Jump to content

உடலில் தேங்கி இருக்கும், சளியை... அகற்ற, உள்ளியை எப்படி உட்கொள்ள வேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இருமலுக்கு எப்படி உதவும்?

உடலில் தேங்கி இருக்கும்,  சளியை... அகற்ற, உள்ளியை   எப்படி உட்கொள்ள வேண்டும்?

வாச மண்டல / பாதை கோளாறு மற்றும் உடலில் அதிக பாக்டீரியா தொற்று இருந்தால் தான் இருமல் வரும். உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தி குறைவாக இருந்தால் இருமல் குணமாக ஒருசில நாட்கள் அதிகமாகும்.

நுரையீரல் போன்ற உறுப்புகளில் பாக்டீரியா தொற்று, சளி அதிகம் தேங்கி இருத்தல், தொண்டை அழற்சிகள் இருந்தாலும் இருமல் உண்டாகும். இருமல், சளி உண்டாகும் போது உடலில் கண் எரிச்சல், தலைவலி போன்றவையும் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது.

இதற்கு சிரப் குடிப்பதற்கு பதிலாக, இதற்கு மாற்றாக ஒரு சிறந்த இயற்க்கை வைத்தியம் இருக்கிறது. அது தான் வெங்காயம், பூண்டு ஜூஸ்.

நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் நுகர்வு திறன் உள்ள சிறந்த உணவு பொருள் வெங்காயம் மற்றும் பூண்டு. இது உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமின்றி ஆரோக்கியத்தை அதிகரிக்க சிறந்த சத்துக்களும் கொண்டுள்ளது.

இதில் இருக்கும் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி- ஆக்ஸிடெண்ட் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

மேலும், வெங்காயத்தில் இருக்கும் சல்பர் காம்பவுண்டுகள் சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக். இவை வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து வலுவாக சண்டையிடும். இதனால் தான் உணவில் வெங்காயத்தை ஒதுக்க வேண்டாம் என கூறுகிறார்கள்.

வெங்காயத்தில் இருக்கும் மூலப் பொருட்கள் சளியை கரைக்கவும், சுவாச பாதையை ஆரோக்கியப்படுத்தி சுவாச கோளாறுகளை குணப்படுத்தி, இருமலும் குறைய உதவுகிறது.

பூண்டு நூறு வருடங்களுக்கும் மேலாக ஒரு மருத்துவ உணவாக காணப்பட்டு வருகிறது. உலகின் பல கலாச்சாரங்களில் பூண்டை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளதை நாம் அறிய முடிகிறது.

இதில் இருக்கும் அன்டி பயாடிக் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் போன்றவை இருமலை ஏற்படுத்தும் கிருமிகளை கொல்கிறது. மேலும், சுவாச பாதையில் இருக்கும் தொற்றுகளை நீக்கி சளி மற்றும் இருமல் பிரச்சனை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.

இதமான நீரில் பூண்டு, வெங்காயம் சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸை பருகுவதால் இருமல் பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண முடியும். இது பக்கவிளைவுகள் அற்றது. இயற்கையான முறையில் நல்ல தீர்வளிக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால், மீண்டும், மீண்டும் இந்த தொந்தரவு வராது.

ஜூஸ்!

தேவையான பொருட்கள்!

இரண்டு கப் நீர் (500 மில்லி அளவு) மீடியம் அளவிலான வெங்காயத்தில் பாதி.

இரண்டு பூண்டு பல் செய்முறை: இரண்டு கப் நீரை கொதிக்க வைக்கவும் (மீடியமான சூட்டில்).

வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

நீர் கொதித்தவுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டை அதில் சேர்க்கவும்.

சூட்டின் அளவை குறைத்துக் கொண்டு (5 நிமிடம் வேக வையுங்கள்) பிறகு அறையின் தட்பவெப்ப நிலையில் ஆற வையுங்கள்.

ஆறிய பிறகு குடிக்கவும்.

 

உட்கொள்ளும் முறை!

பாதி கப் அளவு குடித்தால் போதுமானது. குடிக்கும் அளவு சூடு இருக்கும் படியான நிலையில் பருகவும்.

இருமல் ஏற்படும் முதல் நிலையிலேயே நீங்கள் இதை குடிக்கலாம்.

ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு முறை குடித்து வரலாம்.

இருமலின் அளவை சார்ந்து நீங்கள் உட்கொண்டால் போதுமானது.

இருமல் சரியாகும் வரை இதை நீங்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வரலாம்.

 

நன்றி தற்ஸ்  தமிழ். 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.