்பு மற்றும் புளி(கோக்கம்) ஆகியவற்றோடு அரை அல்லது ஒரு கப் நீர் ஊற்றி வேக விடவும்.

இப்போது மசாலாவிற்கு மேல் மீன் துண்டுகளையும் சிறிது கறிவேப்பிலையையும் வைத்து பாத்திரத்தை மூடி விடவும். மசாலா கெட்டியாகும் வரை வேக விடவும். பின்னர் மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை மேல் ஊற்றி அடுப்பை அணைத்து விடவும்.

பயன்படுத்துவதற்கு 10-12 மணி நேரத்திற்கு முன்பாக தயார் செய்து வைக்க வேண்டும். உடனடியாக பயன்படுத்தலாம் ஆனால் சுவை அந்த அளவு கூடுதலாக இருக்காது.
Link to comment
Share on other sites

காளன்

spacer.png
 
 
இது கேரள உணவு வகை கறியான காளன் எவ்வாறு சமைக்கப்படுகிறது என்பதைக் காட்டும் வீடியோ காட்சி

இது கேரள உணவு வகை கறியான காளன் எவ்வாறு சமைக்கப்படுகிறது என்பதைக் காட்டும் வீடியோ காட்சி.

காளன் மலையாளிகளுக்கு மட்டுமே உரியதென பெருமைப்படத்தக்க பழமையான கூட்டு வகையாகும். இது செய்வதற்கு எளிதாக இருந்தாலும் நன்றாக சமைக்கப்பட்ட காளனுக்கு எப்போதுமே ஈர்ப்பு அதிகம். இன்றைய இளம் தலைமுறையினர் சத்யா (பாரம்பரிய சைவ உணவு) உணவு வகைளில் சிறந்த உணவாக இதனை கருதுகின்றனர்.

தேவையான பொருட்கள்
  • 100 கிராம் சேனைக்கிழங்கு
  • 1 – வாழைக்காய்
  • 1 கப் கடைந்த தயிர்
  • 4 – பச்சை மிளகாய்
  • 4 தேக்கரண்டி நெய்
  • ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • ½ தேக்கரண்டி வெந்தயம்
  • ½ தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 3 மிளகாய் வற்றல்
  • கறிவேப்பிலை

விழுதாக அரைப்பதற்கு
  • 1½ கப் துருவிய தேங்காய்
  • ½ தேக்கரண்டி சீரகம்

செய்முறை
வாழைக்காய் மற்றும் சேனைக்கிழங்கு ஆகியவற்றின் தோலை நீக்கி துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காய் மற்றும் சீரகம் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

மிளகுத்தூளை ½ கப் நீரில் கலந்து அதனை ஒரு சுத்தமான துணியால் வடிகட்டி எடுக்கவும்.

வடிகட்டிய அந்த நீரில் காய்களை வேக வைத்து அதோடு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.

தண்ணீர் வற்றியதும் ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கி மெதுவாக சூடுபடுத்தவும்

தயிர் வெந்து கெட்டியாகும் போது அரைத்து வைத்த தேங்காய் கலவை மற்றும் வெந்தைய பொடி சேர்த்து கலக்கவும். வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்

ஒரு கடாயில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி கடுகு, மிளகாய் வற்றல் கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் அதனை காளனோடு சேர்த்து கலக்கவும்.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites


நெய்ச்சோறு

spacer.png
 
 
இந்த வீடியோ நெய்ச்சோறு தயாரிப்பு பற்றி காட்டுகிறது.

தேவையான பொருட்கள்
  • பிரியாணி அரிசி – 2 கப்
  • நெய் – 5 லிருந்து 6 தேக்கரண்டி
  • முந்திரி பருப்பு - ½ கப்
  • கிராம்பு – 4 முதல் 5 வரை
  • பொடித்த மிளகு – 4 லிருந்து 5
  • உலர்ந்த திராச்சை - ¼ கப்
  • அரைத்த இஞ்சி – 1 தேக்கரண்டி
  • அரைத்த பூண்டு – 1 தேக்கரண்டி
  • எலுமிச்சைச் சாறு – சிறிது
  • வெங்காயம் (நறுக்கியது) -2
  • பிரியாணி இலை – 2
  • ஏலம் – 4
  • லவங்கப்பட்டை – 2 கம்புகள்
  • நறுக்கிய கொத்தமல்லி இலை -¼ கப்
  • உப்பு தேவைக்கு ஏற்ப
  • தண்ணீர் - 3½ கப்

செய்முறை
அரிசியைக கழுவி வடித்து பக்கத்தில் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதோடு முந்திரிப் பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். பின்னர் முந்திரிப் பருப்பை எடுத்து விட்டு அதே போன்று உலர்ந்த திராட்சையைப் போட்டு வறுத்தெடுக்கவும்.

சிறிது நெய் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சூடு படுத்தவும். பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை சிறிது உப்பும் சேர்த்து கிளறவும். இந்த கலவையை வறுத்த முந்திரிப் பருப்பு உலர்ந்த திராட்சை வைத்துள்ள பாத்திரத்திற்கு மாற்றவும்.

ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலம், அரைத்த இஞ்சி-பூண்டு விழுதினை சேர்த்து கலக்கவும். இப்போது நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தைப் போட்டு கிளறவும். இப்போது கழுவி பக்கத்தில் வைத்திருந்த அரிசியைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் கொத்தமல்லி இலைகளைப் போட்டுக் கிளறவும். பின்னர் மறுபடியும் பிரியாணி இலை போட்டு நீர் ஊற்றி மூடி வைத்து விடவும். 5 நிமிடம் வேக விடவும்.

இப்போது மூடியைத் திறந்து சிறிது எலுமிச்சம் சாறு ஊற்றி நன்கு கலக்கவும்.

முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, வறுத்த வெங்காயம் போன்றவற்றைத் தூவி அலங்கரித்து நெய் சோற்றினைச் சூடாகப் பரிமாறவும்.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites

கேரளா பருப்பு பாயாசம்

கேரளாவில் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். இந்த பண்டிகையின் ஸ்பெஷல் ரெசிபி பருப்பு பாயாசம். இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.

ஓணம் ஸ்பெஷல்: கேரளா பருப்பு பாயாசம்
 
தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
பால் - அரை கப்
முந்திரி - ஒரு கைப்பிடி
சுக்கு பொடி - 1 சிட்டிகை
நெய் - தேவையான அளவு

201709021514443280_1_Kerala._L_styvpf.jp

செய்முறை :

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, தண்ணீரை கரைய நன்கு கெட்டியாக சூடேற்றி, பின் அதனை வட்டிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் போட்டு, அதில் போதிய அளவில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கி விசில் போனவுடன் சற்று மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (பருப்பு நன்கு மசியும் அளவில் வேக வைக்க வேண்டாம்.)

பின்பு நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகுவை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

பருப்பானது வெல்லப் பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்தவுடன், அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பாயாசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்கு பொடி, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, முந்திரியைத் தூவினால், கேரளா பருப்பு பாயாசம் ரெடி.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகிற திங்கள் ஓணம் பண்டிகை ஈஸ்ட்காம்  மகாலட்சுமி கோவில் பக்கம் இருக்கும் மலையாளிகள் கடைகளில் ஓணம் சாப்பாடு மிஸ் பண்ணக்கூடாது காசு கூடத்தான் ஆனாலும் மரக்கறி வகைகள் யார் கூட வைப்பது என்பதில் போட்டி போடுவார்கள் சில கடைகள் 18 கறிவகை என்று தில்லா எழுதிபோட்டு வியாபராம் நடக்கும் .

Link to comment
Share on other sites

பீஃப் ஃப்ரை

spacer.png
 
 
இந்த வீடியோ பீஃப் ஃப்ரை செய்யும் முறையைக் காட்டுகிறது.

ஒரு கிலோ எலும்பில்லா மாட்டு இறைச்சி பொரித்து எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும்.

 
  • பொடிதாக நறுக்கிய தேங்காய் - ½ கப்
  • நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கப்
  • கொத்தமல்லித் தூள் - 3 தேக்கரண்டி
  • மிளகாய்ப் பொடி – 2 தேக்கரண்டி
  • நல்ல மிளகு தூள் – 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
  • கரம் மசாலா – 2-3 தேக்கரண்டி
  • நறுக்கிய இஞ்சி –  4-5 செ.மி
  • பூண்டு நறுக்கியது – 10 பல்
  • உப்பு – தேவைக்கு ஏற்ப

பீஃப் நன்கு தோல் நீக்கப்பட்டு அதனை 200 மி.லி நீர் ஊற்றி குக்கரில் அது மிருதுவாகும் வரை வேக வைக்கவும் (15 முதல் 20 நிமிடங்கள் வரை). வெந்த பின்னும் நீர் மீதமிருந்தால் மூடியை எடுத்துவிட்டு நீர் முழுவதும் வற்றும் வரை அடுப்பில் வைக்கவும். மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 நடுத்தர அளவு வெங்காயம் துண்டுகள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போடவும். பின்னர் அதோடு வேக வைத்த பீஃப் இறைச்சியை போட்டு மிதமான தீயில் அடுப்பில் வைத்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites

ஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்

 

இன்று ஓணம் தினத்தை முன்னிட்டு, கேரள நாட்டு பாரம்பரிய உணவுகளில் ஒன்றான அடை பிரதமன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
ஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்
 
தேவையான பொருட்கள் :

அரிசி - 1/2 டம்ளர்
தேங்காய்ப்பால் - 4 டம்ளர்
வெல்லம் - 2 டம்ளர்
ஏலக்காய் தூள் - சுவைக்கு
பால் - 1 டம்ளர்
நெய் - தேவைக்கு
தேங்காய் துண்டுகள் - கைப்பிடியளவு
முந்திரி - தேவையான அளவு
உலர்திராட்சை - 2 ஸ்பூன்

201709041515023871_1_adapradhaman._L_sty

செய்முறை:

வெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்த்து கொதிக்க விடவும்.

அடுத்து அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கி பரிமாறவும்.

தித்திப்பான அடை பிரதமன் தயார்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அடை பிரதமன் நான் ஒருநாளும் ருசித்ததில்லை...... ஒருமுறை செய்து பார்க்கத்தான் வேணும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இந்த அடை பிரதமன் நான் ஒருநாளும் ருசித்ததில்லை...... ஒருமுறை செய்து பார்க்கத்தான் வேணும்....!  tw_blush:

நான் ருசித்து இருக்கிறன் நல்ல  சுவை ஒருதரம் சுவைத்து  பாருங்கள் பருகுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனி ஒருவன் said:

நான் ருசித்து இருக்கிறன் நல்ல  சுவை ஒருதரம் சுவைத்து  பாருங்கள் பருகுங்கள் 

எனக்காக நீ அழலாம் வாழ்க்கையில் நடக்கும் 

எனக்காக உணவுண்ண எப்படி நடக்கும் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

எனக்காக நீ அழலாம் வாழ்க்கையில் நடக்கும் 

எனக்காக உணவுண்ண எப்படி நடக்கும் ....!  tw_blush:

உங்க பெயரை சின்ன ஒரு மாற்றம் செய்தால் சுவை வந்திடும் தானே :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யெஸ் ....ஐ லைக் இட் ......!  tw_blush:

Link to comment
Share on other sites

ஓலன்

spacer.png
 
 
இந்த வீடியோ ஓலன் தயாரிப்பினைக் காட்டுகிறது.

தேவையான பொருட்கள்
  • கும்பலங்கா (சாம்பல் பூசணி) -1 நடுத்தர அளவு
  • பூசணி துண்டுகள் – 1 கப்
  • பச்சை மிளகாய் (நறுக்கியது) – 6 எண்ணம்
  • தேங்காய் பால் – 1 கப்
  • வான் பயறு (சிவப்பு பீன்ஸ்) - ¼ கப் (வேக வைத்தது)
  • கொடி அவரை
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

செய்முறை
ஒரு பாத்திரத்தை எடுத்து சிவப்பு பீன்ஸ்-ஐ உப்பு சேர்த்து வேக வைக்கவும். கும்பலங்காய் (சாம்பல் பூசணி) மற்றும் பூசணிக்காய் துண்டுகளைப் போடவும். அவற்றோடு கொடி அவரை மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். பாத்திரத்தை மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் வரை வேக விடவும்.

மூடியை எடுத்த பின்னர் மெதுவாக கிளறவும். இப்போது உப்பு கறிவேப்பிலை போட்டு மறுபடியும் கிளறி விடவும். அதோடு தேங்காய் பால் ஊற்றி நன்கு கலக்கவும். எண்ணெய் ஊற்றி மறுபடியும் கலக்கவும்.

இப்போது ஓலன் சுவைப்பதற்கு தயார் நிலையில் உள்ளது.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites

காலை டிபன் கேரளா ஸ்டைல் நேந்திரன் புட்டு

குழந்தைகளுக்கு காலை, மாலை நேர டிபனாக கேரளா ஸ்டைல் பழப்புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இந்த புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
காலை டிபன் கேரளா ஸ்டைல் நேந்திரன் புட்டு
 
தேவையான பொருட்கள் :

புட்டு மாவு - 200 கிராம்,
நேந்திரன் வாழைப்பழம் - ஒன்று,
பலாச்சுளை - 10,
தேங்காய்த் துருவல் - ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
நெய் -  50 மில்லி,
உலர் திராட்சை  சிறிதளவு.

201709091300515816_1_BananaPuttu._L_styv

செய்முறை :

வாழைப்பழம், பலாச்சுளையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய பழங்களை புட்டு மாவுடன் சேர்க்கவும்.

இதனுடன் உலர் திராட்சை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து, நெய் சேர்த்துப் பிசிறி, கொள்ளவும்.

பிசைந்த மாவை புட்டுக் குழலில் அடைத்து, ஆவியில் 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

சூப்பரான பழப்புட்டு ரெடி.

குறிப்பு: காய்கறிகளைப் பயன்படுத்தியும் இதே முறையில் புட்டு தயாரிக்கலாம்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

முட்டைகோஸ் இறால் கருவாடு

spacer.png
 
 
தேவையான பொருட்கள்
  • இறால் கருவாடு (சிறிய அளவு) – 1 கப்
  • முட்டைக் கோஸ் (சிறிதாக நறுக்கியது) – 2 கப்
  • வெங்காயம் (சிறியதாக நறுக்கியது) – 1 கப்
  • தேங்காய் துருவல் – 1 கப்
  • பச்சை மிளகாய் (நறுக்கியது) – 5
  • கரம் மசாலா - ½ தேக்கரண்டி
  • பூண்டு – 4 பல்
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • இஞ்சி (நறுக்கியது) - ½ தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
  • உப்பு
  • எண்ணெய்
  • கொத்தமல்லி இலை

தாளிப்பதற்குத் தேவையான பொருட்கள்
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • உளுந்தம் பருப்பு (உடைத்தது) – 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை
  • மிளகாய் வற்றல் – 3

செய்முறை
ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் எடுத்து சூடுபடுத்தவும். அதனுள் கடுகினைப் போடவும். கடுகு பெரியத் தொடங்கியதும் உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல் கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை  ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும். நன்கு வதக்கியதும் சீரகப்பொடி பச்சைமிளகாய்,  இறால் கருவாடு, மஞ்சள் தூள் வற்றல் பொடித்த மிளகுத்தூள் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும் பின்னர் சிறிது நீர் ஊற்றி உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து 8 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

இப்போது மூடியைத் திறந்து நறுக்கி வைத்த வெங்காயம், முட்டைக்கோஸ் தேங்காய் துருவல் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறி விடவும். பின்னர் பாத்திரத்தை மூடி மேலும் சில நிமிடங்கள் வரை வேக விடவும். மூடியைத் திறந்து நீர் முழுவதும் வற்றி விட்டதா என பார்த்து நன்கு கிளறி விடவும். மறுபடியும் பாத்திரத்தை மூடி வைத்து சில நிமிடங்கள் வேக விடவும்.

நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்த பின்னர் முட்டைக்கோஸ்  இறால் கருவாடு வறுவலை பரிமாறவும். துக்கலான இந்த மணம் இன்னும் வேண்டும் என கேட்கத் தூண்டும்.

https://www.keralatourism.org

Link to comment
Share on other sites

கேரளா மீன் குழம்பு

 

sl4931.jpg

என்னென்ன தேவை?

மீன் - 1/2 கிலோ
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10  
தக்காளி - 2  
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி  
உப்பு - தேவையான அளவு
புளி கரைசல் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உலர்ந்த கசூரி மேத்தி இலை - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

 

 

எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் மீன் எடுத்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம், இஞ்சி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி தக்காளி, மிளகாய்த்தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து ஊற வைத்த மீன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்த்து கலந்து, புளி கரைசலை ஊற்றவும். ஒரு மூடி கொண்டு மூடி சிறிது நேரம் வேக விடவும். பின் கசூரி மேத்தி இலை தூவி சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும். சுவையான கேரளா மீன் குழம்பு தயார்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கேரளா நண்டுக் கறி

தேவையானவை:

 நண்டு - கால் கிலோ
 சின்னவெங்காயம் - 100கிராம்
 பொடியாக நறுக்கிய தக்காளி - 100 கிராம்
 இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
 இரண்டாக கீறிய பச்சை மிளகாய் - 2
 தயிர் - அரை கப்
 மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியா) - ஒரு டீஸ்பூன்
 சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 தேங்காய் அரைத்தது - ஒரு கப்
 பட்டை கிராம்பு ஏலக்காய் - 5கிராம்
 உப்பு - தேவையான அளவு
 தேங்காய் எண்ணெய் - பொரிக்க‌

aval61f.jpg

செய்முறை:

நண்டை சுத்தமாக கழுவி அதில் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியா), உப்பு, சோம்புத்தூள், சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு பேஸ்ட், தயிர் சேர்த்து, நன்கு பிசறி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய், தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், மீதமுள்ள ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை  போக வதக்குங்கள். இதில் பொடியாக ந‌றுக்கிய த‌க்காளியைப் போட்டு வதக்கி ஊற வைத்த நண்டைச் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு முறை கொதி வர விடுங்கள். கொதி வந்ததும் அரைத்த‌ தேங்காயைச் சேர்த்து மூன்று நிமிடத்தில் அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

அருமையான சைடிஷ் கேரளா ஸ்டைல் மட்டன்

ரோஸ்ட்

மட்டன் சுக்காவைப் போன்றே ருசியாக இருப்பது தான் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட். இது செய்வது மிகவும் ஈஸி. இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
அருமையான சைடிஷ் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்
 
தேவையான பொருட்கள்:

மட்டன் - அரை கிலோ
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பொட்டுக்கடலை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு...

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 5
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 6 பெரிய பற்கள்.

201710071507298686_1_muttonroastkerala._

செய்முறை :

மட்டனை நீரில் நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

சுத்தம் செய்த மட்டனை  ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரில் அரைத்த விழுதினை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி, மிக்ஸியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதனையும் மட்டனுடன் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

பின்னர் குக்கரை மூடி அடுப்பில் வைத்து 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.

மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த, பின் மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி, பின் அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி இறக்கினால், கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் ரெடி!!!

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

இந்த திரிக்கு நன்றி நவீனன்

எனக்கு கேரளாவில் இருந்து கிடைக்கும் எல்லாமே பிடிக்கும். எல்லாம் நல்ல சுவையாக அருமையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

ம்ம் விளங்குது.tw_blush:

1 hour ago, நிழலி said:

இந்த திரிக்கு நன்றி நவீனன்

எனக்கு கேரளாவில் இருந்து கிடைக்கும் எல்லாமே பிடிக்கும். எல்லாம் நல்ல சுவையாக அருமையாக இருக்கும்.

 

இன்னும் நிறைய இருக்கு தொடர்ந்து இணைப்பேன்

Link to comment
Share on other sites

கேரள நண்டு மசாலா

 

  • நண்டு - 2
  • காய்ந்த‌ மிளகாய் - ஒன்று
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • வெங்காயம் - ஒன்று
  • இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் - முக்கால் தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • தக்காளி - 2
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • கடுகு - கால் தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • தேங்காய்த் துருவல் - அரை கப்
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கொத்தமல்லித் தழை - 2 கொத்து
  • எண்ணெய்

 

A12289_01.jpg

நண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்றப் பகுதிகளை நீக்கிவிட்டு நன்கு அலசி இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

 
A12289_02.jpg

தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாயைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

 
A12289_03.jpg

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் காய்ந்த‌ மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.

 
A12289_04.jpg

கடுகு வெடித்ததும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

 
A12289_05.jpg

வாசனை அடங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 
A12289_06.jpg

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

 
A12289_07.jpg

வதங்கியதும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

 
A12289_08.jpg

பிறகு தேங்காய், பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்துப் பிரட்டவும்.

 
A12289_09.jpg

சுமார் 2 நிமிடங்கள் பிரட்டிய பிறகு நண்டுகளையும், கறிவேப்பிலையும் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

 
A12289_10.jpg

தீயின் அளவைக் குறைத்து வைத்து அவ்வப்போது கிளறிவிட்டு சுமார் 20 நிமிடங்கள் வேகவிட்டு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

 
A12289_11.jpg

சுவையான கேரள நண்டு மசாலா தயார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.