• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

இலங்கை இந்திய ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

Recommended Posts

இலங்கை இந்திய ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

 

அஸ்வின், – ஜடேயாவுக்கு ஒருநாள்த் தொடரில் ஓய்வு

 
 
அஸ்வின், – ஜடேயாவுக்கு ஒருநாள்த் தொடரில் ஓய்வு
 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணி­யின் சக­ல­துறை வீரர்­க­ளான அஸ்­வின், ஜடேயா இரு­வ­ருக்­கும் ஓய்வு கொடுக்­கப்­ப­ட­லாம் என்று தெரி­ய­வ­ரு­கி­றது.

இன்று ஆரம்­ப­மா­கும் இறுதி டெஸ்ட் ஆட்­டம் முடிந்த பின்­னர், எதிர்­வ­ரும் 20ஆம் திகதி ஐந்து ஆட்­டங்­க­ளைக் கொண்ட ஒரு­நாள் தொடர் ஆரம்­ப­மா­கி­றது.

இந்­தத் தொட­ரில் இருந்து ஜடேயா, அஸ்­வின் இரு­வ­ரை­யும் விடு­விக்க அதிக வாய்ப்­புக்­கள் உள்­ளன என்று தெரி­ய­வ­ரு கி­றது. இந்­திய அணி அடுத்த மூன்று மாதங்­க­ளில் 23 ஆட்­டங்­களை அதன் சொந்த மண்­ணில் எதிர்­கொள்­ள­வுள்­ளது. இந்­தத் தொடர் களில் கவ­னம் செலுத்த வேண்­டி­யுள்­ள­தா­லேயே இந்த முடிவு எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

http://newuthayan.com/story/18773.html

Share this post


Link to post
Share on other sites

ஒருநாள் தொடரில் நான் விளையாடப் போவதில்லையா? யார் சொன்னது? விராட் கோலி அதிர்ச்சி

 

 
kohli

விராட் கோலி.   -  படம். | ஏ.பி.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி உட்பட முக்கிய வீரர்களுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு அளிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானதற்குக் கோலி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

“நான் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினேனா? என் பங்கேற்பு? நான் ஆடவில்லை என்று யார் கூறியது? எங்கிருந்து இது வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் விளையாட வேண்டாம் என்று நீங்கள் விரும்பினீர்களென்றால் சொல்லுங்கள். விளையாடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

விரைவில் ஒருநாள் தொடருக்கான அணித்தேர்வுக்காக அமரப்போகிறோம். என்பதில் எங்கள் மனத்தில் திட்டங்கள் உள்ளன, என்னமாதிரியான அணிச்சேர்க்கை தேவை என்பதைப் பேச விரும்புகிறோம். எனவே ஒரு கேட்பனாக இதில் நான் மையமாக இருக்கிறேன், குழுவிடம் என்ன பேச வேண்டும் என்பது எனக்குத் தெரியும்” என்று அதிர்ச்சியுடன் பேசினார் விராட் கோலி.

யுவராஜ், தோனி தேர்வு?

இந்த அணித்தேர்வில் பெரிய சவாலாக இருப்பது தோனி, யுவராஜ் சிங் ஆகியோரது தேர்வுதான், ஏனெனில் கே.எல். ராகுல் முழு உடல் தகுதியுடன் ஆடி வருகிறார், தென் ஆப்பிரிக்காவில் வெற்றி பெற்றவராக மணீஷ் பாண்டே நிற்கிறார், எனவே தோனி, யுவராஜ் சிங் ஆடியே ஆக வேண்டும் இந்தக் ‘குருவிக் கூட்டை’ கலைக்கக் கூடாது என்று கோலி அழுத்தம் கொடுத்தால், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பாண்டே, ராகுலுக்கு வழி விடவேண்டும்.

இல்லையெனில் ராகுலுக்காக ரஹானே வழிவிட வேண்டும். சுரேஷ் ரெய்னா வேறு உடல் தகுதி பெற்று விட்டதாகக் கூறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களில் பிரச்சினையில்லை அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இருவருக்குமே ஓய்வு அளிக்கப்படலாம் அல்லது ஒருவருக்கு கண்டிப்பாக ஓய்வு அளிக்கப்படும் என்றே தெரிகிறது. குல்தீப் யாதவ் நிச்சயம் அணியில் இடம்பெறுவார், லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹல், ஆல்ரவுண்டர் குருணால் பாண்டியா ஆகியோரும் அணியில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

கோலியே குல்தீப் யாதவ்வை சிறப்பாகப் புகழ்ந்துள்ளார், ‘குல்தீப் யாதவ்விடம் எந்த ஒரு சூழ்நிலையிலும் பந்தை தைரியமாகக் கொடுக்கலாம். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் பந்து வீச விரும்புவார். நெருக்கமான களவியூகத்திற்கும் அஞ்சாமல் வீசுவார். அவர் தன் திறமை மீது நம்பிக்கை உள்ளவர், தன் திறமையினால் பேட்ஸ்மெனை ஏமாற்ற முடியும் என்று அவருக்கு நம்பிக்கை உள்ளது, இது ஒரு மிகப்பெரிய குணாம்சம். சைனமன் பவுலர் எப்போதுமே எதிர்பாராததை நிகழ்த்தக் கூடியவர், ஒரு புதிர்க்காரணியாக இருக்கக் கூடியவர்.

எனவே இந்த அணித்தேர்வில் முக்கியமான விஷயம் யார் தேர்வாகிறார்கள் என்பதல்ல, யார் தேர்வு செய்யப்படாமல் விடப்படுகிறார்கள் என்பதே.

http://tamil.thehindu.com/sports/article19480009.ece

Share this post


Link to post
Share on other sites

இலங்கை ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: யுவராஜ் சிங் நீக்கம் உள்பட 7 மாற்றங்கள்

இலங்கை அணிக்கெதிரான 5 ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யுவராஜ் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை.

இலங்கை ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: யுவராஜ் சிங் நீக்கம் உள்பட 7 மாற்றங்கள்
 
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை முடிந்த கையோடு, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, ரகானே, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், மொகமது ஷமி, பும்ப்ரா, அஸ்வின், ஜடேஜா, யுவராஜ் சிங், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பிடித்திருந்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மா மற்றும் பும்ப்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. குல்தீப் யாதவ் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், 5 ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

201708132116186520_1_Yuvraj-SIngh-s._L_s

இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், மொகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தோள்பட்டை காயத்திற்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள லோகேஷ் ராகுலுக்கு அணியில் இடம்கிடைத்துள்ளது. அதேபோல் ஓய்வு கொடுக்கப்பட்ட ரோகித் சர்மா, பும்ப்ரா ஆகியோர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

201708132116186520_2_Shardul-Thakur-s._L
ஒருநாள் போட்டியில் இடம்பிடித்துள்ள புதுமுக வீரர் ஷர்துல் தாகூர்

சாஹல், அக்சார் பட்டேல், மணீஷ் பாண்டே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷர்துல் தாகூர் புதுமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. தவான், 2. ரோகித் சர்மா (துணை கேப்டன்), 3. லோகேஷ் ராகுல், 4. விராட் கோலி (கேப்டன்), 5. ரகானே, 6. மணீஷ் பாண்டே, 7. கேதர் ஜாதவ், 8. டோனி (விக்கெட் கீப்பர்), 9. ஹர்திக் பாண்டியா, 10. அக்சார் பட்டேல், 11. சாஹல், 12. குல்தீப் யாதவ், 13. பும்ப்ரா, 14. ஷர்துல் தாகூர், 15. புவனேஸ்வர் குமார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/13211617/1102188/Yuvraj-Singh-dropped-for-Sri-Lanka-ODIs-Manish-Pandey.vpf

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

 

இந்தியாவிற்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என கேப்டன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தயா 3-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் வருகிற சனிக்கிழமை (19-ந்தேதி) இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 15 பேர் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. உபுல் தரங்கா (கேப்டன்), 2. மேத்யூஸ், 3. டிக்வெல்லா, 4. குணதிலகா, 5. குசால் மெண்டிஸ், 6. கபுகேதரா, 7. ஸ்ரீவர்தேனா, 8. புஷ்பகுமாரா, 9. அகிலா தனஞ்ஜயா, 10. சண்டகன், 11. திசாரா பெரேரா, 12. ஹசரங்கா, 13. லசித் மலிங்கா, 14. துஷ்மந்தா சமீரா, 15. விஷ்வா பெர்னாண்டே.

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் குறித்து இலங்கை கேப்டன் தரங்கா கூறுகையில் ‘‘எல்லா அணிக்கும் ஒரு சோதனை வரும். இலங்கை ரசிகர்கள் வீரர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/15204320/1102515/SL-name-ODI-squad-skipper-Tharanga-calls-for-support.vpf

Share this post


Link to post
Share on other sites

திஸர, கப்புகெதர, சிறிவர்தன உள்ளே ; சந்திமல், திரிமான்னே வெளியே

 

 

இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியின் ஒருநாள் குழாம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

sri-lanka-cricket-india.jpg

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில் திரஸ பெரேரா, சாமர கப்புகெதர மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, டெஸ்ட் அணித் தலைவர் டினேஷ் சந்திமல் மற்றும் லகிரு திரிமான்னே ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு கிரிக்ககெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி தம்புள்ளை விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கை அணியின் 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி விபரம் வருமாறு,

 

உபுல் தரங்க ( அணி தலைவர் ), அஞ்சலோ மெத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ், ஷாமர கப்புகெதர, மிலிந்த சிறிவர்தன, மிலிந்த புஷ்பகுமார, அகில தனஞ்சய, லக்ஷன் சந்தகன், திஸர பெரேரா, வனிந்து ஹசரங்க, லசித் மாலிங்க, துஷ்மந்த ஷமிர, விஷ்வ பெர்னான்டோ  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் நேர அட்டவணை வருமாறு,

sri_lanka_india.PNG

 

 

 

http://www.virakesari.lk/article/23213

Share this post


Link to post
Share on other sites

தம்புள்ளையில் இந்திய அணியினருக்கு பெரும் வரவேற்பு

 

 

தம்புள்ளை சென்றுள்ள இந்திய அணிக்கு அங்கு பெரும் வரவேற்பளிக்கபட்டுள்ளது.

koli-cricket-india.jpg

இலங்கை அணிக்கெதிராக இந்திய அணி விளையாடவுள்ள முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை தம்புள்ள ரங்கிரி சர்வதேச மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளது.

cricket-india-dhoni.jpg

இந்நிலையிலலேயே இந்திய அணியினர் நேற்று தம்புள்ளை சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

india-cricket.jpg

india.jpg

http://www.virakesari.lk/article/23294

Share this post


Link to post
Share on other sites

எங்கே செல்லும் இந்த பாதை? இந்­தி­யா­வு­ட­னான முதல் போட்டி இன்று

Published by RasmilaD on 2017-08-20 10:10:47

 

sport.jpg

இலங்கை கிரிக்கெட் வர­லாற்றில் தற்­போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு போதாத கால­மாகும். இலங்கை கிரிக்கெட் தற்­போது பாரிய வீழ்ச்­சியை கண்­டுள்­ள­தா­கவும்,  எந்த இலக்கை நோக்கி பய­ணிக்­கி­றது என்ற கேள்வியும் விரக்தியும்  இலங்கை கிரிக்கெட் ரசி­கர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. தற்­போது இருக்­கின்ற நிலை­மையைப் பார்க்­கும்­போது இலங்­கையை கத்­துக்­குட்டி அணி­யா­கவே பார்க்க வேண்டியுள்ளதுடன், இவ்­வாறு சென்றால்,  துணை உறுப்பு நாடு­க­ளு­ட­னான போட்­டி­க­ளில்­கூட இலங்கை அணி வெற்­றிக்­கொள்­வது மிகவும் கடி­ன­மா­ன­தாக அமையும் என இலங்கை கிரிக்கெட் ரசி­கர்கள் கரு­து­கின்­றனர்.

அண்­மைக்­கா­ல­மாக இலங்கை கிரிக்கெட் அணி­யா­னது துடுப்­பாட்டம்,  பந்­து­வீச்சு களத்­த­டுப்பு என சகல துறை­க­ளிலும் வீழ்ச்சிக் கண்­டுள்­ளதை யாரும் மறுப்­ப­தற்­கில்லை.

இலங்கை கிரிக்­கெட்டின் எதிர்­காலம் என்­ன­வாகும்? இலங்கை கிரிக்கெட் எந்த பாதையை நோக்கி  செல்­கின்­றது?  என்­பன இலங்கை கிரிக்கெட் ரசி­கர்­களை தற்­போது பெரிதும் ஆட்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­யாகும்.

இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண இலங்கை கிரிக்கெட் நிறு­வனம் மற்றும் விளை­யாட்டுத் துறை அமைச்சு மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கைகள் என்ன? அணித்­த­லை­மைத்­து­வத்தில் மாற்­றத்தை கொண்­டு­வந்தால் மாத்­திரம் போதுமா?  போன்ற கேள்­விகள் இலங்கை ரசி­கர்கள் மனதில் கொண்­டுள்ள பாரிய கேள்­வி­க­ளாகும்.

முன்­ன­தாக 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0- – 3 என இந்­தி­யா­விடம் படு­தோல்­வி­ய­டைந்த இலங்கை, இந்த ஒருநாள் போட்டித் தொடரில் பெரும் அழுத்­தத்தில் விளை­யாடும் என கிரிக்கெட் விமர்­ச­கர்கள் கரு­து­கின்­றனர். 

இந்­நி­லையில் இலங்கை மற்றும் இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் போட்டித் தொடரின் முத­லா­வது போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நடைபெறும் இப்போட்டியானது இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும். 

http://www.virakesari.lk/article/23356

Share this post


Link to post
Share on other sites

தவான் சதம், கோலி 82 நாட்அவுட்: இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

 

தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 217 ரன்னை 28.5 ஓவரில் எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

தவான் சதம், கோலி 82 நாட்அவுட்: இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பகல்- இரவு ஆட்டமாக தம்புல்லாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 43.2 ஓவரில் 216 ரன்கள் மட்டுமே எடுத்து அல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அக்சார் பட்டேல் 3 விக்கெட்டும் பும்ப்ரா, சாஹல் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

பின்னர் 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், தவானும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

தவான் அதிரடியாக விளையாட, ரோகித் சர்மா நிதானமாக விளையாடினார். இருந்தாலும் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா ரன்அவுட் ஆனார். அப்போது இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்திருந்தது.

201708202103534936_1_kohli001-s._L_styvp

அடுத்து 2-வது விக்கெட்டுக்கு தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

8.1 ஓவரில் 50 ரன்னை தொட்ட இந்தியா, 14.3 ஓவரில் 100 ரன்னையும், 21.5 ஓவரில் 150 ரன்னையும், 26.3 ஓவரில் 200 ரன்னையும் தொட்டது.

இதற்கிடையே 36 பந்தில் அரைசதம் அடித்த தவான், 71 பந்தில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். மறுமுனையில் விராட் கோலி 50 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். அணியின் ஸ்கோர் 28.4 ஓவரில் 216 ரன்கள் இருக்கும்போது, 28.5-வது பந்தை தவான் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

201708202103534936_2_dhawan-ssss._L_styv

தவான் 90 பந்தில் 132 ரன்கள் எடுத்தும், விராட் கோலி 70 பந்தில் 82 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சதம் அடித்த தவான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி பல்லேகலேயில் 24-ந்தேதி நடக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/20210352/1103444/INDvSL-1st-ODI-dhawan-century-kohli-half-century-india.vpf

Share this post


Link to post
Share on other sites

இலங்கை அணி வீரர்களுக்கு எதிராக ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் ; பதற்றத்தில் மைதானத்திற்குள் இருந்த வீரர்கள்

Published by Priyatharshan on 2017-08-21 10:06:25

 

இந்­திய, இலங்கை அணி­க­ளுக்­கி­டை­யி­லான முதலாவது ஒருநாள் போட்­டியில் இலங்கை தோல்வி அடைந்­த­தை­ய­டுத்து மைதா­னத்தில் குழு­மி­யி­ருந்த ரசிகர்கள்  நேற்று மாலை தம்­புள்ளை ரங்­கிரி விளை­யாட்டு மைதா­னத்­திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதனால் அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.

thambulla-1.jpg

போட்டி முடிந்­த­வுடன் இலங்கை அணி ரசி­கர்கள் வீரர்­களுக்கு எதிராக கூச்­ச­லிட்டும் ஆர்­ப்பாட்ட தோர­ணையில் முற்­று­கை­யிடும் வண்­ண­மாகவும் குழு­மி­யி­ருந்­தனர். இதன்­போது கலகம் அடக்கும் பொலிஸார் ஸ்தலத்­திற்கு அழைக்­கப்­பட்­டனர்.

பொலி­ஸாரின் உத­வி­யுடன் இந்­திய அணி வீரர்கள் பாது­காப்­பாக ஹோட்­ட­லுக்கு கொண்டு செல்­லப்­பட்ட போதும் இலங்கை அணி வீரர்­களை மைதா­னத்­துக்கு வெளியே வர விடா­மலும் அவர்கள் தங்­கி­யி­ருந்த ஹோட்­ட­லுக்கு முன்பும் இலங்­கை ­அணி ரசிகர்கள் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டனர்.

thabula.png

இலங்கை கிரிக்­கெட்டில் இருப்­ப­தாக கூறப்­படும் அர­சியல் ஊடுரு­வலை இல்­லாமல் ஆக்கக்கோரியும் ஆட்ட நிர்­ணய சதி மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்து இலங்கை கிரிக்கெட் ரசி­கர்கள் வீரர்­களை பார்த்து கோஷங்­களை எழுப்­பி­னர்.

மேலும் 1996 ஆம் ஆண்டில் உலகக்கோப்­பையை வென்ற அணியை போன்று தலை­சி­றந்த இலங்கை கிரிக்கெட் அணியை மீண் டும் தமக்கு தர வேண்டும் என்றும் ரசிகர்கள் கோஷமிட்டனர்.

இதன்போது சுமார் அரை மணிநேரத்­துக்கு மேலாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட ரசி­கர்கள் வீரர்­களை ஹோட்­ட­லுக்கு செல்­ல­வி­டாது தொடர்ந்தும் இடை­ம­றித்­தி­ருந்­தனர். இந்த பதற்­ற­மான சந்­தர்ப்பம் தோன்­றி­யி­ருந்த நிலையில் இலங்கை அணியின் வீரர்கள் பஸ்­ஸினுள் ஏற முடி­யாமல் மைதா­னத்தின் உள்­ளேயே நிற்கும் நிலை ஏற்ப­ட்­டி­ருந்­தது.

அதன் பின்னர் ரசிகர்களின் ஆர்ப்­பாட் டத்தை கலைத்த  கலகம் அடக்கும் பொலி­ஸாரின் உத­வி­யுடன் இலங்கை அணி வீரர்­களும் பாது­காப்­பான முறையில் ஹோட்­ட­லுக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டி­ருந்­தனர்.

இதற்கு முன்னர் இந்­திய அணி­யுடன் இடம்­பெற்ற டெஸ்ட் போட்­டி­யிலும் 3 – 0 என்ற வீதத்தில் வெள்­ளை­ய­டிப்புச் செய்­யப்­பட்­டி­ருந்த இலங்கை அணி­யா­னது நேற்­றைய தினம் இந்திய அணியுடனான ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுக்களை இழந்து தோல்வி அடைந்திருந்த நிலையில் கடும் விரக்தி அடைந்திருந்த ரசிகர்களே பொறுமை இழந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/23386

Share this post


Link to post
Share on other sites

2-வது ஒருநாள் போட்டி: இந்தியா - இலங்கை நாளை மோதல்

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை பல்லகெலேயில் மதியம் 2.30 மணிக்கு நடக்கிறது.

2-வது ஒருநாள் போட்டி: இந்தியா - இலங்கை நாளை மோதல்
 
பல்லகெலே:

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணி இடையயான டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

5 ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் தம்புல்லாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை பல்லகெலேயில் நடக்கிறது. இப்போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி பேட்டிங் வரிசையில் பலம் பொருந்தியதாக இருக்கிறது.

ஷிகர் தவான், ரோகித் சர்மா, வீராட்கோலி, லோகேஷ் ராகுல், டோனி, கேதர் யாதவ், பாண்ட்யா ஆகியோர் உள்ளனர். முதல் போட்டியில் ஷிகர்தவான் சதம் அடித்து அசத்தினார்.

பந்து வீச்சில் புவனேஸ்வர்குமார், பும்ரா, சாஹல், அக்சர் பட்டேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இதனால் இந்தியா சம பலத்துடன் திகழ்கிறது. நாளைய ஆட்டத்தில் வென்று 2-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இருக்கிறது.

நாளைய ஆட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உபுல் தரங்கா தலைமையிலான இலங்கை அணி முதல் ஆட்டத்தில் தோற்றதால் வெற்றி நெருக்கடியில் உள்ளது.

அந்த அணியில் டிக்வெலா, குணதிலகா, குசல் மென்டிஸ், மேத்யூஸ், கபுகேந்தரா, பெரைரா, மலிங்கா, சான்டகன், டிசில்வா போன்ற வீரர்கள் உள்ளனர்.

ஆனாலும் இலங்கை அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி விட்டது. முதல் போட்டியில் தொடக்கத்தை சிறப்பாக கண்ட அந்த அணி அதன்பின் விக்கெட்டுகளை மளமளவென பறி கொடுத்தது.

இதனால் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. முதல் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை முயற்சிக்கும். என்றாலும் வலுவான இந்தியாவை வீழ்த்த போராட வேண்டும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/23104457/1103940/India-vs-Sri-Lanka-second-ODI-match-on-tomorrow.vpf

Share this post


Link to post
Share on other sites

இலங்கை அணியின் 800ஆவது போட்டியில் என்ன நடக்கும்?

 
 
இலங்கை அணியின் 800ஆவது போட்டியில் என்ன நடக்கும்?
 

இலங்கை கிரிக்கெட் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் என்ற உறுதியான நம்பிக்கை தன்னிடம் உள்ளது என்று அவ்வணியின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

போட்டியை சரியான முறையில் வெற்றி பெறுவதற்கு அணியின் வீரர்கள் பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

எந்தவொரு வீரரும் போட்டியில் தோல்வியடைவதை விரும்புவதில்லை. அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கிலேயே விளையாடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடன் இன்று நடைபெறவுள்ள போட்டி, இலங்கை அணி கலந்துகொள்ளும் 800 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.

http://newuthayan.com/story/22392.html

Share this post


Link to post
Share on other sites

இலங்கையை துடுப்பெடுத்தாடப் பணித்தது இந்தியா

இலங்கை அணிக்கெதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.

sri-lanka-cricket.jpg

இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட்கோலி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளார்.

இரு அணிகளுக்குமிடையிலான  5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இது இலங்கை அணியின் 800 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியென்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23550

52/1

Share this post


Link to post
Share on other sites

இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 237 

Published by Priyatharshan on 2017-08-24 18:17:41

 

இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 237 ஓட்டங்களை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

cricket.jpg

கண்டி பல்லேகலயில் இடம்பெற்று வரும் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 236 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பம் சுமாராக இருந்தாலும் இலங்கை அணியின் மத்தியதர துடுப்பாட்ட வீரர்களான கப்புகெதர மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோரின் இணைப்பாட்டத்தின் உதவியுடன் 200 ஓட்டங்களைக் கடந்தது.

மிலிந்த சிறிவர்தன 58 ஓட்டங்களுடனும் கப்புகெதர 40 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல்போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23557

Share this post


Link to post
Share on other sites

பும்ரா அபாரப் பந்து வீச்சு: இலங்கை அணி 236 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டதுbumrah

2-வது ஒருநாள் போட்டியில் கபுகேதராவை யார்க்கரில் பவுல்டு செய்த பும்ரா.   -  படம். | ஏ.பி.

பல்லகிலே மைதானத்தில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கையை முதலில் பேட் செய்ய அழைத்த இந்திய அணி அந்த அணியை 50 ஓவர்களில் 236/8 என்று மட்டுப்படுத்தியது.

ஜஸ்பிரீத் பும்ரா 10 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்த, லெக்ஸ்பின்னர் சாஹல் 2 விக்கெட்டுகளையும் பாண்டியா 1 விக்கெட்டையும், மீண்டும் அபாரமாக வீசிய அக்சர் படேல் 30 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆனால் இலங்கை அணிக்கு புதிய தெம்பூட்டியவர் சிறிவதனா, இவர் 58 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்தார். இவர் ஆடிய விதம் மற்ற பேட்ஸ்மென்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது.

இம்முறையும் இலங்கை 14 ஓவர்களில் 70/1 என்ற நல்ல நிலையில்தான் இருந்தது. ஆனால் வழக்கம் போல் 29-வது ஓவரில் 121/5 என்று சரிவு கண்டது. அந்நிலையில்தான் சிறிவதனா சர்வதேசப் போட்டிக்குத் தேவையான அணுகுமுறையைக் கையாண்டார், இவர் எடுத்த அரைசதம்தான் இலங்கை அணியை 236 ரன்களுக்குக் கொண்டு சென்றது.

பிட்சிலும் ஒன்றுமில்லை, பந்து வீச்சும் சாதாரணமாகவே இருந்தது, ஒரு நல்ல லைன்-அப் உள்ள அணி நிச்சயம் பெரிய ரன் எண்ணிக்கையை எட்டியிருக்கக் கூடும்.

டிக்வெல்லா அருமையாக ஆடி 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்து நன்றாக ஆடி வந்தார், புவனேஷ் குமாரை பிளிக் ஷாட்டில் மிட் ஆனில் அடித்த ஷாட் அருமையானது. அவர் கிரீசில் நகர்ந்து நகர்ந்து ஆடியபடியால் இந்திய அணி கொஞ்சம் சிரமத்தை எதிர்கொண்டது, ஆனால் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ச்சியாக அவருக்கு வேகம் குறைந்த பந்துகளை வீசினார், இதில் ஒரு பந்தை அவர் மிஸ்ஹிட் செய்ய அது ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனது.

சங்கக்காரா ஸ்டம்பிங் சாதனையை தோனி சமன்:

தனுஷ்க குணதிலகாவும் 2 அருமையான பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் தவறாக சாஹல் பந்துக்கு மேலேறி வந்து தோனியிடம் ஸ்டம்ப்டு ஆனார்.

தோனி இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 99 ஸ்டம்பிங்குகளுடன் சங்கக்காரா சாதனையைச் சமன் செய்துள்ளார். ஆனால் சங்கக்காரா 404 ஒருநாள் போட்டிகளில் இதனைச் சாதிக்க, தோனியோ 298 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இருவருக்கும் பின்னால் ரொமேஷ் கலுவிதரனா (75) உள்ளார்.

மெண்டிஸ் 48 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து சாஹலிடம் எல்.பி.ஆனார். மேத்யூஸ் 20 ரன்களில் படேல் பந்தில் அதே முறையில் அவுட் ஆகி வெளியேறினார். இருகருமே நேராக வந்த ஃபுல் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று தவறான ஷாட் தேர்வுக்கு பலியாயினர்.

உபுல் தரங்கா 9 ரன்களில் பாண்டியாவிடம் அவுட் ஆகி வெளியேறினார். பாண்டியா முழங்கால் காயம் காரணமாக தொடர்து வீச முடியவில்லை.

அருமையாக ஆடிய சிறிவதனாவையும், கபுகேதராவையும், தனஞ்ஜயாவையும் பும்ரா காலி செய்தார். இடையில் படேல், சாஹல் இணைந்து 20 ஓவர்களில் 73 ரன்களையே விட்டுக் கொடுத்தனர். இதில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கையை முடக்கினர். அந்த அணி 236 ரன்கள் எடுக்க சிறிவதனாவின் அரைசதம் முக்கியக் காரணமாக அமைந்தது.

 

http://tamil.thehindu.com/sports/article19553590.ece?homepage=true

Share this post


Link to post
Share on other sites

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: புவனேஷ்வர், தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி

 

இலங்கைக்கு எதிராக பல்லெகெல்லேயில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் புவனேஷ்வர் குமார் மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: புவனேஷ்வர், தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி
 
கொழும்பு:

இலங்கைக்கு எதிராக பல்லெகெல்லேயில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் புவனேஷ்வர் குமார் மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லேகெலேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.  அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சால்  இலங்கை அணி தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து வந்தது.

201708250000559263_1_cricketttt._L_styvp

இறுதியில், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் மிலிந்தா சிரிவர்தனா அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார்.  இந்திய அணி சார்பில் பும்ப்ரா 10 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

மழை குறுக்கிட்டதால், இந்திய அணிக்கு 47 ஓவர்களில் 231 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. தொடக்க ஜோடியாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இருவரும் இலங்கை பந்துவீச்சை அடித்து ஆடினர். இதனால் அணியின் ரன் வேகம் அதிகரித்தது. 15 ஓவர்களில் இந்தியா 100 ரன்னை கடந்தது.  அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா, 45 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடித்து 58 ரன்கள் எடுத்தார். அவருடன் விளையாடிய ஷிகர் தவான் ஒரு ரன்னில் அரை சதத்தை தவறவிட்டார். அவரை தொடர்ந்து வந்த யாரும் நிலைத்து நிற்கவில்லை.

201708250000559263_2_dhonicri._L_styvpf.

அதன்பின்னர், இலங்கை அணியினர் துல்லியமாக பந்து வீசி இந்திய அணியினரின் விக்கெட்டுகளை கைப்பற்றினர். குறிப்பாக, இலங்கை அணியின் அகிலா தனஞ்செயா தனது சுழல் பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும்  தோனியும், புவனேஷ்வர் குமாரும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடி கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி இலக்கை எட்டியது. புவனேஷ்வர் குமார்  முதன்முதலாக ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்தார். புவனேஷ்வர் குமார் 53 ரன்னும், தோனி 45 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.  இந்த ஜோடி 100 ரன் பார்ட்னட்ஷிப் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

45 வது ஓவரில் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 54 ரன்களும், புவனேஷ்வர் குமார் 53 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/25000051/1104311/second-one-day-india-beat-srilanka-by-3-wickets.vpf

Share this post


Link to post
Share on other sites

புதுமாப்பிள்ளையின் சுழலில் மிரண்டு தடுமாறிய இந்திய அணியை அனுபவத்தால் வெற்றியை நோக்கி வழிநடத்திய டோனி

Published by Priyatharshan on 2017-08-25 07:42:38

 

இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது போட்டியில் இலங்கையின் புதுமாப்பிள்ளையான அகில தனஞ்சய சுழலில் மிரடட்ட தடுமாறிய இந்திய அணியை தனது அனுபவத்தினால் வழிநடத்திய மகேந்திர சிங் டோனி, இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி வழிவகுத்தார்.

 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2 ஆவது போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது.

 

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்த புதுமாப்பிள்ளை அகில தனஞ்சயவின்  சுழல் சிக்கித் தடுமாறிய இந்திய அணி, ஒரு சமயத்தில் இலங்கையிடம் தேற்கும் நிலையில் இருந்தது.

அத்தருணத்தில் களத்தில் இருந்த இந்திய அணியின் முன்னாள் தலைவரும் அனுவப வீரருமான மகேந்திர சிங் டோனி, மறு முனையில் இருந்த புவனேஷ் குமாரை சிறப்பாக வழிநடத்தி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு செல்ல வித்திட்டார்.

2 ஆவது ஒருநாள் போட்டியில், வழமையாக இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இம் முறையும் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நிலையில், இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இந்திய அணித் தலைவர் கோலி,  பணித்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்கள் குணதிலக, டிக்வெல்ல ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். கடந்த முதலாவது போட்டியை போன்றே இலங்கையின் மத்திய வரிசை ஆட்டக்காரர்கள் கைகொடுக்கத் தவறிய போதிலும், மிலிந்த சிறிவர்தன மற்றும் கப்புகெதர ஜோடி 6 ஆவது விக்கெட்டுக்காக நிதானமாக ஆடி 91 ஓட்டங்களை சேர்த்தது.

 

3 ஆவது அரைச்சதம் கடந்த மிலிந்த சிறிவர்தன 58 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 100ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடும் கப்புகெதர 40 ஓட்டங்களையும், ஆரம்ப வீரர் நிரோஷன் டிக்வெல்ல 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

 

இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இந்திய அணிக்கு 50 ஓவர்களில் 237 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

 

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக பூம்ரா 4 விக்கெட்டுக்களையும், சஹால் 2 விக்கெட்டுக்களையும்,அக்சர் பட்டேல், பாண்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டியில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருக்கும் இந்திய அணிக்கு இப்போட்டியில் துடுப்பெடுத்தாட இருக்கும் நேரத்தில் மழை குறுக்கிட்டதால் போட்டி சற்று தாமதமாக ஆரம்பித்த காரணத்தால் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 47 ஓவர்களில் 231 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்பவிக்கெட் ஜோடியின் முதலாவது விக்கெட் 109 ஓட்டங்களைப் பெற்றபோது சரிக்கப்பட்ட, அகில தனஞ்சயவின் சுழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாது பலம்பொருந்திய இந்திய துடுப்பாட்ட வீரர்கள் வரிசை 22 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்தது தடுமாறியது.

 

இருப்பினும் அனுபவசாலியான முன்னாள் தலைவர் டோனி, தன்னுடன் மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய அனுபவமற்ற புவனேஷ்வர் குமாரை மிகவும் அவதானமாக வழிநடத்தி 8 ஆவது விக்கெட்டில் பிரிக்கப்படாத 100  ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க இந்திய அணி 3  விக்கெட் வித்தியாசத்தில் திறில் வெற்றபெற்றது.

டோனியின் நேரடி வழிநடத்தலில் விளையாடிய புவனேஷ்வர் குமார் தனது முதலாவது அரைசதத்தைப் பெற்றுக்கொடுத்தார் . டோனி ஆட்டம் இழக்காது 45 ஓட்டங்கள் பெற்றார்.

 

2 ஆவது ஒருநாள் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஆறு விக்க்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கை அணியின் புதுமாப்பிள்ளை அகில தனஞ்சய பெற்றுக்கொண்டார்.

நேற்றைய போட்டி இலங்கை அணிக்கு 800 ஆவது ஒருநாள் போட்டியாக அமைந்ததுடன் கோலி விளையாடிய  300 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியாகவும் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23565

Share this post


Link to post
Share on other sites

தனஞ்ஜயா புதிர் ஸ்பின்னில் திகைத்த இந்திய அணி: புவனேஷ், தோனி சாதனைக் கூட்டணியால் வெற்றி

 

 
dhoni

3 நாயகர்கள்: புவனேஷ், தோனி, புதிர் ஸ்பின்னர் தனஞ்ஜயா.   -  படம். | பிடிஐ.

பல்லகிலேயில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தனது ஸ்பின் வித்தைகளினால் இந்திய ஸ்டார்களைத் திகைக்க வைத்தார் தனஞ்ஜயா. ஆனால் தோனி, புவனேஷ் குமார் ஆகியோரது உறுதியான பேட்டிங்கினால் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணிக்கு 237 ரன்கள் வெற்றி இலக்கு என்பது மழை குறுக்கீடு காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 47 ஓவர்களில் 231 ரன்கள் என்று நிர்ணையிக்கப்பட்டது.

231 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி, வழக்கம் போல் தொடக்கத்தில் அசத்தியது ரோஹித் சர்மா (54), ஷிகர் தவண் (49) இணைந்து ரன்கள் 109 ரன்கள் என்ற தொடக்கத்தைக் கொடுத்தனர். 109/0 என்ற நிலையிலிருந்து இந்திய அணி 131/7 என்று சரிவு கண்டது, காரணம் இலங்கையின் 23 வயது இளம் ஸ்பின்னர் தனஞ்ஜயா அபாரமாக வீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே. 131/7 என்ற நிலையிலிருந்து தோனி 68 பந்துகளில் 45 ரன்களையும் (ஒரேயொரு பவுண்டரி), புவனேஷ் குமார் 80 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 53 ரன்களையும் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்து வெற்றிக்கு இட்டுச் சென்றனர். 44.2 ஓவர்களில் இந்திய அணி 231/7 என்று வெற்றி பெற்றது.

தனஞ்ஜயா இலங்கையின் இன்னொரு புதிர் ஸ்பின்னர். இவர் லெக்பிரேக், கூக்ளி, கேரம் பால், தூஸ்ரா, சில அரிய தருணங்களில் ஆஃப் ஸ்பின் என்று தன் கையில் பல வித்தைகளை வைத்திருக்கும் சகலகலா வல்லவர். அஜந்தா மெண்டிஸ் போல் இன்னொரு திறமை. இவர் இந்திய ‘சூப்பர்ஸ்டார்களை’ நேற்று உண்மையில் திகைக்கவைத்தார் என்றே கூற வேண்டும்.

54 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியும் புவனேஷ் குமாரையும், தோனியையும் வீழ்த்தி இலங்கையை வெற்றிக்குக் கொண்டு செல்ல முடியவில்லை என்பதால் தனஞ்ஜயா மனதுடைந்து போனார். காரணம் இவரிடம் காணப்படும் திறமை அபாரமானது, பல விதமான பந்துகளை வீசி திகைக்க வைத்தார், ஜாதவ், கோலி, ராகுல், பாண்டியா, ரோஹித் சர்மா என்று அனைவரும் இவர் என்ன வீசுகிறார் என்று ஆச்சரியமடைந்தனர்.

தோனியும், புவனேஷ் குமாரும் 8-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 100 ரன்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆகச்சிறந்த 8-வது விக்கெட் கூட்டணியாகும். அதே போல் வெற்றிபெற்ற விரட்டலில் 8வது விக்கெட்டுக்காக இதுவே சிறந்த ரன் கூட்டணியாகும்.

முதலில் ரோஹித் சர்மா இவர் 45 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 54 ரன்கள் எடுத்து அபாயகரமாகத் திகழ்ந்த போது மிடில் அண்ட் லெக் தனஞ்ஜயா பந்தை ஸ்வீப் செய்ய முயன்று எல்.பி.ஆனார். போகிற போக்கில் ரிவியூ ஒன்றையும் விரயம் செய்தார்.

ஷிகர் தவணும் 50 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து சிறிவதனாவின் விட்டிருந்தால் வைடு பந்தை ஸ்வீப் செய்து ஷார்ட் பைன்லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கேதார் ஜாதவ் 1 ரன்னில் தனஞ்ஜயாவின் கூக்ளிக்கு பவுல்டு ஆனார். ஆஃப் ஸ்பின்னர் கூக்ளி வீசுவார் என்று ஜாதவ் முற்றிலும் எதிர்பார்க்காமல் திகைப்படைந்தார். இதே ஓவரில் விராட் கோலி 4 ரன்களில் மீண்டும் கூக்ளி, பந்து வந்த லைனிலிருந்து தன் கால்காப்பை அகற்றிய விராட் கோலி தனது ராஜ கவர்டிரைவுக்கு முயன்றார், ஆனால் இம்முறை பேட்டுக்கும் பேடுக்கும் இடையே பந்து புகுந்து ஸ்டம்பைப் பதம் பார்த்தது.

கே.எல்.ராகுலும் கூக்ளியில் அதிர்ச்சியடைந்தார். பந்து உள்ளே நன்றாகத் திரும்பி பேடில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது. ராகுல் 4 ரன்களில் வெளியேற 15 பந்துகளில் தனஞ்ஜய 5 விக்கெட்டுகள்.

நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா ஸ்கோரர்களைத் தொந்தரவு செய்யாமல் தனஞ்ஜயாவின் இன்னொரு கூக்ளியில் மேலேறி வந்து ஆடி ஸ்டம்ப்டு ஆனார். அக்சர் படேல் 6 ரன்களில் தனஞ்ஜயாவின் திருப்பாமல் நேரே வீசப்பட்ட பந்துக்கு பீட் ஆகி எல்.பி.ஆனார்.

இந்திய அணி 131/7 என்று தடுமாறியது.

இந்நிலையில்தான் தோனி, புவனேஷ் குமார் உறுதிப்பாட்டுடன் களமிறங்கினர், தோனியின் வழிகாட்டுதலில் புவனேஷ் குமார் சிறப்பாக ஆடினார்.

2011-ல் முரளிதரனுக்கு தோனி இதே போல் வெற்றி ஒன்றை மறுத்தார், நேற்று இளம் தனஞ்ஜயாவுக்கும் இதையே செய்தார். 68 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 45 ரன்கள் நாட் அவுட், எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் தன் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெற்றியே இறுதி இலக்கு என்பது போல் பொறுமையுடனும் உறுதியுடனும் ஆடினார் தோனி. ஆனால் ஒருமுறை அதிர்ஷ்டம் இவருக்குக் கைகொடுத்தது. விஸ்வா பெர்னாண்டோ பந்து ஒன்று தோனியின் கால்களுக்கு இடையே சென்று ஸ்டம்பை உரசினாலும் பைல் கீழே விழவில்லை.

புவனேஷ் குமார் ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் மூலம் இலக்கை 50 ரன்களுக்குக் குறைத்து பிறகு அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் மூலம் இலக்கை 30 ரன்களுக்குக் கொண்டு வந்தார். கடைசியில் இலங்கை தனது 800-வது ஒருநாள் போட்டியில் போராடி தோல்வி தழுவியது.

ஆனாலும் தனஞ்ஜயாவின் வித்தைகளுக்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/sports/article19558978.ece?homepage=true

Share this post


Link to post
Share on other sites

இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கவுக்கு இரு போட்டிகள் தடை

ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க, இரு போட்டித் தடையை ஐ.சி.சி. விதித்துள்ளது.

Sri Lanka cricketer Upul Tharanga looks on during a practice session at the Galle International Cricket Stadium in Galle on August 3, 2014. Pakistan and Sri Lanka play a two-Test series starting in Galle from August 6. AFP PHOTO/ Ishara S. KODIKARA        (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/Getty Images)

 


இந்திய அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின்போது குறித்த நேரத்துக்குள் பந்துகளை வீசி முடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் காரணமாக  இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

http://metronews.lk/?p=12215

Share this post


Link to post
Share on other sites

3-ம் நிலையில் இறங்கியிருந்தாலும் அந்தப் பந்தில் பவுல்டு ஆகியிருப்பேன்: விராட் கோலி

 

 
kohli

தனஞ்ஜயாவிடம் பவுல்டு ஆகி வெளியேறும் விராட் கோலி.   -  படம். | ஏ.எஃப்.பி.

பல்லகிலேயில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் புதிர் ஸ்பின்னர் தனஞ்ஜயாவிடம் விராட் கோலி பவுல்டு ஆனார். தோனி, புவனேஷ் ஆகியோரது உறுதியான பேட்டிங்கினால் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது.

கோலி நேற்று தனது வழக்கமான 3-ம் நிலையில் களமிறங்கவில்லை. 4 ரன்களில் தனஞ்ஜயாவின் கூக்ளியில் பவுல்டு ஆனார். அவரது வழக்கமான ராஜ கவர் டிரைவ் ஸ்ட்ரோக்கில் பீட் ஆனார் கோலி.

இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் பேசிய கோலி கூறியதவது:

மிகவும் விறுவிறுப்பான ஆட்டம். ரசிகர்களும், வீர்ர்களுக்குமே நல்ல பொழுதுபோக்கு, இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். 230 ரன்கள் விரட்டலில் இரண்டு 100 ரன்கூட்டணி விநோதமானதுதான்.

230 ரன் விரட்டலில் 110/1 எனும்போது அனைவருக்கும் பேட்டிங் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்பினோம். எங்களுக்கு வருத்தமொன்றுமில்லை.

நான் 3-ம் நிலையில் களமிறங்கியிருந்தாலும் கூட அந்தக் குறிப்பிட்ட பந்தில் நான் பவுல்டு ஆகியே இருப்பேன். தனஞ்ஜய அப்படி அபாரமாகவே வீசினார். நாங்கள் அவரை நல்ல லெக்பிரேக்குகள் வீசும் ஒரு ஆஃப் ஸ்பின்னர் என்று நினைத்தோம், ஆனால் அவரோ 4 விக்கெட்டுகளைக் கூக்ளியில் கைப்பற்றினார்.

அவருக்கு எதிராக அடுத்த முறை இன்னும் எச்சரிக்கையாக இருப்போம். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ததும், அவரிடம் உள்ள கட்டுப்பாடும் அபாரமானது, பாராட்டத்தகுந்தது.

இவ்வாறு கூறினார் விராட்.

உபுல் தரங்கா: நெருக்கமாக வந்து தோல்வி அடைந்தது ஏமாற்றமாக உள்ளது, 100 ரன்கள் இந்திய அணிக்குத் தேவை எனும்போது நிறைய முயற்சி செய்தோம். ஆனால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. பவுலிங், பீல்டிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

 

 

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது போல் ஆடுமாறு கூறினார் தோனி: புவனேஷ் குமார்

 

 
buvanesh%202

புவனேஷ் குமார்.   -  படம்.| பிடிஐ.

100 ரன் கூட்டணியை தோனியுடன் அமைத்து இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற புவனேஷ் குமார், தோனி தன்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது போல் ஆடுமாறு ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார்.

2-வது ஒருநாள் போட்டியில் 131/7 என்ற நிலையில் இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற கூட்டணியில் புவனேஷ் குமார் 53 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இந்நிலையில் அவர் கூறியதாவது:

டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி ஆடுவேனோ அதே போல் ஆடுமாறு நான் இறங்கியவுடன் தோனி கூறினார். அழுத்தம் எதுவும் இல்லை, நிறைய ஓவர்கள் இருக்கின்றன, முழு ஓவர்களையும் ஆடினாலே நாம் எளிதில் வெற்றி பெறுவோம் என்றார் தோனி.

7 விக்கெட்டுகள் விழுந்த பிறகு இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றே நான் நினைத்தேன். நான் விளையாட முடியும் என்றும் தோனிக்கு ஆதரவாகச் செயல்பட முடியும் என்றும் நம்பினேன். அதைத்தான் செய்தேன்.

நன்றாகத் தொடங்கி பிறகு மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது எங்களுக்கு சற்றே பதற்றத்தை ஏற்படுத்தியது. ஓய்வறையிலிருந்து எந்த ஒரு மெசேஜும் இல்லை. 47 ஓவர்களையும் ஆடினால் வெற்றி பெற முடியும் என்ற ஒரே வாய்ப்புதான் இருந்தது. அதுதான் என் திட்டமாகவும் இருந்தது.

தனஞ்ஜயாவுக்கு எதிராக ஒரு திட்டம் வைத்திருந்தேன். அவர் ஆஃப் ஸ்பின்னர், ஆனால் லெக்ஸ்பின், கூக்ளி என்று அவர் விதம்விதமாக வீசியது எங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. கூக்ளியில் அவர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். எனவே அந்தப் பந்துகளை எதிர்கொள்ள முடிவெடுத்தேன். முதலில் அவரது பந்தைக் கணிப்பது கடினமாக இருந்தது. ஆனால் 10-15 பந்துகள் ஆடிய பிறகு அவரது மாற்றங்களை கணிக்க முடிந்தது.

வித்தியாசமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை என்ற நிலை இருந்ததால் சாதாரணமாகவே ஆடினோம். சிங்கிள், இரண்டு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஓடினோம், முண்டியடித்துக் கொண்டு 2வது ரன்னுக்காக ஓட வேண்டிய நிலை இல்லை, அதே போல் பெரிய ஷாட்களுக்கான தேவையும் இருக்கவில்லை, இயல்பான கிரிக்கெட்டை ஆடினோம்.

ஆனால் தோனி, ‘நீ எப்படி விரும்புகிறாயோ அப்படியே ஆடு’ என்றார். ஒரு கட்டத்துக்கு மேல் கொஞ்சம் அடித்து ஆடலாம் என்று ஆடினேன். தோனி அடித்து ஆடு என்று கூறவில்லை, அல்லது அவர் எனக்கு பொறுப்பு எதையும் கொடுக்கவில்லை, தன்னம்பிக்கை ஏற்பட்ட போது நான் ஷாட் ஆடினேன்.

ஒருநாள் போட்டிகளில் அரைசதம் எடுப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஒருநாள் கிரிக்கெட் என் பேட்டிங் பாணிக்கு ஒத்துவராது. பெரிய சிக்சர்களை அடிக்கும் பேட்ஸ்மென் நான் இல்லை. நேற்று முழுதும் டெஸ்ட் போட்டி போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. சஞ்சய் பாங்கருக்கு நன்றி, டெஸ்ட் தொடரின் போது அவர் என் பேட்டிங்கில் நிறைய பயிற்சிகளுக்கு உதவினார்.

இவ்வாறு கூறினார் புவனேஷ் குமார்.

http://tamil.thehindu.com/sports

Share this post


Link to post
Share on other sites

இலங்கையின் நிலைமை ; தலைவரானார் கப்புகெதர : சந்திமல், திரிமன்னே மீளழைப்பு, தரங்கவுக்கு தடை

Published by Priyatharshan on 2017-08-25 17:10:11

 

இந்திய அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டிக்கு தலைவராக கப்புகெதர நியமிக்கப்பட்டுள்ளார்.

sri-lanka-cricket---kapugedara.jpg

நேற்றைய 2 ஆவது ஒருநாள் போட்டியில் 3 ஓவர்கள் தமதமாக பந்துவீசியமைக்காக இலங்கை அணியின் ஒருநாள் தலைவர் உப்புல் தரங்கவுக்கு 2 போட்டிகள் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் கப்புகெதரவுக்கு தலைமைப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டெஸ்ட் அணியின் தலைவர் டினேஸ் சந்திமல் மற்றும் திரிமன்னே ஆகியோர் அணிக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.

தனுஷ்க குணதிலக்க 2 போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டவேளை ஏற்பட்ட உபாதையால் குணமாகுவதற்கு 10 நாட்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவது போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமாகக் கருதப்படுவதால் போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

http://www.virakesari.lk/article/23605

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this