Jump to content

வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவு! – பூஜித் ஜெயசுந்தர

Recommended Posts

வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவு! – பூஜித் ஜெயசுந்தர

On 32 mins ago
வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவு! – பூஜித் ஜெயசுந்தர
 Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அதிக அதிகாரங்களுடன் கூடிய விசேட பிரிவுகளின் ஊடாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இன்று கண்டிக்குச் சென்ற பொலிஸ்மா அதிபர் மல்வத்துப்பீட மகாநாயகரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த சம்பவங்கள் தொடர்பாக நான் வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். விசேட அதிரடிப் படையினர் அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வேறு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுடன் சேர்ந்து எமது அதிகாரிகளும் இணைந்து கடமையாற்றிவருகின்றனர்.

அதை விடவும் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவும் எதிர்பார்க்கின்றேன். திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பில் விசேட அதிரடிப் படையினரின் பொறுப்புக்களையும் ஏற்று, விசேட திட்டமொன்றை உருவாக்கி வருகின்றேன். அந்த திட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. புதிய அதிகாரங்களுடன் புதிய பிரிவொன்றை உருவாக்குகிறேன். இதுகுறித்த முழுமையான தகவல்களை விரைவில் வெளியிடுவேன். திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான கைது நடவடிக்கைகளை பலமானதாகவும், திடமான நடவடிக்கையாகவும் தொடர்ச்சியான முன்னெடுப்போம். – என்று அவர் கூறியுள்ளார்.

யாழ். குடா நாட்டில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களை அடுத்து பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் போர்க் காலத்தில் காணப்பட்ட இராணுவப் பிரசன்னம் போன்று ஆயுதம் தரித்த அரச படையினர் 2 வாரமாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

http://newuthayan.com/story/17313.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸ் அதிபர் பூஜித் ஜெயசுந்தர அவர்களே
குற்றங்களை அடக்குவதற்காகக் கைதுசெய்யப்படுபவர்கள் தொடர்பாக கீழ்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம்

 குற்றச்செயல்களால் கைதுசெய்யப்பட்டவர்களுக்காக ஆயராகும் வக்கீல்களது பிண்ணியையும் அவர்களசார்பாக ஆயராகும் வழக்குகளில் அவர்கள் எவ்வளவு தொகை காசாக வாங்குகிறார்கள் அப்பணம் எந்தவகையில் கைமாற்றப்படுகின்றது, குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களது உறவினர் யாராவது வெளிநாடுகளில் வாழ்கிறார்களா அவர்களால்தான் இப்பணப் பெறப்பட்டதா அவர்கள் யார் இவைகள் பற்றியும் அறியவேண்டும்

தேவையேற்படும் பட்சத்தில் நாட்டின் சட்டம் ஒழுங்கு கெட உறுதுணையாக நிதி வழங்கினார் எனும்போர்வையில் அவர்களை இலங்கைக்கு நாடுகடத்த சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்குமாப்போல் அவர்கள்மீது வழக்குகளைப்பதிவுசெய்ய்தல்வேண்டும்.குற்றச்செயல்களின் பின்பு தலைமறவாக வசித்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் 

மேலும் குடாநாட்டில் சட்டத்துக்குப்ப்புறம்பாக அனுமதிப்பத்திரமில்லாது தெருவில் ஓடித்திரியும் மோட்டார் வாகனங்கள் அனைத்தையும் பாரபட்சமில்லாது அரசுடமையாக்கி ஏலத்தில் விற்பனைசெய்து அதனால் கிடைக்கும் நிதியை வடக்குக்கிழக்கில் இடம்பெயர்ந்து மீழ்குடியேறிய மக்களுக்கான வீடமைப்பு நிதியாகக் கையளிக்கவேண்டும்

Link to comment
Share on other sites

தமிழ் மண்ணில் நடைபெறும் சட்டவிரோத செயல்களின் பின்புலமாக இருக்கும் சிங்கள-பௌத்த போலீஸ் மற்றும் சிங்கள-பௌத்த முப்படை  நாசகாரக் கும்பலை முற்றாக அகற்றினால் மட்டுமே வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் அனேகமானவர்கள் குடாநாட்டில் சில பொறுக்கிகளால் செய்யப்படும் அனாகரிகமான பொறுக்கித்தனத்தை ஆதரிப்பது போலுள்ளது போல் அவர்களது கருத்து. வெந்ததைத் திண்டுபோட்டு திண்ணையில் படுத்துக்கிடக்காமல் ஒழுங்கான ---------- செய்யும் வேலகள் எல்லாம் முன்னாள் விடுதலைப்புலிப்போராளிகளது தலையில் விடியுது என்பதைப் புரிந்துகொள்ளாது கருத்தெழுதுபவர்கள் எல்லோரும் யாழ் குடாநாட்டின் பொறுக்கிகளுக்கு முண்டுகொடுப்பவர்களாகக் கருதப்படுவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

எங்கள் சமுதாயம் அப்படி. ஆரம்பம் எங்கே என்று தெரிந்தும் தெரியாத மாதிரி நடிப்பது எமக்குப் புதிதல்ல.
சிங்கள அரச இயந்திரம் இப்படியானவர்களைப் பாதுகாப்பதில் இன்று முன்னிலையில் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

4 hours ago, Elugnajiru said:

யாழ் களத்தில் அனேகமானவர்கள் குடாநாட்டில் சில பொறுக்கிகளால் செய்யப்படும் அனாகரிகமான பொறுக்கித்தனத்தை ஆதரிப்பது போலுள்ளது போல் அவர்களது கருத்து. வெந்ததைத் திண்டுபோட்டு திண்ணையில் படுத்துக்கிடக்காமல் ஒழுங்கான ---------- செய்யும் வேலகள் எல்லாம் முன்னாள் விடுதலைப்புலிப்போராளிகளது தலையில் விடியுது என்பதைப் புரிந்துகொள்ளாது கருத்தெழுதுபவர்கள் எல்லோரும் யாழ் குடாநாட்டின் பொறுக்கிகளுக்கு முண்டுகொடுப்பவர்களாகக் கருதப்படுவர்.

இரண்டு கிழமை யாழ்ப்பாணத்தில் நின்றுவிட்டால் எல்லாம் தெரியும் என்ற மமதை தெரிகிறது! 

அதைவிட உருப்படியாக ஒன்றுமில்லை!

நுனிப்புல் மேய்வதை விடுத்து ஆணிவேரைக் கண்டுபிடிக்க பழகவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை எழுதுவதில் எனக்கு மமதை இருக்கும் அல்லது திமிர் இருக்கும் மற்றப்படி யாழ்ப்பாணத்தில் இரண்டு கிழமை நின்றுவிட்டால் மமதை இருக்கும் என்பதில் எதுவித உண்மையுமில்லை. உங்கள் கருத்துப்படி பார்த்தால் வாளுகள் கத்திகளுடன் அங்கு திரிபவர்கள் எல்லாரும் சிங்கள நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களா! அரசடிச்சந்தியில் பெற்றொல் குண்டு எறிந்து வாளால் வெச்சியவர்கள் எல்லாரும் சிங்களக் கைக்கூலிகளா! சன்னா குறூப்பில இருக்கும் ஒருவர் திருநெல்வேலிச்சந்தைப்பகுதியில் வட்டிக்கு விடுபவர் இவர் தனது வட்டிவசூலுக்கு உதவியாக இருக்கும் என சன்னாவுடன் ஒட்டிக்கொண்டு நிற்கிறார் இவர் என்ன புலனாந்வுத்துறையால் இறக்கிவிடப்பட்ட வட்டி வசூல் மன்னனா! 

சரி சிங்களம் எல்லாத்தையும் செய்யுது என்றால் அவர்களுடன் போவதற்கு உனக்கு யார் சொல்லிக்கொடுத்தது உனது வளர்ப்புச் சொல்லிக்கொடுத்தது, முன்னைநாள் போராளி பிச்சை எடுக்கிறான் அவனுக்கும் உலை வைக்கத் துணைபோவது யார்! ஆயுதங்களுடன் திரிபவர்கள் முப்பத் நாற்பது வயதுக்காரர் இல்லை எல்லாம் இருபதுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் உடையவர்கள் இவர்கள் எல்லோரும் குடாநாட்டில் பாரிய இடம்பெயர்விற்குப்பின்பு பிறந்தவர்கள் அல்லது அவ்வேளையில் சிறுவர்களாக இருந்தவர்கள் இவர்களுக்கு போராட்டம் புளியங்காய் என்றால் எதுவுமே தெரியாது இவர்களுடன் தொடர்புள்ளவர்களுடன் நான் தொடர்பு வைத்திருக்கிறேன்.

அரசியல்வாதிகளும் பத்திரிகைகளும் இணையத்தளங்களும் பத்தி எழுத்தாளர்களும் எதையாவது எழுதவேண்டும் மக்களச்சூடாக வைத்திருக்கவேண்டும் நீங்கள் கூறியபடி நுனிப்புல் மேய்பவர்களாக வைத்திருந்து நங்களது தேர்தல் வியாபாரம் முதற்கொண்டு அனைத்து வியாபாரத்தையும் நல்லபடி நடாத்தவேண்டும் நிதிநிறுவனங்கள் கொடுத்த காசை அல்லது வாகனங்களில் முதலீடு செய்த காசை இவர்களைக்கொண்டே வ்சூல் செய்யவேண்டும் இதற்குத்தான் எல்லோரும் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள்

அரசாங்கம்தான் இதை இயக்குது என்றால் பொதுசனம் பயத்தில் எனக்களுக்கு எதுக்கு வம்பு என இருந்துவிடுவார்கள்  வடபகுதில் வாழும் அப்பாவிப்பொதுசனங்களுக்கும் நடுநிலையாளர்களுக்கும் புலநாய்வு இராணுவம் போலீஸென்றால் எப்போதும் பயம் இருக்கும் அந்தப்பயத்தை அனைவரும் பாவிக்கிறார்கள் அரசாங்கம் செய்யுது என்றால் போக்கிலிகள் நினைக்கிறார்கள் தங்களை யாரும் துணிந்து எதிர்க்கமாட்டார்கள் என உண்மையும் அதுவே.  இதுக்குபின்னல் கனக்கப்பேர் இருப்பினம் எதிர்காலத்தில் எங்களுக்குச் சோலிவரும் என ஒதுங்குவார்கள் 

இவைதான் பொறுக்கிகளது எதிர்பார்ப்பு இந்த எதிர்பார்ப்புக்கு யாழ் களமும் உணவுபோடுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, போல் said:

தமிழ் மண்ணில் நடைபெறும் சட்டவிரோத செயல்களின் பின்புலமாக இருக்கும் சிங்கள-பௌத்த போலீஸ் மற்றும் சிங்கள-பௌத்த முப்படை  நாசகாரக் கும்பலை முற்றாக அகற்றினால் மட்டுமே வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். 

இன்னும்மா நம்புகிறீர்கள்   சிங்களவர்கள் என முதலில் இந்த போக்கை மாற்றுங்கள் ஐயா அப்போ நீதிபதியை சுட்ட வர் யாரு ?? ஒரு உதாரணத்துக்கு  சொன்னது  நாம் முதலில் இதற்குள் இருந்து மீண்டு வர வேண்டும் உன்மைதெரியாமல்பேசுவதை விடுத்து  சும்ம இருக்கலாம் 

Link to comment
Share on other sites

18 hours ago, தனி ஒருவன் said:

இன்னும்மா நம்புகிறீர்கள்   சிங்களவர்கள் என முதலில் இந்த போக்கை மாற்றுங்கள் ஐயா அப்போ நீதிபதியை சுட்ட வர் யாரு ?? ஒரு உதாரணத்துக்கு  சொன்னது  நாம் முதலில் இதற்குள் இருந்து மீண்டு வர வேண்டும் உன்மைதெரியாமல்பேசுவதை விடுத்து  சும்ம இருக்கலாம் 

உண்மை விளங்காமல் பேசுவதை விடுத்து  சும்ம இருக்கலாம்!
எய்தவன் இருக்க அம்பை நொந்து பயனில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

உண்மை விளங்காமல் பேசுவதை விடுத்து  சும்ம இருக்கலாம்!
எய்தவன் இருக்க அம்பை நொந்து பயனில்லை! 

இதோ உங்க பார்வையில் சிங்கள காடையர்கள்  இன்னும் என்னத்தை சொல்ல 

Link to comment
Share on other sites

21 hours ago, தனி ஒருவன் said:

இன்னும்மா நம்புகிறீர்கள்   சிங்களவர்கள் என முதலில் இந்த போக்கை மாற்றுங்கள் ஐயா அப்போ நீதிபதியை சுட்ட வர் யாரு ?? ஒரு உதாரணத்துக்கு  சொன்னது  நாம் முதலில் இதற்குள் இருந்து மீண்டு வர வேண்டும் உன்மைதெரியாமல்பேசுவதை விடுத்து  சும்ம இருக்கலாம் 

32 minutes ago, தனி ஒருவன் said:

இதோ உங்க பார்வையில் சிங்கள காடையர்கள்  இன்னும் என்னத்தை சொல்ல 

இந்தக் காணொளியை பார்த்து, அதில் தமிழ் மக்களை கிலிகொள்ளவைத்தது தமிழர்கள் தான், இதை வேறுயாரும் திட்டமிட்டு செய்யவில்லை  என்ற முடிவுக்கு வந்த நீங்கள் நிச்சயம் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் கருத்து மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்தக் காணொளியை முன்பும் சில தரம் பார்த்துள்ளேன், இன்றும் பார்த்தேன். அதைப் பார்த்த பின்னும் வந்தவர்களின் நோக்கம், தொடர் வாள்வெட்டு அச்சுறுத்தல்களின் நோக்கம், அவர்கள் கைது செய்யப்படாத பின்னணி, எடுத்தவுடனேயே  முன்னாள் போராளிகள் சம்பந்தம் என்று அறிக்கைகள் விடும் சொறிலங்காவின்  போலீஸ் அறிவாளிகள், போன்ற பலவற்றினதும் உள்நோக்கங்களை உணரத்தவறும் தமிழர்கள் இன்னமும் இருப்பது அவர்களின் முதிர்ச்சியின்மை தான். இவை தான் தமிழினத்தின் முன்னேற்றத்துக்கான உண்மையான தடைகள்.  

சரியோ பிழையோ தமிழன் நகை, பணம், காணி, போன்ற சொத்துக்களின் மீது அலாதி பிரியம் கொண்டவன். இவற்றை நேர்மையாக சேர்ப்பவர்கள் பலர். குறுக்குவழிகளில்  சேர்ப்பவர்கள் சிலர். குறுக்குவழிகளில் சேர்ப்பவர்கள் சமூகவிரோதிகள்.

சகல இனத்திலும் சமூகவிரோதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழினத்திலும் பல ஆயிரம் வருடங்களாக சமூகவிரோதிகள் இருந்தே வந்துள்ளனர். ஆனால் 2009 க்கு முன்னர் சமூகவிரோதிகள் கோலோச்ச முடியாத நிலை இருந்தது. தமிழ் சமூகம் அல்லது நேர்மையான தமிழ் அமைப்புக்கள் அல்லது தமிழ் நீதித்துறை அல்லது தமிழ் அரசர்கள் கட்டுப்படுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது சமூகவிரோதிகள் தமிழினத்தை ஒழிப்பதற்கு திட்டமிட்டு செயற்படும் சிங்கள அரசினால் பல சலுகைகள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதனாலேயே அவர்கள் கொட்டம் நீதிபதி இளஞ்செழியனால் கூட கட்டுப்படுத்த முடியாமல் தொடர்கிறது.

இந்த உண்மைகளை விளங்காதவரை தமிழர்களுக்கு விமோசனம் இல்லை.

கதிர்காம கந்தனின் அருள் கிடைத்து இருள் அகலட்டும்!

இன்னும் என்னத்தை சொல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Rajesh said:

இன்னும் இங்குள்ள இளைவர்களை புனிதர்களாக நினைக்கும் உங்களை போல் ஆட்கள் இருக்கும் வரைக்கும் என்ன செய்யலாம் உதாரணமாக தான் பெற்ற பிள்ளை ஒரு களவு செய்தால் அந்த களவை  அந்த தாய் ஏற்றுக்கொள்ளமாட்டால் ஏன் நம்பவே மாட்டாள் அது போல்  தான் நீங்கள் சொல்வதும் 

விசேட அதிரப்படையின் தேடுதலில் பல  வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது அது ஆமியின் கேம்பில் இல்லை  இன்னும் சிறிது நேரத்தில் அந்த செய்தி இணைக்கப்படலாம் பொரூத்து  இருங்கோ பாஸ் நேரலையாக காண்பிக்கலாம்  அதற்கு என்ன சொல்வார்கள் என பார்ப்போம்  

ஒன்று மட்டும் சொல்வார்கள் ராணுவம் அவர்கள் வீட்டில் புதைத்தும் ஒளித்தும் வைத்து விட்டே தேடுதல் வேட்டை போட்டி எடுத்தது என 

Link to comment
Share on other sites

7 minutes ago, தனி ஒருவன் said:

இது போன்ற விதண்டாவாதங்களுக்கு பதில் எழுதுவது நேர விரயம்!

வட மாகாண தமிழர்கள் பலரது வீட்டில் மான்கொம்பு, மழு, சிறுவாள் போன்ற ஆயுதங்கள் இருப்பது வழமை! இவை பலநூற்றாண்டு பழமையானவை. பரம்பரை பரம்பரையாக பேணப்படுபவை! எங்கள் வீட்டிலும் உண்டு!

உங்கள் யாத்திரையை வெற்றிகரமாக முடியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனி ஒருவன் said:

தனி ஒருவன்... இங்கு வாள்வெட்டுகாரர்களுக்கும் சமுக விரோதிகளுக்கும் ஒருத்தரும் சப்போர்ட்டாக கதைக்க வர்வில்லைஎன நினைக்கிறேன்...சில தேவைகள் கருதி அரசும் இவர்களை ஊக்கிவிக்கும் என்று தான் சொல்கிறார்கள்.அதாவது ஜனாதிபதிக்கு தெரியாமல் பொலிஸ் தினைக்களம் இதை செய்ய வாய்ப்புக்கள் உண்டு.

Link to comment
Share on other sites

22 hours ago, தனி ஒருவன் said:

இன்னும்மா நம்புகிறீர்கள்   சிங்களவர்கள் என முதலில் இந்த போக்கை மாற்றுங்கள் ஐயா அப்போ நீதிபதியை சுட்ட வர் யாரு ?? ஒரு உதாரணத்துக்கு  சொன்னது  நாம் முதலில் இதற்குள் இருந்து மீண்டு வர வேண்டும் உன்மைதெரியாமல்பேசுவதை விடுத்து  சும்ம இருக்கலாம் 

காடைத்தனம் அற்றவர்களைக் கொண்ட மனித இனம் உலகில் இல்லை. அதற்குத் தமிழர் சிங்களவர் என்ற பேதமும் இல்லை. ஆனால் அதனை அடக்கி வைத்திருக்கும் அதிகாரத்தில்தான் பேதமுள்ளது. இலங்கையின் ஆட்சி அதிகாரம் சிங்களவர் கைக்குவந்து 69 வருடங்களாகின்றது, இன்றும் அந்த அரசுகளினால் இலங்கை மக்களிடையே தோன்றும் காடைத்தனங்களை அடக்கவோ, அழிக்கவோ முடியவில்லை. ஆனால் ஒரு 30 வருடங்களாக அதுவும் நிழல் அரசாக விளங்கிய தமிழருடைய அரசால், தமிழ் ஈழத்தில் காடைத்தனம் குறைந்து அல்லது அற்றே விளங்கியதே? அது எப்படி?? இதனைச் சிங்கள மக்கள் மட்டுமல்ல, உலகமக்களும் வியந்து வரவேற்றிருப்பதாகச் செய்திகள் வருகின்றனவே! இதனைப் புரிந்து கொண்டால் அனைத்தும் புரியும். யாழ்களமும் பொறுக்கிகளுக்கு உணவளிக்கிறதா? அல்லது அவர்களை மனிதர்களாக உணரவைக்க முனைகிறதா என்பதும் புரியும்!!.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Rajesh said:

இது போன்ற விதண்டாவாதங்களுக்கு பதில் எழுதுவது நேர விரயம்!

வட மாகாண தமிழர்கள் பலரது வீட்டில் மான்கொம்பு, மழு, சிறுவாள் போன்ற ஆயுதங்கள் இருப்பது வழமை! இவை பலநூற்றாண்டு பழமையானவை. பரம்பரை பரம்பரையாக பேணப்படுபவை! எங்கள் வீட்டிலும் உண்டு!

உங்கள் யாத்திரையை வெற்றிகரமாக முடியுங்கள்.

ஒன்றை விட்டு விட்டீர்கள் கட்டு துவக்கு  இதுவும் இருந்திச்சு 

1 minute ago, putthan said:

தனி ஒருவன்... இங்கு வாள்வெட்டுகாரர்களுக்கும் சமுக விரோதிகளுக்கும் ஒருத்தரும் சப்போர்ட்டாக கதைக்க வர்வில்லைஎன நினைக்கிறேன்...சில தேவைகள் கருதி அரசும் இவர்களை ஊக்கிவிக்கும் என்று தான் சொல்கிறார்கள்.அதாவது ஜனாதிபதிக்கு தெரியாமல் பொலிஸ் தினைக்களம் இதை செய்ய வாய்ப்புக்கள் உண்டு.

புத்தன் சில வேலைகளை தமிழ் குழுக்கள் செய்து விட்டு அதை  வேறு ஒருவர் நீங்கள் சொல்வது போலவும்  பொலிசின் தலையில் குட போட்டு விட்டு தப்பிக்கலாம் அல்லவா  அது என்ன வோ நம்ம சில தறுதலைகள் செய்யும் பிழைகளை ஏற்றுகொள்ள மறுப்பது என்னவென்று புரிய வில்லை  இன்னும் ஊக்கம் அளிக்கிறோம் .

1 minute ago, Paanch said:

காடைத்தனம் அற்றவர்களைக் கொண்ட மனித இனம் உலகில் இல்லை. அதற்குத் தமிழர் சிங்களவர் என்ற பேதமும் இல்லை. ஆனால் அதனை அடக்கி வைத்திருக்கும் அதிகாரத்தில்தான் பேதமுள்ளது. இலங்கையின் ஆட்சி அதிகாரம் சிங்களவர் கைக்குவந்து 69 வருடங்களாகின்றது, இன்றும் அந்த அரசுகளினால் இலங்கை மக்களிடையே தோன்றும் காடைத்தனங்களை அடக்கவோ, அழிக்கவோ முடியவில்லை. ஆனால் ஒரு 30 வருடங்களாக அதுவும் நிழல் அரசாக விளங்கிய தமிழருடைய அரசால், தமிழ் ஈழத்தில் காடைத்தனம் குறைந்து அல்லது அற்றே விளங்கியதே? அது எப்படி?? இதனைச் சிங்கள மக்கள் மட்டுமல்ல, உலகமக்களும் வியந்து வரவேற்றிருப்பதாகச் செய்திகள் வருகின்றனவே! இதனைப் புரிந்து கொண்டால் அனைத்தும் புரியும். யாழ்களமும் பொறுக்கிகளுக்கு உணவளிக்கிறதா? அல்லது அவர்களை மனிதர்களாக உணரவைக்க முனைகிறதா என்பதும் புரியும்!!.     

தமிழர்களுக்காக போராடா சென்ற குழுக்கள் எத்தனை அவைகளை கூறுங்கள் பாஞ்  அவைகள் பிரிந்து ஏன் சென்றது   ஏன் ஆனால்  அவைகளில் இருந்து இயங்கியவர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்து விட்டார்களா இல்லையே  ஒருவருக்கு ஒருவர் எதிரியாகவே இருக்கிறார்கள் அவர்கள் யாரு என்பதை விளங்கிகொள்ள வேண்டும் அவர்கள் செய்தவை என்னென்ன  இன்றும் செய்து கொண்டிருப்பது என்னென்ன் இப்படி இருக்க  இன்னும் தொடரும் ஆக மொத்தத்தில் நம்க்கு எதிரி  பக்கமே தூரத்தில் இல்லை 

Link to comment
Share on other sites

4 minutes ago, தனி ஒருவன் said:

ஒன்றை விட்டு விட்டீர்கள் கட்டு துவக்கு  இதுவும் இருந்திச்சு

போன்ற ஆயுதங்கள் இருப்பது வழமை!

தயவு செய்து தமிழை கொஞ்சமாவது படித்து முறையாக விளங்க முயற்சி செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Rajesh said:

போன்ற ஆயுதங்கள் இருப்பது வழமை!

தயவு செய்து தமிழை கொஞ்சமாவது படித்து முறையாக விளங்க முயற்சி செய்யுங்கள்.

போன்ற என்பது ஆயுதம் இல்லை  பலவற்றை குறித்து நிற்பது பெயரை சொன்னாலே  அது பொருள் படும்  கூல் டவுன் ஏன்  டென்சன் ஆவான்

உதாரணம் பல பேர் நிற்கும் போது உங்கள் பெயர் சொன்னாலே நீங்கள்  போவீர்கள்  உங்களை போன்ற ஆட்கள் என்றால் யார் யார் போவது என்று குழம்பி போவான் தானே :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனி ஒருவன் said:

புத்தன் சில வேலைகளை தமிழ் குழுக்கள் செய்து விட்டு அதை  வேறு ஒருவர் நீங்கள் சொல்வது போலவும்  பொலிசின் தலையில் குட போட்டு விட்டு தப்பிக்கலாம் அல்லவா  அது என்ன வோ நம்ம சில தறுதலைகள் செய்யும் பிழைகளை ஏற்றுகொள்ள மறுப்பது என்னவென்று புரிய வில்லை  இன்னும் ஊக்கம் அளிக்கிறோம் .

ஒருஅரசின் பொலிஸ் படையில் ,ஒரு சமுகத்தினருக்கு இன்னும் நம்பிக்கை வராமல் இருப்பதற்கு என்ன காரணம்?சுதந்திரத்தின் பின்பு அவர்கள் நடந்து கொண்ட விதம்....நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் மற்றும் அவரது மெய்பாதுகாவலர் இறந்த படியால் தான் இந்த திடிர் சுற்றிவளைப்பும் கைதுகளும் இல்லை என்றால் அவா குழு இன்னும் செயலில் தான் இருக்கும்....மற்றது இந்த உறுப்பினர்கள் எல்லாம் 25 வ்யதுக்கு குறைந்தவர்கள் ? நிச்சயமாக புலிகளுடன் தொடர்பு இருக்க சந்தர்ப்பமில்லை....

மேலும் வடமாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்கள் கொடுக்க கூடாது என்பதில் மத்திய அரசும் பெரினவாதிகளும் மிகவும் கடுமையாக இருக்கின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

மற்றது இந்த உறுப்பினர்கள் எல்லாம் 25 வ்யதுக்கு குறைந்தவர்கள் ? நிச்சயமாக புலிகளுடன் தொடர்பு இருக்க சந்தர்ப்பமில்லை....

மேலும் வடமாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்கள் கொடுக்க கூடாது என்பதில் மத்திய அரசும் பெரினவாதிகளும் மிகவும் கடுமையாக இருக்கின்றனர்

இதை ஏற்றுக்கொள்கிறேன் இதற்கான நிகழ்ச்சி நிரல் வேறு புத்தன்  எல்லாம் இலங்கை என்ற நாட்டின் மீதுள்ள அண்டை நாட்டின் போட்டிகளும் உள்ளடக்கம் விரிவுகள் நீங்கள் அறிந்து கொண்டால் நல்லது :107_hand_splayed:

Link to comment
Share on other sites

26 minutes ago, தனி ஒருவன் said:

தமிழர்களுக்காக போராடா சென்ற குழுக்கள் எத்தனை அவைகளை கூறுங்கள் பாஞ்  அவைகள் பிரிந்து ஏன் சென்றது   ஏன் ஆனால்  அவைகளில் இருந்து இயங்கியவர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்து விட்டார்களா இல்லையே  ஒருவருக்கு ஒருவர் எதிரியாகவே இருக்கிறார்கள் அவர்கள் யாரு என்பதை விளங்கிகொள்ள வேண்டும் அவர்கள் செய்தவை என்னென்ன  இன்றும் செய்து கொண்டிருப்பது என்னென்ன் இப்படி இருக்க  இன்னும் தொடரும் ஆக மொத்தத்தில் நம்க்கு எதிரி  பக்கமே தூரத்தில் இல்லை 

நீங்கள் குறிப்பிட்டுள்ள குழுக்களோடு சிங்களப் படைகளும் இருந்தன. இவர்களையும் அடக்கித்தான் தமிழீழ அரசு ஆட்சி செய்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Paanch said:

நீங்கள் குறிப்பிட்டுள்ள குழுக்களோடு சிங்களப் படைகளும் இருந்தன. இவர்களையும் அடக்கித்தான் தமிழீழ அரசு ஆட்சி செய்தது.

ஆட்சி செய்தது உன்மைதான்   இன்று அவர்கள் இல்லாத நிலையில் இவர்கள்  ஏன் உள்ளே நுழைந்து இருக்ககூடாது என நினைக்கிறீர்கள்  இவர்களும் உடந்தையாக இருக்கலாம் அல்லவா இவர்கள் நிகழ்த்திவிட்டு செல்ல எந்த குற்றமும் செய்யாத முன்னாள் போராளிகள் கைதாவது ம்   கவனத்த்தில் அதாவது மேற்பார்வையின் புலனாய்வு துறையின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவருவதும் கண்டிக்கதக்கதே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.