Sign in to follow this  
நவீனன்

வார்த்தைப் போரின் "மூலமும்" வட கொரியாவின் தேவையும் - ஓர் ஆய்வு

Recommended Posts

வார்த்தைப் போரின் "மூலமும்" வட கொரியாவின் தேவையும் - ஓர் ஆய்வு

 
afp GETTYபடத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் வார்த்தைப் போரால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவை தீவிரமாக எதிர்க்க வட கொரியா கருதும் காரணத்தின் மூலத்தை ஆய்வு செய்து பிபிசி செய்தியாளர்கள் வழங்கியுள்ள கட்டுரை இது.

அமெரிக்காவின் பசிஃபிக் பிராந்தியமான குவாமை நோக்கி, ஏவுகணை சோதனை நடத்தப் போவதாக வட கொரியா அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

வட கொரிய தீபகற்கத்தில் மிகவும் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், அமெரிக்காவுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த மிரட்டலை வட கொரியா விடுத்துள்ளது.

பியொங்யாங்குக்கும், அமெரிக்க அதிபருக்கும் இடையிலான வார்த்தைப் போர் முற்றி வரும் வேளையில், வட கொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திறன்கள், சர்வதேச சமூகத்தின் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

p05139yv.jpg
 
கொரிய தீபகற்பத்தைச் சூழும் கரிய போர் மேகங்கள்

ஆனால், வட கொரியாவுக்கும் அதன் தலைவர் கிம் ஜோங்-உன்னுக்கும் தேவைப்படுவது என்ன?

தனது நிலையையும் பிராந்தியத்தின் தத்துவத்தையும் அலுவல்பூர்வ அறிக்கை மூலம் பியொங்யாங் தெளிவுபடுத்தியுள்ளது. தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்களில் அது திரும்பத் திரும்ப வெளியாகி வருகிறது.

  •  

தேசத்தின் "வாழ்வுரிமை"

சுயபாதுகாப்புத்தான் வட கொரியாவின் பிரதான கவலை. "மிகப்பெரிய சக்திவாய்ந்த எதிரிக்கு எதிராக இருக்க வேண்டும்"என்ற நோக்குடன் போர்க்களத்தில் உள்ளதாக அந்நாடு கூறுகிறது.

அதனால், தனது சுயபாதுகாப்பை உறுதிப்படுத்த அணுஆயுத பலத்தை பயன்படுத்துவது தனது உரிமை என்று வடகொரியா கூறுகிறது.

"நிச்சயமாக இது ஒரு சுய பாதுகாப்புக்கான சரியான நடவடிக்கை என்றும், நாட்டின் இறையாண்மை மற்றும் அமெரிக்காவின் அத்துமீறிய கட்டுப்பாட்டுக்கு அடிபணியக் கூடாது என்பதற்காகவும், மிக சக்தி வாய்ந்த அணு ஆயுத படை பலத்தைக் கொண்டிருப்பது தனது உரிமை" என்றும் வட கொரிய செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ கருத்து தெரிவித்துள்ளது.

REUTERSபடத்தின் காப்புரிமைREUTERS Image captionஅமெரிக்காவின் மிர்ச்சிகன் நீர்மூழ்கிக் கப்பல்

போரின் நினைவுகள்

அமெரிக்கா வழிநடத்திய ஐ.நா. படைகளுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான போரின் நினைவு, அந்நாட்டில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

"ஏராளமான மனித உயிரிழப்புகளுக்கும் கிட்டத்தட்ட வடகொரியாவின் நகரங்களும் தொழிற்சாலைகளும் அழிந்ததற்கு அமெரிக்காவே காரணம்" என்று அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி அரசு வெளியிட்ட அறிக்கையில், "ஒருமுறை அமெரிக்கா நடத்திய சோகமான போரின் விளைவால், வட கொரிய நிலம், ரத்தமும் நெருப்பும் கலந்த கடலாக காட்சியளித்தது. கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் (டிபிஆர்கே) தத்துவம் மற்றும் ஆட்சிமுறையை பூண்டோடு அழிப்பதற்காக நடத்தப்பட்ட அந்த தாக்குதலின் சுவடுகள், நூற்றாண்டுக்கு பின் நூற்றாண்டாக நீங்காமல் நினைவில் இருக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

வட கொரிய போரைப் பற்றியும், அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் மற்றும் மிரட்டலுக்கு எதிராகவும் வடகொரிய அதிகாரிகள் கூறும்போது, வரலாற்றில் பதிவான சம்பவங்களை மேற்கோள்காட்டி எப்போதும் பேசுவர்.

கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள வரை, அமெரிக்காவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் "உண்மையானவை" என்றே வடகொரியா பார்க்கிறது.

கிம் ஜோங்-உன் அரசை வீழ்த்துவதற்கான அமெரிக்காவின் முயற்சி என பியொங்யாங் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டி வருகிறது.

ராணுவ அணிவகுப்புபடத்தின் காப்புரிமைAFP

"1950-ஆம் ஆண்டில் கொரிய போர் தொடங்கியது முதல், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா திட்டமிடும் சதி மற்றும் ஆக்கிரமிப்பு முயற்சியின் விளைவு இது; அது இன்றளவும் தொடர்கிறது" என்று பியொங்யாங் கூறி வருகிறது.

கொரிய மக்கள் ராணுவம் கடந்த 9-ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க ஆட்சியாளர்களிடையே காணப்படும் அணு ஆயுத போர் வெறி, உண்மையான போருக்கான பொறுப்பற்ற மற்றும் கொந்தளிப்பான நிலைக்கு வித்திட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

கொரிய செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ கடந்த 9-ஆம் தேதி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வெளியிட்ட ஒரு கட்டுரையில், கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து செயல்படுவதாக குற்றம்சாட்டியது.

கொரிய அணிவகுப்புபடத்தின் காப்புரிமைAFP

மேலும், "கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு 15 ஆதரவு நாடுகளுடன் சேர்ந்து "ஐ.நா. படைகள்" என்ற போர்வையில் கொரியா மீதான தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்தது.

ஆனால், அந்த படையினரை மண்டியிட வைத்தவர் ராணுவம் மற்றும் மக்களை வழிநடத்திய மிகவும் திறமையான தளபதி கிம் இல் சுங்.

வட கொரியாவுக்கு எதிரான போரை ஒதுக்கி விட முடியாது எனக் கூறி, தங்கள் நாட்டை அமெரிக்கா வம்புக்கு இழுக்கிறது. அதனால் நாம் அமெரிக்காவின் முக்கிய பகுதிகளையும் அதன் அனைத்து வலிமையான பகுதிகளையும் எந்த விலை கொடுத்தாவது அழிக்க வேண்டும்" என்று அந்த கட்டுரையில் கேசிஎன்ஏ குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரிய போரை தொடங்கியது அமெரிக்காதான் என்றும் கிம் இல் சுங்கின் தெற்கு நோக்கிய படையெடுப்பு அதற்குக் காரணம் அல்ல என்றும் பியொங்யாங் கூறுகிறது.

அதேபோல, "எதிர்காலத்திலே போர் நடந்தாலும், அதற்கு போர் வெறி பிடித்த அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளுமே காரணம்" என்று பியொங்யாங் கூறி வருகிறது.

p05166dz.jpg
 
டிரம்பின் 'சுவர்' கனவு நனவாகுமா?

அணு ஆயுத குவிப்பும் வரலாறும்

லிபியாவிலும் இராக்கிலும் உள்ள அரசுகள், அவற்றின் பெரும்பான்மை ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, அங்கு ஆட்சியில் இருந்த அரசுகள் அகற்றப்பட்ட சம்பவங்களை வடகொரியா அடிக்கடி கூறி வருகிறது.

இதுபற்றி கேசிஎன்ஏ கூறுகையில், "சுய பாதுகாப்புக்கான அணு ஆயுதங்களை ஒழித்து விட்டு, அமெரிக்கா மற்றும் பிற தேச விரோத சக்திகளின் வசீகர நெருக்கடிக்கு அடிபணிந்து விட்டால், இராக், லிபியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்கொண்ட பேரிடர்கள் மற்றும் துரதிருஷ்டவச நிலையை வடகொரியாவும் அனுபவிக்க நேரிடும்" என்று குறிப்பிட்டுள்ளது.

வடகொரியாவை ஆக்கிரமிக்க காத்திருக்கும் விரக்திமிக்க வெளி சக்திகளிடம் இருந்து, நாட்டைப் பாதுகாக்கும் வலிமையான பொக்கிஷம் போல, தனது சக்திவாய்ந்த அணு ஆயுதங்கள் உள்ளன என்பதை வரலாறு நிரூபித்துள்ளது" என்று கேசிஎன்ஏ கூறியுள்ளது.

பியொங்யாங்கின் மறுஒருங்கிணைப்பு விதிகள்

இரண்டு கொரிய நாடுகளையும் "பியொங்யாங்கின் விதிகளுக்கு உட்பட்டு" ஒருங்கிணைக்க வேண்டும் என்பது வடகொரிய ஊடகங்கள் அவ்வப்போது வலியுறுத்தி வரும் முக்கிய விஷயமாகும்.

இதுபற்றி "ரோடொங் சின்முன்" நாளிதழ் தனது தலையங்கத்தில் "ராணுவ ஆட்சியின்கீழ் ஒற்றுமை மற்றும் மறுஒருங்கிணைப்புக்கான நமது தேசத்தின் சக்திவாய்ந்த முன்னேற்றத்தை எந்தவொரு எதிர்ப்பு சக்திகளின் சவால்களாலும் முடக்கி விட முடியாது" என்று குறிப்பிட்டுள்ளது.

"சோஷலிஸம் மற்றும் ராணுவ முன்னுரிமை அரசை வலியுறுத்தும் தனது கொள்கையின்கீழ் தீபகற்க பகுதியை இணைக்க வேண்டும்" என்ற விருப்பத்தை வடகொரியா தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

மறுஒருங்கிணைப்புக்கான பேச்சுவார்த்தைக்கு வலிமை சேர்க்கும் வகையில், தமது ஆயுதங்களை வடகொரியா குவித்து வருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஒருவேளை அது நடந்து விட்டால், மக்கள்தொகை மற்றும் பொருளாதார ரீதியாக அது தென்கொரியாவுக்கு பலன்களைத் தரும்.

Korea Govenment meetingபடத்தின் காப்புரிமைREUTERS

அமைதி வழிகளில் மறுஒருங்கிணைப்புக்கான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பதில் தென்கொரியா உறுதியாக உள்ளது.

நிதி ஆதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, ஒருங்கிணைந்து பொருளாதார மற்றும் அரசியல் முறைகளை மேம்படுத்தும் சூழலை ஆராய வேண்டும் என்பதில் இரு நாடுகளும் உடன்படுகின்றன.

மறுஒருங்கிணைப்பை ஜனநாயக வழிகளிலேயே எட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்காவும் வலியுறுத்துகிறது.

ஆனால், "தனது விதிகளுக்கு உட்பட்ட ஒருங்கிணைந்த கொரியாவாக இருக்க வேண்டும்" என்ற தனது நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காமல் வடகொரியா உறுதியாக உள்ளது.

புத்தாண்டு உரையின்போது கிம் ஜோங் உன் பேசுகையில், "சுதந்திரமான மறுஒருங்கிணைப்புக்கான வெற்றியை எட்டுவதற்கு ராணுவம் சார்ந்த அரசியலே சக்திமிக்க ஆயுதம்" என்றார்.

http://www.bbc.com/tamil/global-40891916

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this