Jump to content

யாழ்ப்பாணத் தமிழர்களுடைய அடையாளமாகத் திகழும் நல்லூர்க் கந்தன் ஆலயம்


Recommended Posts

எல்லாம் வல்ல பரம்பொருளான சிவனே முருகப் பெருமானாக அவதரித்து அருள் புரிகின்ற திருவருளும், குருவருளும், மகான்கள், ஞானிகள் நல்லூர் தீருவீதியில் நடமாடிய அதிர்வுகளும் சேர்ந்து இலட்சக்கணக்கான மக்களை ஈர்த்து இழுக்கும் ஆலயமாக இவ்வாலயம் மிளிர்கிறது.

யாழ்ப்பாணத் தமிழர்களுடைய ஒரு அடையாளமாக, குறியீடாக இந்த ஆலயம் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது என யாழ். சின்மயா மிஷன் தலைவர் பிரம்மச்சாரி ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் நல்லூர்க் கந்தனின் சிறப்புக்கள் மற்றும் ஆலயத்திற்குச் செல்லும் போது அடியவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

 

ஈழத்தின் புகழ் பூத்த நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிச் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

நல்லைக் கந்தன் மஹோற்சவ காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு, இலங்கைத் திருநாடு மாத்திரமல்ல உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள்

மத்தியில் ஆன்மீக அலைகளை ஏற்படுத்தும் உற்சவமாகத் திகழ்கிறது.

இவ்வாலய மஹோற்சவ காலங்களில் நாம் தூய்மையானவர்களாக எங்களுடைய உணவை விடுத்தேனும், சுருக்கியேனும் சைவ போஷணம் உண்பவர்களாக, உண்மை பேசுபவர்களாக வாழத் தலைப்படுவோமானால் முருகப் பெருமானின் திருவருளை நாமனைவரும் பெற முடியும்.

ஆலயத்திற்குச் செல்லும் போது நாமனைவரும் கலாசார உடையணிந்து செல்ல வேண்டும். ஆண்கள் மேலங்கி இல்லாதவாறு வேட்டி அணிந்து, சிவசின்னமாகிய விபூதி தரித்துச் செல்வதுடன், பெண்கள் சேலை அணிந்து செல்வதும் எங்கள் பண்பாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விடயங்கள்.

ஆலயத்திற்குச் செல்லும் நாம் இறைவனை மட்டுமே வழிபட வேண்டும், இறைவனை மட்டுமே பார்க்க வேண்டும்.

இறைவனுடன் மட்டுமே பேச வேண்டும். “பரம்பொருளின் பெரும் புகழைப் பாடிப் பணிதலின்றிப் பிற வார்த்தை யாதொன்றும் பேசற்க ஆலயத்துள்...” என்கிற வாக்குக்கமைய நாமனைவரும் ஆலயத்திற்குள் அமைதி பேண வேண்டும்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

ஆலய வெளிவீதிச் சூழலில் சிவப்பு, வெள்ளை நிறத்திலான துணிகளால் அலங்கரித்திருக்கிறார்கள். இது ஆலயத்தின் பெருவீதியாக உள்ளது.

சிவப்பு, வெள்ளை நிறங்கள் படைப்பைக் குறிப்பனவாக அமைந்துள்ளன. ஆகவே, இந்தப் புனிதமான பிரதேசத்திற்குள் நாம் எமது கலாசார உடையணிந்து நடமாட வேண்டும்.

துப்புவது போன்ற செயல்களைத் தவிர்த்துத் தூய்மையைப் பேண வேண்டும். பிளாஸ்ரிக், பொலித்தீன் போன்றவற்றைப் பாவிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமையை உணர்ந்து ஈழத்த்துச் சைவத் தமிழர்கள் அனைவரும் எங்களுடைய பண்பாட்டைப் பேணிப் பாதுகாப்போம்.

எங்களுக்குச் சகல உரிமைகளுடன் கூடிய தீர்வு கிடைத்து அனைவரும் ஒற்றுமையாக மண்ணில் நல்ல வண்ணம் வாழ நாமனைவரும் ஆத்மார்த்தமாக முருகப் பெருமானைப் பிரார்த்தனை செய்வோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

http://www.tamilwin.com/religion/01/153787?ref=home-feed

Link to comment
Share on other sites

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்றைய தினம் சம்பிரதாயப் பூர்வமாக இடம்பெற்றது.

இதன்படி, நல்லூரிலுள்ள செங்குந்தர் மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருகின்ற நிலையில், யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நேற்று காலை கொடிச்சீலை கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ளது.

 

தொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலயப் பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழாவான அடுத்த மாதம் 06ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணிக்கு மஞ்சத் திருவிழாவும்,

12ம் திகதி திங்கட்கிழமை இரவு 07 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், 15ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்குச் சூர்யோற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு கார்த்திகை உற்சவமும் நடைபெறவுள்ளது.

மேலும்,16 ம் திகதி புதன்கிழமை காலை- 07 மணிக்குச் சந்தான கோபாலர் உற்சவமும், அதே தினம் மாலை 05 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 17ம் திகதி வியாழக்கிழமை காலை 07 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு வேல்விமான(தங்கரதம்) உற்சவமும்,

18ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 07 மணிக்குத் தண்டாயுதபாணி உற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 23 ம் திருவிழாவான 19 ம் திகதி சனிக்கிழமை மாலை 05 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 21ம் திகதி காலை 07 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

http://www.tamilwin.com/community/01/153405

 

நல்லூர் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று வெளிவீதியுலா வந்த அலங்காரக் கந்தன்!

நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.

அலங்கார கந்தன் வெளிவீதி உலா வரும் அற்புத காட்சியை காண பெருந்திரளான பக்தர்கள் அங்கு கூடியுள்ளனர்.

இதன்போது, உள்நாட்டு பக்தர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு பக்தர்களும் பெருமளவில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

 

தொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள நல்லூர் பெருந்திருவிழா மகோற்சவமானது நேற்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.

 

http://www.tamilwin.com/religion/01/153572

நல்லூர் திருவிழாவின் மூன்றாம் நாள் இன்று! அலங்காரக் கந்தனின் அற்புதக்காட்சிகள்

நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழா இன்றாகும்.

இன்றை மூன்றாம் நாள் திருவிழா விசேட வழிபாடுகளுடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

அலங்கார கந்தன் வெளிவீதி உலா வரும் அற்புத காட்சியை காண பெருந்திரளான பக்தர்கள் கூடியுள்ளனர்.

தொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள நல்லூர் பெருந்திருவிழா மகோற்சவமானது 28ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/religion/01/153652

 

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் #4ம்_நாள்_மாலை_உற்சவம் மாலை 4.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி

 

http://www.nalluran.com/article/festival-2017-day-04-pm-hd-videos

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஐந்தாவது நாள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஐந்தாவது நாள் திருவிழா இன்றாகும்.

குறித்த திருவிழா விசேட இறை வழிபாடுகளுடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

அலங்கார கந்தன் வெளிவீதி உலா வரும் அற்புதக் காட்சியை காணப் பெருந்திரளான பக்தர்கள் கூடியுள்ளனர்.

அத்துடன், தொடர்ந்தும் 25 நாட்கள் காலையும் மாலையும் சிறப்பு பூஜைகள் இடம்பெறவுள்ளன.

மேலும் 28 ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் நல்லூர் பெருந்திருவிழா மஹோற்சவம் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/religion/01/153761?ref=home-feed

Link to comment
Share on other sites

நல்லூரில் வெளிநாட்டுப் பெண்ணின் பக்தியால் வியப்படைந்த தமிழர்கள் ..

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

நல்லூர் ஆலயத்திற்கு நேற்றைய தினம் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாற்காவடியுடன் வருகை தந்தமை அங்கிருந்த பக்தர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வெளிநாட்டுப் பெண் ஒருவர் இந்து மதத்தின் பெருமைகளை அறிந்து பாற்காவடி எடுத்துள்ள நிகழ்வு நல்லூர் கந்தனின் மகத்துவத்தினை உலகறியச் செய்துள்ளது.

அத்துடன் இவ் வெளிநாட்டு பெண்ணின் பக்தி, கூடியிருந்த பக்தர்களை வியக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் யாழில் தமிழ் பாரம்பரிய முறைப்படி ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் யாழ் பெண்ணை திருமணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/srilanka/01/153808?ref=home-feed

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தமிழர்களுடைய  என்னப்பா தலைப்பு வில்லங்கமா இருக்கு 

Link to comment
Share on other sites

1 minute ago, தனி ஒருவன் said:

யாழ்ப்பாணத்தமிழர்களுடைய  என்னப்பா தலைப்பு வில்லங்கமா இருக்கு 

குறுகிய கண்ணோட்டமுடைய தமிழ்வின் ஊடகவியலாளர்களின் கைவண்ணம் அது!
யாம் என்ன செய்ய முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Rajesh said:

குறுகிய கண்ணோட்டமுடைய தமிழ்வின் ஊடகவியலாளர்களின் கைவண்ணம் அது!
யாம் என்ன செய்ய முடியும்?

இணைத்த உங்களைத்தானே கேட்க வேண்டும் ஆதான் கேட்டன் tw_dissapointed:

Link to comment
Share on other sites

2 minutes ago, தனி ஒருவன் said:

இணைத்த உங்களைத்தானே கேட்க வேண்டும் ஆதான் கேட்டன் tw_dissapointed:

செய்திகளின் தலைப்பை நாம் மாற்றக் கூடாது என்பது யாழ் கள நடைமுறை என அறிந்துள்ளேன்.

நிர்வாகம் அதை "ஈழத்துத் தமிழர்களுடைய" என்று மாற்ற முடிந்தால் அந்த வில்லங்கம் முடிவுக்கு வரலாம்.

நல்லூர் கோவிலுக்கு மத பேதமின்றி தமிழர்கள் செல்வார்கள்! அதுபோலவே மடு தேவாலயத்துக்கும்  மத பேதமின்றி தமிழர்கள் செல்வார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க வெள்ளைக்காரியே வந்து வேலோடும் காவடியோடும் திரியக்க இந்த தலைப்பு என்னை சுட்டது  அதுதான் நான் உங்களை சுட்டது  வெடிபட்டால் மன்னிகவும் காயம் வரும் காலுக்கு கீழ தான் சுடுவன்  ராஜேஷ்:10_wink::104_point_left::104_point_left:

10 minutes ago, Rajesh said:

செய்திகளின் தலைப்பை நாம் மாற்றக் கூடாது என்பது யாழ் கள நடைமுறை என அறிந்துள்ளேன்.

நிர்வாகம் அதை "ஈழத்துத் தமிழர்களுடைய" என்று மாற்ற முடிந்தால் அந்த வில்லங்கம் முடிவுக்கு வரலாம்.

நல்லூர் கோவிலுக்கு மத பேதமின்றி தமிழர்கள் செல்வார்கள்! அதுபோலவே மடு தேவாலயத்துக்கும்  மத பேதமின்றி தமிழர்கள் செல்வார்கள்!

 

Link to comment
Share on other sites

5 minutes ago, தனி ஒருவன் said:

இங்க வெள்ளைக்காரியே வந்து வேலோடும் காவடியோடும் திரியக்க இந்த தலைப்பு என்னை சுட்டது  அதுதான் நான் உங்களை சுட்டது  வெடிபட்டால் மன்னிகவும் காயம் வரும் காலுக்கு கீழ தான் சுடுவன்  ராஜேஷ்:10_wink::104_point_left::104_point_left:

இதற்கெல்லாம் எதற்கு சூடு? எந்தவொரு சூட்டுக்கும் பயப்படுவார்கள் இல்லை!

உங்கள் கேள்வியில் உள்ள முழுமையான நியாயம் தான் என்னைத் தாக்கியது. நியாயத்துக்கு தலைவணங்கியே எனது பணிவான பதில்கள் அமைந்திருந்தது.

இதில் நீங்கள் மன்னிப்புக் கேட்பதற்கு எதுவும் இல்லை!

மேலும் இதுபோன்ற தவறுகளை தயங்காது சுட்டிக்காட்டுவது அவசியம். நாம் திருந்த அவை நிச்சயம் உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ராஜேஷ் ..... தொடர்ந்தும் பகிருங்கள் கண்களால் புசித்துப் பசியாறுகிறோம்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஆறாவது நாள்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில பிரதேசவாதம் ரெம்பத் தூக்கலா இருக்குது.

மாவிட்டபுரத்தில் ஒரு முருகன்.. கதிர்காமத்தில் ஒரு முருகன்.. இப்படி பல முருகன்கள் பிரபலமாக இருக்க.. அதென்ன.. யாழ்ப்பாணத்தமிழர்கள்.. அவைக்கு ஒரு அடையாளம்.. முருகன்...................

பழைய குருடி கதவத்திறவடி கதை தான் போல.. 35 ஆண்டுகால. போராட்டம்.. வெளிநாட்டு பாஸ்போட்டுக்களுக்கு வழிவகுத்திருக்கே தவிர.. தமிழர்களின் உள்ளங்களில் நடத்தைகளில்.. எந்த மாற்றத்தையும் கொண்டு வந்ததாத் தெரியல்ல. 

தமிழ் அரசியல்வாதிகள் இப்பவும் சரணாகதி அரசியலில் நிற்க.. தமிழ் மக்கள் வெட்டிப் பிரதேச.. சாதிப் பெருமை பேசுவதில் நிற்கினம். :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

11 minutes ago, nedukkalapoovan said:

தலைப்பில பிரதேசவாதம் ரெம்பத் தூக்கலா இருக்குது.

மாவிட்டபுரத்தில் ஒரு முருகன்.. கதிர்காமத்தில் ஒரு முருகன்.. இப்படி பல முருகன்கள் பிரபலமாக இருக்க.. அதென்ன.. யாழ்ப்பாணத்தமிழர்கள்.. அவைக்கு ஒரு அடையாளம்.. முருகன்...................

பழைய கிழவி கதவத்திறவடி கதை தான் போல.. 35 ஆண்டுகால. போராட்டம்.. வெளிநாட்டு பாஸ்போட்டுக்களுக்கு வழிவகுத்திருக்கே தவிர.. தமிழர்களின் உள்ளங்களில் நடத்தைகளில்.. எந்த மாற்றத்தையும் கொண்டு வந்ததாத் தெரியல்ல. 

தமிழ் அரசியல்வாதிகள் இப்பவும் சரணாகதி அரசியலில் நிற்க.. தமிழ் மக்கள் வெட்டிப் பிரதேச.. சாதிப் பெருமை பேசுவதில் நிற்கினம். :rolleyes:tw_angry:

இது தமிழர்களின் சதியல்ல குறுகிய கண்ணோட்டமுடைய தமிழ்வின் ஊடகவியலாளரின் அறிவீனம் அல்லது சதியென்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஏழாவது நாள்

 

 

 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் எட்டாவது நாள்

 

 

 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஒன்பதாவது நாள்

 

 

 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பத்தாவது நாள்

 

 

 

 

Link to comment
Share on other sites

50 minutes ago, nedukkalapoovan said:

தலைப்பில பிரதேசவாதம் ரெம்பத் தூக்கலா இருக்குது.

மாவிட்டபுரத்தில் ஒரு முருகன்.. கதிர்காமத்தில் ஒரு முருகன்.. இப்படி பல முருகன்கள் பிரபலமாக இருக்க.. அதென்ன.. யாழ்ப்பாணத்தமிழர்கள்.. அவைக்கு ஒரு அடையாளம்.. முருகன்...................

பழைய கிழவி கதவத்திறவடி கதை தான் போல.. 35 ஆண்டுகால. போராட்டம்.. வெளிநாட்டு பாஸ்போட்டுக்களுக்கு வழிவகுத்திருக்கே தவிர.. தமிழர்களின் உள்ளங்களில் நடத்தைகளில்.. எந்த மாற்றத்தையும் கொண்டு வந்ததாத் தெரியல்ல. 

தமிழ் அரசியல்வாதிகள் இப்பவும் சரணாகதி அரசியலில் நிற்க.. தமிழ் மக்கள் வெட்டிப் பிரதேச.. சாதிப் பெருமை பேசுவதில் நிற்கினம். :rolleyes:tw_angry:

யேர்மனிக்கு வந்து வாழத்தொடங்கியிருக்கும் ஈழத்தமிழர்கள் தாங்கள் நடாத்தும் தங்களது குடும்ப வைபவங்களுக்கும், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், உறவுகள், பிரதேச வேறுபாடுகள் என்று எதுவுமின்றி, அனைவரையும் அழைத்து, வரவேற்றுக் கொண்டாடுவதைக் காணமுடியும். இங்கு சாதிப்பெருமைகள், ஏற்றத்தாழ்வுகள் என்று எதனையும் காண்பது அரிது. ஆனால் அதே தமிழர்கள் தாய்நாட்டிற்குச் சென்று தங்கிநிற்கும் பொழுது.... பழைய குருடி கதவைத் திறவடி என்ற நிலைக்கு மாறிவிடுவதைக் காணமுடியும். :rolleyes: :(

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பதினோராவது நாள்

 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பன்னிரண்டாவது நாள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 01/08/2017 at 2:53 PM, Rajesh said:

இதற்கெல்லாம் எதற்கு சூடு? எந்தவொரு சூட்டுக்கும் பயப்படுவார்கள் இல்லை!

உங்கள் கேள்வியில் உள்ள முழுமையான நியாயம் தான் என்னைத் தாக்கியது. நியாயத்துக்கு தலைவணங்கியே எனது பணிவான பதில்கள் அமைந்திருந்தது.

இதில் நீங்கள் மன்னிப்புக் கேட்பதற்கு எதுவும் இல்லை!

மேலும் இதுபோன்ற தவறுகளை தயங்காது சுட்டிக்காட்டுவது அவசியம். நாம் திருந்த அவை நிச்சயம் உதவும்.

மிக்க  நன்றி

கள  உறவுகளிடையே  இது போன்ற உரையாடல்கள் மகிழ்ச்சி  தருகிறது

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட் டக் கிளப்பின் அடையாளம் மீன் பாடுவது.

திருமலையின் அடையாளம் வென்னீர் ஊற்று.... அது போல யாழ்ப்பாணத்துக்கு... நல்லூர்.

உள்ளூர் செய்தியில் தமது பிரதேசங்களை மாட்சிமைகளை சொல்லி பெருமைப் படுவதில் வியப்பு இல்லை.

ஆனால் வெளிநாடுகளுக்கு இந்த செய்தி தலைப்புகள் அதே போல வரும் போது, ஈழத் தமிழர் பெருமைமிகு அடையாளம் என்று வர வேண்டும்.

அப்படியே தூக்கிப் போடுவதால் இந்த தவறுகள்...

2 hours ago, Rajesh said:

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஆறாவது நாள்

 

 

அட நம்ம,  ஊருதான்..

டபக்கெண்டு பார்த்தோன்ன... காப்பிலியல் தேசமோ எண்டு நினைச்சேன்.... :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் உருகுதையா

ள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா.... (உள்ளம் உருகுதய்யா)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களைவிட கிந்தியனுக்கும் சிங்களவனுக்கும்தான் நல்லூர்க்கந்தன் அதிகமாக அருள் புரிந்திருக்கின்றார் போல ..... அரோகரா கோஷமிடுவதும் அக்கறை கொள்வதையும் கந்தன்  கண்டுகொள்ளவில்லை போல ....

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பதின்மூன்றாவது நாள்

 

 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பதின்நான்காவது நாள்

 

 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பதினைந்தாவது நாள்

 

 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பதினாறாவது நாள்

 

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பதினேழாவது நாள்

 

 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பதினெட்டாவது நாள்

 

 

 

 

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பத்தொன்பதாவது நாள்

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரானுக்கு அரோகரா...

9 hours ago, Rajesh said:

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பதினேழாவது நாள்

 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பதினெட்டாவது நாள்...

அது சரி உந்த ஆட்டம் எப்ப தொடக்கம் நடக்குது????

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

நல்லூரானுக்கு அரோகரா...

அது சரி உந்த ஆட்டம் எப்ப தொடக்கம் நடக்குது????

அது கண்டி-கதிர்காமக் கந்தன் பக்கதர்களால் நடத்தப்படும் காட்சி என்று ஒரு தகவல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.