• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

''சாகுற வரைக்கும் என் உழைப்புல வயிறு நிறையணும்!'' - 78 வயது வைராக்கிய பால்காரம்மா

Recommended Posts

 

''சாகுற வரைக்கும் என் உழைப்புல வயிறு நிறையணும்!'' - 78 வயது வைராக்கிய பால்காரம்மா

 
 

பால்காரம்மா பத்மாவதி

"எனக்கு வயசு 78. மூணு பொண்ணுங்க இருந்தாலும், என் உழைப்பில் கிடைக்கும் வருமானத்துலதான் என் வாழ்க்கையை நடத்திட்டிருக்கேன். இந்த உசுரு இருக்கிற வரை இப்படித்தான் வாழ்வேன்" என வைராக்கியக் குரலில் பேசுகிறார் பத்மாவதி. சென்னை, கோடம்பாக்கம் பகுதியின் 'பால்காரம்மா'. 

பால்காரம்மா பத்மாவதி

"நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். ரொம்பவே கஷ்டமான குடும்பம். நல்லா படிப்பேன். ஆனாலும் வசதி இல்லாத காரணத்தால் ஆறாவதுக்கு மேல பெற்றோர் என்னைப் படிக்க அனுப்பலை. அக்கம் பக்கத்துல வீட்டு வேலைகள் செய்துட்டிருந்தேன். 21 வயசுல கல்யாணமாச்சு. வீட்டுக்காரருக்கு பிரின்ட்டிங் பிரஸ்ல வேலை. நான் தொடர்ந்து வீட்டு வேலைக்குப் போய்ட்டிருந்தேன். திடீர்னு வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லாமல் 1973-ம் வருடம் இறந்துட்டார். அப்போ, எனக்கு 34 வயசு. மூணு பொண்ணுங்களோடு எதிர்கால வாழ்க்கையை நினைச்சுப் பார்த்தேன். 

நான் பட்ட கஷ்டங்களை பொண்ணுங்க படக்கூடாதுன்னு படிக்கவெச்சேன். ஆனாலும், சில வருஷம்தான் படிக்கவைக்க முடிஞ்சுது. பால் வியாபாரம் செய்ய ஆரம்பிச்சேன். கோடம்பாக்கம் டிரஸ்டுபுரம் பகுதியில் இருக்கிற பல தெருக்களுக்கும் பால் சப்ளை செய்ய ஆரம்பிச்சேன். என்னோட அணுகுமுறை பிடிச்சுப்போய், நிறையப் பேர் அவங்க வீட்டுக்குப் பால் போடச் சொன்னாங்க. காலையும் சாயங்காலமும் பால் போடுறதோடு, மத்த நேரங்களில் வீட்டு வேலைக்கும் போவேன். அப்படித்தான் என் பொண்ணுங்களை வளர்த்து, கல்யாணம் பண்ணிக்கொடுத்தேன். நூத்துக்கும் அதிகமான லிட்டர் பாலை வண்டியில்வெச்சு தள்ளிட்டுபோய் வீடுகளுக்குக் கொடுத்தே என் வாழ்க்கையின் பெரும்பகுதியை கழிச்சிருக்கேன்" என்கிற பத்மாவதி அம்மா, துளிர்க்கும் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார். 

பத்மாவதி

"எனக்குன்னு பெருசா சொந்த பந்தங்கள் கிடையாது. கஷ்டமோ, நஷ்டமோ எதுவா இருந்தாலும், நானும் பொண்ணுங்களும்தான் பங்கு போட்டுக்கணும். பொண்ணுங்களின் கல்யாணத்துக்குப் பிறகு தனியா வாழ ஆரம்பிச்சேன். என் வாழ்க்கையோடு, அப்பப்போ தாய் வீட்டுச் சீதனம் செய்யணுமே. அதுக்காக, பால் சப்ளை வியாபாரத்தை இப்போவரை தொடர்ந்துட்டிருக்கேன். வயசாகறதால் என் உடம்பு சரியா ஒத்துழைக்கறதில்லை. அதனால், வீட்டு வேலை செய்யறதை விட்டுட்டேன். 40 வருஷத்துக்கும் மேல பால் சப்ளை மட்டும் செய்துட்டிருக்கேன். 

பத்மாவதி

விடியற்காலையில் நாலு மணிக்கு எழுந்துடுவேன். நாலறை மணிக்குப் பால் டெம்போ வரும். வண்டியிலிருந்து பாலை இறக்கி, என் தள்ளுவண்டியில் போட்டுக்கிட்டு கிளம்பினால், ஏழரை மணிக்குள்ளே நூறு வீடுகளுக்கும் மேலே சப்ளை செஞ்சு முடிச்சுடுவேன். கோடம்பாக்கம் டிரஸ்டுபுரத்தில் அப்பார்ட்மென்ட்கள் அதிகம். காம்பவுண்ட் வெளியே வண்டியை நிறுத்திட்டு, தேவையான பால் பாக்கெட்டுகலை ஒரு குண்டாவில் எடுத்துக்கிட்டு பல மாடிகளில் ஏறி இறங்கி ஒவ்வொரு பிளாட்டிலும் போடுவேன். வாங்கின செலவு போக ஒரு வீட்டுக்கு மாசத்துக்கு 50 ரூபாய் வருமானமா கிடைக்கும். 

இப்போ காலை நேரத்தில் மட்டும் நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளுக்குப் பால் சப்ளை செய்றேன். முன்னே மாதிரி நடக்கவும் வண்டியைத் தள்ளவும் முடியலை. என் ரெண்டுப் பொண்ணுங்க அப்பப்போ உதவிக்கு வருவாங்க. அவங்களுக்கு மாசத்தில் குறிப்பிட்ட தொகையை பிரிச்சுக் கொடுத்துடுவேன்" என்கிற பத்மாவதி அம்மா, இப்போது வரை தனியாகவே வாழ்ந்துவருகிறார். 

பத்மாவதி

 

"வீட்டுக்காரர் போனதிலிருந்து யார் நிழலையும் நம்பி நிற்கக் கூடாதுன்னு முடிவுப் பண்ணிட்டேன். இப்பவும் என் உடம்புல வலு இருக்கு. பால் வண்டியைத் தள்ளி பிழைச்சுட்டிருக்கேன். சாகுற வரை என் உழைப்புலதான் என் வயிறு நிறையணும்னு நினைக்கிறேன். அடிக்கடி உடலளவிலும் மனசளவிலும் ஏற்படும் வலிகளைத் தாங்கிக்கிறேன். வலியைவிட எனக்கு வைராக்கியம்தான் பெருசு. இங்கே பலரும் 'பால்காரம்மா பத்மா'னு என் மேலே பாசத்தைக் காட்டுறாங்க. அது போதும் எனக்கு'' எனச் சிரிக்கிறார் பத்மாவதி அம்மா. 

http://www.vikatan.com/news/tamilnadu/97865-this-78-year-old-woman-has-an-inspiring-message-to-the-world.html

Share this post


Link to post
Share on other sites

தனது உழைப்பிலேயே இறுதிவரை வாழனும் என்கிறது வைராக்கியம் மட்டுமல்ல அது ஒரு போதையும் கூட , ஆச்சியை வாழ்த்த வயசில்லை வணங்குவோம்....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this