Jump to content

சுழியோடி மீன் தேடும் கடலவன்


Recommended Posts

சுழியோடி மீன் தேடும் கடலவன்

 
சுழியோடி மீன் தேடும் கடலவன்
 

அந்­தக் கோவில் விசா­ல­மா­னது. அதன் அரு­கில் அதற்­கே­யு­ரித்­தான கேணி அமைந்­தி­ருந்­தது. அது தனது சுற்­றுப்­பி­ர­கா­ரங் க­ளைப் படிக்­கட்­டுக்­க­ளைக் கொண்டு எல்­லைப் படுத்­தி­யி­ருப்­ப­தைப்­போ­லவே தனது குறைந்த ஆழத்­தை­யும் நேர்த்­தி­யான தரை­ய­மைப்­பால் சீரா­கக் கொண்­டி­ருக்­கின்­றது.

சுற்­றி­ய­மைந்­தி­ ருக்­கும் உயர்ந்த படிக்­கட்­டில் நின்று பார்க்­கை­யில் சல­ன­மற்ற அந்த நீர் நிலை கொண்­டி­ருக்­கும் அமை­தி­யான அழகு மனதை மௌனிக்­கச் செய்­யும். இவ்­வ­ள­வை­யும் தன்­ன­கத்தே கொண்டு மிளிர்ந்­தது பிர­ம­பு­ரம், வெங்­குரு, தோனி­பு­ரம், வேணு­பு­ரம், பூந்­தா­ரம், சிர­பு­ரம், புற­வம், சண்பை, காழி, கழு­ம­லம், கொச்­சை­வ­யம் எனும் பல பெயர்­க­ளைக் கொண்டு அழைக்­கப்­ப­டும் சீர்­கா­ழிப்­ப­தி­ யே­யா­கும். இது இந்­தி­யா­வி­லி­ருந்து பக்தி வளர்க்­கும் சிவத்­த­லம்.

முன்­பொரு காலத்­தில் அவ்­வி­டத்­தில் சிவ­பா­த­வி­ரு­ த­யர் என்­றொரு அந்­த­ணர் இருந்­தார். அவர் தன்­னு­டைய பிள்ளை சகி­தம் சீர்­கா­ழித் தலக் கேணிக்கு நீரா­டச் சென்­றார். பிள்­ளை­யைக் கேணிக் கட்­டில் இருத்­தி­விட்டு, நீராட இறங்­கி­ய­வர், நீருக்­குள் மூழ்­கித் தலை நனைத்து முழு­கி­னார். நீருக்­குள் மூழ்­கி­ விட்­ட­தால் சிறிது நேரத்­துக்­குத் தன்­னு­டைய தந்­தை­யைக் காணாத அந்­தக் குழந்தை வீறிட்டு அழு­தது.

‘‘அம்மா… அப்பா…’ ’என்று தொடர்ந்­தும் கண்­ணீர் விடத் தொடங்­கி­யது. கதை தொடர்­கி­றது….

தரம் ஒன்­றா­கவோ! இரண்­டா­கவோ! இருக்க வேண்­டும். கறுப்பு, வெள்­ளைப் படம் பதிக்­கப்­பட்ட சைவ சம­ யப் பாடப்­புத்­த­கத்­தி­லி­ருந்து மன­தில் ஒட்­டிக்­கொண்­ட இந்­தக் கதை­தான் இப்­போது பொறி தட்­டு­கி­றது. கார­ணம்…, இங்கு…, இந்­தப் பரந்த ஆழக் கட­லுக்­குள் மூழ்­கிப்­போன ஒரு­வரை நெடு­நே­ர­மா­கி­யும் காண­வில்லை…!

17-623x1024.jpg

இனிச் சம­கா­லக் கதைக்கு வரு­கி­றேன். பண்­ணைப்­பா­லம் தாண்டி மண்­டை­தீ­வுப் பாலத்தை அண்­மித்­த­தும் கண்­ணில் அகப்­பட்­ட­வர் ஒரு அபூர்­வ­மான மனி­த­ரா­கத் தெரிந்­தார். என்­னவோ தெரி­ய­வில்லை அவ­ரைத் தொடர்ந்து பார்க்க வேண்­டும் போல­வும் உரை­யாட வேண்­டும் போல­வும் விருப்­பம் ஏற்­பட்­டது.
அந்த விருப்­பத்­தின் உந்­து­த­லால் மெது­வா­கச் சென்று கொண்­டி­ருந்த எனது மோட்­டார் சைக்­கிளை அவர் அரு­கில் நிறுத்­தி­னேன்.

அவர் வியப்­பு­டன் என்­னைப் பார்த்­தார். அவரை விட ஆர்வத்­து­டன் நான் அவ­ரைப் பார்த்­தேன்.

முறுக்கேறி வைரம் பாய்ந்த உடம்பு. கறுத்து வலித்­தி­ருந்­தது. எந்த ‘ஜிம்­மு’க்­கும் போய் அத்­த­கைய கட்­டுக்­கோப்­பான உடம்­பைக் கொண்டு வர முடி­யாது என்­பது உண்மை. அவ­ரு­டைய வய­தைக் கேட்க வேண்­டும் போலி­ருந்­தது.

‘‘அண்ணே உங்­க­ளோட கதைக்­க­லாமோ…?’’

பதி­லுக்கு மெல்­லச் சிரித்­தார்.

‘‘என்ன விச­யம் தம்பி’’

‘‘சும்மா…’’

‘‘அப்ப பொறும்… நான் ஒருக்காக் கட­லுக்க போட்டு வாறன்’’ என்­ற­வர் வீதி­யி­லி­ருந்து இறங்­கிக் கடலை நோக்கி நடந்­தார்.

வீதியை அண்­மித்த அந்­தக் கடல் பகுதி சற்று ஆழம் கூடி­ய­தா­க­வி­ருந்­தது. நீரோட்­ட­மும் வேகம் கொண்­டி­ருந்­தது. அவர் அந்த ஆழ் பகு­தியை உன்­னிப்­பா­கக் கவ­னித்­துக் கொண்­டி­ருந்­தார். நான் கடல் மீதும் வீதி­யில் செல்­லும் வாக­னங்­கள் மீதும் அவற்­றுக்­குள் இருக்­கும் மனி­தர்­கள் மீதும் இந்த மனி­தர் மீதும் எனது பார்­வையை மாற்றி மாற்­றிக்­கொண்­டி­ருந்­தேன்.

கரை­யில், கற்­க­ளின் மேல் இருந்­த­வர் சிறிது நேரத்­தில் தன்னை ஆயத்­தப்­ப­டுத்­திக் கொண்­டார். நீர் நிலைக்­குள் மெல்ல நழு­வ­லா­னார். அவ­ரு­டைய கையில் நீண்ட, கூரிய கம்பி ஒன்று இப்­போது!

நீரைச் சல­னப்­ப­டுத்­தா­மல் நீரின் மேற்­ப­கு­தி­யில் முகத்­தைப் புதைத்து சிறிது நேரம் அள­வ­ளா­வி­னார். பின்­னர் உள்ளே புதைந்து போனார். நீரோடு நீரா­கிப் போனார். உள்ளே போன­வரை நெடு­நே­ர­மா­கி­யும் காண­வில்லை. அவர் எப்­போது திரும்­ப­வும் தோன்­று­வார்…!
போன­வர் போன­து­தான் நிமி­டங்­கள் கரைந்­தன ஆளைக் காண­வில்லை. தந்­தை­யைக் காணாத சம்­பந்­தர்போல என்­னால் தேவா­ரம் பாட முடி­ய­வில்லை. பயம் தான் ஏற்­பட்­டது. எங்கே தொலைந்­தார் இந்த மனி­தர்…? தேவை­யில்­லா­மல் ஒரு சிக்­க­லுக்­குள் அகப்­பட்­டு­விட்­டேனோ…! நான் கலங்­கித் துடிக்க அவர் நீருக்­குள்­ளி­ருந்து வெளியே வந்­தார்.

அவ­ரு­டைய கையி­லி­ருக்­கும் கம்பி ஒரு பெரிய மீனின் வயிற்­றுக்­குள் புதைந்­தி­ருந்­தது. வீதிக் கரைக் கற்­க­ளில் ஏறி உடலை உத­றிக் கொண்­ட­வர். தான் அணிந்­தி­ருந்த காற்­சட்­டை­யின் பின்­ப­கு­திக்­குள்­ளி­ருந்து அள­வான இரண்டு மீன்­களை வெளியே எடுத்­தார். அவற்­றின் வயிற்­றுப் பகு­தி­க­ளி­லும் கம்பி தைத்த அடை­யா­ளம். தொடர்ந்­தும் அவர் தனது உடலை உத­றித் தேகத்தை உலர்த்­தி­னார்.

‘‘அண்ணே…! உங்­க­ளுக்கு எத்­தின வயசு…?’’ நான் தொடர்ந் தேன்.

‘‘57’’
சிறிது நேரத்­தில்… ‘‘ஏன் தம்பி…?’’ என்­றார்.

‘‘சும்மா கேட்­ட­னான் ஐயா’’ என்று கதையை முடித்­துக் கொண்­டேன். கார­ணம் ஆச்­ச­ரி­யம். இவர் 57 வயதான ஒரு வயோ­தி­ பரா!

நீரில் நனைந்த தனது உடலை உலர்த்­து­வ­தற்­கான முயற்­சி­யில் அவர் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்­தார். அங்­கும் இங்­கு­மா­கத் தனது உட­லைத் திருப்­பு­வ­தும், குனி­வ­தும், நிமிர்­வ­து­மா­கத் தொடர்ந்­தது அவ­ரு­டைய முயற்சி. அதைக் கவ­னிக்­கும்­போது ஆண­ழ­கர் தேர்­வுக்­காக மேடை­யே­றித் தமது வெளிப்­பா­டு­க­ளைப் பார்­வை­யா­ளர்­க­ளுக்­கும் நடு­வர்­க­ளுக்­கு­மா­கப் பெரும் சிர­மப்­பட்டு முன்­வைத்­துச் செல்­லும் நாகரீக ஆட­வர்­கள் மனத்­தி­ரைக்­குள் வந்­து­போ­யி­னர். நகைத்­துக் கொண்­டேன்.

அவ­ரு­டைய உடல் வாகு கடின உழைப்­பால் வலிந்து இறு­கிப்­போய்க்­கி­டந்­தது. ‘சிக்ஸ் பாக்’ என்று சொல்­லிக்­கொண்டு சொகுசு வேலை­யு­டன் உடற்­ப­யிற்­சிக்­கா­கக் காலத்­தை­யும் பணத்­தை­யும் செலவு செய்­த­படி அலை­யும் இன்­றைய இளை­ஞர்­க­ளும் மன­துக்­குள் இடை­யி­டையே வந்து நகைப்­புக் காட்­டி­னர்.

‘‘மீன் பாடு எப்­பிடி ஐயா?’’

‘‘முந்தி மாதிரி இல்­லத்­தம்பி. இப்ப சரி­யாக் குறைஞ்சு போச்­சுது. சீவி­யத்­துக்­குக் கஸ்­ர­மாத்­தான் கிடக்கு. அந்­தக் காலத்­தில ஐஞ்­சாறு பேர் சேர்ந்து மீன் குத்­து­ற­துக்­குப் போன ஏத்­து­ற­துக்கு லொறிக்­கா­ரர் தேடி வரு­வாங்­கள்.

இப்ப அப்­பி­டி­யில்லை. கட­லில மீன்­வ­ளம் குறைஞ்­சா­லும் என்­னட்ட ஆப்­பி­டுற மீன் ஒண்­டும் தப்ப ஏலாது…’’ தன்­னைப் பற்­றிப் பெரு­மைப்­பட்­டும் கொண்­டார். அதை என்­னால் ஏற்­றுக் கொள்­ள­வும் முடிந்­தது. அவ­ரு­டைய செயலே அதற்கு எடுத்­துக்­காட்டு.

‘‘57 வய­சி­ல­யும் இந்­தத் தொழி­லச் செய்­யு­றி­யள். கஸ்­ரமா இல்­லையா?’’

‘‘பழ­கிப் போச்­சுது. இப்­பத்­தெ­யத் தொழி­லா­ளி­மா­ருக்கு வசதி வாய்ப்­பு­கள் ஏரா­ளம். என்ன மாதி­ரிச் சுழி­யோ­டித் தொழில் செய்­யி­றவ எங்­கா­லும் ஒண்டு ரெண்டு பேர் தான் இப்ப இருப்­பி­னம். வயசு போச்­சுதே தவிர நான் அப்­பி­டியே தான் இருக்­கி­றன். இன்­னும் ரெண்டு, மூண்டு வரு­சத்­தில எனக்­குப் பென்­சன் தரு­வாங்­கள்’’ என்­றார் நம்­பிக்­கை­யு­டன் அந்­தக் கடின உழைப்­பாளி. என்­னு­டன் தொடர்ந்­தும் நேரத்­தைச் செலவு செய்­தால், அவ­ரு­டைய சீவி­யம் தடைப்­பட்­டு­வி­டும் என்­பதை உணர்ந்­தேன். அவ­ரு­டைய நிலை­யும் அப்­ப­டித்­தான்.

அந்த இரும்பு மனி­தர் தான் பிடித்­து­வந்த மூன்று மீன்­க­ளை­யும் நீருக்­குள் அமிழ்த்­திக் கற்­கா­ளால் கடி­வா­ள­மி­டப்­பட்­டி­ருந்த அந்த வலைப் பைக்­குள் போட்­டார். பழை­ய­படி கற்­க­ளின் மேல் அமர்ந்து கட­லுக்­குள் கவ­னிக்­க­லா­னார்…

http://newuthayan.com/story/19029.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.