Sign in to follow this  
நவீனன்

அ .தி .மு .க வால் மலருமா தாமரை?

Recommended Posts

அ .தி .மு .க வால் மலருமா தாமரை?

 

தேசிய கட்­சி­களை உள்ளே விடாமல் 20 வரு­டங்­க­ளுக்கு மேலாக கோலாட்சி நடத்­திய திரா­விட கட்­சி­களை உடைத்து தமி­ழ­கத்தில் தன் கால்­களை வேரூன்ற பெரும் பிர­யத்­த­னத்தை பா.ஜ.க. தற்­போது முன்­னெ­டுத்து வரு­கின்­றது. ஜெய­ல­லிதா மற்றும் கரு­ணா­நிதி என்ற இரு அரண்கள் இருக்கும் வரையில் தமி­ழ­கத்தில் எந்த தேசிய கட்­சி­யாலும் கால் ஊன்ற முடி­ய­வில்லை.. குறிப்­பாக பா.ஜ.க.வினால் முடி­ய­வில்லை.. இந்­நி­லையில் தற்­போது இந்­தி­யாவின் அனைத்து மாநி­லங்­க­ளிலும் வேறூன்ற துடிக்கும் பா.ஜ.க. தமி­ழ­கத்தில் தன் கால்­களை பதிக்க பகீ­ரத பிர­யத்­தனம் செய்­து­கொண்­டி­ருக்­கி­றது.

கடந்­த ­கா­லங்­களில் தொடர்ச்­சி­யாக பல வரு­டங்கள் மத்தியில் காங்­கிரஸ் ஆட்­சியில் இருந்த போதிலும் ஒரு செயற்­தி­றன்­மிக்க சிறந்த தலைவர் அக்­கட்­சியில் இல்லை. சோனியா காந்தி தலை­வி­யாக இருந்­தாலும் அவர் இத்­தா­லியர் என்ற கார­ணத்­தினால் அவ­ருக்கு பிர­த­ம­ராகும் வாய்ப்பு கிட்­டாமல் போனது. இதனை தொடர்ந்து பொரு­ளா­தார பிரச்­சினை, தீவி­ர­வாத தாக்­கு­தல்கள், இலங்கை போர் மற்றும் பல்­வேறு ஊழல்­களில் காங்­கிரஸ் சிக்­கி­ய­மையால் கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் படு தோல்­வியை சந்­தித்­தது. இதேவேளை அத் தேர்தலில் மோடியின் வீரி­ய­மான பேச்சு இளை­ஞர்கள் தொட்டு அனை­வ­ரையும் கவர்ந்­தது மட்டுமல்­லாமல் அவ­ரது சாதா­ரண குடும்ப பின்­னணி மற்றும் சமூக வலைத்­த­ளங்­களில் அவ­ரது செயற்­பா­டுகள், தேசி­ய­வாதம் என்­பன இயல்­பா­கவே அவர் மீது ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த 2014ஆம் ஆண்டு பாரா­ளு­மன்ற தேர்­தலில் வெற்றிபெற்று பா.ஜ.க. ஆட்­சிக்கு வந்­தது. நரேந்­திர மோடி இந்­தி­யாவின் பிர­த­ம­ராக பத­வி­யேற்றார். அவர் பத­வி­யேற்­ற­தி­லி­ருந்து பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்கை உள்­ளிட்ட பல சர்ச்­சைக்­கு­ரிய திட்­டங்­களை செயற்­ப­டுத்தி வரு­கின்றார். கறுப்பு பணம் சுத்திகரிப்பால் நாட்டில் சாதா­ரண மக்கள் கடும் சிர­மத்­துக்­குள்­ளா­கினர். வங்கிகளின் வாயில்களில் காத்து நின்று பலர் மயக்­க­ம­டைந்­தனர், உயி­ரி­ழந்­தனர். தற்­போது ஜீ.எஸ்.டி. பிரச்­சினை மற்றும் பசு பாது­காப்பு என்ற பெயரில் சாதா­ரண அப்­பா­விகள் சாக­டிக்­கப்­ப­டுதல் இந்­துத்­துவம் தலை­தூக்கல் என்­பன மோடி மீது அதி­ருப்தி கணை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இத­னை­ய­டுத்து அண்­மையில் நடந்த 5 மாநிலங்களுக்கான சட்­ட­சபை தேர்­தலில் பா.ஜ.க. தோல்­வி­ய­டையும் என்றே அனை­வ­ராலும் கரு­தப்­பட்­டது. ஆனால் யாரும் எதிர்­பார்க்­காத வகையில் உத்­த­ர­பி­ர­தேசம் மற்றும் உத்­த­ரகாண்ட் மாநி­லங்­களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்­றது. மணிப்பூர், கோவா உள்­ளிட்ட ஏனைய மாநி­லங்­களில் பா.ஜ.க.வை விட காங்­கிரஸ் அதிக இடங்­களை கைப்பற்­றிய போதிலும் கூட்­டணி அமைத்து பா.ஜ.க. மாநி­லங்­க­ளிலும் ஆட்­சியை பிடித்­துக்­கொண்­டது. இவ் வெற்­றி­யோடு அது நிற்க வில்லை. நிதிஷ் ­த­லை­மையில் பீஹாரில் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்த காங்­கிரஸ் கூட்­டணி ஆட்­சி­யையும் தன் இரா­ஜ­தந்­தி­ரத்தால் கலைத்து அங்கும் பா.ஜ.க. கூட்­டணி நிதிஷ் தலை­மையில் மீண்டும் ஆட்­சி­செய்ய வைத்­துள்­ளது. இதன் மூலம் இந்­தி­யாவின் அனைத்து மாநி­லங்­க­ளையும் பா.ஜ.க. மய­மாக்க வேண்டும் என்­பதே நோக்­க­மாக உள்­ளமை புரி­கின்­றது. அதா­வது காங்­கிரஸ் இல்­லாத இந்­தியா என்­ப­தல்ல பா.ஜ.க.வை தவிற வேறு எந்தக் கட்­சி­களும் இல்­லாத இந்­தியா என்­ப­துதான் மோடி உள்­ளிட்ட பா.ஜ.க. தலை­மை­களின் எண்­ண­மாக இருக்­கி­றது. அந்த எண்­ணத்தை நிறை­வேற்ற ஒவ்­வொரு மாநி­லத்­திலும் ஒரு அணு­கு­மு­றையை கடைப்­பி­டிக்­கி­றார்கள். தொடர்ச்­சி­யாக எதிர்க்­கட்சி தலை­வர்கள் மீது வரு­மா­ன­வ­ரித்­துறை, சி.பி.ஐ. விசாரணை போன்­ற­வை­களை வைத்து வரு­மான வரி­சோ­தனை ஊழல் என்று அவர்­களின் பிம்­பங்­களை சிதைப்­பது, சில ஊட­கங்­களின் உத­வி­யோடு பொது­வெ­ளியில் அவர்­களை சிதைப்­பது, கட்­சி­க­ளுக்குள் பிளவை உண்­டாக்­கு­வது, கட்­சி­களை உடைப்­பது, கைப்­பற்­று­வது என காஷ்மீர் முதல் புதுச்­சேரி வரை பா.ஜ.க. அத்­தனை கட்­சி­க­ளையும் பதம் பார்க்­கி­றது.

மிக நுட்­ப­மாக அர­சியல் தலை­வர்கள் மீது இருக்கும் பல்­வேறு வகை­யான ஊழல் குற்­றச்­சாட்­டு­க­ளையும் பிர­தான பிரச்­சி­னை­யாக பேசி அவர்­களை தனி­மைப்­ப­டுத்த முயல்­கி­றது. மற்ற கட்­சி­களின் ஊழல்­களை சத்­த­மாகப் பேசு­வதால் பா.ஜ.க. தன்னை புனி­த­மாக கட்­ட­மைத்துக் கொள்­வ­தோடு மட்டுமல்­லாமல் மக்­க­ளிடம் அக்­கட்­சி­க­ளுக்கு இருக்கும் செல்­வாக்கையும் சிதைக்­கின்­றது.. தற்­போது மேற்கு வங்கம் மற்றும் தென்­னக மாநி­லங்கள் மட்­டுமே பா.ஜ.க.வின் பிடியில் சிக்­காமல் நிமிர்ந்து நிற்­கின்றன அங்­கும் பா.ஜ.க. தன் கால்­களை பதிக்க தொடர்ந்து முயற்­சித்து வரு­கின்­றது. அந்­த­வ­கையில் இப்­போது தன் காய்­களை அது நகர்த்தும் பிர­தான இடம் தமி­ழகம். கரு­ணா­நிதி மற்றும் ஜெய­ல­லிதா இல்­லாத தமி­ழகம் அவர்­க­ளுக்கு சாத­க­மாக மாறு­வ­தற்­கான அனைத்து காய்­ந­கர்­த்தல்­களும் சிறப்­பாக செய்­யப்­பட்டு வரு­கின்­றன.. மர்­மங்கள், சர்­ச்­சைகள் நிறைந்த ஜெய­ல­லி­தாவின் மர­ணத்தை கண்டும் காணாமல் இருப்­பது கூட அத­னால்தான், ஜெய­ல­லிதா இருக்கும் வரை தமி­ழ­கத்தில் கால் ஊன்ற முடி­யாது என்­பது தெரிந்த விடயம். அவ­ரது மர­ணத்தை சாத­க­மாக்கி அ.தி.மு.க.வை பல துண்­டு­க­ளாக சித­ற­டித்த பங்கு பா.ஜ.க.வுக்கு அதி­கமே உள்­ளது.. இன்று எடப்­பாடி பழனிச்சாமி தலை­மையில், தின­கரன் தலை­மையில், பன்னீர் தலை­மையில், என கட்சி 3 துண்­ட­ங்களாக உள்­ளது. ஜெய­ல­லி­தா­வுக்கு பின்னர் கட்சி பீடத்தில் சசி­கலா வர துடித்தார் உண்­மையில் ஜெய­ல­லிதா அள­வுக்கு அவ­ரிடம் எந்தத்தகு­தி­யும் இல்லை. எனினும் கட்சி என்ற கட்­ட­மைப்பு தொடர்ந்து காப்­பாற்ற அ.தி.மு.க. வுக்கு ஒரு தலைமை தேவை. அந்த தலைமை சொல்­வதை ஏனை­ய­வர்கள் கேட்­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும். அதனால் சசிகலாவை தொடர்ந்து தின­கரன் அவ்­வி­டத்­துக்கு வருவதற்கு முயற்­சித்தார். அவரை இரட்டை இலைக்கு இலஞ்சம் கொடுத்த­தாக கைது செய்­தனர். ஆனால் இலஞ்சம் வாங்­கிய அதி­கா­ரிகள் தொடர்பில் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. பின்னர் அவர் மீது குற்றம் இல்லை என்று விடு­வித்­தனர். இது தின­க­ர­னுக்கு அரசியல் ரீதியாக அச்­சத்தை ஏற்­ப­டுத்த முன்­னெ­டுத்த விட­யமே..

அது போல எடப்­பாடி பழனிசாமி தரப்பை எடுத்தால் விஜ­ய­பாஸ்கர் உள்­ளிட்ட அமைச்­சர்கள் மீதான வரு­மான வரி­சோ­தனை ... அவர்கள் மீதான ஊழல் தொடர்­பி­லான வழக்­குகள் எடப்­பா­டி பழனிசாமியை அச்­ச­ம­டைய வைத்­தி­ருக்­கின்­றது.. 5 வருடம் ஆட்­சியில் இருக்க வேண்டும். எது நடந்­தாலும் மத்­திய அர­சுக்கு எதி­ராக வாய் திறக்­க­க்கூ­டாது என்ற நிலை­யி­லேயே எடப்­பா­டி பழனிசாமியும் ஏனைய அமைச்­சர்­களும் உள்­ளனர். பன்னீர் தரப்பை சொல்­வ­தற்கு எதுவும் இல்லை. அவர் அடிக்­கடி மோடியை சந்­தித்து வரு­வ­தோடு தர்­ம­யுத்தம் நட­த்­து­கின்றேன் என்­கிறார். ஆனால் அவ­ருக்கு எதி­ராக அவ­ரது சொந்த ஊர் மக்­களே கிணற்­றுக்­காக போராடி வரு­கின்­றனர். எடப்­பாடி பழனிச்சாமி, பன்னீர், தின­கரன் என்ற முத்­த­ரப்பும் தாங்கள் தான் அ.தி.­மு.க. என தம் அதி­கா­ரத்தை தக்­க­வைத்துக் கொள்ள முயற்­சிக்­கின்­றன. ஆனால் மத்­திய அரசின் பார்வை எப்­போதும் தங்கள் மீது உள்­ள­மையால் அதனை மீறி எத­னையும் செய்யும் துணிச்சல் அவர்­க­ளுக்கு இருப்­ப­தாக தெரி­ய­வில்லை.. தற்­போது அ.தி.­மு.க. வில் அதி­கார போட்டி தீவிரம் அடைந்­துள்­ளது. தின­கர­னையும் சசி­க­லா­வையும் பன்னீர் தரப்பு நீக்­க­வேண்டும் என்­கி­றது. ஆனால் சசி­க­லாவால் பதவி சுகங்­களை அனு­ப­விக்கும் எடப்­பாடி பழனிச்சாமி தரப்­பினால் தின­க­ரனை விலக்­குவோம் என்று கூற முடி­கின்­றதே தவிர சசி­க­லாவை பொதுச்­செ­ய­லாளர் இல்லை என்று கூற முடி­ய­வில்லை.

அத்­தோடு தின­க­ர­னுக்கு எதி­ராக எடப்­பாடி பழனிசாமி நடத்­திய தீர்­மான கூட்­டத்­தி­லேயே தின­க­ர­னுக்கு ஆத­ர­வான வெற்­றிவேல் எம்.எல்.ஏ. உள்­ளிட்டோர் பாதி­யி­லேயே எழுந்து ஓடி­விட்­டனர். தின­கரன், சசி­க­லாவின் தீர்­மானம் செல்­லாது என்று எடப்­பாடி பழனிசாமி தீர்­மானம் நிறை­வேற்­று­கையில் எடப்­பா­டி பழனிசாமிக்கு பதவி வழங்­கி­யதே நாம்.. நாங்கள் நினைத்தால் அவரது பத­வியையே பறிப்போம் என தின­கரன் பேட்­டிக்­கொ­டுக்­கின்றார். இவ்­வாறு அ.தி.மு.க.வுக்குள் உட்­கட்சி பூசல்கள் உக்கிரம­டைந்­துள்ள ­நி­லையில் தமி­ழக அர­சி­யலில் மிக பெரிய திருப்புமுனை ஒன்று உரு­வாக போவ­தாக தொடர்ந்து மத்­திய அரசின் தமி­ழக தலை­மைகள் கூறி­வ­ரு­கின்­றன.

 தமி­ழக முதல்­வ­ராக இருந்த ஜெய­ல­லி­தாவின் மறைவின் பின்னர் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமி­ழிசை மற்றும் மத்­திய அமைச்சர் பொன். இராதாகிருஸ்ணன் ஆகியோர் தெரி­விக்கும் கருத்­துக்கள் தொடர்ந்து தமி­ழ­கத்தில் நடை­பெ­று­வதை நாம் காண­மு­டி­கின்­றது. இதனை மெய்­ப்பிக்கும் வித­மாக காங்­கிரஸ் மாநில தலைவர் திரு­நா­வுக்­க­ரசர் கூட நகைச்­சு­வை­யாக கேரளா நம்­பூ­தி­ரிகள் மற்றும் பிர­பல ஜோதி­டர்­களை விட பெரிய ஜோதி­டர்கள் தமி­ழிசை மற்றும் பொன்னார் என்றும் அவர்கள் இரட்டை இலை­மு­டக்கம் ஆர்.கே. நகர் தேர்தல் என அனைத்­தையும் அது நடை­பெ­று­வ­தற்கு முன்­னரே துல்லி­ய­மாக தெரிவித்தனர் என கூறி­யி­ருந்தார். இது தமிழகத்தை பா.ஜ.க. கூர்ந்து கவனிக்கின்றது என்பதையே வெளிப்படுத்துகின்றது. இந்­நி­லையில் தமி­ழ­க­த்தில் தாமரை மலர போவ­தாக தமி­ழிசை கூறி வரு­கின்றார்.

அத்­தோடு ஜெய­ல­லிதா மறை­வுக்குப் பிறகு மத்­திய பா.ஜ.க. அரசின் கட்­டுப்­பாட்டில் அ.தி.மு.க. அரசு இருப்­ப­தாக பர­வ­லாக பேசப்­பட்டு வரு­கி­றது. அதனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் முதல்வர் பழ­னி­சா­மியும், ஓ.பி.­எஸ்.ஸும் பிர­தமர் நரேந்­திர மோடியை அடிக்­கடி சந்­தித்துப் பேசி வரு­கின்­றனர். கடந்த ஒன்­றரை மாதத்தில் மட்டும் 4 முறை மோடியை இவர்கள் சந்­தித்­துள்­ளனர்.

இந்தச் சூழலில் அ.தி.மு.க. இரு அணி­க­ளையும் இணைக்க பிர­தமர் மோடியும், பா.ஜ.க.தேசியத் தலைவர் அமித் ஷாவும் காலக்­கெடு நிர்­ண­யித்­துள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கின. இதற்­கி­ணங்­கவே முதல்வர் பழ­னி­சாமியால் துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ராக டி.டி.வி. தின­கரன் நிய­மிக்­கப்­பட்­டது கட்சி விதி­க­ளுக்கு விரோ­த­மா­னது. எனவே, அவரால் நிய­மிக்­கப்­பட்ட பொறுப்­புகள் செல்­லாது என தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் அ.தி.மு.க. இரு அணி­களும் இணை­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­ரித்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்ள டி.டி.வி. தின­கரன், கட்சி தனது கட்­டுப்­பாட்­டி­லேயே இருப்­ப­தாக தெரி­வித்­துள்ளார்.

இது­போன்ற பர­ப­ரப்­பான சூழலில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா எதிர்­வரும் 22, 23, 24 ஆம் திக­தி­களில் தமி­ழகம் வரு­கிறார். பா.ஜ.க. தலை­வ­ராக 3 ஆண்­டு­களை நிறைவு செய்­துள்ள அவர், பல்­வேறு மாநி­லங்­களில் பா.ஜ.க. ஆட்­சியை மலரச் செய்­துள்ளார். அவ­ரது நட­வ­டிக்­கையால் பல்­வேறு கட்­சி­களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர்க்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் தமி­ழ­கத்தில் பா.ஜ.க. வளர்ச்சி குறித்து ஆலோ­சிப்­ப­தற்­காக அவர் தமி­ழகம் வரு­கிறார். அதற்கு இன்னும் 10 நாட்­களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க. உட்­கட்சி மோதல் உச்­ச­கட்­டத்தை எட்­டி­யி­ருப்­பது தமி­ழக அர­சி­யலில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அமித்ஷா வரும்­போது அ.தி.மு.க. இரு அணி­களும் இணைந்து பல மாற்­றங்கள் ஏற்­படும் வாய்ப்­புகள் இருப்­ப­தாக அ.தி.மு.க. - பா.ஜ.க. வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.. ரஜி­னியை அர­சி­யலில் இறக்கி அதன் மூல­மாக தமி­ழ­கத்தில் ஆட்­சிக்கு வரலாம் என்ற பா.ஜ.க.வின் கனவு பலிக்­காமல் போயுள்ள நிலையில் அ.தி.­மு.­க­.வை இறுக்கப்பற்­றி­யுள்­ளது. சேற்­றில்தான் தாமரை மலரும். இன்று சேரு­போல அ.தி­.மு­.க.வை மாற்றி அதில் வேறூன்ற துடிக்கும் தாமரை தமிழகத்தில் மலருமா?..

பா.ஜ.க. மதவாத இந்துத்தத்துவம் நிறைந்தது. ஆனால் தமிழக திராவிட கட்சிகள் மத பிளவுகள் அற்றவை. 'பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்திரம் வேண்டும்' என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது மதம் கடந்து சாதி கடந்து பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முதலில் தமிழகத்தில் உருவானது. பெரியார் அதை முன்னெடுத்தார். அதன்பின்னரே சுயமரியாதை என்னும் சொல் தமிழர்களின் மந்திரச் சொல்லாக மாறியது. அது இன்றும் தமிழர்களின் மனதில் உள்ளது. ஹிந்தித் திணிப்புக்கு எதிராக திராவிடர் கழகம் பிரகடனம் செய்த போரில் ஒட்டுமொத்த தமிழகமும் இணைந்துகொண்டது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகத் தொடங்கி, தமிழ்ச்சமூகத்தை ஆளும் மாபெரும் அரசியல் சக்தியாக தி.மு.க.வை அண்ணா வளர்த்தெடுத்தார் அதே கொள்கையில் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தற்போதைய ஆட்சியாளர்களின் நடவடிக்கயால் தன் சுயத்தை இழந்து விடுமா என்ற பயம் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மட்டும் அல்ல திராவிட கொள்கை உடையவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது...

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-12#page-7

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this