Sign in to follow this  
நவீனன்

இறங்கி வந்த ரவி இராஜினாமா உணர்த்துவது என்ன?

Recommended Posts

இறங்கி வந்த ரவி இராஜினாமா உணர்த்துவது என்ன?

 

ரொபட் அன்­டனி

 

பல்­வேறு அர­சியல் சல­ச­லப்­பு­க­ளுக்கு மத்­தியில் ரவி கரு­ணா­நா­யக்க தனது வெளி­வி­வ­கார அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­தி­ருக்­கிறார். அழுத்­தங்கள், எதிர்ப்­புகள், விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தி­யிலும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டலாம் என்ற எதிர்­பார்ப்­பிலும் ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­தி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஸ்தாபிப்­பதில் முக்­கிய பங்­க­ளித்­தவர் என்ற வகை­யிலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது­வேட்­பா­ள­ராகப் போட்­டி­யி­டு­வ­தற்கு அன்னம் சின்­னத்தை வழங்­கி­யவர் என்ற வகை­யிலும் ரவி கரு­ணா­நா­யக்­கவின் பதவி வில­க­லா­னது அர­சி­யலில் மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வொரு விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது.

பல்­வேறு சமிக்ஞை­களை இந்தப் பத­வி­வி­லகல் நாட்டின் அர­சி­யலில் வெளிக்­காட்­டி­யுள்­ள­தா­கவே அர­சியல் ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். குறிப்­பாக அண்­மை­க்­கால அர­சியல் வர­லாற்றில் இலங்­கையில் குற்­றச்­சாட்டை எதிர்­கொண்ட எந்­த­வொரு அர­சி­யல்­வா­தியும் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வில்லை.

அந்த வகையில் எந்­த­வொரு நீதி­மன்­றத்­திலும் குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­ப­டாத நிலையில் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­கி­ய­மை­யா­னது இந்த நாட்டின் அர­சி­யலில் ஒரு புதிய கலா­சா­ரத்தை ஆரம்­பித்­தி­ருக்­கி­றது என்­பதை மறுக்க முடி­யாது.

அது­மட்­டு­மன்றி நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மிக முக்­கி­ய­மான முன்­னணி அமைச்­ச­ராக இருந்த ரவி கரு­ணா­நா­யக்­கவின் பதவி வில­க­லா­னது அர­சாங்­கத்­திற்­குள்ளும் பாரிய நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்தும் என்­பதில் சந்­தேகம் இல்லை. நல்­லாட்சி தேசிய அர­சாங்­கத்தின் பிர­தான கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் ஒரு முன்­னணி உறுப்­பி­ன­ராக ரவி கரு­ணா­நா­யக்க காணப்­ப­டு­கின்றார்.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் உப தலை­வ­ரா­கவும் இருக்­கின்ற ரவி கரு­ணா­நா­யக்க கட்­சியின் தீர்­மானம் எடுக்கும் விட­யத்தில் செல்­வாக்கு செலுத்­து­ப­வ­ரா­கவும் இருக்­கிறார். அந்­த­வ­கையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் முக்­கிய ஒரு அர­சி­யல்­வாதி மற்றும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நிதி அமைச்சு, மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சு ஆகி­ய­வற்றை வகித்த முக்­கிய ஒரு­வரின் இரா­ஜி­னா­மாவை இல­கு­வாக எடுத்­துக்­கொள்ள முடி­யாது. இது நிச்­சயம் அர­சி­யலில் ஒரு மிகப்­பெ­ரிய நெருக்­க­டியை வெளிக்­காட்­டு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது.

2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நல்­லாட்சி உரு­வாக்­கப்­பட்­டதும் ரவி கரு­ணா­நா­யக்க நிதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார். இலங்கை பட்­டயக் கணக்­கா­ள­ரான ரவி கரு­ணா­நா­யக்க நிதி அமைச்சுப் பத­விக்கு தகு­தி­யா­னவர் என்றே பார்க்­கப்­பட்டார். ஆனால் அப்­போ­து­கூட இலங்கை மத்­திய வங்­கி­யா­னது அவரின் கீழ் இருக்­க­வில்லை. இந்­நி­லையில் ஒரு சில மாதங்­க­ளி­லேயே மத்­திய வங்கி பிணை­முறி வழங்­கலில் பாரிய முறை­கே­டுகள் இடம்­பெற்­ற­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

 அதன்­பின்னர் இந்த மத்­திய வங்கி பிணை­மு­றிகள் குறித்து ஆராய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கட்சி மட்­டத்தில் ஒரு குழுவை நிய­மித்தார். மத்­திய வங்கி உள்­ளக ரீதியில் விசா­ரணை நடத்­தி­யது. தொடர்ந்து பாரா­ளு­மன்ற கோப் குழு­வா­னது மத்­திய வங்கி பிணை முறி­வி­வ­காரம் தொடர்பில் விசா­ரணை நடத்­தி­யது. கோப் குழு விசா­ர­ணையில் பிணை முறி வழங்­கலில் முறை­கே­டுகள் இடம்­பெற்­ற­தாக பரிந்­துரை செய்­யப்­பட்­டது. அதன்­பின்னர் முழு­மை­யாக விசா­ரணை நடத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வொன்றை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிய­மித்தார். அந்த ஜனா­தி­பதி ஆணைக்­குழு தற்­போது விசா­ர­ணை­களை நடத்­தி­வ­ரு­கி­றது.

இதற்­கி­டையில் நிதி அமைச்­ச­ராக இருந்த ரவி கரு­ணா­நா­யக்க மீது தொடர்ச்­சி­யாக சுதந்­திரக் கட்­சி­யினர் முன்­வைத்து வந்த விமர்­ச­னங்­களை அடுத்து அவர் நிதி அமைச்­சி­லி­ருந்து வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார். வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த மங்­கள சம­ர­வீர நிதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார். இந்த சூழலில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளித்த தனியார் நிறு­வ­ன­மொன்றின் அதி­காரி ஒருவர் ரவி கரு­ணா­நா­யக்க தொடர்­பான கொடுக்கல் வாங்கல் ஒன்று குறித்து சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். அத­னை­ய­டுத்து ரவி கரு­ணா­நா­யக்­க­மீது அர­சியல் கட்­சிகள் கடும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்க ஆரம்­பித்­தன.

அத­னை­ய­டுத்து இந்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் ஆஜ­ரான ரவி கரு­ணா­நா­யக்க குறித்த கொடுக்கல் வாங்­க­லுக்கும் தனக்கும் எந்த சம்­பந்­தமும் இல்லை என்றும் அது தன்­னு­டைய பாரியார் சம்­பந்­தப்­பட்ட கொடுக்­கல்­வாங்கல் என்றும் கூறி­யி­ருந்தார். எனினும் அவர் மீது பல்­வேறு தரப்­பி­னரும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்க ஆரம்­பித்­தனர்.

குறிப்­பாக பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் அர­சியல் கட்­சிகள் ரவி கரு­ணா­நா­யக்க மீது பாரிய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தன. அதே­போன்று ஐக்­கிய தேசியக் கட்­சிக்­குள்­ளேயே அவ­ருக்கு எதி­ராக குரல்கள் ஒலித்­தன. மேலும் உட­ன­டி­யாக செயற்­பட்ட கூட்டு எதி­ரணி ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை பாரா­ளு­மன்ற பிரதி செய­லாளர் நாய­கத்­திடம் சமர்ப்­பித்­தது.

அந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ரவு அதி­க­ரிக்க ஆரம்­பித்­தது. தொடர்ந்து அர­சியல் கட்­சி­களும் ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­க­வேண்டும் என வலி­யு­றுத்த ஆரம்­பித்­தன. எனினும் தான் எந்­த­வொரு நீதி­மன்­றத்­திலும் குற்­ற­வா­ளி­யாக காணப்­ப­ட­வில்லை என்றும் எனவே தன்னால் இரா­ஜி­னாமா செய்ய முடி­யாது என்றும் ரவி கரு­ணா­நா­யக்க கூறி­வந்தார். எவ்­வா­றெ­னினும் அர­சியல் நெருக்­க­டிகள் அதி­க­ரித்­த­தை­ய­டுத்து முதற்­கட்­ட­மாக அமைச்சர் ராஜித சேனா­ரட்ன ரவி கரு­ணா­நா­யக்­க­வுடன் சந்­திப்­பொன்றை நடத்­தி­யி­ருந்தார்.

அதன்­போது நிலை­மைகள் மோச­ம­டை­வதை அடுத்து தற்­கா­லி­க­மா­க­வா­வது பத­வியை இரா­ஜி­னாமா செய்­யு­மாறு அமைச்சர் ராஜித ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு கூறி­யி­ருந்தார். அந்த சந்­தர்ப்­பத்தில் ரவி கரு­ணா­நா­யக்க அதனை ஏற்­றுக்­கொண்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் புதன்­கி­ழமை மாலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ரவி கரு­ணா­நா­யக்­கவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இதன்­போது ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ரவி கரு­ணா­நா­யக்­க­விடம் நிலை­மையை எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர்.

இந்த அர­சியல் நகர்­வு­களின் தொடர்ச்­சி­யாக நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய ரவி கரு­ணா­நா­யக்க தான் இரா­ஜி­னாமா செய்­வ­தாக அறி­வித்தார். இதன்­போது ரவி கரு­ணா­நா­யக்க கீழ்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டி­ருந்தார்.

''மக்­க­ளுக்கு சேவை­யாற்­று­வ­தற்கே எனது அமைச்சுப் பத­வி­களைப் பயன்­ப­டுத்­தி­யுள்ளேன். 20 வரு­டங்­க­ளாக அநீதி இழைக்­கப்­பட்ட எதிர்க்­கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் மக்­க­ளுக்கும் சேவை­யாற்­று­வ­தற்­காக 24 மணித்­தி­யா­லங்­களும் எனது தொலை­பே­சிகள் செயற்­பட்­டன. தனிப்­பட்ட இலா­பங்­க­ளுக்கோ அல்­லது வரப்­பி­ர­சா­தங்­க­ளுக்­கா­கவே அமைச்சு அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­த­வில்லை. பத­விகள், பொறுப்­புக்கள் என்­பன தற்­கா­லி­க­மா­னவை. எமது உண்மைத் தன்­மையே அவ­சி­ய­மாகும். எனினும், சிலர் பத­விகள் நிரந்­த­ர­மாக இருக்­கப்­போ­வ­தாக நினைத்து வரு­கின்­றனர். இத­னா­லேயே அதி­காரம் போன பின்­னரும் சிலர் கன­வு­களை வளர்த்து வரு­கின்­றனர். எனக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் எதுவும் அடிப்­ப­டை­யற்­றவை. இவற்­றுடன் நான் தொடர்­பு­ப­ட­வில்லை. இருந்­த­போதும் கடந்த 10 நாட்­களில் ஊட­கங்­களும், சிலரும் என்னை குற்­ற­வா­ளி­யாக்­கி­விட்­டனர். வர­லாற்றில் ஒரு­போதும் இல்­லா­த­ளவில் ஊட­கங்கள் செயற்­பட்­டுள்­ளன. என்னை சிலையில் அறைய வேண்டும் எனக் காண்­பித்­துள்­ளனர். இதனால் நான் சலிப்­ப­டைய மாட்டேன். இவற்­றுக்கு முகங்­கொ­டுக்கும் பலம் எனக்கு உள்­ளது. இந்த விவ­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி நல்­லாட்சி அர­சாங்­கத்தை குலைப்­ப­தற்­கான சதி முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அறி­யக்­கி­டைத்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் முன்­னெ­டுத்துச் செல்லும் ஜன­நா­யக செயற்­பாட்டை வீழ்ச்­சி­யுறச் செய்யும் சதிகள் இடம்­பெ­று­வ­தாக உண­ர­ மு­டி­கி­றது. மக்­களால் நிர­ாக­ரிக்­கப்­பட்­ட­வர்கள், ஊழல் மோச­டிகள் மற்றும் குற்­றச்­செ­யல்­களில் தொடர்­பு­டை­ய­வர்கள் இந்த சதியில் பின்­ன­ணியில் இருக்­கின்­றனர். தமது பிழை­க­ளுக்குக் கிடைக்கும் தண்­ட­னை­க­ளி­லி­ருந்து தப்பிக் கொள்­வ­தற்­காக இவ்­வா­றான சதி­களில் ஈடு­பட்­டுள்­ளார்கள். அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வது என்ற தீர்­மா­னத்தை நான் கவ­லை­யிலோ அல்­லது அதிர்ச்­சி­யு­டனோ எடுக்­க­வில்லை. பெரு­மை­யு­ட­னேயே எடுக்­கின்றேன். பாரா­ளு­மன்­றத்தின் கௌ­ரவத்தை பாது­காப்­ப­தற்கே எனது அமைச்சுப் பத­வியை அர்ப்­ப­ணிக்­கின்றேன். எமது கட்­சிக்கு ஆத­ர­வா­க­வி­ருக்­கின்ற அமைச்­சர்கள் மற்றும் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்­க­ளுக்­காக எனது பத­வியை அர்ப்­ப­ணிக்­கின்றேன். எனக்­கான இடத்தை வர­லாறு தீர்­மா­னிக்கும். அச்­சத்­தாலோ அல்­லது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்குப் பயந்தோ பதவி வில­க­வில்லை. புதி­ய­தொரு அர­சியல் கலா­சா­ரத்­துக்கு முன்­னு­தா­ர­ண­மாக திகழும் வகை­யி­லேயே பெரு­மை­யுடன் பதவி துறக்­கின்றேன்'’ இவ்­வாறு ரவி கரு­ணா­நா­யக்க பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இங்கு மிக முக்­கி­ய­மாக பார்க்­கப்­ப­ட­வேண்­டிய விடயம் என்­ன­வெனில் கடந்த அர­சாங்­கத்தில் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் இருக்­கின்ற நிலையில் குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­ப­டாத நிலையில் ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­கி­யி­ருக்­கிறார்.

அழுத்­தங்கள், எதிர்ப்­புக்கள் என என்ன கார­ணங்கள் முன்­வைக்­கப்­பட்­டாலும் ரவி கரு­ணா­நா­யக்க தற்­போது இரா­ஜி­னாமா செய்­து­விட்டார். எனவே அர­சாங்கம் தற்­போது குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் ஆட்­சி­யா­ளர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க முனை­யலாம். இது அர­சி­யலில் ஒரு பர­ப­ரப்­பான சூழலை ஏற்­ப­டுத்தும் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. அதே­போன்று ரவி கரு­ணா­நா­யக்வை இரா­ஜி­னாமா செய்ய வைத்­ததன் ஊடாக நல்­லாட்சி அர­சாங்கம் தலை­நி­மிர்ந்து நிற்­ப­தாக எண்­ணிக்­கொள்­ளலாம்.

எங்கள் அர­சாங்கம் எந்­த­ளவு தூரம் வெளிப்­ப­டை­யாக இருக்­கின்­றது என்­பதை பாருங்கள் என்று நல்­லாட்சி அர­சாங்கம் மார்­தட்­டிக்­கொள்­ளலாம். எவ்­வா­றெ­னினும் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்ட ஒருவர் மீது இவ்­வாறு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டமை நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வெளிப்­ப­டைத்­தன்­மையை பறை­சாற்­று­வ­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

எப்­ப­டி­யி­ருப்­பினும் இது­வரை ரவி கரு­ணா­நா­யக்க குற்றம் செய்­த­வ­ராக நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் பிணை முறி குறித்து விசா­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­வைக்கும் பரிந்­து­ரை­களில் என்ன கூறப்­போ­கின்­றது என்­பது பொறுத்தே ரவி கரு­ணா­நா­யக்­கவின் அர­சியல் எதிர்­காலம் தீர்­மா­னிக்­கப்­படும். எனினும் அவர் இவ்­வாறு இரா­ஜி­னாமா செய்­ததன் மூலம் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான நெருக்­க­டியை குறைத்­தி­ருக்­கிறார் என்­பதே உண்­மை­யாகும்.

இதே­வேளை சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது தமது கட்­சியின் அழுத்­தத்­தி­னால்தான் இது சாத்­தி­ய­மா­னது என்­பதை பெரு­மை­யுடன் கூறு­வ­தற்­கான சாத்­தியம் உள்­ளது. ஆனால் அந்­தக்­கட்­சியின் பக்­க­முள்ள பலர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது. அதேபோன்று கூட்டு எதிரணியும் தாம் இந்த விடயத்தில் பாரிய வெற்றியைப் பெற்றதாக மார்தட்டிக் கொள்வதில்லை அர்த்தமில்லை.

காரணம் கூட்டு எதிரணியிலும் பல்வேறு உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. எவ்வாறெனினும் நாட்டின் அரசியலில் புதிய கலாசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட ஒருவர் இராஜினாமா செய்திருக்கிறார். இது அரசியல் கலாசாரத்தின் ஒரு புதிய பண்பாட்டை கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஒரு விடயத்தை மனதில் கொள்ளவேண்டும். அதாவது ஊழல் செயற்பாடுகளை ஒழித்து நல்லாட்சியை முன்னெடுப்பதாக கூறிக்கொண்டே நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. இன்று அந்த அரசாங்கத்தின் ஒருவரே குற்றச்சாட்டுக்களை அடுத்து பதவி விலகியிருக்கிறார்.

அந்தவகையில் நல்லாட்சி அரசாங்கம் எதனை நோக்கி பயணிக்கிறது என்பது உணரப்படவேண்டும். மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு என்ன நடக்கப்போகின்றது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அது தொடர்பிலும் அரசாங்கம் ஆழமாக சிந்திக்கவேண்டிய நேரம் வந்திருக்கின்றது.

மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் நல்லாட்சி அரசாங்கம் புதிய பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் அரசாங்கம் ஒரு விடயத்தை மனதில் கொள்ளவேண்டும். பல்வேறு அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியிலேயே எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வைத்து மக்கள் இந்த அரசாங்கத்தை உருவாக்கினர் என்பதை மறந்துவிடக்கூடாது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-12#page-3

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this