Jump to content

யூ டியூப், டி.வி.க்கு போட்டியாக ஃபேஸ்புக் வீடியோ சேவை அறிமுகம்


Recommended Posts

யூ டியூப், டி.வி.க்கு போட்டியாக ஃபேஸ்புக் வீடியோ சேவை அறிமுகம்

facebookபடத்தின் காப்புரிமைFACEBOOK

சமூக ஊடகங்களில் மிக முக்கிய நிறுவனமான ஃபேஸ்புக் அடுத்தகட்ட நகர்வாக, யூ டியூப் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு போட்டியாக காணொளி வெளியிடும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் பயனாளர்கள் மிக விரைவில் பல வகையான காணொளிகளை வாட்ச் டேப் மூலம் பார்க்க இயலும். இதில் சில சமூக வலைதளங்களால் நிதியுதவி செய்யப்பட்ட காணொளிகளும் அடங்கும்.

முகநூல் பயனாளர்கள் அவர்களின் நண்பர்கள் பார்க்கும் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு புதிய காணொளிகளை இதன் மூலம் காண முடியும்.

நண்பர்கள் பதிவிடும் கருத்துகளையும் பயனாளர்களால் பார்க்க முடியும். மேலும், வீடியோக்களை காண்பதற்கு குழுக்களையும் உருவாக்க முடியும்.

youtubeபடத்தின் காப்புரிமைLIONEL BONAVENTURE

"காணொளிகளை செயலற்ற நிலையில் பார்க்க வேண்டியதில்லை" என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும், தங்களுடைய அனுபவங்களை பகிர்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது இருக்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, ஃபேஸ்புக்கில் வீடியோக்களை பார்க்க முடிந்தாலும், அவை பெரும்பாலும் பயனற்ற பொழுதுபோக்கு காணொளியாகவோ அல்லது செய்தி நிறுவனங்களால் வெளியிடப்படும் சிறிய தொகுப்புகளாகவோ இருக்கின்றன.

இந்த சேவையின் மூலம், ஃபேஸ்புக் மற்றும் காணொளி தயாரிப்பவர் என இரண்டு தரப்பிற்கும் வருவாய் வருவதற்கான சாத்தியம் உள்ளது. இதனால், காணொளிகளை பார்க்கும் போது விளம்பரங்களை பயனாளர்கள் பார்க்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை நிலவரம் என்ன?

ஃபேஸ்புக் தற்போது சிக்கலான மற்றும் நெரிசல் மிகுந்த சந்தையில் நுழைகிறது. இதனால், பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் யூ ட்யூப், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற இணைய சேவை நிறுவனங்களுடனும் போட்டியிட வேண்டியுள்ளது.

facebookபடத்தின் காப்புரிமைFACEBOOK Image captionஃபேஸ்புக் தற்போது சிக்கலான மற்றும் நெரிசல் மிகுந்த சந்தையில் நுழைகிறது.

இதனிடையே நெட்ஃப்ளிக்ஸுடன் ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு 2019-ம் ஆண்டில் இருந்து நேரடியாக தன்னுடைய நிகழ்ச்சிகளை நேயர்களுக்கு வழங்கவுள்ளதாக டிஸ்னி புதன் கிழமையன்று அறிவித்துள்ளது.

மேலும், அடுத்த ஆண்டிலிருந்து விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறது.

பேஸ்பால், பெண்கள் பாஸ்கெட்பால், குழந்தை பராமரிப்பு மற்றும் வன உயிரினங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை பயனாளர்களுக்கு வழங்க ஃபேஸ்புக் தயாராகியுள்ளது.

மேலும், வாக்ஸ் மீடியா, பஸ்ஃபீட், ஏடிடிஎன், க்ரூப் நைன் மீடியா உள்ளிட்ட நிறுவனங்களுடன் புதிய நிகழ்ச்சிகளை தயாரிக்கவும் ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

http://www.bbc.com/tamil/global-40891172

Link to comment
Share on other sites

லைவ் முதல் எக்ஸ்க்ளூசிவ் ஷோ வரை... யூடியூபை சமாளிக்க வரும் #Facebookwatch

 
 

ஸ்டேட்டஸ், ஷேரிங் என்பதையெல்லாம் தாண்டி எங்கேயோ சென்றுகொண்டிருக்கிறது ஃபேஸ்புக். விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மெண்டட் ரியாலிட்டி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் என எதிர்கால டெக்னாலஜிகள்தான் அந்நிறுவனத்தின் தற்போதய குறி. அந்த வரிசையில் தற்போது ஃபேஸ்புக்கின் மொத்த கவனமும் வீடியோக்களின் மீதுதான். 2G நெட்வொர்க் காலத்தில் ஸ்டேட்டஸ் & லைக்ஸ் என்றால், 4G நெட்வொர்க் உலகில் வீடியோதான் மார்க்கெட் கிங். இதைக் கருத்தில் கொண்டுதான் கடந்த ஆண்டு முதல் வீடியோ ஃபர்ஸ்ட் என்ற கொள்கையை பின்பற்றிவருகிறது. ஃபேஸ்புக் லைவ் ஆப்ஷனை அறிமுகம் செய்தது, அமெரிக்காவில் மட்டும் ஃபேஸ்புக்கில் வீடியோவிற்கென தனி டேப்-ஐ உருவாக்கியது, ஃபேஸ்புக் பக்கங்களில் வீடியோக்களை மட்டும் அதிகம் பேரிடம் கொண்டு சேர்ப்பது போன்றவையெல்லாம் இதைத் தொடர்ந்து நடந்தவையே. வீடியோக்களில் குவிந்த விதவிதமான ரியாக்ஷன்களே இவற்றின் வெற்றிக்கு சாட்சி. தற்போது அதில் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது ஃபேஸ்புக்.

 

சமூக வலைதளம் என்றால் ஃபேஸ்புக்தான் மாஸ். ஆனால், வீடியோ என எடுத்துக்கொண்டால் யூடியூப்தான் சூப்பர்ஸ்டார். அந்த இடத்தைக் குறிவைத்துதான் தற்போது 'Watch' என்னும் பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே ட்விட்டர், அமேசான், ஸ்னாப்சாட் போன்ற நிறுவனங்கள் எல்லாம் செய்தி நிறுவனங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், விளையாட்டுப் போட்டிகளின் ஒளிபரப்புகள் என வீடியோக்களின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. தற்போது ஃபேஸ்புக்கும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. அதாவது அமேசான், ஹாட்ஸ்டார் போலவே பிரத்யேக நிகழ்ச்சிகளை ஃபேஸ்புக் Watch-ல் மட்டும் ஒளிபரப்பவிருக்கிறது. மேலும், இந்த வாட்ச் வசதியை ஒரு குட்டி தியேட்டராக மாற்றும் முயற்சியிலும் இறங்கியுள்ளது ஃபேஸ்புக்.

எப்படி இயங்கும் இந்த ஃபேஸ்புக் வாட்ச்?

ஃபேஸ்புக் ஆப் மற்றும் ஃபேஸ்புக் டெஸ்க்டாப் வெர்ஷன் இரண்டிலும் இதனைப் பார்க்க முடியும். அவ்வப்போது நடக்கும் லைவ் நிகழ்ச்சிகள், ஸ்பெஷல் எபிசோட்கள் என எல்லா விதமான கன்டென்ட்களுக்கும் ஃபேஸ்புக் கியாரண்டி தருகிறது. எப்படி ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்றவற்றுக்கு தனி ஆப் இன்ஸ்டால் செய்து நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கிறோமோ, அதேபோல ஃபேஸ்புக் ஆப்பிலேயே இந்த நிகழ்ச்சிகளைக் காண முடியும். பார்க்க வேண்டிய நிகழ்ச்சிகளை ஃபேஸ்புக்கின் Save ஆப்ஷன் போல குறித்துவைத்துக்கொண்டு பின்னர் பார்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கும். ஃபேஸ்புக்கின் எமோஜிக்கள்போல, உங்களின் மனநிலையைப் பொறுத்தும் சில நிகழ்ச்சிகளை ஃபேஸ்புக் பரிந்துரைக்கும். வழக்கமான லைவ் வீடியோக்கள் போலவே ரியாக்ஷன், கமெண்ட்ஸ் என அத்தனையும் அப்படியே இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் ஃபேஸ்புக்கின் உள்ளேயே செயல்படும் ஒரு குட்டி சானல்தான் இந்த வாட்ச்.

ஃபேஸ்புக் வாட்ச் #Facebookwatch

யூட்யூபை பின்தள்ளுமா ஃபேஸ்புக்?

உலகின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் யூடியூப். எனவே, வீடியோக்களின் எண்ணிக்கை, தரம் போன்றவற்றில் அதனுடன் நேரடியாக ஃபேஸ்புக்கால் மோத முடியாது. ஆனால், வணிக ரீதியாக நிறைய சவால்களை அளிக்கலாம். இதற்காக மற்ற நிறுவனங்கள் போலவே ஃபேஸ்புக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க ஸ்பான்சர் செய்கிறது. மேலும், புதிய படைப்பாளிகள், கலைஞர்கள் ஆகியோரை நிகழ்ச்சிகள் தயாரிக்கவும் ஊக்குவிக்கிறது. எப்படி யூடியூபில் சானல் நடத்துகிறார்களோ அதுபோலவே ஃபேஸ்புக்கிலும் வீடியோ சீரிஸ்களை பலரும் வெளியிட முன்வரலாம். இந்த வாய்ப்புகளை அப்படியே ஃபேஸ்புக் விளம்பரம் மூலமாக, பணமாக மாற்றும். ஃபேஸ்புக்கில் இருக்கும் கோடிக்கணக்கான பயனர்கள்தான் அந்நிறுவனத்தின் பெரும்பலம். இத்துடன் வீடியோக்களை யார் பார்க்கிறார்கள், எத்தனை மணிநேரம் பார்க்கிறார்கள், எது மாதிரியான வீடியோக்களை பார்க்கிறார்கள் எனத் துல்லியமாக கணித்து வைத்திருக்கும் ஃபேஸ்புக்கின் டேட்டாவும் அதற்கு கைகொடுக்கும். எனவே, எந்த வீடியோவை யாரிடம் கொண்டு சென்று காட்டினால், அதன் வீச்சு அதிகமாகும் என்பது வரையிலும் ஃபேஸ்புக்கால் சிந்திக்க முடியும். இந்தக் கூர்மை அந்நிறுவனத்தின் மற்றொரு பலம்.

எப்படி இந்த வீடியோக்களை பார்ப்பது?

இன்னும் அமெரிக்காவிலேயே இந்த அப்டேட் முழுமையாக வரவில்லை. தற்போது சில இடங்களில் மட்டுமே இந்த வாட்ச் வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் அமெரிக்கா முழுவதும் இந்த வசதி கிடைக்கும். பின்பு மெல்ல மெல்ல அனைத்து இடங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும். உலகெங்கும் இந்த சேவை செல்லும்போது யூடியூப் போலவே ஃபேஸ்புக் வாட்ச்சிலும் நிறைய நிகழ்ச்சிகள் உருவெடுக்கலாம்.

 

இந்தியா, ஃபேஸ்புக்குக்கு பெரிய சந்தை என்பதால் இங்கேயும் விரைவில் இந்த வசதிகள் வரலாம். ஆனால். யூடியூபை விடவும் கடினமான போட்டியாளர்கள் வாட்ச்-ஐ வரவேற்க காத்திருக்கிறார்கள்!

http://www.vikatan.com/news/information-technology/99017-facebook-introduces-new-video-platform-facebook-watch.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.