Jump to content

ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 33) #BiggBossTamilUpdate


Recommended Posts

ஒரு டவுட்டு... ஆர்த்தி பிக்பாஸின் இலுமினாட்டியா..? 72-ம் நாள் - பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss


ஆர்த்தி அழுகையுடன் இந்த நாள் துவங்கியது. அதுவரை சர்ச்சைக்கு இடமளிக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்த ஆர்த்தியின் இன்னொரு பரிதாப முகத்தை இன்று பார்க்க முடிந்தது. அவருடைய அம்மா இறந்த நாள் என்பதால் ‘அப்பா என்ன செய்கிறாரோ, நான் கூட இல்லையே..’ என்று வையாபுரியிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் பாவம். 

புரியாத மாதிரியாக ஒரு காலைப் பாடல் ஒலித்தது. தமிழ் மாதிரிதான் தெரிந்தது. பிக்பாஸே இசையமைத்தாரோ என்னமோ. 

“ஏண்ணே டல்லா இருக்கீங்க?” என்று சிநேகனிடம் விசாரிக்க வந்தார் பாசமலர் தங்கை ஜூலி. ‘தந்திரக்காரர்’ என்ற விருது கிடைத்ததில் இருந்தே மந்திரித்து விட்ட கோழி மாதிரி இருக்கிறார் சிநேகன். “விருதினால் பிரச்சினையில்லை. அதற்குத் தந்த விளக்கம்தான் சங்கடமாக இருக்கு. இங்கு வந்த புதிதில் ஒருவரைப் பற்றி சரியாகத் தெரியாமல் விருதுகள் தந்தோம். நான் தவறாகத் தெரிவதற்கு ஒரே காரணம் ஓவியா விஷயம். இங்க ஒருத்தரைப் பற்றி இன்னொருவர் எவ்வளவோ பேசறாங்க. நான் 100 பிரச்சினைகள்ல இரண்டே பிரச்சினைகளை வெளியில் சொன்னாலே அது தப்பாயிடுது. எத்தனையோ உள்ளே அழுத்தி வெச்சிருக்கேன்.” என்றெல்லாம் சிநேகனின் அனத்தல் நீண்டது. 

Bigg Boss

முன்பு நடந்த விருதுகள் விழா தொடர்பான சர்ச்சைகளைப் பேசியவர் “ உனக்கும் வையாபுரிக்கு தந்த விருது, நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு கொடுத்தது. ஓவியாவுக்குத் தந்த விருதை ரைசாவுக்குக் கொடுத்திருக்கலாமோன்னு பின்னாடி தோணுச்சு. (ஓவியா பெயரைத் தொட்டாலே  ஹைவோல்டேஜ் ஷாக் அடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. எனவே நேர்மறையாகவே பேசுகின்றனர்). பரணிக்கு தந்த விருது பற்றி நான் வருந்தலை. அவன் அந்த மாதிரி மாத்தி மாத்தி பேசிட்டிருந்தான்”

**

சோகமாக இருக்கும் ஆர்த்தியிடம் ‘என்ன விஷயம்’ என்று விசாரித்தார் பிந்து. விஷயத்தைச் சொன்னார் ஆரத்தி. ‘எங்கப்பாவிற்கு நான் அழறது பிடிக்காது. வழக்கமாக நான் அழ மாட்டேன். ஆனா இன்னிக்கு தாங்க முடியலை” என்றார் ஆர்த்தி. ‘அழணும்னு தோணினா அழுதுடுங்க’ என்று சரியான உபதேசத்தை தந்தார் பிந்து. “இல்லை. அரைமணி நேரத்துல சரியாடுவேன்’ என்ற ஆர்த்தி சொன்னபடியே சிறிது நேரத்தில் உற்சாகமாகி விடுவார். பழைய படியே தன் பாணிக்கு திரும்பி விட்டார் என்பது பிறகு சுஜாவை உற்சாகமாக நீச்சல் குளத்தில் மறுபடி மறுபடி தள்ளி விட்டதில் இருந்தும், ஜூலியின் முகத்தில் மாவை கொட்டியதில் இருந்தும் தெரிந்தது. 

‘கம்போஸிங்’ என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வேண்டும் என்கிற பிடிவாதம் ஜூலிக்கு வந்து விட்டது. தனக்கு இசை தொடர்பான ஆர்வம் உண்டு என்று ஹரீஷ் அறிமுக வீடியோவில் சொன்ன நினைவு. எனவே ‘இசை எங்கிருந்து வருது தெரியுமா?” என்கிற ரேஞ்சில் ஜூலியிடம் பேசியிருப்பார் போலிருக்கிறது. எனவே இசை மாணவரான ஜூலிக்கு ‘கம்போஸிங்’கிற்கு அர்த்தம் வேணும் என்கிற ஆவல் பெருகி வழிந்தோடுகிறது. “இந்த வீட்லயே எல்லா இண்ஸ்ட்ரூமெண்ட்டையும் தொடக்கூடிய தகுதி இவனுக்கு மட்டும்தான் இருக்கு. ஏன்னா அவனுக்கு வாசிக்கத் தெரியாது. எல்லாத்தையும் எடுத்து துடைச்சு வைப்பான்’ என்று விநோதமான ஒப்பனையில் இருக்கும் ஆரம்ப கால வடிவேலுவை மனோ அறிமுகப்படுத்துவார். (சிங்காரவேலன் திரைப்படக்காட்சி) பொருத்தமான சமயத்தில் இதை நினைவுகூர்ந்த ஹரிஷீற்குப் பாராட்டு. 

அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் பேச மாட்டேன் என்று ஜூலி மெளன விரதம் இருந்தார். ஹரிஷீன் உலக சாதனைகளுள் ஒன்றாக இதைச் சொல்லலாம். ஜூலியின் வாயை அடைத்தற்காக ஹரீஷிற்கு நன்றி சொன்னார் ஆர்த்தி. “ஜூலியின் ஆடியோவைக் கவனிக்கும் நுட்பக் கலைஞர் இதற்காக மகிழ்வார்” என்பது ஆர்த்தியின் கிண்டல்.

Bigg Boss

சோகமாக இருக்கும் சிநேகனை ஆளாளுக்கு துக்கம் விசாரிக்கத் துவங்கி விட்டார்கள். “ஏன் தேவதாஸ் மாதிரி இருக்கீங்க’ என்று கேட்ட பிந்து பின்னர் தந்த உபதேசம் அபாரமானது. ‘ஆடு மேய்க்கற பையனுக்குள்ள இம்பூட்டு அறிவா?” என அவரைப் பற்றி ஆச்சர்யமாக இருந்தது. “இங்கிருந்து வெளியே போனா என்ன நடக்கும்னு தெரியும். நம்ம எல்லோர்கிட்டயும் குறைகள் இருக்கு. ஆனா அடிப்படையில் நாம் நல்லவர்கள்தான். மனுஷங்கதானே.. கடவுள் இல்லையே. அதனால எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு போயிட்டே இருக்கணும்’ என்பது பிந்துவின் அபிப்ராயம். ‘போடா எல்லாம் விட்டுத்தள்ளு. பழசையெல்லாம் சுட்டுத் தள்ளு” என்று தளபதியின் பாடலைப் பாடினார் பிந்து. 

“நான் என்ன பண்ணாலும் பிரச்சினையாச்சுன்னா நான் என்னதான் பண்றது. டல்லா இருந்தா ‘இது கேம்தானே, ஏன் வீக்கா இருக்கீங்க’ன்னு பிக்பாஸ் கேட்கறாரு. வேலை செஞ்சிட்டே இருந்தே மத்தவங்களுக்கு வாய்ப்பு தரலைன்றாங்க. யாருக்காவது ஆதரவா இருந்தா ஐஸ் வெக்கறான்கிறீங்க.. ஒருத்தன் என்னதான்யா பண்ணுவான். நான் என்ன லூசா..” என்பது சிநேகனின் புலம்பல். ‘வெளியில் இருந்து வந்த ஆர்த்தி, சக்தி, ஜூலி’ போன்றோர்  சில நாள்களிலேயே தங்களைப் பற்றி எப்படி தீர்மானித்து விருது தர முடியும்?’ என்கிற ஹரீஷின் கேள்வி நியாயமானது. 

மேலும், மக்களின் வாக்கெடுப்பினால் வெளியே சென்ற ஜூலி, ஆர்த்தி மற்றும் பிக் பாஸின் நாமினேஷனால் வெளியேறிய சக்தி ஆகியோர் மற்றவர்களின் நாமினேஷில் பங்கு கொள்வதும் மற்றவர்களைப் பற்றி தீர்மானித்து விருது நடும் நடுவர்களாக இருப்பதும் நிச்சயம் காலக்கொடுமை. 

‘மக்களைப் பற்றி கவலைப்படலே’ என்ற சிநேகன் சட்டென்று மாற்றிக் கொண்டு ‘விமர்சனங்களைப் பற்றி கவலைப்படலை. ஆனால் கூட இருந்து பார்க்கிற சக்திக்கே என்னைப் பற்றி புரியலையே” என்று ஆதங்கப்பட்டார். 

**

‘Freeze and Release” என்கிற ‘சின்னப்புள்ளத்தனமான’ விளையாட்டை பெரும் task ஆக வைத்தார் பிக்பாஸ். “கவிஞர் ஃபீல் பண்றாரா?” என்று அலப்பறையைத் துவங்கினார் ஆர்த்தி. “முன்ன அவரும்தானே விருது கொடுத்தாரு. இப்ப என்னவாம்? தந்திரம் இல்லாம இத்தனை வாரம் தாக்குப் பிடிச்சிருக்க முடியுமா?” என்றலெ்லாம் பொங்கினார் ஆரத்தி. மனிதர்களைப் புரிந்து கொள்வது ஆகக்கடினமானது என்பது பிக்பாஸ் வீட்டு ஆசாமிகளைப் பார்க்கும்போது மீண்டும் உறுதியாகிறது. 

Bigg Boss

Statue விளையாட்டின் விதிமுறைகள் விளக்கப்பட்டன். பிக் பாஸ் எவர் ஒருவரையோ அல்லது அனைவரையுமோ ‘Freeze’ என்றதும் உறைந்து நிற்க வேண்டும். ‘Release’ என்றதும்தான் நகர வேண்டும். இன்னொன்று, ‘Rewind’ என்று சொன்னால் தாம் செய்து கொண்டிருந்த பணியைத் திரும்பச் செய்ய வேண்டும். ‘இந்த task-ஐ கண்காணிக்க சக்தி பொறுப்பேற்பார்’ என்கிற பிக் பாஸின் முடிவு ஓவர். நீக்கப்பட்டு வெளியேறிவர்களுக்கு அதிக முன்னுரிமை தருவதின் மூலம் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு அதிக ஆதங்கத்தை உற்பத்தி செய்வதுதான் பிக் பாஸின் திட்டமாக இருக்க வேண்டும். 

இந்தச் சவால் பற்றி சக்தி சொல்லிக் கொண்டிருக்கும் போது, எனக்குத் தோன்றிய அதே கேள்வி கணேஷிற்கும் தோன்றியது போல. ‘டாய்லெட்ல இருந்தா என்ன பண்றது?' என்கிற முக்கியமான கேள்வியைக் கேட்டார். ஒருவேளை ‘சுச்சா’ போகும் போது freeze என்றால் அதை எப்படி சட்டென்று நிறுத்த முடியும்? அதை விடவும் கொடுமை ‘rewind’ என்றால் எப்படி உள்ளிழுப்பது? இயற்பியல் விதிகளுக்கு எதிரான சவால் ஆயிற்றே இது?

‘இனிமேல் சவால்களின் கடுமைத்தன்மை அதிகரிக்கும். அதற்கேற்ப போட்டியாளர்கள் தயாராக இருக்க வேண்டும்.’ என்றது அசரிரீக்குரல். புது தலைவரான வையாபுரி, ‘இனி மேல் எந்தவொரு சவாலையும் சுணங்காமல் உற்சாகமாக செய்வேன்’ என்று வாக்குத் தந்த வாரத்திலா கடுமையான சவால்கள் வர வேண்டும்” பாவம் மனிதர். 

உறையும் விளையாட்டில் முதலில் மாட்டியவர் ஜூலி. ஸ்டைலாக அசைந்து கொண்டிருந்தவரை உறையச் சொன்னார் பிக்பாஸ். விளம்பர மாடல் போல அப்படியே நின்றார் ஜூலி. “இதை எதிர்பார்த்துதான் ஜூலி டான்ஸ் ஆடிட்டு இருந்தா” என்பது ஆர்த்தியின் கிண்டல். 

உறைந்து நின்றிருந்த ஜூலியின் காதின் அருகே வந்து சுஜா கத்தினார். இப்படியே மற்றவர்களும் வந்து தொடர்ந்து கிண்டலடித்தார்கள். இந்த task-ல் ரியாக்ட் செய்தால் லக்ஸரி பட்ஜெட்டின் மதிப்பெண் குறையும் என்பது பிக் பாஸின் விதி. எனில் Freeze ஆனவரை மற்றவர்கள் கிண்டல் செய்து ரியாக்ட் செய்ய வைப்பது பார்ப்பதற்கு ஒருபக்கம் ஜாலியாக இருந்தாலும் மதிப்பெண்களை இழக்கும் விஷயத்தில் புத்திசாலித்தனமாக இல்லை. 

ஜூலியை கிண்டலடித்த சுஜாவிற்கு உறையும் கட்டளை வழங்கப்பட்டது. மற்றவர்களின் கிண்டல்களை தாங்க முடியாமல் கீழே படுத்து விட்டார் சுஜா. இதற்கான தண்டனை வழங்கப்பட்டது. மற்றவர்கள் இணைந்து அவரை நீச்சல் குளத்தில் தள்ளி விட வேண்டும். 

இதற்கான உற்சாகத்துடன் முதலில் வந்தவர் ஆர்த்தி. சுஜா குளத்தில் தள்ளிவிடப்பட்டு எழுந்ததும் ‘rewind’ என்கிற கொடூரமான தண்டனையை தந்தார் பிக் பாஸ். எனவே பிசுபிசுப்பான எண்ணைய் பாத்திரத்தை மறுபடி மறுபடி கழுவுவது போல சுஜாவை குளத்தில் முக்கி முக்கி எடுத்தார்கள். இது விளையாட்டுதான் என்றாலும் சுஜாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்தக் குரூர விளையாட்டில் உற்சாகமாக பங்கு கொண்டு மிக ஆர்வமாக சுஜாவை மீண்டும் மீண்டும் தள்ளி விடுவதில் முன்னணி இடம் வகித்தார் ஆர்த்தி. காலையில் இருந்த சோகமெல்லாம் எங்கோ பறந்து விட்டது. 

Bigg Boss

**

இந்த விளையாட்டின் அடுத்த பகுதி அறிவிக்கப்பட்டது. அதன்படி எல்லோரும் உறைந்ததும் பிக்பாஸின் உத்தரவுப்படி ஒருவர் மட்டும் விலக்கப்படுவார். துண்டுச்சீட்டுகளில் எழுதப்பட்டிருக்கும் விஷயத்தை எவர் ஒருவரையாவது தேர்ந்தெடுத்து அவர் செய்ய வேண்டும். 

இதில் ஆர்த்திக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. ‘மாவை எவர் தலையிலாவது கொட்ட வேண்டும்’ என்றது துண்டுச்சீட்டு. ஆர்த்திக்கு லட்டு மாதிரியான வாய்ப்பு. தவற விடுவாரா என்ன? ஒவ்வொருவரிடமாக சென்று பதற்றத்தை ஏற்படுத்தி விட்டு பின்பு கடைசியாக ஜூலியின் தலையில் சென்று கொட்டினார். “முதல்ல, என்னை நீச்சல் குளத்தில் தள்ளி விட்டல்ல” என்று பழைய கணக்கிற்கான பழிவாங்கல் வேறு. 

மாவை தலையில் கொட்ட வேண்டும் என்கிற குறிப்புக்கு மாறாக ஜூலியின் முகத்திலும் கொட்டியது ஆர்த்தியின் சர்ச்சைக்குரிய செயல். உறைந்திருந்த ஜூலி அதை எதிர்பார்க்காததால் அவர் கண்களிலும் மாவு பட்டு விட்டது போல. அதற்கான பதற்றத்தை ஜூலி வெளிப்படுத்தும் போது ‘இது task’ என்றார் ஆரத்தி. (கார்ப்பெட்டை இழுத்த ஓவியாவின் அதே குரல்) “மாவு கண்ல பட்டுடுச்சு’ என்று ஜூலி தழுதழுத்த குரலில் சொன்ன பிறகு வரவழைத்துக் கொண்ட பதற்றத்துடன் துடைப்பதற்கான தாளை எடுத்து வந்து தந்தார். 

Bigg Boss

தான் நினைப்பதையோ அல்லது வம்பு வளர்க்கும் செயல்களையோ ஆர்த்தியை வைத்து பிக்பாஸ் செய்கிறாரோ எனத் தோன்றுகிறது. இதனால் ஆர்த்திதான் பிக் பாஸின் இலுமினாட்டியோ என்ற எண்ணம் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை!

இவையெல்லாம் விளையாட்டுக்கள் என்றாலும், இனி வரும் taskகள் கடுமையாக இருக்கும் என்கிற எச்சரிக்கை குறிப்பு வழங்கப்பட்டாலும் அவற்றை மனிதர்களின் உடல் பாகங்கள் பாதிக்காதவாறு அமைப்பதும் கையாள்வதும் மிக அவசியம். ஒருவேளை சரிசெய்ய முடியாதவாறான பாதிப்பு ஏற்பட்டால் அதை எதிர்கொள்பவர்தான் வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப் பட வேண்டும். ஒப்பந்தத்தைக் காட்டி விட்டு பிக் பாஸ் எளிதில் தப்பித்துக் கொள்வார். 

**

அடுத்த வாய்ப்பு சக்திக்கு தரப்பட்டது. ‘யாராவது ஒருவரின் பத்து துணிகளைத் தேர்ந்தெடுத்து நீச்சல் குளத்தில் போட வேண்டும்” என்பது பிக்பாஸின் விளையாட்டு. ‘யாருடைய துணிகளைப் போடுவது’ என்கிற பதற்றத்துடன் தேடிய சக்தி. அங்கும் இங்கும் தேடி கடைசியாக ஆரவ்வின் உடைகளைக் கொண்டு வந்து நீச்சல் குளத்தில் போட்டார். ஆரவ் அதை இயல்பாக எடுத்துக் கொண்டார். அவர் சிரமப்பட்டு துணிகளை எடுத்த நேரத்தில் ‘ரீவைண்ட்’ என்கிற குரல் ஒலிக்க, மறுபடியும் துணிகளை குளத்தில் எறியும் பரிதாபமான நிலைமை ஆரவ்வுக்கு ஏற்பட்டது. இதுவும் விளையாட்டுதான் என்றாலும் சம்பிரதாயத்திற்காக சக்தி ஆரவ்விடம் ‘ஸாரி’ சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ம்..ஹூம்.

பிக் பாஸின் மூதாதையர்கள் ஹிட்லர் வதைமுகாமில் கொடுமைகள் செய்து பயிற்சி பெற்றவர்களோ என்னமோ? அடுத்த தண்டனை விபரீதமாக இருந்தது. ஜூலிக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டது.‘எவரையாவது தேர்ந்தெடுத்து தும்மல் வரவழைக்க வேண்டும்’. ஸ்டோர் ரூமில் இருந்த ஆயுதங்களில் வேப்பிலைக்குச்சியை தேர்ந்தெடுத்த ஜூலி, ஹரீஷை தேர்ந்தெடுத்து அவருடைய மூக்கில் மறுபடியும் மறுபடியும் நுழைக்க முயன்றார். தும்மல் வருமோ இல்லையோ, ரத்தம் வந்து விடும் போல் இருந்தது. ஒரு பாவனைக்காகவாவது ஹரீஷ் ஒரு தும்மலை போட்டிருக்கலாம் என்று தோன்றியது. கண்கள் கலங்க மூக்கின் எரிச்சலைப் பொறுத்துக் கொண்டவர் ‘தும்மல் வரலைங்க.. என்ன பண்றது?” என்று நேர்மையாக நடந்து கொண்டார். பின்பு பிக் பாஸ் பரிதாபப்பட்டு விளையாட்டை நிறுத்த விபரீதமாக ஏதும் நடக்கவில்லை. 

Bigg Boss

‘கடவுளே.. யாரையும் கஷ்டப்படுத்தறா மாதிரி வந்துடக்கூடாது” என்கிற நல்ல எண்ணத்துடன் சீட்டை எடுத்தார் சிநேகன். ‘ஒருவரின் அருகில் சென்று பன்றி போல் கத்த வேண்டும்’ என்றது சீட்டு. பன்றி கத்தி நான் பார்த்ததும் கேட்டதுமில்லை. எனவே விநோதமாக கத்திய சிநேகனின் கூக்குரல்களை பன்றி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். பிந்துவின் அருகில் சென்று கத்திய சிநேகன் ‘இது பன்றி கத்துவதா அல்லது கழுதையா?’ என்று சுயபகடி செய்தார்.

‘வேடிக்கையாக நடனம் ஆட வேண்டும்’ என்பது பிந்துவுக்கு வந்த வாய்ப்பு. நடனம் மட்டும் ஆடினால் போதுமானது. ஆனால் சிரிக்க வைக்க வேண்டும்’ என்று புரிந்து கொண்ட பிந்து, ஜூலியிடம் சென்று அவரைப் பாடாய்ப் படுத்தினார். ‘காலை மிதித்து விட்டு ‘ஏன் சிரிக்க மாட்றேன்னா கேக்கறே” என்று அழாத குறையுடன் சொன்னார் ஜூலி. 

ஆர்த்தி தந்த யோசனையின் படி உறையும் கட்டளை வந்தவுடன் தரையில் படுத்து விட்டனர் ஆரவ்வும் பிந்துவும். காமிரா அவர்களைச் சுற்றிக் காட்டிய போது விபரீதமாகத் தெரிந்தது. ‘சிலேட்டிலும் பாத்திரத்திலும் நகத்தால் சுரண்டி சத்தம் எழ வைக்க வேண்டும்’ என்பது ஹரீஷிற்கு தரப்பட்ட கட்டளை. மனிதர் அதை வைத்துக் கொண்டு இசைக்கச்சேரியே செய்து விட்டார். ‘கம்போஸிங்’ என்பதற்கான பொருள் ஜூலிக்கு அப்போது புரிந்திருக்கலாம். 

**

நள்ளரவில் கழிவறையில் மாட்டிக் கொண்ட சிநேகனை கேள்விக் கணைகளால் துளைத்தார் சுஜா. ‘நான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போது காயத்ரி என்னைப் பற்றி ஏதோ சொன்னார் என்றீர்களே. அது என்னது?” எனக்கு தெரிந்தேயாக வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தார் சுஜா. (‘அவ அஞ்சு ஜூலிக்கு சமம்’ என்று காயத்ரி சொன்னதாக நினைவு). சிநேகன் பழைய ஆளாக இருந்தால் இந்த விஷயத்தை தாராளமாக சொல்லியிருப்பார். ஆனால் இப்போது ‘தந்திரக்காரராக’ மாறி விட்டதால் சுற்றிச் சுற்றி என்னென்னவோ சொல்லி சுஜாவைக் குழப்பி விட்டார். 

இன்னொரு பக்கம் சக்தி தனியாக அனத்திக் கொண்டிருந்தார். ‘சில சந்தேகங்கள்.. இல்ல.. மனக்குழப்பங்கள்.. இதுக்கு சிநேகனால முடிவு வரும்’ என்று புலம்பல். 

 

இப்படியாக ‘இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி’ போன்று எத்தனை சிறுபிள்ளைத்தனமான சவால்களை பிக் பாஸ் மனதில் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. முடியல.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/101431-has-harathi-illuminati-of-bigg-boss---bigg-boss-tamil-updates-day-72.html

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

குழந்தைகளை பிக் பாஸ் பார்க்க வைக்காதீர்கள் ப்ளீஸ்..! 73-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

 

இன்றைய நாளின் மிக முக்கியமான, சுவாரசியமான விஷயம் சில போட்டியாளர்கள் அவர்களின் சுற்றங்களை, நட்புகளை நீண்ட நாட்கள் கழித்து பார்த்ததுதான். இது சார்ந்த பகுதிகள் உணர்ச்சிகரமாகவும், நெகிழ்ச்சியாகவும் கூடவே நகைச்சுவையும் கலந்திருந்தது. நமக்கும் சரி, சம்பந்தப்பட்ட போட்டியாளர்களுக்கும் சரி, இனிய ஆச்சர்யத்தை தந்த பிக் பாஸூற்கு நன்றி. என்னவொன்று, சரியான சமயத்தில் அவர்களை நிறுத்தி வெளியே அனுப்பியதுதான் எரிச்சலும் வேதனையும். 

மனித உடல் மீது நிகழ்த்தப்படும் வதைகள் தொடர்பான காட்சிகள் இன்றும் இருந்தன. மறுபடியும் அதேதான். சவால்கள் கடுமையாக இருக்கும் என்பது முன்பே அறிவிக்கப்பட்டு விட்டதுதான் என்றாலும் அது அருவருப்பாகவோ, அச்சமூட்டுவதாகவோ இல்லாமல் மூளைக்கு வேலைக்கு தரும் விதமாக அல்லது பார்ப்பவர்களுக்கும் பங்கேற்பவர்களுக்கும் சுவாரசியம் தரும் விதமாக சவால்கள் அமைவது முறையானது. மாறாக ஹாரர் திரைப்படங்களில் வரும் விதமாக போட்டியாளர்கள் விதம்விதமாக கொடுமைப்படுத்தப்படுவது கேவலமாக இருக்கிறது. நுண்ணுணர்வும் இளகிய மனமும் உள்ளவர்களை அதிகம் பாதிப்பது போன்ற மோசமான காட்சிகள். 

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

Bigg Boss

ஹிப் ஹாப் தமிழனின் இசை இம்சையில் ‘ஆம்பளை’ திரைப்படத்தில் இருந்து ‘பழகிக்கலாம்’ என்ற பாடல் ஒலித்துத் தொலைந்தது. (முதலில் என்ன பாடல் என்று தெரியாமல் பிறகு இணையத்தில் தேடி வெற்றிகரமாக கண்டுபிடித்து விட்டேன்). 

“எல்லோரும் Freeze’ என்று காலையிலேயே தன் அலப்பறையைத் துவங்கினார் பிக்பாஸ். பாவம், ஹரீஷ். தன் கண்ணாடியை உயர்த்திய படி அப்படியே உறைந்திருந்தார். மூக்குக் கண்ணாடி விளம்பரம் போல் இருந்தது. அவருடைய கண்ணாடி வழியாக அவருடைய முகம் விசித்திரமாக தெரிந்தது. 

பிறகு ஒவ்வொருவராக உறைந்த நிலையில் இருந்து விலக்கி விடப்பட்டார்கள். ரிலீஸ் என்றாலும் சிநேகன் அப்படியே யோசனையில் அமர்ந்திருந்தார். பிறகு ஆரவ் மட்டும் உறைய, மற்றவர்கள் அவரை நெருங்கி பயங்கரமாக கிண்டலடித்தனர். குறிப்பாக பிந்து நிறைய கலாய்த்தார். பிறகு பிந்து உறையும் போது ஆரவ் அவரது நெருங்கி கலாட்டா செய்ய, அந்தச் சமயம் பார்த்து ஆரவ்விற்கும் freeze கட்டளை வந்தது. சினிமா டூயட்டின் உறைந்த காட்சி மாதிரி அமைந்த அதை ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பாடி கலாய்த்தார் ஆரத்தி. 

பிறகு ஜூலி freeze. “நேத்து யாரோ தும்ம வைக்க டிரை பண்ணாங்களே” என்று தக்க சமயத்தில் தன் பிரத்யேக அலப்பறையை துவங்கினார் ஆர்த்தி. எனவே ஜூலியை பழிக்குப் பழி வாங்கும் விதமாக ஹரீஷ், அவரின் மூக்கில் குச்சியை நுழைக்க ஜூலி கண்ணீருடன் அப்படியே நின்றார். உறைந்த நிலையில் இருக்கும் போதும் பிந்துவின் கண்கள் மட்டும் பேசிக் கொண்டே இருக்கின்றன. 

**

சக்தி பேச முற்படும் போதெல்லாம் பிக்பாஸ் அவரை freeze செய்ய வைக்கலாம் போல் இருந்தது. அவருக்கு சிநேகனிடம் என்னதான் பிரச்சினை என்றே தெரியவில்லை. அதை தெளிவாகவும் சொல்லித் தொலைக்காமல், தவணை முறையில் சிநேகனிடம் எதை எதையோ கேட்டு சிநேகனை மட்டுமல்லாமல் நம்மையும் எரிச்சல்படுத்துகிறார். 

Bigg Boss

ஆர்த்தி, ஜூலி, சக்தி, ஆகியோரின் மீள்வருகை திட்டமிட்டு அமைக்கப்பட்டது என்பது மறுபடியும் உறுதியாகிறது. பிக்பாஸ் வழிகாட்டுதல்களின் படி அவர்கள் துணிச்சலுடன் நடந்து கொள்கிறார்கள். வெளியில் நடந்த விஷயங்களைப் பற்றி உள்ளே பேசுகிறார்கள். சில விஷயங்களில் இந்த மூவருக்கு மட்டும் முன்னுரிமையும் பிரத்யேக அதிகாரமும் தரப்படுகிறது. 

பார்வையாளர்கள் தீர்மானித்து ‘இவர்கள் இருக்கக்கூடாது’ என்று வாக்களித்து வெளியேற்றிய பின், ‘நிகழ்ச்சியை நடத்துவது எங்கள் இஷ்டம்’ என்கிற வீம்பு பிடித்த விதிகளுடன் அவர்களை பிக்பாஸ் மறுபடியும் உள்ளே அழைத்து வந்து கலகம் செய்ய வைப்பதும் அவர்களுக்கு முன்னுரிமை தருவதும், ஒருவகையில் வாக்களித்த பார்வையாளர்களை அவமானப்படுத்தும் விஷயமாகும். பார்வையாளர்களின் பங்களிப்பில்லாமல் இந்த நிகழ்ச்சி வெற்றி பெறாது என்கிற அடிப்படையை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்வது அவசியம். 

“நான் மறுபடி வந்ததுல சந்தோஷமா… இல்ல..” என்று சிநேகனிடம் இழுத்தார் சக்தி. ‘அம்மா மேல சத்தியமா சந்தோஷம்” என்று மிகையாக எதிர்வினையாற்றினார் சிநேகன். 

“நிறைய விஷயங்கள் உங்க கிட்ட கேட்கணும். உங்களை என் அண்ணனாத்தான் பார்த்தேன். உங்களுக்கு நிறைய விஷயம் தெரியும்-ன்றதால உங்க கட்டுப்பாட்டிலதான் நாங்க இருந்தோம். ஒருவகையில் தப்பு எங்க பேர்லயும் இருக்கலாம். அதுவரைக்கும் ஒழுங்கா பேசிய நீங்கள், கமல் வர்ற அன்னிக்கு மட்டும் மக்கள் கைத்தட்டலைக் கேட்டவுடனே அதுக்கேத்த மாதிரி மாத்தி பேசிடறீங்க. உங்களுக்கு நல்லா கேம் தெரிஞ்சிருக்கு. உங்க மேல வருத்தம் இருக்கு. தந்திரமாக நடந்துக்குட்டீங்க” என்று குத்துமதிப்பாகவே பேசிக் கொண்டிருந்தார் சக்தி. ‘இதுதான் விஷயம்’ என்று குறிப்பாக எதையும் அவர் மேற்கோள் காட்டாமல் ‘டிரிக்கர்’ செய்தது எரிச்சலாக இருந்தது. 

“நானும் இந்த விளையாட்டிற்கு புதுசுதான். அனுபவமெல்லாம் இல்லை. எல்லோரையும் அனுசரிச்சு போகத்தான் முயன்றேன். எந்த தந்திரமும் செய்யலை. மனதறிந்து எந்த தவறும் செய்யாததால் எனக்கு குற்றவுணர்ச்சி இல்லை. நான் கேம் ஆடலை. அதையும் மீறி நான் எதையாவது செய்திருந்தா, மன்னிச்சிடுங்க” என்றார் சிநேகன். ‘சரி விடுங்க.’ என்று நகர்ந்தார் சக்தி. இனியாவது அவர் குழப்பாமல் இருப்பாரா என்று தெரியவில்லை. 

வீட்டினுள் அடைபட்டதால் அது சார்ந்த மன அழுத்தத்தினாலும், போட்டியில் வெல்ல வேண்டும் என்பதால் அதற்கான உத்திகளிலும் ஏறத்தாழ எல்லோருமேதான் அவரவர்களின் வழிகளில் தன்னிச்சையாக முயன்றிருப்பார்கள். இது இயல்பு. சிநேகன் மட்டுமே தலைமைதாங்கி எல்லோரையும் ஏமாற்றினார் என்பது போல நினைத்துக் கொள்ளும் சக்தியின் புலம்பல் அபத்தம். ஏமாறும் அளவிற்கு அவர்கள் முட்டாள்களா என்ன?

Bigg Boss

**

இப்போது சிநேகனை நோண்டுவது ஜூலியின் முறை. ‘நான் எது செஞ்சாலும் கேமுக்காக பண்ணேன்றாங்க’ என்று அனத்திய சிநேகனை “நீங்க நீங்களா இல்லையே!” என்று ஆரம்பித்தார் ஜூலி. “இந்த பிக் பாஸ் வீட்ல என்ன கத்துக்கிட்டீங்க?” என்பது அம்மணியின் அடுத்த கேள்வி. “யாரையும் நம்பக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன்” என்றார் சிநேகன். “அது நீங்க கத்துக் கொடுத்த பாடம்ணே” என்று வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது. “என் வாயைப் புடுங்கறதுதான் உன் task-ஆ?” என்ற சரியான கேள்வியைக் கேட்டார் சிநேகன். “உங்க வாயைப் புடுங்கி எனக்கு என்ன கிடைக்கப் போகுது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் பழக்கம் எனக்கில்லை” என்றார் ஜூலி. அப்ப கடப்பாரையா இருந்தா ஓகே வா பாசமலர்?

தாம் பங்கு கொண்ட விளையாட்டில் அது சார்ந்த சில தன்னிச்சையான பிசிறுகள் நிகழக்கூடும் என்பதை புரிந்து கொள்ளாமல் மற்றும் ஏற்றுக் கொள்ளாமல் ஏதோ அவை தங்கள் வாழ்க்கைக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகம் என்கிற அளவில் ஒவ்வொருவரும் மறுகுவது மிகையாகத் தெரிகிறது. ‘தன் மீது பிழையேதுமில்லை. எல்லாவற்றிற்கும் அடுத்தவர்தான் காரணம்’ என்கிற அடிப்படையான தற்பாதுகாப்பு உணர்வு ஒவ்வொருவரையும் ஆள்கிறதோ என்று தோன்றுகிறது.  

**

அடுத்து நிகழ்ந்தது ஓர் இனிய ஆச்சர்யம். கதவைத் திறந்து கொண்டு படுக்கையறைக்குள் நுழைய முற்பட்ட வையாபுரியை ‘freeze’ செய்தார் பிக்பாஸ். வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டன. நடுத்தர வயதில் ஒரு பெண்மணி உள்ளே வந்தார். பார்த்தவுடனேயே அது வையாபுரியின் மனைவி என்பது தெரிந்து போயிற்று. இந்த வேடிக்கையை அவர்களின் வாரிசுகள் வாக்குமூல அறையில் இருந்து கொண்டு காமிராவின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

Bigg Boss

“என் பொண்டாட்டி.. பொண்டாட்டி” என்று உறைந்த நிலையிலேயே உற்சாகப்பட்டார் வையாபுரி. “வையா.. வையா.. ” என்று அழைத்தபடியே வந்தார் அவரின் வீட்டம்மணி, (என் காதில் முதலில் “பையா.. பையா..” என்று அழைப்பது மாதிரி ஒலித்தது). “ஏன் எதுவுமே பேசமாட்டேங்கறீங்க. புது வையாபுரியை பார்க்கலாம்னு ஆசையா வந்தேன். Task முக்கியமா, நான் முக்கியமா?” என்றார் திருமதி. பிக் பாஸ் பலமாக பயிற்சி தந்து அனுப்பியிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. 

வையாபுரி தன் உறைந்த நிலையை கைவிட்டு மனைவியை கட்டியணைத்துக் கொண்டார். நெகிழ்வான காட்சியது. “உங்களை ஜெயிச்சிட்டுதானே வரச்சொன்னேன். இப்படி task-ஐ நடுவுல விட்டுட்டா என்ன அர்த்தம்?” என்று கேட்டார் திருமதி வையாபுரி. ம்..ஹூம் சில அடிப்படையான விஷயங்களில் இல்லத்தரசிகளின் குணாதிசயங்களை மாற்றவே முடியாது. 

Bigg Boss

“ப்ளீஸ்.. ப்ளீ’ஸ்” என்று காய்கறி வாங்க வரச் சொல்லி முதலில் கெஞ்சி விட்டு பிறகு வாங்கி வந்தவுடன் ‘என்னாதிது… இப்படி வாங்கிட்டு வந்திருக்கீங்க.. காய்ஞ்சு போனது.. வதங்கிப் போனதெல்லாம் கடைக்காரன் உங்க தலைல கட்டியிருக்கான். ஏமாந்து அப்படியே வாங்கிட்டு வந்திருக்கீங்க. உங்களைப் பார்த்தவுடனே இளிச்சவாயன்னு எப்படித்தான் கண்டுபிடிக்கறாய்ங்களோ” என்று இடதும் வலதுமாக மாற்றி மாற்றி இண்டிகேட்டர் போடுவதில் இல்லத்தரசிகள் ‘மன்னி’கள். 

நெகிழ்வான உணர்வுடன் தன் மனைவியை கட்டியணைத்தபடி வெளியே அழைத்து சென்று விட்டார் வையாபுரி. தம்பதியினர் கார்டன் ஏரியாவில் அமர்ந்தபடி ஆசை தீர பேசித் தீர்த்தனர். “மாறிட்டீங்க இல்லையா. பழைய வையாபுரி இல்லையே.. ஏன் இப்படி இளைச்சுட்டீங்க.. (வையாபுரி எந்தக் காலத்துல குண்டா இருந்திருக்காரு?) சரியா சாப்பிடறது இல்லையா… இங்க சாப்பாடு சரியில்லையா?’ என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார் திருமதி. ‘அதெல்லாம் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன். இங்க சாப்பாடு அருமையாத்தான் இருக்கு. ஆர்த்தி நல்லா சமைப்பா’ என்று வையாபுரி சொன்னவுடன் ‘என் சமையலை விட நல்லா இருக்குமா?’ என்றார் திருமதி பட்டென்று. இது போன்ற ஒப்பீடுகள் குடும்பத் தலைவிகளை எரிச்சல் அடைய வைப்பதென்பது பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது. 

“பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா” என்று ஜனகராஜ் மாதிரி மகிழும் ஆண்களின் மத்தியில் “என் பொண்டாட்டி வந்திருக்கா கணேஷ்” என்று வித்தியாசமாக கத்தும்படியாகி விட்டது வையாபுரியின் நிலைமை. ‘நெஜம்மாவே மாறிட்டீங்களா” என்று இன்னமும் தீராத சந்தேகத்துடன் திருமதி கேட்க, ‘கேமிரால அழுதேன்னே.. பார்க்கலையா” என்றார் வையாபுரி. ‘ஜெயிச்சுட்டு வாங்க” என்று அம்மணி சொல்லிக் கொண்டிருக்கும் போது ‘Freeze’ என்ற குரல் கேட்டது. “ஆனந்தி.. நீங்க போகலாம்’ என்ற மகேந்திர பாகுபலியின் குரல் கேட்டது. 

‘போகுதே.. போகுதே.. என் பைங்கிளி வானிலே.… ‘ என்கிற பாடல் உள்ளுக்குள் தாறுமாறாக ஒலிக்க.. மனைவி போவதை உறைந்த நிலையில் கலங்கலாகப் பார்த்துக் கொண்டிருந்தார் வையாபுரி. “அடப்பாவிகளா… குடும்பத்துக்குள்ள குண்டு போடறீங்களேடா” என்று மைண்ட் வாய்ஸ் அவருக்குள் ஒலித்திருக்க வேண்டும். 

Bigg Boss

பிறகு வையாபுரியின் மகனும் மகளும் வந்தனர். எல்லோரையும் இயல்பாக விசாரித்துக் கொண்டே சென்று வையாபுரியின் இடத்தை அடைந்ததும் ‘யப்பா…’ என்றான் மகன். மனைவியை விடவும் தங்களின் வாரிசுகளை பார்ப்பதில் ஒவ்வொரு தந்தைக்கும் அதிக ஆனந்தம். Task-ஐ கைவிட்டு அவர்களையும் உடனே அணைத்துக் கொண்டார் வையாபுரி. தந்தையை விடவும் மகன் உயரமாக இருக்கிறான். 

திருமதி. வையாபுரி மறுபடியும் உள்ளே வர அனைவரும் அவரிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு உற்சாகமாக பேசினார்கள். ‘ஐம்பது வயசுல லவ் வந்திருக்கு” என்று தன் கணவரை பாசத்துடன் கட்டிக் கொண்டார் ஆனந்தி. ‘ஏதாவது ஒரு பாட்டு பாடுங்க…’ என்று ஆரத்தி வேண்டுகோள் வைக்க, ‘இஞ்சி இடுப்பழகா.. கள்ளச்சிரிப்பழகா.. மறக்க மனம் கூடுதில்லையே” என்று டைமிங்காக பாடினார் வீட்டம்மா. வையாபுரியின் சைஸூக்கு ஏற்ற பாட்டுதான். 

taskஐ மீறியதால் வையாபுரியை அவரது குடும்பத்தார் நீச்சல் குளத்தில் தள்ளி விட வேண்டும் என்கிற உத்தரவு வந்தது. “வாங்கடா.. அப்பாவை பிடிச்சு குளத்தில் தள்ளிவிடலாம். ரொம்ப நாள் ஆசை” என்றார் திருமதி. என்னவொரு வில்லத்தனம்!. மனைவியை விடவும் வாரிசுகள்தான் அப்பாவை தள்ளிவிடுவதில் ஆர்வமாக இருந்தார்கள். பெத்த மனசு என்ன பாடு பட்டிருக்கும்.

Bigg Boss

வையாபுரியை உறைந்த நிலையில் நிற்க வைத்து விட்டு அவரின் குடும்பத்தாரை வெளியே வரச்சொன்னார் வில்லன் வீரப்பா.. கண்களாலேயே வையாபுரி விடை தர, அவர்கள் வெளியேறினார்கள். அவர்கள் போகும் கடைசி தருணம் வரை பார்த்துக் கொண்டிருந்தார் வையாபுரி. ‘உங்கள் லக்ஸரி பட்ஜெட் கேன்சலாகி விட்டது’ என்று குறும்பாக சொல்லிக் கொண்டே வெளியேறியது சின்ன வாண்டு. 

மிக நெகிழ்ச்சியுடன் பிக்பாஸிற்கு நன்றி சொன்ன வையாபுரி, “இனி 200 நாள் கூட தாங்குவேன். பொண்டாட்டி சொன்னா… பத்து முறை கூட குளத்துல குதிச்சு எந்திரிப்பேன்” என்று படு உற்சாகமாகி விட்டார். வையாபுரியின் துள்ளலைப் பார்த்தால் வீட்டில் வாரிசுகளின் எணணிக்கை விரைவில் மூன்றாகி விடும் போலிருக்கிறது. 

வையாபுரியின் நெகிழ்ச்சியான உணர்வை இதர போட்டியாளர்கள் ஜாலியாக கிண்டலடித்து தீர்த்தார்கள். 

வையாபுரியின் மூலமாக நமக்கும் ஒரு பாடம் கிடைக்கிறது. உறவுகளின் அருமை அருகாமையில் இருக்கும் போது நமக்கு புரிவதில்லை. விலகலில் இருக்கும் போதுதான் ஆழ்மனதில் ஒளிந்துள்ள பாசம் பீறிட்டுக் கொண்டு வருகிறது. நம்மை நமக்கே அடையாளம் காட்டும் தருணம். உறவுகள் அருகில் இருக்கும் போதே ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடித் தீர்க்க வேண்டும் என்கிற உபதேசம் வையாபுரிக்கு மட்டுமல்லாமல் நமக்கும் கிடைக்கிறது. காலம் தாழ்ந்து பாடம் கற்பதால் உபயோகம் ஏதுமில்லை. 

**

அடுத்த இன்ப அதிர்ச்சி பிந்துவிற்கு. படுக்கையறையில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பிந்து உள்பட அனைவரையும் உறையச் செய்தார் பிக்பாஸ். பிரதான வழியைத் திறந்து கொண்டு இரண்டு நபர்கள் உள்ளே வந்தார்கள். பாபி மற்றும் ராஜ். பிந்துவின் எட்டுவருட நண்பர்களாம். 

Bigg Boss

உறைந்திருந்த நிலையில் அவர்களைப் பார்த்த ஆச்சர்யத்தில் பிந்துவின் கண்களும் முகமும் ஒரு கதகளி ஆட்டத்தையே நிகழ்த்திவிட்டது. தெலுங்கு வாசனையுடன் ‘என்ன எப்படியிருக்கீங்க? உன்னைப் பார்க்க ஹைதராபாத்ல இருந்து வந்திருக்கோம். நீ என்னடான்னா பேசாம உட்கார்ந்திருக்க. உனக்கு பிடிச்ச ஸ்வீட் கொண்டு வந்திருக்கோம். ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் வந்தோம்” என்றெல்லாம் வந்தவர்கள் பாசமழை பொழிய அதற்கும் மேல் தாங்காமல் பாபியை அணைத்துக் கொண்டார் பிந்து. “எவ்ளோ முயற்சி பண்ணினேன். என்னால் தாங்க முடியலை.” என்று நெகிழ்ந்தார். “எங்களால் முடிஞ்சது.. உன்னை நீச்சல் குளத்தில் தள்ளிவிடலாமென்று வந்திருக்கிறோம்” என்று கலாட்டா செய்தார்கள் நண்பர்கள். 

அனைவருக்கும் உறைந்த நிலை விலக்கப்பட்டதும் எல்லோரிடமும் உற்சாகமாகப் பேசினார் பாபி. ‘பிந்து உங்களை காதலிக்க முயற்சி செய்வதைப் பார்த்தேன்” என்றார் ஹரிஷூடம். ஆரவ்வின் புகழ் ஹைதராபாத் வரை பரவியிருக்கிறது. அங்கு அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்களாம். எனில் ஆரவ் தெலுங்குப் பட ஆக்ஷன் ஹீரோவாகி விடலாம். ‘ரேய்…. சம்ப்பேஸ்தானுரா…” 

Bigg Boss

Task-ல் இருந்து விலகியதால் பிந்துவுக்குத் தண்டனை. ஆனால் அவர் வேறு எவரையாவது நாமினேட் செய்யலாமாம். பிந்துவின் மீது பிக் பாஸிற்கு ஏன் தனி கரிசனம்? பிந்துவிற்குப் பதிலாக நீச்சல் குளத்தில் குதிக்க தியாகவுள்ளத்துடன் ஜூலி முன்வந்தார். அவரைத் தள்ளி விட்ட பிந்துவின் தோழி பாபி, அதற்காக நன்றியும் மன்னிப்பும் கேட்டது அடிப்படை நாகரிகத்தின் வெளிப்பாடு. 

**

அடுத்த task. வாக்குமூல அறைக்கு தனித்தனியாக செல்லும் போட்டியாளர்கள் அங்கிருக்கும் தாள்களில் ஒவ்வொரு போட்டியாளரைப் பற்றியும் ஒரு வார்த்தையில் மதிப்பீடு செய்து எழுத வேண்டும். அவ்வாறே எழுதி அந்தச் சீட்டுக்களை காமிராவின் முன் காட்டினார்கள். ஒரே கணம் மட்டுமே அந்தச் சீட்டுக்களை பார்க்க முடிந்தது. 

ஒவ்வொரு போட்டியாளரைப் பற்றியுமான மற்றவர்களின் மதிப்பீடுகள் தொகுக்கப்பட்டு கார்டன் ஏரியாவின் பல இடங்களில் ஒளித்து வைக்கப்படும். அதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்து எடுத்தார்கள். அவரவர்களின் சீட்டுக்களை பரஸ்பரம் தந்தார்கள். 

பிறகு வரவேற்பறையில் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிய மதிப்பீடுகளை தாங்களே வாசிக்க வேண்டும். விதம் விதமான அபிப்ராயங்கள். சிலவற்றை எளிதில் யூகிக்க முடிந்தது. 

தன் முறை வரும் போது ஜூலி ஒரு அபிப்ராயத்தை வாசிக்க மறுத்து விட்டார். பிறகு பிக்பாஸ் வற்புறுத்த ‘hyper’ என்கிற மதிப்பீட்டை வேறுவழியின்றி வாசித்தார். ஜூலி வாசிக்கும் போது ஆர்த்தி எரிச்சலூட்டும் ஒலியை எழுப்பினார். ஜூலியின் ஆட்சேபத்திற்குப் பிறகும் ஆர்த்தி அவ்வாறு தொடர்ந்து செய்தது அநாகரிகமானது. (Hyper என்று எழுதியது சுஜா என்பது பிறகு தெரிந்தது. உரையாடலின் இடையில் தன்னிச்சையாக அவரே சொல்லி விட்டார்).

**

இம்முறை வந்தது ஹரீஷின் பெற்றோர். ஹரீஷின் தந்தை இளமையாக இருக்கிறார். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பேட்டர்னை பிக்பாஸ் சொல்லித் தந்தார் போலிருக்கிறது. ‘ஏன் யாரும் எங்களிடம் பேச மாட்டேன்றீங்க?’ என்றபடி நுழைந்தார் ஹரீஷின் தந்தை. சிநேகனுக்கு முன்பே பழக்கமாம். “என்ன கவிஞரே… என்னை அடையாளம் தெரியலையா?’ என்று கேட்க taskதான் முக்கியம் என்பது போல் அமர்ந்திருந்தார் சிநேகன். 

Bigg Boss

படுக்கையறையில் படுத்திருந்த ஹரீஷிடம் ‘டார்லிங்.. டார்லிங்’ என்று அழைத்தபடி வந்தார் ஹரீஷின் அம்மா கல்யாணி. ‘என்னடா … அப்பா வந்திருக்கேன். கம்னு படுத்திருக்க” என்று தன் பங்கிற்கு வெறுப்பேற்றினார் தந்தை.  வாய்க்குள்ளேயே முனக வேண்டிய கட்டாயம் ஹரீஷிற்கு. ஆரவ்வையும் பிரத்யேகமாக விசாரித்தார் ஹரீஷின் தந்தை. மற்றவர்கள் செய்ததால் வேறு வழியில்லாமல் அதே பாணியில் தன் விரதத்தைக் கலைத்த ஹரீஷ் தன் பெற்றோரைக் கட்டியணைத்துக் கொண்டார். 

அனைவரையும் உற்சாகமாக விசாரித்தார் ஹரீஷின் தந்தை. நீச்சல் குளத்தில் இருந்து வந்த ‘பழைய நண்பனான’ சிநேகனை பிரத்யேகமாக விசாரித்தார். ஹரீஷின் தந்தையின் வயதுள்ளவருக்கு சிநேகன் நண்பன் என்றால், சிநேகன் ரொம்…… ப சீனியர் போலிருக்கே. மகனை தனியாக அழைத்த ஹரிஷீன் தாய்,.. ‘காலைல எழுந்தவுடனே டான்ஸ் ஆடு. உள்ளே தனியா ஆடாத. வெளியில் வந்து ஆடு” என்று ரகசிய டிப்ஸ் தந்தார். மகன் ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிற தாயுள்ளம். ஹரீஷ் தனது task-ல் இருந்து விலகியதால் அவருக்கு தண்டனை தர உத்தேசிக்கப்பட்டது. வில்லங்கமாக ஏதும் இல்லை. அவருடைய தந்தை மகனை விதம் விதமான போஸில் செதுக்க வேண்டுமாம். குறும்புடன் அவர் அதைச் செய்ததும் மற்றவர்களிடமிருந்து உற்சாகமாக விடைபெற்றனர் ஹரிஷீன் பெற்றோர். 

வந்திருந்த உறவினர்கள் அனைவரும் பொதுவாக இயல்பாகவும் குறும்பான நகைச்சுவையுணர்வுடன் நடந்து கொண்டது மகிழ்ச்சி. நெகிழ்ச்சியாக அழும் ‘அழுகாச்சி’ சீன்கள் இல்லாமலிருந்தது ஆறுதல். உள்ளுக்குள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இயல்பாக நடந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு. 

**

அடுத்த task ‘அமைதிக்குப் பெயர்தான் சாந்தி’யாம். மனிதர்களை பூந்தியாக ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது. அதன்படி வீட்டின் போட்டியாளர்கள் இரண்டு அணியாகப் பிரிக்கப்படுவார்கள். ஒவ்வொரு அணியும் தங்களிடமிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். 
கார்டன் ஏரியாவில் போடப்பட்டிருக்கும் இரண்டு சேர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த இரு நபர்களும் அமர வேண்டும். அவரவர்களின் எதிர் அணி, சேர்களில் அமர்ந்திருக்கும் நபரை கிண்டல், தொந்தரவு செய்து சேரிலிருந்து எழுந்திருக்கச் செய்ய முயற்சிக்க வேண்டும். தோற்ற அணியிலிருந்து ஒருவர், வெளியேற்றத்திற்கு நேரடியாக தகுதியாவார். 

மனித உடல்களின் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான அந்த task துவங்கியது. கணேஷின் முகத்தில் சோப்பு நீரை  சிநேகன் ஆவேசமாக விசிறியடிக்க “தலையில் ஊத்துங்க.. அது ஓகே… கண்ணில் ஊத்தாதீங்க.. நீங்க செய்யறது தப்பு சிநேகன்” என்று கணேஷ் கோபப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் மனிதர் கோபப்படுவது இது இரண்டாவது முறை என நினைக்கிறேன். ஓவியா கார்ப்பெட்டை இழுத்தபோது கோபித்துக் கொண்டது முதல்முறை. 

“இந்த task-க்கிற்காக நான் குருடாக முடியாது. கண்ல நல்லா பட்டுடுச்சு.’ என்று அவர் வருத்தப்பட்டது நியாயமானது. மனித உடலின் பாகங்களுக்கு சேதம் ஏற்படாமல் இந்த taskகள் அமைக்கப்பட வேண்டும் என்று நேற்றைய கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன். உடனே மன்னிப்பு கேட்ட சிநேகன் பிறகு தன் முறையை மாற்றிக் கொண்டு நீரை தலையில் ஊற்றினார். “நான் சொன்னேன்ல.. அப்படிச் செய்யாதீங்கண்ணே...” என்று சிநேகனிடம் சொன்ன சக்தி… ஒண்ணுமில்ல… உங்க கண்ணுக்கு ஒண்ணும் ஆகவலை” என்று இரண்டு பக்கமும் கோல் போட்டார்.

Bigg Boss

போட்டியாளரின் மீது மிளகாய்ப் பொடி கலந்த நீரை ஊற்றுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள் போலிருக்கிறது. வையாபுரி அது வேண்டாம் என்று சொல்லியிருந்தார் போல. தவறுதலாகவோ அல்லது திட்டமிட்டோ சிநேகன் அந்த நீரை கணேஷின் மீது ஊற்ற, பதறிப் போனார் வையாபுரி. ‘நான் அதை ஊத்த வேண்டாமின்னு சொன்னேன்ல.. எப்படியாவது ஜெயிச்சுட்டுப் போங்க..’ என்று பக்கெட்டை விசிறியடித்து விட்டுச் சென்றார். நியாயமான கோபம். பிறகு நல்ல தண்ணீரை கணேஷின் மீது ஊற்றினார்கள். என்றாலும் தன் கண்கள் பாதிக்கப்பட்டதோ என்கிற பதற்றத்தில் இருந்தார் கணேஷ். சக்தி வழக்கம் போல ‘எனக்குத் தெரியாது” என்று நழுவியவர் “ஆனா சிநேகனுக்கும் இது தெரியாது” அவரையும் காப்பாற்றினார். சிவப்பு நிறத்தில் இருக்கும் நீரைப் பார்த்தாலே தெரியாதா என்ன?

கணேஷை விடவும் ஆர்த்தியின் நிலைதான் மிகவும் பாவம். வீடு கழுவிய தண்ணீர், குப்பை, நுரை ஸ்ப்ரே.. என்று என்னெனத்தையோ போட்டார்கள். அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் உடல் முழுவதும் மறைந்தது. ‘தலையில் முட்டை உடைய மாட்டேங்குதே’ என்று கவலைப்பட்டார் ஆரவ். தண்ணீரை ஊற்றிய போது ஆரத்தியின் உடல் முழுவதும் குளிரால் நடுங்கியது. பார்க்கவே பயமாகவும் பரிதாபமாகவும் இருந்தது. என்றாலும் ஜெயிக்க வேண்டும் என்கிற பிடிவாதத்துடன் அமர்ந்திருந்தார் ஆர்த்தி. “யார் யாருக்கு பழிவாங்கணுமோ அப்புறம் பழிவாங்குவேன்’ என்று அந்த நிலையிலும் சபதமெடுத்தார். அவர் காதுக்குள்ளில் நுரை அப்பியிருந்தது. அதனால் பாதிப்பு ஏதும் ஏற்படக்கூடாதே என்று கவலை தோன்றியது. 

Bigg Boss

போட்டியில் வெல்ல வேண்டும் என்கிற ஆவேசம் வெறியாக மாறிய தருணம் என்று அதைச் சொல்லலாம். எவரையாவது நாம் அடிக்கத் துவங்கி, அவர் பலவீனராக இருந்தாலும் கூட, அடிக்கும் உற்சாகத்தில் நம் ஆழ்மனதிலுள்ள மிருக இச்சை கிளம்பி, அவரை இன்னமும் அதிகமாக அடிக்கச் சொல்லுமாம். காவல்துறையினர் அதிகம் அனுபவிக்கும் குரூரமான இன்பம் இது. போட்டியாளர்களுக்கு அது போன்ற காட்டுமிராண்டித்தனமான இச்சை உள்ளுக்குள் இருந்து கிளம்பியிருக்க வேண்டும் போல. 

இதற்கிடையில் சோதனையாக மழை பெய்யத் துவங்கியது. கணேஷூம் ஆரத்தியும் பிடிவாதமாக அமர்ந்திருந்தார்கள். ‘அய்யோ.. வந்துருங்க…. என்று எல்லோரும் வற்புறுத்தியும் அவர்களின் பிடிவாதம் தளரவில்லை. இதில் மிகையாக பதறியவர் ஜூலி. இடியுடன் மழை பெய்யத் துவங்கியுடன் இன்னமும் மிகையாக பதறியவர் ஒருநிலையில் ‘அவர்களைக் காப்பாத்துங்க’ என்று மாதாவிடம் மண்டியிட்டு கண்ணீருடன் பிரார்த்தனை செய்யத் துவங்கி விட்டார். 

ஜூலியின் இந்த நடவடிக்கையை இளகிய மனதுடன் கூடிய மனிதநேயம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. தன் மீது கவனமும் அனுதாபமும் உண்டாக இந்த விஷயத்திலும் அவர் நடிப்பார் என்று சொல்லத் தோன்றவில்லை. அவரது பிரார்த்தனை உண்மை என்றால் இதுவரையான ஜூலியின் அத்தனை பிழைகளையும் மன்னிக்கலாம். அத்தனை உருக்கமான பிரார்த்தனை. பிறகு மழையில் நனைந்து கொண்டு பாடல் பாடி கணேஷை உற்சாகப்படுத்தியது சிறப்பு. 

ஆனால் இன்னொன்றும் சொல்ல வேண்டும். சிக்கலான தருணங்களில் அதிகம் பதற்றப்படுவதும் மிகையாக கத்துவதும், சூழலை இன்னமும் கடினமாக்கும் என்பதை ஜூலி புரிந்து கொள்வது நல்லது.  

“ஆடியன்ஸ் நம்மைப் பார்த்தா என்ன நினைப்பாங்க” என்று கவலைப்பட்டார் வையாபுரி. “பார்த்தா பார்க்கட்டும்’ என்று பொங்கினார் ஜூலி. “இங்க இருக்கிற நிலைமை அவங்களுக்குப் புரியாம இருக்கலாம். மழைதானே பெய்யுது. ஏன் எந்திரிச்சி வந்துட்டாங்க’ன்னு தோணலாம், இல்ல பாவம்-னும் தோணலாம்” என்றார் ஹரீஷ். ‘அதில்ல.. நாம எதை எதையோ ஊத்தினோம் இல்லையா..அதை தப்பா நெனப்பாங்களா’ என்றார் வையாபுரி. 

ஹரீஷ், ஒரு விஷயம், குரூரமான மனோபாவத்தினாலோ அல்லது எந்தவொரு நிர்ப்பந்த்தினாலோ மற்றவர்களுக்கு உடல்ரீதியான கொடுமை செய்து கொண்டிருக்கிறவர்களுக்கு வேண்டுமானால் தாங்கள் செய்து கொண்டிருப்பதன் குரூரத்தை அந்தக் கணத்தில் உணர முடியாமல் இருக்கலாம். ஆனால் பார்வையாளர்களுக்கு அதன் கொடுமை பல சதவீதங்களில் பெருகி பாதிக்கப்பட்டவரின் மீது அனுதாபமும் கொடுமையை இழைக்கிறவரின் மீது கோபமும் ஏற்படுத்தும். எனவே போட்டியாளர்களின் சிரமங்களை எங்களால் நன்றாகவே யூகிக்க முடிகிறது. 

அடாது மழை பெய்தாலும் விடாது அமர்ந்திருந்தனர் போட்டியாளர்கள். பிறகு எல்லோரும் வற்புறுத்தவே, அவர்கள் தந்த ஆலோசனையின் படி ஆர்த்தியும் கணேஷூம் இணைந்தபடி எழுந்தது சிறப்பான முடிவு. 

Bigg Boss

**

“வீடு கழுவுன தண்ணியெல்லாமா ஊத்துவீ்ங்க.. உடம்பெல்லாம் அரிக்குது” என்று ஆதங்கப்பட்ட ஆர்த்தி, ‘யாரு தலைல முட்டையை உடைச்சது? ஜூலியா.. பழைய பகையை தீர்த்துக்கிட்டா” என்றார். அந்த விஷயத்தை போட்டுக் கொடுத்த சுஜா ‘அவங்களுக்குத் தெரியல. தொடக்கூடாதுன்றதால. தூரமா நின்னு ஓங்கி அடிச்சிருப்பாங்க. என்றவர், ‘அவங்க தெரியமாப் பண்ணிடறாங்க. அதனாலதான் hyper’ன்னு சொன்னேன்’ என்று இரண்டு விதமாகவும் பேசினார். 

கணேஷின் கண்களில் மருந்து விட அவர் சற்று ஓய்வாக படுத்திருந்து எழுந்தார். எல்லோரும் சற்று கவலையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜூலி கணேஷிற்கு உதவி செய்து கொண்டிருக்கும் போதே வீட்டின் விளக்குகள் அணைந்தன. 

நாளைய பகுதியைக் காட்டினார்கள். உருக்கமான ஒரு பாடலுக்கு எல்லோரும் கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்தார். ‘யார் சிறப்பாக அழுகிறார்கள்?’ என்கிற task போல. 

Bigg Boss

‘மனித உணர்வுகளின் மீது ஆடப்படும் சூதாட்டம்’ என்று இந்த நிகழ்ச்சியைப் பற்றி பல முறை நான் எழுதிக் கொண்டிருப்பதை பிக் பாஸ் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார். நகைச்சுவை சார்ந்த பகுதிகள், விளையாட்டுக்களின் உற்சாகம் நமக்கும் தொற்றுகிறது. அதைப் போலவே மனித மனங்களின் குருரமான பகுதிகளை வெளிக்கொணரும் விளையாட்டுக்கள், அவை விளையாட்டு என்று தெரிந்தாலும் நம்மைப் பாதிக்கிறது. இது சார்ந்த எச்சரிக்கையையும் கவலையையும் பலமுறை கூறி விட்டோம். 

இந்த நிகழ்ச்சி இன்னமும் கடுமையாகப் போகும் சூழலில் என்னெ்னன நடக்குமோ என்று கவலையாக இருக்கிறது.  பேசாமல் நாம் freeze ஆகி அமைதியாக இருந்து இதைப் புறக்கணிப்பது கூட ஒருவகையில் நல்ல தீர்வாக இருக்கும் போலிருக்கிறது.

 

இது ஒரு புறமிருக்க,  இவற்றையெல்லாம் பார்க்கும் சிறார்கள், விளையாட்டுக்காக தங்களின் இடையே இது போன்ற போட்டிகளை நடத்திக் கொண்டால் அதைவிடவும் ஆபத்து வேறொன்றுமில்லை. கலாசாரக் கண்காணிப்பு, அபத்தமான தணிக்கைமுறைகள் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உள்ளடக்கம் பற்றிய கண்காணிப்பும் தணிக்கையும் தேவையோ என்று தோன்றி விட்டது. குழந்தைகள் உட்பட வீட்டின் வரவேற்பறையில் அனைவரும் புழங்கக்கூடிய prime time-ல் இது ஒளிபரப்பாவதால், நிகழ்ச்சியின் வடிவமைப்பாளர்கள் இது சார்ந்த சுயபொறுப்புடன் இயங்குவது நல்லது.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/101534-dont-let-your-children-to-watch-bigg-boss---bigg-boss-tamil-updates-day-73.html

Link to comment
Share on other sites

'பிக் பாஸ்' வீட்டுக்குள்ள நடக்கிறதெல்லாம் உண்மையா?'' ஸ்பாட் விசிட் அனுபவம் சொல்கிறார் வையாபுரி மனைவி #VikatanExclusive

 

பிக் பாஸ் வையாபுரி

"அவர் டாஸ்க் செய்ய முடியாம கஷ்டப்படுறதைப் பார்த்து நானும் கலங்கியிருக்கேன். வீட்டுக்கு வந்திடணும்னு நினைச்சிருக்கேன். ஆனா, இப்போ என் வீட்டுக்காரரே ரொம்ப உற்சாகமாகி டாஸ்க் செய்ய ஆரம்பிச்சிருக்காரு. அதைவிட, ரெண்டு மாசத்துக்குப் பிறகு அவரை நேரில் சந்திச்சுட்டு வந்த மகிழ்ச்சியில் ஃப்ரீஸ் ஆன மாதிரி இருக்கேன்" எனப் புன்னகைக்கிறார் வையாபுரியின் மனைவி ஆனந்தி. 'பிக் பாஸ்' வீட்டுக்குள் தன் கணவரைச் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டு வந்த தருணங்களைப் பகிர்கிறார். 

"என் வீட்டுக்காரர் சொல்லிட்டே இருக்கிற, என் அக்கா பொண்ணு காயத்ரியின் கல்யாணம் திங்கள்கிழமை நடந்துச்சு. அதனால், நானும் என் பொண்ணு ஷிவானியும் சனிக்கிழமை நைட்டு திருப்பூருக்குக் கிளம்பினோம். கல்யாண வீட்டுல எல்லோருமே என் வீட்டுக்கார் பற்றித்தான் கேட்டாங்க. அவர் கல்யாணத்துக்கு வரலைங்கிறதை பெரிய குறையா எல்லோரும் ஃபீல் பண்ணினாங்க. ரெண்டு நாள் திருப்பூர்ல தங்கினதால், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்க்க முடியலை. அந்தச் சமயம் கல்யாணத்துக்கு வராத என் பையன் ஷ்ரவன், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்த்துட்டு, சில விஷயங்களை போன் மூலமாகச் சொன்னான். 'அப்பா இந்த வாரம் தலைவராகிட்டார். அதனால், இந்த வாரமும் அவர் வெளியே வர வாய்ப்பில்லை'னு சிரிச்சுகிட்டு சொன்னான். 'இந்த வாரமும் அவரை நேரில் பார்க்க முடியாதா?'னு மனசுக்கு கஷ்டமாக இருந்துச்சு. 

பிக் பாஸ் வையாபுரி

கல்யாண நிகழ்ச்சியை முடிச்சுட்டு, திங்கள்கிழமை ஈவ்னிங் சென்னைக்குக் கிளம்பினேன். 'நாளைக்கு நீங்க ஷூட்டிங் வரணும்'னு விஜய் டிவியிலிருந்து போனில் சொன்னாங்க. சென்னைக்கு வந்ததும் நானும் பிள்ளைங்களை கூட்டிட்டு 'பிக் பாஸ்' நடக்கும் செட்டுக்குப் போனேன். முதல்ல என்னை மட்டும் வீட்டுக்குள்ளே போகச் சொன்னதால், பிள்ளைங்களை விடமாட்டாங்கனு நினைச்சேன். அப்புறமா, அவங்களை கன்ஃபெக்‌ஷன் ரூம் வழியா வீட்டுக்குள்ளே வரவெச்சாங்க" என்கிறார் ஆனந்தி. 

இரண்டரை மாசத்துக்குப் பிறகு கணவரைச் சந்தித்த உற்சாகம் முகம் முழுக்க ஜொலிக்க தொடர்கிறார். "போட்டியாளர்களை ஃப்ரீஸ் செய்யும் டாஸ்க் என்பதால், என் வீட்டுக்காரரை ஃப்ரீஸ் பண்ணிட்டாங்க. அந்தச் சமயம் என்னை வீட்டுக்குள்ளே விட்டாங்க. நான் அவர் பக்கம் போனேன். 'வையா'னு பல முறைச் சொன்னேன். டாஸ்க்ல இருந்தவர், என்னை திரும்பிப் பார்க்கலை. 'நான் முக்கியமா; டாஸ்க் முக்கியமா?'னு கோபமா கேட்க, டாஸ்கை கைவிட்டுட்டு என்கூடப் பேசினார். ரெண்டரை மாசத்துக்குப் பிறகு பார்க்கிறதால், என்னைக் கட்டிப்பிடிச்சு நெகிழ்ந்தார். நானும் ரொம்பவே ஃபீல் பண்ணினேன். எனக்கு ஸ்வீட் ஊட்டிவிட்டு, நிறைய கேள்வி கேட்டார். வெளியில் நடக்கும் எந்த விஷயத்தைப் பத்தியும் சொல்லக்கூடாதுன்னு நிகழ்ச்சிக்காரங்க சொல்லியிருந்ததால், அவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் சமாளிச்சேன். கல்யாணம் பற்றி கேட்டார். 'நல்லபடியா நடந்துச்சு. எல்லோரும் உங்களை கேட்டாங்க'னு சொன்னேன். அப்புறம் அவர்கூட கொஞ்ச நேரம் பேசின நிலையில, என்னை கிளம்பச் சொல்லிட்டாங்க. அப்புறம் பிள்ளைங்க வீட்டுக்குள்ள வர, மீண்டும் என்னையும் அனுப்பினாங்க.

பிக் பாஸ் வையாபுரி

டாஸ்கை மீறி என்னோடு பேசினதால், டாஸ்கில் ஃபெயில் ஆயிட்டார். அதுக்கு தண்டனையா நானும் பிள்ளைங்களும் அவரை நீச்சல்குளத்தில் தள்ளிவிட்டோம். கலகலப்பா இருந்துச்சு. அப்புறம், அவருடனும் சக போட்டியாளர்களுடனும் 20 நிமிஷம் சிரிச்சுப் பேசினோம். நான் பாட்டுப் பாடினேன். பிள்ளைங்க டான்ஸ் ஆடினாங்க. போட்டியாளர்கள் எல்லோருமே எங்ககிட்டே அன்பாகப் பேசினாங்க. அங்கே எல்லோருமே வீட்டு உறவினர்களை பிரிஞ்சு வருத்தத்தில் இருக்காங்கனு புரிஞ்சுது. கணவரைப் பார்த்த உற்சாகத்தில் வீட்டுக்குள்ளே இருக்கும் விஷயங்களை பெருசா கவனிக்கலை. ஆனா, பிள்ளைங்க அந்த வீட்டுல கிச்சன், பெட்ரூம், கன்ஃபெக்‌ஷன் ரூம்னு எல்லா ஏரியாவையும் பார்த்துட்டு வந்து அதைப் பற்றி சொன்னாங்க" என்கிற ஆனந்தி, தன் கணவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பற்றியும் சொல்கிறார். 

பிக் பாஸ் வையாபுரி

 

"தான் வீட்டுக்குப் போகணும்னு இத்தனை நாளா சொல்லிட்டிருந்தவர், இப்போ, 'நூறு நாளும் இங்கே இருப்பேன்'னு என்கிட்டே மகிழ்ச்சியா சொன்னார். இவ்வளவு தூரம் கான்ஃபிடென்டா அவர் பேசுறது, நல்ல மாற்றம்தான். முன்னாடியெல்லாம் யார்கூடவும் சரியா பேச மாட்டார். அடிகடி கோபப்படுவார். இப்போ எல்லோரோடும் அன்பும் பாசமும் காட்டும் வையாபுரியா மாறியிருக்கார். இந்த மாற்றத்துக்காக நானும் பிள்ளைங்களும் காத்திருந்த காலங்கள் பல வருஷம். 'பிக் பாஸ்' வீட்டில் டாஸ்க் செய்யவும் முடியாமல், எங்களையும் பிரிஞ்சு இருக்காரே, சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வரணும்னு நானும் நினைச்சுகிட்டே இருப்பேன். ஆனா, இப்போ அவர் ரொம்பவே உற்சாகமாகவும் தைரியமாகவும் இருக்கிறதால், நூறு நாள்கள் இருந்து கம்ப்ளிட் பண்ணணும்னு வேண்டிக்கிறேன். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில நடக்கிறதெல்லாம் உண்மையா? விளம்பரத்துக்காக செய்வாங்களோன்னுகூட பலரும் எங்கிட்டயே கேட்பாங்க. உண்மை என்னன்னு எனக்கும் தெரியாமதான் இருந்துச்சு. ஆனா, ரெண்டு நாளைக்கு முன்பு அந்த வீட்டுக்குள்ள போனதுல, அங்க நடக்கிறதெல்லாம் உண்மைதான்; நடக்கிற நிகழ்வுகளை நமக்கு அப்படியே காட்டுறாங்க என்பதைக் கண்கூடப் பார்த்து தெரிஞ்சுகிட்டேன். குறிப்பா, வெற்றி, தோல்வி பற்றி அவரும் சரி, நானும் சரி கவலைப்படலை. சக மனிதர்களிடம் அன்பு காட்டணும். அந்த அன்புதான் நமக்கு உறவுகளையும் நண்பர்களையும் கொடுக்கும்ங்கிறதை அவர் உணர 'பிக் பாஸ்' நிகழ்ச்சி உதவியிருக்கு. அதுதான் முக்கியம்" என நெகிழ்கிறார் ஆனந்தி. 

http://cinema.vikatan.com/tamil-cinema/interview/101576-is-everything-happening-in-bigg-boss-house-is-true---vaiyapuri-wife-speaks-about-spot-visit.html

Link to comment
Share on other sites

சிநேகனின் பாசப் போராட்டமும் கணேஷின் காதல் பசலை நோயும்! 74-ம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss


பிக்பாஸ் வீட்டில் மிக மிக நெகிழ்ச்சியானதொரு சம்பவம் நடந்தது. மனதை உருக்க வைக்கும் காட்சி. பார்த்த எவரும் கண்கலங்காமல் இருந்திருக்க மாட்டார்கள். சிநேகன் தந்தையாரின் வருகை. அந்தக் கிராமத்து முதியவர் தள்ளாடி தள்ளாடி வரும் காட்சியைப் பார்க்கவே அத்தனை நெகிழ்ச்சியாக இருந்தது. 

நேற்றைய தினத்தில் பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் அழுவதைப் பார்த்து இதுவும் ஒரு task-ன் பகுதியோ என்று நினைத்து விட்டேன். அதற்காக இப்போது வருந்துகிறேன்; மன்னிப்பு கேட்கிறேன். இது போல் பல விஷயங்கள் முதலில் வேறு மாதிரியாகக் காண்பிக்கப்பட்டு பிறகு போட்டி என்கிற விஷயம் என்று அறிய நேர்ந்ததால் இதுவும் அப்படியோ என்று தோன்றி விட்டது. விளையாட்டு வினையான தருணம். 

சிநேகனின் அழுகைக்கான காரணம் என்று சமூகவலைதளங்களில் வேறு ஒரு செய்தி வந்து கொண்டிருந்தது. அதைப்பற்றிச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், வதந்திகளையும் மோசமான யூகங்களையும் பரப்புவதில் நாம் எத்தனை குரூரமாக இருக்கிறோம் என்பதற்கான உதாரணம் அது. பொறுப்புள்ள குடிமகனாக நாம் வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயங்கள் அவை. 

சரி, வரிசைக் கிரமமாக நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். 

**

‘போகன்’ திரைப்படத்திலிருந்து ‘டமாலு டூமீலு’ என்ற பாடல் ஒலித்தது. ஆனால், எவரும் நடனமாடும் மனநிலையில் இருக்கவில்லை. கணேஷின் கண்கள் பாதிக்கப்பட்டு இருந்த துயரம்தான் காரணம். ஆரத்தி மட்டும் மெலிதாக அசைந்தார். 

வாக்குமூல அறைக்கு வரவழைக்கப்பட்டார் கணேஷ். அவருடைய கண்கள் சிவந்து மூடியிருந்தன. பார்க்க சற்று கவலையாகத்தான் இருந்தது. “டாக்டர் வந்திட்டிருக்கார்.. அதுவரை கண்ல கைவைக்காதீங்க.. கவனமாக இருங்க’ என்றார் பிக் பாஸ். 

Bigg Boss

கணேஷின் நிலைமைக்கு தான்தான் காரணம் என்கிற குற்றவுணர்வுடன் அழுது கொண்டே இருந்தார் சிநேகன். ‘இது task தானே? யாருக்கு வேணா நடந்திருக்கும். அழாதீங்க” என்று மற்றவர்கள் ஆறுதல் சொன்னார்கள். கணேஷிற்கு ஆறுதல் சொல்லும் வகையில் ‘இன்னிக்கு உங்களுக்கு ஸ்பெஷல் கெஸ்ட் வரலாம்” என்றனர். “அய்யோ.. இந்த நிலைமையில் மனைவி பார்த்தால் அவங்களுக்கு கஷ்டம்’ என்றார் கணேஷ். “இருந்தாலும் டிவில பார்த்துட்டு இருப்பாங்கள்ல. நேரா வந்தா உங்களுக்கும் சந்தோஷம்தானே” என்றனர் நண்பர்கள். பிறகு தன் மனநிலையை மாற்றிக் கொண்ட கணேஷ், குளிர்கண்ணாடியை ஸ்டைலாக மாற்றிக் கொண்டு ‘இப்படி சமாளிச்சுடுவேன்’ என்றார். அப்போதுதான் நமக்கும் சற்று நிம்மதியாக இருந்தது. 

‘சிநேகன் இரவு முழுவதும் அழுது கொண்டே இருக்கிறார், சாப்பிடவில்லை” என்று சொன்னார்கள். ‘சிநேகன் எங்கே இருக்கிறார்?” என்று கேட்ட கணேஷ், பக்கத்தில் இருந்த சிநேகனை இறுக்கமாக அணைத்து “இது சின்ன விஷயம். இது எவருக்கும் நடக்கும்.. கவலைப்படாதீங்க. நான் எப்பவும் சொல்வேன்ல. சிநேகன் வீட்டோட தாய்” என்று பாதிக்கப்பட்ட நிலையிலும் சிநேகனுக்கு ஆறுதல் சொன்னார். சுயநலம், ஜாக்கிரதையான நடுநிலைமை என்ற சில விமர்சனங்களை கணேஷின் மீது சொன்னாலும் பல சமயங்களில் பெருந்தன்மையான கனவானைப் போல நடந்து கொள்வது கணேஷின் மிகப் பெரிய பலம். 

கணேஷ் சமாதானப்படுத்தியும் வெளியே டைனிங் டேபிளில் கண்ணீருடன் அமர்ந்திருந்த சிநேகனை சுஜா செல்லமாக மிரட்டினார். “கவிஞரே.. இது மாதிரி.. யோசிச்சிக்கிட்டு அழுதிட்டே இருந்தா, அவ்ளதான். என்னோட வேற ரூபத்தைப் பார்க்க வேண்டியிருக்கும்” என்றார். ‘இதையே எங்களால பார்க்க முடியலைம்மா” என்றது ஆர்த்தியின் கவுன்ட்டர் டயலாக். “சும்மா.. அழுதிகிட்டு.. இதுக்கப்புறமும் அழுதீங்கன்னா.. அடி உதைதான்” என்றார் சுஜா.. ‘அது ஒண்ணுதான் குறையா இருந்துச்சு. அதையும் கொடுத்திடுங்க” என்றார் ஆர்த்தி. ‘Crazy fellow’ என்றபடி நகர்ந்தார் சுஜா. 

Bigg Boss

**

மதியம் 02.00 மணி. ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ என்கிற உருக்கமான பாடல் ஒலிபரப்பானது. தகப்பனின் பெருமையைச் சொல்லும் இந்தப் பாடல், பாண்டிராஜ் இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில், நா.முத்துக்குமாரின் வரிகளில் “கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற திரைப்படத்தில் உள்ளது. 

எல்லோரும் ‘freeze’ என்கிற கட்டளை வந்தவுடன் உறைந்து நின்றனர். கதவு திறக்கப்பட்டது. தொன்னூறு வயது மதிக்கத்தக்க ஒரு வயதான உருவம் இரு இளைஞர்களின் உதவியோடு, காற்றில் சருகு போல மெள்ள மெள்ள நகர்ந்து வந்தது. ஒலிக்கின்ற பாடலையும் வரும் உருவத்தையும் முடிச்சுப் போட்டு ஏறத்தாழ அனைவருமே கவிஞரின் தந்தை என்று யூகித்து விட்டார்கள். சிநேகன் அத்தனை கதை கதையாக சொல்லியிருப்பார் போலிருக்கிறது. 

பிக்பாஸ் கட்டளையைக் காற்றில் தூக்கிப் போட்டு விட்டு முதலில் ஓடியவர் சுஜா. வாசலில் அமர்ந்திருந்த ஜூலி அசையாமல் அமர்ந்திருந்தார். ஆனால், வாசலில் வரும் தந்தையைப் பார்த்தபடி கலங்கிய நிலையில் இருந்த சிநேகன் உறைந்த நிலையை அதற்குப் பிறகும் தொடர்ந்தது சற்று நெருடல். பிறகு தன்னிச்சையாக அனைவருமே பிக்பாஸின் உத்தரவைத் தூக்கிப் போட்டு விட்டு அந்த வயதான கிழவரை நோக்கி ஓடினர். 

சிநேகனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பின்னணி விவரங்கள் அதிகம் நமக்குத் தெரியவில்லையென்றாலும், ‘உறவுகளிடமிருந்து விலகி பல வருடமாக தனியாகத்தான் வாழ்கிறேன்’ என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல முறை சொல்லியிருக்கிறார். தன்னுடைய ஊர் பற்றிய நினைவுகளையும் சில சமயங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

தந்தையைப் பார்த்ததும் ஓவென்று கதறித்தீர்த்து விட்டார் சிநேகன். அந்த நேரத்தின் மனநிலை உண்மையாகத்தான் இருக்க வேண்டும். குழறலான மொழியில் சிநேகனின் தந்தையும் கலங்கியது மிக உருக்கத்தை ஏற்படுத்தியது. முதியவர்கள் அழும் காட்சியைப் பார்க்க நேர்வது என்பது மிகக் கொடுமையானது. கல் மனதுள்ளவர்கள் கூட கலங்கி விடுவார்கள். அங்கும் அதுதான் நடந்தது. பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருமே அழுது தீர்த்து விட்டார்கள். “யாரும் அழாதீங்க” என்றார் முதியவர்.

Bigg Boss 

கண்கள் பாதிக்கப்பட்டதால் ஒய்வாகப் படுத்திருந்த கணேஷூம் உடனே ஓடி வந்து விட்டார். “உங்களைப் பற்றி ஊரைப் பற்றி சிநேகன் நிறைய சொல்லியிருக்காரு” என்றார். தன் மகனுக்கு இன்னமும் திருமணமாகவில்லையே என்கிற ஏக்கம் பெரியவரின் மனதில் ஆழமானதொன்றாக இருக்கிறது. தகப்பனின் மனது. எனவே அது சார்ந்த விருப்பத்தை பல முறை சொல்லிக்கொண்டிருந்தார். “நாங்களே பொண்ணுப் பார்த்து நிச்சயம் கல்யாணம் பண்ணி வெச்சிடுவோம்” என்று பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் உறுதியளித்தனர். 

“எனக்கு 6 பையங்க.. ஒரு பொண்ணு’ என்றார் பெரியவர். கூடுதலாக குழந்தை பிறந்தால் அதை வளர்க்கச் செலவாகுமே என்று யோசிக்கிற சமகால தலைமுறையைப் போல் அல்லாமல் வீட்டு உறுப்பினர்களின எண்ணிக்கை தன்னிச்சையாகப் பெருகும் முந்தைய காலகட்டம். வாரிசுகளை மட்டுமல்ல வீட்டில் உள்ள மாடுகளையும் கூட தங்களின் செல்வமாகப் பார்க்கும் கிராமத்து மனிதர்கள். ஓர் ஆலமரம் பல்வேறு விழுதுகளுடன் கிளைத்து வளர்வதைப் போலவே தங்களின் குடும்பம் உறவுகளால் இணைக்கப்பட்ட நீண்டதொரு தொடர் சங்கிலியாக நீடிக்க வேண்டும் என்று முந்தைய தலைமுறையினர் விரும்பினார்கள். வறுமை நிறைந்திருந்தாலும் கூட்டுக்குடித்தன முறையின் சந்தோஷம் பிரத்யேகமானது. அத்தனையையும் ‘நாகரிகம்’ என்ற பெயரில் இப்போது மெள்ள மெள்ள இழந்து கொண்டிருக்கிறோம். 

விடாமல் குமுறிக் கொண்டிருக்கும் சிநேகனை இதர உறுப்பினர்கள் ஆற்றுப்படுத்தினர். ‘உங்களைப் பார்க்கத்தானே அவ்ள தூரத்துல இருந்து வந்திருக்காரு. நீங்க அழுதிட்டே இருந்தா எப்படி?” என்ற அவர்கள் “அவங்க பேசட்டும்..” என்று தந்தைக்கும் மகனுக்கும் சற்று தனிமையை ஏற்படுத்திக்கொடுத்தனர். ‘எப்ப வந்தீங்க.. சாப்பிட்டீங்களா?’ என்று விசாரித்தார் சிநேகன். முதியவர் மையமாகத் தலையாட்ட உணவு எடுத்து வரப்பட்டு இருவரும் பரஸ்பரம் ஊட்டிக் கொண்ட காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

Bigg Boss

இந்தச் சூழலைத் தாங்க முடியாத கணேஷ் தனியாக சென்று அழுதார். மற்றவர்கள் சென்று ஆறுதல் சொன்னார்கள். கணேஷ் உள்ளிட்ட மற்றவர்களின் உருக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. அனைவருக்குமே அவரவர்களின் தந்தையின் நெகிழ்ச்சியான நினைவுகள் வந்திருக்கும். அதுபோலவே பார்வையாளர்களுக்கும். எனக்கும் என்னுடைய இறந்து போன தந்தையின் நினைவு வர சற்று கலங்கினேன். இருக்கும் போது ஒருவரின் அருமையை நாம் உணர்வதில்லை. தோல்வியடைந்த மதிப்பெண் வந்த பிறகு தேர்வு எழுதும் துரதிர்ஷ்டமான நிலைமை மனிதர்களுக்கு ஏற்படுகிறது. 

இந்த உணர்ச்சிகரமான தருணத்தைப் பதிவு செய்வதற்காக புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. “எங்கப்பாவிற்கு எழுதப் படிக்கத் தெரியாது. சின்ன வயசுல என்னை கீழயே விடமாட்டார். தூக்கிச் சுமந்து கொண்டே அலைவார். துண்டில் முடிபோட்டு அவர் வாங்கி வரும் தின்பண்டங்களுக்காக இரவில் காத்துக் கிடப்போம். நான் சென்னைக்கு வந்து 20 வருஷம் ஆச்சு. இடையில் நடந்த ஒரு சந்திப்பைத் தவிர அதற்குப் பிறகு இப்பத்தான் அவரைப் பார்க்கிறேன்.  இப்ப செத்துப் போனா கூட எனக்கு சந்தோஷமாக இருக்கும். பிக்பாஸ் டீம் உள்ளிட்ட  உலகத்தில் உள்ள தமிழர்களுக்கும் இதற்காக நன்றி. ஊர்ல கம்பீரமா நடந்த மனுஷன். ரொம்ப கோவக்காரரு. இப்பக் குழந்தை மாதிரி உட்கார்ந்திருக்காரு” என்று நீண்ட உருக்கமான உரையை நிகழ்த்தினார் சிநேகன்.

ரத்தம் சூடாக இருக்கும் இளமைப்பருவத்தில் அதுதரும் தன்னம்பிக்கையில் எத்தனையோ ஆட்டங்களை ஆடுகிறோம். ஆனால், காலம் எனும் ஆசிரியன் வயோதிகம் எனும் மருந்தின் மூலம் நம்மை ஒடுக்கி வைத்து பல விஷயங்களை உணரச் செய்கிறான். நம் கடந்த கால தவறுகள் பலவற்றை சரியாக்கியிருக்கலாமோ என்று அப்போது தோன்றும். ஆனால், அதற்குள் காலம் கடந்து விட்டதே என்கிற நிதர்சனமும் தோன்றும். வாழும் போதே குறைந்த தவறுகளுடன் வாழ்வது இந்தக் குற்றவுணர்வைப் போக்கும் விஷயமாக இருக்கக்கூடும். 

Bigg Boss

சிநேகனின் தந்தையை தம் தந்தையாக பாவித்து ஒவ்வொருவரும் வந்து வணங்கி ஆசி பெற்றது நெகிழ்ச்சியானதாக இருந்தது. ‘உங்க பையனுக்கு நிச்சயம் கல்யாணம் செஞ்சி வெச்சிடுவொம். அதுக்கு நாங்க கியாரண்டி’ என்று உறுதியளித்தனர். ரயில் சிநேகம் மாதிரி பிக்பாஸ் task முடிந்தவுடன் அவரவர்களின் வழியைப் பார்க்காமல் நிச்சயம் அதை செய்வார்கள் என்கிற உறுதியும் உணர்ச்சியும் அவர்களிடம் தெரிந்தது. அப்படியே ஆகட்டும். 

“எனக்கு அப்பா இல்ல.. பிறந்தவுடனே என்னை விட்டுட்டுப் போயிட்டார். உங்க ஆசி வேணும்’ என்று உருக்கமுடன் சொல்லி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் சுஜா. அவரின் கன்னத்தை சிநேகனின் தந்தை பிரியமாக வருடிக் கொடுத்தது உணர்ச்சிகரமான காட்சி. 

‘Freeze’ விளையாட்டு எல்லாம்  இப்போது விளையாடினால் சரியாக இருக்காது என்பதை உணர்ந்த பிக்பாஸ், ‘பெரியவரை அழைச்சிக்கிட்டு எல்லோரும் மெயின் டோருக்கு வாங்க” என்றார். அனைவரும் கூடி முதியவரை வழியனுப்பினர். ‘இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நிச்சயமா ஊருக்கு வருவேன். பார்த்துப் போயிட்டு வாங்க” என்று விடைதந்தார் சிநேகன். 

பொதுவாக அவரவர்களின் உறவினர் சந்திப்பிற்கு சம்பந்தப்பட்டவர் மட்டுமே நன்றி சொல்வார்கள். ஆனால், சிநேகன் தந்தையின் வருகைக்காக அனைவருமே பிக்பாஸிற்கு நன்றி சொன்னது சிறப்பு. 

 

 

Bigg Boss


**

‘கவிஞரே.. எப்ப கல்யாணம்?” என்று ஆளாளுக்கு சிநேகனை கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். ‘இத்தனை தேவதைகள் இருக்காங்களே” என்று கிண்டலடித்தார் ஆர்த்தி. ‘நாங்க நிச்சயமா ஒன்று சேர்ந்து உங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வைப்போம்’ என்றார்கள். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் திருமணம் செய்து குடும்பத்தை விருத்தி செய்ய வேண்டும் என்பது முந்தைய தலைமுறைகளின் ஆதாரமான விருப்பமும். அடிப்படையில் இயற்கையின் நோக்கமும் அதுதான். ஆனால், திருமணம் எனும் நிறுவனத்திற்குள் சென்று சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிற மாற்றுத் தரப்பும் இளைய தலைமுறையிடம் உருவாகிக் கொண்டுவருகிறது. இது அவரவர்களின் முடிவு. 

“இப்ப சந்தோஷமா?” என்றார் சுஜா. ‘இனியும் புரியாத புதிர் மாதிரி இருக்காம இயல்பா இருங்க” என்று உபதேசம் செய்தார். காமிராவை நோக்கிய சிநேகன் பிக்பாஸிற்கு மறுபடியும் நன்றி சொன்னார். “என்ன நடக்குதுன்னே தெரியலை. கனவு மாதிரி இருக்கு. .. இன்ப அதிர்ச்சி… இந்த அரைமணி நேரம் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாததாக இருக்கும். நான் சென்னைக்கு வந்து இருபது வருஷம் ஆச்சு. ஒரேயோரு முறைதான் எங்க அப்பா சென்னைக்கு வந்திருக்கார். அப்பக்கூட கொஞ்ச நேரம்தான் பேசினேன். அதற்கு அப்புறம் இப்பதான். கிராமத்து மனுஷன்.. ஊர்ல ஆடு, மாடு இதையெல்லாம் விட்டுட்டு வந்திருக்காரு.. ரொம்ப நன்றி” 

Bigg Boss

“கவிஞரோட அப்பா வந்தவுடனே எல்லோரும் எழுந்து வந்துட்டோம். அவங்களுக்காக நாம சிந்திய கண்ணீர் உண்மையானது” என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனர். உண்மைதான். உங்களின் உணர்வு பாராட்டத்தக்கது. 

**

“எங்க வீட்ல வந்துட்டு போனப்புறம் இன்னமும் கஷ்டமா இருக்கு. வீட்டுக்குக் கிளம்பிடலாமான்னு இருக்கு. எங்க பெற்றோர் வந்த போது ஷாக்ல இருந்தேன். சரியா பேச முடியலை. நல்லா பேசியிருக்கலாம்னு இப்பத் தோணுது. எங்க அம்மாவோட அம்மா சின்ன வயசுல இறந்துட்டாங்க. எனவே எங்க அம்மாவிற்கு என்மேல ரொம்ப உசுரு. நான்தான் அவங்களுக்கு பையனும் அம்மாவும். ரொம்ப பிரியமா இருப்பாங்க.. அவங்களுக்கு நான்தான் எல்லாமே. அவங்களுக்காக இதுவரைக்கும் உருப்படியா எதுவும் பண்ணதில்லை’ என்றெல்லாம் நெகிழ்ச்சியடைந்தார் ஹரீஷ். “நான் அப்பவே சொன்னேன் இல்லை. உங்க பேரன்ட்ஸ் க்யூட்… நீங்க ஆசிர்வதிக்கப்பட்டவர் ஹரீஷ். இனிமேலாச்சும் அவங்களுக்காக ஏதாவது பண்ணுங்க” என்றார் சுஜா. 

மனிதர்களுக்கு விதம்விதமான தருணங்களில் விதம் விதமான பாடங்கள் கிடைக்கின்றன.

‘நான் வெளில வீடியோல பார்த்து உணர்ந்த விஷயம் வேற. இங்க வீட்டுக்குள்ள வந்தப்புறம் உணர்வது வேற. இப்பத்தான் நல்லா பழகிட்டு வரோம். இந்த வாரம் ஏன் நாமினேஷன் ஆனோம்-னு வருத்தமா இருக்கு. அடுத்தவாரம் கூட ஆகியிருக்கலாம்” என்று வருத்தப்பட்டார் சுஜா. ‘ஆமாம். அந்த விஷயம் கஷ்டமா இருக்கு. இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை’ என்று அறிவித்தால் கூட நல்லாயிருக்கும்” என்று சுஜாவை வழிமொழிந்தார் ஹரீஷ். பிக்பாஸ் காதில் இது நிச்சயம் விழுந்திருக்கும். நல்லது நடக்கும் என நம்புவோம். 

**

நீண்ட நேரம் கழித்து ‘freeze’ விளையாட்டைத் தொடர்ந்தார் பிக்பாஸ். உறைந்த நிலையில் நின்றிருந்த சுஜாவின் மீது ஜூலி தண்ணீர் ஊற்ற முயல.. ‘மகளே.. என் கையில் மாட்டினே.. நீ செத்தே’.. என்று வாய்க்குள் முனகினார் சுஜா. மிகையான எதிர்வினை. 

Bigg Boss

தண்ணீர் பாட்டிலை உயர்த்திக் குடிக்கும் போது அந்த நிலையில் உறைந்து நின்றிருந்தார் ஆரவ். பிந்து அவர் கையிலிருந்த பாட்டிலைப் பிடுங்க முயன்றார். சற்று எரிச்சலானார் ஆரவ். சுஜா உறைந்த நிலையில் இருந்து விலகியதும் பிந்துவின் முதுகில் தண்ணீர் ஊற்றி பழிதீர்த்துக் கொண்டார். ஜூலி freeze ஆனதும் அவரை நிறைய பேர் பழி தீர்த்துக் கொண்டனர். Bean Bag-ஐ அவர் தலையின் மீது கவிழ்த்து ஆளாளுக்கு தர்மஅடி போட்டனர். அடி சற்று பலம்தான் போலிருக்கிறது. ஜூலி வலியால் சற்று முகம் சுளித்தார். பிறகு ஜூலிக்கு விநோதமான அலங்காரமும் நடந்தது. 

பெரியவர்களுக்குள் உள்ள சிறுவர்கள் வெளிப்படும் தருணங்கள் இவை. இவையும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. பெரியவர்களாகவே முறைத்துக் கொண்டு இருப்பதுதான் கொடுமையான வாழ்க்கை. 

**

‘எல்லோரும் லிவ்விங் ஏரியாக்கு வாங்க’ என்று கட்டளையிட்டது இயந்திரக்குரல். ‘எல்லோரும் எழுந்து நில்லுங்க” என்று அடுத்த கட்டளை. (ரொம்ப ஓவராத்தான் இருக்கு) வாக்குமூல அறையில் கணேஷின் மனைவி நிஷா அமர்ந்திருப்பதை காமிரா காட்டியது. கணேஷ் தயாராகி வந்து கொண்டிருப்பதைப் பார்த்த நிஷா கண்கலங்கினார். அதுவும் கணேஷிற்கு கண்பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பார்ப்பது அவருக்கு உருக்கத்தை அதிகப்படுத்துவது இயல்புதான். காலையில்தான் கணேஷ் அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார். 

எல்லோரும் Freeze என்றார் பிக்பாஸ். வாக்குமூல அறையின் வழியாக உள்ளே வந்தார் நிஷா. ‘பொண்டாட்டி வந்துட்டா” என்று வையாபுரி போல கணேஷ் கத்தவில்லையே தவிர, மனைவியைப் பார்த்தவுடனேயே கணேஷ் கண்கலங்கி விட்டார். ‘போய்யா.. வென்று..’ என்று பிக்பாஸின் உத்தரவை தூக்கி எறிந்து விட்டு மனைவியை நோக்கி ஓடி கட்டியணைத்துக் கொண்டார். திருமணமாகி ஒன்றரை வருடம்தான் ஆகிறது போல. அதற்குள் ஏற்பட்ட இந்தப் பிரிவு துரதிர்ஷ்டமானதுதான். நிஷாவும் கண்கலங்கி தன் அன்புக் கணவரை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டார். ஏறத்தாழ சிநேகனின் தந்தை சந்திப்புக்கு ஈடானதாக இதுவும் இருந்தது. ‘பிரிந்தவர்கள் கூடினால் பேசவும் தோன்றுமோ”

Bigg Boss

“ஏதாவது பாட்டுப் போடுங்க பிக்பாஸ். நீங்க டான்ஸ் ஆடுங்க.. ப்ளீஸ்’ என்றார் ஆரத்தி. கணேஷ் தம்பதி ஒப்புக் கொண்டனர். ‘ஒன்றா ரெண்டா .. ஆசைகள்’ என்கிற பாடலை டைமிங்காக போட்ட ஆசாமிக்குப் பாராட்டும் நன்றியும். இயல்பாகவும் அற்புதமாகவும் நடனமாடினர் கணேஷூம் நிஷாவும். அதைப் பார்த்தபடி ஆரவ்வும் ஹரிஷூம் ஆடியது நல்ல நகைச்சுவை. அதிலும் ஹரீஷ் செய்த குறும்பெல்லாம் ரகளையான கலாட்டா. 

தனியாகச் சென்ற தம்பதியினர் அந்நியோன்யமான வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். ‘என்ன இளைச்சுட்டீங்க?” என்று மனைவிமார்கள் காலம் காலமாக கேட்கும் அதே கேள்வியைக் கேட்டார் நிஷா. ‘இங்க கோதுமை உணவு அதிகம்’ என்றார் கணேஷ். ‘உங்களைப் பிரிந்திருக்கிறது கஷ்டமா இருக்கு” என்பதுபோல் சொன்னார் நிஷா. “நீயாவது என்னை காமிரால தினமும் பார்க்க முடியும். ஆனா என் நிலைமையை யோசிச்சுப் பாரு. பார்க்கவே முடியாது. உன் குரலை அன்னிக்கு அனுப்பியிருந்தாங்க. கேட்கும் போது அத்தனை சந்தோஷமா இருந்துச்சு” என்றார் கணேஷ். ஒரு புதிய காதலனின் உற்சாகத்தை அவரிடம் பார்க்க முடிந்தது. சங்க காலத்தில் பிரிவுத் துயரில் வாடும் தம்பதியரில் பெண்ணுக்குப் பசலை நோய் பீடித்தது என்பார்கள். கற்பனையோ உண்மையோ....நினைக்கவே வாத்சல்யமாக இருக்கும். அப்படியான பசலை நோயால் இங்கு கணேஷ் வாடிய கணேஷுக்கு சற்றே காதல் வைட்டமின் ஏற்றியது போல இருந்தது கணேஷ் - நிஷா இடையிலான சந்திப்பு! 

தம்பதியினர் பிரிய வேண்டிய தருணம் வந்தது. “நீங்க யாரைப் பத்தியும் பேசாம இருந்தது நல்ல குணம். எனக்கு சந்தோஷமாக இருந்தது” என்றார் நிஷா. சிறப்பான விஷயம்தான். ஆனால், இதைக் கேட்டு கணேஷ் பழைய யோகா நிலைக்குச் சென்று விடாமல் இருக்க வேண்டும். அன்பான முத்தங்களுடன் பிரியாவிடை பெற்றனர். பார்க்க பரிதாபமாக இருந்தது. 

Bigg Boss

**

கணேஷிற்கு நிஷா கொண்டு வந்த பெரிய அளவு சாக்லேட்டுகளைப் பறித்துக் கொண்ட பிந்து, ‘யாருக்கும் தர மாட்டேன்” என்று ஓடிய படியே சாப்பிட அவரைத் துரத்திக் கொண்டு ஓடினார் ஆரவ். பிறகு அந்த சாக்லேட்டுகளை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்தார் பிந்து. கணேஷிற்கும் தராமல் எவருக்கும் பங்கிடாமல் அம்மணி செய்வது அநியாயம்தான். ஆனால், சாக்லேட் என்றால் அத்தனை பிடிக்கும் போலிருக்கிறது. குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம்தான். 

பிக்பாஸ் வீட்டில் சுஜாவைப் பற்றிய அபிப்ராயம் பெரும்பாலும் மாறியிருக்கிறது போல. ஆரவ்வும் வையாபுரியும் இது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். ‘வரும் போது குழந்தை மாதிரி நடிக்குதேன்னு நெனச்சோம். ஆனா கடுமையா வேலை செய்யறாங்க. சுத்தமாவும் செய்யறாங்க… “என்று சுஜாவின் உழைப்பிற்கு இருவரும் நற்சான்றிதழ் வழங்கினார்கள். சுஜாவின் முன்னால் அல்லாமல் பின்னால் இதைச் சொல்லிக் கொண்டிருந்ததுதான் நல்ல விஷயம். நல்லவிதமாகவும் புறம் பேசலாம். இதை அவர்கள் சுஜாவிடமும் நேரடியாக சொல்லலாம். அவருக்கும் உற்சாகமாக இருக்கும். ஒருவரைப் பற்றி தெரியாமல் முதல் பார்வையிலேயே வெறுக்கக் கூடாது என்கிற பாடம் இதன் மூலம் நமக்கும் கிடைக்கிறது. 

‘தொட்றா பார்க்கலாம்’ என்றொரு task. நேற்றைய நிகழ்ச்சி போல் அதிக வதை இல்லாதது ஆறுதல் என்றாலும் இதிலும் கண்கள் பாதிக்கிற ஆபத்து இருந்தது. 

இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், முகம் மட்டுமே வெளியே தெரியும் அளவிற்கான குழிக்குள் புதைக்கப்படுவர். அதற்கான கூண்டு தயாராக இருந்தது. எதிர் அணியினர் அவரின் முகத்தில் வண்ணப் பொடியை பூச வேண்டும். இரண்டு பேர் அவர்கள் செல்லாதவாறு தடுப்பார்கள். 

சக்தி இதற்கு நடுவராம். (ஓவர்). கணேஷின் கண்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் பார்வையாளர். 

வண்ணப்பொடி பூச வருபவர்களை இயல்பாக தடுப்பதா, அல்லது ஆவேசமாக தள்ளி விடுவதா என்கிற குழப்பம் நீடித்தது. ஹரீஷ் இந்த விஷயத்திற்காக கத்திக் கொண்டே இருந்தார். எவரும் கேட்பதாக இல்லை. வருபவர்களைத் தடுக்கும் விஷயத்தில் சுஜா ஆக்ரோஷமாக செயல்பட்டார். வண்ணம் பூச வருபவர்கள் அவசரத்தில் கண்களில் போட்டு விடும் ஆபத்து இருந்தது. சிநேகனுக்கு அப்படியாகும் ஆபத்து இருந்தது. நல்ல வேளையாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. 

வையாபுரி வருபவர்களைத் தடுக்கும் விஷயத்தில் நிதானம் காட்டினார். வெற்றி பெறுவதை விடவும் மனிதர்களின் பாதுகாப்பு விஷயத்தையே அவர் எப்போதுமே பிரதானமாக கவனத்தில் கொள்கிறார். சிறப்பான விஷயம். 

Bigg Boss

இப்படி உடல் சார்ந்த மோதல்கள் அல்லாமல் சாதாரண சவால்களைத் தந்தால் நன்றாக இருக்கும் என்கிற வேண்டுகோளை பிக்பாஸிடம் வைத்தார் பிந்து. நமக்காக இல்லையென்றாலும் பிந்துவின் உருக்கமான வேண்டுகோளுக்காவது பிக்பாஸ் செவி சாய்க்கலாம். வதை சார்ந்த சவால்கள் இல்லாமலிருக்கலாம். அப்படிச் செய்தால் ஒளித்து வைத்திருந்த சாக்லேட்டுகளின் பகுதியைப் பிந்து உங்களுக்குத் தரலாம். பார்த்து செய்யுங்கள் பிக்பாஸ்.

“போட்டி இனிமேல் கடுமையாகத்தான் இருக்கும்’ என்று பிந்துவின் கோரிக்கையில் மண்ணள்ளிப் போட்டார் ஹரீஷ். 

நிகழ்ச்சி முடியும் நேரம். எல்லோரும் freeze என்றார் பிக்பாஸ். ‘அய்யோ.. பால் கொதிக்குது” என்று பதற்றப்பட்டார் கிச்சனில் நின்றிருந்த சுஜா. என்னவொரு தர்மசங்கடம். வீட்டின் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டன. அனைவரும் இருளில் கிசுகிசுப்பாக சிரித்துக் கொண்டனர். ஒவ்வொருவராக விடுவிக்கப்பட, கார்டன் ஏரியாவில் தனியாக உறைந்து நின்றிருந்த பிந்துவை பயமுறுத்த எண்ணி, போர்வையை மூடிக்கொண்டு சென்றனர். பேய் task-லேயே பயப்படாத பிந்து இதற்கா பயப்படுவார்? ‘என்னையா பயமுறுத்த வர்றீங்க?” என்று அவர் துரத்தியது ஜாலியான கலாட்டா.

இந்த நிகழ்ச்சியின் மீது பல விமர்சனங்கள், கசப்புகள் இருந்தாலும் கூடவே sub-text ஆக பல படிப்பினைகளும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக உறவுகளைப் பிரிவது எத்தனை கொடுமையானது என்பது இந்த இரண்டு நாள்களில் தெரிந்தது. மிட்டாயைச் சப்புவது போல கேளிக்கைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளாமல், சறுக்குகிறவர்களை நோக்கி வசை பாடாமல், நம்மைப் பற்றிய சுயபரிசீலனைகளையும் நிகழத்திக் கொள்வது சிறப்பானதாக இருக்கும்.

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/101649-love-exhibited-by-snehan-and-ganesh-in-biggboss-home---bigg-boss-tamil-updates-day-74.html

Link to comment
Share on other sites

அது எப்படி பிக்பாஸ் வீட்டுக்குள்ள நாள், கிழமைலாம் தெரியுது? 75-ம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்

Bigg_Boss_Baner_11586_10187.jpg

கடந்த நாள்களைப் போல மனித வதை சவால்கள் ஏதுமில்லாமல் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் ஜாலியாக சீண்டிக் கொள்ளும் உற்சாகமான நாளாக இன்று இருந்தது. புயலுக்குப் பின் அமைதி.

‘டார்லிங் டம்பக்கு’ என்கிற பாடலுடன் பிக்பாஸ் வீட்டில் பொழுது விடிந்தது. அம்மா தந்திருந்த டிப்ஸ் காரணத்தினாலோ என்னமோ, ஹரீஷ் வெளியே வந்து முன்னே நின்று உற்சாகமாக நடனமாடினார். பாட்டு முடிந்ததும் ஆரத்தி மட்டும் ‘குட்மார்னிங் பிக்பாஸ்’ என்கிறார். விசுவாசமான போட்டியாளர்.

2_10392.jpg

சிநேகனின் திருமணத்தைப் பற்றி ஆரத்தி உள்ளிட்ட இதர போட்டியாளர்கள் கிண்டலடித்தனர். ஸ்டோர் ரூமில் மணியடித்தது. ஆரவ் சென்று ஒரு தாளை எடுத்து வாசித்தபடியே வந்தார். ‘இன்று எவிக்ஷன் பிராசஸ் இருக்கிறது. எல்லோரும் உடனடியாக லிவ்விங் ஏரியாவிற்கு வரவும்’ என்றவுடன் சுற்றியிருந்தோர் சற்று ஜெர்க் ஆனார்கள். பிறகுதான் அது ஆரவ்வின் குறும்பு என்று தெரிந்தது. பிக்பாஸின் தம்பியாக இருப்பார் போலிருக்கிறது. 

6_10019.jpg

சிகையலங்காரத்தில் இருந்த ஜூலி, ‘என்னவாம்’ என்று விசாரிக்க, ‘எவிக்ஷன் பிராசஸஸாம்’ எல்லோரையும் லிவ்விங் ஏரியாவிற்கு வரச்சொல்றாங்க’ என்று பிந்து சொன்னார். ‘இதை இப்படியே மெயிண்டெயின் பண்ணி கொஞ்ச நேரத்திற்கு ஜூலியை ஓட்டலாம்’ என்ற டெரரான ஐடியாவை சொன்னார் சிநேகன். “கொஞ்ச நேரம்.. என்ன.. மத்தியானம் வரைக்கும் இதைக் கொண்டாடிடுவோம்’ என்று உற்சாகமானார் சக்தி. அதிக வேலை வெட்டியில்லாமல் இப்படி எதையாவது செய்துதான் பொழுதைக் கழிக்க வேண்டிய நிலைமை போட்டியாளர்களுக்கு. 

கழிவறையில் இந்த விஷயத்தை மறுபடியும் சிநேகனிடம் விசாரித்தார் ஜூலி. ‘ஆமாம். நாளான்னிக்கு வரப் போறது வேற. இது ஸ்பெஷலாம்” என்று சஸ்பென்ஸை தக்க வைக்க முயன்றார் சிநேகன். ’75 நாள்ல இப்படிச் சொல்லிட்டாங்களே’ என்று ஆதங்கப்பட்டார் ஜூலி. 

7_10194.jpg

நமக்கு கூட இன்றைக்கு என்ன கிழமை என்பது சட்டென்று மறந்து போகிறது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள், அது எத்தனையாவது நாள் என்பது முதற்கொண்டு அப்போதைய மணி, கிழமை என்பதையெல்லாம் துல்லியமாகச் சொல்கிறார்கள். பிக்பாஸ் வீட்டு நடவடிக்கைகள் தொடர்பாக எழும் பல்வேறு சந்தேகங்களில் இதுவும் ஒன்று. வருடக்கணக்காக தண்டனை பெற்று சிறைக்குச் செல்பவர்களில் சிலர், தாம் உள்ளே வந்த நாள் முதல் ஒவ்வொரு நாளையும் அடையாளங்களால் குறித்து வைத்துக் கொள்வார்களாம். அது போல் செய்கிறார்களோ, என்னமோ. 

8_10352.jpg

சிகையலங்காரம் முடிந்து முக அலங்காரத்திற்கு வந்தார் ஜூலி. அவர் வாயைப் பிடுங்கும் நோக்கத்துடன் கேள்விகளை ஆரம்பித்தார் சுஜா. “பிக்பாஸ் வீட்டிற்கு வந்து மேக்கப் போட கத்துக்கிட்ட. வேற என்னெல்லாம் கத்துக்கிட்ட” என்று நேர்காணல் எடுக்கத் துவங்கினார். 

’பொய் சொல்லக்கூடாது’, ‘எங்கே கலாட்டா செய்யறாங்க, கலாட்டா செய்யலைன்னு தெரிஞ்சக்கற’து, ‘எல்லோரையும் நம்பக்கூடாது’, ‘நான் நானாக இருக்கணும்’, ’மத்தவங்க முடிவை ஏத்துக்கக்கூடாது. அந்த முடிவு என்னுடையதா இருக்கணும்’ என்பது போன்று பல முக்கிய பாடங்களை கற்றதாக சொன்ன ஜூலி, “சில விஷயங்களை திருத்திக்கல. தப்பு செஞ்சா அதுக்கான தண்டனை இருக்கும். அதை ஏத்துக்க நான் தயாரா இருக்கேன். ஆனால் இதுக்காக எங்க அம்மா – அப்பா, ஃபீல் செஞ்சதுதான் கஷ்டமா இருக்கு’’ என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார். 

‘பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போன பிறகு மக்கள் எப்படி பார்த்தாங்க.. செலிபிரிட்டி மாதிரியா?’ என்ற தூண்டிலைப் போட்டார் சுஜா. ‘பொய் சொல்லக் கூடாது’ ன்னு கத்துக்கிட்டேன்’ என்று சற்று நேரத்திற்கு முன் சொன்ன ஜூலி அதை உண்மையிலேயே கற்றுக் கொண்டாரோ, இல்லையோ என்கிற சந்தேகம் நமக்குத் தோன்ற, மக்கள் தனக்கு தந்த வரவேற்பை உற்சாகமாக சொல்லத் துவங்கினார். 

“பெசன்ட் நகர் மாதா கோயில்ல கும்பிட்டுட்டு என் ஃப்ரெண்டு வீட்டிற்குப் போயிட்டு பக்கத்துல இருந்த அடகுக்கடைல மோதிரம் எப்படி இருக்குதுன்னு பார்க்கறதுக்காக போனேன். ஒரு பையன் வந்து ‘நீங்க ஜூலிதானே’ன்னு கேட்டான். (அப்ப மேக்கப் போடலையோ?) ‘ஆமாம்’ னு சொன்னவுடனே சுமார் முந்நூறு, நானூறு பேர் கூடிட்டாங்க. வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போய் என்னென்னமோ கொடுத்தாங்க’ என்று ஆனந்தப்பட்டார். ‘சரியா மறுநாள் பிக்பாஸ் வீட்ல இருந்து கூப்பிட்டாங்க.. வந்துட்டேன்’

“பிக்பாஸ் வீட்ல இருந்து வெளியேத்தினப்புறம் எங்கே போனீங்க?” என்று சுஜா கேட்டதற்கு ‘எங்கேயும் போகலை. ஆனால் மறுநாள் பரணியோட நம்பர் தேடி அன்னிக்கு முழுக்க சுத்தி, அவர் சேப்பாக்கம் ஸ்டேடியம்ல இருக்கறாரு –ன்னு தெரிஞ்சவுடனே அங்க போயி அவர்கிட்ட மன்னிப்பு கேட்டேன்” என்றார் ஜூலி.

9_10255.jpg

“அப்ப நீங்கதானா அது?’ என்று உறுதிப்படுத்திக் கொண்டார் சுஜா. ஆம், இது சார்ந்த வீடியோ ஒன்று அப்போது வைரலானது. முகத்தை மூடிக் கொண்டிருந்ததால் அது ஜூலி அல்ல, வேறொரு நபர் என்றும் சிலர் சொன்னார்கள். ஜூலியின் மீதான மக்களின் கோபம் போய்விடக்கூடாது என்கிற அக்கறை அந்த வதந்தியில் இருந்தது. 

“ஏன் அப்படி தோணுச்சு” என்றார் சுஜா. “பரணி உண்மையாத்தான் இருந்தாரு. என்னை உண்மையாகவே தங்கச்சியா ஏத்துக்கிட்டாரு. ஆனால் அவர் போனறப்புறம்தான் எனக்கு உறுத்துச்சு. அவர் வெளியே போனப்ப, ஏன் சும்மா இருந்தேன்னா, ‘என் கிட்ட சேராதம்மா.. உன்னையும் ஒதுக்கி வெச்சிடுவாங்க”ன்னு சொன்னாரு’ என்றார் ஜூலி.  

தன் மீதுள்ள தவறுகளை நேரடியாக ஒப்புக் கொள்ள வைக்காமல் மனம் விதம் விதமான காரணங்களை உற்பத்தி செய்யும். ஓர் ஆழமான தவறுக்காக, எவ்வித நிபந்தனையும் காரணங்களும் இல்லாமல் நேரடியான மன்னிப்பை கேட்டு விடுவதே சிறந்தது. 

**

பிந்து ஒளித்து வைத்திருந்த சாக்லேட்டை மீட்பதற்காக ஒரு பெரும் படையே களத்தில் இறங்கியது. ‘பிந்துவே ஒரு பெரிய சைஸ் சாக்லேட்தானே, பின்பு ஏன் வேறெங்கோ தேடுகிறார்கள்?” என்று பிந்து ஆர்மியில் உள்ளவர்கள் நினைக்கக்கூடும். ‘என்கிட்ட கிரிஸ்டல் இருக்கு. அதை வெச்சு கண்டுபிடிச்சுடுவேன்’ என்று ஆரவ் பிலிம் காட்டினார். அந்தச் சமயம் பார்த்து பிந்து ‘ப்ரீஸ்’ ஆக மற்றவர்களுக்கு இன்னமும் உற்சாகமானது. “முட்டை வெச்சா தெரிஞ்சுடும்” என்று எவரோ ஐடியா தர, முட்டை எடுத்து வர உற்சாகமாக ஓடினார் ஆரத்தி. யாருக்காவது சூனியம் வைக்க வேண்டும் என்றால் ஆரத்தி படுஉற்சாகமாகி விடுகிறார். முட்டையை அருகில் பிடித்தபடியான போஸில் சிநேகன் உள்ளிட்ட அனைவரும் ‘ப்ரீஸ்’ ஆனார்கள். 

10_10555.jpg

மெயின் டோர் திறக்கப்பட, உள்ளே வந்தவர்கள் யாரென்று தெரியிவில்லை. பிறகுதான் தெரிந்தது ஆரவ்வின் சகோதரர், சகோதரரின் மகன், நண்பன். உள்ளே வரும் விருந்தினர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான டிரெயினிங் தருகிறார்கள் போலிருக்கிறது. “உன்னைத் தேடி அவ்ளோ தூரத்துல இருந்து வந்திருக்கேன், பார்க்கவே மாட்டேன்றியே” என்று ஆரம்பிக்கிறார்கள். “கண்டிப்பா ஒருநாள் லஞ்ச்சுக்கு வீட்டுக்கு வாங்க” என்கிற வசனத்துடன் முடித்து கிளம்புகிறார்கள். (ஏன் டின்னருக்கு வந்தா சோறு போட மாட்டாங்களா)

ஆரவ்வின் சுற்றத்தாரும் அவ்வாறேதான் நடந்து கொண்டனர். எல்லோருக்கும் ‘freeze’ என்பதை அறியாத சுஜா வெளியே இயல்பாக உட்கார்ந்து கொண்டிருந்தார். ‘உங்களுக்கு ‘freeze’ இல்லையா?” என்று கேட்டபிறகுதான் அவருக்கு விஷயம் தெரிந்தது. பிக்பாஸ் இப்போதெல்லாம் நல்ல பிள்ளையாகி விட்டார் போலிருக்கிறது. தண்டனை விஷயத்தில் கடுமையாக இருப்பதில்லை. 

11_10157.jpg

சகோதரரையும் நண்பனையும் பார்த்தவுடன் ஆரவ்விற்கு சிரிப்பு பொங்கியது. ‘மச்சான்’ என்று நண்பர்களுக்குள் அழைத்துக் கொள்வது, அந்த உறவின் பொருளை  நேரடியாக குறிக்காத, ஆனால் அது சார்ந்த அன்பை நெருக்கமாக குறிக்கும் உபத்திரவமில்லாத வார்த்தை. நகரங்களில் ‘மச்சான்’ என்றிருப்பது, கிராமங்களில் ‘மாப்ளே’ என்றாகி விடுகிறது. முன்பு ஒரு குறுகிய வட்டத்தில் இருந்த முறை சார்ந்த உறவு அடையாளங்கள், உறவு சாராத நண்பர்களுக்கும் விரிவடைந்திருப்பது ஒரு கலாசார பரிணாமம்.

தன் விரதத்தைக் கலைத்து உடனடியாக வந்தவர்களை கட்டிப்பிடித்தார் ஆரவ். சகோதரரை விடவும் அதிக நெருக்கத்தைக் காட்டியது ஆரவ்வின் நண்பன் ரஞ்சித்தான். வெவ்வேறு சமூகங்களை, மதங்களைச் சார்ந்தவர்கள் நட்பு என்கிற உணர்வில் உறவுகளை விடவும் அதிகமாக பின்னிப் பிணைந்திருக்கிறார்கள். எந்த மத அரசியலாலும் இந்த அடிப்படையான ஒற்றுமையைக் கலைக்க முடியாது. 

‘வெளியே இந்த நிகழ்ச்சியைப் பற்றி என்ன பேசிக்கறாங்க’ என்று அறிய முயன்றார் ஆரவ். ‘அடிச்சுக்கூட கேப்பாங்க.. சொல்லிடாதீங்க’ என்று ஒவ்வொருவருக்கும் சொல்லியனுப்பிருப்பாங்க.போல’ ஆரவ்வின் சகோதரர் மெளனச்சிரிப்புடன் அதற்கு தலையசைத்தார்.

12_10504.jpg

ஆரவ்வின் இளமைப்பருவம் குறித்த நினைவுகளை அவரது சகோதரர் பகிர்ந்து கொண்டார். ‘எல்கேஜி வயசுலே இருந்தே பாடிட்டே இருப்பான். பாத்ரூம்ல பாட ஆரம்பிச்சான்னா… பக்கத்து வீட்ல சொல்வாங்க’ என்ற அவரை இடைமறித்து ‘பையன் பாத்ரூம் போயிட்டானா…” என்று மொக்கை ஜோக் அடித்தார் வையாபுரி. என்றாலும் அப்போது அது தேவையாகத்தான் இருந்தது. ‘எல்லோரும் freeze’ என்றவுடன் தாம் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டதை உணர்ந்த ஆரவ்வின் நண்பர், ‘உன்னை நீச்சல் குளத்துல தள்ள முடியலையே” என்று ஆதங்கப்பட்டார். நண்பேண்டா… 

வந்த விருந்தினர்கள் விடைபெற்றுக் கொண்டனர். பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே இடத்தில் அடைந்து சலிப்புற்றிருப்பதால், எந்தவொரு புதிய நபர் வீட்டிற்குள் வந்தாலும் உற்சாகமாகி விடுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு கூடுதல் உற்சாகம். 

**

பிந்துவை சேரில் கட்டிப்போட்டு சாக்லேட்டை மீட்கும் போராட்டம் நடந்தது. ஆரவ்விற்கு சரியாக கட்டத்தெரியாததால் பிந்து எளிதில் தப்பினார். 

14_10326.jpg13_10158.jpg

அந்த வீட்டில் உள்ளவர்களின் அடையாளங்களை வேறொருவருக்கு மாற்றி அவரை நேர்காணல் செய்வது போல விளையாடினர். போகிற போக்கில் பிக்பாஸிற்கே ஐடியா தருவார்கள் போலிருக்கிறது. ஆரவ்வாகவும் சிநேகனாகவும் ஜூலியாகவும் மாறி மாறி பேசிய வையாபுரி காமெடியில் வெளுத்துக் கட்டினார். நகைச்சுவை அன்னியன். ஜூலியாக செய்ததுதான் அதிக சிறப்பு. மசாஜ் விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை.

இதற்கிடையில் ஒளித்து வைக்கப்பட்ட சாக்லேட்டை சுஜா கண்டுபிடித்து விட்டார். இதற்காக வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் தேடியிருப்பார் போலிருக்கிறது. அதை ரகசியமாக எடுத்து வந்து சக்தியிடம் கொடுத்தார். ‘அண்டாவைக் காணோம்’ திரைப்பட டைட்டில் மாதிரி ‘சாக்லேட் காணோம்’ என்று பதறினார் பிந்து. ஒருவழியாக எல்லோருக்கும் பங்கு போட்டுத்தரலாம் என்று அவர் முடிவு செய்திருந்த நேரத்தில் இந்த அசம்பாவிதம். எப்படியோ அவர் கண்டுபிடித்த சாக்லெட்டை பிடுங்கிய ஆரவ் அதை ஹரிஷீடம் தூக்கிப் போட (பழைய) பில்லா திரைப்படத்தில் ரஜினிகாந்த் ரகசிய விவரங்கள் அடங்கிய டைரியை தூக்கிப்போட்டு சாகசம் நடத்துவது போல அந்த விளையாட்டு அமைந்தது. 

இம்முறை இனிய ஆச்சரியம் சுஜாவிற்கு நிகழ்ந்தது. அவரது தாய் மற்றும் சகோதரியின் உருவத்தை திடீரென்று தொலைக்காட்சியில் காட்டினார்கள். மற்றவர்கள் சுட்டிக்காட்டிய போது சந்தோஷத்தில் திகைத்துப் போன சுஜா, எங்கே இருக்கிறார்கள் என்று தேடிப் பதறினார். ‘கன்பெஷன் ரூம்ல இருக்கலாம். சென்று பாருங்கள்’ என்று மற்றவர்கள் ஆலோசனை தர, அங்கு சென்று பார்த்தால் வெற்றிடமாக இருந்தது. ஓர் அலாரம் அடிக்க, ஸ்டோர் ரூமின் வழியாக வந்தனர் அவர்கள். பிக்பாஸ் வித்தியாசமா யோசிக்கறாராம். 

16_10026.jpg

தாய் மற்றும் சகோதரியைப் பார்த்தவுடன் சுஜாவின் ‘குழந்தை’ உடல்மொழி மறுபடியும் திரும்பியது. எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார். அத்தான் வராததில் சுஜாவிற்கு வருத்தம். கண்ணீருடன் அதற்காக கேமிராவை நோக்கி வருத்தம் தெரிவித்தார். 

**

‘பயில்வான் ஆகப் போறேன்.. எல்லோரையும் தூக்கி போட்டு மிதிக்கப் போறேன்’ என்று பாடிக் கொண்டே எதையோ சாப்பிட்டார் ஆரத்தி. அப்போது Freeze ஆன ஆரத்தியின் மீது ஜூலி தண்ணீர் ஊற்றுவது போல பாவனை செய்ய, உண்மையாகவே சில துளி நீர் ஆரத்தியின் தலைமீது விழுந்து விட்டது. ‘அச்சச்சோ.. ‘ என்று பதறினார் ஜூலி. ஏற்கெனவே இருவருக்கும் ஏழாம் பொருத்தம். ‘மாட்னா ஜூலி’ என்று மற்றவர்கள் உற்சாகமானார்கள். ஆரத்தி விடுவிக்கப்பட்டதும், ஆவேசத்துடன் தண்ணீர் பாட்டிலைத் தேடினார். ‘நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்’ என்று நிறைய தண்ணீரை ஜூலியின் தலையில் ஊற்றினார். 

17_10270.jpg18_10445.jpg

ஜூலி தெரியாமல் செய்த சிறு குறும்பிற்கு அதிக தண்டனைதான். ஆரத்தியால் இந்த சாதாரண விஷயத்தைக் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நாளின் போதைக்கு ஜூலிதான் ஊறுகாய் போலிருக்கிறது. ஜூலி பதிலுக்கு தண்ணீர் ஊற்ற முயலும் போது ‘நீதான முதல்ல ஆரம்பிச்ச’ என்று தடுத்து விட்டார்கள். 

19_10146.jpg

மறுபடியும் ஆரத்தி .ப்ரீஸ் ஆக அவர் வாயில் பிளாஸ்திரியை ஒட்டினார் ஜூலி. இம்முறை அனைவரும் சேர்ந்து ஜூலியை துரத்த அவர் கழிவறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டார். நீண்ட நேரம் கழித்து அவர் வெளியே வந்து பார்த்த போது, கொடுமைக்கார பிக்பாஸ் அந்த நேரம் பார்த்து ஜூலிக்கு ‘ப்ரீஸ்’ சொல்ல அனைவரும் இணைந்து அவரைத் தூக்கி வர, ஆபத்துக்காக கத்துவது போல் கத்தி ஊரைக்கூட்டினார். 

20_10303.jpg

என்றாலும் விடாமல் அவரைத் தூக்கி வந்து நீச்சல் குளத்தில் போட்டார்கள். சமயம் பார்த்து பிக்பாஸ் ‘ரீவைண்ட்’ சொல்ல மற்றவர்கள் இன்னமும் உற்சாகமானார்கள். மறுபடியும் மறுபடியும் ஜூலி குளத்தில் எறியப்படுவதை ஆரத்தி தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். பரிதாபமோ அல்லது மறைத்துக் கொண்ட மகிழ்ச்சியோ ‘எத்தனை முறை போடுவீங்க.. போதும்’ என்றார். 

**

‘போட்டுத் தாக்கு’ என்றொரு சவால் அறிவிக்கப்பட்டது. ‘போச்சுடா.. இன்னிக்கும் ஏதாவது அடிதடியா’ என்று சிலர் ஆதங்கப்பட்டார்கள். ‘இவ்ளோ நேரம் நல்லாத்தானே போயிட்டு இருந்தது”

இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, எதிரெதிர் அணியைச் சேர்ந்த இரண்டு ஜோடிகள் ஒரு வளையத்திற்குள் இருப்பார்கள். அவரவர் அணியின் நிறத்தைச் சேர்ந்த பந்துகளை எடுத்து இன்னொருவரிடம் கடத்தி ஒரு கூடையில் போட வேண்டும். எதிரெதிர் தரப்பு ஆட்கள் வளையத்தை இழுக்கும் போது சிரமம் ஏற்படும். அதையும் மீறி பந்துகளை எடுக்க வேண்டும். 

22_10537.jpg

வில்லங்கம், சுஜா மற்றும் ஆரத்தி ஜோடியின் வழியாக வந்தது. விளையாட்டு என்று வந்து விட்டால் சுஜா எப்போதுமே சற்று ஆக்ரோஷமாகி விடுவார். தன் வழக்கப்படி அவர் சுறுசுறுப்பாக பந்துகளை எடுக்க வளையத்தை இழுத்த போது அது ஆரத்தியின் வயிற்றில் வலியை ஏற்படுத்தியது போல. வலியைத் தாங்க முடியாத பாவத்துடன் ஆரத்தி அவஸ்தைப்பட, மற்றவர்கள் சுஜாவை எச்சரித்தனர். சுஜாவும் அதற்கு இணங்கி விளையாடுவதை நிறுத்தினார். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஆரத்தி, விடாமல் பந்துகளை எடுத்துப் போட என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார் சுஜா. 

23_10060.jpg

இன்னொரு சந்தர்ப்பத்தில் வளையம் சுஜாவிடமிருந்து நழுவிச்சென்று கீழே விழ அவரை ஆவேசமாக இழுத்துக் கொண்டு நடந்தார் ஆரத்தி. ஸ்போர்ட்மேன்ஷிப் என்பது ஆரத்தியிடம் மருந்திற்கும் இல்லை. 

“நான் இழுக்கும் போது அவங்களுக்கு வலி ஏற்பட்டுதுன்னு மத்தவங்க என்னை நிறுத்தச் சொன்னாங்க. நானும் நிறுத்திட்டேன். ஆனா நான் கீழ விழுந்த போது அவங்க இழுத்திட்டே போனாங்களே..அப்ப யாரும் நிறுத்தச் சொல்லையா?,’ என்று பிறகு சுஜா ஆதங்கப்பட்டது நியாயமானது. ‘சின்ன கேம். எதுக்கு இவ்ளோ ஆவேசம்” என்றதும் சரி. 

‘வலிக்குதுன்னா நிறுத்திடுங்க ஆரத்தி’ என்று மற்றவர்கள் வற்புறுத்தியும் மூச்சு விடாமல் விளையாடிய ஆரத்தி, பிறகு ‘அய்யோ.. அம்மா’ என்று சென்று அமர்ந்து கொண்டார். ஆரத்தியின் வாய் சாமர்த்தியத்தால் அவருக்கு அதிக மரியாதை கிடைக்கிறது. 

‘பிரிவே பிரியத்தைப் புரிய வைக்கும். சிலருக்கோ சில நாட்கள். சிலருக்கோ பல வருடங்கள். பிரியம் இவர்களின் பலமா, பலவீனமா, பார்க்கலாம்’ என்கிற குரலுடன் நேற்றைய பொழுது ஓய்ந்தது. 

இன்று கமல்ஹாசன் வரும் நாள். மனித உடலின் மீது நிகழ்த்தப்படும் வதைகள் தொடர்பான சவால்கள் குறித்த கண்டனங்களை கமல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறேன். 

இந்த வாரம் வெளியேறப் போகிறவர் எவர் என்பதை யூகிக்க முடியவில்லை. குழப்பமாக இருக்கிறது. யாரும் இல்லாமல் போகலாம். பார்ப்போம்.

Link to comment
Share on other sites

பிக் பாஸ் கதவை இழுத்து மூடிட்டார் மிஸ்டர் ராகவன்! 76-ம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்

Bigg_Boss_Baner_11586_10187.jpg

 

‘கூட்டுக்குடித்தன முறையில் உறவுகள் எப்படி அற்புதமாக இருந்தன’ என்கிற முன்னுரையுடன் துவங்கினார் கமல். அவருடைய பிரத்யேகமான ‘டிவிட்’ மொழியில் அல்லாமல் இந்த மேடையில் புரியும்படி பேசுவது சிறப்பு. ‘கூட்டுக்குடும்பங்களில் ஒவ்வொரு விஷயத்திற்கும் வழிகாட்ட ஒரு உறவு இருக்கும். நவீன யுகத்தில் மாடப்புறா போன்ற குறுகிய வசிப்பிடத்தில் அத்தனையையும் இழந்து விட்டோம்’ என்கிற கமலின் ஆதங்கம் உண்மையானது. 

‘பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது நிறைய விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனால் சமீபத்தில் பாராட்டு மழை பொழிகிறது. ஆற்றில் நீர் வற்றிப் போனாலும் சமூகத்தில், உங்களிடம் ஈரம் வற்றிப் போகவில்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த ஈரம் இருக்கும் வரை சாதி, மதம் என்று எதுவும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்த ஈரத்தை பாதுகாத்து வையுங்கள். பிக்பாஸில் எல்லாமே நாடகம் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட இப்போது கண்ணீர் மல்கி உணர்ச்சிவசப்பட்டார்கள். அதற்கான காரணங்கள் இந்த வார நிகழ்வுகளில் இருக்கின்றன. அதன் தொகுப்பைப் பார்ப்போம்” என்றார் கமல்.

கமல்

 

இந்த நிகழ்ச்சியை தினசரி பார்க்காமல், கமல் வருகிற காரணத்தினால் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பார்க்கிறவர்களுக்காக, இந்த recap ஏற்பாடு என நினைக்கிறேன். மற்றபடி தினமும் பார்க்கிறவர்களுக்கு கூட அந்த வாரத்தின் நினைவுகளை தொகுத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. ஆனால் சமயங்களில் சலிப்பாகவும் இருக்கிறது. என்றாலும் திறமையாக எடிட் செய்யும் பிக்பாஸ் டீமிற்கு பாராட்டு. 

‘மற்றவர்களின் முகத்திரையை கிழிக்கப் போகிறேன் என்று வீரசபதம் போட்டு விட்டு போன சக்தி, தன் முகத்திரை கிழிந்து உணர்வு பொங்க அழுதிக்கிட்டு இருக்காரு. சிநேகனின் தந்தையைப் பார்த்து இவர் ஏன் அழணும்? அதுதான் உறவு, குடும்பம்’ என்றார் கமல். (கடவுளே, இந்த விஷயத்தையாவது சக்தி சரியாகப் புரிஞ்சுக்கணும். ‘என் முகத்திரை கிழிஞ்சது’ –ன்னு கமல் சொல்றாரே,  அதுக்கு என்னாண்ணே.. அர்த்தம்-னு சிநேகன் கிட்ட அப்புறம் வெளியே போய் கேட்காம இருக்கணும்)

‘எனக்கும் இது போன்ற கிடைத்த உறவுகள் அதிகம். என் தாயின் மறைவின் போது ப.சிதம்பரத்தின் மாமியார் எனக்கு தாயானார்’ என்கிற வரலாற்றுத் தகவல்களையெல்லாம் பகிர்ந்தார் கமல். (சுயபிரதாபங்களை சற்று அடக்கி வாசிக்கலாம் ஆண்டவரே)

**

வெள்ளியன்று நடந்த நிகழ்வுகள் காண்பிக்கப்பட்டன. ‘மஸ்காரா போட்டு மயக்கறியே’ என்கிற கச்சாமுச்சா பாட்டோடு பிக்பாஸ் வீட்டின் காலைப் பொழுது துவங்கியது. போட்டியாளர்கள் வழக்கம் போல் ஒன்றிணைந்து ஆட, நீச்சல் குளத்தில் இருந்த வையாபுரி நீர் நடனம் புரிந்து வியக்க வைத்தார். அந்த ஆவேசம் குறையாமல் அப்படியே மாரத்தான் ஓட்டம் ஓடி கழிவறைக்கு அவர் நகர்ந்து மறைந்தது நகைச்சுவை. 

பிக்பாஸ்

 

‘பிக்பாஸின் இறுதிக்கட்டத்திற்கு வந்து விட்டதால், போட்டிகள் இனி கடுமையாக இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் மூன்று அணிகளாகப் பிரிய வேண்டும். பழைய போட்டியாளர்கள், புதிய போட்டியாளர்கள் மற்றும் நடுவர் குழு. (மக்களால் வெளியேற்றப்பட்ட ஆரத்தி, ஜூலி, சக்தி, எல்லாம் நடுவர்களாம். காலக்கொடுமை). 

பழைய மற்றும் புதிய போட்டியாளர்கள் அணி எதிரணியில் உள்ள ஒருவரை கலந்துரையாடி தேர்ந்தெடுத்து ‘அவர் போட்டியில் தொடர தகுதியில்லாத நபர்’ என்பதற்கான தகுந்த காரணங்களை நடுவர் குழுவிடம் சொல்ல வேண்டும். இதற்கான பத்து காரணங்களும் பிக்பாஸால் தரப்பட்டிருந்தன. ‘task-ல் பங்கெடுக்கத் தயங்குபவர், சோம்பேறி. உம்மணாமூஞ்சி’ என்று சரியும் அபத்தமுமாக கலந்த உதாரணங்கள். 

பழைய போட்டியாளர்களின் டீம் கலந்தாலோசித்து ‘வையாபுரியை’ தகுதியில்லாத நபராக தேர்ந்தெடுத்தார்கள். இதற்காக இன்ன பிற காரணங்கள் சொல்லப்பட்டாலும் உடல்திறன் அடிப்படையில் task-கள் இனி கடுமையாக இருக்கும் என்பதால் வையாபுரியை தேர்ந்தெடுக்கிறோம் என்பது அவர்களின் தீர்மானம். (இறுதிக்கட்டத்தில் சவால் போட்டிகள் கடுமையாக இருக்கும் என்பது பிக்பாஸ் குழுவிற்கு முதலிலேயே தெரியும் போது எதற்காக வையாபுரி போன்ற வயதானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். காமெடி செய்து சிரிக்க வைக்க மட்டுமா? ‘ஜெயித்து விட்டு வருவேன்’ என்று மனைவியிடம் உறுதி சொல்லியிருக்கிற வையாபுரியின் கனவு காற்றில் கலையலாம். பாவம்.)

ஜூலி, ஆர்த்தி, சக்தி

 

பழைய போட்டியாளர்கள் அணி ‘தகுதியில்லாத நபராக’ தேர்ந்தெடுத்தது பிந்துவை. (அடப்பாவிகளா!) வேலை செய்யாதது, உடல்திறன் சார்ந்த சவால்களில் பங்குபெறத் தயங்குவது, சுற்றுலாவிற்கு வந்தது போல ஜாலியாக இருப்பது என்று அவர் மீது புகார்ப்பட்டியல் நீண்டது. பிந்துவின் ‘buddy’ஆன வையாபுரியும் இந்த வரிசையில் இணைந்து கொண்டது, ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்கிற தத்துவத்தை நமக்கு புரிய வைத்தது. 

ஏதோ கார்ப்பரேட் கம்பெனியில் நேர்காணல் எடுப்பவர்களைப் போல சக்தி குழுவை நடுவர்களாக அமர வைத்திருந்தது பயங்கர எரிச்சல். ஓரமாக பாய் போட்டு கீழே உட்கார வைத்திருக்கலாம். இந்தப் பைத்தியக்காரத்தனமான ஆலோசனைகளுக்கு இவ்வளவு பில்டப் ஓவர். 

பழைய அணியும் புதிய அணியும் வந்து ‘தகுதியில்லாத நபராக’ தாங்கள் தேர்ந்தெடுத்ததிற்கான காரணங்களைக் கூறினர். வையாபுரியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று ஆரத்தி சுஜாவை நோக்கி கேட்க அவர் ‘வக்கீல் வண்டுமுருகன்’ மாதிரி திகைத்து நின்றார். நல்லவேளையாக ஹரீஷ் வந்து காப்பாற்றினார். 

 

நடுவர் குழு ‘இந்த வெட்டித்தனமான வேலையை’ ஏதோ ஐ.நா. சபை தீர்மானம் மாதிரி கெத்தான பாவனையுடன் ஆலோசித்தது, ஆரத்தி இதற்காகவே ஸ்பெஷல் விக் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். . இப்போதெல்லாம் எல்கேஜி மாணவர்களுக்கு கூட கான்வகேஷன் கூட்டம் நடத்துகிறார்கள். ஜூலியைப் பார்க்கும் போது அதுதான் நினைவில் வந்தது. ‘டிரிக்கர்’ சக்தி ‘ஆக்சுவலி நான் என்ன சொல்ல வர்றேன்னா’ பாவனையில் சிந்தனையாளர் போலவே உட்கார்ந்திருந்தார். இதையெல்லாம் பார்க்க வேண்டியது நம் தலையெழுத்து. 

‘இங்க்கி பிங்க்கி பாங்க்கி’ என்ற பாணியில் காரணங்களை தங்களுக்குள் பேசி வையாபுரி மற்றும் பிந்து தொடர்பான பரிந்துரைகளை நடுவர் குழு (?!) ஏற்றுக் கொண்டது. தங்கள் முதலாளியிடமும் அவர்கள் தங்கள் முடிவை தெரிவிக்க, பிக்பாஸ் இதை விடவும் பில்டப்பாக “இது பரம ரகசியம். யாருக்கும் தெரியாமல் வைத்துக் கொள்ளுங்கள்’ என சீன் போட, அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை. 

**

இசை ஒலிக்க புதிய விருந்தினர்களாக வந்தனர் விஷ்ணு விஷாலும், கேதரின் தெரேசாவும். ‘கதாநாயகன் படத்திற்கான விளம்பரமெல்லாம் இல்லை’ என்று விஷ்ணு கூறியதும், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழியும் ஒன்று. ‘டென்ஷன் ரீலீஸ். அதான் ஒரு ரிலீஃப்புக்காக வந்தோம்’ என்று விஷ்ணு சமாளித்தார். மனமகிழ்ச்சிக்காக யாராவது ஜெயிலைப் போய் சுத்தி பார்ப்பாங்களா பாஸூ. தமாஷ் பண்ணாதீங்க. 

‘wild card entries’ ஆக வந்தோம் அவர்கள் கூறியதும் மற்றவர்கள் மிகையாக வாயைப் பிளந்தனர். ஆனால் அவர்கள் வந்திருந்த தோரணையிலேயே தெரிந்து விட்டது, அவர்கள் அரைமணி நேரத்திற்கு மேலாக கூட இருக்கப் போவதில்லை. குடிசை வீட்டில் நுழைந்த மகாராஜா தோரணையே அவர்களிடம் இருந்தது. ஒளித்து வைத்திருந்த சாக்லேட்டை விருந்தினர்களுக்கு தந்தார் பிந்து. அப்போதும் சாக்கெலட்டுக்காக மெல்லிய சண்டை நடந்தது. (இன்னுமா அதை வெச்சிருக்கீங்க?)

விஷ்ணு விஷால்

 

வாக்கு கேட்கச் செல்லும் தேர்தல் வேட்பாளர்கள் குடிசைப்பகுதிகளில் வடை சுடுவது மாதிரி, கேதரீன் சாதத்தை வைத்து என்னமோ செய்தார். விஷ்ணு ஏதோ சொல்ல வர, ‘மல்லிகா பத்ரிநாத்’ போல அது அப்படிச் செய்யக்கூடாது என்று அறிவுரை வேறு. 

எல்லோரையும் வரவேற்பறைக்கு அழைத்த பிக்பாஸ், சிறிய அளவில் பெரிய வெடிகுண்டை தூக்கிப் போட்டார். ‘Freeze’ சவாலில் இருந்து போட்டியாளர்கள் பல முறை விலகியதால் லக்ஸரி பட்ஜெட் ரத்து செய்யப்படுகிறது. (இதையே வையாபுரியின் மகள் முன்பே ஜோசியமாக சொல்லிச் சென்றதை நினைவுகூரலாம். வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் தனக்காக எடுத்துக் கொள்வதில் பிக்பாஸ் கில்லாடியாக இருக்கிறார்).

ஆனால் லக்ஸரி பட்ஜெட்டை முழுக்கவே நீக்கி விட்டால் வீட்டில் புரட்சி வெடிக்கலாம் அல்லவா? (நம் வீடுகளில் காலை காப்பி இல்லாவிட்டாலே ரத்தக்கொதிப்பு உயர்ந்து விடுகிறது). எனவே அதை வேறு வழியாக சமன் செய்தார் பிக்பாஸ். கார்ப்பரேட் தந்திரங்களையெல்லாம் இந்த விளையாட்டின் மூலமாகவே எளிமையாக புரிந்து கொள்ளலாம் போல. 

அதாவது, விஷ்ணுவிடமும் கேதரீனிடமும் எண்ணூறு மதிப்பெண்கள் இருக்குமாம். அவர்கள் லக்ஸரி பட்ஜெட்டை தீர்மானிப்பார்களாம். (ஏம்யா… இத்தனை நாள் கஷ்டப்படறது நாங்க.. ஃபுல் மேக்கப்போட அரைமணி நேரத்திற்கு முன்னால் வந்துட்டு அதை இவங்க தீர்மானிப்பங்களா என்று பிக்பாஸ் வீட்டில் யாரும் கேட்கவில்லை. அப்படியெல்லாம் நாம் உடனே கேட்கப்பழகியிருந்தால் கிழக்கிந்திய கம்பெனி இங்கு ஜெயித்திருக்குமா?) இந்த அடிமைத்தனத்தை,  “அவங்களா பார்த்து போடறதை நாம பொறுக்கிக்கணும்’ என்று ஆரத்தி சரியாக மொழி பெயர்த்தார். 

பொருட்களை தேர்ந்தெடுப்பதற்காக விஷ்ணுவும் கேதரீனும் சண்டையிட்டு நேரம் கடத்துவதை மற்றவர்கள் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். (நம்ம வயித்துல அடிச்சுடுவாங்க போலிருக்கே). கேதரீன் அடிப்படையான ‘பிரட்’ உணவைச் சொல்ல, விஷ்ணு, கடலைமிட்டாய், பேரீச்சம்பழம் என்று காமெடி செய்து கொண்டிருந்தார். ஒருவேளை அவர்கள் விளையாடுகிறார்கள் போல, பின்பு போட்டியாளர்களே லக்ஸரி பட்ஜெட்டை தீர்மானிக்க விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ம்ஹூம்.. அவர்கள் சொல்லியதுதான். 

தகுதியல்லாத நபர்’’ தொடர்பான பரம ரகசியத்தை வெளிப்படுத்த புதிய விருந்தினர்களை அழைத்தார் பிக்பாஸ். ‘இங்க நான் இருக்கறதுக்காக வரலை. முன்னமே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இத்தனை பெரிய சவாலை நீங்கள் ஏற்றுக் கொண்டது பெரிய விஷயம். நானாக இருந்தால் செய்திருக்க மாட்டேன். அந்த வகையில் நீங்கள் எல்லாம் ஹீரோஸ். எல்லோரிடமும் நிறை, குறைகள் இருக்கின்றன. ஆனால் இங்கு அவை வெளிப்படையாக காமிராவில் பதிவாகும்” என்று பேசினார் விஷ்ணு. டப்பிங் கொடுக்க யாருமில்லாததால் காதரீன் அதிகம் பேசவில்லை. விஷ்ணு பேசியது சரிதான் என்றாலும், பிக்பாஸ் போட்டியாளர்களை ஏதோ ராணுவவீரர்கள் கடமையாற்றுவதைப் போல பாராட்டியது சற்று மிகை. 

‘பிந்து, வையாபுரி’ என்கிற ரகசியத்தை அவர்கள் அவிழ்த்தார்கள். சம்பந்தப்பட்டவர்கள் வெளியே புன்னகைத்தாலும் உள்ளுக்குள் சுருங்கிப் போகியிருக்கலாம். வையாபுரியின் வீட்டம்மணி தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தால் சற்று அதிர்ச்சியாகி இருக்கலாம். பிந்து ஆர்மி எதிர்ப்பு போராட்டத்திற்கு தயாராகி இருக்கலாம். போர்.. ஆம்.. போர்…

விஷ்ணுவும் காதரீனும் விடைபெற்றுச் சென்றனர். 

**

தகுதியில்லாத நபர்களாக தாங்கள் வெளியேற்றப்படவிருப்பதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து எந்தெந்த பொருட்களை யார் யார் எடுத்துச் செல்வது என்று பிந்துவும் வையாபுரியும் பேசிக் கொண்டனர். பிந்துவிற்கு காமிரா வேண்டுமாம். அதை வைத்து என்ன செய்ய? வையாபுரி புத்திசாலித்தனமாக பிளாஸ்மா டிவியை தேர்ந்தெடுத்தார். ‘ஸ்பீக்கர்களையும் எடுத்துக்கங்க. அப்பத்தான் சவுண்ட் எபெக்ட் நல்லாயிருக்கும்” என்று ஆலோசனை தந்தார் பிந்து. 

இரவில் புகுந்த கொள்ளையர்கள் மாதிரி இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த பிக்பாஸ் ஒருவேளை கலக்கமடைந்திருப்பார். கூடுதலாக காமிரா வைத்து கண்காணித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. “பிக்பாஸ் வீடு நம்முடையதுதானே? நம்ம வீட்ல இருந்துதானே எடுத்துப் போகிறோம்” என்று இதற்கு நியாயமெல்லாம் கற்பித்தார்கள். ஜாலியான விளையாட்டு. 

சிந்ந்கன், சக்தி

 

“இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இருப்பதால் சுஜா காலையில் இருந்து ரொம்ப பயப்படறாங்க… இப்பத்தான் பழகறோம். அதுக்குள்ளே வெளியே அனுப்பிச்சுடுவாங்களோன்னு” என்றார் ஆரவ். ‘இருக்கணும்.. அந்தப் பயம் இருக்கணும். நாமள்லாம் எவ்ள அடி வாங்கியிருப்போம். அந்த அனுபவம் அவங்களுக்கும் வேணும்’ என்றார் சிநேகன். 

**

கமல் அகம் டிவிக்குள் வந்ததும் முதல் வேலையாக வையாபுரியை விசாரித்தார். ‘என்ன வையாபுரி, பிக்பாஸ் வீட்ல காதல் காட்சிகள்லாம் பார்த்தேன். ம்யூசிக் இல்லாமலேயே பாட்டுல்லாம் கேட்டுச்சு” என்று கிண்டலடித்தார். “ஆமாம்.. சார்… திருமணம் செஞ்சு இத்தனை காலத்திற்கு அப்புறம்தான் காதல் வந்துச்சு. வீட்ல நாம் ரொம்ப தனிமையா, சீரியஸாத்தான் இருப்பேன். கோபம் நிறைய வரும். இப்ப நிறைய மாறிட்டேன். இந்த மாற்றம் வீட்டில் நிச்சயம் இருக்கும்’ என்று உறுதியளித்தார். ‘பொதுவாக நகைச்சுவையுணர்வுள்ளவர்கள் சீரியஸாத்தான் இருப்பார்கள்’ என்கிற கமலின் அவதானிப்பு முக்கியமானது. என்னளவிலும் அது சரி. ‘சில நீதிகளை புத்தகங்களில்தான் வாசிப்போம். வாழ்க்கைல, அதுவும் இங்க, குறுகிய நாட்கள்ல கத்துக்கிட்டீங்க.. வாழ்த்துகள்’ என்றார் கமல்.

வையாபுரியைப் போல மற்ற போட்டியாளர்களின் அனுபவங்களையும் கேட்டார் கமல். ‘எங்க அம்மாவும் சகோதரியும் குழந்தைங்க.. இவ்ள தூரம் வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. மகிழ்ச்சி’ என்றார் சுஜா. “எங்க அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன். அவங்கதான் எனக்கு எல்லாமே” என்றார் ஹரீஷ். 

“உங்கள் அம்மா உங்களுக்கு முத்தம் கொடுத்தார்களே. அப்போது சந்தோஷப்பட்டீர்களா, சங்கடப்பட்டீர்களா? என்பது கமலின் கேள்வி. (கமல் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை சரியாகப் பார்ப்பதில்லை போல. ஹரீஷ் முத்தம் கேட்டாலும், அவரின் அம்மா அதற்காக முயன்று ‘உயரமாக இருக்கிறான். எட்டவில்லை’ என்கிற காரணத்தினால் முத்தம் தர இயலாமல் சென்றார்). 

ஹரீஷோடு ஒப்பிட்டு சம்பந்தமில்லாமல் தன் சுயபுராணத்தை நுழைத்தார் கமல். “நான் ரொம்ப லேட்டா பொறந்ததால… மத்தவங்க அம்மாவெல்லாம் இளமையாக இருக்கும் போது என் அம்மா கிழவியாக இருக்கறாங்களேன்னு சங்கடமா இருக்கும். ‘இங்கிலீஷ் படத்திற்கு கூட்டிட்டு போடா’ன்னு ஒருநாள் கேட்டாங்க.. ‘என்னம்மா.. அங்க எல்லாம் இளம்பெண்களா வருவாங்க.. ஒரு கிழவியோட எப்படி போறது’ன்னு மறுத்துட்டேன்’ என்றார் கமல். வீட்டின் கடைசிப்பிள்ளைகளுக்கு பொதுவாக இந்த அனுபவம் இருக்கும். இதை வெளிப்படையாக மேடையில் மனந்திறந்த கமலுக்கு பாராட்டு. “உறவுகளின் அருமை இருக்கும் போது தெரிவதில்லை’ என்கிற கமலின் துயரத்தை போட்டியாளர்களும் ஆமோதித்தனர். 

‘சிங்கப்பூரிலிருந்து இதற்காகவே வந்த நண்பன், திருச்சியிலிருந்து வந்த சகோதரர்’ ஆகிய சுற்றங்களின் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் ஆரவ். ‘அவங்க எங்க சென்னைக்கு வரப்போறாங்கன்னு நெனச்சேன்’

கமலுக்கு சக்தியிடம் என்ன பிரத்யேக பிரியமோ, அவரைக் கலாய்ப்பதில் குறியாக இருந்தார். “சிநேகன் தந்தை வருகைக்கு மற்றவர்கள் அழுததில் ஆச்சரியமில்லை. ஆனா சக்தியும் குமுறி குமுறி அழுதிட்டார். இங்க வீரமா போனவர் அங்க பாசக்காரரா மாறிட்டார்’ என்கிற கமலின் கிண்டலை சங்கடமான புன்னகையுடன் எதிர்கொண்டார் சக்தி. (எல்லோரும் ஓன்னு அழறப்ப நான் மட்டும் சும்மாயிருந்தா தப்பாயிடாது’ என்பது அவர் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம்)

முன்பு பிக்பாஸிடம் நன்றி தெரிவித்த அதே நெகிழ்வான உணர்வை கமலிடம் ரீப்ளே செய்தார் சிநேகன். ‘என் தந்தையை உலகம் முழுவதும் காண்பித்து விட்டீர்கள். இதை விடவும் சிறந்த மேடை இருக்க முடியாது. நன்றி” என்றார்.

‘என்ன சக்தி.. உணர்ச்சிப்பிழம்பே.. சொல்லுங்க. என்று மறுபடியும் சக்தியிடம் வந்தார் கமல். “ஆமாம் சார்.. டிரிக்கர் பண்ணலாம்-னு வந்தேன். ஆனா உள்ள புல்லட் இல்லை. ஐந்து விஷயம் சொல்லணும் சார்.. வையாபுரி அண்ணன் மேல கோபம் இருந்துச்சு. ஆனா அவரோட குடும்பம் அவர் கூட பழகற விதம், அவரோட பிள்ளைங்களோட எதிர்பார்ப்பு’ பார்த்த போது கோபம் போயிடுச்சு.. இதைப் போலவே ஹரீஷோட பெற்றோர் அத்தனை ப்ரெண்ட்லியா இருக்கும் போது பொறாமையா இருந்துச்சு. எங்க அப்பா எப்பவும் சினிமா வேலையா வெளில போயிடுவார். அந்த அன்பு எனக்கு கிடைக்கலை. கணேஷிற்கு விபத்து ஏற்படும் போது உடைஞ்சுட்டேன். சிநேகன் அப்பா.. வந்த போது வேற வழியில்லே.. அழுதிட்டேன்.. ஆரவ் சுற்றத்தினர் வந்த போதும் இதே ஃபீலிங்க்ஸ்தான். ஒண்ணும் பண்ண முடியாது.. கோபமெல்லாம் போயிடுச்சு” என்று நெகிழ்ந்தார் சக்தி. ‘டிரிக்கர்’ சக்தி என்கிற பட்டம் போய் விடும் போல இருக்கிறது. அந்தளவிற்கான நெகிழ்ச்சி சக்தியிடம். வாழ்க. 

“ஒருத்தரை பிடிக்கும் பிடிக்காதுன்னு எதுவும் கிடையாது. நமக்கு பிடிக்காதவங்களை, நெறைய பேருக்கு பிடிச்சிருக்கலாம்’ என்கிற மகா தத்துவத்தை சொன்னார் ஆரத்தி. (ஓவியா?)

சக்தியை ‘உணர்ச்சிப் பிழம்பு’ என்று வர்ணித்தார் கமல். சிறுவயதிலேயே தன் தந்தை தம்மை விட்டுப் புரிந்து போனதை தட்டுத்தடுமாறிய வார்த்தைகளோடு, நடுங்கும் குரலில் கண்ணீர் வழிய சொன்னார். பரிதாபமாக இருந்தது. ‘என்னிக்காவது ஒருநாள் அவரை தேடி அழைச்சுட்டு வந்து சாப்பாடு போடுவேன்.. ‘என்று தன் நீண்ட கால ஏக்கத்தை விருப்பமாக சொன்னார். 

“பாருங்க.. அவர் வரலைன்னா.. நான் வந்து உங்க வீட்ல சாப்பிடறேன்’ என்றார் கமல்.  இதை விடவும் மிகச்சிறந்த ஆறுதல் சுஜாவிற்கு கிடைக்கும் என தோன்றவில்லை. கீழே விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். 

 

 

“எனக்கு கண்ல அடிபட்ட போது இரவு முழுவதும் எல்லோரும் கண்விழித்து பார்த்துக்கிட்டாங்க. நான் ரொம்பவும் நெகிழ்ந்துட்டேன்’ என்றார் கணேஷ். ‘நாங்கள்லாம் ரொம்ப பழகிட்டோம். எவிக்ஷன்-ற விஷயம் சங்கடமா இருக்கு. குறைந்தபட்சம் இந்த வாரம் எவிக்ஷன் இல்லைன்னா சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்’ என்ற கோரிக்கையை வைத்தார் ஹரீஷ். ஆனால் அது நிகழ்ச்சியின் சுவாரசியத்தைக் குறைக்கலாம் என்பதால் பதில் சொல்லாமல் சமாளித்தார் கமல். 

“பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இரண்டு விஷயங்களைக்  கத்துக்கிட்டேன் சார்” என்று ஆரம்பித்தார் ஜூலி. ஒண்ணு ‘அன்பே சிவம்’ என்றார். அடுத்தும் கமல் படத்தின் தலைப்பாக சொல்லி கமலைக் கவரவிருக்கிறாரோ என்று தோன்றியது. இல்லையாம். ..பொறுத்தார் பூமியாள்வார்’ என்றும் கற்றுக் கொண்டாராம். (அட, நல்லாயிருக்கே.. கமலோட அடுத்த படத்தின் டைட்டிலா வெச்சுடலாம்).

‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாட்டு மாதிரி ‘எங்க குடும்பம், பிக்பாஸ் குடும்பம், சேர்ந்து தமிழகமே குடும்பம் ஆன உணர்வு சார்’ என்று டிஆர் படத்தில் கூட வராத பெரிய சென்ட்டிமென்ட் வெடிகுண்டை கொளுத்திப் போட்டார் ஆரவ். (பைனலுக்கு வந்துடுவார் போலிருக்கே). ‘பாசத்துல நம்மள மிஞ்சிடுவான் போலிருக்கே’ என்று மனதில் நினைத்துக் கொண்ட கமல், ‘ஆம். தமிழகமும் குடும்பம்தான். நீங்க செய்யற தப்பை உரிமையா கோச்சுப்பாங்க’ என்று அவர்களின் கடமையை சூசகமாக நினைவுப்படுத்தினார்.

“ஆனால் எல்லோரும் உணர்வுபூர்வமாக இருப்பதால் ஒரு விஷயத்தை மறந்து விட்டீர்கள். அவரவர்களின் குடும்பத்தார்கள் ஒன்றை மிக குறிப்பாகச் சொன்னார்கள். எவருமே அதை இங்கு சொல்லவில்லை. ‘ஜெயிச்சுட்டு வாங்கன்னு’ சொன்னாங்க. அந்த உத்வேகத்தோட விளையாடுங்க’ என்றார் கமல். 

‘இந்த விளையாட்டில் வெல்வதற்கு இடையூறாக இருக்கும் விஷயம் என்ன?’ என்று ஒருவரைப் பற்றி மற்றவர்கள் எல்லோரும் சொல்ல வேண்டும்’ என்கிற விளையாட்டை (?!) நிகழ்த்தினார் கமல். இவற்றில் பல காரணங்கள், கண்டுபிடிப்புகள் வெளிப்பட்டன. இது போட்டியாளர்கள் தங்களை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கும். இன்னொரு பக்கம் அவர்களுக்குள் கோபம், வருத்தம் ஆகிய உணர்ச்சிகளும் தோன்றக்கூடும். 

‘தம் குறையை மற்றவர்களின் மூலமாக அறியும் போது அது சார்ந்த கோபமும் உத்வேகமும் வரும்’ வெல்லும் விருப்பம் அதிகமாகும். அதுவே இந்த கலந்துரையாடலின் நோக்கம்’ என்றார் கமல். (பிக்பாஸூம் கமலும் நவீன நாரதர்களாகவே மாறி விட்டார்கள்).

‘சரி.. உணர்வுகள், நட்பு, குடும்பம்.. என்று நிறைய நெகிழ்ச்சியான விஷயங்கள் பேசி விட்டோம். இப்ப இது விளையாட்டு என்கிற நிதர்சனத்திற்கு வருவோம். பாசம், நட்பு போன்றவை ஒருபுறம் இருந்தாலும் விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் என்கிற வேகமும் விவேகமும் முக்கியம்.’ என்ற கமல், ‘இல்லை.. எனக்கு உணர்ச்சிகள்தான் முக்கியம், குடும்பமாகத்தான் நினைப்பேன். சங்கடமான விஷயங்களை என்னால் செய்ய முடியாது” என்று நினைப்பவர்கள் தாரளமாக வெளியேறலாம். இரண்டு நிமிடங்கள் கதவு திறந்திருக்கும்” என்று சொன்னார். 

இதுவொரு சாமர்த்தியமான கிம்மிக்ஸ். ‘என் வகுப்பில் இருக்க விருப்பமில்லையெனில் வெளியேறுங்கள்’ என்று ஆசிரியர் கோபத்தில் சொல்வார். சில சதவீத மாணவர்களுக்கு உண்மையாகவே வகுப்பில் இருக்க விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்தச் சூழ்நிலையில் தைரியமாக வெளியேற முடியுமா? தனித்தனியாக தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். அவ்வளவே. 

எனவே போட்டியாளர்கள் தங்களுக்குள் அது சார்ந்த பல்வேறு அபிப்ராயங்கள் இருந்தாலும் அதை மூடி மறைத்து ‘எவரும் வெளியேற விரும்பவில்லை’ என்று அறிவித்தனர். செயற்கையான உற்சாகமும் வாக்குறுதிகளும் ஆறாக பெருகி ஓடிற்று. 

‘அப்ப கதவ இழுத்து மூடுங்க…’ என்று காவல்துறை அதிகாரி ராகவனாக மாறி கமல் சொன்ன ‘பஞ்ச்’ டயலாக் சரியான டைமிங். வேட்டையாடு விளையாடு படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் அந்த " தம்பி கேட்ட மூடுப்பா. கேட்ட மூட்றா" வசனம் அறியாத கமல் ரசிகர் எவரும் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அந்தக் காட்சியை பாபநாசம் கமலாய் ரீக்ரியேட் செய்தார் பிக்பாஸ் கமல். அதைப் புரிந்தகொண்ட ரசிகர்கள் கைதட்டினர். 

கமல் மற்றும் பிக்பாஸ் இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் ‘இனியும் அண்ணா..தம்பின்னுலாம் கொஞ்சிட்டிருக்க முடியாது என்பது தான்.

சக்தி, ஆரத்தி, ஜூலி ஆகியோர் இறுதிப்போட்டியில் இல்லை என்பதால் ஜாலியாக இருந்தனர். ஆனால் உள்ளுக்குள் வாய்ப்பை தவற விட்டு விட்டோமே என்று வருத்தமாக இருக்கலாம். 

**

‘நாமினேஷன் செய்யப்பட்டிருப்பவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டிருக்கிறார். யாரென்று சொல்ல முடியுமா?” என்றார் கமல். பிந்துவும் ஹரிஷூம் ‘கணேஷ்’ என்றனர். ‘நான்தான்’ என்றார் சுஜா தன்னம்பிக்கையாக. “இப்பதான் உத்வேகமாக இருக்கப் போறோம்’னு வாக்குறுதி தந்தீங்க. அதுக்குள்ள தன்னம்பிக்கை இல்லாம பேசறீங்களே?” என்று ‘இப்படியும்’ பேசினார் கமல். ‘இல்ல.. சார்.. மக்கள் வாக்களிப்புதானே இதை முடிவு செய்யும்’ என்று சமாளித்தார் ஹரீஷ்.

பீடிகைகளுக்குப் பிறகு ‘கணேஷ் காப்பாற்றப்படுகிறார்’ என்கிற அறிவிப்பு வந்தது. 

‘சார்.. இந்த வாரம் எவிக்ஷன் இருக்கா, இல்லையான்னு சொல்லிட்டுப் போங்களேன். தெரிஞ்சுக்காட்டி தலை வெடிச்சிடும் போலிருக்கு’ என்றார் ஹரீஷ். ‘படுங்களேன்’ என்று கமல் சொன்னதை சிலேடையாக எடுத்துக் கொள்ளலாம். ‘இரவாகி விட்டது. போய்ப்படுங்கள்’ என்பது ஒன்று. ‘என்ன.. இப்ப.. அந்த பாட்டையும் படுங்கள்’ என்பது, இன்னொன்று. (எப்பூடி?)

**

போட்டியாளர்களிடமிருந்து விடைபெற்ற கமல், அடுத்தது நம்மிடம் சமகால தீவிரமான விஷயத்திற்கு வந்தார். ‘நீட் தேர்வு’ விவகாரம் பற்றியது.

‘பொழுதுபோக்கு மேடையில் எதற்கு இதெல்லாம் என்று சிலர் நினைக்கலாம். அப்படியே பொழுதைப் போக்கி விட முடியாது. நமக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. நம் பிள்ளைகள் தெருவில் நிற்கிறார்கள், நிறுத்தி விட்டோம். அவர்கள் விளையும் பயிர்கள். தெருவில் முளைக்காது. விவசாயிகளுக்கு இது நன்றாக புரியும். 

இதற்கு என்னதான் தீர்வு என்று கேட்டால் போராட்டமா, என்றால் போராட வேண்டிய அவசியமில்லைன்னு தோணுது. 

(உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்தான கவனத்துடன் கமல் பேசியதாகத் தெரிகிறது). நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை எங்கோ தவற விட்டு விட்டோம் என்பது பாமரத்தனமான என்னுடைய கருத்து. 

என் கருத்துகள் விமர்சனத்திற்கு உரியவை. கடுமையான விமர்சனங்களைச் சொல்பவர்களிடம் அவர்களின் தரப்பை கேட்பேன்.

எனக்குத் தோன்றுவது ‘கல்வி சார்ந்த திட்டங்கள், முடிவுகள் போன்றவை மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில் அப்படித்தான் இருக்க வேண்டும். முன்பு அப்படி இருந்தது. எங்கே தவற விட்டோம் என்று பெரியவர்களிடம் கேட்டேன். எமர்ஜென்சி காலத்தில் அது நிகழ்ந்தது என்று பதில் கிடைத்தது. அதற்குப் பிறகு திருத்தங்களின் மூலம் சரிசெய்திருக்கலாமே என்று கேட்டேன். பதில் இல்லை. 

அண்டை மாநிலங்கள் ‘நீட்’ தேர்வை ஒப்புக் கொண்டார்களே, நீங்கள் ஏன் ஒப்புக் கொள்ளவில்லை?’ என்றொரு கேள்வி எழலாம். ‘அவர்கள் அதற்கான முன்ஜாக்கிரதையுடன் இருந்தார்கள்’ நாம் அவ்வாறு செயல்படவில்லை. இதற்காக அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லவில்லை. ‘அரசு’ என்று நம்மையும் சேர்த்தேதான் சொல்கிறேன். இனி என்ன செய்யப்போகிறோம் என்பதை முடிவெடுப்போம்.  இதை நான் சுயநலத்துடன் சொல்லவில்லை. இனி நான் போய் படிக்கப் போவதில்லை. பொதுநலத்திற்காக சொல்கிறேன்’ என்று கமலின் உரை முன்ஜாக்கிரதைத்தனத்துடன் இருந்தது. 

சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லி, அதே சமயம் சர்ச்சைகளையும் தவிர்க்க விரும்பிய கமலின் சாமர்த்தியம் அவரின் உரையில் தெரிந்தது. என்றாலும் கேளிக்கை நிகழ்ச்சியில் சமகால பொதுப்பிரச்னையை முன்னெடுத்த கமலின் சமூகவுணர்வைப் பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது. வாழ்த்துவோம்.

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/101822-close-the-gate-says-the-vintage-raghavan-in-kamal-happenings-of-bigg-boss-day-76.html

Link to comment
Share on other sites

தனியறையில் சுஜா... ஸ்ரிப்ஜி ஹரீஷ்... ஆம்... போர் போர்! 77-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss


76-ம் நாளின் தொடர்ச்சியான நிகழ்வுகள் காண்பிக்கப்பட்டன. தனது தந்தை மற்றும் கமல் தந்த நெகிழ்ச்சியான வாக்குறுதி குறித்து சுஜா இன்னமும் நெகிழ்வு நிலையில் இருக்கிறார். ‘சுஜா சிஸ்டர், ப்ளீஸ். அழாதீங்க.. கமல் சார் என்ன சொன்னார்னு கவனிச்சீங்களா.. நான் உங்களை சம்பிரதாயத்திற்கு சகோதரி என்று அழைக்கவில்லை’ என்று ஆறுதல் சொன்னார் ஆரவ். (பிரதர் கலாசாரமெல்லாம் இப்போது தமிழ் சினிமாவில் வேறு பொருளாகி விட்டதே, ஆரவ் பிரதர்). 

நீண்ட காலம் கழித்து அரசியல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட தலைவர்கள் போல சக்தியும் சிநேகனும் நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்துக் கொண்டார்கள். சக்திக்குள் இருந்த டிரிக்கர், மக்கர் ஆகி நின்று விட்டது நல்லதே. 

Bigg Boss

**

எவராவது ஒருவர் நெகிழ்ச்சியடைந்து பேசினால் அது குறித்து ரத்தம் வர கிளறுவது ஆர்த்திக்கு கொடுக்கப்பட்ட task போலிருக்கிறது. திறமையாக செய்கிறார். சுஜா கதறியழுததைக் குறித்து எதையோ சொல்லி விவாதத்தை ஆரம்பித்து விட்டார் போலிருக்கிறது. 

“நான் அழறது ஒப்பாரி இல்லைங்க. உணர்வு. என்னோட வலி இது. நான் பள்ளியில் சேரும் போது அப்பா இனிஷியல் இல்லாமல் எங்க அம்மா அசிங்கப்பட்ட விஷயம் எல்லாம் எனக்குத்தான் தெரியும். “இல்லை சுஜா.. நீங்க Bold-ஆ இருக்கணும். அவர் ஏன் தேடி வரணும்னு நெனக்கறீங்க?” என்று கேள்விகளைத் தொடர்ந்தார் ஆர்த்தி. “அவருக்கு நான் யாருன்னு காட்டணும்… எவ்ள வளர்ந்திருக்கணும்னு காட்டணும். என் கூட வெச்சுக்கறதுக்காக இல்ல.. ஒருவேளை சோறு போட முடியணும்னு காட்டணும்” என்று சற்று ஆவேசமானார் சுஜா. தொடர்ந்து ஆர்த்தி இதை நோண்டவே.. “ஏங்க.. உங்க அப்பா என்ன செய்வாரோ –ன்னு நீங்க நெறய யோசிக்கறீங்க இல்ல.. அதைப் போல என் அப்பாவை நான் பார்க்கணும்னு ஆசை இருக்காதா?” என்று பொங்கினார் சுஜா.

‘It is none of your business’ என்று கூட சுஜா ஒரே வார்த்தையில் ஆர்த்தியை கட் செய்யலாம். ஆனால் அது சர்ச்சையாகி விடும். காமிரா முன் அப்படிச் செய்ய முடியாது. இன்னொரு பக்கம், ஆர்த்தியும் தன் தாய் நினைவு நாளன்று அழும் காட்சியையும் நாம் பார்த்தோம். ஒருவர் எதற்கும் நெகிழவோ அழவோ கூடாது என்பதெல்லாம் தேவையற்ற பிடிவாதம். அதுதான் வீரம், உறுதி என்று நினைத்துக் கொள்வதெல்லாம் அபத்தம். எப்பவும் அழுது கொண்டிருப்பதுதான் பலவீனம். அழும் சூழலைக் கூட அடக்கி தவிர்ப்பது முட்டாள்தனம். ஆண்களுக்கு அப்படித்தான் முட்டாள்தனமாக கற்றுத்தரப்பட்டிருக்கிறது. 

Bigg Boss

**

‘தகுதியில்லாத நபர்’ வரிசையில் இணைந்து விட்டதால், தான் வெளியேற்றப்படுவது உறுதி என்று பிந்து நினைத்து விட்டார் போல. “நான் போனா அழுவீங்களா?” என்று மற்றவர்களை விசாரித்தார். “ஏன் அழணும்… சிரிக்கணும். வீட்டுக்குப் போய் கதவைச் சாத்திக்கிட்டு வேணா ‘பே’ன்னு அழலாம்” என்றார் வையாபுரி. காமிரா முன் போய் அப்பப்ப அழுத ஆசாமி கிட்ட எவ்வளவு மாற்றம்!

“இங்க வரும் போது என் சொந்த ஃபேமிலியை மிஸ் பண்ணினேன். வெளியே போயிட்ட பிறகு இந்த பிக்பாஸ் ஃபேமிலியை மிஸ் பண்ணுவேன்” என்றார் பிந்து. அது என்னமோ பிக்பாஸ் வீட்டில் சில காலம் கழித்தால் கூட, அருமையான தத்துவம், ரைமிங்கான பஞ்ச் டயலாக் போன்றவையெல்லாம் தானாக வந்து விடுகிறது. நம் தமிழ் சினிமாவின் வசனகர்த்தாக்களை இப்படி சில காலம் அடைத்துப் பார்க்கலாம். 

**

கமல் வந்தார். “நாட்கள் குறைந்து கொண்டே வருகின்றன. ஆனால் பாசம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இவங்க இன்னமும் மாறினா மாதிரி தெரியலை. எனவே கொஞ்சம் அறிவுரை சொல்ல வேண்டியிருக்கிறது” என்று அகம் டிவி வழியாக உள்ளே சென்றார்.

“பாருங்க.. பாசம் கீசம்லாம் போதும். அதுக்காக அதை வேணாம்னு சொல்லலை. உள்ளே வெச்சுக்கங்க.. குதிரைப்பந்தயத்தை பார்த்தீங்கன்னா.. எல்லா குதிரையும் வேகமாக ஓடணும்னுதான் எல்லோரும் எதிர்பார்ப்பாங்க.. திடீர்னு நாலைந்து குதிரைங்க புல் மேய ஆரம்பிச்சிடுச்சின்னா, நமக்கு எப்படித் தோன்றும்? பார்க்கறவங்களும் அமைதியாக புல் மேய மாட்டாங்க இல்லையா?” என்றார் கமல். (ஆனால் இது தவறான உதாரணம்).

Bigg Boss

தன் தவறை உணர்ந்தோ என்னமோ, ஓட்டப்பந்தயத்தை உதாரணமாக சொன்னார். உசேன் போல்ட்டை தாண்டிச் சென்று தங்கப்பதக்கம் வென்றாலும் காட்லின் மண்டியிட்டு போல்ட்டிற்கு குருவணக்கம் வைத்த சம்பவத்தை மேற்கோள் காட்டினார். குத்துச்சண்டைப் போட்டியின் போது முகம்மது அலி ‘ஸாரிண்ணே.. தெரியாம மூக்குல குத்திட்டேன்’-ன்னு சொன்னா நன்றாக இருக்குமா? கணேஷூம் ஆர்த்தியும் அன்னிக்கு மழைல பிடிவாதமா நின்ன போது ‘வந்துடுங்க’ன்னு கூப்பிட்டது உத்தின்னு நினைச்சேன். அதுவும் இல்லையா? என்றெல்லாம்  அவர் சுற்றிச் சுற்றி சொல்ல வருவது என்னவென்றால், பாச உணர்வுகள் ஒருபக்கம் இருந்தாலும் போட்டி என்று வந்து விட்டால் அது சார்ந்த முனைப்பை மட்டுமே முன்நிறுத்த வேண்டும் என்பது. 

“உங்க கிட்ட ஆர்வம் இருக்கு, ஆனா முனைப்பு இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை-ன்னு ஒண்ணு இருக்கணும். எல்லோருக்கும் நல்லவங்களா இருக்க முடியாது. தனித்தனி அபிப்ராயம் இருக்கணும். அதைச் சொல்லணும்… இப்ப நான் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்…”  என்று சொன்ன கமல் ‘கைத்தட்டுங்கப்பா” என்ற பாவனையில் சபையோரைப் பார்க்க ‘சரி கைத்தட்டறோம். பொழச்சுப் போங்க” என்று ஆதரவாக சபை கைத்தட்டியது. “ஒவ்வொரு மனுஷனுக்கும் தனித்தனி குரல், முகம் இருக்கணும். Every person is unique’ என்று உத்வேகமும் ஆவேசமும் தரும் உரையை ஆற்றினார் கமல்.

அதைக் கேட்ட வையாபுரி, ‘சார்.. எதுவாக இருந்தாலும் இனிமே நான் முன்னாடி நின்னு ஓடுவேன்’ என்றார் உடனடி உற்சாகமாக. “இல்லைங்க. வையாபுரி… task மட்டுமே நான் சொல்லல. இது வாழ்க்கையோட ஒரு பகுதி. உங்களோட உடல் வலிமை, மனவலிமை, கருணை, கோபம், பொறுமை.. என்று எல்லாமே சோதிக்கப்படும் விளையாட்டு. ‘வெளிய இருக்கறவங்க.. எத்தனை உணர்ச்சிவசப்படறாங்கன்னு பாருங்க.... ‘இவங்களைத் திட்டுங்க.. இவங்களை அடிங்க’ன்னு ஆவேசப்படறாங்க.. எனக்குத் தெரியும் இது விளையாட்டு’ன்னு… சரி… நான் சொன்னது புரிஞ்சிருக்கும்-ன்னு நெனக்கிறேன். புரிஞ்சுடுச்சின்னு அடையாளமா நம்பிக்கையா ஒரு வார்த்தை சொல்லுங்க பார்க்கலாம் என்றார்.

Bigg Boss 

‘100 நாட்களைக் கடந்து உறுதியாக வெற்றி பெறுவேன்’ என்கிற வாக்குகுறுதியை ஒவ்வொருவரும் தந்தனர். ‘எனக்கென்று ஒரு குரல், மொழி, அடையாளம் இருக்கிறது. அதை நெறிக்காதீர்கள் என்று சொல்லும் தைரியம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்’ என்று தன் பேச்சின் இடையில் அரசியல் பொடியை கமல் தூவினார். வெளியில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளைப் பற்றி போட்டியாளர்கள் அறியாததால் அவர்களுக்கு இது புரியாமல் இருக்கலாம். பார்வையாளர்களுக்கு புரியும். 

“சரி.. கணேஷ் காப்பாற்றப்பட்டு விட்டார். நாமினேஷன் பட்டியலில் இருக்கும் மூவருக்கும் ஒரு சிறிய போட்டி. நான் இத்தனை நேரம் சொன்னதை நீங்க எந்த அளவிற்கு புரிஞ்சுக்கிட்டீங்கன்னு பார்க்கணும். நான் ஒரு வார்த்தை சொல்வேன். அதைச் சொன்னவுடனே உங்களுக்கு என்ன தோணுதோ அதை நேர்மையா சொல்லணும்” என்றார் கமல். 

(உளவியல் கல்வியில் இது அடிப்படையான பாடம். ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கு எதிர்வினையாக சட்டென்று ஒரு வார்த்தையை சோதனைக்கு உள்ளாகும் subject சொல்ல வேண்டும். இப்படி உடனடியாக பல வார்த்தைகளை அவரிடமிருந்து பெறுவதன் மூலம் அவருடைய ஆழ்மனதை சற்று நெருங்கிப் பார்க்க முடியும்).

இப்படியாக ஒவ்வொருவரும் எதிர்வினையாற்றினர். யோசிக்காமல் சட்டென்று சொல்ல வேண்டும் என்பதுதான் இதன் ஐடியா. சிலர் யோசித்தார்கள். சட்டென்றும் சொன்னார்கள். ‘உலகம்’ என்கிற வார்த்தைக்கு ‘நீங்கள்’ என்று ஐஸ் வைத்தார் ஹரீஷ். ‘அத்தனை சின்ன உலகமா உங்களுடையது?” என்று கிண்டலடித்தார் கமல். இதன் அடிப்படை, யார் கமலை அதிகமாக புகழ்கிறார்கள் என்பதல்ல. பாராட்டு விழா மேடைகளைப் பார்த்து மக்களும் கெட்டுப் போயிருக்கிறார்கள் போல. அசந்தர்ப்பமான நேரத்தில் தனக்கு வந்த புகழை ஏற்காமல் கமல் தடுத்துக் கொண்டது சிறப்பு. 

Bigg Boss

நாமினேஷன் ஆகியிருந்த பிந்துவை நோக்கி கமல் கேட்ட கேள்வி இவ்வாறாக இருந்தது. ‘ஒருவேளை நீங்கள் வெளியேறுவதாக மக்கள் தீர்மானித்திருந்தால் அதன் காரணம் என்னவாக இருக்கும்?”. “ஒருவேளை நான் சீரியஸா இங்க இல்லாம இருந்தது காரணமாக இருக்கலாம்” என்றார் பிந்து. அடுத்த கேள்வி சுஜாவிடம். “மக்களுக்கு உங்க கிட்ட பிடிச்ச விஷயம், பிடிக்காத விஷயம் என்னவா இருக்கும்னு நெனக்கறீங்க?”  “நான் நானா இருக்கேன்” என்று இரண்டிற்கும் அதே பதிலைச் சொன்னார் சுஜா. “ஏன் என்னை வெளியே அனுப்பணும்னு நெனச்சிருப்பாங்கன்னா.. “நான்.. இன்னமும் உள்ளே இறங்கி சில விஷயங்களை பெட்டரா பண்ணியிருக்கலாம்”னு நெனச்சிருப்பாங்க’ என்றார் ஹரீஷ். 

“ஓகே… ஜூலி…. நேர்மையான பதிலாக இருக்கணும். வெளியே போறதுக்கு முன்னாடி, சுஜாவிற்கு நீங்க ஏதாவது அட்வைஸ் தரணும்னு விரும்பினா என்ன சொல்வீங்க?” என்று கேட்டார் கமல். “அவங்க அப்பா விஷயத்துல ரொம்பவும் அழறது ஒரு மாதிரியா இருக்கு. இது அனுதாபத்துல கிடைச்ச வெற்றியா ஆகிடக்கூடாது. இது போட்டிக்கான களம். கடுமையா உழைச்சு ஜெயிச்ச வெற்றியா இருக்கணும்” என்றார் ஜூலி. அவரின் இந்த அபிப்ராயம் சரியானது. முதலில் முகத்தைச் சுளித்த சுஜா, பின்பு ஜூலியின் கருத்தை ஏற்றுக் கொண்ட முகபாவத்தை வெளிப்படுத்தினார். 

“ஆர்த்தி… நீங்க பிந்துவிற்கு என்ன சொல்வீங்க?” என்று கமல் கேட்க … “நாங்க நிறைய பெண்கள் வெளியே வந்துட்டோம். இருக்கறது கம்மி. எனவே சுஜாவும் பிந்துவும் பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல –ன்னு நிருபிச்சு.. போட்டி போட்டு வெற்றி பெறணும்” என்றார் ஆர்த்தி “இனிமேதான் நிரூபிக்கணுமா? பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று?” என்று ஆரத்தியை மடக்கினார் கமல். “வையாபுரியை கேட்டுப் பாருங்க.. குடும்பத் தலைவர் யாருன்னு சொல்வாரு..”என்று கமல் கூற, ‘மனைவிதான் சார்’ என்றார் வையாபுரி. பார்த்துக் கொண்டிருக்கும் வீட்டம்மணி உச்சி குளிர்ந்திருப்பார்.

“இன்னமும் dedicated-ஆ இருக்கணும்” என்பது சக்தி ஹரீஷிற்கு கூறிய அறிவுரை. தோற்றவர்கள் போட்டியில் இருப்பவர்களுக்கு அறிவுரை கூறுவதா என்று சிலருக்குத் தோன்றலாம். ஒரு நோக்கில்,  தோற்றவர்கள்தான் சரியான அறிவுரையைத் தர முடியும்.

 Bigg Boss

**

பார்வையாளர்களை நோக்கிய பேசிய கமல், “இந்த வாரம் எவிக்ஷன் வேண்டாமேன்னு உங்க தரப்பில் இருந்தும் நிறைய வேண்டுகோள்கள் வந்திருக்கின்றன. நாங்கள் அதற்கு செவிசாய்க்கிறோம். இருந்தாலும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.. என்னன்னு பார்ப்போம்.. 

பொதுவாக அகம் டிவிக்குள்ள முறையா அறிவிச்சிட்டுதான் போவோம். இப்ப திடீர்னு போகப் போறேன்” என்றவர், வீட்டில் இயல்பாக உலவிக் கொண்டிருந்தவர்களை நோக்கி, சுஜா, பிந்து, ஹரீஷ் தவிர மற்றவர்கள் அனைவரும் freeze என்றார். (லக்ஸரி பட்ஜெட்டிற்கான இந்த task முடிந்து விட்டது என்றாரே பிக்பாஸ்). 

எவரும் இந்த அதிரடி நுழைவை எதிர்பார்க்காததால் உண்மையாகவே திகைத்து நின்றனர். ஆர்த்தி திறந்த வாயை மூடவில்லை. ஹரீஷ் உற்சாகமாக நடனமாட ஆரம்பித்தார்.. ‘Freeze சொன்னது நான்.. யாரும் அசையக்கூடாது” என்று எச்சரித்தார் கமல். “எவர் காப்பாற்றப்பட்டாரோ, அவரை freeze என்பேன்” என்ற கமல், பிந்து மற்றும் ஹரீஷை அவ்வாறு உறையச் சொன்னார். எனில் எளிதில் விளங்கிற்று. சுஜா வெளியேற்றப்படவிருக்கிறார் என்று. (எவிக்ஷன் இல்லை யென்பது பார்வையாளர்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியம் என்பதால் இந்த விளையாட்டு சுவாரசியமாக இருந்தது).

“சுஜா… யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம விடைபெற்றுட்டு வெளியே வாங்க” என்றார் கமல். தான் உண்மையிலேயே வெளியேற்றப்பட்டு விட்டோம் போல என்கிற கலக்கம் சுஜாவின் முகத்தில் தெரிந்தது. உறைந்து நிற்கும் ஒவ்வொருவரிடமும் உருக்கமாக விடைபெற்றுக் கொண்டார் சுஜா. பதிலுக்கு அவர்கள் ஏதும் சொல்ல முடியாது. கமலின் (அல்லது பிக்பாஸின்) திருவிளையாடல். 

“ஆரவ் போறதுக்குள்ள உண்மையைச் சொல்லு.. நிச்சயம் நீ ஜெயிப்பே. மற்றவர்களை சார்ந்திருக்காதே. நீயா முடிவு எடு” என்று ஆரவ்விடம் சொன்னார். (எந்த உண்மை?) சிநேகனிடம் கவிதை மாதிரி எதையோ சுஜா சொன்ன போது..  ‘நாட்ல..  இந்த கவிஞர்கள் தொல்லை தாங்கலைப்பா.. ரெண்டு வரி ரைமிங்கா… சொல்றவன்லாம் கவிஞர்னு சொல்லக்கிறான்” என்று கதற வேண்டும் போல் இருந்தது. சிநேகனின் மைண்ட் வாய்ஸூம் அதையே நினைத்திருக்கக்கூடும். 

Bigg Boss

“ஜூலி.. மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு உண்மையா இரு.. உன் வாழ்க்கை அதுலதான் இருக்கு” என்று ஜூலிக்கு உபதேசம் செய்தார் சுஜா. ஜூலியின் மைண்ட் வாய்ஸை இங்கு மொழிபெயர்த்தால் நிச்சயம் தணிக்கை செய்யப்பட்டு விடும். .. இப்படியாக ஒவ்வொருவரிடமும் எதையோ சொல்லி விடைபெற்றார் சுஜா. இயல்பாகவே விடைபெற்றிருக்கலாம். 

“என்னை பிரிஞ்சு நீங்க கஷ்டப்படுவீங்களான்னு எனக்கு தெரியாது. ஆனா நான் ரொம்ப கஷ்டப்படுவேன். கடைசியா நான் யாருன்றதை உங்க கிட்ட நிரூபிச்சிட்டேன். எனக்கு அது போதும்” என்கிற சுஜாவின் விடைகூறல் உண்மையிலேயே பரிதாபமாக இருந்தது. மற்றவர்கள் சுஜாவிற்கு ஆறுதல் கூற துடித்தாலும் கமலின் எச்சரிக்கை காரணமாக, உள்ளுக்குள் ஊறும் துயரத்துடன் சிலையாக நின்றனர். 

இந்தக் காட்சிக் கோர்வையை ஒருவகையில் Dark Humour எனலாம். சுஜா வெளியேற்றப்படவில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால் இது சுஜாவிற்கோ இதர போட்டியாளர்களுக்கோ தெரியாது. எனவே இத்தனை சோகமும் துயரமும் வீண் என்கிற நோக்கில் நமக்கு ஒருபக்கம் சிரிப்பும் வரும். அதுதான் இந்த விளையாட்டின் குரூரமான சுவாரசியமே. எல்லோரும் கலங்கினார்கள். கணேஷ் கண்களை மூடிக் கொண்டார். 

ஆனால் ஜூலியால் மற்றவர்களைப் போல் நிற்க முடியவில்லை. கமலின் எச்சரிக்கையையும் மீறி சுஜாவிற்கு உதவ ஓடினார். அவர் இதை உண்மையான அனுதாபத்துடன் செய்திருந்தால் மகிழ்ச்சி. ஆனால் “விளையாட்டில் கடுமையாக இருங்கள்’ என்கிற எச்சரிக்கையை மீறிய நோக்கில் இது பிசிறு. ஆனால் ஜூலியின் உதவியை சுஜா ஏற்கவில்லை. ‘நான் பார்த்துக்கறேன்’ என்கிற மாதிரி பெட்டியுடன் நகர்ந்தார். என்னதான் ஒவியாவை தான் நகலெடுக்கவில்லை என்று சுஜா சொன்னாலும், தன்னிச்சையாக அப்படி நடந்து கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. ஓவியாவும் அப்படித்தான் வெளியேறினார். அல்லது, அனுதாபம் சார்ந்த எந்தவொரு கிரெட்டிட்டும் ஜூலிக்கு சென்று விடக்கூடாது என்று நினைத்தாரோ..  என்னமோ…  இந்தப் பெண்கள்..

Bigg Boss

எல்லோரையும் ரிலீஸ் செய்தார் கமல். எனவே சுஜாவை நோக்கி அவர்கள் ஓடியது நெகிழ்ச்சி. சிநேகன் தாங்க முடியாமல் அழுது தீர்த்தார். (நினைக்கும் போதெல்லாம் அழுகை வருவது ஒரு வரம்). ‘விதி வந்தா போய்த்தான் ஆகணும்” என்று தத்துவம் பேசினார் சுஜா.

சுஜாவுடன், சக்தி ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோரும் வெளியேறுவதாக ஒரு பாவனை நிகழ்த்தப்பட்டது. உண்மையாகவே அவர்கள் வெளியேறி விட்டார்களா அல்லது பாதாள அறையில் ஒளிக்கப்பட்டு திரும்பவும் வருவார்களா என்று நமக்குத் தெரியவில்லை. 

இந்த நால்வருக்காகவும் மற்றவர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை தந்தனர். ‘ஒருவேளை அவர்கள் மிகையாக எதிர்வினையாற்றுகிறார்களோ’ என்று நமக்குள் சிலருக்குத் தோன்றலாம். இத்தனை குறுகிய நாட்களில் இத்தனை நட்பு தோன்றுமா என்றும். ஒரேயிடத்தில் பல நாட்கள் ஒன்றாகப் புழங்கும் போது பல கசப்புகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அந்த இணக்கமும் நட்பும் தன்னிச்சையாக தோன்றி விடும். அவர்கள் இனி இருக்கப் போவதில்லை என்பதை மனம் உணரும் போது தானாக துயரத்தை அடையும். 

**

சுஜா  திரும்பி வருவார் என்கிற நம்பிக்கையை வையாபுரி மட்டும் வெவ்வேறு விதமாக சொல்லிக் கொண்டிருந்தார். பத்து நபர்களாக இருந்த வீடு எண்ணிக்கையில் ஆறாக சுருங்கி விட்ட திடீர் துயரம் அவர்களிடம் தெரிந்தது. பிந்து மட்டுமே வீட்டின் பெண் உறுப்பினர் என்பதால் ‘எங்கள் பெட்ரூமில் வந்து படுத்துக்கங்க” என்று ஆண் உறுப்பினர்கள் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தினார்கள். “தொன்னூறு சதவீதம் நான் இல்லைன்னா.. பிந்துதான் போவோம்’னு நெனச்சோம். சுஜா போவாங்கன்னு நெனக்கலை’ என்றார் ஹரீஷ். 

Bigg Boss

**

சுஜாவின் வெளியேற்ற விஷயம் தொடர்பாக ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. கமல் அதை விளக்கினார். “இப்ப இந்த வழியா சுஜா வருவாங்கன்னு நெனப்பீங்க.. இல்லை. மற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தமிழில் இதுவரை இல்லை. எனவே இது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். சுஜா வெளியேற்றப்பட போவதில்லை. இங்கேயே ஒரு ரகசிய அறை இருக்கிறது. எல்லா வசதிகளும் இருக்கும் அறை. திரிசங்கு சொர்க்கம் மாதிரி. அங்க சுஜா இருப்பாங்க.. ஒருவகையில் எவிக்ஷனை விட மோசமான நிலைமை இது –ன்னு சொல்லலாம். வீட்ல நடக்கறதை சுஜா பார்ப்பாங்க.. ஆனா பேச முடியாது. கிட்டத்தட்ட ஆவி மாதிரி வீட்டை சுத்துவாங்க’ என்றார் கமல்.

“தொடர்ந்து அவங்க இங்க இருக்கப் போறதில்லை. சில நாட்கள் இருக்கலாம். சீக்ரெட் ரூமிற்குள் அவங்க வந்தபிறகு அவங்க கூட பேசலாம்” என்று முடித்தார்.

தனிமை அறையில் சுஜா சற்று திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். தன்னை வெளியேற்றாமல் ஏன் இங்கு வைத்திருக்கிறார்கள் என்று அவருக்கு குழப்பமாக இருந்திருக்கக்கூடும். தண்ணீருக்கு பயந்து நெருப்பில் குதித்த கதையாகி விட்டது சுஜாவின் நிலைமை. 

இந்தப் பக்கம், பிக்பாஸ் வீட்டினுள் சிநேகனும் பிந்துவும், சுஜாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். “இந்த வாரம் எவிக்ஷன் இருக்காதுன்னு நெனச்சோம். நான் இல்லைன்னா ஹரீஷ்தான் போவோம்னு நெனச்சேன்’ என்றார் பிந்து. “ஆண்களின் எண்ணிக்கை நிறைய இருந்ததால் ஹரீஷ் போவார் என்று நினைத்தேன்’ என்றார் சிநேகன். (அபத்தம்) “ஆனா சுஜா.. தைரியமான பொண்ணு” என்று சான்றிதழ் தந்தார்.

**

ரகசிய அறையில் இருந்த சுஜாவிற்கு சில விதிமுறைகள் வாசிப்பதற்கு தரப்பட்டது. சிகப்பு நிற பல்பு எரிந்தவுடன் சுஜா பாத்ரூமிற்குள் சென்று பூட்டிக் கொள்ள வேண்டும். பிக்பாஸ் பணியாளர்கள் உணவு மற்றும் இதர ஏற்பாடுகளை செய்வார்கள். பாத்ரூமினுள் உள்ள சிவப்பு விளக்கு அணைந்தவுடன் வெளியே வர வேண்டும். நீல நிற பல்பு எரிந்தால் பிக்பாஸ் பேச விரும்புகிறார் என பொருள். சுஜாவும் பிக்பாஸிடம் பேசலாம். அதற்கான ஹெட்செட் உண்டு. .. 

Bigg Boss

பழைய கால திரைப்படங்களில் நம்பியார்.. அசோகன் ஆகியோர் உலவும் விநோதமான ரகசிய அறைகளில் என்னென்னவோ நிறங்களில் பல்புகள் எரியும். ஒரு சுவிட்சை அழுத்தியவுடன் கதவு திறக்கும். அது போன்ற பயங்கர ஏற்பாடுகள் அந்த வீட்டில் இருந்தன. 

மறுபடியும் கட் செய்தால் பிக்பாஸ் வீடு. “சிலரிடம் மன்னிப்பு கேட்கணும். எல்லாவற்றையும் இங்கேயே செட்டில் செய்து விட்டு வெளியேறணும்” என்று வையாபுரியிடம் சிநேகன் அனத்திக் கொண்டிருந்தார். 

“ஹலோ சுஜா.. எப்படியிருக்கு புது வீடு?” என்று நக்கலாக விசாரித்தார் கமல். ‘என்ன சார்.. என்னை இப்படி கொண்டு வந்து விட்டுட்டீங்க?” என்று பரிதாபமாக சொன்னார் சுஜா. ஹெட்போன் வழியாக அவர்களின் உரையாடல் நடந்தது. 

அதன் விதிமுறைகளை மீண்டும் சுஜாவிடம் விளக்கினார் கமல். “நீங்க வீட்டுக்குள்ள இருக்கறவங்களைப் பார்க்கலாம். ஆனா பேச முடியாது. ஒரு விஷயம் இங்க பேசும் போது சத்தமா பேசாதீங்க.. நடுவுல ஒரு சுவரு மட்டும்ன்றதால.. அவங்களுக்கு கேட்டுடும்.” என்றார் கமல். உடனே சுஜா.. “சரிங்க.. சார்’ என்று தாழ்ந்த குரலில் பேச.. “அவ்ளோ.. ரகசியமா வேணாம்.. நீங்க மனசுக்குள்ள பேசிக்கிட்டீங்கன்னா எனக்கு கேட்காது” என்று தானும் தாழ்ந்த குரலில் பேசிய கமல். ‘அய்யோ.. நான் சத்தமா பேசலாம். நான் ஒரு லூசு…’ என்று சொன்னது தன்னிச்சையான நகைச்சுவையோ அல்லது பாவனையோ தெரியாது, அவரின் நகைச்சுவை திரைப்படங்களில் பார்த்த காட்சி போல சுவாரசியமாக இருந்தது. 

“வேற யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது” என்று கமல் உற்சாகப்படுத்த, “எனக்கு எல்லாமே அப்படித்தான் சார் நடக்குது” என்று பரிதாபமாக பதில் சொன்னார் சுஜா.  “பாருங்க.. இதுக்காக நீங்க நன்றி சொல்லணும்… அதுக்கு கூடவா சொல்லித்தரணும்” என்று கிண்டலடித்தார் கமல். 

அந்த அறையில் இருந்த தொலைக்காட்சியின் வழியாக பிக்பாஸ் வீட்டின் உள்ளே நடக்கும் நிகழ்வுகள் காட்டப்பட்டன. ‘பார்த்தீங்களா.. இப்படி பார்த்துக்கிட்டே இருக்கலாம்” என்றார் கமல்… ‘சார்.. இதுல சன்டிவி வருமா சார்” என்று சுஜா கேட்டிருக்கலாம். 

“நீங்க இங்க எத்தனை தைரியமா இருக்கீங்கன்றதுதான் முக்கியம். சாப்பாடுலாம் வேளா வேளைக்கு வந்துடும். பயந்தீங்கன்னா.. நானே ரெண்டு கரப்பான்பூச்சியை எடுத்துட்டு வந்து போடுவேன். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். நீங்க இன்னமும் எவிக்ட் ஆகலை. .. புரியுதா..இங்க கொஞ்ச நாள்தான் இருப்பீங்க.. அப்புறம் உள்ளே போயிடுவீங்க’ என்றதும் சுஜாவின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. 

கடுங்காவல் தனிமைச் சிறையில் சுஜா அடைக்கப்பட்டது ஒருபுறம் பரிதாபமானதுதான் என்றாலும், சமைக்க வேண்டாம், நாள் பூராவும் பிக்பாஸ் வீட்டு மனிதர்களை பார்த்துக் கொண்டிருக்கலாம், என்பது சுவாரசியமான விஷயம். தனிமையை விரும்புபவர்களுக்கு இது அற்புதமான ஏற்பாடு. இது தற்காலிகமானது என்பதால் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. 

தனிமையறையில் அடைக்கப்பட்ட சுஜா அதிகம் பயந்துவிடக்கூடாது என்கிற கவலையுடன் உற்சாகமாக தைரியமூட்டிய கமலின் உரையாடலை நிச்சயம் பாராட்ட வேண்டும். 

Bigg Boss

**

அகம் டிவிக்குள் மறுபடியும் வந்த கமல், இம்முறை பெட்டியுடன் வந்தார். அதற்குள் ஒரு கோல்டன் டிக்கெட் இருக்கிறது. தினந்தோறும் நிகழப் போகும் task-களில் அதிகம் வென்றவருக்கு அந்த கோல்டன் டிக்கெட்டை கமலே நேரடியாக வழங்குவார். அதன் மூலம் இறுதிப்போட்டிக்கு அவர் நேரடியாக தகுதியடைவார். அவரை எவரும் நாமினேஷனா, எவிக்ஷனோ செய்ய முடியாது. இறுதிப் போட்டியில் நான்கு பேர் இருப்பார்கள்’ என்றெல்லாம் பெட்டியின் சிறப்பை விளக்கினார் கமல்.

அதற்கு முன், “:யாருப்பா.. அது கதவைத் தட்டறது.. பொட்டின்னவுடனே வந்துட்டீங்க.. இது தேர்தல் டிக்கெட் இல்லைங்க” என்று அரசியல்வாதிகளை கிண்டலடித்தது அருமை. மனிதர் அடங்கமாட்டார் போலிருக்கிறது. போட்டியாளர்களுக்கு கோல்டன் டிக்கெட் பற்றிய போதிய ஆசையைக் காட்டி அதன் அருமையையும் விளக்கியபிறகு அவர்களின் முகத்தில் உற்சாக பல்பு எரிந்தது. 

முதல் டாஸ்க், போட்டியாளர்கள் ஜிப்ரீஷ் மொழியில் அதிக நேரத்திற்கு பேச வேண்டும். எவர் அதிக நேரத்திற்கு பேசுகிறாரோ.. அவர் முதல் சவாலின் வெற்றியாளர். 

விக்ரம் திரைப்படத்தில் .. சலாமியா பாஷையில் வரும் பாடலை எழுதியது தான்தான் என்கிற ருசிகரமான தகவலைச் சொன்னார் கமல். “ஒரு பய தப்பு கண்டுபிடிக்க முடியாது.. ஏன்னா அது யாருக்கும் புரியாது” என்றார். நான்தான் அதன் ஆசான். ஆனால் கலைவாணர் இதை முன்பே செய்திருக்கிறார்…. “:தரைல உட்கார்’ என்பதை அப்படியே திருப்பிச் சொல்லி காமெடி செய்திருக்கிறார்” என்கிற தகவலையும் சொன்னார். 

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ‘என்னைக் கொஞ்சம் மாற்றி’ பாடலுக்கு முன் வரும்… ‘ஒமஹ மீயா… என்று வரும் விநோதமான வாக்கியங்களையும் இந்த வரிசையில் சேர்க்கலாம். இது தொடர்பாக பல விநோதமான சப்தங்களை எழுப்பி தமிழ் திரை இசையமைப்பாளர்கள் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள். 

இந்த ‘ஜிப்பரீஷ்’ மொழி எவ்வாறு தோன்றியது என்பதற்கு பல்வேறு விதமான தியரிகள் உண்டு. ஆறாம் நூற்றாண்டில் ஓர் இஸ்லாமிய ரசவாதியால் தோன்றியதாக ஒரு தகவலும், ஆங்கிலத்தில் 16-ம் நூற்றாண்டின் தோன்றியதாக இன்னொரு தகவலும் உண்டு. அரசியல்வாதிகள் மேடைகளில் பேசுவதையும் இந்த வகையில் சேர்க்கலாம். 

இந்தச் சவாலை எவ்வித தயக்கமும் இல்லாமல் உற்சாகத்துடன் ஆரம்பித்தார் வையாபுரி. பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் தொடர்ந்து பேசுவது சிரமம். நடிப்பு கற்றுத் தரும் பள்ளிகளில் இதையும் ஒரு பயிற்சியாக அளிக்கிறார்கள். சுயமான கற்பனைத் திறனை வெளிக்கொணர்வதற்கு இது நல்ல பயிற்சியாக இருக்கும். 

வையாபுரி அருமையான துவக்கத்தைத் தந்தார். அதை வைத்துக் கொண்டு மற்றவர்கள் தொடர ஓர் அருமையான பாதையை போட்டுத் தந்தார். என்றாலும் ‘நீங்க பேசியதுல.. எந்துகு.. எந்துகு..’ –ன்னு நெறைய முறை வந்துடுச்சு. அது தெலுங்கு.. பிந்துக்கு –ன்னுதான் சொல்லணும். என்றாலும் நல்லாயிருந்தது என்று பாராட்டிய கமல், ஜிப்ரீஷ் மொழியிலேயே பாராட்டைச் சொன்னது நகைச்சுவை. 

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/101868-bigg-boss-tamil-updates-day-77-suja-in-secret-room-its-gibberish-time-in-bigg-boss.html

Link to comment
Share on other sites

கழிவுக் குவியல், கோல்டன் கார்ட்... இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கோ?! - 78-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

வெளியேறுவோம் என்று தெரிந்தோ, அல்லது சவால்களை வீரத்துடன் செய்ய வேண்டும் என்று கமல் உத்வேகம் தந்ததாலோ என்னவோ காலையிலேயே எழுந்து வீட்டின் வாசலில் வீரமாக கோலம் போட்டுக் கொண்டிருந்தார் பிந்து. பரவாயில்லை, அலங்கோலமாக இல்லாமல் சுமாராகவே இருந்தது. இது மட்டுமல்லாமல் வீடு பெருக்கவும் கற்றுக் கொள்கிறார் பிந்து. பிக் பாஸ் வீட்டை விட்டுச் சென்றவுடன் விரைவில் ‘நல்ல செய்தியை’ எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது. பிந்து ஆர்மி கலைக்கப்படும் நேரம் விரைவில் வரும் போல. “பாருங்க, குப்பைக்கு வலிக்காம பெருக்கறாங்க” என்று கிண்டலடித்தார் ஆரவ்.

“2 நிமிஷம் கதவு திறக்கும் போது நீ ஏன் போகலை” என்று பிந்துவிடம் விசாரித்தார் வையாபுரி. ‘ரொம்ப அசிங்கமா இருக்குமில்லையா?” என்றார் பிந்து. “ஆமாம். ஃபேமிலியை பிரிஞ்சு இருந்தாலாவது அதைக் காரணம் காட்டி ஓடிடலாம். கெளரவமா இருக்கும். இப்பதான் ஃபேமிலியை கூட்டிட்டு வந்து காட்டினாங்க. இப்ப அந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. 75 நாள் இருந்துட்டு இப்ப ஓடி வந்துட்டியே-ன்னு கிண்டல் பண்ணுவாங்க” என்றார் வையாபுரி. ஆக.. பிந்துவும் வையாபுரியும் ஏதோ அரைமனதாகத்தான் இங்கு இருக்கிறார்கள் என்று தெரிகிறது. உடல்திறன் சார்ந்த சவால்களை இருவரும் வெறுக்கிறார்கள் என்று யூகிக்க முடிகிறது. எனவே இறுதிப் போட்டி வரை இவர்கள் தாக்குப் பிடிப்பது சிரமம்தான்.

பிந்து சமையல் செய்வதை லைவ் ரிலேவாக ஜாலியாக வர்ணித்தார் ஆரவ். கூடவே சிநேகனையும் ஓட்டினார். ஆரவ்வின் லூட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த சுஜா ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார்.  “ஆரவ்.. உங்களுக்கு நிறைய பெண் விசிறிகள் இருக்கிறார்களாமே? அவங்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?” என்று பதிலுக்கு கலாய்த்தார் பிந்து. “எப்ப பார்க்கலாம்னு வெயிட் பண்றேன்” என்ற ஆரவ்வின் கண்களில் பல்பு எரிந்தது. பல்பு வாங்காமல் இருந்தால் சரி. 

Bigg Boss

“இந்த வாரம் யாரும் வெளியேற மாட்டாங்கன்னு நெனச்சேன். அதனாலதான் கமல் சார் கிட்ட அதை வேண்டுகோளாவும் வெச்சேன். நான், இல்லைன்னா பிந்துதான் போவாங்கன்னு நெனச்சேன். சுஜா போவாங்க –ன்னு நெனக்கலை” என்றார் ஹரீஷ். (பார்வையாளர்கள் நினைத்ததும் இதுவாகவே இருக்கலாம்). ஆனால் ஆரவ் வேறொரு பரிமாணத்தை வைத்தார். “கணிப்புகளை வெச்சு சுஜாதான் போவாங்க –ன்னு நெனச்சேன். இதுவரை நடந்து எவிக்ஷனை கணக்குப் போட்டுப்பார்த்தா கரெக்டா தெரிஞ்சது” என்றார் ஆரவ். 

“ஏன்.. சுஜா என்ன தப்பு செஞ்சாங்க?” என்றார் ஹரீஷ். ‘தப்பு –ன்னு சொல்லலை. இருக்கறதுல அதிகம் நெகட்டிவ் விஷயம் இருக்கறவங்க எவிக்ட் ஆவாங்க –ன்னு நமக்குள்ள ஒரு கணக்கு இருக்கும்.. இல்லையா” அதை வெச்சு சொல்றேன்.” என்றார் ஆரவ். 

சில நபர்கள், மழை பெய்த பிறகு ‘அப்பவே நான் சொல்லல.. மழை பெய்யும்”னு என்பார்கள். அதைப் போலவே ஆரவ் சொல்வது இருந்தது. சீக்ரெட் ரூமில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுஜா சற்று ஜெர்க் ஆனார். 

Bigg Boss

**

பிக்பாஸ் வீட்டின் தலைவராக ஆரவ் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை வந்த வாய்ப்புகளை அவர் பயன்படுத்தாதால் இம்முறை கட்டாயத் தலைவர். ஆனால் நாமிஷேனில் இருந்து அவருக்கு விலக்கு இல்லை. சமையல், க்ளீனிங், வாஷிங் டீமை பிக்பாஸே பிரித்துக் கொடுத்தார். சமையல் குழுவில் பிந்துவும் வையாபுரியும் இருந்தது மற்றவர்களுக்கு சோதனையான விஷயம்தான். பிந்து முன்பு செய்த சேமியா கிச்சடி வேறு இப்பவும் கண்முன்னால் விபரீதமான உருவமாக நிற்கிறது. 

‘அவரவர் வேலைகளை அவரவரே செய்ய வேண்டும். மற்ற எவரும் உதவக்கூடாது’ என்பது பிக்பாஸின் கறாரான உத்தரவு. வெளியே வந்து பார்க்கும் போது ஆச்சர்யகரமாக ஒரு ஸ்கோர் போர்டு வைக்கப்பட்டிருந்தது. முதல் task ஆக இருந்த ஜிப்ரீஷ் மொழியில் பேசும் சவாலில் ஹரீஷ் வெற்றி பெற்றிருந்ததால் அவரின் பெயர் முதலில், பத்து மதிப்பெண்களோடு இருந்தது. கீழே அவரவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் வரிசை அமைந்திருந்தது. 


பிந்துதான் சமையல் பொறுப்பு என்பதால் இதர போட்டியாளர்கள் சற்று பீதியாக இருந்தார்கள். “எப்படி வேண்டுமானாலும் சமைப்பேன். நீங்க சாப்பிட்டாகணும்” என்று கட்டளையிட்டார் பிந்து. இருப்பதிலேயே சிரமமான task இதுவாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. 

அந்தப்பக்கம் சீக்ரெட் ரூமில் சுஜாவிற்கு கல்யாணச் சாப்பாடு. ராஜ மரியாதை. சமைக்காமலே விருந்து. ‘நன்றி’ பிக்பாஸ் என்றார் சுஜா. “லூசுப் பொண்ணு.. ஓவரா எமோஷன் ஆகுது” என்று சுஜாவைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் சிநேகன். 

பிக்பாஸ் நிகழ்ச்சியை லைவ்வாக பார்க்க வாய்ப்பு கிடைத்த ஒரே பார்வையாளரான சுஜா, இதைக் கேட்டு சிரித்துக் கொண்டார். ‘சுஜாவோட தங்கச்சி பேரு ‘கிரண்மை’. பேரு நல்லாயிருக்குல்ல. என்ன அர்த்தம் அதுக்கு? என்று விசாரித்தார் ஹரீஷ். “தெரியலை” என்றார் கவிஞர். அந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்த சுஜா, ‘அது சமஸ்கிருதம். சூரியன் –ன்னு பொருள்” என்று முனகிக் கொண்டார். ஆமாம், ஹரீஷ் எதுக்கு இந்த டீடெய்ல் உங்களுக்கு? சரியில்லையே, நண்பா. 

Bigg Boss

**

சுஜாவின் சீக்ரெட் ரூமில் நீல நிற பல்பு எரிந்தது. பிக்பாஸ் அழைப்பு அது. ஹெட்செட்டை மாட்டிக் கொண்ட சுஜா, இயந்திரக் குரல் வந்ததும் சற்று அதிர்ந்து போனார். “நீங்கள் வீட்டுக்குள் செல்லலாம், சுஜா” என்றதும் அதற்கும் வாய் பிளந்தார். வாக்குமூல அறைக்குள் வந்த சுஜாவை, இரண்டு பேரை நாமினேட் செய்யச் சொன்னார் பிக்பாஸ். சுஜா முதலில் நாமினேட் செய்தது ஆரவ்வை. 

“நான் இந்தப் போட்டியில் வெல்ல எத்தனை உறுதியாக இருக்கிறேன் என்று அவருக்குத் தெரியும். நம்பிக்கை தர வேண்டிய அவரே ‘நான் வெளியே போவேன்’ என்று யூகித்ததாக சொல்வது ஏமாற்றமாக இருக்கிறது. அவர் வார்த்தைகளில் கவனமில்லை. மற்றவர்களைக் குழப்புகிறாரா அல்லது அவரே குழம்புகிறாரா என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது.” என்று குழப்பமாகச் சொன்ன சுஜா, அடுத்த நாமினேஷனாக சிநேகனை சொன்னார். 

“என்னை லூசுப் பொண்ணுண்னு சொல்றார். நான் சரியான விஷயத்திற்கு மட்டும்தான் எமோஷன் ஆகறேன். நான் கல்லு கிடையாது. நேத்து நான் வெளியே கிளம்பும் போது அவர் கூட அழுதார். அப்ப அவர் எமோஷன் கிடையாதா? அவர் என்ன பொருளில் சொன்னார் என்று தெரியவில்லை. அந்த வார்த்தை என்னைக் காயப்படுத்தியது’ என்றார் சுஜா. 

சம்பந்தப்பட்டவர்கள் இயல்பாக சொன்ன விஷயத்தைப் பிடித்துக் கொண்டு சுஜா செய்யும் இந்த எதிர்வினை மிகையானது. எனவே அவர் நாமினேஷனுக்காக சுட்டும் காரணங்கள் அபத்தமானதாகத்தான் இருக்கின்றன. 

வாக்குமூல அறையிலிருந்து வீட்டுக்குள் வந்த சுஜாவை இதர போட்டியாளர்கள் ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்தனர். ஆனால் சுஜா எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாக வருவதைப் பார்த்து குழப்பமடைந்தனர். சுஜா அமைதியாக வந்தது மட்டுமல்லாமல், பிந்துவை நோக்கி ‘கிளம்பு, காத்து வரட்டும்’ என்பது போல் சைகையால் கைகளை ஆட்டி சொன்னார். சுஜாவின் இந்த நடவடிக்கையும் அபத்தமானது. 

வெளியே சென்று விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த சுஜா திரும்பவும் வருவதை மகிழ்ச்சியுடன் (?!) பார்த்த இதர போட்டியாளர்களை நோக்கி தன் மகிழ்ச்சியை சுஜா உடனடியாக பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆரவ் மற்றும் சிநேகனின் மீது வருத்தம் இருந்தால் பின்பு அதை தனியாக பேசியிருக்கலாம். ‘பாசத்தைக் காட்டாதீர்கள்’ என்று கமல் சொன்னதை சுஜா தவறாகப் புரிந்து கொண்டாரோ அல்லது தனிமையில் ஒரு நாள் இருந்ததால் அது சார்ந்த குழப்பத்தில் இருந்தாரோ என்று தெரியவில்லை. 

இதர போட்டியாளர்கள் நாமினேஷன் காரணங்களைக் கூறினார்கள். பிந்து, வையாபுரியை நாமினேட் செய்தது போலவே வையாபுரி, பிந்துவையும் நாமினேட் செய்ததும் சற்று ஆச்சரியம். வேறு வழியில்லை. இருக்கிற நபர்களில் எவரையாவது சொல்லியாக வேண்டும். இந்த நியாயமான காரணத்தைச் சொன்னார் வையாபுரி. ஆரவ், ஹரீஷை நாமினேட் செய்ததும் சற்று ஆச்சர்யம்தான். “ஏதோ ஒரு விலகல் தோன்றி விட்டது’ என்று கூறி ஆரவ்வை நாமினேட் செய்தார் ஹரீஷ். பழிக்குப் பழி.

‘தனக்கு கடுமையான போட்டியாளர்களாக இருப்பார்கள் என்கிற காரணத்தை’ நேர்மையாகச் சொல்லி ஆரவ்வையும் ஹரீஷையும் நாமினேட் செய்தார் சிநேகன். ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் – வையாபுரி, சிநேகன், ஆரவ் மற்றும் ஹரீஷ். ஒருவரையொருவர் திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டார்கள். ‘எவண்டா இந்த வேலையைப் பார்த்தவன்?” என்று வையாபுரி விளையாட்டாக கேட்ட சூழல் இலகுவாகியது. 

**

வந்ததில் இருந்தே முறைப்பாக இருந்த சுஜா தன் பஞ்சாயத்தை துவங்கினார். “கவிஞரே.. நான் லூசுதான்… நான் எங்க அப்பா விஷயத்துல மட்டும்தான் அதிக உணர்ச்சிவசப்பட்டிருக்கேன். அது என் வலி. மத்த எந்த விஷயத்துல அதிகமா எமோஷன் ஆகியிருக்கேன்னு சொல்லுங்க பார்க்கலாம்?” என்று கேட்க.. “லூசு –ன்றது நான் செல்லமா சொன்னது. அதைப் போய் சீரியஸா எடுத்துக்கிட்டே. உன்னை துணிச்சலான பொண்ணுன்னுதான் சொல்லிட்டு இருந்தேன்” என்றார் சிநேகன். ‘அப்ப எனக்கு புரிய வைங்க.. நான் எந்த வகைல லூசு?” என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார் சுஜா. 

அற்பமான விவகாரத்திற்கு பஞ்சாயத்து வைப்பதே லூசுத்தனம்தான்’ என்பதை சொல்ல விரும்பாத சிநேகன் இடத்தைக் காலி செய்தார். ஆரவ், ஹரீஷ் உள்ளிட்டவர்களும் சுஜாவின் இந்த விசித்திரமான நடடிவடிக்கையைப் பற்றி குழப்பத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். ‘ஒருவேளை இது task ஆக இருக்கலாம்’ என்றார் கணேஷ். “நான் போய் பேசப் போகும் போதுகூட “உனக்கு தைரியந்தாண்டா” என்று சொன்னார். எனக்குப் புரியவில்லை. நாம எதுவும் தப்பா பேசலை. அந்தந்த சூழல் காரணமா ஏதாவது சொல்லியிருந்தா கூட அப்புறம் பார்க்கும் போது ஒண்ணுமே இல்லாம ஆயிடும்” என்ற ஆரவ்வின் தரப்பு சரியானதாக இருந்தது. 

Bigg Boss

“நீங்க ஒரு மாதிரி கையைக் காட்டினது எனக்குப் பிடிக்கலை சுஜா. அதனால்தான் உங்க கூட பேசாம இருந்தேன்” என்றார் பிந்து. “நான் உங்களையெல்லாம் குழப்ப விரும்பினேன். உங்களை அப்படி கை காட்டுவதின் மூலம் நீங்கள் வெளியேற்றப்பட்டீர்கள் என்று சொல்ல விரும்பினேன். அதன் மூலம் மற்றவர்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் ஆகவில்லை. நான் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தபோது நீங்கள் ஏமாற்ற முயன்றது போல் நானும் ஏமாற்ற விரும்பினேன்” என்று ஏதேதோ காரணங்களைக் கூறினார் சுஜா.

நாம் ஒரு விஷயத்திற்காக எதையோ சொல்லி சமாளித்துக் கொண்டிருக்கும்போது உரையாடலின் போக்கில் அப்போதே நிறைய பொய்கள் உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கும். சுஜாவின் உரையாடல் அப்படித்தான் தோன்றியது. தனிமையில் இருந்ததால் அது சார்ந்த பாதிப்பில் இருக்கிறாரா, அல்லது ஆரவ் மற்றும் சிநேகனின் அபிப்ராயங்களால் உண்மையாகவே புண்பட்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. இரண்டாவது என்றால் அது அபத்தம். அவர்கள் கூறியது அந்தளவிற்கு கடுமையான அபிப்ராயங்கள் இல்லை. 

ஒருவேளை சுஜா உண்மையாகவே விளையாட விரும்பி அப்படிச் செய்திருந்தால் இது அதற்கான தருணம் அல்ல. திரும்பி வந்தவரை எல்லோரும் மகிழ்ச்சியுடன் வரவேற்க காத்திருக்கும்போது முறைப்புடன் விளையாடுவது முட்டாள்தனமானது. தான் ஒரு கடுமையான போட்டியாளர் என்பதை இறுதிப்பகுதியில் உணர்த்த சுஜா விரும்புகிறாரா என்று தெரியவில்லை. 

**

இனி இரவு உணவு சாப்பிடும்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கலாமா, வேண்டாமா என்று பார்வையாளர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும் போல. அந்தளவிற்கான சவால் போட்டிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. சாணக்கழிவுகளும் அழுகிய கத்தரிக்காய்களும் நிறைந்திருக்கும் கண்ணாடி பெட்டியில் மூன்று வாஷர்கள் போட்டு வைக்கப்பட்டிருக்குமாம். 

துண்டுச்சீட்டில் வரும் கேள்வியையொட்டி, போட்டியாளர்கள் தங்களுக்குள் கலந்தோசித்து ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் சென்று கழிவுகளுக்குள் கையை விட்டு வாஷரை தேடி எடுக்க வேண்டும். பாவம், இனி என்னவெல்லாம் செய்யச் சொல்வார்களோ! 

கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்ய மனித திறனை பயன்படுத்தாமல் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியே ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. இன்னமும் கழிவுக் குழிகளில் மனிதர்கள் இறங்குவதும் இறப்பதும் நின்றபாடில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியில் இப்படியொரு சவால். போட்டிகள் கடுமையாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் இறுதிப்பகுதியின் துவக்கமே இப்படி இருந்தால் இன்னமும் என்னென்னமோ வருமோ என்று இப்போதே கலக்கமாக இருக்கிறது. 

இதில் கூடுதல் கொடுமை என்னவென்றால், வீட்டின் பெட் ரூம் மூடப்பட்டு, தண்ணீர், கிச்சன் கேஸ் என்று எல்லாம் நிறுத்தப்படுமாம். இந்தச் சவாலை முடித்தால்தான் அவை திறக்கப்படுமாம். இது அப்பட்டமான பிளாக்மெயில். பிக் பாஸ் ஒப்பந்தத்தில் மனித உரிமைமீறலை மீறிய விஷயங்கள்தான் அதிகம் இருக்கும் போல. 

Bigg Boss

“உள்ளே சுச்சா.. கக்கா இருக்குமோ” என்றார் ஆரவ்.” அழுகின கத்தரிக்காயை சாப்பிடச் சொல்வார்களோ?” என்று லூசுத்தனமாக.. (மன்னிக்க சுஜா…) வெள்ளந்தியாக கேட்டார் சுஜா. பிக் பாஸ் காதில் விழுந்தால் அடுத்த சவாலில் அதைச் சேர்த்து விடுவார். பார்த்து பேசுங்க மக்களே.. ‘எதுன்னாலும் இறங்கிட வேண்டியதுதான்’ என்று உற்சாகமாக நின்றார் வையாபுரி. ‘மனதின் உள்ளே என்னவெல்லாம் வேண்டிக் கொண்டாரோ”

முதல் கேள்வி. “வீட்டை விட்டு இப்போதே வெளியேற பணம் கிடைத்தால் யார் அதைச் செய்வார்கள்?” போட்டியாளர்கள் கூடிப்பேசி ‘சாபூத்ரி’ போட்டு ஆரவ்வை தேர்ந்தெடுத்தார்கள். அவர் சென்று கழிவில் கைவிட்டு கலக்கி கலக்கி தேடினார். சில நிமிடங்களுக்குப் பிறகு தேடி எடுத்து விட்டார். “இடது கையை விட்டிருக்கலாமோ” என்கிற யோசனை தாமதமாகத்தான் வந்தது அவருக்கு.

இரண்டாவது கேள்வி: “இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களில் ஒருவர் வெற்றி பெறக்கூடாது என்று நீங்கள் நினைப்பவர் யார்?” 

நீண்டநாட்கள் சிரமப்பட்ட பழைய போட்டியாளர்களிடமிருந்து ஒருவர்தான் வெற்றி பெற வேண்டும் என்பது வையாபுரியின் வெளிப்படையான கருத்தாக இருந்தது. மற்றவர்களும் அதை ஒருமாதிரியாக ஒப்புக் கொண்டார்கள். எனவே இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹரீஷ். ஆனால் இவருக்கு நீண்ட நேரம் வாஷர் சிக்கவில்லை. “அடப்பாவிகளா.. ஒரு ரூபா கொடுத்தா கடைல இந்த வாஷரைக் கொடுப்பான். இப்ப இதுக்கு வந்த அந்தஸ்தைப் பாரு” என்பது அவர் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கலாம். எதை எதையோ எடுத்துப் பார்த்து பிரித்து ஏமாந்தார். பிறகு ஒருவழியாக வாஷரை தேடிக் கண்டெடுத்தார். 

மூன்றாவது கேள்வி: “வெற்றிக்காக தன் உயிர் நண்பனை குத்தக்கூட தயங்காத நபர் யார்?” இதற்கு சுஜாவை எல்லோரும் ஏகமனதாக தேர்ந்தெடுத்தார்கள். விளையாட்டு என்று வந்து விட்டால் அவர் மிகவும் ஆக்ரோஷமாக மாறி விடுகிறார் என்கிற காரணம் சொல்லப்பட்டது. முதலில் இதை உற்சாகமாக ஏற்றுக் கொண்ட சுஜா, காரணங்கள் வரவர முகம் சுருங்கினார். ஆனால் அதிர்ஷ்டம் சுஜாவின் பக்கம் இருந்தது. அவர் தேடிய சில நொடிகளிலேயே வாஷர் கிடைத்து விட்டது. 

**

‘கெஞ்சு, திருடு அல்லது பரிமாறு’ என்றொரு சவாலாம். போட்டியாளர்களின் புகைப்படம் அச்சிட்ட கார்டுகள் கலந்து வைக்கப்படும். ஒவ்வொரு போட்டியாளரும் அவரவர்களின் புகைப்படங்களை மற்றவர்களிடமிருந்து பெற்று 13 எண்ணிக்கையை சேர்க்க வேண்டும். ஒன்று சேர்த்த பிறகு காமிராவின் முன் காட்ட வேண்டும். முதலில் காட்டுபவருக்கு அதிக மதிப்பெண். கோல்டன் டிக்கெட்டுக்கான வாய்ப்பு கூடும். 

தாரையொலி ஒலித்தது. போட்டியாளர்கள் பரபரப்பாக சென்று கார்டன் ஏரியாவில் பார்த்தார்கள். ஒருவருக்கு கூட அவரின் புகைப்படம் இல்லை. மற்றவர்களின் புகைப்படங்கள் மட்டுமே கலந்து இருந்தன. எனவே, மற்றவர்களிடம் பேரம் பேசத் துவங்கினார்கள். சென்னை, பர்மா பஜாரில் நாம் ஏதாவது வாங்கச் சென்றால் அங்குள்ள வணிகர்கள், தங்களுக்குள் சங்கேத பாஷையில் பேசி விலைசொல்வார்கள். இல்லையென்றால் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அதைப் போலவே போட்டியாளர்களும் ரகசியமாக என்னெ்னனமோ செய்தார்கள்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், கோல்டன் கலரில் சில கார்டுகள் வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருக்குமாம். அது ஒரு புகைப்படத்திற்கு ஈடான கார்டாம். 

இந்த கோல்டன் கார்டு சுஜாவிற்கு முதலில் கிடைத்தது. ஹரீஷ் 12 கார்டுகளை சேகரித்து விட்டு ஒன்றிற்காக அலையும்போது அவருக்கு தந்து உதவினார் சுஜா. (சுஜா மேல எந்த தப்பும் இல்லையே” என்று ஹரீஷ் முன்பு சொன்ன வசனம் காரணமாக இந்தப் பிரியம் இருந்திருக்கலாம்). கணேஷ் அந்தப்பக்கமாக சென்றபோது வையாபுரி அவரிடமிருந்து எதையோ திருடிக் கொண்டார். சற்று கோபமான கணேஷ் “நீங்க பண்றது சரியில்லைண்ணே” என்று வாதாடினார். பிறகு வையாபுரி அதை திருப்பிக் கொடுத்தார். என்ன நடந்ததோ.

13 புகைப்படங்களையும் முதலில் சேர்த்து பெருமையுடன் காமிராவின் முன்பு காட்டியவர் பிந்து. பிறகு ஒவ்வொருவராக திருப்பதி கோயிலில் லட்டு வாங்குவதைப் போல வரிசையில் முந்த அடித்துக் கொண்டார்கள். “யாராவது என்னோட ஒரு கார்டை வைத்திருந்தா கொடுத்துடுங்களேன்” என்று பதற்றமாக தேடிக் கொண்டேயிருந்தார் ஹரீஷ். ஆட்டுக்காரன் ஆட்டுக்குட்டியை தோளிலேயே போட்டு தேடியது போல, கார்டு அவருடைய பாக்கெட்டிலேயே இருந்தது. ‘மலம்’ என்று ஆங்கிலத்தில் அலுத்துக் கொண்டு கார்டுகளை மீண்டும் காட்டி பிக் பாஸிடம் மன்னிப்பு கேட்டார். 

“இனிமே இன்னும் தெளிவா விளையாடணும் ப்ரோ.. என்னோட மூணு கார்டு சுஜா கிட்டதான் இருக்குன்னு நல்லா தெரியும். ஆனா இல்லவே இல்லைன்னு சாதிச்சிட்டா” என்று எரிச்சல்பட்டார் ஆரவ். போட்டியாளர்கள் இத்தனை நேரம் அலைந்து ஓய்வாக அமர்ந்தது பிக்பாஸிற்கு பிடிக்குமா, பிடிக்காது. வேலைநேரம் முழுவதிலும் கசக்கிப்பிழிவதுதானே முதலாளித்துவதனம்? “வீட்டினுள் கோல்டன் கார்டுகள் இன்னமும் மீதமுள்ளன. தேடி எடுப்பவர்களுக்கு இரண்டு மதிப்பெண்கள்” என்று ஆசையைத் தூண்டினார் பிக் பாஸ். போட்டியாளர்கள் பதறி ஓடினார்கள். 

Bigg Boss

சிநேகனுக்கு அதிக அதிர்ஷ்டம் அடித்தது. குப்பைத் தொட்டியின் அடியில், ஆரவ் புகைப்படத்தின் பின்னால், பிரிட்ஜூக்குள் பச்சை மிளகாய்க்கு இடையில்’ என்று கார்டுகள் அவருக்கு கிடைத்துக் கொண்டேயிருந்தன. சந்தோஷத்தில் குதித்தார். ‘அடப்பாவிகளா.. நாமும்தான் பிரிட்ஜ்ஜை திறந்து திறந்து தேடினோம். கிடைக்கவேயில்லையே” என்று ஆதங்கப்பட்டார் ஹரீஷ். 

மறுபடியும் அவர்கள் அமர்ந்தபோது பிக்பாஸ் இப்போது ரேட்டை கூட்டினார். ‘இன்னமும் ஒரு கார்டு இருக்கிறது. அதற்கு ஐந்து மதிப்பெண்கள்” மறுபடியும் ஓடினர். ஆனால் இரவு வெகுநேரமாகி விட்டதால் விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆனால் ‘எந்தக் காரியத்தையும் முடிக்காமல் தூங்கிப் பழக்கப்படாத சுஜா நள்ளிரவு நேரம் தாண்டியும் எங்கெங்கோ தேடிக் கொண்டிருந்தார். பாவமாக இருந்தது. ‘ஏன் தூங்க வேண்டியதுதானே.. ‘என்று சிநேகன் விசாரிக்கும் போது “நீங்க தூங்குங்க” என்று விரட்டியடித்தார். 

பல ஆண்டுகளுக்கு முன்னால் தங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் உலகின் பல இடங்களில் மனிதர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். பல உயிரிழப்புகள் நேர்ந்தாலும் தங்கத்தின் மீதான ஆசை அவர்களுக்கு போகவேயில்லை. கேவலம் அது ஒரு உலோகம்தானே என்கிற அபத்தம் யாருக்கும் உறைக்கவில்லை. 

இதைப் போலவே மனிதர்களுக்கு ஆசையைத் தூண்டி விட்டால் அவர்கள் எத்தனை அற்பமான விஷயத்திற்குள்ளும் இறங்கத் தயாராகி விடுகிறார்கள் என்கிற விஷயம் இன்றைய நாளின் மூலம் மறுபடியும் நிரூபணமானது. போட்டியாளர்கள் விளையாட்டுக்காக செய்ததை விடவும் ஆயிரம் மடங்கு கீழ்த்தரமான வேலைகளை செய்யும் மனிதர்கள் வெளியே இருக்கிறார்கள். ஆசையை துன்பத்திற்கு காரணம் என்று எளிமையாகச் சொன்ன புத்தனின் குரல் எவர் காதிலும் விழுவதில்லை. 

“இனி வரும் நாட்களில் போட்டிகள் கடுமையாகும். இவர்கள் தாக்குப் பிடிப்பார்களா, தவறி விழுவார்களா?” என்கிற குரல் அச்சத்தையூட்டியது. என்னென்ன நடக்கவிருக்கிறதோ? ஆண்டவரே!.. நோ. அவரையல்ல. உண்மையான ஆண்டவரைச் சொல்கிறேன்.

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/101976-bigg-boss-tamil-updates-day-78---waste-dump-golden-card--what-else-are-waiting-in-bigg-boss.html

Link to comment
Share on other sites

கரகாட்டக்காரன் காரு... பிக்பாஸ் வெச்சு செஞ்சாரு! 79-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss


‘ஓப்பன் தி டாஸ்மாக்கு’ என்கிற சமூகநீதிப்பாடலோடு பிக்பாஸ் வீட்டின் காலை தொடங்கியது. (உச்சநீதிமன்ற உத்தரவிடமிருந்து ஜகா வாங்கி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மறுபடியும் கடைகளைத் திறக்கத் தொடங்கி விட்டார்களாமே!. அதன் குறியீடுதான் இந்தப் பாடலா?)

கோல்டன் கார்டை தேடும் பயணம் காலையிலேயே தொடங்கி விட்டது. சுஜா இரவு இதற்காக முயன்றும் அவருக்குக் கிடைக்கவில்லை போல. ஆனால், ஆரவ்விற்கு அடித்தது ஜாக்பாட். மிக சாமர்த்தியமாக ஒளிக்கப்பட்ட கார்டை, தேர்ந்த துப்பறிவாளன் போல கண்டுபிடித்து விட்டார். இதன் மூலம் அவருக்கு ஐந்து மதிப்பெண் கிடைக்கும். 

ஸ்டோர் ரூமில் மணி அடிக்கச் சென்று பார்த்தனர். ஒரு குறிப்பிட்ட பிராண்டின் சமையல் பொருள்கள் இருந்தன. அந்தப் பொருள்களை வைத்து தினமும் ஒருவர் சமைக்க வேண்டும். சமையல் குறிப்புகளும் வழங்கப்பட்டிருக்கும். சமையல் செய்பவர் தலையில் செஃப் தொப்பி அணிய வேண்டும்” என்று பயங்கர பந்தவாக இருந்தது.  

முதல் செஃப் ஆக ஆரவ் மாறினார். பட்டாணிகளை வைத்து எதையோ செய்தார். அதைச் சாப்பிட்டார்களா, இல்லையா என்பதை காண்பிக்கவில்லை.

Bigg Boss

**

பிந்துவின் சோம்பேறித்தனம் குறித்து சிநேகன் உண்மையிலேயே கோபித்துக் கொண்டாரா அல்லது ஹரீஷ் உள்ளிட்டவர்களை வைத்துக் கொண்டு விளையாடினாரா என்று தெரியவில்லை. “பிக் பாஸிற்கு எதுக்கு வந்தீங்க? எந்த வேலையும் செய்யறதில்லை. எப்பப்பாரு சும்மா உட்கார்ந்திக்கிட்டு. பொம்பளைப் பிள்ளைக்குச் சமையல் கூட செய்யத் தெரியலைன்னா என்ன அர்த்தம்?” என்று திருமணமாகி ஒரு வருடம் ஆன கணவன், மனைவியை வெளுத்து வாங்குவது போல் வாங்கினார். 

‘அது என்னா. பொம்பளைப் பசங்க… ஆம்பளைப் பசங்க.. நான் வேலை செய்யாமயா இருக்கேன்… சமையலுக்குக் காய்கறி நறுக்கித் தந்ததெல்லாம் யாரு? நேத்தி கூட.. task நடுவுலயும் தோசை சுட்டுத் தந்தேன். உனக்குத் தெரியுமா?” என்று தத்தக்கா பித்தக்கா தமிழில் பிந்து பதிலுக்கு வெளுக்க.. “அது task. நீங்க செஞ்சுதான் ஆகணும்.. சிநேகன் சீனியர்.. அவரைப் போய் நீ –ன்னு சொல்றீங்க.. நீ… க்கும் நீங்களுக்கும் வித்தியாசம் தெரியலை. ஆளை நீ.. ன்னு சொல்றது… பால் இருக்காங்க..ன்னு சொல்றது. என்னாதிது?” என்று தாமும் அதட்டினார் ஹரீஷ். “நீ என்ன பிஸ்தாவா?” என்று பிந்து எகிற ‘ம்.. பாதாம்”-என்று தன்னுடைய உலக லெவல் நகைச்சுவை உணர்வைக் காட்டினார் ஹரீஷ். 

**

Bigg Boss

கோல்டன் டிக்கெட் சவாலின் மூன்றாவது ஆட்டம் பற்றி விவரிக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டின் வெளியில் இருந்து துணிப்பந்துகள் வீசப்படுமாம். அந்தக் கைக்குட்டைகளை வைத்துக் கொண்டு பெட்ஷீட் தைக்க வேண்டுமாம். இதில் ஒரு முக்கியமான விஷயம், எவருக்காவது இதில் கறுப்பு நிறத் துண்டு கிடைத்தால் அது அதிர்ஷ்டமாம். அவர் எவரிடமும் சென்று தொந்தரவு செய்யலாம். அவருக்குத் துணி போதவில்லையென்றால் மற்றவர்களிடம் உரிமையாகக் கேட்டு வாங்கலாமாம்….  ‘ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போலிருக்கு’.

பெட்ஷீட் தைப்பதற்காக ஊசி, நூல் வழங்கப்பட்டது. தாரை ஒலி வந்ததும் கார்டன் ஏரியாவிற்கு ஓடினார்கள். வெளியிலிருந்து சரமாரியாகத் துணிப்பந்துகள் வீசப்பட்டன. ஆரவ் பாய்ந்து பாய்ந்து சென்று பந்துகளைச் சேகரித்தார். நெருக்கடி காலங்களில் ஆகாயத்திலிருந்து உணவுப்பொட்டலங்கள் வீசப்படும் போது அகதி மக்கள் ஆவேசமாக முந்திச் சென்று எடுப்பது போல பிக்பாஸ் மக்கள் அலைமோதினார்கள். பாவமாக இருந்தது. ஆரவ் அதிக பந்துகளைச் சேகரித்தார். “கர்ஷீப்பை வெச்சிக்கிட்டு எப்படிய்யா பெட்ஷீட் தைக்கறது?” என்கிற சரியான கேள்வியை எழுப்பினார் வையாபுரி. 

“எங்க குதிக்கச் சொன்னாலும் குதிப்பேன்’ என்ற வையாபுரி, ஊசியில் நூல் கோர்க்கவே தடுமாறினார். அவருக்குக் கைத்தையலின் அடிப்படை கூட தெரியவில்லை போல. அவரை விடவும் இளையவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ‘இதை எப்படி செய்யறது” என்று மற்றவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். 

அவர் பெட்ஷீட் தைப்பதை விடவும் அதற்கிடையில் அனத்திக் கொண்டே இருந்ததுதான் ஒருபுறம் நகைச்சுவையாகவும், இன்னொரு புறம் பாவமாகவும் இருந்தது. .. “ஒண்ணுமே புரியலையே.. என்ன பண்ணப் போறேன்.. இந்த வருஷம் விஜய் டிவி காமெடி அவார்ட் எனக்குத்தான்.. என்றெல்லாம் புலம்பியவர், ‘உள்ளே போடா ராஜா’ என்று நூலிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். எப்படித் தைப்பது என்பதை சிநேகனிடம் கற்றுக் கொண்டு வந்திருந்தாலும், துணிகளை முன்னும் பின்னுமாக மாற்றி தைத்ததை பிறகுதான் உணர்ந்தார். ‘அடப் போங்கய்யா’ என்று ரைசா மாதிரி அலுத்துக் கொண்டவர், “இப்ப என்ன செய்யறது” என்று மற்றவர்களிடம் ஆலோசனை கேட்க, ‘பெட்ஷீட் மாதிரியான வடிவத்தில் வருவதுதான் முக்கியம். மாத்தி இருந்தா பரவாயில்ல” என்று சமாதானம் சொன்னார்கள். 

Bigg Boss

அனைவரும் சாவகாசமாகப் பேசிக் கொண்டே தைத்துக் கொண்டிருக்கும் போது மறுபடியும் துணிப்பந்துகள் வந்து விழுந்தன. எல்லோரும் பதறியடித்துக் கொண்டு அவற்றைப் பொறுக்க ஓடினார்கள். கால்வழுக்கி பொத்தென்று விழுந்தார் கணேஷ். நல்லவேளையாக, ஒன்றும் ஆகவில்லை. கணேஷிற்கு போதாத வேளை போல. 

இவர்களின் காமெடிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸிற்கே பொறுக்க முடியவில்லை போல, ‘நீங்க தைச்சுக் கிழிச்சது போதும். அப்படியே நிறுத்துங்க.. அடுத்த சவாலிற்கு நேரமாகி விட்டது” என்று அறிவிப்பு செய்தார். அவரவர்களும் தாங்கள் உருவாக்கிய கந்தல் துணிகளை ஏதோ பொக்கிஷம் மாதிரி பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். விதி.. எப்படில்லாம் வந்து விளையாடுது! தாங்கள் தைத்த பெட்ஷீட்களின் அழகைப் போட்டியாளர்கள் ரசித்துக் கொண்டிருக்க, கர்ச்சீப்பை கூடத் தாண்டாத வையாபுரி அவர்களை வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். 

“காருக்குள்ள யாரு, கடைசியா பாரு” என்று ஒரு சவாலாம். யார் இப்படியெல்லாம் தலைப்பு வைப்பது? சிநேகன் மாதிரியே, பிக் பாஸ் டீமிக்குள்ளும் ஒரு கவிஞர் இருக்கிறார் போல. அந்தக் காரை எங்கிருந்து பிடித்து வந்தார்களோ. தெரியவில்லை. நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு பழைய ‘சொப்பன சுந்தரி’ வைத்திருந்த விண்டேஜ் வகை வாகனமாக இருந்தது. கால்களைச் சற்று நீட்டி கூட வைக்க முடியாத அந்தக் குறுகிய காருக்குள், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஏறி உட்கார வேண்டுமாம். பஸ்ஸர் ஒலி அடித்தவுடன், அனைவரும் கலந்தாலோசித்து ஒருவரை நாமினேட் செய்து, “அவர் ஏன் இறங்க வேண்டும்?” என்பதற்கான காரணங்களைச் சொல்லி இறக்க வேண்டுமாம். இப்படியே கடைசிவரை தாக்குப் பிடிக்கும் நபருக்குப் பத்து மதிப்பெண் கிடைக்கும். 

முதலில் சென்ற சிநேகன், ஏதோ அந்த காரை 180 மைல் வேகத்திற்கு ஓட்டப் போவது போல ஓட்டுநர் இருக்கையைப் பிடித்துக் கொண்டார். ஆரவ் அவரது பக்கத்தில் அமர்ந்து கொள்ள, தாமதமாக பிறகு வந்தவர்கள் எங்கு அமர்வது என்று தெரியாமல் விழித்தனர். பின் இருக்கையை சுஜாவும் கணேஷூம் ஆக்கிரமித்துக் கொள்ள, பிந்துவும் ஹரீஷூம் எப்படி அமர்வது என்று குழம்பினார்கள். பிறகு கணேஷின் மடியில் பிந்து அமர்ந்து கொள்ள ஹரீஷ் கார்னர் சீட்டில் ஒதுங்கினார். சற்று முன்னர்தான் கணேஷிற்கு போதாத வேளை என்று சொல்லியிருந்தேன். அப்படி இல்லை போல. 

Bigg Boss

‘இந்த வண்டி எவ்வளவு மைலேஜ் தரும்.. எவ்வளவு வேகம் போகும்’ என்றெல்லாம் வையாபுரி விசாரித்துக் கொண்டிருந்தார். ரொம்ப முக்கியம். எப்படியாவது நேரம் போக வேண்டும் அல்லவா? ஒரு மாதிரியாக காருக்குள் நெருக்கடி நிலையை அவர்கள் உணரத் தொடங்கியபோது, ‘சிறகுகள் நீளுதே” என்ற உற்சாகமான பாடல் ஒலிக்கத் தொடங்கியது. சற்று நேரம் தங்களின் சங்கடத்தை அவர்களால் மறக்க முடிந்தது. பாடலுக்கு ஏற்ப தலையாட்டத் தொடங்கினார்கள். ஆனால் பிக் பாஸ், தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பதில் விற்பன்னர் என்பதை மறந்து போனார்கள்.

இரவு மணி 11:15. ‘அடுத்த பாட்டைப் போடுங்கப்பா’ என்ற குரல் எழுந்தது. பிக் பாஸ் என்ன எப்எம்மில் ஆர்ஜேவாகவா இருக்கிறார்? “யாராவது இறங்குங்கப்பா?’ என்று அனைவரும் பிந்துவைப் பார்த்தனர். “ஏதாவது ஒரு காரணம் சொல்லுங்க?” என்றார் பிந்து. “வேற என்ன காரணம். இடம் இல்லை அதுதான்” என்றார் ஹரீஷ். நியாயமான காரணம்தான். 

“காத்து வரட்டும் ஏசி போடுங்க” என்று எவரோ சொல்ல, வையாபுரி அதைத் தவறாகப் புரிந்து கொண்டார் போல. வேறு வகையான காற்றை அவர் வெளியேற்ற, மற்றவர்களை மூக்கைப் பிடித்துக் கொண்டனர். காலையில் பட்டாணியை வைத்து செய்து தந்த பிரத்யேக உணவு இம்மாதிரியாக பிரதிபலிக்கும் என்று ஆரவ் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர்தான் வையாபுரியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். இது வையாபுரியின் ‘திட்டமிட்ட’ உத்தியா அல்லது தன்னிச்சையாக நிகழ்ந்த ‘விபத்தா’ என்று தெரியவில்லை. 

மனித உடலை தூரத்திலிருந்து நாம் என்னதான் ரொமான்ஸாகப் பார்த்தாலும், அருகில் நெருங்கும் போது வியர்வை நாற்றம், வாய் நாற்றம், அபானவாயு உள்ளிட்ட பல யதார்த்தமான விஷயங்கள் வெளிவருகின்றன. நாம் ஓர் உணவு அரைக்கும் இயந்திரம் என்பதைக் காட்டி விடுகின்றன. ‘பாதி வண்டி இங்க இருக்கு. மீதி எங்கே?” என்று ஜோக் அடித்தார் ஹரீஷ். 

Bigg Boss

இரவு 11:30 – பிந்துவால் தாங்க முடியவில்லை. கணேஷின் மீது சிரமப்பட்டு அமர்ந்திருக்கும் நிலை. இரண்டு ஆண்களின் நடுவில் சிக்கி அமர்ந்திருப்பது அவருக்கு அசெளகரியமாக இருந்திருக்கலாம். பாவம். ‘நான் இறங்கிக் கொள்கிறேன். என்னால் முடியவில்லை. பாயின்ட்லாம் வேணாம்” என்று இறங்கிக் கொண்டார். ‘கிளம்பு, காத்து வரட்டும்” என்று இதரப் போட்டியாளர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.

இரவு 11:45 – “பிக் பாஸ் எனக்கு முதுகு வலி இருக்கு. மாத்திரையெல்லாம் போடணும். என்னால் முடியலை” என்று வையாபுரி அனத்த தொடங்கினார். பஸ்ஸர் ஒலி கேட்ட பிறகு நாமினேட் ஆகிய பிறகுதான் இறங்க வேண்டுமா என்று அவருக்குக் குழப்பம். ஆந்தை போல விழித்திருந்த பிக் பாஸ் அதைத் தெளிவுப்படுத்த, ‘சரிங்க ஆண்டவரே” என்று அமைதியானார். “கமல் சார் என்னல்லாம் திட்டப் போறாரோ.. எதுவா இருந்தாலும் சமாளிப்பேன்னு சொல்லிட்டேன். ஆனா இவ்ள கஷ்டமா இருக்குமின்னு தெரியலை” என்றெல்லாம் அனத்தல் தொடர்ந்தது. ஒருவழியாக இரவு 12:05-க்கு பஸ்ஸர் ஒலிக்க, ‘யப்பா. ஆள விடுங்கடா சாமி” என்று தப்பித்து ஓடினார். 

இரவு 12:30-க்கு ஆரவ்வின் வெளியேற்றம் நிகழ்ந்தது. ‘இது எவ்ள நேரம் போகும் –ன்னு தெரியலை. அதனால் நான் இறங்கிக்கறேன்” என்று நாமினேட் ஆகாமல் இறங்கிக் கொண்டார். சில நிமிடங்களில் ஹரீஷூம் மனம் மாறினார். ‘நாளைக்கு வேற டாஸ்க்லாம் இருக்கும்.. தூங்கலைன்னா அதைச் செய்ய முடியாது. நான் போறேன்” என்று இறங்கிக் கொண்டார்.

மீதமிருப்பவர்கள் சிநேகன், கணேஷ், சுஜா. ‘யாராவது ஒருவர் இறங்கக்கூடாதா” என்பதை அவர்களுக்குள் சற்று தீவிரமாக உரையாடிக் கொண்டனர். 

Bigg Boss

நேரம் நள்ளிரவைத் தாண்டியது. இரவு 01:00 மணி. “நான் இந்த வாரம் எவிக்ஷன்ல இருக்கேன். எனக்கு பிஸிக்கலாகவும் பிரச்னை இருக்கு. உங்களுக்கே தெரியும். இந்த பத்து மதிப்பெண் எனக்கு முக்கியம். புரிஞ்சுக்கங்க” என்றார் சிநேகன். “ப்ரோ… எனக்குக் கிடைச்ச வாய்ப்பை வெச்சு ஒருமுறை உங்களைக் காப்பாத்தியிருக்கேன்” என்றார் கணேஷ். நியாயமான விஷயம். “காமிரா முன்னாடி சீட்டைக் காட்டறதுக்கு நீங்க அலை பாய்ஞ்சபோது சரின்னு விட்டுட்டேன்” என்று சுஜாவிடம் சொன்னார் சிநேகன். 

‘அதுக்கென்ன பண்றது. நான் முந்தி வரலை என்ன நடந்தாலும் சரி. இந்த task-ஐ நான் முடிச்சாகணும். கமல் சார் என்ன சொன்னார், போட்டி கடுமையா இருக்கும். பாசம்-லாம் ஒருபக்கம் வெச்சுட்டு உத்வேகத்துடன் விளையாடுங்க –ன்னு சொன்னாரா இல்லையா நான் இறங்கப் போவதில்லை. இதுல சீனியர், ஜூனியர் –னு எதுவும் கிடையாது. இந்த விளையாட்டிற்குள் தாமதமாக வந்தது என் தப்பு கிடையாது” என்றெல்லாம் சற்று கோபமாகச் சொன்னார் சுஜா. 

நம்முடைய பிடிவாதத்தை மறைக்க சிலரின் மீது செயற்கையாக கோபத்தை உற்பத்தி செய்து கொள்வது மனித குணத்தின் ஓர் அம்சம்தான். 

நிலைமை சற்று அசெளகரியமாகியது. இரவு 01:45. “ஓகே. எனக்கும் கமல் சார் கையால டிக்கெட் வாங்கணும்னு ஆசைதான். ஆனா என்னை விட நீங்க இரண்டு பேரும் சொல்ற காரணங்கள் என்னை விடவும் அதிகமா இருக்கு. சரி. நான் இறங்கிக்கறேன்” என்று கிளம்பி விட்டார் கணேஷ். 

**

Bigg Boss

“தப்பிச்சம்டா சாமி” என்று காரை விட்டு இறங்கி உறங்கப் போன அனைவரையும் பிக் பாஸ் நிம்மதியாகத் தூங்கவிடவில்லை. அவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பி “ஏன் தோல்வி மனப்பான்மையோடு இயங்குகிறீர்கள்? உங்களுக்காக முன்னரே கதவு 2 நிமிடங்கள் திறந்திருந்ததே? அப்போதே போய்த் தொலைந்திருக்க வேண்டியதுதானே. மறுபடியும் கதவு திறந்து அந்த வாய்ப்பு தரப்படும். கிளம்புங்க.. ஏன் இப்படி விட்டுக்கொடுத்தீங்க.. ஏன் போராடலை’ என்பதையெல்லாம் யோசியுங்க” என்று கறாரான குரலில் கேட்டு விளாசினார்.

பாவம், ஒவ்வொருவரும் தூக்க கலக்கத்தில் ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார். ஆரவ்வின் நிலைமைதான் பாவம், சரியான தூக்கத்தில் இருந்தார் என்பது நன்றாகத் தெரிந்தது. ‘கூடிப் பேசி நாமினேட் ஆகாமல் ஏன் இறங்கினீர்கள்?” என்று கேள்விக்கணை அவர் மீது பாய்ந்தது. 

“தோல்வி மனப்பான்மைல்லாம் இல்ல. மன்னிச்சுடுங்க. இனி அப்படி நடக்காது. மக்கள் வாக்களித்து வெளியேறச் சொன்னால் மட்டுமே வெளியேறுவேன். இனி போட்டிகளில் கவனமாக இருப்பேன்.” என்றார். இப்படியே ஆளாளுக்கு ஒவ்வொரு காரணம் சொன்னார்கள். 

 

ஆனால், ஒரு முதலாளிக்கே உரிய கறார்தன்மையோடு அவர்களுக்கான உளவியல் அழுத்தத்தைத் தந்தார் பிக் பாஸ். இனி வரும் போட்டிகளில் துளியளவு கூட கருணையையோ, நட்பையோ காட்டக் கூடாது என்பது அவர்களுக்குப் பலமாக உணர்த்தப்பட்டது. அவர்களுக்குள் இருக்கும் மனித உணர்வுகளைப் பிடுங்கி… கீழே இறக்கும் பணியை பிக் பாஸ் சிறப்பாகவே செய்தார். எனவே மோதல்கள் இனி அதிகம் நிகழும் போல. 

அடுத்த முறை பழைய சைக்கிள் ஒன்றை கொண்டு வந்து எல்லோரும் அதில் பயணிக்க வேண்டும் என்று சொல்வார்கள் போலிருக்கிறது. சர்க்கஸ் வித்தையெல்லாம் கற்றுக் கொண்டுதான் இனி பிக் பாஸ் போட்டிக்குச் செல்ல வேண்டும் போல.

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/102083-karakattakaran-car-model-used-in-bigg-boss-game-bigg-boss-tamil-updates-day-79.html

Link to comment
Share on other sites

"எனக்கு ஒரு முத்தம் கொடும்மானு அவன் கேட்டதும் கலங்கிட்டேன்!" நெகிழும் பிக் பாஸ் ஹரீஷ் கல்யாண் அம்மா

 
 

பிக் பாஸ்

"ஹரீஷ் எங்களுக்கு ஒரே பையன். அவனைப் பிரிஞ்சு இருக்கிறது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. ஆனாலும், அவனின் எதிர்கால வளர்ச்சிக்காக இந்த நாள்களை இனிதே கடந்துட்டிருக்கோம்'' என நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் கெளசல்யா. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் போட்டியாளராக இருக்கும் ஹரீஷ் கல்யாணின் அம்மா. 

ஹரீஷ் பெற்றோர்

"ஹரீஷின் குழந்தைப் பருவத்தில் எங்க வீடு ஷூட்டிங் ஹவுஸா இருந்துச்சு. அதனால், சின்ன வயசிலிருந்தே நிறைய ஷூட்டிங் மற்றும் சினிமா கலைஞர்களைப் பார்த்து வளர்ந்தான். சினிமா தாக்கம் அவனுக்கு வராமல் இருக்கணும்னு தனி ரூமில் வெச்சுதான் ஹோம்வொர்க், விளையாட்டு எல்லாம் நடக்கும். ஹரீஷ் பத்தாம் வகுப்பு வந்ததும் படிப்பு பாதிக்கக்கூடாதுன்னு வீட்டை ஷூட்டிங்குக்கு விடுறதையே நிறுத்திட்டோம். ஆனாலும், அவனுக்கு சினிமா ஃபீல்டு மேல் ஆசை வந்திருச்சு. ப்ளஸ் டூ முடிச்சதும் அந்த ஆசையைச் சொன்னான். 'எனக்கு கம்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து வேலை செய்ய விரும்பமில்லை. என் திறமையை வெளிப்படுத்தும் எதிர்காலத்துக்கு சப்போர்ட் பண்ணுங்க'னு சொன்னான். 'சினிமா ஆசை இருக்கட்டும். முதல்ல படிப்புதான் அவசியம், அதை முதலில் கவனிக்கணும்'னு சொல்லி இன்ஜினீயரிங் சேர்த்துவிட்டோம். ஆறே மாசத்தில் செட் ஆகலைனு வெளியவந்துட்டான். அவனுக்குப் பிடிச்ச விஸ்காம்ல சேர்ந்துப் படிச்சான். அப்புறம் நிறைய போராடித்தான் சினிமாவில் நடிகரானான். தனக்கான அடையாளத்தை தக்கவெச்சுக்க நிறைய முயற்சிகளை எடுத்துட்டிருக்கான்" என்கிறார் கெளசல்யா. 

ஹரீஷ் கல்யாண் அம்மா

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் மகனின் செயல்பாடுகளைப் பற்றி சொல்லும்போது, ''நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து ஹரீஷ் தவறாமல் பார்த்துட்டிருந்தான். ஒருநாள் 'நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கப்போறேன். என் கரியருக்கு அந்த நிகழ்ச்சி உதவியா இருக்கும். அங்கே கொடுக்கிற சவால்களை எதிர்கொள்ள முடியும்'னு சொன்னான். பையனோட கான்ஃபிடென்ட் எங்களுக்கு நம்பிக்கைக் கொடுக்க, நானும் கணவரும் ஒப்புகிட்டோம். ஆரம்பத்தில் வீட்டுக்குள்ளே போனதும், முதல் வாரம் மத்தவங்களோடு மிங்கிள் ஆக சிரமப்பட்டான். இப்போ எல்லோரோடும் நல்லாப் பழகுறான். எல்லா டாக்ஸ்கையும் ஸ்போர்டிவா எடுத்துச் செய்யறான். பையன் நம்மோடு இல்லையேனு ஒரு வாரம் சரியா தூக்கம் இல்லாம இருந்திருக்கேன். பிக் பாஸ் வீட்டில் அவனுடைய செயல்பாடுகளைப் பார்த்த பிறகு இப்போ சந்தோஷமா தூங்கறேன்'' எனச் சிரிப்புடன் தொடர்கிறார். 

ஹரீஷ் கல்யாண்

"போன வாரம் 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே நானும் கணவரும் போனோம். டிவியில் பார்த்ததைவிட நேரில் பிரமிப்பாவும் சந்தோஷமாவும் இருந்துச்சு. அந்த வீட்டுக்குள்ள இருக்கும் போட்டியாளர்கள் எல்லோருமே அன்பாகப் பழகினாங்க. குறைவான நேரத்திலும் எல்லோரிடமும் பேசினோம். அந்த வீட்டிலிருந்து கிளம்பும் சமயம், 'எனக்கு ஒரு முத்தம் கொடும்மா'னு ஃப்ரீஸ் டாஸ்க்ல இருந்தபடியே ஹரீஷ் சொன்னான். சந்தோஷமா முத்தம் கொடுத்துட்டு வந்தேன். அவனுக்கு நாங்க ரெண்டுப் பேரும்தான் உலகம். நாங்க அவன்கிட்டே ஃப்ரெண்ட் மாதிரிதான் நடந்துக்குவோம். படிப்பு, நடிப்பு, ஃப்ரெண்ட்ஸ், பெர்சனல் பிரச்னைனு எல்லாத்தையும் ஓபனாச் சொல்வான். அடிக்கடி எங்கிட்ட முத்தம் கேட்பான். அதனால், பிக் பாஸ் வீட்டில் கொடுத்த முத்தம் கண் கலங்கச் செய்துருச்சு. 

 

சினிமா ஃபீல்டை ஹரீஷ் உயிரா நேசிக்கிறான். டான்ஸ், ஃபைட்டிங், ஸ்விம்மிங், சிலம்பம், ஹார்ஸ் ரைடிங் என தகுதிகளைத் தொடர்ந்து வளர்த்துட்டிருக்கான். ஓர் அம்மாவாக பிக் பாஸில் பையன் ஜெயிக்கணும்ங்கிற ஆசை இருக்கு. அவனின் செயல்பாடுகளும், மக்களின் வாக்குகளும் அதை நிறைவேற்றும்னு நம்பறேன். எல்லா டாஸ்கையும் நல்லபடியா செய்வான். அவன் வெளியே வரும்போது, நிறைய அனுபவத்தோடு வருவான்'' எனப் புன்னகைக்கிறார் கெளசல்யா.

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/102107-i-become-emotional-when-my-son-asked-for-a-kiss---says-bigg-boss-harish-kalyan-mother.html

Link to comment
Share on other sites

விடாப்பிடியாக வென்ற சுஜா... 'ஏமாற்றினேனா?' சீறிய சிநேகன்..! 80-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss


“காருக்குள்ள யாரு, தொப்பி மாமா நேரு” என்கிற சவாலுக்காக சிநேகனும் சுஜாவும் காருக்குள் சோர்வாக அமர்ந்திருந்தனர். நேரம் இரவு 02:30 மணி.

80-ம் நாள். காலை 5:35. இருவரும் கண் அயர்ந்து விட்டனர். இயந்திர நாய் குரைத்து அவர்களை எழுப்பியது. அது ஐசியூ-ல் இருந்து குணமாகி திரும்ப வந்து விட்டது போல. பிக்பாஸின் சரியான அடியாள்தான் அது. சிநேகனும் சுஜாவும் தங்களின் தற்காலிக கருத்து வேறுபாடுகளை சற்று மறந்து பேசிக் கொண்டாவது இருக்கலாம். சோர்வு தெரியாமல் சற்று உற்சாகமாகவாது இருக்கும். ஆனால் அப்படி இல்லாமல் ‘உர்’ரென்று இருந்தார்கள். 

Bigg Boss

காலை 08:00 மணி. அனிருத் அதியுச்ச குரலில் பாடிய ‘வேலையில்லா  பட்டதாரி’ பாடல் ஒலித்தது. அது சரி, அப்படி வேலையில்லாமல் நிறைய பட்டதாரிகள் இருப்பதால்தான் முதலாளி வர்க்கத்தினருக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. பணியாளர்களை எப்படி வேண்டுமானாலும் வதைக்கலாம் என்று துணிகிறார்கள். நோ.. நான் பிக் பாஸை சொல்லவில்லை. அவர் ரொம்….ப நல்லவர். (?!).

“அவங்க தூங்கக் கூடாதா?” என்று கேட்டார் தூங்கியழுந்து வந்த ஹரீஷ். “நோ.. தூங்கக்கூடாது. Rest room கூட உபயோகிக்கலை” என்று பரிதாபப்பட்டார் ஆரவ். பாவம், அது சார்ந்த உடற்கோளாறுகள் அவர்களுக்கு வராமல் இருக்க வேண்டும். 

ஹரீஷ் இன்று செஃப் ஆக மாறினார். ‘டொமோட்டோ உப்புமா’ என்ற பெயரில் அவர் செய்து காட்டிய உணவு சாம்பார் சாதம் போல தோற்றமளித்தது. ‘ஆனால் சுவையாக இருக்கிறது’ என்று சான்றிதழ் தந்தார் பிந்து. (ஏதோ வொர்க் அவுட் ஆவுது போலிருக்கிறதே). “முதன்முறையாக முறையான சமையல் மூலம் செய்த உணவு இது. நன்றி பிக் பாஸ்” என்றார் ஹரீஷ். 

காலை பத்து மணி. சிநேகன் காருக்குள் இருப்பதால் பிக்பாஸின் தகவல் தொடர்பு செயலாளராக கணேஷ் மாறி விட்டார் போலிருக்கிறது. வயிற்றுவலிக்காரன் பாத்ரூமிற்கு அடிக்கடி செல்வது போல வாக்குமூல அறைக்குள் அடிக்கடி போய் வந்தார். “கார்ல இருக்கறவங்களுக்கு டீ, காஃபி, டிபன், தண்ணி கொடுக்கலாமாம். அவங்க கிட்ட பேசலாமாம்” என்று ஆம்னி பஸ் கண்டக்டர் மாதிரி உற்சாகமாக சொன்னார்.  பிக்பாஸ் அனுமதி தந்து விட்டாராம். (அடப்பாவிகளா! அப்ப அதுவரை அதையெல்லாம் தடை செஞ்சு வெச்சிருந்தீங்களா?)

வெளியே வந்த பிந்து, சிநேகனிடம் பேசிக் கொண்டிருந்தார். காரில் இறந்து இறங்கியதற்காக பிக்பாஸ் நேற்று இரவு திட்டித் தீர்த்ததை சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் கேட்ட சில பொருட்களை எடுத்து வந்து தந்தார். இருவரும் உணவுண்ண மறுத்து விட்டனர். 

வீட்டிற்குள் ஆரவ் பேசிக் கொண்டிருந்தார். “கார்ல இருந்து நான் ஏன் இறங்கி வந்தேன்னா.. அடுத்த task இன்னமும் கடுமையா இருக்கும். அப்புறம் daily task- கூட செய்ய முடியாது. அந்த அளவிற்கு டயர்ட் ஆகிடும்” என்றார். “அதில்ல ப்ரோ… வெளில வந்தது கூட பிரச்சினையில்லை. நாம self nominate ஆகி வந்ததுதான் பிராப்ளம்” என்றார் ஹரீஷ். 

Bigg Boss

கணேஷ் உணவருந்தி விட்டு தன் தட்டை கழுவி வைத்து விட்டு வர பிக் பாஸ் மூக்கில் வியர்த்திருக்க வேண்டும். கணேஷை கூப்பிட்டு ‘சிநேகன் மற்றும் சுஜா அவர்களின் taskஐ முடித்து வி்ட்டு வரும் வரை எவரும் எந்தப் பொருட்களையும் கழுவி வைக்க கூடாது” என்று உத்தரவிட்டார். உலகத்திலேயே கடுமையான மாமியாராக பிக் பாஸ் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. போட்டியாளர்களுக்கு எம்மாதிரியெல்லாம் உளவியல் அழுத்தம் தரவேண்டும் என்பதை விதம்விதமாக சிந்திக்கிறார். 

நேரம் காலை 11:45. வையாபுரி இருவரிடமும் விசாரித்தார். “ஏதாவது சாப்பிடறீங்களா. பழம்.. ஜூஸ்?” 

மதியம் 12:00 மணி. பெட்ஷீட் தைக்கும் சவாலில் வையாபுரி மட்டும் ஏன் தனியாக வீட்டின் உள்ளே சென்று தைத்துக் கொண்டிருக்கிறார் என்று நேற்று தோன்றியது. அதற்கான விடை அவரின் வாயால் இன்று கிடைத்தது. “நான் ஏன்.. உள்ளே வந்து தைச்சேன்னா.. வெளியே இருந்தா.. யார் கிட்டயாவது உதவி கேட்பேன். இல்லைன்னா.. புலம்புவேன்.. மத்தவங்க யாருக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாதுன்னுதான் தனியா வந்துட்டேன்” என்றார். பாவம். 

மதியம் 12:15. காருக்குள் இருவரும் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக அமர்ந்திருந்ததால் அதை நிறைவுக்கு கொண்டு வரும் விதமாக அறிவிப்பு வந்தது. இன்னமும் ஒரு மணி நேரத்திற்குள் எவராவது ஒருவர் வெளியே வர வேண்டும். அவர்கள் இதற்காக தங்களுக்குள் ஆலோசனை செய்யலாம். ஒரு மணி நேரம் கடந்த பிறகும் அவர்கள் இறங்கவில்லையென்றால், இதர போட்டியாளர்கள் கூடிப் பேசி காருக்குள் இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை கட்டாயமாக வெளியேற்றலாம். 

Bigg Boss

இதர போட்டியாளர்கள் இந்த விஷயத்தை சிநேகன் மற்றும் சுஜாவிடம் தெரிவித்தனர். “சரி. முதல்ல அவங்களுக்குள்ள பேசிக்கட்டும். அப்புறம் நாம வருவோம்” என்று கிளம்பினர். 

முதலில் சுஜா ஆரம்பித்தார். “சிநேகன் சார்.. இதை நான் கேமா மட்டும்தான் பார்க்கறேன். அடுத்த வாரம் நான் நாமினேஷன்ல வரலாம். என் கிட்ட பாயிண்ட்ஸ் இல்லை. எனவே இந்த சவால் எனக்கு ரொம்பவே முக்கியம். திரைத்துறையில் 15 வருஷத்திற்கும் மேலாக இருக்கேன். இதுவரைக்கும் வெற்றியின் ருசியை நான் சுவைத்ததில்லை. கடுமையான உழைப்புதான் வெற்றியைத் தரும்’ன்றாங்க. அதுக்காகத்தான் இவ்ள கஷ்டப்படறேன். உங்களுக்காக வேணுமின்னா போறேன். ஆனா விளையாட்டு என்கிற நோக்கில் போக மாட்டேன்” என்றார். 

தான் நீண்ட நாட்களாக போராடி வரும் பழைய போட்டியாளர் என்கிற முறையில் மட்டுமல்லாது அந்த வார நாமிஷேனில் இருப்பதால் தனக்கு இந்த வெற்றி எத்தனை முக்கியமானது என்பதை பலஹீனமாக வாதாடிப் பார்த்தார் சிநேகன். 

மற்றவர்களும் இவர்களிடம் ஒவ்வொருவராக வந்து பேசிப் பார்த்தனர். சிநேகன் பக்கம் நிறைய ஆதரவு இருந்தது. அவர் அந்த வார  நாமிஷேனில் இருப்பதை பிரதானமாக சுட்டிக் காட்டினார்கள். வையாபுரி வேறு விதமாக அணுகினார். ‘கவிஞரே.. உங்க திறமை மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. இதுல விட்டா கூட வேற எதுலயாவது பிடிச்சிடுவீங்க. இறங்கி வாங்க” என்றார். 

பிரிந்து போன கட்சி இணைப்பு மாதிரி எந்தவொரு முடிவிற்கும் எட்டப்படாமல் நிலைமை குழப்பமாகவே இருந்தது. போட்டியாளர்கள் வீட்டினுள் இது குறித்து ஆலோசித்தார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்து, சுஜாவை இறங்கச் சொல்லலாம் என்பது அவர்களின் முடிவாக இருந்தது. “நான் கதவைத் தாண்டி வெளியே செல்லும் போதுதான் தோல்வியின் ருசி எப்படி இருக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தது. அப்படி போயிருக்கவில்லையென்றால் கூட எனக்குத் தெரிந்திருக்காது. அந்த வகையில் இதன் வெற்றி எனக்கு முக்கியம்” என்றார் சுஜா. “நான் இதுவரை நிறைய முறை நிறைய பேருக்காக விட்டுத் தந்திருக்கேன். ஆனா இப்ப கேட்டா …” என்றார் சிநேகன் பரிதாபமாக. 

முன்பு, சுஜாவிற்கு இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டிய சவால் வந்தபோது அவர் முதலில் கேட்டது சிநேகனைத்தான். அவரும் கேள்வி கேட்காமல் உடனே ஒப்புக் கொண்டார். அந்த நன்றிக்காக சுஜா ஒருவேளை விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் அப்படி விட்டுக்கொடுத்தாலும் பிக் பாஸ் கூப்பிட்டு பஞ்சாயத்து வைப்பார். “வீட்டுக்குள் பாயாசம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பாசம் என்பது மருந்திற்கும் இருக்கக்கூடாது” என்று கடுமையான லெக்சர் தருவார். எனவே சுஜா அந்த நோக்கிலும் விட்டுத்தர முடியாது. பிராண சங்கடம். 

மதியம் 01:00 மணி. ‘நீங்கள் வெற்றிக்கு அருகில் இருக்கிறீர்கள்’ என்பது மாதிரியான அறிவிப்பை சொல்லி போட்டியாளர்களை இன்னமும் உசுப்பேற்றினார் பிக் பாஸ். நேரம் 1:15 மணி. இதர போட்டியாளர்கள் வந்து சுஜாவை கன்வின்ஸ் செய்ய முயன்றார்கள். “பழைய போட்டியாளர்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பது அவர்கள் இத்தனை நாட்கள் நீடிப்பதிலிருந்து தெரிகிறது. ஆனால் அவ்வாறான சோதனையை நான் இன்னமும் கடக்கவில்லை. எனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்தச் சூழலில் நான் எப்படி பாயிண்ட்டுகளை இழப்பது?” என்பது சுஜாவின் தரப்பாக இருந்தது. 

Bigg Boss

இப்போது பிக்பாஸ் சீனிற்குள் வந்தார். ‘சுஜா… இப்போது நீங்கள் இறங்க வேண்டாம் என்று முடிவெடுத்தால் இந்தப் போட்டி மேலும் தொடரும். மட்டுமல்லாமல் டிக்கெட் மதிப்பெண் உயரும்” என்று இப்படியும் அப்படியுமாக ஆசை காட்டினார். ‘எனக்கு இறங்க விருப்பமில்லை பிக் பாஸ். விட்டுக்கொடுக்க மனதிருந்தாலும் இறங்கக்கூடாதுன்னு தோணுது. முழுமனசா அதற்கு சம்மதிக்க விரும்பலை. என் கிட்ட பாயிண்ட்ஸ் இல்ல. என்னைக் காப்பாத்திக்கறதுதான் புத்திசாலித்தனம்னு தோணுது” என்றார் சுஜா.

‘இதைத்தான் எதிர்பார்த்தேன்’ என்று மனதிற்குள் மகிழ்ந்த பிக் பாஸ் “அப்படியென்றால் போட்டி தொடரும்” என்று உற்சாகமாக அறிவித்து விட்டு துண்டை தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார். 

அது மட்டுமல்ல, இந்தப் பஞ்சாயத்தையே எவ்வளவு நேரம் நீட்டிப்பது? வேறு எண்டர்டெயிண்மெண்ட் வேண்டாமா? என்று பிக் பாஸ் நினைத்தாரோ, என்னமோ, கந்தல் துணிகளை வைத்து பெட்ஷீட் தைக்கும் போட்டியைத் தொடருங்கள் என்று உத்தரவிட்டார். காருக்குள் சோர்வுடன் இருந்த போட்டியாளர்களும் இதற்கு விதிவிலக்கில்லை. ‘சும்மாதானே உட்கார்ந்திருக்காங்க. அவங்க கிட்ட அவங்களோட பொருட்களைக் கொண்டு போய் கொடுங்க” என்ற உத்தரவும் வந்தது. 

குடுகுடுப்பைக்காரன் சட்டை போல் தயாராகிக் கொண்ருந்த போர்வையை அணு ஆராய்ச்சிக்கான கவனத்துடன் ஒவ்வொருவரும் தயாரித்துக் கொண்டிருந்தனர். தன்னிடம் கறுப்புத் துணி இருந்தாலும் பிந்துவிற்கு அதிகம் தொந்தரவு தராமல் மாற்றிச் சென்றார் கனவான் கணேஷ். பிந்து தன்னுடைய பெட்ஷீட்டை முடித்து விட்டதாக முதலில் சொன்னதால், அனைவரையும் தைப்பதை நிறுத்தச் சொன்னார் பிக் பாஸ். ஹரீஷ், தரக்கட்டுப்பாடு மேலாளராக மாறி பிந்துவின் பெட்ஷீட்டை சோதனை செய்தார். அளவு சற்று கூடுதலாக இருந்தது. பிறகு அவர் அதை மாற்றிமைக்க, ‘அருமையான பெட்ஷீட் பிக் பாஸ். இதை ஏலம் விட்டா பிந்து ஆர்மி பத்து லட்சம் தந்து கூட வாங்கிப்பாங்க” என்று சான்றிதழ் தந்தார் ஹரீஷ். 

காருக்குள் இருந்த சிநேகனும் சுஜாவும் ஒருவரையொருவர் பிறாண்டிக் கொண்டார்கள். சிநேகன் ஏதோ கேட்க, ‘நான் தைச்சிட்டு இருக்கேன்ல. முடிச்சிட்டு தர்றேன்’ என்று சுஜா அடம்பிடிக்க அவர் பிக் பாஸிடம் நியாயம் கேட்டார். பிறகு ஒவ்வொருவராக பெட்ஷீட் முடித்தது அறிவிக்கப்பட்டது. மற்றவர்கள் இதை சோதித்தனர். வையாபுரி தைத்தது பெட்ஷீட்டாக இல்லாமல் வண்ணமயமான நீண்ட கோமணம் மாதிரி இருந்தது. அதை தரையில் விரித்துதான் படுக்க வேண்டும். பிறகு அதை அவர் சரிசெய்ய, ‘பாவம்யா.. மனுஷன்’ என்று அதையும் ஒப்புக்கு சப்பாணியாக ஓகே செய்தனர். 

Bigg Boss

மாலை 4:45. சிநேகனும் சுஜாவும் காருக்குள் பிடிவாதமாக இருந்ததால், “இது தப்பாச்சே.. இவங்களை ஏதாச்சும் பண்ணணுமே” என்று வில்லங்கமாக யோசித்த பிக் பாஸ், அவர்களை காரின் வெளியே இருந்து foot board travel செய்ய உத்தரவிட்டார். (‘படிக்கட்டில் நின்று பயணிப்பது ஆபத்தானது’ என்று ஒவ்வொரு பேருந்திலும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் பிக்பாஸ் வீட்டு விதிகளே வேறு). எனவே இருவரும், கட்சி அமைச்சர்கள் போல காரின் வெளியே தொங்கிக் கொண்டிருந்தனர். 

நேரம் 5:45. ‘இப்பவும் அடங்கமாட்றாங்களே” என்று மூக்கின் மீது விரலை வைத்து யோசித்த பிக்பாஸ் தேர்ந்த sadist போல விதிமுறையை இன்னமும் கடுமையாக்கினார். அதன்படி இருவரும் ஒற்றைக்காலில் நிற்க வேண்டும். 

மட்டுமல்லாமல் கணேஷிற்கு கூடுதலான பதவி கிடைத்தது. கண்காணிப்பு அதிகாரி. இருவரும் கால்களை சரியாக வைத்திருக்கிறார்களா என்று கணேஷ் ரகசியமாக கண்காணித்துக் கொண்டேயிருக்க இருக்க வேண்டுமாம். 

“ஏம்யா.. பிக்பாஸூ… இத்தனை காமிராக்கள் வெச்சு பார்த்திக்கிட்டுதானே இருக்கே.. அதுல தெரியாதா.. ஏன் என்னை வேற தனியா பார்க்கச் சொல்றீங்க.. நான் என்ன வெட்டியா இருக்கேனோ.. என்னைப் பார்த்தா அவ்ள மொக்கையாவா தெரியுது?” என்றெல்லாம் கணேஷ் கேட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறெல்லாம் கேட்காமல், பழைய படங்களில் அடியாள்  ஜஸ்டின் சொல்வது மாதிரி விறைப்புடன் ‘ஒகே பாஸ்” என்றார். மட்டுமல்லாமல் சிஐடி சங்கர் மாதிரி விதம் விதமான கோணங்களில் அவர்களின் கால்களையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்காணிக்கறாராமாம். பத்து பதினைந்து மிஷ்கின் படங்களை பார்த்த எபெக்ட் கணேஷிற்கு கிடைத்திருக்கும். பாவம். 

காரில் தொங்கிக் கொண்டிருந்த சுஜாவிற்கு வலி துவங்கி விட்டது போல. அழுகை பாவத்திற்கு அவர் முகம் சென்று விட்டது. உடலமைப்பு நோக்கில் ஆணோடு ஒரு பெண் போட்டியிடுவது சமத்துவமில்லை என்று சொன்னால் பெண்ணியர்கள் அடிக்க வருவார்கள். என்றாலும் உண்மைதானே? எனவே சுஜா காரின் மீது அப்படியே தலையை சாய்த்து விட்டார். சிஐடி சங்கர், தன்னுடைய ரிப்போர்ட்டை வாக்கி டாக்கி மூலமாக பாஸிற்கு தெரிவித்தார். ‘மொல்லாளி…. சிநேகன் சீட்டிங் பண்றாரு.. அவர் காலை நைசா கார் ஓரத்துல வெச்சுட்டாரு. நான் பார்த்தேன்” என்று கச்சிதமாக போட்டுக் கொடுத்தார். 

சோர்வு காரணமாக சுஜாவிற்கு வாந்தி வரும் நிலைமை ஏற்பட்டது. முன்பு ஜூலிக்கு சிநேகன் கையேந்தியது போல அவரால் இப்போது வரமுடியாத நிலைமை வேறு. சங்கடமான situation. இதை சிநேகனிடம் சொன்ன சுஜா, கணேஷின் உதவியைக் கேட்டார். மிக ஆர்வமாக வந்த கணேஷ் ‘ you want a date?” என்று கேட்டதும், ‘என்னய்யா மனுஷன் இந்தாளு.. இந்தச் சமயத்துல போய் டேட்டிங் போலாமான்னு கேக்கறாரே” என்று எனக்கு தோன்றி விட்டது. அப்புறம்தான் என் தவறு புரிந்தது. பேரிச்சம்பழம் வேண்டுமா என்றுதான் கணேஷ் கேட்டிருக்கிறார். பாவம்.  பிறகு எலுமிச்சம் பழம் கொண்டு வந்து தந்தார். 

“ஆரத்தி –கணேஷ் ஒண்ணா இறங்கிய மாதிரி நாம இறங்கிடலாமா?” என்று ஒரு சமாதான உடன்படிக்கையை நூலாக விட்டுப் பார்த்தார் சுஜா. சிநேகன் அதற்கு ஏமாறத்தயாராக இல்லை. வாந்தி வரும் நிலையிலும் “என்கிட்ட பாயிண்ட்ஸே இல்லையே” என்பதுதான் சுஜாவின் புலம்பலாக இருந்தது. “இதை முடிச்சிட்டு அடுத்தடுத்த task-லாம் பண்ண வேண்டியிருக்கும்” என்று மறைமுகமாக எச்சரித்தார் சிநேகன். 

நேரம் மாலை 06:45 – சிநேகன் ஒரு காலை காரின் ஓரத்தில் சாய்த்து வைத்துக் கொண்டிருந்ததை திறமையான சாகசத்தின் மூலம் கண்டுபிடித்த கணேஷ், இதை பிக் பாஸிடம் அதிகாரபூர்வ அறிக்கையாக சமர்ப்பித்தார். “என்ன பார்த்தீங்க சொல்லுங்க?’ என்பது பிக் பாஸின் கேள்வி. ‘வெட்டத் தெரியாவதனுக்கு பத்து அருவாளு” என்கிற கதையாக இதற்கு அறுபது காமிராக்கள் வேறு. 

“சரி. எல்லோரையும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைத்து சுஜா வெற்றி பெற்றதாக சொல்லுங்கள்” என்பது நாட்டாமையின் தீர்ப்பு. கணேஷ் உற்சாகமாகச் சென்றார். (‘ஒரு காலுக்கு சிநேகன் ஓய்வு தந்தார்’ என்பது கணேஷின் சாட்சியம். ‘ஒருக்கால் அவர் சரியாக பார்க்காமலிருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா?’ அய்யோ.. இந்த நேரத்துல போய் ரைமிங்கா வருதே..)

Bigg Boss

பிக் பாஸ் சொன்னதை சிநேகனிடம், கணேஷ் குத்துமதிப்பாக ஆரம்பிக்கும் போதே சிநேகனுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. “அப்ப நான் போர்ஜரி’ பண்றேன்னு சொல்றீங்களா? நான் இவ்ள நேரம் கஷ்டப்பட்டதெல்லாம் சும்மாவா?” என்று பொங்கினார். 

‘இல்ல ப்ரோ.. பொய் கையெழுத்து போட்டு ஏமாத்தறதுக்கு பேர்தான் போர்ஜரி.. இதுக்கு பேரு பிராடுத்தனம்” என்று கணேஷ் சிநேகன் சொன்னதை திருத்தியிருந்தால், மதிப்பெண்கள் போனால் போகிறது என்று சிநேகன் காரில் இருந்து இறங்கி வந்து கணேஷை பொளேர் என்று அறைந்திருப்பார் போல. அத்தனை கோபத்தில் இருந்தார் சிநேகன். நல்லவேளையாக கணேஷ் அவ்வாறெல்லாம் விளக்கம் அளிக்கவில்லை. 

“எத்தனை மணி நேரம் கஷ்டப்பட்டு இங்க நிக்கறேன். இப்ப வந்து கேம் சரியா ஆடலைன்னு சொல்றீங்க. நான் போக மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடிக்கத் துவங்கினார் சிநேகன். பிறகு பிக்பாஸிடமும் அதையே முறையிட்டார்.  “நீங்க எப்பவுமே எனக்கு ஃபேவரா இருந்ததில்லை’ என்று தன் கோபத்தை கணேஷிடமும் காட்டினார். (தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கணேஷ் அவரை காப்பாற்றியதை கோபத்தில் சிநேகன் மறந்து விட்டார் போல.) 

சுஜாவின் நிலைமை இன்னமும் பாவம். அவரின் வெற்றி ஏறத்தாழ உறுதி என்ற நிலையிலும் முடிவு அறிவிக்கப்படாததால் “சீக்கிரம் சொல்லுங்க பிக் பாஸ்” என்று வலியில் துடித்துக் கொண்டிருந்தார். சிநேகன் எவ்வாறு தன் காலை அப்படி வைத்திருக்க முடியும் என்று மற்றவர்கள் டெமோ காட்டிக் கொண்டிருந்தார்கள். கணேஷூம் அதையே சிநேகனிடம் செய்முறையின் மூலமாக விளக்கிக் கொண்டிருந்தார். “உங்க டிஸ்கஷன்ல தீய வைக்க. என்னை இறக்கிட்டு என்ன வேணா பேசிக்கங்க” என்பது சுஜாவின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கலாம். பாவம், அவஸ்தையாக துடித்துக் கொண்டிருந்தார். 

Bigg Boss

“இந்த task முடிஞ்சாலும் நான் அப்படியே நிக்கத்தயார். ஆனா ஏமாத்திட்டு ஜெயிச்சேன்னு மட்டும் சொல்லாதீங்க. அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது” என்பது சிநேகனின்  கோபமான அபிப்ராயம். ‘நானும் பார்த்தேன். சிநேகன் காலைவெச்சிட்டு இருந்தார்” என்றார் ஆரவ். (கணேஷை மட்டும் நம்பாமல் ஆரவ்விற்கும் கண்காணிப்பு அதிகாரி பதவியை பிக் பாஸ் ரகசியமாக தந்திருக்கிறார் போலிருக்கிறது). இன்னும் சிலரும் சாட்சி சொன்னார்கள். கணேஷ் மறுபடியும் தன் நிலைமையை விளக்கினார். “இது என்னோட முடிவு இல்ல சிநேகன். என்னை பார்த்துட்டு சொல்லச் சொன்னாங்க.. அவ்வளவுதான்”. கணேஷ் தன் தரப்பை விளக்கிச் சொன்னாலும் சுஜா வெற்றி பெற்ற முடிவைத் தெரிவிக்க தயங்கிக் கொண்டிருந்தார். அதை தான் சொன்னால் சிநேகனின் கோபம் தன் பக்கம் திரும்பும். பிக் பாஸே சொல்லட்டும் என்பது அவரின் தயக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். நியாயம்தான்.

**

இரவு மணி 07:15

‘உங்களின் இந்த இருபது மணி நேரப் பேராட்டம் முடிவிற்கு வந்தது. வெற்றி பெற்றவர் சுஜா’ என்று அறிவித்தார் பிக் பாஸ். பாவம், சுஜாவால் அந்த வெற்றியை கொண்டாட கூட முடியவில்லை. கால்வலியால் துடித்துக் கொண்டே இறங்கினார். இந்த முடிவை எதிர்பார்த்திருந்தாலும் கோபத்திலும் விரக்தியிலும் இருந்த சிநேகன், காரில் இருந்து இறங்காமல் அப்படியே நின்றார். அத்தனை கால்வலியிலும் சுஜா அவரிடம் சென்று எதையோ சொல்ல முயன்றார். “நான் உன்னை ஏமாத்திட்டம்மா.. கிளம்பு கிளம்பு:” என்று கோபப்பட்ட சிநேகன் தானும் காரிலிருந்து இறங்கி வலி தாங்காமல் கீழே விழப் போனார். மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்கள். 

**

“ரொம்ப தப்பா இருக்கு ப்ரோ.. கமல் சார் வந்தவுடன் சொல்லிட்டு நான் கிளம்பறேன். நான் ஏதோ ஏமாத்தி ஜெயிச்ச மாதிரி ஆயிடுச்சு. நீங்கள்ளலாம் சொல்லி நான் விட்டுக்கொடுத்திருந்தா கூட பரவாயில்ல. ஏமாத்தி ஜெயிக்கணும்லாம் நான் நினைக்கவேயில்லை. அந்த மாதிரி பழக்கம் எனக்கு கிடையாது. மதியம் முழுக்க வெயில் அடிச்சது. சுஜாவாவது பின்சீட்ல இருந்தாங்க. நான் முன்சீட்ல அத்தனை வெயில்லயும் உட்கார்ந்திருந்தேன். அசிங்கமா இருக்கு. பொய்யால்லாம் எனக்கு விளையாடத் தெரியாது. என்று சொல்லி விட்டு குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதார் சிநேகன். 

சிநேகனின் தரப்பு பரிதாபம்தான். ஏறத்தாழ சுஜாவிற்கு இணையாக அத்தனை நேரம் பொறுமை காத்து விட்டு கடைசி நிலையில் எதையோ சொல்லி “நீ தோல்வி” என்றால் எவருக்குமே கோபமும் அழுகையும் வரத்தான் செய்யும். ஆனால் எப்படியாவது இந்தப் போட்டியை முடித்து விட வேண்டும் என்கிற நெருக்கடியில் இருந்த பிக் பாஸ், கணேஷின் சாட்சியத்தை வலுவாக பற்றிக் கொண்டார் என்று தோன்றுகிறது. இல்லையெனில், இந்தப் போட்டியை இன்னமும் நீட்டித்தால் அது சர்ச்சைக்கு வழிவகுக்கலாம். 

Bigg Boss

‘கிட்ட போனால் பாய்ந்து விடுவாரோ’ என்கிற தயக்கத்தில் சிலர் தூரமாக நிற்க, கணேஷின் ஆறுதல் இந்தச் சமயத்தில் சிநேகனுக்கு முக்கியமாக இருந்தது. விதம் விதமாக சிநேகனை தேற்றினார் கணேஷ். ஓய்வு எடுப்பதையும் விட்டு விட்டு சிநேகனின் அருகில் வந்தார் சுஜா. ஆனால் சிநேகனின் கோபம் அப்படியே இருந்தது. ‘நீ கேமை கேமாத்தான் பார்ப்பே. அப்புறம் என்ன?” என்று கோபித்துக் கொண்டார். “நீங்கள்லாம் முடிவு செஞ்சு விட்டுத்தர சொன்னாக் கூட வந்திட்டு இருப்பேன்” என்பதே சிநேகனின் புலம்பலாக இருந்தது. பாவம் சுஜா, சிரமப்பட்டு வெற்றியடைந்தாலும் அதை ருசிக்க முடியாமல் குற்றவுணர்வுடன் தவித்தார். 

கமல் சொன்னது போல இது போன்ற திரைக்கதையை எத்தனை திட்டமிட்டாலும் ஒருவர் யோசித்து எழுத முடியாது. வாழ்க்கை அத்தனை சுவாரசியமான நாடகம். தினம் தினம் விதம்விதமான காட்சிகள். உடல்ரீதியாக பெண் பலவீனமானவள் என்று நம்பப்பட்டாலும், ஓர் ஆணிற்கு இணையாக உடல்திறனில் போட்டியிட்டு வென்ற சுஜாவைப் பாராட்டத்தான் வேண்டும். 

சிநேகன் துயரம் மாறாத நிலையில் அமர்ந்திருக்க, வெளியில் மதிப்பெண் போர்டு புதுப்பிக்ப்பட்டிருந்தது. பிந்து முதல் இடத்தில் இருந்தார். இதுக்குத்தான் எங்கூர்ல ஒரு பழமொழி சொல்வாங்க… ‘வெல்லம் தின்றது ஒருத்தன்….

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/102189-clash-between-suja-and-snehan---bigg-boss-tamil-updates-day-80.html

Link to comment
Share on other sites

ஹரீஷுக்கு அவசரம்... ஆனா, ஆரவ்வுக்கு காதல் வரும்..! 81-ம் நாள் - பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss


‘வேலாயுதம்’ திரைப்படத்தில் இருந்து விஜய் ஆண்டனியின் இசையில் ‘மஞ்சனத்தி மரத்துக் கட்டை’ என்கிற குத்துப்பாடலோடு பிக் பாஸ் வீட்டின் காலைப்பொழுது மங்கலகரமாக துவங்கியது. கர்நாடக சங்கீத பாணியில் அந்தப் பாடல் துவங்கும் போது ‘அடடே.. பாடல்களை தேர்ந்தெடுப்பவர்  இன்று திருந்தி விட்டாரோ’ என்று தற்காலிமாக ஏமாந்து விட்டேன். 

கடந்த சில நாட்களாக பிக் பாஸ் போட்டியாளர்களை பெண்டு எடுத்திருப்பதால், உடல் வலி காரணமாகவோ என்னமோ, நடனமாடுவதில் எவரும் ஆர்வம் காட்டவில்லை. சுஜா மட்டும் மெலிதாக நடனமாடினார். ‘நன்றி. பிக் பாஸ். எனக்குப் பிடிச்ச பாட்டு’ என்று அவர் கொஞ்சும் போது குழந்தை ரூபம் மறுபடி வந்து போனது. சுஜாவிற்குள் பல ரூபங்கள். லேடன் தெரியுமா… பின்லேடன்…

வெளியில் ஒட்டப்பட்டிருந்த மதிப்பெண் பட்டியலைப் பார்த்துவிட்டு, தன்னுடைய மதிப்பெண் குறைவாக இருப்பதையொட்டிய சந்தேகத்தை பிந்துவிடம் விரக்தியுடன் கூறினார் சிநேகன். ‘அடப்போங்கப்பா’ எனும் மனநிலைக்கு சிநேகன் வந்து விட்டார். ‘நூறு நாள் இருக்கிற நம்பிக்கையே போயிடுச்சு. ‘நான் வேண்டுமானால் என் பாயிண்ட்டுகளை தந்து விடவா?” ன்னு சுஜா கேட்டதுதான் எனக்கு கோபம். ஜெயிக்கலைன்றதுக்காக கூட இல்ல. கணேஷ் வேற எப்பவும் சுஜாவிற்குத்தான் சப்போர்ட் பண்ணுவார். அவரையே நீதிபதியா போடறதெல்லாம் என்ன நியாயம்?’ என்றெல்லாம் சிநேகனின் பொங்கல் அமைந்தது. ‘ஆமாம்.. நீங்க அத்தனை நேரம் ரொம்ப கஷ்டப்பட்டீங்க.” என்று ஆறுதல் சொல்ல முயன்றார் பிந்து.

Bigg Boss

இன்று செஃப் ஆனது கணேஷின் முறை. “இன்னிக்கு என்ன சமையல்?” “என்னவோ செய்” என்கிற உரையாடல் பொதுவாக நம் வீடுகளில் நடக்கும். ‘என்னவோ’ போல ‘குனோவா’ என்கிற வஸ்துவை கணேஷ் செய்யப் போகிறாராம். தனது buddy யான சுஜாவிடம் இது பற்றி அளந்து கொண்டிருந்தார். ‘இதைச் சாப்பிட்டவுடனே கார்ல என்ன, பிளைட்ல கூட நீ புட்போர்ட் அடிக்கலாம் buddy’ என்பது மாதிரியான பீற்றல் ஓவர்தான். ஆனால் அவர் செய்து முடித்து இறக்கும் போது அந்த உணவைப் பார்க்க வசீகரமாகத்தான் இருந்தது. 

‘இந்த மூன்று நாட்களில் இந்த மெனுதான் பெஸ்ட்’ என்று தன் buddy-க்கு பட்டி பார்த்து உற்சாக பெயிண்ட் அடித்தார் சுஜா. ஆரவ்வும் சாப்பிட்டுப் பார்த்து தன் பங்கிற்கு நற்சான்றிதழ் தந்தார். உணவுப்பொருளின் பிராண்டை ஹரீஷ் மறக்காமல் இணைத்தது சிறப்பு. (புத்திசாலியான பிள்ளை, பிழைத்துக் கொள்ளும்.)

**

Ticket to finale – Bonus task – ‘அய்யோ சிக்கிக்கிச்சு’ என்பது அதன் பெயராம். எனில், ‘அய்யோ பத்திக்கிச்சு’ சவால்தான் அடுத்ததா? எதற்கும் ஹரீஷூம் பிந்துவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. 

இது ஜோடியாக விளையாடும் விளையாட்டு. வீட்டில் ஏழு பேர் இருப்பதால் ஒருவரைக் கழற்றியாக வேண்டும். ‘அவர்களுக்குள் அடித்துக் கொள்ளட்டும்’ என்று இந்தப் பொறுப்பையும் போட்டியாளர்களிடமே விட்டு விட்டார் சாமர்த்தியக்கார பிக் பாஸ். அவர்கள் கலந்தாலோசித்து, இந்தப் போட்டியில் ஒருவர் கலந்து கொள்ளாமல் இருக்க சம்மதிக்க வேண்டும். 

எதிர்பார்த்தபடியே வையாபுரியை கழற்றி விட முடிவு செய்தனர் போட்டியாளர்கள். உடல்திறன் சார்ந்த போட்டி என்பதால் வயது காரணமாக அவரால் சிறப்பாக இயங்க முடியாது என்பதை விதம் விதமாக சொல்லி அமர்த்தி விட்டார்கள். வையாபுரியும் சற்று பாவனையாக போராடிப் பார்த்து, ‘ஆள விடுங்கடா, போங்கடா’ என்று அமர்ந்து விட்டார். 

Bigg Boss

வெவ்வேறு நிறம் கொண்ட இரண்டு கயிறுகளின் மூலம் சிக்கலான முடிச்சுகளால் ஜோடிகள் இணைக்கப்படுவார்கள். தங்கள் கைகளின் பக்கம் உள்ள கயிறு அவிழாமல் இதர வழிகளில் அந்த முடிச்சை அவிழ்த்து அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். இப்படி விடுபடும்வரை அவர்கள் ஒன்றாகவே இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், திருமண பந்தம் மாதிரியான சிக்கலான முடிச்சு. ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.’ 

இந்த சவாலில் வெற்றி பெறும் ஜோடிக்கு பத்து மதிப்பெண்கள். இதற்கும் சண்டையிட்டு அடித்துக் கொள்ளாமல், சமர்த்தாக ஆளாளுக்கு ஐந்து ஐந்தாக பிரித்துக் கொள்ளலாம். இந்தச் சவாலில் ஆரவ் மற்றும் ஹரீஷ் ஜோடி செய்த முயற்சிகள்தான் காமெடி கலாட்டாவாக அமைந்தன. விதம் விதமான முறைகளில் அவர்கள் செய்த முயற்சிகள் தோல்வியடைந்தது மட்டுமல்லாது, வில்லங்கமான தோற்றங்களையும் தந்தன. ஆங்கில திரைப்படங்களில் மிதமான பாலியல் நகைச்சுவையாக பயன்படுத்தும் காட்சிகள்.

ஆரவ் பயங்கர சேட்டைக்காரராக இருக்கிறார் என்பது தெரிகிறது. ஒரு சமகால இளைஞனின் கலாய்ப்புத்தன்மையை பல சமயங்களில் வெளிப்படுத்தி சூழலை சுவாரசியமாக்குகிறார். ஹரீஷ் கழிவறைக்கு செல்லும்போது ஆரவ்வும் கூடவே செல்ல வேண்டிய தர்மசங்கடமான நிலைமை. அவர் உள்ளே தன் ‘பணியை’ செய்யும் சப்தங்கள் கேட்க, கழிவறையின் கதவில் ஒட்டப்பட்டிருக்கும் விளம்பரத்தில் உள்ள தமன்னாவின் புகைப்படத்திற்கு மிக அருகில் நிற்க வேண்டிய நிலைமை ஆரவ்விற்கு. 

Bigg Boss

‘எப்படி ஒகேவா?” என்று கண்ணாலேயே காமிராவை நோக்கி கேட்டது மட்டுமல்லாமல், தமன்னாவுடன் உற்சாகமாக ஒரு துரித டூயட்டும் பாடி முடித்ததும் சுவாரசியம். நல்ல வேளை, ஹரீஷ் அந்த டூயட் பாடல் தனக்கானது என்று நினைத்துக் கொள்ளாமல் சரியாகப் புரிந்து கொண்டது ஆறுதல். இந்த வேளையில் இன்னொரு தர்மசங்கடமான விஷயமும் தோன்றாமல் இல்லை. அதிர்ஷ்டவசமாக ஹரீஷிற்கு வந்தது ‘ஒன்’ பாத்ரூம். ‘டூ பாத்ரூமாக இருந்திருந்தால் நிலைமை இன்னமும் சங்கடமாகியிருக்கும். 

‘போவோமா ஊர்கோலம்’ என்று பாடியபடி ஆரவ், ஹரீஷூம் இணைந்து கடந்து கொண்டிருக்க, கணேஷூம் சிநேகனும் படுத்துக் கொண்டு தங்களின் சிக்கல்களை அவிழ்க்க, விதம் விதமாக முயன்றார்கள். முன்னர் சொன்ன அதே நகைச்சுவை விதத்தை இங்கும் பொருத்திப் பார்க்கலாம். என்ன செய்ய முயன்றும் சிக்கல் தீராததால் சிஐடி சங்கரான கணேஷ், புத்திசாலித்தனமாக இந்த விஷயத்தை கையாள முயன்றார். ஒரு தாளில் அந்தச் சிக்கலின் படத்தை வரைந்து கொண்டு எப்படி அதிலிருந்து வெளியே வர முடியும் என்பதை தர்க்க ரீதியாக சிந்திக்க ஆரம்பித்தார். (நீங்க ஒரு வில்லேஸ் விஞ்ஞானி பாஸ்).

ஆனால் இந்த முயற்சியின் போது துரதிர்ஷ்டவசமாக சிநேகனின் கையிலிருந்த கயிறு அவிழ்ந்து விட்டது. கார் போட்டியில் ஏற்கெனவே அத்தனை நீண்ட பஞ்சாயத்து நடந்து விட்டதால், இதை நேர்மையாக பிக்பாஸிடம் ஒப்புக் கொண்டு பிறகு அவர் சொல்படி கேட்போம் என்று நீதிக்காக பிக் பாஸிடம் வந்தனர். ஆனால் கறாரான நாட்டாமையான பிக் பாஸ், அவர்களை வாக்குமூல அறைக்கு அழைத்து, இது பிழையாக இருந்தாலும் தவறு, தவறுதான். நீங்கள் போட்டியைத் தொடர முடியாது.’ என்றுகூறி அனுப்பி விட்டார். 

பாவம், சிநேகன் செய்த பிழை காரணமாக கணேஷூம் தன் மதிப்பெண்களை இழப்பார் என்றாலும், இந்த விஷயத்தை கணேஷ் இயல்பாக எடுத்துக் கொண்டது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஆனால் கயிறு அவிழ்ந்ததாக சிநேகன் சொல்வது தற்செயல்தானா? கணேஷின் மீது சிநேகன் வருத்தத்திலும் கோபத்திலும் இருக்கும் சமயம் இது என்பதையும் பார்க்க வேண்டும். 

Bigg Boss

 

‘கவிஞருக்காகத்தான் இந்த task பண்ணேன். அவருக்கு பாயிண்ட் வரணுமின்னு நெனச்சேன். இப்படி ஆயிடுச்சு’ என்று வருத்தப்பட்டார் கணேஷ். ‘இது ஒருவேளை தீர்க்கவே முடியாத puzzleஆ? பிக்பாஸ் நம்மை வெச்சு காமெடி பண்றாரோ?’ என்கிற சரியான கேள்வியை எழுப்பினார் ஆரவ். (இருக்கலாம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது)

கணேஷ் –சிநேகன் ஜோடி போட்டியிலிருந்து நீக்கப்பட்டதால், ‘நாம ஜெயிக்கலைனாலும் பரவாயில்ல. Disqualify ஆகிடக்கூடாது” என்று பிந்துவிடம் எச்சரித்தார் சுஜா. ஆனால் Lateral thinking எனும் வித்தியாசமான முறையில் இந்த புதிரை அவிழ்க்க முயன்ற பிந்து, உணர்ச்சி வேகத்தில் தன் கையிலிருந்த கயிறை தன்னிச்சையாக அவிழ்த்து விட்டார். ‘பெட்ரோமாக்ஸ்ல மேண்டில் மேண்டில்ன்னு சொல்றீங்களே.. இதுதானா அது.. இது எப்படிண்ணே எரியும்?” என்று கேட்டு அதை உடைத்து விட்டு ஆல்இன்அழகுராஜாவின் முறைப்பிற்கு ஆளாகும் செந்திலைப் போலானது பிந்துவின் நிலைமை.

தன் புத்திசாலித்தனம் சரியானதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஐடியா மன்னரான கணேஷை சாட்சியத்திற்கு அழைத்தனர். அவர் சிரிப்புடன் வந்து பார்த்து விட்டு ‘இது அறிவு இல்ல. ஏமாத்தறது’ என்று கிண்டலடித்துக் கொண்டிருக்கும் போதே ஆந்தை போல் பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ், பிந்து – சுஜா ஜோடியை வாக்குமூல அறைக்கு அழைத்தார். ‘பிந்து.. உங்கள் கையிலிருந்து கயிறு கழன்றதால் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறீர்கள்” என்றார். சிநேகனுக்கு கிடைத்த அதே தண்டனை பிந்துவிற்கும். 

கூடவே இருந்த சுஜா ‘எனக்குத் தெரியாம இந்தச் சம்பவம் எப்ப நடந்துச்சு?” என்று வாய் பிளந்தார். ‘நான் டிரை பண்ணும் போது அப்படியாச்சு” என்று சாக்லெட்டை தின்று விட்ட குழந்தை பாணியில் பிந்து இயல்பாகச் சொன்னாலும் கணேஷைப் போன்ற பெருந்தன்மையுடன் சுஜாவால் இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘அவ செஞ்ச பிழைக்கு நான் ஏன் பாயிண்ட்ஸை இழக்கணும். பிக் பாஸ் இதுக்கு ஏதாவது வழிசொல்லுங்க” என்று புலம்பத் துவங்கி விட்டார். ஒருவகையில் சுஜாவின் கோரிக்கை நியாயமானதுதான். இதே போல் இன்னொரு ஜோடியில் தவறு செய்திராத கணேஷூடன் இணைத்து ‘முதலில் இருந்து துவங்கலாமா?” என்கிற அவரது கோரிக்கையும் ஏற்கத்தக்கதே. ஆனால் கறார் நாட்டாமை இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டாரே!

Bigg Boss

‘பிந்துவிற்குத்தான் இருப்பதிலேயே அதிக பாயிண்ட்ஸ் இருக்கு. அதுல இருந்து ரெண்டு பாயிண்ட்டாவது எனக்கு வாங்கித் தரணும்” என்கிற சுஜாவின் புலம்பல் சிறுபிள்ளைத்தனமானது. ‘பாயிண்ட், பாயிண்ட் என்று பொழுது பூராவும் புலம்பி பாயைப் பிராண்டுகிறார் சுஜா. இன்னொருவரின் பிசகாக இருந்தாலும் பெருந்தன்மையுடன் அதைக்கடப்பதுவும் ஒருவகையில் sportsmanshipதான். மேலும் இது போனஸ் மதிப்பெண்கள் மட்டுமே. 


**

‘காட்டுங்கள் உங்கள் கைவண்ணத்தை’ என்பது அடுத்த சவால். விளம்பரதாரர்களின் அடையாளங்களை நம் மூளையில் நுழைக்கும் முயற்சிகளுள் ஒன்று.

இந்தச் சவாலுக்கு வையாபுரி நடுவராக இருக்க (பாவம், இந்த மனுஷனை எப்படியெல்லாம் கழட்டி விடறாங்க!) போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிவார்கள். Blobby மற்றும் Nippon அணி. டாஸில் வென்றவர் முதலில் சென்று தங்கள் அணியின் பெயரை பெயிண்ட்டில் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்துக்களால் அடுக்க வேண்டும். பிறகு ஆக்ட்டிவிட்டி ஏரியாவிற்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் சமாச்சாரங்களின் மூலம். நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் பொருட்களை உருவாக்க வேண்டும். சிறப்பான முறையில் செயல்படும் அணி வெற்றி பெறும். 

Bigg Boss

ஆரவ் டீம் டாஸில் வென்று முதலில் ஓடியது. பெயிண்ட்டில் போடப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்துக்களை பொறுக்கி ‘blobby’ என்கிற வார்த்தையை அமைத்தது. பிறகு ஆக்ட்டிவிட்டி ஏரியாவிற்கு ஓடினார்கள். மகாராஜா கல்யாண விருந்து மாதிரி அங்கு பல பொருட்கள் இருப்பதைப் பார்த்து முதலில் திகைத்துப் போனார்கள். பிறகு சுதாரித்துக் கொண்டு தங்கள் கற்பனையைச் சார்ந்து வீட்டு உபயோகப் பொருட்களை செய்யத் துவங்கினார்கள். 

பின்னாலேயே சிநேகன் அணியும் வந்து சேர்ந்தது. இரு அணியும் உருவாக்கிய விதம் விதமான பொருட்களை நடுவர் வையாபுரி பார்வையிட்டார். பாவம், நடுவருக்கான கெத்து அவருக்குப் போதாது. மட்டுமல்லாமல் பல பொருட்களின் உபயோகம் பற்றி அவருக்குத் தெரியவில்லை. எதை எதையோ மாற்றிச் சொன்னார். போட்டியாளர்கள் நடுவருக்கு விளக்கிச் சொன்னார்கள். பழைய தலைமுறைக்கும் இளம் தலைமுறைக்குமான வித்தியாசம். ‘ஒப்புக்கு சப்பாண்’ நடுவராக எதை எதையோ சொல்லி, ‘இது சிறப்பு, இது வெறுப்பு’ என்று தன் பொறுப்பை நிலைநாட்ட முயன்றார் வையாபுரி.

‘குப்பைக்கூடை செஞ்சீங்க.. சரி. ஆனா அதுல குப்பையே இல்லையே’ என்று வையாபுரி, லாஜிக் கண்டுபிடித்த போது உள்ளபடியே புல்லரித்தது. சிநேகன் செய்த கடிகாரம் உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. நல்ல கற்பனை. எப்படியோ இங்க்கி பிங்க்கி காரணங்களைச் சொல்லி சிநேகன் அணி பெற்றதாக அறிவித்தார் வையாபுரி. குப்பைக்கூடை செய்தது மட்டுமல்லாமல் அதில் குப்பையும் போட்டு வைத்தது வெற்றி பெற்ற அணிக்கு கூடுதல் தகுதியாம். 

கயிறு கட்டப்பட்ட நிலையிலேயே இந்தச் சவாலை செய்த ஆரவ் – ஹரீஷ் ஜோடிக்கு அந்த நிலைமை வெறுத்துப் போயிருக்க வேண்டும். இதர ஜோடிகள் இந்தச் சிக்கலில் இருந்து வெளியேறியதைப் போலவே, ஆரவ்வும் ‘கயிறு அவிழ்ந்து விட்டது’ என்று நைசாக சொல்லி ‘தப்பிச்சம்டா சாமி” என்று அந்த இடியாப்பச் சிக்கலில் இருந்து வெளியேறினார். ஆனால் ‘இது செமயான task பிக் பாஸ். மூளைக்கு வேலை தந்த சவால்” என்று சாமர்த்தியமாக பிக்பாஸிற்கு ஐஸ் வைக்கவும் முயன்றனர். 

**

Ticket finale task 4. “நீ என்ன அப்பாடக்கரா?’ என்பது அதன் பெயர். (நன்றி: காயத்ரி). இதுவும் சுவாரசியமான விளையாட்டு. ஒவ்வொரு போட்டியாளரும் இதர போட்டியாளர்களின் மீதான எதிர்மறை விஷயங்களை பதிவு செய்யும் சவால். ஏறத்தாழ 360 டிகிரி சுழற்சியில், அனைவரைப் பற்றி அனைவரும் பதிவு செய்யும் வாய்ப்பு. 

நீச்சல் குளத்தில் வெவ்வேறு மதிப்புள்ள எண்கள் அடங்கிய பிளாஸ்டிக் காயின்கள் கொட்டப்பட்டிருக்கும். அவற்றில் எண்கள் இல்லாத வெற்று காயின்களும் இருக்கும்.  போட்டியாளர்கள், இரண்டு நபர்கள் கொண்ட அணியாகப் பிரிய வேண்டும். (முதல் ரவுண்டில் சிநேகன் இல்லை). பஸ்ஸர் ஒலித்ததும் ஜோடிகளில் ஒருவர் குளத்தில் பாய்ந்து மதிப்பெண்களைப் பொறுக்கி கரையில் இருக்கும் தனது ஜோடியிடம் தருவார். இது முதல் பகுதி. 

Bigg Boss

கார்டன் ஏரியாவில் போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டிய சோளக்காட்டு பொம்மைகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் 2000 மதிப்பெண்கள் தரப்படும். ஒவ்வொரு ஜோடியும் நீச்சல் குளத்தில் பொறுக்கிய மதிப்பெண்களை, தங்களுக்குள் கலந்து ஆலோசித்து. சம்பந்தப்பட்ட நபரிடம் தனக்குப்பிடிக்காத விஷயம் என்ன என்பதற்கான காரணங்களைக் கூறி மைனஸ் மதிப்பெண்களை பொம்மையின் மீது ஒட்ட வேண்டும். 

பொம்மைகளுக்கு தரப்பட்டிருக்கும் 2000 மதிப்பெண்களில் இருந்து எதிர்மறை விஷயங்களுக்கான மதிப்பெண்கள் குறைக்கப்படும். நிகரம்தான் ஒவ்வொரு போட்டியாளர் பெறும் இறுதி மதிப்பெண். (அப்பாடி! மூச்சு வாங்குது).

இப்படியாக ஒவ்வொரு ஜோடியாக நீச்சல் குளத்தில் மதிப்பெண்களைப் பொறுக்கி. பொம்மைகளின் மீது எதிர்மறை விஷயங்களைச் சொல்லி அவற்றின் மீது ஒட்டினார்கள். ‘ஹரீஷ் எதிரணியில் இருக்கும்போது தன் பொம்மையின் அருகிலேயே நீண்ட நேரம் இருப்பதை தொலைவில் இருந்த கவனித்த ஆரவ்.. ‘மகனே.. எனக்கு நெறய மார்க் போட்டே.. கொன்னே புடுவேன். ஏன் என் பக்கமே ரொம்ப நேரம் நிக்கறே.. என்ன பூவா போட்ற’ என்று ஜாலியாக கலாய்த்துக் கொண்டிருந்தார். 

கார் போட்டியில் சிநேகன் தோற்றதால் ஆறுதல் பரிசாக சரோஜாதேவி உபயோகித்த சோப்பு டப்பாவை அவருக்கு பரிசளிக்க முயன்றார் பிக் பாஸ். எனவே ஜோடியாக அல்லாது, அவர் மட்டும் தனியாகச் சென்று எதிர்மறை மதிப்பெண்களை ஒட்டலாம். 

நான்கு சுற்றுகளாக நடந்த இந்தப் போட்டி முடிந்த பிறகு, எல்லோரும் சென்று தங்களின் நிகர மதிப்பெண்களை அறிய முயன்றனர். தோரயமாக ஒவ்வொருவருக்கும் 1500 மதிப்பெண்கள் நிகரமாக நிற்கும் போலிருக்கிறது. 

 

நாளை போட்டியில் பெண்களின் ஆடைகளை அணிந்து கொண்டு ஆண் போட்டியாளர்கள் நடனமாடுவதைக் காட்டினார்கள். போட்டியாளர்களை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் வதை செய்வதென்று பிக் பாஸ் தீர்மானித்து விட்டார் போல.

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/102300-its-urgent-for-harish-but-aarav-will-fall-in-love---bigg-boss-tamil-updates-day-81.html

Link to comment
Share on other sites

'பிக்பாஸ் சொல்ற எல்லாத்தையும் செய்ய முடியாது!' பிடிவாத பிந்து 82-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

பிக்பாஸே இன்று அசதியில் தூங்கி விட்டார் போலிருக்கிறது. காலை 08:30 மணிக்குத்தான் பாட்டு போட்டார்கள். ‘ஊதா கலரு ரிப்பன்’. சிவகார்த்திகேயனே இதை மறந்திருப்பார். புதுப்பாட்டா போடுங்க பாஸூ. ஹரிஷூக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வமுள்ளது போல. ஒவ்வொரு பாடலின் நடன அசைவுகளையும் நினைவில் கொண்டு அப்படியே நகலெடுக்க முயற்சிக்கிறார். 

இன்றைய செஃப் சுஜா. ஏதோவொரு இனிப்பு வகை உணவை தயாரித்தார். அது என்னமோ, எல்லோரும் சோதனை எலி மாதிரி ஆரவ்வையே முதலில் சுவைக்க தேர்ந்தெடுக்கிறார்கள். அவர் சாப்பிட்டுப் பார்த்து ‘வேற லெவல். கும்தலக்கடி கும்மா. சூப்பர்’ என்று சான்றிதழ் தந்தார். சுஜாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ்.

ஹரிஷ்

வையாபுரி திடீரென்று கண்கலங்கினார். மற்றவர்கள் பதறி அவரிடம் ‘என்னாச்சு’ என்று விசாரித்தனர். மூத்த உறுப்பினரிடம் கரிசனம் காட்டும் உண்மையான குடும்ப உணர்வை அந்த விசாரிப்பில் அறிய முடிந்தது. எல்லோரும் விசாரித்தும் “ஒண்ணுமில்ல.. நான் அழல. கண்ணு வேர்த்துடுச்சு” என்று சமாளித்தார் வையாபுரி. “வீட்டு ஞாபகம் வந்துடுச்சா?” என்பது உள்ளிட்ட பல கேள்விகளுடன் மற்றவர்கள் விதம் விதமாக விசாரிக்க, “ஒண்ணுமில்ல. ஒரு டம்ளர் காஃபி கொடுங்க” என்று முடித்தார். காஃபிக்காகவா இந்த அழுகை, இதை நேரடியாக முதலிலேயே கேட்டிருக்கலாமே பூரி?

வையாபுரி

வையாபுரி கண் கலங்கியதின் காரணத்தை ஆரவ்வும் ஹரீஷூம் யூகிக்க முயன்றனர். “ஷோ முடியப் போகுது. எமோஷன்ஸ் நிறைய வரும். இனிவரும் task கடினமாக இருக்கும். பிரியப் போறோம்-ன்ற உணர்ச்சியும் இருக்கும். ஏறத்தாழ எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும்” என்றார் ஆரவ். 

**

அது சவாலா என்று முதலில் தெரியவில்லை. ஆரவ்விற்கு பெண் உடையை அணிந்து பார்க்க வேண்டும் என்று பிந்துவிற்கு ஆசைவந்து விட்டது. எனவே தன்னிடமிருந்த ஓர் உடையை எடுத்து வந்து ஆரவ்விற்கு அணிவிக்க முயற்சித்தார். முதலில் சற்று தயங்கிய ஆரவ், பின்பு உற்சாகத்துடன், எப்படியோ சிரமப்பட்டு அதை அணிந்து கொண்டார். அணிந்து கொண்ட மறுகணத்திலிருந்தே ‘ரெமோ’வாக மாறி நளினத்துடன் பேச ஆரம்பித்தார். நடிகன்டா! 

ஆரவ்

ஆரவ்விற்கு பெண் உடையை அணிய வைக்கும் போது “:ஏ.. எதுக்குப்பா அதெல்லாம். வேண்டாம்” என்று மறுத்த வையாபுரி, பிறகு “அது ஆரவ்விற்கு டைட்டா இருக்கு. எனக்கு போட்டா சரியா இருக்கும்ல” என்று ஆசைப்பட்டார். எதிர்பாலினத்திவரின் உடைகள் மீது இருக்கும் ரகசியக் கவர்ச்சி சார்ந்த உணர்வு இந்தக் காட்சிக் கோர்வையில் வெளிப்பட்டது. 

பெண் உடையுடன் சுஜாவைப் பார்க்கச் சென்ற ஆரவ்வை, ‘வாடி.. ஆரவ்வி… எப்படிடி இருக்க” என்று கிண்டலாக வரவேற்றார் சுஜா. ஆரவ்வும் அதற்கேற்ப நாணிக் கோண, உடையின் பின்னாலிருந்த ஜிப்பை சிரமத்துடன் போட்டார் சுஜா. “இப்பவாவது தெரிஞ்சுக்க.. நாங்கள்லாம் எவ்ள கஷ்டப்படறோம்னு” 

ஹரிஷூக்கும் அதே மாதிரியான உடை அணிவிக்கப்பட்டது. அவரும் ஆரவ்வை நகலெடுக்க முயன்றார். பிறகு வையாபுரி. இவர் ஏதோவொரு திரைப்படத்தில், ஆண் நிலையிலிருந்து மெல்ல மெல்ல பெண் சுபாவத்திற்கு மாறும் நகைச்சுவைக் காட்சியில் நடித்திருக்கிறார். எனவே குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டு தயாராக வந்து விட்டார். சிநேகனுக்கு அணிவிக்கப்பட்ட உடையில் அவரைப் பார்க்க காமெடியாக இருந்தது. குடுமி வைத்துக் கொண்ட ஜப்பானிய சாமுராய் போல இருந்தார் சிநேகன். 

ஹரிஷ், ஆரவ்

அவர்களுக்கு மாடல்களைப் போல நிற்கவும் நடக்கவும் பயிற்சியளித்தார் பிந்து. பிறகு ராம்ப் வாக் வேறு. “ஏதாவது பாட்டு போடுங்க பிக்பாஸ்” என்று வேண்டுகோள் விடுத்தனர். தூங்கிக் கொண்டிருந்த பிக்பாஸ், சற்று தாமதமாக எழுந்து ‘மய்யா, மய்யா..’ பாடலைப் போட, அவரவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு பாடலுக்கு நடனமாட வந்தனர். மல்லிகா ஷெராவத்தே வெட்கப்படும் அளவிற்கு நாணிக் கோணி ஆடி மகிழ்ந்தனர். 

“இது பெண்களுக்கான tribute’ என்று ஹரீஷ் நீதி சொன்னது ஒருபுறம் சரியாக இருந்தாலும்.. ரொம்பவே ஓவர். 

**

‘பொன்வண்டு’ சோப் விளம்பரத்தை இரண்டு அணிகளும் உருவாக்கி நடிக்க வேண்டும் என்பது அடுத்த சவால். அது தொடர்பாக கலந்து ஆலோசித்தனர். ‘பொன் வண்டு’ என்கிற பெயர் வருவதற்காக வையாபுரி தந்த ஐடியா, ரொம்பவும் சுமாராக இருந்தது. 

பிந்து, சிநேகன்

விளம்பரத்தை அரங்கேற்றும் வேளை. பத்து நொடிகளுக்குள் ஒரு சுவாரசியமான கதையை சொல்லி, பொருளின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களின் நெஞ்சில் அழுத்தமாக பதிய வைக்க வேண்டும் என்பதே டி.வி. விளம்பரங்களின் அடிப்படையான பாணி. சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். விளம்பரங்களை உருவாக்குபவர்கள் இதற்காக பல்வேறு விதமாக தலையைப் பிய்த்துக் கொண்டு கான்செப்ட்டுகளை தயாரிக்கிறார்கள்.

வையாபுரி டீம் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை பார்த்திருக்கிறார்களா என்றே தெரியவில்லை. அவர்கள்  நடித்த விளம்பரம், பழைய கால தூர்தர்ஷன் நாடகம் போல இழுவையாக சென்றது. தலையைச் சுற்றி மூக்கை நுழைக்கும் விதமாக விளம்பரத்தின் மையத்திற்கு வந்தனர். ஆனால் இவர்களோடு ஒப்பிடும் போது ஹரீஷ், சுஜா, சிநேகன் நடித்த விளம்பரம் பல மடங்கு தேவலை. ரத்தினச் சுருக்கமாக விஷயத்திற்கு வந்து முடித்தார்கள். விளம்பர மாடலை சுஜா நன்றாக நகல் செய்தார். 

கணேஷ் இதற்கு நடுவராம். தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு அல்லாமல் சீரியல்களின் ரசிகர் போலிருக்கிறது. நாடகத்தனமாக இழுத்த, வையாபுரி டீமிற்கு கோப்பையை பரிசளித்தார். ரசனையில்லாத தேர்வு. 

**

“எடுத்துக்கோ ஜெயிச்சுக்கோ” என்று சுவாரசியமான சவால். தனித்தனியாக விளையாட வேண்டிய போட்டியிது. ஒவ்வொருவருக்கும் நூறு பந்துகள் தரப்படும். கூடவே ஐஸ் அடங்கிய பெட்டியும். 

மற்றவர் அசந்திருக்கும் நேரம் பார்த்து அவரிடமிருக்கும் பந்துகளை அபகரிக்க வேண்டும். அவர் ஐஸ் பெட்டியில் இரண்டு கால்களையும் நுழைத்து நின்றிருந்தால் எடுக்கக்கூடாது. அதிக நேரம் ஐஸில் காலூன்றி நிற்க முடியாது. வெளியே வந்துதான் ஆக வேண்டும். மற்றவர்களிடமிருந்து அபகரிக்கும் ஒவ்வொரு பந்திற்கும் ஒரு மதிப்பெண்.

மற்றவர்கள் எல்லோரும் அவரவர்களின் இடத்திலேயே பாதுகாப்பாக நின்றிருக்க, ஆரவ் இந்த விளையாட்டை உற்சாகமாகத் துவங்கினார். அருகிலிருக்கும் வையாபுரிதான் அவருக்கு கிடைத்த பலியாடு. வையாபுரி அசரும் சமயத்தில் எல்லாம் ஒரு பந்தை தூக்கிக் கொண்டு வந்து விட்டார். “ஐய்யோ.. நான் ரெண்டு காலையும் உள்ளேதான் வெச்சிருந்தேன் ஆரவ்வு…” என்று வையாபுரி கதறினார். ஆரவ் அதை மறுக்க, கண்காணித்துக் கொண்டிருந்த பிக்பாஸ், ‘ஆரவ், அது உங்கள் மதிப்பெண்” என்று தீர்ப்பளித்தார். 

big16_vc8_09487.jpg

ஆரவ்வின் உற்சாகத்தைப் பார்த்த மற்றவர்களும் அவரவர்களின் இடத்திலிருந்து நகர்ந்து மற்றவர்களின் பந்துகளை அபரிக்க முயன்று சட்டென்று ஓடிவந்து ஐஸிற்குள் நின்றனர். ‘காலை வைத்து விட்டேன், ஏன் எடுத்தாய்?” என்கிற கூக்குரல்கள் ஒருபுறமும், “இல்லை. அதற்கு முன்பே நான் எடுத்து விட்டேன்” என்கிற கத்தல்கள் ஒருபுறமும் எதிரொலிக்க நிலவரம் கலவரமாக இருந்தது. 

கணேஷ் மற்றும் சிநேகன் விளையாடியது காமெடியாக இருந்தது. இருவரும் சட்சட்டென்று நகர்ந்து மற்றவர்களின் பந்துகளை எடுத்துக் கொண்டனர். இதற்கு பேசாமல் பந்துகளை சாவகாசமாக பரிமாறிக் கொண்டால் கூட நன்றாக இருந்திருக்கும். இதற்கிடையில் பிந்துவிற்கும் சிநேகனுக்கு கருத்து வேறுபாடு தோன்றி விட்டது. 

“அவருடைய பந்துகளை எடுக்கச் செல்லும் போது கைகளால் மறிக்கிறார். மட்டுமல்லாது, நான் எடுத்த இரண்டு பந்துகள் தவறி விழும் போது அதையும் எடுத்துக் கொண்டு விட்டார்” என்பது போன்ற புகார் பிந்துவிடமிருந்து எழுந்தது. ‘நான் இனி விளையாடப் போவதில்லை’ என்று கோபித்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்று விட்டார் பிந்து. ‘சரி நான் திரும்பக் கொடுத்தடறேன்” என்று சிநேகன் சொன்னாலும் அவர் மனம் மாறுவதாக இல்லை. 

பிந்து மாதவி

எல்லோரும் விளையாட்டை நிறுத்தி விட்டு பிந்துவை சமாதானப்படுத்தச் சென்றனர். ‘சிநேகன் உண்டாக்கிய பிரச்னையைப் பற்றி சொன்ன பிந்து ‘தான் விளையாடப் போவதில்லை’ என்று உறுதியாக தெரிவித்து விட்டார். இது குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, வெளியே இருந்தவர்கள் திகைத்து நின்று கொண்டிருந்தனர். ‘போட்டி நடந்து கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்று வாத்தியார் அறிவித்ததும், பள்ளி மாணவர்கள் போல் அனைவரும் தங்களின் நிலைக்கு ஓடினார்கள். 

பிந்து இல்லாததால் அவருடைய பந்துகள், பாதுகாப்பின்றி அநாதையாக இருந்தன. ‘அதை எடுக்கலாமா?’ என்று ஒருவர் சந்தேகம் எழுப்ப பதில் வருவதற்குள் அனைவரும் அதன் மீது பாய்ந்தார்கள். பிந்துவின் இடத்திற்கு அருகில் இருந்த சிநேகனுக்கு அடித்தது அதிர்ஷ்டம். பாய்ந்து பாய்ந்து ஓடி பந்துகளை சேகரித்தார். அவர் நகர்ந்த சமயம் பார்த்து அவர் இடத்திற்கு கணேஷ் பாய்ந்தார். 

ஹரிஷூற்கு மட்டும் மனச்சாட்சி உறுத்தியது போல. ‘this is not fair’ என்று கத்திக் கொண்டிருந்தார். மட்டுமல்ல விளையாட்டை நிறுத்தலாம் என்று சொல்லி விட்டு அடுத்த கணமே சட்டென்று பந்துகளை எடுக்கும் அநீதி பற்றியும் புலம்பிக் கொண்டிருந்தார். கண்காணிப்பில்லாமல் இருக்கும் தன்னுடைய பந்துகள் உற்சாகமாக களவாடப்படுவதை சுவாரசியமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் பிந்து. 

விளையாட்டு முடியவும் எல்லோரும் வந்து அமர்ந்தனர். “நீ விளையாடலன்னு சொன்னவுடனே, உன் பந்துகளை சூறையாடிட்டாங்களே” என்று வருத்தப்பட்டார் வையாபுரி. “இருக்கறதுலயே நான்தான் கம்மி” என்று ஆதங்கப்பட்டார் ஹரீஷ். நேர்மையாக விளையாட முயன்றால் இதுதான் கதி. “பாயிண்ஸ் போனால் போகுது. என்னால் அநீதியாகவெல்லாம் விளையாட முடியாது” என்பது அவரது அபிப்ராயம். பிந்துவின் பந்துகளில் இருந்து ஒன்றைக் கூட ஹரீஷ் எடுக்கவில்லை என்று நினைக்கிறேன். தூரமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். 

big16_vc12_09161.jpg

விளையாட்டை முடித்து வந்த சிநேகன், பிந்துவிடம் தம் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொன்னார். ஆனால் பிந்துவின் புகாரில் எந்தவொரு மாற்றமும் இல்லை. தத்தக்கா பித்தக்கா தமிழில் ஆங்கிலத்தைப் போட்டுப் பிசைந்து அவர் அளித்த விளக்கம் புரியவேயில்லை. இருந்தாலும் பரவாயில்லை, பெண்ணென்றால் பேயும் இரங்கும். நானாக இருந்தால் என் பங்கு பந்துகள் அனைத்தையும் பிந்துவிற்கு பரிசாக அளித்திருப்பேன். 

**

“கிழி கிழின்னு கிழிக்கணும்’ என்பது அடுத்த சவால். போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிவார்கள். ஒரு அணியில் உள்ளவர், எதிரணி நபர்களைப் பற்றி கிண்டலும் கேலியாகவும் பேச வேண்டும். அதாவது கொச்சையான வழக்கில் சொன்னால் “கழுவிக் கழுவி ஊற்ற வேண்டும்’ இப்படி கழுவி ஊற்றுவதற்கான நேரம் ஒரு நிமிடம். 

மதிப்பெண் தேவைப்படாத ஒரு போட்டியாளரை தேர்ந்தெடுத்து, அவரை நடுவராக இருக்க சம்மதிக்க வைக்க வேண்டும். ஏற்கெனவே மூட்அவுட்டில் இருக்கும் பிந்து, ‘இது போன்ற போன்ற போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடியாது. என்னால் தரவும் முடியாது, திரும்பப் பெற்றுக் கொள்ளவும் முடியாது’ என்று கூறி சென்று விட்டார்.

ஆரவ்தான் முதலில் துவங்கினார். எதிரணியில் இருந்த வையாபுரியை நோக்கி, ‘எப்ப பாரு போறேன்.. போறேன்னு ஊளையிட்டுக்கிட்டே இருக்கறது. ஏன்.. கதவு திறந்திருச்சுல்ல… அப்ப போக வேண்டியதுதானே, சும்மா சீன் போட்டுக்கிட்டு.. ‘என்று மரணபங்கம் செய்தார். 

ஹரீஷ், சுஜாவை செய்தது சரியான கலாய்ப்பு. ‘இந்தம்மா வெளியே போய் சிறந்த நடிகை ஆவாங்களோ இல்லையோ.. சிறந்த வேலைக்காரியாவாங்க.. அந்தளவிற்கு பாத்திரமெல்லாம் பளிச்சுன்னு கழுவறாங்க” என்று வெறுப்பேற்ற சுஜாவின் முகத்தில் மறைத்துக் கொண்ட கோபம் எட்டிப் பார்த்தது. ‘மகனே.. இருடி.. என் சான்ஸ் வரட்டும்” ஆனால் அவரின் முறை வந்த போது, மற்றவர்களை திட்டி விட்டு ஹரீஷ் பக்கம் வந்த போது நேரம் முடிந்து விட்டது. ‘அய்யோ.. இவனைத் திட்ட முடியலையே” என்று பதற, ‘நேரம் முடிஞ்சிடுச்சே’ என்று ஒழுங்கு காட்டினார் ஹரீஷ்.

big16_vc9_09354.jpg

நக்கலடிப்பதில் அனுபவமுள்ள வையாபுரி கலக்கியெடுப்பார் என்று எதிர்பார்த்தால் சற்று நிதானமாகவே நடந்து கொண்டார். “ஆரவ்வு.. நீ ஆறு லவ்வா.. விவகாரமான ஆளா இருப்பே.. போலிருக்கே.. வாலிப விளையாட்டுல ஜகஜ்ஜால கில்லாடியே இருக்கே’ என்று வாரிக் கூட்டினார். பிறகு கணேஷை நோக்கி “முட்டைய தின்னுட்டே இருந்தே.. அப்புறம் நான் சொல்லிட்டே இருந்தப்புறம் நிறுத்திட்டே’ என்பது போல் கிண்டலடித்தார்.

இப்போது கணேஷின் முறை. ‘எவ்ள அடிச்சாலும் தாங்கும்’ நல்லவரான கணேஷ் எங்கே திட்டப் போகிறார் என்று நினைத்திருந்த போது கலக்கி விட்டார். “உங்க சொத்தை வித்து வந்த காசுலயா நான் முட்டை தின்னேன். பிக்பாஸ் சொத்து அது. உங்களுக்கு ஏன் வலிக்குது.. உங்களுக்கு எவ்ள சாப்பிட்டாலும் பாடி, பீடி மாதிரிதான் இருக்கும். அதுக்கு என்ன பண்றது?’ என்று வையாபுரியை கடுமையாக ஓட்டியவர், அடுத்தது சிநேகனிடம் வந்தார். “நம்ம கவிஞர் இருக்காரே.. அவருக்கு வெளியே வேறு பெயர் இருக்கு. ‘கட்டிப்பிடி வைத்தியத்துல கமலையே மிஞ்சிடுவாரு.. அது எப்படி பெண்களிடம் நெருங்கி, ஆறுதல்-ன்ற பேர்ல கட்டிப்பிடிக்கறீங்க.. அது மட்டுமில்ல.. எல்லாத்துக்கும் ஓ.. ன்னு அழறதில கில்லாடியா இருக்காரு” என்று ஒரு லாரி தண்ணீர் கொண்டு சிநேகனை கழுவி ஊற்றினார் கணேஷ்.

அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த சிநேகன், தன் முறை வந்ததும், ‘நீங்கள்லாம்.. .. என்ன பருப்பா.. உங்களை பெரிய ஆளுன்னு நெனச்சீட்டு இருக்கீங்களா.. ஒரு பொண்ணு கிட்ட போய் ஆறுதல் சொல்றேன்னா.. முதல்ல அந்தப் பொண்ணுக்கு என் மேல நம்பிக்கை வரணும்.. அப்பதான் அது உண்மையா இருக்கும். இல்லைன்னா.. செருப்ப கழட்டி அடிப்பாங்க.. புரியுதா?” என்றெல்லாம் சீரியஸாகவே பதிலளித்தார். 

போட்டியாளர்கள் விளையாட்டுக்காக பரஸ்பரம் ஒருவரையொருவரைப் பற்றி கிண்டலடித்துக் கொண்டாலும், இதன் மூலம் அவர்களின் மனங்களில் நெடுநாட்களாக உறைந்துள்ள கோப, தாபங்கள், கிண்டல்,கேலிகள் போன்றவை தன்னிச்சையாக வெளிவந்து விடும். ஒருவர் பாதுகாப்பு உணர்வுடன் இருந்தாலும் கூட சற்று கசிந்து விடும். 

இந்தச் சவாலில் போட்டியாளர்கள் மற்றவர்களை அதிகமாக கிண்டலடித்து விடக்கூடாது என்கிற உணர்வுடன் ஜாக்கிரதையாகவே விளையாடினர். இது ஒருவகையில் பாராட்டத்தக்கது. நடுவர் என்கிற முறையில் கூட இந்த விளையாட்டில் கலந்து கொள்ள பிந்து விரும்பவில்லை. எனவே ‘தத்தக்கா பித்தக்கா” தமிழில் அவர் மற்றவர்களை வசையும் காமெடியை தமில் உலகம் காணும் பாக்கியத்தை இழந்து விட்டது. 

ஆனால் இந்தப் போட்டி நடந்த சமயத்தில் காயத்ரி, ஆரத்தி கோஷ்டிகள் இல்லாமல் போய் விட்டார்களே என்று ஆதங்கமாக இருந்தது. “நீ என்ன பெரிய உரோமமா? அப்பாடக்கரா.. வெஷம்’ என்றெல்லாம் ஆரம்பித்து கலக்கியெடுத்திருப்பார்கள். எதிரணி மட்டுமல்லாமல் நம்முடைய காதுகளிலும் ரத்தம் வந்திருக்கும். 

 

எல்லோரும் இணைந்து பிக்பாஸை திட்டுவது போல ஒரு சவால் வைத்திருந்தால் போட்டி இன்றோடு நிறைவு பெற்றிருக்கும். நிலைமை அத்தனை ரணகளமாக ஆகியிருக்கலாம். துணிவிருந்தால் அதைச் செய்யுங்களேன், பிக்பாஸ்.

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/102406-i-cant-do-whatever-biggboss-says-bindhu-madhavi-becomes-raiza-happenings-of-bigg-boss-day-82.html

Link to comment
Share on other sites

"ரொம்ப நாளா இருந்தா மக்களுக்குப் பிடிச்சிருக்குனு அர்த்தம் இல்லை!" யாரைச் சொல்கிறார் கமல்? 83-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

 

கமல் உள்ளே வரும் போதே அரசியல் நையாண்டியைத் துவங்கி விட்டார். ‘நான் போன வாரம் சொன்னது உறைத்து விட்டது போலிருக்கிறது. வேலையெல்லாம் சரியா நடந்துக்கிட்ட மாதிரி இருக்கு” என்றவர், சற்று இடைவெளி விட்டு “அய்யோ.. நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள நடக்கறத சொன்னேன். எதைச் சொன்னாலும் இரண்டு அர்த்தமாவே எடுத்துக்கிட்டா, எப்படி?” என்று பாவனையாக அலுத்துக் கொண்டார். (அப்படி என்ன சரியாக நடக்கத் துவங்கியது ஆண்டவரே? அதாவது வெளியில்?).

கமல்



இந்த வார நிகழ்வுகளின் சுருக்கத் தொகுப்பு ஒளிபரப்பானது. “ஓகே. நல்ல விஷயங்கள் நடக்குது. போட்டி மனப்பான்மை அதிகமாயிருக்கு. தோற்றதற்காக கவலைப்படுகிறார்கள்” என்று அதைப் பற்றிய எதிர்வினையை தெரிவித்த கமல், வெள்ளிக்கிழமை நிகழ்வை காணத் துவங்கினார். 

பிக்பாஸ் வீட்டில் விடியற்காலை நேரம் இப்போதெல்லாம் 08:30 ஆகி விட்டது போல. “ஆலுமா டோலுமா’ என்கிற அட்டகாசமான துள்ளலிசைப் பாடல் ஒலிபரப்பானது. இதற்கு எவராலும் நடனம் ஆடாமல் இருக்கவே முடியாது. என்றாலும் ஹரிஷ் மட்டும் வந்து சிறப்பாக ஆடினார். கூட சுஜாவும். மற்றவர்கள் ஆடவில்லை. காலையில் எழுந்தவுடனே நடனமாடுவது உண்மையில் சிரமமானது. உடல் உறுப்புகள் ஓய்விலிருந்து மெல்ல மெல்ல விழித்துக் கொள்ள சற்று அவகாசம் கேட்கும். அதை மீறி இயங்கினால் எங்காவது சுளுக்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. அப்படியும் தங்களை சுதாரித்துக் கொண்டு ஆடும் போட்டியாளர்களுக்கு பாராட்டு. 

இன்றைய செஃப் சிநேகன் – புளியோதரையை தயார் செய்தார். தேர்ந்த சமையல்காரர் போல அதற்கான செய்முறையை விளக்கமாக கூறினார் சிநேகன். வையாபுரி வந்து அதை விநோதமாக பார்த்துக் கொண்டிருந்தார். உணவு க்ளோசப்பில் காட்டப்பட்டதே தவிர, எவரும் ருசிப்பதை காட்டவில்லை. சோதனை எலியான ஆரவ்வையும் காணவில்லை. 

சிநேகன்


பிக்பாஸின் பிரதான விளம்பரதாரர்களின் பிராண்டுகளை நம் மூளையில் திணிக்கும் விஷயங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஓர் உணவு பிராண்ட் தொடர்பான கேள்வி –பதில் நடந்தது. ஆரவ் நடுவராக இருந்து கேள்விகளைக் கேட்டார். உணவு டப்பாவின் மீது அச்சிடப்பட்டிருக்கும் விவரங்களைப் பார்த்து உடனே பதில் சொல்ல வேண்டும். 

ஆரவ் கேள்வியை முடிக்கும் முன்னரே, பள்ளி மாணவர்கள் போல் பதில் சொல்ல போட்டியாளர்கள் அடித்துக் கொண்டார்கள். பிந்து அதிக அளவில் சரியான பதில்களைக் கூறினார். 

**

நேற்று நிறுத்தப்பட்ட Ticket to finale task ஆன, ‘எடுத்துக்கோ ஜெயிச்சிக்கோ’ சவால் இன்றும் தொடர்ந்தது. நேற்று கோபித்துக் கொண்டு விலகிய பிந்து, இன்று பார்வையாளராக கூட வராமல் விளையாட்டைப் புறக்கணித்தார். 

நேற்று மாதிரியே இன்றும் சில குடுமிப்பிடி சண்டைகள் நடந்தன. ஆனால் நேற்று போல அதிக பாதுகாப்பு உணர்ச்சியோடு காவல் காக்காமல் போட்டியாளர்கள் இறங்கி விளையாடினார்கள். அப்படி விளையாடினால்தான் இது சுவாரசியமாக அமையும். வையாபுரியின் பக்கத்திலிருந்த ஹரீஷ் நகரவே இல்லாததால், வாய்ப்பு கிடைக்காத வையாபுரி, ‘ஹரீஷ், காலை எடுத்துட்டு நில்லுங்க’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் ஹரீஷால் நகரவே முடியாத நிலைமை. பக்கத்தில் கணேஷ் ஆந்தை போல காத்துக் கொண்டிருந்தார். மட்டுமல்லாமல் மற்றவர்களைப் போல் துணிச்சலுடன் foul game ஆட ஹரீஷ் தயாராக இல்லை. 

பிக் பாஸ் தமிழ்



வையாபுரி சற்று அசரும் போதெல்லாம் ஆரவ் பாய்ந்து வந்து வையாபுரியின் பந்துகளை சுட்டு விடுகிறார். இந்தப் பக்கம் இருக்கிற சுஜாவின் பந்துகளையும் லவட்டி விடுகிறார். ஹரீஷின் பந்துகளை ஒரே சமயத்தில் கணேஷூம் சிநேகனும் எடுத்ததால் சிறிய முட்டல் நிகழ்ந்தது. வையாபுரியின் பந்துகள் அனைத்தும் தீர்ந்ததால் அவர் போட்டியிலிருந்து விலகி ஓய்வெடுக்கச் சென்று விட்டார். ‘பார்த்துக்கிட்டு இருக்கும் போதே சூறையாடிட்டாங்களே” என்பது அவரின் புலம்பல். 

மேலும் சில குடுமிப்பிடி சண்டைகளோடு இந்தப் போட்டி இனிதே நிறைவுற்றது. இருப்பதிலேயே ஹரீஷ்தான் குறைவாக பந்துகளை அபகரித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஹமாம் சோப் போட்டு குளிக்கும் ஆசாமி போல. 

**

அடுத்த சவால், பொருட்களை திருடும் போட்டி. Kleptomania-வாக இருந்தால் இதில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு அதிகம். ‘ஜித்து ஜில்லாடி, நீ கில்லாடி’ என்பது இதன் தலைப்பாம். ஒவ்வொருவரும் இதர போட்டியாளர்களின் வெவ்வேறு வகையான ஆறு தனிப்பட்ட உபயோகப் பொருட்களை, அவருக்கே தெரியாமல் திருட வேண்டும். எல்லோரையும் பிக்பாஸ் freeze செய்து விட்டு ஒவ்வொருவராக அழைப்பார். அப்போது எவருடைய பொருட்களை திருடினோமோ, அதைச் சொல்லி விட்டு, தன் பெயர் கொண்ட கூடையில் போட வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு பொருளை மட்டுமே போட வேண்டும். முதலில் ஆறு பொருட்களை போடுபவருக்கு பத்து மதிப்பெண். அடுத்தடுத்த வரிசைகளில் வருபவருக்கு அடுத்த மதிப்பெண்கள். 

சுஜா



போட்டிக்கான பஸ்ஸர் ஒலிக்கும் போது கழிவறையின் பக்கம் இருந்த ஆரவ், அப்போதே அங்கிருந்த பொருட்களை லவட்டத் துவங்கி விட்டார். ஆரவ் படுக்கையறையில் இல்லாததால் அவருடைய பொருட்களை மற்றவர்கள் சூறையாடத் துவங்கி விட்டனர். ஆரவ்வின் போட்டோவை சுஜா எடுத்துக் கொண்டார் போல. ஆரவ்வின் ஷூவை எடுத்து தங்க நகை போல தன்னுடைய துணிகளுக்குள் ஒளித்துக் கொண்டார் கணேஷ் (உவ்வேக்). வையாபுரி எந்தப் பொருளை எடுத்தாலும், “அது என்னோடதுண்ணே’ என்று ஆட்சேபித்த ஹரீஷ், அது அப்படி இல்லை என்றதும் சமாதானமடைந்தார். “என்னய்யா.. எது எடுத்தாலும்’..” என்று வையாபுரி சலித்துக் கொண்டார். 

“நான் பாத்ரூம் போயிட்டு வர்றதுக்குள்ளே task-ஐ தொடங்கி விட்டால் என்ன நியாயம்?” என்று பிறகு வந்த ஆரவ் பாவனையாக அலுத்துக் கொண்டார். இதன் மூலம் தான் எதையும் களவாட ஆரம்பிக்கவில்லை என்கிற ஜாலியான பொய்யை இதர போட்டியாளர்களிடம் நிரூபிக்க விரும்பினார். “அதெல்லாம் பாத்ரூம்ல எடுத்துட்டுதானே இங்க வந்திருக்கீங்க” என்று சரியாக மோப்பம் பிடித்தார் சுஜா. வையாபுரியும் அதை வழிமொழிய, ஆரவ் தன் பொய் விளையாட்டில் உறுதியாக இருந்தார். ‘பாத்ரூம்ல எடுத்தீங்களா. இல்லையா?” என்றார் வையாபுரி. ‘எடுத்துட்டு பாத்ரூம் முடிச்சிட்டு வெளியே வந்தேன். அவ்வளவுதான்” என்றார் ஆரவ். அதிலிருந்த ‘விவகாரமான’ நகைச்சுவையைப் புரிந்து கொண்டு வையாபுரி சிரித்தார். (சின்னப்பசங்கள்லாம் ஓரமாப் போங்க).

வையாபுரி



எதைத் திருடலாம் என்கிற சிந்தனையுடன் சென்று கொண்டிருந்த வையாபுரி கண்ணாடிக் கதவை கவனிக்காமல் அதன் மீது நேராக முட்டிக் கொள்ள அவருடைய மூக்கில் அடிபட்டு ரத்தம் வரத் துவங்கியது. பதறிய இதர போட்டியாளர்கள், விளையாட்டை நிறுத்தி விட்டு, உடனடியாக வையாபுரிக்கு முதலுதவி செய்யத் துவங்கினார்கள். வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்னையிது. பார்வை பிரச்னையினால் கண்ணாடிக் கதவில் முட்டிக் கொள்வார்கள். ஆனால் எங்காவது புதிய இடத்தில் இது நேரலாம். இத்தனை நாட்கள் பழகிய வீட்டில் வையாபுரிக்கு இது நேர்ந்தது துரதிர்ஷ்டமானது. அத்தனை கவனக்குறைவாக, ஏதோவொரு நினைவில் சென்றிருக்கிறார் போல. 

ஸ்மோக்கிங் ரூமில் ஹரீஷூம் ஆரவ்வும் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘நான் வருவதற்குள் ஏன் போட்டியை ஆரம்பித்தீர்கள்?” என்கிற ஆரவ்வின் கேள்வி உண்மையானதோ என்று நினைத்த ஹரீஷ், மனச்சாட்சி உறுத்த, தான் எடுத்த பொருளை திரும்ப வைத்து விட்டதாக கூறினார். ஆனால் தான் செய்தது விளையாட்டு என்கிற உண்மையை அப்போதும் வெளிப்படுத்த இயலாமல் இருந்த ஆரவ், “பரவாயில்லை. வெச்சுக்கோங்க’ என்று சமாளிக்க நிலைமை சற்று சங்கடமாகியது. ஆரவ் சொன்னது பொய் என்பதை பிறகு உணர்ந்த ஹரீஷ் அதற்காக வருந்தினார். (பிறகு கமல் முன்னால் பஞ்சாயத்தும் நிகழ்ந்தது).

சிநேகன் செய்தது உத்தமமான காரியம். தன்னுடைய அனைத்துப் பொருட்களையும் மூட்டை கட்டி பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, புதையல் காக்கும் பூதம் போல அருகிலேயே நின்று கொண்டார். இதனால் அவருடைய பொருட்களை எவரும் எடுக்க முடியாமல் போனது. வையாபுரி இதற்காக அலுத்துக் கொண்டார். 

ஹரிஷ்



வையாபுரியின் சந்தனம், குங்குமம் ஆகிய பொருட்களை பிந்து, சுஜா ஆகியோர் திருடிக் கொண்டார்கள். அவர்களின் முறை வரும் போது ‘ஒரு சமயத்தில் ஒரு பொருளைத்தான் போட வேண்டும்’ என்கிற விதியை மீறி மூன்று பொருட்களை சென்று போட்டார்கள். ‘அப்படி போடக்கூடாதுங்க.. என்னதிது கேவலமா இருக்கே’ என்று ஹரீஷ் அலுத்துக் கொண்டார். விளையாட்டுகளில் நேர்மை தவறுவதை ஹரீஷால் சற்றும் சகித்துக் கொள்ள முடியவில்லை. தான் மட்டும் நேர்மையாக இருப்பதை முட்டாள்தனமாகவும் ஏமாற்றப்பட்டதாகவும் உணர்வதால் வரும் எரிச்சல் அது. 

பிந்து தன்னைத் திருத்திக் கொள்ளும் நோக்கில், பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டு விட்டு இரண்டு பொருட்களை திரும்ப எடுத்து வந்து விட்டார். ஆனால் சுஜா அவ்வாறு செய்ததாக தெரியவில்லை அல்லது காட்சிகள் காட்டப்படவில்லை. பிக்பாஸ் கணேஷை அழைத்த போது அமர்ந்திருந்த சுஜாவிடம் ஆசிர்வாதம் வாங்குவது போல குனிந்தார். ‘என்னடா இது வியப்பதற்குள், தன்னுடைய துணிமணிகளின் அடியில் ஒளித்து வைத்திருந்த ஆரவ்வின் ஷூக்களை எடுத்துச் சென்று கூடையில் போட்டார். 

ஹரீஷ் மற்றும் ஆரவ்வின் இடையில் இருந்த வருத்தம் மெல்ல புகையத் துவங்கியது. “நீங்க பாத்ரூம்ல இருந்த போதே பொருட்களை எடுக்க ஆரம்பிச்சிட்டீங்களா.. அப்ப இங்க உங்க பொருட்களை எடுத்தது தப்பேயில்லையே, நான் வேற முட்டாள் மாதிரி அதை திரும்ப வெச்சுட்டனே’ என்பது ஹரீஷின் புகார். ‘நீங்க வெச்சுக்கங்க –ன்னு அதுக்குத்தான் சொன்னேன்’ என்று திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக சமாளித்தார் ஆரவ். அந்த ஜாலியான பொய் விளையாட்டை அவர் துவங்கியது துரதிர்ஷ்டமானது என்பதை இப்போது உணர்ந்திருப்பார். 

“அடிச்சுக்கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க”: என்கிற காமெடியாக, ஆரவ் சுஜாவின் காதில் எதையோ முணுமுணுப்பாக (வெற்று) ரகசியம் சொல்லி விட்டுப் போக, ஏற்கெனவே தாம் ஏமாற்றப்பட்ட கோபத்தில் இருக்கும் ஹரிஷீற்கு கோபம் இன்னமும் கூடியது. சுஜாவிடம் இதற்காக கோபித்துக் கொண்டார். “எனக்கு இது தேவையா?” என்று ஆரவ்விடம் சுஜா அலுத்துக் கொண்டார். ஆரவ் செய்யும் குறும்புகள் ஜாலியான நோக்கில் இருந்தாலும் சமயங்களில் வினையாகப் போய் விடுகிறது. 

இதற்கிடையில் தன்னுடைய லென்ஸ் கேப்பை காணோம் என்கிற பதட்டத்தில் இருந்தார் ஹரீஷ். “வேறு எந்தப் பொருளை வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க. நைட்டு லென்ஸை போட்டு மூடி வைக்க அது வேணும். இல்லைன்னா லென்ஸ் பாழாயிடும். புரிஞ்சுக்கோங்க” என்று அவர் கூப்பாடு போட்டாலும், ‘நான் எடுக்கலைங்க” என்று கற்பூரம் ஏற்றி அணைக்காத குறையாக மற்றவர்கள் சத்தியம் செய்தார்கள். கார்டு விளையாட்டில், தன் பாக்கெட்டிலேயே கார்டை மறதியாக வைத்து விட்டது போல, ஹரீஷே தவறுதலாக லென்ஸ் மூடியை எங்கோ வைத்து விட்டு பதறுகிறாரோ என்று தோன்றியது. ஏனெனில் மற்றவர்கள் சமர்ப்பித்த பொருட்களில் லென்ஸ் கவர் வந்தது போல தெரியவில்லை. 

விளையாட்டில் மற்றவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளாதது பற்றிய மனஅழுத்தம் ஹரீஷிற்கு உயர்ந்து விட்டது போல. தனியாக சென்று பிக்பாஸிடம் முறையிட்டார். “இங்க இருக்கறதுக்கு எனக்கு விருப்பமேயில்லை. யார் மேலயும் கோபம் கொள்ளாமல் இங்க இருந்து போகணும்னு நெனக்கறேன். வெளியே நல்லவனா போகணும்னு ஆசைப்படறேன். எந்தக் காரணத்தையாவது சொல்லி என்னை அனுப்பிடுச்சுடுங்க ப்ளீஸ்” என்று வேதனையுடன் தன் கோரிக்கையை தெரிவித்தார். பொதுவில் சீன் போடாமல் தனிமையில் அவர் சொன்னதுதான் நல்ல விஷயம். மனிதர், மனிதரை விழுங்கும் போட்டியில் இத்தனை நேர்மை உடம்புக்கு ஆகாது ஹரீஷ். 

இரண்டாவது, மூன்றாவது சமயங்களில் ஆளாளுக்கு தாங்கள் களவாடிய பொருட்களை கூடையில் சமர்ப்பித்தனர். இதையெல்லாம் கூட சுடத் தோன்றுமா என ஆச்சரியமாக இருந்தது. கணேஷ் அமர்ந்து யோகா செய்யும் மேட்டை ஆரவ் சுட்டு விட்டார். தன் முறை வந்த போது “எங்கிட்ட ஒண்ணுமில்லை பிக்பாஸ்” என்றார் ஹரீஷ். சிநேகன் ஷூவிற்குள் எதையோ பதுக்க முயன்றார். ஆறாவது ரவுண்டில், கூடையில் போட வையாபுரிக்கு எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. “ரெண்டு, மூணு பேரை வேண்டுமானால் கூடையில் தூக்கிப் போடுகிறேன். (இந்த உடம்பை வெச்சுக்கிட்டு இப்படி சொல்லலாமா, வையாபுரி!) இல்லைன்னா, என்னை வேணுமின்னா கூடைல தூக்கிப் போடுறேன்.. எங்க பிக்பாஸ்.. எல்லாப் பயலும் ஆந்தை மாதிரி இருக்காங்க” என்று சலித்துக் கொண்டார். 

ஆறு ரவுண்டுகள் முடிந்தும் போட்டி தொடர, ஆறு பொருட்களா, அல்லது ஆறு சுற்றுகளா என்கிற குழப்பம் ஏற்பட்டது. “அவருதானே ரூல்ஸ் படிச்சாரு. அவரைக் கேளுங்க” என்று சிநேகன் ஆரவ்வை கைகாட்டி விட “எனக்கும் புரியலை. ஆறு சுற்றுகள் –னு நான் சொல்லலை. படிக்கும் போது கவனிக்காம, இப்ப கேக்கறது என்ன நியாயம். எனக்கு கூட குழப்பமா இருக்கு. ஏன் என்னையே கேக்கறீங்க?” என்று கோபப்பட்டார் ஆரவ். அவர் குறிப்பிடுவது சரிதான். விதிகளில் குழப்பமிருந்தால் நேரடியாக பிக்பாஸிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆரவ் இதை ஒரு உத்தியாக பயன்படுத்துகிறாரோ என்று சந்தேகப்படுவது முறையல்ல. “ஒவ்வொரு விளையாட்டிலும் ஏதாவது ஒரு அநீதி எனக்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது” என்பது சிநேகனின் புகார். ஆரவ்வும் தனியாக காமிராவில் வந்து பிக்பாஸிடம் தன் நிலைமையை விளக்கினார்.

ஒருவரையொருவர் கிண்டல் செய்து கொள்ளும் போட்டியில் மதிப்பெண் வந்தது. கணேஷ் அணி வெற்றி பெற்றது. ஐந்து மதிப்பெண்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் ஏற்கெனவே வெறுப்பில் இருக்கும் ஹரீஷ் ‘எனக்கு மதிப்பெண் வேண்டாம்’ என்று மறுக்க, அவரை வற்புறுத்தி ஒரு மதிப்பெண்ணை தந்தனர். 

**

கமல் வருகை நிகழ்ந்தது.. குறிப்பிட்ட சதவீத பார்வையாளர்கள், கமலின் நேர்த்தியான நெறியாள்கையின் காரணமாக சனி, ஞாயிறு மட்டுமே நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள். அவர்கள் சற்று ஏமாறும்படி கமல் சார்ந்த பகுதி இன்று குறைவாகவே இருந்தது. 

“நான் கேட்டுக் கொண்டபடி போட்டி மனப்பான்மை சற்று உயர்ந்திருக்கிறது. சில வருத்தங்களும் இருந்திருக்கும். என்றாலும் நன்றாக இருந்ததாக பரவலாக பேச்சு. பாராட்டுக்கள்” என்றவர், சுஜாவிடம் “எந்த task கடினமாக இருந்தது?” என்று பஞ்சாயத்தை துவங்கினார். “கார் task-தான் சிரமம்” என்று சுஜா சொல்ல, அது சார்ந்த பழைய பஞ்சாயத்துக்கள் தூசு பறந்தன. ‘ இது தொடர்பாக நீங்கள் இருவரும் செய்த வாதப் பிரதிவாதங்கள் நன்றாக இருந்தன. சிநேகன் வெளியேற்றலின் விளிம்பில் நின்று கொண்டிருந்ததாகச் சொன்னார். உண்மையாகவே கார் விளிம்பில் நீங்கள் இருவரும் நின்று கொண்டிருந்தீர்கள்’ வார்த்தைகளில் விளையாடினார் கமல். 

‘எந்த சவால் பிடித்திருந்தது?” என்று ஒவ்வொருவரையாக கேட்கத் துவங்கினார் கமல். ‘ஐஸ் பக்கெட்டுக்குள் நின்று கொண்டு பந்து சேகரிக்கும் விளையாட்டு பிடித்திருந்தது. வேடிக்கையாகவும் இருந்தது. அதே சமயத்தில் சவாலாகவும் இருந்தது” என்றார் ஆரவ். 

“எனக்கு கார் task சவாலாக இருந்தது” என்று துவங்கினார் சிநேகன். “தண்ணி குடிக்க முடியாது. இருபது மணி நேரம் பாத்ரூம் போக முடியாது” என்கிற நடைமுறைச் சிக்கலை சிநேகன் சொன்னதும் “ஆமாம். நான் கூட நெனச்சேன். காருக்குள்ள ஏதாவது காலி பாட்டிலை வெச்சிருப்பாங்களோன்னு” என்று கிண்டலடித்தார் கமல். “காருக்குள் வெயில் சூட்டில் அமர்ந்திருந்த சிரமத்தை சொன்னார் சிநேகன், இதற்காக இருவரையும் பாராட்டினார் கமல். ‘நீச்சல் குளத்தில் குதித்து மதிப்பெண் பொறுக்கும் சவால் பிடித்திருந்தது. ஆனால் கணேஷ் எனக்கு வாய்ப்பு தரவில்லை” என்று ஜாலியாக ஆதங்கப்பட்டார் வையாபுரி. 

“கார்டு task-ல் நான் முட்டாள்தனம் செய்து விட்டேன். கார்டை பாக்கெட்ல வெச்சுக்கிட்டே எங்கெங்கோ தேடினேன்’ என்று ஹரீஷ் சொன்னதும், அதையும் அரசியல் நையாண்டிக்காக பயன்படுத்திக் கொண்டார் கமல். “ஆமாம். வாக்குச் சீட்டு மாதிரி நம்ம கிட்டயே வாய்ப்பு இருக்கும். ஆனா அதை விட்டுட்டு எங்கெங்கோ தேடுவோம்” என்று சமயல் கிடைக்கும் போதெல்லாம் சிக்சராக அடித்துக் கொண்டிருந்தார் கமல். 

“திருடற task பிடிச்சிருந்தது. சினிமாக்களில் கூட போலீஸ்காரனா நடிச்சிருக்கேன். திருடனா நடிச்சதில்லை. என்னோட பொருள் ஒன்றையும் விட்டுத்தராமல் பாதுகாத்து, மற்றவர்களின் பொருட்களை சாமர்த்தியமாக திருடினேன்’ என்று பெருமையடித்துக் கொண்டார் கணேஷ். “இதைப் போலவே மற்றவர்களை கிண்டலடிக்கும் சவாலில் என்னால் சரியாக செய்ய முடியாது என்றே முதலில் நினைத்தேன். ஆனால் ஆரவ் மற்றும் ஹரீஷின் உதவியால் அந்தச் சமயத்தில் சிறப்பாக செய்ய முடிந்தது” என்று மற்றவர்களுக்குமான கிரெடிட்டை சரியான சமயத்தில் பதிவு செய்தார் கணேஷ். 

ஆம். நாம் கூட இவர் எங்கே கிண்டலடிக்கப் போகிறார் என்று நினைத்திருந்த சமயத்தில் வையாபுரியை போட்டு வெளுத்து வாங்கினார், மனுஷன். கமலின் பாராட்டும் இதற்காக அவருக்கு கிடைத்தது. 

அடுத்ததாக ஹரிஷிடம் வந்தார் கமல். “திருடற task-ல் நீங்கள் வருத்தப்பட்டது மாதிரி தெரிந்தது. ஏன் போகணும்னு நெனக்கறீங்க?’ என்று நேரடியாக கேட்டார் கமல். ஆரவ் செய்த பொய் விளையாட்டு தன்னை வருத்தப்பட வைத்தது என்று தன் தரப்பு விளக்கத்தை தந்தார் ஹரீஷ். இதற்கு பதில் சொல்லும் வகையில் ஆரவ் சொன்ன பதிலும் சரியாகவே இருந்தாலும், ‘பொதுவில் சொன்னால் மாட்டிக் கொள்வோம். அதனால் அந்தப் பொய்யை தொடர்ந்தேன்” என்று அவர் குறிப்பிட்டது மட்டும் முரணாக இருந்தது., ஸ்மோக்கிங் ரூமில் ஹரிஷீடம் தனியாக பேசும் போது ஆரவ் இதை ஒப்புக் கொண்டிருக்கலாம். விளையாட்டு வினையான தருணம். 

இந்த விளையாட்டில் எல்லோருமே சூழ்நிலைக் கைதிகள் என்கிற அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். விளையாட்டின் போக்கில், அது சார்ந்த பதட்டங்களில், ஆர்வங்களில் அவரவர் செய்யும் சில பிசிறுகளுக்காக, அவர்களை ஏதோ உலகமகா குற்றவாளிகள் போல் குற்றஞ்சாட்டி பார்வையாளர்கள் கடுமையாக வசைவது, அதை வைத்துக் கொண்டு மிகையாக பிஎச்டி ஆராய்ச்சி செய்வதெல்லாம் முறையற்றது. எல்லா மனிதர்களுமே நிறையும் குறையும் உள்ளவர்கள். குற்றம் சாட்டும் நாமே கூட இது போல் நம்முடைய நடைமுறை வாழக்கையில் எத்தனையோ முறை சறுக்கியிருப்போம். மனச்சாட்சியைத் தவிர அதை பதிவு செய்ய எந்த காமிராவும் இல்லை என்கிற விஷயத்தை நினைவில் வைத்திருப்பது நல்லது. 

“ஹரீஷ். நீங்க நேர்மையா விளையாடினதா நெனக்கறீங்களா?” என்று கேட்டார் கமல். “ஆமாம். சார். விளையாடினேன்” என்று பதில் வந்தது. ஆம். அது பெரும்பாலும் உண்மைதான். பல விளையாட்டுக்களில் ஹரீஷின் நோ்மையையும், மற்றவர்கள் தவறும் போது அவர் படுகிற எரிச்சலையும் பார்த்திருக்கிறோம். 

“சிநேகன், ஹரீஷ் நேர்மையாக விளையாடினார் என்று நினைக்கிறீர்களா? என்று பந்தை சிநேகனிடம் தள்ளி விட்டார் கமல். “இல்லை சார். விளையாடும் போது நான் சரியா விளையாடறேன்னு என்னையே பார்க்கறதில்லை” என்றார் சிநேகன். பிந்துவிடம் ஏற்பட்ட பஞ்சாயத்தையும் இடையில் குறிப்பிட்டார். “இருங்க.. அந்தப் பஞ்சாயத்தை தனியா வெச்சுக்கலாம்” என்று கமல் கூறியதும் சபையில் சிரிப்பலை எழுந்தது. 

சிநேகன் சொன்ன காரணத்தையே ஆரவ்வும் சொன்னார். “விளையாட்டு பதட்டத்துல நம்மையே கவனிக்க முடியலை. சரி, இத்தனை காமிராக்கள் இருக்கிறது. நாம் தவறு செய்தால் மாட்டிப்போம். குறும்படம் வந்துடும்” என்கிற ஜாக்கிரதையுணர்ச்சி காரணமாக நேர்மையாக விளையாடத் தோன்றும்”: ‘குறும்படம்’ என்கிற வார்த்தை ஆரவ்விடமிருந்து வந்ததாலோ என்னவோ, அரங்கில் இருந்த பார்வையாளர்கள் நையாண்டியாக உற்சாகக்குரல் எழுப்பினார்கள். 

அடுத்தது, கார் சவாலில் சிநேகனுக்கும் சுஜாவிற்கும் ஏற்பட்ட பஞ்சாயத்திற்கு வந்தார் கமல். “எல்லோரும் சேர்ந்து சுஜாவை வெளியே வரச்சொல்லி தீர்மானம் போட்டீங்க. அது சரியா?” என்றதற்கு மற்றவர்கள் ஆமோதித்தனர். எதிர்பார்த்தபடியே சுஜா, இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.  “எனக்கு சம்மதமில்லை. என்னுடைய இரவு சவாலிற்கு சிநேகன் உதவி செய்ததை நினைவுப்படுத்தியது மாதிரி இருந்தது. அந்த உதவியை நான் நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால் விட்டுக்கொடுங்கள்’ என்ற மாதிரி கேட்டது சங்கடமாக இருந்தது என்றார் சுஜா. 

அவரை இடைமறித்த சிநேகன் “நான் அப்படிக் கேட்கவில்லை. நீங்க வேணா வீடியோவைப் போட்டுப்பாருங்க. அப்படி வந்திருக்காது. கார்ல உட்கார்ந்திருந்த அத்தனை நேரமும் அவங்க கிட்டநான் பேசலை. என் பலவீனத்தை அவங்க பயன்படுத்திக்க அனுமதிக்க கூடாதுன்னு முடிவு செய்தேன். காரணம், கார்டு சேகரிக்கும் போட்டியில் எனக்கு முன்னால் காமிராவில் வந்து நின்னாங்க. அப்ப விட்டுக் கொடுத்தேன். “ஆனா அது என் புத்திசாலித்தனம்” என்று அவங்க சொன்னப்பதான் உடைஞ்சேன். ஒரு இடத்துல கூட அவங்க விட்டுத்தரலை”

“ கணேஷ் – ஆரத்தி மாதிரி ரெண்டு பேரும் சேர்ந்து  இறங்கிடலாமான்னு கூட அவங்க கேட்டாங்க. அதனால பயனில்லைன்னு சொல்லிட்டேன். அவங்க விட்டுக்கொடுத்து ஜெயிக்கிற அளவிற்கு நான் கோழையில்லை. இந்த தீர்ப்பில் எனக்கு திருப்தியில்லை. இதர போட்டியாளர்களின் கோரிக்கையை சுஜா மறுக்கும் போது பிக்பாஸ் அவருக்கு ஒரு வாய்ப்பு தருகிறார். ஆனால் என்னுடைய கால் பிழையாக காரின் விளிம்பில்  பட்டிருந்தால் அது சார்ந்த எச்சரிக்கையை பிக்பாஸ்  எனக்கு தந்திருக்கலாம். மற்ற சவால்களில் சிறிய பிழை ஏற்பட்டால் கூட வாக்குமூல அறைக்கு அழைத்து எச்சரிக்கை செய்யும் பிக்பாஸ், இருபது மணி நேர போராட்டத்திற்கும் மேல் நீளும் கடுமையான போட்டியில் எச்சரிக்கை தராதது அநீதி.”

என்று பராசக்தி சிவாஜி கணேசன் மாதிரி தன் தரப்பாக நீண்ட விளக்கத்தை அளித்தார் சிநேகன். அவர் சுட்டும் காரணங்கள் நியாயமானவை போல்தான் தோன்றுகிறது. “மக்களும் பார்த்துக்கிட்டிருக்காங்க. பிக்பாஸூம் பார்த்துட்டிருக்கார்” என்ற சூசகமான எச்சரிக்கையை தந்தார் கமல். ‘இல்ல சார். அது கூட பரவாயில்லை. சுஜா என் கிட்ட வந்து ‘என் பாயிண்ட்டை வேணா தந்திடறேன்’ னு சொன்னது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. அதனாலேயே அவங்க கூட பேசறதை நிறுத்திட்டேன்” என்றார்.

“அவர் அழும் போது என்னால் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியலை. நான் பட்ட நீண்ட வேதனையை அவரும் பட்டிருக்கார். அதனாலதான் அத்தனை கால்வலியிலும் போய் இதைச் சொன்னேன்” என்றார் சுஜா. இரு தரப்புமே ஒருவகையில் நியாயமாகத்தான் படுகிறது. மதிப்பெண்களை சமமாக பிரித்து கூட தந்திருக்கலாம். 

‘சரி. இந்தப் பஞ்சாயத்திற்கு அப்புறம் வர்றேன்” என்ற கமல் (இன்னுமா?) என்று சிறிய இடைவேளைக்கு பின் வந்தார். (அப்படி எங்கேதான் போகிறார்?)

கமலின் ஒவ்வொரு வருகையின் போதும் போட்டியாளர்கள் எழுந்து நிற்பதும் ‘உட்காருங்க’ என்று அவர் சொல்வதும் தேவையற்ற சம்பிரதாயமாகத் தெரிகிறது. ஒருமுறை வணக்கம் சொன்னால் போதாதா?

“சுஜா, இந்த சவாலின் மூலமாக சிநேகனைப் பற்றி என்ன நினைக்கறீங்க?” என்று கேட்டார் கமல். ‘அவர் ரொம்ப strong. விட்டுத்தர மாட்டார்” என்றார் சுஜா. “அவங்க வாழ்க்கை வேற, கேம் வேற –ன்னு பார்க்கறாங்க. (அப்படித்தானே இருக்கணும்?) விளையாட்டிற்காக என்ன வேணா செய்வாங்க. நான் அப்படி இல்லை’ என்று சென்ட்டியைத் தூவினார் சிநேகன். “ஆம் அதிலென்ன தப்பு?” என்று கறாராக சொன்னார் சுஜா. அவர் சொன்னதை கமலும் ஆமோதித்தார். 

“எனக்கு இத்தனை நாட்களாக வாக்களித்த மக்களுக்காக நான் நிச்சயம் நூறு நாட்கள் விளையாடுவேன். நான் இங்கு கற்றுக் கொண்டதை வாழ்க்கையில் பயன்படுத்த மாட்டேன்’ என்றார் சிநேகன். வாழ்க்கையின் அதே நடைமுறை விஷயங்கள்தான் பிக்பாஸ் விளையாட்டிலும் பிரதிபலிக்கிறது என்கிற நிதர்சன உண்மையை கவிஞர் மறந்து போனது ஏன்?

மறுபடியும் ஹரீஷிடம் வந்தார் கமல். “இவங்க பேசினதைப் பார்த்தீங்களா. இதுல இருந்து உத்வேகம் வரலையா?” என்றார். ஆனால் ஹரீஷ் இன்னமும் மனவருத்தத்தில் இருக்கிறார் போலிருக்கிறது. தயங்கி தயங்கிப் பேசினார். 

“கார்டை மறந்துட்டு உங்களை நீங்களே திட்டிக்கிட்டீங்க இல்லையா.. அந்த விஷயம் எனக்கு பிடிச்சிருந்தது. அந்த உத்வேகத்தோட விளையாடுங்க” என்று கமல் சொன்னாலும், ‘இல்லை சார். மனசு ஒத்துக்கலை’ என்று தயங்கினார் ஹரீஷ். “எவ்ள நேரத்துல ஒத்துக்கும். சொல்லுங்க. அதிக டைம் இல்லை” என்று வாட்சைப் பார்த்தார் கமல். வேடிக்கை. 

அடுத்த தூண்டிலை பிந்துவின் பக்கம் போட்டார். “ஹரீஷிற்கு என்ன அட்வைஸ் பண்ணுவீங்க?” “அவர் ரொம்ப அப்பாவி. ஆனால் சில விஷயங்களை எளிதாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடணும்” என்று சொல்லி வகையாக மாட்டிக் கொண்டது மயில். “அவரைச் சொல்லிட்டு நீங்க விளையாட மாட்டேங்கறீங்களே?” என்று கிடுக்கிப்பிடி கேள்வியை கேட்டார் கமல். சபை சிரித்தது. 

“அந்தச் சமயத்துல எனக்கு பிக்பாஸ் மீது கோபம் இருந்தது. ஒவ்வொரு பந்தை எடுக்கும் போதும் அவர் எனக்கு சாதகமாக சொல்லவில்லை. அது எனக்கு இடையூறாகவே இருந்தது” என்றவரை இடைமறித்த கமல் “பிக்பாஸ் மேல யாருக்கு கோபம் இல்லை. சொல்லுங்க பார்க்கலாம்” என்று சேம் சைட் கோல் போட எல்லோரும் சிரித்தனர். 

“ஓகே. சிறிய வருத்தங்கள் இருந்தாலும் எல்லோரும் sportmanshipவோட விளையாடினீங்க. பாராட்டுக்கள்” என்று வாழ்த்தினர் கமல். மறுபடியும் ஹரீஷிடம் வந்த கமல், ‘என்னாச்சு என்று விசாரித்தார்”. “இல்லை சார். நான் பொய்யா நடிக்க விரும்பலை” என்று உண்மையைச் சொன்னார் ஹரீஷ்.

பழைய போட்டியாளர்கள் vs புதிய போட்டியாளர்கள் என்கிற அரசியல் இருக்கிறதா என்று விசாரித்தார் கமல். பிந்துவும் ஹரீஷீம் அதை ஒரு மாதிரியாக ஆமோதித்தனர். “ரொம்ப நாளு இருக்காங்கறதுக்காக அவங்களை மக்களுக்கு பிடிச்சதுன்னு அர்த்தம் இல்லை” என்று அரசியல் நையாண்டி வெடிகுண்டை வீசினார். உள்ளே இருப்பவர்களுக்கு அது புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. பார்வையாளர்களுக்குப் புரிந்திருக்கும். 

“புதிய போட்டியாளர்கள் ஜெயிப்பதில் பழைய போட்டியாளர்களுக்கு ஏதேனும் ஆட்சேபம் இருக்குதோ” என்று விசாரித்தார் கமல். இல்லை என்று மழுப்பினார்கள் பழைய போட்டியாளர்கள். ஆனால் வீட்டின் உள்ளே வேறு மாதிரியாகத்தான் பேசுகிறார்கள். 

கடைசியாக, நாமினேஷன் விஷயத்திற்கு வந்தார். ‘வையாபுரி கிளம்ப தயார் ஆயிட்டிங்களா,? என்று விசாரித்தார். “ நீண்ட காலம் இல்லாமல், என் குடும்பத்திடம் இணக்கமும் அன்பும் ஏற்பட்டது எனக்கு பெரிய விஷயம். பிக்பாஸ் வெற்றியை விடவும் அதை முக்கியமாக நினைக்கிறேன். எனவே வெளியில் சொல்ல தயாராக இருக்கிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டார் வையாபுரி. (ஜெயிச்சுட்டு வாங்க –ன்னு என்று வீட்டம்மணி சொன்னதை அவர் சற்று நினைவுகூர்நதிருக்கலாம்).

ஹரீஷ் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்ட செய்தியை மறைமுகமான சொன்ன கமல், மற்றவர்களின் தலைவிதியை நாளை சொல்வதாக விடைபெற்றார். வையாபுரிதான் வாக்கு எண்ணிக்கையின் கடைசி  வரிசையில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தகவல்கள் கூறுகின்றன. பார்ப்போம்.

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/102509-it-doesnt-mean-people-like-something-if-they-are-used-to-it-happenings-of-bigg-boss-day-83.html

Link to comment
Share on other sites

முந்திக் கொண்டார் சினேகன்... விரட்டிப் பிடிப்பது கணேஷா...சுஜாவா?! 84-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

“நாமினேஷன் வரிசையில் உள்ளவர்களில் எவர் வெளியேறப் போகிறார் என்கிற அறிவிப்பிற்கு முன்னால் ‘கோல்டன் டிக்கெட்’ வெற்றியாளரை தெரிந்து கொள்ளலாம். ‘இதை நானே கொண்டு வந்து தருவேன்’ என்று போட்டியாளர்களிடம் முன்பு வாக்குத் தந்திருக்கிறேன். இதுவரைக்கும் யார் வெற்றியாளர் என்று எனக்கும் தெரியாது. ஆனால் இப்ப தெரியும். வீட்டுக்குள் செல்கிறேன். அப்போது உங்களுக்குத் தெரியும்” என்று சஸ்பெனஸ் வைத்து விட்டு சென்றார் கமல்.

“யாரென்று தெரிகிறதா.. இவன் தீயென்று புரிகிறதா?” என்கிற ‘விஸ்வரூப’ பாடல் பின்னணியில் ஒலிக்க, வெடிச்சத்தத்துடன் தீப்பொறிகள் பறக்க, கமலின் வருகை நிகழ்ந்தது. போட்டியாளர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்றார்கள். வீட்டின் வாசலில் போட்டிருந்த வரவேற்பு கோலத்தைப் பாராட்டினார் கமல். அவரின் காலில் விழ சிலர் முயன்ற போது ‘விழாதீங்க.. ப்ளீஸ்’ என்று வேண்டிக் கொண்டார் ‘சுயமரியாதை’யில் நம்பிக்கையுள்ள கமல். 

Bigg Boss

“ஏதாவது சாப்பிடறீங்களா?” வேர்க்கடலை இருக்கு” என்று உபச்சாரம் செய்தார் சிநேகன். “கொடுங்க.. காந்தி சாப்பிட்டது” என்றார் கமல். (கூட எக்ஸ்ட்ரா பிட்டிங் இல்லாம சாதாரணமாக பேசவே மாட்டீங்களா, ஆண்டவரே!) சிநேகன் வரவேற்பு மடல் வாசித்து கமலைப் பாராட்டினார். கமலின் படத்தலைப்புகள் சில இருந்தன. சில விஷயங்களில் தமிழர்களை மாற்றவே முடியாது. “வீடியோல பார்க்கும் போது உள்ள கலாட்டாவா இருக்கும். இப்ப ஏன் அமைதியா இருக்கீங்க?” என்றார் கமல். வேர்க்கடலையையும் கொடுத்து விட்டு பேசச் சொன்னது நல்ல ஐடியா இல்லை. மைக்கில் சத்தம் வரும். 

“உங்களை பேச வெச்சு பார்க்கணும்னு ஆசைப்படறோம்” என்றார் பிந்து. (அடுத்த படத்தில் நிச்சயம் சான்ஸ் உண்டு). “சாப்பிட்டுக்கிட்டே எப்படி பேசறது? அப்படி செய்யக்கூடாதுன்னு சின்னப்புள்ளல இருந்து வளர்த்துட்டாங்க” என்றார் கமல். வையாபுரியின் மூக்கைப் பற்றி விசாரித்தார். (“நீங்க கிட்ட வாங்க.. மூக்கு இங்க வராது”) “அவருக்கு மூக்குல அடி. இவருக்கு மனசுல அடி” என்றபடி ஹரீஷை குறும்பாக பார்த்தார்.  

பிக் பாஸ் வீட்டு அனுபவத்தைப் பற்றி வையாபுரியிடம் விசாரித்தார். “இப்ப தெளிவா இருக்கேன் சார்.. இது வரைக்கும் நெறய தப்பு பண்ணியிருக்கேன். இந்த 84 நாள்லதான் அதெல்லாம் புரியது. அது வரைக்கும் புரியலை” என்றார் வையாபுரி. “எல்லோருக்கும் அவங்க தப்பு பண்றது தெரியும். சிலர் தெரியாம மறந்துடுவாங்க. அவங்க மூக்கு மாதிரி.. அவங்களாலேயே பார்க்க முடியாது” என்றார். அவரவர்கள் பிக் பாஸ் வீடு ஏற்படுத்திய மாற்றத்தை உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டனர். “நான் தப்பு செஞ்சா எல்லோர் கிட்டயும் மன்னிப்பு கேட்கணும்னு தோணுது” என்றார் சிநேகன். 

Bigg Boss

“இதெல்லாம் scripted –னு சில பேர் சொல்லிட்டு இருக்காங்க.. இந்த மாதிரி காட்சிகள்லாம் எந்த சினிமால பார்த்திருக்கீங்க? நான் கூட இந்த வீட்டிற்கு முதல்ல வந்த போது, ‘இதுவொரு கட்டிடம், 60 காமிராக்கள் இருக்கு’ன்னு சாதாரணமாகத்தான் பார்த்தேன். ஆனால் இப்போது ஒரு குடும்பத்தைப் பார்க்கிற உணர்வு வருகிறது. குடும்பத்துல சச்சரவு வராது –ன்னு சொல்ல முடியாது. கண்டிப்பா வரும். யாருக்காவது ஆபத்து, அடிப்பட்டது –ன்னா ஒண்ணா கூடிடுவாங்க..”

“இது போன்ற விஷயங்களுக்கு குடும்ப வாழ்க்கை அவசியம். அது உதவும். கூட்டுக்குடும்ப வாழ்க்கையை நாம் இழந்து விட்டோம். உறவுகளை அடையாளம் சொல்லி அழைக்க வெட்கப்படுகிறோம். நீங்க அதை செஞ்சிக் காட்டீடிங்க. எனக்கு கூட சமயங்களில் இதைப் பார்த்து அழுகை வரும். முன்ன கோபம் நிறைய வந்தது. இப்ப குறைச்சிக்கிட்டேன்” என்று வெளிப்படையாக பேசினார் கமல்.

“வெளியே என்ன நடக்குது சார்?” என்று கமலின் வாயைப் பிடுங்க முயன்றார் பிந்து. ‘இன்னமும் இருட்டலை” என்று ஜாலியாக சமாளித்த கமல், ‘ரெண்டு மூணு புதுப்படம் ரிலீஸ் ஆயிருக்கு. அவ்ளதான்’ என்று முடித்தார். 

“இங்க விளையாடின விளையாட்டுக்களில் எது கடினமாக இருந்தது?” என்று கமல் கேட்டதற்கு, கயிற்றில் உள்ள  முடிச்சை அவிழ்க்கும் போட்டிதான் சிரமமாக இருந்தது” என்று கூறினர். எவருமே ஜெயிக்காத போட்டி அது. ‘சரி, அதை எடுத்துட்டு வாங்க” என்று தாமே அதை இலகுவாக செய்து காட்டினார். “எந்தவொரு கடினமான விஷயமும் அடிப்படையில் எளிமையாகத்தான் இருக்கும்’ என்றொரு பொன்மொழி உண்டு. இந்தச் சிக்கலும் அப்படியே. (இந்த முடிச்சை எவ்வாறு அவிழ்ப்பது என்பது தொடர்பான வீடியோ இணையத்தில் உள்ளது) ஆரவ்வும் ஹரீஷூம் அதை முயன்று பார்த்து ஆச்சரியப்பட்டனர். இனிமேல் எவரையும் “முடிச்சவிக்கி” என்று சுலபமாக திட்டி விட முடியாது. அந்த விஷயமும் கடினமானதுதான். 

**

Bigg Boss

“சரி. முக்கியமான விஷயம். கோல்டன் டிக்கெட். யார் வெல்லப் போறாங்கன்னு உங்களுக்கு ஆர்வமாக இருக்கும். இல்லையா?” வாங்க போகலாம்” என்று அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு அழைத்துச் சென்றார். மதிப்பெண்களின் வரிசை மட்டும் இருந்தது. போட்டியாளர்களின் அடையாளங்கள் இல்லை. கமலிடம் அதற்கான புகைப்படங்கள் இருந்தன. தன்னுடைய புகைப்படத்தை எடுக்கும் போதே, வையாபுரிக்கு புரிந்து விட்டது. “நான்தான் சார் கடைசில இருப்பேன்” என்றார். அதன்படியே ஆகிவிட்டது. வையாபுரிக்கு மேல் சுஜாவின் புகைப்படம். 

அடுத்த புகைப்படத்தை ரகசியமாக எடுத்ததாக கமல் நினைத்துக் கொண்டிருக்கும் போது ‘என் ஃபோட்டோ” என்றார் ஹரீஷ். “பார்த்தீங்களா?” என்று கேட்ட கமல், சட்டென்று தொனியை மாற்றி “பார்த்துட்டீங்களா?” என்றது சிறப்பு. (நடிகன்டா!. ) ஹரீஷ் பெற்ற மதிப்பெண்கள் முப்பது. கணேஷ் முப்பத்தொன்று. பிந்து 36.

முதல் இரண்டு இடத்தை எவர் பெறுவார் என்பதில் சஸ்பென்ஸ் வைத்தார் கமல். போட்டியாளர்களுக்கு பதற்றம் கூடியது. ஆரவ்வா, சிநேகனா? இரண்டு பேருக்குமே ஆதரவு இருந்தது. ஆரவ் பெயரை நிறைய பேர் சொன்னார்கள். சஸ்பென்ஸை இழுத்துக் கொண்டே போனார் கமல். “சரி போட்டோவை அப்புறம் வெச்சுக்கலாம்” என்று சொல்லி எல்லோரையும் பக்கத்தில் அழைத்தார். ஆரவ் மற்றும் சிநேகன் இடம் வலமாக நின்றார்கள். டிக்கெட்டை வாங்க தன் கையை நீட்டி காமெடி செய்தார் வையாபுரி. யோசிப்பது போல் பாவனை செய்த கமல், சட்டென்று சிநேகனின் கையில் கோல்டன் டிக்கெட்டை தந்தார்.

Bigg Boss

கவிஞரின் முகத்தில் பரவசம். இனிமேல் சிநேகனை எவரும் அவரை நாமினேட் செய்ய முடியாது.  எனவே வெளியேற்றத்திற்கு வாய்ப்பில்லை. நூறு நாள்கள் உறுதியாக இருப்பார். நான்கு இறுதிப் போட்டியாளர்கள் ஒருவராக சிநேகன் தகுதி பெற்றிருக்கிறார். ‘நன்றி.. நன்றி’ என்றார் சிநேகன். கார் போட்டியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இந்த வெற்றி ஒரு பெரிய மருந்தாக அமைந்திருக்கும். ஆனால் இதே போல் கடினமாக உழைத்த, சுஜா கடைசி வரிசைக்கு சென்றது துரதிர்ஷ்டமானது. 

“மக்கள் கைவிட மாட்டாங்கன்னு நான் சொல்லிட்டே இருந்தேனா, இல்லையா?” என்றார் வையாபுரி. “நீங்க வெற்றியை நெருங்கியிருக்கிறீர்கள் என்றுதான் இதற்குப் பொருள்” என்று சிநேகனின் மகிழ்ச்சித்  தீயில் சிறிது தண்ணீரை ஊற்றினார் கமல். மற்றவர்களுக்கு இதனால் உற்சாகம் குறைந்து விடக்கூடாதே என்று நினைத்தாரோ என்னமோ, “மத்தவங்கள்லாம் இதைப் பத்தி என்ன நெனக்கறீங்க. ஒரு வெற்றிப் பயணத்தில் நிறைய மேடு பள்ளங்கள் இருக்கும். எதுவும் நிலையில்லை. சரி. எனக்கு சில கடமைகள் இருக்கு. எவிக்ஷன் பிராசஸை போய்ப் பார்க்கணும். நான் கிளம்புறேன்” என்றார் கமல். “ரொம்ப நாள் ஆசை சார். உங்களுக்கு ஒரு முத்தம் தரணும்” என்று ஆசைப்பட்டார் சிநேகன். கமல் அதற்கு இணங்கினார். (கமலுக்கே முத்தமா?!) ஹரீஷ் குழந்தை போல் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க, “உங்க கன்னத்தைக் கிள்ளணுமா?” என்று கிள்ளி விட்டார். ஹரீஷை உற்சாகப்படுத்தி போட்டியில் நீடிக்க வைக்க வேண்டும் என்கிற கமலின் முயற்சியை புரிந்து கொள்ள முடிகிறது.

Bigg Boss

தன் நண்பர் ஒருவருக்கு கமலின் வாயால் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று சுஜா விரும்பினார். ஆசிரியரிடம் பாத்ரூம் போக அனுமதி கேட்கும் எல்கேஜி மாணவன் போல் பயந்து பயந்து சுஜா கேட்க, அனுமதியளித்தார் கமல். சிவகுமார் என்கிற சுஜாவின் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லப்பட்டது. “சரி. கிளம்பறேன். எங்காவது வெடி வெடிக்கப் போவுது, பார்த்து… வரும்போதுதான் வெடி மரியாதையெல்லாமா? போகும் போது கிடையாதா?” என்று ஜாலியாக கமெண்ட் செய்து கொண்டே கிளம்பிய கமல், எல்லோரிடமும் மகிழ்ச்சியாக விடை பெற்றார். போட்டியாளர்களின் முகத்திலும் பயங்கர குஷி தெரிந்தது. சக போட்டியாளர்கள் அனைவருக்கும் சிநேகன் நன்றி சொன்னார். சுஜாவின் முகத்தில் உற்சாகம் குறைந்திருந்தது. 

**

கமல் அரங்கிற்குள் வந்தார். வெளியேற்றப்படவிருக்கிறவர் எவர் என்கிற விடை தயாராக இருந்தது. ஆரவ் மற்றும் வையாபுரியில் எவர் வெளியேறுவார் என்று நினைக்கிறீர்கள்? என்று பிந்துவிடம் கேட்டார் கமல். சிவாஜி போல அப்போதே கண்கலங்கத் துவங்கி விட்டார் பிந்து. ‘No Eviction day’வாக இருந்தால் நன்றாக இருக்கும். இந்த வீட்டில் நுழைந்தபோது நான் தனியாகத்தான் அமர்ந்திருப்பேன். வையாபுரி அண்ணன் தாமாக முன்வந்து என்னிடம் பேசுவார். பல உதவிகளைச் செய்தார். இந்த வீட்டில் என்னுடைய முதல் நண்பர். அவர் மேல் எனக்கு பெரிய மரியாதையுள்ளது” என்று பிந்து நெகிழ்ந்தார். ஆரவ்வைப் பற்றி சுஜாவிடம் விசாரித்தார் கமல். அமைதியாக இருந்த சுஜா ‘என்னால் சொல்ல முடியவில்லை” என்று சைகையில் சொன்னார்.

Bigg Boss

“நான் இங்க வந்ததுல இருந்து ஆரவ் கூட க்ளோசாகிட்டேன். வையாபுரி அண்ணன்தான் எங்க எல்லோருக்கும் என்டர்டெயிண்மெண்ட். எத்தனை கஷ்டம் இருந்தாலும் சிரிக்க வெச்சிடுவார். அதனால யாரு போனாலும் கஷ்டமாத்தான்  இருக்கும். நான் போனா சந்தோஷப்படுவேன். என்று நெகிழ்ந்தார் ஹரீஷ். வையாபுரி வயதில் மூத்தவர் என்பதால் அது சார்ந்த மரியாதையுடன் அவருடைய நகைச்சுவையுணர்வு ஆகியவற்றை இதர போட்டியாளர்கள் புகழ்ந்தனர். 

**

கமலின் சமயோசித நகைச்சுவையை நான் பல சமயங்களில் வியப்பேன். சினிமாக் காட்சிகளில் மட்டுமல்ல, மேடையில், நேர்காணல்களில் பேசும் போது. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் நகைச்சுவையுணர்வையின் கூர்மையை நெருக்கமாக உணர முடிந்தது.

‘இந்த வீட்டில் எல்லோரும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரையும் நூல் மாதிரி இணைத்து ஒரு மணியாக்கும் நபராக வையாபுரி இருந்தார்” என்று சிநேகன் பாராட்டிக் கொண்டிருந்தார். 

“ஓ.. அதனால்தான் நூல் கோர்க்க அத்தனை சிரமப்பட்டாரா?” என்று ஒரு அட்டகாசமான சிக்ஸர் அடித்தார் கமல். 

பெட்ஷீட் தைக்கும் ஒரு போட்டியில் வையாபுரி பட்ட சிரமம் அது. அந்த விஷயத்தையும், ‘நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ள போட்டியாளர்களை இணைப்பது எத்தனை சிரமம்’ என்பதையும் இணைக்கும் வகையில் கமல் அடித்த அந்த கமெண்ட்.
ஒரு சிறிய சஸ்பென்ஸிற்குப் பிறகு எவிக்ஷ்ன் கார்டில் இருந்த வையாபுரியின் பெயரைக் காட்டினார் கமல். வையாபுரியின் முகத்தில் பெரிதாக எந்தவொரு சலனமும் இல்லை. இதற்காக தயாராக இருந்தது போலவே தோன்றியது. 

பொதுவாக பிக் பாஸ் வீட்டில் எவர் வெளியேறினாலும் அரங்கத்திற்குச் சென்று கமலுடன் உரையாடிய பிறகே அவரைப் பற்றிய இனிமையான நிகழ்வுகள் அடங்கிய குறும்படம் ஒளிபரப்பாகும். வீட்டினுள் இருக்கும் இதர போட்டியாளர்கள் அந்தக் குறும்படத்தைப் பார்க்க முடியாது. ஆனால் விதிவிலக்கு ஆச்சர்யமாக, பிக் பாஸ் வீட்டின் உள்ளேயே வையாபுரியைப் பற்றிய குறும்படம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. 

Bigg Boss

அனைவரும் உற்சாகத்துடன் நெகிழ்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். வையாபுரி முன்னர் கண்கலங்கிய நிகழ்வுகளைப் பார்த்து அவரே இப்போது கலங்கினார். பிந்துவின் கண்கள் கலங்கியபடியே இருந்தன. “யாருக்கும் இந்த வாய்ப்பு கிடைச்சதில்லை. ரொம்ப நன்றி” என்றார் வையாபுரி. ‘என்னைத் தெரியாதவர்களுக்கு தெரிய வைத்த, என்னை எனக்கே தெரிய வைத்த, தெளிய வைத்த, பிக் பாஸிற்கும் விஜய் டிவிக்கும், கமல் சாருக்கும், என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்றி” என்று சிநேகனை எழுத வைத்து போர்டில் கையெழுத்திட்டார் வையாபுரி. 

“இதே மாதிரி கலகலப்பா இருங்க. யார் வெற்றி பெற்றாலும் மத்தவங்க அவங்களுக்கு உறுதுணையா இருங்க. வாழ்த்துகள். நூறாவது நாள்ல சந்திக்கறேன்” என்று வையாபுரி விடைபெற்றார். எல்லோரும் அவரிடம் பிரியாவிடை தந்தனர். பிந்து மாத்திரம் அதிக நெகிழ்ச்சியுடன் இருந்தார். “இதோ இன்னும் இரண்டு வாரங்கள்தான் இருக்கு. உடனே பார்க்கப் போறோம். அப்புறம் என்ன?” என்று ஆறுதல் சொன்னார் வையாபுரி. ‘hi buddy’ என்று வழியனுப்பி வைத்தார் பிந்து. ஹரீஷால் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பிந்து அமைதியாக சென்று உட்கார்ந்து விட்டார். சுஜா வையாபுரி சென்ற திசையையே பார்த்தபடி தயங்கி நகர்ந்தார்.

**

கமல் பாசமாக அழைத்தவுடன் வையாபுரி அரங்கத்திற்குள் வந்தார். பார்வையாளர்கள் உற்சாகமாக கைத்தட்டி வரவேற்றனர். “உள்ளே போன வையாபுரி வேற. வெளியே வந்த வையாபுரி வேற. இல்லையா?” என்று ஆரம்பித்தார் கமல். “ஆமாம் சார்.. முதல்.. இரண்டு, மூன்று வாரத்தில் வெளியே வந்திருந்தால் இத்தனை உணர்ந்திருக்க மாட்டேன். 84 நாட்கள் கடந்து வரும் போது பல விஷயங்களை உணர்ந்துவிட்டேன்” என்றார் வையாபுரி. 

Bigg Boss

“எல்டாம்ஸ் வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லலாமா?” என்று வையாபுரியிடம் சம்பிரதாயத்திற்கு அனுமதி கேட்டு விட்டு விஷயத்திற்குள் வந்தார் கமல். ‘வையாபுரிக்கு அப்ப சின்ன வயது. ‘அவ்வை சண்முகி எடுத்திட்டிருந்தோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது வையாபுரியும் இணைந்து கொண்டார். “அந்தப் படத்துல எனக்கு சின்ன சீன்தான்.. பாத்திரத்தின் படி என் பேரு ராஜா… அந்தப் பேரு ரொம்ப வழக்கமா இருக்கேன்னு கமல் சார் என்னிடம் பெயரை விசாரித்தார். வையாபுரின்னு சொன்னவுடன் அதையே வெச்சிடுவோம்’னார். என் பெயரை திரையில் கேட்கும் போது மகிழ்ச்சியா இருந்தது’ என நெகிழ்ந்தார் வையாபுரி. 

“நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆறு படங்கள் பண்ணியிருக்கோம். (12 படங்கள் என்று திருத்தினார் வையாபுரி). பார்த்தீங்களா டபுள்ளா இருக்கு. அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ அந்தப் படம் சரியாப் போகலை. ஆனால் அதில் மனுஷன் பின்னியிருப்பார். அதற்கப்புறம் ரொம்ப காலம் கழிச்சு என்னோட வீட்ல இவரோட பேசிட்டு இருந்தேன். ‘என்ன வையாபுரி. படங்கள்லாம் பண்ணிட்டு இருக்கீங்களான்னு விசாரிச்சேன். ‘இல்ல சார். எனக்கு திறமை இருக்கான்னு சந்தேகம் இருக்கு –ன்னார். அவர் திறமை மேல எனக்கு நம்பிக்கையிருக்கு. நான் வெறும் வேஷம்தான் கொடுத்தேன். ஆனா நீங்க பிக் பாஸ் மூலமா நட்சத்திர அந்தஸ்து கொடுத்தீட்டீங்க. நன்றி” என்பதாக கமலின் உரை அமைந்தது. 

“கணேஷ் இதுவரைக்கும் கண்கலங்கினதேயில்லையாம். ரிலேஷன்ஸ் இறந்தா கூட கலங்க மாட்டாராம். நான் வெளியே வந்ததுக்கு அழுதுட்டார்” என்று நெகிழந்தார் வையாபுரி. “ஆம். ரியாலிட்டி ஷோன்றாங்க.. இதெல்லாம் சும்மாங்க.. எல்லாம் நடிப்பு –ன்றாங்க…. நான் ஒரேயொரு சின்ன சவால் விடறேன். எனக்கு பெரிய நடிகைகளையெல்லாம் தெரியும். இப்ப பிந்து கண்கலங்கினாங்க இல்லையா, அதே மாதிரி அழுது நடிக்க சொல்லிடுங்க பார்க்கலாம் முடியாது.  எனக்கே கூட அந்த மாதிரி காட்சிகள்ல நடிக்கும் போது மிகையாகி விடுமோன்னு சந்தேகம் வந்துடும். மக்கள் அதை சரியா கண்டுபிடிச்சுடுவாங்க. அதனால பாக்கெட்ல ஒரு விமர்சகனை வெச்சுக்கிட்டே நடிப்பேன்” என்றார் கமல்.

Bigg Boss

“அது சரி. நீங்க முதல் ரெண்டு வாரத்துலயே போயிடுவீங்கன்னு முதல்ல நெனச்சேன்” என்று வையாபுரியை நோக்கி கேட்டார் கமல். “ஆமாம் சார். சினிமாவுலயும் சரி, வெளிலேயேயும் சரி. எனக்கு அதிகம் நண்பர்கள் கிடையாது. வீட்டுக்குள்ள கோப்பட்டுக்கிட்டு இருப்பேன். ஆனால் இங்கு வந்தபிறகுதான் உறவுகளின் அருமை தெரியுது. எனக்கு அப்பா கிடையாது. மாமனார் இருக்கார். ஆனால் ஒருமுறை கூட அவரை நான் மாமா –ன்னு கூப்பிட்டது கிடையாது. என் மனைவிக்கு கூட இதில் ஆதங்கம். அவருக்கு பிள்ளை இருந்தாலும் ‘வையாபுரிதான் எனக்கு கொள்ளி போடணும்’னு சொல்லிட்டாராம். “நீங்க அவரை அப்பான்னு கூப்பிடணும்னுதான் அப்படி சொல்லியிருக்கார் போல –ன்னு என் மனைவி சொன்னாங்க” என்று நெகிழ்ந்தார் வையாபுரி. 

ஆம். ஒற்றை பிள்ளைகள் இருக்கும் குடும்பம் பெருகி விட்டதால், அப்பா வழி, அம்மா வழியான உறவினர்கள் இருப்பதே அருகிப் போய்க் கொண்டிருக்கும் போது இருக்கிற உறவுகளை அந்த அடையாளத்துடன் கூப்பிடுவது குறைந்து விட்டது. அது சார்ந்த கூச்சம் இருக்கிறது. பொதுவாக நகரங்களில் இந்தக் கலாசாரம் நிறைய. நான் உட்பட, மாமனாரை ‘சார்.. நீங்க.. வாங்க..’ என்று பொதுவாக அழைப்பதே நிறைய பேர்களின் வழக்கமாக இருக்கிறது. 

“உங்க மச்சானை.. தம்பின்னு கூப்பிட்டிருக்கீங்களா?” என்றார் கமல். தனது உறவுகளை அந்த அடையாளத்துடன் உரக்க கூப்பிட்டு சந்தோஷப்பட்டார் வையாபுரி. “இப்ப மனது நிறைவா இருக்கு சார்”

“நான் எத்தனையோ பத்திரிகை பேட்டிகளிலும் சொல்லியிருக்கேன். வீட்ல பேசும் போதெல்லாம் அப்பா அம்மாவிற்குப் பிறகு கமல் சார் –ன்றதைத்தான் அதிகம் சொல்லியிருக்கேன். உங்க படம்னா நான் அதில் கட்டாயம் இருப்பேன்ற மாதிரி ஒரு சூழல் உருவாகிடுச்சு. அதுக்கு நீங்கதான் காரணம். ரஜினி சாரைப் பார்க்க போதும் கூட ‘என்னை விசாரித்து விட்டு கமல் கூட நெறய படம் பண்ணியிருக்கீங்க போல’ன்னு சொன்னார். சந்தோஷமாக இருந்தது” என்றார் வையாபுரி. “என் நண்பர் ரஜினி என் படங்களை அத்தனை உன்னிப்பா பார்த்திருக்கிறார் என்பதே எனக்கு பெருமை. நன்றி” என்றார் கமல்.

Bigg Boss

“இப்ப என்ன மிஸ் பண்ணுவீங்க?” என்று கேட்டார் கமல். “உள்ளே பழகிய அத்தனை பேரையும் மிஸ் பண்ணுவேன். உள்ளே சிலர் அப்பான்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க.. அண்ணன்னு உறவு சொல்லியே கூப்பிட்டாங்க..” “ஆமாம்.. நாம British Colonial children – ஆ வளர்ந்துட்டோம். உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டக்கூடாது என்பது கற்றுத்தரப்பட்டது. நாடகக்குழுவில் சண்முகம் அண்ணாச்சியை ‘அண்ணாச்சி’ன்னுதான் கூப்பிடுவோம். மத்தவங்களையும் அண்ணா.. அக்கா ‘ன்னுதான் கூப்பிடணும். வேற மாதிரி கூப்பிட்டா கேவலமாக நென்ப்பாங்க.. சரி.. இனிமே நீங்க என்னை கமல் சார் னு கூப்பிடக்கூடாது” என்றார் கமல். “அண்ணன்னு கூப்பிடறேன்” என்றார் வையாபுரி. கமலின் கட்டை விரல் உயர்ந்தது. 

**

“சரி.. வீட்டுக்குள்ள போனவுடனே ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும்?” என்று ஜாலியாக விசாரித்தார் கமல். “பார்த்தவுடனே பொண்டாட்டி நிச்சயம் கட்டிப்பிடிச்சு அழுவா.. ஆனால் பொண்ணும் பையனும் நிச்சயம் திட்டுவாங்க.. அதுக்குள்ள என்ன அவசரம், ஜெயிச்சுட்டு வர வேண்டியதுதானே, எப்ப பாரு காமிராவை பார்த்து அழுதிட்டே இருந்தா எப்படி?.. நீங்க வீட்டுக்குள்ள வர வேணாம். அப்படியே மொட்டை மாடிக்கு போயிடுங்க.. அங்கயே சாப்பாடுல்லாம் வரும். பிக் பாஸ் வீடு மாதிரி நூறுநாள் முடிஞ்ச பிறகுதான் வீட்டுக்குள் வரணும்-னு சொல்லுவாங்க” 

“பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தவங்களைப் பற்றி ஒரு வரில சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டார் கமல். “Sri – தூக்கத்துல நடக்கறவன். அனுயா – ரெண்டு மணிக்கு குளிக்கறவ. ஆரவ் – என்றதும் ரோமியோ மாதிரி சைகை செய்தார் வையாபுரி. கஞ்சா கருப்பு –என்றதும் அவரை மாதிரியே வட்டார வழக்கில் மிமிக்ரி செய்ய ஆரம்பித்து விட்டார். “சுருக்கமா பண்ணுங்க” என்றார் கமல். ரைசா என்றதும் தூங்கியெழுந்தவுடன் மேக்கப் போடுவதை வையாபுரி செய்து காட்டினார். 

ஒற்றை வார்த்தையில் சொல்லாமல் எல்லோரைப் போலவும் வையாபுரி செய்து காட்டியதைக் கிண்டலடித்த கமல், ‘பார்த்தீங்களா.. நடிகர்கள் மேடை கிடைச்சுதுன்னா.. விட மாட்டாங்க” என்றார். இவர் அதை சாதாரணமாகச் சொன்னாரோ, அரசியல் நையாண்டியாகச் சொன்னாரோ, தெரியவில்லை. அவர் அப்படி நம்மை பழக்கி விட்டதால் அரசியல் நையாண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம் போலிருந்தது. எடுத்துக் கொள்ளலாம், என்ன இப்ப?

“சுருக்கமாக பண்ணுங்க வையாபுரி” என்று கமல் பலமுறை சுட்டிக் காட்டியும் அடக்கமாக செய்ய வையாபுரியால் இயலவில்லை. கணேஷைப் பற்றியும் நமீதாவைப் பற்றியும் நீளமான ஆலாபனைகளாக நடித்துக் காண்பித்தார். பார்வையாளர்களால் எளிதில் கண்டுகொள்ள முடிந்தது. கமல் எதிர்பார்த்தது அதையல்ல என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தமிழ் சினிமாவில் நடித்து பழகிப் போன வையாபுரியால் subtle ஆக நடிக்க முடிந்தால்தான் ஆச்சர்யம். 

“யார் ஜெயிப்பாங்க’ன்னு நெனக்கறீங்க” என்று  கமல் கேட்டார். ‘ஆரவ், சிநேகன், கணேஷ் ஆகிய மூவரும் இறுதிப் போட்டியில் நிச்சயம் வருவார்கள். இளைஞர்கள் என்பதால் உடல்திறன் சார்ந்த போட்டிகளில் ஆரவ்விற்கும் கணேஷிற்கும் இடையே பலத்த போட்டி இருக்கும்.” என்கிற தன் யூகத்தை வையாபுரி சொன்னவுடன் “சரி, வீட்டுக்குப் போனதும் கதவுகள் திறந்திருக்கும் என்று நம்புகிறேன். நூறாவது நாள் விழாவிற்கு கட்டாயம் வரணும்:” என்ற கமல் வையாபுரியை அன்புடன் வழியனுப்பி வைத்தார். பார்வையாளர்களின் உற்சாகக் கூக்குரல்களுக்கு இடையில் கிளம்பி சென்றார் வையாபுரி. 

Bigg Boss

**

“நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி சூடு பிடிக்கிறது. நமக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது. இதுவரை ஏறத்தாழ சரியாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தீர்கள். இடையில் சில தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். இறுதியில் சரியான ஆளைத் தேர்ந்தெடுப்பீர்கள் என நம்புகிறேன்.” என்ற கமல்.. “இப்பவும் நான் பிக்பாஸ் பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்களாக ஏதும் தவறாக அர்த்தம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.  என் கடமையையும் இடையில் நான் செய்ய வேண்டும் இல்லையா? என்ற படி விடைபெற்றார் கமல். சொல்றதையெல்லாம் சூசகமாக சொல்லிட்டு, அப்புறம் அதை மழுப்புகிற பாவனையை கமல் செய்வது சுவாரசியமாக இருந்தாலும் மிகையாகவும் ஆகிவிடக்கூடாது. நடிப்பில் மிகையானால் கண்டுபிடிக்கிற பார்வையாளர்கள், இதையும் கண்டுபிடித்து விடுவார்கள். 

எல்லா உணர்ச்சி மோதல்களையும் நகைச்சுவையின் வழியாக எளிதாக கடந்து வர முடியும். வையாபுரி இல்லாத வீடு, இனி சிரிப்பு சப்தங்கள் குறைந்து வெறுமையாக காணப்படலாம். ‘நாளை’ என்று காட்டப்பட்ட பகுதியில் சுஜா வின் எரிச்சல் கலந்த கோபம் காட்டப்படுவது அதற்கான முன்னோட்டமாக இருக்கிறது. பார்ப்போம்.

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/102557-snehan-in-leadwho-is-going-to-compete-ganesh-or-suja-happenings-of-bigg-boss-day-84.html

Link to comment
Share on other sites

சினேகன் vs சுஜா... வினையாகிறதா விளையாட்டு?! 85-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg Boss

84-ம் நாளின் தொடர்ச்சி. வையாபுரி விலகி விட்ட சோகத்தில் போட்டியாளர்கள் இருந்தனர். கலங்கிய ஹரீஷிற்கு ஆறுதல் சொன்னார் சுஜா. ஆனால் ஹரிஷீன் துயரத்திற்கு வையாபுரி மட்டும் காரணம் இல்லையாம். (அடப்பாவி. நாமதான் தப்பா நெனச்சிட்டோம். மற்றவர்களுக்காக அழும் போது நமக்கான காரணங்களும் அதில் கலந்திருக்கும் என்கிற ஆதாரமான உண்மை மறுபடியும் நிரூபணமானது) 

harish

 

ஹரீஷின் துயரத்திற்கு ஆரவ் சொன்ன பொய்யும் காரணம் போல. அதைப் பற்றி சுஜாவிடம் விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார். நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடி, ஸ்மோக்கிங் ரூமில் தனியாக இருந்த போதாவது ‘நான் சவாலை பாத்ரூமில் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டேன்’ என்று ஆரவ் சொல்லியிருக்கலாமே என்பது ஹரீஷின் ஆதங்கம். தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதும் நாம் நேர்மையாக விளையாட நினைப்பதைப் போலவே மற்றவர்கள் இருப்பதில்லை என்பதுமான வேதனை அவரை ஆக்கிரமித்திருக்கிறது. சக்தி இங்கு இருந்திருந்தால் ஆரவ் அவரிடம் நிச்சயம் அப்படிச் செய்திருக்க மாட்டார் என்பது ஹரீஷின் உறுதியான யூகம். 

(கமலின் சந்திப்பின் போது ‘உங்க கிட்ட தனியா ஐந்து நிமிஷம் பேசணும்” என்று ஹரீஷ் கமலிடம் கேட்ட காட்சி promo-வில் இடம்பெற்றிருந்தது. அது என்ன விஷயம் என்று தெரியவில்லை.) கமலும் ஹரீஷை புரிந்து கொண்டதால் அவரை சமாதானப்படுத்துவதில் அதிகம் கவனம் செலுத்தினார். ‘அவங்க அம்மா கிள்ளுவாங்க’ என்று சொல்லி ஹரீஷின் கன்னத்தைக் கிள்ளினார். 

‘எல்லோரும் கமல் வந்ததை ரசிச்சீங்க.. என்னால் அதைக் கூட ரசிக்க முடியவில்லை. என்று சொன்னதன் மூலம் தன் மனக்குழப்பத்தை வெளிப்படுத்தினார் ஹரீஷ். மற்றவர்கள் அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். 

வையாபுரி சென்ற பிறகு சம்பிரதாயத்திற்காக சோகமாக இருந்து விட்டு பிறகு அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே என்று சுஜாவிற்கு கோபம். அந்தக் கோபத்தை காரணமின்றி சிநேகனிடம் காட்டினார். “எல்லோரும் போய்ப் படுத்துட்டாங்க.. இது முறையா? நீங்களும் என் கூட பேசமாட்டேன்றீங்க” என்றார். இந்த ஒட்டுதலை கார் சவாலில் அவர் காட்டியிருந்தால் இருவரும் ஏதாவது பேசிக் கொண்டிருந்து அந்த நீண்ட சிரமத்தை குறைத்திருக்கலாம். ‘நீங்க எனக்கு காஃபி போட்டுத்தந்தா என் மேல கோபமில்லை-ன்னு புரிஞ்சுக்கறேன். இல்லைன்னா என் கூட பேச விரும்பவில்லை என்று புரிஞ்சுக்கறேன்’ என்று விநோதமான விதியை உருவாக்கினார் சுஜா. தமிழ் சினிமாவின் அபத்தமான  காட்சிகளைப் பார்த்து ஜனங்கள் ரொம்பவும் கெட்டுப் போயிருக்கிறார்கள். காஃபி வேண்டுமானால் சுஜா நேரடியாகவே கேட்டிருக்கலாம். 

bindhu harish

**

85-ம் நாள் காலை. (புதிய) ‘காக்கி சட்டை’ படத்திலிருந்து ‘கட்டிக்கிடும் முன்னே  நாம  ஒத்திகய  பாக்கனுண்டி’ என்கிற கவித்துவமும் அழகியலும் வாய்ந்த பாடல் ஒலிபரப்பானது. கணேஷ் மற்றும் பிந்து நடனமாடினர். வழக்கமாக உற்சாகத்துடன் வந்து ஆடும் ஹரீஷ்ஷிற்கு இன்னமும் மனவருத்தம் போகவில்லை போல. வெளியே வரவில்லை. 

வையாபுரி வெளியே செல்வதற்கான மனநிலையுடன் முன்பே இருந்ததை ஆச்சரியத்துடன் போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். வையாபுரி சொல்லியது போல பிக்பாஸில் வெற்றி பெறுவதை விடவும் குடும்பத்தின் அன்பைப் பெறுவது மிக முக்கியமானது. போட்டியை விடவும் வாழ்க்கை முக்கியமானது. இதையே போட்டியாளர்களும் கருதினார்கள். ‘வையாபுரி இளைச்சுட்டாருல்ல” என்று ஒருவர் வருத்தப்பட்டார். இனிமேலும் இளைக்கறதுக்கு அந்த உடம்புல என்ன இருக்கு?

பிக்பாஸ் அனுபவம் தங்களுக்குள்ளும், பார்வையாளர்களுக்குள்ளும் ஏற்படுத்தக்கூடிய அனுபவங்களைப் பற்றி சிநேகன் ஆரவ்விடம் சொல்லிக் கொண்டிருந்தார். “கமல் சொன்னது போல இது போன்ற திரைக்கதையை கற்பனையாக எழுத முடியாது. சதுரங்கப் பலகையில் காய்களாக நாம் நகரும் போது அதற்கேற்ப பார்வையாளர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளக்கூடும்” என்றார் சிநேகன். கவிஞரிடமிருந்து அவ்வப்போது சிறந்த வாக்கியங்கள் வெளியே வந்து விழுகின்றன. (ஆனால் சமூகவலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களைப் பார்த்தால் தங்களை நீதிபதிகளாக்கிக் கொண்டு ‘திருத்துபவர்கள்தான்’ அதிகமாகி விட்டார்கள்).

டிரோல் வீடியோக்களை மனப்பாடம் ஆகிற அளவிற்கு பார்க்கும் வழக்கம் ஆரவ்விற்கு இருக்கிறது போலிருக்கிறது. ‘என்னம்மா இப்படிப் பண்ணீட்டிங்களேம்மா” என்கிற விஜய்டிவி நகைச்சுவை வீடியோவை பிந்துவிடம் ஏறத்தாழ  அப்படியே ஒப்பித்துக் கொண்டிருந்தார். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இப்போதுதான் இந்த விவகாரத்தை மறந்திருக்கிறார். மறுபடியும் கிளப்பி விடுகிறீர்களே ஆரவ்? நகைச்சுவையுணர்வுள்ளவர்கள் இதர நகைச்சுவைகளை அணுஅணுவாக ரசிப்பார்கள் என்கிற விஷயம் ஆரவ்வின் மூலமாக தெரிகிறது. ஆரவ்வின் இந்த லூட்டியை பிந்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார். ஹரீஷிடம் ஏற்பட்ட விலகலை, பிந்துவிடம் ஈடுகட்ட முயல்கிறாரோ ஆரவ்?

Arav

 

**

‘இது 13வது வாரம். மக்களிடம் நீங்கள் யார் என்று பறைசாற்றும் நேரம் வந்து விட்டது. போட்டிகள் கடுமையாக இருக்கும்” என்று பீதியைக் கூட்டினார் பிக்பாஸ். வழக்கமான முறையில் அல்லாது, இந்த வாரம் சிநேகனைத் தவிர இதர அனைவருமே நாமினேஷனில் வந்தனர். அணியாக task செய்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரது பங்களிப்பின் படி தனித்தனியாக மதிப்பெண் தரப்படும். இது தவிர வெளியேறுவது மக்களின் வாக்களிப்பில் இருக்கிறது. என்கிற புதிய சட்டத்திருத்தங்கள் வெளியிடப்பட்டன. 

நாமினேஷனில் இல்லாத காரணத்தால் சிநேகன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தாம் எவிக்ஷனில் இல்லை என்பதால் அவர் ஓவராக ஆடக்கூடாது என்பதற்காக ‘உங்களுடைய பங்களிப்பும் மதிப்பெண்ணும் முக்கியம்” என்று சிநேகனுக்கு ஒரு தடைக்கல்லை பிக்பாஸ் உருவாக்கினார். சமையல் உள்ளிட்ட மூன்று அணிகள் பிரிக்கப்பட்டன. ‘தலைவர் என்றாலும் தாமும் அவர்களின் பணியில் உதவுவதாக முன்வந்த’ சிநேகனின் அணுகுமுறை பாராட்டத்தக்கது. 

கணேஷூம் சுஜாவும் சமைத்துக் கொண்டிருக்க, “ஏதாவது உதவி வேணுமா?” என்று பிந்து, ஆரவ் வந்து கேட்டனர். “ஏதாவது பாட்டு பாடுங்க. அப்ப எங்களுக்கு கஷ்டம் தெரியாம இருக்கும்” என்றார்கள் சமையல் வல்லுநர்கள். ஆரவ் உற்சாகமாக நடனமாடி பாடினார். 

அடுத்த 2 வாரங்களுக்கு கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிகளை பிக்பாஸ் அறிவித்தார். காலையில் ஒலிக்கும் பாடலுக்கு அனைவரும் கண்டிப்பாக நடனமாட வேண்டும். (என்ன கொடுமை இது சரவணன்) வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். (பிக்பாஸையே போட்டுத் தள்ளிடலாமா?) பிக்பாஸ் அழைத்தவுடனே ‘சொல்லுங்க எஜமான்’ என்று வரவேண்டும். போட்டிக்காக உடனே தயாராக வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. மைக்கை கழற்றவோ, கழட்டுவேன் என்று மிரட்டவோ கூடாது என்று பல விநோதமான விதிகள். ஒவ்வொரு தவறுக்கும் 5 மதிப்பெண்கள் குறையுமாம். போட்டியாளர்களுக்கு மனநெருக்கடியை அதிகப்படுத்துவற்கான விதிகளாகத் தெரிகிறது. அவர்கள் சகிப்புத்தன்மையை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரமிது. 

“என்னடா இது.. போட்டிகள் கடுமையாக இருக்கும் என்றார்கள். ஆனால் ‘ஐஸில் நின்று பந்துகளை சேகரிக்க வேண்டும்’ என்பது மாதிரி ஜாலியாக சென்று கொண்டிருக்கிறதே என்று போன வாரம் நினைத்தேன். ‘பொழுது விடிஞ்சிடுச்சே.ஃ பிரச்சினை ஏதும் வரலையேன்னு பார்த்தேன். வந்துடுச்சு.. நடத்திட்டாங்க”

வையாபுரி வெளியே செல்லும் வரை காத்திருந்தார்கள் போலிருக்கிறது. அடுத்து வந்து task போட்டியாளர்கள் தங்களுக்குள் மூர்க்கமாக அடித்துக் கொள்ளும் வகையில் இருந்தது. ‘முடிஞ்சா உடைச்சுப் பாரு” என்பது அதன் பெயராம். மூக்கையா, எலும்பையா என்று தெளிவாகச் சொல்லவில்லை. 

Bigg boss Tamil

 

போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிவார்கள். பலூன்களை ஊதி போர்டில் ஒட்ட வேண்டும். இரண்டு பேர் ஒட்டுவதில் ஈடுபட, எதிரணி நபர் அவர்கள் ஒட்டாதவாறு தடுப்பார் மற்றும் பலூன்களை  உடைப்பார். இதையும் மீறி எத்தனை பலூன்களை போர்டில் ஒட்ட முடிகிறதோ, அதற்கேற்ப மதிப்பெண்கள் கிடைக்கும். மூன்று சுற்றுகள் நடக்கும். 

பிறகு ஆரம்பித்தது அந்த ரணகளமான போட்டி. சிநேகனும் சுஜாவும் தங்களுக்குள் நண்பர்கள் போல நடித்துக் கொண்டிருந்தாலும், கார் சவால் முடிந்ததில் இருந்து அவர்களுக்குள் இருந்த பகைமை, நீறு பூத்த நெருப்பு போல வீசிக் கொண்டேயிருக்கிறது. துரதிர்ஷ்டமாக அவர்கள் எதிர் எதிர் அணியில் வேறு பிரிந்து விட்டார்கள். எனவே இப்போது அந்தப் பகைமை வெளிப்படையாக வெளியில் வந்து ஆவேசமாக குதித்தது. 

சில குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டிகளில் முரட்டுத்தனம் வெளிப்படுவது தவிர்க்க முடியாதது. ரக்பி, குத்துச்சண்டை போன்ற போட்டிகளில் காட்டுத்தனமாக அடித்துக் கொள்வார்கள். அது அந்த விளையாட்டின் இயல்பு.  ஆனால் அவற்றில் கலந்து கொள்ளும் வீரர்கள் அதற்கேற்ப பயிற்சி எடுத்திருப்பார்கள் மற்றும் பாதுகாப்பு உடைகளை அணிந்திருப்பார்கள். மட்டுமல்லாமல் பாலின அடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாகத்தான் போட்டிகள் நடக்கும். உடல்திறன் சார்ந்து இருவருக்கும் இருக்கும் வித்தியாசம் ஒரு காரணம். சமமான பலம் உள்ளவர்களைத்தான் உடல்திறன் சார்ந்த போட்டியில் ஈடுபடுத்த வேண்டும். இது தவிர ஆண்களுடன் மோதுவதில் பெண்களுக்கான சில பிரத்யேகமான சங்கடங்கள் இருக்கின்றன. 

ஆனால் இது போன்ற அடிப்படையான விதிகள் எதுவும் பிக்பாஸ் வீட்டில் இல்லை. மானுட சமத்துவத்தை பிக்பாஸ் போல வலியுறுத்தும் ஆசாமி வேறு எவரும் இருப்பார்களா என தெரியவில்லை. பாலினம், உடல்பலம் வித்தியாசமின்றி ‘எப்படியாவது மோதிக் கொள்ளுங்கள்’ என்று விட்டு விட்டார். 

ganesh

 

ஹரிஷூம் சுஜாவும் ஒட்ட முயன்ற பலூன்களை ஆக்ரோஷமாக பிடுங்கி உடைத்தார் சிநேகன். விலங்கை வேட்டையாடும் மனோபாவத்துடன் தன் காரியத்தில் மூர்க்கமாக அவர் ஈடுபட்டது சற்று மிகையாக இருந்தது. ‘வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்ற விதி அவரை உற்சாகப்படுத்தி விட்டது போல. சிநேகனுக்கும் சுஜாவிற்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம். எனவே சிநேகனின் ஆவேசத்தை ஈடுகொடுக்க முடியாத சுஜா, வீச்வீச்சென்று கத்தினார். அவரின் மூர்க்கத்தை தானும் பின்பற்ற முயன்றார். முடியாத சமயங்களில் ‘போய்யா.” என்று திட்டினார். 

இங்கு நேர்மையாக விளையாடுவதில் பயனில்லை என்கிற வருத்தத்தில் ஏற்கெனவே இருந்த ஹரீஷ் முதலில் சிநேகனை மென்மையாகத்தான் கையாண்டார். ஆனால் ஜெயிப்பது மட்டுமே முக்கியம் என்கிற நோக்கில் சிநேகன் விளையாடியதால் பதிலுக்கு அவரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டார். இருதரப்பிலும் போர்டுகள் கீழே விழுந்து உடைந்தன. லோ –பட்ஜெட்டில் செய்யப்பட்ட ஸ்டாண்ட் போலிருக்கிறது. அவர்கள் சற்று மோதியதுமே உடைந்து விட்டது. ‘என்ன செய்யலாம்’ என்று பிக்பாஸிடம் கேட்டார்கள். ‘கார்ப்பெண்ட்டர்’ அதற்குள் கிளம்பி விட்டார் போலிருக்கிறது. அப்படியே வைத்து விளையாடுங்கள் என்று பதில் வந்தது. எனவே போர்டை தரையில் பரப்பி வைத்து விளையாடினார்கள்.

எதிர்தரப்பில் பிந்துவும் ஆரவ்வும் இணைந்து பலூன்களை போர்டில் ஒட்ட முயல கணேஷ் அவர்களை தடுத்துக் கொண்டிருந்தார். தான் ஒரு கனவான் என்பதை இந்த முறையும் கணேஷ் நிரூபித்தார். ஆரவ் அவருடைய கால்களை மூர்க்கத்தனமாக பலமுறை இழுத்த போது திமிறிக் கொண்டு வந்து பலூன்களை உடைத்தார். ஆனால் அது சார்ந்த புகார் எதையும் சொல்லவில்லை. மட்டுமில்லாமல் ஆரவ் மற்றும் கணேஷ் ஆகிய இருவரும் ‘கட்டுப்பாடான’ ஆக்ரோஷத்தை மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள். ‘ஓகேவா.. அடிபடலையே’ என்று பரஸ்பரம் விசாரித்துக் கொண்டார்கள். பிந்துவை கையாளும் போது, அவர் பெண் போட்டியாளர் என்கிற கவனத்தை கணேஷ் பெரும்பாலும் கருத்தில் கொண்டார்.

பஸ்ஸர் அடிப்பதற்கு முன்பாக சுஜா கையாண்ட ஒரு பலூனை சிநேகன் பலவந்தமாக உடைத்து விட ‘பெல் அடிச்சப்பறம் உடைச்சுட்டார்’ என்று உரத்த குரலில் பஞ்சாயத்து வைத்தார் சுஜா. எதிரணி நபர்களையும் இந்தப் பஞ்சாயத்திற்காக அழைத்தார். சுஜா அணிக்கு சார்பாக தீர்ப்பளித்தார் பிக்பாஸ். எனவே முதல் சுற்றின் முடிவில் சிநேகன் அணி 0 – சுஜா அணி 1.

தேவர் மகன் திரைப்படத்தில் ‘பஞ்சாயத்தாடா இது.. இல்ல.. பஞ்சாயத்தா.. ன்னு கேட்கறேன். இது பஞ்சாயத்தே இல்லை. நான் இங்க இருக்க முடியாதப்பு.. கிளம்பறேன்’ என்று சிவாஜி ஆவேசப்படுவது போல. ‘விளையாட்டாடா.. இது..’ என்று பார்வையாளர்கள் கேட்கக்கூடிய இந்த அபத்தமான விளையாட்டு அடுத்த சுற்றிற்கு தொடர்ந்தது. ஆனால் விதியில் சற்று மாற்றம். போர்டில் பலூனை ஒட்டுவதற்கு முன்பே உடைக்கலாம். எனவே சிநேகன் இன்னமும் ஆவேசம் ஆனார். எதிரணி கஷ்டப்பட்டு ஊதி வைத்திருந்த பலூன்களையெல்லாம் சிறுபையனின் உற்சாகத்துடன் தேடித் தேடி உடைத்தார்.

சிறுவயதுகளில் காற்றை நிரப்பி பலூன் ஊதுவது என்பது உற்சாகமான விளையாட்டு. ஆனால் குறிப்பிட்ட வயதை தாண்டிய பிறகு இந்த எளிய விஷயமே, கடுமையான சவாலாக இருக்கும் என்பது நான் எதிர்பாராதது. அலுவலகத்தின் ஆண்டு விழாவிற்காக அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவலாமே என்று ஒரு பலூனை எடுத்து ஊதிப் பார்த்தேன். ம்ஹூம் முடியவில்லை. கால்வாசி பலூனை ஊதுவதற்குள் தொண்டை காய்ந்து பலமான இருமல் வந்து விட்டது. தோல்வியை ஒப்புக் கொண்டு பலூனை வைத்து விட்டேன். எனக்கு சுவாசப்பிரச்சினை இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். எனவே என் கண்ணெதிரே அத்தனை பலூன்கள் உடைக்கப்பட்ட போது ‘அடடா~ எத்தனை மனித உழைப்பு வீண்” என்று ஏனோ தோன்றியது. சிநேகனின் மீது கோபமாக வந்தது. 

அடுத்த சுற்று. விண்வெளி பயணத்திற்கு செல்வதற்கான பாதுகாப்பு விஷயங்களை அணிந்து கொண்டு வாக்குமூல அறையில் களைத்துப் போய் உட்கார்ந்திருந்தார் ஆரவ். அவரைவிடவும் உயரத்திலும் அகலத்திலும் பெரிதான கணேஷை அவர் சமாளித்ததில் நிறைய சக்தி போயிருக்க வேண்டும். 

விதியில் சற்று மாற்றத்தை அறிவித்தார் பிக்பாஸ். ‘போர்டில் பலூனை ஒட்டிய பிறகு உடைக்கக்கூடாது’ இது ஒருவகையில் நியாயமான மாற்றம் போல் தெரிந்தாலும், போட்டியாளர்களின் ஆவேசம் அதிகமாகும். ஒரு பலூன் கூட போர்டு பக்கம் செல்லக்கூடாது என்று மூர்க்கம் ஆவார்கள். பிக்பாஸின் திட்டம் அற்புதமாக பலித்தது. கற்கால மனிதர்களின் ஆவேசமும் போட்டி மனோபாவமும் அவர்களுக்குள் மெல்ல எழுந்தன. ‘யார் விலங்கின் இரையை முதலில் வீழத்தியது’ என்கிற போட்டியில் மனித உயிர்களே பலியாகக்கூடிய ஆதிவன்முறையின் இச்சை அவர்களுக்குள் அரும்பத் துவங்கியது. 

இந்த தள்ளுமுள்ளுவில் போர்டு சரிந்து சுஜாவின் காலின் மீது பட ‘அய்யய்யோ’ என்று அவர் கத்தினார். போட்டி சற்று நிறுத்தப்பட்டு அவருக்கு உதவ ஓடினார்கள். ஆவேசம் தணியாமல் சிநேகன் ஒதுங்கி நின்றார். விளையாட வேண்டாம் என்று மற்றவர்கள் வற்புறுத்தினாலும் சுஜா பிடிவாதமாக ஆட்டத்தை தொடர்ந்தார். சிநேகன் அவர் மீது மோத முயன்ற பல சமயங்களில் கோபமடைந்தார். ‘கை பார்த்து’ என்று சிநேகனை சூசகமாக எச்சரித்த சுஜா, பிறகு கோபம் அதிகமாகி  ‘பந்துகள் சேகரிக்கும் போட்டியில் பிந்து ஏன் சென்று விட்டார் என்று இப்போதுதான் புரிகிறது’ என்கிற வில்லங்கமான குற்றச்சாட்டை தூக்கியெறிந்தார். 

Snehan

 

சுஜா குறிப்பிட்ட அதே காரணத்தை சிநேகன் வெறுப்பாளர்கள் சமூகவலைத்தளங்களிலும் தெரிவித்திருந்தார்கள். இதுவொரு சங்கடமான, விவகாரமான விஷயம். உண்மை எதுவென்று அறியாமல் வெளியில் அமர்ந்தபடி வாய்க்கு வந்தபடி பேசி விட முடியாது. நாமே கூட இது போன்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை நடைமுறையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.  ‘பிக்பாஸ் ஒவ்வொரு முறையும் தனக்கு சார்பாக சொல்லாமல் எதிர்தரப்பினருக்கு சாதகமாக சொல்லிக் கொண்டிருந்த எரிச்சலில்தான் போட்டியிலிருந்து விலகினேன்’ என்பதுதான் பிந்துவின் விளக்கம். மட்டுமல்ல, அதற்குப் பிறகு சிநேகனிடம் அவர் இயல்பாக பேசத் துவங்கி விட்டார் என்பதை கவனிக்க வேண்டும். 
நடைமுறை வாழ்வில் பெண்களின் மீதான பாலியல் சீண்டல்களை, கீழ்த்தரமான உத்திகளை பயன்படுத்துவதில் ஆண்களின் சதவீதம் அதிகம் என்பது உண்மைதான். ஆனால் இது பெரும்பாலும் ரகசியமாக, எவருக்கும் அறியாத முறையில் நடப்பதில் அவர்கள் கவனமாக இருப்பார்கள். ஆனால் ஒரு விளையாட்டுப் போட்டியில் சிறு அசைவைக்கூட பதிவு செய்யும் இத்தனை காமிராக்கள் கவனித்துக் கொண்டிருக்கும் போது, அதிலும் ஆவேசமான போட்டியின் போது அவ்வாறான உணர்வுகள் தோன்றுமா என்பது கேள்விக்குரியது. சிநேகனுக்கு சாதகமான அபிப்பராயமாக  இதை எடுத்துக் கொண்டு கோபப்பட வேண்டாம்.  நாமாக இருந்தாலும் அப்படி நடந்து கொள்வோமா என்று நிதானமாக யோசித்துப் பார்க்கலாம். இன்னொரு வகையில், ஓர் ஆணை எளிதில் சாய்ப்பதற்கு இந்தக் குற்றச்சாட்டை உடனே எடுத்து வீசும் பெண்களின் சதவீதமும் உண்டு. 
ரணகளமான இந்தப் போட்டி முடிவிற்கு வந்தது. அடிபட்ட பிந்துவிற்கு முதலுதவி செய்வதில் எதிரணியைச் சார்ந்த கணேஷ் மிகுந்த ஆர்வம் காட்டியது பாராட்டுக்குரியது. இரையாடி முடித்த விலங்கு போல களைப்புடன் அப்படியே சாய்ந்து விட்டார் சிநேகன். 

திருவிளையாடல் தருமி போல ஆரவ்வின் நகைச்சுவையான புலம்பல் சில நிமிடங்களுக்கும் மேலாக நீண்டது. ‘வெச்சு செஞ்சிட்டாங்களே’ என்பது போல அனத்திக் கொண்டிருந்தார். ‘இதுல ஜெயிச்ச காசெல்லாம் ஆஸ்பத்திரி செலவுக்கே சரியாயிடும் போலயே. கதவைத் தொறந்தப்பவே போயிருக்கலாம். மக்கள் நம்ம மேல இருக்கிற அபிமானத்துலதான் வாக்களிச்சு இருக்க வெச்சிருக்காங்கன்னு நெனச்சோம்… இல்ல.. இவனுங்கதான் எவ்ள அடிச்சாலும் தாங்குவாங்கன்னு நம்மை விட்டு வெச்சாங்க போல. இப்பதான் புரியது” என்றெல்லாம் புலம்பியவர், இடையில் பிக்பாஸ் மீதும் விமர்சனம் வைத்து விட்டதை ‘சோத்துல விஷத்தை வெச்சிடுவாங்களோ” என்று பயந்து ‘மன்னிச்சிடுங்க. பிக்பாஸ். உங்களையெதுவும் சொல்லலை’ என்று முன்ஜாமீன் மனு வாங்க முயன்றார். 

ஆரவ் குறிப்பிட்டது போல, நல்லவேளையாக வையாபுரி இதற்கு முன் வெளியேறி விட்டார். இப்போது தொலைக்காட்சியில் அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது ‘அப்பாடா.. தப்பிச்சம்டா.. சாமி.. கொலைவெறி விளையாட்டால்ல இருக்குது’ என்று ஆறுதல் அடைந்திருக்கக்கூடும். 

Suja

 

“நாங்கள் விளையாடிக் கொண்டிருந்ததை விடவும் உங்கள் பக்கம் என்ன நடக்கிறது என்கிற கவலையே எனக்கு அதிகமாக இருந்தது” என்றார் கணேஷ். உண்மைதான். சிநேகன் மற்றும் சுஜாவின் ஆவேசம் அத்தகையதாக இருந்தது. ‘அங்க நடந்தது போட்டி இல்லை, சண்டை’ என்ற சுஜா, “என் கிட்ட வந்து இழுத்துடுவேன்றாரு.. என் மேல கையை வெச்சுடுவாரா.. என்னை அடிச்சா அவருதான் evict ஆயிடுவாரு” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். 

பார்வையாளர்கள் தன் நல்லியல்பை கவனித்தார்களோ இல்லையோ என்கிற கவலை கணேஷிற்கு வந்து விட்டது போல. ‘அதனால்தான் பிந்து கிட்ட நான் கவனமாக விளையாடினேன்’ என்று சுஜாவிடம் சொல்வது போல பார்வையாளர்களிடமும் பதிய வைத்தார். ஏற்கெனவே வெறுப்பில் இருக்கும் ஹரீஷ், சிநேகனின் முரட்டுத்தனம் காரணமாக ‘என்னடா இது விளையாட்டு’ என்பது போல புலம்பினார். 

அதுவரை அமைதியாக இருந்த சிநேகன், ஆரவ் மற்றும் பிந்துவிடம் தன் மனத்தாங்கலை வெளிப்படுத்தினார். “என்னங்க.. அந்தப் பொண்ணு .. போய்யா.. வாய்யா ன்னுது.. டச் பண்ணாதீங்கன்னுது.. அப்ப எதுக்கு விளையாட வரணும். நான் என்ன பொறுக்கியா.. மத்தவங்கள்லாம் விளையாடினாங்க . ஏதாவது சத்தம் வந்ததா.. இந்தப் பொண்ணு மாத்திரம் அப்படிக் கத்துது…நேர்மையைப் பத்தி யாரு பேசறது.. விளையாட்டு ஆவேசத்துல போர்டு கீழே விழுந்தது. அதுக்கு நானா பொறுப்பு.. ‘காலை உடைச்சிட்டாரு’ன்னு சொல்றாங்க.. என்றெல்லாம் அவருடைய புகார் பட்டியல் நீண்டது. அவற்றை ஆரவ் ஒப்புக் கொண்டது மட்டுமல்லாமல் பிந்துவும் ஒப்புக் கொண்டார் என்பதுதான் விஷயம். சிநேகன் முன்பு வில்லங்கமாக நடந்து கொண்டிருந்தால், பிந்து அவருக்கு சாதகமாக எதிர்வினை ஆற்றியிருக்க மாட்டார் என்பது ஒரு யூகம். 

ஆனால் என்னவொன்று, சிநேகன் இதை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காமல் நேரடியாக சுஜாவையே தனிமையில் அழைத்து உரையாடியிருக்கலாம். அல்லது அமைதியாக இதை கடந்து போயிருக்கலாம்.

அபத்தமான இந்தப் போட்டியின் முடிவு தெரிவிக்கப்பட்டது. சுஜா, கணேஷ், ஹரீஷ் அணி வெற்றி பெற்றது. இது சரியா என தெரியவில்லை. சுஜா மற்றும் கணேஷ் பலூன்களை ஒட்ட விடாதவாறு சிநேகன் ஆவேசமாக தடுத்துக் கொண்டிருந்ததால் அவர்களால் அதிகம் செயல்பட முடியவில்லை. இதற்கு மாறாக எதிரணி சற்று நாகரிகமாக விளையாடியதால் பிந்துவால் அதிக பலூன்களை ஒட்ட முடிந்தது என்பதைக் கவனித்தோம். ஒட்டப்பட்ட பிறகு உடைக்கப்பட்ட பலூன்கள், தவறுதலாக உடைக்கப்பட்டவை, வேண்டுமென்றே உடைக்கப்பட்டவை என்பதையெல்லாம் ஒருமாதிரியாக கூட்டிக் கழித்துப்பார்த்தால் கூட சிநேகன் அணிதான் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. 

இந்த வெற்றி சுஜாவின் போராட்டத்திற்காக கிடைத்த பரிசா எனத் தெரியாது. கிரிக்கெட்டில் பின்பற்றப்படும் Duckworth–Lewis முறையை விடவும் சிக்கலானது பிக்பாஸ் பின்பற்றும் விதிமுறைகள். சுஜா அணிக்கு பத்து மதிப்பெண்கள் கிடைத்தன. கோயில் தேங்காய் போல அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளலாம் என்று பிக்பாஸ் அறிவித்து விட்டதால் ‘யார் யாருக்கு எவ்வளவு மதிப்பெண்கள்’ என்பதை ஆலோசித்தனர். ‘பத்தை மூன்றாக வகுத்து எடுத்துக் கொள்ளலாமே’ என்று ஆலோசனை தந்தார் பெண் ராமானுஜம் சுஜா. 10 என்கிற மதிப்பை மூன்றால் வகுத்தால் என்ன விடை என்பதை இணையத்தில் சற்று தேடிப் பார்த்தேன். 3.33333333333  உள்ளிட்டு பல விடைகளைப் பார்த்ததில் தலை சற்று ‘கிர்’ என்று ஆனதால் விட்டு விட்டேன். சிறுவயதிலிருந்தே கணக்கிற்கும் எனக்கும் அத்தனை நட்பில்லை. 

கணேஷ் 4 மதிப்பெண்களை எடுத்துக் கொள்ள, சுஜா மற்றும் ஹரீஷ், தலா 3 மதிப்பெண்களை பகிர்ந்து கொண்டனர். (கூட்டல் சரிதானே?) சுஜாவிற்கு நான்கு மதிப்பெண்கள் தந்திருக்கலாம். ஆண்களுக்கு நிகரான போராட்டத்தை அவர் நிகழத்தினார். 

“எங்க ஆத்தா அப்பவே சொல்லுச்சு.. சென்னைக்கு போகாதடான்னு.. ஊர்லயே ஆடு மாடுங்களோட இருந்திருக்கலாம்’ என்று இந்த பயங்கர அனுபவத்தை விளையாட்டாக சொல்லிக் கொண்டிருந்தார் சிநேகன். இப்போது சற்று இயல்பு நிலைக்கு வந்து விட்டார் போலிருக்கிறது. 

வெளியே புலம்பிக் கொண்டிருந்த போட்டியாளர்கள் வரவேற்பறைக்கு நுழைந்த போது ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. விக்டோரியா மகாராணியார் உபயோகித்த ஒரு பழைய மாடல் டெலிபோன் ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. எடுத்துப் பார்த்தனர். டயன் டோல் வந்தது. வெளியிலிருந்து மட்டுமே அழைப்பு வரும் போல. அல்லது அடுத்த taskல் எவருக்காவது எலும்பு உடைந்தால், அவரே எழுந்து வந்து ஆம்புலன்ஸை கூப்பிடுவதற்காக நல்லெண்ணத்துடன் பிக்பாஸ் செய்த ஏற்பாடாக இருக்கலாம். 

‘போட்டிகள் கடுமையாகின்றன. போட்டியை கடுமையாக காண்பார்களா, அல்லது போட்டியாளர்களுக்குள் கடுமையாக பார்த்துக் கொள்வார்களா’ என்கிற ரைமிங்கான வசனத்துடன் (ரணகளுத்துலயும் இந்தக் கிளுகிளுப்பு தேவைதானா?) விளக்குகள் அணைந்தன. 

போட்டிகள் இனி கடுமையாக இருக்கும் என்பது முன்பே அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது பாலின வித்தியாசத்தையும் உடல் பலத்தையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ப அமைக்கப்படுவதே நியாயமானதாக இருக்கும். பிக்பாஸ் காதில் இந்தக் குரல் விழுமா?

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/102673-snehan-vs-sujais-the-game-turning-worse-happenings-of-bigg-boss-day-85.html

Link to comment
Share on other sites

பிக்பாஸ் கங்காணி ஆகலாம்... நீங்கள்லாம் ஏன் அடிமை ஆகணும்? 86-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

bigg boss tamil

86-ம் நாள் விடிந்தது.  85-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்ததைப்படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

முந்தைய நாள் விளையாடிய பலூன் விளையாட்டில் பட்ட காயத்துக்கு இன்னும் மூன்று நாள்களுக்குத் தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம் எனும் அளவுக்கு போட்டியாளார்கள் சோர்வில் இருந்திருப்பார்கள். ஆனாலும் ’சின்சியர்’ பிக் பாஸ் காலை எட்டு மணிக்கே 'வேக் அப் ஸாங்' ஒலிக்கவிட்டார். ’இறுதிச்சுற்று’ படத்திலிருந்து ரித்திகா சிங்கின் அசத்தல் சென்னை ஆட்டத்தில் ’அஞ்சுநூறு தாளை பாத்து ஆட்டம் போடுறா’ பாடல் ('அஞ்சாறு பாயிண்ட்டுக்கு ஆட்டம் போடுறாங்க ஹவுஸ்மேட்ஸ்' என்றும் கொள்ளலாம்!). சுஜாவும் கணேஷூம் வெளியில் வந்து ஆடத்தொடங்கியிருந்தனர். ஹரீஷ் காலைத் தூக்கமுடியாமல் விந்திவிந்தி நடந்துவந்தார். ’இனி காலையில் ஒலிக்கும் பாடலுக்கு அனைவரும் கண்டிப்பாக  ஆட வேண்டும்’ என்ற விதிமுறை விதிக்கப்பட்டுள்ளதால் வேறு வழியில்லாமல் ஹரீஷும் ஆட வேண்டிய நிலை. அனைவருக்குமே பாயின்ட் முக்கியம் என்பதால், ஆட ஆரம்பித்து இருந்தனர். கால் வலி காரணமாக 'இந்தியன்' சீனியர் கமல் களிமண்ணில் ஆடுவது போல், இடுப்புக்கு மேலே மட்டும் ஷேக்கி ஷேக் செய்து ஆடியதாக கணக்கு காட்ட முயற்சித்தனர்  (பாயிண்ட் முக்கியமாச்சே.. முட்டி ஜாயிண்ட் கழண்டதைப் பார்த்தா முடியுமா?). கணேஷ் மட்டும்தான் கோவாவுக்கு பிக்னிக் வந்திருக்கும் அங்கிள் போல், டவுசர் அணிந்துகொண்டு ஜாலியாக ஆடினார். ஆனால், நடக்கும்போது வலிமிகுதியால் தாங்கித் தாங்கி நடந்த சுஜா, ஆடும்போது மற்றவர்களைவிட இயல்பாகவே நடனமாடினார். உண்மைய சொல்லும்மா.... உனக்கு போர்டுல அடிபட்டுச்சா இல்லையா?! 

bigg boss Tamil

 

**

சிநேகனும் ஆரவ்வும் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ’மெண்டல் சேலஞ்சுனா ஓகே... பிசிக்கல் சேலஞ்சுனா முடியவே முடியாது’ என்றார் ஆரவ். சிநேகனும் வழிமொழிந்து ‘நம்மளை ரொம்ப சோதிக்குறாங்க. வெளில இருக்குற மக்கள் தினமும் நிறைய மக்களை சந்திக்கிறாங்க… பல விஷயங்கள்ல அவங்களை ரிலாக்ஸ் பண்ணிக்குறாங்க. அவங்களால இதை பண்ணமுடியும். ஆனா நூறு நாள் ஒரே வீட்டுக்குள்ள இருக்குறவங்க மனநிலை எப்படி இருக்கும்னு யோசிக்கணும். ஒரே இடம், ஒரே சூழ்நிலை...’ என்றெல்லாம் ஏகத்துக்கும் அங்கலாய்த்தார். ஆனால், ஹவுஸ்மேட்ஸிடம் இப்படியெல்லாம் பேசிவிட்டு, பிக்பாஸ் கூப்பிட்டதும் ஓடிச் சென்று 'சொல்லுங்க எசமான்.... உத்தரவு எசமான்.... செஞ்சுப்புடலாம் எசமான்!' என்றெல்லாம் முதல் ஆளாக ஆமாம் சாமி போடுவது என்ன லாஜிக் கவிஞரே..!?    

**

ட்ரிங்.. ட்ரிங்…! 

பிக் பாஸ் வீட்டுக்குள் புதியதாக ஒரு பழைய மாடல் டெலிபோன் வைத்திருந்தார்கள். அதில் வரும் அழைப்பு மூலம் இனி ஒவ்வொருவருக்கும் தனித்தனி டாஸ்க். (அதுவும் நல்லதுதான் ஒருநாள் முழுக்க ஒரே டாஸ்க் என்பது கொஞ்சம் சலிப்பூட்டுவதாகத்தான் இருக்கிறது. அதிலும் அந்த டாஸ்க்குகளுக்கு பிக்பாஸ் வைத்த பெயர்கள் எல்லாம் ' நாந்தாண்டா உங்க அப்பன் பேசுறேன் ' என டப்பிங் பட டைட்டிலாகவே இருந்தது....ரண கொடூரம்!). டெலிபோன் ஒலித்ததும் யார் முதலில் போனை எடுக்கிறார்களோ அவருக்கான டாஸ்க் அதில் சொல்லப்படும். அதுதான் இந்த ட்ரிங்.. ட்ரிங். முதல் அழைப்பை ஹரிஷ்  எடுத்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க், போட்டியாளர்களில் ஒருவரைத் தேர்வுசெய்து அவரது தலைமுடியின் ஒரு பகுதியில் கலரிங் செய்யவேண்டும். இந்த டாஸ்க்கை செய்து முடித்தால் இருவருக்கும் சேர்த்து 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதை இருவரும் எப்படி வேண்டுமோ அப்படி பிரித்துக்கொள்ளலாம். போனில் இதையெல்லாம் கேட்ட ஹரீஷிடம் என்ன என்ன என்று எல்லோரும் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஸ்டோர் ரூம் மணி ஒலிக்க, சிநேகன் உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கலரிங் கிட் எடுத்து வந்தார். 'இது எதுக்கு' என்று சிநேகன் புரியாமல் பார்க்க.. அதான் டாஸ்க் என்று விளக்கினார் ஹரீஷ். உடனே சுஜா தனக்கு ஓ.கே. என்றார். இருந்தாலும் அனைவரிடமும் ஒருமுறை கேட்டுவிடுகிறேன் என்று ஹரிஷ் சென்றார். அது பெரிய மனுஷத்தனமாக தோன்றியது. ஆனால், அதற்காக மூடிய பாத்ரூமில் பிஸியாக இருந்த கணேஷ், ஆரவ்விடம் டாஸ்க்கை விவரித்தது....உங்க சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லையா ஆபிசர். அவர்களும் பாத்ரூமுக்குள் இருந்தபடியே, 'என்ன கலர்.... எவ்வளவு நேரம்?' என்றெல்லாம் டெக்னிக்கல் டீடெய்ல் கேட்டுக்கொண்டிருந்தார்கள். முடிலடா சாமி! 

ஒருவழியாக சுஜாவே ஹரிஷின் கலரிங் பார்ட்னர் ஆனார். பர்கண்டி சாயலில் சுஜா கூந்தலில் கலரிங் செய்யத் துவங்கினார் ஹரிஷ். அதைப் பார்த்தபோது அமைதியாக இருந்த ஆரவ், பின்னர் சினேகன் அண்ட் கோவிடம் 'அது ஏதோ சிவப்பு கலரா இருக்கு.... முடி என்ன ஆகுமோ தெரில!' என்று வம்பளத்துக் கொண்டிருந்தார்.  

Bigg Boss

**
இரண்டாவது ட்ரிங்.. ட்ரிங்…


இம்முறை போனை எடுத்தது சிநேகன். அவருக்கான டாஸ்க், ஆரவ்வை கன்வின்ஸ் செய்து அவருடைய ஒரு கால் ஒரு கையில் வேக்ஸிங் செய்ய வேண்டும். அதாவது காலில் வேக்ஸ் தாளை ஒட்டி இழுத்து காலில் இருக்கும் மொத்த முடியையும் பிடுங்க வேண்டும். யப்பா நினைத்தாலே மயிர்கூச்செறிகிறது. 'ரைட்டு இது வில்லங்கம்!' என்பதை உணர்ந்த சிநேகன் எடுத்த எடுப்பிலேயே ‘தம்பி உன் கால்ல விழுகுறேன்டா.. நான் ஒரே ஒரு டாஸ்க் சொல்றேன்.. செஞ்சுக்கிறியேடா’ என்று ஆரவ்விடம் பம்மினார். ஆரவ் டாஸ்க் என்ன என்று தெரிந்துகொண்டதும், 'கஷ்டம் ப்ரோ. இதுக்கு நீங்க கன்வின்ஸ் பண்ணித்தான் ஆகணும்!' என்றபோது சிநேகனுக்கு லேசாக ஜெர்க் அடித்திருக்கும். பிக்பாஸும், 'மாப்பு....வைச்சுட்டோம்ல ஆப்பு' என்று குஷியாகி இருப்பார். ஆனால், அங்கு ஆரவ் வைத்தார் ட்விஸ்ட். 'பிக்பாஸ் சொல்லிட்டார்... பண்ணிருவோம்... அவர் இன்னும் என்ன சொன்னாலும் பண்ணிருவோம்' என்று சம்மதித்தார்.  இந்த டாஸ்க்குக்கும் பத்து பாயின்ட். இருவரும் பேசி பிரித்துக்கொள்ளவேண்டும். 'நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்' என்று பிக்பாஸ் சொல்ல, இருவரும் சரிசமமாக பிரித்துக்கொள்வதாகச் சொன்னார்கள். இதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. எப்படிப் பார்த்தாலும் இதில் சிநேகனின் பங்கு குறைவுதான் எனும்போது ஏன் அவருக்கு சரிசமமான பாயிண்டை ஆரவ் விட்டுக்கொடுக்கவேண்டும்? ஆனால், அதற்கெல்லாம் இருவரும் அலட்டிக் கொள்ளாமல், மயிர் நீக்கும் பணியில் மும்முரமானார்கள்.  

அந்தப் பக்கம் பாயிண்ட் பிரிக்கும் பஞ்சாயத்து சுஜா ஹரிஷூக்கும் வந்தது. “எனக்கு 6... உங்களுக்கு 4 ஓக்கேவா” என்று ஹரீஷ் சொல்ல… “இல்லல்ல எனக்கு 6 உங்களுக்கு 4” என்று சுஜா சொல்ல.. “அதாங்க நானும் சொல்றேன் எனக்கு 6 உங்களுக்கு 4 சரிதானே” என்று ஹரிஷ் வம்பிழுத்தார். பின் கேமரா முன் இருவரும் சிரித்துக்கொண்டே ஆளுக்கு 5 பாயிண்ட் எடுத்துக்கிறோம் என்று சொன்னார்கள். ‘அதெல்லாம் முடியாது எனக்குதான் அதிக பாயிண்ட்ஸ் வேணும்’ என்று அடித்துக்கொள்வார்கள் என்று நினைத்து இப்படி ஒரு ஐடியாவை பிடித்திருப்பார் பிக்பாஸ். ஆனால், பிக்பாஸ் குடும்பம்தான் விக்ரமன் படங்கள் வழிவந்த குடும்பமாச்சே. 'எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவோம்' என்று எதையும் சமாளித்தார்கள். 'வட போச்சே' என்று நொந்து போனார் பிக்பாஸ்.

bigg boss Tamil

 

இதற்கு நடுவில் ஆரவ் - சிநேகன் தங்கள் டாஸ்க்கை தொடங்கியிருந்தார்கள். வேக்ஸிங் அனுபவமுள்ள பிந்து அவர்களுக்கு வழிகாட்டியாக ஒளிகாட்டினார். மருத்துவமனைகளில் ஊசி குத்துவதற்கு முன்னால் ஊசியைப் பார்த்ததும் குழந்தைகள் கத்தி அமர்க்களம் செய்வார்களே, வேக்ஸ் தாள் காலில் ஒட்டப்பட்டதுமே அப்படி ஒரு அமர்க்களத்தை நிகழ்த்தினார் ஆரவ். ‘பாப்பாவுக்கு ஐஸ்கிரீம் புடிக்குமா? சாக்லேட் புடிக்குமா?’ என்று நர்ஸ்கள் குழந்தைகளிடம் பேச்சுக்கொடுத்து வலி மறக்கச் செய்வதுபோல், 'நமக்கு நிறைய வேலை இருக்கு... அதெல்லாம் எப்படி முடிக்கப் போறோம்.... அங்க பார்க்காத' என்று ஆரவ்வை திசை திருப்பிக் கொண்டிருந்தார் பிந்து. பொண்ணுக்கு தங்க மனசு! ஆனால், சிநேகன் இப்படியெல்லாம் மெனக்கெடவில்லை. ஆரவ் காலில் தாள்களை ஒட்டி சர்ரக்... சர்ரக்கென்று தேய்த்து இழுத்துவிட்டார். ஆரவ்வும் அதை சகஜமாக எடுத்துக்கொண்டார். காலுக்கும், கைக்குமாக பிக்பாஸ் கொடுத்த வேக்ஸிங் தாள்களை காலுக்கு மட்டுமே செலவழித்துவிட்டு, 'ஆங்... கைக்கு இன்னும் பேப்பர் கொடுங்க' என்று பிக்பாஸுக்கு டாஸ்க் கொடுத்தார் கவிஞர்.


காலில் இருக்கும் முடியெல்லாம் இழந்தபிறகு தன் கால் பளபளப்பாகிவிட்டதாக அங்கலாய்த்துக்கொண்டார் ஆரவ். 'அப்படியே ஒரு கொலுசு மாட்டினா பொம்பளப் புள்ள கால் மாதிரியே இருக்கும்ல,... கொலுசும் கொடுத்துவிடுங்க பிக்பாஸ்' என்று ஆரவ் சொல்ல… 'இந்தா இருக்கே!' என்று தன் கொலுசை கழட்டிக் கொடுத்தார் பிந்து மாதவி . ஆரவ்வும் அந்த கொலுசை மாட்டிக்கொண்டு ஜாலியாக பிக்பாஸ் கேமராவுக்குப் போஸ் கொடுத்தார். கண்ணகிதான் கால்சிலம்பை கழட்டிக் கொடுத்ததாய் படித்திருக்கிறோம். இங்கு 'மாதவி' கால்கொலுசைக் கழட்டிக் கொடுத்த காட்சி.... ஐயகோ....இப்படிலாம் யோசிச்சு எழுத வைச்சுட்டியே பாஸூ...பாஸு... பிக்பாஸு! 
ஆனாலும். ஒரு சந்தேகம் எழாமல் இல்லை. காயங்களில் ஒட்டிய பேன்டேஜை பிரிக்கும்போதே வலி உயிர் போகுமே.. ஆனால், ஆரவ் எப்படி சிரித்துக்கொண்டே இருந்தார் எனத் தோன்றியது. 

kolusu

 ஒருமுறை என் நண்பன், 'பெண்களுக்கு சாஃப்ட் ஸ்கின். அதனால்தான், வேக்ஸிங் செய்யும்போது ஓவரா கத்தறீங்க!' என அவன் அக்காவிடம் ஆணாதிக்கத்தனமாகப் பேசியிருக்கிறான். 'அப்படியா,,, இரு வாரேன்!' என்று அக்கா அவன் முகத்தில் ஒரு வேக்ஸிங் தாளை ஒட்டி 'வரட்'டென இழுத்திருக்கிறார். எருமை மாட்டுக்கு சவால் விடும் சருமம் கொண்ட நம் நண்பன் துடிதுடித்துப் போய்விட்டான். ஆனால், அப்படியாக ரியாக்‌ஷன் காட்டாமல் ஆரவ் இருந்ததைப் பார்க்கும்போது, அவர் மாடல் என்பதால் வேக்ஸிங் பரிச்சியம் இருக்கும் என்றும் தோன்றியது. பிந்து மாதவி இப்படியெல்லாம் ஆறுதல் அளித்தால், ஒரு கால், ஒரு கைக்கு என....தாடி, முடி என மொத்தமாகவே வேக்ஸிங் செய்துகொள்ளலாம் என்றும் தோன்றியது! 

ஒரு கால் முடிஞ்சது. டாஸ்க் படி ஒரு கைக்கும் வேக்ஸ் செய்ய வேண்டும். அதுவரை பஞ்சாயத்து எதுவும் எழவில்லை. உடனே பிக்பாஸ் 'ஆரவ்... கைக்கு செய்யும் முன் உங்கள் மதிப்பெண்களை மறுபரிசீலனை செய்துகொள்ளலாம்' எனக் கொளுத்திப் போட முயற்சித்தார். ஆனாலும், 'சொன்ன சொல்லைத் தவறமாட்டான் இந்த கோட்டைச்சாமி. ஆளுக்கு 5 மதிப்பெண்களே இருக்கட்டும்!' என மலர்ந்தருளினார் அருள்வள்ளல் ஆரவ். ஒருவேளை ஓவியா வீட்டுக்குள் இருந்திருந்தால், 'ஆரவ்... பாயிண்ட்டுக்காக இப்படிலாம் பண்ணனுமா.... ஃபிஷ்... அதெல்லாம் வேண்டாம். மாட்டேன்னு சொல்லிரு... வாட் த ஹெல்!' என்று பொங்கியிருப்பார். ஆனால், கூண்டுக்குள்ள பச்சக் கிளிதான் இல்லையே...ஹ்ம்ம்..!


டைனிங் ஹாலில் ’Strategy’ கணேஷ், இந்த டாஸ்க்கை எப்படி செய்தால் வலிக்காமல் செய்யலாம் என்கிற ‘ஆக்சுவலா பாத்திங்கன்னா..’ ஐடியாக்களை சுஜாவிடம் பகிர்ந்துகொண்டிருக்க.. அவருடைய பாடி லாங்குவேஜை வைத்தே கணேஷ் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருப்பார் என்று ஆரவும், பிந்துவும் கிண்டலடித்துக்கொண்டிருந்தார்கள். ஒருவரை இமிடேட் செய்யும் இந்த விஷயத்தில் 'ட்ரிக்கர்' சக்திக்கு அடுத்து ஆரவ், பிந்துதான் செம்ம! 


 **

மூன்றாவது ட்ரிங்… ட்ரிங்…

இந்த முறை போனை எடுத்தது கணேஷ். எடுத்ததும் “ஹலோ பிக்பாஸ் ஹவுஸ்” என்றார். பிக்பாஸையே கலாய்க்கிறாராமாம்.  யாராவது ஒருவரை கன்வின்ஸ் செய்து அவருடைய நான்கு ஜோடி காலணிகளை வெட்ட வேண்டும் என்பது அவருக்கு விதிக்கப்பட்ட டாஸ்க். பிந்துவும் ஆரவ்வும் ஜகா வாங்க, சுஜா ஒப்புக்கொண்டார். 'எனக்கு என்ன பாயிண்ட் கொடுப்பீங்க?' என்று கணேஷை ஆழம் பார்த்தார் சுஜா. '10 மதிப்பெண்களை ஆளுக்கு 5 -ஆ  பிரிச்சுக்கலாம்!' என்று கணேஷ் சொல்ல, சின்ன ஏமாற்றத்துடன் ஏற்றுக்கொண்டார். சுஜாவின் செருப்புகளை கணேஷ் வெட்டத்தொடங்க, பிந்துவும் ஆரவ்வும் வழக்கம்போல ‘ஆக்சுவலா பாத்திங்கன்னா இந்த ஷூவை இப்படி வச்சு கட் பண்ணனும்ங்க’ என்று கணேஷை ஓட்டினார்கள். தன் செருப்புகளை வெட்டும்போது சுஜா, ‘கேமரால காட்டிகாட்டி கட் பண்ணுங்க Buddy’ என்றார். ஏன்மா அவரு என்ன கிச்சன் ஷோல சிக்கனையா கட் பண்றாரு? ஆனால், கணேஷ் செருப்பை வெட்ட வெட்ட....'ஐம் ஸாரி... ஐம் ஸாரி' என்று சுஜா கெஞ்சிக் கொஞ்சியது....பச்ச மண்ணுய்யா!
பச்ச மண்ணாக இருந்தாலும் அனைத்து டாஸ்க்குகளிலும் பங்கெடுத்து புள்ளிகளைக் குவிக்க வேண்டும் என பரபரத்துக்கொண்டே இருந்தார் சுஜா. அதனால், எந்த டாஸ்க் என்றாலும் 'ரை ரைட்' சொல்லி ஒப்புக்கொண்டார். இதை ஒரு மூலையில் இருந்து அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தார் சிநேகன்.  

suja

 

**

ட்ரிங்… ட்ரிங்…


இப்போது சுஜா போனை எடுத்தார். அவருக்கான டாஸ்க் யாரையாவது கன்வின்ஸ் செய்து அவருடைய முகத்தில் பெயிண்ட் செய்ய வேண்டும். அடுத்த அறிவிப்பு வரும்வரை அவர் முகத்தை கழுவக்கூடாது. கொஞ்சம் ஈசியென்று நினைத்ததால் எல்லாருமே ஆர்வம் காட்டினார்கள். அதிலும் சுஜாவுடன் தனக்கு வாய்க்கா வரப்பு தகராறு இருந்தாலும், முதல் ஆளாக கை தூக்கினார் சிநேகன். ஆனால், அவரைக் கண்டுகொள்ளாமல்  சுஜா கணேஷைத் தேர்வு செய்தார்.  டாஸ்க் தொடங்குமுன், ‘நினைவிருக்கட்டும் அடுத்த அறிவிப்பு வரும்வரை பெயிண்ட் அப்படியே இருக்க வேண்டும் கழுவக்கூடாது’ என்று மீண்டும் ஒரு முறை டாஸ்க் விதிகளைப் புரியவைத்தார் பிக்பாஸ். சுஜா, கணேஷ் முகத்தில் பெயிண்ட் செய்யத் தொடங்கினார். இந்த சமயத்தில் பிந்து சிநேகனிடம் ஒரு பாட்டு பாடுங்க என்று சொன்னதுதான் தாமதம்… அந்நியன் படத்தில் வரும் ரயில் காட்சியைப் போல சங்கீத காலாட்சேபம் செய்தார்கள். ஐய்ய்யயோ..!


**

மீண்டும் ட்ரிங்… ட்ரிங்.. 

ஆரவ் இம்முறை போனை எடுத்தார். யாரையாவது கன்வின்ஸ் செய்து ஒரு நாள் முழுக்க தரையில் அமரச் செய்ய வேண்டும். படுக்கையிலோ.. சோபாவிலோ… அமரக்கூடாது. அவர்கள் தரும் பாயில்தான் படுக்க வேண்டும். சிநேகன் இந்த டாஸ்க்கை ஏற்றுக்கொண்டார். வழக்கம்போல ஆளுக்கு 5 மதிப்பெண்கள் எடுத்துக்கொண்டார்கள். ஒரு டவுட்டு… கன்வின்ஸ் பண்றதுனா முடியாதுனு சொல்றவனை ஒப்புக்க வைக்குறதுதானே. ஆனால், இங்கோ, 'டாஸ்க்கா... நாந்தான் இருக்கேன்ல!' என்று பறக்கிறார்கள். பிறகு ஏன் கன்வின்ஸ் செய்யச் சொல்கிறார் பிக்பாஸ்? 


**
'அடுத்த டாஸ்க்தான் வந்துடுச்சே... நான் மேக்கப்பை கலைத்துவிடலாமா? அல்லது அடுத்த அறிவிப்புக்குக் காத்திருக்க வேண்டுமா?' என்று குழம்பினார் கணேஷ். பிக் பாஸிடமே கேட்டார். பதில் இல்லை. சுஜாவோ, 'அடுத்த அறிவிப்புனுதான் சொன்னாங்க. அப்படின்னா information. அதான் வந்துருச்சே!' என்றார். சிநேகன் குழப்பியும் குழப்பாமலும் ஒரு விளக்கம் கொடுத்தார். அது கணேஷை இன்னும் குழப்பியது. ஒருவழியாக கணேஷ் தன் முகத்தை கழுவினார். ஆனால், அவர் விதிமுறையை மீறியதற்காக அவருக்கு 5 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக அறிவித்தார் பிக்பாஸ். ‘நாந்தான் உங்ககிட்ட கேட்டேன்ல. அரைமணி நேரம் வெயிட் பண்ணேன். ஏன் பதில் சொல்லலை?’ என்று பிக் பாஸின் மீது கோபப்பட்டார். நியாயமான கோபம்தான். சுஜாதான் தான் சரியாக புரிந்துகொள்ளாமல் தவறு செய்துவிட்டதாக மன்னிப்புக் கேட்டார். 'Its ok. he wanted to play like this. let him play' என்று அதிருப்தியைக் காட்டிவிட்டு அமைதியாகிவிட்டார் கணேஷ். வேறு எந்த வம்பும் சிக்காததால், பிக்பாஸ் வலிந்து கணேஷுக்கு அநீதி இழைத்திருக்கிறார் என்றுதான் தோன்றியது. 
**

பிந்து ‘ரொம்ப கூட்டம் கம்மியா இருக்குல’ என்று ஃபீல் பண்ண சிநேகன், “வையாபுரி போனதுல இருந்து ஒரு நாளே நீளமா இருக்கு” என்று ரிலேட்டிவிட்டி தியரி பேசினார். ஆம், உண்மையில் வையாபுரியின் வெளியேற்றம் என்பது அவர்களுக்கு ஒருவகையில் ஈடுசெய்யமுடியாதது தான். பிக்பாஸ் டீமில் எல்லோருக்கும் காஃபி போட்டு அந்த நாளுக்கான டாஸ்க்குக்கு இவர்களைத் தயார் செய்யும் பணியில் இருந்தார் வையாபுரி. அதிலும் வையாபுரியை மிஸ் செய்வதை ஒரு வார்த்தையில் சுள்ளென உணர்த்தினார் பிந்து. 'நமக்கு இன்னும் வையாபுரி ஹேங்க் ஓவர் இருக்கு!' அட்றா சக்க.... பொண்ணுகிட்ட கத்துக்கங்க பாய்ஸ்! 

போன் வருகிறது. மீண்டும் கணேஷ்தான் போனை எடுத்தார். யாராவது ஒருவரை கன்வின்ஸ் செய்து மர்ம உணவு வகைகளை சாப்பிட வைக்கவேண்டும். கணேஷ் முழுமையாக சொல்லி முடிக்கும் முன்பே பிந்து கைதூக்கினார். “நீ சைவமாச்சே அதுல அசைவம் வந்தா சாப்பிடுவியா?” என்று கணேஷ் கேட்க.. இந்த ஐடியா நமக்கு தோணாமா போச்சே என்று பிக்பாஸே நினைத்திருப்பார். ஆனால், வந்தது அதைவிட கொடூரம். பாகற்காய், இஞ்சி, வேப்பிலை என விநோதமான காம்போ. 

ஒட்டுமொத்த டீமின் ஆரவாரத்தோடு பிந்து மாதவி சாப்பிட ஆரம்பித்தார். முதலில் பாகற்காயில் இருந்து ஆரம்பித்தார் பிந்து மாதவி. ஒருகட்டத்துக்கு மேல் முடியாமல் போக, ஒவ்வொன்றுக்கும், ஒரு பெயர் வைத்து அழைத்து, விழுங்க ஆரம்பித்தார்.  கணேஷ் மூலிகை டாக்டராகவே மாறி இருந்தார். 'வேப்பிலையை கடைசியா சாப்பிடுங்க செமிக்கும்.. இஞ்சியை அப்படியே சாப்பிடுங்க!' எனச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஹரிஷ் 'பாட்டுப்பாடவா ' பாடலைப் பாட ஆரம்பிக்க, பிந்து நடனமாடிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தார். யூடியூபில் குழந்தைகளை எலுமிச்சையை சாப்பிடச் சொல்லி, அவர்களின் முக ரியாக்ஷனை பதிவு செய்வார்கள். அதற்கு சற்றும் குறைவில்லாமல், ரியாக்ஷன்களை அள்ளி வழங்கிக் கொண்டு இருந்தார் பிந்து மாதவி. 'விருந்தாளி' பிந்து மாதவி இப்படியொரு படையலை எதிர்பார்த்திருக்க மாட்டார். பல நாள்கள் கழித்து, பிக்பாஸ் டீமில் இருக்கும் அனைவரும், ஒருவர் வெல்ல உற்சாகப்படுத்தியது இதில்தான். இந்த டாஸ்குக்கு மட்டும் பிந்து 8, கணேஷ் 2 என பிரித்துக்கொள்ளலாம் என ஹரிஷ் ஐடியா கொடுத்தார். 

bindhu madhavi


விநோதமான காம்பினேஷன், தொட்டுக்கா அயிட்டங்களை மெயின் டிஷ்ஷாக சாப்பிட்டது எல்லாம் சேர்ந்து பிந்துவுக்கு குமட்டலை உண்டாக்கியது. கையில் பிளாஸ்டிக் பையுடன் இருந்த ஆரவ், பிந்து குமட்டும்போது, அதில் ஏந்திக்கொண்டார். தொடர்ந்து குமட்டினாலும் சளைக்கவில்லை பிந்து. கடைசிவரை சாப்பிட்டார். அதிலும் கடையில் இஞ்சியை சாப்பிடும்போது, 'ஏப்பம் வரும்... கசக்கும்... பீ கேர்ஃபுல்!' என்றெல்லாம் கணேஷ் ஆறுதல் சொல்ல, ஒரே கல்ப்பில் இஞ்சியை விழுங்கிவிட்டு பிந்து கொடுத்த அந்த சூப்பர் ஸ்மைலி ரியாக்க்ஷன்..... 'சார்.... பிந்து சார்....!' என்று பிந்து ஆர்மியினரை உற்சாகப்படுத்தியிருக்கும். 

**

அடுத்த அழைப்பை சிநேகன் எடுக்கிறார். ஆரவ், ஹரீஷ் இருவரில் யாருக்காவது க்ளீன்ஷேவ் செய்ய வேண்டும் என்பது அடுத்த டாஸ்க். ‘ரெண்டு பேர்ல யார்னாலும் பண்ணலாம். ஆனா நான் ஃபர்ஸ்ட் ஆரவ்ட்ட கேட்கிறேன்’ என்று சிநேகன் தன் சாணக்கியதனத்தைக் காட்டினார். அவர் ஹரீஷை வேண்டுமென்றே ஓரம் கட்டுவதாகத் தெரிந்தது. 'மொட்டை போடக் கூட ரெடி' என்று முன்னரே சொல்லியிருந்த ஆரவ், இதற்கா சளைக்கப் போகிறார். உடனே ஒப்புக்கொண்டார் . இம்முறையும் ஆளுக்கு 5 மதிப்பெண்கள். அவ்வளவு செலவழித்து, ஓட்டு வாங்கி ஜெயித்த எம்.எல்.ஏ-க்களை ஒரே நாளில் தகுதி நீக்கம் செய்ததுபோல பொசுக்குனு இந்த மார்க்கெல்லாம் செல்லாதுனு சொல்லிட்டா ஆரவ் நிலைமை என்னாகும்! ஒரு நாள் கூத்துக்கு மீசை எடுத்த கதையாகிப்போய்விடும்.  மீசை தாடி இல்லாமல் ஆரவ்வைப் பார்க்க காற்று வெளியிடை பட கார்த்தி போல இருந்தது. 

**

சிநேகனும் பிந்துவும் தரையில் அமர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் போல் ஆலோசனைக் கூட்டம் போட்டார்கள்.  'பிந்து போன் எடுக்கும்போது ஒருவர் பெயரைச் சொல்லி டாஸ்க் சொன்னால் மட்டும் அவர்களோடு சேர்ந்து செய்யுங்கள். யாரைவேண்டுமானாலும் தேர்வு செய்யலாம் என்று சொன்னால் என்னையோ ஆரவையோ தேர்ந்தெடுங்கள். நமக்குள் பாயின்ட்களைப் பிரித்துக்கொள்ளலாம்' என்றார் சிநேகன். என்ன போங்காட்டம் இது. இன்றைய நாளின் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு டாஸ்க்கிலும் பிந்து, ஆரவ், சிநேகன் மூவரும் தங்களுக்குள்ளாக மட்டுமே டாஸ்க்கை பகிர்ந்துகொண்டார்கள். இந்த க்ரூப்பிசத்தை ஆண்டவர்தான் தட்டிக்கேட்க வேண்டும்.

**

இரவு 9 :45 க்கு மீண்டும் ஒரு அழைப்பு. ஆரவ் எடுத்தார். 'இவனை நாள் முழுக்க வச்சு அடிச்சாச்சு. இதுக்கு மேல தாங்க மாட்டான்' என்று பிக்பாஸே பாவம் பார்த்து ஜாலியான டாஸ்க் ஒன்றைக் கொடுத்தார். ஆரவ் ஒருவரை கன்வின்ஸ் செய்து அவருடன் பாடிக்கொண்டே டான்ஸ் ஆட வேண்டும். அடுத்த அறிவிப்பு வரும்வரை பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருக்க வேண்டும். உடனே.. “ப்ரோ நான் கூட டான்ஸ் ஆடுறேன்” என்று ஹரீஷ் கையைத் தூக்கினார். ஆரவ் அம்புட்டு லூஸா என்ன? பிந்துவைத் தேர்ந்தெடுத்தார்.

Aarav bindhu madhavi

 

ஆரம்பித்தது சவால். ஆரவ்வும் பிந்துவும் சளைக்காமல் மாறிமாறி பாடிக்கொண்டும் ஆடிக் கொண்டும்.... ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தார்கள். 'சொக்கா.... சொக்கா.... எனக்கு இல்லை... எனக்கு இல்ல...!' என்ற நாகேஷின் மனநிலை....'வட போச்சே' என்ற வடிவேலுவின் மனநிலை.... இரண்டின் கலவையாக இந்த ஆட்டம் பாட்டத்தை பார்த்து உள்ளுக்குள் பொருமலுடன் உலவிக் கொண்டிருந்தார் கவிஞர்.
ரொமான்ஸ் பாடல்களாக பாடிக் கொண்டிருந்துவிட்டு, ஒரு கட்டத்தில் பிந்து வெறுத்துப் போய்… “பிக்பாஸ்.. இது நியாயமா நியாயமா” என்று கேட்டார் பிந்து. டான்ஸ்ங்ற பேர்ல ஆரவ் பண்றது மட்டும் நியாயமா பிந்து? பிந்து  நாளின் ஆரம்பத்தில் ஆரவ்வுக்கு கொடுத்த கொலுசை மீண்டும் மாட்டவில்லை போல, ஒற்றை சிலம்புடன் ச்சே... கொலுசுடன் (ஆனால் அது சிலம்பு போல் தான் இருந்தது) ஆடிக்கொண்டு இருந்தார்.

bindhu madhavi


யார் யார் இதுவரை எத்தனை மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னார் பிக்பாஸ். ஆரவ் - 20, சுஜா - 18, சிநேகன் - 15, கணேஷ் - 14,  பிந்து - 10, ஹரிஷ் - 8.
**
நாளின் இறுதியில் மீண்டும் போன்கால். நம் வீடாக இருந்தால், ‘இந்த நேரத்துல எவன்டா போன் பண்றான்?’ என்று திட்டியிருப்பார்கள். ஆனால் இது பிக்பாஸ் வீடாச்சே. பாயின்டு  பாயின்டு. சிநேகன் எடுத்தார். அவருக்கான டாஸ்க்... அகல்விளக்குகள்! அதை  இரவு முழுக்க அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விடிய விடிய சிவராத்திரிதான். பேச்சுத்துணைக்கு பிந்து அல்லது சுஜாவை வைத்துக் கொள்ளலாம் என ஐடியா கொடுத்தார் பிக்பாஸ். ஆனால், அதை முதலில் வெளிப்படையாக தெரிவிக்காமல், பிந்துவுக்கு வாய்ப்பு  கொடுப்பதாகச் சொன்னார் சிநேகன். சட்டென சுதாரித்து, 'பிந்துவால முடியலைன்னா சுஜாவை சேர்த்துக்கிறேன். உங்க ரெண்டு பேர்கிட்டயும் கேட்கச் சொன்னார் பிக்பாஸ்' என்றார். பிந்து ஓகே சொல்ல, அகல்விளக்கு டாஸ்குக்கு ஆயத்தமானார்கள். 'ரெண்டு பேர்ட்டயும்தானே கேக்கச் சொல்லிருக்காங்க. ஆனா, என்கிட்ட கேக்காமலே பிந்துவை சேர்த்துக்கிட்டது சரியா?' என்று ரெளத்ரமாக இருந்தார் சுஜா. நியாயம்தான்!

சிநேகன் ஏற்றி வைத்த அகல்விளக்குகளைத் தவிர, வீட்டின் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டது. இரவு முழுவதும் இருக்கும் டாஸ்க் என்பதால், இதற்கு 20 பாயின்ட் வேண்டும் என எஜமானர் பிக்பாஸிடம் முறையிட்டார் பிந்து மாதவி. சிநேகன் அதையே ' எங்க பிக் பாஸ் நல்ல பிக்பாஸ்' என வேறு மோடில் கேட்டுக்கொண்டு இருந்தார். ஆனால், இரவு முழுக்க விளக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கப் போகும் சிநேகனுக்கு காலையிலேயே 'இனி பெட் இல்லை பாய் மட்டும்தான்' டாஸ்க் கொடுத்தது எல்லாம் பிக்பாஸ் ஒரு தீர்க்கதரிசி என்பதைக் காட்டியது. ' நீங்க இந்த வாரம் சேஃப் ஆவீங்க பாருங்க' என மக்களின் வாய்ஸ் எப்படி இருக்கும் என சிநேகன் பிந்துவுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டு இருந்தார்.

பாய் பிக் பாஸ் தமிழ்

 

கவிஞரும் பிந்து மாதவியும் விளக்கை அணையாமல் காப்பார்களா? அல்லது இரவில் பிக்பாஸ் எல்லாரையும் எழுப்பிவிட்டு, விளக்கை அணைக்கச் சொல்லும் டாஸ்க்கை அவர்களுக்கு கொடுப்பாரா!?

இந்த இடத்தில் பிக்பாஸூக்கு ஒரு கேள்வி...
'சிகையை நீக்கு என தோற்றத்தை குலைக்கும், இஞ்சி, வேப்பிலை என சாப்பிடச் சொல்லி அசெளகரியம் உண்டாக்கும் பணிகள் மூலம் போட்டியாளர்களை மன/உடல்ரீதியாக துன்புறுத்துவது டீ எஸ்டேட் கங்காணிக்கே சவால் விடும் போக்காக இருக்கிறதே...!?  போட்டியாளர்கள் ஏ.சி வீட்டில் சொகுசாக இருந்தால் நிகழ்ச்சி எப்படி சூடுபிடிக்கும் என நினைத்தால், சுவாரஸ்யமான சவால்களை அளிக்கலாமே..! இப்படி பார்வையாளர்களின் ரசனையை தரமிறக்குவது....நிச்சயம் சரியில்லை!'

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு கேள்வி...
'என்னதான் போட்டியென்றாலும் சில விஷயங்களை செய்ய மாட்டேன் என அனைவரும் ஒற்றுமையாக பிக்பாஸை எதிர்த்தால் என்ன...? எதையோ செய்து புள்ளிகளை அள்ளிக் கொள்ளலாம் என்ற மனநிலை...சரியா? இந்த இடத்தில்தான் மனசுக்குப் பிடிக்காததை செய்ய மாட்டேன், பிடித்ததை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் செய்வேன் என்று திமிறிய ஓவியாவுக்குக் குவிந்த ஆதரவைப் புரிந்துகொள்ள முடிகிறது. சுவாரஸ்ய சவால்களை எவ்வளவும் எதிர்கொள்ளலாம்....அடிமைத்தனங்களை அல்ல!

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/102793-bigg-boss-can-act-as-a-boss-but-why-should-contestants-accept-their-fate-as-slaves-happenings-of-bigg-boss-day-86.html

Link to comment
Share on other sites

பீட்சாவுக்கே சொர்க்கமாம்... சிநேகன் தேவதையாம்... இதெல்லாம் ஆவுறதில்ல! 87-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

bigg boss tamil

 

முன்குறிப்பு: பிக்பாஸூக்கு ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன்... உள்ளபடி நேத்து கஷ்டமான டாஸ்க் கொடுக்கப்பட்டது யாருக்கு தெரியுமா...!! மொத்த நிகழ்ச்சியையும் பார்த்து இந்த அத்தியாயத்தை எழுத வேண்டியிருந்த எனக்குத்தான். நேத்து நடந்ததெல்லாம் துவம்சம்.... முடியலை!

86-ம் நாள் சிநேகனுக்குக் கொடுக்கப்பட்ட அகல் விளக்கு டாஸ்க் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது. அதிகாலை 5 மணி வரை சிநேகனும் பிந்துவும் அகல் விளக்குகளை அணையாமல் காத்துவந்தார்கள். திரி கொளுத்தும் வேலையில் கெட்டிக்காரரான சிநேகன், சுஜா அவரது டியூனுக்கு முட்டுக்கட்டை போடுவது பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.எது எப்படியோ, தற்போதைக்கு சிநேகனுக்கு, அங்கு இடைஞ்சலாக இருக்கும் ஒரே நபர் சுஜா தான். அது ஒவ்வொரு டாஸ்க்கின் போதும் வெளிப்படுகிறது.
 விடியும்வரை விழித்தெருந்த களைப்பு சிநேகன் உடல்மொழியில் நன்கு வெளிப்பட்டது.  ‘நான் ஒரு அஞ்சு நிமிசம் படுத்துக்குறேன். நீங்க கொஞ்சம் பாத்துக்கோங்க’ என்று பொறுப்பை பிந்துவுக்கு கைமாற்றிவிட்டு தனக்குக் கொடுக்கப்பட்ட பாயில் படுத்துக்கொண்டார் சிநேகன். தூங்கவும் கூடாது எடுக்கும் கொஞ்ச நேர ஓய்வையும் ஷோபாவில் வசதியாக சாய்ந்துகொண்டு இருக்கலாம் என்றால் அதுவும் முடியாது என்ற நிலையில் சிநேகனுக்கு கொஞ்சம் கஷ்டமான நிலைதான். பிந்துவுக்கு தூக்கம் கண்களில் தேங்கி நின்றபோதிலும் தீப ஒளியில் பிரகாசித்தது அவர் முகம். 

பிந்து மாதவி


இப்படி  இரவு முழுக்க வரும் டாஸ்க் என்றால், அதில் ஒட்டுமொத்த பிக்பாஸ் டீமும் இருக்க வேண்டும். டிரிக்கர் சக்தியின் வைரத்தை திருடும் எபிசோட் அதற்கு நல்ல உதாரணம். அதையும் கடந்து பிக்பாஸில் ஹிட் அடித்த இரவு நிகழ்வுகள் என்றாலே, அது ஓவியா செய்த ரகளைகள் தான். ஒட்டுமொத்த டீமையும் ஓர் இரவில் அள்ளு கிளப்பினார். இந்த டாஸ்க் யாருடைய  தொந்தரவும் இல்லாமல், காலை வரை பிந்துவும் சிநேகனும் 'பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் ' டாஸ்க்கை தொடர்ந்து  கொண்டு இருந்தனர்.
விடிந்தும் அணையாமல் டாஸ்க் தொடர்ந்து கொண்டு இருந்தது. பிந்துவும் சிநேகனும் அதிகாலைக் கிழக்குக் காற்றை மறைத்துக்கொண்டு விளக்கு அணையாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துவந்தார்கள். 'இந்தப் பக்கமா வாங்க.. இப்ப அந்தப் பக்கமா வாங்க!' என்று காற்றைக் கணித்து சிநேகன் பிந்துவை வழிநடத்தினார். 'நான் ஈயத்த இந்த பக்கமா பூசும் போது, நீ அப்படி திருப்பனும். நான் அந்தப்பக்கமா பூசும் போது, நீ இப்படி திருப்பனும்' என கவுண்டமணியின் தொழில் நேக்கில் சிநேகன் விளக்குகளை கவனித்து வந்தார்.. ஆனாலும் மனிதர் அநியாயத்துக்கு டாஸ்க் முடிப்பதில் குறியாக இருக்கிறார். விளக்குகளில் எண்ணெயை பகபகவென ஊற்றியிருந்ததால், அவை கபகபவென எரிந்து கொண்டிருந்தன. அதைக் கவனித்து,  ‘எல்லா பயலும் ஸ்ட்ராங்கா இருக்கான்ல’ என்று சிநேகன் கேட்க, “அதெல்லாம் ஸ்ட்ராங்காதான் இருக்கு.. நாம தான் வீக்கா இருக்கோம்” என்று அத்தனை அசதியிலும் ஜோக்கடித்தார் பிந்து மாதவி. அப்போது டாஸ்க் முடிந்துவிட்டதற்கான பஸ்ஸர் ஒலித்தது. அதுவரை இல்லாத புது உற்சாகம் வந்து தொற்றிக்கொண்டது சிநேகனிடம். சிரித்தார். கத்தினார். காத்திருந்தது போல பிந்துவை கட்டிக்கொள்ள முயன்றார். எதிர்பார்த்தது போல (அத்தனை அசதியிலும்) அதை தடுத்து தவிர்த்துக் கொண்டார் பிந்து (அந்த மைக்ரோ டாஸ்க்கில் தடவியல் நிபுணருக்கு தோல்வி..!). பிறகு இருவரும் ‘எஸ்’ என்று வெற்றிக்குறி காட்டினார்கள். ஓர் இரவு முழுவதும் தூங்காமல் இருந்திருக்கிறார்கள். பகலிலும் தூங்கக் கூடாது. பாவம்தான். 

**

’வேக்கப் சாங்’கிற்கு பிக்பாஸ் இன்றைக்கு தேர்வு செய்திருந்த பாடல் ‘போடா போடி’ படத்திலிருந்து ‘ஐயாம் எ குத்து டான்ஸர்’. சுஜாவும் கணேசும் தொடக்கத்திலிருந்து ஆடினார்கள். சிநேகன் அவர்களைவிடவும் உற்சாகமாக ஆடினார். சோர்வாக இருந்த பிந்து லைட்டாக சில ஸ்டெப்களை போட்டார். ஒரிஜினல் பாடலை 1/50 என்ற அளவில் ஸ்லோ மோசனில் பார்த்தால் கூட, ஆரவும் ஹரீஷூம் ஆடியதைவிட சிம்பு வேகமாக ஆடுவார். டப்பாங்குத்து குத்தி எடுக்கும் ஒரு பாடலுக்கு இதைவிட பெரிய துரோகத்தை செய்துவிட முடியாது. 

bigg boss tamil


**

இந்த வார டாஸ்க்கே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது அதற்குள் அடுத்தவார டாஸ்க் எப்படி வாட்டப்போகிறதோ என்ற கவலைப்பட்டுக்கொண்டார் சிநேகன். அதுசரி அவரிடம் இப்போது கோல்டன் டிக்கெட் இருக்கிறது. இறுதிநாளில் கமல் என்ன கலர் கோட் போட்டுவருவார் என்றுகூட கவலைப்படுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அடுத்தவாரம் இவ்வளவு கடினமான டாஸ்க்காக இல்லாமல் போகும்போது கொஞ்சம் ரிலாக்ஸாக போவது மாதிரியான டாஸ்க்குகளைக் கொடுக்கும்படி வேண்டுகோள் வைத்தார். என்னதான் ஈசியான டாஸ்க் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாலும் மனதளவில் இப்போது சிநேகனிடம் புதுத்தெம்பு வந்திருக்கிறது. இனி மெண்டல் டாஸ்க்குகளால் அவரை வீழ்த்துவதென்பது மிகக் கடினம். 

இந்தவாரம் முழுக்கவே டெலிஃபோன் டாஸ்க் தான் இருக்கும் என்று தன் எண்ணத்தைக் கூறினார் ஹரீஷ். ஆமாம் ஒவ்வொருவரையும் கன்ஃபஷன் ரூமுக்கு கூப்பிட்டு டாஸ்க் சொல்றதைவிட ஈசியா போன்கால்ல முடிச்சுட்டா பிக்பாஸூக்கும் வேலை சுலபமா போயிடும் பாருங்க என்பது அவரின் வாதம். But பிக்பாஸ் had other ideas. 

**

லிவிங் ரூமில் எல்லோரும் கூடியிருக்க ஆரவ் அடுத்த டாஸ்க் பற்றிய அறிவிப்பை அனைவருக்கும் வாசித்துக்காட்டினார். இதன் டாஸ்க்கின் பெயர் லூடோ. ‘தாயம்’ விளையாடணுமாம்.  டி.வி. கண்டுபிடிப்பதற்கு முன்னால் பொழுதைப்போக்க நம்மூரில் இதைத்தானே விளையாண்டுகொண்டு திரிந்தோம். சுஜா, ஹரீஷ் இருவரின் தலைமையில் இரண்டு அணிகளாக பிரிந்தார்கள் ஹவுஸ் மேட்ஸ். பிந்துவும் சிநேகனும் ஹரீஷின் அணி. ஆரவ்வும் கணேஷூம் சுஜாவின் அணி. 

ludo bigg boss tamil

 

சுஜாவும், ஹரீஷூம் மெகா சைஸ் பகடையை உருட்டவேண்டும். ஆறு அல்லது தாயம் விழுந்தால் ஸ்டார்ட் கட்டத்தில் களமிறங்கும் அணியினர், அடுத்தடுத்து விழும் எண்களின் படி நகர்ந்து தாயக்கட்டத்தில் ஒரு முழுச்சுற்றை முடித்து மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வரவேண்டும். பகடையை உருட்டுபவர் தவிர மற்ற இருவரும் ஒரு சுற்றை முடித்தால் அந்த அணி வெற்றிபெறும். நடுநடுவே கட்டங்களில் +2, -4 என சில எண்கள் இருக்கும். அதில் வந்து நின்றால் அதற்கேற்றபடி பாயிண்ட் கூடவோ குறையவோ செய்யும், ‘இரண்டு ஆட்டங்கள் நகரக்கூடாது’ என்பதுபோல விதிகள் எழுதப்பட்ட கட்டங்களுக்கு வந்தால் அதில் கூறப்பட்டிருப்பதன்படி நடந்துகொள்ளவேண்டும். ஏற்கெனவே எதிரணியினர் நின்றுகொண்டிருக்கும் கட்டத்திற்கு நகர நேர்ந்தால் யார் இரண்டாவதாக வருகிறாரோ அவர் வெட்டுப்பட்டதாக அர்த்தம் அவர் மீண்டும் ‘ஸ்டார்ட்’ கட்டத்திலிருந்து தொடங்கவேண்டும்.

ஆட்டம் தொடங்குவதற்குமுன்  பிந்து மாதவி தனக்குத் தெரிந்த தமிழில் சிநேகனுக்கு விதிகளை மீண்டும் ஒருமுறை விளக்கினார். கிராமப் பின்னணியில் வந்தவருக்கு தாயம் விளையாட்டு புதிதாக இருந்திருக்குமா என்ன? ஆட்டம் தொடங்க, சுஜா முதலில் ' சாய்ராம் கி ஜெய்' என பிதாமகன் பட லைலா போல் அந்த பெரிய சைஸ் பகடையை தூக்கமுடியாமல் தூக்கி உருட்டினார். 3 விழுந்தது. அடுத்ததாக உருட்டிய ஹரீஷூக்கு 6 விழுந்ததால் பிந்து ஸ்டார்ட் கட்டத்திற்கு வந்து நின்றார். பின்னர் சுஜாவிற்கும் தாயம் விழ கணேஷ் களமிறங்கினார். தொடர்ந்து ஆரவ்வும் சிநேகனும் உள்ளே இறக்கப்பட்டார்கள். ஏற்கெனவே பிக்பாஸின் பகடைக்காய்களாக நில் என்றால் நிற்கும், உட்கார் என்றால் உட்காரும் போட்டியாளர்கள் இப்போது நிஜமாகவே பகடைக்காய்களாகி நின்றார்கள். சுஜா, ஹரீஷின் உருட்டுகளுக்கு ஏற்ப நகர்ந்துகொண்டிருந்தார்கள். ஒரே அணியைச் சேர்ந்த இருவரில் யார் நகர்ந்தால் சேஃப் என்பதை கணக்கிட்டு இரு அணியினரும் மிகக் கவனமாகவே விளையாண்டார்கள். ஒரே அணியில் இருக்கும் ஆரவும் , கணேஷும் அருகருகே இருக்கும் ஒரு கட்டத்திற்கு வரும் போது, ரூல்ஸ் பற்றி பேசிக்கொண்டனர். 'அதான் ரூல் புக்ல இருக்குல்ல, நான் படிச்சேன்ல'  என ஜூலி போல், ரூல்ஸ் தெரியாமல் தப்பாக செய்யும் நபர்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்தார் ஆரவ். ரூல் புக்கிற்கான வேலை சிறிது நேரத்தில் வந்தது.

சிநேகன், ஆரவ்


 கணேஷ் முதலில் ஒரு சுற்றை முடித்தார். இதுவே ஹரீஷிற்கு முதல் ஏமாற்றமாக இருந்தது. இதைத்தான் முதல்ல ரெட்டு போடுறது முக்கியம் இல்ல பாஸ், ஃபாலோவும் போடணும் என வசூல்ராஜாவில் ஆண்டவர் சொல்லி இருப்பார். சுஜா தன் முழு பலத்துடன், பகடையை உருட்ட, அது உருண்டோடி தாயம் போட்டது. இப்போது சிநேகன் நின்ற கட்டத்திற்கே ஆரவ் வர நேர்ந்தது. இப்போது இருவரில் யார் வெட்டப்பட்டது என்ற குழப்பம் வந்தது. முதலில் நின்றவர்தான் ஸ்டார்ட் கட்டத்திற்கு என்று ஆரவ் சொல்ல.. அது எப்படி நீங்கதான் போகணும் என்று சிநேகன் சொல்ல எதற்கு குழப்பம் என்று ரூல்புக்கை எடுத்து வந்து வாசித்துக்காட்டினார் ஹரிஷ்.  முதலில் நின்றவர்தான் வெட்டப்பட்டவர்  என்று ஹரிஷ்   வாசித்துக்காட்ட சிநேகன் மீண்டும் ஸ்டார்ட் கட்டத்திற்கு வந்தார். கணேஷ் சிநேகனுக்கு ஆறுதல் சொல்லி தான் ஒரு ஜெண்டில்மேன் என்பதை 17,433 வது முறையாக நிரூபித்தார். ஆரம்பம் முதலே ஹரிஷ் அணி லீடிங்கில் இருந்தது. ஆனால், இறுதி சில உருட்டல்களில் சுஜா அணி லீடிங் அடித்தது. கொஞ்ச நேரத்திலேயே ஆரவ்வும் தனது சுற்றை முடிக்க தாயம் போட்டு ஆட்டத்தை முடித்துவைத்தார் சுஜா. சுஜாவின் அணி வெற்றிபெற்றது. ஹரீஷ் விரக்தியின் உச்சிக்கே சென்றிருந்தார். ஹரீஷின் இந்த விரக்தியை இப்படி புரிந்துகொள்ள முடிகிறது. உடல் வலிமையையோ மன வலிமையையோ சோதிக்கும் போட்டியாக இருந்து அதில் தோற்றிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இது முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை வைத்து நடக்கும் போட்டி. அதிர்ஷ்டம் தன் பக்கம் இல்லையே என்கிற விரக்தியாகவும் இது இருக்கலாம்.  சரி விடுங்க பாஸூ... தாயத்துல தருமன் பாஞ்சாலியையே விட்ருக்கான்… நமக்கு வெறும் பாயின்ட்ஸ்தானே..! 

ஹரீஷை சமாதானப்படுத்துவதற்காக நாம எப்படி விளையாண்டா என்ன முடிவு மக்கள் கைல தானே இருக்கு என்றார் சுஜா. (சுஜாதானா?) அது எப்படி முடிவு மக்கள் கையில் இருக்கும்? எவிக்சன் வேண்டுமானால் மக்களின் கையில் இருக்கலாம். ஆனால் ஃபைனல்ஸ்க்கு செல்ல பாயின்ட்ஸ்தானே முக்கியம். அதில் மக்களின் தேவை எதுவும் இல்லையே!

**

போட்டியெல்லாம் முடிந்தபிறகுதான் ஹரீஷ் தன் தவறை உணர்ந்திருக்கிறார். ரூல் புக்கில் தான் படித்ததை தவறாக புரிந்துகொண்டார். ஒரே கட்டத்திற்கு இருவர் வரும்போது இரண்டாவதாக வருபவர்தான் வெட்டப்பட்டவர். ஆனால் அதை தவறாக புரிந்து தன் டீம் மேட்டான சிநேகனை ஸ்டார்ட் கட்டத்திற்கு வரவைத்துவிட்டதற்கு மன்னிப்பு கேட்க பிந்துவும் சிநேகனும் பரவாயில்லை என்று ஸ்போர்ட்டிவாக ஏற்றுக்கொண்டார்கள். சுஜா டீம் வெற்றிபெற்றதாக பிக்பாஸ் அறிவித்தார். அவர்களுக்கு 39 மதிப்பெண்கள் கிடைத்திருந்தது. அதை மூவரும் எப்படி வேண்டுமானாலும் பிரித்துக்கொள்ளலாம். 39 ஐ மூன்றால் வகுத்தால் 13 ஆளுக்கு பதிமூன்று எடுத்துக்கலாம் என்று கணேஷ், ஆரவ்வின் காதில் மெல்லமாக சொன்னார். (அதுல என்னயா ரகசியம்?). அதேபோல் ஹரீஷ் அணிக்கு 12 மதிப்பெண்கள் கிடைத்தது. ஆளுக்கு 4 மதிப்பெண்கள் எடுத்துக்கொண்டார்கள். 'ஒவ்வொரு வாட்டியும் நாம கத்துக்கறதுக்கு, ஏதாவது முட்டாள்தனம் பண்ணனும்ல!' என ஹரிஷ் ஒரு வாழ்க்கைத் தத்துவத்தை சொல்லிவிட்டு நகர்ந்தார்.

சிநேகனின் பாய் டாஸ்க் முடிந்ததாக அறிவித்தார்கள். “ப்ரோ இதுக்கு மேல டாஸ்க் பண்ணாதீங்க போதும். நீங்க இந்த வாரம் எவிக்சன்லகூட இல்லை.  மக்கள் தேவையும் கிடையாது. ஏன் கஷ்டப்படணும்?” என்று ஹரீஷ் அக்கறையாக சிநேகனிடம் வேண்டுகோள் வைத்தார். வாஸ்தவம்தான். 

*****

Biggest Finale Task ஐ அறிவித்தார்கள். டாஸ்க்கின் பெயர் ‘தேவதைகள் மற்றும் பேய்கள்’ (Angels and Devils என்று கூகுளில் பார்த்ததை  அப்படியே மொழிபெயர்த்திருப்பார்கள் போல). தெலுங்கு டப்பிங் படத் தலைப்புகளில் இருந்து, ஆங்கில டப்பிங் படங்களுக்கு பிக்பாஸ் தாவி விட்டார் போல. 'பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு பேய் டாஸ்க்கா?' என யோசிக்கும்போதே  டரியலானது. ரெட் பெட்ரூமில் ஒரு லாக்கர் இருக்கும். அதற்கான சாவி லிவிங் ரூமில் இருக்கும். பேய் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அந்த சாவியை எடுத்து அந்த லாக்கரை திறக்கவேண்டும். தேவதை கதாபாத்திரமிட்டவர்கள் இது நிகழாமல் லாக்கரை பாதுகாக்கவேண்டும். தேவதையாக இருப்பவர்கள் சமைக்கத்தேவையில்லை. பிக்பாஸே அவர்களுக்கு உணவு கொடுத்துவிடுவார். பொறுமையாக இருக்கவேண்டும். மாறாக பேயாக இருப்பவர்கள் தேவதைகளை தொந்தரவு செய்யவேண்டும். அவர்கள் சுத்தப்படுத்துவதை பாழ்படுத்தவேண்டும். தங்களுக்கான உணவுகளைத் தாங்களே சமைத்து சாப்பிட்டுக்கொள்ளவேண்டும். இதுதான் விதிமுறை. கூடவே காயப்படுத்தாமல் விளையாடுங்கள் என்று Disclaimer ஐயும் சேர்த்துக்கொண்டார். (யப்பா ராசா சொன்னியே..!)  சுஜாவும் கணேஷூம் தாங்கள் தேவதையாக இருக்கிறோம் என்று கேட்டுக்கொள்ள ‘நான் வேணா தேவதைக்கு வரட்டுமா?’ என்று சிநேகனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அரை கிலோ தாடி, முக்கா கிலோ முடியோட ஒரு தேவதையா...? கண் கொண்டு பாக்க முடியலை கோப்பால்.... கண் கொண்டு பார்க்க முடியலை!  ஹரீஷ், ஆரவ், பிந்து மூவரும் பேய்கள். சுஜா,கணேஷ், சிநேகன் மூவரும் தேவதைகள். தங்களுக்கான ஆடைகளை அணிந்து தயார் நிலையில் இருக்க, பஸ்ஸர் ஒலித்ததுமே சாவியை எடுத்துவிட்டார் பிந்து.

சிநேகன், கணேஷ்

 

இந்த டாஸ்க் தொடங்கியதிலிருந்து கணேஷூக்கு இரண்டே டயலாக்தான். “வா உனக்கு மோட்சம் தாரேன்”, “வா உன்னைய சொர்க்கத்துக்கு கூட்டிட்டுபோறேன்”! 'சந்தைக்குப் போகணும்... ஆத்தா வையும்' கணக்காக இதையேதான் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். பேய்தானே தேவதையை டார்ச்சர் செய்யும். ஆனால், இங்கு உல்டாவாக ‘தேவதை’ கணேஷ்  ‘பேய்’ ஆரவ்வை டார்ச்சர் செய்துகொண்டிருந்தார். ‘டேய் நான் Devil டா?’ என்று ஆரவ் கெஞ்சுவதில் ‘அம்மா சத்தியமா நான் ரவுடிடா’ என்ற மாடுலேசனைப் பார்க்க முடிந்தது. ' நீ ஷேவ் பண்ணினதும் பாதி ஏஞ்சலாவே மாறிட்ட' என கணேஷ் போகிற போக்கில் ஆரவை கலாய்த்தார். 

சாவியை எங்கே மறைத்துவைக்கலாம் என்ற பேச்சு வந்தபோது கன்ஃபஷன் ரூமுக்குள் சென்றுவந்தார் ஹரீஷ். ‘சாவியை எங்கும் ஒளித்துவைக்கக்கூடாது... லாக்கரை திறப்பதுதான் முதன்மையான பணி’ என்ற இரு விஷயங்களை பிக்பாஸ் அறிவுறுத்தியதாகச் சொன்னார். லாக்கரை எப்படி திறக்கலாம் என்று  ஆலோசனைக்கூட்டம் நடத்திக்கொண்டிருக்க, சிநேகன் அங்கு பேயோட்ட வந்தார். அவரின் தேவதை அங்கியைப் பிடித்துக் கொண்ட ஆரவ், லகலகலக ஸ்டைலில் கிழிகிழிகிழி என்று விளையாடிக் கொண்டிருந்தார். கொடுமை..!
எப்படியும் இரவில் திறக்க முடியாது. சத்தம் கேட்கும். அதிகாலைதான் சரியான டைம். அதுவரை இரவு முழுக்க வேறு வேறு விதங்களில் டார்ச்சர் கொடுத்து டயர்டாக்குவோம் என்று முடிவெடுத்தார்கள். 

சுஜா, ஆரவ்

 

**

அதுவரை சமர்த்தாக சுற்றிக்கொண்டிருந்த சுஜா, தன்னை தேவதையாகவே நினைத்துக் கொண்டார் போலும். செயல்பாடுங்களில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது. ஆரவ்விடம் போய் ஒட்டிக்கொள்ள அவர் ஆஊ என்று விநோத ஒலி எழுப்பி விரட்டினார். முந்தைய எபிசோடுகளில் சுஜா இருட்டுக்கே பீதியானதை பார்த்து இருக்கிறோம். ஆரவ் விரட்டிய விதத்திற்கு, உண்மையாகவே சுஜா பயந்து தான் போயிருந்தார். கிச்சனில் இருக்கும் சில பொருட்களை பேயான பிந்து தள்ளிவிட்டுக்கொண்டு இருந்தார். பிறகு, டைம்டேபிளில் இருக்கும் ஸ்பூனை கீழே போட்டார். (மெல்ல மெல்ல ஸ்பூனுக்கு வலிக்கப்போவுது). அப்பாவி பேயாக சுற்றிக்கொண்டு இருந்தார் பிந்து.
 பிறகு பிந்துவைக் கட்டிக்கொண்டு முத்த மழை பொழிந்தார் சுஜா. இந்தா, ‘இத மூஞ்சில அடிச்சு விட்ரு’ என்று பிந்துவுக்கு உதவினார் ஆரவ். (இந்த வசனத்தை எங்கேயோ கேட்டமாதிரி இல்ல??).  ஒருபக்கம் கணேஷ் ஆரவ், ஹரிஷை துரத்திக் கொண்டு இருந்தார். இன்னொரு பக்கம் சுஜா, புஜுக் புஜுக் என ஹரிஷின் கன்னத்தை கிள்ளிக்கொண்டு இருந்தார். தேவதைகள் இப்படி பேய்களை டார்ச்சர் செய்வது தான் டாஸ்க்கா பிக்பாஸ்.

அடுத்த சீனில் சுஜாவின் இம்சைகள் இன்னும் அதிகமாக, தலையணையால் ஆரவ் அவர் தலையில் ரெண்டு போடு போட்டார். சுஜாவை ஓட்ட வேண்டும் என்று எத்தனை நாள் காத்திருந்தாரோ இன்று தன் எல்லா கோபங்களையும் தீர்த்துக்கொண்டார். “உமக்கு வார்த்தைகள் சரியாக வருவதில்லை” என்று சுஜா செந்தமிழில் செப்ப… 'எங்கிட்டயே கெட்ட வார்த்தையா!' என்று சீறினார். இதுல என்ன கெட்ட வார்த்தை இருந்தது தெரியல! ‘இப்படியெல்லாம் பண்ணக்கூடாது தம்பி’  என்று சுஜா சொன்னதும் சீற்றம் இன்னும் அதிகமாகி ‘எது தம்பியா?’ என்று பாய்ந்தார். (ஒருவேளை இதான் அந்த கெட்ட வார்த்தையோ?)

பேய் டீம் சமைத்துசாப்பிட, தேவதைகள் டீமிற்கு ஸ்பெஷலாக பீட்ஸா அனுப்பினார்கள். கணேஷ் கொஞ்சம் பீட்ஸாவை ஆரவ்விற்கு ஊட்டிவிட்டு, 'என் கூட சொர்க்கத்துக்கு வந்துடுறியா?' என்றார். அவனவன் சொர்க்கத்துக்கு போறதுக்காக உயிரையே விடுறான். இம்புட்டுக்கானு பீட்ஸா கொடுத்துட்டு சொர்க்கத்துக்கு கூப்பிடுறாப்ல.

**

ஹரீஷ் கன்ஃபஷன் ரூமுக்கு போனபோது, 'புரோமோல போடுறதுக்காவது ஏதாவது கன்டன்ட் கொடுங்கையா' என்று கேட்டிருப்பார்கள் போல... 9 மணிக்கு மேல் தங்கள் விளையாட்டை ஆரம்பித்தார்கள் பேய்கள். சிநேகனும் கணேஷும் லாக்கர் இருக்கும் ரெட் பெட்ரூமுக்கு காவலாக இருக்க, சுஜா பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தார் அதில் மசால் பொடியைக் கொட்டி முதல் ஓவர் வீசினார் ஆரவ். அடுத்த ஓவர் பிந்து… காபி கப் தவிர எல்லா இடங்களிலும் பாலை சிந்தினார். அதற்குபின் வந்ததெல்லாம் ஓவர்.. ஓவர்… ஓவரோ ஓவர்.

பிந்துமாதவி, ஆரவ்

 

தேவதைகளுக்கு நான் வெஜ் பீட்ஸா கேக்குதா என்று கீழே கிடந்த பீட்ஸா பாக்ஸை எட்டி உதைத்தார் ஆரவ். தக்காளிகளையெல்லாம் வாட்டர் பாட்டிலால் நசுக்கினார் பிந்து. கொஞ்ச நேரத்தில் கிச்சனை தெறிக்கவிட்டார்கள்.   புத்தருக்கு கசின் சிஸ்டர் அவதாரம் எடுத்த சுஜா பொறுமையாக சிதறிக்கிடந்த பொருட்களை அள்ளிக் குப்பைத்தொட்டியில் போட குப்பைத்தொட்டியை சிதறவிட்டார் ஆரவ். சினேகன் சிலையாக நிற்க, கணேஷ் அநியாயத்திற்கு கூலாக இருந்தார். 

ஆரவ் வேண்டுமென்றே பிந்துவின்மீது மோதி காஃபியைகீழே கொட்டிவிட்டு, 'ஸாரி வேணும்னே பண்ணலை' என்று சொல்ல கோபமேறிய பிந்து, 'எனக்கும் இதெல்லாம் பண்ணத் தெரியும்' என்று தன் கையில் இருந்த காஃபியை கிச்சன் முழுவதும் கொட்டினார். 'உங்களுக்கு மட்டும்தான் கொட்டத்தெரியுமா... எனக்கும் தெரியும்!' என்று ஆரவ் குப்பைத் தொட்டியை கீழே கவிழ்க்க… பிந்துவும் குப்பைத் தொட்டியை எடுக்க நகர்ந்தார். அப்போது அவர் கொட்டிய காஃபியிலேயே வழுக்கி விழப்போனார் (கர்மா இஸ் எ பூமராங்). பின், 'உங்களுக்கு மட்டும்தான் குப்பை கொட்டத் தெரியுமா? எனக்கும் தெரியும்' என்று தன் பங்குக்கு அந்த இடத்தை பாழாக்கினார். 

ஹரிஷ், பிந்து மாதவி

 

கட் பண்ணினால் வெளியில் வந்து ஆரவும், பிந்துவும் சிரித்துக்கொண்டார்கள். அட பேய்களா..! 'விளையாட்டுக்குத்தான் பண்னேன்... நீங்க சீரியஸா எடுத்துக்கலைல' என்று கேட்டுக்கொண்டார்கள். 'கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ? போவோம் என்ன பண்ணிடுவானுங்க' மோடில் இருந்தனர் இருவரும். சுஜா மீண்டும் பொறுமையாக எல்லாவற்றையும் சுத்தம் செய்தார். அதற்குள் ஆரவ்வும் ஹரீஷும் அடுத்த அட்டாக்கை ஆரம்பித்தார்கள். சமையலுக்கு வைத்திருந்த கோதுமை மாவையெல்லாம் எடுத்து கீழே கொட்டினார்கள். எண்ணெய், உப்பு எல்லா சமையல் பொருட்களும் கொட்டப்பட்டது. ஒரிஜினல் பேய் கூட இவ்வளவு அலப்பறை பண்ணுமானு தெரியல. என்னதான் டாஸ்க்காக இருந்தாலும் இவ்வளவு உணவுப் பொருட்களை வீணடிப்பது நியாயமா? இந்த போட்டியில் ஜெயித்த அணி இல்லாமல் சிறப்பாக செயல்பட்ட ஒரு அணியை பிக்பாஸே தேர்வுசெய்து அவர்களுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள் தருவதாகச் சொல்லியிருந்தார்கள். இப்படி உணவுப் பொருட்களை வீணடித்ததற்காகவே ஆரவ், ஹரீஷ், பிந்து டீமுக்கு அதை தராமல் இருக்கலாம் பிக்பாஸ்.

இதற்குள் பீன் பேக்கை எடுத்துவந்து கிழித்து  அதிலிருந்த முத்துகளையெல்லாம் கீழே கொட்டினார் பிந்து. பாட்ஷா படத்தில் ஆட்டோவைக் கிழிக்கும் போது ரஜினி ஒரு ரியாக்க்ஷன் கொடுப்பாரே… அப்படி பொறுமையாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் சிநேகன். 'தேவதைகள் பொறுமையாக இருக்கவேண்டும்' என்ற பிக்பாஸின் விதியை பிடித்துக்கொண்டுதான் இவ்வளவு பொறுமையை கடைபிடிக்கிறாரா சிநேகன்? அல்லது இரண்டு பகல் ஓரிரவு தூங்காமல் இருந்த சோர்வினால் அமைதியாக இருந்தாரா? ஒருவேளை ஹரீஷ் சொன்னது போல, 'இனி பாயின்ட் வந்தால் என்ன... வரவில்லையென்றால் என்ன..!' என்ற மனநிலைக்கு வந்துவிட்டாரோ?

லாக்கர், பிக் பாஸ்

 

**

பேய்கள் டீம் வெளியில் இருந்தபோது தேவதைகள் டீம் கதவை அடைத்துக்கொள்ள, மூவரும் சேர்ந்து அதை திறக்கமுயன்றார்கள்.. கதவு திறந்த அடுத்த நொடி கணேஷூம் சிநேகனும் வேகமாக ஓடி ரெட் பெட்ரூமிற்குள் நுழைய விடாமல் தடுத்துவிட்டதால் இம்முறை லாக்கர் திறக்கும் முயற்சியை மேற்கொள்ள முடியவில்லை பேய்கள் டீம். தங்களது அறைக்குள் அமர்ந்து எப்படி ஜெயிக்கலாம் என்பது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டார்கள்.  


“அணிகள் இரண்டானாலும் நோக்கம் ஒன்றுதான் (இதுவேற எங்கயோ கனெக்ட் ஆகுதே)… சாவி யாருடைய கனவைத் திறக்கப்போகிறது நாளை பார்க்கலாம்” என்று முடித்தார்கள். ஆக இந்த வாரம் முழுக்க இந்த பேய் டாஸ்க்கை வைத்துதான் ஓட்டுவார்கள் போல.

டீக்கடைக்கு பெயின்ட் அடிச்சு என்ன பிரயோஜனம் டீத்தூள மாத்தணுமே என வடிவேலு சொல்வது போலத்தான் இருக்கிறது பிக் பாஸின் டாஸ்க்குகள். என்னதான் புது டீம், எவிக்ட் ஆனவர்களை உள்ளே கொண்டு வருவது, பட ப்ரொமோஷன்கள் நடத்துவது என ஆட்கள் வந்தாலும், டாஸ்க்குகள் எல்லாம்.... 'ஸ்ப்பா முடியல... படுத்தாதீங்கடா!' ரேஞ்சில்தான் இருக்கிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், துணி துவைப்பவர்கள்  இப்படி பல டாஸ்க். அதிலும் இது போன்ற டாஸ்க்குகள் ஒரு நாளில் முடிவடைவதும் இல்லை. என்னமோ, சிறப்பான படையல் அளித்துவிட்டது போல், இந்த அதிஅற்புத டாஸ்க்குகளை மட்டும் இரண்டு, மூன்று நாட்கள் நடத்துகிறார்கள். ஏன் பிக்பாஸ் நெசமாலுமே, இப்படி டாஸ்க் யோசிக்குற அந்த 11 பேர் கொண்ட குழு யாரு?  இன்னும் பத்து நாளில் கிராண்ட ஃபைனல் என்னும் 100வது நாள் வர இருக்கிறது. அதுபற்றிய எந்தவொரு உற்சாகமோ, பதற்றமோ இல்லாமல், பிக்பாஸ் இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. நாற்பதாவது நாள் கொடுக்க வேண்டிய டாஸ்க் போல் இருந்தது இந்த தேவதைகளும், பேய்களும். கிளைமேக்ஸ் நெருங்கும் போதும் கூட இப்படி ஃபர்ஸ்ட் கியரில் தான் வண்டி ஓட்டுவேன் என பிக்பாஸ் முடிவெடுத்தால், அடுத்த சீசன் எல்லாம் ஒரிஜினல் ஆண்டவர் வந்தால் கூட கல்லா கட்ட முடியாது பாஸ். அப்புறம் உங்க இஷ்டம். 

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/102879-eat-pizza-for-a-place-in-heaven-biggboss-its-time-happenings-of-bigg-boss-day-87.html

Link to comment
Share on other sites

சாந்தம்னா சந்தோஷம்... சங்கடம்னா பெண்ணியம்... சுஜா பாலிஸி! 88-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

bigg boss tamil

ரெட் பெட்ரூமில், தேவதைகளான சிநேகன், கணேஷ், சுஜா பாதுகாத்துவரும் லாக்கரை, பேய்களான ஆரவ், ஹரீஷ், பிந்து அணியினர் தங்களிடம் உள்ள சாவியால் திறக்க வேண்டும் என்கிற ‘தேவதைகள் மற்றும் பேய்கள்’ டாஸ்க் தொடர்கிறது. நள்ளிரவு 2:30 மணிக்கு எழுந்து ஆரவ் இப்போது லாக்கரைத் திறப்பதற்கான சூழல் இருக்கிறதா என்று சுற்றி சுற்றி வந்தார். ஆனால் தேவதைகள் அணியினர் பெட்டை கொஞ்சம் இழுத்துப்போட்டு லாக்கரை மறைத்தாற்போல் படுத்திருந்ததால் கொஞ்சம் கஷ்டம் என்பது அவருக்கு புரிந்தது. ஆனால், இப்படி டாஸ்க் என்னும் பெயரில் அங்கேயே பாயப்போட்டு படுத்துக்கொள்வதெல்லா, மிகவும் மோசம். நேற்று ஆரவ் சொன்னது போல், கணேஷ், சிநேகன் என இரு டாஸ்க் வெறியர்களுடன் போட்டி போட்டதற்காகவே, பேய்கள் அணியினருக்கு பாயின்ட் கொடுத்து விடலாம் என்று தான் தோன்றியது.

பிக் பாஸ் தமிழ்

**

விடிந்திருந்தது. டாஸ்க்கின் காரணமாக வேக்கப் சாங்கிற்கு முன்பே எல்லாரும் எழுந்திருந்தார்கள். ஆரவும் ஹரீஷூம் சுஜாவின் கைகளை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் இழுத்துவிளையாடிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் நின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிநேகனுக்கும் கணேஷூக்கும் பொறாமையாக இருந்தது போல. கணேஷ் தன் வாயாலேயே அதைச் சொன்னார். ‘இப்படியெல்லாம் பண்ணா தேவதைகளுக்கு ஜெலஸ்ஸா இருக்கும்’ என்றார். சார் உங்க ஒயிஃப் பாத்திட்டு இருப்பாங்க… ஜாக்கிரதை. கோலம் போடவிடுங்கடா என்று சிணுங்கினார் சுஜா. கோலம் போட்டு லவ் யூ எழுதிட்டு வர்றேன் என்று அவர் குழந்தைத்தனமாக சொன்னது கவிதையாக இருந்தது. சுஜா வழக்கம்போல் சிணுங்கிக்கொண்டே ஏதோ சொல்ல ஆரவ், சுஜாவை எட்டி உதைத்தார். அன்பாகத்தான் செய்தார் அவ்வளவு ஃபோர்ஸாக இல்லையென்றாலும் இதெல்லாம் நல்ல பழக்கமாக தெரியவில்லை.இதற்கு முன்னரும் இப்படித்தான் ஓவியாவை செல்லமாக உதைக்கிறேன் என உதைத்து, ஓவியா ஆர்மியின் வசவுகளை வாங்கிக் கொண்டார் ஆரவ். சுஜாவிற்கு ஆர்மி இல்லை என்கிற வரை சந்தோஷம்.(இல்ல ஆரம்பிச்சுட்டாங்களா?) ‘நீ நாட்டி பாய் இல்ல நாட்டி பேய்’ என்று கலாய்த்தார் கணேஷ்.

பிக் பாஸ் தமிழ்

 

8 மணி வெள்ளைச்சாமி என்ற பெயர் பிக் பாஸூக்குத்தான் பொருத்தமாக இருக்கும். ஆட்டோமேட்டிக் டைமர் எதுவும் செட் பண்ணி வைத்திருக்கிறார்களோ என்னவோ தினமும் சரியாக 8 மணிக்கு வேக்கப் சாங்கை ஒலிக்க விடுகிறார் பிக்பாஸ். இன்றைக்கு ‘நாடோடிகள்’ படத்திலிருந்து ‘ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா’. டைனிங் டேபிளுக்கு அருகில் தேவதைகள் மூவரும் ஆடிக்கொண்டிருக்க…  தனது பேய் அங்கியை லுங்கியைப் போல் தூக்கிப் பிடித்துக்கொண்ட ஆரவ், அரை டவுசர் தெரிய ‘நாடோடிகள்’ பாட்டிற்கு ‘ஆடுகளம்’ மூவ்மெண்டுகளைப் போட்டுக்கொண்டிருந்தார். இன்றைக்கு வெளுத்துவாங்கியது சுஜாவும் கணேஷூம். அருமையாக ஆடினார்கள். பாடல் முடிந்ததும் கடைசியாக ஆரவ் கொடுத்த போஸ்… ஏன்யா காலங்காத்தால..

பிக் பாஸ் தமிழ்

 

**

எப்படி லாக்கரைத் திறக்கலாம் என்று பேய் டீம் வழக்கம்போல் டிஸ்கஸனைத் தொடங்கியிருக்கிறார்கள்.  இவர்களும் வளைச்சு வளைச்சு மீட்டிங் போட்டு பேசுகிறார்களே தவிர.. லாக்கரை திறப்பதற்கு ஒரு முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. இஸ்ரோவில் புது புராஜக்ட் தொடங்குவதற்குக் கூட இத்தனை மீட்டிங் போட்டிருக்க மாட்டார்கள். சட்டுபுட்டுனு லாக்கரை திறந்து டாஸ்க்கை முடிச்சுட்டு அடுத்த டாஸ்க்குக்கு வாங்கடா என்றுதான் சொல்லத்தோன்றியது. இதற்கிடையில் தேவதைகளுக்கான சாப்பாடு வந்திருந்தது. ஸ்டோர் ரூமில் சென்று சுஜா எடுக்க உள்ளே புகுந்த ஹரீஷ் சுஜாவிடம் இருந்து உணவைப் பிடுங்க ஏதேதோ ட்ரை பண்ண, அதற்குள் சிநேகன் அங்குவந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். ஆரவ் சுஜாவை வெறுப்பேற்ற காலை அமுக்கி விடச்சொன்னார். பேய் என்றால் எல்லா தேவதைகளையும்தானே இரிடேட் செய்ய வேண்டும். அதென்ன சுஜாவை மட்டும்? ஷாப்ட் கார்னர் என்பதலா? 

அடுத்த சீனில் ஆக்சனில் இறங்கியிருந்தார்கள் ஆரவ், ஹரீஷ், பிந்து மூவரும். கணேஷிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே லாக்கர் இருக்கும் ரூமுக்குள் நுழைய முயன்றார்கள். சடாரென்று சுதாரித்த சினேகன், சுஜா, கணேஷ் மூவரும் எதிரணியினரை உள்ளே நுழையவிடாமல் தடுத்துப் பிடித்தனர். ம்ஹூம் எவ்வளவு முயன்றும் அவர்களின் கிடுக்குப்பிடியில் இருந்து நழுவ முடியவில்லை. ஒருகட்டத்தில் ஹரீஷூம் கணேஷூம் கண்ணாடிக் கதவுகளின் மீது மோதப் போக, காயப்படுத்தாதவாறு விளையாடுங்கள் என்று போட்டியின் தொடக்கத்திலேயே பிக்பாஸ் அறிவுறுத்தியிருந்ததால் இரு அணியினரும் ஒருவழியாக சமாதானத்திற்கு வந்தார்கள். ‘கேம்னா கேம் மாதிரி விளையாடணும். நாங்களும் விளையாட இடம் கொடுக்கணும். நீங்க இங்கேயே இருந்தா நாங்க எப்படி லாக்கரை திறக்குறது?’ என்று சீரியஸாக கம்ப்ளைண்ட் செய்துகொண்டிருந்தார் ஆரவ். என்ன மாதிரியான வாதம் இது.. ‘ஸ்டம்ப்பை மறைக்காம நில்லுயா அப்புறம் நான் எப்படி அவுட்டாக்குறது?’ என்று பேட்ஸ்மேனிடம் பௌலர் சொல்வது போல முட்டாள்தனமாக இருந்தது. 

பிக் பாஸ் தமிழ்

 

**

‘லூசு தேவதை’ என்று சுஜாவை ஓட்டிக்கொண்டிருந்தார் ஹரீஷ். சுஜா கீழே கிடந்த ஹரீஷீன் துணிகளைக் காலால் தள்ளிவிட ஹரீஷ் டென்சனானார். ‘காலால தள்ளுறீங்க. ஒழுங்கா இருந்த இடத்துல வைங்க’ என்று கோபமாக சொல்ல சுஜா மீண்டும் கால்களாலேயே நகர்த்த, பக்கத்திலிருந்த டேபிளை சடாரென்று தள்ளிவிட்டார். ஹரீஷ் இவ்வளவு கோவக்காரரா? ஆரவ்விடம் முறையிட்டார்… அவர் லைட்டாக கலாய்க்கிற டோனில் விசாரித்த பிறகுதான் மனிதர் கொஞ்சம் கூலானார். “என் வேலையை செய்ய விடுங்கயா… நானும் யாரையாவது இரிட்டேட் பண்ணனும்ல” என்று ஆரவ் கெஞ்சியது ஜாலியாக இருந்தது. படுதிராபையான இந்த பேய் டாஸ்க்கில் கொஞ்சமேனும் ரசிக்கும்படி இருந்தது ஆரவ்வின் மாடுலேசன்தான். “சாவடிக்குறாய்ங்களே இந்த ஏஞ்சல் பயலுக” என்று சிரிப்பு போலீஸ் மாதிரி இவர் சிரிப்பு பேயாக உலா வந்தார்.

பிறகு குடித்தவர்போல பேசி அலப்பறையைக் கொடுத்தார் ஆரவ். விஜயகாந்த் வாய்ஸில் பேச முயற்சி செய்தார் போல. அவர் ஸ்டைலில் தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க என்று சொல்லி அருகிலிருந்த சேரைத் தூக்க, அதற்கருகில் கால் வைத்திருந்த சுஜா தன் காலில் இடித்துவிட்டதாக கத்தினார். ஆரவ் வேண்டுமென்றே செய்யவில்லை என்று எல்லோரும் சமாதானம் சொன்னாலும், சுஜா கோபித்துக்கொண்டார். ஆமா நாந்தான் தெரியாம ஆக்ஸிடன்ட் பண்ணிக்கிட்டேன் என்று புலம்பினார். ‘ஒய் கிரியேட்டிங் சீன் சுஜா?’ என்று ஹரீஷ் கேட்டதற்கு, ‘யார் நான் சீன் கிரியேட் பண்றேனா நீங்க பண்றீங்களா?’ என்று கடுப்பானார். அவருக்குப் பரிந்து பேசி அமரச் சொன்ன கணேஷிடம் கூட ‘Wait Buddy வலி இருந்தா உட்காந்துக்கணுமா, கால் வலிச்சாலும் நின்னுக்கலாம் பரவால்ல’ என்று கடுப்பாக சொன்னதெல்லாம் செம சீன் (அய்யோ நான் சுஜாவை சொல்லலைங்க).

**

இந்த பாடாவதி டாஸ்க் பார்ட் டூவிற்கு சென்றது. பார்ட் ஒன்னில் தேவதைகளாக இருந்தவர்கள் இப்போது பேய்கள். பேய்களாக இருந்தவர்கள் இப்போது தேவதைகள். அதன்படி இப்போது ஹரீஷ், ஆரவ், பிந்து மூவரும் தேவதைகளுக்கான வெள்ளை அங்கியை அணிந்துகொண்டார்கள். சிநேகன், கணேஷ், சுஜா மூவரும் பேய்களுக்கான கருப்பு அங்கியை அணிந்துகொண்டார்கள். சாவி மீண்டும் சுவரில் தொங்கவிடப்பட்டது. 

.பிக் பாஸ் தமிழ்

புதிய தேவதைகள் மீண்டும் கும்பலாக மீட்டிங் போட்டு சாவியை எப்படி பாதுகாக்கலாம்? லாக்கரை எப்படி காப்பாற்றலாம் என்று திட்டம் வகுத்தார்கள். சுஜா இந்தநேரத்தில் உள்ளே வந்தார். கொஞ்ச நேரம் பெட்டில் அமர்ந்து விட்டு மீண்டும் இவர்களுக்கு அருகில் நடக்க, ‘நாங்கதான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்ல வெளிலபோங்க’ என்று ஆரவ் அதட்டினார். நான் பக்கத்துலயா உக்காந்திருக்கேன் நீங்க பாட்டுக்கு பேசுங்க என்று சுஜா அவர்களை வெறுப்பேற்றினார். மாத்திரை எடுக்கணும்னாங்கனு பரிதாபப்பட்டு உள்ளே விட்டா உள்ளேயே உட்காந்துக்கிட்டா எப்படிங்க என்று சிநேகனிடம் முறையிட்டார் ஆரவ். அதற்குள் டாஸ்க் தொடங்கிவிட்டதற்கான பஸ்ஸர் ஒலிக்க, சாவியை எடுக்க முயன்றபோது ஆணி உடைந்தது. பிந்து சாவியை கையில் வைத்திருந்தார். அதெல்லாம் கூடாது சாவியை சுவரில்தான் மாட்டி வைக்கவேண்டும் அதான் ரூல்ஸ் என்று சிநேகன் டீம் சொல்ல.. மொதல்ல நீங்க ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க பஸ்ஸர் அடிக்குறதுக்குள்ள நீ ஏன் உள்ள வந்த என்று சுஜாவை கேட்டார் ஆரவ். ‘நீ வா போ’னு பேசாதீங்க என்று ஆவேசமானார் சுஜா. 

அதை மட்டும் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ‘Women Need Respect’ என்பதையும் சேர்த்து சொன்னார். அன்பின் மிகுதியால் ஒருவரை ஒருமையில் அழைப்பது எப்படி மரியாதைக் குறைவாக இருக்கும்? ஆரவ் மட்டுமல்ல அங்கிருந்த யாருமே பெண்களுக்கு மரியாதை தராமல் இல்லை. இந்த டயலாக்கை சுஜா சொன்னது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே சிநேகனிடமும் இந்த வார்த்தைகளை சொல்லியிருக்கிறார். சுஜா மரியாதையை எதிர்பார்ப்பதில் ஒன்றும் தவறில்லை ஆனால் அதை எல்லா நேரத்திலும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு நேரம் சிரித்துப் பேசுகிறார், குறும்பு செய்கிறார், மடியில் அமர்கிறார், கன்னத்தை கிள்ளுகிறார். அப்போது லூசு, நீ வா போ என்றால் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் தன் மீது தவறு இருக்கும் நேரம் எதிராளி கோபப்பட்டால் உடனே  நீ வா போனு பேசாதீங்க என்று சொல்லி பிரச்னையை திசைதிருப்ப முயல்கிறார். 

ஹரிஷ்

 

ஆணியை சரிசெய்து சாவியை மீண்டும் மாட்ட, சில நொடிப் போராட்டத்தில் அதை எடுத்துவிட்டார் சிநேகன். ஆனால் சிநேகனை இந்த கருப்பு அங்கியில் பார்க்கும்போது ‘அந்நியன்’ விக்ரம் போலவே இருந்தார். இனி புதிய பேய்களின் ஆட்டம் தொடங்குகிறது.

தான் பேயாக இருந்தபோதும் சரி இப்போது ஏஞ்சலாக இருக்கும்போதும் கணேஷிடம் சிக்கி படாதபாடு படுவதென்னவோ ஆரவ்தான். இந்த முறை அவருடைய கன்னங்களுக்கு ரோஸ் பவுடர் அடித்துவிளையாடிக்கொண்டிருந்தார். ஏற்கனவே அவருக்கு மீசையில்லை இதுல இவரு வேற. சிநேகன் பெட்டியை நெருங்கவிடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடினார் ஹரீஷ். அருகிலிருந்த பிந்து கவிஞரே நீங்க தேவதையா இருந்தாலும் பேயா இருந்தாலும் ஒரே எக்ஸ்பிரசன்தான் கொடுக்கிறீங்க.. எக்ஸ்பிரசனை மாத்துங்க என்று அலுத்துக்கொண்டார். பிந்து மட்டும்தான் தேவதை உடையில் பார்க்க பாரதிராஜா படப் பாடல்களின் கோரஸ் கதாபாத்திரம் போல் அழகாக இருந்தார்.

‘ஹரீஷ் சட்டைல சாம்பாரா ஊத்திடுவியா நீ’ என்று சுஜாவை ஏற்றிவிட்டார் கணேஷ். (சார்… உங்களை நாங்க எவ்ளோ பெரிய ஜெண்டில்மேன்னு சொல்லிட்டு இருக்கோம். ஒரு ஜென்டில்மேன் பண்ற வேலையா இதெல்லாம்). இதுதான் சாக்கென்று தன் கையில் இருந்த சாம்பாரை ஹரீஷ், பிந்துவின் அங்கிகளில் தெளித்தார். (ஜிப்பா சூப்பர் மயில்சாமி காமெடி நினைவுக்கு வந்தது). அப்படியே ரெண்டு இட்லியையும் கொடுத்துட்டீங்கன்னா தொட்டு சாப்பிட்டுக்குவேன் என்பதுபோல் பாவமாக பார்த்தார் ஹரீஷ். சிநேகனும் தன் பங்கிற்கு கையுறையை தண்ணீரில் நனைத்து ஹரீஷ் மற்றும் பிந்துவின் முகத்தில் தடவினார். கணேஷ் ஆரவ்வின் தலையில் பிந்துமாதவியின் தொப்பியை வைத்து அழகுபார்க்க, பிந்து மாதவி ‘அது பிக்பாஸ் நினைவா வச்சிருக்கேன் ஒண்ணும் பண்ணீடாதீங்கயா ப்ளீஸ்’ என்று கெஞ்சினார். கணேஷ் ஆரவ்விடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே லாக்கரைத் திறக்கமுயல ஆரவ் தடுத்துவிட எல்லாரையும் வரச் சொன்னார் கணேஷ். மொத்த டீமும் பாய்ந்ததில் லாக்கர் கீழே விழுந்தது. அவ்வளவு களேபரத்திலும் தான் எடுத்துவந்த ரசத்தை பொறுப்பாக ஹரீஷின் சட்டையில் ஊற்றிக் கொண்டிருந்தார் சுஜா. அது மைக்கில் படுவதாக ஹரீஷ் கத்தினார். சாவி பாதி நுழைந்து உடைந்துவிட சரி போங்கடா என்று ஒதுங்கிக் கொண்டார்கள் பேய்கள் அணி. பிறகு லாக்கரைத் திறந்தால், வாழ்த்துகள் உங்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன  என்று எழுதப்பட்ட சீட்டு உள்ளே இருந்தது. ஒருவழியாக அந்த டாஸ்க் முடிவடைந்தது.

**

அடுத்த சண்டையை ஆரம்பித்தார்கள். சாம்பாரும் ரசமும் கலந்திருந்த தன் அங்கியை  சிநேகனிடம் காட்டி ‘சுஜா இதை துவைச்சுக் கொடுப்பாங்களா?’ என்று மல்லுக்கு நின்றார் ஹரிஷ். ‘ டாஸ்க்னா அப்படித்தான் இருக்கும். என்னைக் கூட தான் எட்டி உதைச்சீங்க… நான் திருப்பி உதைக்கட்டுமா?’ என்று விட்டுக்கொடுக்காமல் பேசினார் சுஜா. ‘நாம போய் பிக்பாஸ்கிட்ட சொல்லுவோம். அவரு ரொம்ப நியாயமானவரு. இதெல்லாம் அவரே துவைச்சுக்குவாரு. ’  என்று பொத்தாம் பொதுவாக ஒரு கருத்தை உதிர்த்தார் கணேஷ். 

பிந்து மாதவி

வெளியில் ஆரவ் சுஜாவைப் பற்றி பிந்துமாதவியிடம் பேசிக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணு ஜெயிக்குறதுக்காக எந்த எக்ஸ்ட்ரீமுக்கு வேணாலும் போகும். பொசுக்குனு என்ன சொல்லிருச்சு பாத்தீங்களா? ’ என்றதோடு, ‘இனிமே இவளோட பேசவே மாட்டேன்’ என்று சபதமேற்றுக்கொண்டார். 

 

**

ஆண்களுக்கு பொதுவாக ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எந்தப் பெண்ணிடம் முழுதாக சண்டைபோட்டு ஒதுங்க நினைக்க மாட்டார்கள். கோபப்பட்டு கத்தினாலும் சில மணிநேரங்களில் தாங்களாகவே போய் சமாதானம் செய்ய முயற்சி செய்வார்கள். அதையேதான் ஹரீஷ் இப்போது செய்யத் தொடங்கினார். குனிந்து கிச்சனை பெருக்கிக் கொண்டிருந்த சுஜாவிடம்  ‘என்கிட்ட பேசுங்க இவ்ளோ ரூடா இருக்காதீங்க… அப்படி என்ன ஆகிப்போச்சு டாஸ்க்ல என்ன வேணா அடிச்சுக்கலாம் டாஸ்க் முடிஞ்சதும் சகஜமாகிடுங்க என்று வாலண்டியராக சென்று பேசத் தொடங்கினார். ‘இப்பதான் அது டாஸ்க்னு தெரிஞ்சதா?’ என்ற சுஜா எதிர்தாக்குதலுக்குப் பிறகு இரண்டு பக்கமும் வார்த்தைகள் அம்பாக சீறிக்கொண்டிருந்தது. லூசுனு கூப்பிட்டதுக்கு சாரி.. நான் சாதாரணமா தான் சொன்னேன். நீங்ககூட ஆரவ்வை அப்படி சொல்லிருக்கீங்க… ஏன் கவிஞரைக்கூட லூசுக் கவிஞரேனு நீங்க கூப்பிட்டதில்ல என்று ஃப்ளோவில் சொல்ல… இதைக் கேட்டுக்கொண்டிருந்த சிநேகன் ‘உங்க சண்டைல என்னை ஏண்டா டேமேஜ் பண்றீங்க?’ என்று காண்டாகியிருப்பார்.  அதற்கும் சுஜாவிடம் பதில் இருந்தது, ‘அவருக்கும் எனக்கும் வேற.. எனக்கு நீங்க க்ளாஸ் எடுக்காதீங்க நீங்க ஒரு நேரம் நல்லா பேசுறீங்க ஒரு நேரம் கோபப்படுறீங்க?’ என்று  தொடர்ந்து கோபமாகவே பேச… என்னென்னவோ சொல்லி சமாதானப்படுத்த முயன்றார் ஹரீஷ். இப்ப என்ன என்று ஹரீஷூக்கு ஒரு ஹக் கொடுத்து போதுமா போங்க என்று சண்டையை முடித்துவைத்தார் சுஜா.

பிக் பாஸ் தமிழ்

 

அவ்வப்போது சுஜா இதுபோல் அன்யூசுவல் ஆகிவிடுகிறார் என்று கவலைப்பட்டார் பிந்து. அவங்ககூட ரொம்ப க்ளோஸ் ஆகுறப்போலாம் ஏதாவது விரிசல் வந்துடுதுன்னு வருத்தப்பட்டார் ஆரவ். டாஸ்க் நேரத்தில் எப்படி இருந்தாலும் அது முடிந்ததும் நார்மலாகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள் மூவரும். கணேஷ் இதை சிறப்பாக செய்வார் என்று சர்டிஃபிகேட் கொடுத்த ஆரவ். சிநேகன் டாஸ்க்கை சீரியஸாக எடுத்துக்கொண்டால் டவுன் ஆகிடுவார் என்றும் சொன்னார்.

**

அடுத்த டாஸ்க் ஆரம்பமானது. லிவிங் ரூமில் அனைவருக்கும் டாஸ்க்கைப் பற்றி படித்துக் காண்பித்தார் ஹரீஷ். இந்த டாஸ்க்கின் பெயர் ‘கண்கட்டி வித்தை’. ப்ளைவுட் கம்பெனி  தான் ஸ்பான்சர் போல. பவுலிங் லேனில் பத்து பவுலிங் பின்களை வைத்திருப்பார்கள் அதை ஓரே நேரத்தில் வீழ்த்தியபிறகு ஆக்டிவிட்டி ரூமிற்கு செல்ல வேண்டும். அங்கு வாலில்லாத யானை ஒன்று இருக்கும் போட்டியாளர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு அதன் சரியான இடத்தில் வாலை ஒட்ட வேண்டும். இதுதான் டாஸ்க். அட நம்மூர்களில் பொங்கல் விழாக்களின் போது தெருக்களில் நடத்தும் அதே விளையாட்டுதான். ஆனால் வழக்கமாக அதில் ஒரு நடிகையின் படத்தை வைப்பார்கள். கண்ணைக் கட்டிக் கொண்டு போய் அவர் நெற்றியில் பொட்டு வைக்கவேண்டும். கண்கட்டியிருப்பவர் தடவித்தடவி சரியாக நடிகையின் வாயில் பொட்டுவைப்பார். வாயில வைக்கிறதுக்கு அது புட்டு இல்லடா பொட்டு என்று கலாய்ப்பார்கள். அதே கேம் தான். ஆனால் இது என்ன சம்பந்தமே இல்லாமல் யானை - வால் என்று பார்த்தால் அது அந்த ப்ளைவுட் கம்பெனியின் லோகோவாம். சிறப்பான மார்க்கெட்டிங் யுக்தி. 88 நாட்கள் இதுபோன்ற பல ஸ்பான்ஸர் டாஸ்க்குகளை பார்த்துவிட்டதால் காஸ்ட்யூம் என்ன மாதிரியாக வந்திருக்கும் என்பதை முன்னமே கணித்தார் ஆரவ். அந்த ப்ளைவுட் கம்பெனியின் பெயர் பொறித்த டீசர்ட்டை அணிந்துகொண்டார்கள். இந்த டீசர்ட்டை அணிந்துகொள்ளும்போது ‘இதை விட ஃபன்னான டாஸ்க் கொடுக்கவே முடியாதுல’ என்று சர்காஸமாக பிக்பாஸையே கலாய்த்தார் ஹரீஷ்.  போட்டியாளர்களே காமெடி பண்ற அளவுக்கா டாஸ்க் யோசிப்பீங்க பிக்பாஸ்?

கணேஷ்

சுஜா, ஹரீஷ், கணேஷ் மூவரும் மஞ்சள் அணி. சிநேகன், ஆரவ், பிந்து மூவரும் பச்சை அணி. ஹரீஷ் முதல் முறை பந்தை உருட்ட, அத எல்லா கட்டைகளையும் கீழே தள்ளவில்லை. இரண்டாவது முறையில் எல்லாக் கட்டைகளும் விழுந்தது. ஆக்டிவிட்டி ரூமிற்கு விரைந்தார்கள். அங்கு கணேஷின் கண்கள் கட்டப்பட்டது. சுஜாவின் வழிகாட்டுதல்களைக் கேட்டு யானையின் வாலை சரியாக ஒட்டினார். அடுத்ததாக களமிறங்கியது சிநேகன் அணி, ஆரவ்வின் முதல் உருட்டிலேயே பந்து எல்லாக் கட்டைகளையும் கீழே தள்ளிவிட்டது. ஆக்டிவிட்டி ரூமில் பிந்துவின் கண்கள் கட்டப்பட்டு சிநேகன் வழிகாட்ட அவரும் யானையின் வாலை சரியாக ஒட்டினார். பத்து நிமிடத்துக்குள்ளாகவே இரண்டு அணியும் டாஸ்க்கை முடித்துவிட்டார்கள். குறைவான நேரத்தில் முடித்து டாஸ்க்கை வென்றது க்ரீன் டீம். இந்த டாஸ்க்கிற்கு பாயின்ட்ஸ் எல்லாம் கிடையாது. யானை வடிவ நினைவுக் கோப்பை ஒன்று பரிசளிக்கப்பட்டது. 

**

சுஜா திருமணம் செய்ய இருப்பவருக்கு அன்று பிறந்தநாள் போல அழகான ஒரு கோலமிட்டு I Miss You so much என்று அவர் பெயரைப் போட்டிருந்தார். தனது சக நண்பர்களை அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லச் சொன்னார். எல்லாரும் அவருக்காக ஹேப்பி பர்த்டே சாங் பாடினார்கள். சுஜா கண்களில் காதல் மின்ன ‘ஹேப்பி பர்த்டே அத்தான்.. நீங்க இல்லாம எனக்கு இங்க நரக வேதனையா இருக்கு!’ என்று உணர்ச்சிபொங்க தன் அன்பிற்குரியவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை பகிர்ந்துகொண்டார். (எங்கள் சார்பிலும் ஹேப்பி பர்த்டே பாஸ்..!) 

**

தேவதைகள் மற்றும் பேய்கள் டாஸ்க்கிற்கான மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டது. சிநேகன், சுஜா, கணேஷ் அந்த டாஸ்க்கின் முதல் பார்ட்டில் பேய்கள் லாக்கரை திறக்காமல் பார்த்துக்கொண்டதற்கு 10 பாயின்ட். இரண்டாவது பார்ட்டில் லாக்கரைத் திறந்ததற்கு 10 பாயின்ட்ஸ். இதுதவிர பிக்பாஸ் சிறப்பாக செயல்படும் ஒரு அணியைத் தேர்வு செய்து அந்த அணிக்கு 10 பாயின்ட்ஸ் தருவதாக சொல்லியிருந்தார். இப்போது 10 கொடுத்தால் 30 ஆகிவிடும் மூவரும் ஆளுக்கு 10 ஆக பிரித்துக்கொள்வார்கள். அது தப்பாச்சே என்று யோசித்த பிக்பாஸ் 5 மதிப்பெண்களை மட்டும் வழங்கினார். 25 மதிப்பெண்களை மூவரும் பிரித்துக்கொள்ள வேண்டும். இப்ப என்ன பண்ணுவீங்க? என்று தன் குரூரசிரிப்பை சிரித்திருப்பார் பிக்பாஸ். ஆளுக்கு 8 எடுத்துக்கொள்வோம் மீதம் இருக்கும் 1 பாயின்ட் யாருக்கு? என்று கேள்வி எழுந்தபோது.. ’நானே வாய்விட்டுக் கேட்குறேன்.. அந்த ஒரு பாயின்ட்டை எனக்கு கொடுத்துடுங்க. என்னை போட்டு அடிச்சாங்க.. குப்பையெல்லாம் மேல கொட்டுனாங்க தெரியுமா?’ என்று பாவமான குரலில் கேட்க மறுப்பேதும் சொல்லாமல் மற்ற இருவரும் சம்மதித்தார்கள். ஆக சுஜாவுக்கு 9 மதிப்பெண்கள் போனது.

கணேஷ் தோசை சுடுகிறேன் என்று சொல்லி  எதையோ முயற்சிக்க தோசைக்கல் தீய்ந்து கல்லில் இருந்து வராமல் தோசை ஒட்டிக்கொண்டது. அருகில் நின்றிருந்த சுஜா அவரின் சொந்த தோசைக்கல்லாய் இருந்திருந்தால், இந்நேரம் சாமியாடியிருப்பார். பரிசுத்தொகையே 50 லட்சம்தான் ஆனால் இவர்கள் கோதுமை மாவைக் கொட்டி, பீன் பேக்கை கிழித்து, போர்டை உடைத்து, இதோ இப்போது தோசைக்கல்லைத் தீய்த்து… பிக்பாஸூக்கு தாறுமாறாக செலவு வைக்கிறார்கள். இவர்கள் பாயின்ட்ஸெல்லாம் குறித்துவைக்கும் எக்ஸெல் சீட்டில் இந்த சேதாரங்களையும் போட்டு வச்சு பரிசுகொடுக்கும்போது அதெல்லாம் கழிச்சுட்டு குடுங்க பிக்பாஸூ…! அப்போதான் அடுத்த சீசன்ல வர்றவிய்ங்களாவது கண்ணும் கருத்துமா பாத்துப்பாய்ங்க போட்ட முதல் தப்பும்.

பிக் பாஸ் தமிழ்

 

**

Ticket To finale Task 2:

இந்த டாஸ்கிற்கு ‘எடுத்துட்டு ஓடு’ என்று பெயர் வைத்திருந்தார்கள். இப்படியே போனால் போட்டியாளர்களெல்லாம் ஒன்றாக சேர்ந்து ‘எகிறிக் குதிச்சு ஓடு’ என்று தாங்களாகவே ஒரு போட்டியை உருவாக்கி வீட்டின் காம்பவுன்டு சுவர் ஏறிக்குதித்து ஓடத்தான் போகிறார்கள். இந்த டாஸ்க் என்னவென்றால் க்ரவுண்டின் நடுவே ஒரு க்யூப் வைத்திருப்பார்கள், இரண்டு சைடும் எல்லைக் கோடுகள் இருக்கும். இரண்டு பேர் களமிறங்குவார்கள், ஒருவரை ஏமாற்றி க்யூபை எடுத்துக்கொண்டு எல்லைக் கோடைத் தாண்டிவிட்டால் அவர் வெற்றி அப்படி ஓடும்போது இன்னொருவர் தொட்டுவிட்டால் தொட்டவர் வெற்றி. இரண்டு அணியாக பிரிய வேண்டும் என்று சொன்னதும் ஹரீஷ் நக்கலாக, உங்களுக்கே தெரியும் யார் யார் ஒரு டீம்னு என்று மீண்டும் சர்காஸத்தை பிழிந்தார். குறைவான மதிப்பெண்களை எடுத்த அணி மூவரும் சேர்ந்து கால்களைக் கட்டிக்கொண்டு அடுத்த அறிவிப்பு வரும்வரை ஒன்றாகவே சுற்ற வேண்டும்.

ஹரீஷ் தன்னால் ஓடமுடியாது நான் இந்தப் போட்டியில் உப்புக்கு சப்பாணி என்று பிக்பாஸில் ஸ்பெஷல் பெர்மிசன் வாங்க, ‘மிஸ் மிஸ் நானும் மிஸ்’ என்று அதே பெர்மிசனை ஒரு ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு தானும் போட்டியிலிருந்து விலகினார் சுஜா. இவர்களுக்கும் சேர்த்து அவர்கள் டீமில் யாராவது ஆடவேண்டும்.

பிக் பாஸ் தமிழ்

 

ஆரவும் கணேஷூம் முதலில் களமிறங்கினார்கள். கணேஷை க்யூபை எடுத்துக்கொண்டு எல்லையைக் கடந்து வெற்றிபெற்றார். அடுத்து ஆரவும் சிநேகனும் இம்முறை ஆரவ் எடுத்துக்கொண்டு ஓட சிநேகன் அவரைத் தொட்டு அவுட்டாக்கினார். அடுத்த சுற்றில் பிந்துவும் கணேஷூம் பிந்து எடுத்தார் கணேஷ் தொட்டு அவுட்டாக்கினார். இப்படியாக தொடர போட்டியின் விதிப்படி எல்லைக் கோடை நோக்கித்தான் ஓடவேண்டும் ஆனால் கணேஷ் வேறு திசையில் எங்கோ ஓடியதால் அந்த பாயின்டும் ஹரீஷ் அணிக்குப் போனது. இறுதியில் மொத்தமாக சிநேகன் அணி வென்றது. அவர்கள் மொத்தம் 12 பாயின்ட்டுகள் எடுத்திருக்க ஆளுக்கு நான்காக பிரித்துக் கொண்டார்கள். 

**

விதிமுறையின் படி தோற்ற அணியினரின் கால்கள் ஒன்றாகக் கட்டப்பட்டன. மூவரும் சேர்ந்து சேது விக்ரம் போல நடந்து வந்தார்கள். சிநேகன் எல்லாருக்கும் பாட்டு சொல்லிக் கொடுத்தார்… பதனி பதனி என்று பதனி வித்ததைத் தவிர சிநேகன் கற்றுக்கொடுத்த வித்தையை வார்த்தைகளில் வடிப்பது சற்று சிரமம்தான். 

சரி எல்லார் காலையும் ஒண்ணா சேர்த்துக் கட்டியிருக்காங்களே.. தூங்கும்போது பாத்ரூம்போதெல்லாம்? என்று சந்தேகம் எழ அதற்கும் பிக்பாஸ் ஒரு விளக்கவுரை அனுப்பினார். பாத்ரூம் போகும்போது மட்டும் கட்டை அவிழ்த்துக் கொள்ளலாம். தூங்கும்போது நோ. 

 

போட்டியாளர்களின் சுயநலத்தில் பொதுநலமும் பொதுநலத்தில் சுயநலமும் இருந்தது இவர்கள்  விட்டுக்கொடுக்கிறார்களா விட்டுப்பிடிக்கிறார்களா? என்ற குரலுடன் விளக்குகள் அணைக்கப்பட்டது.

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/102982-is-suja-performing-some-fake-feminist-stunts-happenings-of-bigg-boss-day-88.html

Link to comment
Share on other sites

முட்டைய உடைச்சுராத கணேஷு... சட்டைய கிழிச்சுக்கோ ஹரிஷு..! 89-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 

bigg boss tamil

நேற்று பிக்பாஸை  ‘8 மணி வெள்ளைச்சாமி’ என்று குறிப்பிட்டதற்கு கோபித்துக்கொண்டார்போல இன்றைக்கு ’வேக்கப் சாங்’ ஒன்பது மணிக்குதான் ஒலித்தது. ’ரோமியோ ஜூலியட்’ படத்திலிருந்து ‘அடியே அடியே இவளே..’ என்ற பாடலை ஒலிக்கவிட்டார்கள். வழக்கம்போல சுஜாவும் கணேஷூம் கூட்டணி போட்டுக்கொண்டு குத்தாட்டம் போட்டார்கள். நேற்றைய டாஸ்கிற்கு தண்டனையாக ஹரீஷ், ஆரவ் மற்றும் பிந்துவின் கால்கள் ஒன்றாக கட்டப்பட்டிருந்ததால் மூவரும் சேர்ந்தே ஆடினார்கள். கால்கள் கட்டியிருந்தாலும்கூட ஆரவ்வும் பிந்துவும் கொஞ்சமாவது ஃபோர்ஸாக ஆடினார்கள். ஆனால் பாவம் ஹரீஷ்... என்ன சார் அது டான்ஸா? (சரோஜா குப்பை கொட்டுறியா.. கொட்டு கொட்டு..). இது எதிலும் ஒட்டாமல் ’காதல் கொண்டேன்’ தனுஷ் ஸ்டெப்களைப் போட்டுக்கொண்டிருந்தார் சிநேகன். 

சுஜா , கணேஷ்


**
நேற்றைய டாஸ்க்கில் ஹரீஷ், ஆரவ், பிந்து அணி 6 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்கள் அதை ஆளுக்கு 2 ஆக பிரித்துக் கொண்டார்கள். ’நாங்க எடுத்த பாயிண்ட்ஸெல்லாம் வெளில சொல்லாதீங்க பிக்பாஸ் கேவலமா இருக்கும்’ என்று பிக்பாஸூக்கு வேண்டுகோள் வைத்தார் பிந்து. (மார்க் மட்டும்தானுங்களா?). சரி விடிஞ்சிருச்சு அவிய்ங்களுக்கும் காலைல பல சோலி இருக்கும் என்று இரக்கப்பட்ட பிக்பாஸ் கால்கட்டிலிருந்து விடுதலை கொடுத்து தீர்ப்பளித்தார். 

ஹரிஷ், பிந்து

 

நேரம் மதியம் இரண்டு மணி என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது சிநேகன் கோலம் போடுவதைக் காட்டினார்கள். சேவல் கூவும்போதுதான் கோலம் போடுவாங்க... சேவலை அடிச்சு கொழம்பு வச்சு சாப்பிடுற  மத்தியான வேளையில ஏன் இவரு கோலம் போடுறாரு. இறுதி நாளை எட்ட இன்னும் 10 நாள் இருக்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் 10 என்று வாசலில் எழுதினார். இனி ஒவ்வொரு நாளும் கவுண்டவுன் போல இப்படியே கோலம் போடுவார்கள் போல. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலரில் போடலாம் என்று வேற முடிவு செய்தார்கள். பக்கத்துல பிந்து சிகப்புகலர் ட்ரெஸ் செமயாக இருந்தார். தெரியாமதான் கேக்குறேன் 10னு எழுதுறது பெரிய கம்ப சூத்திரமா அதை சிநேகன் தான் போடணுமா? ஏன் பக்கத்துல இருந்த பிந்துகிட்ட கொடுத்து போட சொன்னாதான் என்னவாம். உடனே ‘ஏன் காலம் காலமாக பெண்கள்தான் கோலம் போடவேண்டுமா? ஏய் ஆணாதிக்கவாதியே..!’ என்று  பாயாதீர்கள். கோலம் போடுவது என்ற கவித்துவமான காட்சியில் ரசனை சேர்க்காமல் கவிஞரின் தாடி குத்துதேன்னு சொன்னேன். அதுவுமில்லாமல் வரவர ரொம்பவும் சளிப்பூட்டும் டாஸ்க்குகளாக வந்துகொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற சில காட்சிகள்தான் மோட்டிவேசனாக இருக்கும்.

பிந்து மாதவி

 

நமீதாவின் தமிழைப் பற்றியும் ரைஸாவை கமல் ’தமிழரசி’ என்று அழைத்ததைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள். நமீதாவைப் போல இமிட்டேட் செய்து காட்டிக்கொண்டிருந்தார் சிநேகன். இந்த பிக்பாஸ் வீட்டில் எல்லாருமே ஒருவரைப் போல் ஒருவர் மிகவும் அழகாக இமிட்டேட் செய்கிறார்கள். ஒருவேளை மொபைல் போன், டிவி, புத்தகமெல்லாம் இல்லாமல் இருந்தால் நாமும் சுற்றியிருக்கும் மனிதர்களை, அவர்களின் செயல்களை உன்னிப்பாக கவனிப்போமோ? 
**

தொடர் டாஸ்க்குகளால் போட்டியாளர்கள் டயர்டாக இருந்ததால் இன்றைக்கு கொஞ்சம் ரிலாக்ஸாக விட்டுவிட்டார்கள் போல. இன்றைக்கான முதல் டாஸ்க்கே மாலை 4 மணிக்குதான் ஆரம்பமானது. அதுவும் ஸ்பான்ஸர்ஸ் டாஸ்க். இதற்கு மதிப்பெண்கள் எதுவும் இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரதான ஸ்பான்ஸரான மொபைல் நிறுவனம் தங்களுடைய மொபைலை ப்ரோமோட் செய்வதற்காக இந்த டாஸ்க்கை நடத்தினார்கள் போல. டாஸ்க்கின் பெயர்  ’கண்டுபிடி ஒட்டிமுடி’. டிவியில் இரண்டு படங்கள் காட்டப்படும். அந்த படங்கள் பல துண்டுகளாக வீட்டில் ஆங்காங்கே ஒளித்துவைக்கப்பட்டிருக்கும். ஹவுஸ்மேட்ஸ் இரு அணியாகப் பிரிந்து அந்தப் படங்களைத் தேடி கண்டுபிடித்து ஒன்று சேர்க்க வேண்டும். நேற்றாவது வெற்றி பெற்றவர்களுக்கு ட்ராஃபி வழங்கினார்கள் இந்த முறை அதுவும் கிடையாது. ஜெயித்தவர்கள் தோற்றவர்களுடன்  செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.. மொபைல் கம்பெனி விளம்பரத்துக்காக பண்றதுனாலும் ஒரு நியாயதர்மம் ?

பிக் பாஸ் தமிழ்

ஆரவ், பிந்து, கணேஷ் ஒரு அணியாகவும், சுஜா, ஹரீஷ், சிநேகன் ஒரு அணியாகவும் பிரிந்து படத்துண்டுகளை தேடும் வேட்டையில் இறங்கினார்கள். ஒரு டீம் கண்டுபிடித்தது இன்னொரு டீமுடைய பாகமாக இருந்தால் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு உதவிக்கொண்டார்கள். நன்றாகப் போய்க்கொண்டிருக்க இரண்டு டீமுக்கும் இரண்டு பாகங்கள் தேவை என்ற நிலையில் வந்து நின்றது. பிந்து மாதவி ஸ்மோக்கிங் ஏரியாவில் தேடியபோது அவருக்கு இரண்டு படத்துண்டுகள் கிடைத்தது. இந்த நேரத்தில் சாதுர்யமாக கேமாடத் தொடங்கினார் பிந்து. தனது அணியினரை மெதுவாக அழைத்து இது நம்மோடதா பாருங்க அப்படி இருந்தா மட்டும் எடுத்துக்கலாம் அவங்களோடதுனா இங்கயே ஒளிச்சு வச்சுடலாம் என்று ஐடியா தர, இல்லை எடுத்துக் கையில வச்சுக்கலாம் கணேஷ் சொல்ல, அவர்கள் வைத்திருப்பது சிநேகன் அணியின் படத்துண்டுகள்தான் என்பதைக் கண்டுபிடித்த சிநேகன் அதை வாங்கிப் பொறுத்த அவருடைய அணி வெற்றி பெற்றது. ஒருவேளை பிந்து அதை ஒளித்து வைத்திருந்தால் பிந்து டீம் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ‘நான்தான் நீங்க ஜெயிக்குறதுக்கு ஹெல்ப் பண்ணேன். அடுத்த டாஸ்க்ல எனக்கு ஹெல்ப் பண்ணுங்க’ என்று கவிஞரைக் கேட்டுக்கொண்டார் பிந்து. சரி கழுதை பாயிண்ட்தான் இல்லையே யார் ஜெயிச்ச என்ன என்ற மோடிலேயே இருந்தார்கள். 
இவர்கள் செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கான மொபைல் ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டிருந்தது. ஜெயித்த அணி தோற்ற அணியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அந்த செல்ஃபியில் இருப்பவர்களில்  யார் யார் ஜெயித்தவர்கள் யார் யார் வெற்றியைத் தவறவிட்டவர்கள் என்று எப்படித் தெரியும். என்ன லாஜிக்கோ? 

ஆரவ்வும் சிநேகனும் போனைப் பார்த்ததில் குஷியாகி இருந்தார்கள். உங்க பெயர் போட்ட காபி கப்ல தினம் காபி குடிக்கிறோம். உங்க தலைகாணியெல்லாம் யூஸ் பண்றேன் ஆளுக்கு ஒரு போனாவது கொடுங்க என்று மொபைல் நிறுவனத்திடமே வேண்டுகோள் வைத்தார்கள். பிக்பாஸ் போட்டியாளர்கள், தாங்கள் பயன்படுத்தும் பொருட்களில் விளம்பரம் செய்திருக்கும் நிறுவனங்களிடம் இலவசங்களை எதிர்பார்ப்பார்களானால் ஒரு வீடு மட்டும் கட்டினால் போதும்... வீட்டுக்கு தேவையான எல்லாப் பொருட்களும் இலவசமாக வந்துவிடும். சுற்றிச் சுற்றி அவ்வளவு விளம்பரங்கள். அடுத்தடுத்த சீசன்களிலெல்லாம் லாங் ஷாட்களில் வீட்டைக் காட்டும்போது விளம்பரப் பலகைகளுக்கு நடுவே போட்டியாளர்கள் எங்கே என்று தேடிக்கண்டுபிடிப்பதை நமக்கே ஒரு டாஸ்க்காக கொடுப்பார்கள்போல.

கணேஷ்


**
அந்த பழைய டெலிஃபோன் மீண்டும் ஒலித்தது. (இன்னும் அது முடியலையா???) அந்த நேரத்தில் சுஜா மட்டுமே வீட்டிற்குள் இருந்ததால் ஓடிச் சென்று போனை எடுத்தார். இப்படி ஒரு சமாச்சாரம் வீட்டில் இருப்பதையே  மறந்து வெளியில் உலாத்திக்கொண்டிருந்த மற்றவர்கள் சுஜா போனை எடுத்தபிறகுதான் உள்ளேயே எட்டிப்பார்த்தார்கள். சுஜாவுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க், போட்டியாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரது உடலில் 30 கிளிப்களைக் குத்த வேண்டும். இந்த முறை தெளிவாக ‘க்ளிப்பைக் கழட்டலாம் என்ற அறிவிப்பு வரும்வரை கழட்டக்கூடாது..!’ என்று சொன்னார். ஆமா.. இல்லைனா இவங்க அடுத்த போன்காலையே அடுத்த அறிவிப்புனு நினைச்சு டாஸ்க்கை நட்டாத்துல விட்டுடுறாய்ங்க. சுஜா யாரைத் தேர்ந்தெடுப்பார் என நமக்குத் தான் தெரியுமே.. ஆம் கணேஷேதான். 
‘கன்வின்ஸ் பண்ணாங்க ப்ரோ பாத்தீங்கள்ல’ என்று கணேஷை ஓட்டினார் ஆரவ். ஆரவ் இன்று ஏனோ கணேஷ் மீது ஓவர் வெறுப்பைக் கொட்டினார். கணேஷ் கையிலும் காதிலும் க்ளிப்புகளைக் குத்தினார் சுஜா. (முட்டையும் பாலுமா குடிச்சு வளர்த்த உடம்புடா அது இப்படி க்ளிப்பைக் குத்தி காயப்படுத்துறாய்ங்களே..!) ’ஸ்ட்ரேட்டஜி’ கிங்கான கணேஷ் தெளிவாக வேலைகள் செய்வதற்கு ஏதுவாக வலது கையில் மட்டும் குத்திக்கொள்ளவில்லை. க்ளிப்புகள் தாங்கித் திரியும் கணேஷூக்கு சுஜா சாப்பாடு ஊட்டிவிட... ‘கைய அசைச்சா க்ளிப் வந்துடும்ல’ என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு நக்கலாக ஆரவ் கேட்க அதற்கும் கணேஷ் சீரியஸாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். 
போனுக்குப் பக்கத்தில் ஒரு பாயைப் போட்டு தியானம் செய்யப்போவதாக அமர்ந்தார் கணேஷ். கணேஷின் கைகளில் குத்தப்பட்டிருக்கும் க்ளிப்பை க்ளோசப்பில் காட்டுகிறார்கள் அதுலயும் எதாச்சும் ப்ராண்ட் பேர் போட்ருக்காய்ங்களா என்று உற்றுப்பார்த்தால் நல்ல வேளையாக அப்படி எதுவும் இல்லை. 


**
அடுத்த போன்கால் வருகிறது.
கணேஷ் அருகில் இருந்ததால் போனை எடுக்கிறார். அவருக்கான டாஸ்க், ஒருவரைக் கன்வின்ஸ் செய்து அவருடைய உடல் முழுக்க மைதாவைக் கரைத்துப் பூச வேண்டும். அவர் தேர்ந்தெடுப்பவர் ஆணாயிருந்தால் டீசர்டைக் கழட்டிவிட்டு உடலில் பூச வேண்டும். ’ஹரீஷ் நீங்க பண்றீங்களா?’ என்று எடுத்ததும் ஹரீஷைக் கேட்க, அவர் தன்னால் டீசர்டை எல்லாம் கழட்டமுடியாது என்று சொல்லிவிட்டார். பிறகு சுஜா தான் வருவதாக ஒத்துக் கொண்டார். சிநேகன் எனக்கும் பண்ண விருப்பம்தான் ஆனா அவங்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க அவங்களே பண்ணட்டும் என்று ஒதுங்கிக் கொண்டார். 

அந்தப் பக்கம் கணேஷூம் சுஜாவும் மைதாவைப் பிசைந்துகொண்டிருக்க, இந்தப் பக்கம் ஆரவ் கணேசைப் பற்றி பொரணி பேசிக்கொண்டிருந்தார். ‘இவரு போன் பக்கத்துலயே உட்கார்ந்துக்கிட்டு எல்லா டாஸ்க்கையும் இவரும் சுஜாவுமே பண்ணிட்டு இருக்காங்க’ என்று கடுப்பு காட்டிய ஆரவ், ‘கேவலமா இருக்கு’ என்று ஆரம்பிக்க... ‘கேணைத்தனமா இருக்கு’ என்று பிந்து தொடர... ஹரிஷும் கோபப்பட்டார். ஆரவ்வும் பிந்துவும் கோபப்படுகிறார்கள் ஓக்கே? ஹரீஷ் ஏன் கோபப்படுகிறார். கணேஷ் இந்த டாஸ்க்கை செய்ய முதலில் அழைத்தது ஹரீஷைத்தான். ஹரீஷ்தான் வேண்டாமென்று மறுத்தார். இப்போ அவங்களா டாஸ்க் பண்ணிக்குறாங்க என்று சொல்வதில் அர்த்தமே இல்லையே...! 

ஹரிஷ், ஆரவ், பிந்து

 


இந்த எல்லாப் பஞ்சாயத்துக்கும் காரணம் கணேஷின் தியானமா என்றால் இல்லை... யாருமே தியானம் செய்வதில் ஒரு பிரச்னையும் இல்லை. தியானம் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கிற இடம்தான் பிரச்னையை பூதாகரமாக்கிவிடுகிறது. கணேஷ் விஷயத்திலும் அப்படியே... தியானம் செய்வதென்றால் ஒரு ஓரமாக உட்கார்ந்து பண்ணியிருக்கலாம். 

பிக்பாஸ் வீட்டிற்குள் க்ரூப்பிசம் புதிதில்லை. முன்பு மூன்று மூன்று பேர் க்ரூப்பாக இருந்தார்கள். இப்போது கணேஷ் மற்றும் சுஜா ஒரு க்ரூப். ஆரவ், சிநேகன், ஹரீஷ், பிந்து நால்வரும் ஒரு க்ரூப். பிக்பாஸின் அறிவுரைப் படி கார்டன் ஏரியாவில் அமர்ந்து சுஜாவின் உடல் முழுவதும் மைதாவை பூசிக்கொண்டிருந்தார் கணேஷ். உள்ளே ஆரவ் தன் சேட்டையைத் தொடங்கினார். டெலிஃபோனுக்கு அருகில் ஒரு சேரைப் போட்டு, ‘நாம இங்க உக்காந்துக்குவோம்’ என்றார். சிநேகன்.. ‘நான் போன் எடுக்கல நீங்க யார் வேணா எடுங்க.. எதுவும் கஷ்டமான டாஸ்க்குனா சொல்லுங்க நான் ஹெல்ப் பண்றேன்.. ஏன்னா போன் எடுக்குறவங்களை விட அவர் சூஸ் பண்றவருக்குத்தானே ரிஸ்க் ஜாஸ்தி’ என்று பாயிண்டாக பேசினார். பிந்து இதுவரை தான் போன் எடுக்கவே இல்லை என்ற வருத்தத்தை தெரிவித்தார். அப்படியானால் அடுத்த போனை நீங்கள் எடுங்கள் என்று முடிவெடுத்தார்கள்.

சுஜா

சுஜாவுக்கு மைதா மாவு பூசி முடித்திருந்தார் கணேஷ். தயிர்ப் பானை உடைஞ்சு தலையில் கொட்டுன மாதிரியே இருந்தது அவரைப் பார்க்க. இப்படியே இவர் தூங்க வேண்டுமென்றால் அதோகதிதான். கணேஷ் மீண்டும் தன் தியான பீடத்துக்கு வந்து அமர்ந்தார்... ஒரு க்ளிப் சரியாக மாட்டாமல் இருந்ததுபோல ஹரீஷைக் கூப்பிட்டு அவரைச் சரிசெய்ய சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் பிக்பாஸின் குரல் ஒலித்தது. டாஸ்க் முடியும் வரை 30 க்ளிப்கள் உடலில் இருக்க வேண்டும். நடுவில் கழட்டியதால் உங்களுக்கான மதிப்பெண் ரத்துசெய்யப்படுகிறது. சுஜாவுக்கான மதிப்பெண்கள் மட்டுமே வழங்க முடியும் என்றார் பிக்பாஸ். 

வாக்குமூல அறைக்கு சென்று வந்த கணேஷ் நேராக சுஜாவிடம் சென்று, ‘என்னாலதான பாயிண்ட்ஸ் காலியாகிடுச்சு. அதனால நீங்க 9 பாயிண்ட் எடுத்துக்குங்க நான் 1 பாயிண்ட் எடுத்துக்குறேன்’ என்ற சொல்ல பிஜிஎம்மில் லாலாலாலா என்று எஸ்.ஏ.ராஜ்குமார் இசை ஒலிப்பதுபோல் புல்லரித்தது. அம்புட்டு நல்லவனாயா நீ? 
**
இன்றைய நாள் சல்லென்று போனதுபோல் இருந்தது. அதற்குள்ளாக 10 மணிக்கு வந்துவிட்டார்கள். ஹவுஸ்மேட்ஸூம் இதை உணர்ந்திருந்தார்கள் போல.. நைட்டு விடிய விடிய முழுச்சிருக்கற மாதிரி ஏதோ டாஸ்க் சொல்லப்போறாங்க போல என்று சிநேகன் சொல்ல அப்படியிருந்தா நான் வரலைப்பா என்று முதலிலேயே ஜகா வாங்கினார் பிந்து. வேணும்னா ஹரீஷூக்கு குடுங்க என்று பிந்து சொல்ல... ஏதா இருந்தாலும் கேட்டுட்டு கொடுங்கடா என்று ஹரீஷ் கூறினார். 
போன் அடித்தது. பிந்து எடுத்தார். அவருக்கான டாஸ்க் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருடைய சட்டையை வெட்டி அணிய வைக்கவேண்டும். டிசைனா வெட்டக் கூடாதாம்...இந்த டாஸ்க்கெல்லாம் எங்கிருந்து பிடிக்குறாய்ங்க.. ஒவ்வொரு டாஸ்க்கும் ஒவ்வொரு தினுசாக இருக்கு. ஒருவேளை துப்பாக்கி க்ளைமேக்ஸ் காட்சிபோல இந்த எல்லா டாஸ்க்குகளுக்கும் ஒரு கனெக்டிவிட்டி இருக்குமோ? இல்லை ஒரு குத்துமதிப்பாக வாய்க்குவந்ததை டாஸ்க்காக சொல்கிறார்களா?

ஹரிஷ்


இந்த சட்டைய கிழிச்சுக்கிட்டு சுத்துற டாஸ்க்கில் பிந்து ஹரீஷை தேர்ந்தெடுத்தார். ஆனால் இந்த பிக்பாஸ், போட்டியாளர்கள் பேசும் வார்த்தைகளை உன்னிப்பாக கவனித்து, அவர்களுக்கான தண்டனைகளை உடனுக்குடன் வழங்கிவிடுகிறார்.  கொஞ்ச நேரத்துக்கு முன்பு தான் சட்டையைக் கழட்ட மாட்டேன் என்று ஹரீஷ் கெத்துக் காட்டினார். இதோ இப்போது அவருக்கு கிழிஞ்ச சட்டைய போட்டு சுத்தவேண்டும் என்பது டாஸ்க். ஆரவ், கணேஷ் கொடுத்த ஐடியாக்களின் படி ஹரீஷின்  டீசர்ட்டை டிசைன் டிசைனாக வெட்டினார் பிந்து. இறுதியில் அந்த சட்டையை போட்டால் இதுக்கு நீ சட்டையை கழட்டிட்டு மைதா மாவையே அப்பியிருக்கலாம் என்று தோன்றியது. இது என்னடா ஹேண்ட்சம்பாய் ஹரீஷ்க்கு வந்த சோதனை.
**
இரவு 10 மணிக்கு Ticket To Finaleவுக்கான அன்றைய நாளின் டாஸ்க் தொடங்கியது. இந்த டாஸ்க்கின் பெயர் ’பாத்து பத்திரம்’. அவர்கள் கொடுக்கும் முட்டையை சிறைத் தொட்டிலில் வைத்து உடையாமல் பார்த்துக்கொள்வது தான் டாஸ்க். அப்படி பார்த்துக்கொண்டால் 10 பாயின்ட்ஸ். யாருடைய முட்டையையாவது திருடி ஒளித்துவைத்தால் அதற்கும் 10 பாயின்ட்ஸ். அல்லது எவருடைய முட்டையையாவது உடைத்துவிட்டால் அதற்கு 2 பாயின்ட்ஸ். தெரிந்தோ தெரியாமலோ முட்டை உடைந்தால் அவர்கள் அவுட். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் (சப் டாஸ்க் பண்ணும்போதுகூட) முட்டையை சுமந்துகொண்டுதான் திரிய வேண்டும். 

எது யாருடைய முட்டை என்று அடையாளப்படுத்திக்காட்ட முட்டையில் ஒவ்வொருவரையும் ஸ்கெட்ச் செய்யச் சொன்னார்கள். ’நைட்டு சுஜா உன் முட்டையை உடைச்சாலும் உடைச்சுடும் கவனமா இருங்க பிந்து’ என்று பிந்துவை அலர்ட்டாக்கினார் ஆரவ். ’டாஸ்க் முடிஞ்சப்பறம் இந்த முட்டையை அவிச்சு சாப்டுடலாம்ல’ என்று ஜோக்கினார் கணேஷ். (வேண்டாம் சார் நமக்கு காமெடிலாம் செட் ஆகல. நீங்க முட்டையை பாதுகாக்க என்ன ஸ்ட்ரேட்டஜி வச்சிருக்கீங்க?). ‘நான் போட்ட முட்டை’ என்று கேமிராவில் தன் முட்டையைக் காட்டினார் ஆரவ். எது நீங்க போட்டதா? கெரகத்த.

பிக் பாஸ் தமிழ்

ஃபுல் மைதா மாவு மேக்கப்பில் முட்டையைத் தூக்கிக் கொண்டு குறுக்கும் மறுக்குமாக சுஜா ஓடியதைப் பார்க்க ஜெகன் மோகினி பேய் மாதிரி இருந்தது. ’ஏன் தெரியுமா முட்டைல பெயின்ட் பண்ண சொன்னாங்க? நாம ஃப்ரிட்ஜ்ல இருக்குற முட்டையோட நம்ம முட்டைய மாத்தி வச்சி ஏமாத்திட்டோம்னா?’ என்று தன் அறிவு முட்டையை உடைத்து ஆஃப் பாயில் போட்டார் சுஜா. ஏங்க அவ்ளோ கேமரா சுத்திவச்சிட்டு இப்படியெல்லாம் பண்ணி நீங்க ஏமாத்திட முடியுமா என்ன? 
**

இந்த டாஸ்க்கின் பார்ட் டூவை அறிவித்தார்கள். சாக் ரேஸ். சாக்கிற்குள் நின்றுகொண்டு ஒரு கையில் முட்டையை வைத்துக்கொண்டு, ஒரு கையில் சாக்கைப் பிடித்துக்கொண்டு.. எல்லைக் கோட்டைத் தொட்டுத் திரும்பவேண்டும்.
ஆரவ், ஹரீஷ், சுஜா மூவரும் முதலில் களமிறங்கினார்கள். முதலில் ஹரீஷ் வேகமாகச் சென்றாலும், திரும்பிவரும்போது சுஜா அவரை விட வேகமாக ஓடி முதலில் வந்தார். அடுத்ததாக பிந்து, சிநேகன், கணேஷ் களமிறங்க... சிநேகன் முதலாவதாக வந்தார். பிந்துவும் சிநேகனும் போட்டியை முடித்தபிறகே கணேஷ் எல்லைக் கோட்டையே தொட்டிருந்தார். அவ்வளவு ஸ்லோவாக நடந்தார்.
’இதுக்கே இவ்ளோ கஷ்டமா இருக்கே அடுத்து குதிச்சு குதிச்சு போக சொல்வாங்களோ’ என்று ஹரீஷ் வார்த்தையைவிட அந்த ஐடியாவை கப்பென்று பிடித்துக் கொண்ட பிக்பாஸ்... இந்தா போறேன் சொசைட்டிக்கு என்று அடுத்த டாஸ்க்காக இதே ரேஸை நொண்டிக்குதித்துக் கடக்க வேண்டும் என்று அறிவித்தார். இதில் முதல் அணியில் ஹரீஷூம் அடுத்த அணியில் சிநேகனும் வென்றார்கள். 
**

பிந்து - ஹரீஷ் டாஸ்க்கில் ஆளுக்கு 5 பாயின்ட்ஸ் எடுத்துக்கொண்டார்கள். அடுத்ததாக மைதாமாவு டாஸ்க்கில் கணேஷும் சுஜாவும் தங்கள் பாயின்ட்ஸை பிரித்துக்கொள்ளவேண்டும். கணேஷ் சாதுர்யமாக போன டாஸ்க்ல நீங்க 9 நான் 1 எடுத்துக்கிட்டோம்ல.. இந்த முறை நான் 9.. நீங்க 1 எடுத்துக்கலாம் என்றார். சுஜா குழம்பினாலும் பிறகு ஏற்றுக்கொண்டார். கேமரா முன் இதைச் சொல்ல வேண்டும். கணேஷ் அறையில் இருந்த எல்லாரையும் வெளியே போகச்சொல்லிவிட்டு தனியாக மார்க்கை சொன்னார் .சார் உங்களுக்கு ஜெண்டில்மேன்னு சர்டிஃபிகேட்லாம் கொடுத்தோமே!? என்ன இதெல்லாம்? இப்போது ஆளுக்கு 10 மதிப்பெண்கள் என்று சரிசமமாக வந்தாலும்.. விதிமுறையை மீறியதாக பிக்பாஸ் உங்கள் மதிப்பெண்ணை ரத்து செய்தாரே அது எங்கே போனது? உங்கள் மீது தவறில்லையென்றால் எதற்காக எல்லோரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு ரகசியமாக மதிப்பெண்களை சொல்ல நினைக்கவேண்டும். அவர்கள் ஏன் இப்படி பிரிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது என்பதாலா? இடையில் கன்ஃபஸன் ரூமுக்கு வேறு சென்று வந்தீர்கள்.. அப்போது உங்களிடம் என்ன சொன்னார்?இதையெல்லாம் நாளை கமல் தான் விசாரித்துச் சொல்ல வேண்டும்.

கணேஷ், சுஜா

**

யார் முட்டையாவாச்சும் உடைச்சு விடலாமா? என்று தனியாக அமர்ந்து சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார் சுஜா. கட் பண்ணினால் அடுத்த காட்சியில் போட்டியாளர்கள் இதுவரை பெற்ற மதிப்பெண்களை வாசித்தார் ஹரீஷ். சுஜாதான் டாப் 58 மதிப்பெண்கள். தொடர்ந்து சிநேகன் 52, கணேஷ் 48, பிந்து 40, ஆரவ் 37,ஹரீஷ் 23 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்கள். அதோடு சுஜாவின் மைதா மாவு டாஸ்க்கும் ஹரீஷின் கிழிஞ்ச டீசர்ட் டாஸ்க்கும் முடிந்ததாக சொன்னார் ஹரீஷ். சுஜா நம்பாமல் வாசித்துக்காட்டச் சொன்னார். வாசித்துக்காட்டியும் நம்பாமல் தானே ஒரு முறை பார்த்தார்.

’அசிங்கமா இருக்கு போனுக்காக வெயிட் பண்றது’ என்று சொன்ன சிநேகன், ’கடைசியா உயிரை விட்ருவாங்கல்ல மத்த எல்லாத்தையும் தான எடுப்பாங்க’ என்றபோது போட்டியாளர்களை எந்த அளவுக்கு மனதளவில் வீக் ஆக்குகிறார்கள் என்பது புரிகிறது.
தூங்கும்போது தங்கள் முட்டையை ஒளித்துவைக்கக்கூடாது என்று பிக்பாஸ் உத்தரவிட்டிருந்ததால் கணேஷூக்கு ஒரு சந்தேகம் வந்திருந்தது. பத்திரமாக ட்ரேயில் வைத்தால் அது ஒளித்துவைத்ததாக ஆகுமா? என்று ஹரீஷிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். அதிக முறை விதிமீறல்களால் அவுட் ஆவது அவர்தான் என்பதால் இந்த முறை கொஞ்சம் கவனமாக இருக்க நினைக்கிறார்.
லிவிங் ரூமில் இதைக் கலாய்த்துக்கொண்டிருந்தார் ஆரவ். இந்த முட்டையை இப்படி வைக்கணுமா? தலைகீழா வைக்கணுமா? எப்படி வைத்தால் விதிமீறாமல் இருக்கும் என்று கணேஷை ஓட்டிக்கொண்டிருந்தார். ஆரவ்க்கு கணேஷ் மேல் இன்று ஏன் இத்தனை கோபம்? முன்பு சிநேகன் மீது வெறுப்பாக இருந்தார்.. நேற்று சுஜாவின் மீது வெறுப்பாக இருந்தார்.. இன்று கணேஷ்மீது... என்னதான் பிரச்னை இவருக்கு? 

’வெல்லப்போவது யார் வெளியில் செல்லப் போவது யார்?’ என்ற ரைமிங் வசனத்துடன் விளக்குகள் அணைந்தது,

**
இன்றைக்கு எபிசோடை பார்த்துக் கொண்டிருந்தபோது ரொம்ப நாளாக பிக்பாஸ் பார்க்காத நண்பர் ஒருவர் வந்தார். சில நிமிடங்கள் அவர் என்னுடன் ஷோவைப் பார்த்தபோது, அவருக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடல் இது.

“இவன் ஏன் கிழிஞ்ச டீசர்டை போட்டு சுத்துறான்?”

“அதான் ப்ரோ டாஸ்க்கு”

“இது ஏன் என்னத்தையோ பூசிக்கிட்டு பேய் மாதிரி சுத்துது?”

“அட அதான் ப்ரோ டாஸ்க்கு”

“என்னடா எல்லாம் கழுத்துல முட்டைய மாட்டிக்கிட்டு சுத்துறாய்ங்க?”

”அட அதான்யா டாஸ்க்கு”

அவர் பாவம் வெறியாகிப்போனார். டாஸ்க்குங்குற பேர்ல இன்னும் என்னென்ன கிறுக்குத்தனங்களையெல்லாம் பண்ண வைக்கப்போறாரோ பிக்பாஸ்??? 

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/103084-while-ganesh-saves-the-egg-harish-roams-with-torn-shirt-happenings-of-bigg-boss-day-89.html

Link to comment
Share on other sites

சோம்பேறி, அழகு, சுயநலவாதி - ஆரவ், சுஜா, பிந்து... இதில் எது யார்? பொருத்துக! 90-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 

இந்த வாரம் முழுக்கவே கமலின் அரசியல் பிரவேசங்கள் குறித்த பரபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிக்பாஸில் கமல் வரும் நாள்.அதிலும் நிகழ்வுக்கான 'பொறுத்திருந்து பார்ப்போம்' ப்ரோமோவில் " பெருகிய ஆசையில்... குறுகிய காலம். நாற்காலி வேட்டையில் போர்க்கால வேகம்... கைகோர்த்த கூட்டணி கடைசி வரை வருமா பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார் ஆண்டவர். ரொம்ப ஓப்பனா சொல்லிட்டமோ என நினைத்தாரோ என்னவோ,  வேறொரு அறிமுக உரை கொடுத்தார்.  சம்பிரதாய வணக்கங்கள் முடிந்து ‘முக்கியமான கட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு’ என்று சொல்லி நிறுத்தியபோது ரைட்டுடா என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன். ‘இப்படித்தான் வெற்றியை அணுகவேண்டும் என்று வெற்றியை நோக்கி நகர்பவர்கள் இருக்கிறார்கள், எப்படிவேண்டுமானாலும் வெற்றியை அணுகலாம் என்று விளையாடுபவர்கள் இருக்கிறார்கள். உங்கள் கையில் இருப்பது வாக்குச்சீட்டு’ என்று சொல்லிவிட்டு இதுவரை நாம் போட்ட ஓட்டுகள் போட்டியாளர்களைக காப்பாற்ற பயன்பட்டது, இனி நாம் போடும் ஓட்டுகள்  வெற்றிக்கான ஓட்டுகள் என்பதை நினைவூட்டினார்.  நிகழ்ச்சியையும், தமிழக நிகழ்வுகளையும் கலந்துகட்டி சொல்வதில், கமல் நிச்சயம் பிக் பாஸ் தான்

கமல்

தொடர்ந்து, இந்தவாரம் நடந்த காட்சிகளின் ரீகேப்பை போட்டுக் காட்டினார்கள். க்ரிஸ்பாக எதுவுமே இந்த வாரம் நடக்கவில்லை என்பது அந்த ரீகேப்பைப் பார்த்தாலே தெரிந்தது. அடுத்ததாக வெள்ளிக்கிழமை நடந்த சம்பவங்களை போட்டுக் காட்டினார் கமல். 

**

காலை 9 மணிக்கு ‘வேக்கப்’ பாடலை ஒலிக்கவிட்டார்கள். ஜில்லா படத்தில் இருந்து ‘ஜிங்கினமணி ஜிங்கினமணி’ பாடல் ஒலித்தது.  நேற்றைய முட்டை டாஸ்க் இன்னும் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பதால் ஒரு கையில் அதைப் பிடித்தபடி பொண்ணோ பூவோ என்று மெதுவாக டான்ஸ் ஆடினார்கள் போட்டியாளர்கள். சுஜா, ஹரீஷ் ஆடியது மட்டும் கொஞ்சம் க்யூட்டாக ரசிக்கும்படி இருந்தது. 

சுஜா

 

முந்தையநாள் இரவில் யார் முட்டையாச்சும் உடைச்சு விடலாமா என்று சுஜா தனியாக பேசிக்கொண்டிருந்தார். ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறார் என்று நினைத்தால் உண்மையிலேயே அந்த எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறார் என்பதைக் காலங்காத்தலேயே காட்டினார். ஹரீஷிடம் சென்று யார் முட்டையையாவது உடைத்துவிட்டால் அவங்க டிஸ்குவாலிஃபை தானே அவங்க பதிலுக்கு என் முட்டைய உடைக்க முடியாதுல என்று டவுட் கேட்டார். ஒரு வேகத்துல பதிலுக்கு இவருடைய முட்டையை உடைத்துவிட்டால் என்ன பண்ணுவது என்ற குழப்பம் அவருக்கு. எதிர்வினை என்ன வரும் என்று யோசிக்காமல் அட்டாக் பண்ணக்கூடாது என்று நினைக்கிறார். ‘சொல்லிட்டு உடைங்க’ என்று பொறுப்பான அட்வைஸ் வழங்கினார் ஹரீஷ். ஏங்க சொன்னா உடைக்கவிடுவாங்களா என்ன?. பிறகு பாத்ரூமில் இருந்த சிநேகனிடம் போய் இதே கேள்வியைக் கேட்டார்.  உடைக்குறதுனா பொசுக்குனு உடைச்சுவிட்றவேண்டியதுதான அப்போசிட் டீம்லயா போய் அட்வைஸ் கேக்குறது? அவர் முட்டையை பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி தனது தோழர்களை அலர்ட் ஆக்கினார். 

‘நேத்து நைட்டு இவிய்ங்க கழுத்துல முட்டைய மாட்டிவிட்டோம் இன்னும் எவன் முட்டையும் உடையக்காணோம்… இந்த புள்ள சுஜா வேற எல்லார் முட்டையும் குறுகுறுன்னு பாக்குதே தவிர எவன் முட்டையையும் உடைக்க மாட்டேங்குது.. என்ன தப்பா இருக்கு?’ என்று பிக்பாஸ் டீம்  முந்திரி பக்கோடா சகிதம் மீட்டிங் போட்டு பேசியிருப்பார்கள் போல.  மதியம் ஒரு மணிக்கு புதிய விதிமுறை ஒன்றை அறிவித்தார்கள். அதன்படி, இனி முட்டையையோ முட்டையைத் தாங்கும் தொட்டிலையோ கைகளால் பிடிக்கக் கூடாது. ‘தெளிவு நாயகி’ பிந்து முட்டைக்கு தலைகாணியில் முட்டுக் கொடுத்திருந்தார். அவர் தலையில் கொட்டு வைத்து தலைகாணியை எடுக்கச் சொன்னார் பிக்பாஸ். தரையில் அமர்ந்திருந்த ஆரவ் எழுந்திருக்கவே சிரமப்பட்டார். ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடியது செம டைமிங். ஆனால் அது கரகம் இல்லை ஆரவ், உங்களைப் பிடித்திருக்கும் கிரகம்.

ஒரு கையில் முட்டையைப் பிடித்திருந்தபோதே மெதுவாக நடந்தார்கள், இப்போது பிடிக்கவும் கூடாது என்று சொன்ன பிறகு நிறைமாத கர்ப்பிணி போல ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்துவைத்தார்கள். ‘அய்யோ ஆறு ஆஃபாயில் ஆச்சே’ என்று புலம்பினார் சிநேகன். (அதேதான் அந்த டெய்லரும் சொன்னான்). ‘உங்க அம்மாகூட இப்படி பார்த்துக்கிட மாட்டாங்க.. நான் உன்னை எப்படி கண்ணும் கருத்துமா பாத்துக்குறேன் பாத்தியா’ என்று ஆரவ் முட்டையுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் முட்டை ட்ரெயில் இருந்து வெளிநடப்பு செய்து உருளத் தொடங்கியது. பிந்துவின் முட்டையும் ஸ்டாண்டில் இருந்து வெளியில் தான் இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் தன் முதுகு வலியைப் பொறுக்க முடியாமல் முட்டையை கழட்டிவைத்துவிட்டார். 

பிக்பாஸ் வீட்டில் இந்த வார கெஸ்டான அந்த பழைய டெலிஃபோனில் இன்றைய நாளின் முதல் அழைப்பு. போனுக்கு அருகிலேயே சேர் போட்டு அமர்ந்திருந்த சிநேகன் எடுத்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்,  ஒரு பாடல் ஒலிபரப்புவார்கள், ஒருவரைக் கன்வின்ஸ் செய்து அவருடன் சேர்ந்து அந்த பாடலுக்கு ஏற்றார்போல நடனம் ஆடவேண்டும். ம்க்கும் காலையில் ஒலிக்கும் திருப்பள்ளி எழுச்சிப் பாட்டுக்கே தன் பாட்டுக்கு ஆடுவார் சிநேகன். இப்போது கங்காரு குட்டி மாதிரி முட்டையைச் சுமந்துகொண்டிருக்கும்போது பொருத்தமாக ஆடவேண்டுமாம். ‘நான் முட்டையோட காய்கறியே வெட்டிட்டேன்.. நான் ஆடமாட்டேனா?’ என்று முதலில் அட்டெண்டன்ஸ் போட்டார் கணேஷ். சுஜாவும், ஹரீஷூம் தாங்களும் ரெடியாக இருப்பதாகச் சொல்ல.. சிநேகன் ஹரீஷைத் தேர்ந்தெடுத்தார்.

சிநேகன்

 

குலுங்கி குலுங்கி ஆடவைத்தால்தான் யார் முட்டையாவது உடையும் என்று யோசித்து சுப்ரமணியபுரம் படத்திலிருந்து ‘மதுர குலுங்க குலுங்க’ பாடல் போட்டார்கள். அதற்கு சிநேகனும், ஹரீஷூம் ஆடியது ‘ஆனந்தம் ஆனந்தம் பாடும்’ பாடலில் நாகேஷூம் நம்பியாரும் ஆடுவது போலவே இருந்தது. ஆனாலும் இந்த மூவ்மெண்டுக்கே சிநேகனின் முட்டை எகிறிக்குதித்து தன்னை மாய்த்துக் கொண்டது. அனைவர் கழுத்தில் மாட்டி இருந்த முட்டைகளை உடைக்க, சுஜாவை விட பிக்பாஸ் தான் ஆர்வமாக இருந்து இருப்பார் போல.

அடுத்த அழைப்பை சுஜா எடுத்தார். அவருக்கான டாஸ்க்கை சொல்வதற்கு முன்பாகவே கணேஷ், ‘Buddy  நான் ரெடி’ என்று ஆஜர் ஆனார்.(அட, இருப்பா) அவருக்கான டாஸ்க் ஒருவரைக் கன்வின்ஸ் செய்து அவருடன் யோகாசணம் செய்யவேண்டும்.  இந்த டாஸ்க் பெரிய ரிஸ்க் என்பதால் அவசரப்பட்டு ஒத்துக்கிட்டமோ என்று நினைத்த கணேஷ், ‘நான் இப்போதான் சாப்பிட்டேன் உடன் யோகா பண்றது கொஞ்சம் கஷ்டம்’ என்று ஜகா வாங்கினார். ஹரீஷூம் இதே காரணத்தைச் சொல்லி பின்வாங்க சிநேகன் தான் செய்வதாக ஒத்துக் கொண்டார். ஆனால் முட்டையோடு இருப்பவர் மட்டுமே இந்த டாஸ்க்கில் கலந்துகொள்ள முடியும் என்று பிக்பாஸ் முட்டுக்கட்டை போட்டார். இதற்கிடையில் ஆரவ் எழுந்திரிக்க முயல அவருடைய முட்டையும் கீழே விழுந்து உடைந்தது. சுஜா கணேசை மீண்டும் கன்வின்ஸ் செய்து தோற்றார். சரியான நேரத்தில் கணேஷ் இப்படி காலைவாறிவிடுவார் என்று துளியும் நினைத்திருக்கமாட்டார் சுஜா. அந்த ஆற்றாமை அவர் முகத்தில் தெரிந்தது. பிந்துவுடன் சேர்ந்து இந்த டாஸ்க்கை செய்வதாகச் சொன்னார். ஆனால் பிந்துவும் தான் முட்டையில்லாமல் இருந்தார். அவர் மட்டும் எப்படி இதில் கலந்துகொள்ளமுடியும். ஹரி படங்களில்கூட லாஜிக்கை எதிர்பார்க்கலாம் போல பிக்பாஸில் ம்ஹூம்..!

பிந்துவும் சுஜாவும் சேர்ந்து யோகாசணங்களில் ஈடுபட்டார்கள். முட்டையைக் காப்பற்ற அடிப் பிரதட்சணம் செய்துகொண்டிருந்த சுஜாவை இப்போது அங்கப் பிரதட்சணமே செய்யச் சொல்கிறார் பிக்பாஸ். பிறகென்ன நடந்திருக்கும் அதேதான், முட்டை டமாலு… பாயிண்டு பணாலு..! ஆனாலும் யோகா டாஸ்க்கை முடிக்க நினைத்து மூன்று ஆசனங்களையும் செய்தார்கள். ஒரு டவுட்டு நிஜமாவே இதெல்லாம் ஆசனங்கள்தானா? எனக்கென்னவோ Wedding Photography க்கு போஸ் கொடுப்பதுபோலவே இருந்தது.

மீதம் இருப்பது கணேஷூம் ஹரீஷூம், சிநேகனை வாக்குமூல அறைக்கு அழைத்த பிக்பாஸ் அவர்களையும் யோகாசணம் செய்யச் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார். சந்திரமுகி படத்தில் பிரபுவின் காபியைத் தட்டிவிட ரஜினி ‘செந்தில்ல்ல்ல்ல்’ என்று பாய்ந்து வருவாரே… அந்த போஸில் நிற்கவேண்டும். ஒற்றைக்காலில் ரொம்ப நேரம் நிற்கமுடியாமல் இருவரும் தள்ளாட, கணேஷின் முட்டை முதலில் விழுந்து உடைந்தது. ஹரீஷ் இந்த முட்டை டாஸ்க்கில் வெற்றி பெற்றவரானார்.

**

தொடர்ந்தது விளம்பரதாரர் பகுதி. சிப்ஸ்களைக் கொடுத்து கொரிக்கச் சொன்னார்கள். ஆபிஸ்ல வச்சு சிப்ஸ் பாக்கெட்டை பிரிச்சாலே அந்த சத்தம்கேட்டு எட்டு டெஸ்க்குக்கு அந்தப் பக்கம் இருக்குறவன்லாம் எட்டிப்பார்ப்பான். இதுல மைக் பக்கத்துல சிப்ஸ் பாக்கெட்டை வைத்துக் கொண்டு சாப்பிட இரண்டு நிமிடத்திற்கு சிப்ஸ் பாக்கெட் கசங்குற சத்தம் தான் வந்தது. இரவு 7 மணிக்கு இன்றைய நாளின் டெய்லி டாஸ்க்கை அறிவித்தார்கள். ‘யார் நடிகரல்ல’ என்பது டாஸ்க்கின் பெயர். நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சில போலியான மனிதர்களைப் போல நடித்துக்காட்டவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு கேரக்டர் கொடுத்திருந்தார்கள். 

கமல்

 

பிந்துவுக்கு கொடுக்கப்பட்டது ‘எப்போதும் சன்கிளாஸ் போட்டுக் கொண்டு திரிபவர்’. சமைக்கும்போதும் சன்கிளாஸ் போட்டுக்கொண்டே வெஜிடபிளுக்கும் விரலுக்கும் வித்தியாசம் தெரியாமல் வெட்டிக்கொள்வதுபோல நடித்துக்காட்டிய விதம் அருமை. புரொபஷனல் ஆக்டர் அல்லவா பின்னி எடுத்தார். சுஜாவுக்கு ‘நன்றாக உடையணிந்துகொள்ள நினைப்பவர்’ கேரக்டர். சிறப்பாக சொல்லும்படி எதுவும் இல்லை. ஆரவுக்கு ‘அர்த்தம் புரியாவிட்டாலும் ஆங்கிலப் பாடல்கள் கேட்பவர்’ கதாபாத்திரம். கணேஷூக்கு ‘எப்போதும் உதட்டைக் குவித்துக் கொண்டு போஸ் கொடுப்பவர்’ கதாபாத்திரம். ஓவியாவை சக்தி அடிக்கக் கை ஓங்கியது, கஞ்சா கருப்பு பரணியை அடிக்கப்போனது என பிக்பாஸில் நடந்த சம்பவங்களை வைத்தே தனது ஆக்ட்டை செய்துகாட்டினார். கேண்டிட் ஷாட் என்று சொல்லி ஒவ்வொரு பொசிசனாக நின்று போஸ் கொடுத்தது ரசிக்கும்படி இருந்தது. ஹரீஷூக்கு ‘தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்பவர்’ ரோல். நேத்து நான் ‘Steam rice cake with coconut candy sauce’ சாப்டு இன்ஸ்டாகிராம்ல போட்டோ போட்டேன் என்று சொல்ல, ஆரவ் ‘மச்சான் அது இட்லி சாம்பார்டா’ என்று கலாய்த்தது அருமை.  சிநேகன் ‘வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவர்’ காதாபாத்திரத்தை நடித்துக் காண்பித்தார். நியூயார்க்கின் பெருமைகளை அவர் சொல்லிக் கொண்டிருக்க, அவர் டீசர்ட்டில் இருப்பது அமெரிக்கா கொடியா என கலாய்த்தார் பிந்துமாதவி. ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த டாஸ்க்தான் ரசித்து சிரிக்கும்படி கலகலப்பாக இருந்தது. 

பிந்து மாதவி

 

இப்போது எல்லாவற்றிற்கும் வடிவேலு வெர்சன் யோசிப்பதுதானே ட்ரெண்டு. இந்த டாஸ்க்கில் ஒவ்வொருவரும் செய்து காட்டிய கேரக்டர்களின் வடிவேலு வெர்சன் யோசித்துப் பார்த்தேன். 

பிந்து - கூலிங் க்ளாஸ் போடலைனா ரெண்டு கண்ணும் அவிஞ்சுடும் போல

சுஜா - இந்த மாதிரி கலர் சட்டைல போடுறதுக்கு ஒரு தகுதி வேணும்டா

ஆரவ் - சிங் இன் தி ரெயின்

கணேஷ் - இரும்மா ஒரு பொசிசன்ல நின்னுக்குறேன்

ஹரீஷ் - ஆஃப்ட்ரால ட்வண்டி க்ரோர்ஸ் லாஸ்மா

சிநேகன் - துபாய்ல நாம இருந்த இருப்புக்கு

**

இந்த டாஸ்க்கின் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் யார் யார் எவ்வளவு போலியாக நடந்துகொள்கிறார்கள் என்று ஒவ்வொருவரும் பிறருக்கு ரேட்டிங் கொடுக்கவேண்டும். சொல்லிவைத்தார்போல எல்லாருமே சுஜாவை ஃபேக் என்று குறிப்பிட்டார்கள். கணேஷ் சிநேகனை நல்ல லிசனர் இல்லை என்று குறிப்பிட்டார். மற்றவர்களெல்லாம் ஃபேக் ரேட்டிங் 9, 10 என கொடுக்க… பிந்து மாதவி, ஃபேக் என நினைக்கும் சுஜாவுக்கும் கணேஷூக்கும் ஃபேக் ரேட்டிங்கில் 2 தான் கொடுக்கிறார் அவ்வளவு நல்ல மனசு. எல்லாருடைய குட் புக்கிலும் இடம்பிடித்த ஹரீஷ், ‘பிக்பாஸ் வீட்டில் அசலான நபர்’ என்ற பட்டம் பெற்றார். சூப்பர் ஹரீஷ். 

ஆரவ்

**

இனி கமல் ஹவுஸ் மேட்ஸை சந்திக்கும் வைபவம். “நான் ஏன் வெல்ல வேண்டும்?” என்ற தலைப்பில் போட்டியாளர்களை பேசச் சொன்னார் கமல். சுஜா தான் உண்மையாக இருப்பதாகச் சொன்னார். தன்னுடைய வாழ்க்கை போராட்டமானது என்றார். கேரியரில் வெற்றியே பெற்றதில்லை இதிலாவது வெற்றிபெறவேண்டும் என்று நினைப்பதாகச் சொன்னார். சிநேகன் அரசியல் தலைவர்களைப் போல் உடையணிந்திருந்ததாலோ என்னவோ “வாக்காளப் பெருமக்களே” என்று தொடங்கி அரசியல் பிரச்சார தொனியிலேயே பேசிக்கொண்டிருந்தார். தான் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்றால் அந்த பணத்தில் 100 கிராமங்களுக்கு ‘பிக்பாஸ்’ நூலகம் அமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்தார். மக்களின் ஓட்டுகளைப் பெறுபவரே வெற்றி பெற முடியும் என்ற நிலையில், மக்களைக் கவர்வதற்காகத்தான் இப்படியான வாக்குறுதிகளை அளிக்கிறார் என்றால், அவர் யுக்தி சரிதான். இதுவரை அரசியல்களத்தில் ஜெயித்தவர்கள் எல்லாம் இப்படி வாக்குறுதிகளைக் கொடுத்துதானே ஜெயித்தார்கள்.  இந்த சந்தர்பத்தை கமலும் பயன்படுத்திக் கொண்டார், ‘எனக்கும் சில கனவுகள் இருக்கிறது. பணக்காரர்களும் கிராமத்தில் வாழும் அளவிற்கு கிராமங்களை வளர்த்தெடுக்கணும். இனி அன்னாடங்காட்சி மட்டும்தான் சிட்டிக்குள்ள இருக்கணும். சந்தர்பத்தை பயன்படுத்திக்கணும். வேறு ஒரு நடிகருக்குக் கிடைக்காத ஒரு வாய்ப்பு இந்த மேடை இது எனக்குக் கிடைச்சிருக்கு இதை எப்படி பயன்படுத்தணும்னு யோசிச்சிருக்கேன். பயன்படுத்தி இருக்கேன்’ என்று தன் பங்கு பிரச்சாரத்தை நிகழ்த்தினார்.  கமலின் ‘தலைவன் இருக்கிறான்’ படத்திற்காக தான் ஒரு பாடல் எழுதியிருப்பதாகச் சொன்னார் கவிஞர் சிநேகன். (அட ஆமா இவரு பாடலாசிரியர்ல… மறந்தே போச்சுங்க). பிறகு வாசித்தும் காண்பித்தார். 

சிநேகன்

கணேஷ் தன் உரையை சுருக்கமாக முடித்துக்கொள்ள, ஹரீஷ் பேச எழுந்தபோது, அரங்கத்தில் அவ்வளவு க்ளாப்ஸ். இன்றுதான் அசலான நபர் என்ற பட்டம் பெற்றிருக்கும்நிலையில் இந்த கைதட்டல்களைப் பார்க்கும்போது ஒன்று புரிகிறது. மக்களுக்கு ஒரிஜினலாக இருப்பவர்களைத்தான் மிகவும் பிடிக்கிறது. முன்பு ஓவியா இப்போது ஹரீஷ். சென்ற வாரம் கமல் உள்ளே வந்தபோது அந்த நிகழ்வை எஞ்சாய் பண்ண முடியாததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். வெளில வந்ததும் உங்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கணும் என்று ஹரீஷ் சொன்னதும், “எல்லா ஆம்பளைங்களும் இந்த ஆசைப் படாதீங்க” என்று கமல் குறும்பாக கலாய்த்தார். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் ரொம்ப மூடியா இருக்கீங்களே இப்படி இருந்தா மக்கள் எப்படி ஓட்டுப் போடுவாங்க என்றார் கமல். ஆனால், மக்களின் கைத்தட்டல், ஹரிஷுக்கு புது உத்வேகத்தைக் கொடுத்து இருக்கும் என்றே தோன்றியது


பிந்துவை சுந்தரத்தமிழில் பேசச்சொல்லி அழைக்க அவர், ‘மக்களே மக்களின் மக்களே’ என்றபோது  இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே!. யார் நல்லவரோ அவருக்கு வாக்களியுங்கள் என்று பிந்துசொல்ல இதுவே ஒரு ஸ்ட்ரேட்டஜியா என்று அவரையும் கலாய்த்தார் கமல். 

கணேஷ்

 

ஹவுஸ்மேட்ஸ் இதுவரை பெற்ற மதிப்பெண்களை வாசித்துக்காட்டினார் சிநேகன். சுஜா - 63, சிநேகன் - 53, கணேஷ் - 52, பிந்து - 45, ஹரீஷ் - 40, ஆரவ் - 37 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்கள்.

**

கமல், ‘இவர்கள் ஏன் ஜெயிக்கக்கூடாது? அவர்களுக்கு என்ன தகுதி இல்லை?’ என்று டாபிக் கொடுத்து அனைவரையும் பேசச் சொன்னார்.  ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி அடுத்தவரின் குறைகளைப் பட்டியலிட்டார்கள். ஆரவ், சுஜா உண்மையாக இல்லை என்று சொன்னபோது அரங்கத்தில் கைதட்டல். எல்லாருடைய குறைகளையும் சொல்லிக் கொண்டே வந்த பிந்து ஆரவ் பற்றி என்ன சொல்வது என்று யோசிக்க, ‘அப்போ ஆரவ்வையே ஜெயிக்க வைக்கலாமா?’ என்று கமல் கேட்டபோது, ஐய்யயோ நாந்தான் ஜெயிக்கணும் என்று சொன்னார். பிறகு ஒன்றும் தோன்றாததால் “தாடியை எடுத்தப்பறம் கேவலமா இருக்காரு..!” என்றார். கமல், உட்பட அனைவரையும் சிரிக்க வைத்தது பிந்துமாதவியின் பேச்சு. ஹரீஷ், ஆரவ்விடம் விளையாட்டுத்தனம் ஜாஸ்தி இருப்பதாக சொல்ல, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்று கமல் எடுத்துக் கொடுத்தார்.  ‘சிம்பதிக்காக கிராமத்தை பத்திப் பேசி ஓட்டுவாங்கப் பாக்குறாரு’ என்று கவிஞரைக் கவிழ்த்துவிட்டார்.(அதற்கும் அதிக கைத்தட்டல்). இதற்கு சிநேகன் சிரித்தாலும் உள்ளுக்குள் ‘பெர்பாமன்ஸ் பண்ண விடுடா’ என்று நினைத்திருப்பார். 

பிந்து மாதவி, சுஜா

 

அடுத்து சிநேகனின் முறை. ’சுஜா சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார். சந்தர்பவாதிகள் தலைமை ஏற்கக் கூடாது.. கணேஷூக்கு மக்களுக்கு ஒரு விஷயத்தை விளக்கும் தன்மை இல்லை… ஒரு தலைவன் அப்படி இருக்கமுடியாது.’ என்று அடுக்கிக்கொண்டே போக.. ‘நீங்க தலைமைப் பொறுப்பு தலைமை பொறுப்புனு சொல்றது பிக்பாஸ்லனு சொல்லிடுங்க இல்லைனா தப்பா நினைச்சுக்கப் போறாங்க’ என்று கமல் தன் வழக்கமான நக்கலை சேர்த்தார். அடுத்து சிநேகன் உதிர்த்த கருத்துதான் மெர்சலாக்கியது. பிக்பாஸ்ல வர்றவங்களுக்கு தலைவரா பிராகாசிக்குறதுக்கு சான்ஸ் இருக்கு என்றார் சிநேகன். தலைமைக்கான ட்ரெயினைங் இங்கு கொடுக்கப்பட்டதாக சொன்னார். எது மைதாவைப் பூசிக்கிட்டு சுத்துனது, கிழிஞ்ச பனியனைப் போட்டு சுத்துனதெல்லாமா? பிக்பாஸில் ஜெயிப்பதற்கும் தலைமைப் பண்புக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. ஒருவேளை ஓவியா உள்ளேயே இருந்திருந்தால் ஓவியாவை மக்கள் வெற்றிபெற வைத்திருப்பார்கள். இதைப் போட்டியாளர்களிலேயே பலர் ஒத்துக் கொண்டார்கள். அதற்கான காரணம் அவர் பழகுபவர்களிடம் உண்மையாக இருந்தார் என்பதாகவே இருந்திருக்கும். இதை மட்டுமே தலைமைப் பண்பு என்று சொல்லிவிட முடியுமா? ஆக மக்கள் பிக்பாஸ் வெற்றியாளரைத் தலைமைப் பண்பை பார்த்து முடிவு செய்வார்கள் என்று நினைப்பதே சரியல்ல… அதிலும் நீங்கள் பிக்பாஸில் ஜெயிப்பவர் அரசியல் தலைவராகவும் வர முடியும் என்கிற அளவிற்கு நினைப்பதெல்லாம்.. புண்ணாக்கு விக்குறவன் குண்டூசி விக்குறவன்லாம் தொழிலதிபராம் என்ற கவுண்டமணியின் வசனத்தைதான் நினைவூட்டுகிறது.

**

அடுத்ததாக ரேபிட் ஃபயர் ரவுண்டுக்குச் சென்றார் கமல். கமல் சொல்லும் வார்த்தைகளுக்கு உரிய நபரைச் சொல்ல வேண்டும்.  ‘ஆர்வக் கோளாறு’ ஆரவ், ‘சோக சுந்தரன்’ சிநேகன், ‘சோம்பேறி’ பிந்து, ‘சுயநலவாதி’ கணேஷ் என்று ஆளுக்கொரு பட்டம் பெற்றுக்கொண்டிருந்தார்கள். சுஜா சிநேகனை அழுமூஞ்சி என்று சொன்னபோது, ‘வசிஸ்டர் வாயால் பிரம்மரிஷி’ என்று கலாய்த்தார் கமல். ‘ஜெயிக்க என்ன வேணா பண்றவங்க யார்?’ என்று ஹரீஷைக் கேட்டபோது அவர் சுஜாவை கைகாட்டினார். ஆரவ், ஹரீஷ் இருவரில் யார் ஹேண்ட்ஸம் என்று தேர்ந்தெடுக்கும் கஷ்டமான வேலை பிந்துவுக்கு, அவர் ஆரவ்வை தேர்ந்தெடுத்தார். (ஏற்கெனவே அவர்மேல ஆம்பளைப் பசங்கள்லாம் காண்டுல இருக்காய்ங்க இதுல நீங்க வேற).  

பிக் பாஸ் தமிழ்

 

சிநேகன் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தேர்வாகிவிட்டபடியால் அவர் டாஸ்க் மூலம் பெற்ற பாயின்ட்கள் அவருக்கு உபயோகப்படாது என்பதை கமல் கூற, ‘வேற யாருக்காவது என் பாயின்ட்ஸை கொடுத்து உதவமுடியும்னா தந்துடுறேன்’ என்று பெருந்தன்மையாக முன்வந்தார் சிநேகன். யாருக்கு தேவையோ அவருக்குக் கொடுக்கலாம், இந்த வார எவிக்சனில் மக்களிடம் குறைவான  ஓட்டுக்களைப் பெற்றவர்கள் சுஜாவும், கணேஷூம் இவர்கள் இருவரில் யாருக்காவது உங்கள் பாயின்ட்ஸைக் கைமாற்றிவிடுங்கள் என்று கூறினார் கமல். சிநேகனும் இந்த பாயிண்ட்களை சும்மா பெற்றுவிடவில்லை. இரண்டு பகல் ஓரிரவு முழித்திருந்து, பாயில் படுத்து என பல தவம் இருந்து சிநேகன் பெற்ற வரம் அவை.  அதனால் நன்கு ஆலோசித்து நாளைக்கு முடிவைச் சொல்லுங்கள் என்று கூறிவிடைபெற்றார் கமல்.

**

சிநேகன் கமல் எடுக்கப்போகும் ‘தலைவன் இருக்கிறான்’ படத்திற்காக தான் எழுதியதாகச் சொன்ன ‘வாடா தோழா வாடா’ கவிதையில் இப்படி ஒரு வரி எழுதியிருந்தார். 

‘என்றோ தொடங்கிய சத்தியசோதனை இன்றும் தொடருது புரிகிறதா’. 

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைப் பொறுத்தவரை சத்திய சோதனை யாருக்கு கவிஞரே.. போட்டியாளர்களுக்கா.. கமலுக்கா.. இல்லை பார்த்துக்கொண்டிருக்கும் மக்களுக்கா?  

பிக் பாஸ் நிகழ்ச்சி தன் 90வது நாளையும் கடந்துவிட்டத்உ. இருக்கும் ஆறு போட்டியாளர்களில், யார் சோம்பேறி, அழகு, சுயநலவாதி போன்ற கேள்விகளை வைத்து ரேபிட் ஃபயர் ரவுண்ட் விளையாடினார் கமல். உங்களைப் பொறுத்தவரையில், யாருக்கு என்ன பட்டம் கொடுப்பீர்கள்?. உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/103147-guess-the-characters-of-bigg-boss-contestants-happenings-of-bigg-boss-day-90.html

Link to comment
Share on other sites

சுஜா பாவம்...ஆனா, கடைசி வாரம் இன்னும் மோசமாம்! 91-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

 

bigg boss tamil

 

சனிக்கிழமை கமலைச் சந்தித்து முடித்த பிறகான காட்சிகளில் இருந்து நேற்றைய நிகழ்ச்சி தொடங்கியது. எல்லாரும் எழுந்து செல்ல சுஜா அப்படியே படுத்துவிட்டார். சனிக்கிழமை கமல் முன்பு எல்லா போட்டியாளர்களும் சுஜாவை ஃபேக் என்று குறிப்பிட்டது. சுஜாவைப் பற்றி நெகட்டிவாக சொல்லும்போது மக்களிடமிருந்து வந்த கைதட்டல்கள் இதெல்லாம் சுஜாவை மனதளவில் வெகுவாக காயப்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. கணேஷிடம் தனது புலம்பல்களைக் கொட்டிக் கொண்டிருந்தார். ’நான் உண்மையாக இருந்தா மட்டும் பேசுங்க.. இல்ல, நான் பொய்யா தான் இருக்கேன் நினைச்சீங்கன்னா, எங்கிட்ட பேசுறத நிப்பாட்டுங்க.  வீட்டுல இருக்குறவங்க என்கூட ஒழுங்கா பேசுங்க.. வெளில மக்கள் எப்படி நினைச்சாலும் அதை நான் பாத்துக்குறேன்’ என்று தான் முன்னமே சொன்னதை இப்போதும் நினைவூட்டினார். எனக்கு இதெல்லாம் பழகிடுச்சு என்று சொன்னதோடு ‘என் தலைல எவ்ளோ முடி இருக்கோ அவ்ளோ பிரச்சனை இருக்கு’ என்று ஃபீலிங்ஸ் காட்டினார்.

சுஜாsuja

சுஜா சிநேகனிடம் தனக்கு பாயின்ட்ஸைக் கொடுக்கும்படி கேட்டால் எப்படி கேட்பார் என்று ஆரவ் வழக்கம்போல இமிட்டேட் செய்துகாட்டினார். மற்ற நாளாக இருந்தால் ரசித்திருக்கலாம். அந்தப் பக்கம் சுஜா ஃபீலிங்கில் இருக்கும்போது எப்படி ரசிக்க முடியும்? 

உண்மையில் மிக தர்மசங்கடமான சூழலில்தான் தள்ளப்பட்டிருக்கிறார் சிநேகன். தாடியின் ஆக்கிரமிப்பு போக மீதி இருந்த அவர் முகத்தை இப்போது குழப்பம் ஆக்கிரமித்திருந்தது. ஐந்து பேரில் ஒருவருக்கு கொடுக்கலாம் என்றிருந்தால் தான் இவ்வளவு யோசித்திருக்கமாட்டேன் என்று பிந்துவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ’யாருக்கு கொடுக்கணும்னு நினைக்கிறேனோ அவங்களுக்கு கொடுக்க முடியலை’ என்பது அவரின் கூடுதல் வருத்தம். அப்படியானால் சிநேகன் அந்த பாயின்ட்டை ஹரீஷ், பிந்து, ஆரவ் மூவரில் யாருக்கோ கொடுக்கலாம் என்ற முடிவில் இருந்திருக்கிறார். ஆரவ் பாயின்ட்ஸ் கம்மியாக எடுத்திருந்ததால் அவருக்குக் கொடுக்கலாம் என்று நினைத்திருக்க வாய்ப்புண்டு. அது யார் என்பதை பிந்துவும் கணித்தார்போல.. ‘எனக்கும் ஒரு பேர் தோணுது.. ஆனா இப்போ சொல்லமாட்டேன்’ என்றார். சுஜா, கணேஷ் இருவரையும் சிநேகனிடம் சென்று மதிப்பெண் சேகரிக்கச் சொல்லி இறுதி சந்தர்ப்பம் ஒன்றை வழங்கினார் பிக்பாஸ். சுஜாவுக்கு சிநேகன் மதிப்பெண்களைக் கொடுக்காவிட்டாலும் டாஸ்க்களின் மூலம் அவர்தான் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தார் என்பதால் அவரை வெளியேற்றமுடியாது என்று ஹரீஷூம் ஆரவ்வும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  கருடபுராணத்தில் வரும் தண்டனைகளையெல்லாம் டாஸ்க்குகளாக வைத்து போட்டியாளர்களை நொங்கெடுத்து வழங்கிய பாயின்ட்ஸ் இதுவரை  சிநேகனைத் தவிர வேறு யாருக்கும் எதற்கும் பயன்பட்டதாகத் தெரியவில்லை. அதிகமான பாயின்ட்ஸ் எடுத்திருந்தும் சுஜாவும், கணேஷூம் வெளியேற்றத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். பிறகு எதற்கு இந்த பாயின்ட்ஸ்? இனிவரும் நாட்களில் பயன்பட்டால் மகிழ்ச்சி. பிக்பாஸூம் மோடியைப் போல ஒரே அறிவிப்பில் இனி அதெல்லாம் செல்லாது என்று அறிவித்துவிட்டால் என்ன செய்வது?

சுஜா, கணேஷ், சீநேகன்


**
சிநேகனுக்கு இருவருக்குமே ஏன் கொடுக்கலாம் என்பதற்கு ஒரு காரணம் இருந்தது. கணேஷ் ஒரு முறை தனக்குக் கிடைத்த க்யூ கார்டை பயன்படுத்தி சிநேகனை எவிக்சனில் இருந்து காப்பாற்றினார். அதனால் கணேஷூக்குக் கொடுக்கலாம். ஆனால் கணேஷூக்கு கொடுத்தால் அவர் தனக்கு டஃப் கொடுக்கக்கூடிய போட்டியாளராக இருப்பார் அதேசமயம் சுஜாவை எளிதில் வெல்லமுடியும் என்று ராஜதந்திரமாக யோசித்து சுஜாவிற்கும் தனது பாயின்ட்ஸைக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில்தான் கணேஷூம், சுஜாவும் சிநேகனை கன்வின்ஸ் செய்யவேண்டும்.  ’தகுதியான ஒருவருக்குத்தான் அந்த பாயின்ட்ஸை கொடுக்கணும். ஒருமுறை எனக்கு யாரைக் காப்பத்தணும்னு வந்தப்போ நீங்க தகுதியானவர்னுதான் உங்களைக் காப்பாத்தினேன்.’ என்று தான் செய்த உதவியை மிக நாசூக்காக சிநேகனுக்கு நினைவூட்டினார் கணேஷ். ’90 நாளுக்கு மேல உங்களோட ட்ராவல் பண்ணிருக்கேன். என்னைப் பத்தி எல்லாமே உங்களுக்குத் தெரியும்’ என்று தான்தான் சிநேகனுடன் முதல்நாளில் இருந்து உடனிருப்பதையும் சுஜா நடுவில்தான் வந்தார் என்பதையும் போகிற போக்கில் போட்டுவிட்டார். ’நீங்க எல்லா கரெக்டான டெசிசன் எடுப்பீங்கனு நம்புறேன்’ என மிக நேர்த்தியாக நெய்யப்பட்ட தனது உரையை முடித்தார். இதை உடைத்து இன்னும் ஸ்ட்ராங்காக தன் வாதத்தை வைக்கவேண்டிய இடத்தில் இருந்தார் சுஜா. ’இந்த வீட்டுக்குள்ள முதல் பழகுனது உங்ககிட்டதான். கம்மியான நாட்கள் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் உண்மையாதான் இருந்திருக்கிறேன்’ என்று அவர் சொன்னது திரும்பவும் புலம்பல்களாகவே இருந்தது. நேர்மையாக இருந்தது.. டாஸ்க்கை சீரியஸாக எடுத்து செய்தது என்று தனக்கு இருக்கும் தகுதிகளைப் பட்டியலிட்டார். மீண்டும் தான் அதிக வலிகள் பெற்றதாகக் கூறினார். என்னதான் சொன்னாலும் அவரின் வாதம் தராசுத் தட்டில் கனமின்றி தொங்கிக்கொண்டிருப்பதாகவே பட்டது. இருவரில் யாருக்கு அந்த மதிப்பெண்ணைக் கொடுத்தாலும் நட்பு அப்படியேதான் தொடரும் என்று இருவருமே உறுதியளித்தார்கள். 


ஏற்கெனவே குழம்பியிருந்த சிநேகனை இருவரின் வாதமும் இன்னமும் குழப்பியிருக்கும். தன் கையில் இருக்கும் லகான் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்த சிநேகன், இன்னும் ஆழ்ந்து யோசிக்கவேண்டும் என்றும், பிக்பாஸிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றும் கூறினார். பின்பு வாக்குமூல அறைக்குச் சென்று ‘இந்த மதிப்பெண்களை நான் யாருக்கும் கொடுக்காமலும் இருக்கலாமா?’ என்று தன் சந்தேகத்தைக் கேட்க, அவர் ‘உங்கள் மதிப்பெண் உங்கள் முடிவு’ என்று பாலை அவர் பக்கம் திருப்பிவிட கன்பஷன் ரூமில் இருந்து கன்ஃப்யூசனுடன் வெளியே வந்தார். ஏற்கெனவே இவருக்குக் கொடுக்கலாமா அவருக்குக் கொடுக்கலாமா என்ற இரண்டில் எதைத் தொடலாம் எனக் குழம்பிக் கொண்டிருந்தவருக்கு இப்போது யாருக்கும் கொடுக்காமல் தானே வைத்துக்கொள்ளலாமா என்று மூன்றாவதாக ஒரு குழப்பமும் சேர்ந்துகொண்டது.

கமல்

 

 படுக்கையறையில்  சுஜா தனிமையில் அமர்ந்திருக்க.. பிந்து அவரிடம் எதையோ கொடுத்துச் சென்றார்.. (முன்பு சுஜா பிந்துவுக்குக் கொடுத்த கிஃப்டைத்தான் இப்போது பிந்து திருப்பிக் கொடுத்தார் என்பதை பின்பு சுஜா கமலிடம் பேசும்போது குறிப்பிட்டார்).
**
வெள்ளுடை வேந்தராக கமல் அரங்கத்திற்கு வந்தார். ஒரு டஜன் ஞாயிறுகளை சந்தித்துவிட்டோம். இது 13 வது ஞாயிறு.. இதுக்கப்பறம் ஞாயிறு கிடையாது என்று சொல்லி நிறுத்தி அந்த ஞாயிறைச் (சூரியனை) சொல்லல என்று மேல்நோக்கி கையைக் காட்டினார். அகம் டிவி வழி ஹவுஸ்மேட்ஸூடன் பேசலாம் என்று சொல்லி மேஜிசியன் போல விரல்களை ஆட்ட, லிவிங் ஹாலில் இருக்கும் டிவியில் கமல் தோன்றினார். தானே வைத்துக்கொள்ளலாம் என்ற சிநேகனின் சிந்தனையைக் கலைக்கும் வண்ணம் தனது பேச்சைத் தொடங்கினார் கமல். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த உதாரணம் மிகப்பொருத்தம்.  ‘நீங்கள் தரப்போவது கர்ண கவசத்தை அல்ல.. அந்த பாயின்ட்ஸ் உங்களுக்கு கவசமாக இருக்கப்போவதில்லை. அதனால் இதை யாருக்காவது கொடுப்பதால் எந்த உங்களுக்கு பாதகமும் இல்லை’ என்று விளக்கினார்.  உதாரணங்கள் சொல்வதில் கமலை மிஞ்ச ஆள் இல்லை.   அதற்கு உதாரணங்களாக மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் ‘நான் ஏசி ரூம்ல இருக்குற ஃபேன் மாதிரி’ வசனம். அன்பே சிவம் படத்தில் ‘கதிர் அறுத்ததும் அருவாளைத் தூக்கி ஓரமா வச்சிடுவோம் ஆணியடிச்சதும் சுத்தியலையும் அதைதான் செய்வோம் நானும் அதுமாதிரி ஒரு கருவிதான்’ என்ற வசனங்களைக் குறிப்பிடலாம். இந்த விஷயத்தில் கமல் ஒரு ‘உதாரண புருஷர்’ (அப்படி சொன்னால் அடிக்க வருவாய்ங்களோ!?).

சுஜா


சிநேகன் தனது மதிப்பெண்களை யாருக்குக் கொடுக்கவேண்டும் என்று மற்றவர்களிடம் கருத்துக் கேட்டார். ஹரீஷைத் தவிர அனைவரும் கணேஷையே சொன்னார்கள். ஹரீஷ் மட்டும் சுஜாவின் பெயரைச் சொன்னார். ஓவர் டூ சிநேகன். முன்பு கணேஷ் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிநேகனை எவிக்சனில் இருந்து காப்பாற்றியதை நினைவு கூர்ந்தார். அதோடு ஒரு டாஸ்க்கில் சோப்பு நுரையை தெரியாமல் அவர் கண்களில் ஊற்றிவிட தனக்காக அதைப் பொறுத்துக் கொண்டதையும் சுட்டிக்காட்டினார். இந்த இரண்டு காரணங்களுக்காக தன் பாயின்ட்ஸைக் கணேஷூக்குத் தருவதாகச் சொல்ல அரங்கத்தில் கைதட்டல் வெகுநேரம் ஒலித்தது. சரியான நேரத்தில் செஞ்சோற்றுக்கடன் தீர்த்துக் கொண்டார் சிநேகன். கணேஷ், என்றோ செய்த ஒரு உதவி இப்போது தன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தியில் இருந்து தன்னை விடுவிக்கும் என்பதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். (நிஜமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாழ்க்கைக்கான பாடம் கிடைக்கும்போல).


அதோடு சுஜாவை தான் அவாய்ட் பண்ணவில்லை என்று ஆறுதல் சொன்னதோடு ‘கவிதாயினி’ என்று சொல்லி வலியில் இருக்கும் சுஜாவுக்கு  ’ஐஸ்’ ஒத்தடம் கொடுத்தார். சுஜா ’இது நியாயமான தீர்ப்புதான். கணேஷ் இதற்குத் தகுதியானவர்தான்’ என்று ஒத்துக்கொண்டார். ’வருத்தம் உண்டா?’ என்று கமல் கேட்டதற்கு ‘அடிபட்டா வலிக்கும்தானே சார்’ என்று மீண்டும் ஒரு தத்துவ முத்தை உதிர்த்தார்.சிநேகன் கணேஷூக்கு மதிப்பெண்களைக் கொடுத்ததற்காக அவர் சொன்ன காரணத்தை போட்டியாளர்கள் அனைவரும் 100 சதவீதம்  ஏற்றுக்கொண்டார்கள். இன்னொரு தருணத்தையும் சிநேகன் நினைவுபடுத்தினார். அது ஆரவ் சின்ன பிக்பாஸாக இருந்தபோது தன்னை எவிக்சனில் இருந்து காப்பாற்றியதால் தான் பிந்துவையோ.. ஆரவ்வையோ நாமினேட் செய்யவேண்டிய நிலையில் ஆரவ்வை நாமினேட் செய்யாமல் இருந்ததை எடுத்துரைத்தார். எனக்குத் தெரிஞ்ச நியாயத்தை நான் செய்கிறேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார் சிநேகன். (இனி மக்கள் ஓட்டுதான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்ற நிலையில் பிரச்சார தொனியில் பேசுகிறாரோ என்றும் தோன்றியது). 

சுஜா


கமல் சுஜாவுக்கு தங்கள் செய்திகளை பகிர்ந்துகொள்ளும்படி போட்டியாளர்களைக் கேட்டுக்கொண்டார். ஆரவ் ‘ஆல் தி பெஸ்ட்’ என்று ஒரே வார்த்தையில் முடித்தார். இந்த வாரம் முழுக்கவே சுஜாமீது பயங்கர வெறுப்பைக் காட்டிவந்தவர் வேறு என்ன சொல்வார்? ’அவசரத்தைக் குறைங்க’ என்று சிநேகன் அட்வைஸ் வழங்கினார். ’க்ல்யாணத்துக்கு கூப்பிடுங்க’ என்று கணேஷூம் பிந்துவும் கேட்டுக்கொண்டார்கள். ஹரீஷ் மட்டும் அவரை மிஸ் பண்ணப்போவதாகச் சொன்னார். சுஜாவுக்கு கண்கள் துளிர்த்தது. 
சுஜா டாஸ்க்குகளை சிறப்பாக செய்ததற்காக கமல் பாராட்டினார். ’இது தோல்வியில்ல.. வெற்றிக்குக் கிட்ட வந்துட்டிங்க.. வாசனை வந்துடுச்சு அடுத்தமுறை டேஸ்ட் பண்ணிடலாம்’ என்று சமாதானப்படுத்த முயன்றார். அப்போதும் சுஜா அழுமூஞ்சி லுக்கிலேயே இருக்க.. ’இன்னும் கூட உங்களை சிரிக்க வைக்கணும்னா.. வெளில போய் யாரைப் பார்க்கணும்னு ஆவலா இருந்தீங்களோ அவங்களைப் பார்க்க போறீங்க’ என்றார். அப்படிச் சொன்னாலாவது உற்சாகமாவாரா என்று பார்ப்பதற்காகச் சொன்னார்.. ஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையா ’இல்ல சார் 100 நாள் முடியுற வரைக்கும் அவரைப் (அவர் திருமணம் செய்துகொள்ளப் போகிறவரை) பாக்கப்போறதில்லை’ என்று மீண்டும் சோக மூடுக்கு போனார்.
பிறகு சம்பிரதாய நிகழ்வுகளான போர்டில் எழுதுவது, செல்ஃபி எடுப்பது போன்றவை அரங்கேறியது. போர்டில் அழுவது போல் கண்கள் வரைந்தார் சுஜா. ஆனந்தக் கண்ணீர்தானாம். எவரும் அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல், அட்வைஸ்களை அள்ளித் தெளிக்காமல் குறுகிய நேரத்தில் வெளியேறினார். 
**


’எனக்கென்னமோ திரும்ப வந்துடுவாங்களோனு தோணுது’ என்றார் சிநேகன். ஆமாம் ஏற்கெனவே இப்படித்தானே வெளியேறி சீக்ரெட் ரூமில் வைத்திருந்து ஒருநாள் கழித்து மீண்டும் உள்ளே அனுப்பினார்கள். ஆனால் இறுதி வாரத்தை எட்டிவிட்ட நிலையில் அப்படி நடக்க வாய்ப்பில்லை. சிநேகன், கணேஷ் பெயரைச் சொன்னபோது மக்களிடம் கிடைத்த வரவேற்பால் தான் எடுத்த முடிவு சரியானதுதான் என்று மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று திருப்திபட்டுக்கொண்டார். சுஜா இங்க இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க அதனால தான் அவங்க பெயரைச் சொன்னேன் என்று ஹரீஷ், கணேஷிடம் விளக்கினார். ஹரீஷ் செய்ததும் சரிதான் ஒருவர்கூட தனக்கு சாதகமாக பேசவில்லை என்றால் இன்னும் உடைந்துபோயிருப்பார் சுஜா. கணேஷூம் அதைப் புரிந்துகொண்டு வரவேற்றார். முதல் தடவை அவங்க எவிக்ட்னு சொன்னப்போ எப்படி அழுதோம் இப்ப யாருமே ஃபீல் பண்ண மாதிரியே தெரியலையே என்று பேசிக்கொண்டார்கள். ஹரீஷூக்கு கண்கள் கலங்கியது. இந்த வார டாஸ்க்குகள்தான் அவரை எல்லாருக்கும் பிடிக்காமல் போன காரணமோ!?

சுஜா


**
மீண்டும் மேடைக்கு வந்த கமல், சுஜாவை அழைத்தார். அவருக்கும் சுஜாவுக்குமான உரையாடல் தொடங்கியது. ’பிக்பாஸ் எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்தது?’ என்று ஏற்கெனவே 10 முறைக்கு மேல் கேட்ட அதே கேள்விதான் இவருக்கும் முதல் கேள்வி. வித்யாசமான பல கேரக்டர்களைச் சந்தித்ததாக, நேர்மையான மனிதர்களைச் சந்தித்ததாக தனது அனுபவங்களைப்   பகிர்ந்துகொண்டார். இப்போது வரை யாரையும் முழுமையாக புரிந்துகொள்ளமுடியவில்லை. இன்னும் குழப்பமாகத்தான் இருப்பதாகச் சொன்னார். மனிதர்கள் என்ன கணித சூத்திரங்களா அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ள?. பிக்பாஸ் பாத்துட்டு யார் யார் எப்படினு தெரிஞ்சுகிட்டுதான் உள்ளே போனேன் ஆனா உள்ளே போனா எல்லாம் வேற மாதிரியா இருக்கு.. என்றார். யாருக்குமே இங்க நிலையான கேரக்டர் இல்ல... ஒரு நாள் மண்டே ஒருநாள் ட்யூஸ்டேங்குறமாதிரி கேரக்டரும் ஒவ்வொருநாளும் மாறும் என்று அடுத்த தத்துவத்தை அள்ளித் தெளித்தார் (தலையில எவ்ளோ முடி இருக்கோ அவ்ளோ தத்துவம் சொல்லிட்டீங்க மேடம்).
சுஜா ஓவியாவைப் போல் நடந்துகொள்ள முயற்சிக்கிறார் என்ற விமர்சனம் அவரை வெகுவாக காயப்படுத்தியிருக்கிறது. ஒருத்தரோட இடத்துல  நான் இருக்குறேன்னா அவரை மாதிரியே நடிக்கிறேன்னு அர்த்தம் கிடையாது என்று தெளிவுபடுத்தினார். கார் டாஸ்க், பலூன் உடைக்கும் டாஸ்க்குகளில் தான் பட்ட கஷ்டங்களையும் பகிர்ந்துகொண்டார். அந்த டாஸ்க்கில் சிநேகன் நேர்மையாக விளையாடவில்லை என்று புகார் வாசிக்க, ‘அப்போ வீட்ல யாராவது ஏமாத்துறாங்களானு நான் கேட்டப்போ ஏன் அவர் பெயரைச் சொல்லல?’ என்று மென்மையாக கடிந்துகொண்டார் கமல். ’வீட்டுல ஒருநாள் கூட நிம்மதியா தூங்குனதில்ல... பிக்பாஸ் வந்த முதல் நாள்தான் நிம்மதியா தூங்குறேன்’ என்று மீண்டும் வயலின் வாசித்தார். 

கமல்


**
ஆடியன்ஸ் கைகளில் மைக் தரப்பட்டது. ’பேய்னா பயம்னு சொன்னீங்க ஆனா கோல்டன் டிக்கெட் டாஸ்க்ல இருட்டுல தைரியமா தேடுனீங்களே?’ சொல்லு லதா... அதெல்லாம் நடிப்பா என்று முதல் பாலிலேயே அட்டாக்கை ஆரம்பித்தார்கள். ’அப்பவும் பயமாதான் இருந்தது கமல்சார் தைரியமா இருக்கணும்னு சொன்னதால செத்தாலும் பரவாயில்லனு பண்ணேன்’ என்றார். அடுத்த கேள்வி க்ரூப்பிசம் பற்றி வந்தது.  ‘ கணேஷூக்கும் உங்களுக்கும் மட்டும்  பாயின்ட்ஸ் வர்றமாதிரி டாஸ்க் பண்ணீங்களே.??’ என்று கேட்க, ‘நானே அவர் முட்டைய எப்படி உடைக்கலாம்னுதாங்க பாத்துட்டு இருந்தேன்’ என்றார். (அடி பாதகத்தி..!).
அடுத்த கேள்வி இன்னும் ஃபோர்ஸாக வந்தது. ‘ரொம்ப சுயநலமா இருக்கமோனு தோணலையா?’ என்றார் ஒருவர் கேட்க, ’அதுல தப்பில்லையே’ என்று சுஜா சொல்ல.. ’அதனாலதான் எவிக்ட் ஆகி இங்க இருக்கோம்னு தோணலையா?’ என்று மீண்டும் இன்னொரு அஸ்திரத்தை எய்தினார். உங்க பார்வைக்கு அப்படித் தெரியுது என்று ஆனா நான் செல்ஃபிஷா இல்ல என்று மழுப்பினார். சீக்ரெட் ரூம் எக்ஸ்பீரியன்ஸ், கார் டாஸ்க் என மாற்றிமாற்றி கேட்ட கேள்விகளுக்கு தனக்கு தோன்றிய பதில்களைச் சொன்னார். " உங்கள மாதிரி அங்க இருந்த எந்த பெண் போட்டியாளர்களும் போராடுனது இல்ல. உங்க போராட்டத்திற்கான பாதை தான் தப்போன்னு தோணுது. அத மட்டும் மாத்திக்கிட்டீங்கன்னா, வெற்றி உங்கள் வசம்" என்றார் ஒருவர். அதை சுஜாவும் ஆமோதித்தார். இனியாவது சுஜாவுக்கு புரியும் என நம்புவோமாக.
உண்மையாக இருப்பவர் யார் என்ற கேள்வி வந்தது. மற்ற நேரங்களில் எல்லாம் நல்லா இருக்காங்க டாஸ்க் பண்ணும்போது மட்டும் அவங்களோட வேற முகம் வெளிப்படுது என்றார் சுஜா. இது பிக்பாஸூக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் ஒருவருடைய நெகட்டிவிட்டி அப்போதுதான் வெளிப்படும். கமல் இதைத் தெளிவு படுத்தினார். ‘உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கலாம் பிடிக்காமலும் இருக்கலாம். நான் டைரக்ட் பண்ணும்போது இப்போது இருக்குற மாதிரி இப்படியே இருக்கமாட்டேன். அதுக்காக அது வேற முகம் இல்ல.. வேற கடமை.. வேற நிலை’ என்றார். ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கம். ஒரு சமயம் பிந்துவை ஏமாற்றி ப்ராங்க் செய்ததற்காக வருத்த ப்பட்டு ’ஸாரி’ என்று எழுதி அவருக்கு ஒரு கிஃப்ட் கொடுத்ததையும் அதை கிளம்பும்போது திருப்பிக் கொடுத்துவிட்டதையும் எண்ணி வருத்தப்பட்டார். பிடிக்கவில்லையென்றாலும் கூட அந்த கிஃப்டை பிந்து திருப்பித்தராமல் இருந்திருக்கலாம். ஆரவ், சிநேகன் இருவருக்கும் வெற்றிவாய்ப்புகள் இருப்பதாகச் சொல்ல அரங்கத்தில் கைதட்டல்.


‘100 நாள் முடிஞ்சப்பறம்தான் வீட்டுக்கு போவேன்னு சொல்றீங்க.. தோத்துட்டமேன்னு நினைக்குறதாலயா? தோல்வியை தைரியமா கொண்டு போற இடம் அன்பு இருக்குற இடம்தான். கஷ்டப்பட்டு எடுக்குற படம் தோத்துப் போச்சுனா மேடைல சொல்லி கவலைப்பட மாட்டேன். யார் என் மேல கரிசணமா இருக்காங்களோ அவங்ககிட்ட சொல்லுவேன்’ என்று தன் வாழ்க்கை அனுபவங்களைச் சுஜாவுக்கு சொல்லிக் கொடுத்தார் கமல். வெளில இருந்து நிகழ்ச்சிய பாத்துட்டு இருந்திருப்பீங்க ஆனா இந்த மேடைல வந்து நின்னுட்டு இருக்கீங்க இதுவே பெரிய வெற்றி இல்லையா? சுஜாவுக்காக கைதட்டுங்கனா இவங்க தட்டப்போறாங்க என்று கேட்டுவாங்கிய கைதட்டை சுஜாவுக்கு டெடிகேட் செய்தார். கைத்தட்டலின் போது, சுஜா தன்னையறிமால் அழ அதைத் தான் நடித்த சலங்கை ஒலி படத்தின் காட்சியோடு ஒப்பிட்டது அருமை. படத்தின் இறுதிக் காட்சியில், தன் வாழ்நாள் எல்லாம் மேடையில் ஜொலிக்க நினைத்த நாயகன், சக்கர நாற்காலியில் வருவான். அரங்கம் நிறைந்த அந்த இடத்தில் கைத்தட்டல்களை முதல்முறையாக அனுபவிப்பான் நாயகன். அவனுக்கு வெற்றியின் ருசி இறக்கும் தருவாயில் தான் கிடைக்கும். மேலும் மேலும் தட்டுங்கள் என அவனது கைகள் தன்னையுமறியாமல் அசைக்கும். சமீபத்தில் சலங்கை ஒலி படத்தின் இயக்குநர் விஸ்வநாத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்த போதும், தனக்கு மிகவும் பிடித்த இந்த காட்சியை பகிர்ந்து கொண்டார் கமல். ஒரு கலைஞனாக கைத்தட்டலுக்கு ஏங்கும் மனம் அது என்பதை கமல் விளக்கினார். கமலின் கண்களும் கலங்கி இருந்தது. இந்த கைத்தட்டலுக்கு இருக்கும் மதிப்பு காசுக்கு கிடையவே கிடையாது. இதற்காக பொறாமைப்படும் கலைஞர்கள் வெளியில் காத்துக்கிடக்கிறார்கள் என்றார் கமல். அது ஒருவகையில் உண்மை தான். 

சுஜாவுக்கான குறும்படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. அவர் அந்தரத்தில் பறந்துவந்து இறங்கியதைப் பார்த்து அடப்பாவிகளா இவ்ளோ உயரத்துலயாடா தொங்கவிட்டீங்க என்று ஆச்சர்யப்பட்டார். ஹவுஸ்மேட்ஸ் அவரை ராகிங் செய்த காட்சிகள், கவிதை சொன்ன காட்சிகள், (அவர் கவிதையைக் கேட்டு அவரே தலையில் கைவைத்துக்கொண்டார்... ஹைய்யா ஊருக்குள்ள கவிஞர்கள் எண்ணிக்கைல ஒண்ணு குறைஞ்சது). அடுத்ததாக சுஜா தன் அப்பாவுக்காக அழுத காட்சிகளையெல்லாம் பனித்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருக்க, ‘உங்கப்பா வரலைனா நான் வர்றேன்’ என்று கமல் சொன்னதை மீண்டும் பார்த்தபோது அதுவரை அடைபட்டிருந்த கண்ணீர், அணை உடைத்து வெளியேறியது. 
சுஜா பிக் பாஸ் வீட்டில் குக்கிங்கில் இருந்து க்ளீனிங் வரை சுறுசுறுப்பாக வேலை செய்தார். கொடுக்கப்பட்ட டாஸ்க்குகள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் சவாலாக ஏற்று செய்தார். ஆனால் எப்போதும் அழுமூஞ்சியாக இருக்கிறார். அப்பாவுக்காக அழுதால் ஓக்கே.. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம்கூட அழுததுதான் அவரை மற்ற போட்டியாளர்களிடம் இருந்து அந்நியமாக்கியது. நிறைய அழுவதாலேயே கூட அவரை ஃபேக் என்று பிறர் நினைத்திருக்க வாய்ப்புண்டு. சுஜா, சிநேகனுக்கு ’அழுமூஞ்சி’ என்று சர்டிஃபிகேட் கொடுத்தபோது கமல்கூட ‘வசிஸ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்’ என்று கலாய்த்தார். இனியாவது சோகக் காரில் இருந்து கீழே இறங்குங்கள் சுஜா. டாஸ்க்கிற்காக உடல் முழுக்க மைதா மாவை பூசிக் கொண்டு சுற்றினீர்கள் இனி வாழ்க்கைக்காக மனம் முழுக்க பாசிட்டிவிட்டியை பூசிக் கொண்டு சுற்றுங்கள். திருமண வாழ்த்துகள் சுஜா..!

சுஜா


விடைபெறும் முன், ‘என் கல்யாணத்துக்கு வாங்கப்பா’ என்று கமலை அழைக்க... அவரும் வருவதாகக் கூறி வழியனுப்பிவைத்தார்.
**

அடுத்த ஞாயிறு இறுதிப் போட்டியாம். அடுத்தமுறை உங்களை இந்த மேடையில்தான் சந்திக்கப் போகிறேன் என்று போட்டியாளர்களுக்குக் கூறினார் கமல். அந்த வெற்றி விழாவிற்கு நான்கு பேர் மட்டுமே இருக்க முடியும். ஒருவர் சனிக்கிழமையோ அல்லது அதற்குமுன்போ வெளியேற்றப்படுவார். ஹைய்யா அடுத்தவாரம் வீட்டுக்குபோறோம் என்று குஷியானார் ஆரவ். போனவாரம் மாதிரியே இந்தவாரமும் மண்டே டாஸ்க் கொடூரமா இருக்கப்போகுது பாத்துக்கோங்க என்று அலர்ட் மோடில் இருந்தார் ஹரீஷ். அப்படியெல்லாம் இருந்தா ஃபைனல்ஸூக்கு நொண்டி நொண்டிதான் போகணும் என்று நடித்துக்காண்பித்தார் சிநேகன்.
இனி நாம் போடப்போகும் ஓட்டுகள் வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுகள் என இன்றும் நினைவூட்டினார் கமல். ’வெற்றியாளர் எப்படி இருக்கவேண்டும் என்று யோசித்து முடிவு செய்யுங்கள்.. சூழ்ச்சிக்கா, நேர்மைக்கா.... கடின உழைப்புக்கா... தியாகத்துக்கா.. வெற்றியாளரை நீங்கள் எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் என்ற விதத்தில்தான் உங்களின் தரம் அமையும். உங்கள் தேர்வு உங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. ஓட்டு விளையாட்டெல்லாம் இனி விளையாடமுடியாது’ என்று சொல்லிவிட்டு கொஞ்சம் நிறுத்தினார். அடுத்து என்ன சொல்லியிருப்பார்.. அதேதான்.  ‘என்ன ஒரு மாதிரி பாக்குறீங்க நான் இந்த மேடையைச் சொல்லிட்டு இருக்கேன்’ என்றார்.

பிக் பாஸ் தமிழ்

 

கமல் சாதுர்யத்தின் முதல்வர். 

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/103213-final-week-of-biggboss-starts-happenings-of-bigg-boss-day-91.html

Link to comment
Share on other sites

"ஓவியா ShutUp எவ்ளோ ஹிட்னு தெரியுமா ஆரவ்?" ஜாலிகேலி அஞ்சலி 92-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 

bigg boss tamil

 

ரொம்ப நாளைக்குப் பிறகு பிக்பாஸில் சண்டை, சச்சரவு இல்லாத சந்தோசமான ஒரு நாளாக இருந்தது நேற்றைய எபிசோட். 91 ஆம் நாளின் இரவு 8 மணியிலிருந்து விரிந்தது காட்சிகள். பிந்துவும் ஆரவ்வும் சுஜாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள்.  குறைவான ஓட்டுகள் பெற்றதாலேயே சுஜா வெளியேற்றப்பட்டார் என்றாலும் கூட யாருமே நாமினேட் செய்யாமல் சுஜா வெளியேறியது பிந்துவால் புரிந்துகொள்ளமுடியவில்லையாம். சுஜாவை ஒரு பெக்யூலியர் கேரக்டர் என்று குறிப்பிட்டார். ’என் வாழ்க்கை போராட்டம் அது இதுன்னு சிம்பதி கிரியேட் பண்றா’ என்று ஆரவ் சுஜாவைப் பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்தார். எப்பவுமே அதையே சொல்லிட்டு இருக்குறதுக்குப் பதிலா ஜாலியா இருந்துட்டு எப்பவும் போல துணிச்சலா விளையாடி என்னைக்காவது ஒருநாள் அவளுடைய கஷ்டங்களைப் பத்தி மக்கள் தெரிஞ்சுக்கிட்டா அப்போ அவளுக்கு கிடைக்கிற மரியாதையே வேற மாதிரி இருக்கும் என்றார். உண்மைதான். நமது கஷ்டங்களை நாமே பறைசாற்றிக் கொண்டிருந்தால் ஒருத்தரும் மதிக்கப்போவதில்லை..  நான் கஷ்டப்படுகிறேன் என்று தொடர்ந்து நிரூபிக்க முயன்றுகொண்டே இருப்பதால் யாரும் மதிக்கப்போவதில்லை.  மாறாக நம் மீதான வெறுப்புதான் அதிகரிக்கும். அதுவே வெளியில் எந்தக் கஷ்டத்தையும் காட்டிக்கொள்ளாமல் நம் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும்போது ஏதோ ஒருநாள் நாம் என்னென்ன கஷ்டப்பட்டோம் என்பது தெரியவந்தால் அன்று நமக்கான மதிப்பு பன்மடங்கு கூடும். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஒவ்வொருவரும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லிச் செல்கிறார்கள். இது சுஜா சொல்லிச் சென்ற பாடம். அன்றைய நாள் முடிந்து விளக்குகள் அணைந்தது. 

ஆரவ், பிந்து மாதவி

 

92 வது நாள் விடிந்தது. இன்னும் ஆறு நாட்களே இருப்பதாக லிவிங் ரூமில் இருந்த டிவியில் டிஸ்ப்ளே செய்திருந்தார்கள். ஆனால் யாருமே கவனித்ததாகத் தெரியவில்லை. இரண்டு நாட்களாக 9 மணிக்கு ‘வேக்கப் சாங்’ ஒலிக்கவிட்டார்கள் இன்று மீண்டும் 8 மணிக்கு ஒலித்தது. ‘பைரவா’ படத்திலிருந்து ‘பாப்பா பாப்பா பப்பரப்பப்பா’ பாடல் ஒலிபரப்பட்டது. இந்தப் பாடலில் ’இங்க எல்லாருமே இனி உங்க ஆளப்பா’ என்று ஒருவரி இருக்கும். அதுதான் இந்த பாடலின் வாயிலாக பிக்பாஸ் நமக்குக் கடத்த நினைக்கும் செய்தி போல. எல்லாருமே முன்பே எழுந்துவிட்டார்களென்பதால் களைப்பின்றி ஆடினார்கள். சிநேகனுக்கும் டான்ஸூக்கும் ஏணி என்ன ஏரோப்ளேன் வைத்தால்கூட எட்டாதுபோல. சாவுக்குத்து குத்திக் கொண்டிருந்தார். அதுசரி தாடிவைத்தவரெல்லாம் பிரபுதேவா என்று நினைக்கமுடியுமா என்ன?
டிவியில் இருந்த ’6 Days to Go’ என்கிற செய்தியையும் இப்போதுதான் கவனித்தார்கள். அந்த செய்திக்கு பக்கத்திலேயே ‘அசையும் கமல்’ வைத்திருந்தார்கள். அனிமேசனில் கமல் மூச்சுவிடுவதை கண்காட்சியைப் பார்ப்பதுபோல பார்த்துக் கொண்டிருந்தார் பிந்து. நமக்கு பிந்துவைப் பார்ப்பதுதான் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. (ம்ஹூம் இனிமே இப்படிலாம் எழுதக்கூடாது.. கமெண்ட்ல ஜொள்ளுனு திட்டுறாய்ங்க)."பக்கத்துல போகாதீங்க பிந்து, கமல் டக்குன்னு பேச ஆரம்பிச்சுடுவாரு " என்றார் ஆரவ். ஆரவ்வின்  டைமிங் கமென்ட்கள் தான் பல சமயங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்குக்கிறது. காலைலயே கடவுள் மூஞ்சியப் பாத்தாச்சு என்றார் சிநேகன். 

ஆரவ், கமல்


கடைசி வாரம் என்பதால் பிரியப்போகிறோம் என்கிற சோகம் எல்லாரையும் ஆக்கிரமித்திருந்தது. அதற்காகவேகூட டிவியில் கவுண்டவுன் போட்டிருக்கலாம். அது வொர்க் அவுட் ஆகிற டெக்னிக்தான். பரீட்சைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கின்றன என்று சுவரில் ஒட்டி வைத்து பொதுத்தேர்வுக்குப் படிப்பவர்களுக்குத் தெரியும். பிந்துவும் ஆரவ்வும் பிக்பாஸ் வீட்டிலிருந்து சென்ற பிறகு எதையெல்லாம் மிஸ் பண்ணப்போகிறோம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். சனிக்கிழமை தான்  வெளியேறினாலும்கூட 100 வது நாள் என்ன கூத்து நடக்குதுனு நான் பாத்துட்டுதான் போவேன் என்றார் பிந்து. காலைல எழுந்ததும் டான்ஸ் ஆடுவதை நிச்சயம் மிஸ் பண்ணப்போவதாக சொன்னார்கள். எந்த ஒரு விஷயத்தையும்  100 நாட்கள் தொடர்ந்து செய்தால் அதுவே பழகிவிடும் என்றார் ஆரவ்.  ’டாஸ்க்.. பஸ்ஸர்.. லக்சரி பட்ஜெட்.. வேக்கப் சாங்’ என இத்தனை நாள் அந்த வீட்டில் தொடர்ந்து கேட்டுவந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்கள். வெளியில் போனாலும் நண்பர்களிடம் ‘டாஸ்க் கொடுங்க’ என்று கேட்டு வாங்கி பண்ணப்போவதாகச் சொன்னார் பிந்து மாதவி..

பிந்து மாதவி

மொட்டை வெயிலில் நீச்சல்குளத்தில் ஆரவ்வும் சிநேகனும்... தாடியில்லைனாலும் மக்கள் தன்னை ஆதரிப்பாங்களா என்று கவலைப் பட்டுக்கொண்டார் சிநேகன். ’பலூன் டாஸ்க்ல முடிஞ்சப்பறம் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துக்கவே முடியல’ அவ்ளோ கஷ்டப்பட்டோம் இனி அதுபோன்ற டாஸ்க்குகள் இருக்கக்கூடாது என்றார். டாஸ்க்குகளால் திங்கள் கிழமையும் செவ்வாய்கிழமையும் நீண்டதாக இருக்கிறது என்றார் பிந்து. பிக்பாஸ் வீட்ல மட்டுமா ஆபிஸ் போற, காலேஜ் போற எல்லாருக்குமே அதே ஃபீலிங்குதான். ஞாயிற்றுக்கிழமை புஸ்வானத்தை பத்தவச்சா மாதிரி டப்புனு முடிஞ்சிடுது.. திங்கள்கிழமை மெழுகுவர்த்திய பத்தவச்சா மாதிரி எரிஞ்சுக்கிட்டே கெடக்கு. 

**
மதியம் ஒரு மணிவாக்கில் போட்டியாளர்கள் எல்லோரையும் லிவிங் ரூமுக்கு அழைத்து மீட்டிங்கைப் போட்டார் பிக்பாஸ் (நாட்டுல இந்த திங்கட்கிழமை மீட்டிங்கை முதல்ல ஒழிக்கணும்). இதுதான் கடைசிவாரம் என்பதை மீண்டும் நினைவூட்டினார். டாப் 5 போட்டியாளர்களாக வந்திருக்கும் அவர்களுக்கு வாழ்த்துகள் சொன்னார். கடந்து வந்த பாதை எளிதானதல்ல என்பதை உணர்ந்திருப்பீர்கள். இந்த ஒரு வாரம் முக்கியமானது அதனால் சோர்வாகாமல் வெற்றிபெற உங்களின் சிறந்த முயற்சியை எடுங்கள். முழு ஈடுபாட்டுடன் உற்சாகமாக செயல்படுங்கள் என்று வாழ்த்தினார்.

வீட்டுக்குள் ஒரு விருந்தாளி வரப்போகிறார் அதனால் வீட்டை சுத்தம் செய்து அவருக்காக ஸ்பெஷல் டிஸ் செய்து வையுங்கள் என்ற அறிவிப்பை வாசித்தார் ஆரவ். அதோடு அவர் முன் எல்லாரும் ஏதோ ஒரு பெர்பாமன்ஸ் கொடுக்கவேண்டும். டான்ஸ், மிமிக்ரி, பொயட்ரி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பொயட்ரீனா கவிதைதானே என்று சந்தேகம் கேட்டார் சிநேகன். ’டான்ஸ் ஜோடியா ஆடணுமா? தனியாவா?’ இது கணேஷின் சந்தேகம். அதோடு இன்னொரு முக்கிய அறிவிப்பையும் வாசித்தார். ‘இந்த கடைசி வாரத்தில் மக்கள் ஓட்டுப்போட்டுத் தேர்வு செய்பவரே வெற்றியாளர் என்ற நிலையில். யாரும் நேரடியாக கேமரா முன் சென்று வாக்குசேகரிப்பதுபோல் பேசுவதோ.. டாஸ்க்குகளின் வாயிலாக தங்களுக்கு ஓட்டுப்போடச் சொல்லி கேட்பதுபோல் நடந்துகொள்ளக் கூடாது ’. இப்போது வரப்போகும் விருந்தாளி யாருடைய பெர்பாமன்ஸ் சிறந்தது என்று தேர்வு செய்கிறாரோ அவருக்கு மட்டும் ஸ்பெஷல் பெர்மிசன். ஒரு நிமிடம் பிரசாரம் செய்துகொள்ளத் தரப்படும். 

அஞ்சலி

பிந்துமாதவியும் கணேஷூம் டான்ஸ் பிராக்டிஸில் ஈடுபட்டார்கள்.  ஆரவ் குறுக்கும் நெடுக்குமாக நடந்து ’தளபதி’ மம்முட்டி வசனத்தைப் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். ஹரீஷ் தனியாக பாடிக்கொண்டிருந்தார். சிநேகன் அந்த விருந்தாளியை வரவேற்பதற்காகக் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். 
**
’சொட்ட சொட்ட நனைய வைத்தாய்’ பாடல் ஒலிக்க கலர் கலர் பலூன்களுடன் என்ட்ரீ கொடுத்தார் அஞ்சலி.பக்கத்து வீட்டுப்பெண் போல எப்போதும் இருக்கும் அஞ்சலி, ஏனோ, ஓவர் மேக்கப்பில் வந்திருந்தார். எல்லோரும் வரவேற்றார்கள். சிநேகனும் கை கொடுத்து வரவேற்றார் (நல்ல முன்னேற்றம்). கையில் கொண்டு வந்திருந்த பலூனை ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்து அதான் உங்களுக்கான டாஸ்க்.. பலூனை உடையாமப் பார்த்துக்கோங்க என்று கலாய்த்தார் அஞ்சலி. ’ஜெய் வரலையா?’ என்று ஹரீஷ் கேட்டார். (அவனவனுக்கு அவனவன் கவலை). அநேகமாக அவர்களில் சிலரை இன்றுதான் முதன்முதலாகப் பார்த்திருப்பார் அஞ்சலி. ஆனாலும் பல நாட்கள் பழகியவர் போல அவ்வளவு இயல்பாகப் பேசினார். டிவியில் பார்த்துப் பார்த்துப் பழகிய முகம் என்பதாலோ? கடிதத்தோடு ஒட்டிக்கொள்ளும் அஞ்சல்தலைபோல் ஹவுஸ்மேட்ஸூடன் ஒட்டிக்கொண்டார் அஞ்சலி.  வெளியிலிருந்து வர்ற ஒரு ஆளைப் பாக்குறது கடவுளைப் பாக்குற மாதிரி இருக்கு என்றார்கள். டிவியில் கமல் முகத்தைப் பார்த்து சிநேகன் கடவுள் முகத்தைப் பார்த்தாச்சு என்று சொன்னபோது கொஞ்சம் மிகையாகத் தோன்றியது. ஆனால் சாதாரண வெளியாட்களையும் கடவுளைப் பார்ப்பதுபோல் பார்க்கிற மனநிலையில்தான் இருக்கிறார்கள் என்றால் கமல் சிநேகனுக்கு கடவுளாகத் தோன்றியதில் தவறே இல்லை. 
பலூன் மூவியின் ப்ரோமசனுக்காக உள்ளே வந்திருந்தார் அஞ்சலி. இதைச் சரியாகப் புரிந்துகொண்டு முதலில் கேட்டது பிந்து. ’என்ன மூவி வந்திருக்கு லாஸ்ட் வீக்?’ என்று கேட்க  ‘இதெல்லாம் உங்களுக்கு பழகிடுச்சுல’ என்றார் அஞ்சலி. சிநேகன் அஞ்சலிக்கு தன் கையால் செய்த பாயாசத்தை வழங்க அவர் ரசித்து ருசித்தார். ‘நல்லாருக்குங்க’ என்று அஞ்சலி சர்டிஃபிகேட் கொடுக்க.. ‘அதை இவங்ககிட்ட சொல்லுங்க’ என்று சிநேகன் சொல்ல.. ‘ஸ்ஸ்ஸ் கெஸ்ட்டு கெஸ்ட்டு’ என்று சமாதானப்படுத்தினார் ஆரவ். ’பாயாசம் மட்டும்தான் பண்ணினோம் நீங்கதான் சமைக்கணும்’ என்று சிநேகன் போட்டு வாங்க... ‘எனக்கே டாஸ்க் கொடுக்குறீங்களா?’ என்று அஞ்சலி ஆவேசமானார்.

கணேஷ்


**
பாயாசம் உண்ட கையோடு தனது பாய்ச்சலைத் தொடங்கினார் அஞ்சலி. ‘டாஸ்க் கொடுத்தா ஏன் பண்ணமாட்டேன்னு சொல்றீங்க?’ முதல் கேள்வி பிந்துவுக்கு. விருந்தாளி பட ப்ரோமசனுக்குத்தான் உள்ளே அனுப்பப்படுகிறார் என்று தெரிந்தவருக்கு அவரிடம் கூடவே வில்லங்கத்தையும் கொடுத்து அனுப்புவார்கள் என்று தெரியாது போல.. சடாரென்று இப்படி ஒரு கேள்வி தன் மீது பாய்ந்ததும் கொஞ்சம் திணறிப்போனார். பின்பு நிதானித்து, ‘இரண்டு டாஸ்க் மட்டும்தான் இதுவரைக்கும் பண்ணமாட்டேன்னு சொன்னேன். மீதி எல்லாமே பண்ணிட்டேன்’ என்று தன் பக்கம் இருந்த நியாயத்தைச் சொன்னார். அஞ்சலி குறுக்கு விசாரணை எதையும் நடத்தவில்லை. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே.. ‘வெல்கம்’ என்று வழக்கமான பிக்பாஸ் குரல் ஒலிக்க.. இதை சற்றும் எதிர்பார்க்காத அஞ்சலி லைட்டாக ஜெர்க் ஆனார். அஞ்சலியின் முன் பெர்பாமன்ஸ் செய்துகாட்டும் ஹவுஸ்மேட்களில் சிறந்த பெர்பாமன்ஸை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அவருக்கு இருப்பதை பிக்பாஸ் நினைவூட்ட அருகிலிருந்த சிநேகன்.. ‘பாயாசமெல்லாம் பண்ணிக் கொடுத்தேன் பாத்து பண்ணுங்க’ என்றதும் அஞ்சலி ‘செல்லாது செல்லாது’ என்று மறுத்தார். 
அஞ்சலியின் அடுத்த கேள்வி கணேஷூக்கு. ’டெய்லி ஒர்க் அவுட் பண்றீங்க.. யோகா டாஸ்க் கொடுத்தப்போ ஏன் பண்ணலை?’ கணேஷ் என்ன செய்திருப்பார்... வழக்கம்போல படம் வரைந்து பாகங்கள் குறித்து தனது தியரியை விளக்கினார். இவருடைய ப்ளஸ் டூ மார்க் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். அநேகமாக பிசிக்ஸ், கெமிஸ்ட்ரீயில் நூற்றுக்கு நூறு வாங்கியவர்போல! எவ்வளவு தியரிக்கள் இருக்கிறது அவரிடம். 

அஞ்சலி, பிந்து மாதவி


அஞ்சலியை வாக்குமூல அறைக்கு அழைத்தார் பிக்பாஸ். ’என்னை எலிமினேட் பண்ணப் போறாங்களா.. ஒன் வீக் இருக்கலாம்னு வந்தேன்’ என்றுகூறி ’சிம்பொனி’த்தார்.. ஸாரி சிரித்தார். பிக்பாஸ் வீட்டில் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?  (உள்ளே நுழைஞ்ச அரை மணி நேரத்துலயேவா?) என்று கேள்வியைத் தொடங்கினார் பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றியும் ஹவுஸ்மேட்ஸ் பற்றியும் தனது எண்ணத்தை பகிர்ந்துகொண்டார் அஞ்சலி. ’தென்னிந்தியாவிற்கு இப்படி ஒரு நிகழ்ச்சி புதிது.. எத்தனை விதமான கேரக்டர்களை பார்க்கமுடியுது.. கொஞ்ச கொஞ்சமா ஃபில்டர் ஆகி இப்போ இருக்குறவங்ககிட்ட நல்ல குணங்கள் அதிகமா பாக்கமுடியுது. ரொம்ப நாள் நடிக்க முடியாது யாராலயும்’ என்று தன் கருத்துகளைப் பதிவு செய்தார். கடைசியாக செல்லும் போது ‘பிரின்ஸஸ் சேர் மாதிரி இருக்கு’ என்று கன்ஃபஷன் ரூமில் இருக்கும் சேரைப் பற்றி புகழ்ந்துவிட்டுச் சென்றார்.
**
அஞ்சலியின் முன் தங்கள் பெர்பாமன்ஸ்களைத் துவங்கினார்கள் போட்டியாளர்கள். முதலில் களமிறங்கியவர் ஹரீஷ். இருவிழி உனது.. சாய்ந்து சாய்ந்து ஆகிய இரண்டு பாடல்களைப் பாடினார். அருமையான குரலில் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. நன்றாக ஃபீல் பண்ணியும் பாடினார். அதற்குமேல் அனந்த் வைத்யநாதன்தான் கருத்து சொல்லவேண்டும். உண்மையில் ரசிக்க வேண்டியவர்களான அஞ்சலியும் பிந்துவும் ரசித்தார்கள். ’கவுத்துட்டானே’ என்பதுபோல் பார்த்தார்கள் ஆரவ்வும் சிநேகனும்.     அடுத்து பிந்து. ஒத்த சொல்லால பாட்டுக்கு செம டான்ஸ் போட்டார். ஆரவ், கணேஷ், அஞ்சலி, ஹரீஷ் என்று ஒவ்வொருவராக உடன் ஆடினார்கள். வெளுத்து வாங்கினார். பிந்துமாதவின் அழகே கண்கள் தான். ஆனால் , வீடு முழுக்க கேமராக்கள் வைத்திருக்கும் பிக்பாஸ், ஒருமுறை கூட பிந்து மாதவியின் கண்களுக்கு க்ளோஸ் அப் வைக்காமல், கேமராவை நகர்த்திக்கொண்டு இருந்தார். என்னமோ போங்க!


வாக்குமூல அறையின் கதவுக்கு அருகில் போஸ் கொடுத்து நின்றபடி தனது நடனத்தைத் தொடங்கினார் கணேஷ். ஆனால் அங்கே ஏன் போய் நின்றிருந்தார்? ஒருவேளை ’சக்கரவள்ளியே...’ என்று அந்தப் பாடல் தொடங்கியதால் சக்கர வடிவில் இருந்த அந்த இடத்தைத் தேர்வு செய்திருப்பாரோ? ’நங்காய்’ பாடலுக்கு சிதறு தேங்காய் உடைப்பதுபோல சில ஸ்டெப்கள் போட்டார்.கணேஷ் அது உண்மையிலேயே மைக்கல் ஜாக்ஸன் பாடல் என நினைத்துவிட்டாரோ என்னவோ, ஏதேதோ செய்து கொண்டு இருந்தார். சிநேகனும் ஹரீஷூம் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பிந்துவும் உடன் ஆடினார். வழக்கமாக வேக்கப் சாங்கிற்கு கணேஷ் நன்றாக ஆடுவார். இன்றோ ஏனோ கொஞ்சம் சொதப்ப மற்றவர்கள் நகைக்கும்படி ஆனது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் கணேஷ். 
’தளபதி’ மம்முட்டியும் ரஜினியும் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்திருந்தால் எப்படி பேசியிருப்பார்கள் என்ற கலக்கப் போவது யாரு சீசன் 1 காலத்து ஐடியாவை எடுத்து பண்ணியிருந்தார் ஆரவ். வாய்ஸ் வரவில்லையென்றாலும் மாடுலேசன் கொஞ்சம் ஒத்துப் போனது. (அட்றா அட்றா ஆரவ்வு..). ஸ்க்ரிப்டில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் எல்லாரையும் சிரிக்க வைத்திருப்பார். சிநேகன் ஏனோ ஒன்றுமே செய்யவில்லை.

பிக் பாஸ் தமிழ்


ஹரீஷ் பாடிய பாடல் தனக்குப் பிடித்திருந்ததால் அவரை வெற்றியாளராகத் தேர்வு செய்வதாக அறிவித்தார் அஞ்சலி. அடுத்து எல்லாருக்கும் பொதுவான ஒரு கேள்வியை முன்வைத்தார்.  ’வெளில போன    தும் என்ன பண்ணுவீங்க?’ என்று கேட்க, சிநேகன்.. ‘அப்பாவைப் பாக்கணும்.. கிராமத்துக்குப் போகணும்..’ என்றார். ஆரவ்.. ‘மக்கள் கைலதான் இருக்கு’ என்றார். பிந்து ‘சண்டை இல்லாம போகணும்’ என்றார்.

ஆரவ்

 


**
5 மணிக்கு அஞ்சலியின் வருகையை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் டாஸ்க் வைத்தார்கள். அதன் பெயர் ‘கவ்விக் கொள்ளவா’ (அட ஆண்டவா). நடு நெற்றியில் ஒரு பிஸ்கட்டை வைத்து கையில் தொடாமல் வாய்க்கு கொண்டு வந்து லபக்கென்று கவ்வ வேண்டும். இதுதான் பெயர்க்காரணம்; விவகாரமாக எதுவும் நினைக்கவேண்டாம்.  அஞ்சலி இந்தப் போட்டியின் நடுவர். யார் முதலில் ஆரம்பிப்பது என்ற பேச்சு வர ‘என்னை விட்ருங்க... பாயாசம்லாம் கொடுத்திருக்கேன்’ என்று ஜகா வாங்கினார் சிநேகன். இவரு வேற ஒரு கப்பு பாயாசத்தைக் கொடுத்திட்டு ஒருவாரத்துக்கு சொல்லிக்காட்டுறாப்ல. அஞ்சலி, முதல் போட்டியாளரை எப்படி தேர்வு செய்வது என்று குழம்ப அஞ்சலிதேவி காலத்து டெக்னிக்கான விரலில் தொட்டு முடிவுசெய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார். அதன் படி முதல் போட்டியாளர் கணேஷ். 


கணேஷ் ஆட்டத்தைத் தொடங்கிய பிறகுதான் அது அவ்வளவு ஈசியில்லை என்று புரிந்து கொண்டார்கள். நெத்திச்சுட்டியைப் போல ஒட்டிக்கொண்ட பிஸ்கட் எவ்வளவு முயன்றும் நகரவேயில்லை. கொஞ்சம் அசைத்தால் கீழே விழுந்துவிடுகிறது. "மூக்குன்னு ஒன்னு இல்லாம இருந்தா கரெக்ட்டா, வாய்க்கு வந்துடும்ல" என்று தன் யோசனையை சொன்னார் ஹரிஷ்(மூக்கு பொடப்பா இருந்தா இப்படித்தான் பாஸ் தோணும்). ஹரீஷூக்கும் தோல்விதான். ஆரவ் கொஞ்சம் சாதுர்யமாக செயல்பட்டு ஒரு பிஸ்கட்டை லபக்கினார்.ஆரவ் மைக்ரோ செகண்டில் அதை வாயில் கவ்வியது அருமை.  அடுத்ததாக பிந்து, அவர் நெற்றியில் இருந்து கன்னத்திற்கு புனித யாத்திரை போவதைப் போல பிஸ்கட் ஒரு உல்லாசப் பயணத்தை மேற்கொண்டது. எனினும் இலக்கை அடையவில்லை. தோல்வியைத் தழுவியது பிஸ்கட்.

பிந்து மாதவி


சிநேகன் களமிறங்கினர். இந்த டாஸ்க்கில் தாடி அவருக்கு ஒரு பெரிய ப்ளஸ்ஸாக இருந்தது.  நெற்றியில் பிஸ்கட்டை வைத்து கண்களைச் சிமிட்டி சிமிட்டி மிக மெதுவாக நகர்த்தி வாய்க்குக் கொண்டு கவ்வினார். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று பிஸ்கட்டுகள். அடுத்ததாக அஞ்சலியையும் ஆட்டத்தில் தள்ளிவிட்டார்கள். அவர் நெற்றியில் பிஸ்கட் சூட்டப்பட்டது. " உங்க Facial muscles மட்டும் மூவ் பண்ணுங்க. Its sliding to your left என கவுதம் மேனன் பட ஹீரோ போல் வர்ணனை செய்து கொண்டு இருந்தார் கணேஷ்.  சிநேகனின் டெக்னிக்கையே அஞ்சலியும் பின்பற்றினார். சில நொடிகள் கன்னத்தைவிட்டு அகலாமல் பிஸ்கட் அடம்பிடிக்க.. கஷ்டப்பட்டு வாயில் கவ்விப் பிடித்து அவரும் டாஸ்க்கை முடித்தார். இந்த டாஸ்க்கில் சிநேகனுக்கு வெற்றி கிடைத்தது.
**
நேற்றைய ப்ரோமோவில் வந்தது அஞ்சலிதான்.. பலூன் படத்தின் ப்ரோமோசனுக்காக வருகிறார் என்பது ஊர்ஜிதமானதும் ‘இந்தப் படத்துல ஓவியா சொன்ன டயலாக்கை மையமா வச்சு ஒரு பாட்டே வந்திருக்குனு தெரிஞ்சா ஆரவ் எப்படி ஃபீல் பண்ணுவாப்ல?’ என்று நண்பரிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அஞ்சலி சொல்வதற்கு முன்பாகவே பிக்பாஸ் ’ஷெட்டப் பண்ணுங்க’ பாடலுக்கு அஞ்சலி உட்பட அனைவரையும் நடனமாடப் பணித்தார். யுவன் இசையில் அனிருத் பாடிய அந்தப் பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. ஹரீஷூக்கும் பிந்துவுக்கும் இந்த வரிகள் எவ்வளவு வைரல் என்பது தெரிந்திருந்தது. மற்ற மூவரும் ஏதோ பாடல் போல என்று ஆடினார்கள். ஆரவ் மங்காத்தா ஸ்டெப் போட்டுக்கொண்டிருந்தார் (மங்காத்தாடா). பிறகு அஞ்சலி இது ஓவியா இங்க சொன்னதுதான் இப்போ பாடலா வந்திருக்கு என்று சொன்னதும் ஆரவ் முகத்தில் சந்தோசமும் ஆச்சர்யமும் கலந்திருந்தது. பிறகு பிக்பாஸ் அஞ்சலியை வெளியேறச் சொல்ல.. விடைபெற்றார்.

அஞ்சலி


**
அன்றைய நாளுக்கான டெய்லி டாஸ்க்கை அறிவித்தார்கள். டாஸ்க்கின் பெயர் ‘கூடை மற்றும் பந்து’.  இரண்டு டீமாக பிரிந்துவிளையாட வேண்டும். ஐந்து பேரை இரண்டாக பிரித்தால் இடிக்கும் என்பதால் பிந்துவை நடுவராகப் போட்டார்கள். ஆரவ்வும் சிநேகனும் ஒரு டீம். கணேஷூம் ஹரீஷூம் ஒரு டீம். ஒருவர் பந்துகளை எறிய இன்னொருவர் தன் தலையில் மாட்டியுள்ள கூடையால் பிடிக்க வேண்டும் என்பது டாஸ்க். சிநேகன் தலையில் கூடை மாட்டியிருந்ததைப் பார்த்தபோது பழைய எம்ஜிஆர் படங்களில் போலீஸ் மாட்டியிருக்கும் தொப்பியைப் போலவே இருந்தது. 14  பால்கள் தன் கூடையால் பிடித்தார் சிநேகன். 
அடுத்த டீமில் கணேஷ் கொஞ்சம் தலையைக் குனிந்து வைத்து பந்துகளைப் பிடித்ததால் மிகக் குறைவான பந்துகளையே தவறவிட்டார். மொத்தம் 27 பந்துகளை பிடித்தார்கள். இரண்டாவது ரவுண்டில் ஆரவ் தன் தலையில் மாட்டிய கூடையால் 29 பந்துகளைப் பிடிக்க ஹரீஷ் முகம் சுருங்கியது. மற்றவர்கள் கூடையை மாட்டியிருந்தபோது பந்துவரும் திசைக்கு ஏற்ப நகர்ந்து பந்தை கூடைக்குள் விழவைத்தார்கள். ஹரீஷ் கூடையை மாட்டியிருக்கும்போது நகராமல் அங்கேயே இருந்ததால் நிறைய பந்துகளை தவறவிட்டார். இரண்டாவது ரவுண்டில் 14 பந்துகளை மட்டுமே ஹரீஷ் பிடிக்க இரண்டு பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிநேகன் - ஆரவ் கூட்டணி.

கணேஷ்


**
10 மணிக்கு அடுத்த டாஸ்க்கை அறிவித்தார்கள். இதன் பெயர் ‘பாத்து தம்பி’. ஆக்டிவிட்டி ஏரியாவில் ஒரு பெரிய கட்டத்திற்குள்  வரிசையாக பேப்பர் கப்களை அடுக்கி வைத்திருப்பார்கள். (இதை அடுக்குவதற்கே பெரிய உழைப்பு தேவைப்பட்டிருக்கும்) கட்டத்தின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு செல்லவேண்டும். தன் அணியினரின் வழிகாட்டுதலின்படி கப்புகளை மிதிக்காமல் கடக்கவேண்டும் இதுதான் டாஸ்க். இதில் சிநேகன் - ஹரீஷ் ஒரு டீம், பிந்து - ஆரவ் இன்னொரு டீம். இந்த முறை கணேஷ் நடுவர். ஹரீஷ் ஒரு கப்பை மட்டும் மிதித்து எல்லையைக் கடந்தார். ஆரவ், சிநேகன் இருவரும் ஒரு கப்பைக் கூட மிதிக்காமல் கடந்தார்கள். பிந்து, அம்மன் படங்களில் சொட்ட சொட்ட மஞ்சத்தண்ணியில் குளிச்சு ’கோலவிழியம்மா ராஜகாளியம்மா’ என்று தீக்குளி இறங்கும் ஹீரோயின் போல நடந்தார்.  அவரும் ஒரு கப்பையும் மிதிக்கவில்லை. ஹரீஷ் மட்டும் ஒரேயொரு கப்பை மிதித்திருந்ததால் பிந்து - ஆரவ் கூட்டணி இம்முறை வெற்றி பெற்றது. 

 


இந்த கேம் இன்னும் ஜாலியாக இருந்ததால் ஆட்டம் முடிந்தபின்பும் கப்புகளுக்கு நடுவில் குறுக்கும் நெடுக்குமாக ஓடியோடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் வெளியில் ஜாலியாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் ’மனதளவில் பதட்டமாகத்தான் இருக்கிறார்கள்’ என்று குரலுடன் விளக்குகள் அணைந்தது. எது எப்படியோ இந்த நாள் முழுவதும் சண்டை சச்சரவுகள் எதுவும் இல்லாமல் மிக சந்தோசமான நாளாக இருந்தது. யப்பா... பிக்பாஸ்ல இப்படி ஒரு நாளைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு. 

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/103311-do-you-know-oviyas-shutup-word-is-a-trend-anjali-asks-aarav-happenings-of-day-92-in-bigg-boss.html

Link to comment
Share on other sites

'நான் என் வெற்றியை நோக்கி கடினமாக உழைக்க இருக்கிறேன்' - 'பிக்பாஸ்' சுஜாவின் ட்விட்டர் பதிவு

 

டந்த வாரம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து சுஜா வெளியேறினார். அவர் பிக் பாஸில் இருந்தபோதும் சரி, வெளியில் வந்த பிறகும் சரி, ஓவியாவை இமிடேட் செய்வதாகப் பல மீம்கள் வந்தவாறே இருக்கின்றன. பிக் பாஸிலிருந்து வெளியேறியபோது, வித்தியாசமான பல கேரக்டர்களைச் சந்தித்ததாகவும், நேர்மையான மனிதர்களைச் சந்தித்ததாகவும் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டவர், 'இப்போது வரை யாரையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்னும் குழப்பமாகத்தான் இருக்கிறது' என்று சொன்னார். 

சுஜா

 

ஓவியா மாதிரி நடந்துகொள்ள முயற்சிக்கிறார் என்ற விமர்சனம் சுஜாவை வெகுவாக காயப்படுத்தியிருக்கிறது. 'ஒருத்தர் இடத்தில் நான் இருக்கேன்னா, அதுக்காக அவரை மாதிரியே நடிக்கிறேன்னு அர்த்தம் கிடையாது..நான் நானாக இருக்கேன். யாரைப் போன்றும் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை ' என்றும் தெளிவுபடுத்தினார். பிக் பாஸில் இருந்தவரை தனது தந்தையை எண்ணி வருந்தியவருக்கு, கமல் தந்தை ஸ்தானத்தில் இருப்பதாக கூறியது எனர்ஜி டிரிங்காக இருந்தது. 100 நாள்கள் முடியாமல் தன் காதல் கணவரை சந்திக்கப்போவதில்லை என 'பிக் பாஸ்' மேடையில் சுஜா தெரிவித்திருந்தார். 'என்னுடைய திருமணத்துக்கு வாங்க' என கமலிடம் வேண்டுகோள் விடுத்ததும், 'ஓ.கே'' என கமல் சொன்னதும் நெகிழ்ச்சி தருணமாக இருந்தது. இந்நிலையில், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் 'பிக் பாஸ்' குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் சுஜா. 

மக்கள் பிரதிநிதி கமல்ஹாசனுக்கும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கும் மற்றும் நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். முக்கியமாக, என்னைக் கிண்டல் செய்வதற்காகவே தங்களது பொன்னான நேரத்தைச் செலவிட்ட அனைவருக்கும் நன்றி. உண்மையில், அவை எனக்கு ஊக்கமளித்தன. அந்தக் கிண்டல்கள், மீம்ஸ் எல்லாவற்றையும் நான் விளையாட்டாகவே எடுத்துக்கொள்கிறேன். உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள். என்னை, கடும் உழைப்பாளி என நீங்கள் அங்கீகரித்ததுக்கு நன்றி. அதேவேளையில், என்னை சிலர் சுயநலவாதி என்றும் விமர்சித்தனர். 'பிக் பாஸ்' ஒரு விளையாட்டு நிகழ்ச்சி. அதில், சுயநலத்துடன் இருப்பதில் என்ன தவறு? அங்கே ஹரிஷை தவிர எல்லோருமே நடித்துக்கொண்டிருந்தார்கள். உண்மையில், நான் நானாக இருந்தேன். 

சுஜா

எப்போது கமல் சார் என்னை ஊக்குவித்துப் பேசினாரோ அப்போதே நான் வெற்றிபெற்றுவிட்டேன். அதுவே, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் எனக்குச் சிறப்பான தருணம். நான் என்னுடைய வெற்றியை நோக்கி கடினமாக உழைக்கப் போகிறேன். மீண்டும் இறுதி நிகழ்ச்சியில் உங்களைச் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மை வெல்லும் என நம்புகிறேன். தயவுசெய்து கவனத்துடன் வாக்களியுங்கள். எனக்காக வாக்களித்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்று அதில் குறிப்பிட்டிருந்தார். 

இதுகுறித்து பேசுவதற்காக சுஜாவைத் தொடர்புகொண்டபோது, 'இன்னும் ஐந்து நாள்கள் கழித்து பிக்பாஸ் வீட்டில் இருந்த  ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்கிறேன். நூறாவது நாளில் உற்சாகமான சுஜாவை நிச்சயம் பார்ப்பீர்கள்'' என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/103373-im-working-hard-on-my-success---bigboss-sujas-tweet.html

Link to comment
Share on other sites

5 நாள் இருக்கும்போது ஓவியா பேர சொன்னா, ஓட்டு விழுந்திருமா?! 93-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

bigg boss tamil

5 Days to Go என்ற டிவியில் தெரிந்த மெசேஜூடன் துவங்கியது பிக்பாஸ் வீட்டில் 93 வதுநாள். எட்டு மணிக்கு  ‘வேக்கப் சாங்’  ஒலித்தது. இன்றைய தேர்வு, ‘சேட்டை’ படத்திலிருந்து ‘நீ தாண்டி ஒஸ்திப் பொண்ணா’ என்ற பாடல். இரண்டு நாளாக டாஸ்க்குகள் கடினமானதாக இல்லை என்பதால் அனைவரும் மிக உற்சாகமாக ஆடினார்கள். ஆனால் வழக்கம்போல் தங்களிடம் ஸ்டாக் உள்ள நான்கே நான்கு ஸ்டெப்களை மட்டும்தான் திரும்ப திரும்பப் போட்டார்கள். ஹரிஷ் இசைக்குத் தகுந்தாற்போல் ஆடினார். எல்லாரும் ஒரு சைடு ஸ்டெப் போட்டுக்கொண்டிருக்க, சிநேகன் மட்டும் எதிர்சைடில் ஸ்டெப் போட்டுக்கொண்டிருந்தார். வழக்கமாக ஆடி முடித்தால் தாங்க்யூ பிக்பாஸ் என்று கோரஸாக கத்துவார்கள். இன்று ‘காலை வணக்கம் தமிழ்நாடு’ என்றார்கள். மக்கள் ஓட்டுகளைப் பெற வேண்டிய நிலைவந்தால் எல்லாருக்கும் ‘தமிழ் மக்கள்’,’தமிழ்நாடு’ என்ற வார்த்தைகள் நாவில் தொற்றிக்கொள்ளும் போல. ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு ஏன் ஓட்டுப்போடவேண்டும்? என்று கேட்டபோதும்கூட இதே வார்த்தைகளை எல்லாருமே பயன்படுத்தினார்கள்.

 

பிக் பாஸ் தமிழ்

ஆலமரத்தடியில் கயித்துக்கட்டில் போட்டு படுத்திருக்கும் கிராமத்துக் கிழவர்கள் போல நீச்சல்குளத்தருகே ஒய்யாரமாக படுத்திருந்தார் சிநேகன். பிந்துவுக்கும் ஆரவ்வுக்கும் தன் காதல் கவிதைகளில் இருந்து சில பல சாம்பிள்களைக் காட்டிக்கொண்டிருந்தார். ‘பல லவ்வுகள் பண்ணிருக்காரு போல’ என்று ஆரவ் போட்டுவாங்க சிநேகன் உஷாராக ‘நான் நல்ல காதலன் காதலி கிடைக்கல.. நான் யாரையும் காதலிக்கவில்லை என்னைக் காதலித்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்’ என்று கவித்துவமாக பதிலளித்தார். ஹை அப்படிலாம் சொன்னா விட்ருவோமா? கவிஞருக்கு ஞாபகசக்தி குறைவு போல. அவருக்கு ஒரு குறும்படம். இதே கவிஞர்தான்  முன்பு ஒருமுறை தனது டீச்சரை லவ் பண்ணியதாகச் சொன்னதோடு அவரை நினைத்துதான் ‘ஞாபகம் வருதே’ பாடலில் ‘முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்’ என்று எழுதியதாகச் சொன்னாரே. ஆனால் இது ஒன்றும் பெரிய கொலைக் குத்தம் இல்லை. மன்னித்துவிடலாம்; கவிஞர்க்கும் பொய் அழகு.

இன்றைய நாளுக்கான டெய்லி டாஸ்க்கை அறிவித்தார்கள். சென்ற வார பலூன் டாஸ்க் எல்லாரையும் எப்படி காயப்படுத்தியது, அதற்குப் பிறகு ஒருவரை ஒருவர் முகம்கூடப் பார்த்துக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளியது என்று நேற்றுதான் சிநேகன் வருத்தப்பட்டார். அதைக் கப்பென்று பிடித்துவிட்டார்கள் பிக்பாஸ் டீம். இன்றும் மீண்டும் பலூன் டாஸ்க். இந்த டாஸ்க்கின் பெயர் ‘தொட்டா கெட்ட’. போட்டியாளர்களின் இரு கால்களிலும் பலூனைக் கட்டிவிடுவார்கள் அதை மற்ற போட்டியாளர்கள் உடைக்காமல் காப்பாற்ற வேண்டும். இதுதான் டாஸ்க். அடிச்சு மல்லுக்கட்டுங்கடா என்று ‘பஸ்ஸர்’ சங்கை  ஊத போட்டி தொடங்கியது. ஹரிஷும் பிந்துவும் ஒருவர் பலூனை ஒருவர் உடைக்க முயன்றுகொண்டிருந்தார்கள். பிந்து காலால் எத்தி பலூனை உடைக்க முயற்சித்தார். அதற்குள் ஹரிஷ் பிந்துவின் ஒரு கால் பலூனை உடைத்துவிட்டார். பழி வாங்க ஹரிஷைத் துரத்திக் கொண்டிருந்தார் பிந்து. காலில் சக்கரம் கட்டி சுத்துவதைப் போல் பலூனைக் கட்டிக் கொண்டு வீட்டைச் சுற்றி சுற்றி வந்தார்கள். நடுவில் ஆரவ் புகுந்ததும் அவரைத் துரத்தினார். அவர் ’அங்க பாரு ஹரீஷ் வர்றான்’ என்று சொல்லி பிந்துவை ஏமாற்றி ஓடினார். காலம் காலமாக ஓடிப்பிடித்து விளையாட்டில் தப்பிக்க இது ஒன்றுதான் ஒரே யுக்தி. ஜென் Z பசங்களாவது புதுசா ஏதாச்சும் யுக்தி கண்டுபிடிப்பாய்ங்களானு பாத்தா.. எங்க? அவங்க ஓடிப் புடிச்சு விளையாண்டாதான.. எல்லாம் டெம்பிள் ரன்ல மூழ்கிட்டாய்ங்க. 

பிக் பாஸ் தமிழ்

அந்த நேரம் பார்த்து, சிநேகன் எல்லாரையும் சாப்பிடக்கூப்பிட ‘நீ போ.. நீ வா’ என்று ஆரவ்வை விடுத்து சிநேகன் பக்கம் திரும்பினார் பிந்து மாதவி.  ‘கவிஞர் உங்க ஆசிர்வாதம் வேணும்’ என்று பிந்து சிநேகனை நெருங்கினார். இப்படி காலில் விழுந்தவர்களெல்லாம் பின்னாட்களில் என்னென்ன கூத்து நடத்தினார்கள் என்பது சிநேகனுக்குத்தான் தெரியுமே..! அவர் நைஸாக நழுவ அதற்குள் ஆரவ் பிந்துவின் மீதமிருந்த ஒரு பலூனையும் உடைத்துவிட்டார். பிந்து போட்டியில் இருந்து வெளியேறினார். சென்ற முறை நடந்த பலூன் டாஸ்க் போல் அல்லாமல் இந்த முறை எல்லாரும் சிரித்துக் கொண்டே ஜாலியாக விளையாடினார்கள். 

நீச்சல்குளத்துக்கு அருகில் வைத்து ஹரீஷூக்கு அணை கட்டினார்கள். எல்லாரும் சுற்றி பலூனை உடைக்க வெறிகொண்டு காத்திருக்க ஹரீஷ் பின்னால் ஒரு ஸ்டெப் வைத்தால் நீச்சல்குளம். ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்’ என்று விவேகம் பட டயலாக்கைப் பேசி அப்படியே பேக் பல்டி அடித்து நீச்சல் குளத்தில் குதித்து மறுகரை வந்து தப்பியிருக்கலாம் ஹரீஷ். ஆனால் சிநேகன் ஹரீஷின் ஒரு கால் பலூனை உடைத்துவிட்டார். ‘என்னடா என் கூட்டாளியை மிரட்டுறீங்களா?’ என்று வீட்டுக்குள் இருந்து வீரப்பாக வெளியில் வந்த ஆரவ் மீது அடுத்த அட்டாக்கை ஆரம்பித்தார்கள். பிந்துவின் கால்களில் பலூன்கள் இல்லையென்பதால் தைரியமாக ஒவ்வொருவரையும் வளைத்தார். கணேஷ் ஆரவ்வின் ஒரு பலூனை உடைத்தார். சிநேகன் எவ்வளவு சுற்றிவளைத்தாலும் பிடிக்க முடியாமல் நழுவி நழுவி ஓடினார். டாஸ்க்கிற்கு பிரேக் விட்டார்கள்.

நேற்று விருந்தாளியாக வந்த அஞ்சலி ஹரீஷை சிறந்த பெர்ஃபமராக தேர்வு செய்ததால் அவருக்கு மட்டும் மக்களிடம் வாக்குக் கேட்க ஒரு நிமிடம் கொடுக்கப்படுவதாக சொல்லியிருந்தார்கள். அந்த ஒரு நிமிடம் இன்றைக்குத் தரப்பட்டது. ஹரிஷ் கேமிராவின் முன்பு வந்து ஓட்டுக் கேட்டார். வீட்டுக்குள் நுழைந்த முதல் வாரம் தவிர மற்ற எல்லா வாரங்களிலும் தான் நாமினேட் ஆனதையும் ஒவ்வொரு முறையும் மக்களின் ஓட்டுகளால் உள்ளே இருப்பதையும் கூறினார். ‘நேர்மையாக டாஸ்க் பண்றேன்.. உண்மையா இருக்கேன்.. நான் உண்மையாக இருப்பது பிடிச்சிருந்தா நான் தகுதியானவன்னு நினைச்சா எனக்கு ஓட்டுப் போடுங்க’ என்று முடித்தார். ஒரு விஷயத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களைப் பாராட்டியாக வேண்டும். நம்மூர் அரசியல்வாதிகளைப் போல எதிராளியின் குறைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்காமல் தன்னுடைய நிறைகளை மட்டும் சொல்லி ஓட்டுக்கேட்கிறார்கள்.

**

பிக் பாஸ் தமிழ்

மீண்டும் பலூன் டாஸ்க் தொடங்கியதற்கான ‘பஸ்ஸர்’ ஒலிக்கிறது. கிச்சனில் இருந்த சிநேகனை மீண்டும் சுற்றி வளைக்க முயன்றார்கள் ஆரவ்வும் ஹரீஷூம். அவர் வல்லவனுக்கு பூரிக்கட்டையும் ஆயுதம் என்று அருகிலிருந்த பூரிக்கட்டையை எடுத்தார். ‘ஆரவ் நமக்குள்ள ஆயிரம் இருக்கலாம்…’ என்று சிநேகன் சொல்ல.. ‘ஆனா உங்க கால்ல மட்டும் எப்படி ரெண்டு இருக்கலாம்’ என்று ஆரவ் தன் டைமிங் பாமை வீசினார். ‘மம்மி’ என்று  ஓடி பிந்து மாதவிக்குப் பின் ஒளிந்துகொண்டார் சிநேகன். சிநேகனின் பலூனை உடைக்க வந்த ஹரிஷின் பலூனை உடைத்தார் கணேஷ். ஹரிஷ் பிந்து இருவரும் போட்டியிலிருந்து விலக, மீண்டும் பிரேக் விடப்பட்டது.

இதற்குள் அவர்கள் காலில் கட்டியிருந்த பலூன் காற்றுப்போய் சுருங்கிவிட்டதால், இன்னொரு பலூனை பெரிதாக ஊதி கட்டுமாறு உத்தரவிட்டார் பிக்பாஸ். சிநேகன், ஆரவ், கணேஷ் மூவரும் பலூனை ஊதி, கட்டிங் அளவு சரியாக உள்ளதா என்று க்ளாஸை அருகில் வைத்து பார்ப்பதைப் போல காற்றின் அளவு மூவருக்கும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து காலில் கட்டிக்கொண்டார்கள். ஒருவர் பலூனை ஒருவர் உடைப்பதற்காக வீட்டுக்குள் சுற்றி சுற்றி ஓடினார்கள். ஏற்கெனவே பாதி மூச்சை பலூனுக்குக் கொடுத்துவிட்டு மீதி மூச்சை அனாமத்தாக விட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடியதை நேராக ஓடியிருந்தால் டெல்லிக்கே போய் மோடியைச் சந்தித்து ‘பலூனை உடைக்க பாக்குறாங்கய்யா’ என்று கம்ப்ளைன்ட் செய்திருக்கலாம். அவர் பலூனுக்கு ‘கேஸ்’ மானியமாவது கொடுத்திருப்பார். 

ஆரவ் மிதித்த மிதியில் சிநேகன் பலூன் ‘டொப்’. அடுத்ததாக கணேஷூம் ஆரவ்வும் கபடி ஆடினார்கள். கணேஷ் ஆரவ் பலூனை உடைத்து வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற அடுத்த நொடி நல்லா விளையாண்டிங்க என்று சொல்லி ஆர(வை)த் தழுவினார். ஜெண்டில்மேன் என்று கூகுள் சர்ச் செய்தால் கையில் முட்டையுடன் கணேஷ் வந்து நிற்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அவருக்கான பரிசு விரைவில் வரும் என்று பிக்பாஸ் அறிவித்தார். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஹரிஷைக் கூப்பிட்டு நான்கு சிப்ஸ் பாக்கெட்டைக் காண்பித்து அதில் ஒன்றை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். என்ன பரிசாக வரும் என்று யோசித்துக் கொண்டிருந்த கணேஷ் இந்த சம்பவத்திற்குப் பிறகு  ‘பேட்டா எங்கம்மா தர்றாய்ங்க சிப்ஸ் பாக்கெட்டும் பிஸ்கெட் பாக்கெட்டும் கொடுத்து ஏமாத்திடுறாய்ங்க’ என்று நினைத்திருப்பாரோ என்னவோ.

பிக் பாஸ் தமிழ்

**

மாலை நேரத்தில் இன்னொரு டெய்லி டாஸ்க்கை அறிவித்தார்கள். அதாவது இதுவரை பிக்பாஸில் வந்த சிறந்த டாஸ்க்குகளையெல்லாம் மீண்டும் நடத்துவார்களாம். (காலைல ‘எதைத்தான் கண்டுட்ட நீ புதுசா’ பாட்டு போட்டது இதுக்குத்தானா ராசா?). அதன்படி… ஓவியா, காயத்ரி, ஆர்த்தி, ஜூலி என ஒரு கூட்டமே இருந்தபோது செய்த ‘போடு ஆட்டம் போடு’ டாஸ்க் இப்போது மீண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடல் தரப்படும். எதிர்பாராத நேரத்தில் அந்தப் பாடலை ஒலிக்க விடுவார்கள். ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்கான பாடல் ஒலித்ததும், கெடக்குறது கெடக்கட்டும் கெழவியைத் தூக்கி மனையில வைங்குற மாதிரி அந்த நேரத்தில் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு ஹாலில் இருக்கும் சுழலும் மேடையின் மீது ஏறி ஆட வேண்டும். க்ரூப் சாங் வந்தால் எல்லாரும் ஆடவேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேரக்டர். சிநேகனுக்கு ராமராஜன் ரோல் கொடுத்திருந்தார்கள். (பாவிகளா ராமராஜன் எந்தப் படத்துலடா தாடியோட இருந்திருக்காரு?). ஆரவ் - ரஜினி, ஹரிஷ்- சிம்பு, கணேஷ் - அஜித், பிந்துமாதவி - நயன்தாரா. க்ரூப் சாங் ‘அதாரு அதாரு’ பாடல் போல ஆனால் ஆரவ் வாசிக்கும்போது ‘டமாலு டூமிலு’னு படித்தார். வேற எதுவும் பாட்டைதான் இந்த டோனில் படித்தாரா?

**

பிக் பாஸ் தமிழ்

ஆரவ்வுக்கு ரஜினி மாடுலேசன் நன்றாக வந்தது. ஹரிஷ் சிம்புவைக் கண் முன் நிறுத்துவதைப் போல் அச்சு அசல் அவரைப் போலவே பேசினார். இவர்கள் இருவரும் மிமிக்ரியில் பெர்பாமன்ஸ் செய்துகொண்டிருக்க, ‘லூசுப் பயலுக தமிழை ஒழுங்க பேசத்தெரியாம பேசுறானுங்க’ என்று போகிற போக்கில் போட்டுவிட்டு ஸ்கோர் செய்தார் சிநேகன். கணேஷூக்கு அஜித் வாய்ஸூம் வரவில்லை மாடுலேசனும் வரவில்லை. வாலி படத்தில் அஜித் புக்கை வைத்து சமாளிப்பதைப் போல ‘வீட்ல எல்லாரும் சௌக்யமா?’ என்ற ஒரு டயலாக்கை வைத்தே அஜித் கேரக்டரை சமாளித்துக் கொண்டிருந்தார். 

அடுத்தது நயன்தாரா - ரஜினி - சிம்பு இடையிலான கான்வோ. ‘ஹாய் நயன்’ என்று ஹரிஷ், பிந்துவின் தோளில் கை போட, ‘தொட்டுப் பேசாதப்பா ரொம்ப தப்பு’ என்று ரஜினி வாய்ஸில் கண்டித்தார் ஆரவ். ‘கடைசியா சந்திரமுகில பாத்தது?’ என்று ஆரவ் சொல்ல… ரஜினியும் நயன்தாரா அதற்குப் பிறகு எந்தப் படத்தில் நடித்தார்கள் என்கிற குழப்பம் பிந்துவுக்கு. ‘அதற்கப்பறம் படம் பண்ணிருக்கமா?’ என்று ஆரவைக் கேட்க ‘அடுத்த படம் பண்ணலை’ என்று விளக்கினார். ‘ஆக்சுவலா எனக்கு என்ன ப்ரச்னைனா?’ பல்லைக் கடித்துக்கொண்டு மூக்கில் பேசி டாஸ்க் முழுவதும் சிம்பு வாய்ஸிலேயே இருந்தார் ஹரிஷ். ரஜினியிடம் தன்னை நயன்தாராவையும் சேர்த்துவைக்கச் சொல்ல… அவர் பிந்து (எ) நயன்தாராவிடம் சென்று கேட்க, ‘I dont want to talk to you’ என்று  பிந்துவும் சிம்பு மாடுலேசனில் பதிலளத்தார். ‘இந்தாடி ரைஸ் மில்லுக்கு என் பேர் வைக்கமுடியுமா.. முடியாதா?’  ‘முடியாது முடியாது’ அதே மாடுலேசன். ‘சரி ஒண்ணும் ப்ரச்னை இல்ல.. ஹன்சீகா எங்க’ என்று அடுத்த ரவுண்டுக்கு தாவினார். 

பிக் பாஸ் தமிழ்

‘முந்தி முந்தி விநாயகரே’ பாடல் ஒலிக்க கிடுகிடுவென மேடை ஏறினார் சிநேகன். மொத்த பாடலுக்கும் ஒரே ஸ்டெப்பையே திரும்ப திரும்ப போட்டுக்கொண்டிருந்தார். (அதுசரி ராமராஜனே அதான் பண்ணாரு). ‘சேஞ்ச் தி ஸ்டெப்’ என்று கீழிருந்து பிந்து உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். பாலா இருந்தா பொங்கும் பச்சத்தண்ணி எப்படி பொங்கும்? 

கணேஷ் நீங்க போடுற ஸ்டெப்ல ஒண்ணு சொல்லித்தாங்க என்று சிநேகனைக் கேட்க… அவர், ‘அது ஒண்ணுமில்ல ஸ்பீடா நடக்குற மாதிரி பண்ணாபோதும்’ என்றார். சார் நீங்க அஜித்தை ஓட்டலதானே? ‘சர்வைவா’ பாடலில் ஓப்பனிங் மியூசிக் ஒலிக்க, அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தார் கணேஷ். ஹரிஷுக்குஅது என்ன பாடல் என்று புரிந்துவிட.. ‘உங்க பாட்டுதான்’ என்று கணேஷூக்கு சொல்லி ஆடச் சொன்னார். கணேஷூக்கு அப்படி ஒரு பாடல் வந்ததே தெரியாமல் இருக்கலாம். கணேஷூம் சிநேகன் சொல்லிக் கொடுத்த ‘ஸ்டெப்’பையே போட்டு ஆரம்பித்தார். கீழேயிருந்த ஹரிஷ்‘தல தல’ என்று உற்சாகப்படுத்தினார்.

‘குட்டிப் பிசாசே’ பாடலுக்கு ஹரிஷ் வெளுத்துவாங்கினார். மற்ற நேரங்களில் எல்லாம் சிம்புவைப் போல் ஆடியவர். தலையில் இருந்த கர்ச்சீஃபை கழட்டி முடியெல்லாம் முன் வந்து விழுந்ததும் டி.ஆரைப் போல் ஆட ஆரம்பித்துவிட்டார். 

‘நீங்க பாட்டுக்கு சூப்பரா ஆடிட்டீங்க இப்போ என் ஸ்டெப்லாம் மறந்துடுச்சு’ என்று ஆரவ் சொல்ல.. ‘உங்களுக்கென்ன சார் நீங்க நின்னா மாஸூ நடந்தா மாஸூ விரலைக் கடிச்சா மாஸூ’ என்று ஹரிஷ் சொன்ன அடுத்த நொடி ‘விரலைலாம் கடிக்க வேணாம்’ என்று டைமிங்கில் தாக்கினார். ‘ராக்கம்மா கையத்தட்டு’ பாடலுக்கு எப்படி ஆடலாம் என்று ஐடியாக் கேட்ட ஆரவுக்கு ‘மேக்சிமம் சொடக்கு போட்டே கவர் பண்ணிடுங்க’ என்று சின்சியர் அட்வைஸ் கொடுத்தார் ஹரிஷ்.  இந்த ஹரிஷும், ஆரவ்வும் கேரக்டராவே வாழ்றாய்ங்களாம்… தொடர்ந்து ரஜினி - சிம்பு போலவே பேசிக்கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் ரசிக்க முடிந்தாலும் ஒரு கட்டத்துக்குமேல் ‘கலக்கப் போவது யாரு’ நெடி வர கடுப்படித்தது.

‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலுக்கு பிந்து நடனமாடினார். பல்லவி முடிந்து, பிஜிஎம் முடிந்து சரணமே வந்தது.. ஆனால் பிக்பாஸூக்கு பாடலை நிறுத்த மனசு வரல போல. பிந்துவை மட்டும் அவ்வளவு நேரம் ஆடவிட்டார்கள் (நன்றி பிக்பாஸ்). 

**

பிக் பாஸ் தமிழ்

அடுத்த டாஸ்க் ‘லைட் சமையல்’. என்னால சமைக்க முடியாது என்று சொல்லி சிநேகன் இப்போட்டியின் நடுவரானார். ஹரிஷும் ஆரவ்வும் சேர்ந்து விதவிதமான பஜ்ஜிகள் செய்தார்கள். பரிமாறும்போது  ‘சூடா இருக்கு ஊதி சாப்பிடுங்க’.. ‘நான் வேணா துடைச்சு விடவா’ என்று சிநேகனை சீண்டினார்கள். அவர் ‘இப்படிலாம் பண்ணா மார்க் கொறைச்சுடுவேன்’ என்று சீறினார்.

கணேஷூம் பிந்துவும் ஸ்மைலி ஃப்ரைஸ் செய்தார்கள். பிந்து அழகாக மாவை எண்ணெய்க்குள் போட்டதற்கு சூப்பர் என்று கணேஷ் சொல்ல… ‘இவிய்ங்க எடுத்துப் போடுறதுக்கு சூப்பர் வேற’ என்று கலாய்த்தார் ஆரவ். நேர்த்தியாக அடுக்கி சிநேகனுக்குப் பரிமாறினார்கள். 

‘ஏன் மெதுவா கடிக்குறீங்க நடுவர்ங்குறதால ஆக்டிங்கா’ என்று பிந்து கேட்க, சிநேகனுக்கு முன்பு இதேபோன்ற ஒரு டாஸ்க்கில் ஜூலி நடுவராக இருந்தபோது செயல்பட்ட விதம் ஞாபகம் வந்ததுபோல, டக்கென்று ‘சாப்பிட்டு சொல்வேன் ஏன் அவசரப்படுறீங்க?’ என்று ஜூலியைப் போலவே பேசினார். உடனே புரிந்துகொண்ட ஆரவ், ‘ஜூஸ் சாப்பிடுறீங்களா… தண்ணி வேணுமா? ரெட் கார்பெட் போடுற வேலை இருக்கு’ என்று அன்றைய நாள் நடந்தவற்றை நினைவில் கொண்டு வந்து பேசிக்காட்டினார். 

சிநேகனும் தன் பங்குக்கு ‘பிக்பாஸ் எனக்கு ஜட்ஜ் பண்ற வேலை கொடுத்திருக்காரு அதை பண்ண விடுங்க’ என்று சொல்ல… ‘நீங்க ஷெட்டப் பண்ணுங்க’ என்று ஓவியாவைப் போல் பேசினார் ஆரவ். ஹரிஷும் உடன் சேர்ந்துகொண்டு ‘நான் வாஷ்ரூம் போறேன்’ என்று வெளியேறினார். சிநேகனும் ஆரவ்வும் போலியாக சண்டை போட்டுக்கொண்டார்கள். ‘கை வச்சுதான் பாருங்களேன்’ என்று தொடர்ந்து ஓவியாவை இமிட்டேட் செய்தார் ஆரவ். பிறகு எல்லாரும் சிரித்து அமைதி நிலைக்குத் திரும்பினார்கள். ஹரீஸையும் ஆரவையும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுத்தார் சிநேகன். உண்மையில் அப்போது தினமும் போர்க்களமாக இருந்த பிக்பாஸ் வீடு எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. இப்போது ஐவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் ஆனால் சுவாரஸ்யத்தை தேடவேண்டியிருக்கிறது. அதுவும் ஃபைனல்ஸை இன்னும் 5 நாட்களில் வைத்துக்கொண்டு இப்படி ஜல்லியடிப்பதெல்லாம். அடப் போங்கயா..!

**

ஹரிஷே ஒரு டாஸ்க்கை உருவாக்கினார். ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரைப் பற்றி ஒவ்வொருவரும் எந்த ஒரு விஷயத்தைக் கேட்டால் அவர்கள் என்ன ஞாபகம் வரும் என்பதைச் சொல்ல வேண்டும். சிநேகன் முதலில் தொடங்கினார். தியரி என்ற வார்த்தையை கேட்டால் கணேஷ் ஞாபகம் வரும் என்றார். மம்மி என்ற வார்த்தை பிந்துவையும் வித்யாசமான சிரிப்பொலி ஹரிஷையும் நினைவுபடுத்தும் என்றார். ஆரவ்வுக்கு வந்தபோது சிநேகன் சொல்லவா என்று கேட்டு சிரிக்க ஆரவ் வெட்கப்பட்டுக்கொண்டே ஓவியாதான என்று மெல்லமாக கேட்டார். ஓவியாவின் பெயரைக் கேட்டால் ஆரவ் ஞாபகம் வருமாம் சிநேகனுக்கு. 

ஆரவ் ஓவியாவின் வசனத்தை பேசிக்காட்டுகிறார். சிநேகன் ஓவியாவின் பெயரைச் சொன்னால் ஆரவ் நினைவு வரும் என்கிறார்.  இவர்கள் எதேச்சையாக பேசிக்கொண்டார்களா? இல்லை மக்களின் பல்ஸ் தெரிந்ததால் பேசுகிறார்களா?  திராவிடக் கட்சிகள் அண்ணாவின் பெயரைச் சொல்லியே ஓட்டுக் கேட்பதைப்போல் இவர்கள் ஓவியாவை வைத்தே ஓட்டு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்களோ?

அடுத்து பிந்து, மொக்கை ஜோக் - ஹரிஷ், கேம்களில் பார்ட்னர் - ஆரவ், பொண்ணு பாக்குற சீன் - சிநேகன், டாஸ்க் என்றால் கணேஷ். ஹரிஷ் தோழிகள், தேவதைகள், பகிரங்கமா என்ற வார்த்தைகளைக் கேட்டாலே சிநேகன் ஞாபகம் வரும் என்று சொன்னார். முட்டை என்றால் கணேஷ் ஞாபகம் வருமாம். பிக்பாஸ் தரும் டாஸ்க்குகளுக்கு ஹரிஷின் இந்த  டாஸ்க்கே சுவாரஸ்யமாக இருந்தது.

**

அடுத்த டாஸ்க் ‘எழுந்து வா’.  ஹரிஷ் ஆரவ் ஒரு அணி, சிநேகன் பிந்து இன்னொரு அணி, சிநேகன் நடுவர். ஒருவரை சேரில் உட்கார வைத்து இரும்பு சங்கிலியால் கட்டி கால் கைக்கு எல்லாம் பூட்டு போட்டுவிடுவார்கள் இன்னொருவர் கட்டிய கண்களோடு கீழே கிடக்கும் சாவியைத் தேடிக் கண்டுபிடித்து பூட்டை அவிழ்க்க வேண்டும். சாவியைத் தேடும் இருவரின் கைகளையும் கயிறால் வேறு கட்டிவிடுவார்கள். ஹரிஷ் முதல் சாவியை எடுத்து ஆரவ்விடம் கொடுக்க அப்படிக் கொடுக்கலாமா என்று ரூல்புக்கைப் பார்த்துக் கொண்டார் கணேஷ். ஹரீஷ் கயிறின் எதிர்முனையில் இருந்த பிந்துவை இழுஇழு என இழுக்க… பதிலுக்கு பிந்துவும் ஹரிஷை இழுத்தார். சாவியைத் தேடுங்கடான்னா ரெண்டுபேரும் கயிறு இழுக்குற போட்டி விளையாடிட்டு இருந்தாங்க. அடுத்த ரவுண்டில் பிந்துவையும் ஹரிஷையும் சங்கிலியால் கட்டிப் பூட்டினார்கள். 

சிநேகனும் ஆரவ்வும் பொறுமையாக யாரும் யாரையும் இழுக்காமல் விளையாண்டார்கள். ‘உங்களை இழுக்கலையே’ என்றுகேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார் ஆரவ்.  ஹரிஷ் எல்லாப் பூட்டுகளையும் திறந்து வெற்றிபெற்றார்.  சாவியைத் தேடுறதை விட எந்த சாவி எந்த பூட்டுக்கு சேரும்னு திறந்து பாரக்குறதுதான் கஷ்டம் என்று விளக்கினார்கள். எதை ட்ரை பண்ணோம் எதை பண்ணலைனு கன்ஃப்யூஸ் ஆகிடுச்சு என்று டாஸ்க்கில் இருந்த சிரமத்தை சொன்னார் ஹரிஷ் .

**

பிக் பாஸ் தமிழ்

 

சிநேகன் சோகமாக தனிமையில் அமர்ந்திருக்க, பிந்து வந்தார். ‘நிறைய மிஸ் பண்ணப்போறோம்னு யோசிச்சிட்டு இருந்தேன்’ என்று கண்களைத் துடைத்துக்கொண்டே கூற, ‘எங்க போகப்போறோம் எல்லாம் இங்கதான் இருப்போம். இன்னும் அஞ்சுநாள் இருக்கு லெட்ஸ் எஞ்சாய்’ என்று ஆறுதல் சொன்னார் பிந்து. ‘இதைவிட ஃப்ரீடம் வெளில இருக்கு. டாஸ்க்கு கேம் எதுவும் இல்லாம’ என்றார் தன் பங்குக்கு சமாதானப்படுத்தினார் கணேஷ். இங்க எல்லார்கூடவும் சண்டை போட்டாலும் ஒரு நல்ல ரிலேசன்ஷிப் இருந்தது அதை மிஸ் பண்ணப் போறேன் என்ற தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.

 

இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருந்தபோதே ஹரிஷுக்காக ‘ஐயாம் எ குத்து டான்ஸர்’ பாடல் ஒலிபரப்பினார்கள். அந்த விளக்கு வெளிச்சத்திற்கும், ஹரிஷ் உட்கார்ந்திருந்த போஸூக்கும் செம மாஸாக இருந்தது. செம எனர்ஜியுடன் டான்ஸ் ஆடினார் ஹரிஷ்..

கொஞ்ச நேரத்தில் சிநேகனுக்கு ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடல் போட்டார்கள். ‘ஓடியாங்க ஓடியாங்க’ என்று சோகம் மறந்து குஷியாக மேடைக்கு ஓடினார் சிநேகன். பிந்துவும் கணேஷூம் கரகத்தைப் போல வாட்டர்பாட்டிலை தலையில் வைத்துக் கொண்டு ஆடினார்கள். பேசாம இந்தப் பாட்டை பிந்துவுக்குக் கொடுத்திருக்கலாம். சிநேகன் இந்தமுறையும் ஒரு ஸ்டெப்பையே போட்டுக்கொண்டிருக்க, எத்தனை ஐடியா கொடுத்தேன் என்று கடிந்துகொண்டார் ஹரிஷ். கீழே விழுந்துருவேனோன்னு பயமா இருந்தது என்று சமாளித்தார் சிநேகன்.

விளக்குகள் அணைந்து எல்லாரும் தூங்கப்போன பிறகு ராக்கம்மா கையத்தட்டு பாடல் போட்டார்கள். இருட்டுக்குள் ஆரவ் ஆடிக்கொண்டிருந்த ம்ஹூம் சொடக்குப் போட்டுக்கொண்டிருந்தார். இந்த முறையும் கீழிருந்து ஆடிய பிந்துவே ஸ்கோர் செய்தார். பாடல் முடிந்தது விளக்கு அணைந்தது. 

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/103420-will-the-name-oviya-alone-give-votes-happenings-of-day-93-in-bigg-boss.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 40,000/= பொதி வண்டி தள்ளுபவர்களுக்கு கூலி ஒரு சூட்கேசிற்கு எத்தனை ரூபாக்கள் என்று அவர்களது ஜக்கெட்டில் போட்டிருக்கும் (தற்போது 250/= என நினைக்கிறேன்) டிப்ஸ் கோடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் உங்களிடமிருந்து காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் முறையிடுவேன் என்று கூறி தப்பிக்க வேண்டியது தான்.
    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.