Sign in to follow this  

Recommended Posts

கவிதைகள்

இசை - ஓவியங்கள்: செந்தில்

 

46p1.jpg

சிறுமீ

சிறுமி ஆட்ட
குமரி அடக்க

சிறுமி ஆட்ட
குமரி அடக்க

சமீபத்தில் சமைந்த
ஒருத்தியின்
சமைப்புடன்
விளையாடிப் பார்க்கிறது
ஒரு தப்பட்டைக் குச்சி.


46p2.jpg

நீ ஒருக்களித்துச் சாய்ந்திருக்கும் குளக்கரை

உன் குளத்துப் பொற்றாமரையாக
ஒரு கணம் இருக்கக் கேட்டேன்
ஒரே ஒரு கணம்தான்.
அதுவும் இல்லையென்றான நாளில்தான்
குழாயடியின் நீண்ட வரிசையில்
எல்லா குடங்களையும்
இடித்துத் தள்ளிவிட்டு
``ஒரே ஒரு குடம்தானே கேட்டேன்''
என்று கத்தினேன்.

ஈருருளி ஓட்டுனன் - கவிதை

கார்த்திக் திலகன் - ஓவியம்: செந்தில்

 

51p1.jpg

ண்பர்களின் சீழ்க்கை ஒலிகளில்
களைகட்டுகிறது மகிழுந்துப் பயணம்
திடீரென்று குறுக்கே பாய்கிறது
ஓர் ஈருருளி
நீண்ட க்ரீச் ஒலியோடு
சாமர்த்தியமாக நிறுத்தினேன் மகிழுந்தை
தமிழின் மிகத் தொன்மையான
கெட்டவார்த்தைகளால்
என்னை வசவு பாடுகிறான் ஈருருளி ஓட்டுனன்
மகிழ்வோடு புன்னகைத்தேன்
என்னை வசவு பாடவாவது
அவன் உயிருடன் இருக்கிறானே என்ற நிம்மதி எனக்கு
பயத்தின் குளிரில் வெடவெடவென
நடுங்கியது மகிழுந்து
போய்வா என் இனிய நண்பனே
உன் ஈருருளியின் பின்னிருக்கையில்தான்
உட்கார்ந்து வந்திருக்கிறது
எங்கள் அதிர்ஷ்டம்
பெருவிரலையும் ஆள்காட்டிவிரலையும் இணைத்து
நாவுக்கு அடியில் வைத்து
இப்போது நானெழுப்பும் சீழ்க்கை ஒலி
உனக்கே உனக்காகத்தான்.

http://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

காரம் நிமித்த இரவுகள் - கவிதை

ஸ்டாலின் சரவணன் - ஓவியம்: செந்தில்

 

52p1.jpg

ல்சர் புண்ணேறிய
பொத்தல் வயிறு குறித்து
அக்கறைப்பட்டு காது நீட்டும்
ஒரே ஓர் இரவு உணவக முதலாளியையும்
இன்னும் நான் கண்டடையவில்லை.

ஊரில் மல்லிகா சித்தி
அரைக்கும் தேங்காய் சட்னிக்கு
நாக்கை அறுத்துக்கொடுக்கும்
ருசியில் திளைத்தவன்.

இங்கு
ஏழே முக்காலுக்கு மேல்
உணவகம் செல்ல நேர்கையில்
வாளி அடித் தடவி
ஒரு இட்லி மட்டும்
லேசாக நனைகிறது.

`ஆம்லெட் ஒன்று’ என்றதும்
`பெப்பர் தூக்கலா?’ எனக் கேட்கும்
சிப்பந்தி சிறுவனிடம்
`பெப்பரே வேணாம்’ என்ற
பதில் கேட்டதும்
மேலும் கீழும் பார்க்கிறான்.

மாலைப் பொழுது
கடை வந்தடையும்
அத்தனை பறவைகளும்
கள்ளுண்டு வருவதாகவே எண்ணி
ஒரு கை காரம் தூக்கலான
சமையற்குறிப்புகளோடு
மிளகாய்களையே கண்களெனக்கொண்ட அவனை
தூரத்தில் பார்க்கையிலே
என் குலை நடுங்கும்.
மாதமோ கார்த்திகை என்பதால்
கடைமுதலாளி, மாஸ்டர் என
எல்லோரும் மாலை அணிந்து
நோன்புற்றிருக்கின்றனர்.

கடைசி மேசையிலிருந்து
மங்கலான குண்டு பல்பு
வெளிச்சத்தில்
கல்லாப்பெட்டியில் இருப்பவர் கழுத்தில் காற்றிலாடுவது
பெருங்குடல்போல் தெரிகிறது.

அதோ
அந்தச் சிப்பந்தி
கழுத்தில் அணிந்துள்ளான்
சிறுகுடலை.
பரோட்டா மாஸ்டர்
அழுத்திப் பிசைவது
என் கல்லீரலைத்தான்.

நெருங்கிவிட்டான்
வாளி நிறைய என் ரத்தத்தைச்
சுடச்சுடக் கொண்டுவரும்
ஒருவன்.

வந்ததும் கேட்கிறான்...
`குடல் ஒன்று
ஆர்டர் பண்ணட்டுமா சார்?’

http://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

புதிய காதலுக்கான எளிய தியானம்! - கவிதை

மனுஷ்ய புத்திரன் - ஓவியம்: செந்தில்

 

80p1.jpg

ங்களால் எப்போதோ நேசிக்கப்பட்ட ஒருவரின் திருமண அழைப்பிதழைக் காணும்போது நீங்கள் ஏன் நிலைகுலைய வேண்டும்?
 
எப்போதோ நேசித்த ஒருவரை
எப்போதோ மறந்துபோய்விட்டீர்கள்
எப்போதோ இட்ட முத்தங்கள்
எப்போதோ உலர்ந்துவிட்டன
எப்போதோ சொன்ன சொற்கள்
எப்போதோ அர்த்தமிழந்துவிட்டன.
 
ஆனால் நீங்கள் எப்போதோ நேசித்த
ஒருவரின் திருமண அழைப்பிதழை
காண நேர்கையில்
நஞ்சின் ஒரு துளியை நாவில் அறிகிறீர்கள்
கண்ணீரின் ஒரு துளியை
அவசரமாக மறைக்கிறீர்கள்
ஏதோ ஒருவரை நீங்கள்
அப்போதுதான் இழந்ததுபோல
ஒரு சின்ன இருட்டில் போய்
சில நிமிடங்கள் அமர்ந்துவிடுகிறீர்கள்
அவர்கள் உங்களுக்கு
எப்போதோ இல்லாமல்போனவர்கள் என்பது உங்களுக்கு மறந்துவிடுகிறது.
 
எப்போதோ நம்மை நேசித்தவர்கள்
ஏன் நமக்கு அவர்களது
திருமண அழைப்பிதழை அனுப்புகிறார்கள்?
அந்த நாளில்
நாம் அங்கே வர வேண்டும் என்பதற்காக அல்ல
அதை நம் கையில் வாங்கும்போது
நமது கண்களை அவர்கள்
மானசிகமாகக் காண விரும்புகிறார்கள்
அந்தக் கணத்தில் அவர்கள்
ஒரு நியாயம் கேட்கவோ
ஒரு மன்னிப்பைக் கோரவோ விரும்புகிறார்கள்
ஒன்றை உங்களுக்கு நிரூபித்துக்காட்ட
விரும்புகிறார்கள்
நீங்கள் ஒன்றுமே நடக்காததுபோல
வண்ணத்தாளில் சுற்றப்பட்ட
பரிசோடு போய் நின்றால்
அவர்கள் மனமுடைந்துபோய்விடுவார்கள்
என்னால் நேசிக்கப்பட்டவர்களின்
எந்தத் திருமணத்துக்கும் நான் போனதில்லை
ஆனால், அந்தத் திருமண அழைப்பிதழ்களை
நான் எப்போதும் என் பையிலேயே வைத்திருப்பேன்
அவை எனக்கு நானே சிகிச்சை அளித்துக்கொள்ளும் மூலிகைகள்
என்னை நானே கடந்துசெல்லும்
சிறிய கப்பல்கள்
மேலும் நான் ஒரு புதிய காதலைத் தொடங்கும்போது
என்னைச் சமநிலைப்படுத்தும்
எளிய தியானங்கள் அவை.

http://www.vikatan.com

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

சிதில மனம்... சில குறிப்புகள் - கவிதை

தர்மராஜ் பெரியசாமி, ஓவியம்: செந்தில்

 

1

மனம் ஒரு விசித்திர ஜந்து
சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறீர்கள்
அதை ஒருமுறை
தாவச்சொல்லிக் கேட்டுப்பாருங்கள்
லொள்ள்ள்ள்ள்ள் எனக் குரைக்கும்.

p74a.jpg

2

நங்நங்கெனக் குளியலறைக் கதவை
நொறுக்கிக்கொண்டிருக்கும் நண்பா
கசங்கிய மனதைக் கழற்றி
அலசிக்கொண்டிருக்கிறேன்
கொஞ்சம் பொறு
மாட்டிக்கொண்டு வந்துவிடுகிறேன்.

3

அழுவதற்கான காரணங்கள் யாவும்
வற்றித் தீர்ந்துபோன பிறகு
முறுவலிக்கத் தொடங்கியிருந்த மனதிடம்
`நீ சிரிக்கையில் உன் முகம்
கொஞ்சமும் காணச் சகியவில்லை’ எனச் சொல்லிச் சென்றீர்கள்
உங்களை நினைத்துச் சிரிக்கவும்
நீங்கள் சொன்னதை நினைத்து விசும்பவும்
இப்போது காரணங்களிருக்கின்றன.

4

நினைவுகள் சரிந்து விழுந்து
எழத் திராணியற்று
முனகிக்கொண்டிருந்த மனதிடம்
ஓர் இருகுழல் துப்பாக்கி
முடிச்சிடப்பட்ட தூக்குக்கயிறு
பளபளக்கும் குறுவாள்
விஷமென எழுதப்பட்டக் குப்பி
நான்கில் எது வேண்டுமெனக் கேட்டேன்
ஒரு கணம் யோசித்த அது
நான்கையும் வாங்கி வைத்துக்கொண்டது.

5

உன் ரகசியங்கள் அனைத்தும் அறிந்தவன்
நான் ஒருவனே என்றது மனம்
அதற்குப் பிறகுதான் இரவோடு இரவாக
யாருக்கும் தெரியாமல்
அதன் கழுத்தை நெரித்து இரக்கமின்றிக்
கொல்லவேண்டிவந்தது.

http://www.vikatan.com

12ஏ

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
suvy    3,107

அருமையான கவிதைகள்.... பகிர்வுக்கு நன்றி நவீனன் .....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

கதிர் கூறாய்வு - கவிதை

தய்.கந்தசாமி

 

p21.jpg

பிடுங்கி எறியப்பட்ட கதிரென
கிடந்தந்தச் சடலம்.

பாதித் திறந்துகிடந்த கண்களில்
பச்சையாய் உறைந்துகிடந்ததொரு கனவு.

கபாலத்தைத் திறக்க வெளியேறியது
வறண்டு வெடித்த
வயல்வெளியின் காங்கல்.

நெஞ்சுக்கூட்டினுள்ளே முளைத்துப் பிளந்த
இரண்டாய் வெடித்துக்கிடந்தது
இதயம்.

குருத்துப்புழு வாழ்ந்த
பருத்தியின் சூலறையாய்
வயிற்றுக்குழிக்குள்
முளைக்காத விதைகளென
பாதி செறிக்காத பருக்கைகள்.
வானையும் மண்ணையும்
சபித்துச் செத்த
அந்தக் கடைமடைக்காரனுக்கு
நீருக்கேங்கி நீண்ட
நெற்கதிரின் வேர்கள்போலவே இருந்தன
விரல்கள்.

http://www.vikatan.com

19ஏ..

Share this post


Link to post
Share on other sites

இரண்டே எறிதலை இழுத்துச் செல்லுதல்... - கவிதை

பச்சோந்தி, படம்: எம்.விஜயகுமார்

 

p48.jpg 

சீமை ஓடுகளில் செருகி
சிமென்ட் தரையில் குத்தி நிற்கிறது சூரியக் கம்பி.
அது நெற்றியில் குத்தி நடுமண்டைக்கு நகர்கையில்
பயண அசதியில் உறங்குகிறார் அப்பா.
புழுதி பூசிய கைகால்களோடு
வீடுவந்த மகள்
உறக்கத்தை உதறி அப்பாவை எழுப்புகிறாள்.
மல்லாக்கப் படுத்திருந்தவர்
வலப்பக்கமாக ஒருக்களிக்கையில்
வழிந்த வியர்வையை நாக்கால் வழித்து
மடக்மடக்கெனக் குடித்துக்கொள்கிறார்.
ஐந்து நாள்களாகத் திருகுக் குழாயடியில்
வெயில் நிரம்பிக்கிடக்கின்றன பிளாஸ்டிக் குடங்கள்.
அப்பாவின் இமைகளைத் திருகினாள்
கண்களுக்குள் தடக்தடக் ரயிலொன்று
தண்டவாள இருட்டை விரட்டியது.   
பின்பு உறக்கத்தை மடிக்கையில்
குப்புறக்கப் படுத்துக்கொள்கிறார்
முதுகெங்கும் கோரைப்பாயின் கோடுகள்.
உறக்கம் கலைந்ததும் அப்பாவின் கண்கள் தேடின 
மகளோ... விரல் சப்பியபடி
நீலப்போர்வையில் உறங்குகிறாள்.

சந்தைக்குச் சென்ற அப்பா
சிறுமலைப் பிரிவில் இரண்டு படி வேர்க்கடலை வாங்கிவந்தார்.
டிக்டாக்கைக் கடித்துத் தின்று
முந்திரிப்பருப்பில் பிறைநிலவைக் கொறித்துக்கொண்டிருந்தாள் மகள்.
பின்பு ஊருக்குக் கிளம்பிய அப்பாவிடம்
`ஏம்ப்பா என்னை விட்டுட்டுப் போற...
ஏம்ப்பா என்னை விட்டுட்டுப் போற?’ என்ற
கேள்வியில் அப்பாவைத் தொங்கவிடுகிறாள்.
`சரி... அப்பாவுக்கு டாட்டா சொல்லுமா...’ என்று
உடைந்த குரலில் அம்மா சொல்ல
மகளோ... உள்ளங்கையிலிருந்த
இரண்டு பச்சை வேர்க்கடலைகளில்
ஒன்றை அப்பாவின் நெஞ்சின்மீதும்
மற்றொன்றை வயிற்றின்மீதும் எறிந்தாள்.
முதல் எறிதலில் பொத்துக்கொண்ட மார்பையும் 
இரண்டாம் எறிதலில் பிய்த்துக்கொண்ட குடலையும் 
தரதரவென இழுத்துக்கொண்டு 
கடைசிப் பேருந்துக்கு ஓடுகிறார் அப்பா.

http://www.vikatan.com

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
suvy    3,107

கவிதையை விடவும் கனதியாயிருக்கிறது புகைப்படம்.....!

படத்தை வைத்துக் கொண்டுதான் கவிதை எழுதி இருப்பார் போல அபாரம்.....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

துளி - கவிதை

சச்சின்

 

p81a.jpg

ச்சு முறிந்த இறுதி நாளில்
தான் வேறொரு கூடடையப்போவதாகச்
சொல்லி கதறியழும் உனக்கு
ஒரு துளி உப்புநீரைப் பரிசளிக்கிறேன்
அதை ஆவியாகாமல் சேமித்து வை
அது காயங்களுக்கு மருந்தாகும்
உன் வீட்டுச் செடிகளின் வேர்களுக்கு
மகிழ்ச்சி தரும் கணவனின் அன்பாகும்
குடல் செல்லும் உணவின் உமிழ்நீராகும்
கொட்டும் தேனீக்களின் கொடுக்கறுக்கும்
முத்தத்தின் வாசமாகும்
காவியக் கதைகள் சொல்லி
உயிர் வளர்க்கும்
மேலும் ஒருநாள்
உன் அடிவயிற்றில் பரவசமூட்டிய
அழகு சிசு அமுதருந்தும்போது
அதன் ஈறு பட்டு உன் உயிர் கூசும்
அப்போது... அப்போது
அதன் கண்களை உற்றுப்பார்
அதிலிருந்து ஒரு துளி உப்புநீர்
வழிந்துகொண்டிருக்கும்.

http://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

குழந்தை உறங்கும் வீடு! - கவிதை

 

கவிதை: விஷ்ணுபுரம் சரவணன், ஓவியம்: செந்தில்

 

சின்னஞ்சிறு குழந்தை
உறங்கும் வீடு
தன் சத்தங்களை உறிஞ்சிக்கொள்கிறது.

கொதிக்கும் எண்ணெயில் விழுந்தும்
மெள்ள சோம்பல் முறிக்கின்றன
கடுகுகள்.

p46a.jpg

புடைவையால் மூடி
மிக்ஸியின் சத்தத்தைக்
குறைக்க முடியுமென நம்புகிறாள் அம்மா.

பாக்கிட்டியைத் தவிர்த்து
கொட்டைப்பாக்கை
வாயில் அதக்கி
ஊறவைக்கிறாள் பாட்டி.

மெட்டிவிரல்களைத் தூக்கியபடி
நடக்கப் பழகிவிட்டாள் அக்கா.

குளவிகள்
வழி மாற்றிச் செல்கின்றன

வியர்த்து
நெகிழ்வாகின்றன அப்பளங்கள்.

குரலெழுப்பாமல்
பால் வீச்சம் வீசி
கன்றை அழைக்கிறது பசு.

கூடம் கடந்து
பின்வாசல் தாண்டி
கொல்லைக் கடைசியில் நிற்கும்
தாயின் விக்கலொலிக்கு
விழிகளைத் திறந்துபார்க்கிறது
குழந்தை.

http://www.vikatan.com

26ஏ

Share this post


Link to post
Share on other sites

ஒரு அமரர் மீண்டும் அமரராகிறார்!

கவிதை: ஜெ.பிரான்சிஸ் கிருபா

 

72p1.jpg

ச்சிவெயிலில் நகரத்தின் தார்ச்சாலை
அப்பளமாக பொரிந்துகொண்டிருந்த
வேளையில்
சிக்னலில் எரிந்த சிவப்பு விளக்குக்காக
சாலையில் நின்றிருந்த அமரர் ஊர்தியில்
மயானம் நோக்கிப் பயணப்பட்டிருந்த
அமரர்
படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தபடி
ஆசுவாசமாய்
சுற்றும்முற்றும் தலையைச் சுழற்றி
ஒரு மேற்பார்வை மேற்கொண்டுவிட்டு
என்னைக் கண்டதும்
மென்மையாகப் புன்னகைத்தார்.

பதிலுக்கு நானும் அதிர்ச்சியோடு
புன்னகைப்பதா வேண்டாமா என்ற
குழப்பத்தில்
பார்வையைச் சட்டென
வேறுபக்கமாகத் திருப்பிக்கொண்டேன்.

பாராமுகம் காட்டியபடியே இவர்
யாராக இருக்குமென்று
யோசிக்கலானேன்.

ஒரு சாயலில்
காலையில் தொலைக்காட்சிப்பெட்டியில்
பன்னிரண்டு ராசிகளுக்கும்
அருள் பொங்கும் முகம் மலர
அமர்த்தலான சிரிப்போடு
பலன்கள் சொன்ன ஜோசியரின்
பட்டையணிந்த முகம் போலிருந்தது.

மற்றொரு சாயலில்
சில வருடங்களுக்கு முன்பு
ஒரு ரயில் பயணத்தில்
எதிர் இருக்கையில் அமர்ந்தபடி
இருநூறு கிலோமீட்டர் நீளத்துக்கு
அறுநூறு கிலோமீட்டர் வேகத்தில்
இடைவிடாமல் அரசியல் பேசி
நான் கொலைகாரனாய் மாறவிருந்த
ஸ்டேஷனுக்கு முந்திய ஸ்டேஷனில்
இறங்கிப்போனவரைப் போலுமிருந்தார்.
இன்னொரு கோணத்தில்
இயன்றவரை இயந்து
முடிந்த அளவு பணிந்து
குடும்பம் நடத்தியும்
துணிந்துபோய் குடும்ப நல கோர்ட்டில்
விவாகரத்து வேண்டி நின்ற
என் மனைவியின் தரப்பில் ஆஜராகி
வாதாடியபடியே நீதிபதியைக்
கோமாளியாக மாற்றிய
வழக்கறிஞரின் முகவெட்டும்
ஒத்துப்போனது.

இவர்களில் ஒருவர்தானா என்று
உறுதிசெய்யும்பொருட்டு மனதை
திடப்படுத்திக்கொண்டு
திரும்பிப் பார்த்தபோது
மஞ்சள் விளக்கு அணைந்தது
பச்சை விளக்கு எரிந்ததும்
படுக்கையில் மீண்டும்
படுத்துக்கொண்டார் அமரர்!

http://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this