Jump to content

கமலின் தசாவதாரம் - ஒரு அட்வான்ஸ் முன்னோட்டம் ஸ்பெஷல் ரிப்போர்ட்


Recommended Posts

ஏப்ரலில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி மே மாதம் நிறைவடைகிறது. பிறகு போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள். ஜுன் - ஜுலையில் திரைக்கு வந்துவிடும் கமலின் 'தசாவதாரம்!'

கமலுக்கும் சரி தமிழ் திரையுலகுக்கும் சரி இது மற்றுமொரு திரைப்படம் அல்ல, ஒரு சாதனை! உலக சினிமா வரலாற்றில் ஒரு நடிகர் ஒரே படத்தில் பத்து வேடங்களை இதுவரை ஏற்று நடித்ததில்லை. 'தசாவதாரம்' அதனை உடைக்கிறது. இதில் கமலுக்கு பத்து வேடங்கள்.

படத்தின் கதை யூகிக்க இயலாத அளவுக்கு விஸ்தீரணமானது. யுகங்களை அனாயாசமாக கடப்பது. 12-ம் நூற்றாண்டிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரை ஒளி வேகத்தில் பாய்கிறது கதை.

ஆறு வருடங்களுக்கு முன்பே கமல் உருவாக்கிய கதையே 'தசாவதாரம்.' இதனை படமாக்குவதற்கு ஆகும் அதிக பொருட்செலவை முன்னிட்டு இதுவரை கமலின் அடி மனதில் தேங்கியிருந்த கதை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் துணிச்சலால் இன்று திரைவடிவம் பெற்று வருகிறது. படத்தின் ஏகதேச பட்ஜெட் முப்பத்தைந்து கோடிகள்!

படத்தின் பாதி பட்ஜெட்டை பிரமாண்ட அரங்குகள் எடுத்துக் கொள்கின்றன. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மண்டலத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். முக்கியமாக பொன் கூரைவேய்ந்த சிதம்பரம் கோவில் மற்றும் கோவில் வளாகம். நூற்றுக்கணக்கில் சோழ குடிமக்கள், குதிரைகள், குலோத்துங்க சோழனின் பட்டத்து யானை என ஆயிரக்கணக்கில் துணை நடிகர்களை வைத்து சில காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். இதில் குலோத்துங்க சோழனாக நெப்போலியன் நடித்திருக்கிறார். சைவ சமயத்தைச் சேர்ந்த குலோத்துங்கன் சயன நிலையில் இருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சிலையை கடலில் வீசுவதும், அந்தச் சிலையை அணைத்தபடி ரங்கராஜ நம்பி கடலுக்குள் மூழ்குவதும் படமாக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சிலையும், நம்பியும் மூழ்கும் காட்சியை ஸ்பெஷல் கேமராக்கள் உதவியுடன் கேமராமேன் ரவி வர்மன் படமாக்கினார். இந்தக் காட்சியில் ரங்கராஜ நம்பியாக உடலில் திருமண் அணிந்து நடித்தார் கமல்ஹாசன். படத்தில் வரும் பத்து கெட்டப்புகளில் ஒன்று இந்த ரங்கராஜ நம்பி.

முன்னதாக, ரங்கராஜ நம்பியின் முதுகில் இரும்பு கொக்கிகளை சதையை துளைத்தபடி பிணைத்து பறவை காவடி போல் இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. ரங்கராஜன் நம்பியாக நடித்த கமல் சொந்தக் குரலில்,

'கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது சைவம் என்று பார்த்தால தெய்வம் கிடையாது தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது'

என கொக்கியில் தொங்கியபடி பாடிச் சென்றார். வாலி எழுதிய இந்தப் பாடல் மற்றும் காட்சி வரலாற்று முக்கியத்துவமுடையது.

இன்று சைவர்களும், வைணவர்களும் இந்து என்ற அடைப்புக்குறிக்குள் ஒற்றுமையாக கழிந்தாலும் 12-ம் நூற்றாண்டில் சைவர்களும் வைணவர்களும் சிண்டை பிடித்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சிவன் பெரிதா பெருமாள் வலிதா என்பது அன்று ஒரு தீராச் சண்டை. பெரும் பகை. சுடுகாட்டில் திரிபவனுக்கு கோவில் எதற்கு என சிவனை வைணவர்களும் கடலில் கண்ணயர்ந்து கிடப்பவனுக்கு பூஜையும் வைவேதிகமும் எதற்கு என விஷ்ணுவை சைவர்களும நடுவீதியில் நாறடித்துக் கொண்டிருந்தனர். அதன் ஒரு சிறு துணுக்கே கமல், நெப்போலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள்.

இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு வரும்போது காட்சிகளிலும் கமலின் கெட்டப்பிலும் 180 டிகிரி மாற்றம். இப்போது கமல் ஒரு விஞ்ஞானி. ஏறக்குறைய வெளிநாட்டு மனிதனின் சாயல். இந்தக் காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கியிருக்கிறார்கள். எளிதில் அனுமதி கிடைக்காத அமெரிக்காவின் மிகப் பெரிய ஆராய்ச்சி கூடத்தை இதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி கூடத்தின் நடுவில் கம்ப்யூட்டர்கள் மிகப்பெரிய எந்திரங்களை இயக்குவது போன்று செயற்கையான அரங்கு ஒன்றை அமைத்து, அது விபத்தில் அழிவது போன்று எடுத்துள்ளார்கள். இந்த அரங்கை வடிவமைத்தவர் கலை இயக்குனர் பிரபாகரன். இவரைத் தவிர சமீர்சந்தாவும் இப்படத்திற்காக பல பிரமாண்ட அரங்குகளை அமைத்துள்ளார்.

கமலின் இன்னோரு முக்கியமான வேடம், தற்காப்புக் கலை நிபுணர். மலேசிய பாரம்பரிய தற்காப்புக் கலைஞர் வேடத்தில் கமல் எதிரிகளுடன் மோதும் காட்சியை மலேசியாவில் படமாக்கியுள்ளனர்.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் புகழ் பெற்ற இரவு விடுதி ஒன்றில் பாடல்காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. மல்லிகா ஷெராவத் இருபது அமெரிக்க அழகிகளுடன் ஆடுவதை கமல் பார்ப்பதாக காட்சி. பிருந்தா இந்த நடனத்தை அமைத்தார்.

படத்தின் முக்கியமான அம்சம் சண்டைக்காட்சிகள். கமலின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மா மரணமடைந்ததால் அவர் இடத்தை பிடித்திருக்கிறார்கள் தியாகராஜனும், கனல் கண்ணனும். இவர்கள் இருவரும் இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு சண்டை அமைத்தவர்கள். அமெரிக்காவில் எடுத்த சண்டை மற்றும் சேஸிங் காட்சிகளை எடுத்தவர்கள் Joop Katana மற்றும் Matos. இருவரும் ஹாலிவுட் சண்டைக் கலைஞர்கள்.

மலேசியாவில் எடுக்கப்பட்ட பாரம்பரிய Akido சண்டைக்காட்சியை எடுத்தவர் Sonnylake.

படத்தில் ஜிம்மி ஜிப், ஸ்டெடிகேம், பான்தர் கிரேன் என அதிநவீன கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். 747 ஜெட் விமானத்திற்குள் கமல் ஊடுருவும் காட்சியை இதுவரை இந்திய சினிமா காணாத வகையில் எடுத்துள்ளனர்.

கமலுடன் நெப்போலியன், அசின், மல்லிகா ஷெராவத், சந்தான பாரதி, ஜெயப்ரதா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் கமல்ஹாசன். இயக்கம் கே.எஸ். ரவிக்குமார்.

படத்தில் பணிபுரியும் அனைவரும் இதனை மிகப் பெரிய வாய்ப்பாக கருதுகின்றனர். "எனக்கு இந்தப்படம் தனியா ஒரு இன்டிட்யூட்ல படிக்கிற அனுபவத்தை தருது. ஒவ்வோரு காட்சியை எடுக்கும்போதும், ஒத்திகை, டேக், லேப்ல டெவலப் பண்றப்புறம் டெலிசினி எடிட்டிங்கில் இப்படி பத்து முறை பார்த்தாலும் பதினோராவது முறை பார்க்கும் போதும் சுவாரஸியமாகவும் பிரமாதமாகவும் இருக்கு" என சிலாகிக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.

"எனது சினிமா வாழ்க்கையை வேறு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் படம்" என பெருமிதப்படுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் கணிப்பு வேறு மாதிரி. "கண்டிப்பா தமிழ் சினிமா சரித்திரத்தில் இந்தப் படத்துக்கு தனி இடம் உண்டு. படத்தோட கலெக்ஷ்னும் அப்பிடி இருக்கும்னு நம்பறேன்."

நாம் மேலே பார்த்தது கமலின் மூன்று வேடங்களை. சரியாகச் சொன்னால் மூன்று கெட்டப்புகளின் சிறு துளிகளை மட்டும். இதுவரை எட்டு கெட்டப்புகள் படமாக்கப்பட்டுவிட்டன. இனி இரண்டு மட்டுமே பாக்கி.

கெட்டப்புகள் என வரும்போது கமலின் உழைப்பை சொல்லாமல் இருக்க முடியாது. சிங்கிள் கெட்டப்புக்கே அலும்பல் செய்பவர்களுக்கு மத்தியில் அனாயாசமாக பத்து விதவிதமான மனிதர்களாக மாறியிருக்கிறார் கமல். ஒவ்வொரு கெட்டப்பிற்கும் மேக்கப்போட ஆறுமணி நேரமாகிறது. அதிகாலை மூன்று மணிக்கே மேக்கப்பிற்கு முகத்தை கொடுக்க வேண்டும். ஆறுமணி நேரம் பொறுமையாக இருந்தால் படப்பிடிப்புக்கு தயாராகலாம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல். மூன்று நான்கு மணி நேரமே மேக்கப் தாக்குப்பிடிக்கும் என்பதால் அதற்குள் அந்தநாள் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும். மேக்கப் போடும் நேரம், மேக்கப்புடன் நடிக்கும் நேரம், மேக்கப்பை கலைக்கும் நேரம் என ஏறக்குறைய ஒரு நாளின் பதினைந்து மணி நேரம் தாடை அசைய எதையும் சாப்பிட முடியாது. வெறும் திரவ உணவுகள் மட்டுமே சாப்பாடு. இப்படி பத்து கெட்டப்புகள் போடவேண்டும்.

கமலின் கெட்டப்புகள் எதையும் பிறரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இதற்கு மோஷர், அனில் பெம்ரிகர் இருவருக்கும்தான் பாராட்டு தெரிவிக்க வேண்டும். இவர்கள் இருவரும் ஹாலிவுட்டை சேர்ந்தவர்கள். மோஷர் ஒப்பனை கலைஞர். பெம்ரிகர் சிகை அலங்கார நிபுணர்.

இன்னும் சில மாதங்களில் தமிழ் திரையில் ஒரு சாதனையான படைப்பை பார்க்கயிருக்கிறோம் என்பதை இந்த தகவல்கள் உறுதி செய்கின்றன!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.