Sign in to follow this  
நவீனன்

''அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, பூச்சாண்டி காட்டும் தினகரன் தான், '420

Recommended Posts

 

''அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, பூச்சாண்டி காட்டும் தினகரன் தான், '420' எனப்படும், மோசடி பேர்வழி. ஸ்டாலின், நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தால், நாங்கள் சந்திக்க தயார்,'' என, டில்லியில், நேற்று, முதல்வர் பழனிசாமி அதிரடி பேட்டி அளித்தார். மேலும், அ.தி.மு.க., அணிகள் இணையும் என, நம்பிக்கை தெரிவித்த அவர், பிரதமரை சந்தித்து, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார்.

 

பூச்சாண்டி,boogeyman, தினகரன் 420, Dinakaran 420, அ.தி.மு.க அரசு,ADMK government,  ஸ்டாலின்,Stalin, நம்பிக்கை யில்லா தீர்மானம் ,No confidence ,டில்லி, Delhi,முதல்வர் பழனிசாமி,Chief minister Palanisamy, நீட் தேர்வு , NEET Exam, தமிழகம், Tamilnadu, சென்னை, Chennai, தேர்தல் கமிஷன்,  Election Commission, லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை,Lok Sabha Deputy speaker Thambidurai,,  தமிழக அரசு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், Tamil Nadu Chief Secretary Girija Vaidyanathan,

சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத் தில், நேற்று முன்தினம், முதல்வர் பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், 'அ.தி.மு.க., துணை பொதுச்

செயலராக தினகரன் நியமிக்கப்பட்டது, சட்ட விரோத மானது; அவர் வெளியிடும் அறிவிப்பு கள், அ.தி. மு.க., தொண்டர்கள் எவரையும் கட்டுப்படுத் தாது' என,தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இது, தினகரன் அணியி னரிடம், கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தி யது. இது தொடர்பாக, முதல் வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களை, தினகரன் கடுமையாக சாடினார்.
 

'நீங்க தான்420


அ.தி.மு.க., பெயரை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ள நிலையில், கட்சி யின், 'லெட்டர் பேடில்' தீர்மானம் நிறை வேற்றி உள்ளனர். இந்த மோசடி குறித்து, தேர்தல் கமிஷனில் புகார் செய்தால், பதவி பறி போய் விடும். 'தீர்மானத்தில் கையெழுத்திட் டுள்ள, முதல்வர் உட்பட அனைவரும், 420' என்றும், காட்டமாக விமர்சித்தார்.

மோசடி, ஏமாற்றுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, இந்திய தண்டனை சட்டத் தின், 420வது பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்வது வழக்கம். அதனால், மோசடி

 

பேர்வழிகள், '420' என, அழைக்கப்படுகின்றனர். எனவே, தினகரனின் விமர்சனம், அரசியல் வட்டாரத்தில், பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற் காக, முதல்வர் பழனிசாமி, நேற்று முன்தினம், டில்லி சென்றார். டில்லியில், நேற்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை, தமிழக அரசு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனி ருந்தனர். பிரதமரிடம் பேசிய முதல்வர், 'நீட்' தேர்வில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார்.
 

நம்பிக்கை


பிரதமரை சந்தித்த பின், முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி:

தினகரன், '420' என, குறிப்பிட்டது, அவருக்கு தான் பொருந்தும். ஏனென்றால், மூன்று மாத நிலையை, நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அதற்கு யார் பொருத்தம் என்றால், அவர் தான் பொருத் தமாக இருப்பார். அ.தி.மு.க., அணிகள் இணைப்பு குறித்து, எங்கள் தரப்பிலும் சரி, அவர்கள் தரப்பிலும் சரி, பேச்சு நடைபெற வில்லை; இணையும் என, நம்புகிறோம். ஸ்டாலின், ஏற்கனவே எங்கள் மீது, நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தார்; அதில் வெற்றி பெற்றோம். பின், சபாநாயகர் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில், ஒரு ஓட்டு கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றோம். இப்போதும் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால், நிச்சயமாக அதிக ஓட்டுகளில், நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு முதல்வர் கூறினார். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1832104

Share this post


Link to post
Share on other sites

'அதிமுகவில் உள்ள அனைவருமே 420 தான்': ஜெ.அன்பழகன் சாடல்

 

 
anbazhagan

‘அதிமுகவில் உள்ள அனைவருமே 420 தான், அதில் யார் நம்பர் ஒன் 420 என்பதில் தான் அவர்களுக்குள் போட்டி நிலவுகிறது’ என திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் விமர்சித்துள்ளார்.

மேலும், தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதற்கும் கமல்ஹாசனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

முன்னதாக, டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என பழனிசாமி அணியினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தினகரன், "முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ‘420-கள்’ என" தினகரன் கூறியிருந்தார். தினகரனின் கருத்தைச் சுட்டிக்காட்டி நிருபர்கள் முதல்வர் பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியபோது, "டிடிவி தினகரனின் 3 மாத செயல்பாடுகளைப் பார்த்தால், ‘420’ என்பது அவருக்குத்தான் பொருந்தும்" என்று கூறினார்.

அதிமுக உட்கட்சி பூசல் வலுத்துவரும் நிலையில், அதிமுகவில் உள்ள அனைவருமே 420 தான், அதில் யார் நம்பர் ஒன் 420 என்பதில் தான் அவர்களுக்குள் போட்டி நிலவுகிறது என திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் விமர்சித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19479636.ece?homepage=true

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this