Jump to content

தென் தமிழ் ஈழமும் இஸ்லாமும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் கிழக்கு மாகாணம் சற்று வித்தியாசமானது.
இங்கு மூவின மக்களும் கிட்டத்தட்ட சம அளவில் வாழ்கின்றனர்.(சிங்களவர்கள் சற்று குறைவு)
2012 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்பிரகாரம் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்ற போதிலும் அடுத்த குடிசன மதிப்பீட்டின்போது அந்த நிலை நிச்சயமாக மாற்றமடையும்.
2012 ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழர்கள் 39.29% ஆகவும்,முஸ்லிம்கள் 37.69% ஆகவும்,சிங்களவர்கள் 23.15% ஆகவும் உள்ளனர்.
 
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஒரு இனத்தால் அல்லது ஒரு கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பது வெளிப்படையானது.
கடந்த கால ஆட்சியமைப்பில் ஏற்பட்ட குளறுபடிகள்,துரோகங்கள்,விட்டுக்கொடுப்புக்கள் என்று தொடர்ந்து, தற்பொழுது ஏதோ காற்றுப்போன உழவு இயந்திர சக்கரத்தை கட்டை கட்டி ஓட்டுவதுபோல ஓடி, முடிக்கும் தறுவாயில் வந்து நிற்கிறது.
 
கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுவதற்கு இன்னும் மூன்று மாதங்களேயுள்ள நிலையில் 
கிழக்கு தமிழர்களின் அடுத்த நிலைப்பாடு என்ன என்பதே மிகப்பெரிய கேள்வி.
 
கிழக்கு மாகாண தமிழர்கள் ஒரே இனத்தவர்கள் என்ற காரணத்தால்தான் இன்றுவரை தமிழ்த்தேசியத்தோடு பயணிக்கின்றனர்.
அதைத் தவிர்த்து போராட வேண்டும் என்ற கட்டாயம் கிழக்கிலிருந்த தமிழர்களுக்கு ஏற்படவில்லை.
இன்றுள்ளவர்கள் சிங்கள குடியேற்றங்களைப் பற்றி பேசினாலும் அதனால் கிழக்கு தமிழர்களுக்கு பாதிப்புக்கள் இருக்கவில்லை.
அன்றைய அரசாங்கங்கள் திட்டமிட்ட ரீதியில் அவற்றைச் செய்தபோதிலும் அரச காணிகளை தமிழர்களின் பூர்வீக நிலம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
 படித்த வடபகுதி இளைஞர்கள் போராட்டத்தை ஆரம்பிக்க உடனடிக் காரணங்களில் ஒன்று பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் முறை. அந்த தரப்படுத்தல் காரணமாக கிழக்கு மாகாணத்துக்கு நன்மைகளே ஏற்பட்டன.
பாதிப்புகள் இல்லை. ஆனாலும் ஆயிரக்கணக்கான கிழக்கு தமிழ்  இளைஞர்கள் தங்கள் இனம் போராடுகிறது என்ற ரீதியில் அந்தப்போராட்டத்தில் இணைந்தனர். பொதுவான கணக்கெடுப்பை மேற்கொண்டால் வடபகுதியை விட கிழக்குப் பகுதியே போரால் கடுமையாக பாதிப்படைந்த பகுதி என்பது உறுதியாகும்இராணுவத்தாலும்,புலிகளாலும,மாற்று இயக்கங்களாலும்,இந்தியப்படைகளாலும்,முஸ்லிம்களாலும்  மிகப்பெரியளவில் பாதிப்படைந்தவர்கள் கிழக்கு தமிழ் மக்கள்தான்.
 
போரின்காரணமாக கிழக்கிலுள்ள மக்கள் இலாபமடையவில்லை. போரைக் காரணமாக காட்டி பெருவாரியான வடபகுதி மக்கள் புலம்பெயர்ந்தபோதிலும் கிழக்கிலுள்ளவர்களுக்கு அது சாத்தியமாகவில்லை. அன்றுமுதல் இன்றுவரை கல்வி,  பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களாகவே கிழக்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். போராட்டம்  அவர்களை வளர்க்கவில்லை.
இருந்த நிலையை விட மேலும் படுகுழியில் விழுத்தியுள்ளது.
 
இன்றும் கூட தமிழ்த்தேசியம் என்ற பெயரால் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற மாயை காண்பிக்கப்பட்டு கிழக்கு தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியான நிலையில் உள்ளது. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமே இல்லை என்றான பிற்பாடும் பொய்யாக மக்களை ஏமாற்றுவது கிழக்கு தமிழ்  மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். வடக்கு தனிமாகாணமாகவும் கிழக்கு தனிமாகாணமாகவும் இருக்கும் என்பதை வெளிப்படையாக கூறினால் கிழக்கு மாகாணத்தில் எவ்வாறு ஆட்சியமைக்க வேண்டும் என்பதை கிழக்கு மக்களும் கிழக்கிலுள்ள புத்திஜீவிகளும் கிழக்கின் அரசியல்வாதிகளும் தீர்மானிப்பார்கள்.
 
கிழக்கில் தூரநோக்குள்ள புத்திஜீவிகள் உள்ளனர். ஆனால் தமிழ்த்தேசியம் என்ற மாயை அவர்களைச் சூழ்ந்துள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையே உருவாக்கிய கிழக்கு மாகாண தமிழ் புத்திஜீவிகளுக்கு கிழக்கின் ஆட்சியைத் தீர்மானிக்க கூடிய பல கட்சி சேர்ந்த கட்டமைப்பை உருவாக்குவது ஒன்றும் கடினமான விடயமல்ல.
 
இன்றயை தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலுள்ள கிழக்கு உறுப்பினர்கள பெரும்பாலானவர்களின் எண்ணமும் அதுவாகவே உள்ளது.
அவ்வாறான ஒரு சிந்தனையை தவறு என சொல்பவர்கள் கிழக்கு தமிழ் மக்களின் மிகப்பெரிய துரோகிகள்.
எமது கிழக்கு இளைஞர்கள் ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களிலும் காலையில் சென்று யாராவது வேலை தருவானா என ஏங்கி நிற்கும் கொடுமையைக் காணும் எவனும் இதனை தவறு என்று சொல்லமாட்டான்.
எமது பெண்கள் நக்கலையும் நையாண்டிகளையும் பாலியல் இம்சைகளையும் தாங்கி முஸ்லிம் கடைகளில் வேலை செய்வதை அறிந்தவன் இதனை தவறு என சொல்லமாட்டான்.
 
யாருடன் கூட்டுச் சேரவேண்டும் யாரையெல்லாம் ஒன்றிணைக்க வேண்டும் என்பதை கிழக்கிலுள்ளவர்களே தீர்மானிக்க வேண்டும்.
கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து பெரும்பான்மைக் கட்சிகளில் போட்டியிடும் தமிழர்களையும் ஒன்றிணைத்து பலமான கிழக்கு மாகாணத்துகான அமைப்பை உருவாக்கி எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கினால் மற்றையவர்களுக்கு விட்டுக்கொடுத்து தொங்கிக் கொண்டிருக்கும் நிலை ஏற்படாது.
 
அதை விடுத்து தமிழ்த்தேசியத்தில் தொங்கிக்கொண்டிருந்தால் கிழக்கில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஆட்சியமைக்க தமிழன் வாய்பார்க்கும் நிலைதான் ஏற்படும். பொருளாதார ரீதியில் மோசமான நிலையிலுள்ள எமது மக்கள் முஸ்லிம்களாக மாறுவதை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது.
 
எனவே அன்பான கிழக்கு தமிழ் புத்திஜீவிகளே...
கிழக்கு மண்ணை உண்மையாக நேசிக்கும் அரசியல்வாதிகளே....
கிழக்கு மண்ணின் மைந்தர்களான அன்பு இளைஞர்களே....
 முதலில் தமிழ்த்தேசியமா?
 அல்லது கிழக்கு தமிழர்களின் மறுவாழ்வுக்கும் நிலைத்திருப்புக்கும் பின்னரான தமிழ்த்தேசியமா?
 என்பதை விரைவாக முடிவு செய்யுங்கள்.
 
sugatharan.blogspot
Link to comment
Share on other sites

வயிறுபுடைக்க உண்டு களித்து உரங்கொண்ட உடம்போடு இருக்கும் மருமகனை, மற்றவர் முன்பாக "அவர் அதிகம் சாப்பிட மாட்டார். அதை உண்ண மாட்டார், இதை விரும்பமாட்டார்" என்று சொல்லிச் சொல்லியே மருமகனை உண்ணவிடாது தடுத்து நொந்து நூலாக்கிப் போகவிட்ட மாமியார்போல்... கிழக்கில் தமிழர்களின் பெருமைப்படக்கூடிய செய்திகளை, அவர்களை ஊக்குவிக்கும் செய்திகளைப் பரப்புரை செய்யாது தமிழர்களுக்கு ஏற்படும் இழப்புகளையும், இயலாமை பற்றியுமே தொடர்ந்து பரப்புரை செய்து அவர்களை மேலும் பலவீனப்படுத்தி  அழிந்துபோகச் செய்வதும் ஒரு இன அழிப்புத்தான். இந்தத் திரியிலும் அதனை உணரக்கூடியதாக உள்ளது.

Link to comment
Share on other sites

3 hours ago, Paanch said:

அதே செய்திகளை  மட்டும் தொடர்ந்து இணைப்பவரின் நோக்கமும் அது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

12 minutes ago, nunavilan said:

அதே செய்திகளை  மட்டும் தொடர்ந்து இணைப்பவரின் நோக்கமும் அது தான்.

நானும் அப்படித்தானே ஆரம்பத்தில் நினைத்தேன்.

ஆனால், கொழும்பான் இவ்வாறு இணைத்த பின்னர் தான், அது வரை புரியாத வேறு ஆபத்தான ஒரு பரிமாணம் புரிந்தது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

அதே செய்திகளை  மட்டும் தொடர்ந்து இணைப்பவரின் நோக்கமும் அது தான்.

மன்னிக்கவும் நுணா,

இத்தகைய செய்திகளை இணைத்து ஒரு இனத்தை அழிப்பது எனது நோக்கமல்ல. மேலும் இத்தகைய செய்திகளினால் தமிழினம் அழிந்து போகாது.அல்லது சோர்ந்து போகாது. மாறாக வீறுகொண்டு நடைபோடும். 

இதை எழுதியவர் அங்குதான் அவதனித்தவற்றையே எழுதியுள்ளார். பொதுதளத்தில் பலர் தங்கள் வாசித்தவற்றை பகிரத்தான் செய்வார்கள் நல்லவற்றை பாரட்டலாம் இல்லாவிட்டால் விட்டு விடலாம்.ஒரு நிர்வாகியாக இருந்து கொண்டு இப்படி ஒருவரை குற்றம் சுமத்த வெட்கமாக‌ இல்லையா?
 
Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

நான் ஏன் வெட்க்கப்பட வேண்டும்?? இப்படியான செய்திகளை மட்டும் நீங்கள் இணைக்கிறீர்கள் என்ற உண்மையை உங்களால் மறுக்க முடியுமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா, 

திரைப்படங்களில் வில்லன் நம்பியார் கதாநாயகிகளின் சேலையை உருவுவார். பொதுவாக எல்லப்படத்திலும் இப்படித்தான். நாயகியை கற்பழிக்க முற்சிப்பார். பின்னர் வில்லனிடம் அடி வாங்குவார். இதற்காக அவர் கெட்டவரா? உண்மையில் நம்பியார் ஓரு சிவபக்தர். கடைசிவரை நல்லவராகவே வாழ்ந்து மரித்தார்.

அதே போலத்தான் இத்தகைய செய்திகளை இணப்பதனால் என்னை தமிழின விரோதி என நினக்கவேண்டாம். அதிகமாக முஸ்லீம் தளத்தில் இருந்து செய்திகள் பதிவதனால் நான் முஸ்லீம் அல்ல, அவர்களுக்கு சார்பனவனும் அல்ல. அவர்களினது பார்வையில் ஒர் செய்தி எப்படி இருக்கின்றது என காட்டுவற்காகவே இவை பதியப்ப்டுகின்றது. 

மேலும் ஒருவர் இணைக்கும் செய்தியை வைத்து இவரது இயல்பை அல்லது குணத்தை எடை போடதீர்கள்.  
 
Link to comment
Share on other sites

தமிழரின் கையறு நிலையையும், கையேந்தும் நிலையையும் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், அவர்களின் எதிரிகளுக்கு தமிழர் பற்றி ஒரு அலட்சியமும், இறுமாப்பும் ஏற்பட்டு வருவதை அவதானிக்கலாம். இலங்கை குடியரசு ஆகுமட்டும் பிரித்தானியரின் சட்டங்கள் ஒரளவு அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருந்தது. அது பிரித்தானியாவரை  செல்லக்கூடியதாக இருந்ததினாலும், தமிழ் சட்டவாளர்களின் திறமை நாடெங்கும் பரவிநின்று பேசப்பட்டதாலும், சிங்களருக்கும் தமிழர்மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்ததை மறுக்க முடியாது. அந்த நேரங்களில் சிங்களரைப் பற்றி அவர்கள் அறிவற்றவர்களாகவும், மோடையர், காடையர்களாகவும் சிங்களர் குணாதிசையங்கள் பற்றி அறியாத  தமிழர்களிடமும் செய்திகளாக தொடர்ந்து பரவிவந்தது. இதனால் தமிழர்களுக்கு சிங்களரைப்பற்றிய அலட்சியமும், இறுமாப்பும் ஏற்பட்டு தாங்களே உயர்வானவர்கள் என்ற மேட்டுக்குடி மமதையை ஏற்படுத்தியதையும் மறுக்க முடியாது. இதனையொட்டிப் பரந்த செய்திகளால் தாக்கம் கொண்டு, சிங்களவர்களே பலர் தங்களைத் தாழ்வாகக் கருதி பிள்ளைகளைத் தமிழர்களிடம் பஞ்சம்பிழைக்க அனுப்பிவைத்ததையும் மறுக்க முடியாது. ஒரு இனத்தின் உயர்வுபற்றியே தொடர்ந்து உரைப்பதும், அல்லது ஒரு இனத்தின் தாழ்வுபற்றித் தொடர்ந்து கதைப்பதும் அவ்வினங்களை அழிவுக்குள்ளாக்கும் என்பதை இலங்கை இன்று உணர்த்தி நிற்கிறது. இது யதார்த்த உண்மை.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கொழும்பான்,
உங்களின் பல திரி இணைப்புகளை பார்த்து நான் பல முறை விசனப்பட்டதுண்டு.
அதை நீங்களும் அறிவீர்கள்.
நிச்சயம் அவை உங்கள் கருத்தாக இருக்க முடியாது என்றே நம்புகிறேன்.
ஒரு கொள்கை வகுத்து, தமிழ் என்ற ஒற்றை சொல்லால் இணைந்து, அதட்குள் இயங்கி வரும் யாழ் போன்ற இணைய தளங்களில் இப்படியான முகம், பெயர் தெரியாத நபர்களால் எழுதப்படும் பிரதேசவாத தூண்டல்களை பரப்புவது சரியா என்ற கேள்வி எழுகிறது.
தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் இணைக்கும் இந்த இணைப்புகள் சில பாதிப்புகளை ஏற்படுத்தத்தான் போகிறது. 

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில  

நீர்மை யுடையார் சொலின் குரல் 195.

"பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்"

எனது பெரியம்மா மகன் ஒரு போலீஸ் அதிகாரி, காலிப் பகுதி பர்கர் இன பெண்ணை மணந்தவர். 

அவருடன் ஒரு முறை பேசிய போது சொன்னார், கிணத்து தவளைகள் போல, மோட்டுச் சிஙகளவர் என்று தானும் முன்னர் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆயினும் தொழில் ரீதியாக, சிங்களம் நன்கு படித்து, வித்தியாசம் இல்லாமல் பேசும் போது, தமிழர் இல்லை என அறிந்த நிலையில் அவர்கள் தமிழர்களை குறித்து எவ்வகையான எண்ணங்களை கொண்டிருக்கிறார்கள் என அறிய முடிந்தது என்றார்.

அதே போல, கொழும்பான் இணைக்கும் வரை, சிகிந்தர் என்பவர் முல்லைத்தீவை ஆண்டராம் என்ற அவர்களது திரித்த வரலாறு எமக்கு தெரிய போவதில்லை.  

அகுரான டுடே யில் அவர்களது எழுத்தின் வேகம், முல்லைத்தீவின் ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர், வேறு வகையான வடிவம் எடுப்பதை பார்க்கிறோம்.

நாம் வாசிக்காவிடில் அவர்களது நோக்கம் புரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

தமிழரின் கையறு நிலையையும், கையேந்தும் நிலையையும் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், அவர்களின் எதிரிகளுக்கு தமிழர் பற்றி ஒரு அலட்சியமும், இறுமாப்பும் ஏற்பட்டு வருவதை அவதானிக்கலாம். இலங்கை குடியரசு ஆகுமட்டும் பிரித்தானியரின் சட்டங்கள் ஒரளவு அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருந்தது. அது பிரித்தானியாவரை  செல்லக்கூடியதாக இருந்ததினாலும், தமிழ் சட்டவாளர்களின் திறமை நாடெங்கும் பரவிநின்று பேசப்பட்டதாலும், சிங்களருக்கும் தமிழர்மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்ததை மறுக்க முடியாது. அந்த நேரங்களில் சிங்களரைப் பற்றி அவர்கள் அறிவற்றவர்களாகவும், மோடையர், காடையர்களாகவும் சிங்களர் குணாதிசையங்கள் பற்றி அறியாத  தமிழர்களிடமும் செய்திகளாக தொடர்ந்து பரவிவந்தது. இதனால் தமிழர்களுக்கு சிங்களரைப்பற்றிய அலட்சியமும், இறுமாப்பும் ஏற்பட்டு தாங்களே உயர்வானவர்கள் என்ற மேட்டுக்குடி மமதையை ஏற்படுத்தியதையும் மறுக்க முடியாது. இதனையொட்டிப் பரந்த செய்திகளால் தாக்கம் கொண்டு, சிங்களவர்களே பலர் தங்களைத் தாழ்வாகக் கருதி பிள்ளைகளைத் தமிழர்களிடம் பஞ்சம்பிழைக்க அனுப்பிவைத்ததையும் மறுக்க முடியாது. ஒரு இனத்தின் உயர்வுபற்றியே தொடர்ந்து உரைப்பதும், அல்லது ஒரு இனத்தின் தாழ்வுபற்றித் தொடர்ந்து கதைப்பதும் அவ்வினங்களை அழிவுக்குள்ளாக்கும் என்பதை இலங்கை இன்று உணர்த்தி நிற்கிறது. இது யதார்த்த உண்மை.   

தமிழர்கள் யாரும் கையறு நிலையில் இல்லை. சிங்களவர்களை விட.
நன்றாகவே உள்ளார்கள் நீங்கள் சொல்வது 70, 80களில் உண்மையாக இருக்கலாம். இப்பொழுது எல்லாம் மாறி விட்டது. 
தமிழர்களில் கூட ஒரு குறிப்பிட்ட மேட்டுக்குடியினர் / அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தினர் தாங்களை உயர்வாக நினைத்துக்கொள்கின்றார்களே? அதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?

சில நாட்களுக்கு முன்பு கச்சாய் சிவம் என்பவர் (ஜெர்மனி) ஓருவனின் வீடியேவை பார்க்க நேர்ந்தது? மிகமோசமாக மலையகத்தமிழரை தரக்குரைவாக பேசுகின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

வணக்கம் கொழும்பான்,
உங்களின் பல திரி இணைப்புகளை பார்த்து நான் பல முறை விசனப்பட்டதுண்டு.
அதை நீங்களும் அறிவீர்கள்.
நிச்சயம் அவை உங்கள் கருத்தாக இருக்க முடியாது என்றே நம்புகிறேன்.
ஒரு கொள்கை வகுத்து, தமிழ் என்ற ஒற்றை சொல்லால் இணைந்து, அதட்குள் இயங்கி வரும் யாழ் போன்ற இணைய தளங்களில் இப்படியான முகம், பெயர் தெரியாத நபர்களால் எழுதப்படும் பிரதேசவாத தூண்டல்களை பரப்புவது சரியா என்ற கேள்வி எழுகிறது.
தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் இணைக்கும் இந்த இணைப்புகள் சில பாதிப்புகளை ஏற்படுத்தத்தான் போகிறது. 

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில  

நீர்மை யுடையார் சொலின் குரல் 195.

"பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்"

சசி இங்குதான் விடயம். இருக்கின்றது. ஏன் உங்களுக்கு அது பாதிப்பை/விசனத்தை ஏற்படுத்துகின்றது? நீங்கள் தமிழன் என்ற இறுமாப்போடு ஒருதலைப்பட்சமாக பார்பதனால்தான். நீங்கள் அப்படி பார்க்காமல், அந்த கருத்தை பரந்த மனப்பான்மையுடன் அவர்களது view க்கும் மதிப்பு கொடுத்து பார்த்தால் அப்படி உங்களை கோபப்படுத்தாது. 

ஏன் உங்களுக்குள் இருக்கும் "தமிழன்" என்ற பிம்பம்/கர்வம்  உங்களுடன் கருதொருமிக்காதவர்களுடன் முரண்பாட்டை எற்படுத்துகின்றது.? காரணம் உங்களிடம் இந்த பரந்த மனப்பான்மை இல்லமையே.

யாழினுடைய ஒரே கொள்கை என்ன? அந்தகொள்கைக்கு எதிராக இருக்க / எழுத கூடாத என்ன? மேலும் இக்கட்டுரை அந்த சமுகத்தில் வசிப்பவர்களாளே எழுதப்படுகின்றது? இவர்கள் முகம் தெரியாதவர்கள் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.