• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

காலம் கடத்தும் சந்தர்ப்பம்

Recommended Posts

காலம் கடத்தும் சந்தர்ப்பம்

 

பிறழ் நடத்­தைகள் கார­ண­மாக கட்­டுக்­க­டங்­காமல் அதி­க­ரித்துச் செல்­கின்ற குற்­றச்­செ­யல்­க­ளையும், சமூ­க­வி­ரோதச்  செயற்­பா­டு­க­ளையும் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளாக உரு­வ­கப்­ப­டுத்தி, அதன் மூலம் பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முதன்­மைப்­ப­டுத்தி, இரா­ணு­வத்தின் வெளி­யேற்றம், இரா­ணு­வத்தின் வச­முள்ள காணி­களை விடு­வித்தல், உள்­ளிட்ட அவ­ச­ர­மாகத் தீர்க்க வேண்­டிய பிரச்­சி­னை­க­ளையும் அர­சியல் தீர்வு காணும்  அவ­சி­யத்­தையும் புறந்­தள்ளி, காலம் கடத்­து­வ­தற்­கு­ரிய  சந்­தர்ப்­பத்தை அர­சாங்­கத்திற்கு ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்கும்  இந்த நிலை­மைகள்  துணை­பு­ரியக் கூடும்.  

 

வாள்­வெட்டுக் குழு­வி­னரின் செயற்­பா­டுகள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­துள்ள போதிலும் உண்­மை­யா­கவே வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் யாழ்ப்­பா­ணத்தில் முடி­வுக்கு வந்­து­விட்­ட­னவா என்­பதை உறு­தி­யாக நம்ப முடி­யா­துள்­ளது. யாழ்ப்­பா­ணத்தில் அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்ற வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் வட­மா­கா­ணத்தை மட்­டு­மல்­லாமல், தென்­னி­லங்­கை­யிலும் அர­சியல் ரீதி­யாகப் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. சாதா­ரண சமூக விரோதச் செயற்­பா­டா­கவும் சாதா­ரண இளை­ஞர்­களின் ஒழுக்கப் பிறழ்வு செயற்­பாடு சார்ந்த குற்றச் செயல்­க­ளா­க­வுமே வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களை பொலிஸார் முதலில்  நோக்­கி­யி­ருந்­தனர். 

யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­யனை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட நல்லூர் துப்­பாக்­கிப்­பி­ர­யோக சம்­ப­வத்­தை­ய­டுத்து, மோட்டார் சைக்­கிளில் சென்று கொண்­டி­ருந்த இரண்டு பொலிஸார் மீது துரத்தி துரத்தி நடத்­தப்­பட்ட வாள்­வெட்டுச் சம்­ப­வமே பொலிஸ் திணைக்­க­ளத்தை தூக்­கத்­தி­லி­ருந்து விழித்­த­வனைப் போன்ற நிலைக்குத் தள்­ளி­யி­ருந்­தது.

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் அங்­குள்ள இளை­ஞர்­களை படு­கா­யப்­ப­டுத்தி நேர­டி­யாகப் பாதித்­தி­ருந்­தன. குழுக்­க­ளாக இயங்கும் இளை­ஞர்­க­ளி­டையே ஏற்­பட்­டி­ருந்த போட்டிச் செயற்­பா­டுகள் மற்றும் கண்­ட­றி­யப்­ப­டாத பல கார­ணங்­களே இந்த வாள்­வெட்டுச் சம்­ப­வங்­க­ளுக்கு அடிப்­படைக் கார­ணங்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றது.

பயங்­க­ர­வாதம் குறித்த உரு­வகம் 

அதே­நே­ரத்தில் பட்­டப்­ப­கலில் மக்கள் நட­மாட்டம் மிகுந்த கடை­வீதி உள்­ளிட்ட பல பகு­தி­களில் இடம்­பெற்ற துணி­க­ர­மான வாள்­வெட்டுச் சம்­ப­வங்­க­ளினால் பொது­மக்கள் பெரிதும் பீதி­ய­டைந்­தி­ருந்­தார்கள். அடுத்த வாள்­வெட்டுச் சம்­பவம் எங்கு நடக்கப் போகின்­றதோ, யாரை வெட்டிச் சரிக்கப் போகின்­றார்­களோ, அடுத்­த­டுத்து என்ன நடக்கப் போகின்­றதோ என்று சாதா­ரண மக்கள் பெரும் அச்­சத்தில் ஆழ்ந்­தி­ருந்­தார்கள். 

கொக்­குவில், நந்­தாவில் பகு­தியில் இரண்டு பொலிஸார் மீது நடத்­தப்­பட்ட வாள்­வெட்டுச் சம்­ப­வ­மா­னது, சாதா­ரண பொது­மக்­களில் இருந்து சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­கின்ற பொலி­ஸாரின் பக்கம் வாள்­வெட்டுக் குழுக்­களின் கவனம் திரும்­பி­யி­ருக்­கின்­றதே என்று பொலிஸ் திணைக்­களம் அச்­ச­ம­டை­யவும், வாள்­வெட்டுக் குழுக்கள் மீது அக்­கறை செலுத்திச் செயற்­ப­டவும் தூண்­டி­யி­ருந்­தது. 

இத­னை­ய­டுத்தே அவ­சர அவ­ச­ர­மாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர யாழ்ப்­பா­ணத்­திற்­கான அவ­சர விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார். அந்த விஜ­யத்தின்போது யாழ்ப்­பா­ணத்தின் சிவில் பாது­காப்பு நிலை­மை­க­ளையும் சட்டம் ஒழுங்கு நிலை­மை­க­ளையும் நேர­டி­யாகக் கண்­ட­றிந்தார். அதற்கு முன்­ன­தாக பொலி­ஸாரின் அறிக்­கைகள் பொலிஸ் புல­னாய்வுப் பிரி­வி­னரின் அறிக்­கைகள் என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு யாழ்ப்­பா­ணத்தின் நிலை­மைகள் குறித்­ததோர் உரு­வ­கத்தை அவர் கொண்­டி­ருந்தார். பொலிஸார் மீதான வாள்­வெட்டுச் சம்­ப­வமும், யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­யனின் மெய்ப்­பா­து­கா­வ­லர்கள் மீது உயிரைப் பறிக்கும் அள­வுக்கு நடத்­தப்­பட்ட தீவி­ர­மா­ன­தொரு துப்­பாக்­கிப்­பி­ர­யோகத் தாக்­கு­தலும் யாழ்ப்­பா­ணத்தின் பாது­காப்பு நிலை­மைகள் குறித்த அவ­ரு­டைய உரு­வ­கத்­திற்கு உறு­து­ணை­யாக அமைந்­தி­ருந்­தது. யாழ்ப்­பா­ணத்தில் சட்டம் ஒழுங்கு சீர்­கு­லைந்து பயங்­க­ர­வாதம் தலை­தூக்­கி­யி­ருக்­கின்­றது என்ற உரு­வ­கத்­தையே பொலிஸ் மா அதிபர் கொண்­டி­ருந்தார் என்­பதை யாழ். பிர­தேச சிவில் பாது­காப்பு குழு­வினர் மற்றும் சமூகப் பெரி­யார்கள், முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்­டி­ருந்த கூட்­டத்­திலும், அதன் பின்னர் இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்கள் சந்­திப்­பிலும், அவர் கூறிய கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

அதி­ர­டிப்­படை, இரா­ணு­வத்­தி­ன­ருடன் இணைந்த கூட்டுக் காவல் நட­வ­டிக்கை 

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற சிவி­லி­யன்கள் சார்ந்த துப்­பாக்­கிச்­சூட்டுச் சம்­பவங்­களும், வாள்­வெட்டுக் குழுக்­களின் அடா­வ­டித்­த­னங்­களும் அங்கு மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­தூக்­கி­யி­ருப்­ப­தையே அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக பொலிஸார் கரு­தி­யி­ருந்­தனர். அதன் கார­ண­மா­கவே எந்தக் கார­ணத்தைக் கொண்டும் பயங்­க­ர­வாதம் மீண்டும் தலை­தூக்­கு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என அவர் அப்­போது கூறி­யி­ருந்தார். 

அத்­துடன் நிலை­மையைக் கட்­டுப்­பாட்டில் கொண்டு வரு­வ­தற்­காக பொலிஸார் அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரு­டனும், இரா­ணு­வத்­தி­ன­ரு­டனும் இணைந்து கூட்டுக் காவல் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வ­தற்கு ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட்டு, சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு அதற்­கு­ரிய பணிப்­பு­ரைகள் விடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் பொலிஸ் மா அதிபர் கூறி­யி­ருந்தார். அது மட்­டு­மல்­லாமல், இத்­த­கைய கூட்டுச் சுற்­றுக்­காவல் நட­வ­டிக்­கைக்கு அரச தலை­வர்­க­ளான பிர­தமர் மற்றும் ஜனா­தி­பதி ஆகி­யோரின் அங்­கீ­கா­ரமும் பெறப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற அடா­வ­டித்­த­ன­மான சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் இருப்­ப­தாகத் தாங்கள் கண்­ட­றிந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தி­ருந்த பின்­ன­ணியில், ஆயுதப் பயிற்சி பெற்று இரா­ணு­வத்­தி­ன­ருடன் சண்­டை­களில் ஈடு­பட்­டி­ருந்த முன்னாள் விடு­த­லைப்­பு­லி­க­ளிடம், பொலி­ஸா­ரையும் படை­யி­ன­ரையும் எதி­ரி­க­ளாகக் கருதிச் செயற்­ப­டு­கின்ற மன­நி­லையில் மாற்றம் ஏற்­ப­ட­வில்லை என்­ப­தையும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். 

படைத்­த­ரப்­பிலும் மனப்­பாங்கில் மாற்­ற­மில்லை 

சண்­டை­யி­டு­கின்ற மனப்­பான்­மையில் மாற்றம் காணாத முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் மீண்டும் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்கு, யாழ். பிர­தே­சத்தில் அர­சுக்குத் தெரிந்தும் தெரி­யாத இடங்­க­ளிலும் மறைத்து வைக்­கப்­பட்­டுள்ள பெருந்­தொ­கை­யான ஆயு­தங்­களும் ஊக்­கு­விக்கும் அம்­ச­மாக இருக்­கின்­றன என்ற தொனியில் பொலிஸ் மா அதி­பரின் கருத்­துக்கள் அமைந்­தி­ருந்­தன. 

மிகவும் பிர­ப­ல­மாக பேசப்­பட்ட ஆவா குழு­வி­னரே பொலிஸார் மீது வாள்­வெட்டுத் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­தனர் என்­பதைக் கண்­ட­றிந்த பொலிஸார், பொலிஸா­ரைத்தான் தாக்க வேண்டும் என்று ஏற்­க­னவே திட்­ட­மிட்ட வகையில், இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தல்ல என்­ப­தையும் கண்­ட­றிந்­தி­ருக்­கின்­றார்கள். பொலிஸார் மீதான கொக்­குவில் வாள்­வெட்டுச் சம்­ப­வத்­தை­ய­டுத்து, ஒரு வாரத்­துக்கும் சற்று அதி­க­மான தினங்­க­ளி­லேயே அந்த வாள்­வெட்டு குழு­வி­னரை இனங்­கண்டு, அவர்­களின் நட­மாட்­டங்­களைப் புல­னாய்வு செய்து, அந்தத் தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரி­களை கொழும்பில் வைத்து அவர்­க­ளுக்கு சற்றும் சந்­தேகம் ஏற்­ப­டாத வகையில் சாது­ரி­ய­மாக, பொலிஸார் திடீ­ரென கைது செய்­துள்­ளனர். 

கொழும்பில் கைது செய்­யப்­பட்ட முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யா­கிய நிசா விக்டர் என்­பவர் ப­யங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வி­ன­ரு­டைய விசா­ர­ணை­யின்­போது அளித்­துள்ள வாக்­கு­மூ­லத்தில் "ஆவா" குழுவில் என்­னுடன் தர்க்­கப்­பட்­டுக்­கொண்டு பிரிந்து சென்று வேறு ஒரு குழுவை ஆரம்­பிக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்த தனு ரொக் என்­பவர் மீது வாள்­வெட்டு தாக்­குதல் நடத்­து­வ­தற்­காகச் சென்­ற­போது இரண்டு பொலிஸார் செல்­வதைக் கண்டு, அவர்கள் தங்­களைப் பிடிப்­ப­தற்­கா­கவே வந்­தனர் எனக் கருதி அவர்கள் இரு­வ­ரையும் துரத்தித் துரத்தி வாளினால் வெட்­டினோம்' என்று தெ­ரி­வித்­துள்ளார். இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­வர்­களின் பெயர் விப­ரங்­க­ளையும் அவர் தனது வாக்­கு­மூ­லத்தில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். 

நிலைமை இவ்­வா­றி­ருக்க அதி­க­மான குற்றச் செயல்­களைப் பயங்­க­ர­வாத முலாம் பூசி, முன்னாள் விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­பட முயற்­சிக்­கின்­றார்கள் அல்­லது அவ்­வாறு பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள் என்று பொலி­ஸாரும் இரா­ணு­வத்தினரும் முடிவு செய்­து­வி­டு­கின்­றார்கள். இதனை ஆவா குழு சம்­பந்­த­மாக 13 பேர் கைது செய்­யப்­பட்டு நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­க­ளிலும், யாழ்ப்­பா­ணத்தில் அதி­க­ரித்­துள்ள குற்றச் செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக பொலிஸார் அவ­சர அவ­ச­ர­மாக இரா­ணு­வத்தின் துணையை நாடிய செயற்­பாட்­டிலும் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது. 

விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான மோதல்­க­ளின்­போது, விடு­த­லைப்­பு­லி­களை எவ்­வா­றா­யினும் அழித்­து­விட வேண்டும் என்ற இரா­ணுவ முனைப்­புடன் செயற்­பட்ட மனப்­பாங்கில் இருந்து படைத்­த­ரப்­பி­னரும், பொலி­ஸாரும் இன்னும் விடு­ப­டாத போக்­கையே காண முடி­கின்­றது. இதன் கார­ண­மா­கவே,  வடக்கில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­யெ­டுக்­கின்­றது, முன்னாள் விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­பட முயற்­சிக்­கின்­றார்கள் என்ற திடீர் முடி­வோடு பொலி­ஸாரும் இரா­ணு­வத்­தி­னரும் கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்த நேர்ந்­தி­ருக்­கின்­றது. 

இளை­ஞர்­களின் போக்கு 

படைத்­த­ரப்­பி­னரின் மனப்­பாங்கும், குற்றச் செயல்­களை முளை­யி­லேயே கிள்­ளி­யெ­றி­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை சரி­யான திட்­ட­மிட்ட செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­காத கார­ணத்­தி­னா­லேயே யாழ்ப்­பா­ணத்தில் குற்­ற­ச்­செ­யல்­களும் வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களும் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் சவால்­க­ளுக்கு உள்­ளாக்­கத்­தக்க வகை­யி­லான மணற்­கொள்ளை நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வதில் பொலிஸார் இறுக்­க­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­காத போக்கு ஒரு புற­மி­ருக்க, குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்த சமூ­க­மாக யாழ்ப்­பாண சமூகம் மாற்­ற­ம­டை­வ­தற்கு ஒரு சார­ரா­கிய இளை­ஞர்­களின் நடத்­­தை­களும் முக்­கிய கார­ண­மா­கி­யி­ருக்­கின்­றன. 

தமி­ழர்­களின் கலா­சாரத் தலை­ந­க­ராகக் கணிக்­கப்­ப­டு­கின்ற யாழ்ப்­பா­ணத்­தி­லேயே பல்­வேறு குற்றச் செயல்­களும் வாள்­வெட்டு, போதைப்­பொருள் பாவனை, போதைப்­பொருள் கடத்தல், சிறு­மியர் பெண்கள் மீதான பாலியல் வன்­முறைச் செயற்­பா­டுகள் உள்­ளிட்ட சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டு­களும் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. குற்றச் செயல்­களும் சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டு­களும் கட்­டுக்­க­டங்­காமல் யாழ்ப்­பா­ணத்தில் அதி­க­ரித்­தி­ருப்­பது என்­பது தமி­ழர்­களின் கலா­சா­ரத்­தையும் வாழ்க்கைப் பண்­பாடு, பழக்க வழக்­கங்கள் என்­ப­வற்­றையும் இழி­நி­லைக்குத் தள்ளிச் செல்­வ­தற்கு வழி­ச­மைத்­தி­ருக்­கின்­றது. இது கவ­லைக்­கு­ரி­யது.

அதற்கும் அப்பால், ஒரு சாரா­ரா­கிய இளை­ஞர்­களின் இத்­த­கைய போக்கு தமிழ் மக்­களின் எதிர்­கால நல்­வாழ்க்­கை­யையும், தமிழ்ச்­ச­மூ­கத்தின் எதிர்­கால சுபீட்­சத்­தை­யும்­கூட கேள்­விக்கு உள்­ளாக்கச் செய்­தி­ருக்­கின்­றது என்றே கருத வேண்­டி­யுள்­ளது. இந்த நிலை­மை­யா­னது, தமிழ் மக்கள் யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கும், தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களின் ஆணி­வே­ரா­கிய அர­சியல் தீர்வு ஒன்றைக் காண்­ப­தற்­கும்­கூட ஒரு முக்­கிய சவா­லாக மாற்றம் பெறத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது என்­ப­தையும் குறிப்­பிட வேண்­டி­யது கட்­டா­ய­மா­கின்­றது. 

பிறழ் நடத்­தைகள் கார­ண­மாக கட்­டுக்­க­டங்­காமல் அதி­க­ரித்துச் செல்­கின்ற குற்­றச்­செ­யல்­க­ளையும், சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டு­க­ளையும் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளாக உரு­வ­கப்­ப­டுத்தி, அதன் மூலம் பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முதன்­மைப்­ப­டுத்தி, இரா­ணு­வத்தின் வெளி­யேற்றம், இரா­ணு­வத்தின் வச­முள்ள காணி­களை விடு­வித்தல் உள்­ளிட்ட அவ­ச­ர­மாகத் தீர்க்க வேண்­டிய பிரச்­சி­னை­க­ளையும் அர­சியல் தீர்வு காணும் அவ­சி­யத்­தையும் புறந்­தள்ளி, காலம் கடத்­து­வ­தற்­கு­ரிய சந்­தர்ப்­பத்தை அர­சாங்­கத்திற்கு ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்கும் இந்த நிலை­மைகள் துணை­பு­ரியக் கூடும். 

பழை­மையும் நவீ­னமும்

குற்றச் செயல்­க­ளையும், சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டு­க­ளையும் வெறு­மனே பொலி­ஸாரின் சட்டம் ஒழுங்கு நட­வ­டிக்­கை­களின் மூலம் மட்டும் முழு­மை­யாகக் கட்­டுப்­ப­டுத்தி ஒரு நல்ல சமூ­கத்தை உரு­வாக்­கி­விட முடி­யாது. யுத்­தத்­திற்கு முந்­திய காலப்­ப­கு­தியில் சமூ­கக்­கட்­டுப்­பா­டுகள் இறுக்­க­மாக இருந்­தன. கிரா­மங்­க­ளிலும் பிர­தே­சங்­க­ளிலும் வாழை­யடி வாழை­யாக வாழ்ந்­த­வர்­களே வசித்து வந்­தார்கள். அத்­துடன் கலை, கலா­சாரம் பண்­பாடு, வாழ்க்கை முறைகள் என்­ப­னவும் ஆன்­மீக உணர்­வு­க­ளுடன் கூடிய மனிதப் பண்பும் மேலோங்­கி­யி­ருந்­தன. அப்­போது கல்­வி­யிலும் பொருள் தேட்­டத்­திலும், சமூக அந்­தஸ்து மிக்க உயர்­வான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்­ணமும் நோக்­கமும் பொது­வாக சமூ­கத்தில் மேலோங்­கி­யி­ருந்­தன. 

ஆனால் முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த யுத்தம் சமூ­கக்­கட்­டுப்­பா­டு­க­ளையும், தனியார், குடும்­பங்கள் மற்றும் சமூக வாழ்க்கை நெறி­மு­றை­களைத் தகர்த்­தெ­றிந்­து­விட்­டது. இடப்­பெ­யர்வு கார­ண­மாக ஏற்­பட்­டி­ருந்த மனம்­போன வழி­யி­லான வாழ்க்கை நடை­மு­றை­களும், இரா­ணுவ மேலா­திக்கம் மிக்க நடை­மு­றைகள் செலுத்­திய மோச­மான செல்­வாக்கும் தகர்த்­தெ­றி­யப்­பட்ட வாழ்க்கை முறை­களை மீளெழச் செய்­வ­தற்குத் தடைக்­கற்­க­ளாகிப் போயின.  மீள்­கு­டி­யேற்­றத்­தின்­போது பிர­தே­சங்­க­ளுக்குத் திரும்பி வந்­த­வர்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருந்த மன­மாற்­றங்கள், மாறு­பட்ட வாழ்க்கை முறைகள் என்­ப­னவும் பண்­பா­டுகள் நிறைந்த வாழ்க்­கையை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உத­வ­வில்லை.

தொலைக்­காட்­சியின் தாக்­கமும், தவிர்க்க முடி­யாத கைத்­தொ­லை­பே­சியின் பயன்­பாடும், நவீன தொலைத்­தொ­டர்பு வச­தி­களின் ஆதிக்­கமும், மக்­க­ளு­டைய வாழ்க்­கையில் வலி­மை­யோடு வந்து நுழைந்த இணை­யத்­தளப் பயன்­பாடும், பாரம்­ப­ரிய பண்­பாடு, வாழ்க்கை முறை­க­ளுக்கு நேர்­மா­றான வழி­மு­றை­களில் சமூ­கத்தை இட்டுச் சென்­றி­ருக்­கின்­றன.  இந்த நிலை­மையும் இன்­றைய இளை­ஞர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­களை பிறழ் நடத்­தை­ கொண்­ட­வர்­க­ளாக்­கு­வ­தற்குத் தூண்­டி­யி­ருக்­கின்­றன என்றே கூற வேண்டும்.

 

என்ன செய்­யலாம்? 

யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­யனை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் இருந்து அவர் தப்­பு­வ­தற்கு நல்லூர் முரு­கனின் அருள் முக்­கிய கார­ணமாய் இருந்­தது என தெரி­வித்­துள்ள மட்­டக்­க­ளப்பு நீதிவான் எம்.கணே­ச­ராஜா, வன்­முறை கலா­சா­ரத்தில் மூழ்­கி­யுள்ள இளை­ஞர்கள் நல்­வ­ழிக்குத் திரும்­பு­வ­தற்கு இறை­பக்­தியே அவ­சியம் என வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்ப்பு சொல்லும் நீதி­ப­தி­க­ளா­கிய நாங்­களும் இறை­வனின் சக்­தியை மேலாக நம்­பு­கிறோம் என அவர் குறிப்­பிட்­டுள்ளார். மட்­டக்­க­ளப்பு, புளி­யந்­தீவு, வாவிக்­கரை வீதி அருள்­மிகு சித்­தி­ர­வே­லா­யுத சுவாமி ஆல­யத்தின் வரு­டாந்த உற்­ச­வத்­தின்­போது அவர் தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் காத்­தி­ர­மா­னவை. 

'யுத்­தத்தின் பின்பு இளை­ஞர்கள் மத்­தியில் நல்ல செயல்­களை நாம் எதிர்­பார்த்தோம். ஆனால், அவர்கள் மத்­தியில் வன்­முறை கலா­சா­ரமே அதி­க­ரித்­துள்­ளது. இறை­பக்தி இன்­மையே இதற்குக் காரணம். இறை­பக்தி இல்­லாத கார­ணத்­தினால் குற்றச் செயல்கள் அதி­க­ரித்­துள்­ளன. இறை­பக்­தியில் கரி­ச­னை­கொண்டு, அதனை வளர்ப்­பதன் மூலம், குற்­ற­மற்ற சமூ­கத்தை உரு­வாக்க முடியும். வெறு­மனே நீதி­மன்­றங்­க­ளினால் வழங்­கப்­ப­டு­கின்ற தண்­ட­னை­களால் மட்டும் குற்­றச்­செ­யல்­களை முற்­றாக ஒழிக்க முடி­யாது. நீதிமன்றத் தீர்ப்புக்கள் குற்றச் செயல்களை ஓரளவுக்கே கட்டுப்படுத்த முடியும்' என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்­துடன் யாழ்ப்­பா­ணத்தின் இன்­றைய நிலை­மையை அவர் சொற்­களில் படம்­பி­டித்துக் காட்­டி­யுள்ளார்.  'கல்­வியில் அதிகம் ஆர்வம் காட்­டிய யாழ்ப்­பா­ணத்தில் தற்­போது போதைப்­பொருள் கடத்தல், கசிப்பு உற்­பத்தி, போதைப்­பொருள் பாவனை, பாலியல் குற்றச் செயல்கள், விப­சாரம், வீதிப்போக்­கு­வ­ரத்து விதி­களை மீறிச் செயற்­ப­டு­வது, பெண்கள் மீதான பாலியல் குற்­றங்­களைப் புரிதல் போன்ற குற்­றச்­செ­யல்­களும், சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டு­களும் அதி­க­ரித்துக் காணப்படுகின்றமை வேதனையளிக்கின்றது. 

'தற்­போது மனி­தர்­க­ளி­டத்தில் மனி­த­நேயம் அற்று, மாறாக வன்­மு­றை­களைத் தூண்டும் மனப்­பாங்கும், வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­கின்ற மனோ­பா­வமும் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றன. வெறு­மனே நீதி­மன்­றங்­களில் வழங்­கப்­ப­டு­கின்ற தீர்ப்­புக்­களின் மூலம் மட்டும் இவற்­றுக்குத் தீர்வு காண முடி­யாது. குற்­றச்­செ­யல்­களைப் புரி­வோரின் மனங்­களில் மாற்றம் ஏற்­பட வேண்டும். குரோ­தங்­க­ளுக்குப் பதி­லாக அவர்­க­ளி­டத்தில் மனிதப் பண்­புகள் வளர்ந்து மேலோங்க வேண்டும். அதற்கு ஆன்­மீக உணர்வு அத்­தி­யா­வ­சியம். அதன் மூலம் குற்­றச்­செ­யல்­க­ளிலும் சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­ப­டு­கின்ற இளை­ஞர்­களின் மனங்­களில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நீதிவான் கணேசராஜா சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

சமூ­கத்­திலும், இளை­ஞர்கள் மத்­தி­யிலும் ஆன்­மீக உணர்­வையும் பண்­பாட்டுத் தன்­மை­யையும் நல்ல மனோ­பா­வத்­தையும் ஏற்­ப­டுத்­து­வதில் மதத் தலை­வர்­களும், ஆன்­மீ­க­வா­தி­களும், சமூகப் பெரி­யார்­களும் முன்­வர வேண்டும்.  சமூக சீர்­தி­ருத்தச் செயற்­பா­டு­களில் இவர்­க­ளுடன் அர­சியல் தலை­வர்கள் மற்றும் அர­சி­யல்­வா­தி­களின் பங்­க­ளிப்பும் மிக­மிக அவ­சியம். சமூக சீர்­தி­ருத்தச் செயற்­பா­டு­க­ளுக்­கான வேலைத்­திட்­டங்­க­ளையும் நிகழ்ச்­சி­க­ளையும் திட்­ட­மிட்ட வகையில் சமூ­கத்தில் பர­வ­லாக முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சியல் ரீதி­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதில் அவர்களும் கவனம் செலுத்திச் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

– செல்­வ­ரட்னம் சிறி­தரன் –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-12#page-1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this