Jump to content

வேலையில்லா பட்டதாரி 2


Recommended Posts

 
card-bg-img
 

தனுஷ் தன் திரைப்பயணத்தில் மிக மோசமான நிலையில் இருந்த போது அவரை தூக்கிவிட்ட படம் விஐபி.

ஒட்டு மொத்த இன்ஜினியரிங் மாணவர்களின் ஆதரவுடன் செம்ம ஹிட் அடிக்க, தற்போது விஐபி-2வில் மீண்டும் இறங்கி அடிக்க தனுஷ் களம் இறங்கியுள்ளார், தனுஷ் இறங்கி அடித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

விஐபி தனுஷ் திரைப்பயணத்தில் பிரமாண்ட வெற்றி. சிம்பிள் கதை, பண பலம் உள்ளவன் நினைத்தால் எதையும் செய்யலாம். ஆனால், இளைஞர் சக்தி அதை விட பெரியது என்று காட்டியிருப்பார்கள்.

அதே டெம்ப்ளைட் தான், என்ன இதில் கொஞ்சம் அதிக பட்ஜெட் அவ்வளவு தான், கஜோல் என்ற எல்லோரும் தெரிந்த முகம்.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரும் Construction வைத்திருப்பவர் கஜோல். அவர் construction எடுக்கும் புராஜக்டில் தனுஷும் உள்ளே வர, பிறகு இவர்களுக்குள் நடக்கும் கிளாஷ் தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

தனுஷ் என்ற ஒரு தனி ஆள் தான் மொத்த படத்தையும் தோளில் சுமக்கின்றார். தண்ணி அடித்துவிட்டு மனைவியிடம் திட்டு வாங்குவது, அதற்கு அப்பா ஆறுதல் சொல்வது என நடுத்தர இளைஞரை கண்முன் கொண்டு வந்துள்ளார், ஆனால், விஐபி-1 விட கொஞ்சம் ஓவர் ஆக்டிங் சார்.

கஜோல் எத்தனை வருடம் கழித்து நடிக்க வந்தாலும், அந்த கிரேஸ் குறையவே இல்லை. ஆனால், அவருக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை என்பதே நிஜம்(கஜோலை விட எடுபிடியாக வரும் ரைஸாவிற்கு விசில் சத்தம் அதிகம் பறந்தது வேறுக்கதை). மேலும், முந்தைய பாகத்தில் வந்த சுரபிக்கு பதிலாக (சீரியலில் இவருக்கு பதிலாக இவர் என்று வருவது போல்) ரிது வர்மா வருகின்றார்.

விஐபி-1 மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் படத்தில் உள்ள யதார்த்தம் தான், அந்த யதார்த்தம் இதில் கொஞ்சம் மிஸ் ஆனதோ என யோசிக்க தோன்றுகின்றது. சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குனராக இப்படத்தில் வெற்றி பெற்றுவிட்டார், இருந்தாலும், இன்னும் கொஞ்சம் அழுத்தமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

இதற்கு முக்கிய காரணம் கஜோல் போல் ஒரு நடிகையின் பெயரையும் டேமேஜ் செய்யக்கூடாது. அதே நேரத்தில் தனுஷையும் மாஸாக காட்ட வேண்டும் என்பதில் கொஞ்சம் சறுக்கிவிட்டார்.

ஷான் ரோல்டன் என்ன தான் பாடல்கள், இசை என அடித்து நொறுக்கினாலும், இரண்டு செகண்ட் வரும் அனிருத்தின் பிஜிஎம் தியேட்டரே அதிர்கின்றது. அனிருத்தை கண்டிப்பாக விஐபி-2 மிஸ் செய்கின்றது.

க்ளாப்ஸ்

தனுஷின் யதார்த்த நடிப்பு, படத்தின் முதல் பாதி, சரண்யாவை பயன்படுத்திய விதம், முதல் பாதியில் இருக்கும் சில விஷயங்களை இரண்டாம் பாதியில் சரியாக அமைத்த தருணம் என அனைத்தும் ரசிக்க வைக்கின்றது.

விவேக் அவர்களின் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

பல்ப்ஸ்

வலுவில்லாத கதைக்களம், கஜோல் எதிர்ப்பார்த்த அளவிற்கு மிரட்டவில்லை, கிளைமேக்ஸில் தனுஷ்-கஜோல் வரும் இடம் காமெடியாக இருந்தாலும், கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

மொத்தத்தில் விஐபி என்ற ப்ராண்டே விஐபி-2வையும் காப்பாற்றுகின்றது.

Direction:
Production:
Music:

http://www.cineulagam.com/films/05/100851

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படம் வெற்றி பெற்று விட்டால்.. அதே தலைப்புக்கு 1.. 2 போட்டு படம் விட்டால்.. வென்று விடும் என்ற தப்புக் கணக்கு தான்.. இந்தப் படம்.

ஏலவே.. சிங்கம்.. பாகுபலியில் பார்த்தது தான்.. ரசிகர்கள்.. தலைப்பை விட படத்தின் யதார்த்த தன்மையை தான் ரசிக்கினம்.. அதுவும் எளிமையா இருந்தால் ரசிக்குது.. ரசிகர் கூட்டம். இது தெரியாமல்.... இயக்குனர்களாம் நடிகர்களாம்... :rolleyes:

Link to comment
Share on other sites

தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' 2 - சினிமா விமரிசனம்

 

 
vip_kajol
 

ஹாலிவுட் பாணி போல, ஒரு வெற்றிகரமான திரைப்படத்தின் அடுத்தப் பாகம் (sequel) தமிழில் உருவாவது மிக அரிது. அம்மாதிரியான வழக்கமும் கலாசாரமும் இங்குப் பெரிதும் இல்லை.. ‘சில காலம் கழித்தும் கூட பார்வையாளர்கள் முதல் பாகத்தை நினைவுவைத்துக்கொண்டு பார்ப்பார்களா’ என்று இயக்குநர்கள் தயங்குகிறார்களோ என்னவோ.

இரண்டாம் பாகமாக அல்லது அடுத்தடுத்தப் பாகங்களாக வெளிவந்த திரைப்படங்களே தமிழில் குறைவுதான். அவையும் பொதுவாக இங்கு வெற்றியடைவதில்லை. பாகுபலி, சென்னை 28, சிங்கம் போன்றவை மட்டுமே விதிவிலக்கு. தமிழின் ஒரே முந்தையப் பாகத் ( prequel) திரைப்படமாகக் கருதப்படும் பில்லா – 2 கூட தோல்விதான். எந்திரன், விஸ்வரூபம் ஆகிய தொடர்ச்சிகளின் வெற்றியை இனிதான் பார்க்கவேண்டும்.

இது மட்டுமல்லாமல் சீக்குவல் வகைத் திரைப்படங்கள் இங்குப் பொருத்தமான காரணங்களோடு, அதன் சரியான தொடர்ச்சித் தன்மைகளோடு தீவிரமான போக்கில் உருவாக்கப்படுகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். இந்த வகையில் பாகுபலி மட்டுமே முந்தைய பாகத்தோடு அதிகம் பிரிக்க முடியாத வகையிலான திரைக்கதையோடு உருவாகியிருந்தது.

மற்றதெல்லாம் முதல் பாகத்தின் தற்செயலான, பிரம்மாண்டமான வணிக வெற்றியைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிற பேராசையில் பிறகு உருவாக்கப்பட்ட தனித்தனித் துண்டுகள் மட்டுமே. தனியாகப் பார்த்தாலும் பார்வையாளர்களுக்குப் புரிய வேண்டும் என்கிற கவனத்தோடு எடுக்கப்பட்டவை. விஐபி 2-ம் அப்படியொரு தனிப்படமே. ஆனால் அப்படித் தெரியாத அளவுக்கு முந்தைய பாகத்தின் அடையாளத் தொடர்ச்சிகளைக் கவனத்துடன் பயன்படுத்தியிருக்கும் மெனக்கிடலுக்காக இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த்தைப் பாராட்டலாம்.

**

வேலையில்லா பட்டதாரி -2 ஐ  பார்ப்பதற்கு முன் முதல் பாகத்தைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

ரகுவரன் கட்டடப் பொறியியல் பட்டதாரி. அதிகச் சம்பளத்துக்காக ஏதோவொரு பணியில் ஈடுபடுவதை விட தான் கற்ற துறையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவு உள்ளவன். ஆனால் அவனது நேர்மை ஒரு தடையாக இருக்கிறது. எனவே ‘தண்டச்சோறு’ என்று தகப்பனால் அடிக்கடித் திட்டப்படுகிறான். இடையில் ஒரு காதல். அசந்தர்ப்பமான தருணத்தில் அவனுடைய அன்புத்தாயின் மரணம் நிகழ்கிறது. தான்தான் அதற்குக் காரணம் என்கிற குற்றவுணர்வில் இருக்கிறான்.

அவனது தாயின் மரணத்தின் மூலமாக அவனுக்கொரு நல்ல காலம் பிறக்கிறது. அவனுடைய விருப்பப்படியே கட்டட பொறியியல் நிறுவனத்தில் பணிக்குச் சேர்கிறான். லாபமில்லாத நோக்கோடு ஏழைகளுக்கான வீடுகள் கட்டித்தரும் திட்டம் ஒன்றை ஆசையோடு ஏற்கிறான்.

ஆனால் வணிகத்தையே பிரதான நோக்கமாகக் கொண்ட ஒரு பலமான போட்டி நிறுவனம் குறுக்கே வருகிறது. அந்த நிறுவன உரிமையாளரின் மகன் எப்படியாவது இந்தத் திட்டத்தைக் கைப்பற்றி தந்தையிடம் நல்ல பெயர் வாங்க நினைக்கிறான். எனவே ரகுவரனுக்குப் பல வழிகளில் இடைஞ்சல் தருகிறான். அந்தச் சிக்கல்களை வென்று நாயகன் எப்படித் தன் லட்சியத்தை அடைகிறான் என்பதோடு முதல் பாகம் நிறைவடைகிறது.

பொறியியல் படித்த மாணவர்கள் எவ்வாறு சம்பந்தமில்லாத துறைகளில் வேலை செய்ய நேர்கிறது, பணியில்லாமல் வீட்டில் இருக்கும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மனச்சிக்கல்கள் ஆகியவற்றை வெகுஜனத் திரைப்படத்துக்கான ஜனரஞ்சகமான காட்சிகளுடன் பயணிக்கும் அந்தத் திரைப்படம் கடைசிப்பகுதியில் நாயகத்தன்மையை நிலைநாட்டுவதோடு நிறைகிறது.

**

இனி, இரண்டாவது பாகம்.

தான் பணியாற்றும் நிறுவனத்தில் திறமையுள்ள கட்டடக் கலைஞனாக இருக்கிறான் ரகுவரன் (தனுஷ்). கட்டடத் துறையில் தென்னிந்தியாவிலேயே புகழ் பெற்ற நிறுவனம், வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ். அதன் உரிமையாளர் வசுந்தரா (கஜோல்).  இளம் வயதிலேயே தந்தையை இழந்து பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த பிரம்மாண்ட வெற்றியை அடைந்தவர். கட்டடத் துறையில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கான விருது வழங்கப்படுகிறது. வசுந்தராவின் நிறுவனமே ஏறத்தாழ அனைத்து விருதுகளையும் வாங்குகிறது. துறையில் சிறந்து விளங்குபவர்கள், தன் நிறுவனத்தின் பணியாளர்களாக இருக்கவேண்டும் என்கிற பிடிவாதத்தை உடையவர் வசுந்தரா.

ஒரேயொரு விருது மட்டும் ராகவனுக்குச் செல்கிறது. ஆச்சரியமடையும் வசுந்தரா அவனைத் தன்னுடைய நிறுவனத்துக்கு வளைத்துப் போட முயல்கிறார். ஆனால் தன் நிறுவனத்தின் மீது விசுவாசமுள்ள ரகுவரன், வசுந்தராவின் ஆணவமான தோரணையை தன்மானத்தோடு எதிர்கொள்கிறான்.

இங்கு ஆரம்பமாகிறது ரகுவரனுக்கும் வசுந்தராவுக்குமான பகை. வசுந்தரா தொடர்ந்து தரும் பல்வேறுவிதமான தொல்லைகளை ராகவன் எப்படி வெல்கிறான் என்பது இதன் திரைக்கதை.

**

தனுஷைப் பற்றி பார்ப்பதற்கு முன் அதை விடவும் முக்கியமான கஜோலைப் பற்றி பார்த்து விடுவோம். அம்மணி எப்படி இளமையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அழகுசுந்தரம் (விவேக்) உள்ளிட்ட சிலர் இவரை வியப்புடன் ‘சைட்’ அடிப்பதில் ஆச்சரியமேயில்லை. ‘பாஸிகர்’ காலத்திலேயே உறைந்து விட்டாரோ என்கிற பிரமை.

ஒரு நாயகனுக்கு நிகரான அறிமுகக்காட்சி இவருக்குத் தரப்படுகிறது. ஏறத்தாழ தனுஷுக்கு ஈடான முக்கியத்துவம். அட்டகாசமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் என்ன பிரச்னையென்றால் இந்தப் பாத்திரத்துக்கு என தனித்தன்மை எதுவுமில்லை. படையப்பா நீலாம்பரி, உழைப்பாளி விஜயசாந்தி போன்ற அதே மாதிரியான பாத்திர வடிவமைப்பு. செல்வாக்கான, பணத்திமிர் பிடித்த பெண். தான் நினைத்ததை அடைய விரும்பும் பிடிவாதம். ஆனால் படத்தின் கடைசிப்பகுதியில் இவருடைய கதாபாத்திரம் எதிர்திசைக்கு மாறும்போது இவர் தரும் முகபாவங்கள் அற்புதம். இத்திரைப்படத்தின் புத்துணர்ச்சியான அடையாளத்துக்குக் காரணம் கஜோலாக இருப்பார்.

தனுஷைப் பற்றி என்ன சொல்ல? அதேதான். கஜோலைப் போலவேதான் இவருடைய இளமையையும் வியக்க வேண்டியிருக்கிறது. எளிமையான பின்னணி சார்ந்த நாயகன் செய்ய வேண்டிய அத்தனை சாகசங்களையும் செய்கிறார். இவர் அடித்தால் பத்து பேர் வீழ்வார்கள் என்று நம்பும்படி காட்சிகளை உருவாக்கிய சண்டை வடிவமைப்பாளருக்குப் பாராட்டு. சில காட்சிகளில் ரஜினியை நகலெடுப்பது போன்ற பிரமை.

 

முதலாளிக்குப் பக்கத்தில் உதவியாளராக வரும் ஒரு சாதாரண பாத்திரம் தோன்றும்போது அரங்கமே அதிரும் என்றால் அது ஆச்சரியம்தானே?. ஆம். ‘பிக் பாஸ்’ புகழ் ரைஸா, கஜோலின் உதவியாளராக படம் முழுவதும் வருகிறார். 

முந்தைய பாகத்தின் ‘கடுகடு’வில் இருந்து வேறுபட்ட பாத்திர வடிவமைப்பு சமுத்திரக்கனிக்கு. சில காட்சிகளில் நெகிழ வைக்கிறார். விவேக் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். தனுஷின் மனைவியாக அமலா பால். சிடுசிடு குடும்பத்தலைவியாக அந்த வீட்டையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துறுதுறுப்பு கவர்கிறது. தனுஷைச் சந்தேகப்படும் காட்சிகளில் மிகையான நடிப்பு என்றாலும் ரசிக்க முடிகிறது. ஆனால் இது சம்பந்தப்பட்ட காட்சிகள் ‘பீம்சிங்’ திரைப்பட டிராமா மாதிரியே இருக்கிறது.


**
ஒரு வெகுஜன திரைப்பட இயக்குநராக, செளந்தர்யா திறம்பட தயாராகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய பாகத்தின் வடிவமைப்பை அடித்தளமாகக் கொண்டு அதன் முக்கியமான அடையாளங்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு புது வடிவத்தைச் சிறப்பாகவே உருவாக்கியிருக்கிறார். வழக்கமான தமிழ் சினிமா காட்சிகள் என்றாலும் சலிப்பூட்டாமல் வேகமாக நகரும் திரைக்கதை.

தனுஷின் தம்பி முதற்கொண்டு முந்தைய பாகத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்களையும், தனுஷின் மோஃபா வண்டியையும் அப்படியே பயன்படுத்தியிருப்பது சிறப்பு. தனுஷ் பணிபுரியும் கட்டட நிறுவன உரிமையாளரின் மகள் பாத்திரத்துக்கான நடிகர் மட்டுமே மாறியிருக்கிறார்.

இந்தப் பாகத்துக்காகப் புது நாயகியை உள்ளே கொண்டு வந்து டூயட் பாடுவது போல் எல்லாம்  திரைக்கதை அமைக்காத இயக்குநரின் துணிச்சலைப் பாராட்டலாம்.

 
 

முந்தைய பாகத்தில் இறந்து போன சரண்யாவை இதன் திரைக்கதையில் கொண்டு வந்திருக்கும் புத்திசாலித்தனம் ரசிக்க வைக்கிறது.

முந்தைய பாகத்துக்காக அனிருத் உருவாக்கிய பின்னணி இசையே இந்தத்திரைப்படத்தின் பரபரப்புக்கு பெரும்பாலும் உதவுகிறது. இரண்டாவது பாகத்தின் இசையமைப்பாளரான ஷான் ரோல்டனால் இதைக் கடக்க முடியவில்லை. பாடல்கள் பெரிதும் கவரவில்லை. சமீர் தாஹிரின் ஒளிப்பதிவு காட்சிகளின் பிரம்மாண்டத்தை சரியாகக் கைப்பற்றியிருக்கிறது.

**

வெகுஜனத் திரைப்படம்தான் என்றாலும் சில காட்சிகளில் தர்க்கம் சரியாகக் கூடிவரவில்லை. வசுந்தராவுக்கும் ரகுவரனுக்கும் ஏற்படும் பகைமைதான் இந்தத் திரைப்படத்தின் மையம். ஆனால் அது அழுத்தமாக உருவாக்கப்படவில்லை. தன்னுடைய தொழிலில் எத்தனையோ எதிரிகளைப் பார்த்து வளர்ந்த வசுந்தரா, தனுஷின் பணி நியமன நிராகரிப்பை அத்தனை தீவிரமாகவா எடுத்துக்கொள்வார்?

தன்னை விடவும் சிறிய நிறுவனத்தின் ஆர்டர்களைக் கைப்பற்ற கோடிக்கணக்கான நிதியை வணிகர்கள் இழப்பார்கள் என்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். சென்னையில் நிகழ்ந்த வெள்ளத்தில் வசுந்தராவின் அத்தனை பிரம்மாண்டக் கட்டடத்தில் தண்ணீர் புகுந்துவிட்டது, எவருமே இருக்க மாட்டார்கள் என்பதெல்லாம் நிச்சயம் பூச்சுற்றல். இப்படி லாஜிக் இல்லாமல் நிறைய காட்சிகள் நகர்கின்றன.

படத்தின் இறுதிப்பகுதி சற்று நீளமாக அமைந்துவிட்டாலும் நிச்சயம் சுவாரசியம். அதிரடியான கிளைமாக்ஸ் சண்டையெல்லாம் இல்லாமல் இயல்பாக முடித்தது பாராட்ட வைக்கிறது. ஆனால் சட்டென்று முடிந்து விட்டது போன்ற உணர்வு.

மிஸ்டர் பாரத், உழைப்பாளி, என்று பல ரஜினி படங்களின் திரைக்கதை வாசனை பலமாக அடிக்கிறது. (கதை – வசனம்: தனுஷ்).

ஒரு வெகுஜனத் திரைப்படமாக விஐபி2 தேறுகிறது என்றாலும் முந்தைய பாகத்தில் இருந்த சுவாரசியம் காணாமல் போகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஒப்பீட்டைத் தவிர்க்க முடியாது. சீக்குவல் வகைத் திரைப்படங்களுக்குப் பொதுவாக ஏற்படும் விபத்து இது.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

மிஸ்டர் ரகுவரன்... வெரி ஸாரி... ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்! - வி.ஐ.பி -2 விமர்சனம்

 
 

முதல் பாகத்தில் இருந்த தனுஷின் மொபட்டில் தொடங்கி அமலாபாலின் பொட்டு வரை இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது. அந்த அளவில்லா எண்டர்டெயின்மெண்ட் இருந்ததா என்பது மட்டுமே ஒரு கேள்வி.

விஐபி

மளிகை சாமான் வாங்கிவருவது, மனைவியிடம் திட்டுவாங்குவது, அப்பாவிடம் அறிவுரை வாங்குவது, திருக்குறள் மூலம் வாழ்க்கையை விளக்குவது என வேலை இருந்தும் வி.ஐ.பி நம்ம ரகுவரன் (தனுஷ்). தனுஷின் திறமையைப் பார்க்கும் வசுந்தரா (கஜோல்) தனது நிறுவனத்தில் சேர சொல்லி தனுஷுக்கு உத்தரவிடுகிறார். ”சிங்கத்துக்கு வாலா இருக்கிறதைவிட பூனைக்கு தலையா இருந்துக்குறேன்” என அந்த வேலையை மறுக்க, தனுஷ் - கஜோல் ஈகோ மோதல் ஆரம்பிக்கிறது. இதில் யார், எப்படி ஜெயித்தார்கள்?

அமலாபாலுக்கு பயந்து பம்முவது, குடித்துவிட்டு எகிறுவது, விடிந்ததும் புலம்புவது என முதல் பாகத்தில் பார்த்த அதே தனுஷ். 3-ம் வாய்ப்பாடு போல அவருக்கு மனப்பாடம் ஆகிவிட்ட அந்த உடல்மொழி இதிலும் அப்படியே. சில இடங்களில் டேரிங். பல இடங்களில் போரிங். வில்லத்தனம் கஜோலுக்கு ஏற்ற ரோல் இல்லை. முறைத்துப் பார்த்தால் கூட ரொமான்ஸ் பொங்குகிறது.ஆனால், தீபா வெங்கட்டின் குரல் கஜோலுக்கு நிறையவே கம்பீரம் சேர்க்கிறது. அமலா பால், சமுத்திரக்கனி, விவேக், சர்ப்பிரைஸ் என்ட்ரி கொடுக்கும் சரண்யா என எல்லோரின் வேடமும் நிறைவு. 

விஐபி

முதல் பாகத்தில் வந்த நபர்களுக்கான எக்‌ஷ்டன்ஷனை விவரிப்பதிலிருந்து தொடங்குகிறது படம். அமலா பால் பொறுப்பான குடும்ப தலைவியாகியிருக்கிறார், சமுத்திரக்கனி சாஃப்ட்டான அப்பாவாகியிருக்கிறார், ஹரிஷ் மீசை வளர்த்து திரிகிறார், தனுஷின் வீடு, ஹரிபாட்டர், மொபட்... பிறகு சுரபிக்கு பதில் ரித்து வர்மா, விக்னேஷ் சிவனுக்கு பதில் பாலாஜி மோகன், அமிதேஷுக்கு பதில் கஜோல் என சில மாற்றங்களும் உண்டு. இதை எல்லாம் விளக்கிவிட்டு பிரதான கதைக்கு வரவே நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது. 

தனுஷ், அவருக்கு பிரச்னை, கிடைக்கும் வாய்ப்பில் சிக்கல், அதை முறியடிக்கும் லாகவம், ஸ்லோ மோஷன் நடை, ஃபாஸ்ட் கட்டில் வசனம், க்ளைமாக்ஸில் நடக்கும் சமாதானப் பேச்சுவார்த்தை முதற்கொண்டு அப்படியே இருப்பதால், பார்த்த படத்தையே  பார்த்த உணர்வு வருகிறது. முதல் பாகத்தில் கட்டடம் கட்ட  போராடும் விஐபி, இதில் நிறுத்தப் போராடுகிறார் அவ்வளவுதான் வித்தியாசம். கஜோல் - தனுஷுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளும் சுவாரஸ்யமாக இல்லாதது மிகப்பெரிய பிரச்னை.

தனுஷ்அனல் அரசு சண்டைக் காட்சியும், அதற்குப் பின்னணியில் ஒலிக்கும் ஷான் ரோல்டன் இசையும் மாஸ். ஆனால், கொடி, விஐபி2 படங்களுக்குப் பிறகாவது அனிருத்தின் இன்மையை தனுஷ் உணர்வார் என்று நம்பலாம். பாடல்கள் கூட தனுஷின் நடன வேகத்திற்கு கைகொடுக்க மறுக்கிறது. மாஸ் காட்சிகளின் போது, அனிருத் இசைக்கு ரசிகர்களிடமிருந்து வரும் ஒரு கூச்சல், ஷான் ரோல்டன் இசையில் மிஸ்ஸிங். சமீர் தாஹிர் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை, நேர்த்தியை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. மழையில் மார்கெட்டுக்குள் நடக்கும் சண்டைக் காட்சி சரியான உதாரணம்.

எடிட்டர் பிரசன்னாவின் உபயத்தில் முதல் பாதி முழுக்க பல இடங்களில் Ctrl X விழுந்து இருக்கலாம். பாலாஜி மோகனுடன் ஆரம்பிக்கும் தொழிலுக்கும் இடையூறு வர, தனுஷின் ஷேர்களை அவர் விற்கிறார். எதிர்பார்த்தபடி அதை கஜோல் வாங்க, ஒட்டுமொத்த கூட்டமும் வெளியேறுகிறது. தனுஷோடு இருக்கும் பாலாஜி மோகன், விவேக், 200 உப இஞ்சினியர்கள், என இத்தனை நல்லவர்களை ஒரே ஃபிரேமில் பார்ப்பதெல்லாம் அப்பப்பப்பா. ஏன் சீக்வல் என தெரியாமல் நகர்த்தப்படும் கதைக்கு, தனுஷின் வசனங்களோ, சௌந்தர்யா ரஜினிகாந்தின் திரைக்கதையோ எந்தவித நியாயமும் செய்யவில்லை. 

”உங்ககிட்ட இருக்கறதெல்லாம் காசு, எப்படியும் கரைஞ்சிடும். ஆனா, இது மாஸ், எப்பவும் கூடவே இருக்கும்” அந்த மாஸ் வசனத்திற்கு திரைஅரங்கில் இருந்த அமைதி பல விஷயங்களை சொல்லிச் செல்கிறது. அடிக்கடி சொல்லும் திருக்குறள், படத்தின் இறுதியில் வரும் சென்னை வெள்ள காட்சிகள் எல்லாம் கைத்தட்டலுக்காக சேர்த்திருப்பது போல் தோன்றுகிறது. படத்தில் பல வசனங்கள் ஆங்கிலத்தில் தான் வருகிறது. அதில் ஒரு வரி, We are sorry Mr.raguvaran. Please Understand. படத்திற்கு மிகவும் பொருந்தும்.

 

ஹிட் அடித்த விஐபியின் சீக்வலே இப்படி இருக்கிறதே. மாரி 2 வேறு ஆன் தி வே. கொஞ்சம் பாத்துப் பண்ணுங்க ப்ரோ!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/98890-vip-2-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.