• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

''காது கேளாத, வாய் பேசமுடியாத மகனை பிஹெச்.டி படிக்க வெச்சேன்!" 'சூப்பர் மாம்' விஜயலட்சுமி #CelebrateMotherhood #SuperMom

Recommended Posts

''காது கேளாத, வாய் பேசமுடியாத மகனை பிஹெச்.டி படிக்க வெச்சேன்!" 'சூப்பர் மாம்' விஜயலட்சுமி #CelebrateMotherhood #SuperMom

 
 

மகனுடன் விஜயலட்சுமி

‘'ங்களுக்குத் திருமணமாகி மூணு வருஷம் கழிச்சுதான் மனீஷ் பிறந்தான். வளர வளர செவித்திறனில் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடிச்சோம். பேச்சும் வரலை. எல்லோரும் ‘சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்த்துவிட்டால், பிரத்யேகப் பயிற்சி கொடுப்பாங்க’னு சொன்னாங்க. பள்ளியில் அவனோடு நானும் இருந்தால், இன்னும் சிறப்பா செயல்படுவான் என நினைச்சேன்'' என மெல்லியக் குரலில் ஆரம்பிக்கிறார் விஜயலட்சுமி. சென்னை, அடையாறைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர். 

''என் வாழ்க்கையில் எத்தனையோ குழந்தைகளுக்கு ட்ரீட்மென்ட் பார்த்திருக்கேன். ஒவ்வொரு குழந்தையையும் என் குழந்தையாக நினைச்சுதான் பார்ப்பேன். என் குழந்தைக்கே ஒரு குறை வந்தபோது, ஆரம்பத்தில் ஜீரணிக்க முடியாமல் தவிச்சோம். அப்புறம், எங்களை நாங்களே ஆசுவாசப்படுத்திக்கிட்டு, கடவுள் கொடுத்த குழந்தையாக வளர்க்க ஆரம்பிச்சோம். அவனுக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக்க நினைச்சேன். அதுக்காக, நான் நேசிச்ச எனக்குப் பிடிச்ச டாக்டர் தொழிலைக் கைவிட்டேன். என் குழந்தையை என்னால் மட்டும்தன் அதிகம் புரிஞ்சு பார்த்துக்க முடியும்னு நம்பினேன். அப்போ நாங்க கேரளாவில் இருந்தோம். என் கணவர் கணேஷிடம் இந்த முடிவைச் சொன்னதும் அவரும் ஏத்துக்கிட்டார். வங்கி ஊழியராக இருந்த அவர் மாற்றல் வாங்கினார். நாங்க சென்னைக்கு வந்தோம். 

இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மயிலாப்பூரில் இருக்கும் 'சில்ரன் கார்டன் ஸ்கூல்'ல மனீஷைச் சேர்த்தோம். அந்தப் பள்ளியில் பணிபுரிந்த சகுந்தலா ஷர்மா, சிறந்த ஆசிரியையாக அவனை அற்புதமாகப் பார்த்துக்கிட்டாங்க. பிறகு, சோழிங்கநல்லூரியில் இருக்கும் சில்ட்ரன் கார்டன் ஸ்கூலின் கிளையான, எலென் சர்மா பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கவெச்சோம். நான் அந்தப் பள்ளியிலேயே குழந்தைகளுக்கான மருத்துவர் மற்றும் கற்றலை மேம்படுத்தும் ஆசிரியையா பணிபுரிய ஆரம்பிச்சேன். சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியையா நான் எடுத்துக்கிட்ட பயிற்சிகளுக்குப் பின்னாடி, ஓர் அம்மாவின் தவிப்பும் இருந்ததால், முழு அர்ப்பணிப்போடு ஒவ்வொரு விஷயத்தையும் கத்துக்கிட்டேன். 

1997-ம் வருஷம், எலென் சர்மா பள்ளியின் சார்பாக நெதர்லாந்து மற்றும் லண்டனுக்குப் போனேன். காது, கண் குறைபாடு, ஆட்டிஸம் போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது, அவங்க வளர்ந்து தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளப் பயிற்சி கொடுப்பது மற்றும் ஸ்பெஷல் டீச்சர்களுக்குப் பயிற்சி கொடுப்பது எனப் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். சில ஆராய்ச்சிகளையும் செய்தேன். பாண்டிச்சேரி, குஜராத், போபால் என நாடு முழுக்க பயணம் செஞ்சு இந்தப் பணிக்காக செயல்பட்டிருக்கேன்'' என்கிறார் விஜயலட்சுமி. 

25 வருடங்களாக ஒவ்வொரு நொடியும் பிள்ளைக்காகவும் சிறப்புக் குழந்தைகளுக்காகவுமே வாழ்ந்துவரும் இந்தத் தாய், ''இப்போ எனக்கு 57 வயசு. எங்கள் மகன் மனீஷை பி.எஸ்ஸி, பயோடெக், எம்.எஸ்ஸி, பயோடெக் என முடித்திருக்கிறார். மனீஷுக்கு எதையுமே விஷுவலா சொல்லிக்கொடுத்தாதான் புரியும். அதனால், முடிந்தவரை எல்லாத்தையும் அவனுக்கு நேரடியா காட்டிதான் கற்பிச்சோம். உதாரணமா, நாடாளுமன்றத் தேர்தலை அவனுக்குப் புரியவைக்க, சிறப்பு அனுமதி வாங்கி, நாடாளுமன்றத்துக்கே அழைச்சுட்டுப் போய் சொல்லிக்கொடுத்தோம். ஜெர்மனி, நெதர்லாந்து, லண்டன் எனப் பல இடங்களுக்கு அழைச்சுட்டுப் போயிருக்கோம். ஸ்கூல், காலேஜுக்காக இடம் மாறும்போதெல்லாம், அவனுக்காகக் கிட்டத்தட்ட 12 வீடுகள் மாறியிருப்போம். எந்தச் சூழலிலும் அவன் தனிமையாவோ, தாழ்வாவோ தன்னை நினைச்சுக்கக்கூடாதுனு நாங்க இன்னொரு குழந்தையைப் பெத்துக்கலை'' என்கிற விஜயலட்சுமி, சில நிமிட அமைதிக்குப் பிறகு தொடர்கிறார். 

‘‘சென்னை, படூர் 'ஹிந்துஸ்தான் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ்' கல்லூரியில் பி.எஸ்ஸி., பயோடெக்கும், மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் எம்.எஸ்ஸி., பயோடெக்கும் முடிச்சுட்டு அங்கேயே ரிசர்ச் பண்ணிட்டிருந்தான். இப்போ அதையும் வெற்றிகரமாக முடிச்சுட்டான். மனீஷை இன்னிக்கு நார்மல் குழந்தைகளுக்கு இணையா வளர்த்ததுக்குப் பின்னாடி, ஒரு பெற்றோராக உழைப்பும் அன்பும் அர்ப்பணிப்பும் மிக அதிகம். படிப்பில் பிலோ ஆவரேஜா இருக்கும் பிள்ளைகளைப் பற்றி அவங்க பெற்றோர் கவலைப்படுறதைப் பார்த்திருக்கேன். குழந்தைகளை 'படி படி' எனக் கட்டாயப்படுத்தும், நச்சரிக்கும் பெற்றோர்களையும் கவனிச்சிருக்கேன். ஒரு சிறப்புக் குழந்தையைப் பெற்றோர் நினைச்சா முதுநிலை பட்டதாரி ஆக்க முடியும்போது, ஆவரேஜ் குழந்தையையும் அம்மா நினைச்சா சூப்பர் குழந்தையா ஆக்கலாம்தானே? 

 

மனீஷுக்கு வரும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி கல்யாணம். நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிஞ்சிருக்கு. பொண்ணு பெயர் மானஸி. ஃபைன் ஆர்ட்ஸ் ஸ்டூடண்ட். நல்லா ஓவியம் வரைவாங்க. அவங்களும் மனீஷ் மாதிரியே காது கேளாத, வாய் பேச முடியாதவங்க. மனீஷ் படிச்ச பள்ளியில்தான் மானஸியும் படிச்சிருக்காங்க. திருமணம் குறித்த பேச்சு வந்தது. மனீஷ், மானஸியிடம் பதினைந்து முறைக்கும் மேலே சைகை மொழியில் பேசினான். ரெண்டுப் பேருக்கும் ஒருத்தரையொருத்தர் பிடிச்சுப்போச்சு. கல்யாணத்தை முடிவு பண்ணிட்டோம். 27 வருஷமா மனீஷ்கூட தாயாக மட்டுமில்லாமல், ஒரு தோழியாக இருந்திருக்கேன். அவன் வாழ்க்கை முழுக்கவும் இருக்க ஒரு தேவதை எங்க வீட்டுக்கு வரப்போறாங்க. அதுதான் இப்போ எங்களின் மொத்த சந்தோஷம்'' என முகமும் குரலும் பூரிக்கச் சொல்கிறார் விஜயலட்சுமி.

http://www.vikatan.com/news/tamilnadu/97565-a-mother-drvijayalakshmis-success-story.html

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this