• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Nathamuni

பெரிய இடத்தில் £33,000 ஆட்டைய போட்ட நம்ம கணக்குப்பிள்ளை

Recommended Posts

bbc யின் புகழ் மிக்க டிராகன் டென் (Dragon Den) நிகழ்ச்சி.

இதில் பங்குகொண்ட ஒருவரின் வியாபாரத்தில், பீட்டர் ஜோன்ஸ், தியோ பாப்டிஸ் ஆகிய இரு டிராகன்கள் முதலீடு செய்திருந்தனர்.

Red Letter Days எனும் நிறுவனத்தில் கணக்குப்பிள்ளையாக நம்ம அகிலன் செல்வரத்தினம்.

சூதாட்ட பழக்கம் கொண்ட அகிலன், தனது பணத்தேவைகளுக்காக, காசோலைகளை, பொய்யான கையெழுத்துகளுடன், காசாக்கி உள்ளார். 

லண்டன்  வூட்கிறீன் மேல் நீதிமன்றில் நிறுத்தப் பட்ட  அகிலன்,  வியாபார நிறுவங்களுக்கான பண மீள் செலுத்துகைக்காக (refund) என்று சொல்லியே வங்கியிடம் இருந்து, சூதாட  பணத்தினைப் எடுத்துள்ளார் என அரச வழக்குத் தொடுனர் லிண்டா சாமல் தெரிவித்தார்.

மிக நீண்ட நாட்களாக, நடந்துள்ள ஒரு கடுமையான நம்பிக்கை மோசடி இது. தடுத்து வைக்கப்படுவதே சரியான, எதிர்பார்க்கக் கூடிய தண்டனையாக இருக்கும் என தெரிவித்தார் நீதிபதி ஜோனா க்ரீன்பெர்க்.

காசு, காசோலைகளை பொறுப்பானவராக இருந்த அகிலன், ஆகஸ்ட் 23 வரை பிணையில் விடிவிக்கப் பட்டுள்ளார். சிறை செல்லக்கூடும். அவரது இதுவரையான நன்னடத்தையை குறித்த அறிக்கை வந்தபின்னர் எவ்வளவு காலம் என நீதிமன்று தீர்மானிக்கும்.

இழந்த பணத்தினை தமது பக்கமே தவறு என்ற காரணத்தால், பார்கிலேஸ் வங்கி திருப்பி செலுத்தி விட்டது. 

http://www.msn.com/en-gb/news/uknews/dragons-den-stars-peter-jones-and-theo-paphitis-conned-out-of-£33000-by-corrupt-employee/ar-AApBj0G?li=AAmiR2Z&ocid=spartanntp

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

அட...முக்கி...முக்கி.....முப்பத்தி மூண்டு மட்டும் தானா?

இதையும் ஒருக்காப் பாருங்கோவன் !

http://www.smh.com.au/business/ing-takes-a-30m-hit-in-accountancy-fraud-case-20120215-1t6ru.html

Share this post


Link to post
Share on other sites
22 minutes ago, புங்கையூரன் said:

அட...முக்கி...முக்கி.....முப்பத்தி மூண்டு மட்டும் தானா?

இதையும் ஒருக்காப் பாருங்கோவன் !

அகிலன்... ஆட்டையப்  போட்டு...  
அனுபவ சாலியாக வர முன்னர்... அப்பி விட்டார்கள் போலுள்ளது. :grin:

Share this post


Link to post
Share on other sites

முந்தி தமிழர் என்றால்.. கொஞ்சம் நாகரிகப் பார்வை இருந்தது வேற்றுநாட்டவர்களுக்கு. இப்ப.. அநாகரிகப் பார்வை தான் அதிகம். எல்லாம்.. எங்கடையள் குறுக்கு வழியில்.. போவதால் தான். 

எமது போராட்ட நியாயங்களை சாகடிச்சதில்.. புலம்பெயர் எம்மவர்களின் தில்லாலங்கடி வேலைகளும் ஏற்படுத்திய மனமாற்றங்களும் செல்வாக்குச் செய்துள்ளன என்றால் அது மறுப்பதற்கில்லை.

அன்று.. ஒன்று.. பிறந்து வளர்ந்து எல்லாம் கொழும்பில்.. சனல் 4 வீடியோவை பார்த்து அசைலம் கேட்டிருக்குது. அசைலம் கொடுக்கிறவனும் சொல்லி இருக்கான்.. நீ மட்டும் தான் உண்மையைச் சொல்லி அசைலம் அடிச்சிருக்கிறா.. அப்படியே காணொயில் உள்ளது போல என்று. சில வெள்ளை இன்னும் வெள்ளாந்தியாவே இருப்பதால்.. எம்மவர்களுக்கு உதுகளை செய்ய முடியுது. :rolleyes:tw_blush:

Share this post


Link to post
Share on other sites

இது internal control ல் உள்ள குறைபாடு. ஏன் ஒருவருக்கு மட்டும் காசோலை கையெழுத்து வைக்க அதிகாரம் கொடுக்கப்பட்டது?
ஒவ்வொரு மாதமும் வங்கிக்கணகினங்கூற்று செய்யப்படும் போது, இந்த காசேலைகள் என்ன நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளன என ஆராய வேண்டும். இப்படி ஒருவரை நம்பி எல்லா அதிகார‌ங்களையும் கொடுக்க‌ கூடாது.

வங்கியும் இவருடைய கையெழுத்தை சரியாக ஆராயமல் பணம் கொடுத்தது தவறு.

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, புங்கையூரன் said:

அட...முக்கி...முக்கி.....முப்பத்தி மூண்டு மட்டும் தானா?

இதையும் ஒருக்காப் பாருங்கோவன் !

http://www.smh.com.au/business/ing-takes-a-30m-hit-in-accountancy-fraud-case-20120215-1t6ru.html

இது நல்ல பிளான் பண்ணி நடந்த வீசயம் போல கிடக்குது.

ஒரு 3 வருசம் இருந்திட்டு..... அப்படியே கனடா, இலண்டன் பக்கமா வந்தா.... நாங்க பாத்துக் கொள்ளுவம்....

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this