Jump to content

என் விவாகரத்தும் விளங்காத புனைவுகளும். (சாந்தி நேசக்கரம் )


shanthy

Recommended Posts

Thursday, August 17, 2017

என் விவாகரத்தும் விளங்காத புனைவுகளும்.

 

 

_____________________________________________________
scheiding_26699425.jpg


2007ம் ஆண்டு சித்திரை மாதம் இனிமேல் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லையென்ற முடிவை எடுத்த போது விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாமென்ற எண்ணம் வந்தது. 
 

என் கண்முன்னே வேறு பெண்கள் வந்து போவதை வாழ்வதை ஏற்றுக் கொண்டு சமாளிக்க கடினமாக இருந்தது. 
 
என்னையும் எனது ஏற்றத்தையும் உழக்கி வீழ்த்தக் காத்திருந்தவர்கள் முன் தலைகுனியும் தைரியம் இல்லாது போனது. 

2008ஆம் ஆண்டிலிருந்து ஒரே வீட்டில் மேல்மாடியில் நானும் பிள்ளைகளும் , கீழ்மாடியில் அவனும் பிரிந்து வாழத் தொடங்கினோம். 
 
காலம் காயங்களை ஆற்றும் சிலவேளை மனங்களும் மாறக்கூடும் என்று தான் நம்பினேன்.

வாழ்வு மீதான ஒரே பிடிமானம் மகன் பார்த்திபனும் வவுனீத்தாவும் தான். மகன் 12வயதையும் மகள் 10 வயதையும் அடைந்திருந்தார்கள். வீட்டுக்குள் நடக்கும் நிலமையைப் புரிந்து கொள்ளும் வயசில்லை. அம்மா விவாகரத்து எடுங்கோ என அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். 

 பிள்ளைகளை மனரீதியாக பாதிகக்கூடாதென்பதில் கவனமாக நான் இருப்பதை தனக்குச் சாதகமாக்கிக் கொணடான்.  பிள்ளைகள் முன் தன் கோரக்குரலையும் உயர்த்திக் கதைப்பதும்  என்பற்றி பிள்ளைகளுக்கே மோசமாகச் சொல்லுவான்.

இயன்றவரை அவன் வீட்டில் நிற்கும் நேரங்களில் அவனைச் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டேன். பிள்ளைகள் வீட்டில் நிற்கும் நேரங்களில் மட்டுமே வீட்டுக்கு வருவேன்.

வேலை தவிர்ந்த நேரங்களில் அவன் வீட்டில் நின்றால் கார் போகும் திசையில் போயலையத் தொடங்கினேன். யாருடனும் எதையும் பேசும் நிலையில் மனசில்லை.

பிள்ளைகளுக்காக என்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தேன். செத்துவிடு என மனம் உந்தும். பிள்ளைகள் இருவரும் கண்ணுக்குள் வந்து கண்ணீராய் எனைக் கரைப்பார்கள். 
 
பிள்ளைகளையும் அழித்து போய்விடுவோமோ என எண்ணிய தருணங்களும் வந்து போயிருக்கின்றன. 

எப்போதும் மதுபோதையில் வரும்  அவன் தரும் தொல்லைகளையும் சகித்து இன்னொரு பத்துவருடத்தை கடத்துவதென்ற என் எண்ணத்தில் உறுதியானேன். 

தாயகத்துடனான தொடர்புகள் தாயகக்கடமைகள் நிறைந்த காலம் அது. என் நமபிக்கைக்கு உரிய போராளி ஒருவருக்கு நிலமையைச் சொன்னேன். என்னோடு கூடப்பிறக்காதவன் எனக்கு மிகுந்த ஆறுதலாயிருந்தான்.

எந்த நேரமும் என் அழைப்பை ஏற்று என்னோடு பேசக்கூடியவன். அவன் மட்டுமே என்னை நம்பிய முதல் ஆள். 

2009 முள்ளிவாய்க்கால் முடிவில் எங்கள் விடுதலைப் போராட்டம் தோற்றது. என்போன்ற பலரது வாழ்வும அவர்கள் இல்லாது தெருவில் எறியப்பட்டது. ஏதாவது சிக்கலெனில் கேட்க அவர்களும் இல்லாத போது அவன் தொல்லைகள் அதிகமாகியது.
 
2009 யுத்த முடிவின் பிறகு என்னால் இயங்க முடியாதிருந்தது. எனக்காக இருந்த அனைவரையும் போர் தின்று நான் தனித்துப் போயிருந்தேன். 

யாழ் இணையம் ஊடான நேசக்கரம் பணிகளில் சிறிதாக இயங்கிக் கொண்டிருந்த பணிகளும் இடைநிற்கும் நிலை வந்தது. 

இறந்து போனார்கள் என நினைத்த பலர் உயிரோடு இருப்பது உறுதியானது. தொலைபேசி வழியாக முகாம்கள் சிறைகளில் இருந்து தொடர்பில் வந்தார்கள்.

நேசக்கரத்தை பதிவு செய்து தாயகத்தில் வாழும் மக்களுக்கான பணிகளைச் செய்ய காலம் அழைத்தது. 
 
நேசக்கரம் தொண்டு நிறுவனத்தை உலகத் தரத்தில் உயர்த்த வேண்டும் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்பதே 24மணிநேர கனவாகியது. 

பிள்ளைகள் சிறுவர்கள் ஆயினும் அவர்களுக்குத் தெரிவித்த போது எனக்கு பெரும் ஆதரவாக நின்றார்கள். சந்திப்புகளுக்கு செல்லும் போதெல்லாம் கூட வருவார்கள். நேசக்கரமும் எனது பிள்ளைகளுமே என உலகாகியது.

நேசக்கரம் அங்கத்தவர்கள் தேவைப்பட்ட போது தானும் வருவதாக சொன்னான். மற்றவர்களுக்கு உதவுவதில் இணைந்தால் அவன் மனமும் மாறுமென்ற என் நினைவு கனவாகவே போனது. 
 
நேசக்கரத்தை முடக்குவதிலேயே தொடர்ந்து தொல்லைகள் தரத்தொடங்கினான். நேசக்கரத்தை அழிப்பதில் அவனுக்கு ஆதரவாக பிரான்சில் இருந்த அவன் நண்பன் சாத்திரி என்பவன் அவனைத் தூண்டிக் கொண்டிருந்தான். 
 
வெளியரங்குகளிற்கு போகும் போது இனிமேல் எனக்கு பிரச்சனைகள் தரமாட்டேனென்று வருவான் ஆனால் பழையகுருடி கதவைத்திற நிலமையே மீண்டும் நிகழும். 
 
மேடைகளுக்கு செல்லும் போது கடைசி நேரத்தில் ஏதாவது சொல்லி அமைதியைக் குலைத்துவிட்டு எதுவும் அறியாதவன் போல முன்னிருக்கையில் வந்து இருப்பான். 

ஒருநாள் அவனது இயல்புகள் மாறும் என்ற சின்ன நம்பிக்கை இருந்து கொண்டேயிருந்தது. 
 
எனது முயற்சிகளுக்கு அவனே பேராதரவு தருவதாக மேடைகளில் பொய் சொல்லத் தொடங்கினேன். எல்லா இடங்களிலும் அவனை முன்னிலைப்படுத்தியே எனது பணிகளைச் செய்தேன். 

எனது கவிதைப்புத்தகங்கள் வெளியிட்ட ஒவ்வொரு மேடையிலும் அவனையே நூலை வெளியிட்டு வைக்க அழைப்பேன். அவனுக்கு நன்றி சொல்லி அவனைத்தான் பெருமைப்படுத்தினேன். 
 
ஏனெனில் அவனை நான் அந்தளவு நேசித்தேன். ஆனால் அவனோ என்னைப் பழிவாங்கிக் கொண்டேயிருந்தான்.

2011இல் ப...னி என்று ஒருத்தி என் வீட்டுக்கு வந்தாள். அவனது பள்ளிக்கால நண்பியென்று அறிமுகமானாள். நட்பு என்றால் என்ன நட்புக்கான எல்லை எதுவரை என்பதை நான் புரிந்து வைத்திருந்தமைக்கும் அவர்கள் நடந்து கொண்டதற்கும் நிறைய வித்தியாசம். 

ஆரம்பத்தில் சங்டமாக இருந்தாலும் நான் பிரிந்து வாழ்வதால் அவர்களது உறவு பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளவும் தோன்றவில்லை.
 
000           000             000

உயிர் தப்பிய பல போராளிகள் வெளிநாடு வர உதவினேன். பல குடும்பங்கள் மாணவர்களுக்கு உளவள ஆற்றுகைகளும் செய்து கொண்டிருந்தேன். பலர் தங்களுக்கு வீசா கிடைத்ததும் என்னை முதலில் சந்திப்போம் எனச் சொன்னார்கள்.அப்படி பலர் வீட்டுக்கு வந்தார்கள்.

வீட்டுக்கு வருவோர் யாவருக்கும் அவன் உலகிலேயே சிறந்த ஒரு துணையென்பது போலவே அவர்களுக்கெல்லாம் அவனை அறிமுகம் செய்தேன். என்னைப் பார்க்க வந்து போன அனைவரும் சொன்னது இதுதான் :-
அக்காவுக்கு நல்ல துணை கிடைச்சிருக்கு.
உள்ளே தீயும் வெளியே புன்னகையுமே எனது வாழ்வு என்பதை யாரும் காணாமல் மறைத்துக் கொண்டேன். 

வீட்டுக்கு வந்து போகும் போராளித் தோழமைகள் ஒவ்வொருவரும் அவனைப் போல ஒருவன் எனக்கு வாழ்வில் இல்லையென்றே மற்றையவர்களுக்குச் சொல்வார்கள்.

ஆனால் அவர்கள் வந்து போன பிறகு அவர்கள் ஒவ்வொருவரோடும் என்னைத் தொடர்புபடுத்தி படுகேவலமாகக் கதைசொல்வான்.
 
 என்னிடம் வந்து போன அனைத்து நண்பர்களையும் படுக்கையில் தொடர்புபடுத்தி தன் சார்ந்தவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். 

அனைவருமே என்னை அக்கா , அம்மா , தங்கைச்சி , மருமகள் இப்படித்தான் உறவோடு அழைப்பார்கள். பழகினார்கள். ஆனால் அவன் மட்டும் என்னையொரு விபரச்சாரி போலவே கதைபரப்பிக் கொண்டிருந்தான்.

அதற்குத் துணையாக அவனது பள்ளிக்காலத் தோழியென்று வந்தவளும் ஆதரவு கொடுத்தாள். பள்ளித்தோழியென்பவள் அவனது அறையில் தான் வரும் போதெல்லாம் தங்குவாள். ஒரே கட்டிலில் பள்ளித்தோழி படுத்து எழும்பும் வரையில் தான் அவர்களது நட்பு இருந்தது. 

அவளே எங்களுக்குள் அடிக்கடி பிரச்சனைகள் தோன்ற காரணமானாள். எனக்கு ஆதரவு தருவது போல அவள் நடித்ததையும் நான் நம்பியது ஒருகாலம்.

அவனது ஒன்றுவிட்ட தங்கைகளில் 
ஒருத்தியான றோ..னியுடன் பிரச்சனைகளைப் பேசினேன். அவளும் அவனது அரியண்டத்தை பார்த்த பிறகு என்னை பிரிந்து போ இவன் திருந்தான் எனச் சொன்னாள். 
 
இன்று அவளும் அவனது கள்ளத்தனங்களுக்கு சாட்சியாய் நிற்பது வேறுகதை.
 
இனி சமாளித்தல் இயலாதென 2012 விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடிவெடுத்தேன். 
 
அவன் செத்துப்போவேன் என்றான். என்னால் தான் சாகப்போவதாக மிரட்டத் தொடங்கினான். உறவினர்கள் சிலர் தலையிட்டு இனி முடிதென்று கைவிட்டார்கள்.

2013ஏப்றல் கனடாவில் இருந்து அவனது அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். அவர்களது வருகை எங்களுக்குள் இருந்த பிரச்சனைக்கு தீர்வாகும் எனவே நம்பினேன். 

இருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் அடித்துப்போன கதையாய் அவன் அம்மாவும் அப்பாவும் தங்கள் மகன் மட்டுமே சொல்வது சரி என்னில் தான் தவறென்றார்கள். 
 
எனக்காக என்பக்கம் எனது பிள்ளைகள் தவிர யாருமில்லை.

தன்மகனுக்கு விவாகரத்துக் கொடுத்து அவனை வேறு வாழ்வை வாழ அனுமதியென்றாள் அவனது அம்மா. 
 
மாமியார் தொல்லையென்பதை அவர்கள் வந்து நின்ற ஒருமாதத்தில் உணர்ந்து கொண்டேன். இருந்த கடைசி நம்பிக்கையும் போய்விட்டது.

கோபம் அழுகை என்ன செய்வதென்றே தெரியாத இயலாமை. என் பிரச்சனைகளை புரிந்து கொண்ட போராளி அண்ணன் ஒருவன் ஐரோப்பிய நாடொன்றில் இருந்தான். அவனிடம் மட்டுமே எல்லாவற்றையும் சொல்லியழுதேன். 

பேசாமல் விட்டிட்டு பிள்ளைகளோடு சந்தோசமா இருங்கோ எதுக்கு உந்தச் சனியனோடை வாழ ஆசைப்படுறீங்கள் ?

அவனோடு ஒன்றாய் வாழ்ந்து கொண்டிருந்தவளும் வந்தாள். அவளும் அவர்களது பக்கமே நின்றாள். 

எனது நகரில் வாழ்ந்த இத்தாலிய நண்பியைத் தேடிப்போனேன். அவள் ஏற்கனவே எனது பிரச்சனைகளை அறிந்தவள். 
 
எனக்கும் பிள்ளைகளுக்கும் 10வருடங்களுக்கு மேலாக ஆதரவாக இருந்தவள். அவளும் அவளது கணவனும் தாங்கள் பேசிப்பார்ப்பதாக சொல்லி அவனிடம் கதைத்தார்கள். 
 
இறுதியில் இத்தாலிய நண்பியின் கணவனோடு எனக்குக் கள்ளத் தொடர்பென்று கதைசொன்னான்.

எனக்கு கள்ளத்தொடர்பென்று அவன் சொன்ன அனைத்து ஆண்களோடும் நான் போவதென்றால் வருடங்களே போதாது. 
 
எனது முகநூல் நண்பர்களையெல்லாம் தேடித்தேடி தொடர்பு கொண்டான். என்பற்றிய அவதூறுகளே சொல்லிக் கொண்டிருந்தான்.
 
000                     000                      000

என் பொறுமை என்னைவிட்டு விலகியது. விவாகரத்துக்குத் துணிந்தேன். பிள்ளைகளை ஒருநாள் பாடசாலையால் அழைத்துக் கொண்டு உணவகம் ஒன்றிற்குப் போனேன். 
 
அவனது பெற்றோர்களும் விவாகரத்து கொடுக்கச் சொல்வதைச் சொன்னேன். 

எங்களுக்கு வேண்டாம் உவரை விடுங்கோ. விவாகரத்து எடுங்கோ... என பிள்ளைகளும் சொன்னார்கள். 
அப்ப நாங்கள் எங்கை இனி இருக்கிறது ? மகள் கேட்டாள். 
வீடு எங்களுக்கும் பங்கிருக்கு நாங்கள் வீட்டில இருக்கலாம் மகன் சொன்னான்.

யேர்மனியப் பெண்களுக்கான ஆற்றுகை மையமொன்றின் சமூகப்பணிகளில் நானும் இயங்கிக் கொண்டிருந்தேன். 
 
எத்தனையோ பெண்களுக்கு உதவிய நான் எனக்கு உதவி கோரினேன். என் பிரச்சனைகளைக் கேட்டு அந்த நிறவனத்தின் தலைமையதிகாரியும் பணியாளர்களும் அடைந்த அதிர்ச்சியை இன்று நினைத்தாலும் கலவரமாக இருக்கிறது.

தலைமையதிகாரியும் துணையதிகாரியும் 2வாரங்கள் என்னோடு பேசினார்கள். 
 
விவாகரத்து என முடிவெடுத்தால் ஒரே முடிவாக இருக்க வேண்டும் இடையில் மாற்றம் வந்தால் சட்டச்சிக்கல்கள் வருமென்றார்கள். அதனால் நிதானமாக யோசிக்குமாறு ஆலோசனை தந்தார்கள்.

இனிமேல் அவனோ அல்லது அவனது பள்ளிக்காலக் காதலியோ இடையூறு செய்தால் காவல்துறையை அல்லது அந்நிறுவனத்தின் அவசர உதவியை அழைக்குமாறு கூறி வழக்கறிஞர் ஒருவரை அறிமுகம் செய்தார்கள். 

நாளுக்கு நாள் அவன் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அவனது பள்ளிக்காலக் காதலி வருவாள். 
 
அவனும் ஒன்றுவிட்ட ஒருவார இறுதிநாட்களில் காதலியிடம் போய் வருவான். சிலவற்றை நானும் புரிந்து கொள்ளாதமாதிரி நடந்து கொண்டேன். 

இருவரும் நீச்சல் போவார்கள் சமைப்பார்கள் எல்லாம் செய்வார்கள் ஆனால் என் அமைதியும் பிள்ளைகளின் அமைதியும் தொலைந்து போனது. 

மகன் பாடசாலையில் பலதடவை மயங்கி வீழ்வதாக பாடசாலையில் இருந்து அழைப்பார்கள். 
 
மகளும் திடீரென அழுது படிக்க முடியாமல் அந்தரிப்பாள். மாறிமாறி பாடசாலையில் இருந்து அழைப்பார்கள். பிள்ளைகளுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தைக்கூட அவன் புரிந்து கொள்ளாது கொடியவனானான்.

வெளியில் போகும் நேரம் கைபேசி அழைத்தாலோ வீட்டில் நிற்கும் போது வீட்டு தொலைபேசி அழைத்தாலோ நெஞ்சு பதறும் பிள்ளைகளுக்கு என்ன ஆயிற்றோ என்று தான் அங்கலாய்க்கும் மனம்.

இரவில் திடீரென பிள்ளைகள் பயந்து எழுவார்கள் அழுவார்கள். 2013 ஏப்றல் தொடங்கி 2016 வரையும் அம்புலன்ஸ் தயாராக இருப்பது போல நானும் அந்தரிப்போடு இருக்கத் தொடங்கினேன். நிம்மதியாக கண்ணுறங்கியதில்லை.

பிள்ளைகளின் வகுப்பாசிரியர்கள் அழைத்தார்கள். விசாரித்தார்கள். உண்மையைச் சொன்னால் பிள்ளைகளை அரசு எடுத்துவிடும் என்ற பயத்தில் சமாளித்துக் கொண்டேன். 

2வருடங்கள் காத்திருந்தும் மாற்றங்கள் எதுவும் இல்லாமையால் சட்டத்தரணியோடு பிள்ளைகளின் நிலமைகளைப் பேசினேன். உனது கையில் தான் அவர்களது நிலை தங்கியுள்ளது. 

உன்னை ஒருநாளைக்கு கொலைசெய்திட்டு மனநோயெண்டு தப்பப்போறான். உன் முடிவில் தான் உன வாழ்வு என சட்டத்தரணி எனது இறுதி முடிவுக்காக காத்திருந்தார். 

2007 தொடக்கம் பிரிந்து வாழ்வதால் விவாகரத்துக்கான காலம் இனி இழுபடாது விரைவில் விவாகரத்து வருமென்றார் சட்டத்தரணி. 

2015 விவாகரத்துக்கான நோட்டீஸ் அவனுக்கு எனது சட்டத்தரணி அனுப்பியிருந்தார்.  என் உறவுகள் நண்பர்கள் யாவரையும் தேடித் தேடி தொலைபேசினான். 

நான் வேறு ஆண்களுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருப்பதால் தான் தன்னை விலக நிற்பதாக பொய்சொல்லத் தொடங்கினான். 
 
என் எதிரிகளுக்கு என்பற்றி , என்னோடு நட்பாயிருந்த போராளிகள் சிலரை தொடர்படுத்திச் சொன்னான். 
 
சமாதானம் பேச வருவதாக முன்வந்த யாவரோடும் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டேன்.

அவனது காதலி எனது பாதிப்பங்கான வீட்டை அவன் பெயருக்கு எழுதிக்கொடு என்றாள். சமூக உதவிக்கு விண்ணப்பித்தால் பணம் கிடைக்கும் அதனை அவனுக்குக் கொடு என்றாள்.

2007 இல் இருந்து எனக்கும் பிள்ளைகளுக்குமான உணவுச்செலவுகள் பிள்ளைகளின் தேவைகளை நானே 3வேலை செய்து சமாளித்துக் கொண்டிருந்தேன். 
 
அவன் பிள்ளைகளுக்கு உணவுக்கென வாங்கி வரும் சில பொருட்கள் தவிர அனைத்தும் எனது கடின உழைப்பின் ஊதியமே செலவாகிக் கொண்டிருந்தது.

2017 மகள் பல்கலைக்கழகம் போகும் வரை வீட்டில் இருக்கிறோம். மகள் வெளியேற நானும் வீட்டை எழுதித்தந்துவிட்டுப் போகிறேன் எனக் கேட்டுக் கொண்டேன். 
 
அவனது காதலி எங்களுக்குள்  தூதுவராய் இருந்தாள். 
ஏதாவது காரணம் சாட்டாக எடுத்து பிரச்சினை தருவான். பிறகு எனது நிம்மதியை பிள்ளைகளின் நிம்தியைப் பறித்துவிடுவான். 
 
குடித்துவிட்டு கதவுகளை உடைப்பது பாத்திரங்களை உடைப்பது என அவனது தொல்லைகள் எல்லைமீறிக் கொண்டிருந்தது.
 
பிள்ளையள் பள்ளிக்கூடத்தில ஏதும் கேட்டா ஒண்டும் சொல்லப்படாது. என அடிக்கடி சொல்லிக் கொள்வேன். 2015 - 2016 ஆண்டு பிள்ளைகளின் கல்வி இறுதியாண்டுத் தேர்வுக்காலம். 

மகள் மனச்சோர்வுற்றுப் போனாள். 2016 இறுதியாண்டுத் தேர்வில் தேற்றினால் தான் 2017 பல்கலைக்கழக நுளைவுத் தேர்வு எழுத முடியும். அவள் நானில்லாமல் தனியே இருக்கமாட்டாள். எப்போதுமே என்னோடு ஒட்டிக் கொண்டிருந்தாள். 
 
பிள்ளைகள் பரீட்சையில் தேறி வருவார்களோ எனும் அந்தரம் என் அமைதி நிம்மதி யாவையும் பறித்தது.
 
மகள் 2013 தொடக்கம் 2015 மாசிமாதம் வரை அவள் என்னோடு  தான் நித்திரை கொள்வாள். நித்திரையின்றி தவித்தாள். பயங்கரக் கனவுகள் வருவதாக அழுவாள். 
 
மகன் தனக்குள்ளே யாவையும் புதைத்தான். தங்கைச்சியையும் என்னையும் கவனம் பார்த்தான். 

எல்லாம் உங்கடை பிழை...அடிக்கடி அவன் சொல்வான். 
 
விவாகரத்துத்தான் இறுதி முடிவாக வேண்டும் என பிள்ளைகளும் விரும்பினார்கள்.

2015 நத்தார் வாரம் அவனது காதலியை அவளது வீட்டிற்கு போய் கூட்டி வந்தான். அவள் வந்ததிலிருந்து ஒரே பிரச்சனை. அழுகையும் அவலமும் தான். 

24.12.2015 அன்று இரவு மகளை அவளது சினேகிதியிடம் கொண்டு போய்விட்டேன். வருடாவருடம் அவர்களோடு அவள் நத்தாரை கொண்டாடுவாள். 
 
2016 தை நடக்கவிருக்கும் பல்கலைக்கழகத் தேர்வுக்கு மகன் வீட்டில் படித்துக் கொண்டிருந்தான். 

000.       000.       000
 
இரவு 7மணிபோல் மகனுக்கு சமைத்துக் கொண்டிருந்தேன்.
 
 அவனது காதலி குசினிக்குள் வந்திருந்தாள். அவனும் வந்தான். நான் இருக்கும் இடத்திற்கு அவனை போகக்கூடாதென்ற சட்டத்தரணியின் முடிவையும் மீறி வந்தான். 
 
கதவை அடித்தான் கண்ணாடியை உடைத்தான். சமையல் பாத்திரங்களை எறிந்து கத்தினான்.

எதிர்பார்க்காத அந்த நிகழ்வு நானும் தடுமாறிப்போனேன். மேலே படித்துக் கொண்டிருந்த மகனுக்கு சத்தம் கேட்டுவிடக்கூடாதென்ற என் கவனத்தை அறிந்தவன் பிள்ளையைக் கூப்பிட்டு சத்தம் போட்டான். எனக்கும் அடித்தான். அவனது காதலி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். 

வருடம் தோறும் நத்தார் , எனது பிறந்தநாள் பிள்ளைகளின் பிறந்தநாள்களில் நாங்கள் அழுதபடியே அந்த நாட்கள் பிறக்கும். இம்முறையும் எங்கள் கண்ணீரோடு நத்தார் பிறந்தது.

மகனோடு நானும் போய் கதவைப்பூட்டினேன். அவனும் அவனது காதலியும் அவர்களது வீட்டுக்குள் போனார்கள். 
 
அவன் சத்தமிட்டு என்னைத்திட்டிக் கொண்டிருந்தான். தனது வீட்டுக் கணணாடியை கையால் குத்தி உடைத்தான். கையில்காயம். நான் தனக்கு அடித்ததாக காவல்துறைக்கு சொல்லப்போவதாக கத்தினான்.

மரண ஓலம் என் வீட்டில் அன்று. 
 
மகன் காவல்துறையை அழைத்து அவனை வெளியேற்றுமாறு சொன்னான். 
 
 மகள் நத்தார் முடித்து வரும்போது வீட்டில் நடந்த எதையும் அவள் அறியாமல் பார்க்க வேண்டும். 

நாளைக்கு பாப்பம் குஞ்சு. 
 
என மகனை சமாளித்தேன். 
 
மகளை அழைத்துவரப் போனேன். அதுவரை நடந்த பிரகண்டங்களை அவள் அறியாமல் அவள் முன் சிரித்து சமாளித்து மகளை வீட்டுக்கு கூட்டி வந்தேன். 

வாசலுக்குள் வந்த போது உடைந்திருந்த கண்ணாடித்துண்டுகளை கண்டாள். தடயங்களை மறைக்க மறந்து போனது உறைத்தது.
 

இதென்ன கண்ணாடியள் ? 
அதம்மா அவையளின்ரை பியர் போத்தலென்ற போது கதவுக்கண்ணாடி உடைந்ததைக் கவனித்தவள். 
 
பயந்து போனாள். அழுதாள்.

என்னம்மா நடந்தது ? 

இனி மறைக்க ஏலாது. 
 
நத்தார் கொண்டாடி கிடைத்த பரிசுகளோடு வீடு வந்தவள் அழுதாள். அவள் மகிழ்ச்சி தொலைந்தது. பிள்ளைகள் இருவரும் அழுதார்கள். 
 
காவல்துறையை அழைத்து அவனை வெளியேற்றுமாறு கூறினார்கள். 

மகன் தன்னால் அமைதியாக படிக்க முடியவில்லையென அழுதான். 
 
000                            000                                000

அவனது வீட்டுக்கு போனேன். பிள்ளையின் பரீட்சை முடியும்வரை நானும் பிள்ளைகளும் வீட்டில் இருக்கிறோம். அதுவரை குழப்ப வேண்டாமென அழுதேன். 
 
என் மன்றாட்டு கெஞ்சல் எதையும் அவர்கள் கேட்கவில்லை. 

உன்ரை பிள்ளைக்கு படிப்போடி முக்கியம் ? எங்க படிப்பிச்சுக்காட்டு பாப்பம் ? 
 
பரீட்சையில் தேற்றாது போனால் ஒருவருடம் கழித்தே பிள்ளை பரீட்சை எழுத முடியும்.

அவனை வெளியேற்றாது போனால் தான் வீட்டைவிட்டுப் போய்விடுவேன் என அழுதான் மகன்.
 
 18வயது வந்த பிள்ளையின் முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. அவன் தனது நண்பன் ஒருவனை அழைத்து வீட்டிலிருந்து வெளியேறினான். தனது தொலைபேசியையும் நிறுத்திக் கொண்டு போனான்.

பிள்ளை வெளியேறியதோடு அவர்கள் இருவரையும் வெளியேறுமாறு எச்சரித்தேன். 
 
நாளை மதியத்துக்கிடையில் அவனும் அவளும் வீட்டை விட்டு வெளியேறாது போனால் காவல்துறையை அழைப்பேன் என்றேன். 

இது என்ரை வீடு நாங்க போகமாட்டம். செய்றதை செய். என்றான் அவன். 
 
இரவிரவாய் என் எதிரிகள் சிலருக்கு இருவரும் தொலைபேசி முகநூலில் அழைத்தார்கள். 

பிரான்சில் வாழும் அவன் நண்பன் சாத்திரி என்பவனைத் தொடர்பு கொண்டான். சாத்திரி என்பவன் ஏற்கனவே நேசக்கரம் பணிகளில் முரண்பட்டு என்பற்றி பொய்கள் எழுதியவன்.

தன்காதலியை பக்கத்தில் வைத்துக் கொண்டு என்பற்றி சாத்திரிக்குப் பொய்கள் சொன்னான். 
 
என்னால் அவன் சாகப்போவதாகவும் நான் வேறொரு நபரோடு வாழ்வதாகவும் ஒரு போராளியின் பெயரைம் கூறினான். தனது இறுதி மரண வாக்கு மூலம் தருவதாகவும் அதனை ஒலிப்பதிவு செய்து உலகத்திற்கு அறிவிக்குமாறும் சாத்திரிக்கு  கூறினான்.

சாத்திரி எனது முகநூல் உள்பெட்டியில் என்பற்றி எழுதப்போவதாக எழுதினான். 
 
காவல்துறையை அழைத்து நிலமையைச் சொன்னேன். சாத்திரி அனுப்பிய தகவலையும் படமெடுத்து மொழிபெயர்த்து காவல்துறையிடம் கொடுத்தேன். 

காவல்துறை அவனையும் அவளையும் வீட்டிலிருந்து வெளியேற்றினார்கள். வீட்டுக்கு எதிர்க்கதவு காவல்துறை என்பதால் பயப்பிடாமல் பிள்ளைகளையும் என்னையும் இருக்குமாறு கூறி வழக்கு பதிவு செய்தார்கள்.
 
ஒருமாதம் ஆயிரம் மீற்றர் சுற்றளவுக்குள் அவன் வரக்கூடாதெனவும் அறிவித்தார்கள்.
அவன் தனது காதலியின் வீட்டிற்கு போனான்.
 
 அங்கிருந்து எனது நண்பர்கள் உறவினர்களை அழைத்து தன்னை வீட்டால் துரத்திவிட்டதாகவும் தற்கொலை செய்யப் போவதாகவும் சொன்னான். 
 
ஆளாளுக்கு தொலைபேசியெடுத்தார்கள். மானம் மரியாதை கௌரவம் என பல கதைகள்.

அவன் செத்துப் போனால் கூட நல்லமென்றது மனம். அந்தளவு வெறுத்துப் போனது. எல்லா தூதுவர்களின் அழைப்பையும் நிறுத்திக் கொண்டேன். 

மகன் படிக்க முடியாது அந்தரித்தான்.வீட்டு நிலமையை அறிந்த அவனது தோழ தோழிகள் அவனை தம்மோடு வருமாறு அழைத்தார்கள். 
 
மருத்துவப் பெற்றோர்களான அவனது தோழியொருத்தியின் பெற்றோர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். 
 
பரீட்சை முடியும் வரை மகனைத் தங்கள் வீட்டில் இருந்து படிக்க தங்கிடம் உணவு யாவும் கொடுப்போம் பிள்ளையை அனுப்பினால் போதுமென்றார்கள்.

பிள்ளையின் பிரிவு சாவுக்குச்சமானமான துயரம். அவனது நல்வாழ்வுக்காக அவனை வெளியில் அனுப்பினேன். தின்றது பாதி தின்னாதது பாதியாக பிள்ளையின் பிரிவுத்துயர். 

மகள் நிலமை மேலும் மோசமாகியது. அவள் மருத்துவம் பெற வேண்டி வந்தது. எல்லாம் இழந்து தனித்துப் போனேன். பழிசொல்லி பாவம் சொல்லி என்னை ஊரெங்கும் விபச்சரியாக சித்தரித்துக் கொண்டிருந்தான். 

அவனுக்கு ஆதரவாக எனது சித்தி சித்தப்பன் , என் அம்மாவும் சகோதரிகளும் அவன் சொல்வது யாவும் உண்மையென்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். 
 
எல்லோரும் கைவிட்ட நிலையில் வரும் பழிகளையும் சுமைகளையும் தாங்கி என் கண்ணீரை துயரை தாங்கினான் என் தோழன். 

எப்போதோ நான் செய்த உதவிக்கும் அவனைக் காத்ததற்கும் அவன் என்னை தோழ்தந்து காத்தான். 
 
15வருடம் போராட்ட வாழ்வு போரின் முடிவில் சிறைகளில் இருந்து மீண்டவன். அவனுக்கான பொறுப்புகள் குடும்பம் யாவும் இருந்தது. 

அப்போது நானிருந்த மனநிலையில் என்னை அழித்தோ அல்லது என்வாழ்வை சிதைத்தவனையும் சிதைத்தவளையும் கொன்று போட வேண்டுமென்ற கோபம். 

என்கோபத்தை ஆற்றுப்படுத்தி எனக்கும் பிள்ளைகளுக்கும் ஆதரவாக அவனே வந்தான். 
 
எனக்கு ஆதரவு தேவைப்பட்ட போது என்னைத் தாங்கிய தோழன் மீது சுமத்தப்பட்ட பழிகளையெல்லாம் அமைதியாகத் தாங்கினான்.
000             000             000

விவாகரத்து தீர்வுக்கான தவணைகள் 2016ம் ஆண்டு சித்திரை,ஆனி,ஆடி மாதமென மாறிக்கொண்டிருந்தது. 

வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவன் வீட்டை வங்கிக்கு கொடுக்கப்போவதாக தனது சட்டத்தரணி மூலம் கடிதம் எழுதுவித்தான்.
 
 அல்லது அவன் செலுத்த வேண்டிய கடன்களை நான் செலுத்தினால் வீட்டை எனது பெயருக்கு மாற்றுவதாக கேட்டிருந்தான்.

பிள்ளைகள் வெளியேறும் வரை எனக்கு வீடு தேவைப்பட்டது. எனது சட்டத்தரணியின் ஆலோசனைப்படி வீட்டை எனது பெயருக்கு மாற்றினேன். 

மகன் பல்கலைக்கழகம் தெரிவாகினான். பெரும் போராட்டத்தின் நடுவே அவன் சித்தியடைந்தான். கையில் எதுவும் இல்லை. 
 
எனக்காக உதவ இருந்த நண்பர்களை நாடி உதவிகளைப் பெற்று பிள்ளைகளுக்காக இருந்த நகைகளையெல்லாம் விற்று மகனை பல்கலைக்கழகப் படிப்புக்கு அனுப்பினேன்.

பிள்ளையின் பல்கலைக்கழக நுளைவுக்கு 4ஆயிரம் யூரோக்கள் கடனெடுத்துக் கொடுத்தேன். 
 
பிறகு மாதாந்தம் கிடைக்கும் கல்விக்கடனோடு எனது பங்காக 250யூரோ அவனுக்கு அனுப்ப வேண்டும். 
 
இடையில் பிள்ளைக்கான இதர தேவைகள் யாவுக்குமாக தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.

பிள்ளை என்ன படிக்கிறான் ? எந்த பல்கலைக்கழகம் எதுவுமே தெரியாது. பிள்ளைகளே இப்படியொருவனை எங்கள் வாழ்வில் சந்தித்ததாக நினைக்கக்கூடாதென்ற வைராக்கியத்தில் அவனது உதவியைத் தேடவில்லை. 

ஆனால் பிள்ளையின் கல்விக்கு தான் 15ஆயிரம் யூரோக்களை கொடுத்திருப்பதாக தனது ஊரவர்களை நம்ப வைத்திருக்கிறான். 
 
15சதம் கூட தராதவனையே எல்லோரும் நம்புகிறார்கள்.

17.08.2016 அன்று விவாகரத்து வந்தது. 
 
என்னைப்பீடித்த பீடை தொலைந்தது. பிள்ளைகளும் நானும் மீண்டோம். 
 
பழிசொல்லும் உலகினர் கதைகளில்  சிக்காமல்  எங்கள்  இலக்குகளில் உறுதியாக  இருந்தோம்.  
 
பிள்ளைகள் அவர்கள்  கனவை அடைந்தார்கள்.  முதற்பெயருக்கு மட்டுமே  உபயோகமான ஒருவனை அவர்கள் தங்கள் ஞாபகங்களிலிருந்து மறந்தார்கள்.
 
000.             000.          000.
 
அவன் பழையகாதலியையும் கைவிட்டான்.  
காலத்திற்கு காலம்  பெண்கள் உறவுகளை  நாடும்  அவன்  முகநூலில் ஒரு பெண்ணை பிடித்தான். காதலித்தான். அவளோடு  வாழத் தொடங்கியிருக்கிருக்கிறான்.
 
 
என்பற்றிய பழிசொல்தலை அவன் கைவிடவேயில்லை.
 
 2017 மகளும் பல்கலைக்கழகம் தேர்வாகி 01.10.2017 பல்கலைக்கழகம் போகப்போகிறாள். அவளது கல்விக்காக பத்தாயிரம் யூரோ கடனெடுத்துள்ளேன். 
 
 என்னால் எனது குழந்தைகளுக்காக எத்தனை ஆயிரங்களையும்  கொடுக்க முடியும்.எடுக்கும் கடனையும் செலுத்த உழைக்க முடியும். ஒளித்து ஓடமாட்டேன். என் குழந்தைகள் என் வரம்.அவர்களுக்காக வாழ்தல் தான் என்னை வாழ்விக்கும் ஊக்கி.
 
000.          000.              000      

அவன் எனது வீட்டு முகவரியைக் கொடுத்து பல வங்கிகளில் கடனட்டைகளுக்கு விண்ணப்பித்திருக்கிறான். 
 
உண்மை தெரியாத நான் கடிதங்கள் விலாசம் மாறி வருகிறதென  நினைத்து அவற்றையெல்லாம் அவனது முகவரிக்கு அனுப்பி வைத்தேன்.

கிடைத்து கடனட்டைகளில் பெருந்தொகை பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி பிரித்தானியாவில் புதிய மனைவியுடன் ஒளித்திருக்கிறான். 

இங்கே இருந்த வீட்டுக்கு வாடகை கட்டாமல் , வங்கிகளுக்கு பணம் செலுத்தாமல், வேலையிடத்தில் சொல்லாமல் வேலைக்கு போகாமல் ஒளித்தவனைத் தேடி வீட்டுக்கு விசாரணை வந்த போது தேடிய போதுதான் புதிய மனைவியுடன் வங்கிகளில் கொள்ளையடித்த பணத்தோடு வாழ்கிறான் என்ற உண்மை தெரிய வந்தது.

இருந்த போதும் தொல்லை இப்போது தொலைந்த போதும் தொல்லை தந்து விசாரணைகளுக்கு பதில் சொல்ல வைத்து ஒளித்திருப்பவனை முதுகெலும்பற்ற ஆணென்று சொல்வதைவிட வேறென்ன சொல்ல ?

இன்னும் இவனை நல்லவனென  நம்புகிவர்களுக்கும் அவன் என் மீது சுமத்திய பழிகளுக்கெல்லாம் காலம் தன் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
 
"தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்... ஆனால் தர்மம் மறுபடியும் வெல்லும்"
 
17.08.2017
 நேசக்கரம் சாந்தி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரது வாழ்விலும்....ஆயிரம் கதைகள் புதைந்திருக்கும்...சாந்தி!

நீங்கள் எதற்காக இதனை இங்கே பகிர்ந்தீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!

எனக்கென்னவோ..நீங்கள் உங்களை நியாயப் படுத்த வேண்டிய தேவையே இல்லை என்று தான் சொல்வேன்!

உங்கள் முன்னாள் கணவரால்...அவரது பக்கத்துக்கு நியாயத்தை...எழுத இயலாத இடத்தில்...உங்கள் கதையை நீங்கள் சொல்லாமல் விட்டிருந்தால்..., எனது மதிப்பில்...இன்னும் ஒரு படி நீங்கள் உயர்ந்திருப்பீர்கள்!

மற்றவர்கள் குணவியல்புகள் எவ்வாறாயினும்...உங்கள் முன்னாள் கணவனை...அவன்..இவன் என்று விழிப்பதில்...எனக்கு உடன்பாடில்லை!

உங்கள் ஆத்திரத்தை..நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள் என்று புரிந்து கொள்ளும் வேளை...எமக்கென ஒரு தனித்துவமான பண்பாடு ஒன்று உள்ளதல்லவா?

உங்களைப் போன்ற படித்தவர்கள், சமூக கண்ணோட்டம் உள்ளவர்களே இவ்வாறு எழுதுவது..அழகன்று!

விவாகரத்து முடிந்த்தும்...வெள்ளைக்காரர்களைப் போல ..நீங்கள் விலகியிருந்திருந்தால்... உயர்ந்திருப்பீர்கள்!

விலகிப்போன ஒருவர்...அவர் ..உங்களது முன்னாள் கணவரே எனினும்...அவரைப்பற்றி அவதூறு கூறுவதற்கு..உங்களுக்கு உரிமையுமில்லை! உங்களைப் பற்றி...அவதூறு கூற அவருக்கும் உரிமையுமில்லை!

உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்காக..இருவருமே...அழுக்குகளை..பகிரங்க சலவை செய்வது நன்று அல்ல எனபது எனது தாழ்மையான கருத்து!

நடந்ததை மறந்து....தொடர்ந்தும் பயணியுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது சாத்திரி வீட்டுக்கு ரூர் போய் குடையெல்லாம் பிடிச்சு சந்தோசமாய்த்தானே திரும்பி வந்தனீங்கள்????

Link to comment
Share on other sites

7 hours ago, புங்கையூரன் said:

நீங்கள் எதற்காக இதனை இங்கே பகிர்ந்தீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!

எனக்கென்னவோ..நீங்கள் உங்களை நியாயப் படுத்த வேண்டிய தேவையே இல்லை என்று தான் சொல்வேன்!

இது குடும்ப சம்மந்தப்பட்ட பிரச்சனையாயினும் ஏதோ ஒரு வித்தில் பொது விடயங்களும் அதற்குள் பிரச்சனைக்கு காரணமாக வருகின்றது. அதன் நிமிர்த்தம் இப்பதிவு இங்கு இணைக்கப்பட்டிருக்கலாம். (நேசக்கரம் அது சார்ந்த செயற்பாடுகள் சந்திப்புகள்)

இதனடிப்படையில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்திருக்கலாம். பொதுவாழ்வும் குடும்ப வாழ்வும் பிள்ளைகளும் என துன்பம் நிறைந்த பதிவாகவே இது இருக்கின்றது. அதை புரிந்துகொள்ளவும் முடிகின்றது.

இருந்தபோதிலும் இவ்வாறான பதிவுகளுக்கு சம்மந்தப்பட்டவர்கள் எதிர்வினையாற்ற முற்பட்டால் இது துன்பத்தின் வடிகாலுக்குப் பதிலாக ஆரம்பமாக சந்தர்ப்பங்கள் உள்ளது. இதனால் சம்மந்தப்பட்டவர்கள் மேலும் பாதிப்பு அடைய வாய்புள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

நீங்கள் எதற்காக இதனை இங்கே பகிர்ந்தீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!

வளரும் பிள்ளைகள் உள்ள வீட்டில்,  பெரும் குடும்ப  சிக்கலில் அகப்பட்ட சாந்தி, 
கணவரின் உறவினரும், தனது உறவினரும்  அவருக்கு  ஆதரவாக இல்லாத நிலையில்....
அந்நிய நாட்டவரின் உதவியுடன், பிள்ளைகளை படிப்பித்து விட்ட  நிம்மதியையும்,
தான் பட்ட சோகங்களையும்..  அவருக்கு  இறக்கி வைக்க ஒரு இடம் தேவைப்படுவது மனித இயல்பு தானே...
அதற்கு அவர்   யாழ் களத்தை   தேர்ந்தெடுத்து இருக்கலாம், புங்கையூரான்.

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தியக்கா,

பலகாலமாக கருத்தெழுத நேரமில்லாமல் வந்து பாத்திட்டு போனாலும், உங்கள்  திரியில் பதில் எழுதவேணும் என்று தோன்றியது. அதற்கு முக்கியமான காரணம் நீங்கள் விட்டதாக நான் கருதும் தவறுகளை வேறு யாருமே விட்டு விடக்கூடாது.

2007 முதல் பிரிந்து வாழ்வதாக கூறியிருந்தீர்கள் அத்துடன் உங்கள் முன்னாள் கணவர் குடும்ப வன்முறையில் ஈடுபடுபவராகவும் மதுவிற்கு அடிமையானவர் எனவும் கூறியிருந்தீர்கள்.  ஜெர்மனியின் குடும்ப சட்டம் பற்றி தெரியாது ஆனால் அவுஸ் போல இருக்கும் என நம்புகிறேன்.  அவுஸ் சட்டப்படி குடும்ப வன்முறையில் (Demestic Violence) ஈடுபட்டால் வலு இலகுவாக விவாகரத்து எடுக்க முடியும். அதுவும் சிறு பிள்ளைகள் இருக்கும் இடத்தில் இன்னமும் இலகு. பொருளாதார ரீதியிலும் உங்களுக்கே வீட்டின் பெரும்பகுதி வந்திருக்கும்.

இந்த சூழ்நிலையில் தவறு உங்கள் மீது தான் என வருத்தத்த்துடன் கூறிக்கொள்ளுவேன். வன்முறையில் ஈடுபடும், மதுவிற்கு அடிமையான, பல பெண் நண்பர்களை வைத்திருக்கும் ஒருவர் திருத்துவார் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம். அநியாயமாக உங்கள் வாழ்க்கையில் பத்து வருடங்களை இழந்து விட்டீர்கள். ஊருக்காகவோ, மற்றவர்களுக்காகவோ, உறவினர்களுக்காகவோ ஏன் பிள்ளைகளுக்காகவோ உங்கள் முடிவுகளை மாற்ற முடியாது. காவல் நிலையம் முன்னால் இருந்தும் எத்தனையோ வீர பெண்களை தெரிந்திருந்தும் உங்கள் காத்திருப்பிற்கான காரணம் பிள்ளைகள் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. 

ஒருவேளை இந்த முடிவை நீங்கள் பத்துவருடங்களுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தியிருந்தால் உங்களதும், உங்கள் பிள்ளைகளினதும் வாழ்க்கை வேறு திசையில் பயணித்திருக்கலாம். 

வீட்டினுள் ஒரு வாழ்க்கை, வெளியாலே இன்னொரு வாழ்க்கை வாழும் எம்மவர்கள் பலரின் நிலையை உங்களின் சம்பவம் படம் பிடித்துக்காட்டுகிறது

இனிவரும் நாட்கள் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் மகிழ்வாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வணக்கம் சாந்தியக்கா வாழ்க்கை பல பேருக்கு வாழும் போதே அடுத்த இலக்கை  காட்டி நகர்த்தி செல்கிறது இதில்  தனி ஒருவராய் போராடி கடந்துள்ளீர்கள் பிள்ளைகளையும் கரைசேர்த்து விட்டீர்க்ள் இனியெல்லாம் சுகமே நடக்க இறைவனை வேண்டுகிறேன் 

பல பிரச்சினைகள் வந்து எம்மை கூராக்கிவிட்ட்டு செல்லும் அடுத்த பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள அது அனுபவமாக இருக்கும்  இதும்  உங்களுக்கு அனுபவ பாடமாக இருக்க அடுத்த இலக்கை தெரிவு வெற்றி நடை போடுங்கள்  உங்கள் குழந்தைகளுடன் :107_hand_splayed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனநோயாளர்களுடன் வாழமுடியாது சனியன் விட்டுத்தொலைந்தது 

 

இனிமேல் கனக்கபேர் வாயில வீணிவடிய அட்வஸ் பண்றன்பேர்வளி என சாத்திரியும் உங்கட முன்னாளும் சொன்னது உண்மையாக இருக்குமோ நாங்களும் தட்டிப்பார்ப்பமோ என வருவினம் அவர்கள்  சனியஙள் இல்லை ஏழரைகள் அதையும்தாண்டி சில நல்ல உள்ளங்களின் நட்பும் உங்களுக்கு அமையலாம் வாழ்த்துகள்.

 

தவிர இந்தச் சுய விமர்சனம் தமிழ்த் திரைப்படம் "தரமணி" பார்த்ததன் பாதிப்பாகவும் இருக்கலாம்

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தி, முன்பும் உங்கள் வாழ்க்கை, குடும்பம் சம்மந்தமாக பல விடயங்களை இங்கு பகிர்ந்து இருக்கின்றீர்கள். உங்களின் தற்போதைய பதிவு அதன் தொடர்ச்சியாக வேறு பல விடயங்களை தொட்டுச் செல்கின்றது.

நீங்கள் விபரிக்கின்ற பல பிரச்சனைகள் எமது சமூகத்தில் வழமையில் நடைபெறும் விடயங்கள். நீங்கள் துணிந்து, எழுதி இருக்கின்றீர்கள். பலர் மெளனமாக இருக்கின்றார்கள்.

ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி தொலைவதற்கு குடிப்பழக்கம் ஒன்றே போதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கலைஞன் said:

வணக்கம் சாந்தி, முன்பும் உங்கள் வாழ்க்கை, குடும்பம் சம்மந்தமாக பல விடயங்களை இங்கு பகிர்ந்து இருக்கின்றீர்கள். உங்களின் தற்போதைய பதிவு அதன் தொடர்ச்சியாக வேறு பல விடயங்களை தொட்டுச் செல்கின்றது.

நீங்கள் விபரிக்கின்ற பல பிரச்சனைகள் எமது சமூகத்தில் வழமையில் நடைபெறும் விடயங்கள். நீங்கள் துணிந்து, எழுதி இருக்கின்றீர்கள். பலர் மெளனமாக இருக்கின்றார்கள்.

ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி தொலைவதற்கு குடிப்பழக்கம் ஒன்றே போதும். 

நாய்க்கு எங்கை அடிபட்டாலும் காலைத்தான் தூக்குமாம்.....
உலகில் எத்தனையோ குடும்பங்களில் மதுவை சாதாரணமாக அருந்துகின்றார்கள்.எந்தவொரு பிரச்சனையுமில்லாமல் சந்தோசமாகத்தான் வாழ்கின்றார்கள்.
ஏதோ மது அருந்தாத குடும்பங்கள் எல்லாம் எவ்வித பிரச்சனையுமில்லாமல் வாழ்கின்றார்கள் என்பது போல் இருக்கின்றது உங்கள் கருத்து...

Link to comment
Share on other sites

அக்கா மிகவும் கவலையான விடயம், இவ்வளவு தெல்லைகளுக்கும் இடையில் நீங்கள் செய்யும் சேவைக்கு தலை வணங்குகின்றேன்.

நான்  இப்போது வீட்டிலிருந்து வேலை செய்வந்தால் முன்னர் மாதிரி மற்றவர்குளுக்கு உதவ முடியவில்லை, காலம் மாறும்,மறுபடியும் உங்கள் ஊடாக பலருக்கு உதவி செய்யும் வாய்ப்பை ஏதிர்பார்கின்றேன்.

அக்கா இதுவும் கடந்து போகும், உங்கள் பிள்ளைகள் தான் உங்கள் சொத்து, அவர்கள் இருக்கும் வரைக்கும் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க தேவையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தங்கச்சி சாந்தி

முன்னரும் முகநூலில் இதுபற்றி  எழுதியிருந்தீர்கள்

யாழை  ஒரு குடும்பமாக  நினைப்பவன் நான்

அந்தவகையில்  யாழ்  உங்களுக்கு ஆறுதல் தரும்

அமைதி  தரமுயலும்

ஆனால் இது போன்ற  கொட்டுதல்களும் பதில்  விளக்கங்களும்

உங்களது பழைய  வாழ்க்கையை

அந்த நரகத்தை

மேலும் மேலும் தொடந்து கிளறுவதாகவும்

உங்களது நிம்மதியை  கெடுப்பதாகவும்

உங்களது அடுத்த முயற்ச்சிகளுக்கு

உங்களது  எதிர்கால சிந்தனைகளுக்கு தடை போடுவதாக  மட்டுமே அமையும்

இது என்  அனுபவ வார்த்தைகள்

என் தங்கை  எங்கிருந்தாலும் 

அவர்  நினைத்தபடி

அவருக்கு மகிழ்வு தரக்கூடியபடி வாழணும்

வாழுங்கள்

உலகம் மிக பெரியது  சாந்தி.

Link to comment
Share on other sites

40 minutes ago, குமாரசாமி said:

நாய்க்கு எங்கை அடிபட்டாலும் காலைத்தான் தூக்குமாம்.....
உலகில் எத்தனையோ குடும்பங்களில் மதுவை சாதாரணமாக அருந்துகின்றார்கள்.எந்தவொரு பிரச்சனையுமில்லாமல் சந்தோசமாகத்தான் வாழ்கின்றார்கள்.
ஏதோ மது அருந்தாத குடும்பங்கள் எல்லாம் எவ்வித பிரச்சனையுமில்லாமல் வாழ்கின்றார்கள் என்பது போல் இருக்கின்றது உங்கள் கருத்து...

காலில் அடிபட்டு காலை தூக்கும் நாய்கள் இல்லையோ? 

குடி குடியை கெடுக்கும்! இது பழமொழி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா,நீஙகள் ஒரு சாதனையளர். உங்களது முடிவை விமர்சிப்பதற்கோ ஆலோசனை கூறவோ எனக்கு தகுதியில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி அக்கா,
இதையே ரமணிச்சந்திரன் கதையாக எழுதி  இருந்தால் உச்சிக்கொட்டி வாசிப்போம்.
நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனிவரும் காலங்கள் உங்களுக்கானதாய் இருக்கட்டும்.
அனைத்துக்கும் மத்தியில் பலபேருக்கு உதவி செய்து உயர்ந்து நிற்கிறீர்களே, இதுவே நீங்கள் வகுத்த பாதை.
தொடர்ந்தும் பயணியுங்கள். Best of luck sister!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நாய்க்கு எங்கை அடிபட்டாலும் காலைத்தான் தூக்குமாம்.....
உலகில் எத்தனையோ குடும்பங்களில் மதுவை சாதாரணமாக அருந்துகின்றார்கள்.எந்தவொரு பிரச்சனையுமில்லாமல் சந்தோசமாகத்தான் வாழ்கின்றார்கள்.
ஏதோ மது அருந்தாத குடும்பங்கள் எல்லாம் எவ்வித பிரச்சனையுமில்லாமல் வாழ்கின்றார்கள் என்பது போல் இருக்கின்றது உங்கள் கருத்து...

இலங்கையில் வடகிழக்கு மாகாணங்கள்  தற்போது குடியில் முந்திச்செல்கின்றன , தமிழ் நாடும் அப்படித்தான் இருக்கிறது  குடியால் இங்கே இலங்கையில் கன குடும்பங்கள் சீர்ழிந்து வருகின்றன மேலைத்தேய நாடுகளில் கலாச்சாரமாக இருக்கலாம் அங்கே இருப்பவர்கள் மேலைதேயவர்கள் இல்லை எம்மவர்கள் கு. சாமி அண்ணை  நாம் தமிழர்கள் என்ற கலாச்சார வட்டத்திற்குள் கன பேர் வாழ்ந்துகொண்டு இருகிறார்கள் :unsure:

கலாச்சாரம் எல்லாம் தொலைத்த்வர்கள் சிலர் அப்படி இருக்கலாம்  :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவை.. ஒரு துணிச்சலான அக்காவாக.. மற்றவர்களுக்கு உதவி செய்யும் அக்காவாகக் கண்டது தான் வழமை. அதேபோல் "அவனும்" முகநூலில் சாந்தி அக்காவை யாழில் தெரியும் என்ற வகையில்.. நண்பராக இருந்ததும் தெரியும்..! அவரும்.. வித்தியாசமாகப் பழகியதில்லை. 

இப்படி ஒரு சிக்கலில் அழகான ஒரு சின்னக் குடும்பம் சிக்கித் தவித்திருப்பது இன்று தான் தெரிகிறது. 

சாந்தி அக்கா.. கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாக யாழில் இருந்து வந்துள்ளா. ஒருபோதும் தனது குடும்பத்தைப் பற்றியோ யாரையும் பற்றியோ குறை சொன்னதில்லை.

அதுவும்.. இதுவே முதற்தடவையாகவும் பார்க்கிறோம்.

இந்த விடயங்களை நீங்கள் உங்கள் நெருங்கிய சொந்தங்களோடே வைச்சிருந்திருக்கலாம்... அது தான் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நன்மை என்பது எங்கள் கருத்து.

ஏதோ ஒரு காரணத்திற்காக.. உங்கள் மனக்கிடக்கைகளை யாழில்.. கொட்டித்தீர்திருக்கிறீர்கள். யாழ் உங்களது நீண்ட கால நண்பன் என்ற வகையில்... இதனை கள உறவுகளுக்கு மட்டுமான பகுதியில்.. பகிர்ந்து கொள்வது உங்கள் எல்லோருக்கும் ஆரோக்கியம் என்றே நினைக்கிறோம்.

எவர் குடும்பமும் சிதைவதென்பது.. மிகவும் மன வேதனைக்குரிய விடயம். 

ஆச்சரியம்.. அவன்.. இப்படிப்பட்டவனா என்பது தான். 

பிரச்சனைகளோடு வாழ்வதிலும்.. பிரச்சனையில் இருந்து மீண்டு வாழ்வது மேல்...! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இடம் பொருள் காலம் அறிந்து "

இங்கு யாழில் குறைந்த பட்ஷம் 10 திரி அல்லது செய்தியாவது நடிகை ரம்பா விவாகரத்து 
சம்மந்தமாக இணைத்த்திருப்பார். யாரோ ஒரு கூத்தாடியின் விவாகரத்தில் எமக்கு இருந்த கவனம் 
என்பது எமக்குள் ஒருவர் எனும்போது இல்லாமல் போகிறது அல்லது எதோ ஒரு தள்ளி நிற்கும் எண்ணம் வருகிறது. ரம்பா ஒரு நடிகையாக எமது வீட்டுக்குள் வந்து எமக்கு அறிமுகமான ஒரு முகம் ஆகி போனதால் 
கூட எமக்கும் ரம்பாவிட்கும் ஒரு உறவு வந்திருக்கலாம்.

எழுதுதல் 
வாசித்தல் 

இந்த இரண்டும் யார் ? ஏன் ? எதற்கு ? என்பதில்தான் தங்கி இருக்கிறதே தவிர 
என்ன எழுத வேண்டும் என்ன வாசிக்க வேண்டும் என்று ஒரு நியதியோ அன்றி இது நல்லம் 
எது கூடாது என்று ஒரு வரையறையோ இருக்கும் என்று நான் நம்பவில்லை. 

எமக்கு முன் பின் எந்த விதத்திலும் தெரியாத ஒருவர் தனது விவாகரத்து பற்றி எழுதி பதிந்தாலும் 
அது தகும் என்றுதான் நான் முழுமையாக நம்புகிறேன். ஆண்கள் சிலரை பற்றிய குறைந்த பட்ஷம் ஒரு ஆணை பற்றிய ஒரு முன் அறிவுறுத்தல் எதிர்காலத்தில் இன்னொரு ஆணுடன் வாழ இருக்கும் ஒரு பதின்ப 
வயது பெண்ணுக்கு ஒரு சிறு அறிவுரையாக கூட அது இருக்கலாம். ஆதலால் எந்த நோக்கத்தில் அவர் அதை எழுதினார் என்ற எந்த எண்ணமும் நாம் அறியாது. உங்கள் தனிப்பட வாழ்வை எழுதுவது தவறு என்று கூறமுடியாது. 

இப்போ முக புத்தகத்தை எடுத்தால் ... நான் கொழும்பு போகிறேன் ... நான் விடுமுறையில் எகிபிட் போகிறேன் என்று போடுவார்கள். அதை சுய விளம்பரமாகவும் எடுக்கலாம் .... எமது நண்பர் ஒருவர் ஏற்கனவே அப்படி ஒரு அனுபவம் பெறுவதால் ... நாம் அப்படி ஒரு பயணம் எதிர்காலத்தில் செய்ய இருந்தால் 
அவரது அனுபவத்தை பெற்று கொள்ளவும் பயன் படுத்தலாம். அல்லது நண்பரில் அக்கறை இருப்பின் அவரை பின் தொடரலாம். அது யார் பார்க்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறதே தவிர ... போட பட்ட விடயம் ஒன்றுதான்.

எல்லா எழுத்துக்களும் அப்படித்தான் என்று நினைக்கிறேன் 
திட்டமிட்டு எம்மை மூளை சலவை  செய்ய .... ஒரு சமூகத்தை சீரழிக்க .... பொய் பரப்புரைக்காக 
என்று இல்லாத பட்ஷத்தில். வாசிப்பது வாசிக்காதது எம்மில்தான் இருக்கிறதே தவிர எழுதுபவரில் இல்லை 
என்பதே எனது நிலைப்பாடு. 

எழுத்து நாகாரீகம் என்பதும் அப்படித்தான் ஒருவர் தனது உணர்வை வெளிப்படுத்தும்போது 
அவரது எழுத்தில் அந்த உணர்வு இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். வாசிப்பவருக்காக எழுத போனால்  அதில் அவரது உணர்வும் எழுத வந்த கருவும் இல்லாமல் போய்விடும் .... வாசிக்க வருபவர்கள் பல வடிவானவர்கள் ...... எழுத வந்த உணர்வு என்பது ஒரே ஒரு வடிவானது. அந்த வடிவத்தை அழித்து விட்டால் 
எழுத வந்த விடயமே அழிந்து விடும் என்பதே எனது எண்ணம். 
அவன் .... அவள் ... நீ ..... நான் உனது ... என்பதெல்லாம் எழுதுபவரின் உணர்வை பொறுத்தது. வாசிப்புக்காக 
அதை மாற்ற வேண்டும் என்பது தவறு என்பதே எனது எண்ணம். 

குடிப்பது ...
மனைவியை அடிப்பது ..
அதட்கும் பெண்கள் அசைவின்றி போனால் ..... 
அவதூறு கதைகளை கட்டிவிடுவது........... என்பதை பல ஆண்களின் வாடிக்கை விளையாடடகவும் 
ஒரு ஆணாதிக்க சிலேடையாகவும் நான் அடிக்கடி பார்த்து வருகிறேன்.

இங்கு பலரும் உணராத விடயம் எமக்கும் அக்கா தங்கைகள் உண்டு என்பதே ... அவர்கள் இப்படி ஒரு இடத்தில் சிக்குண்டு போனால் ... எமது நிலைப்பாடு எப்படி இருக்கும் ? 
"அவன் .... அவனது மனைவியை அடித்தான்" என்ற பார்வை எனக்கு சிறு வயதில் இருந்தே இருந்தது இல்லை 
ஆதிக்கம் என்பது எந்த வடிவில் தலை தூக்கினாலும் ..... காதை பொத்தி போட வேண்டும் என்பது எனது 
தனிப்பட்ட உணர்வு. ஊரில் இருந்த காலத்தில் எனக்கு சிறு வயது பொறுக்க முடியாமல் பலவற்றை 
பார்த்து கொண்டு இருந்து இருக்கிறேன்.

இங்கு ஒரு ஆண் என்ற மிருகத்திடம் சிக்குண்டு வாழ வேண்டிய எந்த தேவையும் பெண்ணுக்கு இல்லை 
அரசுகளே உடை ... இருக்க இடம் தருகிறது. 
முதல் கை ஓங்கும்போதே ... பெண்களின் வார்த்தைகளும் ஓங்கி ஒலிக்க வேண்டும் 
எந்த மன்னிப்பும் இருக்க கூடாது. ஆதிக்கம் தலை தூக்குவது என்பது ... பலவீனங்களை 
காணுவதால்தான். ஒரு ஆண் என்ற காரணத்தால் ஒரு மிருகத்துடன் வாழ வேண்டிய கட்டாயம் 
எந்த பெண்ணுக்கும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் இரண்டு பிள்ளைகளையும் நன்றாக வளர்த்திருக்கிறீர்கள். நன்றாகப் படிப்பித்திருக்கிறீர்கள். அவர்கள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று முடிந்து பட்டம் பெறும்போது உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி , பழைய சோகங்களை மறக்கச்செய்யும். எத்தனையோ மாவீரர் குடும்பங்களுக்கு உதவி புரிந்தீர்கள். நிச்சயம் , உங்களுக்கும் நல்ல உள்ளங்கள் உதவி செய்வார்கள்.  உங்களின் அம்மாவும் , சகோதரிகளும் சித்தப்பாக்களும் உங்களைத் தேடிவருவார்கள். 

 நாய் வாலை நிமிர்த்தலாம் .ஆனால் அளவுக்கு அதிகமாகக் குடிப்பவரை திருத்தமுடியாது.

Link to comment
Share on other sites

1. எப்பவும் ஒரு பக்க நியாயத்தை மட்டும் கேட்டுக் கொண்டு  தவறு யார் பக்கம் என்று கூறுவது என்ன விதமான அணுகுமுறை ?

2. விவாகரத்து என்பது நாகரீகமான பிரிதல். அவ்வாறான பிரிதலின் பின் முன்னால் வாழ்க்கை துணையை அவன் இவன் என ஒருமையில் விளித்தும் கேவலமாகவும் எழுதுவது எந்தளவு சரியானது ? அப்படி எழுதுகின்றவர் இணைந்து வாழும் போது எந்தளவுக்கு புரிதலுடன் வாழ்ந்து இருப்பார்?

3. சமூக பொது புத்தி பெண்ணின் ஒப்பாரியை முழுவதுமாக நம்பி விடுவது. இந்த அனுதாபம் சார்ந்த பொதுப் புத்தியை சாந்தி தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றாரா ?

4. வீட்டின் முன் காவல் நிலையம் இருந்தும் தன் மீதான வன்முறையை பற்றி முறையிடவில்லை என்பதை ஒரு சாதாரண பெண் பிரான்சில் இருந்து கூறினாலே நம்ப முடியாது. ஆனால் இது வரைக்கும் தன்னை துணிச்சலான பெண்ணாக சமூகத்தில் பிம்பப்படுத்திய சாந்தி தன் மீதான, தன் வளர்ந்த பிள்ளைகள் மீதான வன்முறையை பற்றி முறையிடவில்லை என்பதை எப்படி நம்புவது ?

5. நேசக்கரம் முடக்கமானது மகிந்த ஆட்சி போன பின்பு. முக்கியமாக மகிந்தவின் தோல்வியுடன்  கிழக்கில் கருணாவின் அரசியல் பலமிழந்து போனபின் நேசக்கரம் இயங்க முடியாமல் போனது. ஆனால் இதை முழுக்க மறைத்து குடும்ப விடயங்களாலும் முன்னாள் கணவனாலுமே முடக்க மானது என ஏன் சாந்தி கூறுகின்றார் ?

6. அவன் இவன் என இங்கு சாந்தியால் விளிக்கப்பட்டுள்ள இன்னொரு நபரான சாத்திரியுடனான 2009 இன் பின்னும் நீடித்த சாந்தியின்  நட்புக்கு சாட்சியாக பலர் இங்கு இன்னும் இருக்கின்றனர் தானே ?
ஒரே குடைக்குள் நனைந்து எடுத்த புகைப்படங்களின் நினைவுகள் இன்னும் உள்ளன தானே?
நெல்லையன் போன்றவர்கள் இன்னும் சமூக தளத்தில் இயங்கி கொண்டு தான் இருக்கின்றனர் என்பதையும் அவர் அறிவார் தானே?

யாழில் ஒரு முறை சாந்தியுடன் நியாயமாகா முரண்பட்ட அனுபவத்தின் பின்னர் யாழில் எழுதுவதை தவிர்த்து விட்டேன். ஆனால் மீண்டும் சாந்தியின் இந்த திரி என்னை எழுத வைக்கின்றது.

சாந்தியின் பிள்ளைகளுக்கு என் ஆசீர்வாதங்கள்.

Link to comment
Share on other sites

 ஃகண்முன்னே வேறு பெண்கள் வந்து போவதை வாழ்வதை ஏற்றுக் கொண்டு சமாளிக்க கடினமாக இருந்ததுஃ

இதன் பிறகு  அவரை எந்த ரூபத்திலும் அர்ச்சனை செய்யும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு...

Link to comment
Share on other sites

4 hours ago, மியாவ் said:

 ஃகண்முன்னே வேறு பெண்கள் வந்து போவதை வாழ்வதை ஏற்றுக் கொண்டு சமாளிக்க கடினமாக இருந்ததுஃ

இதன் பிறகு  அவரை எந்த ரூபத்திலும் அர்ச்சனை செய்யும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு...

ஆம் அர்ச்சனை செய்யும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. அது அவரின் தனிப்பட்ட விடயமும் கூட . ஆனால் யாழ்களம் எனும் பொது மேடையில் அவன் இவன் என்று அநாகரீகமாக எழுதுவதை தவிர்க்குமாறு வேண்டப்படுகின்றது என நினைக்கின்றேன்.
சாத்திரியை அவன் இவன் என விளிப்பதற்கு யார் உரிமை கொடுத்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பூச்சி said:

1. எப்பவும் ஒரு பக்க நியாயத்தை மட்டும் கேட்டுக் கொண்டு  தவறு யார் பக்கம் என்று கூறுவது என்ன விதமான அணுகுமுறை ?

2. விவாகரத்து என்பது நாகரீகமான பிரிதல். அவ்வாறான பிரிதலின் பின் முன்னால் வாழ்க்கை துணையை அவன் இவன் என ஒருமையில் விளித்தும் கேவலமாகவும் எழுதுவது எந்தளவு சரியானது ? அப்படி எழுதுகின்றவர் இணைந்து வாழும் போது எந்தளவுக்கு புரிதலுடன் வாழ்ந்து இருப்பார்?

3. சமூக பொது புத்தி பெண்ணின் ஒப்பாரியை முழுவதுமாக நம்பி விடுவது. இந்த அனுதாபம் சார்ந்த பொதுப் புத்தியை சாந்தி தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றாரா ?

4. வீட்டின் முன் காவல் நிலையம் இருந்தும் தன் மீதான வன்முறையை பற்றி முறையிடவில்லை என்பதை ஒரு சாதாரண பெண் பிரான்சில் இருந்து கூறினாலே நம்ப முடியாது. ஆனால் இது வரைக்கும் தன்னை துணிச்சலான பெண்ணாக சமூகத்தில் பிம்பப்படுத்திய சாந்தி தன் மீதான, தன் வளர்ந்த பிள்ளைகள் மீதான வன்முறையை பற்றி முறையிடவில்லை என்பதை எப்படி நம்புவது ?

5. நேசக்கரம் முடக்கமானது மகிந்த ஆட்சி போன பின்பு. முக்கியமாக மகிந்தவின் தோல்வியுடன்  கிழக்கில் கருணாவின் அரசியல் பலமிழந்து போனபின் நேசக்கரம் இயங்க முடியாமல் போனது. ஆனால் இதை முழுக்க மறைத்து குடும்ப விடயங்களாலும் முன்னாள் கணவனாலுமே முடக்க மானது என ஏன் சாந்தி கூறுகின்றார் ?

6. அவன் இவன் என இங்கு சாந்தியால் விளிக்கப்பட்டுள்ள இன்னொரு நபரான சாத்திரியுடனான 2009 இன் பின்னும் நீடித்த சாந்தியின்  நட்புக்கு சாட்சியாக பலர் இங்கு இன்னும் இருக்கின்றனர் தானே ?
ஒரே குடைக்குள் நனைந்து எடுத்த புகைப்படங்களின் நினைவுகள் இன்னும் உள்ளன தானே?
நெல்லையன் போன்றவர்கள் இன்னும் சமூக தளத்தில் இயங்கி கொண்டு தான் இருக்கின்றனர் என்பதையும் அவர் அறிவார் தானே?

யாழில் ஒரு முறை சாந்தியுடன் நியாயமாகா முரண்பட்ட அனுபவத்தின் பின்னர் யாழில் எழுதுவதை தவிர்த்து விட்டேன். ஆனால் மீண்டும் சாந்தியின் இந்த திரி என்னை எழுத வைக்கின்றது.

சாந்தியின் பிள்ளைகளுக்கு என் ஆசீர்வாதங்கள்.

சாந்தி அக்கா.. எழுதின மாதிரி அவரை வந்து எழுத வேணாம் என்று யாரும் தடுத்தவில்லைத் தானே..??! 

அதே போல்.. சாத்திரி என்பவர் கூட மறுதலிக்கவில்லை.. அவர் மீதான குற்றச்சாட்டுக்களை..??!

ஆனால்.. இத்திரி யாழ் பொதுவெளியில் இருப்பதில் எங்களுக்கும் உடன்பாடில்லை. காரணம்.. ஒரு குடும்ப விவகாரம்.. அந்தக் குடும்பத்துக்குள் இருப்பது.. அல்லது... யாழ் குடும்பத்துக்குள் இருப்பது நல்லது. :rolleyes:tw_angry:

 

சாத்திரியை பற்றி யாழ் நன்கு அறியும். அவருக்கு எதுக்கு வக்காளத்து. :rolleyes:

Link to comment
Share on other sites

4 hours ago, Penny said:

ஆம் அர்ச்சனை செய்யும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. அது அவரின் தனிப்பட்ட விடயமும் கூட . ஆனால் யாழ்களம் எனும் பொது மேடையில் அவன் இவன் என்று அநாகரீகமாக எழுதுவதை தவிர்க்குமாறு வேண்டப்படுகின்றது என நினைக்கின்றேன்.
சாத்திரியை அவன் இவன் என விளிப்பதற்கு யார் உரிமை கொடுத்தார்?

முதலில் ஒருவரின் தனிப் பட்ட பிரச்சனையை வைத்துக் கொண்டு விவாதம் செய்வதே தவறு... ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற கதையாகி விடும்...

அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசியதாக கூறுவது, அவர் இருவருக்கும் நடுவில் உள்ள பிரச்னை...

Link to comment
Share on other sites

7 hours ago, மியாவ் said:

முதலில் ஒருவரின் தனிப் பட்ட பிரச்சனையை வைத்துக் கொண்டு விவாதம் செய்வதே தவறு... ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற கதையாகி விடும்...

அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசியதாக கூறுவது, அவர் இருவருக்கும் நடுவில் உள்ள பிரச்னை...

ஒருவரின் தனிப்பட்ட விடயம் பொதுமேடைக்கு பகிரங்கப்படுத்தப்பட்டால் எல்லோரும் பல மாதிரிகதைக்கத்தான் செய்வார்கள். அது உலக வாடிக்கை. பொது இடங்களில் அவன் இவன் என்று விளிப்பது சம்பந்தப்பட்டவருக்குத்தான் அவ மரியாதை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @goshan_che உங்களுக்கு ஊரிலிருந்து வரும் பொருட்கள் Food Grade bags இல் பொதி செய்யப்பட்டனவா? நிச்சயமாக இல்லை. இவை கூட நோய்களுக்கான காரணியாக அமையலாம். மேலும் சிறீலங்காவில் ஓர்கானிக் பயிர்ச் செய்கை என்றால்  இரசாயனக் கிருமிநாசினிகள் பாவனையற்று விவசாயம் செய்தால் போதும் என்ற நிலையே காணப்படுகிறது. ஆனால் மாட்டு எரு பயன்படுத்தப்பட்டால் மாட்டின் உணவு கூட ஓர்கானிக் ஆக இருத்தல் வேண்டும். அதேபோல் தாவரக் கழிவுகள் பயன்படுத்தப்படும் போது அந்த தாவரங்கள் ஓர்கானிக் முறையில் வளந்திருக்க வேண்டும். இது ஓர் சங்கிலித் தொடர்…. 100% ஓர்கானிக் உங்களுக்கு பாரிய விவசாயத்தில்  கிடைக்காது.  
    • மிக்க நன்றி, உங்கள் ஆழமான கருத்துக்கு  "அறை வாங்கினேன் மறு கன்னத்திலும் ஏசுவே இனி என்ன செய்ய? குறை கூறும் சமூகத்தில் இருக்கும் வரை  ஏசுவே இனி என்ன செய்ய? கறை பிடித்த வம்பு பேசு பவர்களால்  ஏசுவே  நிம்மதி இழந்தாளே என்னவள்? சிறை வாழ்வு கொண்டு நான் இங்கு  ஏசுவே நிம்மதியைத் தேடுகிறேன்?"    
    • "The House of Representatives voted overwhelmingly to legalize same-sex marriage. The bill now goes to Thailand’s Senate. This would make Thailand the first country or region in Southeast Asia to pass such a law and the third in Asia, after Taiwan and Nepal. Mar 27 / 28, 2024 [CBC News, The new york times, The diplomat ::Asia, : AL JAZEERA .. etc ]" "ஒருபால் திருமணம்" / பகுதி 04  [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக் களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன்  விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும் கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்]   விவசாய சமுதாயம் உலகில் முதல் எழுச்சி பெறும் பொழுது, உதாரணமாக, சுமேரியாவில், சமுதாயம் ஒரு நிலையான, ஓர் இடத்தில் தொடர்ந்து வாழக்கூடிய அமைப்பாக மாறியது. அதனால், குடும்ப வரிசையின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நிலையான சமூக அமைப்பை அந்த சமூகம் கோரவேண்டிய சூழ்நிலை உருவாகியது [the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability]. அதாவது திருமணத்தின் முதன்மை நோக்கம் உயிரியல் ரீதியாக அது அவரின் குழந்தை என்பதை உறுதிப் படுத்துவதே ஆகும் [to ensure that the man’s children are biologically his].   எனவே, சுமேரியாவின் தொடர்ச்சியான பண்டைய பாபிலோனில் [Babylon] பாலியல் உண்மையில் மிகவும் தாராளமாக பரந்த கொள்கையுடன் இருந்தாலும், அது ஒற்றை நபர்களுக்கு [single persons] மட்டுமே அங்கு காணப்பட்டது. ஆனால், திருமணம் ஒரு சமூக செயல்பாடாக, கடுமையாக, நெகிழ்வு தன்மையற்று கட்டுப்படுத்தப்பட்டது [marriage was rigidly stiff and controlled, as a social function]. சுமேரியன் காதல் பாடல்கள் இவ்வற்றை உறுதி படுத்துகின்றன. உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக காட்டலாம்.   “உங்கள் வயிறு நிரம்பட்டும் , உங்கள் உடைகள் சுத்தமாகட்டும் , உங்கள் உடல், தலை கழுவட்டும்; இரவும் பகலும் மகிழுங்கள், ஆடி பாடி மகிழுங்கள்; உங்கள் கைபிடிக்கும் குழந்தையை பாருங்கள், உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழட்டும் ! இதுதான் மனிதர்களின் விதி”   “Let your belly be full, your clothes clean, your body and head washed; enjoy yourself day and night, dance, sing and have fun; look upon the child who holds your hand, and let your wife delight in your lap! This is the destiny of mortals.”   இந்த பாடல் வரிகள் பாபிலோனியர்களின் காதல் பற்றிய எண்ணத்தை எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. ஆனால் இந்த 5000 ஆண்டு எண்ணம், இன்றைய எண்ணத்தில் இருந்து பெரிய வேறுபாடு ஒன்றையும் காட்டவில்லை. உதாரணமாக அன்றைய இன்னும் ஒரு பாடல் ஒன்று :   “தூக்கமே களைந்து விடு என் கைகள் காதலியை தழுவட்டும் ! நீ என்னுடன் பேசுவதால், நான் மடியும் மட்டும் இதயம் பூரிக்கும்! என் அன்பே, உன்னை நினைத்து நேற்று இரவு இமைகள் மூட மறுத்ததால் இரவு முழுவதும் விழித்திருந்தேன்!"   “Sleep, begone! I want to hold my darling in my arms! When you speak to me, you make my heart swell till I could die! I did not close my eyes last night; Yes, I was awake all night long, my darling, thinking of you.”   என்று கூறுகிறது. குழந்தைகளின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய, ஒரு அமைப்பு ஒன்றை எவராவது வடிவமைக்க வேண்டின் அது கட்டாயம் அதிகமாக இரு பெற்றோர் அமைப்பு ஒன்றுக்கே வர நேரிடும். இது குழந்தைகளுக்கு இரண்டு பெரியவர்களின் நேரம் மற்றும் பணம் போன்றவற்றை அடையக்கூடிய வசதி இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்ல, தரமான பெற்றோர்சார்ந்த இயல்புகளையும் அவர்கள் அனுபவிக்கக் கூடிய ஒரு பொருத்தமான சூழ்நிலையையும் அவர்களுக்கு வழங்குகிறது [it also would provide a system of checks and balances that promoted quality parenting].   இங்கு நீங்கள் கவனிக்கக் கூடிய தன்மை என்னவென்றால், இரு பெற்றோர்களும், அந்த பிள்ளையின் உயிரியல் பெற்றோர் என்பதால், கட்டாயம், அதிகமாக, அவர்கள் குழந்தையுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பதுடன், அந்தக் குழந்தைக்காக தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள். அது மட்டும் அல்ல, யாராவது ஒரு பெற்றோர் குழந்தையை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய சாத்தியத்தை குறைக்கிறது. நீங்கள் மனித வரலாற்றை நுணுக்கமாக பார்த்தால், பழமையான கலாச்சாரத்தில், திருமணம் என்பது, மனித இனப்பெருக்கத்தின், ஒரு தர்க்கரீதியான நீட்டிப்பாகும் [Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction]. எனவே, குடும்பமும் குடும்பங்களை சுற்றி அமைக்கப்பட்ட சமுதாயமும் நிலைத்து உயிர்வாழ்வதற்கு இது உதவுகிறது.   எப்படியாகினும், கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன.   நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது. உதாரணமாக, எம்மை இறப்பு பிரிக்கும் மட்டும் ["till death do us part"] என்ற அர்ப்பணிப்பு இன்று இல்லை. மேலும் அவர்கள் குடும்பமாக இருந்தாலும், தனித்தனியாக அல்லது வெவேறாக பல விடயங்களை கையாள முடியும். எனவே உங்கள் துணையை பெரிய கட்டுப்பாடுகள் அற்று தேர்ந்து எடுக்க முடியும். உதாரணமாக ஒரு பால் துணை.   ஆனால் என்னை பொறுத்த வரையில், ஒரு பால் கூட்டுக்கும் 'திருமணம்' என்று அழைப்பது தவறு என்று எண்ணுகிறேன். ஏன் என்றால் அதற்கு ஒரு தனித்துவமான நீண்ட காலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்து உண்டு.   மேலும் marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும் திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம்.   இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony = matri + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood].   பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும். அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம்.   அல்லாவிட்டால் ஒரு குழப்ப நிலை மட்டும் அல்ல மனித சமுதாயமே தேங்கும் நிலைக்கு வரலாம் ?     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  முற்றிற்று   "same-sex marriages" / Part 04     [You may have different opinions / beliefs from me. Your "comments" / "Answers" for any of my questions with facts and statistics as well as reasons concerning relevant issues are welcome. This will improve our understanding / knowledge further as well as correct our thoughts / actions. Please note that, I am not criticised any particular person / belief, only sharing my thought.]     With the introduction of agricultural civilisation, Such as Sumeria, the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability, in other words the primary purpose of the marriage is to ensure that the man’s children are biologically his. So, While sexuality in ancient Babylon was actually extremely liberal, that was only for single persons, and marriage was rigidly stiff and controlled, as a societal function.   `Sumerian love songs’ also attests to the commonality of deep romantic attachment between couples. In The Epic of Gilgamesh (dates back to Ancient Sumer), one of the first surviving written works of the human race itself, the main character can be quoted as saying:   “Let your belly be full, your clothes clean, your body and head washed; enjoy yourself day and night, dance, sing and have fun; look upon the child who holds your hand, and let your wife delight in your lap! This is the destiny of mortals.”   This line from The Epic of Gilgamesh paints a clearer picture of what the Babylonians thought of love. But love in Ancient Mesopotamia wasn’t at all that different from what it is today, also, as so writes a poet nearly 5,000 years ago:   “Sleep, begone! I want to hold my darling in my arms! When you speak to me, you make my heart swell till I could die! I did not close my eyes last night; Yes, I was awake all night long, my darling, thinking of you.”   Again during the third Tamil Sangam. We found marriage as a System in the ancient Tamil Grammar Book, Tholkappiyam, written by Tholkappiar, around 700 BC. Here he say "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் யர் யாத்தனர் கரணம் என்ப (1091)", meaning: He states that the society was being ruined by indiscriminate copulation, involving Lies, frauds. Hence the learned organised the system of marriage.   The historian Bertman writes, Among both the Sumerians and the Babylonians marriage was fundamentally an arrangement designed to assure and perpetuate an orderly society. Its prime intent was not only companionship but procreation; not only personal happiness in the present but communal continuity for the future. So marriage, as man & woman come together to form a family, is part of the culture more than 5000 years. Above all, Sumerians [ancestors of Tamils ?] were the first inventor of marriage system, as other first inventions such as writings,The Wheel, plow, sailboat, Agriculture and Irrigation.   A large and growing body of scientific evidence indicates that the intact, married family is best for children. If we were asked to design a system for making sure that children's basic needs were met, we would probably come up with something quite similar to the two-parent ideal. Such a design, in theory, would not only ensure that children had access to the time and money of two adults, it also would provide a system of checks and balances that promoted quality parenting.   The fact that both parents have a biological connection to the child would increase the likelihood that the parents would identify with the child and be willing to sacrifice for that child, and it would reduce the likelihood that either parent would abuse the child.   Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction and that society organised around the family to survive and for society to survive. It created a recognition of the idea of couples committing for life and raising children together and sharing the struggles of survival.   In general, these social rules had more benefits to society and helped our cultures and species survive. However in the last 100 years, the human race has dramatically changed. No longer we are tribes of hunter-gatherers or agriculturally based communities. We are a society of high technology. Now have telephones, radio, TV, airplanes, trains, cars, advanced medicine, genetic engineering, the Internet, birth control, abortion, cloning, test tube babies, and other things that affect society in general. We live twice as long as people did 200 years ago. In many significant ways, we are not really the same species of human as we were then.   Yes, genetically we are almost identical compared to 200 years ago, but with our new technologies, and the resulting cultural changes, there are a lot of significant differences. And those differences have made changes that directly affect marriage. For example, "till death do us part" is a lot longer commitment than it used to be. Also there is nothing that restricts individuals from committing to each other and deciding between themselves, that they are a couple, and that they intend to share their lives together. This includes people of the same sex as well as marriages between more than two people. These personal commitments are between individuals and we have freedom to choose whom we live with and whom we commit to without the State or society interfering in our personal lives.   Having said all this, my personal belief is that the title of marriage, and the word marriage, refers to the union of one man and one woman and that the word properly belongs to the heterosexual community. I base this on the biological fact of sexual reproduction and thousands of years of tradition and the biological family as the basis for my opinion.   If we open up the definition of marriage to include same sex union, then why limit it to two people? Why not three, four, or five people. Why not let people marry their pets? After all, your cat is much more likely to make a life long commitment to you than a human will and can be trusted to be more loyal and respectful of the relationship. Whatever two women / men choose to do in their private lives is nobody’s business but their own. Married love is not the same as the love between parent and child, or the love and affection between brother and sister, or other deep and lasting friendships. Sexual intercourse — not simply sexual stimulation — remains an essential element of marriage.   Where sexual intercourse is not possible in principle, marriage cannot exist. Same-sex partnerships, like friendships, can be deep and lasting, but they cannot be marriages because they lack the capacity for conjugal union. We see this truth clearly in the very etymology of the word marriage.   The word "MARRY" is from Latin maritus (married), from Indo-European “root” mari (young woman). French word for “mother” is mere or Matri [matrimony=matri+mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood.].   The natural outcome of conjugal relations is that the woman becomes a mother, thus the connection between the words “conjugal” and “marriage.”   That is why we have no problem with civil partnerships, a new institution with a new purpose for same sex couples and any others.     [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]   Ended         
    • முத‌ல் 5 இட‌த்தின் நிக்கும் அணிக‌ளில் 4அணிக‌ள் உள்ள‌ போகும்  மீத‌ம் உள்ள‌ அணிக‌ள் வெளிய‌..............................   ஜ‌பிஎல்ல‌ கோப்பை தூக்காத‌ அணிக‌ள் என்றால்   வ‌ங்க‌ளூர் ப‌ஞ்சாப் டெல்லி ல‌க்னோ இந்த‌ 4 அணிக‌ள்......................................    
    • வாழ்க்கை என்பது அவ்வளவு இலகுவானதல்ல. நாங்கள் இருவர் தான். எந்த மூன்றாவது நபருடைய உட்புகுதலும் கருத்துக்களும் வாழ்வை திரிபு படுத்திவிடும். அடுத்த வீட்டை பார்த்து எப்பொழுது நாம் எம் வாழ்வை அமைத்துக் கொள்ள முயல்கிறோமோ அத்துடன் எம் வாழ்வு கலைந்து விடும். அவனவன் கவலைகளை அவரவர் தலையணைகளே அறியும். நன்றி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.